[highlight_content]

Thiruvoymozhi 4-7

திருவாய்மொழி

நான்காம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

 

சீலமில்லாச் சிறியனேலும், செய் வினையோ பெரிதால் *

ஞாலமுண்டாய் ! ஞானமூர்த்தி ! நாராயணா ! என்றென்று *

காலந் தோறும் யானிருந்து, கை தலை பூசலிட்டால் *

கோல மேனி காண வாராய், கூவியும் கொள்ளாயே.            4.7.1

கொள்ள மாளா இன்ப வெள்ளம், கோதில தந்திடும் * என்

வள்ளலேயோ!, வையம் கொண்ட வாமனாவோ ! என்றென்று *

நள்ளிராவும் நன்பகலும், நானிருந்தோல மிட்டால் *

கள்ள மாயா ! உன்னை, என் கண் காண வந்தீயாயே.        4.7.2

ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன் கொல் ? *

தாவி வையம் கொண்ட எந்தாய் ! தாமோதரா ! என்றென்று *

கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால் *

பாவி நீ யென்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே.     4.7.3

காண வந்து என் கண் முகப்பே, தாமரைக் கண் பிறழ *

ஆணி செம்பொன் மேனி யெந்தாய் ! நின்றருளா யென்றென்று *

நாணமில்லாச் சிறு தகையேன், நானிங் கலற்றுவதென் ? *

பேணி வானோர் காண மாட்டாப், பீடுடை யப்பனையே.     4.7.4

அப்பனே! அடலாழியானே ! ஆழ்கடலைக் கடைந்த

துப்பனே !* உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?என்று *

எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து *

இப்பொழுதே வந்திடா யென்று ஏழையேன் நோக்குவனே.         4.7.5

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான், யான்எனதாவி யுள்ளே *

நாக்கு நீள்வன் ஞானமில்லை, நாள் தோறும் என்னுடைய *

ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும், அல்லபுறத்தி னுள்ளும் *

நீக்கமின்றி எங்கும் நின்றாய் !, நின்னை யறிந்தறிந்தே.      4.7.6

அறிந் தறிந்து தேறித் தேறி யான் எனதாவி யுள்ளே *

நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்துப் *

பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் *

நறுந்துழாயின் கண்ணி யம்மா! நானுன்னைக் கண்டு கொண்டே.          4.7.7

கண்டு கொண்டு என் கைகளார, நின் திருப் பாதங்கள் மேல் *

எண் திசையுமுள்ள பூக்கொண்டு, ஏத்தி யுகந்துகந்து *

தொண்டரோங்கள் பாடி யாடச், சூழ்கடல் ஞாலத்துள்ளே *

வண் துழாயின் கண்ணி வேந்தே ! வந்திட கில்லாயே.     4.7.8

இடகிலேன் ஒன்றட்ட கில்லேன், ஐம்புலன் வெல்ல கில்லேன் *

கடவனாகிக் காலந் தோறும், பூப் பறித்தேத்த கில்லேன் *

மட வன்னெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த் *

தடவுகின்றேன் எங்குக் காண்பன், சக்கரத் தண்ணலையே?      4.7.9

சக்கரத் தண்ணலே ! என்று, தாழ்ந்து கண்ணீர் ததும்பப் *

பக்கம் நோக்கி நின்றலந்தேன், பாவியேன் காண்கின்றிலேன் *

மிக்க ஞான மூர்த்தியாய, வேத விளக்கினை * என்

தக்க ஞானக் கண்களாலே, கண்டு தழுவுவனே.       4.7.10

தழுவிநின்ற காதல் தன்னால், தாமரைக் கண்ணன் தன்னைக் *

குழுவு மாடத் தென் குருகூர், மாறன் சடகோபன் சொல் *

வழுவிலாத வொண் தமிழ்கள், ஆயிரத்துள் இப்பத்தும் *

தழுவப் பாடி யாட வல்லார், வைகுந்த மேறுவரே.   4.7.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.