[highlight_content]

வாக்ய குருபரம்பரா

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

வாக்ய குருபரம்பரா மூலம்

அஸ்மத் குருப்யோ நம:

அஸ்மத் பரம குருப்யோ நம:

அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பராங்குஶ தாஸாய நம:

ஸ்ரீமத்யாமுந முநயே நம:

ஸ்ரீராமமிஶ்ராய நம:

ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:

ஸ்ரீமந்நாதமுநயே நம:

ஸ்ரீமதே ஶடகோபாய நம:

ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:

ஶ்ரியை நம: ஸ்ரீதராய நம:

ஶ்ரீ:

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:
வாக்ய குருபரம்பரா வ்யாக்யாநம்.

ஶ்ரிய: பதியாய் ஸ்ரீவைகுண்ட நிகேதனாய் நித்ய முக்தாநுபாவ்யனாய் நிரதிஶயாநந்தயுக்தனாயிருக்கிற ஸர்வேஶ்வரன், அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அநுபவித்து நித்ய கைங்கர்யரஸராய் வாழுகைக்கு ப்ராப்தி யுண்டாயிருக்கச்செய்தேயும் அத்தை யிழந்து “அஸந்நேவ ஸ ப4வதி” [1] என்கிறபடியே அஸத்கல்பராய் போ4கமோக்ஷஶூந்யராய்  “ஸம்யுக்தமேகம் க்ஷரமக்ஷரம் ச” [2] என்கிறபடியே “திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுண துரத்யயாநாத்யசித்ஸம்பந்த திரோஹித ஸ்வப்ரகாஶராயிருக்கிற ஸம்ஸாரிசேதநருடைய இழவையநுஸந்தித்து, “ஸ ஏகாகீ ந ரமேத” [3] என்றும், “ப்4ருஶம் ப4வதி து3:கி2த:” [4] என்றும் சொல்லுகிறபடியே அத்யந்த வ்யாகுலசித்தனாய் இவர்கள் கரணகளேபரங்களையிழந்து ‘லூநபக்ஷ இவாண்ட3ஜ:’ [5] என்கிறபடியே இறகொடிந்த பக்ஷிபோலே கிடக்கிற தஶையிலே “நாமரூபே வ்யாகரவாணீ” [6] என்றும், ‘அந்நாள் நீதந்த வாக்கை’ என்றும் சொல்லுகிறபடியே இவர்களுக்குக் கரணகளேபரங்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கீடான ஶக்தி விசேஷங்களையுங் கொடுத்து, தேஹாத்மாபிமாநமும் அந்யஶேஷத்வமும், ஸ்வஸ்வாதந்த்ரியமுமான முக்குழியிலே விழுந்து அநர்த்தப்படாதே தன்னை யாஶ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்குடலாக ‘அபௌருஷமப்ரப4வம்’ என்கிறபடியே  அபௌருஷேயமாய் அதஏவ புருஷஶேமுஷீ க்ருதமாலிந்ய விநிர்முக்தமாய் வேத3ஶாஸ்த்ராத் பரம்நாஸ்தி’ [7] என்கிறபடியே தனக்கு மேற்பட்டதொரு ஶாஸ்த்ர மின்றியே யிருப்பதான. ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை, “யோவை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை” [8] ‘அருமறையை வெளிப்படுத்த வம்மான்’ என்கிறபடியே நாராயணத்வப்ரயுக்தமான தன்னுதரத் (தரி) தெறிப்பாலே தானே ப்ரவர்த்திப்பித்த விடத்திலும், ததர்த்த நிர்ணயந்தான் ஸர்வஶாகா2 ப்ரத்யய ந்யாயாதி ஸாபேக்ஷமா யிருக்கையாலே அல்பமதிகளுக்கு அர்த்தநிஶ்சயம் பண்ணுகையரிதென்றும், இம்முகத்தாலே இவர்கள் திருந்திக் கரைமரஞ் சேருகையுமரிதென்றும், உபதேஶ பரம்பரைகளாலே இவர்களைத் திருத்தி உஜ்ஜீவிப்பிக்கை எளிதென்றும் திருவுள்ளம்பற்றி “ஆசார்யாணாமஸாவஸாவித்யாப43வத்த:” [9] என்றும், உபதேஶந்தான் பகவானான தானடியாக வந்ததாயிருக்குமதாகையாலே யதற்காக, ‘ முன்னைவண்ணம் பாலின்வண்ணம்’ என்றும், ‘ஶஶிவர்ணம்’ [10] என்றும்,  ‘வல்லனெம்பிரான் விட்டுவே’ சொல்லுகிறபடியே திருமந்திரத்தை யுபதேஶிக்குமிடத்தில் ததுபதேஷ்டாவுக்கு வடிவாயிருந்துள்ள ஶுத்தஸ்வபா4வத்வ ஶப்தஸம்பத்வாத் யஶங்கித அகடிதகடநா ஸாமர்த்யாதிகளை யுடையனாய்) ‘ப3ஹுதாயாவிஜாயதே’ [11] என்றும், ‘சன்மம் பலபல செய்து’ என்றும் சொல்லுகிறபடியே பலவகைப்பட்டிருந்துள்ள விபவங்களில் வைத்துக்கொண்டு, ‘மத்யே விரிஞ்சிகிரிஶம் ப்ரதமாவதார:’ [12] என்னும்படி ப்ரதமாவதாரமான மஹாவிஷ்ணுவாய்க் கொண்டு இந்த அண்டாந்தர்வர்த்தியான ஸத்ய லோகத்துக்கும் அவ்வருகாயிருந்துள்ள ஸ்ரீவிஷ்ணு லோகத்திலே ‘ஜகதுபக்ருதயே ஸோயமிச்சாவதார:’ [13] என்கிறபடியே இந்த ஜகத்தை வாழ்விப்பதாக ‘ஶ்ரோணாநக்ஷத்ரம் விஷ்ணுர்தேவதா’ [14] என்னும்படி விஷ்ணுதேவதாகமான திருவோண மென்கிற திருநக்ஷத்ரத்திலே ஸ்வேச்சையா ஸ்வயமேவ அவதரித்தருளி, உடனே ‘இறையுமகலகில்லேன்’ என்றிருக்கும் பெரியபிராட்டியாரையும், அந்த ஸ்ரீவிஷ்ணுலோகத்திலே தானே , ‘பத்மேஸ்திதாம்’ [15] என்றும், ‘தேனே மலரும் பூமேலிருப்பாள்’ என்றும், ‘விஷ்ணுபத்நீ’ [16] என்றும் சொல்லுகிறபடியே அப்பொழுதைத் தாமரைப் பூவிலே மஹாலக்ஷ்மீ என்கிற திருநாமத்தை யுடையளாய் ஸ்வமஹிஷீயாகத் தானே திருவவதரிப்பித்தருளி, ‘தாப: புண்ட்ரஸ்ததா நாம மந்த்ரோயாகஶ்ச பஞ்சம:’ [17], ‘அமீ பரமஸம்ஸ்காரா: பாரமைகாந்த்ய ஹேதவ:’ [18] என்று ரஹஸ்ய த்ரயோபதேஶந்தான் ‘தாபோர்த்வ புண்ட்ர நாம மந்த்ரயாக’ பூர்வகமாக இருக்கிறதோபாதி. ‘பரம்பராமுபதிஶேத் குரூணாம் ப்ரதமோகுரு: ஆத்மவித்யா விஶுத்யர்த்தம் ஸ்வாசார்யாத்யாம் த்விஜோத்தம:’ [19] என்றும், ‘ஸஹஸ்ர புருஷம் வாபி ஶதபூருஷமேவவா । த்ரிஸப்த புருஷம்வாபி த்விஸப்ததஶபூருஷம் ।।’ [20] என்றும், ‘ஆதாவுபதிதேஶாத்வேதே’ [21] இத்யாதிகளில் குருபரம்பரா ஸங்க்ரஹமாயிருந்துள்ள  ‘அஸ்மத் குருப்யோ’ இத்யாதி வாக்யத்ரயோபதேஶ பூர்வகமாயிருக்கும் என்கையாலே ‘ஸ்ரீவிஷ்ணுலோகே பகவாந் விஷ்ணுர் நாராயணஸ் ஸ்வயம் । ப்ரோக்தவாந் மந்தரராஜாதீந் லக்ஷ்ம்யை தாபாதி பூர்வகம் ।।’ [22] என்றும், ‘விஷ்ணுமாதி குரும் லக்ஷம்யா: மந்த்ரரத்நப்ரதம் பஜேத்’ [23] என்றுஞ் சொல்லுகிறபடியே அவர்ளுக்குத் தாபோர்த்வ புண்ட்ர தாஸ்ய நாம ப்ரதாந புரஸ்ஸரமான இந்த வாக்ய த்ரயோபதேஶ பூர்வகமாக ஸ்வரூபோபாய புருஷார்த்தயாதாத்ம்ய ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயத்தை நேராகத் தானே உபதேஶித்தருளி, அப்படியே ‘ஸோபதிஷ்டவதீ ப்ரீத்யா தாப: புண்ட்ராதி பூர்வகம் । விஷ்ணுலோகேவதீர்ணய ப்ரியாய ஸததம் ஹரே:  ।। ஸேநேஶாய ப்ரியா விஷ்ணோர்மூலமந்த்ரத்வயாதிகம் ।।’ [24] என்கிறபடியே அவளைக்கொண்டு அந்த ஸ்ரீவிஷ்ணுலோகத்திலே தானே அவதீர்ணரான ஸேனைமுதலியாருக்கும்

இந்தக்ரமத்திலே ரஹஸ்ய த்ரயோபதேஶத்தைப் பண்ணுவித்துப் பின்னையுமப்படியே ‘ஸேநேஶ ஸ்வயமாகத்ய ப்ரீத்யா ஸ்ரீநகரீம் ஶுபாம் । ஶடகோபாய முநயே திந்த்ரிணீமூலவாஸிநே ।। தாபாதி பூர்வகம் மந்த்ரத்வய ஶ்லோகவராந் க்ரமாத்। விஷ்ணுபத்ந்யா மஹாலக்ஷ்ம்யா நியோகாதுபதிஷ்டவாந்।।’ [25] என்கிறபடியே இந்த க்ரமத்திலே தானே ஸேனைமுதலியாரைக்கொண்டு திருநகரியிலே திருப்புளியாழ்வாரடியிலே யெழுந்தருளியிருக்கிற ஆழ்வாருக்கு ரஹஸ்ய த்ரயோபதேஶத்தைப் பண்ணுவித்து, உடனே தான் அவருக்கு மயர்வற மதிநலமருளி ‘புநஶ்ச நாதமுநயே பஞ்சஸம்ஸ்கார பூர்வகம் । பட்டநாதப்ரப்ருதிபிர் நிர்மிதைர் திவ்யயோகிபி:  திவ்யைர் விம்ஶதி ஸங்க்யாகை: ப்ரபந்தைஸ்ஸஹ தேஶிக:। ஸ்வோக் தத்ரமிடவேதாநாம் சதுர்ணாமுப தேஶக்ருத்।।’  [26] என்கிறபடியே ஆழ்வாரைக்கொண்டு அத்திருநகரியிலே திருப்புளியாழ்வாரடியிலே தானே நாதமுநிகளுக்கு மிந்த க்ரமத்திலே ரஹஸ்யத்ரயோபதேஶத்தைத் திவ்யப்ரபந்தோபதேஶாதி ஶிரஸ்கமாகப் பண்ணுவித்துப் பின்னையும் அப்படியே அந்த நாதமுநிகளைக்கொண்டு உய்யக்கொண்டார் தொடக்கமானார்க்கும், உய்யக்கொண்டாரைக் கொண்டு, மணக்கால் நம்பி தொடக்கமானார்க்கும், மணக்கால் நம்பியைக்கொண்டு ஆளவந்தார் தொடக்கமானார்க்கும், ஆளவந்தாரைக்கொண்டு பெரிய நம்பி தொடக்கமானார்க்கும், பெரிய நம்பியைக்கொண்டு உடையவர்க்கும் இந்த க்ரமத்திலே ரஹஸ்யத்ரயோபதேஶத்தைப் பண்ணுவித்துப் பின்னையும் அப்படியே உடையவரைக்கொண்டு ஆழ்வான் ஆண்டான் முதலான எழுபத்து நாலு முதலிகளுக்கும், எம்பார், அருளாளப்பெருமாளெம்பெருமானார் தொடக்கமான எழுநூறு ஜீயர்களுக்கும், மற்றும் அநேக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் இந்த க்ரமம் தப்பாமே ரஹஸ்ய த்ரயோபதேஶத்தைப்பண்ணு வித்துப் பின்னையும் அப்படியே உடையவர் தர்ஶநத்தை நிர்வஹித்துக்கொண்டு போருகிற காலத்திலே ‘ப்ரீத்யா ப்ருதக் ப்ருதக் சிஷ்யை: ப்ரணமேதீஶ்வராவதி ஸ்வாராத்யம் யாவாதாஜ்ஞாதும் வாக்யம்  தாவதநுஸ்மரேத்’  [27] என்றும், ‘ப்ரத்யஹம் ப்ரணதைஶ்ஶிஷ்யை: ப்ரபாதே பத்மஸம்பவே  தத்யதா விதிநாநித்யம் ப்ரவர்த்தவ்யம் குரோ: குலம்’ [28] என்கிறபடியே இம்மூன்று வாக்யத்துடனே ‘ஸ்ரீமதே ராமாநுஜாய நம:’  என்று தொடங்கி ‘ஶ்ரீதராய நம:’ என்கிற வாக்யத்தளவான பத்து வாக்யத்தையுஞ் சேர்த்துப் பதின் மூன்று வாக்யமாக்கி இத்தை மேலோரான நம்மாசார்யர்கள் தந்தாமுக்குத் தஞ்சமாக அநுஸந்திப்பதுந் தந்தாமை ஆஶ்ரயித்தார்க்கு உபதேசிப்பதுஞ் செய்யக்கடவர்களென் று தாமே ஆழ்வானைக்கொண்டு நியமித்தருளி, இப்படி சேதநஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கியும், புஷ்பிதமாக்கியும், பலபர்யந்தமாக்கியும் செய்து வைத்துச் செல்வனாய், ‘துளக்கற்றமுதமா’ யென்றும், ‘விஜ்வர: ப்ரமுமோதஹ’ [29] என்றுஞ் சொல்லுகிறபடியே உள்வெதுப்புத் தீர்ந்து நிர்வ்ருதனாயிருந்தான்.

‘அந்வயாதபிசைகஸ்ய ஸம்யக் ந்யஸ்தாத்ம நோஹரௌ ஸர்வ ஏவப்ரமுச்யோந்நரா: பூர்வேபரேததா’ [30] என்றும், ‘அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாஶ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேஶிகா முக்திமாபு:  ஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம் யத்ஸம்பந்தா தமநுத கதம் வர்ண்யதே கூரநாத:’ [31] என்றும் சொல்லுகிறபடியே முன்புள்ள முதலிகளுக்கும் பின்புள்ள முதலிகளுக்குமொக்க உத்தாரகரான உடையவர் ஸர்வஜ்ஞராயிருக்கச்செய்தேயும், ‘ததாபி ஸமயாசாராந் ஸ்தாபயந் ஸாம்ப்ரதாயிகாந்’ [32] என்கிறபடியே தமக்கு ஸத்ஸம்ப்ரதாய பரிஶுத்தி யுண்டென்னு மிடந்தோற்ற ‘அஸ்மத்குருப்யோ’ இத்யாதிவாக்யத்ரயத்தையும் தாம் அநுஸந்திக்கும்போது முந்தின வாக்யத்தில் குருபத ப்ரதிபாத்யர் பெரிய நம்பி என்றும், அதில் பஹுவசந ப்ரதிபாத்யர் திருக்கச்சி நம்பியும் பேரருளாளப்பெருமாளும் என்றும், இரண்டாம் வாக்யத்தில் பரமகுருப்ரதி பாத்யர் ஆளவந்தார் என்றும், அதில் பஹுவசந ப்ரதிபாத்யர் ஸப்ரஹ்மசாரிகளான பெரியோர்கள் என்றும், மூன்றாம் வாக்யத்தில் குருபத ஸர்வஶப்த பஹுவசந ப்ரதிபாத்யர் மணக்கால் நம்பி தொடக்கமான மேலோரெல்லாரும் என்றும் கண்டு கொள்வது.
அப்படியே உடையவருக்கு முன்புள்ள முதலிகளில் வைத்துக்கொண்டு பெரிய நம்பி இவ்வாக்ய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது முந்தின வாக்யத்தில் குருபதப்ரதிபாத்யர் ஆளவந்தார் என்றும், இரண்டாம் வாக்யத்தில் பரமகுரு ப்ரதிபாத்யர் மணக்கால் நம்பியென்றும், இரண்டிலும் பஹுவசந ப்ரதிபாதியர் இவர்களுக்கு குரூபஸத்தியிலே ருசியை ஜநிப்பித்த ஸ்ரீவைஷ்ணவர்களும் அவர்களோடு ஸங்கதியை உண்டாக்கின ஈஶ்வரனும் என்றும், மூன்றாம் வாக்யத்தில் குருபத ஸர்வஶப்த பஹுவசந ப்ரதிபாத்யர் உய்யக்கொண்டார் தொடங்கி ஸ்ரீய:பதியளவாயுள்ள அனைவருமென்றும் கண்டு கொள்வது.
அப்படியே ஆளவந்தார் இவ்வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும்போது குருபத ப்ரதிபாத்யர் மணக்கால் நம்பி யென்றும், த்விதீய வாக்யத்தில் பரமகுரு ப்ரதிபாத்யர் உய்யக் கொண்டார் என்றும், இரண்டிலும் பஹூவசந ப்ரதிபாத்யர் ‘யதாஸம்பவம் இதில் ருசியைப் பிறப்பித்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஈஶ்வரனும் என்றும், மூன்றாம் வாக்யத்தில் குருபத ஸர்வ ஶப்த பஹுவசந ப்ரதிபாதியர் ஸ்ரீமந் நாதமுநிகள் தொடங்கி ஸ்ரீதரன் அளவுள்ள அனைவரும் என்றும் கண்டு கொள்வது.
அப்படியே மணக்கால் நம்பி இவ்வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது ப்ரதம த்விதீய வாக்யஸ்த குரு பரமகுரு ப்ரதிபாத்யர் உய்யக்கொண்டாரும், நாதமுநிகளும் என்றும், இரண்டிலும் பஹுவசந ப்ரதிபாத்யர் யதாஸம்பவமித்தை இசைப்பித்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஈஶ்வரனும் என்றும், த்ரிதீய வாக்யஸ்த குருபத ஸர்வஶப்த பஹுவசந ப்ரதிபாத்யர் நம்மாழ்வார் தொடக்கமானா ரெல்லாரும் என்றுங் கண்டு கொள்வது.

அப்படியே உய்யக்கொண்டார் இவ்வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும்போது ஆதிமத்ய வாக்யகத குரு பரமகுருபத ப்ரதிபாத்யர் நாதமுநிகளும் ஆழ்வாரும் என்றும், இரண்டிலும் பஹுவசந ப்ரதிபாத்யர் யதாஸம்பவம் இதில் ப்ரேமத்தை ஜநிப்பித்த பெரியோர்களும் எம்பெருமானும் என்றும், த்ரிதீய வாக்யகத குருபத ஸர்வபத பஹுவசந ப்ரதிபாத்யர் ஸேனை முதலியார் தொடக்கமான மேலோரனைவரும் என்றுங் கண்டு கொள்வது.   அப்படியே நாதமுநிகள் இவ்வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும்போது ப்ரதம த்விதீய வாக்யகத குரு பரமகுருபத ப்ரதிபாத்யர் ஆழ்வாரும் ஸேனை முதலியாரும் என்றும், இரண்டிலும் பஹுவசந ப்ரதிபாத்யர் தத்ஸம்பந்த கடகரான ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானும் என்றும், த்ரிதீய வாக்யகத குருபத ஸர்வஶப்த பஹுவசந ப்ரதிபாத்யர் பிராட்டியும், எம்பெருமானும் மற்றும் அங்குள்ளார் அனைவருமென்றும் கண்டு கொள்வது.
அப்படியே ஆழ்வாரும் இவ்வாக்யத்ரயத்தையும் அநுஸந்திக்கும்போது குரு பரமகுரு ப்ரதி பாத்யர் ஸேனைமுதலியாரும் பிராட்டியும் என்றும், இரண்டிலும் பஹுவசந ப்ரதிபாத்யர் இவ்விருவர்க்கும் உயிர் நிலையாயிருப்பார் சிலர் என்றும், த்ரிதீய வாக்யகத குருபத ஸர்வஶப்த பஹுவசந ப்ரதிபாத்யர் ஸர்வேஶ்வரனும் வ்யூஹமும் விபவமும் நித்ய ஸூரிகளும் என்றும் கண்டுகொள்வது.
இப்படியே ஸேனைமுதலியாரும் இவ்வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது ப்ரதம த்விதீய வாக்யகத குரு பரமகுரு ப்ரதிபாத்யர் பிராட்டியும் விஷ்ணு அவதாரமான எம்பெருமானும் என்றும், இரண்டிலும் பஹுவசந ப்ரதிபாத்யர் அவளுக்கு ஸ்தன பாஹூ த்ருஷ்டி ஸ்தாநீயருமான மற்றைப் பிராட்டிமாரும் அவனடிமை கொள்ளுகிற மற்றை அமரர்கள் தாங்களும் என்றும், த்ரிதீய வாக்யகத குருபத ஸர்வஶப்த பஹுவசந ப்ரதிபாத்யர் இவ்வவதாரத்துக்கு நாற்றங்காலான க்ஷீரார்ணவ நிகேதநனும் மற்றும் வ்யூஹாவதாரங்களும் ஶ்வேத த்வீபவாஸிகளும் என்றும் யதாஸம்பவம் இப்புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக்கடவது.
அப்படியே பிராட்டி இவ்வாக்யத்ரயத்தையும் அநுஸந்திக்கும்போது ஆதி மத்ய வாக்யகத குரு பரமகுரு ப்ரதிபாத்யர் விஷ்ணு அவதாரமான எம்பெருமான் தானும் அவ்வவதாரகந்தமான வ்யூஹ வாஸுதேவனும் என்றும், இரண்டிலும் பஹுவசந ப்ரதிபாத்யர் பெரிய திருவடி தொடக்கமானாரும் ஸங்கர்ஷணாதிருத்த ப்ரத்யும்நர்கள் என்றும், த்ரிதீயவாக்யஸ்யத குருபத ஸர்வஶப்த பஹுவசந ப்ரதிபாத்யர் வானிளவரசு வைகுந்தக் குட்டனும் ‘ஓடும் புள்ளேறி’ ப்படியே இச்சேதநனுக்காக இவ்விபூதியிலே அவன் பரிக்ரஹிக்கும் சில அவதாரங்களும் நித்யஸித்தரும் என்றும் யதாஸம்பவம் இப்புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக்கடவது.
ப்ரதமாவதாரமான விஷ்ணு அவதாரமும், அவ்வவதார கந்தமான பாற்கடலுள் பையத் துயின்ற பரமனும் நிவாஸமானவைகுந்த வானாடனும் தர்ம்யைக்யத்தாலே பேதமன்றிக்கே ஏகதத்வமாய் இருந்தார்களேயாகிலும் பெரிய பெருமாளுக்கும் பெருமாளுக்கும் தர்ம்யைக்யம் இருக்கச்செய்தே ‘நாராயண முபாகமத்’ [33] என்று விக்ரஹ பேதத்தாலே உபகந்த்ருத்வ உபகந்தவ்யத்வங்களைச் சொன்னவோபாதி இவ்விடத்திலும் விக்ரஹபேதத்தையிட்டு இம்மூவர்க்கும் இங்ஙன் குருத்வ பரமகுருத்வ ஸர்வகுருத்வங்களைச் சொல்லக் குறையில்லை.

உடையவருக்குப் பின்புள்ள முதலிகளில் வைத்துக் கொண்டு, ‘ராமாநுஜ பதச்சாயா’ [34] என்னும்படி அவர் திருவடிகளிலே யாஶ்ரயித்தவர்களுக்கு  நிழலுமடிதாறுமாய்க்கொண்டு குருபரம்பராநு ப்ரவிஷ்டரான எம்பார் இவ்வாக்யத்ரயத்தையும் அநுஸந்திக்கும்போது,அதில் குரு பரமகுரு ஸர்வகுருபத பஹுவசந ப்ரதிபாத்யர் கோபலீவர்த ந்யாயத்தாலே பிள்ளானும், ஆழ்வானும், ஆண் டானும், அநந்தாழ்வானும் என்றும், அவர்களுக்கு அபிமதராயிருந்துள்ள ஸ்ரீவைஷ்ணவர்களென்றும் பூர்வம் போலே இங்கனே விபஜித்துப் பொருள் சொல்லக்கடவது.

            அப்படியே எம்பார் திருவடிகளிலே ஆஶ்ரயித்த பட்டர் இவ்வாக்யத்ரயத்தையும் அநுஸந் திக்கும் போது இதில் குரு பரமகுரு ஸர்வகுருபத பஹுவசந ப்ரதிபாத்யர் அடைவே எம்பாரும், ஆழ்வானும், ஆண்டானும், பிள்ளானும் என்றும், அவர்களுக்கு அந்தரங்கராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றும் பூர்வம்போலே இங்ஙனே விபஜித்துப் பொருள் சொல்லக்கடவது.
அப்படியே பட்டர் திருவடிகளை ஆஶ்ரயித்த நஞ்சீயர் இவ்வாக்யத்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது இதில் குரு பரமகுரு ஸர்வகுருபத பஹுவசந ப்ரதிபாத்யர் பட்டரும், ஆழ்வானும், எம்பாரும், பிள்ளான் ஆண்டான் தொடக்கமானாரும் என்றும் பூர்வம் போலே யதாஸம்பவம் இங்ஙனே விபஜித்துப் பொருள் சொல்லக்கடவது.
பின்னையும் அப்படியே நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நம்பிள்ளை இம்மூன்று வாக்யத்தையும் அநுஸந்திக்கும் போது இதில் குரு பரமகுரு ஸர்வகுருபத பஹுவசந ப்ரதிபாத்யர் நஞ்ஜீயரும், பட்டரும், எம்பாரும், பிள்ளானும் என்றும் அவர்களுக்கு ஸப்ரஹ்மசாரிகளாய் பஹுமந்தவ்யராய் இருந்துள்ள இராமாநுசனைத் தொழும் பெரியோர்களென்றும், இங்ஙனே விபஜித்துப் பொருள் சொல்லக்கடவது.
இக்குருபரம்பரைதான் ஆரோஹண க்ரமத்திலே ‘ஆசார்யாணா மஸாவஸா வித்யா பகவத்த:’  [35] என்று பகவானளவுஞ் சென்று அவ்வருகிற் செல்லக்கடவதொன்றன்று. இங்ஙனே இருந்தாலும் அவரோஹண க்ரமத்திலே வந்தால் ‘இராமாநுசன் தாள் பிடித்தார் பிடித்தாரைப்பற்றி’ இத்யாதிப்படியே மேன்மேலெனக் கொழுந்து விட்டுப் படர்ந்து செல்லக்கடவதொன்று. ஆகையாலே நம்பிள்ளை திருவடிகளிலே ஆஶ்ரயித்த வடக்குத் திருவீதிப்பிள்ளையும், அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த பிள்ளைலோகாசார்யரும், அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த திருவாய்மொழிப்பிள்ளை யும், அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த பெரிய ஜீயரும், இவ்வாக்யத்ரயத்தையும் அநுஸந்திக்கும்போது இவ்வாக்யத்ரயே குரு பரமகுரு ஸர்வ குருபத பஹுவசநப்ரதிபாத்யர் இன்னார் இன்னர் என்னுமிடம் ஆசார்யர்களுடைய திருநாமங்களிலே கண்டுகொள்வது. அப்படியே பஹுவசந ப்ரதிபாத்யர் அவர்களுக்கு உயிர்நிலையாய்த் தந்தாமுக்கு பஹுமந்தவ்யராய்க் கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும்போது சுள்ளிக்கால் போலே தந்தாமை அவ்வவர்கள் திருவடிகளிலே சேர்க்கும் ஸ்ரீவைஷ்ணவர்களென்றுங் கண்டு கொள்வது.
இனி : ஸ்ரீமதே ராமாநுஜாய நம: இத்யாதி வாக்ய  தஶகத்திலும் வைத்துக்கொண்டு, ‘ஶ்ரியை நம:’, ‘ஸ்ரீதராய நம:’  என்கிற வாக்ய த்வயத்தில் ‘ஸ்ரீரிதி ப்ரதமாபிதாநம் லக்ஷ்ம்யா:’  [36] என்றும் ‘ஸ்ரீரித்யேவ ச நாம தே’ [37] என்றுஞ் சொல்லுகையாலே ஸ்ரீஶப்தம் பெரியபிராட்டியாருக்கு வாசகமாயிருக்கும். ‘ஶ்ரியம் தரதீதி ஸ்ரீதர:’ [38] என்று யோக வ்யுத்பத்தியாலே எம்பெருமானுக்கும் திருநாமமாயிருக்கும். மற்றை எட்டு வாக்யத்திலும் ; ‘ஶ்ரீஶப்தம் ஜ்ஞாந துல்யம் தநமஸ்தி கிஞ்சித்’ [39]  என்றும் ‘பகவத் பக்திரேவாத்ர ப்ரபந்நாநாம் மஹாதநம்’  [40] என்றுஞ் சொல்லுகையாலே ஜ்ஞாநபக்திகளாகிற மஹாஸம்பத்துக்கு வாசகமாயிருக்கும்.

இதில் சில வாக்யங்களில் ஶ்ரீஶப்தம் ஸவிபக்திக மதுப்-ப்ரத்யய உபேதமாயும், சில வாக்யங்களில் லுப்த விபக்திக மதுப்ப்ரத்யயோபேதமாயும், சில வாக்யங்களில் மதுப்ப்ரத்யய ரஹிதமாயும் இங்ஙனே வைரூப்யேண நிர்த்தேஶிகைக்கு நிபந்தநம் சிலருடைய ஜ்ஞாநபக்திகள் விஶததமங்களாய், சிலருடைய ஜ்ஞாந பக்திகள் விஶததரங்களாய், சிலருடைய ஜ்ஞானபக்திகள் விஶதங்ளாய் இருக்கையாலே. .
அது எங்ஙனே யென்னில் :–
பங்கயத்தாள் திருவடியைப் பற்றின ஸேனை முதலியாருடையவும், அவர் அடிக்கண்ணி சூடிய ஆழ்வாருடையவும், அவர் அடிபணிந்துய்ந்த உடையவருடையவும், ஜ்ஞாநபக்திகள் விஶத தமங்களாய் இருக்கும். திருக்குருகூர் நம்பிக்கன்பரான நாதமுநிகளுடையவும், தத்விஷயீகாரபாத்ர பூதரான யமுனைத்துறைவருடையவும் ஜ்ஞாந பக்திகள் விஶததரங்களாயிருக்கும். சீலமிகு நாதமுனி சீருரைப்போரான உய்யக்கொண்டாருடையவும், தச்சிஷ்யரான மணக்கால் நம்பியுடையவும், தத்ப்ரியஶிஷ்யரான பெரிய நம்பியுடையவும், ஜ்ஞாநபக்திகள் விஶதங்களாயிருக்கும்.
இவர்களுடைய ஜ்ஞாநபக்திகள் ஏகரூபமாயிராதே இங்ஙனே தரதமபாவேந இருக்கைக்கு ஹேதுவேதென்னில் :
ஸேனைமுதலியாருடையவும் ஆழ்வாருடையவும் ஜ்ஞாநபக்திகள் தாம், ப்ரபத்தி மார்க்கத்தை விஷ்வக்ஸேந ஸம்ஹிதையிலே பரக்க தர்ஶிப்பிக்கைக்கும், ப்ரபத்தவ்யனான எம்பெருமான்படிகளை உள்ளபடி அனைவருக்கும் அறிவிக்கைக்கும், அப்படியே  ‘ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத் ததாநுஜாநந்த முதாரவீக்ஷணை:’ [41] என்று மதியுடையார் சொல்லலாம்படி அவனடியாகப் பிறந்தவையான திருவாய்மொழி முகத்தாலே ‘தந்தனன் தனதாள் நிழலே’, ‘கழல்களன்றி மற்றோர் களைகணிலங் காண்மின்களே’,  ‘அடிக்கீழமர்ந்து புகுந்தேனே’ என்று ப்ரபத்தி மார்க்கத்தைப் பலபடியாலுந் தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ஸ்பஷ்டமாக்குகைக்கும், ‘உயர்வற வுயர்நலமுடையவன், மயர்வற மதிநல மருளினன்’, ‘கண்ணன்’, ‘தேவர்க்குந்தேவா’ என்று ப்ரபத்தவ்யனுடைய படிகளைப் பத்தும்பத்தாகப் பற்றியிருக்கைக்கும், ‘உம்முயிர் வீடுடையான்’, ‘யானே நீ யென்னுடைமையும் நீயே’, ‘தொண்டர்தொண்டர் தொண்டன்’ என்று ப்ரபத்தாவின்படிகளைப் பல வகையாக ப்ரதர்ஶிப்பிக்கைக்கும், ‘பேரமர்காதல் கடல் புரைய விளைவித்துக்கொண்ட வென்காதலுரைக்கிற்றோழி மண்டிணிஞாலமு மேழ்கடலும் நீள்விசும்பும்கழியப்பெரிதால்’, ‘சூழ்ந்த தனிற் பெரிய வென்னவா’ என்றும் பிராட்டிமார் பேச்சாலும் தம் பேச்சாலும் தம்முடைய ஆற்றாமையை யறிவிக்கைக்கும் உறுப்பாய் இருக்கையாலே விஶததமங்களாயிருக்கும்.
உடையவருடைய ஜ்ஞாநபக்திகளும், ‘பவது மம பரஸ்மிந் ஶேமுஷீ பக்திரூபா’ [42] என்று தாமும், ‘அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹத:’ [43] என்று ஆழ்வானும் அருளிச்செய்யலாம் படியாக விருந்தவையாய் கத்யத்ரய ஸ்ரீபாஷ்யமுகத்தாலே ஶரணாகத ஶாஸ்த்ரம் பக்தி ஶாஸ்த்ரங்களையடைவே வெளியிடுகைக்கும், ‘அவ்வெழில் மறையிற் சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே’ என்கிறபடியே தம்முடைய ‘தாதாத்மிக ப்ரதிபையாலே ப்ரதிவாதி வாரணப்ரகடாடோபவிபாடநத்துக்கும்’, ‘ நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடாநிறைந்த அக்காரவடிசிலையும், நாச்சியார் மநோரதித்தபடியே பரமஸ்வாமியான அழகருக்கு அமுது செய்தருளப்பண்ணுகைக்கும், துருஷ்கன் படை வீட்டிலே சென்று அவன் மகள் மாளிகையிலே இருக்கிற ராமப்ரியரை  ‘வருக வருக வருக இங்கே வாமன நம்பி வருக இங்கே கரியகுழற் செய்யவாய் முகத்தெங் காகுத்த நம்பி வருக இங்கே – இத்யாதியாலே தாமே யெழுந்தருளி அழைக்க அவர்தம்மருகே ஓடியோடி விரைந்தோடி வந்ததால் என் செல்வப்பிள்ளாய் வாராயென்று அவருக்குத் திருநாமஞ்சாற்றித் தந்திருமார்பிலே யணைத்துக் கொள்ளுகைக்கும், புழுவன்பட்ட வ்ருத்தாந்தத்தைத் திருக்கல்யாணிக்கரையிலே தம் ஸந்நிதியிலே வந்து மாறொன்றில்லா மாருதியாண்டான் விண்ணப்பஞ் செய்யக்கேட்டுப் பெரிய ப்ரீதியோடே செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான  பெரியபெருமாளை மங்களாஶாஸநம் பண்ணுவதாகக் கோயிலுக்கெழுந்தருளும்போது தாமோர் ஐம்பத்திருவரை செயல் நன்றாகத் திருத்தி தத்விஷயத்திலே பரிவராயிருக்கும்படி நியமிக்கைக்கும். கரைகட்டாக்காவேரி போலக்கரைபுரண்டு ஆஶ்ரயித்த அளவன்றிக்கே யிருக்கைக்கும் உடலாயிருக்கையாலே விஶததமங்களாயிருக்கும்.
ஸ்ரீமந்நாதமுநிகளுடையவும் ஆளவந்தாருடையவும் ஜ்ஞாநபக்திகள் இங்ஙனே விஶ்ருங்கலமாய்க் கரைபுரண்டிராமே யரையாறு பட்டுத் தாந்தாம் ஆஶ்ரயித்த அளவிலேதானே அடங்கி யொன்றிரண்டு ப்ரபந்தங்களை யிட்டருளுகைக்குடலாயிருக்கையாலே விஶததரங்களா யிருக்கும்.
உய்யக்கொண்டாருடையவும், மணக்கால் நம்பியுடையவும், பெரியநம்பியுடையவும் ஜ்ஞாநபக்திகள் கீழ்ச்சொன்னபடி யிராதே சினையாறு பட்டுப் பரிமிதங்களாய் இருக்கையாலே விஶதங்களாயிருக்கும்.
இப்படிப் பதின்மூன்று வாக்யங்களிலும் முந்தின வாக்யங்கள் மூன்றும் வேதமாகிற ஶாஸ்ரத்ருசி பரிக்ரஹீதங்களாயிருக்கும். மற்றை வாக்யங்கள் பத்தும் ஆசார்ய ருசி பரிக்ருஹீதங் களாய் இருக்கும்.
அபௌருஷேயமாயும் பௌருஷேயமாயும் இருக்கிற ரஹஸ்யத்ரயத்துக்கும் ஏகாவயவித்வஞ் சொன்னவோபாதி இப்படி அபௌருஷேயமாயும் பௌருஷேயமாயும் இருந்துள்ள இப்பதின்மூன்று வாக்யத்துக்கும் ஏகாவயவித்வஞ்சொல்லத் தட்டில்லை.
அப்படியே ‘நமோ ருஷிப்ய:’ [44] என்றாற் போலே நமஶ்ஶப்தம் முன்னாக இவ்வாக்யத்ரயத்தையும் நிர்த்தேஶியாதே அஸ்மச்சப்தம் முன்னாக நிர்த்தேஶித்தது, ‘அகிலபுவந ஜந்ம’ [42] என்கிற விடத்திற்போலே மங்களோக்தமான அகாரோப க்ரமத்வ ஸித்யர்த்தமாக. அப்படி முந்தின வாக்யத்தை அகாரோபக்ரம ஸித்யர்த்தமாக அஸ்மச்சப்தத்தை முன்னிட்டு நிர்த்தேஶித்தவோபாதி மற்றை இரண்டு வாக்யத்தையும் அஸ்மச்சப்தத்தைத்தானே முன்னிட்டு நிர்த்தேஶித்ததும், ‘ஸந்நோமித்ரஶ்ஶம் வருண:’, ‘ஶந்நோபவத் வர்யமா’ [45] என்னுமாப்போலே.
த்ரயோதஶ வாக்யாத்மகமான விக்குருபரம்பராரூபமாலாமந்த்ரந்தான் ஸ்ரீஸஹஸ்ரநாமமாலா மந்த்ரம் போலே அநேக நமஶ்ஶப்த ஶரீரகமாய், த்வாரஶேஷிகளுக்கும் அடைவே ப்ரதாந ஶேஷிகளுக்கும் ப்ரதிபாதகமாய், ப்ரதம மத்யமசரமாவதிரூபமான பர்வத்ரய ப்ரகாஶகமாய், உபதேஷ்ட்  ரூபதேஶோபதேஶ்யரூப மூன்று வர்க்கத்துக்கும் ஸாம்ப்ரதாயிகத்வ ஸாத்குண்ய யோக்யதைகளுக்கும் ஸம்பாதகமுமாய், ‘வக்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும் என்கையாலே த்வயத்தோபாதி ஸதாநுஸந்தேயமாய், தன்னை முன்னிட்டு ரஹஸ்யத்ரயத்தை அனுஸந்திப்பாரை ‘நாவகாரியஞ் சொல்லிலாதவர்’ என்று மயர்வற மதிநல மருளப்பெற்றார் கொண்டாடும்படி பண்ணக் கடவதாய், அஸ்மத் என்று அகாராதியாக உபக்ராந்தமாய், அப்படியே அகார ஸ்ரீமச்சப்தங்களைப் பலவிடங்களிலும் இடையிலே உடைத்தாய், ‘ஸ்ரீதராய நம:’ என்று மாங்களிகமான நமஶ்ஶப்தத்தோடே நிகமிக்கப்பட்டதாய் இருக்கையாலே கார்த்ஸ்யேந மங்களாத்மகமாய் இருக்கும்.

ஸம்பூர்ணம்.
_________________________________________________________________________
அரும்பதங்கள்:

நிகேதனம்இருப்பிடம். நிரதிசயம்அளவற்றது. ப்ராப்தம்சம்பந்தம்.
அஸ்த் கல்பராய்இருந்தும் இல்லாதவர்கள் போன்றவராய். திலதைலவத்எள்ளில்
எண்ணெய்போல, தாருவஹ்நிவத்அரணிக்கட்டையில் நெருப்பைப்போல. துர்விவேசபிரித்தறிய முடியாத, த்ரிகுணஸத்வ ரஜஸ் தமஸ் என்கிற முக்குணங்களால், துரத்யயவிடமுடியாததான. அநாதிநெடுங்காலமாயுள்ள, அசித் ஸம்பந்த
தேஹசம்பந்தத்தால், திரோஹிதமறைக்கப்பட்டஸ்வப்ரகாஶராய்ஆத்ம ப்ரகாஶத்தை யுடையராய்;

கரணம்அவயவங்கள். களேபரம்சரீரம். வ்யாபரிக்கைக்குப்ரயத்னப்படுவதற்கு. தேஹாத்மாபிமானம்சரீரமே ஆத்மா என்கிற நினைவு. அந்ய ஶேஷத்வம் . பிறருக்கு அடிமைப்படுதல். ஸ்வஸ்வாதந்த்ர்யம்அஹங்காரம்; அபௌருஷம்புருஷனால் செய்யப்படாதது. அப்ரபவம் உண்டாக்கப்படாதது. அத ஏவஆகையாலே. புருஷ ஶேமுஷீபுருஷ புத்தியால், க்ருத பண்ணப்பட்ட மாலிந்யம்தோஷத்தால், விநிர்முக்தம்விடப்பட்டது.

ஸ்வத: ப்ரமாணம்தனக்குத்தானே ப்ரமாணம்.  (தரி)தெறிப்பாலேஸம்பந்தத்தாலே. ஸர்வ ஶாகா ப்ரத்யய ந்யாயம்ஒரு வாக்கியத்திலே ஓரர்த்தத்தைச் சொன்னால், அதினுடைய அங்கோபாங்காதிகளை நேராகவறிகைக்காக, ஶாகாந்தரங்கள் எல்லாவற்றிலும் ஸஞ்சரித்து, அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களிலும் ஜ்ஞாநம் பிறந்து, அவ்வர்த்தங்களுக்கு அந்யோந்ய விரோதங்களையம் ஶமிப்பித்து, தனக்கபிமதமான அங்கியோடே சேருமவற்றைச் சேர்க்கை .
அல்பமதிகள்சிற்றறிவாளர்.
உபதேஷ்டாஉபதேசிப்பவன்; ஸுத்த ஸ்வபாவத்வம்சுத்தமாயிருக்கும் தன்மை; அசங்கிதசந்தேகப்படாதபடி யிருக்கிற; அகடி தகடநா ஸாமர்த்யம்சேராதவற்றைச் சேர்க்கும் ஸாமர்த்யம்

ஸ்வயமேவதானேதாபம்திருவிலச்சினை (சங்காழி முத்திரை); ஊர்த்வபுண்ட்ரம்திருமண்காப்பு யந்த்ரம்); நாமதாஸ்ய நாமம்; யாகம்திருவாராதனம்.
ப்ரதான புரஸ்ஸரமானகொடுப்பது முன்னாக; அவதீர்ணரானஅவதரித்தவரான

ஶிரஸ்கமாகமுடிவாக
தர்ஶனம்சம்பிரதாயம்; | நிர்வஹித்துநடத்தி.

 பல்லவிதமாக்குதல்தளிர்க்கும்படி செய்தல்; நிர்விருதன்ஆனந்தியாயிருப்பவன்

 உத்தாரகர்கரையேற்றுமவர்; ப்ரதிபாத்யர்சொல்லப்படுமவர்; பஹுவசனம்பன்மை

உபஸத்திகிட்டி; ஜநிப்பித்தபிறப்பித்த; சங்கதிகூட்டுறவு; யதா ஸம்பவம்கூடியவளவு.

கதஅடங்கிய

கடகர்சேர்ப்பவர்; அங்குபரமபதத்தில்

ஸ்தநமுலை (ஸ்தனம்); பாஹுதோள் (புஜம்); த்ருஷ்டிகண், ஸ்தாநீயர்ஸ்தானத்திலுள்ளவர்கள் (நிகரானவர்கள்); நாற்றங்காலானகாரணமான; அவதாரகந்தமானஅவதரிப்பதற்குக் காரணமான

புடைஇடம்தர்ம்யைக்யம்வஸ்து ஒன்றாக யிருக்கைஉபகந்த்ருத்வம்அடையுந்தன்மை; உபகந்தவ்யம்அடையப்படும் தன்மை

அநுப்ரவிஷ்டர்உள்ளடங்கியவர்;
கோபலீவர்த்தந்யாயம்கோவைக்கொண்டு வா என்று சொன்ன பிறகு பலீவர்த்தத்தைக் கொண்டுவா என்று சொன்னால் முதலில் சொன்ன கோ என்ற பதத்திற்கு இரண்டாவது சொன்ன பலீ வர்த்தந்தான் பொருள் என்று ஏற்படும். இங்கு கோ என்பது பசுவையும், எருதையும் காட்டக்கூடியது, அதனால் அது பொதுப் பெயர். பலீவர்த்தம் என்பது எருதுக்குறிய சிறப்புப் பெயர். பொதுப்பெயராய்ச் சொன்னதை இரண்டாவது சிறப்புப்பெயரிட்டு வழங்கினால் கோபலீவர்த்த ந்யாயம் என்பர்.
அது போல் இங்குராமானுஜ பதச்சாயாஎன்ற சொல்லாலே கூரத்தாழ்வான் முதலான சில ஆசார்யர்களை மாத்திரம் வழங்கினால் கோபலீவர்த ந்யாயத்தாலே அவர்தமளவில்  கொள்ளவேண்டுமென்பது கருத்து.
அபிமதர்பிரியர்; விபஜித்துபிரித்து

அடைவுவரிசை முறைப்படி.

பஹு மந்தவ்யர்கௌரவிக்கத் தகுந்தவர்; வாக்யத்ரயேமூன்று வாக்யங்களில்
தஶகம்பத்து
ஸவிபக்திகம்வேற்றுமையுடன் கூடியது; ப்ரத்யயம்விகுதி; உபேதமாநகூடினதாய்; லுப்தவிபக்திகமறைந்த வேற்றுமையுடையரஹிதம்இல்லாதது; வைரூப்யேணவேறுபாட்டினால்; நிர்தேஶம்வழங்குதல்; நிபந்தனம்காரணம்

பத்தும் பத்தாகபூர்ணமாக; ப்ரபத்தாஅடைகிறவன்; ப்ரதர்ஶிப்பிக்கைகாண்பிக்கை.
தாதாத்மிக ப்ரதிபைஅப்பொழுது தோன்றும் ஜ்ஞாநம்; வாரணம்யானை;. ப்ரகடாடோப விபாடனம்போக்கடித்தல்; புழுவன்க்ரிமிகண்ட சோழன்
விஶ்ருங்கலம்அளவற்றது; சினையாறுப்ரவஹித்து  

பரிமிதம்அளவானது; பரிக்ருஹீதம்அங்கீகரிக்கப்பட்டது; ஏகாவயவித்வம்ஒரு உறுப்பாயிருக்குந் தன்மை; நிர்த்தேஶம்வழங்குதல்; உபக்ரமம்ஆரம்பம்

ஸித்யர்த்தம்உண்டாதல் பொருட்டு; சரீரகமாய்சரீரத்தை யுடையதாய்; த்வார ஶேஷிமத்ய ஶேஷி; ப்ரதான ஶேஷிமுக்ய ஶேஷி; உபதேஷ்டாஉபதேசிக்கிறவன். உபதேஶ்யம்உபதேசிக்கப்படுவது; ஸாம்ப்ரதாயிகத்வம்ஸம்ப்ரதாயமடியாக வருவதாய் இருக்கை; ஸாத்குண்யம்கூடினது.
ஸம்பாதகம்உண்டுபண்ணுவது; வக்தவ்யம்சொல்லத் தகுந்தது; உபக்ராந்தமாய்தொடங்கப்பட்டதாய்; மாங்களிகமானமங்களகரமானகார்த்ஸ்யேநபெரும்பாலும்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
வாக்ய குருபரம்பரை

ப்ரமாணத்திரட்டு

  1. அஸந்நேவ பவதி  அஸத்ப்ரஹ்மேதி வேதசேத்

அஸ்தி ப்ரஹ்மேதிசேத் வேத ஸந்தமேநம் ததோ விது: ।। (தை ஆக. 6-1)

ப்ரஹ்ம -ப்ரஹ்மமானது; அஸத்-இல்லை; இதி-என்று;  வேதசேத் -அறிகின்றானாகில்; அஸந்நேவ -இருந்தும்;  இல்லாதவனாகவே; பவதி -ஆகிறான்; ப்ரஹ்ம- ப்ரஹ்மமானது; அஸ்தி இதி – இருக்கிறதென்று; வேதசேத் -அறிகின்றானாகில்;  தத -அந்தகாரணத்தினால்; ஏனம் -இவனை; ஸந்தம்-இருக்கிறவனாக; விது: -அறிகிறார்கள் .

  1. ஸம்யுக்தமேகம் க்ஷரமக்ஷரஞ்ச
    ஸம்யுக்தம் – கூடியிருப்பதான; ஏகம் -ஒன்றான; க்ஷரம்-நஸிக்க கூடியதும்; அக்ஷரஞ்ச – நஸியாததும்
  2. ஏகாகீ ந ரமேத
    ஸ: -அந்த ஸ்ரீமந் நாராயணன்;  ஏகாகி-(ப்ரக்ருதிலீனங்களான சேதனவர்க்கங்களில்லாமல்) ஒருவனாயிருந்துகொண்டு;  ந ரமேத -ஸந்தோஷிக்கின்றானில்லை.
  3. வ்யஸநேஷு மநுஷ்யாணம் ப்ருஶம் பவதி துக்கித:
    உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி
    ।। (ஶ்ரீராமாயணம்-அயோ-ஸ-2 ஶ்லோ-42)

மநுஷ்யாணாம் -மனிதர்களுக்கு;  வ்யஸநேஷு-துக்கங்கள் வந்தபோது;  ப்ருஶம் துக்கித: பவதி-(துக்கத்தையடைந்த  ஜனங்களுக்கு ஒருபங்கு துக்கமானால் இது நம் காவற்சோர்வாலே வந்ததென அவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு) அதிகமான துக்கத்தை அடைந்தவனாயிருக்கிறான்; உத்ஸவஷு -(புத்ரி புத்ரன் முதலானவர்களினுற்பத்தி முதலான) ஸந்தோஷ காலங்களில்; பிதேவ-(புத்ரோத்பத்தியால் ஸந்தோஷமடைகிற) தகப்பனைப்போல்; ப்ருஶம் பரிதுஷ்யதி -மிகவும் ஸந்தோஷம் அடைகிறான்.

  1. த்யக்த தேஹேந்தரியோ ஜீவோ லூநபக்ஷ இவாண்டஜ: (நாரதீயம்)
    த்யக்த -(ஊழிக்காலத்தில்) விடப்பட்ட; தேஹேந்த்ரிய:-தேகத்தையும் இந்திரியங்களையுமுடைய; ஜீவ:-சேதனன்;  லூநபக்ஷ:- அறுபட்ட சிறகுகளையுடைய; அண்டஜ: இவ- பறவையைப்போல் (திறமையற்றவனாகிறான்)
  2. அநேந ஜீவேதாத்மநாநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணீதி (சாந்.உப-6-3)

அநேந-இந்த; ஜீவேந ஆத்மாந-ஜீவஶரீரகனான என்னால்; அநுப்ரவிஶ்ய-அந்தரியாமியாய் ப்ரவேசித்து; நாமரூபே-நாமரூபங்களை; வ்யாகரவாணி-பண்ணக்கடவேன்.

  1. ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே

வேதஶாஸ்த்ராத் பரம் நாஸ்தி நதைவம் கேஶவாத்பரம் ।। (ஶ்ரீமஹாபாரதம்)

வேதஶாஸ்த்ராத் -வேதமென்கிற ஶாஸ்திரத்தைக் காட்டிலும்; பரம் -(விதி நிஷேதங்களை யறிவித்து நலஞ் செய்விக்கவல்ல) சிறந்த ப்ரமாணமானது;  நாஸ்தி -வேறொன்றுமில்லை, கேஶவாத் -ப்ரஹ்ம ருத்திராதிகளுக்கும் காரணபூதனான ஸ்ரீமந்நாராயணனைக் காட்டிலும்;  பரம்தெய்வம்-சிறந்த தெய்வமும் இல்லை;  ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம்-(இதுவே) உண்மை உண்மை உண்மை என்று, புஜம்-கையை;  உத்ருத்ய -உயரவெடுத்து;  உச்யதே-(மூன்று தரம் பிரமாணமாக வியாஸ பகவானால்) கூறப்படுகின்றது.

  1. யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை।। (ஶ்வேதாஸ்வதார உப -3)
    ய: -எந்த ஸ்ரீமந் நாராயணன்; பூர்வம்-உலகமனைத்தையும் படைப்பதற்குமுன்; ப்ரஹ்மாணம் -நான்முகனை; விததாதி – படைத்தனனோ; தஸ்மை -அந்த நான்முகனுக்கு; ய: வை – எந்த நாராயணனே; வேதாம்ஶ்ச -வேதங்களை எல்லாம்; ப்ரஹிணோதி -உபதேஶஞ்செய்தனனோ
  2. ஆசார்யாணா மஸாவஸாவித்யா பகவத்த:
    ஆசார்யாணாம் -ஆசார்யர்களுடைய பரம்பரையில்; ஆ பகவத்த: -பகவான் வரையில்; அஸௌ அஸௌ -இன்னார் இன்னார்; இதி – என்று (அறியவேண்டும்)
  3. ஶஶிவர்ணம்
    ஶஶிவர்ணம் – வெண்மை நிறம்.
  4. அஜாயமாநோ பஹுதா விஜாயதே
    தஸ்யதீரா: பரிஜாநந்தி யோநிம்
    ।। (ய.வே.ஆ.ப்ர. 3-8-17)
    அஜாயமாந: – (கர்ம நிபந்தனமான) பிறப்பில்லாமலிருக்கிற ஈஶ்வரன்; பஹுதா -(இச்சையடியாக) அநேகப்காரங்களாக; விஜாயதே -இதரஸஜாதீயனாய் வந்தவதரிக்கிறான்; தஸ்ய -அதற்கு; யோநிம்- காரணத்தை;  தீரா:-பெரியோர்கள்;  பரிஜாநந்தி-நன்கு அறிகிறார்கள்.
  5. மத்யே விரிஞ்ச கிரிஶம் ப்ரதம அவதார: தத் ஸாம்யத: ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்

கிம் தே பரத்வ பிஶுநை: இஹ ரங்கதாமந் ஸத்த்வ ப்ரவர்த்தந க்ருபா பரிபாலந ஆத்யை: ।।
(ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-51)

ஹே ரங்கதாமன்-ஓ! அரங்கத்தை யிருப்பிடமாகவுடையவரே; தவ-தேவரீருடைய; மத்யே விரிஞ்சி கிரிசம் – ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவிலே; ப்ரதாமாவதார: -முதலாவது அவதாரமானது ; தத்ஸாம்யத:-அந்த ப்ரஹ்ம ருத்ரர்களோடு சமானனாயிருக்கையாலே; ஸ்வரூபம் -பரவஸ்வரூபத்தை; ஸ்தகயிதும் சேத் -மறைப்பதற்கானால்; தே-தேவரீருக்கு; பரத்வபிசுனை:-(தேவரீருடைய) பரத்வத்தைக் கோள் சொல்லவற்றான; ஸத்வ ப்ரவர்த்தன க்ருபா பரிபாலநாத்யை:-தேகாதிரூபமான ஸத்வ குணம் தலையெடுக்கப் பண்ணுகை யென்ன; கேவலம் க்ருபையாலே ரக்ஷிக்கை யென்ன (அதிமாநுஷ சேஷ்டிதங்களென்ன) இவைகளாலே;  கிம் -என்னப்ரயோஜனம். (ப்ரஹ்மாதிகளுடைய ஆபத்தைப் போக்குகிற தேவரீருக்கு அவர்களோடு சாம்யாபத்தி பண்ணுவது என்னப்ரயோஜனம் என்று கருத்து.)

  1. ஜகதுபக்ருதயே ஸோயமிச்சாவதார:
    ஜகத் -உலகத்தினுடைய; உபக்ருதயே -உபகாரத்தின் பொருட்டு; ஸ: இயம் -அப்படிப்பட்ட (விஷ்ணுவான) இது; இச்சாவதார:-இச்சையினாலே எடுக்கப்பட்ட அவதாரமாகும்
  2. ஶ்ரோணா நக்ஷத்ரம் விஷ்ணுர் தேவதா
    ஶ்ரோணா நக்ஷத்ரம் – திருவோண நக்ஷத்திரத்திற்கு; விஷ்ணு:-விஷ்ணுவானவர்; தேவதா – தேவதையாகும்.
  3. பத்மே ஸ்திதாம்
    பத்மே-தாமரைப் பூவில்; ஸ்திதாம்-வாஸம்பண்ணுமவள்.
  4. விஷ்ணுபத்நீ
    விஷ்ணு -விஷ்ணுவினுடைய; பத்நீ-தேவி
  5. தாப: புண்ட்ரஸ்ததா நாம மந்த்ரோ யாகஶ்ச பஞ்சம:

தாப:-தப்த சங்க சக்ரமுத்ராதாரணமும்; புண்ட்ர:-பன்னிரண்டு திருநாமங்களும்; ததா-அப்படியே; நாம-தஸ்ய நாமமும்; மந்த்ர:-திருமந்திரமும்; பஞ்சம:-ஐந்தாவதான; யாகஶ்ச-பகவதாராதனமும் (என்கிற இவ்வைந்தும் சேர்ந்து பஞ்ச ஸம்ஸ்காரமென்னப்படுகின்றன)

  1. அமீபரம ஸம்ஸ்காரா: பரமைகாந்த்ய ஹேதவ:
    அமீ-இந்த; பரமஸம்ஸ்காரா:-மேலான ஸம்ஸ்காரங்கள்; பரமைகாந்த்ய -பரமைகாந்தியாகைக்கு; ஹேதவ:-காரணங்களாகும்
  2. பரம்பரமுபதிஶேத் குரூணாம் ப்ரதமோ குரு:

ஆத்மவித்யா விஸுர்யர்த்தம் ஸ்வாசார்யாத்யாம் த்விஜோத்தம: ।।

த்விஜோத்தம:- ப்ராம்மண ஶ்ரேஷ்டரான; ப்ரதமோகுரு:-முதலாசார்யன்;  ஸ்வாசார்யாத்யாம் – தன்னுடைய ஆசார்யன் முதற்கொண்டுள்ள; குரூணாம் -ஆசார்யர்களுடைய; பரம்பராம்- வரிசையை; ஆத்ம வித்யா விஸுத்யர்த்தம்-ஆத்ம ஞானத்தைப் பெறுவதற்குரிய ஸுத்தியின் பொருட்டு; உபதிஶேத்-ஶிஷ்யனுக்கு உபதேஶிக்கக் கடவன்.

  1. ஸஹஸ்ரம் புருஷம்வாபி ஶத பூருஷமேவவா த்ரிஸப்தபுருஷம் வாபி த்விஸப்ததஶ பூருஷம் ।।

ஆயிரம் புருஷர்களையாவது, நூறு புருஷர்களையாவது, இருபத்தொரு புருஷர்களையாவது, இருபத்தி நான்கு புருஷர்களையாவது (பன்மையாலே ) காட்டும்.

  1. ஆதௌவுபதிஶேத்வேதே
    ஆதௌ-ஆதியில்; வேதே -வேதத்தை; உபதிஶேத் -உபதேஶிக்கக் கடவது
  2. விஷ்ணுலோகே பகவாந் விஷ்ணுர் நாராயணஸ் ஸ்வயம்

 ப்ரோக்தவாந் மந்த்ர ராஜாதீந் லக்ஷம்யை தாபாதி பூர்வகம் ।।

விஷ்ணுலோகே -ஸ்ரீ விஷ்ணுலோகத்தில்; பகவான் -பகவானான; விஷ்ணு:-விஷ்ணு என்கிற; நாராயணஸ் ஸ்வயம்-நாராயணன் தானே; லக்ஷ்ம்யை -பெரிய பிராட்டியாருக்கு; தாபாதி பூர்வகம்- தாப ஸம்ஸ்காராதிகள் முன்னாக; மந்த்ர ரஜாதீன்-மந்த்ர ரத்தினமான த்வயமந்த்ர முதலானவற்றை; ப்ரோக்தவான் – அருளிச்செய்தான்

  1. விஷ்ணுமாதி குரும் லக்ஷ்ம்யா: மந்த்ர ரத்ந ப்ரதம் பஜேத்

லக்ஷ்ம்யா: -பெரிய பிராட்டியாருக்கு; மந்த்ர ரத்ன ப்ரதம்-ஶ்ரேஷ்டமான த்வய மந்திரத்தை உபதேஸித்த; ஆதி குரும் விஷ்ணு:-ப்ரதம குருவாயிருக்கிற  பகவானை;, பஜேத்-ஸேவிக்கக் கடவன்

  1. ஸோபதிஷ்டவதீ ப்ரீத்யாதாபம: புண்ட்ராதி பூர்வகம்

விஷ்ணுலோகேவதீர்ணாய ப்ரியாய ஸததம் ஹரே: ।।

ஸேநேஶாய ப்ரியா விஷ்ணோர் மூலமந்த்ர த்வயாதிகம் ।।

விஷ்ணு லோகே-விஷ்ணு லோகத்தில்; அவதீர்ணாய-அவதரித்தவரும்; ஹரே:-விஷ்ணுவுக்கு;  ஸததம்-எப்பொழுதும்; ப்ரியாய -ப்ரியமானவருமான; ஸேனேஶாய -ஸேனைமுதலியாருக்கு; விஷ்ணு – விஷ்ணுவினுடைய;  ப்ரியா -தேவியான பெரியபிராட்டியாரான; ஸா -அவள்;  ப்ரீத்யா-ஸந்தோஷத்தினாலே;  தாப: புண்ட்ராதி பூர்வகம்-திருவிலச்சினை, திருமண் காப்பு முதலிய ஸம்ஸ்காரங்கள் தொடங்கி; மூலமந்த்ர த்வ்யாதிகம்-திருமந்த்ர த்வயம் சரமஶ்லோகங்களாகிற ரஹஸ்யத்ரயத்தை; உபதிஷ்டவதி-உபதேஶித்தாள்

25- ஸேநேஶஸ் ஸ்வயமாகத்ய ப்ரீத்யா ஸ்ரீநகரீம் ஶுபாம்
ஶடகோபாய முநயே திந்தரிணீ மூலவாஸிநே

தாபாதி பூர்வகம் மந்த்ர  த்வய ஶ்லோகவராந் க்ரமாத்

விஷ்ணு பத்ந்யா மஹாலக்ஷ்ம்யா நியோகாதுபதிஷ்டவாந் ।।

ஸேநேஶ:- ஸேனை முதலியார்; ஸ்வயம் – தாமாகவே; ஶுபாம்-மங்களகரமான;  ஸ்ரீநகரீம்- திருநகரியை; ப்ரீத்யா -ஸந்தோஷத்தினால; ஆகத்ய-வந்தடைந்து;  திந்த்ரிணீ மூல வாஸிநே- புளியமரத்தடியில் வசிக்கிற; ஶடகோபாய -ஶடகோபர் என்கிற;  முநயே – மநநஶீலரான ஆழ்வாருக்கு;  தாபாதி பூர்வகம் -திருவிலச்சினை முதலிய ஸம்ஸ்காரங்கள் முன்னாக; க்ரமாத்- முறையே; மந்த்ரத்வய ஶ்லோகவராந் -திருமந்த்ரமும் த்வயமும் உயர்ந்ததான சரமஶ்லோகமுமாகிய இவற்றை; விஷ்ணு பத்ந்யா: -விஷ்ணுவுக்கு பார்யையான; மஹாலக்ஷ்ம்யா: -பெரிய பிராட்டியாருடைய;  நியோகாத்-ஏவுதலால்; உபதிஷ்டவான் -உபதேஶித்தார்

  1. புநஶ்ச நாதமுநயே பஞ்சஸம்ஸ்கார பூர்வகம்
    பட்ட நாத ப்ரப்ருதிபிர் நிர்மிதைர் திவ்ய யோகிபி:

திவ்யைர் விம்ஶதி ஸங்க்யாகை: ப்ரபந்தைஸ் ஸஹதேஶிக:

ஸ்வோக்த த்ராவிட வேதாநாம் சதுர்ணாமுபதேஶக்ருத் ।।

புநஶ்ச-மறுபடியும்;  நாதமுநயே-நாதமுனிகளின் பொருட்டு; பஞ்சஸம்ஸ்கார பூர்வகம் -பஞ்சஸம்ஸ்காரம் முன்னாக;  பட்டநாத ப்ரப்ருதிபி-பெரியாழ்வார் முதலான; திவ்ய யோகிபி:-திவ்ய யோகிகள் என்கிற ஆழ்வார்களாலே, நிர்மிதை: – பண்ணப்பட்ட;  திவ்யை: -திவ்யமான;  விம்ஶதி ஸங்க்யாகை:-இருபது எண்ணிக்கையுள்ள;  ப்ரபந்தை: ஸஹ-ப்ரபந்தங்களோடு கூட; தேஶிக:-ஜ்ஞாந தேஶிகரான நம்மாழ்வார்;  ஸ்வோக்த-தம்மால் அருளிச் செய்யப்பட்ட; திராவிட வேதாநாம் – தமிழ் வேதங்களாகிற; சதுர்ணாம் -நான்கினுடைய; உபதேஶக்ருத்- உபதேசகர்த்தாவாக;  அபவத்-ஆனார்

  1. ப்ரீத்யா ப்ருதக் ப்ருதக் ஶிஷ்யை: ப்ரணமேதீஶ்வராவதி

ஸ்வாராத்யம் யாவதாஜ்ஞாதும் வாக்யம் தாவதநுஸ்மரேத் ।।

ஈஶ்வராவதி -ஈஶ்வரனளவும்; ஸ்வாராத்யம் -தன்னாலாராதிக்கத் தகுந்த ஆசார்யனை;, யாவத் -எவ்வளவு; ஆஜ்ஞாதும் -அறிவதற்கு; ப்ரீத்யா-ஸந்தோஷத்தினாலே; ப்ருதக் ப்ருதக்-தனித்தனி; ப்ரணமேத் -தண்டன் ஸமர்ப்பிக்கக் கடவன்; தாவத்-அவ்வளவு; வாக்யம் -(அவர்கள் விஷயமான) வாக்கியத்தை; அநுஸ்மரேத் -அதுஸந்திக்கக் கடவன்

  1. ப்ரத்யஹம் ப்ரணதைஶ்ஶிஷ்யை: ப்ரபாதே பத்மஸம்பவே

தத்யதா விதிநா நித்யம் ப்ரவர்த்தவ்யம் குரோ: குலம் ।।

பத்மஸம்பவே -தாமரையிலுண்டானவளே; ப்ரத்யஹம் -தினந்தோறும்; ப்ரண்தை:-வணங்குகிற; சிஷ்யை:-சிஷ்யர்களாலே; ப்ரபாதே-காலையில்; தத்யதா-அப்படிபட்ட; விதிநா-விதியினாலே; குரோ:-குருவினுடைய;  குலம் -குலமானது (சந்தானம்); நித்யம் -தினந்தோறும்; ப்ரவர்த்தவ்யம் – அநுஸந்திக்கத்தக்கது (அடையத்தக்கது)

  1. அபிஷிச்ய லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்

க்ருதக்ருதயஸ் ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத   ।। [ஸங்க்ஷேப ராமாயணம். 85]

ராம:-பெருமாள்; விபீஷணம் – விபீஷணனை; ராக்ஷஸேந்தரம்-இராக்ஷஸராஜனாக;  லங்காயாம் – லங்கையில்;  அபிஷிச்ய- அபிஷேகம் பண்ணி; ததா- அப்போது; க்ருதக்ருத்ய:-செய்துமுடித்த ஸகலகார்யங்களையுடையவராயும்; விஜ்வர: -ஜ்வாமற்றவராயும்; ப்ரமுமோத -ஸந்தோஷித்தார்; ஹ-என்று ருஷி ஸந்தோஷிக்கிறான்.

  1. அந்வயாதபிசைகஸ்ய ஸம்யக்ந்யஸ்தாத்மநோஹரௌ

ஸர்வயேவ ப்ரமுச்யோந்நரா: பூர்வேபரேததா ।।

ஹரௌ-விஷ்ணுவினிடத்தில்; ஸம்யக்ந்யஸ்தாத்மன:-நன்றாக வைக்கப்பட்ட மநோநிலையையுடைய; ஏகஸ்ய – ஓர் ஆசார்யனுடைய; அந்வயாதபிச-ஸம்பத்தாலேயும், பூர்வேநரா:- முன்புள்ளவர்களும்; அபரேததா – அப்படியே பின்புள்ளவர்களும், (ஆக) ஸர்வ ஏவ – எல்லோரும்; ப்ரமுச்யேரன் – முக்தியை யடைகிறார்கள்.

  1. அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்தம் ஆஶ்ரித்வ பூர்வே

மூர்த்நா யஸ்ய அந்வயம் உபகதா தேஶிகா முக்திமாபு:

ஸோயம் ராமானுஜ முனிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தம்

யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ணயதே கூரநாத: ।।

அர்வாஞ்ச:-பிற்பட்டவர்களான;  யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாஶ்ரித்ய-எந்த எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை ஆஶ்ரயித்தும்;  பூர்வே-முன்புள்ளவர்கள்; மூர்த்நா-திருமுடியாலே;  யஸ்ய -எந்த எம்பெருமானாருடைய; தேஶிகா: -ஆசார்யர்கள்;  அந்வயம் – சம்பந்தத்தை;, உபகதா:-அடைந்தவர்களாம்; முக்திம்- மோக்ஷத்தை; ஆபு:-அடைந்தார்களோ; ஸோயம் – அப்படிப்பட்ட இந்த;  ராமாநுஜமுநிரபி -எம்பெருமானாரும்;  கரஸ்தாம் – தம் கைப்பட்டதாயிருக்கிற;  ஸ்வீயமுக்திம்-தமது மோக்ஷத்தை;  யத்ஸம்பந்தாத்-எந்த கூரத்தாழ்வானுடைய ஸம்பந்தத்தாலே; அமநுத – பெற்றதாக நினைத்தாரோ; (அப்படிப்பட்ட) கூரநாத:-கூரத்தாழ்வான்; கதம் -எப்படி; வர்ண்யதே -துதிக்கப்பட்டவராவர். (ஆகவே ஆழ்வானுடைய வைபவம் அவாங்மாநஸகோசரமாயுள்ளது.)

  1. ததாபி ஸமயாசாராந் ஸ்தாபயந் ஸாம்ப்ரதாயிகாந்

ததாபி -அப்படிப்பட்ட; ஸாம்ப்ரதாயிகாந் சமயாசாரரந் -ஸம்ப்ரதாய ஸித்தமான ஸமய ஆசாரங்களை; ஸ்தாபயந்-ஸ்தாபித்துக்கொண்டு (சென்றார்).

  1. கதே புரோஹிதே ராம: ஸ்நாதோ நியதமாநஸ

ஸஹபத்ந்யா விஶாலாக்ஷ்யா நாராயணமுபாகமத் ।। [ஶ்ரீமத் ராமா-அயோ.கா-6-1]

புரோஹிதே – புரோஹிதர்; கதே – புறப்பட்டுப்போன பிறகு;  ராம:- பெருமாள்; ஸ்நாத:-ஸ்நாநஞ்செய்து;  நியதமாநஸ- ஸுத்தமான மனதையுடையவயராகி;  விஶாலாக்ஷ்யா பத்ந்யா ஸ ஹ -விசாலானமான திருக்கண்களையுடைய (ஸீதா பிராட்டியாகிய) பத்நியுடன் கூட; நாராயணம்- நம்பெருமாளை; உபாகமத் – உபாசித்தார்.

  1. ராமாநுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வாநபாயிநீ
    ததா யத்தஸ்வரூபா ஸா ஜீவாந் மத் விஶ்ரமஸ்தலீ
    ।। [எம்பார் தனியன்]

ராமாநுஜ-உடையவருடைய; பத – திருவடிகளுடைய; சாயா-நிழலாயிருக்கிறதும்; கோவிந்தாஹ்வா- கோவந்தரென்று  பெயரையுடைத்தாயிருக்கிறதும்; அநபாயிநீ – பிரியாதிருக்கிறதும்; ஸ்வரூபா-ஸ்வரூபத்தையுடைத்தாயிருக்கிறதுமான; ஸா-அந்த;  மத்-என்னுடைய;, விஶ்ரமஸ்தலீ – இளைப்பாறுகின்ற ஸ்தலமானது; ஜீயாத் – வ்ருத்தியடையட்டும்.

  1. ஆசார்யாணாம் அஸாவஸா. 9-வது ப்ரமாணம் காண்க.
  2. ஸ்ரீரிதி ப்ரதமாபிதாநம் லக்ஷ்ம்யா:
    ஸ்ரீரிதி – ஸ்ரீ என்று; லக்ஷ்ம்யா : -பெரியபிராட்டியாருக்கு; ப்ரதம- முதன்மையான; அபிதாநம் – திருநாமமாக (இருக்கிறது)
  3. ஸ்ரீரித்யேவ நாமதே [சதுஶ்லோகீ]
    தே – தேவரீருக்கு; ஸ்ரீரித்யேவச -ஸ்ரீயென்றேயன்றோ; நாம – திருநாமமாக இருக்கின்றது.
  4. ஶ்ரியம் தரதீதி ஶ்ரீதர:
    ஶ்ரியம் -பெரிய பிராட்டியாரை; தரதி -திருமார்பில் தரிக்கிறான்; இதி -என்கையால்; ஸ்ரீதர: – ஸ்ரீதரன் என்னப்பட்டது.
  5. ஶ்ரீஶப்தம் ஜ்ஞாந துல்யம் தநமஸ்தி கிஞ்சித்
    ஜ்ஞாந துல்யம் – ஜ்ஞாநத்தோடு ஸமானமான; ஸ்ஶப்தம்-ஸ்ரீஶப்தமாகிற; தநம் -செல்வமானது, அஸ்தி கிஞ்சித் – இருக்கிறதல்லவா
  6. பகவத் பக்திரேவ ப்ரபந்நாநாம் மஹாதநம்
    ப்ரபந்நாநாம் -ப்ரபந்நர்களுக்கு; பகவத் பக்திரேவ-பகவக் பக்தியே; மஹா தநம்-உயர்ந்த செல்வமாகும்.
  7. த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா

த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண  யத்யதா |

ப்ரியேண  ஸேநாபதிநா ந்யவேதி தத்

ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை: || [ஸ்தோத்ர ரத்நம்-42]

 த்வதீய – உன்னுடைய;  புக்தோஜ்ஜித – அமுது செய்து கைவாங்கின; ஶேஷ-ப்ரசாதத்தை; போஜிநா-புஜிப்பவனும்; த்வயா – உன்னாலே; ந்யஸ்ருஷ்டாத்மபரேண -வைக்கப்பட்ட உபயவிபூதி ரூபமான பாரத்தை யுடையவனும்; ப்ரியேண -இஷ்டமான; ஸோநாபதிநா-ஸேனாபதியாழ்வானாலே; யத்-எந்த காரியம்;  யதா-யாதொருபடி;  நிவேதிதம்-விண்ணப்பஞ்செய்யப் பட்டதோ; தத்-அந்தக்காரியத்தை;  ததா- அப்படிக்கே; உதார வீக்ஷணை: -பூர்ணமான கடாக்ஷங்களாலே; அநுஜாநந்தம் – அநுமதி பண்ணாநிற்பவனுமான; உன்னை.

  1. அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

ஶ்ருதி -ஶிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே  பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்திரூபா ।। [ஶ்ரீபாஷ்யம்]

அகில -எல்லா; புவந -லோகங்களினுடைய;  ஜந்ம -படைப்பு; ஸ்தேம- காப்பு; பங்க- அழிப்பு; ஆதி- இவை முதலியவற்றை;, லீலே-விளையாட்டாக வுடையவனும்; விநத-வணங்கின; விவித -எல்லாவித; பூத -உயிர்களாகிற; வ்ராத -ஆஶ்ரிதர்களுடைய; ரக்ஷைக -ரக்ஷணத்திலேயே; தீக்ஷே-விரதஞ்செய்துகொண்டவனும்; ஶ்ருதி -வேதங்களினுடைய; ஶிரஸி-உபநிஷத் பாகங்களில்; விதீப்தே -விஶேஷமாக ப்ரகாஶிக்கின்றவனும்; ஸ்ரீநிவாஸே-பெரிய பிராட்டியாரோடு கூடினவனுமா;, பரஸ்மிந் ப்ரஹ்மணி-மேலான ப்ரஹ்மத்தினிடத்தில்; மம -எனக்கு; பக்தி ரூபா -பக்திவடிவமான; ஸேமுஷீ-ஞானமானது; பவது -உண்டாகட்டும்.
43. யோநித்யமச்யுத பதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணித்ருணாயமேநே

அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே ।।

[ஶ்ரீவைகுண்ட ஸ்தவம்-1]

ய: எந்த பாஷ்யகாரர்; நித்யம் – எப்போதும்; அச்யுத- அடியவர்களை நழுவவிடாதவனான ஶ்ரிய:பதியினுடைய; பதாம்புஜ யுக்ம – பாதாரவிந்த த்வயமாகிய;  ருக்ம-ஸுவர்ணத்தினிடத்தில்; வ்யாமோஹத : – விஶேஷ ஆதரத்தையடைந்திருக்கிறவராய்; தத் இதராணி – (அந்த பகவத் பாத த்வயத்திற்கு) வேறுபட்டதான விஷயங்களை;  த்ருணாய-அல்பமாய்; மேநே-நினைத்தருளினாரோ; (அப்படிபட்ட) அஸ்மத்குரோ : – என்னுடைய ஆசார்யரும்; பகவத: – பூஜ்யரும்;  தயைகஸிந்தோ:- காருண்ய ஸமுத்ரருமாகிற; அஸ்ய – இந்த;  ராமாநுஜஸ்ய – ராமாநுஜாசார்யருடைய;  சரணௌ – திருவடிகளை; ஶரணம்-உபாய்மாக; ப்ரபத்யே -பற்றுகிறேன்.

  1. நமோருஷிப்ய:
    ருஷிப்ய: – ருஷிகள் பொருட்டு,; நம:-வணங்குகிறேன்.
    (அகில புவந ஜந்ம 42-வது ப்ரமாணம் காண்க)
  2. ஶந்நோமித்ரஸ் ஶம் வருண: ஶந்நோபவத் வர்யமா ।।

மித்ர:- மித்ரன் என்கிற சூரியன்; ந:-நமக்கு; ஶம்-ஸுகமாக; பவது-ஆகவேணும்;  வருண: – வருணதேவதை; ந:-நமக்கு;  ஶம்-ஸுகமாக; பவது-ஆகவேணும்;  அர்யமா-அர்யமா என்கிற சூரியன்;
ந:-நமக்கு; ஶம்-ஸுகமாக; பவது-ஆகவேணும்; (தைத்ரியோபநிக்ஷத்)

ஸம்பூர்ணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.