[highlight_content]

தஶமத தர்ஶிநீ

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

ஶ்ரீமதே வரவரமுநயே நம:

அஸ்மத்குருப்யோ நம:

(மதுரமங்கலம் எம்பார் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் அருளிச்செய்தது)

|| தஶமத தர்ஶிநீ ||

பகவதவதாரமான ஶ்ரீவேதவ்யாஸ பகவான் வேதஸம்ப்ரதாயத்தை ப்ரவர்திப்பித்து வேதார்த நிர்ணயார்தமாஹ ஸ்வஶிஷ்ய ஜைமினிமுகத்தாலே கர்மகாண்ட, தேவதாகாண்டங்களையும், ஸ்வயமேவ ப்ரஹ்மகாண்டத்தையும் நிர்மித்தான். அதில் ஸகலதேவதாந்தர்யாமியாய் ப்ரஹ்மஶப்தவாச்யனான விஷ்ணுவே ஸாக்ஷாத்வா ப்ரம்பரயா வா ஸர்வகர்மஸமாராத்யனென்ரும் கர்மஸ்வரூபபேதததங்காதிகளின்னதென்றும் தேவதாஸ்வரூபபேத ததுபாஸநாதிகளின்னதென்றும் கர்மகாண்ட, தேவதாகாண்டங்களில் சொல்லித்து. கர்மான்வித தேவதைகளுக்கு சைதந்யவிக்ரஹாதிகளில்லையென்ரும், ஜீவாதிரிக்த பரமாத்மாவில்லையென்ரும் கர்மஜன்யாபூர்வமே பலஸாதனமென்ரும் ஜகத்து ப்ரவாஹரூபேண நித்யம், ஸ்ருஷ்டிப்ரலயம்களில்லையென்ரும் சதுர்த்யந்த்யாதி ஶப்தரூபமே தேவதையென்ரும் துர்யாஶ்ரமமில்லையென்ரும் தேவதைகளுக்கு கர்மோபாஸநாதிகளில்லையென்ரும் இத்யாதிகளர்வாசீநரான் பாட்ட ப்ரபாகராதிகள் வ்யாக்யானித்தார்கள். இவ்வர்தங்கள் ஸ்வாசார்யரான வேதவ்யாஸபகவானுக்கு அபிமதமாகையாலே ஜைமினி பகவானுக்கும் அநபிமதம்களென்னு ஸேஶ்வரமீமாம்ஸாதிஹளிலே ப்ரதிபாதிக்கப்பட்டது. ப்ரக்ருதி புருஷகாலவிஶிஷ்டமாய் ஜ்ஞாநஶக்த்யாத்யநந்த கல்யாணகுணாகரமாய் புருஷோத்தம நாராயணாதி ஶப்த வாச்யமான ப்ரஹ்மனே உபாதான நிமித்த ஸஹகாரி ரூபமான த்ரிவிதகாரணமென்ரு ஶொல்லி இந்தப்ரஹ்ம காரணவாதத்திலே மந்தமதிகளுக்கு தர்ஶநாந்தரங்களிலே ப்ரகாராந்தரேண காரணவாத ப்ரயுக்தமான ஶ்ரத்தாமாந்யம் ஜநிக்குமென்ரு தர்ஶநான்தரங்களையும் ப்ரஹ்மகாண்டத்திலே நிரஸித்தது.

அவையாவன கபில- பதஞ்ஜலி- கணாத- ஸுகத- ஜிந- பஶுபதிகளுடைய மதங்கள். அதில் கபிலமதத்திலே ப்ரக்ருதியும் புருஷனும். ப்ரக்ருதியாவது ஸத்வரஜஸ்தமஸ்ஸமூஹரூபையாய் அசேதநையாயும் மஹதாதி த்ரயோவிம்ஶதி தத்த்வத்துக்கும் காரணபூதையாயும் இருக்கும். இதுதான் கடத்துக்கு ம்ருத்துப்போலே அசேதநமான ஜகத்துக்கு ஸரூபமானகாரணம் வேண்டுகையாலே அநுமாநஸித்தையாயிருக்கும். புருஷன் சைதந்யரூபனாய் நிர்தர்மிகனாய் ஸர்வகதனாய் ப்ரதிஶரீரம் பின்நனாயிருக்கும். ப்ரக்ருதி புருஷர்களுடையவன்யோன்யாபேத ப்ரமத்தாலே ஸம்ஸாரம். பேதஜ்ஞானத்தாலே மோக்ஷம். இந்த ப்ரக்ருதி, சேதநானபேக்ஷமாய் காரணமாயிருக்கும். க்ஷீரம் ததியாஹுமாப்போலேயும், வர்ஷஜலம் எளநீராஹுமாப்போலேயும், தானே பரிணாமிக்கக்கடவதாயிருக்கும். காந்தஸந்நிதியினாலே லோஹத்துக்கு விகாரமுண்டாஹுமாப்போலேயும் இதுக்கும் விகாரம் கூடும். அந்தனுடையகமன ஶக்தியாலும் அந்தாரூட பங்குவினுடைய ஜ்ஞாநஶக்தியாலும் கமநப்ரவ்ருத்தி போலே சைதந்யஸ்வரூபனான புருஷனுடையவும் கர்த்ருத்வஶக்தியுக்தையான ப்ரக்ருதியினுடையவும் ஸம்ஸர்கத்தாலே ஜகத்ப்ரவ்ருத்தியுண்டாமென்ரும் கபிலமதம்.

இது அநுபபன்னம். சேதனன் ஸஹகாரமில்லாதவசேதநத்துக்கு கார்யகரத்வம் காணாமையாலே ஸத்வாதிகுணாஶ்ரயம். அல்லது ஸத்வாதிகுணஸ்வரூபம் ப்ரக்ருதியென்கை ஶாஸ்த்ரவிருத்தம். பங்குவுக்கு தர்ஶநமும் மார்கோபதேஶமும் காதாசித்கமாஹக்கூடும். காந்தத்துக்கு லோஹஸாமீப்யம் காதாசித்கமாஹக்கூடும். புருஷன் நிஷ்க்ரியனாகையாலே காதாசித்க விஶேஷம் கூடாமையாலே ஸந்நிதிமாத்ரம் நித்யமாகையாலும் நித்யஸர்கமும் மோக்ஷபாவமும் ப்ரஸங்கிக்கும். க்ஷீராதிகளையும் பரமாத்மாவே பரிணமிப்பிக்கையாலே அது த்ருஷ்டாந்தமாகாது. அசேதனம் காரணமாயில் ஸ்ருஷ்டிப்ரலயவ்யவஸ்தைக்கூடாது. இத்யாதி தோஷங்கள் விஸ்தரேண ஶொல்லித்து.

பதஞ்ஜலி மதத்திலே ஸ்வதந்த்ரப்ரதாநமுபாதாநகாரணம். ஈஶ்வரன் நிமித்தமாத்ரம். ஆத்மத்யானரூபயோகம் மோக்ஷஸாதனமென்று இதுவுமநுபபன்னம். ப்ரக்ருதிஶரீரக ப்ரஹ்மமே ஜகத்காரணமென்றும். ஜீவ ஶரீரக ப்ரஹ்மோபாஸனமே மோக்ஷஸாதனமென்றும். வேதம் ப்ரதிபாதிக்கையாலே வேதவிருத்தமான பதஞ்ஜலிமதமும் நி:ஶ்ரேயஸார்திஹளுக்கு அநுபாதேயமென்று ஶொல்லித்து.

கணாதமதத்தில் விபக்வ ஜீவாஹ்ருஷ்டஸஹிதங்களாய் ஆனுமானிகேஶ்வராதிஷ்டிதங்களான ப்ருதிவ்யாதி பரமாணுக்கள் த்வ்யணுகாதி க்ரமேண ஜகதாரம்பகம்களென்று. இதுவுமநுபபன்னம். தந்துக்கள் முதலானவை ஸ்வாம்ஶங்களான ஷட் பார்ஶ்வங்களாலே அன்யோன்யம் ஸம்பந்தித்து படாதிகளை ஜனிப்பிக்குமாப்போலே பரமாணுக்களும் த்வ்யணுகாதிகளை ஜனிப்பிக்கில் ஸாம்ஶத்வம் ப்ரஸங்கிக்கையாலே அனவஸ்தைக்கும். பரமாணுக்கள் நிரம்ஶங்களாஹையாலே ஸஹஸ்ரபரமாணு ஸம்யோகத்திலும் ஏகபரமாணுவோடே அவிஶேஷமும் ப்ரஸங்கிக்கும். பரமாணுக்கள் ரூபரஸாதியுக்தங்களாஹில் கடாதிவதநித்யத்வாதிஹளும் ப்ரஸங்கிக்கும். அவை ரூபாதி ஶூந்யங்களென்னில் கார்யங்கள் ரூபஶூன்யங்களாக ப்ரஸங்கிக்கும். அநுமானத்தினாலே ஈஶ்வரனை ஸாதிக்கில் குலாதிவத் கர்மவஶ்யத்வாதிஹள் ப்ரஸங்கிக்கும். இத்யாதி தோஷங்கள் விஸ்தரேண ஶொல்லப்பட்டது.

ஸுகதமதம் தான் வைபாஷிகஸௌத்ராந்திக- யோகாசார மாத்யமிகராஹிரஶிஷ்யர்ஹளுடைய பாகபேதத்தாலே நாலுவகைப்பட்டிருக்கும். அதில் வைபாஷிகன் ப்ரத்யக்ஷஸித்தங்களான வஸ்துக்கள் க்ஷணிகங்களென்ரு கொண்டான். ஸௌத்ராந்திகன் க்ஷணிகம்களானவவை ப்ரத்யக்ஷங்களன்ரு. கிந்து தீவைசித்ர்யான்யதாऽநுபபத்யா அநுமேயம்களென்ருகொண்டான். யோகாசாரன் ஜ்ஞாநாதிரிக்தங்களான வஸ்துக்கள் முதலிலேயித்தை ஜ்ஞாநமாத்ரமேயுள்ளது. அதுவும் க்ஷணிகமென்கிரான் மாத்யமிகன் ஜ்ஞாநமும், ஜ்ஞேயமும் ஆகிர ஸர்வமுமில்லையென்ருகொண்டான்.  இவர்கள் நால்வரிலே ப்ரதமத்விதீயர்கள் ரூபாதி சதுஷ்டயயுக்தங்களான பார்திவபரமாணுக்களும், ரூபரஸஸ்பர்ஶயுக்தங்களான ஜலபரமாணுக்களும், ரூபஸ்பர்ஶயுக்தங்களான தேஜ: பரமாணுக்களும். ஸ்பர்ஶயுக்தங்களான வாயு பரமாணுக்களும், ப்ருதிவ்யப்தேஜோ வாயுரூபேண ஸங்காதமாகிரது. அவைத்தில்நின்ரும் ஶரீரேந்த்ரியவிஷயரூபங்களான ஸங்காதம்களுண்டாஹிரது. அவைத்தில் ஶரீராந்தர்வர்தியான க்ஷணிகவிஜ்ஞாநஸந்ததியே ஆத்மாவென்ருகொண்டிருக்கிரது என்ருகொண்டார்ஹள். இதுவுமநுபபன்னம். க்ஷணத்வம்ஸிஹளான பரமாணுக்களுக்கு ஸங்காதார்த வ்யாபாரமும், தத்பூர்வகமான ஸங்காதமும், தத்பூர்வகமான ஜ்ஞாநவிஷயத்வமும் தத்பூர்வக மானஹாநாதி வ்யவஹார விஷயத்வமும் கூடாதாஹையாலே ப்ருதிவ்யாதி ஸங்காதம்களும் தத்தேதுக்களாந ஶரீராதி ஸங்காதம்களும் ஸித்தியாது. க்ஷணிகம்களிலே ஸ்திரத்வபுத்தியாஹிரவவித்யையாலே ராகாதிகள்- ராகாதிகளாலே விஜ்ஞாநம் விஜ்ஞாநத்தாலே சித்தசைத்தங்களும் ப்ருதிவ்யாதிரூபி த்ரவ்யஷட்கமும் அவைத்தில்நின்ரும் இந்த்ரியஷட்கமும், அதில்நின்ரும் காயமும், அதில்நின்ரும் வேதநாதிஹள் புநரப்யவித்யாதிகளென்கிர சக்ரபரிவ்ருத்திநடக்கிரதென்ருகொள்ளில் அஸ்திரே ஸ்திரத்வபுத்தியும் தன்நிமித்த ராகத்வேஷாதிகளும் வஸ்த்வந்தரத்திநுடைய ஸம்காதபாவத்துக்கு ஹேதுவாகமாட்டாது. ஶுக்திகையிலே ரஜதபுத்திக்கி ஶுக்திகாஸங்காதபாவஹேதுத்வமில்லையே. யாவனொருவனுக்கு க்ஷணிகத்வபுத்திபிரந்து அவனைப்போலே நஷ்டநாகையாலே அத்தாலே யாருக்கு ராகாதிஹளுண்டாம். உத்தர க்ஷணோத்பத்திகாலத்திலே பூர்வக்ஷணம் விநஷ்டமாஹையாலே அது உத்தரக்ஷணத்துக்கு ஹேதுவாஹமாட்டாது. அபாவமே ஹேதுவென்ரில் அது ஸார்வத்ரிகமாகையாலே ஸர்வமும் ஸர்வத்திலே உண்டாஹப்ரஸங்கிக்கும். ஆத்மவஸ்துக்ஷணிகமாகில் ’முன் கண்டத்தை நானேயிப்போது தொடுகிரேன்’ இத்யாதி வ்யவஹாரமும் கூடாது. க்ஷணிகத்வத்திலே அர்தக்ரியாகாரித்வமும் லிங்கமாகமாட்டாது ப்ரத்யுதஸ்திரத்வ லிங்கமாம். அஸ்திரமான ஶஶவிஷாணம் அர்தக்ரியாகாரியென்ரு’ இத்யாதி தூஷணங்கள் விஸ்தரேண ஶொல்லப்பட்டது.

ஸௌத்ராந்திகன் ஜ்ஞாநகாலத்திலே அர்தாவஸ்தானம் ஜ்ஞாநவிஷயத்வஹேதுவன்ரு கிந்து ஜ்ஞாநோத்பத்தி ஹேதுத்வமே ஜ்ஞாநவிஷயத்வமாஹிரது. ஜ்ஞாநத்திலே ஸ்வாகாரத்தை ஸமர்பித்து நஷ்டமானவர்தம், ஜ்ஞாநகதமான நீலாத்யாகாரத்தாலேயநுமிக்கப்படுஹிரதென்ருகொண்டான். இதுவும் அநுபபன்னம். தர்மிநஷ்டமான பின்பும் தத்தர்மத்துக்கு அர்தாந்தரத்திலே ஸங்க்ரமணம் காண்மையாலே. ஆஹையாலே ஜ்ஞாநத்துக்கு வைசித்ர்யமர்தாவஸ்தாநத்தாலே என்ருக்கொள்ளவேணுமித்யாதி விஸ்தரேண ஶொல்லப்பட்டது.

யோகாசாரந் ஜ்ஞாநவைசித்ர்யமர்த வைசித்ர்யப்ரயுக்தமன்ரு. ஜ்ஞாநங்கள் ஸ்வயமேவ விசித்ராகாரங்களாயிருக்கும் இத்யாத்யர்தங்களைக்கொண்டான். இதுவும் அநுபபன்னம். ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு அர்த விஶேஷ வ்யவஹாரஹேதுவான ஜ்ஞாநமுபலப்யமானமாகையாலே “நாநித்தையரிகிரேநென்ரும் க்ரியாகர்மபாவத்தாலே பரஸ்பரபின்னமாக ப்ரத்யக்ஷத்ருஷ்டமான ஜ்ஞாநஜ்ஞேயம்களில் ஜ்ஞாநமாத்ரம் பரமார்தமென்கிரது ஸர்வலோக ப்ரத்யக்ஷவிருத்தம். இன்னமும் ஜாகரதஶையில் ஜ்ஞாநங்கள் ஸ்வாப்நஜ்ஞாநங்கள் போலே விஷயஶூந்யகளென்ரும் ஶொன்நான். இதுவும் அநுபபன்னம். ஸ்வாப்நஜ்ஞாநங்களுக்கு உத்தரத்ரபாதக ப்ரத்யயங்களிருக்கையாலே அவைத்துக்கு விஷயஶூந்யத்வம் கொள்ளலாம். ஜாகரஜ்ஞாநங்களுக்கு அப்படி உத்தரத்ரபாதக ப்ரத்யயங்களில்லாமையாலே விஷயஶூந்யத்வம் கொள்ளவொண்ணாது. அப்படி ஸர்வஜ்ஞாநங்களுக்கும் விஷயஶூந்யத்வம்கொள்ளில் விஷயஶூந்யத்வ ஸாதகாநுமான ரூபஜ்ஞாநத்துக்கும் விஷயஶூந்யத்வம் ப்ரஸங்கிக்கையாலே ஜ்ஞாநங்களுக்கு விஷயஶூந்யத்வம் ஸித்தியாது. இந்தவநுமான ஜ்ஞாநத்திலே விஷயஶூந்யத்வமில்லையாகில் ஜ்ஞாநத்வரூப ஹேதுவுக்குமநைகாந்த்யம் வரும். இத்யாதி தோஷங்கள் விஸ்தரேண ஶொல்லப்பட்டது.

மாத்யமிகன் ஸுகதநுக்குமுக்யஶிஷ்யன். மாத்யமிகமதமே ஸுகதமதத்துக்குயெல்லை. மாத்யமிக மதத்திலே விஜ்ஞாநமும் பாஹ்யார்தங்களுமில்லை. ஶூந்யத்வமே தத்வம். அபாவாபத்தியே மோக்ஷம். எங்கனேயென்னில், ஹேதுஜந்யமாநஸத்து தத்த்வமென்னவொண்ணாது. உத்பத்தியை நிரூபிக்கக்கூடாமையாலே. அதாவது பூர்வமே ஸத்தானத்துக்கு உத்பத்தியிலே ப்ரயோஜனமில்லாமையாலே ஸத்துக்கு உத்பத்தியென்ன வொண்ணாது. அஸத்துக்கு உத்பத்திஶொல்லில் உத்பன்னமானதும் அஸத்தாஹையாலே ஜன்மத்துக்கு ப்ரயோஜனா பாவம் ப்ரஸங்கிக்குமாஹையாலே அஸத்துக்கும் உத்பத்திஶொல்லவொண்ணாது. இப்படிஸதஸதுபயாத்மகமும் தத்த்வமென்னவொண்ணாது. அன்யோந்யவிலக்ஷணமான ஸதஸத்துக்களுக்கு தாதாத்ம்யம் கூடாது. ஸதஸத்விலக்ஷணமே தத்த்வமென்னில் வ்யாவஹாரிக ஸத்யமென்ரும் ஸாம்ப்ரதிக ஸத்யமென்ரும் ஶொல்லப்படுகிற ஸதஸத்விலக்ஷணமானதும் ப்ராந்தி பரிகல்பிதமாகையாலே தத்த்வமாஹாது. ஸதஸத்விலக்ஷணத்துக்கு உத்பத்தியும் கொள்ளவொண்ணாது. ஜந்மப்ரயோஜநமான ஸத்த்வமில்லாமையாலே ஜன்மவைய்யர்த்யம் வரும். கிம்ச ஜாயமாநத்துக்கு தன்னாலே ஜன்மமோ, பிரம்பாலே ஜன்மமோ. அதில் தன்னாலேயென்னவொண்ணாது. தான் முன்பேயிருக்கையாலே. பிரம்பாலே தனக்கு ஜன்மமென்னவொண்ணாது. புறம்பானவைமையெல்லாத்துக்குமாக்குமாகையாலே எல்லாம் எல்லாத்திலும் ஜன்மிக்கப்ரஸங்கிக்கும். ஒருஸம்பந்தவிஶேஷத்தைக்கொண்டு வ்யவஸ்தை ஶொல்லப்பார்கில் அந்தஸம்பந்தம் ஸ்வஸ்மாத்பிந்நமாகில் முன்புபோலே எல்லாமெல்லாத்திலும் ஜன்மிக்கப்ரஸங்கிக்கும். அது ஸ்வ ஸ்மாதபிந்நமாகில் ஸ்வஸ்வரூபம்போலே யதுவும் வ்யவஸ்தாபகமாஹ மாட்டாது. ஆஹையாலிப்படி யுத்பத்தி துர்நிரூபையாகையாலே ஸத்துமஸத்தும் ஸதஸத்தும் தத்த்வமாஹமாட்டாது. ஸதஸத்விலக்ஷணமும் ப்ராந்திஸித்தமாஹையால் தத்த்வமாஹமாட்டாது. ஆஹையாலே ஶஶவிஷாணம்போலே நிஸ்ஸ்வபாவம் துச்சமென்ருவ்யவஹரிக்கப்படுகிர ஶூந்யமே தத்த்வமெந்ன்மாத்யமிகமதம். இதுவுமநுபபன்னம். எங்கநேயெந்நில் | ஸத்வாஸத்வங்கள் பதார்த தர்மங்களாஹையாலே ஸத்வம்போலே அஸத்வமும் வித்யமாநவஸ்துவுக்குஅவஸ்தாவிஶேஷரூபமாஹ லோகப்ரதீதஸித்தமாகையாலே ஸர்வமும் அஸத்துயென்கிர ப்ரதிஜ்ஞையாலே அவஸ்தாவிஶேஷரூபமான வஸத்வத்துக்கு ஆஶ்ரயமாஹ வஸ்துவினுடைய ஸத்வமே ஸித்திக்கும். கடமிங்கிப்போதில்லை என்றுரமப்போது கடம் காதாசித் க்வசிதுளதென்று ஸித்திக்கும். கடத்துக்கு ஸ்வாபேக்ஷயாஸத்வமும் கபாலாபேக்ஷயா அஸத்வமுமாகையாலே  ஸதஸதாத்மகத்வமுபபன்னம்.  கடம் ஸ்வாபேக்ஷயா அஸித்விலக்ஷணமாயும். கபாலாபேக்ஷயா ஸத்விலக்ஷணமாயுமிருக்கும். இப்படி ஸத்த்வமும் அஸத்த்வமும் ஸதஸதுபயாத்மகத்வமும் ஸதஸத்விலக்ஷணத்வமும் வித்யமான வஸ்துவிநிடையவவஸ்தாவிஶேஷமாகையாலே நீபண்ணுகிரவஸத்வ ப்ரதிஜ்ஞையாலே ஸத்த்வமே ஸித்தித்துவிடும். இந்த ஸர்வஶூந்யத்வம் தானும் ஒரு ப்ரமாணத்தையும், ஒரு ப்ரமிதியையும் கொண்டு ஸித்திக்கவேண்டுகையாலே அந்தப்ரமிதியும் ப்ரமாணமும் ஸத்யமாஹில் ஸர்வமும் ஶூந்யமென்னவொண்ணாது. அஸத்யமாகில் ப்ரமாணஶூந்யமான ஸர்வஶூந்யத்வம் முதலிலேஸித்தியாது. ப்ரமாணாதீனையாயிரே ப்ரமேயஸித்தியிருப்பது. ஆகையால் ப்ரமாண ப்ரமேயாநுபபத்தியால் மாத்யமிகமதமநுபபன்னம் என்று விஸ்தரேண ஸூத்ரபாஷ்யாதிஹளில் ஶொல்லப்பட்டது.

ஜைனமதத்திலே பரமாணுக்கள் ஜகத்காரணம். ஜீவாஜீவாத்மகமான ஜகத்து நிரீஶ்வரமாய் ஷட்த்ரவ்யாத்மகமாயிருக்கும். அந்த த்ரவ்யங்கள் தான் ஜீவ, தர்ம, அதர்ம, புத்கலகாலாகாஶ ரூபேண ஷட்விதமாயிருக்கும். அவை சித் ஜீவர்கள் பத்த யோக முக்த பேதேன த்ரிவிதராயிருப்பர்ஹள். தர்மமாவது கதிமான்களுடைய கதிஹேதுபூதமான வ்யாபியான த்ரவ்யவிஶேஷம். அதர்மமாவது ஸ்தாவரஹேது பூதமான வ்யாபியான த்ரவ்யவிஶேஷணம். புத்கலமாவது வர்ணகந்தரஸஸ்பர்ஶவத்தான த்ரவ்யவிஶேஷணம். அதுதான் பரமாணுரூபமாயும் தத்தத்ஸங்காதரூபமான வாய்வக்நிஜலப்ருதிவீ ஶரீர புவநாதி ரூபமாயும் த்விவிதமாயிருக்கும். காலமாவது பூத வர்தமான பவிஷ்யத்வ்யவஹார ஹேதுவாயணுரூபமான த்ரவ்ய விஶேஷணம். ஆகாஶமாவது எகமாய் அனந்த ப்ரதேஶயுக்தமான த்ரவ்யவிஶேஷம். இவைத்தில் அணு வ்யதிகிக்தங்களான த்ரவ்யங்கள் பஞ்சாஸ்திகாயங்களென்ரு ஶொல்லப்படும். அவையாவன ஜீவாஸ்திகாயமும் தர்மாஸ்திகாயமும்- அதர்மாஸ்திகாயமும். புத்கலாஸ்திகாயமும், ஆகாஶாஸ்திகாயமும். அஸ்திகாயமாவது அநேகதேஶவர்தியான த்ரவ்யம். இன்னமும் ஜீவர்களுக்கு மோக்ஷோபயோகியான ஸங்க்ரஹாந்தரமுமுண்டு. அதாவது ஜீவனும் அஜீவமும் ஆஸ்ரவமும், பந்தமும் நிர்ஜரமும் ஸம்வரமும், மோக்ஷமுமென்ரு. இவைத்திலே மோக்ஷோபாயமும் அந்தர்கதம். அதாவது ஸம்யஜ்ஞாநதர்ஶன சாரித்ரரூபமாயிருக்கும். ஜீவன் ஜ்ஞாநதர்ஶன ஸுகவீர்ய குணகநாயிருப்பர். அஜீவமாவது ஜீவபோக்யவஸ்துஜாதம். ஆஸ்ரமாவது போகோபகரணமான  விந்த்ரியாதிகள். பந்தம் தான் காதிகர்மசதுஷ்டயமும் அகாதிகர்ம சதுஷ்டயமுமாஹ அஷ்டவிதமாயிருக்கும். அதில் காதிகர்மசதுஷ்டயம் ஜீவகுணங்களாய் ஸ்வபாவிககுணங்களான ஜ்ஞாநதர்ஶன ஸுகவீர்யங்களுக்கு ப்ரதிகாதமாயிருக்கும். அகாதிகர்ம சதுஷ்டயமாவது ஶரீரஸம்ஸ்தாநமும் ததபிமாநமும் தத் ஸ்திதியும் தத்ப்ரயுக்த ஸுகது:கோபேக்ஷைகளும் ஆகிரவிவைத்துக்கு ஹேதுபூதமாயிருக்கும். நிர்ஜரமாவது மோக்ஷஸாதனமாய் அர்ஹதுபதேஶாவகதமான தபஸ்ஸு. ஸம்வரமாவது ஸமாதிரூபமாநவிந்த்ரிய நிரோதம். மோக்ஷமாவது ராகாதிக்லேஶநிவ்ருத்திபூர்வகமாந ஸ்வாபாவிகாத்மஸ்வரூபாவிர்பாவம். இங்த மதத்திலே ப்ருதிவ்யாதி ஹேதுபூதம்களான அணுக்கள் கணாதமதத்தில் போலே சதுர்விதங்களன்ரிக்கே ஏகவிதங்களாயேயிருக்கும். ப்ருதிவ்யாதிகார்ய பேதம் பரிணாமக்ருதம். ஸர்வவஸ்துக்களும் ஸத்வாஸத்வநித்யத்வாநித்யத்வ பின்னத்வாபின்னத்வாதிகளாலே அநேகஸ்வபாவமாயிருக்கும். ஜீவஸ்வரூபம் தத்தச்சரீரஸமபரிமாணமாயிருக்கும். இது ஜைநமதம். இதுவும் அநுபபன்னம். ஒருவஸ்துவுக்கேக காலத்திலே விருத்ததர்மம் கூடாது. த்ரவ்யத்துக்கு ஸ்வரூபேண ஸத்த்வைகத்வநித்யத்வம்களும் அவஸ்தாரூபேணா ஸத்யத்வாநித்யத்வபிந்நத்வம்களும் கொள்ளில் ஸத்ரவ்யமும் அவஸ்தைகளும் அந்யோந்யபின்னங்களாகையாலே ஒருவஸ்துவிலே விருத்த தர்மஸமாவேஶ ஸித்தியில்லை. ஸத்ரவ்யத்துக்கும் ததவஸ்தைகளுக்கும் அபேதம்கொள்ளில் ஆகாரபேதம்கொண்டு விரோதம் பரிஹரிக்கக்கூடாது. அவைகளன்யோன்யபின்னாபின்னங்களென்ரில் பெதாபேதங்களுக்கு அவிரோதநிர்வாஹகமான ஆகாரான்தரமில்லாமையாலே அவ்விதம் நிர்வஹியாது. ஜீவாதி ஷட் த்ரவ்யங்கள் பரஸ்பர பின்னங்களாஹையாலே ஸர்வவஸ்துக்களும் பின்னாபின்னத்வாதி விருத்ததர்மயுக்தம்களென்ருமதுவும் வ்யாஹதம். காலம் ஸர்வவஸ்துவிஶேஷணமாஹ தோன்ருஹையாலே அணுவுக்கு ஸர்வவஸ்த்வதிகரணத்வம் கூடாமையாலேயதுக்கு அணுத்வம் கூடாது. வஸ்துக்கள் தோரும் விஶேஷணமானவணுபூதகாலம் பின்னபின்னமெனருகொள்ளில் எககாலத்திலே அநேகபதார்தங்கள் இருக்கிரிவென்கிர ப்ரதீதிக்கி விரோதம் ப்ரஸங்கிக்கும். ஜீவன் தேஹபரிமாணநென்ரில் கர்மாநுகுணமாஹ கஜஶரீரத்தைவிட்டு பிபீலிகாஶரீரத்திலே ப்ரவேஶிக்கும் போது ஜீவஸ்வரூபத்துக்கு அபூர்திப்ரஸங்கம் வரும். ஸங்கோசவிகாஸங்களைக்கொண்டு அபூர்திப்ரஸங்கத்தை பரிஹரிக்கில் அவத்தைக்கொண்டேயநித்யத்வாதிகளும் ப்ரஸங்கிக்கும். ஈஶ்வரஸஹகாரமில்லாமல் பரமாணுக்களுக்கு காரணத்வம் கூடாதென்ருமிடமும் ஸ்பஷ்டம். இத்யாதி தோஷங்கள் விஸ்தரேண சொல்லப்பட்டது.

ஶைவமதம் வேதவிருத்தமாகையாலும் அநுபபன்னமாகையாலும் அநாதரணீயமெநன்கிரது. எங்கநேயென்னில் காபாலரென்ரும் காலாமுகரென்ரும் பாஶுபதரென்ரும் ஶைவரென்ரும் ஶிவமதஸ்தர் நாலுவகைப்பட்டிருப்பார். இவர்களெல்லாரும் நிமித்தோபாதாநங்களுக்கு பேதத்தைக்கொண்டும் பஶுபதிக்கு நிமித்தகாரணத்வத்தையும் கொள்ளுகிரார்கள். அவர்களில் காபாலர் கண்டிகா ருசிகாதி முத்ராஷட்கமுள்ளவனாய் பரமுத்ராபிஜ்ஞனாய் பகாஸநஸ்தாத்மத்யாநம் பண்ணுகிரவன் முக்தநாவானென்பர்கள்.

காளாமுகர் காபாலபாத்ரபோஜனம் ஶவபஸ்மஸ்னானம் தத்ப்ராஶனம் லகுடதாரணம் ஸுராகும்ப ஸ்தாபனம். வேதவிருத்தமான மோக்ஷஸாதநத்தையும் கொள்ளுகிரார்கள். அதில் தேவபூஜனம் இத்யாதிகளை பலஸாதனமென்பார்கள். இப்படி ஆசாராதிகள் பலவும்ஶைவாகமாதிகளிலே கண்டுகொள்ளுவது.  இதுவுமநுபபன்னம்.

பராபரதத்த்வ வ்யத்யாஸமுமுபாஸன பேதமும், ஆசாரபேதமும் வேதவிருத்தமாஹையாலே அப்ரமாணம்கள். இவர்கள் அநுமானப்ரமாணத்தாலே நிமித்தேஶ்வரனைக்கொள்ளுகிரார்கள். அப்படியநுமாநத்தாலே நிமித்தேஶ்வரனைக்கொள்ளும் போது இஷ்டாநுஸாரேண குலாலன்ம்ருத்பிண்டத்தை யதிஷ்டிக்கிராப்போலே நிமித்தேஶ்வரன் ப்ரக்ருதியை யதிஷ்டிக்கிராநென்ரு கொள்ளவேணும். அதிஷ்டாநத்துக்கு ஶரீரம் வேண்டுகையாலே அஶரீரநுக்கதிஷ்டானம் கூடாது. அவநுக்கு ஶரீரத்தைக்கொள்ளில் அது ஸாவயவமாகில் அநித்யத்வம் ப்ரஸங்கிக்கும். அதநித்யமென்ரு கொள்ளில் அதுக்குத்பத்திகாரணமில்லாமையாலே ஶரீரம் ஸித்தியாது. ஈஶ்வரன் தானே ஶரீரஹேதுவென்ரில் அஶரீரனுக்கு ஹேதுத்வம் த்ருஷ்டமன்ரு. ஶரீராந்தரத்தைக்கொண்டு ஹேதுவென்நில் அநவஸ்தை ப்ரஸங்கிக்கும். அஶரீரனான ஜிவநுக்கு ஶரீராதிஷ்டாநம் போலே அஶரீரநாந ஈஶ்வரனுக்கும் ப்ரக்ருத்யதிஷ்டானம் கூடாமென்ரில் ஜீவனுக்கு ஶரீராதிஷ்டாநம் கர்மபலபோகார்தம். ஆஹையாலேயிப்படி ஈஶ்வரன் ஶரீரத்வேன ப்ரக்ருதியை அதிஷ்டித்தால் கர்மபலபோகம் ப்ரஸங்கிக்கும். ஶரீரவ்யதிரிக்தமாஹ அதிஷ்டிக்கில் ஶரீராந்தராபேக்ஷை ப்ரஸங்கிக்கும். ஶரீர நிரபேக்ஷமாஹ அதிஷ்டாநம் ஶரீரத்வப்ரயுக்தமாஹையாலே ஶரீராதிரிக்த அதிஷ்டாநத்திலே ஶரீரம்வேண்டும். ஶரீரத்வேன அதிஷ்டிக்கில் போகம் ப்ரஸங்கிக்கும். இத்யாதி தூஷணம் விஸ்தரேண ஶொல்லப்பட்டது. இப்படி ப்ரஹ்மகாரணவாதவிருத்தமான கபிலாதி பாஹ்யமதம்களாரும் ஸூத்ரவ்ருத்திபஷ்யாதிகளிலே விஸ்தரேண நிரஸ்தங்கள்.

இந்த ப்ரஹ்மஸூத்ரத்துக்கு பரமர்ஷி ப்ரணீதவ்ருத்திவிருத்தமாக மாயாவாதிகளும், பாஸ்கரீயர்களும் யாதவப்ரகாஶீயர்களும், மாத்வர்களும் வ்யாக்யானம் பண்ணினார்கள். அவை ஸூத்ரஸ்வாரஸ்யவிருத்தமென்ருமிடம் ஶ்ருதப்ரகாஶிகையிலும், பாரஶர்யவிஜயத்திலும் பஞ்சமத பஞ்ஜநத்திலும், ஶாரீரகபஸ்கராதிகளிலும் விஸ்தரேண ஶொல்லித்து. அவையுமிங்கே திங்மாத்ரம் ஶொல்லுகிரது. மாயாவாதிமதத்திலே ஸகலவிஶேஷஶூன்யமான சைதன்யமாத்ரம் த்ரிகாலம் பாத்யமான ஸத்யம். அந்த சைதந்யத்திலே மாயா அவித்யாதி ஶப்தவாச்யமான பாவரூபாஜ்ஞாநமாகிர தோஷத்தாலே ப்ராந்திபரிகல்பிதமாஹ ஜ்ஞாத்ருஜ்ஞேயாதி ப்ரபஞ்சம் தோத்துகிரது. இதுக்கு தத்த்வஜ்ஞாநத்தாலே நிவ்ருத்தி. ஶுக்திகையிலே ரஜதபுத்தியானது தேஶாந்தரஸ்த ஸத்யரஜத விஷயமன்ரு. கிந்து தோஷவஶத்தாலே உண்டான ரஜதத்தை கோசரிக்கிரது. நேதம் ரஜதமென்கிர புத்தியாலே இதுக்கு நிவ்ருத்தி. ஸத்யரஜதத்துக்கு சக்ஷுஸ்ஸந்நிகர்ஷமில்லாமையாலே. அந்யதாக்யாதி கூடமையாலே இப்படியநிர்வசநீயரஜதம் கொள்ளவேணும். இத்தை த்ருஷ்டாந்தமாஹக்கொண்டு நிர்விஶேஷசைதன்ய ஸ்வரூபப்ரஹ்மத்திலே தோஷகல்பிதமான ப்ரபஞ்சத்துக்கு ப்ரஹ்மஸ்வரூபாதிஷ்டான ஜ்ஞாநத்தாலே நிவ்ருத்தியைக்கொள்ளவேணும். அந்த நிவ்ருத்தியை மோக்ஷமென்பது. இதிலே ஜீவேஶ்வரவிபாக விஷயத்திலே அநேக பக்ஷங்களுண்டு. எம்கநேயென்னில் சின்மாத்ரஸம்பம்தியானமாயையிலே சித்ப்ரதிபிம்பமீஶ்வரன். இந்த மாயையிநுடைய பரிச்சின்னானந்த ப்ரதேஶம்களிலேயாவரணவிக்ஷேபங்களாலே சித்ப்ரதிபிம்பம் ஜீவனென்ரு சிலர். த்ரிகுணாத்மிகையாநமாயையாகிர மூலப்ரக்ருதிக்கு ஶுத்தஸத்த்வப்ரதாநமான மாயையென்னும். மலிநஸத்வையாநவவித்யையென்னும் ரூபத்வயமுண்டு. அதிலே மாயாப்ரதிபிம்பமீஶ்வரன். அவித்யாப்ரதிபிம்பம் ஜீவநென்ரு சிலர். மூலப்ரக்ருதியொன்ரே விக்ஷேபப்ராதான்யத்தாலே மாயையென்ருகிரது. ததவச்சிந்நமீஶ்வரன்- அந்தமூல ப்ரக்ருதியையாவரண ப்ராதாந்யத்தாலேயவித்யையென்ரும், அஜ்ஞாநமென்ரும் ஶொல்லப்படுகிரது. ததவச்சிந்நஜீவனென்ரு சிலர். விக்ஷேபமாவது அந்யப்ரதிபாஸம். ஆவரணமாவது பூர்வாகார திரோதாமென்பர். இன்னமும் அவித்யையிலே சித்ப்ரதிபிம்பமீஶ்வரன். அந்த:கரணத்திலே சித்ப்ரதிபிம்பம் ஜீவனென்ரு சிலர். இன்னமும் பக்ஷாந்தரமுண்டு. இதிலே ப்ரபஞ்சத்துக்கு மித்யாத்மவாவது ப்ரஹ்மஜ்ஞானபாத்யத்வம். இதிலே ப்ராதிபாஸிகஸத்தை, வ்யாவஹாரிக ஸத்தை, பாரமார்திக ஸத்தையென்ரு த்ரிவிதஸத்தையுண்டு. அவைத்திலே முதலது ஶுக்திரஜத ரஜ்ஜுஸர்பாதிகளிலே. த்விதீயை ப்ரபஞ்சத்திலே. த்ருதீயை ப்ரஹ்மஸ்வரூபத்திலேயென்பர். ப்ரஹ்மஸ்வரூபையான ஸத்தையொன்ரே என்று ஶொல்லுவார்கள். பாவரூபாஜ்ஞாநாவ்ருதமான கடாதிகள் தோத்ததுபோது இந்த்ரியஸன்நிகர்ஷத்தாலேயஜ்ஞாநத்திலே சித்ரம் பிறந்து கடாதிகள் தோத்துகிரதென்ரு சிலர். இந்த்ரியஸம்பந்தத்தாலே அஜ்ஞானம் பாய்போலே ஶுருட்டிக்கொள்ளுகையாலே கடாதிப்ரத்யக்ஷமென்ரு சிலர். இந்த்ரிய ஸம்பந்தத்தாலே அஜ்ஞாநமாவது பீருவதபஸர்பிக்கையாலே கடாதி ப்ரத்யக்ஷமென்ரு சிலர். எத்தனை ஜ்ஞாநவ்யக்திகளோ அத்தனை அஜ்ஞாநவ்யக்திகளாகையாலே இந்த்ரியஸன்நிகர்ஷத்தாலே தத்ததஜ்ஞான நாஶத்தாலே கடாதிஜ்ஞானமென்ரு சிலர். இன்னமும் பக்ஷாந்தரமுண்டு. இதிலே ப்ரபஞ்சநிவ்ருத்தித்யான ஜந்யாபூர்வத்தாலேயென்ரும் ப்ராசீனமாயாவாதி பக்ஷம். வாக்யஜந்ய ப்ரஹ்மபரோக்ஷஜ்ஞாநத்தாலே ப்ரபஞ்சநிவ்ருத்தியென்ரு ஶங்கராதிகள் பக்ஷம். இன்னமும் நாநாவித்யையென்ரும் எகாவித்யையென்ரும் நாநாஜீவர்களென்ரும் எகஜீவனென்ரும் பக்ஷபேதமுண்டு. இன்னமும் ஶுகவாமதேவாதிகளுக்கு தத்த்வஜ்ஞாநம் பிரந்தது. மோக்ஷம் மாத்ரம் பிரக்கவில்லையென்ரும். தத்த்வஜ்ஞாநமேயொருவருக்கும் பிரந்ததில்லையென்ரும் பக்ஷபேதமுண்டு. இப்படி அவதாரபக்ஷபேதங்கள் பலவுமிருந்தாலும் நிர்மிஶேஷசைதந்யமாத்ரம் ஸத்யம். மற்றை ப்ரபஞ்சமந்த சைதந்யத்திநுடைய அவித்யாபரிகல்பிதமாகையாலே மித்யை. சைதன்யஸ்வரூபமன ப்ரஹ்மமேயந்த:கரணா வச்சின்னமாதல் தத்ப்ரதிபிம்பிதமாதல் ஜீவநாகையாலே ஜீவப்ரஹ்மங்களுக்கு அத்வைதம். ஏவம் விதாத்வைதஜ்ஞாநத்தாலே அவித்யாநிவ்ருத்தியே மோக்ஷமென்னுமிடம் ஸர்வமாயாவாதிகளுக்கும் ஸித்தாந்தம். இதிலே ஜீவேஶ்வரவிபாகாதி விஷயமாநவவாந்தர பக்ஷங்கள் அவர்களாலே அந்யோந்யமேவ நிரஸ்தங்கள். இனி அஜ்ஞாநத்தினாலே ப்ரபஞ்சம் கல்பிதமெந்கிரவிதுவுமநுபபன்னம். ஜ்ஞாநரூபமான ப்ரஹ்மத்தை தந்நிவர்த்யமானவஜ்ஞாநமாவரிக்கமாட்டாது. ஆவரிக்கிலதுக்கு நிவர்தகமில்லை. தைஜஸ்ஸைத்திமிரமாவரிக்கமாட்டாது. ஆவரிக்கல் அதுக்கு தேஜஸ்ஸுநிவர்தகமாகமாட்டாமையாலே வேருநிவர்தகமில்லையே. ஶுக்தித்வம் தோத்தாதே ஶுக்திஸ்வரூபமாத்ரம் தோத்தியதிலே ரஜதப்ரமம் பிறக்கும். பின்பு ஶுக்தித்வம் தோத்திலதுநிவ்ருத்தமாகிறது. அப்படிப்ரஹ்மஸ்வரூபம் ஸதர்மகமல்லாமையாலே ஸ்வரூபமாத்ரம் தோத்ரில் ப்ரபஞ்சப்ரமம் ப்ரதிபத்தமாம். அதுதோத்தாவிடில் ப்ரமஹேதுவில்லையாகையால் ப்ரபஞ்சப்ரமமநுபபன்னம். காசாதிதோஷம் ஸத்யமாகையாலே ப்ரமஹேதுத்வம் கூடும். அவித்யாக்யதோஷம் மித்யையாகையாலே ப்ரமஹேதுத்வம் கூடாது. அதுக்கூடுமென்னில் ப்ரஹ்மஸ்வரூப மாநவதிஷ்டானம் மித்யையென்னும் கொண்டாடும் ப்ரபஞ்சப்ரமம் கூடலாம். அவித்யாநிவ்ருத்தி ப்ரஹ்மஸ்வரூபாதி ரிக்தையோ ததநதிரிக்தையோ? அதிரிக்தையாம் போது யதுஸத்யமென்னில் அத்வைதஹாநிப்ரஸங்கிக்கும். மித்யையென்னில் மோக்ஷம் மித்யையாம். அது ப்ரஹ்மஸ்வரூபாநதிரிக்தையென்ரும் போது ப்ரஹ்மஸ்வரூபம் நித்யமாகையாலே தத்வஜ்ஞானஸாத்யத்வம் பக்னமாம். இந்த தத்த்வஜ்ஞாநந்தான் உபதேஶாஸம்பவத்தாலே துர்கடம். கீதாசார்ய ப்ரப்ருதிகளுக்கு தத்த்வஜ்ஞானம் பிறந்ததாகில் ஸ்வவ்யதிரிக்தரொருவரில்லாமையாலே யவர்களைக்குரித்து உபதேஶம் கூடாது. தத்த்வஜ்ஞானமில்லையாகில் அஜ்ஞராகையாலே உபதேஶிக்கமாட்டார்கள். ஒருவருக்கும் தத்த்வஜ்ஞானம் பிரந்ததில்லையென்கிர பக்ஷத்திலே இதாநீம்தனருக்கு ஶ்ரவணாதி ப்ரவ்ருத்திகூடாது. ஜ்ஞானம் பிரந்ததாகிலும் மோக்ஷம் பிரந்ததில்லையென்னில் ஶுகாதிகள் முக்தரானார்களென்கிர ப்ரஸித்தி கூடாது. வாக்யநந்யஜ்ஞானம் மோக்ஷஸாதநமாகில் த்யாநாதிவிதிகள் வ்யர்தமாம். அபரோக்ஷப்ரமத்துக்கு பரோக்ஷமான வாக்யஜந்யஜ்ஞாநம் நிவர்தகமாஹமாட்டாது. ஶாப்தஜ்ஞானத்துக்கு அபரோக்ஷத்வம் கோவுக்கஶ்வத்வம்போலே அஸம்பாவிதம். த்யாநாதி விதிகள் அத்வைதஸாக்ஷாத்காரார்தமென்கையும் த்யாநாதிகள்  பேதவாஸநாதாயகமாநமையாலே அநுசிதம். ப்ரத்யக்ஷாதி ஸகலப்ரமாணம்களிலும் விஶிஷ்டவஸ்துவே விஷயமாகையாலே நிர்விஶேஷ வஸ்துவின் ப்ரமாணமில்லை. சைதந்யஸ்வரூபமாத்ரத்திலே யோகாசாரனுக்கும் மாயாவாதிகளுக்கும் விவாதமில்லை. இநி சைதந்யம் க்ஷணிகமெந்கிர யோகாசாரனைக்குரித்து சைதந்யம் நித்யமென்ரு மாயாவாதிகள் ஸாதிக்கும் போது ஸாத்யமான நித்யத்வம் ஸ்வரூபாத்மகமோ? பிந்நமோ? அதில் ஸ்வரூபாத்மகமென்னில் ஸ்வரூபத்திலே விவாதமில்லாமையாலே ஸாதனம் வ்யர்தம். ஸ்வரூபாதிரிக்தமாகில் ஸவிஶேஷத்வம் ப்ரஸங்கிக்கும். நித்யத்வஸாதகமான ஹேதுவானது சைதந்யஸ்வரூபமான  பக்ஷத்திலேயிருந்ததாகில் ஸ்வரூபஸித்திதோஷம் ப்ரஸங்கிக்கும். ஹேதுவிருந்ததாகில் ஸவிஶேஷத்வம் ப்ரஸங்கிக்கும். அயம்கட: என்கிரப்ரதீதிமுதலான ப்ரத்யக்ஷங்கள் இதமித்தமென்ரு கோசரிக்கையாலே நிர்விஶேஷ வஸ்துவில் ப்ரத்யக்ஷம் ப்ரமாணமாகாது. ப்ரக்ருதிப்ரத்யயரூபத்தாலும் பதவாக்யரூபத்தாலும் விஶிஷ்டபோதகமான ஶப்தப்ரமாணமும் நிர்விஶேஷவஸ்துவில் ப்ரமாணமாகமாட்டாது. ஆகையாலே ஸம்ஸாரபந்தம் மித்யை. அதுக்கும் நிர்விஶேஷ ப்ரஹ்மஜ்ஞாநம் நிவர்தகமென்கை கூடாமையாலே யுபாஸநனன்ய பகவத்ப்ரஸாதமே ஸத்யமாநகர்மாதி ரூபமான ஸம்ஸாரத்துக்கு நிவர்தகமெநன்ருகொள்ளவேணும். இந்த மாயாவாதி தஶமததூஷணம் பாஷ்யாதிகளிலே இன்னும் பஹுவிதமாஹ ப்ரபஞ்சிக்கப்பட்டது.

பாஸ்கரமதத்திலே ப்ரஹ்மஸ்வரூபமுமுபாதி ஸ்வரூபமும் ஸத்யம். ஜீவப்ரஹ்மங்களுக்கு பேதம் ஸத்யோபாதிப்ரயுக்தம். அபேதம் ஸ்வாபாவிகமாயிருக்கும். அசித்ப்ரஹ்மங்களுக்கு பேதாபேதங்கள் ஸ்வாபாவிகங்களாயிருக்கும். ஜீவர்களுக்கன்யோன்ய பேதமௌபாதிகமாயிருக்கும். கடாகாராகதமானவல்பத்வாதி தோஷமுமபிமத விநியோகார்ஹத்வரூப குணமும் மஹாகாஶத்திலே ப்ரஸங்கியாதாப்போலேயும் கடாகாஶ கரகாகாஶாதிகளுக்கு பரஸ்பர பேதமும் கார்ய பேதமுமும்டாகிராப்போலவும் உபாத்யவச்சின்ன ஜீவகதகுணதோஷங்கள் ப்ரஹ்மத்திலே ப்ரஸங்கியாதே

வ்யவஸ்திதம்களாயிருக்கும். உபாதிபேதக்ருதமாந பரஸ்பர பேதம்களையுடைத்தான ஜீவர்களுடைய குண தோஷங்களும் வ்யவஸ்திதங்களாயிருக்கும். இப்படி பேதமௌபாதிகமாகையாலே பேதஶ்ருதிகள் தத்பரங்கள். அபேதம் ஸ்வாபாவிகமாகையாலே அபேதஶ்ருதிகள் முக்யங்கள். அசித்ப்ரஹ்மம்களுக்கு பேதாபேதங்கள் ஸ்வாபாவிகங்களாகையாலே ஸர்வத்துக்கு ப்ரஹ்மாத்மகத்வஶ்ருதியும் ப்ரஹ்மத்துக்குநிர்மலத்வ ஶ்ருதியுமுபபன்னை. ப்ரபஞ்சஸத்யத்வம் கொள்ளுகையாலே ஸ்வபக்ஷஸாதகப்ரமாண ஸித்தியுமுண்டு. உபாதியாவது புத்தீந்த்ரிய தேஹாதி ரூபமாயிருக்கும். அதினுடைய ஸத்யத்வமாவது பாரமார்திகத்வம். உபாதியுக்த ப்ரஹ்மாம்ஶ ஜீவன். உபாதியும் தத்ஸம்யோகமும் கர்மக்ருதம். கர்மமுமுபாதிஸம்பந்த ஜீவக்ருதம். இது தான் “பீஜாம்குர” ந்யாயத்தாலே அநாதியாயிருக்கும். ப்ரஹ்மதுக்கௌபாதிக ஜீவபாவாநுபவமே ஸம்ஸாரம். உபாதி நிவ்ருத்திபூர்வகமான பேதப்ரம நிவ்ருத்தியே மோக்ஷம். பேதப்ரமநிவ்ருத்தியும் வர்ணாஶ்ரம தர்மஸஹிதமாய் ப்ரஹ்மாத்மைகத்வ விஷயமாய் அவிச்சின்ன ஸ்ம்ருதிஸந்தாநரூபமான ஆஸநத்தாலே ஸித்திக்கிரது. ஸத்யமான பந்தத்துக்கு மித்யாபூதத்துக்குப்போலே ஜ்ஞாநமாத்ர நிவர்த்யத்வம் கூடாமையாலேயுபாஸன ஜ்ஞாநம் வேண்டுகிறது. இது பாஸ்கரமதம். இதுவுமநுபபன்னம். உரகக்ஷதாம்குளிபோலே நிரவயவமான ப்ரஹ்மஸ்வரூபம் பேதகர்ஹமல்லாமையாலே ஜீவகத குணதோஷங்கள் ப்ரஹ்மஸ்வரூபத்திலேயவஶ்யம் ப்ரஸங்கிக்கும். ஆகையாலே நிர்தோஷ ஶ்ருதிவிரோதம் வரும். கடாகாஶாதி த்ருஷ்டாந்தத்தாலே வ்யவஸ்தையும் ஶொல்லவொண்ணாது. கடஸம்யுக்தாகாஶப்ரதேஶம் நியதமல்லாமையாலே கடாதிகதமான தஶையிலாகாஶத்துக்கு அநியதகடஸம்பந்தம் வருகிராப்போலே ப்ரஹ்மஸ்வரூபத்துக்கும் அநியதோபாதி ஸம்பந்தமும் க்ஷணே க்ஷணே பந்தமோக்ஷங்களும் ப்ரஸங்கிக்கும்.  அசித்ப்ரம்ஹங்களுக்கு பேதம்போலே அபேதமும் ஸ்வாபாவிகமாகையாலே அசித்கதபரிணாமாதி தோஷம் ப்ரஹ்மத்துக்கு ப்ரஸங்கிக்கும். ப்ரஹ்மம் ஸ்வரூபேணவசித்தாக ப்பரிணமிக்கிரதில்லை. ப்ரஹ்மஶக்தியே அப்படி பரிணமிக்கிரதென்கையும் கூடாது. அந்த ஶக்தி ப்ரஹ்மத்தினுடைய பரிணாமமோ ப்ரஹ்மாத்மகமோ? முதல் ஶிரஸ்ஸிலே ப்ரஹ்மத்துக்கு பரிணமித்வம் ப்ரஸங்கிக்கும். த்விதீய ஶிரஸ்ஸிலும் ப்ரஹ்மாத்மகஶக்தியினுடைய பரிணாமம் ப்ரஹ்மபரிணாமமாகையாலே பரிணமித்வம் ப்ரஸங்கிக்கும். ஆகையாலே அசித்ப்ரஹ்மம்களுக்கு ஸ்வாபாவிகபேதாபேதங்களென்ரு சித்ப்ரஹம்களுக்கு பேதமௌபாதிகம். அபேதம் ஸ்வாபாவிகமென்ரும் கொள்ளுகிர பாஸ்கரமதமநுபபன்னம் என்ருமிடம் பாஷ்யாதிகளில் விஸ்தீர்ணம்.

யாதவப்ரகாஶமதத்திலே ஜீவப்ரஹ்மம்களுக்கும் அசித்ப்ரஹம்களுக்கும் பேதாபேதம்கள் ஸ்வபாவிகம்கள். ஸந்மாத்ரப்ரஹ்மம் சிதசித்ரூபேண பரிணமிக்கிரது. ஆகையாலே கார்யகாரணாநந்ய த்வமும் ஜீவப்ரஹ்மபேதமும் உபபன்னம். இதிலே ஶங்கர பக்ஷத்தில் போலே மித்யோபாதி ப்ரயுக்த பேதமும் பாஸ்கரபக்ஷத்தில் போலே ஸத்யோபாதி ப்ரயுக்த பேதமும் இல்லை. கிந்து பேதாபேதம்கள் ஸ்வாபாவிகங்கள். ஸ்வாபிந்நம்களான சிதசிதாதிகளிலே ஸ்வபின்னத்வ புத்திஸம்ஸாரம். ஜ்ஞாநகர்ம ஸமுச்சயத்தாலே பந்த நிவ்ருத்தி பூர்வகமான பேத ஜ்ஞாந நிவ்ருத்தியே மோக்ஷம். இது யாதவப்ரகாஶ பக்ஷம். இதுவுமநுபபன்னம். எங்கனேயென்னில் ஜீவப்ரஹ்மங்களுக்கு பேதம் ஸ்வாபாவிகமாகையாலே ஜீவகதாபுருஷார்தம் ப்ரஹ்மத்திலே ப்ரஸங்கியாதே.

பேதம்போலே அபேதமும் ஸ்வாபாவிகமாகையாலே அபுருஷார்தான்வயமவஶ்யம் ப்ரஸங்கிக்கும். இப்படியே அசித்கததோஷமும் ப்ரஸங்கிக்கும். ஒரு ம்ருத்பிண்டத்திலுன்டான கடஶராவாதிகளிலும்டான உதகாஹரணாதி கார்யங்கள் அம்த ம்ருத்பிண்டகதமாகிராப்போலே ஸன்மாத்ர ப்ரஹ்மபரிணாம பூதரான ஸர்வ ஜீவர்களுடைய ஸுக து:காதிகளும் ப்ரஹ்மத்திநிடத்திலே ப்ரஸங்கிக்கும். கடஶராவாத்யநுபயுக்த ம்ருத்த்ரவ்யமுதகாஹரணாதி கார்யானன்விதமாகிராப்போலே ஜீவபாவாநுபயுக்தமான ப்ரஹ்மாம்ஶம் கல்யாணகுணாகரமாயிருக்கிரதென்னவும் வொண்ணாது. ஒன்ருக்கே எகாம்ஶத்தாலே து:கத்வமும் அம்ஶாந்தரத்தாலே ஸுகித்வமும் ஈஶ்வரத்வ ஹேதுவாகாது. ஒருவனுக்கொருகையிலே ஶந்தநக்குளும்பும் மத்தைக்கையிலேக்காட்டுத்தேயுமானால் து:காந்வயம் தவிராதே. அப்படியே ப்ரஹ்மத்துக்கம்ஶபேதேன ஸுக து:கங்கள் வ்யவஸ்திதங்களாயிரும்தாலும் அம்ஶிக்கு ஹேயஸம்பந்தம் தவிராது. ஆகையாலே ஜீவப்ரஹ்மங்களுக்கு ஸ்வாபாவிக பேதமும் ஶரீராத்மபாவேன தாதாத்ம்யமும் ஶரீரவாசி ஶப்தங்கள் ஶரீரபர்யந்தங்களாகையாலே ஸமாநாதிகரண நிர்தேஶத்திநுடைய முக்யத்வமும் கொள்ளுகையுக்தம். இன்னமும் ஒன்ருக்கொன்ரினுடைய பேதாபெதங்கள் விருத்தம்களாகையாலே அஸம்பாவிதங்கள். ஜாத்யாத்மனா அபேதமும் வ்யக்த்யாத்மனா பேதமும் கொள்ளில் ஜாதிவ்யக்திகள் அபின்னங்களானால் ஜாத்யபின்னகண்டவ்யக்திக்கு ஜாத்யபின்னமுமும் வ்யக்த்யபேதம் ப்ரஸங்கிக்கும். ஜாதிவ்யக்திகள் மிதோபின்னங்களானால் அபேதம் ஜாதிகதம். பேதவ்யக்திகதமாகையாலே ஒருவஸ்துவுக்கே பேதாபேதங்கள் ஸித்தியாது. இங்கே ஜாதிஶப்தம் வ்யக்திபரம் வ்யக்திஶப்தம் அவஸ்தாபரம் ஆகையாலே பேதாபேதவாதம் அநுபபன்னம். இது பாஸ்கரபக்ஷத்திலுமொக்கும். இன்னமும் ஸந்மாத்ரப்ரஹ்மம் சிதசிதீஶ்வரரூபமாக பரிணமிக்கிரதென்கிர யாதவபக்ஷத்திலே ப்ரளயத்திலே சிதசிதீஶ்வரர்கள் காரணரூபமான ஸன்மாத்ர ப்ரஹ்மத்திலே லயிக்கையாலே புநரபி ஸ்ருஷ்டிதஶையிலே பூர்வகல்பஸ்ய சிதசிதீஶ்வர பேதாவஸ்தானமில்லாமையாலே க்ருதஹாநாக்ருதாப்யாகமங்கள் ப்ரஸங்கிக்கும். கடக மகுடாதிகள் அளிந்து ஸுவர்ணபிண்டமாய் புந: கடகமகுடாதிகளாகும்போது பூர்வம் கடகமானவம்ஶம் இப்போதும் கடகமாய் பூர்வம் மகுடமானவம்ஶம் இப்போதும் மகுடமாய் பரிணமிக்குமென்கை கூடாதே. அப்படியே சிதசிதீஶ்வர ரூபேண புந: பரிணமிக்கும் போது பரிணாமத்துக்கு அம்ஶபேதநியமம் கூடாமையாலே க்ருதகர்மத்துக்கு பலாபாவமும் கர்மமின்ரிக்கேயும் பலமும் ப்ரஸங்கிக்கும். இத்யாதிதூஷணம் விஸ்தரேண பாஷ்யாதிகளிலே ஶொல்லப்பட்டது.

மாத்வமதத்திலே ப்ரஹ்மஸ்வரூபம் நிமித்தகாரணமாத்ரம் ப்ரக்ருதியுபாதான்காரணம். குணகுணிகளுக்கு அபேதமுண்டு. சேதநாசேதநங்களுக்கு ப்ரஹ்மஶரீரத்வமில்லை ஜீவஸ்வரூபங்களுக்கு மிதஸ்தாரதம்யங்களுண்டு. உபக்ரமோபஸம்ஹாரம்களிலே உபஸம்ஹாரத்துக்கு ப்ராபல்யமும் கொண்டார்கள். இதுவுமநுபபன்னம். ஶ்ருதிஸ்ம்ருதேதிஹாஸ புராணங்களிலே ப்ரஹ்மத்துக்கு ஜகதுபாதான காரணத்வம் ஶொல்லுகையாலே ததபலாபம் கூடாது. சேதநாசேதநங்களுக்கு ப்ரஹ்மஶரீரத்வம் ஶ்ருத்யாதி ஸித்தமாகையாலே தத்த்யாகமநுசிதம். குண்யதிரிக்த குணத்தை நிராகரித்தும் நிர்குணவாதநிராகரணம் துஷ்கரம். பேதப்ரதிநிதியான விஶேஷாங்கீகாரமும் அநுபபன்னம். குணகுணிபாவத்துக்கு பேதமுபபாதகமாஹில் பேதமில்லையாகில் தர்மதர்மிபாவம் கூடாது. பேதமில்லாவிடிலும் தர்மதர்மிபாவஸித்த்யர்தம் விஶேஷமென்ரில் அது க்ல்ருப்தமோ கல்ப்யமோ? அது க்ல்ருப்தமென்னவொண்ணாது. அஸித்தமாகையாலே. இனி கல்ப்யமென்னில் ப்ரயோஜனிகரபேக்ஷத்வ கல்பனமேயாஹும். ஆகையாலே விஶேஷகல்பநமநுபபன்னம். இத்யாதி தோஷங்கள் பாராஶர்யவிஜயாதிகளிலே விஸ்தரேண ஶொல்லப்பட்டது. நீலகண்டபாஷ்ய ப்ரக்ரியையும் ஸூத்ரஸ்வாரஸ்ய விருத்தையென்ரு பாராஶர்ய விஜயாதிகளிலே ஶொல்லப்பட்டது. இத்தோஷங்களொன்ருமின்ரிக்கே ஶ்ருதிஸ்ம்ருதி இதிஹாஸபுராண ஸ்வாரஸ்யாநுகுணமாய் ஸூத்ரகாரஹ்ருதயாநுகுணமாய் ததபிப்ராயவேதிகளாம் ததவ்யவஹித ஶிஷ்யரான பகவத்போதாயன ப்ரணீத வ்ருத்யாநுஸாரியான பகவத்பாஷ்யகார ஸித்தாந்தத்திலே சிதசித்விஶிஷ்ட ப்ரஹ்மமொன்ரே தத்த்வம். சேதநாசேதநங்களுக்கு விஶேஷணத்வம் ஶரீரத்வ ப்ரயுக்தமாயிருக்கும். ப்ரஹ்மத்துக்கு விஶேஷ்யத்வம் ஶரீரித்வப்ரயுக்தமாயிருக்கும். போகாயதனம் ச இஷ்டாஶ்ரயம் கரபாதாதியுக்தமித்யாதி ப்ரவ்ருத்தி நிமித்தங்கள். அவ்யாபியாகையாலே ஶ்ருதிஸ்ம்ருத்யாதி ஸர்வப்ரயோகாநுமதமாய் ஶ்ருத்யாதி ஸித்தமான அந்த:ப்ரவிஷ்டபுருஷநியாம்யத்வமே ஶரீரபதப்ரவ்ருத்தி நிமித்தமாகையாலே சேதநாசேதநங்களுக்கு பகவச்சரீரத்வமுபபன்னம். ஶரீரஶரீரிகளுக்கு மிதோபேதமும் ஶரீரங்களுக்கு பரஸ்பரபேதமும் அசேதநங்களுக்கு பரஸ்பர பேதமும் சேதநங்களுக்கு பரஸ்பரபேதமும் கொள்ளுகையாலே பேதஶ்ருதிஸ்வாரஸ்யமும் குணதோஷவ்யவஸ்தையும் ஸித்தம். ஶரீர ஶரீரிபாவம் கொள்ளுகையாலே ஶரீரஶ்ருதிகளாகிர கடகஶ்ருதிஸ்வாரஸ்யமும் ஸித்தம். ஶரீரவாசிஶப்தம் ஶரீரிபர்யந்தமாகையாலே ஶரீரபூத சேதநாசேதந வாசிஶப்தம்கள் ஶரீரபூத சேதனாசேதன த்வாரா ஶரீரியான பகவத்பர்யம்தத்திலே ஶக்தங்களாகையாலே சேதனாசேதனவாசி ஶப்தங்களுக்கு ப்ரஹ்மவாசக ஶப்தங்களோடே ஸமான விபக்தியும்  தத்த்வரூபமான ஸாமானாதிகரண்யம் சேதனாசேதன விஶிஷ்ட ஸ்வரூபத்துக்கும் ஸார்வஜ்ஞ்யாதிவிஶிஷ்ட ஸ்வரூபத்துக்கும் தாதாத்ம்ய்யபோதகமாகையாலே அபேதஶ்த்ருதி ஸ்வாரஸ்யமும் ஸித்தம்.

வாதிகளைக்கொண்டு உபபாதிக்கப்படுகிர விஶிஷ்டதாதாத்ம்யம் விஶிஷ்டாத்வைதமென்னப்படும். இப்படி முக்யமாகவந்ரிக்கை ’ராஜராஷ்ட்ர’மெ ன்னுமாப்போலே ஸாமாநாதிகரண்யத்தை அமுக்யமாகக்கொள்ளுகை த்வைதமென்னப்படும். இந்த த்வைதபக்ஷத்திலே ஶரீரஶ்ருதிகளுக்கும் தாதாத்ம்யஶ்ருதிகளுக்கும் ஸ்வாரஸ்யாபாவம் ஸித்தம். விஶிஷ்டவாசகம்களான ஜீவபரவிஷயஶப்தங்களுக்கு விஶேஷணங்களைவிட்டு விஶேஷ்யஸ்வரூபத்திலே லக்ஷணைக்கொண்டு ஶுத்தஸ்வரூபைக்யம் கொள்ளுகை அத்வைதமென்னப்படும். இந்த பக்ஷத்திலே பதவாக்யங்களுக்குமத்யந்த மஸ்வாரஸ்யம் ஸித்தம். ஸகுணஶ்ருதிகளுக்குமப்ராமாண்ய ஸித்தம். விஶிஷ்டாத்வைதத்திலே ப்ரஹ்மம் சிதசிச்சரீரத்வேன உபாதானமாயும். ஸங்கல்பாஶ்ரயத்வேன நிமித்தமாயும் காலாதி விஶிஷ்டமாய்க்கொண்டு ஸஹகாரியாயுமிப்படி த்ரிவிதகாரணமாயிருக்கும். அப்ருதக்ஸித்தஸம்பந்தத்தாலே அவஸ்தாஶ்ரய மாயிருப்பது உபாதாநமாகையால் கடத்துக்கு ம்ருத்பிண்டமுபாதாநமாய் பூதலமனுபாதானமாயிருக்கும். ஸர்வப்ரயோகாநுமதமாக உபாதான ஶப்தார்தம் கொள்ளவேண்டுகையாலே அப்ருதக் ஸம்பந்தம் விவக்ஷிதம். நிமித்தகாரணத்துக்குமுபாதான காரணத்துக்கும் பேதம் ம்ருத்பிண்டத்துக்கும் குலாலனுக்கும் ஶரீரஶரீரிபாவமில்லாமையால் வந்தது. கிஞ்ச அவைத்துக்கு பேதநியமமில்லை. காலத்துக்கு ஸ்வஸம்யோகத்திலே காலத்வேன நிமித்தத்வமும் த்ரவ்யத்வேன ஸமவாயிகாரணத்வமும் வைஶேஷிகர் கொள்ளுகையாலே ப்ரஹ்மத்தினுடையவபிந்னநிமித்தோதான காரணத்வத்துக்கு ஶேலம்திப்பூச்சியை ஶ்ருதிதாநே த்ருஷ்டாந்தமாகச்சொல்லுகையாலே ஸ்வஶரீரபரிணமயித்ருத்வ ரூபையான அபின்னநிமித்தொபாதானத்தை ஶ்ருத்யபிமதையாயிருக்கும். ம்ருத்பிண்டம் ஸ்வயம் ஶரீரியல்லாமையாலே உபாதான மாத்ரமாயிருக்கும் குலாலன் ம்ருத்பிண்ட ஶரீரகநல்லாமையாலே நிமித்தமாத்ரமாயிருக்கும். ஶலந்திப்பூச்சியாநது பரிணாமி ஶரீரகமாய் பரிணாமயிதாவுமாகையாலே அபிந்நநிமித்தோபாதாநமாயிருக்கும். அது த்ருஷ்டாந்தமாகையாலே ப்ரஹ்மஸ்வஶரீர பரிணமயிதாவாகிர அபின்ன நிமித்தோபாதானமாயிருக்கும். ஸகுணத்வாதிகள் கொள்ளுகையாலே ஸகுணஶ்ருத்யாதிகளுக்கு ஸ்வாரஸ்யமுண்டு. குணாதி நிஷேதஶ்ருதிகள் ஹேயகுணாத்யபாவ பரங்கள். ஐக்யவிதிகள் விஶிஷ்டைக்யபரங்கள். பேதநிஷேதம் விஹிதைக்யவிரோதிஸ்வதந்த்ர பேதநிஷேதபரம். வாச்யத்வாதி நிஷேத ஶ்ருதிபரிச்சேதாபாவபரம். உத்பத்திநிஷேதம் கர்மக்ருதோத்பத்தி அபாவபரம். உத்பத்தி ஶ்ருதிகள் ஸ்வேச்சாபூர்வகாவதாரபரங்கள். ஜீவர்களுக்கு பரஸ்பரைக்யவசனம் ஜ்ஞாநைகாரதயா ப்ரகாரைக்யபரம். ப்ரஹ்மத்துக்கு அத்விதீயத்வவசனம் சிதசிச்சரீரகத்வேன ஸ்வஸஜாதீய த்விதீயரஹிதத்வ பரம். இப்படி ஶரீர- ஶரீரிகளுக்கு பேதம்கொள்ளுகையாலே பந்தமோக்ஷவ்யவஸ்தையும் உபதேஶாதிகளும் தத்வஜ்ஞானவ்யவஸ்தையும் உபபன்னம். சேதநநுடைய வாத்யப்ரவ்ருத்தியில் ஈஶ்வரன் ஸ்வஸ்வாதந்த்ர்யமடியாக சேதநபூர்வகர்ம ஸாபேக்ஷனாகையாலே விதிநிஷேத ஶாஸ்த்ர வைய்யர்த்யப்ரஸங்கமில்லை. ஈஶ்வரன் நித்யநிரவதிக கல்யாணகுணங்களுடையவனாகையாலும். சேதநருடைய யோகோபாஸநாதி ஜந்ய ப்ரஸாதவிஶேஷம்களும் ப்ராமாணிகம்களாகையாலே நிர்விகாரஶ்ருதிகள் ஹேயவிகாராபாவ பரங்கள். ப்ரபஞ்சரூபேண பஹுதா ஸித்தமாகையாலே விகாராபுருஷார்தநிஷேதங்கள் ஸாக்ஷாத்ஸம்பந்தேன விகாராத்யபாவபரங்கள். புண்யபாபஜந்யமான பகவத்ப்ரீத்யப்ரீதிகளே ஸ்வர்கநரகாதி ஹேதுக்களாகையாலே யபூர்வகல்பனமனபேக்ஷிதம். கல்பபேதங்களிலே இந்த்ராதி வ்யக்திகள் நஷ்டம்களாநாலுமிம்த்ராதி ஶரீரியான பரமாத்மா ஸ்தாயியாயிருக்கையாலே க்ருதகர்மத்துக்கு பலஹாநியில்லை. இந்த்ராதி ரூபதேவதாப்ரஸாதமவாந்தர ஹேதுவாகையாலே தத்வைய்யர்த்யமில்லை. பரமாத்மாவே மநுஷ்யாதிகளுக்கு இந்த்ராதி த்வாரேணவும் இந்த்ராதிகளுக்கு அத்வாரேணவுமாராத்ய நாகையாலே இந்த்ராதிகளுக்கு யஷ்ட்ருத்வயஷ்டித்வவிரோதமில்லை. பரப்ரஹ்மத்துக்கு சேதநநுடைய வாத்யதுஷ்கர்ம ப்ரவ்ருத்தியிலே அநிவர்தநமும் அனுமதியும் ஸ்வாதந்த்ர்யப்ரயுக்தமாகையாலே தோஷமன்ரு. ஸ்வாதந்த்ர்யம் தோஷமென்பதும் ப்ரஹ்மம் ஸித்தித்தேயோ ஸித்தியாதேயோ? ப்ரஹ்மம் ஸித்தித்து ஸ்வாதந்த்ர்யம் தோஷமென்னில் அது ப்ரஹ்மஸாதக ப்ரமாணஸித்தமாகையாலே தோஷமாஹாது. ப்ரஹ்மம் ஸித்தியாவிடில்முதலிலே யாஶ்ரயமில்லாமையாலே ஸ்வாதந்த்ர்யம் தோஷமாகாது. ப்ராதிகூல்யநிவ்ருத்த சேதநவிஷயத்திலே தயாதி குணங்கள் கார்யகரம்களாகையாலேயவைத்துக்கு வைய்யர்த்யமில்லை. அநாதி கர்மப்ரவாஹ ஹேதுகமான ப்ரக்ருதி ஸம்பந்தமாகிர ஸம்ஸாரபந்தம் ஸத்யமாகையாலே பகவதுபாஸநாதி ஜந்ய பகவத்ப்ரஸாதத்தாலே தந்நிவ்ருத்தியுபபன்னை. சேதநபேதம் கொள்ளுகையாலே வ்யக்திபெதேன பந்தமோக்ஷங்கள் உபபநன்னங்கள். இப்படி ப்ரமேயஸ்வாரஸ்யமுண்டு. ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்கள் ஸவிஶேஷவிஷயம்களென்ரு கொள்ளுகிர ராஹுமீமாம்ஸகரான ஶங்கரநைப்போலவும் வேதஶிரஸ்ஸான உத்தரபாகம் ஜீவாதிரிக்த ப்ரஹ்மபரமன்ரு. கர்ம கர்தாக்களான ஜீவர்கள் மாத்ரத்தை ப்ரதிபாதிக்கையாலே வேதாந்தபாகம் நிஸ்ஸாரமென்ருக்கொள்ளுகிர கபந்தமீமாம்ஸகரான பாட்ட-ப்ரபாகரர்களைப்போலவும் அன்ரிகே வேதஶரீரத்திலே பூர்வபாகமாராதநபூத கர்மஸ்வரூப ப்ரதிபாதகம். உத்தர பாகமாராத்யபூத பரப்ரஹ்ம ப்ரதிபாதகமென்ருக்கொள்ளுகையாலே ஸமக்ரவேதஶரீர ஸ்வாரஸ்யமும் கர்மமீமாம்ஸை கர்மஸ்வரூப விசாரபரையன்ரும் தேவதாமீமாம்ஸை கர்மாராத்யாவாந்தர தேவதாஸ்வரூபாதி விசாரபரையென்ரும் ப்ரஹ்மமீமாம்ஸை அந்த தேவதாகாஷ்டாபூதமாந ஹரி ஶப்தவாச்யப்ரஹ்ம ஸ்வரூப விசாரபரையென்ரும் கொள்ளுகையாலே த்ரிகாண்டமீமாம்ஸா ஸ்வாரஸ்யமும் ஸித்தம். இப்படி பகவத்பாஷ்யகாரராலே விஸ்தரிக்கப்பட்டிருக்கிர விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமே வ்யாஸபகவானுக்கு அத்யந்தாபிமதமாயிருக்கும்.

|| தஶமத தர்ஶிநீ ஸம்பூர்ணம் ||

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.