திருவாய்மொழி
முதல் பத்து
எட்டாம் திருவாய்மொழி
ஓடும் புள்ளேறி * சூடும் தண்துழாய் *
நீடு நின்றவை * ஆடும் அம்மானே. 1.8.1
அம்மானாய்ப் பின்னும் * எம்மாண்பும் ஆனான் *
வெம்மா வாய் கீண்ட * செம்மா கண்ணனே * 1.8.2
கண்ணாவான் என்றும் * மண்ணோர் விண்ணோர்க்குத் *
தண்ணார் வேங்கட * விண்ணோர் வெற்பனே. 1.8.3 திருவேங்கடம் திருப்பதி
வெற்பை யொன்றெடுத்து * ஒற்கமின்றியே *
நிற்கும் அம்மான் சீர் * கற்பன் வைகலே. 1.8.4
வைகலும் வெண்ணெய் * கை கலந்து உண்டான் *
பொய் கலவாது * என் மெய் கலந்தானே. 1.8.5
கலந்து என்னாவி * நலங்கொள் நாதன் *
புலன் கொள் மாணாய் * நிலம் கொண்டானே. 1.8.6
கொண்டான், ஏழ்விடை * உண்டான் ஏழ் வையம் *
தண் தாமம் செய்து * என் எண்தான் ஆனானே. 1.8.7
ஆனான் ஆனாயன் * மீனோடு ஏனமும் *
தானானான் என்னில் * தானாய சங்கே. 1.8.8
சங்கு சக்கரம் * அங்கையில் கொண்டான் *
எங்கும் தானாய * நங்கள் நாதனே. 1.8.9
நாதன் ஞாலம் கொள் * பாதன் என்னம்மான் *
ஓதம் போல் கிளர் * வேத நீரனே. 1.8.10
நீர் புரை வண்ணன் * சீர்ச் சடகோபன் *
நேர்தலாயிரத்து * ஓர்தலிவையே. 1.8.11