[highlight_content]

Thiruvoimozhi 1-7

திருவாய்மொழி

முதல் பத்து

ஏழாம் திருவாய்மொழி

பிறவித் துயரற, ஞானத்துள் நின்று *

துறவிச் சுடர் விளக்கம், தலைப் பெய்வார் *

அறவனை, ஆழிப்படை அந்தணனை ,

மறவியை யின்றி, மனத்து வைப்பாரே.        1.7.1

வைப்பாம், மருந்தாம் * அடியரை வல்வினைத்

துப்பாம் புலனைந்தும், துஞ்சக் கொடான் அவன் *

எப்பால் யவர்க்கும், நலத்தால் உயர்ந்துயர்ந்து *

அப்பாலவன், எங்களாயர் கொழுந்தே.         1.7.2

ஆயர் கொழுந்தாய், அவரால் புடையுண்ணும் *

மாயப் பிரானை, என் மாணிக்கச் சோதியைத் *

தூய அமுதைப், பருகிப் பருகி * என்

மாயப் பிறவி, மயர்வறுத்தேனே.     1.7.3

மயர்வற, என் மனத்தே மன்னினான் தன்னை *

உயர் வினையே தரும், ஒண்சுடர்க் கற்றையை *

அயர்வில் அமரர்கள், ஆதிக் கொழுந்தை * என்

இசைவினை, என் சொல்லி யான் விடுவேனோ ?         1.7.4

விடுவேனோ ? என் விளக்கை, என்னாவியை .

நடுவே வந்து உய்யக் கொள்கின்ற, நாதனைத் *

தொடுவே செய்து, இளவாய்ச்சியர் கண்ணினுள் *

விடவே செய்து, விழிக்கும் பிரானையே.            1.7.5

பிரான், பெருநிலம் கீண்டவன் * பின்னும்

விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் *

மராமரம் எய்த மாயவன் * என்னுள்

இரானெனில், பின்னை யானொட்டுவேனோ ?    1.7.6

யானொட்டி, என்னுள் இருத்துவ மென்றிலன் *

தானொட்டி வந்து, என் தனி நெஞ்சை வஞ்சித்து *

ஊனொட்டி நின்று, என்னுயிரில் கலந்து இயல்

வான் * ஒட்டுமோ இனி, என்னை நெகிழ்க்கவே.           1.7.7

என்னை நெகிழ்க்கிலும், என்னுடை நல்நெஞ்சந்

தன்னை * அகல்விக்கத் தானும் கில்லான் இனிப் *

பின்னை நெடும் பணைத்தோள், மகிழ் பீடுடை *

முன்னை அமரர் * முழுமுதல் தானே.   1.7.8

அமரர் முழுமுதல் ஆகிய, ஆதியை *

அமரர்க்கு அமுதீந்த, ஆயர் கொழுந்தை *

அமர வழும்பத் துழாவி, என்னாவி *

அமரத் தழுவிற்று, இனி அகலுமோ ?          1.7.9

அகலில் அகலும், அணுகில் அணுகும் *

புகலும் அரியன், பொருவல்லன் எம்மான் *

நிகரில் அவன் புகழ் பாடி, இளைப்பிலம் *

பகலும் இரவும், படிந்து குடைந்தே.         1.7.10

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை *

அடைந்த தென்குருகூர்ச், சடகோபன் *

மிடைந்த சொல் தொடை, ஆயிரத்து இப்பத்து *

உடைந்து நோய்களை, ஓடுவிக்குமே.       1.7.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.