ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான
அழகியமணவாளப்பெருமாள்நாயனார் அருளிச் செய்த
ஆசார்ய ஹ்ருத₃யத்தின் தனியன்கள்
ஆசார்யஸ்வாந்தவக்தாரம் அபி₄ராமவராபி₄த₄ம் |
ஸ்ரீக்ருஷ்ணதநயம் வந்தே₃ ஜக₃த்₃கு₃ருவராநுஜம் ||
பணவாளரவணைப் பள்ளிபயில்பவர்க்கெவ்வுயிரும்
குணபோகமென்று குருகைக்கதிபன் உரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன்மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே.
மாதவத்தோன்மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத்தாள்கள் நெஞ்சே போற்று.
*******
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த
ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம்
ப்ரதம ப்ரகரணம்
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் ।
ரம்யஜாமாத்ருதேவேந தரஶிதம் க்ருஷ்ண ஸூநுநா ।।
- காருணிகனான ஸர்வேஶ்வரன் அறிவிலா மனிசர் உணர்வென்னும்1. சுடர்விளக்கேற்றிப் பிறங்கிருள் நீங்கி, மேலிருந்த நந்தாவேத விளக்கைக் கண்டு, நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு, மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்.
2. விவேகப₂லம் வீடுபற்று.
3. த்யாஜ்யோபாதே₃யங்கள் ஸுக₂து₃:க₂ங்கள்.
4. இவற்றுக்கெல்லை இன்புதுன்பளி பன்மாமாயத்தழுந்துகையும், களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத்தின்புறுகையும்.
5. அநந்தக்லேஶநிரதிஶயாநந்தஹேது மறந்தேன் அறியகிலாதே உணர்விலேன் ஏணிலேன் அயர்த்தென்றும், உய்யும்வகை நின்றவொன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம்பரிசென்றும் சொல்லுகிற ஜ்ஞாதவ்யபஞ்சக ஜ்ஞாந அஜ்ஞாநங்கள்.
6. இவற்றுக்குக் காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்
7. ஸத்த்வாஸத்த்வநிதா₃நம் – இருள்தரும் அமலங்களாக என்னும் ஜந்ம ஜாயமாந காலகடாக்ஷங்கள்
8. இவற்றுக்கு மூலம் – இருவல்லருள் நல்வினைகள்
9. கர்மக்ருபாபீ₃ஜம், பொய்ந்நின்ற அருள்புரிந்த என்கிற அவித்யா ஸௌஹார்த்த₃ங்கள்
10. ஏதந்நிமித்தம் முதல்முன்னமேயான அசித₃யநாநாதி ஸம்ப₃ந்த₄ங்கள்
11. இவை கிட்டமும் வேட்டுவேளானும்போலே ஒண்பொருள் பொருளல்லாத{வை} என்னாதே நானிலாத யானுமுளனாவன் என்கிற ஸாம்யம் பெறத்தின்றூதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநிஸத்தைகளை உண்டாக்கும்
12. ஒன்று கூடினதாய்ப் பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன் என்னுமதொன்றுமே ஒழிக்க ஒழியாதது.
13. இந்த உதரத்தரிப்பு த்ரைகு₃ண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஶகம்.
14. வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண்தின்னவிட்டு ப்ரத்யௌஷதம் இடுமா போலே எவ்வுயிர்க்கும் தாயிருக்கும் வண்ணமான இவனும் ருசிக்கீடாகப் பந்தமும் பந்தமறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே.
15. அதுதானும் ஆஸ்திக்யவிவேக அந்யஶேஷத்வ ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்திபாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.
16. சதுர்விதன தே₃ஹ–வர்ண–ஆஶ்ரம–அதி₄கார–ப₂ல–மோக்ஷ–ஸாத₄ந–க₃தி– யுக₃–த₄ர்ம–வ்யூஹ–ரூப–க்ரியாதி₃களை அறிவிக்கிற பாட்டுப்பரப்புக்கு – பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும், மானிடப்பிறவியும், ஆக்கைநிலையும், ஈரிரண்டிலொன்றும், இளமையும், இசைவுமுண்டாய், புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்₄நமற, நின்றவாநில்லா ப்ரமாதியைக்கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேத₃ஸார–உபநிஷத் ஸாரதராநுவாக ஸாரதமக கா₃யத்ரியில் முதலோதுகிற பொருள்முடிவான சுருக்கைத் தெய்வவண்டாய், அன்னமாய், அமுதம் கொண்டவன் ஶாகைகளிலும், ஓதம்போல்கிளர் நால்வேதக்கடலிலும், தேனும் பாலும் அமுதுமாக எடுத்துப் பெருவிசும்பருளும்
17. முனிவரை இடுக்கியும் முந்நீர்வண்ணனாயும் வெளியிட்ட ஶாஸ்த்ர– தாத்பர்யங்களுக்கு விஶிஷ்டநிஷ்க்ருஷ்டவேஷங்கள் விஷயம்.
18. தோல்புரையே போமதுக்குப் பழுதிலா யோக்₃யதை வேணும். மனமுடையீர் என்கிற ஶ்ரத்₃தை₄யே அமைந்த மர்மஸ்பர்ஶிக்கு நானும் நமரும் என்னும்படி ஸர்வரும் அதி₄காரிகள்.
19. ஶாஸ்த்ரிகள் தெப்பக்கையரைப்போலே இரண்டையுமிடுக்கிப் பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத்திலிருப்பாரைப்போலே இருகையும் விட்டுக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.
20. இவை ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும் உணர்வைப் பெறவூர மிக உணர்வுமுண்டாம்.
21. ஶேஷத்வபோக்த்ருத்வங்கள்போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்.
22. ஜ்ஞாந சதுர்த்தி₂களின்மேலேயிறே ஆநந்த₃ஷஷ்டி₂களுக்கு உத₃யம்.
23. முளைத்தெழுந்த ஸூர்யதுல்யயாதா₂த்ம்யசரமம் விதி₄யில் காணும் ப்ரத₂மமத்₄யமத₃ஶைகளைப் பகல்விளக்கும் மின்மினியுமாக்கும்.
24. நாலிலொன்று ப்ரவர்த்தகம்; ஒன்று நிவர்த்தகம்.
25. முற்பாடர்க்கு க்ரியாங்க₂மானவை இரண்டும், செயல்தீர்ந்தார் வ்ருத்தியில் ஸ்வநிர்ப்ப₃ந்த₄ம் அறுக்கும்.
26. கர்ம கைங்கர்யங்கள் ஸத்யாஸத்ய–நித்யாநித்ய–வர்ணதா₃ஸ்யாநு கு₃ணங்கள்.
27. இவற்றுக்கு விதி₂ராக₃ங்கள் ப்ரேரகங்கள்
28. மண்டினாரும் மற்றையாரும் ஆஶ்ரயம்.
29. அருள்முடிய நிறுத்தி அடையநின்றதும் நல்லதோரருள் தன்னாலே நன்றுமெளியனாகிறதும் விஷயம்.
30. இவற்றாலே ஸாதா₄ரணம் அஸாதாரணம் என்னும்.
31. ஜாத்யாஶ்ரமதீ₃க்ஷைகளில் பே₄தி₃க்கும் த₄ர்மங்கள்போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்.
32. ஸாதநஸாத்₄யங்களில் முதலும் முடிவும் வர்ணத₄ர்மிகள் முடிவும் வர்ணதர்மிகள் தாஸவ்ருத்திகள் என்று துறை வேறிடுவித்தது.
33. வேதவித்துக்களும் மிக்கவேதியரும் ச₂ந்த₃ஸாம் மாதாவாலும், அதுக்கும் தாயாய்த் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இருவர்க்கும் ஶ்ரேஷ்ட₂ ஜந்மம்.
34. அந்தணர் மறையோர் என்றும், அடியார் தொண்டரென்றும் இவர்களுக்கு நிரூபகம்.
35. ஒருதலையில் கிராம குலாதி வ்யபதேஶம், குலம் தரும் என்னும் மாசில் குடிப்பழி என்று, பதியாகக் கோயிலில் வாழும் என்பர்கள்.
36. விப்ரர்க்கு கோ₃த்ரசரணஸூத்ரகூடஸ்த₂ர் பராஶரபாராஶர்ய போதாயநாதிகள்; ப்ரபந்நஜநகூடஸ்தர் பராங்குஶபரகாலயதிவராதி₃கள்.
37.அத்₄யயநஜ்ஞாநாநுஷ்டா₂நங்களாலே ப்₃ராஹ்மண்யமாகிறாப்போலே சந்தங்களாயிரமும் அறியக்கற்று வல்லரானால் வைஷ்ணவத்வ ஸித்₃தி..
38. இந்த உட்பொருள் கற்றுணர்ந்து மேலைத்தலைமறையோராகாதாரை அயல் சதுப்பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்.
39. ‘‘எவ்வுலகத்தெவ்வெவையும்’’ என்கையாலே வேதம் ப₃ஹுவித₄ம்.
40. இதில் ஸம்ஸ்க்ருதம், த்₃ராவிட₃ம் என்கிற பிரிவு ருகா₃தி₃பேத₃ம் போலே.
41. செந்திறத்த தமிழென்கையாலே ஆக₄ஸ்த்யமும் அநாதி₃
42. வடமொழிமறை என்றது தென்மொழிமறையை நினைத்திறே.
43. வேத₄சதுஷ்டய – அங்கோ₃பாங்க₃ங்கள் பதினாலும்போலே, இந்நாலுக்கும் இருந்தமிழ்நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்.
44. ஸகலவித்₄யாதி₄கவேத₃ம்போலே இதுவும் திவ்ய ப்ரபந்த ப்ரதாநம்.
45. வேதநூல், இருந்தமிழ்நூல், ஆஜ்ஞை, ஆணை, வசையில், ஏதமில், சுருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில்பாடல், பண்டை, நிற்கும், முந்தை, அழிவில்லா என்னும் லக்ஷணங்களொக்கும்.
46. ‘‘சொல்லப்பட்ட’’ என்றதில் கர்த்ருத்வம் ‘ஸ்ம்ருதி – அத்தை ஸ்வயம்பு படைத்தான்’ என்றது போலே.
47. நால்வேதங்கண்ட புராண ருஷி – மந்த்ரத₃ர்ஶிகளைப்போலே இவரையும் ருஷி, முனி, கவி என்னும்.
48. ‘‘படைத்தான் கவி’’ என்றபோதே இதுவும் யதா₂பூர்வகல்பநமாமே.
49. உறக்கம் தலைக்கொண்டபின்னை மறைநான்குமுணர்ந்த தங்க– ளப்பனோடே ஓதின சந்தச்சதுமுகன் சலங்கலந்த வெண்புரிநூல் மானுரி– திரிதந்துண்ணும் காமனுடல் இருக்கிலங்கு ஜ்யேஷ்ட₂ புத்ராதிகளுக்கு மறை பயந்தாப்போலே ஆதுமில் காலத்தெந்தையான வாய்முதலப்பன் பிரமகுருவாய் இராப்பகல் முன்சொல்லக் கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓதவல்ல பிராக்களை ‘‘கன்மின்கள்’’ என்று சொல்பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே ஆத₂ர்வணாதிகள்போலே இதுவும் பேர்பெற்றது.
50. இயற்பா மூன்றும் வேதத்ரயம்போலே; பண்ணார்பாடல் பண்புரை இசைகொள் வேதம்போலே.
51. ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய், ஸ்தோபத்தாலே பரம்புமாப் போலே சொல்லார் தொடையல் இசைகூட்ட அமர்சுவை ஆயிரமாயிற்று.
52. சந்தோகனென்று ஸாமாந்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ்பயில் காந ஸ்வரூபியை ‘‘பாலையாகி’’ என்று விஶேஷிக்கையாலே வேதகீதச்சாமி நானென்ன ஸாமந்தோன்ற உத்₃கீ₃த₂ப்ரணவத்தை ப்ரத₂மத்திலே மாறாடி சரமகதிமுடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹாகோஷநல்வேதவொலிபோலே மஹாத்யயனம் என்னப்பாடுகையாலே இத்தை சா₂ந்தோக்₃யஸமமென்பர்கள்.
53. புரவியேழொருகாலுடைய தேரிலே திருச்சக்கரமொத்துக் காலசக்கரச் செங்கோல் நடாவி ஜ்யோதிஶ்சக்ரவொளிசுருக்கி அக்₃நீஷோமீய தேஜோம்ருதத்துக் கூற்றும், மந்தே₃ஹர்க்குச் செந்தீயும், முக்திமார்க்க₃த்தலைவாசலும், கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்கத் தோள்வளையும், குழையும், திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்,வளையும் குழையும், திருச்செய்யமுடியும் ஆரமும் படையும், திகழும் பொன்மேனியும், செஞ்சுடர்த் தாமரைக்கண்ணுமாய், அணிநிறமூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதா₃த்யேய தேஜஸ்ஸின் ஸாமரஸோத்கா₃ந நாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினாலருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத கு₃ரூபதேரூபதேஶம்.
54. அன்றிக்கே, ஸ்வரூபகு₃ணவிபூ₄திசேஷ்டிதங்களை விஶதமாக்குகிற பஞ்சராத்ரபுராணேதிஹாஸங்கள் போலே நீலபா₄ரூபோக்தி தெரியச்சொன்ன வேதோ₃பப்₃ரும்ஹணமென்பர்கள்.
55. கல்பாதி₃யில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர்முகன் சந்த₃ஸ்ஸும் மோஹஶாஸ்த்ரப்ரவர்த்தகன் பிணச்சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறேறிச்சுழன்றாடும் ஆலமமர் பிச்சுத்தெளிந்து தான் வணங்குமாறுரைக்கக்கேட்ட ஸஜாதீயர்ப்ரஸாதமும் ஆர்ஷமூலம்.
56. பரமஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறைஞானத்தயனாம் சிவனாம் திருமாலருள்கொண்டு இவர் பாடினார்.
57. கருவுள் வேறலாமை அரன் அயன் எனச்செய்யுமவைபோலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரமகவிகளால் பாடுவியாது நேர்படச்சொல்லும் நீர்மையிலா என்னைத்தன்னாக்கி என் நாமுதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்யசொல்லால் சொல்லவல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்தான் என்றாரிறே.
58. தர்மவீர்யஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப்போலன்றே அருளின பக்தியாலே உள்கலங்கிச்சோகித்து, மூவாறு மாஸம் மோஹித்து, வருந்தி, ஏங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிறவிவர்.
59. ஸ்வாத்₄யாய யோக₃ங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமைமைப்பாலே ஓதி உணர்ந்தவர் இன்றும் ஆஶாபாஶபத்தர்..
60. அவர்களுக்குக் காயோடென்னுமிவையே தாரகாதிகள்; இவர்க்கு எல்லாம் கண்ணனிறே.
61. அழுநீர்துளும்பக் கடலும் மலையும் விசும்பும் துழாய் திருமால் என்று ‘‘எங்கே காண்கேன்’’ என்னும் இவர் அலமாப்பு அவர்களுக்கு புத்திர வியோக₃த்திலே.
62.. ப₂ல ஸாத₄ந தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்.
63. ஆக, இதுக்கு கீழ் சொல்பவனின் பிரிதொன்றுக்கில்லாச்சிறப்பு சொல்லிற்று
64. கு₃ருஶிஷ்யக்₃ரந்தவிரோத₄ங்களை பரமதாதி₃களாலே பரிஹரியாமல் செஞ்சொல், செந்தமிழ், இன்கவி, பரவி, அழைக்கும் என்று அந்யோந்யம் கொண்டாடிப்பேசிற்றேபேசும் ஏககண்ட₂ரில் ‘‘என்னில் மிகு’’ என்னும் இவருரைகொளின்மொழிகொண்டு ஶாஸ்த்ரார்த்த₂ங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங்கொண்ட இதுக்குச் சேராதவை மநுவிபரீதங்கள்போலே.
65. பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்.
66. அதுக்கு மூலம் ‘‘விதயஶ்ச’’ என்கிற பரமாசார்யவசநம்.
67. ஆப்திக்கு இவர் ‘‘சுருதி, மார்க்கண்டேயன், பார்த்தன்’’என்கிற இவை வ்யாஸமநுப்₃ரஹ்மவாதிகளை வேதம் சொல்லுமாப்போலே.
68. பா₄ரதகீதைகளின் வேதோபநிஷத்த்வம்போலே இதுவும் வ்யாக்₂யை யானாலும் வேத₃ரஹஸ்யமாம்.
69. உதாத்தாதி பத₃–க்ரம–ஜடா–வாக்ய–பஞ்சாதி–பாத–வ்ருத்த–ப்ரஶ்ந–காண்ட₃–அஷ்டக–அத்₄யாய–அம்ஶ–பர்வாத்யலங்காரங்கள் போலே, எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, நிரைநிரை, ஓசை, தளை, இனம், யாப்பு, பா, துறை, பண், இசை, தாளம், பத்து,, நூறு, ஆயிரம் முதலான செய்கோலம் இதுக்குமுண்டு.
70. அதவா வேதவேத்₃ய ந்யாயத்தாலே பரத்வபரமுதுவேதம் வ்யூஹவ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய் ஆகமுர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்₃ராவிட₃மாகச் செய்தாரென்னும்.
71. மண்ணாடின ஸஹ்யஜலம் தோதவத்திச்சங்கணிதுறையிலே துகில் வண்ணத்தெண்ணீராய் அந்தஸ்ஸ்தத்தைக் காட்டுமாப்போலே அல்பஶ்ருதர் கலக்கின ஶ்ருதி நன்ஞானத்துறைசேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.
72. மேகம் பருகின ஸமுத்ராம்பு₃போலே நூற்கடல்சொல் இவர் வாயன வாய்த்திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.
73. ம்ருத்க₄டம் போலன்றே பொற்குடம்.
74. பெரும்புறக்கடலும், ஶ்ருதிஸாகரமும் அலைத்தாழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யர்க்குச் சமைத்த மடுவும், சாய்கரகமும் மாநமேயசரமம்.
75. வீட்டின்ப–இன்பப்பாக்களில் த்₃ரவ்யபாஷாநிரூபணஸமம் இன்பமாரியில்– ஆராய்ச்சி.
76. பேச்சுப்பார்க்கில் கள்ளப்பொய்ந்நூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாமோத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்.
77. க்ருஷ்ணக்ருஷ்ணத்வைபாயநோத்பத்திகள் போலன்றே. க்ருஷ்ண த்ருஷ்ணாதத்த்வஜந்மம்.
78. பெற்றும் பேறிழந்தும் கன்னிகையானவளும் எல்லாம் பெற்றாளாயும், தத்துக்கொண்டாள், என்பர் நின்றார் என்னுமவளும் நெடுங்காலமும் நங்கைமீர் என்னுமிவர்க்கு நேரன்றே.
79. மீனநவநீதங்கள் க₃ந்தி₄க்குமிடமும் வெறிகொள்துழாய் கமழுமிடமும் தன்னிலொக்குமோ.
80. ஆற்றில் துறையில் ஊரிலுள்ள வைஷம்யம் வாசாமகோ₃சரம்.
81. தே₃வத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள்போலே ப்₃ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டைநாளில் பிறவி உண்ணாட்டுத்தேசிறே. .
82. ஜநக–த₃ஶரத–வஸுதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும், நடுவில் பிள்ளையும், கடைக்குட்டியும் போலே இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அஞ்சிறையுமறுத்தார்.
83. ஆதி₃த்ய–ராமதி₃வாகர–அச்யுதபா₄நுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாத போதில் கமலமலர்ந்தது வகுளபூ₄ஷண பாஸ்கரோதயத்திலே.
84. வம்ஶபூ₄மிகளை உத்₃த₄ரிக்கக் கீழ்க்குலம் புக்க வராஹகோ₃பாலரைப் போலே இவரும் நிமக்நரை உயர்த்தத்தாழ இழிந்தார்.
85. ம்லேச்ச₂னும் ப₄க்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குலதை₃வத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாத₃னாம் என்கிற திருமுகப் படியும், விஶ்வாமித்ர–விஷ்ணுசித்த-துளஸீ ப்₄ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்₃ராஹ்மணவேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்த் தம்பிக்கு முன்பிறந்து வேலும் வில்லுங் கொண்டு பின்பிறந்தாரைச்சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பா₄வம் சொல்லும்படி ஏககுலமானமையும், தூது மொழிந்து நடந்துவந்தவர்களுடைய ஸம்யக் ஸகு₃ண ஸஹபோ₄ஜநமும், ஒருபிறவியிலே இருபிறவியானாரிருவர்க்கு தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ரபூஜைகொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச் செய்த புத்ரக்ருத்யமும், புஷ்பத்யாகபோக₃மண்டபங்களில் பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் மஹாமுனியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகா₃நுயாகோ₃த்தர வீதிகளில் காயாந்நஸ்த₂ல ஶுத்திபண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
86. அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரமவித்₃யாவ்ருத்தங்களை கர்தப ஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழிப்பர்கள்.
முதல் ப்ரகரணம் முற்றிற்று
அழகியமணவாளப்பெருமாள்நாயனார் திருவடிகளே ஶரணம்
திருநாராயணபுரத்தாய் திருவடிகளே ஶரணம்
@@@@@@@@@@@
த்விதீய ப்ரகரணம்
87. அணைய ஊரப் புனைய அடியும் பொடியும்படப் பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜநிக்கப் பெறுகிற திர்யக்ஸ்தா₂வர ஜந்மங்களைப் பெருமக்களும் பெரியோரும் பரிக்₃ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்
.
88. ஶேஷத்வ ப₃ஹிர்பூ₄த ஜ்ஞாநாநந்த₃மயனையும் ஸஹியாதார் த்யாஜ்ய உபாதி₄யை ஆத₃ரியார்களே..
89. இதின் ஓளபாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறைமுனிவனாக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்க்க₃மேற்றினபோதே தெரியும்
90. மாவுருவில் கள்ளவேடம், திருந்து வேதமலமான மானிடம்— பாடல், ஸர்வவர்ண ஶூத்ரத்வம், காடுவாழ்சாதியில் கடல்வண்ணன் வேடம், தென்னுரையில் ஹரிகீர்த்தி, ஶ்வபசரில் பத்திபாசனமும் அறிவார் ஆரார் அமரரென்ன ஏற, அறியாதார் சாதியந்தணர்களேலும் தகரவிழுவர்.
91. தமிழ்மாமுனிதிக்கு ஶரண்யமென்றவர்களாலே க்வசித் க்வசித் என்று இவராவிர்பா₄வம் கலியும் கெடும்போலே ஸூசிதம்.
92. அத்ரி–ஜமதக்நி பங்க்திரத₂–வஸு–நந்த ஸூநுவானவனுடைய யுக வர்ண–க்ரமாவதாரமோ? வ்யாஸாதி₃வத் ஆவேஶமோ? மூதுவர் கரைகண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற அனந்தன்மேல் புண்ணியங்கள் பலித்தவரோ? என்று ஶங்கிப்பர்கள்.
93. இதுக்கு மூலம் – யான் நீ என்று மறுதலைத்து வானத்து மண்மிசை மாறும் நிகருமின்றி நிலையிடம் தெரியாதே தெய்வத்து இனம் ஒரு வகைக்கொப்பாக இனத் தலைவன் அந்தாமத்தன்பு செய்யச் சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழிந்து ஶட₂ரையோட்டி மதா₃ வலிப்தர்க்கு அங்குஶமிட்டு நடாவிய கூற்றமாய்த் தீயன மருங்குவாராமல் கலியுகம் நீங்கிக்கிதயுகம் பற்றிப் பட்டெழுபோதறியாதிருந்த ப்ரபகிதயுகம் பற்றிப் பட்டெழுபோது அறியாதிருந்த ப்ரபாவம்.
94. இதுக்கு ஹேது – ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்று அளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று, நூலுரைத்து, யோகுபுணர்ந்து, கண்காணவந்து ஆள்பார்க்கிறவன் உலகினதியல்வை நல்வீடுசெய்ய, இணக்குப்பார்வைதேடிக் கழல் அலர் ஞானமுருவின முழுதுமோட்டின பெருங்கண், எங்குமிலக்கற்று, அன்பொடு நோக்கான திசையிலே, ஆக்கையில் புக்குழன்று மாறிப்படிந்து துளங்குகிறவர் மேலே பட, பக்கநோக்கறப் பண்ணின விஶேஷ கடாக்ஷம்.
95. ஶ்ரமணீ–விதுர–ருஷிபத்நிகளைப் பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடுநோக்கு, சாபம் இழிந்து என்னப்பண்ணுமிறே.
96. கோ₃வ்ருத்₃தி₄க்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன், ஜக₃த் ஹிதார்த்தமாக ‘எனக்கே நல்லவருள்கள் என்னும்படி ஸர்வ ஸௌஹார்த்த₃ ப்ரஸாதத்தை ஒருமடைசெய்து இவரைத்தன்னாக்க, லோகமாகத் தம்மைப் போலாக்கும்படி ஆனார்.
97. அதாவது மயர்வற மதிநலமருளுகை.
98. இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற அநுதய–ஸம்ஶய–விபர்யய–விஸ்ம்ருதிகளற்று, மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தைக் காதல் அன்பு வேட்கை அவா என்னும் ஸங்க காம–அநுராக– ஸ்நேஹாத்₃யவஸ்தா ₂நாமங்களோடே பரமப₄க்தி த.ஶையாக்குகை.
99. ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து, எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய், குளித்து ஓதி உருவெண்ணும் அந்தி, ஐவேள்வி அறுதொழில்களால் மிக்கு, ஊன்வாடப் பொருப்பிடைத் தாம் வருந்தி, துன்பவினைகளை விடுத்து, , விவேகஶமாதிகள் வளர, எட்டுநீக்கி, எட்டுமிட்டு, எட்டினாய பேதப்பூவில் சாந்தொடு தேவ – காரியம் செய்து உள்ளம் தூயராய், வாரிப்புன்புலவகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினைக் கண்டு, யோகநீதி நண்ணி, அறந்திகழுமறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெரும் சுடரைக் ★கண்கள்சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய், கனவில்மிக்க த₃ர்ஶநஸமமாய், ஆகத்துப்புல்கும் அத்யர்த்த ப்ரியமாய், வைகும் சிறப்புவிட்டுக் குற்றேவல் என்னாத அநந்யப்ரயோஜகமாய், வேத₃ந–உபாஸந–ஸேவா–த்₄யாநாதிகள் என்று சொல்லுமது ஸாத்₄ய ஸாதந பக்தியாக ஶாஸ்த்ர ஸித்தம்.
100. ஸ்வீக்ருத ஸித்த₄ ஸாதநர் இத்தை ஸாத்₄யமாக இரக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்தி₄க்கும்.
101. இது உப₄யமும் அன்றிக்கே, அறியாக்காலத்தே ஒக்கப் பிறந்து தழுவி நின்று, கட்டமே நோயாய், உலர்த்தி, வீழ்ந்து அலப்பாய், தியாக ஸ்வீகார நிஷ்டாஹாநிகள் ஆக்கி, ஸத்தா போக விருத்தி உபகரணமாவது ஒன்று..
102. இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்கள் என்கையாலே ஸாதநத்ரயபூர்வாப்யாஸஜமல்ல.
103. இப்பிறப்பே சிலநாளில் என்றபோதே இரண்டும் கழியும்.
104. பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் கலியாரேவ ஆளும் வன்குறும்பர் குடியேறிப்பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கிப் படிந்துண்ணும் போகத்தே தூராதே பொறுக்கொணாப் போகத்துக்குக் காவல்செய்து குமைத்துத் திரித்து வீழ்த்தி வலித்தெற்றி அருவியறுத்துக் கடனாயின இறுப்பிக்கப் பாழ்த்த விதியானவாறே தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தறமன்னி ஒள்வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத் தீக்கொளீஇக் கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப்பற்றி ஈரியாய்க்கசிந்ததிலே ஈரநெல் வித்தி எழுநாற்றுக்களையையும் வேர்முதல்மாய்த்துப் பட்டிச்சேவதக்கி மீதுகொள்ளாமல் குறிக் கொள்வித்துக் கடல்புரையவிளைந்து தலை வணக்கினவாறே நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குந்தங்கொண்டு ஆராமையுண்டு காலக்கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்துத் தண்டாலடித்துப் பதரறுத்தசுப் போர்த்த தோல்விடுத்து ஸூக்ஷ்மவொட்டும் நீரிலேகழுவி வேறோர் கலத்திட்டு பைந்தொடிமடந்தையரைக் கொண்டு ஷட்குணரஸாந்நமாக்கி வானோர்க்காராவமுதானவாறே முற்றுமுண்ண முன்னம் பாரித்து உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தியுழவன் க்ருஷி பலமிறே.
105. கோஸலகோகுலசராசரம் செய்யும் குணமொன்றின்றியே அற்புதமென்னக் கண்டோம்.
106. பட்டத்துக்குரிய ஆனையும் அரசும் செய்யுமவை ஆராயாது.
107. முந்நீர், வாழ்ந்தார், சூட்டும், கோவை, ஆழி என்கிற ஸாக்ஷாத்க்ருத ஸ்வபர வ்ருத்தாந்தர்க்கு, யாத்₃ருச்சிகாதி₃கள் உண்டாகில் தோன்றும்.
108. செய்தநன்றி தேடிக்காணாதே கெடுத்தாய் தந்தாய் என்ற
அத்வேஷாபி₄முக்யங்களும் ஸத்கர்மத்தாலல்ல.
109. எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானுமில்லை.
110. மதியால் இசைந்தோம் என்னும் அநுமதி–இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த என்னிசைவினது.
111. மாதவன் மலை நீர் நிழல் என்றேறிடுமது, வ்யாவ்ருத்த்யுக்தி, அந்யார்த்த₂ம், அபுத்தி₄ பூர்வகம், அவிஹிதம், ப₂லவிஸத்ருஶம், ப₂லாந்தரஹேது.
112. இவன் நடுவே அடியான் என்று ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதி ஸாக்ஷி வன்களவில் அநுபவமாக இந்திர ஞாலங்கள் காட்டிக், கொள்ள, காப்பாரற்று விதிசூழ்ந்தது.
113. வரவாறில்லை, வெறிதே என்று அறுதியிட்ட பின் வாழ்முதல் என்கிற ஸுக்ருதமொழியக் கற்பிக்கலாவதில்லை.
114. நலமருளினன் என்கொல் என்று ஆமூலசூட₃ம் அருளால் மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடிசேருகைக்கு ஸாதநம்.
115. புணர்தொறுமென்னக்கலந்து பிரிந்து ஜ்ஞாநபக்திகளை வளர்த்தது கனங் குழையிடக் காது பெருக்குதலும், மாஸோபவாஸி போ₄ஜநப்புறப்பூச்சும்போலே ஆற்ற நல்ல மாபோகச்சிரமமாக.
116. இவற்றால் வரும் ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களாகிறன எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்ஶநஸமமான மாநஸாநுஸந்தா₄நமும் திண்கொள்ளப் பெறாத மநஶ்ஶைதில்யமும்.
117. புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரியஹிதபரன்தான் துளக்கற எங்கும் தழைக்க நடத்தும்.
118. ஜ்ஞாநத்தில் தம் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு.
119. தேறும் கலங்கி என்றும் தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.
120. அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக்கீழ்க்குற்றேவலாகை
அவஸ்தா₂ந்தரம்.
121. வித்₃யை தாயாகப்பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள்போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப் பேச்சுப்படாமல், விஶ்வபதி லோகபர்த்தா என்னும் மணவாளரை, நாலிரண்டிழை கொண்டு முப்புரியான பரஹ்மஸூத்ர பந்த₄த்தோடே வரிப்பிக்க, பரம்புருடன் கைக்கொண்டபின் சதுர்த்தி₂யுள்புக்கு, இடையீடு நடுக்கிடக்கும் நாள்கழித்து ஜந்மபூமியை விட்டகன்று, சூழ்விசும்பிற்படியே உடன் சென்று, குடைந்து நீராடி வியன்துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன்கொண்டு நோக்கியர் அலங்கரித்துப் பல்லாண்டிசைத்துக் கவரிசெய்ய, நிறைகுட– விளக்கமேந்தி இளமங்கையர் எதிர்கொள்ள வைகுந்தம் புக்கிருந்து வாய்மடுத்துப் பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து ப₄ரத–அக்ரூர– மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே குருமாமணியாய் அணையும் வஸ்துவுக்கு மணிவல்லிப்பேச்சு வந்தேறியன்று.
122. இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமா மலர்ப் பாவையோடு உள்ள ஸாம்ய ஷட்கத்தாலே..
123. உண்ணாது கிடந்தோர்மாயையினால் என்னும் வீறுடைய முடிக்குரியாரோடு இத்திரு மண்ணேரன்ன ஒண்ணுதல் பின்னைகொல் என்கிற ஒப்பு தென்பால் நெடுமாடம் கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறெழவெரித்த பெருந்தோற்றத்தாருயிர்க்காகுத்தன் ஆதியங்கால மண்புரை பொன்மாதின் துகளாடி எருதேழ்தழீஇச்சறையினார் .என்னுமவற்றிலே தோன்றும்.
124. இவர்கள் தேடிநிற்கப் பொய்கை முதுமணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடுமாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச்சிதைத்துப் பறித்துக்கிழித்து கோயின்மை குறும்புசெய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் முழுசி ஆவரென்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகரஸ்த்ரீகள், நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிரந்தார் பா₄வம், கடல்ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறல் கஞ்சனை மங்கநூற்ற வாயும் தீர்ப்பாரென்னும் அவற்றிலே தோன்றும்.
125. இரானெனில் நசவாகக் குழைத்தவன் பின்தொடரவிருந்த வன்சிறையிலும் விதி₃தன் புணைவன் என்று ஜீவிதாதி₃களால் குறைவின்றி மாயும்வகை விஷஶஸ்த்ரங்கள்தேடி வில்வலவா ஹா என்று இரக்கமெழாக்கொடுமைகள் ஶங்கித்து என்னையும் ஜீவந்தீம் என்று–ஆள்விட்டுச் சுடரையடைந்து அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.
126. பிரியிலிலேனுக்கு இளங்கோவும் அக்குளத்தில் மீனிறே.
127. அழுந்தொழும் ஸ்நேஹபாஷ்பாஞ்ஜலியோடே ருசிர– ஸாநுக்களில் கூவிக் கொள்ளும் பிரியாவடிமைக்குச் சரணே சரண் என்று வாளும் வில்லுங்கொண்டு ப₃ந்து₄வும் பிதாவுமவரே என்கையும், அன்னையென்செய்யிலென் ராஜ்யமும் யானே என்று பெருஞ்–செல்வமும் இச்சியாமல் வேண்டிச்சென்று திருவடியே சுமந்து விரைந்து வரும் அளவும் கண்ணநீர் பங்கமாக நிலந்துழாவிக் குடிக்கிடந்த கையறவும், கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள் நித்ய ஶத்ரு விசிந்தநமுமான ப்₄ராதாக்கள், அப்பொழுதைக்கு அப்பொழுது போனாய் என்னும் மாதாபிதாக்கள், செந்தீ தண்காற்று இளநாகம் முதலான பகையறச் சிந்தைசெய்து எங்குமுளனென்னும் பள்ளிப்பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும் த₄ர்மாத்மா வாளிபொழிந்த நிர்கு₃ண விஶ்வாத்மா உள்ளே உறைய வீரசரிதம் ஊணாக்க் கற்பார் பா₄வம் மற்றிலேன் என்னும் ராமதாஸன் பல்வகையும் கண்டு வெண்சங்கேந்தின ரூபபரனான ஶ்வேதன் முதலானார் படிகளும் காணலாம்.
128.குழலில் நெஞ்சும் அருகலில் சுவையுமான இவர், அவர்கள் அளவு அல்லர்.
129. எற்றைக்கும் என்றது தோன்றப் பிறந்து ஒப்பித்து வீசிக்காப்பிட்டுக் காட்டுக்கு முற்பட்டு த₄ர்மம் சொல்லிக் கேட்டு ஶிஷ்யா–தா₃ஸீ–ப₄க்தைகளாய்ப் பாடி வருடி இன்றுவந்தென்பாரையும் சென்றாலூரும் நிவாஸ–தா₃ஸ–பே₄த₃ம் கொள்வாரையும் தாம் அவனாக பாவிப்பர்.
130. எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலா அடிமைக்குப் பாஞ்சாலி படுத்துமதும் கௌஸல்யாநுவ்ருத்தியும் ஒப்பாக்குகை பரிசு
131. பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகுகாதல் கடலிடங்கொண்ட கடலை ப₃ஹுமுகமாக அவகாஹிக்கும்.
132. அச்சேத்₃யமென்னுமது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த என்னப்பட, சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க, கரணங்கள் முடியானேயிலவையாக உடலம் ஆத்மதர்மம் கொள்ள, காற்றும் கழியும் கட்டியழக் கொண்ட பெருங்காதலுக்குப் பத்திமைநூல் வரம்பில்லையே.
133. ஸம்ப₃ந்தோ₄பாய ப₂லங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா அஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்.
134. ஸகி வெறிவிலக்கி ஆசையறுத்து அறத்தொடு நின்ற மூன்றில் அநந்யார்ஹத்வமும், வாடி மெலிந்து பித்தேறி ஏறப்பேசிக் கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யவஸாயமும், புத்ரி பலகால் ஆள்விட்டு ஆற்றாமை சொல்லிக் கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக் கண்புதையப் போக்கற்று, உருநெஞ்சுள்ளெழக் கூடுநாள்தேடித் தாழ்த்ததுக்கு ஊடி, உசாத்துணையற்றுச் சூழவும் பகைமுகம் செய்யத்தடைநில்லாதே புயக்கற்று மாலையும் காலையும் பூசலிடுகிற பதினேழில் த்வரையும் தெரியும்.
135. தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரக்ஷகத்வாதி பந்தவாத்ஸல்யாதி வ்யவஸாயபுத்தி பேதத்தாலே.
136. அபி₄லாஷா–சிந்தந–அநுஸ்ம்ருதி–இச்சா–ருசி–பர– பரம–ா–ருசி–பர– பரம–லாஷா–சிந்தந–அநுஸ்ம்ருதி–இச்சா₂–ருசி–பர–பரமப₄க்திகளிலே பேதை முதலான பருவம் கொள்ளும்.
137. மயில் பிறை வில் அம்பு முத்து பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வவுரு விகாஸ ஶுத்₃தி, தாந்தி ஜ்ஞாநாநந்த அநுராக பக்த்யணுத்வ போ₄க்யதாகதிகளையுடைய அகமேனியின் வகுப்பு.
138. சூழ்ச்சி அகற்றினீர் என்னும்பழி, இணக்கி எங்ஙனே என்னும் மேலெழுத்து, முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடை மெய்க்காட்டு, நீரென்னேயென்னுமுடன்பாடு, இடையில்லையென்னுமுதறுதல், இருந்திருந்து நடந்தாளென்னும் கொண்டாட்டம் – அவஸ்தாத்ரய வ்ருத்தி.
139. தாயார், ஏதலர் உற்றீர்கள் என்னும் ஸாத்₄யஸித்த₄ ஸாதந நிஷ்டரை; மகள், நம்முடை ஏதலர் யாமுடைத்துணை என்னும் ஸித்த ஸாதந ஸாத்₄யபரரை.
140. நாலயலார் அயற்சேரியார் உபாயசதுஷ்டயாந்தர்யாமித்வபரர்.
141. கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத் தன்பற்றுள்ளசல்.
142. ஊரார் நாட்டார் உலகர் கேவலைஶ்வர்யகாம ஸ்வதந்த்ரர்.
143. இறுகலிறப்புக்கும் இறந்தால் தங்குமூரொக்குமே.
144. சிறு சீரார் சுளகுகள் உப₄ய விவேக பரிகரம்
145. மாலை கங்குல் காலை பகல் ரஜஸ் தமஸ் ஸத்த்வ ஸுத்த ஸத்த்வ ஞானங்கள்.
146. நிலாமுற்றம் ப்ரஜ்ஞாப்ராஸாதம் என்னும் எல்லைநிலம்.
147. கலைவளை அஹம் மம க்ருதிகள்.
148. பட்டம் சூடகமாவன பராவரகுருக்கள் பூட்டும் ஆத்மபூ₄ஷணங்கள்.
149. பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன குணத்ரயவிசித்ரகர்ம ஸூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும் சுழன்றுழன்றும் பறிபட்டும் அற்பசாரமாமவையுமாய், மதீயமென்னில் விட்டகலவும், ததீ₃யமென்னில் இகழ்வறவும் முனிவதும் இக்காலம் .ஈதோ என்னப்படும் பொங்கைம்புலனில் போக்யாதி ஸமூஹம்.
இரண்டாம் ப்ரகரணம் முற்றிற்று.
அழகியமணவாளப்பெருமாள்நாயனார் திருவடிகளே ஶரணம்
திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே ஶரணம்
@@@@@@@@@@@
மூன்றாம் ப்ரகரணம்
150. சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ர ஶிஷ்ய ஸ்தாநே பேசும்.
151. விவேகமுகராய் நூலுரைத்து அள்ளலில் ரதியின்றி அணங்கின் நடையைப் பின் சென்று குடை நீழலிலே கவரியசையச் சங்கமவை முரல வரிவண்டிசை பாட மாநஸ பத்மாஸநத்திலேயிருந்து விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் படக் குடிச்சீர்மையிலே யாதல் பற்றற்ற பரமஹம்ஸராதலான நயாசலன் மெய்ந்நாவன்
152. என்பெறுதியென்ன ப்ரமியாது உள்ளத்துளூறிய மதுவ்ரதமாய் தூமதுவாய்கள் கொண்டு குழல்வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்துத் தேதெனவென்று ஆளம்வைத்துச் சிறுகால் எல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும் தகைவறப் புக்கு வண்டொத்திருண்ட குழலிலே ஶங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமேயூதி வண்டே கரியான தெய்வவண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதன் முனிவாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பியென்னும்.
153. கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார் கையிருந்து தயிர் நெய்யமர் பாலமுதுண்டு ஒருமிடறாய்ப் போற்றி ஒரு வண்ணம் திருந்த நுவலாததுக்கு என் பிழைக்கும் நீயலையே நல்வளம் துரப்பனென்னுமவற்றுக்கும் உகந்து சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே
154. ஆசறுதூவியென்னும் பாஹ்யாப்யந்தர ஶுத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதையற்றுத் தாய்வாயிலுண்ணும் பிள்ளைக்கிரை தேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவைகொண்டு நல்லபதத்தையும் வேண்டேனென்னும் தனிப்பெரும் பித்தர் நம்முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்.
155. பூண்டநாள் சீர்க் கடலையுட்கொண்டு, திருமேனி நன்னிறமொத்து, உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து, ஜ்ஞாநஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக் கண்டுகந்து, பரஸம்ருத்தியே பேறான அன்புகூரும் அடியவர், உறையிலிடாதவர், புயற்கை அருள்மாரி, குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்.
156. தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம்.
157. பகலோலக்கமிருந்து, கறுப்புடுத்துச் சோதித்து, காரியம் மந்த்ரித்து, வேட்டையாடி, ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம்.
158.தமருகந்த அடியோமுக்கே யென்னும் பின்னானார் வணங்குமிடத்திலே எல்லாம் பூர்ணம்.
159. வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி, வடிவுடை, கடலிடம், கட்கிலீ என்னுமவற்றில் இவள் திறத்தென்கொலோ வென்பிக்கிற வ்யூஹஸௌஹார்த்த ப்ரதாநம்.
160. மண்ணோர்விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழுலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம் உஜ்ஜ்வலம்
161. உபய ப்ரதாந ப்ரணவமான உறைகோயிலில் எத்தேவு மென்னும் பரேஶத்வம் பொலியும்.
162. வைஷ்ணவ வாமநந்தில் நிறைந்த நீலமேனியின் ருசிஜநக விபவ லாவண்யம் பூர்ணம்.
163. ருசிவிவஶர்க்குப் பாதமே சரணாக்கும் ஓளதார்யம் வானமாமலையிலே கொழுந்து விடும்.
164. களைகணற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும்.
165. மெலிவிலும் சேமம் கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்.
166. வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேஶஸ்த்தம்.
167. விளம்ப விரோதமழிக்கும் விருத்த கடநாஸாமர்த்யம் நன்னகரிலே விஸ்தீர்ணம்.
168. கடிதகடக விகடநாபாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்.
169.கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத்ஸகத்வம் புகுமூரிலே ஸம்ருத்தம்.
170. சென்று சேர்வார்க்கு உசாத்துணை யறுக்கும் ஸௌந்தர்யம் மாநகரிலே கோஷிக்கும்.
171. ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்தவ்ருத்தி நீணகரிலே.
172. ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டித ஆஶ்சர்யம் குளத்தே கொடிவிடும்.
173. ஶ்ரமமனம் சூழும் ஸௌகுமார்ய ப்ரகைஶம் ஆய்ச்சேரியிலே.
174. மஹாமதிகள் அச்சம் கெட்டு அமரும் ஶௌர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்.
175. ஸாத்ய ஹ்ருதிஸ்த்தனாயும் ஸாதநம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே.
176. அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும்.
177. போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்.
178. போகத்தில் தட்டுமாறும் ஶீலம் காட்கரையிலே கரை அழிக்கும்.
179. மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்.
180. பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணுபோதாந்ருஶம்ஸ்யம் நாவாயிலே நிழலெழும்.
181. ஶரண்யமுகுந்தத்வம் உத்பலாவதகத் திலே ப்ரஸித்தம்.
182. மார்க்கபந்து ஶைத்யம் மோஹநத்தே மடுவிடும்.
183. ஸiஸைந்ய புத்ர ஶிஷ்ய ஸாத்யஸித்த பூஸுரார்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை த்வாரத்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்தஶயநத்திலே வ்யக்தம்.
184. மோக்ஷ தாநத்தில் ப்ரணத பாரதந்த்ர்யம் வளம்மிக்க நதியிலே கரை புரளும்.
185. த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல்மிகுபொழிலிலே தழைக்கும்.
186. அங்கீகரிக்க அவகாஶம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெருநகரிலே பேர்பெற்றது.
187. இவற்றில் ப்ராவண்யம் இவள் பரமே என்னவுண்டாய் ஷோடஶகலா பூர்ணமான சந்த்ரமண்டலம் போலே பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே தேவபோக்யமானவதில் அம்ருதம் போலன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற்பத்தர் வானவர் என்னம்மான் பார்பரவென்னும்படி ஸேஶ்வரவிபூதி போக்யமான பாலோடமுதன்ன மென்மொழி முகம் செய்தது.
188. நீர் பால் நெய்யமுதாய் நிரம்பினவேரி நெளிக்குமாபோலே பரபக்த்யாதிமய ஜ்ஞாநா ம்ருதாப்தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழிபட்டு அவாவிலந்தாதி என்று பேர்
189. மனம்செய் எல்லையில் ஞானவின்பத்தை நின்மலமாக வைத்தவர் ஞானப்பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வவிவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸௌலப்ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்ரியதோஷபல, மந:ப்ராதாந்ய, கரணநியமந, ஸுக்ருதிபேத, தேவாஸுரவிபாக, விபூதியோக, விஶ்வரூபதர்ஶந, ஸாங்கபக்தி, ப்ரபத்தி த்வைவித்யாதி களாலே அன்றோதிய கீதாஸமம் என்னும்.
190. அது தத்த்வோபதேஶம்; இது தத்த்வதர்ஶி வசநம்.
191. அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச்சொன்னது; இது நாடாகத் தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான் சொன்னது
192. அங்கு நம்பிசரணென்று தொடங்கி முடிவில் அப்ரியமென்றது; இங்கு பரமே என்றிழிந்து பொலிகவென்று உகந்தது.
193. அதில் ஸித்த தர்மவிதி; இதில் வித்யநுஷ்டாநங்கள்.
194. பகவன் ஞானவிதி பணிவகையென்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்.
195. வேதவேத்ய வைதிகோபதேஶம் ஆவித்யரளவிலே; அஜ்ஞர் ஜ்ஞாநிகள் ஜ்ஞாநவிஶேஷயுக்தர் ஸர்வஜ்ஞனென்னாமல் இவர் திருத்துவர்.
196. அறியாதார்க்கு உய்யப்புகுமாறும், இக்கரையேறினார்க்கு இன்ப வெள்ளமும், நிலையறியாதார்க்கு ஆழங்காலும், கரையேற்றுமவனுக்கு நாலாறும் அறிவிக்க வேணும்.
197. அவன் முனிந்தார்க்குத் தாம் கண்டது; தம்மை முனிவார்க்குத் தம் கண்; காணாதது காண்பார்க்குக் கண்மாறும் இடம்; ராகாந்தனுக்கு மாயாதோஷம் இவர் காட்டுமவை.
198. ஸாதந ஸாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவேஶ்வரர்க்கு வீடுமின் நினைமின் பிடித்தேன் விடுவேனோ வைத்தெழவூது வாடிநிற்கக் கன்மமன்று ஆன்பின் கைகழியேல் உழிதராய் என் சொற்கொள் என்று இவர் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்.
199. கதிர்ஞானமூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தமமூடுவார்க்கு வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே.
200. உயிர் மாய்தல் ஆழுமென்னாருயிர் என்னும் பரது:கம் ஸஹியாமை இரண்டிலுமுண்டு.
201. என்னதுன்னதாவியிலே அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும்.
202. இருத்துமெண்டானாய்ப் பொய்கலவாது அன்பு செய்து பற்றிலனாய் க்ஷுத் த்ருட் பீடித நிர்த்தநரைப்போலே கண்டு கொண்டுண்டு பருகிப் பரிஜனாதிகளோடே தன்னைத்தந்து என்செய்வன் என்றேயிருந்து அகிலபரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லுநன்பகலும் போகு என்றாலும் அகல்வானுமல்லனாய், போகேலென்றால் உகப்பையும் தவிர்ந்து விதிவகையே நடத்துமவனே உபதேஶ ஸத்பாத்ரம்.
203. நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஶ்ந ஸேவாபரர்க்கு உளங்கொள் பேசுமளவன்றென்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச்சொல் எவ்வுயிர்க்குமறியவென்று அடைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஶிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க க்ருபையுமிறே.
204. தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது.
205. க்யாதிலாப பூஜாபேக்ஷையற மலர் நாடி ஆட்செய்ய உய்யக் கொண்டு ஆரைக் கொண்டு வாளும்வில்லும் கொண்டு என்கிற இழவுகள் தீரப்பெற்றது.
206. ப்ரஹ்மநிஷ்டரும் ஸம்வத்ஸரவாஸிகளுமாகில் ஏபாவம் பயனன்றாகிலும் சேராது.
207. மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவகர்ப்போபதேஶம்.
208. இவற்றுக்கு மந்த்ரவித்யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.
209. அளிப்பானடியேனடைக்கலம் சூடிய பொய் யாதானும் அழுந்தாரென்று ஸ்வரூபவிரோதி நிவ்ருத்திகளையும், தாமரையுந்திப் பெருமாமாயனாளாகவே வாழிய என்று ப்ராப்ய பலங்களையும், நெறிகாட்டி மனத்துக்கொண்டு கண்ணனாலடித்துக் கண்டிலமால் யாதாகிலென்று உபாயத்தையும் சொன்னவை மந்த்ர ஶ்லோகங்களோடே சேரும்
210. த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி யென்றது ஸாரஸங்க்ரஹத்திலே.
211. மூன்றில் சுருக்கிய ஐந்தையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக் கொண்ட நோற்ற நாலும் எம்மா ஒழிவில் நெடு வேய் என்கிற இருபதிலே விஶதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும், அருளினன் வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும், தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணிசெய்யென்கிற முக்த லக்ஷணவ்ருத்தியாலே இரண்டிலொன்றையும் இதுக்கு ப்ரமேயமென்னும். .
212. ரஹஸ்யத்துக்கோரெழுத்தும் அதுக்கோருருவும் போலேயானவற்றிலே, இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே, அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஶ்வர பந்தரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதியோக ததீயாபிமாநோபதேஶவிஷய அந்யாபதேஶ ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம்.
213. அடி தொழுதெழென்ற இதிலே வஸ்துநிர்த்தேஶ நமஸ்கார
214. சாதுசனம் நண்ணா மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர் அடிமையறவுரிய நோய்களறுக்கும் உடைந்து ஏற்றரும் வானின் தாளின்கீழ் அடிக்கீழ் இன்பக்கதி பயக்கும் ஊடுபுக்கு மூவுலகும் உருகாநிற்பர் என்னும் ஸாம்யத்தாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்ப்பாவம்.
215. ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்து என்னுமவை போலே நூறேசொன்ன பத்துநூறு ஓராயிரமென்றதும் ஸாபிப்ராயம்.
216. பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஶப்பத்து.
217. பகவத் பக்த பரங்கள் ஆஶ்ரயண விதி ஶேஷங்கள்.
218. பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஶரண்யத்வ, ஶக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்திஹரத்வ விஶிஷ்டன் மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலைசேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷபலவ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த பலாந்யருசி யொழிந்து, விரக்திபல ராகம் கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஶநபலப்ராப்தி மரணாவதியாகப் பெற்று, காலாஸத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறரறியப் பத்துத்தோறும் வெளியிடுகிறார்.
முன்றாம் ப்ரகரணம் முற்ருப்பெற்றது.
அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே ஶரணம்
@@@@@@@@@@
நான்காம் ப்ரகரணம்
219. (1) பரபரனாய்நின்ற வளவேழ்வைப்பாமவையுள் உம்பர் வானவரதிபதி, மயர்வறமன்னி மனம் வைக்கத் திருத்தி (2) மறக்குமென்று நல்கிவிடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன் என்சொல்லி மறப்பனோ என்னும்படி தத்த்வஜ்ஞரானவர் (3) சுடரடியெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி (4) வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷ குணபரித்யாக ஸமர்ப்பணக்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஶித்து, (5) எளிதாக அவதரித்துப் பிழைகளை ஸஹித்துப் புரையறக் கலந்து அல்பஸந்துஷ்டனாய் அம்ருதமே ஔஷதமாக்கி, (6) நீர்புரையத் தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்திகணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு, (7) எளிமையும் இனிமையுமுண்டு, தொழுதால் அரும் பயனாயதரும், உத்யோகத்தே வினைகளும் மாளும், அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வுகொண்டு நலம் செய்வதென்று தாம் மயர்வறமதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதற்பத்தில்.
220. (1) சோராத மூவா வேர்முதலாய் உலகம் படைத்தவனென்கிற சிதசித்த்ரய த்ரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க உள்ளம் தேறித் தூமனம் மருளிலென்னும் ஜ்ஞாந பலமான ஒளிக்கொண்ட மோக்ஷம் தேடிவாட, (2) உலராமலாவிசேர்ந்து சிக்கெனப் புகுந்து ஸம்பந்திகளும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபயாநுகுணமாக்கினவர், (3) ஆஶ்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபலப்ரதத்வ காரணத்வ ஶேஷஶாயித்வ ஶ்ரிய:பதித்வ ஸௌலப்யாதி களைத் திண்ணன் அணைவதென்று வெளியிட்டு, (4) கள்வாதீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும் காட்டி, (5) புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷஸாதந து:க்காநந்தரஸம் முன்னாக விதிக்கிற அந்தர்கத குணோபாஸநத்தை, (6) மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக் கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல் செய்யும் க்ஷேத்ரவாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷிண கதிசிந்தநாத்யங்கயுக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்.
221. (1) முழுதுமாய் எங்கணு மொழிவற அருவாகி நின்று தோய்விலனாம் ஸர்வ வ்யாபகன் தீர்ந்தவடியார்களைத் தாளிணைக் கீழ்க் கொள்ளும் தன் படிக்கும், (2) நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி அலமருகின்றேன், வேரற வரிந்து எந்நாளெங்குவந்து தலைப் பெய்வனென்று கழித்துப் புகும் தம் காதலுக்கும் ஸத்ருஶமாகக்கண்டு கொள்ளென்னும், (3) ஊனமில் மோக்ஷ பலமான முடிச்சோதியிலநுபவத்தாலே நித்யவஸ்து நீடுபெற்று அவச்சேதமற்ற அடிமை செய்ய வேண்டும்படி ஸர்வாத்மபாவத்தைப் புகழ்ந்து, (4) சொல்லிப் பாடியேத்திப் பிதற்றியெழுந்தும் பறந்தும் துள்ளிக் குனித்துத் தடுகுட்டக்கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதியுகள, தம்மடியாரென்ன உடன் கூடும் ஸாத்யம் வளர, (5) பைகொள் பாம்புபோலே இந்த்ரியவ்ருத்தி நியமமறப் பாட வந்த கவியன்றிக்கே படைத்தான் ஶ்லோக க்ருத்தாய், (6) குறை முட்டுப் பரிவிடர் துயர் துன்பமல்லல் துக்கம் தளர்வு கேடுகளின்றி அம்ருதாநந்தமக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதலென்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாமென்றவை பரத்வமாம்படி, (7) அவனாகும் ஸௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி வழியைத் தருமவன் நிற்க இழியக் கருதுவதென்னாவது? வேண்டிற்றெல்லாம் தரும், தன்னாகவே கொள்ளும், கவிசொல்ல வம்மினென்று (8) முக்தைஶ்வர்யத்தை முன்னிட்டு ஶ்வ வ்ருத்தியை மாற்றி ஸ்வவ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்.
222. (1) ஈசனை ஈசன் ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வ்யாப்தி, நிறம்பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வநியந்தா, ஒழிவில் காலத்துக்குச் சேரப் பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கிப் (2) போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையல் ஏறியபித்தாய், (3) தேஶதூரத்துக்குக் கூவியும் கொள்ளாயென்றது தீர, கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட, வீவிலின்பம் கூட்டினையென்று முக்தபோக மாநஸப்ராப்திபலமான தேவதாந்தர ஆத்மாத்மீய லோகயாத்ரைஶ்வர்ய அக்ஷரங்களில் வைராக்யம், உன்னித்து, உயிருடம்பினால் கொடு உலகம் வேட்கை யெல்லாம் ஒழிந்தேனென்னவுடையரானவர், (4) ஒருநாயகமென்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்மாநுபவ அல்பாஸ்த்திரத்வ ஸாவதிகத்வாதிகளையும், (5) ஆடு கள்ளிறைச்சி கரும்செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந்தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையை யும், (6) பேசநின்ற தேவதாஜ்ஞாநாஶக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும், (7) இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டிமத தமோ நிஷ்டதையையும் சொல்லி, ஓடிக் கண்டீர் (8) கண்டும் தெளியகில்லீர் அறிந்தோடுமின் ஆட்செய்வதே உறுவதாவதென்று விரக்தி பூர்வகமாக ஆஶ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம்பத்தில்.
223. (1) ஆவாவென்று தானே தன்னடியார்க்குச் செய்யும் தொல்லருளென்று பரத்வாதிகளையுடையவன் எவ்விடத்தானென்னும் பாவியர்க்கும் இருகரையுமழிக்கும் க்ருபாப்ரவாஹ முடையவன் பொய் கூத்து வஞ்சக்களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்திபல பரமாத்மராகம், (2) பேரமர் பின்னின்று கழியமிக்கு யானேயென்ன வாய்ந்தாற்ற கில்லாது நீராய் மெலிய ஊடுபுக்கு வளர, (3) விஷ வ்ருக்ஷபலங்கள் கைகூடினவர் அடிமை புக்காரையும் ஆட்செய்வாரையும் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர்குழாங்களைக் கண்டு காப்பிட்டு ப்ரஹ்லாத விபீஷணர் சொற்கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து, (4) தேஶ காலதோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள், நீங்கள் நிறுத்துகிற வர்களை தேவதைகளாக நிறுத்தினவனை, (5) மேவிப் பரம்புமவரோடொக்கத் தொழில் யுகதோஷமில்லையாமென்று விஷ்ணுபக்திபரராக்கிக் கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி ஸித்தாஞ்ஜநத்தையிடுகிறார் அஞ்சாம்பத்தில்.
224. (1) என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மினென்று கருணையாலே ஸர்வலோகபூதேப்ய: என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலும் ஆகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற ஶரண்யன் (2) அஜ்ஞாநாஶக்தி யாதாத்ம்ய ஜ்ஞாநங்களளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணரா யென்னும்படி மெய்யமர் பக்தி பூமபலமாகவும் அநந்யகதித்வமுடைய தமக்குப் (3) பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டு ஏகசிந்தையராய் திர்யக்குக்களையிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து விளம்பரோஷம் உபாயத்தாலேயழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க, பலித்தவாறே ஸப்ரகாரமாக ஸக்ருத் கரணீயமென்று புராண பௌராணிகள் த்யாஜ்யாம்ஶமாக்கின (5) சிதசித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களைக் கைவலிந்து கைகழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய ஶேஷமாக்கியும் புறத்திட்டுக் காட்டியென்று ப்ரஸங்கிக்கில் முடியும்படி விட்டு, (6) தந்தை தாய் உண்ணும்சோறு மாநிதி பூவையாவையுமொன்றேயாக்கி, (7) தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரிவிக்கிரமனாகக் குறள்கோலப் பிரானாய் அடியை மூன்றையிரந்த வன்கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தடவந்த தடந்தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும்படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு அகலகில்லேனென்று பூர்வ வாக்யமநுஸந்தித்தவர் (10) பிணக்கறத் தொடங்கி வேதப் புனித விறுதி சொன்ன ஸாத்யோபாய ஶ்ரவண ஸஶோக ஸஜாதீயர்க்குத் (11) தந்தனன் மற்றோர் களைகணிலம் புகுந்தேனென்று ஸ்வஸித்தோபாய நிஷ்டையை உக்த்யநுஷ்டாநங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில்
.
225. (1) எண்ணிலாக் குணங்கள் பாலதுன்ப வேறவன் மாயாப் பல்யோகு செய்தி யென்னும் ஆஶ்சர்ய ஶக்தி யோகத்தாலே (2) தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம் புற்பா எறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல ஸர்வஶக்தி பாதமகலகில்லாத தம்மை (3) அகற்றுமவற்றின் நடுவேயிருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஓவென்று ஸாதனபலமான ஆக்ரோஶத்தோடே பழியிட்டுக் (4) கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியைக் கோயில் திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கித் தேற்ற வொண்ணாதபடி (5) தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பலாதாநம் மற்றும் கற்பாரிழவிலே சுவறிப் (6) பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து, சூழவும் பகைமுகம் செய்ய, எடுப்பும் சாய்ப்புமான க்லேஶம் நடக்க உபாயாதிகாரதோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்ரியைக் கேட்க,
(7) ஐச்சமாக இருத்தி உறக்கொண்ட ஸ்வபர ப்ரயோஜநத்தை அருளிச்செய்ய, என்சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பெதிர் எதுவுமென்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8) தன்சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்கவிருந்த நிலத்தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காநகோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர், (9) சரமோபாய பரரானார்க்கு நீணகரமது, துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம் உள்ளித் தொழுமின் என்று ப்ராப்ய ஸாதநாவதியை ப்ரீதியாலே ப்ரகாஶிப்பிக்கிறார் ஏழாம் பத்தில்.
226. (1) தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்னும்படி ஶக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளையுடைய ஸத்யகாமன் கொண்ட வாக்வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் ஶங்கையும் அச்சமும்தீர, (2) தலைச்சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக வேந்தர் தலைவன் கந்யகாதாநம் போலே ஆரத்தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப் பணைத்து (3) ஜந்மபாஶம்விட்டு ஆத்வாரம் ஆளுமாளார் என்று பரிந்து அநுரூபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தஶையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து, (4) தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷபோகமாக்கினவன் (5) மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய் மறுவலிடாமல் சிறியேனென்றதின் பெருமையைக் காட்ட (6) தேஹாதிகளில் பரமாய், நின்று நினைக்கில் லக்ஷ்மீ துல்யமாய் அவர்க்கே குடிகளாம் பரதந்த்ரஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர் (7) ஸ்வஸாதந ஸாத்யஸ்தர் இருகரையராகாமல் மண்ணவரும் வானவரும் நண்ணுமத்தையே குறிக் கொண்மின் உள்ளத்தென்று ப்ராப்யைக பரராக்குகிறார் எட்டாம் பத்தில்.
227. (1) எண்டிசையும் அகல்ஞாலம் எங்கும் அளிக்கின்ற ஆலின் மேலென்னும்படி நித்யபோகபாத லீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்கும் ஆபத்ஸகன் (2) ஆருயிர் என்னப்படுத்தின ஆத்ம தர்ஶநபலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுகவிட்டு (3) ஏகமெண்ணிக் காணக்கருதி எழ நண்ணி நினைதொறும் உருகிய அலற்றிக் கவையில் மனமின்றிப் பதினாலாண்டு பத்துமாஸம் ஒருபகல் பொறுத்தவர்கள் ஒருமாஸ தின ஸந்த்யையில் படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக் கீடாக (4) இனிப்பத்திலொன்று தஶம தஶையிலே பேறென்று நாட்கடலாகத் தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர் (5) இம்மடவுலகர் கண்டதோடு பட்ட அபாந்தவ–அரக்ஷக–அபோக்ய–அஸுக–அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி (6) மற்றொன்று கண்ணனல்லால் என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம், (7) அதில் துர்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம் ஸாங்கபக்தி, அதில் அஶக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி, (8) அதில் அஶக்தர்க்கு உச்சாரண மாத்ரம், ஸர்வோபாய ஶூந்யர்க்கு இப்பத்தும் பாடியிடும் தெண்டனென்று கீதாசார்யனைப் போலே அதிகாராநுகுணம் நெறி
எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில்.
228. (1) சுரிகுழல் அஞ்சனப் புனல்மைந்நின்ற பொல்லாப்புனக் காயாவென்னும் ஆபத்தில் கொள்ளும் காமரூப கந்த ரூபத்தாலே ப்ரபந்நார்த்திஹரனானவன் (2) அருள்பெறும் போதணுகவிட்டதுக்குப் பலமான வானேறும் கதிக்கு அண்ட மூவுலகும் முன்னோடிக் கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி அமுதமளித்த தயரதன் பெற்ற கோவலனாகையாலே வேடன், வேடுவிச்சி, பக்ஷி, குரங்கு, சராசரம், இடைச்சி, இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிணவிருந்து, வேண்டடிசில் இட்டவர், அவன்மகன், அவன்தம்பி, ஆனை, அரவம், மறையாளன், பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித்துணையாக்கி (3) அறியச்சொன்ன ஸுப்ரபாதத்தே துணைபிரியாமல் போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர், ஸஞ்சிதம் காட்டும் தஶையானவாறே
(4) முந்துற்ற நெஞ்சுக்குப் பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யா க்ருத்யங்களை விதி4த்து நெஞ்சுபோல்வாரைத் தொண்டீரென்றழைத்து, (5) வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதுமென்று கர்த்தவ்யம் ஸ்மர்த்தவ்யம் வக்தவ்யம் ஶ்ரோதவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யமெல்லாம் வெளியிட்டுப் (6) பிணக்கறவைச் சார்வாக நிகமித்து (7) எண்பெருக்கிலெண்ணும் திருநாமத்தின் ஶப்தார்த்தங்களைச் சுருக்கி மாதவனென்று த்வயமாக்கி, கரணத்ரயப்ரயோகவ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக் கையோலை செய்து கொடுத்துச் செஞ்சொற்கவிகளுக்குக் கள்ளவழி காவலிட்டு (8) மனம் திருத்தி வீடுதிருத்தப் போய் நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம் புறப்பட்டவாக்கையிலே புக்குத் தானநகர்களை அதிலே வகுத்துக் குரவை துவரைகளில் வடிவு கொண்ட சபலனுக்கு தேஹதோஷம் அறிவித்து (9) மாயையை மடித்து வானேதரக்கருதிக் கருத்தின்கண் பெரியனானவனை இன்று அஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்யநாதர ஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க, (10) இந்த்ரியகிங்கரராய்க் குழிதூர்த்துச் சுவைத்தகன்றீர் என்னில், அவை யாவரையும் அகற்ற நீ வைத்தவையென்பர்; அது தேஹ யோகத்தாலே என்னில், அந்நாள் நீ தந்த சுமடென்பர்; முன்செய்த முழுவினையாலே என்னில், அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளுமென்பர்; (11) ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில், ஆங்காரமாய்ப் புக்குச் செய்கைப் பயனுண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்; (12) யானே எஞ்ஞான்றும் என்றத்தாலேயென்னில்; அயர்ப்பாய்ச் சமயமதி கொடுத்து உள்ளம் பேதம் செய்கை உன் தொழிலென்பர்; ஜீவப்ரக்ருதி சைதந்யம் நீங்கும் வ்ரதஹேது; அகமேனியிலழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்; (13) தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்; ஸௌஹார்தம் எஞ்ஞான்றும் நிற்கும்; பிணக்கிப் பேதியாத ஜ்ஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில் அல்லல்மாய்த்த யத்ந பலித்வங்கள் நம்மது;
(14) நாம் தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே யென்னும் ஸர்வஜ்ஞர் இவர்;
(15) நெறிகாட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க,
(16) அமந்த்ரஜ்ஞோத்ஸவ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேகஸமுத்ர பேரீகீத காஹள ஶங்காஶீஸ்ஸ்துதி கோலாஹலம் செவிப்பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்திக்குத் (17) தலைமிசையாய் வந்த தாள்களைப் பூண்டு போகாமல் தடுத்துத் திருவாணையிட்டுக் கூசம் செய்யாத செய்திப் பிழை; (18) பற்றுக் கொம்பற்ற கதிகேடு, போரவிட்ட பெரும்பழி; (19) புறம்போனால் வருமிழவு, (20) உண்டிட்ட முற்றீம்பு, அன்புவளர்ந்த அடியுரம், உயிருறவு (21) முதலளவு துரக்கைகளாலே பெறாவாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல் போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார் பத்தாம் பத்தில்.
229. உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது, நாடுதிருந்த நச்சுப் பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம் தலைக்கட்ட, வேர்சூடுவார் மண்பற்றுப்போலே என்னுமவற்றிலும் இனி இனியென்று இருபதின்கால் கூப்பிடும் ஆர்த்தி அதிகார பூர்த்திக்கென்னுமது முக்யம்.
230. கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதி கண்டேனென்று பத்தும் உட்கண்ணாலேயாய், காண்பானவாவுதல் அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும் பரஜ்ஞாநகர்ப்ப பரபக்தி.
231. இருந்தமை என்றது பூர்ண பரஜ்ஞாநம்.
232. முடிந்த அவாவென்றது பரமபக்தி.
233. இவை ஜ்ஞாந–தர்ஶந–ப்ராப்தி அவஸ்த்தைகள்.
234. அவித்யாநி வர்த்தக ஜ்ஞாந பூர்த்திப்ரத பகவத்ப்ரஸாதாத் மோக்ஷலாபம் என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்தைகார்த்யம்.
நான்காம் ப்ரகரணம் முற்றுப்பெற்றது.
அழகியமணவாளப்பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே சரணம்
@@@@@@