[highlight_content]

Thiruvoymozhi 3-7

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப், பங்கயக் கண்ணனைப் *

பயில இனிய, நம் பாற்கடல் சேர்ந்த பரமனைப் *

பயிலும் திருவுடையார் யவரேலும், அவர் கண்டீர் *

பயிலும் பிறப்பிடை தோறு, எம்மை யாளும் பரமரே.        3.7.1      திருப்பாற்கடல்

ஆளும் பரமனைக் கண்ணனை, ஆழிப்பிரான் தன்னைத் *

தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன், எம்மான் தன்னைத் *

தாளும் தடக்கையும் கூப்பிப், பணியுமவர் கண்டீர் *

நாளும் பிறப்பிடை தோறு, எம்மை யாளுடை நாதரே.           3.7.2

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்

போதனைப் * பொன் நெடுஞ் சக்கரத்து, எந்தை பிரான் தன்னைப் *

பாதம் பண்ணிய வல்லாரைப், பணியுமவர் கண்டீர் *

ஓதும் பிறப்பிடை தோறு, எம்மை யாளுடையார்களே.         3.7.3

உடையார்ந்த ஆடையன், கண்டிகையன் உடை நாணினன் *

புடையார் பொன்னூலினன், பொன்முடியன் மற்றும் பல்கலன் *

நடையாவுடைத் திருநாரணன், தொண்டர் தொண்டர் கண்டீர் *

இடையார் பிறப்பிடை தோறு, எமக்கு எம்பெருமக்களே.        3.7.4

பெரு மக்களுள்ளவர் தம்பெருமானை * அமரர்கட்கு

அருமை யொழிய, அன்று ஆரமுதூட்டிய அப்பனை *

பெருமை பிதற்ற வல்லாரைப், பிதற்றுமவர் கண்டீர் *

வருமையும் இம்மையும், நம்மை யளிக்கும் பிராக்களே.     3.7.5

அளிக்கும் பரமனைக் கண்ணனை, ஆழிப்பிரான் தன்னைத் *

துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன், எம்மான் தன்னை *

ஒளிக்கொண்ட சோதியை, உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர் *

சலிப்பின்றி யாண்டு, எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.             3.7.6

சன்மசன்மாந்தரம் காத்து, அடியார்களைக் கொண்டு போய்த் *

தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத் *

தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் *

நன்மை பெறுத்து எம்மை, நாளுய்யக் கொள்கின்ற நம்பரே.              3.7.7

நம்பனை ஞாலம் படைத்தவனைத், திருமார்பனை *

உம்பருலகினில் யார்க்கும், உணர்வரியான் தன்னைக் *

கும்பி நரகர்க ளேத்துவரேலும், அவர் கண்டீர் *

எம்பல் பிறப்பிடை தோறு, எம் தொழு குலம் தாங்களே.     3.7.8

குலம் தாங்கு சாதிகள் நாலிலும், கீழிழிந்து * எத்தனை

நலந்தானிலாத, சண்டாள சண்டாளர்களாகிலும் *

வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு, ஆளென்று உள்

கலந்தார் * அடியார் தம்மடியார் எம்மடிகளே.   3.7.9

அடியார்ந்த வையமுண்டு, ஆலிலை யன்ன வசஞ் செய்யும் *

படியாதுமில் குழவிப்படி, எந்தை பிரான் தனக்கு *

அடியார் அடியார் தம்மடியார், அடியார் * தமக்கு

அடியாரடியார் தம் * அடியார், அடியோங்களே.             3.7.10

அடியோங்கு நூற்றுவர் வீய, அன்று ஐவர்க்கருள் செய்த

நெடியோனைத் * தென்குருகூர்ச் சடகோபன், குற்றேவல்கள் *

அடியார்ந்த ஆயிரத்துள் இவைபத்து அவன் தொண்டர் மேல்

முடிவு * ஆரக் கற்கிற்கில், சன்மம் செய்யாமை முடியுமே.           3.7.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.