[highlight_content]

Thiruvoymozhi 10-6

திருவாய்மொழி

பத்தாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு * ஆழியான்

அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே *

இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் *

மருளொழி நீ மடநெஞ்சே ! வாட்டாற்றான் அடி வணங்கே.        10.6.1    திருவாட்டாறு

வாட்டாற்றான் அடி வணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் *

கேட்டாயே மடநெஞ்சே ! கேசவன் எம்பெருமானைப் *

பாட்டாய பலபாடிப் பழ வினைகள் பற்றறுத்து *

நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே.   10.6.2    திருவாட்டாறு

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி *

மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று *

விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே *

எண்ணின வாறாகா இக் கருமங்கள் என்னெஞ்சே !           10.6.3    திருவாட்டாறு

என்னெஞ்சத்துள் இருந்து இங்குஇருந்தமிழ் நூலிவைமொழிந்து *

வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான் *

மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காய் படை தொட்டான் *

நல்நெஞ்சே ! நம்பெருமான், நமக்கு அருள் தான் செய்வானே.     10.6.4    திருவாட்டாறு

வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே *

நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே ! *

தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் * செழும் பறவை

தானேறித் திரிவான் அத்தாளிணை என் தலை மேலே.    10.6.5    திருவாட்டாறு

தலை மேல தாளிணைகள் தாமரைக் கண் என்னம்மான் *

நிலை பேரான் என்னெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான் *

மலைமாடத் தரவணை மேல் வாட்டாற்றான் * மதம் மிக்க

கொலை யானை மருப்பொசித்தான் குரை கழல்கள் குறுகினமே.        10.6.6                திருவாட்டாறு

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான் *

திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன *

வரை குழுவு மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல் *

விரை குழுவு நறுந் துளவம் மெய்ந் நின்று கமழுமே.         10.6.7    திருவாட்டாறு

மெய்ந் நின்று கமழ் துளவ, விரை யேறு திருமுடியன் *

கைந்நின்ற சக்கரத்தன், கருதுமிடம் பொருது புனல் *

மைந்நின்ற வரை போலும், திருவுருவ வாட்டாற்றாற்கு *

எந்நன்றி செய்தேனா, என்னெஞ்சில் திகழ்வதுவே ?   10.6.8    திருவாட்டாறு

திகழ்கின்ற திருமார்பில், திருமங்கை தன்னோடும் *

திகழ்கின்ற திருமாலார் சேர்விடம், தண்வாட்டாறு *

புகழ்கின்ற புள்ளூர்தி, போரரக்கர் குலம் கெடுத்தான் *

இகழ்வின்றி என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே.       10.6.9    திருவாட்டாறு

பிரியாது ஆட்செய்யென்று, பிறப்பறுத்து ஆளறக் கொண்டான் *

அரியாகி, இரணியனை ஆகங் கீண்டான் அன்று *

பெரியார்க்கு ஆட்பட்டக்கால், பெறாத பயன் பெறுமாறு *

வரிவாள் வாயரவணை மேல், வாட்டாற்றான் காட்டினனே.          10.6.10  திருவாட்டாறு

காட்டித் தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த *

வாட்டாற்றெ ம்பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன் *

பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள், இப்பத்தும்

கேட்டு * ஆரார் வானவர்கள், செவிக்கினிய செஞ்சொல்லே.       10.6.11  திருவாட்டாறு

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.