[highlight_content]

Thiruvoymozhi 9-3

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

ஓராயிரமாய், உலகே ழளிக்கும் *

பேராயிரங் கொண்டது, ஓர் பீடுடையன் *

காராயின, காளநன் மேனியினன் *

நாராயணன், நங்கள் பிரானவனே.   9.3.1

அவனே, அகல் ஞாலம் படைத் திடந்தான் *

அவனே, அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் *

அவனே, அவனும் அவனும் அவனும் *

அவனே, மற்றெல்லாமும் அறிந்தனமே.  9.3.2

அறிந்தன வேத, அரும் பொருள் நூல்கள் *

அறிந்தன கொள்க, அரும் பொருளாதல் *

அறிந்தன ரெல்லாம், அரியை வணங்கி *

அறிந்தனர், நோய்க ளறுக்கும் மருந்தே.   9.3.3

மருந்தே, நங்கள் போக மகிழ்ச்சிக் கென்று *

பெருந் தேவர் குழாங்கள், பிதற்றும் பிரான் *

கருந் தேவன் எம்மான் கண்ணன், விண்ணுலகம்

தரும் தேவனைச் * சோரேல் கண்டாய் மனமே !       9.3.4

மனமே ! உன்னை, வல்வினையேன் இரந்து *

கனமே சொல்லினேன், இது சோரேல் கண்டாய் *

புனம் மேவிய, பூந்தண் துழாயலங்கல் *

இனமேது மிலானை, அடைவதுமே.          9.3.5

அடைவதும், அணியார் மலர்மங்கை தோள் *

மிடைவதும், அசுரர்க்கு வெம்போர்களே ! *

கடைவதும், கடலுளமுதம் * என் மனம்

உடைவதும், அவற்கே ஒருங்காகவே.        9.3.6

ஆகம் சேர், நரசிங்கமதாகி * ஓர்

ஆகம் வள்ளுகிரால், பிளந்தானுறை *

மாக வைகுந்தம், காண்பதற்கு * என் மனம்

ஏகம் எண்ணும், இராப் பகலின்றியே.          9.3.7      பரமபதம்

இன்றிப் போக, இருவினையும் கெடுத்து *

ஒன்றி யாக்கை புகாமை, உய்யக் கொள்வான் *

நின்ற வேங்கடம், நீள்நிலத்து உள்ளது *

சென்று தேவர்கள், கை தொழுவார்களே.      9.3.8      திருவேங்கடம் திருப்பதி

தொழுது மாமலர், நீர் சுடர் தூபம் கொண்டு *

எழுது மென்னும் இது, மிகை யாதலில் *

பழுதில் தொல்புகழ்ப், பாம்பணைப் பள்ளியாய் ! *

தழுவுமாறு அறியேன், உன தாள்களே.     9.3.9

தாளதாமரையான், உனது உந்தியான் *

வாள் கொள் நீள் மழுவாளி, உன்னாகத்தான் *

ஆளராய்த் தொழுவாரும், அமரர்கள் *

நாளும் என் புகழ் கோ, உன சீலமே ?   9.3.10

சீல மெல்லை யிலான், அடிமேல் * அணி

கோலநீள், குருகூர்ச் சடகோபன் * சொல்

மாலை யாயிரத்துள், இவை பத்தினின்

பாலர் * வைகுந்த மேறுதல், பான்மையே.      9.3.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.