[highlight_content]

Thiruvoymozhi 3-4

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

நான்காம் திருவாய்மொழி

புகழும் நல்ஒருவனென்கோ? பொருவில்சீர்ப் பூமியென்கோ ? *

திகழும் தண்பரவையென்கோ ? தீயென்கோ ? வாயுவென்கோ ?*

நிகழும் ஆகாசமென்கோ? நீள் சுடரிரண்டுமென்கோ ? *

இகழ்வில் இவ்வனைத்து மென்கோ? கண்ணனைக் கூவுமாறே.     3.4.1

கூவுமாறறிய மாட்டேன், குன்றங்க ளனைத்து மென்கோ ? *

மேவுசீர் மாரியென்கோ ? விளங்கு தாரகைகளென்கோ ? *

நாவியல் கலைகளென்கோ ? ஞான நல்லாவி யென்கோ ? *

பாவுசீர்க் கண்ணன் எம்மான், பங்கயக் கண்ணனையே.        3.4.2

பங்கயக் கண்ணனென்கோ ? பவளச் செவ்வாயனென்கோ ? *

அங்கதிரடியனென்கோ ? அஞ்சன வண்ணனென்கோ ? *

செங்கதிர் முடியனென்கோ ? திருமறு மார்வனென்கோ ? *

சங்கு சக்கரத்தனென்கோ ? சாதி மாணிக்கத்தையே.               3.4.3

சாதிமாணிக்க மென்கோ? சவிகொள் பொன் முத்தமென்கோ ? *

சாதி நல்வயிர மென்கோ? தவிவில் சீர் விளக்க மென்கோ ? *

ஆதியஞ் சோதி யென்கோ ? ஆதியம் புருடனென்கோ ? *

ஆதுமில் காலத் தெந்தை, அச்சுதன் அமலனையே.    3.4.4

அச்சுதனமல னென்கோ ? அடியவர் வினை கெடுக்கும் *

நச்சு மாமருந்த மென்கோ ? நலங்கடலமுத மென்கோ ? *

அச்சுவைக் கட்டியென்கோ ? அறுசுவை யடிசிலென்கோ ? *

நெய்ச் சுவைத் தேறலென்கோ? கனியென்கோ? பாலென்கேனோ?     3.4.5

பாலென்கோ? நான்கு வேதப் பயனென்கோ ? * சமய நீதி

நூலென்கோ? நுடங்கு கேள்வியிசை யென்கோ ? * இவற்றுள் நல்ல

மேலென்கோ ? வினையின் மிக்க பயனென்கோ ?* கண்ணனென்கோ?

மாலென்கோ ? மாயனென்கோ ?, வானவராதியையே.        3.4.6

வானவராதி யென்கோ ? வானவர் தெய்வ மென்கோ ? *

வானவர் போக மென்கோ ? வானவர் முற்று மென்கோ? *

ஊனமில் செல்வ மென்கோ ? ஊனமில் சுவர்க்க மென்கோ ? *

ஊனமில் மோக்க மென்கோ? ஒளிமணி வண்ணனையே.     3.4.7

ஒளிமணி வண்ணனென்கோ? ஒருவ னென்றேத்த நின்ற *

நளிர்மதிச் சடையனென்கோ ? நான்முகக் கடவுளென்கோ ? *

அளிமகிழ்ந்து உலகமெல்லாம் படைத்து, அவை யேத்த நின்ற *

களிமலர்த் துளவன் எம்மான், கண்ணனை மாயனையே.     3.4.8

கண்ணனை மாயன் தன்னைக், கடல்கடைந்து அமுதம்கொண்ட *

அண்ணலை அச்சுதனை அனந்தனை, அனந்தன் தன் மேல் *

நண்ணி நன்குறைகின்றானை, ஞால முண்டுமிழ்ந்த மாலை *

எண்ணுமாறு அறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே.         3.4.9

யாவையும் யவரும் தானாய், அவரவர் சமயந்தோறும் *

தோய்விலன் புலனைந்துக்கும் சொலப்படான், உணர்வின் மூர்த்தி *

ஆவிசேருயிரினுள்ளால், ஆதுமோர் பற்றிலாத *

பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே.        3.4.10

கூடிவண்டறையும்தண்தார்க் கொண்டல்போல்வண்ணன்தன்னை*

மாடலர் பொழில் குருகூர், வண்சடகோபன் சொன்ன *

பாடலோராயிரத்துள், இவையும் ஒரு பத்தும் வல்லார் *

வீடில போகமெய்தி, விரும்புவர் அமரர் மொய்த்தே.          3.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.