[highlight_content]

பூகோளககோள விஷயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

அஸ்மத்குருப்யோ நம:

(மதுரமங்கலம் எம்பார் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் அருளிச்செய்தது)

பூகோளககோள விஷயம்

 

ஶ்ரிய:பதியாய் லீலாபோக ஸாதநங்களான விபூதித்வயநாயகனாய், அத்வாரக ஸத்வாரகங்களாலே ஸகல ஜகத்ஸர்கஸ்திதிஸம்ஹாரகர்தாவாய் , ஸர்வாந்தர்யாமியாய், ஸர்வவ்யாபகனாய் ஸர்வஜ்ஞத்வ ஸர்வஶக்தித்வாத்யநந்த கல்யாணகுணங்களுடையனாய் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமன்நாராயணன், தந்நோடவிபக்தமாய்க்கிடந்த சித்விஶிஷ்டாசித்தை விபக்தமாக்கி, அண்டகாரணங்களான மஹதாதிகளாக பரிணமிப்பித்து, அண்டத்தைநிர்மித்து, அதில் பத்தாத்மஸமஷ்டி பூதநான ப்ரஹ்மாவைப்படைத்து, அவனுக்கு பூதங்களுடைய நாமரூபக்ருத்யங்களையறிவிக்கிற அநாதியான வேதங்களையுபதேஶித்து, ஸூர்யசந்த்ராதிகளையும், அவர்களுக்கு வாஸஸ்தாநங்களான சதுர்தஶ புவநங்களையும், பூர்வகல்பத்திலிருந்தபடி ஸ்ருஷ்டிக்கும்படி நியமிக்க, அந்நியமநப்படி ஸ்ருஷ்டித்த ப்ரஹ்மாவும், அந்த ப்ரஹ்மாவினால் ஸ்ருஷ்டிக்கப்பட்டு அவநாஜ்ஞையிந்படி ஸ்ருஷ்டித்த நவப்ரஜாபதிகளும், ப்ரஹ்மாவினிடத்தில் நேரேகேட்ட சில மஹர்ஷிகளும், யோகமஹிமையினாலே ஸாக்ஷாத்கரித்த சிலமஹர்ஷிகளும், தபோமஹிமையினாலே தங்களுடைய தேஹத்தை அந்தந்த ப்ரதேஶங்களுக்கு தக்கபடி அமைத்துக்கொண்டு, குளிகை, விமாநம் முதலான ஸாதநங்களாலே அவ்வவ்விடங்களுக்குச்சென்று, கண்ணாரக்கண்ட மஹர்ஷிகளும், ஶ்ரீராமாயண மஹாபாரத ஶ்ரீபாகவத ஶ்ரீவிஷ்ணுபுராண மத்ஸ்யகூர்மவராஹாதி புராணங்களிலும், ஆதியில் பகவான் ப்ரஹ்மாவுக்கு உபதேஶித்த வேதவேதாந்த பகவச்சாஸ்த்ரங்களிலுமுள்ள பூககோள விஷயங்களையும், அந்த ஸர்வேஶ்வன்க்ரஹண க்ரஹ ஸமாகமாதிகளையும், ஆயுர்தாயராஜயோகாதிகளையும், க்ஷாமக்ஷோபராஜ்ய ஸுபிக்ஷாதிகளையும், முன்னதாய்க்காட்டக்கடவனவாக ப்ரவர்திப்பித்த ப்ரஹ்ம ஸூர்யவ்யாஸாத்யஷ்டவித ஸித்தாந்தகர்காதி ப்ரணீத ஸம்ஹிதாஜாதகஸ்கந்தாதிகளிலும் உள்ள விஷயங்களையும், ஸூர்யஸித்தாந்தாதியந்த்ராத்யாயங்களில் ஶொல்லியிருக்கிற பலவித யந்த்ரங்களால் பரீக்ஷித்துபார்த்த விஷயங்களையும் ஸம்ஶய விபர்யய மற எல்லோரும் எளிதிலுணர்ந்துய்யும்படி ஶ்ரீமத்வேதமார்க ப்ரதிஷ்டாபநாசார்யராய், உபய வேதாந்த ப்ரவர்தகராய், ஸகல ஶாஸ்த்ரவித்தமராய் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமத்பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீமாந் திருவேங்கடராமாநுஜ ஜீயர் அருளிச்சைய்த புராணமார்க தீபிகையில் பரக்கக்காணலாம். (மதுரமங்கலம் எம்பார் திருவேங்கட ராமாநுஜ ஜீயர்)

 

ஸகல ஶ்ருதிஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளிலுள்ள ப்ரமாணவசநங்களாலும், ப்ரஹ்மஸூர்யவ்யாஸாதி ஸித்தாந்த வசநங்களாலும் பூர்ணமாயிருக்கிர புராணமார்க தீபிகையிலுள்ள அநேகவிஷயங்களுள் சில இவ்விடத்தில் அதி ஸங்க்ரஹமாக ஸூசிப்பிக்கப்படுகின்றன; இதின் பக்கத்தில் ஶேர்திருக்கும் படத்திலிருக்கிர படி சதுர்தஶபுவந ஸப்தத்வீப ஸப்தஸாகரங்களிருக்கிறதாகவும், அவத்தில் ஜம்பூத்வீபம் நடுவிலிருக்கிறதாகவும், அதின்நடுவில் மேருவிருக்கிறதாகவும்; அதற்குத்தெற்கில், பாரதவர்ஷம், கிம்புருஷவர்ஷம், ஹரிவர்ஷமும், வடக்கில்- ரம்யகவர்ஷம், ஹிரண்மயவர்ஷம், குருவர்ஷமும், மேருவைச்சுத்திலும் இளாவ்ரதவர்ஷமும், கிழக்கில்- பத்ராஶ்வவர்ஷமும், மேற்க்கில்- கேதுமாலவர்ஷமும் இருக்கின்றனவாகவும்; அவத்துள் பாரதவர்ஷம்-ஶ்ரீ விஷ்ணுபுராணம் த்விதீயாம்ஶம் த்ருதீயாத்யாயத்தில் “உத்தரம் யத்ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரேஶ்சைவ தக்ஷிணம் | வர்ஷம் தத்பாரதந்நாம பாரதீயத்ர ஸந்ததி:||”  “நவயோஜந ஸாஹஸ்ர விஸ்தாரோऽஸ்ய மஹாமுநே| கர்மபூமிரியம் ஸ்வர்கமபவர்கம்ச கச்சதாம்||   பாரதஸ்யது வர்ஷஸ்ய நவபேதந்நிஶாமய | இந்த்ர த்வீப: கஶேருஶ்ச தாம்ரபர்ணோ கபஸ்திமாந் ||  நாகத்வீபஸ்ததா ஸௌம்யோ காந்தர்வஸ்த்வத வாருண:| அயந்து நவமஸ்தேஷாம் த்வீபஸ்ஸாகர ஸம்வ்ருத:||” என்கிற இவை முதலான வசநங்களில் ஸமுத்ரத்துக்கு வடக்கிலும், ஹிமாலயத்துக்கு தெற்கிலும் இருக்கிரதாகவும், ஒன்பதிநாயிரம் யோஜநை விஸ்தாரமுள்ளதாகவும், ஸ்வர்க மோக்ஷங்களையடைகிறவர்களுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கர்மஸாதந பூமி இதுதாநென்பதாகவும், இது இந்த்ரத்வீபம், கஶேரு, தாம்ரபர்ணம், கபஸ்திமாந், நாகத்வீபம், ஸௌம்யத்வீபம், காந்தர்வத்வீபம், வாருணத்வீபம், பாரதத்வீபம், என்கிற பேர்களையுடைய ஒன்பது கண்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஆயிரம் யோஜநை விஸ்தாரமுடை யதாயிருப்பதாகவும் ஸகரர்தோண்டிய உவர்கடலால் பெரும்பாலும் ஶூழப்பட்டிருக்கிறதாகவும், ஶ்ரீராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் நாற்பதாம் ஸர்கத்தில், “அயம் ஸுதர்ஶந த்வீப: புரோயஸ்ய ப்ரகாஶதே | யஸ்மிந் தேஜஶ்ச சக்ஷுஶ்ச ஸர்வப்ராண ப்ருதாமபி” என்று, ஸமஸ்த ப்ராணிகளுடைய கண்ணும், ஸூர்யாதி தேஜஸ்ஸும், இந்த ஸுதர்ஶந த்வீபத்திலேயே ப்ரயோஜநப்படாநின்றதெந்பதாகவும், ஶ்ரீ மஹாபாரதம் பீஷ்மபர்வாந்தர்கத ஜம்பூகண்டபர்வம் ஐந்தாமத்யாயத்தில், “ஸுதர்ஶநம் ப்ரவக்ஷ்யாமி த்வீபஸ்து குருநந்தந | பரிமண்டலோ மஹாராஜத்வீபோயம் சக்ரஸம்ஸ்தித:||” யதாஹி புருஷ: பஶ்யே தாதர்ஶே முகமாத்மந:|| ஏவம் ஸுதர்ஶந த்வீபோ த்ருஶ்யதே சந்த்ரமண்டலே|| த்விரம்ஶேபிப்பலஸ்தத்ர த்விரம்ஶே  ச ஶஶோமஹாந் ||  ஸர்வௌஷதி ஸமாவாயைஸ்ஸர்வத: பரிவாரித:||” என்று ஜநங்களுக்கு நன்றாய் கண்ணுக்கு காணப்படுகையாலும், வர்துலாகாரமாய் பகவச்சக்ர ஸத்ருஶமாயிருக்கை யாலும், ஸுதர்ஶநதேவாதிஷ்டித காலசக்ராக்ஷத்திலே கோக்கப்பட்திருக்கையாலும், ஸுதர்ஶநமென்று, பேருடையதாய், விளாம்பழம்போலே நாலுபக்கமும் மண்டலாகாரமாயிருக்கையாலே கோளரூபமாயிருக்கிரதாகவும், இந்த த்வீபத்தை சந்த்ரமண்டலத்திலே போய் பார்தால் இதின் ஸ்வரூபம் நன்றாய், காணப்படுமென்பதாகவும், இந்த பரதகண்டத்தில் ஒருபாதியில் முயலிநுருவத்தைப்போன்ற, பூமியுடன் சிறிய அரஶிலைபோன்ற, பூமியும், மத்தொருபாதியில் அரஶிலையாகாரத்தைப்போன்ற, பூமியுமிருக்கிறதாகவும், அவை ஸமஸ்தௌஷதிகளாலே ஶூழப்பட்டிருப்பதாகவும், “ஆபஸ்ததோऽந்யா விஜ்ஞேயாஶ்ஶேஷ ஸம்க்ஷேப உச்யதே” என்று, இந்த பாரதவர்ஷத்தில் முயலினுருவம்போலவும், அரஶிலையினுருவம்போலவும் காணப்படுகிற பூமிகளையொழிந்தவிடமெல்லாம் சிறிய பூ கண்டங்களோடுகூடி ஜலமயமாகவேயிருக்கின்றதாகவும், “யாந்துப்ருச்சஸி மாம் ராஜன் திவ்யாமேநாம் ஶஶாக்ருதிம்| பார்ஶ்வே ஶஶஸ்ய தே வர்ஷே உக்தேயே தக்ஷிணோத்தரே||” என்று ஶஶாக்ருதியின் தலைப்பக்கத்தையும், தக்ஷிணோத்தரகண்டங்களாகவும்; “கர்ணௌது நாக த்வீபஶ்ச கஶ்யபத்வீப ஏவ ச | தாம்ரபர்ணஶ்ஶிரோ ராஜந் க்ரீவாமலயபர்வத:||” என்று, நாககஶ்யப த்வீபங்களிரண்டையும், இரண்டு காதாகவும், தாம்ரபர்ணத்தைத்தலையாகவும், மலயபர்வதத்தைக்கழுத்தாகவும் ஶொல்லி, தக்ஷிணகண்டத்தை விவரித்துக்காட்டி உத்தரகண்ட மெல்லாமுடர்பக்கமாகவும் ஶொல்லியிருக்கிறதாகவும். இப்பொழுது இந்த பரதகண்டத்தில் ஒருபாதியிலிருக்கும் முயலினுருவத்தைப்போன்ற, பூமியுடன் சிறிய அரஶிலைப்போன்ற, பூபாகத்தில் முயலின் காதோடுகூடிய தலைப்பக்கத்தை. ஆப்ரிகாவென்றும், கழுத்தருகிலிருக்கும் முன்கால் ப்ரதேஶத்தை யூரோப்பென்றும், உடர்பக்கத்தை ஏஷியாவென்றும், ஶிரியவரஶிலைப்போன்ற ப்ரதேஶத்தை ஆஸ்ட்ரேலியாவென்றும், மத்தொருபாதியிலிருக்கும் அரஶிலையாகாரத்தைப்போந்ற, பூகண்டங்களை ஸௌத்தமரிகா, நார்தமரிகாவென்றும்,ஹூணர்ஹள் ஶொல்லுவதாகவும், பாரதம் பீஷ்மபர்வாந்தர்கத ஜம்பூகண்ட பர்வம் ஆராமத்யாயத்தில் “தேஷாம்ருத்திர்பஹு விதா த்ருஶ்யதே தைவமாநுஷீ | ஆ ஶக்யா பரிஸம்க்யாதும் ஶ்ரத்தேயாதுபுபூஷதா||”  என்று, பாரதவர்ஷத்தையொழிந்த வர்ஷத்வீபங்களிலுள்ளவர்களுடைய ஸம்பத்தானது மாநுஷமாயிருந்த போதிலும் தேவதைகளுடைய ஸம்பத்தாகவேயிருப்பதாகவும், அவ்வர்ஷத்வீபங்கள் நமக்கரியக்கூடாதநவாயிருப்பதாகவும், அரியக்கூடா வாயிருந்தபோதிலும் ஶாஸ்த்ரண்களிலே ஶொன்னவை ஸத்யமென்றே, நம்பவேண்டுமென்பதாகவும், ஶ்ரீபாகவதம் பஞ்சம ஸ்கந்தம் பதினேழாமத்யாயத்தில், “அத்ராபி ஜம்பூ த்வீபே பாரதமேவ வர்ஷம் கர்ம க்ஷேத்ரம் அந்யாந்யஷ்ட வர்ஷாணி ஸ்வர்கிணாம் புண்ய ஶேஷோபபோகஸ்தாநாநி பௌமஸ்வர்கபதாநி வ்யபதிஶந்தி” என்று ஜம்பூத்வீபத்தில் பாரதவர்ஷமொழிந்தமத்த எட்டுகண்டங்களும் ஸ்வர்காநுபவம் பண்ணும் புண்ய புருஷர்கள் வந்து புண்யஶேஷங்களை அநுபவிக்கும்படியான பூலோக ஸ்வர்கங்களென்று ஶொல்லப்பட்டிருக்கிறதாகவும், ஶ்ரீ விஷ்ணுபுராணம் இரண்டாமம்ஶம் இரண்டாமத்யாயத்தில் “பௌமாஹ்யேதே ஸுக்ருதாஸ்வர்கா தர்மிணா மாலயாமுநே | நைதேஷுபாபகர்தாரோ யாந்தி ஜந்மஶதைரபி||”   என்று இந்த பாரதவர்ஷத்தையொழிந்த வர்ஷ த்வீபங்கள் பூலோக ஸ்வர்கம்களென்ரும், அதற்குத்தக்க புண்ணியமில்லாத பாபிகள் பஹுஜன்மம் ப்ரயத்நம்பண்ணிநாலும் அவத்தில் புகப்பெறார்களென்றும், அவை த்ருஶ்யங்களாகமாட்டாவென்றும் ஶொல்லுகிறதாகவும். ஸ்வர்கலோகம் முதலானவை ஆகாஶத்திலிருக்கச்செய்தேயும் ஸூக்ஷ்மஸ்வச்ச த்ரவ்யங்களாய் அத்ருஶ்யங்களாயிருக்கையாலே நக்ஷத்ரங்களை மறைக்காதாப்போலே கடினபூபாகமான இந்த பாரதவர்ஷத்தையொழிந்த மத்த பூஸமுத்ர நதீபர்வதழிகளெல்லாம் ஸூக்ஷ்ம ஸ்வச்சத்ரவ்யங்களாய் அத்ருஶ்யங்களாயிருக்கையாலே ஆகாஶத்திலிருக்கும் நக்ஷத்ராதிகளை மறைக்கமாட்டாதென்பதாகவும்;= கோளாகாரமான இந்த பாரத வர்ஷம் ஸர்வாதாரபூதநான ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூப ஸங்கல்பங்களாலேயே தரிக்கப்பட்டிருப்பதாகவும்; புராணங்களில் பூமிக்கு நிஷேதித்த கோளத்வம் பரிதிமட்ட கோளத்வமேயொழிய நீர் மட்டகோளத்வமென்றென்பதாகவும். பகவச்சாஸ்த்ரம் பாத்ம ஸம்ஹிதை ஜ்ஞான பாதம் பண்ணிரெண்டாமத்யாயத்தில், “ஏதேநாண்ட கடாஹேந லோகாஸ்ஸர்வே ஸமாவ்ருதா:| உபர்யுபர்ய மீ  லோகா: கபித்தபலவத் ஸ்திதா:||” என்கிறபடி பூ ப்ரசுரமாயும், ஜலப்ரசுரமாயும், அக்னி ப்ரசுரமாயும், வாயுப்ரசுரமாயும், ஆகாஶ ப்ரசுரமாயும் இருக்கும் கோளங்கள் விளாம்பழங்கள் போலே ஒன்றின்மேலொன்றாய், அஸங்க்யாதங்களாயிருக்கின்றனவென்பதாகவும், மஹாபூமிக்கு மேருவிருக்கிராப்போலே இந்த பாரத வர்ஷத்துக்கு மொருசின்னமேருவும் நாபி ஸ்தாநமும் உண்டென்பதாகவும், கைலாஸாதி பர்வதங்களுடன்கூடி குபேர ஶங்கராதி தேவதைகளுக்கு வாஸஸ்தாநமாயிருக்கும் மஹாஹிமவத்பர்வதம்  நமக்கு த்ருஶ்யமாக மாட்டதென்பதாகவும், த்ருஶ்யமாகிர ஹிமவத்பர்வதம் மேல்சொன்ன மஹாஹிமவத்பர்வதத்திநுடைய அம்ஶமாய் அங்குள்ள விஶேஷங்களோடே  கூடிக்கொண்டிருக்கிற ஹிமவான் முதலிய பேர்ஹளையுனுடைய ஓர் சின்ன பர்வதமென்பதாகவும், லவணஸமுத்ரத்தில் கொஞ்சம்தூரத்துக்கப்பால் லங்கையும், அதற்கப்பால் ஸ்வர்ண ரஜதஶ்ருங்கங்களோடுகூடி ஸூர்யன் தக்ஷிணாயனத்தில் ஸ்வர்ண ஶ்ருங்கத்துக்குச்சரியாய் ஸஞ்சரிக்கும்படி ஆகாஶத்தையளாவி புஷ்பிதகமென்றொரு மலையிருப்பதாகவும், அநந்தரம் குஞ்ஜரபர்வதம் அகஸ்த்யபவநம் போகவதி ருஷ்யபர்வதாதிகள் இருக்கிறதாகவும், அவை தேவதைகளுக்கொழிய மத்தவர்களுக்கு புலப்படாவென்பதாகவும், ஶ்ரீராமாயண கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லியிருப்பதும்; இந்த ஜம்பூத்வீபத்தில் ஹிமவத்பர்வதத்துக்கவ்வருகில்- பிந்து ஸரஸ்ஸென்கிற ஸ்தாநத்திர்குப்போய், அங்குள்ள ஶிலகற்களைமயன் கொண்டு வந்து எல்லோருக்கும் த்ருஶ்யமான இந்த பரதகண்டத்துக்குள்ளே தர்மபுத்ராதிகளுக்கு ஒருஸபைநிர்மிக்க அதை தார்மிகஜநங்களெல்லோரும்  நன்றாய்ப்பாராநிற்கச்செய்தேயும், ஹ்ருதயதோஷமுடைய ஶிலராஜர்ஹள் அதைக்காணவேண்டுமென்று, பஹுப்ரயாஸபட்டு ப்போனவிடத்திலும் அவையவர்களுக்குக்காணப்படாமல் போயினவென்று, மஹாபாரத ஸபாபர்வத்தில் ஶொல்லியிருப்பதும், மேல் சொன்ன பௌமஸ்வர்கம்களெல்லாவத்திநுடைய ஸ்வபாவங்களுக்கு ஜ்ஞாபகமாயிருக்கையாலே போதுமான நிதர்ஶநங்களாகக்குறையில்லை என்பதாகவும்; அத்ருஶ்யங்களாகைக்கு புண்ய ப்ரசுரரான தேவாவாஸத்தையன்றோ, ஹேதுவாகச்சொன்னது. சந்த்ரமண்டலாதிகளெல்லாம் தேவாவாஸமாகவேயிராநிற்கச்செய்தேயும் பாபிகளுடைய கண்ணுக்கும், தோத்தாநிற்கின்ரனவே அவைபோல இதர வர்ஷ த்வீபங்களும் தேவதுல்ய புண்யபுருஷர்களுக்காவாஸங்களாயிருந்த போதிலும் கண்ணுக்குத்தோத்தவேண்டாவோ வென்னில்- ஆகாஶத்திலுள்ள ஜ்யோதிர்கணங்களில் சில கர்மபூமியிலுள்ளாருக்கு கர்மாநுஷ்டான காலப்ரகாஶார்தமாகவும், தர்ஶநமுகத்தாலே பாபக்ஷயார்தமாகவும், உண்டாக்கப்பட்டிருக்கையாலே, அவை பாபிகளுக்கும் தெரியும்படியாகவேயுண்டாக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவும் மத்தவர்ஷ த்வீபங்கள் அங்கனன்றிக்கே கேவலம் போகத்துக்காகவே ஸ்ருஷ்டிக்கப்பட்டிருப்பவைகளாகையாலே அவத்திற்கு த்தக்கபுண்ணியமில்லாதவர்களுக்குப்பலப்படமாட்டாதென்பதாகவும்; புராணாதிகளைக்கண்டிக்கும்போது பௌராணிகர் ஶொல்லும் விஷயங்களையெல்லாமவர்களுடைய ஸம்ப்ரதாயத்திந்படி தெரிந்துகொண்டு கண்டிக்கவேண்டுமென்றும், தெரிந்துக்கொண்டால் தூஷிப்பதர்கு வழிகிடைக்கமாட்டாதென்றும், தெரிந்துகொள்ளாமல் தூஷித்தால் அவை ஹாஸ்யாஸ்பதமாமென்றும், த்ருஶ்யாம்ஶங்களில் படைத்தவர்களும் பார்தவர்களும் ஶொன்னபுராணாதிகள் விரோதியாமல் போனால் – அத்ருஶ்யாம்ஶங்களிலும் அவையப்படியே இருக்குமென்றும் நம்பவேண்டுவதே யுசிதமென்பதாகவம்; காலதேஶ வைபரீத்யாதிகளால் இப்பொழுது இங்குள்ள க்ருஹக்ஷேத்ராதிகள் அடிக்கடி பூர்வநாமரூபங்களையிழந்து வேறு நாமரூபங்களையடைவதைப்போலே ப்ராசீனர்களான கஶ்யபப்ரஜாபதி ப்ருதுசக்ரவர்தி முதலானவர்களால் விபாகம்பண்ணப்பட்டிருந்த தேஶங்களும் மத்துமுள்ள நதநதீ வாபீ கூபஹ்ரத பர்வதாரண்யாராம ப்ரப்ருதி நிகில ப்ரதேஶங்களும் பூர்வத்திலிருந்த நாமரூபங்களையிழந்த இப்போது வேறு நாமரூபங்களையடைந்திருக்கின்றன, அப்படி இருப்பதையறியாமல் பூர்வம் புராணாதிகளில் ஶொல்லியிருந்த நாமரூபங்கள் இப்பொழுதில்லையென்று பரிஹரிப்பவர்களேயதற்கு விஷயமாவார்களென்பதாகவும்; மனிதர்களுக்கு பால்ய யௌவ்வன வார்தக்யாவஸ்தைகளில் ஸ்வரூபகதிகள் வேறுபடுமாப்போலே இந்த பூககோளங்களிலும் சில வேறுபாடுகளுண்டாகுமென்றும், அவைகளையவ்வக்காலங்களில் கண்டுபிடித்து த்ருக்ஸித்தத்தை ப்ரமாணமாக்கிக்கொள்ளவேண்டுமென்று ஸூர்யஸித்தாந்தாதிகளில் ஶொல்லியிருப்ப தாகவும்; மானகல்ப பேதங்களாலுண்டாகும் ந்யூநாதிரேகங்களாலே அண்டோச்ச்ராயம்- ஐம்பது கோடி அறுவதுகோடி நூறுகோடி யோஜநமென்கிர வ்யவஹாரங்களுண்டாயிருக்கின்ரதாகவும்;  பூககோளங்களை ஒருகல்பத்தில் ஸ்ருஷ்டித்தவைப்போல் மறுகல்பத்தில் ஸ்ருஷ்டியாமல் சிலபேதப்படும்படி ஸ்ருஷ்டித்திருப்பதைப்பத்தி அவைகளைச்சொல்லுகிற புராணாதிகளும் அவ்வோகல்ப பேதஸ்ருஷ்டி வைசித்ர்யங்களை சொல்லியிருக்கையாலே பரஸ்பர விரோதமில்லையென்பதாகவும் பூர்வமிருந்த சக்ரவர்திகளுக்கு அக்காலத்திலிருந்த மஹர்ஷிகள்  அவர்கள் லோகாந்தரம் சென்ற பின் பஹுகாலங்கழித்து உண்டாவர்களுடைய சரித்ரங்களைச்சொன்னதாய் புராணங்களிலிருப்பதைக்கொண்டு புராணவிஷயத்தில் ஸந்தேஹங்கொள்வது ஸரியன்ரென்பதாஹவும், ஸ்வேஶ்வரன் கல்பங்கள் தோறும் ஏர்படுத்துகிற அதிகாரங்களுக்குத்தக்க புண்ணியம்பண்ணின ஆத்மாக்கள் வேறாயிருந்தபோதிலும், அதிகாராநுகுண நாமரூப க்ருத்யளோரேவிதமாயிருப்பதைப்பத்தி பூர்வகல்பத்திலிருந்தவர்களுடைய சரித்ரங்களையுத்தர கல்பத்திலுண்டானவர்களுக்கு சொன்னதாகையால் ஸந்தேஹிக்க விரகில்லையென்பதாகவும்; ப்ரஹ்மஸித்தாந்தத்தில் ப்ரஹ்மா சொன்ன்தாகச்சிலர் சொல்லும், “பஞ்சாஶத் கோடி விஸ்தீர்ணா கேவலம் கல்பிதா மஹீ| அல்ப ராஜ்யமதாந்தாநாம் விஷாதாய விரக்தயே||” என்கிற ஶ்லோகத்துக்கு அல்பராஜ்யமதாந்தர்களுக்கு வைராக்யத்தையுண்டுபண்ணுகைக்காக பஞ்சாஶத்கோடி விஸ்தீர்ணபூமிகளை கல்பித்ததென்று சொல்லியிருப்பதாக சிலர் பொருள் சொல்வது சரியன்றென்றும்; அல்ப ராஜ்யத்தில் வைராக்யமுண்டாக்கவேணுமாகில், அத்வைதிகள் சொல்லுமாப்போலே கண்ணுக்குக்காணும் ராஜ்யங்களையும் கனாவைப்போலே பொய்யென்று சொன்னால் வைராக்யம் பிறக்குமித்தனையொழிய இன்னமநேக ராஜ்யங்களுண்டாயிருக்கிறதென்ரால், அவத்தையும் கூட ஸம்பாதிக்க வேண்டுமென்று பேராஶைக்கொண்டு, (ஒருவன் வீட்டில் நிதியுண்டென்று புளுகினால் அதைகேட்டு அதற்கு நரபலிகொடுத்து வீட்டையும் வித்துப்பார்த்த விடத்தில் பொருள் காணாதொழிந்தால் புளுகினவனைக்கொல்லத் தேடுமாப்போலே) அநேக யாகாதிகளைப்பண்ணின வளவிலும், அந்த ராஜ்யங்களைக்காணாதொழிந்தால் புராணாதிகளை நெருப்பிலிட்டு சொன்ன ப்ரஹ்மாதிகளையும் கொல்லத்தேடி அநர்தப்படுவார்களாகையால் ப்ரஹ்மா புளுகினானென்னக்கூடாதென்றும்; ஒட்டைச்சாண் ஶ்லோகத்துக்கு அபார்த்தம்பண்ணி ஸகல ஶ்ருதிஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளைப்பொய்யென்பது அவிவேக கார்யமாகையாலே அப்படி சொல்லக்கூடாதென்றும், வழிநடக்கமாட்டாத சிறுவர்களுக்கு பத்துநாழிகை வழியிலிருக்குமாரையரை நாழிவழியிலிருக்கிரதென்று சொல்லி வழிநடத்திக்கொண்டு போமாபோலே, புராணஸித்த ப்ருத்வீ பாகங்களுக்கு கணிதமுகத்தாலே காலநிர்ணயம் செய்கையஸாத்யமென்று நிநைத்தஞ்ஜியும், ஶிறுப்ரஜைகளுக்கு இனியதைக்காட்டினால் அதை விடாமல் பத்திக்கொண்டு அதுவே சிந்தையாயிருக்குமாப்போலே ஆஶ்சர்யாவஹங்களான விசித்ர ப்ரதேஶங்களோடு கூடிய பஞ்சாஶத்கோடி விஸ்தீர்ணையான பூமிவேறேயிருக்கிறுதென்றால், அதில் நெஞ்ஜுப்பத்தியும், முதலில் கணிதத்திலிழியமாட்டார்களென்று பார்த்து கணிதத்தில் ஜநங்களையொழியப்பண்ணுகைக்காக உண்டாயிருப்பதையில்லையென்று ப்ரஹ்மா சொன்னதாகக்கொள்ளுகையுசிதமென்றும், உசிதமென்கைக்கு காரணம் புராணாதிகளில் மஹாப்ருதிவியில் சொன்ன த்வீபஸமுத்ராதிகளைத்தள்ளிவிடாமல், ப்ரஹ்மா ஸூர்ய வ்யாஸ ஸித்தாந்தங்களில் ச்யோதிஶ்சக்ரமத்யத்திலிருப்பதாகச்சொல்லுகிற பூகோளத்தில் தக்ஷிண ஸமார்தபாகத்தில் த்வீப ஸமுத்ராதிகளும், உத்தர ஸமார்த பாகத்தில் நவகண்ட நவவர்ஷங்களடங்கிய ஜம்பூத்வீபமிருக்கிறதாகவும் ஶொல்லியிருக்கையாலேயென்றும், வர்ஷ ஸமுத்ர த்வீபாதிகளில்லாமலிருப்பது வாஸ்தவமானால் அவைகளிவத்தினுள்ளே அடங்கியிருப்பதாகச்சொல்லவேண்டிய ஆவஶ்யகமில்லையென்றும், அப்படியடக்கிச்சொல்லுகை பொய்யன்றோ வென்னில்த்வீபஸாகர ஸூக்ஷ்மாம்ஶங்களிதிலடங்கியிருப்பதினாலே அவை பாதகமாகாவென்றும், மத்தவர்ஷ த்வீபாதிகள் கர்மபூமிகளல்லாமையாலே க்ருத த்ரேதாதிகால பேதங்களவ்விடத்திலில்லையென்றும், பாரதவர்ஷமே க்ருதத்ரேதாதி கால சக்ரத்துக்குள்பட்ட கர்மபூமியென்றும், கர்மாநுஷ்டான கால ப்ரகாஶக ஜ்யௌதிஷ ஸித்தாந்தங்களுக்கு இந்த பாரதவர்ஷமே விஷயமென்றும் ஶாஸ்த்ரங்கள் சொல்லுகிறதாகவும்;  ஸூர்யனை நாபியாகவுடைய காலசக்ரம் பஶ்சிமமுகமாய் மாநஸோத்தர பர்வதத்தின் மீது நித்யமொரு ப்ரதக்ஷிணம் வருவதாகவும், அதில் ப்ரதிஷ்டிதங்களான க்ரஹங்கள் ஸ்வஸ்வகக்ஷைகளில் ப்ராங்முகமாயவரவர்களுக்குத்தக்க அளவின்படி ஶுத்திவருகிறதாகவும்; பூமிநிலையாகநிற்பது ப்ரத்யக்ஷஸித்தமாயிருப்பதைப்பத்தி, கப்பலிலிருப்பவர்களுக்கு கரையோடுவதாய்த்தெரிந்தபோதிலும் நிதானித்துப்பார்கும்போது கரையோடாமல் கப்பலோடுவதாய்த்தெரிவதுபோல் எவ்வளவு நிதானித்து பார்தாலும் பூமியோடாமல் நிலையாக நிற்பதாய் காணப்படுகிறதென்பதாகவும் பூமி ஶுத்துகிரதென்னும் பக்ஷத்தில் மேகமண்டல சந்த்ரமண்டல பர்யந்தங்களான ஆகாஶாதிகளும் ஶுத்துகிரதென்றே கொள்ளவேண்டுகையாலே இரண்டுக்கும் கதியுண்டென்று கொள்ளுகிரதைக்காட்டிலும் ப்ரத்யக்ஷ ப்ரஸித்தமான பூமியை ஸ்திரமாகக்கொண்டுக்ககோளமே ஶுத்துகிறதாக கொள்ளுகையுசிதமாய் ஶாஸ்த்ரங்களுக்கு அவிரோதமாயிருக்கிறதென்பதாகவும்; ப்ராசீன த்ருக் ஸித்தாந்திகள் பலரும் பூமியைஸ்திரமாகக்கொண்டே க்ரஹண க்ரஹஸமாகமவக்ராதி சாராதிகளைக்கண்டறியும்படி காட்டிய கணனமார்கங்கள் ஸரியாயிருக்கின்றனவென்பதாகவும், ஸூர்யனை நாபியாகவுடைய காலசக்ரத்தில் க்ரஹங்களெல்லாம் ப்ரதிஷ்டிதங்களாயிருக்கையாலே அந்தசக்ரநாபியான ஸூர்யன் ப்ராக்கதியாய்ச்சுத்துகையாலுண்டாகும் சக்ரசலனமே க்ரஹ நக்ஷத்ரங்களுடைய தூரத்துக்குத்தக்கபடி பேதப்பட்டு ஸகல க்ரஹங்களுடைய வக்ராதிசாராதிகளுக்கு காரணமாகிறதென்பதாகவும், பூர்வமீமாம்ஸையில் லோகவேதாதிகரண ஸித்தாந்தத்தில் “உத்தாநாவைதேவகவாவஹந்தி” (உத்ப்தாநாவை தெவகவாவஹந்தி)  என்கிற ஶ்ருதி வாக்ய நிர்வாஹத்தில் பூமித்ரிலோகத்திலும் ஸஞ்சரிப்பதாக வாயுபுராணத்தில் ஶொல்லியிருப்பதாய் ஸோமநாதர் முதலானோர் ஶொல்லியிருக்கிர ஸம்ப்ரதாயத்தைத்திருவுள்ளம்பத்தி “ப்ராந்தை: க்ல் ப்தம் த்ரிலோகீப்ரமணமத ததா மேதிநீ ப்ராந்திமாதௌ” என்று, துடங்கி தத்வமுக்தாகலாபத்தில் ஶ்ரீமத்வேதாந்தாசார்யர் கண்டித்திருப்பதாகவும்;  ஆர்யபடன் கணித ஸௌகர்யார்தம் பூமிஶுத்துவதாக சொன்னதையுள்கொண்டு அதை ஸ்திரப்படுத்துகை ஸரியன்றென்பதாகவும்; ஈஶ்வர ஸங்கல்பம் நம்முடையலாகவதர்கங்களைப்பின் சென்று லோகஸ்ருஷ்டி செய்யாதாகையால் லகுவான பக்ஷமே ப்ராமாணிகமென்று நம்பக்கூடாதென்பதாகவும்; உலகத்தில் குல்லாய்க்குத்தக்கபடி தலையைச்செதுக்காமல் தலைக்குத்தக்கபடி குல்லாயைத்தைத்துக்கொள்ளுமாப்போலே, ஈஶ்வரன் ஸ்ருஷ்டித்திருப்பதற்கு தக்கபடி கணித தர்கங்களை கர்பித்துக்கொள்ளுகை உசிதமென்பதாகவும்;  ஒருவனொருயந்த்ரத்தைச்செய்து உள் மர்மம் தெரியாதபடி மூடிவைத்தால், அதினுடைய ப்ரகாரங்களையெல்லாம்செய்தவநைக்கொண்டே அறியவேண்டிய தாவஶ்யகமானாப்போலே ஈஶ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அப்ரத்யக்ஷ வஸ்துப்ரகாரங்களையெல்லாம் அந்த ஈஶ்வரனுடைய தாத்பர்ய ப்ரகாஶகங்களாய் முதலிலே அவனாலே ப்ரவர்திக்கப்பட்ட ஸம்ஸ்க்ருத வேதாதிகளைக்கொண்டே அறிய வேண்டியது ந்யாயமென்பதாகவும், கேவல யுக்திஶொல்லுவதில் ப்ரயோஜனமில்லையென்பதாகவும்;  பஞ்சாஶத்கோடி விஸ்தாரமான பூமண்டலத்திலுள்ள வர்ஷ த்வீபாதிகளையும், அங்குள்ள நதீஶைலநகராதிகளையும், அவ்விடங்களில் வர்திப்பவர்களையும், அதலாதி அதோலோகங்களையும், அவைகளில் வர்திக்கும் தைத்யதானவாதிகளையம், பூமிக்கு இருபதினாயிரம் யோஜநையுயரத்தில் நெருப்பு மழை முதலான உத்பாதங்களையுண்டாக்கும் மேகக்ரஹஸஞ்சாரத்தையும், முப்பதினாயிரம் யோஜநையுயரத்தில் ஸித்தக்ரஹ ஸஞ்சாரத்தையும், நார்பதினாயிரம் யோஜநையுயரத்தில் பூதப்ரேத பிஶாசாதி க்ரஹஸஞ்சாரத்தையும், அதற்கு மேல் ஸம்சரிப்பவர்களையும்; ஶுபாதி கால ஸூசகங்களானா நவக்ரஹங்களையும், அவத்தினுடைய போகலீலாதிகார ஸ்தானங்களையும், அவத்திற்குத்தக்க புருவங்களையும், தூமவாதாத்யுபக்ரஹங்களையும், ஶிஶுக்களை பாதிக்கும் மாத்ரு க்ரஹாதிகளையம், மனிதர்களை பாதிக்கும் ராக்ஷஸாதி க்ரஹங்களையும், ஓரோர் கால விஶேஷங்களிலுண்டாகப்போகிற உத்பாத ஸூசகங்களாகத்தோன்றும் தூமகேது முதலியவைகளையும், சந்த்ரஸூர்யர்களருகில் அத்ருஶ்யங்களாயிருந்துகொண்டு ஓரோர் காலங்களில் ஶுப ஸூசநார்தமாக ப்ரகாஶித்து உடனே மறைந்து விடுகிற ஶுபஸூசக க்ரஹங்களையும், ஸ்வர்காத்யுபரி லோகங்களையும், ஆங்காங்குள்ள இந்த்ராதிகளையும் படைத்தவர்களும் பார்த்தவர்களும், கண்டறிந்து ஶொன்னதைப்போல யோகதபோ மஹிமைகளில்லாத முன்னிருந்த பரீக்ஷகர்களுக்கும், தத்கால ஹூணபரீக்ஷகர்களுக்கும் கண்டறிந்து ஶொல்லிமுடியாதென்பதாகவும்; இதுவுமல்லாமல் ஸூர்யாதிகளல்லாத ஜ்யோதிர்கணங்களெல்லாம் க்ரஹங்களல்லவென்றும், அவை த்ருவனுக்குக்கீழ் ஸூர்யனுக்கு மேலிருக்கும் ப்ரதேஶங்களிலிருப்பதாகவும், அவைகளிலொன்ரறும் ஸூர்யனைப்போல் ப்ரகாஶமுடையவைகளாய் விமானகோபுர மண்டப ப்ராகார நகராதிகளையுடையவைகளாயிருப்பதாகவும், அவத்துள் புண்யபுருஷர்கள் பரிகரபரிவாரங்களுடனே வர்திப்பதாகவும், அவையன்னதங்களாயிருப்பதாகவும், அவத்துக்கெல்லாம் கணனப்ரகாரங்களை மஹர்ஷிகள் ஶொல்லாதொழிந்தது ஜ்யௌதிஷ்யமநுஷ்டான காலப்ரகாஶகமாகையாலும், அவ்வநுஷ்டான காலந்தான் நவக்ரஹங்களையொழிய மத்தஜ்யோதிர்கணங்களுடைய கதியை யபேக்ஷியாமையாலும் ஶொல்லவில்லையென்பதாகவும், அஶ்வின்யாதி நக்ஷத்ரங்களும் ஸப்தர்ஷிப்ரப்ருதிகளும் வாயுமார்கரூபங்களான ஸ்வஸ்வகக்ஷைகளில் ஸர்வேஶ்வரன் கல்பித்த தத்ததுசித கதிவிஶேஷங்களோடு ஸஞ்சரிப்பதாகவும், புராணங்களில் ஶொல்லியிருக்கிற க்ரஹஸ்தாநங்கள் தேவதாஸ்தாநங்களாகையாலே க்ரஹஸ்தான மண்டலஸ்தானங்கள் வேராயிருப்பதையரியாமல் தூஷிப்பதவேகமென்பதாகவும், க்ரஹங்களுடைய ராஶிஸஞ்சாரத்துக்கு உடலான மண்டலங்களே நமக்கு த்ருஶ்யங்களாகிறதாகவும், அந்த மண்டலங்களை யதிஷ்டித்து நடத்திக்கொண்டு போரும் காலாதிகாரிகளாகிற க்ரஹங்கள் நமக்கத்ருஶ்யங்களென்பதாகவும், அத்ருஶ்யங்களாயிருப்பதைக்கொண்டு இல்லையென்பது அவிவேகமென்பதாகவும்;  அக்நிஹோத்ராக்னி ஜ்வாலைகளோடு கூடி ஜ்வலிப்பிக்கிர ஸூர்யமண்டலத்தையும், அதிலுள்ள அதிகாரி புருஷனான ஸூர்யனையும் அந்த மண்டலாந்தர்யாமியான ஸர்வேஶ்வரனையும் ஸூர்யரதகணபரிவார காலசக்ராதிகளையும், ஸூர்யக்ருத்யங்களையும், ப்ரத்யேகம் ப்ரத்யேகமாகச்சொல்லியருப்பதுமல்லாமல், விஶேஷித்து நமக்கு புலப்படுகிற ஸூர்யமண்டலத்தினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களையும், அருணமேகம் சூழ்ந்திருப்பதிநால் தோன்றும் காந்திவிஶேஷங்களையும், ஸ்வாபாவிக தேஜஸ்ஸோடுகூடிய க்ரஹநக்ஷத்ராதிகளுக்கு ஸூர்யதேஜஸ்ஸாலே அதிக ப்ரகாஶமுண்டாவதாகவும், அன்னம் முதலியவைகளை விளைப்பதற்கும் ஸகல ப்ராணிகளுக்கும் ஆதாரமாயிருக்கும் மழையையுண்டாக்கி, ஜகத்துக்காதாரமாயிருப்பவன் ஸூர்யன், ஸூர்யனுக்காதாரம் த்ருவன், த்ருவனுக்காதாரம் ஶிம்ஶுமாரசக்ரம். அதற்காதாரம் ஶ்ரீமன்நாராயணனென்பதாகவும், சந்த்ரனுடைய லோகம் ஸூர்யனுக்குமேலேயிருக்கிரதென்றும், அந்த சந்த்ரனுக்கு க்ஷீராப்திமதநகாலத்தில் கலாமாத்ரபுருவமொன்று உண்டானதென்றும், அதை ருத்ரமூர்தி ஶிரோபூஷணமாக தரித்தாரென்றும், ப்ரஹ்மபாவநிஷ்டரான அத்ரிமஹர்ஷியின் நேத்ரங்களில் நின்று சந்த்ரமண்டலோபாதாநாம்ருதமய ஜலமுண்டாய் அதுபத்துதிக்கையும் ப்ரகாஶிப்பித்துக்கொண்டு உயரக்கிளம்பினதென்றும், அதை பத்துதிக்தேவதைகளும் ஒன்றாய்க்கூடி தரித்தும் தரிக்கமாட்டாமல் விட்டுவிட அது பூமியில் விழுந்ததென்றும், அதை ப்ரஹ்மாபார்த்து லோகத்துக்கு ஸௌக்யமுண்டாம்படி பூமியைச்சுத்தும்படி ஶெய்வித்தாரென்றுன்றும், இது ஹரிவம்ஶாதிகளில் கூறுகிறதாகவும் சந்த்ரனுடைய அம்ருதாபிவ்ருத்திக்கும், ப்ரகாஶாபிவ்ருத்திக்கும் காரணம் ஸூர்யனென்பதாகவும், அம்ருதாபிவ்ருத்தி விஷயங்களாலுண்டாகும் கலாவிஶேஷங்கள் நமக்குப்புலப்படாவென்பதாகவும், ப்ரகாஶாபிவ்ருத்தி க்ஷயங்களாலுண்டாகும் கலாவிஶேஷங்களே நமக்குப்பலப்படுவதாகவும், அவத்திற்குக்காரணம்- ஸூர்யனுக்குக்கீழிருக்கும் ஸ்வரக்ஷையில் மாதத்துக்கொருதரம் சுற்றிவருகிற அவனுடைய கதிவிஶேஷமென்பதாகவும்; கஜச்சாயையென்று, பேரையுடைய சந்த்ரனுடைய நிழல் ராஹுவாலே அதிஷ்டிதமாய் ஸூர்யக்ரஹணத்துக்கு காரணமாகிரதாகவம்;  அமாவாஸ்யையில் ஓஷதிகளிலும் ஜலத்திலும் சந்த்ரன் மறைவதாக புராணங்களில் ஶொல்லியிருப்பதற்கு விஷயம் சந்த்ரமண்டலமன்c, அதிஷ்டாநதேவதையென்பதாகவும்; ராஹுமண்டலம் குருவுக்கும் ஶனிக்குமிடையில் அத்ருஶ்யமாயிருப்பதாகவும், அந்த ராஹுவானவன் சாயாக்ரஹமாகையாலே ஸூர்யசந்த்ரர்களுக்கு துல்யஸ்தாநவ்ருத்தியாய்க்கொண்டு ஸமஸூத்ரஸ்தனாய் சந்த்ரபூமிகளுடைய நிழலைக்கொண்டு ஸூர்யசந்த்ர க்ரஹணங்களையுண்டாக்குவதாகவும்; ஸூர்ய சந்த்ரமண்டலாதிகளை படைத்தவர்களும் பார்தவர்களும், புராணங்களில் ஶொல்லியிருக்கிற் அநேக விஶேஷங்களில், ஹூணபரீக்ஷகர்கள் பஹுத்ரவ்ய வ்யயம்பண்ணிச்செய்த யந்த்ரவிஶேஷங்களைக்கொண்டு அவ்வம்மண்டலங்களில் மேலெழக்கண்டுபிடித்த விஶேஷங்கள், அல்பமாய் அவிஶதமாயிருக்கிறதாகவும், அநேகமாயிரம் காதங்களுக்கவ்வருகேயிருக்கும் க்ரஹநக்ஷத்ர மண்டலஸ்வரூப ஸ்வபாவங்களையும், அதிலிருக்குமதிகாரிகளையும் படைத்தவர்களும் பார்தவர்களும் கண்டறிந்து ஶொன்னதைப்போல் முகுரநளிகா யந்த்ரங்களால் கண்டறிந்து ஶொல்லமுடியா தென்பதாகவும், மேலெழுந்த வாரியாய் ஶிலவாகாரங்களைக்கண்டறிந்து மத்தவைகளைக்கண்டறிய ஶக்தியில்லாமல்; கண்டறிந்தவர்கள் ஶொன்னதை தூஷிப்பது அஜ்ஞாந கார்யமென்பதாகவும்; ஶ்ரீராமாயண கிஷ்கிந்தாகாண்டாதிகளில் ஸம்பாதி ஜடாயுவாகிற பக்ஷிகளிரண்டும் ஸூர்யமண்டலத்தில் ஶெல்ல நிஶ்சயித்துக்கொண்டு பறந்து ஶிலதூரம் போய், இந்த பூமியை பார்தபோது மநுஷ்ய பஶுபக்ஷி ம்ருகாதிகள் புலப்படாமல், பர்வதங்கள் பருக்காங்கர்களைப்போலவும், நதிகள் நூலிளைகளைப்போலவும், மஹாவநங்கள் புல்படர்ந்திருந்ததைப்போலவும், மஹாபட்டணங்கள் வண்டிசக்ரங்களைப்போலவும், அதற்கு புறம்போகையில் அவையும்புலப்படாமல் வெறும் பூமியேபுலப்பட்டதாயும் ஹூணபரீக்ஷகர்கள் ஸூர்யாதி க்ரஹங்களோடொக்க சேர்தொரு க்ரஹமாகச்சொல்லுகிறதாயும் இருக்கிற இந்த பூகோளத்தில் சக்ரவர்திகள் முதல் க்ருஹஸ்தனளவுமுள்ள அநேகபோக்தாக்கள் அவரவர்கள் கர்மங்களுக்குத்தகுதியாக, ஈஶ்வரன் கொடுத்த போக்யபோகோபகரண போகஸ்தாநங்களையுடையராய் வாள்ந்துகொண்டிருப்பதை ப்ரத்யக்ஷமாகக்கண்டிருக்கிற விவேகிகள் அநேகமாயிரங்காதங்களுக்கவ்வருகாய், இந்த பூகோளத்தை விடப்பெரிதாய் தேஜோமயங்களாய் ரமணீயமான நதீஶைல ப்ரதேஶங்களையுமுடைய ஸூர்யசந்த்ராதிமண்டலங்களிலுள்ள தேவதைகள் அல்பயந்த்ரங்களைக்கொண்டு பார்கும் நம்முடைய அல்பத்ருஷ்டிக்கு புலப்படாத மாத்திரத்தாலேயே படைத்தவர்களும் பார்த்தவர்களும் புராணாதிகளில் ஶொன்னதை புத்திமான்கள் பொய்யாகநினைக்கமாட்டார்களென்பதாகவம்; இந்த பூமியில் அல்பைஶ்வர்யமுடையவர்களுக்குமுள்பட பலவிடங்களில் லீலாபோக அதிகார ஸ்தாநங்களும், அதற்குரிய பரிகரபரிவாரங்களும், ஸித்தமாயிருப்பதைக்கண்டிருக்க ப்ரஹ்ம ருத்ரேந்த்ர ஸூர்யசந்த்ராதிகளுக்குப்பலவிடங்களில் லீலாபோகாதிகார ஸ்தாநங்களும், அவ்வவ்விடங்களுக்குரிய பரிகரபரிவாரங்களும் புராணங்களில் ஶொல்லியிருக்கிற படியிருக்குமென்பதில் விவேகிகள் ஐயப்படுவதற்கு அவகாஶமில்லை என்பதாகவும்; அல்பதபஸ்ஸையுடைய ஸௌபரி தபோமஹிமையினாலே ஏககாலத்தில் ஐம்பது ஶரீரங்களை பரிக்ரஹம்பண்ணி அனேக கார்யங்களை நடத்தினாப்போலே தபோமஹிமையில் ஶிறந்த ப்ரஹ்ம ருத்ரேந்த்ர ஸூர்யசந்த்ராதிகள் பலஶரீர பரிக்ரஹம்பண்ணிப்பலகார்யங்களை நடத்துவரென்பதில் ஐயமுறாமல் பரிபூர்ண ஜ்ஞாநமுடையார் பரிவுடன் ஒத்துக்கொள்ளுவார்கள் என்பதாகவும், ஸர்வேஶ்வரன் பூர்வம் தவம்புரிந்த சேதநர்களை ப்ரஹ்ம ருத்ரேந்த்ர ஸூர்ய சந்த்ராதிகளாக்கி லோகமண்டலாதிபத்யங்களைக்கொடுத்ததாய் ஶாஸ்த்ரங்களில் ஶொல்லியிருப்பதாகவும்; ஓரரஶன் தன்னையாஶ்ரயித்தவர்களுடைய அதிகாராபேக்ஷிதங்களுக்குத்தக்கபடி ராஜ்யாதிகாரங்களைக்கொடுப்பதுபோல ஸர்வேஶ்வரனும் தன்னையாஶ்ரயித்தவர்களடைய அதிகாராபேக்ஷிதங்களுக்குத்தக்கபடி லோக மண்டலாதிபத்யங்களைக்கொடுத்திருப்பதாகவும், ராஜாக்களால் கொடுக்கப்பட்ட ராஜ்யாதிகாரமுடையவர்களைச்சிலராஶ்ரயித்து அவர்களால் ஶில ப்ரயோஜனத்தை படைவதைப்போல் ஸர்வேஶ்வரனால் கொடுக்கப்பட்ட லோகமண்டலாதிபத்யங்களையுடைய ப்ரஹ்ம ருத்ரேந்த்ரஸூர்யசந்த்ராதிகளைச்சிலராஶ்ரயித்து அவர்களாலடையத்தக்க பலங்களையடைகிறார்களென்பதாகவும்; இங்கு ஸர்வேஶ்வரன் அவரவர்களுடைய கர்மாநுகுணமாகச்சிலஶுபாஶுப ஸூசக காரகர்களை ஏற்படுத்தியிருப்பதை ப்ரத்யக்ஷமாகக்கண்ட விவேகிகள் ககோளத்திலும் கர்மானுகுணமாகச்சில ஶுபாஶுப ஸூசககாரக க்ரஹங்களை ஏற்படுத்தியிருக்கிறதாய் ஶாஸ்த்ரங்களில் ஶொன்னதை ஸத்யமாகக்கொள்ளுவர்களென்பதாகவும்; நம்முடைய கண்களுக்கு புலப்படாமையைக்கொண்டு வர்ஷ த்வீபஸமுத்ரலோகங்களையும், லோகாதிபதிகளான ப்ரஹ்மாதிகளையும், மண்டலாதிபதிகளான ஸூர்யாதிகளையும் பொய்யென்று ஶொல்லும் பக்ஷத்தில் புலப்படாத ஸர்வேஶ்வரனையும் பொய்யாகக்கொள்ளவேண்டியதாய் விடிந்து நாஸ்திகர்களாய், அப்பொழுது ப்ரஹ்மாத்மகமான ஜலம், கோமயம் முதலிய பஞ்சீக்ருதோபாதான த்ரவ்யங்களில் கர்மாநுகுணமாக அந்தர்பவித்திருக்கும் ஆத்மாக்களுக்கு ஸர்வாந்தர்யாமியான ஸர்வேஶ்வரன் உண்டாக்கும் ஶரீரங்களை அவனுண்டாக்கினதாகக்கொள்ளாமல் தன்னடையே உண்டானதாகக்கொண்டு, கண்ணுக்குப்பலப்படாத ஈஶ்வரனை இல்லையென்று ஶொல்லுகிற நவீன நாஸ்திகமதத்தை நம்பவேண்டியதாய் வருமென்பதாகவும், புலப்படாமல் போனபோதிலும், ஸர்வேஶ்வரனையும் த்ருஶ்யாத்ரஶ்யங்களாயிரக்கும் அவனுடைய ஆஶ்சர்ய ஸ்ருஷ்டியையும் ஒத்துக்கொண்ட ஆஸ்திகர்கள், குயவனையொழிய ம்ருத்தண்டசக்ராதிகளையும், ஶேணியனையொழிய தந்துதுரீவேமாதிகளையும், தச்சனையொழிய தாருவாஸ்யாதிகளையும், ஓரிடத்தில் வைத்து தைவஸஹாயமில்லாமல் அவை கடமாயும், படமாயும் பெட்டியாயும் பரிணமித்து தன்னடையே உண்டாகுவதைக்காட்டாமையால் நவீன நாஸ்திகமதத்தை மெய்யெனக்கொள்ளவும், விசித்ர பரிணாமத்தோடும் கூடின நம்முடைய தேஹத்தை நம்முடைய தாய் தந்தைகள் ஶெய்ததாய் ஶொல்லப்பார்தால் இந்த தேஹத்தில் ஒருஶுண்டுவிரல் நஶுங்கிப்போனால் அதை பூர்வமிருந்ததைப்போலச்செய்ய அவர்களாலே முடியாமையாலும் மத்துமுள்ளவர்களாலும் முடியாமையாலும் சேதநர்களைக்காரணமாக கொள்ளவும் இடமில்லை. ஆதலால், ஸர்வஜ்ஞத்வ ஸர்வஶக்தித்வங்களையுமுடைய ஒரு ஸர்வேஶ்வரனையும் அவனபிப்ராயத்தை தெரிவிக்கிர ஶாஸ்த்ரத்தையும் ஒத்துக்கொள்ள வேண்டியதாவஶ்யகமென்பதாகவும்,  ஆவஶ்யகமானபோது க்ரைஸ்துவர்களும், மஹம்மதீயர்களும் ஶொல்லுகிர நூலின்படி ஒத்துக்கொள்ளலாமென்னில், அந்நூல்களில் ஈஶ்வரனுடைய ஸ்வரூபரூப குணவிபூதி சேஷ்டிதங்களையுள்ளபடி ஶொல்லாமலும்  விஷஸ்ருஷ்டி முதலிய கேள்விகளுக்கு ஸதுத்தரங்களொன்றுமில்லா மலுமிருப்பதுமல்லாமல், ஶிறுவர்கள் ஶொல்வதைப்போல் லோகஸ்ருஷ்டியாய் ஆறாயிரம் வர்ஷமாச்சென்றும், அதற்குமுன் ஜகத்ஸ்ருஷ்டியில்லாமலேயிருந்ததென்றும், ப்ரளயமும் த்வரையில் ஆகப்போகிறதென்றும், பூககோள ப்ரதேஶங்களில் கண்களுக்கு புலப்பட்டவளவேயுள்ளதென்றும் ஶொல்லுவதைப்பார்தால், ஈஶ்வரன் ஆறாயிரம் வர்ஷத்துக்குமுன் உண்டாயிருந்தானோ இல்லையோ, அல்லது, உண்டாயிருந்தபோதிலும் ஸ்ருஷ்டிக்க ஸாமர்த்யமுண்டாயிருந்ததோ இல்லையோவென்கிறவிவை முதலிய அநேக ஸந்தேஹகளுக்காஸ்பதமாயிருப்பதைப்பத்த அவர்கள் மதத்தை விட்டு; அபரிச்சின்ன ப்ரதேஶமுடைய மூல ப்ரக்ருதியில் சேதனர்களுடைய கர்மானுகுணமான போக்யபோகோபகரண போகஸ்தானங்களோடு கூடிய கபித்தாகார கோளகோடிகளடங்கிய அனந்தகோடி ப்ரஹ்மாண்டங்களும், பீஜாங்குரம்போலே ப்ரவாஹதோ நித்யங்களாம்படி நித்யனான ஸர்வேஶ்வரனாலுண்டாக்கப்பட்டிருப்பதாகவும், அவன் ஸர்வவ்யாபகனாயிருக்கச்செய்தே முக்தப்ராப்யனாகைக்கு இவத்துக்கெல்லாம் மேலான பரமபதத்திலெழுந்தருளியிருப்பதாகவும், மத்துமவனுடைய ஸ்வரூபரூபகுண விபூதிசேஷ்டிதங்களையும் சேதனஸ்வரூபோபாய புருஷார்தங்களையும் பரக்க ப்ரதிபாதிக்கிற அவன் க்ருபை ஶெய்த அநாதியான ஸம்ஸ்க்ருதவேதத்தையே ஸத்யமாக நம்பி அதில் ஶொன்ன விஷயங்களையாராந்துய்கையே யுசிதமென்பதாகவம், ப்ரமாண தர்க ஐதிஹ்யங்களுடன் அந்த புராணமார்கதீபிகையில் பரக்கவருளிச்செய்யப்பட்டிருக்கின்றது.

 

||ஜீயர் திருவடிகளே ஶரணம் ||

 

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.