[highlight_content]

Thiruvoymozhi 3-8

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி

முடியானே ! மூவுலகும் தொழுதேத்தும் சீர்

அடியானே ! * ஆழ்கடலைக் கடைந்தாய் !, புள்ளூர்

கொடியானே ! * கொண்டல் வண்ணா !, அண்டத்து உம்பரில்

நெடியானே ! * என்று கிடக்கும், என் நெஞ்சமே.          3.8.1

நெஞ்சமே நீள் நகராக இருந்த, என்

தஞ்சனே ! * தண்ணிலங்கைக்கு, இறையைச் செற்ற

நஞ்சனே ! * ஞாலம் கொள்வான், குறளாகிய

வஞ்சனே ! * என்னும் எப்போதும், என் வாசகமே.       3.8.2

வாசகமே யேத்த, அருள் செய்யும் வானவர் தம்

நாயகனே ! * நாளிளந் திங்களைக், கோள் விடுத்து *

வேயகம் பால் வெண்ணெய் தொடுவுண்ட, ஆனாயர்

தாயவனே ! * என்று தடவும், என் கைகளே.      3.8.3

கைகளாலாரத், தொழுது தொழுது உன்னை *

வைகலும் மாத்திரைப் போதும், ஓர் வீடின்றிப் *

பைகொள் பாம்பேறி, உறை பரனே ! * உன்னை

மெய் கொள்ளக் காண விரும்பும், என் கண்களே.       3.8.4

கண்களால் காண வருங் கொல்?, என்று ஆசையால் *

மண் கொண்ட வாமனன், ஏற மகிழ்ந்து செல் *

பண் கொண்ட புள்ளின், சிறகொலி பாவித்துத் *

திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து, என் செவிகளே.        3.8.5

செவிகளாலார, நின் கீர்த்தித் கனியென்னும்

கவிகளே * காலப் பண் தேன், உறைப்பத்துற்றுப் *

புவியின் மேல், பொன்னெடுஞ் சக்கரத்து உன்னையே *

அவிவின்றி ஆதரிக்கும், எனதாவியே.      3.8.6

ஆவியே! ஆரமுதே ! என்னை யாளுடைத் *

தூவியம் புள்ளுடையாய்! சுடர் நேமியாய் *

பாவியேன் நெஞ்சம், புலம்பப் பல காலும் *

கூவியும் காணப் பெறேன், உன கோலமே.        3.8.7

கோலமே! தாமரைக் கண்ணது ஓரஞ்சன

நீலமே! * நின்று எனதாவியை, ஈர்கின்ற

சீலமே! * சென்று செல்லாதன, முன்னிலாம்

காலமே ! * உன்னை எந்நாள், கண்டு கொள்வனே?      3.8.8

கொள்வன் நான் மாவலி மூவடி தாவென்ற

கள்வனே ! * கஞ்சனை வஞ்சித்து, வாணனை

உள் வன்மை தீர * ஓராயிரம் தோள் துணித்த,

புள் வல்லாய் ! * உன்னை எஞ்ஞான்று, பொருந்துவனே?    3.8.9

பொருந்திய மாமருதின், இடை போய எம்

பெருந்தகாய் ! * உன் கழல் காணிய பேதுற்று *

வருந்தி நான், வாசக மாலை கொண்டு * உன்னையே

இருந்திருந்து, எத்தனை காலம் புலம்புவனே?   3.8.10

புலம்பு சீர்ப், பூமியளந்த பெருமானை *

நலம் கொள் சீர், நன் குருகூர்ச் சடகோபன் * சொல்

வலம் கொண்ட ஆயிரத்துள், இவையும் ஓர் பத்து

இலங்குவான் * யாவரும் ஏறுவர், சொன்னாலே.        3.8.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.