[highlight_content]

Thiruvoymozhi 4-6

திருவாய்மொழி

நான்காம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் ? அன்னைமீர் *

ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோயிது, தேறினோம் *

போர்ப்பாகு தான் செய்து, அன்று ஐவரை வெல்வித்த * மாயப்போர்த்

தேர்ப் பாகனார்க்கு, இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே.        4.6.1

திசைக்கின்றதே இவள் நோய், இது மிக்க பெருந் தெய்வம் *

இசைப்பின்றி நீரணங்காடும், இளம் தெய்வமன்றிது *

திசைப்பின்றியே, சங்கு சக்கர மென்றிவள் கேட்க * நீர்

இசைக்கிற்றிராகில், நன்றே இல் பெறுமிது காண்மினே.      4.6.2

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டுவிச்சி சொற்கொண்டு * நீர்

எதுவானும் செய்து, அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின் *

மதுவார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால் *

அதுவே இவளுற்ற நோய்க்கும் அருமருந்தாகுமே.     4.6.3

மருந்தாகு மென்று, அங்கோர் மாயவலவை சொற்கொண்டு * நீர்

கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத்தென் பயன் ?

ஒருங்காகவே, உலகேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட *

பெருந்தேவன் பேர் சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே.          4.6.4

இவளைப் பெறும் பரிசு, இவ்வணங் காடுதலன்று அந்தோ *

குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் *

கவளக் கடாக் களிறு அட்ட பிரான், திருநாமத்தால் *

தவளப் பொடி கொண்டு, நீர் இட்டிடுமின் தணியுமே.         4.6.5

தணியும் பொழுதில்லை, நீர் அணங்காடுதிர் அன்னைமீர் ! *

பிணியும் ஒழிகின்றதில்லை, பெருகும் இதுவல்லால் *

மணியினணி நிறமாயன் தமர், அடி நீறு கொண்டு

அணிய முயலின் * மற்றில்லை கண்டீர், இவ்வணங்குக்கே.         4.6.6

அணங்குக் கருமருந்தென்று அங்கோராடும் கள்ளும் பராய் *

சுணங்கை யெறிந்து, நும் தோள் குலைக்கப் படும் அன்னைமீர் *

உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டம் கண்டு என் பயன்?*

வணங்கீர்கள் மாயப் பிரான் தமர், வேதம் வல்லாரையே.      4.6.7

வேதம் வல்லார்களைக் கொண்டு, விண்ணோர் பெருமான் திருப்

பாதம் பணிந்து * இவள் நோயிது தீர்த்துக் கொள்ளாது போய் *

ஏதம் பறைந்து அல்லல் செய்து, கள்ளூடு கலாய்த் தூய்க்*

கீத முழவிட்டு நீரணங்காடுதல், கீழ்மையே.    4.6.8

கீழ்மையினால் அங்கு ஓர், கீழ்மகனிட்ட முழவின் கீழ் *

நாழ்மை பல சொல்லி, நீரணங்காடும் பொய் காண்கிலேன் *

ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம், இந்நோய்க்கும் ஈதே மருந்து *

ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமி னுன்னித்தே.        4.6.9

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை யல்லால் *

நும்மிச்சை சொல்லி, நும் தோள் குலைக்கப் படும் அன்னைமீர் ! *

மன்னப் படு மறை வாணனை, வண் துவராபதி

மன்னனை * ஏத்துமின், ஏத்துதலும் தொழுதாடுமே.                4.6.10

தொழுதாடித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்து, நோய்தீர்ந்த *

வழுவாத தொல் புகழ், வண்குருகூர்ச் சடகோபன் சொல் *

வழுவாத ஆயிரத்துள், இவை பத்து வெறிகளும் *

தொழுதாடிப் பாட வல்லார், துக்க சீலமிலர்களே.       4.6.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.