[highlight_content]

Thiruvoymozhi 3-1

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

முதல் திருவாய்மொழி

முடிச்சோதியாய், உனது முகச்சோதி மலர்ந்ததுவோ ? *

அடிச்சோதி, நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ ? *

படிச்சோதி யாடையொடும், பல்கலனாய் * நின் பைம்

பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.              3.1.1

கட்டுரைக்கில், தாமரை நின் கண் பாதம் கையொவ்வா *

சுட்டுரைத்த நன் பொன், உன் திருமேனி யொளி யொவ்வாது *

ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப், புகழ்வெல்லாம் பெரும்பாலும் *

பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால், பரஞ்சோதீ !              3.1.2

பரஞ்சோதி நீ பரமாய், நின்னிகழ்ந்த பின் * மற்றோர்

பரஞ்சோதி யின்மையின் படியோவி நிகழ்கின்ற

பரஞ்சோதி * நின்னுள்ளே படருலகம் படைத்த * எம்

பரஞ்சோதி ! கோவிந்தா !, பண்புரைக்க மாட்டேனே.                3.1.3

மாட்டாதே யாகிலும், இம்மலர் தலைமா ஞாலம் * நின்

மாட்டாய மலர் புரையும் திருவுருவம், மனம் வைக்க *

மாட்டாத பல சமய, மதி கொடுத்தாய் * மலர்த் துழாய்

மாட்டே நீ மனம் வைத்தாய், மாஞாலம் வருந்தாதே ?            3.1.4

வருந்தாத, அருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய் *

வருந்தாத ஞானமாய், வரம்பின்றி முழுதியன்றாய் ! *

வருங் காலம் நிகழ் காலம், கழிகாலமாய் * உலகை

ஒருங்காக அளிப்பாய் !, சீர் எங்கு உலக்க ஓதுவனே ?          3.1.5

ஓதுவார் ஓத்தெல்லாம், எவ்வுலகத்து எவ்வெவையும் *

சாதுவாய் நின் புகழின் தகையல்லால், பிறிதில்லை *

போது வாழ், புனந்துழாய் முடியினாய் ! * பூவின் மேல்

மாதுவாழ் மார்பினாய் !, என் சொல்லி யான் வாழ்த்துவனே ?        3.1.6

வாழ்த்துவார் பலராக, நின்னுள்ளே நான்முகனை *

மூழ்த்த நீர் உலகெல்லாம் படையென்று, முதல் படைத்தாய் ! *

கேழ்த்த சீர்அரன் முதலாக், கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து *

சூழ்த்து அமரர் துதித்தால், உன்தொல் புகழ் மாசூணாதே?     3.1.7

மாசூணாச் சுடருடம்பாய், மலராது குவியாது *

மாசூணா ஞானமாய் முழுதுமாய், முழுதியன்றாய் ! *

மாசூணா வான் கோலத்து அமரர் கோன், வழிப் பட்டால் *

மாசூணா உன பாதம், மலர்ச் சோதி மழுங்காதே?        3.1.8

மழுங்காத வைந்நுதிய, சக்கர நல்வலத்தையாய் *

தொழுங் காதல் களிறளிப்பான், புள்ளூர்ந்து தோன்றினையே *

மழுங்காத ஞானமே, படையாக மலருலகில் *

தொழும்பாயார்க்கு அளித்தால், உன் சுடர்ச் சோதி மறையாதே?    3.1.9

மறையாய நால் வேதத்துள் நின்ற, மலர்ச்சுடரே ! *

முறையால், இவ்வுலகெல்லாம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்தாய் ! *

பிறையேறு சடையானும், நான்முகனும் இந்திரனும் *

இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இது, வியப்பே?      3.1.10

வியப்பாய வியப்பில்லா, மெய்ஞ்ஞான வேதியனை *

சயப் புகழார் பலர் வாழும், தடங்குருகூர்ச் சடகோபன் *

துயக்கின்றித் தொழுதுரைத்த, ஆயிரத்துள் இப்பத்தும் *

உயக் கொண்டு பிறப்பறுக்கும், ஒலி முந்நீர் ஞாலத்தே.     3.1.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.