[highlight_content]

Thiruvoymozhi 4-2

திருவாய்மொழி

நான்காம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

பாலனாய் ஏழுலகுண்டு, பரிவின்றி *

ஆலிலை அன்ன வசஞ் செய்யும், அண்ணலார் *

தாளிணை மேலணி, தண்ணந் துழாயென்றே

மாலுமால் * வல்வினையேன், மடவல்லியே.   4.2.1

வல்லி சேர் நுண்ணிடை, ஆய்ச்சியர் தம்மொடும் *

கொல்லைமை செய்து, குரவை பிணைந்தவர்

நல்லடி மேலணி, நாறு துழா யென்றே

சொல்லுமால் * சூழ்வினை யாட்டியேன், பாவையே.          4.2.2

பாவியல், வேத நன் மாலை பல கொண்டு *

தேவர்கள் மாமுனிவர், இறைஞ்ச நின்ற *

சேவடி மேலணி, செம் பொற்றுழா யென்றே

கூவுமால் * கோள்வினை யாட்டியேன், கோதையே.     4.2.3

கோதில வண் புகழ் கொண்டு, சமயிகள் *

பேதங்கள் சொல்லிப் பிதற்றும், பிரான் * பரன்

பாதங்கள் மேலணி, பைம் பொற்றுழா யென்றே

ஓதுமால் * ஊழ்வினையேன், தடந்தோளியே.   4.2.4

தோளிசேர் பின்னை பொருட்டு, * எருதேழ் தழீஇக்

கோளியார் கோவலனார் குடக்கூத்தனார் *

தாளிணை மேலணி, தண்ணந் துழாயென்றே *

நாளுநாள் நைகின்றதால், என் தன் மாதரே.       4.2.5

மாதர் மா மண்மடந்தை பொருட்டு, ஏனமாய் *

ஆதியங் காலத்து, அகலிடம் கீண்டவர் *

பாதங்கள் மேலணி, பைம் பொற்றுழா யென்றே

ஓதும் மால் * எய்தினள், என் தன் மடந்தையே.        4.2.6

மடந்தையை, வண்கமலத் திருமாதினைத் *

தடங்கொள் தார் மார்பினில், வைத்தவர் தாளின் மேல் *

வடங்கொள் பூந் தண்ணந் துழாய் மலர்க்கே, இவள்

மடங்குமால் * வாணுதலீர் ! என் மடக் கொம்பே.      4.2.7

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர் *

அம்பெரி யுய்த்தவர், தாளிணை மேலணி *

வம்பவிழ் தண்ணந் துழாய் மலர்க்கே, இவள்

நம்புமால் * நான் இதற்கு என் செய்கேன் ? நங்கைமீர் !       4.2.8

நங்கைமீர் ! நீரும், ஓர் பெண் பெற்று நல்கினீர் *

எங்ஙனே சொல்லுகேன் ? யான் பெற்ற ஏழையைச் *

சங்கென்னும் சக்கரமென்னும், துழாயென்னும் *

இங்ஙனே சொல்லும், இராப்பகல் என் செய்கேன் ?      4.2.9

என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் *

என் சொல்லும் என் வசமுமல்லள், நங்கைமீர் !*

மின்செய் பூண் மார்பினன், கண்ணன் கழல் துழாய் *

பொன் செய் பூண்மென் முலைக்கென்று, மெலியுமே.          4.2.10

மெலியும் நோய் தீர்க்கும், நம் கண்ணன் கழல்கள் மேல் *

மலிபுகழ், வண் குருகூர்ச் சடகோபன் சொல் *

ஒலி புகழாயிரத்து, இப்பத்தும் வல்லவர் *

மலிபுகழ் வானவர்க் காவர், நற்கோவையே.     4.2.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.