[highlight_content]

Acharya Hrudayam Prk 03

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த

ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம்

மூன்றாம் ப்ரகரணம்

150.         சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ர ஶிஷ்ய ஸ்தாநே பேசும்.

இனிமேல் இவர் தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில், (சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி)  பகவத்விஷயத்தில் கடகரைப் பக்ஷிகளாக்கி,  (ஜ்ஞாநகர்மங்களைச் சிறகென்று) “உபாப்யாமேவ பக்ஷாப்யாமாகாஶே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாநகர்மாப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம:” (நரஸிம்மபுராணம்.61-11) என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச் சிறகாக உடையரான  குரு ஸப்ரஹ்மசாரி ஶிஷ்யபுத்ர ஸ்தாநீயராயுள்ளாரைப் பக்ஷி முதலானவையாகப் பேசக் கடவது.

151.        விவேகமுகராய் நூலுரைத்து அள்ளலில் ரதியின்றி அணங்கின் நடையைப் பின் சென்று குடை நீழலிலே கவரியசையச் சங்கமவை முரல வரிவண்டிசை பாட மாநஸ பத்மாஸநத்திலேயிருந்து விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் படக் குடிச்சீர்மையிலே யாதல் பற்றற்ற பரமஹம்ஸராதலான நயாசலன்  மெய்ந்நாவன் நாதயாமுநர் போல்வாரை அன்னமென்னும்.

குணஸாம்யத்தாலே ஆசார்யஸ்தாநீயராயுள்ளாரை அன்னம் என்கிறது என்கிறார், விவேகமுகராய் என்று தொடங்கி.  (விவேகமுகராய்) அன்னமாவது நீரக்ஷீர விபாகம் பண்ணுமதொன்றாகையாலே ஸாராஸாரவிவேகோந்முகராய்.  (நூலுரைத்து) “அன்னமதாய் அன்றங்கறநூலுரைத்த” (பெரிய திருமொழி.11-4-8) என்று ஹம்ஸரூபியாய்க் கொண்டு  ஶாஸ்த்ர ப்ரதாநம் பண்ணினாப்போலே இவர்களும் ஶ்ரோதாக்களைக் குறித்து ஶாஸ்த்ரங்களை உபதேஶித்து. (அள்ளலில் ரதியின்றி) “ராகாதிதூஷிதே சித்தே நரஸ்பதீ மதுஸூதந: நபத்நாதிரதிம் ஹம்ஸ: கதாசித் கர்த்தமாம்பஸி” (விஷ்ணு தர்மம்.1-11) என்று அந்த அன்னமானது  கர்தம ஜலத்தில்  பொருந்தாதாப்போலேஅழுந்தார் வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே” (திருவிருத்தம் 100) என்று ஸம்ஸார கர்தமத்திலே பொருத்தமுடையரன்றிக்கே. (அணங்கின் நடையைப் பின்சென்று) “அன்னநடைய வணங்கே” (பெரிய திருமடல்.7) என்றும், “அன்னம் பெய்வளையார்தம் பின் சென்று” (பெரியதிருமொழி.6-5-5) என்றும் சொல்லுகையாலே அநந்யார்ஹ ஶேஷத்வாதிகளாலும், புருஷகாரபாவத்தாலும் ஹம்ஸகதியான பெரிய பிராட்டியாரைப் பின்சென்று. (குடைநீழலிலே கவரியசைய) “அன்னமென் கமலத்தணி மலர்ப்பீடத்து அலைபுனலிலைக்குடைநீழல் செந்நெலொண்கவரி அசைய வீற்றிருக்கும்” (பெரிய திருமொழி.9-1-5) என்றும்,  “சங்கமவை முரலச் செங்கமல மலரை யேறி” (பெரிய திருமொழி.7-8-2) என்றும், “வரிவண்டிசைபாட அன்னம் பெடையோடுடனாடும்” (பெரிய திருமொழி.7-5-9) என்றும் மாநஸ பத்மாஸநத்திலேயிருந்து அன்னமானது மேலே எழுந்த தாமரை இலை குடையாகவும், பக்வபலமான செந்நெல்லினுடைய அசைவுகள் கவரியாகவும் சங்குகளி னுடைய த்வநி தூர்யகோஷமாகவும் வண்டுகளுடைய மிடற்றோசை பாட்டாகவும் மாநஸ ஸரஸ்ஸில் திருமேனி” (திருவாய்மொழி.9-7-3) என்று பத்மபத்ரநிப ஶ்யாமமான திருமேனியைத் தங்களுக்கு ஒதுங்க நிழலாக உடையராய்,  பரிபூர்ணஜ்ஞாநர்  அநுகூலவ்ருத்திகளைப் பண்ண ஶுத்தஸ்வபாவர் ஸ்தோத்ரம் பண்ண ஸாரக்ராஹிகள் ஸாமகாநம் பண்ண, “போதிற் கமல வன்னெஞ்சு” (பெரியாழ்திரு5-2-8) என்கிறபடியே ஶிஷ்யர்களுடைய மாநஸபத்மத்தை வாஸஸ்தாநமாக உடையராய் (விதியினால் இடரில் இத்யாதி குடிச்சீர்மையிலேயாதல்) “விதியினால் பெடைமணக்கும்” (திருவாய்மொழி.1-4-3என்றும், “இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்” (திருவாய்மொழி.6-1-4) என்றும், “அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையும்” (திருவாய்மொழி.6-8-10) என்றும்மிகவின்பம் படமேவும் மென்னடைய அன்னங்காள்” (திருவாய்மொழி.9-7-10) என்றும் சொல்லுகிறபடியே வித்யுக்த ப்ரகாரத்திலே ஸாம்ஸாரிக ஸகல து:க்கங்களும் தட்டாதபடியாகவும் ஒரு விச்சேதமும் வாராதபடியாகவும் மேல்மேலென ஆநந்தமபிவ்ருத்தமாம்படியாகவும், “குடிச்சீர்மையில் அன்னங்கள்” (திருவிருத்தம்.29) என்கிறபடியே புத்ரதாராதிகளோடேயிருந்து பகவதநுபவம்  பண்ணுகிறநளிர்ந்தசீலன் நயாசலன்” (பெரியாழ்.திரு. 4-4-8) என்று சொல்லுகிற செல்வநம்பி, “மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்” (பெரியாழ்.திரு.4-9-11) என்கிற பெரியாழ்வார் போல்வாரையும், (பற்றற்ற பரமஹம்ஸரான) “பற்றற்றார் பயிலரங்கம்” (பெருமாள் திருமொழி.1-4) என்று ஸாம்ஸாரிக ஸகல ஸங்கத்தையும் விட்டு உத்தமாஶ்ரமிகளாய் பரம ஹம்ஸராயிருக்கிற நாதமுனிகள் யாமுநமுனிகள் போல்வாரை அன்னம் என்கிறது என்கிறார்.

 152.    என்பெறுதியென்ன ப்ரமியாது உள்ளத்துளூறிய மதுவ்ரதமாய் தூமதுவாய்கள் கொண்டு குழல்வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்துத் தேதெனவென்று ஆளம்வைத்துச் சிறுகால் எல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும் தகைவறப் புக்கு வண்டொத்திருண்ட குழலிலே ஶங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமேயூதி வண்டே கரியான தெய்வவண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதன் முனிவாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பியென்னும்.

(என்பெறுதியென்ன ப்ரமியாது) “ஏரார் மலரெல்லாமூதி நீ என்பெறுதி” (பெரிய திருமொழி.8-4-5) என்று நிவர்த்திப்பிக்க வேண்டாதபடி அப்ராப்த போக்யங்களிலே ப்ரவணரன்றிக்கே, (உள்ளத்துளூறிய மதுவ்ரதமாய்) “உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை” (பெரிய திருமொழி.4-3-9) என்று பகவத்விஷயத்திலே பக்வமான ஸ்நேஹத்தை உடையராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுள்ளத்திலே ஊறியிருப்பதாய்  “ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்என்று நிரதிஶயபோக்யமான பகவத் குணமாகிற மதுவைதவாம்ருதஸ்யந்திநிஎன்று தொடங்கிமதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே” (ஸ்தோத்ரரத்நம்.27) என்கிறபடியே புஜிக்கையே வ்ரதமாக உடைத்தாய். (தூமது வாய்கள் கொண்டு) “தண்டுளவமுண்ட தூமது வாய்கள் கொண்டு” (திருவாய்மொழி.6-8-3) என்று பகவத் போக்யதையை அநுபவிக்கையாலே பரிஶுத்தமாய் இனிதான வாயைக் கொண்டு. (குழல் வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்து)  “ஓடிவந்தென் குழல் மேல் ஒளிமாமலர் ஊதீரோ” (திருவாய்மொழி.6-8-3) என்றும், “வைகுந்தமன்னாள் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும் மலருளவோ நும் வியலிடத்தே” (திருவிருத்தம்.55) என்றும், “மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு” (பெரிய திருமொழி.6-6-1) என்றும், “நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன்” (திருவாய்மொழி.4-10-11) என்றும் பரத்வாதிகளிலே போக்யதையையும் பரிச்சிந்நமென்னும்படியாய் பகவதநுபவஜநித ப்ரீதியாலே விஸ்த்ருதமாயிருக்கிற ஆழ்வாருடைய போக்யதையை புஜித்து. (தேதெனவென்று ஆளம் வைத்து) “வரிவண்டு தேதெனவென்று இசைபாடும்” (பெரிய திருமொழி.4-1-1) என்றும், “யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கம்” (பெரியாழ்.திரு.4-8-6) என்றும் இப்படி பகவத்பாகவத குணங்களை யநுபவித்துண்டான செருக்குக்குப் போக்குவீடாக ஆளத்தி வைத்து, (சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக்கொள்ளப் பாடி)  “அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமஞ்சொல்லி சிறுகாலைப் பாடும்”, (பெரியாழ்.திரு.4-2-8) “எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம் பாடும்” (பெரியாழ்திரு-4-8-8) “வண்டு குறிஞ்சி மருளிசைபாடும்” (பெரிய திருமொழி.2-1-2), “வண்டினங்கள் காமரங்களிசைபாடும்” (பெருமாள் திருமொழி 8-4), `கந்தாரமந்தேனிசைபாட (பெரிய திருமொழி.3-8-1), “பண்கொள் தலைக் கொள்ளப் பாடி” (திருவாய்மொழி.3-5-2) என்று காலோசிதமான பண்களிலே பண்கள் தலைமேற் பொரும்படி பாடி, (துன்னிட்டு நெருக்கி நீக்கென்று) “துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல்” (பெருமாள் திருமொழி.4-3), “சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க” (திருப்பள்ளியெழுச்சி.7) என்கிறபடி திருவாசல்களிலேநேச நிலைக்கதவம் நீக்கு” (திருப்பாவை.16) என்றுபொன்னியலுமாடக் கவாடம் கடந்து புக்கு” (பெரியதிருமடல். 73) என்கிறபடியே தகைவறப் புக்கு (வண்டொத்திருண்ட குழலிலே சங்ககையற மருவி) “நீமருவி அஞ்சாதே நின்று” (திருநெடுந்தா..26) என்று பாடுமவர்களாகையாலே ஶங்கையற பகவத் ஸமீப வர்த்தியாய் மருவி (அருளாதயாமென்று ஓடிவந்து வாசமேயூதி) “அருளாத நீரருளி” (திருவாய்.1-4-6) என்றும், “யாமிதுவோ தக்கவாறு” (திருவாய்மொழி.6.8.4) என்றும், “ஓடிவந்தென் குழல்மேல்” (திருவாய்..6-8-3) என்றும், “துளவின்வாசமே வண்டுகொண்டூதுமாகில்” (பெரிய திரு..11-1-9) என்றும் இத்தலையிலார்த்தியை அவனுக்கறிவித்து அவனுடைய விஷயீகாரத்தை இத்தலைக்குண்டாக்கி இத்தலையில் ஸௌமநஸ்யத்தைத் தாங்கள் அநுபவித்து அத்தலையில் போக்யதையாலே இத்தலையை ஆஶ்வஸிப்பித்து (வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்) “கொங்குண்வண்டே கரியாக” (பெரிய திருமொழி.9-3-4) என்று ஶாகாக்ர ஸாராஸாரக்ராஹியாய் ஷட்பதநிஷ்டராய் பக்ஷத்வயத்தை உடைத்தாகையாலே அப்ரதிஹதகதியான மதுகரத்தை முன்னிட்டு  அங்கீகரிப்பானுமாய்தூவியம் புள்ளுடைத் தெய்வவண்டு” (திருவாய்மொழி.9-9-4) என்று வேதாந்த வேத்யனாய்தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வர:” என்கிற ஸாரக்ராஹியாயிருக்கிற ஈஶ்வரனோடே சேர்க்கிறசேமமுடை நாரதனார்” (பெரியாழ்.திரு.4-9-5) என்று  பகவத் குணாநுபவஜநித ஹர்ஷத்தாலே ந்ருத்த கீத பரனாயிருக்கிற  ஸ்ரீநாரதப்ரஹ்மருஷி, முநிவாஹநர் என்கிற திருப்பாணாழ்வார், திருவாய் மொழி பாடுகையே தங்களுக்கு போக்யமாயிருக்கிற தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும் என்கிறார். இவர்களை ஸப்ரஹ்மசாரிகள் என்கிறது அநுபாவ்ய விஷயத்தில் ஐக்யத்தினாலே.

153.     கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார் கையிருந்து தயிர் நெய்யமர் பாலமுதுண்டு ஒருமிடறாய்ப் போற்றி ஒரு வண்ணம் திருந்த நுவலாததுக்கு என் பிழைக்கும் நீயலையே நல்வளம் துரப்பனென்னுமவற்றுக்கும் உகந்து  சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே கற்பியாவைத்த மாற்றம் கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநந்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர் தலைமீதடிப்பொடி உடையவருடையார் போல்வாரைக் கிளி பூவை குயில் மயிலென்னும். 

(கண்வலைப்படாதே அகவலைப்பட்டு) “மாதரார் கயற்கணென்னும் வலையில் பட்டு” (திருமாலை.16) என்று இதரவிஷயங்களினுடைய த்ருஷ்டியாகிற வலையிலே அகப்பட்டு அநர்த்தப்படாதேதாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” (திருவாய்மொழி. 6-2-9) என்றும்யம் பஶ்யேத்என்றும்ப்ரேக்ஷ்யே கஞ்சித் கதாசநஎன்றும்அமலங்களாக விழிக்கும் (திருவாய்மொழி.1-9-8) என்றும்  சொல்லுகிறபடியே ஸகலபாபக்ஷபண நிபுணங்களாய் ஸம்ஸாரதாபமெல்லாம் ஆறும்படி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரைப் பூப்போலேயிருக்கிற பகவத்கடாக்ஷமென்கிற வலையிலே அகப்பட்டு. (வளர்த்தெடுப்பார் கையிருந்து)  “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (திருநெடுந்தாண்டகம் 14) என்றும்,எடுத்தவென் கோலக்கிளி” (நாச்சியார் திருமொழி.5-5) என்றும், “மங்கைமார் முன்பென்கையிருந்து” (திருவாய்மொழி.6-8-2) என்றும் உபலாலித்து ரக்ஷிக்கிறவர்களுடைய கைவஶசமாய் (தயிர் நெய்யமர்  பாலமுதுண்டு) “தயிர்ப்பழம் சோற்றொடு பாலடிசிலும் தந்து” (திருவாய்மொழி 9-5-8)  என்றும்  “நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடும்” (திருவாய்மொழி.6-8-2) என்றும், “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” (நாச்சியார் திருமொழி.5-5) என்றும் சொல்லுகிறபடியே அவர்கள் காலோசிதமாகவும், பாக அநுகுணமாகவும்உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம்” (கீதை.4-34) என்கிறபடியே பகவத் குணங்களை ஆசார்யர்கள் அநுபவிப்பிக்க அநுபவித்து (ஒருமிடறாய்) ஆசார்யர்களோடு ஏககண்டராய், (போற்றி ஒருவண்ணமித்யாதி) “போற்றியானிரந்தேன் புன்னைமேலுறை பூங்குயில்காள்” (திருவாய்மொழி.6-1-6) என்றும், ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண்கிளியே” (திருவாய்மொழி.6-1-7) என்றும், “திருந்தக் கண்டெனக்கொன்றுரையாய் ஒண்சிறு பூவாய்” (திருவாய்மொழி.6-1-8) என்றும் ஆதரித்துக்கொண்டு வந்த நிலைமையோடு, “நோயெனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்” (திருவாய்மொழி.1-4-8) என்றும், “என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே” (திருவாய்மொழி.1-4-7) என்றும் இன்னாதான நிலைமையோடு, “சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர் பண்புடையீர்” (திருவாய்மொழி.9-5-8என்றும், “நாராயணனை வரக் கூவாயேல் இங்குற்று நின்றும் துரப்பன்” (நாச்சியார் திருமொழி.5-10) என்றும் அநாதரித்த நிலைமையோடு வாசியற வகுத்த விஷயத்தில் கோபம், அருள் ஆகிய இரண்டும் அங்குத்தை விநியோக ப்ரகாரமாகையாலே இவற்றுக்கும் உகந்து, (சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே) “சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லேயென்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே” (திருநெடுந்தாண்டம்.13) என்று திருநாமத்தைச் சொல்ல உபதேஶித்து பலக் குறைவாலே ஒரு சொல் சொல்லும்போது மலையெடுக்குமா போலேயாய்,  அதுவும் மாட்டாதே  தன் நிலை இழந்த ஶரீரத்தையுடையவளானவாறே (கற்பியாவைத்த மாற்றங் கைகூப்பி வணங்கப்பாடி) “கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்” (திருவாய்மொழி.6-8-8) என்று ஆசார்யருசி பரிக்ருஹீதமான திருநாமங்களை, “திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே” (திருநெடுந் தாண்டகம்.14) என்று அவ்வாசார்யர் தாமே அநுஸந்திக்கும்படி ப்ரீதிப்ரேரிதராய்ப்  பாடி. ஆலியாவழையா) “குயில் நின்றால்” (கண்ணிநுண்சிறுத்தாம்பு.10) என்றும், ஆலியா அழையா அரங்கா” (பெருமாள் திருமொழி.3-2) என்றும் சொல்லுகிறபடியே அவ்வநுபவத்தாலே வந்த ஹர்ஷத்தை உடையராய்,  (பராபிமானத்திலே ஒதுங்கி) “தேவு மற்றறியேன்” (கண்ணிநுண்-2) என்று ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கின  (நம்பிக்கன்பர்) “தென்குருகூர் நம்பிக்கன்பரான (கண்ணிநுண்-11) ஸ்ரீமதுரகவிகள். (தலைமீதடிப்பொடி) “நாவலிட்டுழிதருகின்றோம் நமன்றமர் தலைகள் மீதே” (திருமாலை.1) என்று திருநாமத்தை அண்டைகொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே அடியிடும்படியான செருக்கை உடையராய், “அடியார்க்கென்னை ஆட்படுத்தாய்” (அமலனாதிபிரான்.1) என்கிற ஸ்ரீதொண்டரடிப்பொடிகள். (உடையவருடையார் போல்வாரை) இராமானுசனுடையார் என்று சொல்லப்படுகிற ஆழ்வான், ஆண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போல்வாரான ஆசார்யபரதந்த்ரராயிருப்பாரை (கிளி பூவை குயில் மயில் என்னும்) என்கிறார்.

154.        ஆசறுதூவியென்னும் பாஹ்யாப்யந்தர ஶுத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதையற்றுத் தாய்வாயிலுண்ணும் பிள்ளைக்கிரை தேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவைகொண்டு நல்லபதத்தையும் வேண்டேனென்னும் தனிப்பெரும் பித்தர் நம்முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்.

(ஆசறுதூவியென்னும் பாஹ்யாப்பந்தரஶுத்தியோடே) “ஆசறுதூவி வெள்ளைக் குருகே” (திருவாய்மொழி.6-8-8) என்று ஆசறுகை அந்த:கரணஶுத்தியாய், “வெள்ளைக் குருகே” (திருவாய்மொழி.6-8-8) என்று பாஹ்யஶுத்தியாய், “(அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா) : ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் பாஹ்யாப்யந்தரஶ்ஶுசி:”()  என்கிற பாஹ்யாந்தர ஸுத்தியை உடையராய், (திரையுகளும் வ்யஸநவ்யதையற்று) “வாயும்திரையுகளும்” (திருவாய்மொழி.2-1-1) என்றுகிரயோ வர்ஷதாராபி: ஹந்யமாநா விவ்யது: அபிபூயமாநா வ்யஸநைர் யதாதோக்ஷஜ சேதஸ:” (ஸ்ரீபாகவதம்.10-20-15) என்று பகவத்விஷயத்திலே நெஞ்சு ஊன்றுகையாலே ஸம்ஸார து:க்கோர்மிகளானவை அஹமஹமிகயா மேலிடா நின்றாலும், சலியாதே. (தாய் வாயிலுண்ணும் பிள்ளைக்கிரைதேடும்) “தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும்” (பெரியதிருமொழி.9-6-1)  என்றும், “புள்ளுப்பிள்ளைக்கு இரை தேடி” (பெரிய திருமொழி.5-1-2) என்றும், கொக்கானது தன் பிள்ளைக்கநுகுணமாக இரைதேடி இடுமா போலே முறைகெடாமல் அநுபவிக்கவிருக்கிற ஶிஷ்யர்களுடைய ப்ரக்ருதிக்கநுகுணமான பகவத் விஷயத்தை ஸகலஶாஸ்த்ரங்களிலும் ஆராய்ந்து அருளிச்செய்து. (வைகலுடன் மேய்ந்து) “வைகல்பூங்கழிவாய்  வந்து மேயும் குருகினங்காள்” (திருவாய்மொழி, 6-1-1) என்றும்காதல் மென்பெடையோடு உடன்மேயும் கருநாராய்” (திருவாய்மொழி.6-1-2) என்றும் சொல்லுகிறபடியே ஸர்வகாலமும் அநுகூலரான ஶிஷ்யபுத்ரர்களோடே பகவத் குணங்களை அநுபவித்து, (நுங்கால்கள் பைங்கானம் என்று ப்ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு) “நுங்கால்கள்  என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே” (திருவாய்மொழி.9-7-1) என்றும், “பைங்கானம் ஈதெல்லாம் உனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்” (திருநெடுந் தாண்டகம்.27) என்றும் இவர்கள் பக்கல் உபஜீவித்த                  ஶிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே ப்ரஹ்மரதம் பண்ணிஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்” (விஹகேஶ்வர ஸம்ஹிதை) என்று ஆத்மாத்மீயங்களை முகமலர்த்தியோடே கொடுக்கக் கைக்கொண்டு. (நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் தனிப்பெரும் பித்தர்) “நல்ல பதத்தால் மனை வாழ்வர்” (திருவாய்மொழி.8-10-11) என்று பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான  கார்ஹஸ்த்யத்தையும் ஸம்ஸார வெக்காயத்தாலுண்டான அச்சத்தாலேஇன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்” (பெருமாள் திருமொழி.4-5) என்று உபேக்ஷிக்கு மவருமாய், “அங்கையாழி அரங்கன் அடியிணைத் தனிப்பெரும் பித்தன்” (பெருமாள் திருமொழி.4-5) என்று சொல்லப்படுகிற ஸ்ரீகுலஶேகரப் பெருமாள் (நம் முதலிகள் போல்வாரை) நம் முதலிகள் என்கிறது. பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, திருத்தமப்பனார் பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, திருத்தமையனார் பிள்ளை இவர்கள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும் என்கிறார்.

155. பூண்டநாள் சீர்க் கடலையுட்கொண்டு, திருமேனி நன்னிறமொத்து, உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து, ஜ்ஞாநஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக் கண்டுகந்து, பரஸம்ருத்தியே பேறான அன்புகூரும் அடியவர், உறையிலிடாதவர், புயற்கை அருள்மாரி, குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்.

(பூண்டநாள் சீர்க்கடலை உட்கொண்டு) “மற்பொன்ற நீண்டதோள் மால் கிடந்த நீள்கடல் நீராடுவான் பூண்டநாளெல்லாம் புகும்” (முதல் திருவந்தாதி.69) என்றும்,   “சீர்க்கடலை ள்பொதிந்த சிந்தனையேன்” (பெரியதிருவந்தாதி.69) என்றும் பகவத் விஷயத்திலே  அவகாஹித்த வன்று தொடங்கி, கல்யாணகுணஸாகரத்தைப் பருகி (திருமேனி நன்னிறமொத்து) “மேகங்களோ உரையீர் திருமால் திருமேனியொக்கும் யோகங்கள்” (திருவிருத்தம்.32) என்றும், “என்னுடைய கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்” (பெரிய திருவந்தாதி.85) என்றும் சொல்லுகிறபடியே  ஸ்வரூபகுணத்தாலும் ரூபகுணத்தாலும் அவனோடு ஸாம்யாபத்தியை உடையராய், (உயிரளிப்பான் தீர்த்தகரராய்) “உயிரளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து” (திருவிருத்தம்.32) என்றும்தீர்த்தகரராமின் திரிந்து” (இரண்டாம் திருவந்தாதி.14) என்றும்தீதில் நன்னெறிகாட்டி எங்கும் திரிந்து” (பெருமாள் திருமொழி.2-6) என்றும் சொல்லுகிறபடியே லோக ரக்ஷணார்த்தமாக எங்கும் ஸஞ்சரித்து, பகவத்குணங்களை வர்ஷித்து, எல்லாரையும் பரிஶுத்தராக்கி, (ஜ்ஞாநஹ்ரதத்தைப் பூரித்து) “ஜ்ஞாநஹ்ரதே த்யாநஜலே ராகத்வேஷம லாபஹே, : ஸ்நாதி மாநஸே தீர்த்தே யாதி பரமாம் கதிம் என்கிறபடியே ஜ்ஞாநமாகிற தடாகத்தை பகவத்குணங்களாலே பூரித்து (தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) `தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” (திருப்பாவை.3) என்றும், “வாழ உலகினில் பெய்திடாய்” (திருப்பாவை.4) என்றும், “மாமுத்த நிதி சொரியும்” (நாச்சியார் திருமொழி.8-2) என்றும் அநர்த்தகந்தமின்றியே எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி பகவத் குணங்களை வர்ஷித்து, (கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக் கண்டுகந்து பரஸம்ருத்தியே பேறான) ஓளதார்யாதிஶயத்தாலே பிறருக்குபகரித்து அத்தை நினையாதே `மேலும் உபகரிக்கப் பெற்றிலோம் என்று இழவாளராய் எதிர்த்தலையில் ஸம்ருத்தியைக் கண்டு உகந்து அதுவே தங்களுக்குப் பேறாக நினைத்திருக்கிற (அன்பு கூறும் அடியவர்) “ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்” (பெரிய திருமொழி.2-10-4) அடியவர்களான முதலாழ்வார்கள் (உறையிலிடாதவர்) உருவின வாள் உறையிலிடாதே ஆதிமத்யாவஸாநம் தேவதாந்தரங்களினுடைய அவரத்வ ப்ரதிபாதநபூர்வமாக பகவத்பரத்வத்தை உபபாதிக்கிற திருமழிசைப்பிரான் (புயற்கை அருள்மாரி) “காரார் புயற்கைக் கலிகன்றி” (பெரிய திருமொழி 3-2-10) என்றும், “அருள்மாரி” (பெரிய திருமொழி.3-4-10) என்றும் ஔதார்யத்திலே மேக ஸத்ருஶராய்க் கொண்டு க்ருபையை வர்ஷிக்கிற திருமங்கையாழ்வார்குணந்திகழ் கொண்டல்” (இராமானுச நூற்றந்தாதி 60) ஆன உடையவர் போல்வாரை மேகம் என்னும் என்கிறார். இவர்தாம் தூது விடுகையாவது ப்ராப்யருசியால் வந்த விளம்பாக்ஷமத்வத்தாலே ஆசார்யத்வாரா உபாயோபேய ப்ரார்த்தனை பண்ணுகை. “கைகள் கூப்பிச் சொல்லீர்” (திருவாய்மொழி.6-1-1), “பாதம் கைதொழுது பணியீர்” (திருவாய்மொழி.6-1-2), “இரங்கி நீர் தொழுது பணியீர்” (திருவாய்மொழி. 6-1-3) என்றும், “திருவடிக்கீழ் குற்றேவல்” (திருவாய்மொழி 1-4-2)வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” (திருவாய்மொழி.1-4-9) என்றும் சொல்லக் கடவதிறே.  

156.      தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம்.

இனிமேல் இவர் இப்படித் தூது விடும்படி முகம் காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும் தூது விடுகைக்குப் பற்றாசையும் அதுதனக்கு விஷயத்தையும் அருளிச்செய்கிறார் தம்பிழை என்று தொடங்கி. தம்பிழையானது மறப்பித்த க்ஷமையை உணர்த்தும் ப்ரதம தூதுக்கு விஷயம். வ்யூஹம் என்கிறது ப்ரதம தூதான அஞ்சிறைய மடநாரையிலே (திருவாய்மொழி.1-4). “என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு” (திருவாய்மொழி.1-4-7) என்று வ்யாமோஹாதிஶயத்தாலே மேல் விழுந்து விஷயீகரித்தான்; ஸர்வஜ்ஞனாகையாலே தோஷதர்ஶனம் பண்ணினான்; பிரிந்தவாறே இதுவோ இதினளவென்று பிரிந்திருந்தான் அத்தனை. எங்கள் அபராதத்தைக் கண்டு கைவிடுமளவன்று. “என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய் சொல்” (திருவாய்மொழி.1-4-7) என்று அவர்க்கு அபராத ஸஹத்வம் என்பதொரு குணமுண்டு அத்தையறிவிக்கவே வரும் என்று அபராதஸஹத்வம் பற்றாசாக, “கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி விடல்” (திருவாய்மொழி .1-4-10) என்று  இல்லாத வஸ்துவை உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே கண்வளர்ந்தருளுகிறவனுக்கு உண்டாக்கின  வஸ்துவுக்கு ஒரு குணாதாநம் பண்ணலாகாதோ என்று சொல்லென்று வ்யூஹத்திலே தூது விடுகிறார். சிறந்த செல்வமானது மறப்பித்த தீக்ஷையை உணர்த்தும் இரண்டாவது தூதுக்கு விபவம் விஷயம் என்கிறது வைகல் பூங்கழிவாயில் (திருவாய்மொழி.6-1). “சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூருறையும்” (திருவாய்மொழி.6-1-3) என்று ஆர்த்தரக்ஷணம் பண்ணிவாரா நிற்கச் செய்தே திருவண் வண்டூரிலே போக்யதையிலே கால்தாழ்ந்து நம்மை மறந்திருந்தானத்தனை; “மாறில் போரரக்கன் மதிள்நீறெழச் செற்றுகந்த ஏறுசேவகனார்க்கு என்னையும் உளள்” (திருவாய்மொழி.6-1-10), “ஏதத் வ்ரதம் மம” (ரா.யு.18-33) என்று ஆர்த்தரக்ஷணத்திலே தீக்ஷித்திருப்பானாய் ஆர்த்தரக்ஷணமொரு தலையானால் அஸ்தமிதாந்யபாவம் என்றிருப்பான் ஒருவன் ஆகையாலே நம்முடைய ஆர்த்தியை அறிவிக்கவே வருமென்று ஆர்த்தரக்ஷணம்  பற்றாசாகஅரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவனார்” (திருவாய்மொழி. 6-1-10) என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாஸபூமியான  லங்கையை பஸ்மஸாத்தாக்கின ஏகவீரனான சக்ரவர்த்தி திருமகனுக்குச் சொல்லுங்கோளென்று விபவத்திலே தூது விடுகிறார். படைத்த பரப்பானது மறப்பித்த ஸாரஸ்யத்தை உணர்த்தும் மூன்றாம் தூதுக்கு பரத்வ த்வயம் விஷயம் என்கிறது பொன்னுலகாளியில் (திருவாய்மொழி.6-8). “முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என் நலங்கொண்ட பிரான் “ (திருவாய்மொழி.6-8-1) என்றுவிபூதி ரக்ஷணத்திலே பராக்கை உடையவனாகையாலே நம்மை மறந்திருந்தான் அத்தனை; “தன் மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான்” (திருவாய்மொழி.6-8-6) என்று ஆஶ்ரிதரோடு ஏகரஸனாயிருக்கிற ஆகாரத்தை அறிவிக்கவே வரும் என்று ஐகரஸ்யம் பற்றாசாக, “வானவர்கோனைக் கண்டு யாமிதுவோ தக்கவாறு” (திருவாய்மொழி 6-8-4) என்று பரத்வத்திலும்,  “எங்குச் சென்றாகிலும் கண்டு” (திருவாய்மொழி 6-8-5) என்றும்யாவையுமாய் யாவருமாய் நின்ற மாயன்” (திருவாய்மொழி.6-8-7) என்றும் சொல்லுகிறபடியே அத்விதீயமுமாய் நித்யமுமாயிருக்கையாலே பரத்வஸத்ருஶமான அந்தர்யாமித்வத்திலும் தூது விடுகிறார்தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸௌந்தர்யத்தை உணர்த்தும் நாலாம் தூதுக்கு அர்ச்சாவதாரம் விஷயமென்கிறது எங்கானலில் (திருவாய்மொழி.9-7). “தமரோடு அங்குறைவார்க்கு” (திருவாய்மொழி.9-7-2) என்று தம்மை உகந்த பாகவதரோட்டைச் சேர்த்தியில் இனிமையாலே நம்மை மறந்திருந்தானத்தனை. “பூந்துழாய் முடியார்க்குஎன்று தொடங்கி, “தாம் தம்மைக்கொண்டு அகல்தல் தகவன்று” (திருவாய்மொழி.9-7-9) என்று தம்முடைய ஸௌந்தர்யத்தை அநுபவித்துப் பிரிந்தார் தரிக்க வல்லார்களோ என்று ஸௌந்தர்யத்தை உணர்த்தவே வரும் என்று ஸௌந்தர்யம் பற்றாசாக, திருமூழிக் களத்தாருக்கு என்று அர்ச்சாவதாரத்திலே தூதுவிடுகிறார்.

157. பகலோலக்கமிருந்து, கறுப்புடுத்துச் சோதித்து, காரியம் மந்த்ரித்து, வேட்டையாடி, ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம்.

இப்படிப் பரத்வாதிகளிலே தூதுவிட்டால் இவற்றுக்கு விஷயபேதமுண்டோ என்னில், பகலிருக்கை தொடக்கமான ராஜநீதி போலே ஸ்தலபேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷயபேதமில்லை என்கிறார் பகலோலக்கம் என்று தொடங்கி. (பகலோலக்கமிருந்து) ஒரு ராஜாவானால் மந்த்ரிகள் முதலான ஸர்வரும் ஸேவிக்க ஓலக்கமிருந்து, (கருப்புடுத்துச் சோதித்து) நாட்டிலுள்ள நகரிஶோதனை வந்து அந்த நாட்டில் ஶிக்ஷை ரக்ஷைகளுக்காக  வ்ருத்த மந்த்ரிகளும் தானுமாய் கார்யவிசாரங்களைப் பண்ணியும், துஷ்டஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடியும், அந்த ஶ்ரமம் தீரப் பூந்தோப்புக்களிலே விளையாடக் கடவதான ராஜநீதி. (ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) “பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்  செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” (நாச்சியார் திருமொழி 11-3) என்றும், “இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” (திருவிருத்தம் 33) என்றும் உபயவிபூதியிலும் ஏகதேஶமும் ஶேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவனாய், “பாரளந்த பேரரசே  எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே”  (திருவிருத்தம் 80) என்று ஸௌலப்யம் பரத்வம் ப்ரணயித்வம் என்றும் சொல்லப்படுகிற   மூன்று முடிக்குரிய வானிளவரசுக்கு (விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம்) “விண்மீதிருப்பாய்” (திருவாய்மொழி 6-9-5) “பகல்கண்டேன் நாரணனைக் கண்டேன்” (இரண்டாம் திருவந்தாதி 81) என்றும்வைகுண்டே து பரே லோகே ஶ்ரியாஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹஎன்றும் ஒரு பகலான பரமபதத்திலே பிராட்டிமாரும் தானும் நித்யமுக்தர் ஸேவிக்க ஓலக்கமிருந்தும், “இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்” (திருவாய்மொழி 6-9-5) என்றும்யமாத்மா வேதஎன்றும் சொல்லுகிறபடியே வ்யாப்யபதார்த்தங்களுக்குத் தெரியாதபடி அந்தர்யாமியாய் நின்று ஆராய்ந்தும், “கடல் சேர்ப்பாய்” (திருவாய்மொழி 6-9-5) என்றும், “பாற்கடல் யோகநித்திரை சிந்தை செய்தவெந்தாய்” (திருவாய்மொழி 2-6-5) என்றும் சேதநருடைய ரக்ஷணோபாயங்களை மந்த்ரித்தும் அநந்தரம் சேதநரக்ஷணார்த்தமாகமண்மீதுழல்வாய்” (திருவாய்மொழி 6-9-5) என்றும்களிறும் புள்ளும் உடன்மடிய வேட்டையாடி வருவான்” (நாச்சியார் திருமொழி 14-9) என்றும் ராமக்ருஷ்ணாதிரூபேண அவதரித்து ஆஶ்ரித விரோதிகளான ராவண கும்பகர்ணாதி துஷ்டஸத்வநிரஸநமாகிற வேட்டையாடியும், “மலைமேல் நிற்பாய்” (திருவாய்மொழி 6-9-5) என்றும்ஆராமம் சூழ்ந்த” (சிறியதிருமடல் 71) என்றும் அந்த விரோதி நிரஸநத்தாலுண்டான ஶ்ரமம் ஆறும்படி கோயில் திருமலை முதலான தேஶங்களிலே நிற்கையாலும் காணலாம். ஆகவித்தால் பரத்வாதிகளுக்கு ஸ்தலபேதமொழிய விஷயபேதமில்லை என்கிறார்

158.தமருகந்த அடியோமுக்கே யென்னும் பின்னானார் வணங்குமிடத்திலே எல்லாம் பூர்ணம்.

இந்த பரத்வாதிகளிலுண்டானகுணங்களெல்லாம் அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஶிக்கு மென்கிறார் இனிமேல். (தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்குமிடத்திலே எல்லாம் பூர்ணம்) “தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்” (முதல் திருவந்தாதி 44) என்று ஆஶ்ரிதருகந்த த்ரவ்யங்களே திருமேனியாகவும் அவர்கள் உகந்த திருநாமங்களைத் தனக்குத் திருநாமமாகவும் கொண்டு, “அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே” (பெரிய திருமொழி 4-9-5) என்றும், “பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்” (திருநெடுந்தாண்டகம் 10) என்றும் ஆஶ்ரிதாதீந ஸ்வரூபஸ்திதிப்ரவ்ருத்திகளை  உடையனாய், அவதாரங்களுக்குப் பிற்பாடராகையாலே அநுபவிக்கப் பெறாதவாஶ்ரிதர் இழவாதபடி தன்னை அநுபவிப்பித்துக் கொடு நிற்கிற அர்ச்சாவதாரத்திலே  பரத்வாதிகளில் அநுபாவ்யமான  குணங்களெல்லாம்  `ஸர்வம் பூர்ணம் ஸஹோம் என்கையாலே பரிபூர்ணம் என்கிறார்

159. வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி, வடிவுடை, கடலிடம், கட்கிலீ என்னுமவற்றில் இவள் திறத்தென்கொலோ வென்பிக்கிற வ்யூஹஸௌஹார்த்த ப்ரதாநம்.

அதில் எல்லா ஸ்தலங்களிலும் எல்லா குணங்களும் பரிபூர்ணமேயாகிலும் கோயில் முதலான திவ்யதேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான   ஒரோகுணங்கள்  ப்ராதாந்யேந ப்ரகாஶிக்குமென்கிறார் `வன்பெரு வானகமுதலுய்ய என்று தொடங்கி. “வன்பெரு வானகமுய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய” (பெருமாள் திருமொழி.1-10) என்று உபயவிபூதியும் உஜ்ஜீவிக்கும்படிதிருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம்” (பெரியாழ்வார் திருமொழி.4-9-10) என்றும்தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் திருப்பதி” (பெரியாழ்வார் திருமொழி.4-9-11) என்றும் சொல்லுகிற ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன் திருவுள்ளமுகந்து கண்வளர்ந்தருளுகிற பெரிய திருப்பதியான கோயிலிலே, (வடிவுடைக் கடலிடங்கட்கிலீயென்னுமவற்றில்) “வடிவுடை வானோர் தலைவனே” (திருவாய்மொழி.7-2-10) என்றும், “கடலிடங்கொண்ட கடல்வண்ணன்” (திருவாய்மொழி. 7-2-7) என்றும்,  “கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய்” (திருவாய்மொழி.7-2-3) என்றும்காகுத்தா கண்ணனே” (திருவாய்மொழி.7-2-3) என்றும்திருவரங்கத்தாய்” (திருவாய்மொழி.7-2-4) என்றும் பரத்வாதிகள் ஐந்தும் ப்ரகாஶித்ததேயாகிலும் (இவள் திறத்தென்கொலோ என்பிக்கிற)  “இவள் திறத்து என் செய்கின்றாய்” (திருவாய்மொழி.7-2-1) “இவள்திறத்து என் சிந்தித்தாய்” (திருவாய்மொழி.7-2-4)என்கொலோ முடிகின்றதிவட்கு” (திருவாய்மொழி.7-2-2) என்று `இவள் திறத்து தேவர் செய்தருள நினைத்தது ஏது? இவள்  கார்யமென்னாய் முடியக்கடவது என்று கேட்கையாலேபாற்கடல் யோகநித்திரை சிந்தை செய்த” (திருவாய்மொழி.2-6-5) என்று ஸர்வருடையவும் ரக்ஷணோபாயசிந்தை பண்ணுகிற வ்யூஹத்தில் ப்ரகாஶிக்கிற ஸௌஹார்த குணம் ப்ராதாந்யேந ப்ரகாஶிக்குமென்கிறார்.

160. மண்ணோர்விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழுலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம் உஜ்ஜ்வலம்

(மண்ணோர் விண்ணோர் வைப்பில்) “கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” (திருவாய்மொழி.1-8-3) என்றும், “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” (நான்முகன் திருவந்தாதி.45) என்றும் உபயவிபூதியிலுள்ளார்க்கும் ஆபத்தநமாய் நிற்கிற திருமலையில் நிலையிலே  (போகின்றவேழுலகுக்குயிர்) “போகின்ற காலங்கள் போயகாலங்கள் போகுகாலங்கள் தாய்தந்தை உயிராகின்றாய்” (திருவாய்மொழி. 2-6-10) என்றும், “கண்ணாயேழுலகுக்கு உயிராய எங்கார்வண்ணனை” (பெரிய திருமொழி.1-9-10) என்றும் சொல்லுகிறபடியே ஸகல காலமும் ஸர்வாத்மாக்களுக்கும் ஸர்வவிதபந்துவுமாய்க் கொண்டு ஸர்வர்க்கும் ஆத்மபூதனாயிருக்கிற அந்தர்யாமித்வத்தில் ப்ரகாஶிப்பதாய் (பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம் உஜ்ஜ்வலம்) “என்கண் பாசம் வைத்த” (திருவாய்மொழி.3-3-4) “நிகரில் புகழாய்” (திருவாய்மொழி.6-10-10) என்று அத்யந்தம் தண்ணியனாயிருக்கிற என்பக்கலிலே ஸங்கத்தைப் பண்ணினான்  என்னும் ஒப்பிலாத புகழை உடையவனே என்று  சொல்லுகிற வாத்ஸல்யம்வேங்கடத்தெழில் கொள் சோதி” (திருவாய்மொழி.3-3-2) என்றும்நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி” (திருவாய்மொழி. 6-10-7) என்றும்பரஞ்சுடர்ச்சோதி” (திருவாய்மொழி.3-3-4) என்றும் சொல்லுகிறபடியே உஜ்ஜ்வலமாய்க்  கொண்டு பிரகாஶிக்கும் என்கிறார்.

161. உபய ப்ரதாந ப்ரணவமான உறைகோயிலில் எத்தேவு மென்னும் பரேஶத்வம் பொலியும்.

(உபய ப்ரதாந ப்ரணவமான உறைகோயிலில்) “ப்ரஹ்மணேத்வாமஹஸ ஓமித் யாத்மாநம் யுஞ்ஜீத” (தை.நா.51) என்றும்ஓங்காரோ பகவாந் விஷ்ணு:” (வி.பு.2-3-54) என்றும் சொல்லுகிறபடியே ப்ரணவம் ஜீவேஶ்வரர்களிருவர்க்கும் வாசகமாய்க் கொண்டு உபயருடையவும் ப்ராதாந்யம் தோற்றவிருக்கிறாப்போலே பொலிந்து நின்ற பிரானுடையவும் ஆழ்வாருடையவும் திவ்யாஜ்ஞை  இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும் ப்ராதாந்யம் தோற்றுவதாய்அவன் மேவி உறைகோயில்” (திருவாய்மொழி.4-10-2) என்று ஆழ்வாரை  விஷயீகரிக்கலான தேஶமாகையாலே பரமபதத்தில் உள் வெதுப்புத் தீர்ந்து அவன் வர்த்திக்கிற திருநகரியில் நிற்கிற நிலையிலே (எத்தேவுமென்னும் பரேஶத்வம் பொலியும்) “உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே” (திருவாய்மொழி.4-10-10) என்றும், “திருக்குருகூரதனுள் பரன்” (திருவாய்மொழி. 4-10-3) என்றும்  “திருக்குரு கூரதனுள் ஈசன்” (திருவாய்மொழி.4-10-4) என்றும்பொலிந்து நின்ற பிரான்” (திருவாய்மொழி.4-10-5) என்றும் சொல்லுகிறபடியே ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தமும்  தனக்கு ஶரீரமாமிடத்தில் அப்ராக்ருதவிக்ரஹத்தோடொக்கும்படி தான் ஶரீரியாயிருக்கிற பரத்வத்தில் ப்ரகாஶிக்கிற நியந்த்ருத்வ குணம் அபிவ்ருத்தமாம் என்கிறார்.

162. வைஷ்ணவ வாமநந்தில் நிறைந்த நீலமேனியின் ருசிஜநக விபவ லாவண்யம் பூர்ணம்.

(வைஷ்ணவவாமநத்தில்) வைஷ்ணவவாமனமான திருக்குறுங்குடியில் நிற்கிற நிலையிலே (நிறைந்த நீலமேனியின்) “நீலமேனியும் நான்கு தோளும் என்னெஞ்சம் நிறைந்தனவே” (திருவாய்மொழி.5-5-6) என்று, இவர் திருவுள்ளத்திலே ப்ரகாஶிக்கும்படியான காளமேகநிபஶ்யாமமான விக்ரஹத்தினுடைய (ருசிஜநகவிபவலாவண்யம் பூர்ணம்) “செல்கின்றதென் நெஞ்சமே” (திருவாய்மொழி.5-5-1) என்று ருசியைப் பிறப்பிப்பதாய்பும்ஸாம் த்ருஷ்டிசித்தாபஹாரிணம்” (ரா.அ.3-29) , “ரூபவாந் ஸுபகஸ்ரீமாந்  கந்தர்ப இவ மூர்த்திமாந் (ரா.ஸு.34-30)ஸாக்ஷாந்மந்மதமந்மத:” (ஸ்ரீபாகவதம்.10-32-2) என்றும் சொல்லுகிறபடியே ஸஜாதீயரையும் மடலெடுக்கும்படி பண்ணவற்றான விபவத்தில் ப்ரகாஶிக்கிறநிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்டபொன்மேனி” (திருவாய்மொழி.5-5-7) என்கிற லாவண்யம்; நம்பி என்கையாலே பூர்ணம்என்கிறார்.   

163. ருசிவிவஶர்க்குப் பாதமே சரணாக்கும் ஓளதார்யம் வானமாமலையிலே கொழுந்து விடும்

(ருசிவிவஶர்க்கு) இப்படி லாவண்யத்தாலே பிறராலும் நிவர்த்திப்பிக்க வொண்ணாதபடி அந்த ருசியாலே பரவஶரானவர்களுக்கு, (பாதமே சரணாக்கும் ஔதார்யம்)  “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்என்று திருவடிகளை உபாயமாகப் பண்ணித்தந்த ஔதார்யம் (வானமாமலையிலே கொழுந்து விடும்) சிரீவரமங்கலநகரிலே நிற்கிற வானமாமலை பக்கலிலேவானவர் கொழுந்து” (திருவாய்மொழி.5-7-7) என்கிறபடியே கொழுந்துவிட்டு அபிவ்ருத்தமாம்என்கிறார்.   

164. களைகணற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும்.

(களைகணற்றாரை) “நோற்றநோன்பிலேன் நுண்ணறிவிலேன்” (திருவாய்மொழி.5-7-1) என்கிறபடியே தம்முடையபக்கலிலும் கைம்முதலற்று, “களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய்மொழி 5-8-8) என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்திநிவ்ருத்தி பிறந்தாரை (உருக்கும் மாதுர்யம்) “நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ஆராவமுதே” (திருவாய்மொழி.5-8-1) என்று சிதிலராக்கும்படியான  மாதுர்யம். (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்) “குடமூக்கில் கோயிலாக் கொண்டு” (இரண்டாம் திருவந்தாதி.97) என்கிற கும்பகோணத்திலே ப்ரவஹிக்கும் என்கிறார்.

165. மெலிவிலும் சேமம் கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்.

(மெலிவிலும் சேமங்கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்) கீழ்ச்சொன்ன மாதுர்யாதிகளைக் கிட்டி அநுபவிக்கப்பெறாமையாலே து:க்கஶீலராய்வைகலும் வினையேன் மெலிய” (திருவாய்மொழி.5-9-1) என்று மெலிவாரையும்அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” (திருவாய்மொழி.5-9-11) என்றும்தொல்லருள் நல்வினை” (திருவாய்மொழி. 5-9-10) என்றும்சேமங்கொள்  தென்னகர்” (திருவாய்மொழி 5-9-11) என்றும் சொல்லுகிறபடியே அவனே ரக்ஷகனென்று அத்யவஸிக்கலாம்படி  இருக்கிற க்ருபை தென்னகரான திருவல்லவாழிலே நிற்கிற நிலையிலே தொன்மை பழமையாய் அத்தாலே நித்யம் என்கிறார்.

166. வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேஶஸ்த்தம்.

 (வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷணஸ்தைர்யம்) “சரணே சரண்” (திருவாய்மொழி.5-10-11) என்கிற அத்யவஸாயத்தைஜ்ஞாநஸம்பந்ந:” என்றறிகைக்கீடான ஸர்வஜ்ஞதையை உடையவனுடைய, “ஏறு சேவகனார்” (திருவாய்மொழி.6-1-10) என்று அவர்களுடைய ரக்ஷணத்தில்மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந” (ரா.யு.18-3), “ஸக்ருதேவ (ரா.யு.18-33) இத்யாதிகளிலே ப்ரகாஶிப்பதாய், அநுகூலராலும் குலைக்கவொண்ணாதபடியான ஸ்தைர்யம் (பம்போத்தரதேஶஸ்தம்)  “தேறுநீர்ப்பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்” (திருவாய்மொழி 6-1-10) என்று விரஜைக்கரையென்னுமா போலே திருப்பம்பையாற்றுக்கு வடகரையிலே திருவண்வண்டூரிலே ஸுஸ்திரம் என்கிறார்

167.  விளம்ப விரோதமழிக்கும் விருத்த கடநாஸாமர்த்யம் நன்னகரிலே விஸ்தீர்ணம்.

  (விளம்பவிரோதமழிக்கும் விருத்தகடநாஸாமர்த்யம்) இப்படி வ்யவஸிதராயிருக்கச் செய்தேயும் ஈஶ்வரன் முகம் காட்டாமல் விளம்பிக்கையாலேபோகுநம்பீ” (திருவாய்மொழி-.6-2-1) என்றும்கழகமேறேல் நம்பி” (திருவாய்மொழி.6-2-6) என்றும்  இவர்களுக்கு   ப்ரணய ரோஷத்தாலே வந்த விரோதத்தை, “அழித்தாயுன் திருவடியால்” (திருவாய்மொழி. 6-2-9) என்கிறபடியே அழிக்கும்படியான  “நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்” (திருவாய். 6-3-1) என்று தொடங்கி, தன்னில்தான்  சேராத தாரித்ர்யம் ஐஶ்வர்யம் என்கிற விருத்தங்களைத் தனக்கு விபூதியாமிடத்து  இவற்றினுடைய விரோதங்களைத் தன்பக்கலிலே சேர்த்துக் கொள்ளும்படியான  அகடிதகடநாஸாமர்த்யம் நன்னகரான திருவிண்ணகரிலே நிற்கிற நிலையிலேபல்வகையும் பரந்த பெருமான்” (திருவாய்மொழி. 6-3-1) என்று பரக்கக் காணலாம் என்கிறார்.

168. கடிதகடக விகடநாபாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்.

(கடிதகடநாபாந்தவம்)   “தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்” (திருவாய்மொழி.6-5-5) என்று பகவத்விஷயத்திலே கடிப்பித்த கடகரான மாதாபிதாக்களோடும்உமக்காசையில்லை விடுமினோ” (திருவாய்மொழி.6-5-1), “நம்மைக் கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள்” (திருவாய்மொழி.6-5-7) என்று பொருந்தாமையைப் பிறப்பித்த அவனுடைய பாந்தவம்தேவபிரானையே தந்தை தாய்” (திருவாய்மொழி. 6-5-11) என்று அவனுடைய பரமபந்துத்வம் (அவ்வூரிலே த்விகுணம்) “அவ்வூர்த் திருநாமம்” (திருவாய்மொழி.6-5-10) என்று திருத்தொலை வில்லிமங்கலமான அவ்வூரிலே தேவபிரான், அரவிந்தலோசனன்  என்றும், “நின்றிருந்து உறையும்” (திருவாய்மொழி.6-5-10) என்றும் இரட்டைத் திருப்பதியாகையாலே இரட்டித்து இருக்கும் என்கிறார்.

169.கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத்ஸகத்வம் புகுமூரிலே ஸம்ருத்தம்.

(கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத்ஸகத்வம்) “ஏலக்குழலி இழந்தது சங்கே” (திருவாய்மொழி.6-6-1) என்று இப்பாலுண்டான  ப்ராப்யாபாஸ ப்ராபகாபாஸங்களைக் கைவிட்டவர்களுக்கு, “உண்ணுஞ்சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” (திருவாய்மொழி.6-7-1) என்று தாரக போஷக போக்யங்கள் தானேயாம்படியானவைத்தமாநிதி” (திருவாய்மொழி.6-7-11) என்று ஒருகாலும் தொலையாதபடியான  நிதியாயிருக்கிறவனுடைய ஆபத்ஸகத்வம் (புகுமூரிலே ஸம்ருத்தம்) “புகுமூர் திருக்கோளூர்” (திருவாய்மொழி.6-7-1) என்று இவர்களுக்கு ப்ரவேஷ்டவ்யமான திருக்கோளூரிலே நிற்கிற நிலையிலேசெல்வம் மல்கி” (திருவாய்மொழி.6-7-4,7) என்று ஸம்ருத்தமாயிருக்கும் என்கிறார்.

170.  சென்று சேர்வார்க்கு உசாத்துணை யறுக்கும் ஸௌந்தர்யம் மாநகரிலே கோஷிக்கும்.

(சென்று சேர்வார்க்கு உசாத்துணையறுக்கும் ஸௌந்தர்யம்) “தென்திருப்பேரையில் சேர்வன் சென்றே” (திருவாய்மொழி.7-3-8) என்று இப்பாலுள்ளவர்களைக் கைவிட்டுச் சென்று ப்ரவேஶிக்குமவர்களுக்குஎன் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் உழந்தினியாரைக் கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி.7-3-4) என்றும், “முழங்கு சங்கக்கையன் மாயத்தாழ்ந்தேன்” (திருவாய்மொழி.7-3-4) என்றும் உசாத்துணையான நெஞ்சையும் அபஹரிக்கும்படியானசெங்கனிவாயின்” (திருவாய்மொழி.7-3-3)  இத்யாதியில் சொல்லுகிற ஸௌந்தர்யத்தைதென்திருப்பேரெயில் மாநகர்” (திருவாய்மொழி.7-3-9) என்று மஹா நகரமான திருப்பேரையில் நிற்கிற நிலையிலேஎழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” (திருவாய்மொழி.7-3-4) என்கிறபடியே அவ்வூரில் ஸாமவேதகோஷந்தானே சொல்லா நின்றதென்கிறார்.

171. ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்தவ்ருத்தி நீணகரிலே.

(ப்ரவணசித்தம் பரத்வவிமுகமாக்கும் ஆநந்தவ்ருத்தி) “தீவினை உள்ளத்தின் சார்வல்ல இத்யாதி, “என்றுமென் சிந்தனை” (திருவாய்மொழி.7-10-9) என்று அவித்யாதிகள்போய்  பரமபதப்ராப்தியிலே ஒருப்பட்டாலும் த்ரிவிதகரணங்களாலும் ஸர்வரும் வந்தாஶ்ரயிக்கும் படியான திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்ய வேணும் என்னாநின்றது என் நெஞ்சானது என்று தன்பக்கல் ப்ரவணமான சித்தத்தைசிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை” (திருவாய்மொழி.7-10-10) என்று  பேருங்கூட அஸஹ்யமாம்படி பரத்வத்தையும் உபேக்ஷிக்கும்படி பண்ணவற்றான, “இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து” (திருவாய்மொழி.7-10-1) என்கிற ஆநந்த வ்ருத்தி நீணகரான திருவாறன்விளையிலே காணலாம் என்கிறார்.

172. ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டித ஆஶ்சர்யம் குளத்தே கொடிவிடும்.

(ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டிதாஶ்சர்யம்) “கூடச்சென்றேன்இத்யாதி. ஆதரித்துகூடச்சென்றேன்என்று இப்படி ஆதரமுடையாரைபல்வளையார் முன் பரிசழிந்தேன்” (திருவாய்மொழி. 8-2-4) என்று பரிசழிக்கும்படியான மாயக்கூத்தென்கிற சேஷ்டிதாஶ்சர்யம் (குளத்தே கொடிவிடும்) தென்குளந்தையிலேமாடக் கொடி” (திருவாய்மொழி.8-2-4) என்று கொடியெடுத்து ப்ரகாஶிக்கும் என்கிறார்.

173. ஶ்ரமமனம் சூழும் ஸௌகுமார்ய ப்ரகைஶம் ஆய்ச்சேரியிலே.

(ஶ்ரமமனம் சூழும் ஸௌகுமார்ய ப்ரகாஶம்) பணியாவமரர் இத்யாதி.   “திருநீலம் அணியார் மேனியோடு என் மனம்சூழ வருவாரே” (திருவாய்மொழி.8-3-6) என்று அந்த சேஷ்டிதத்தாலுள்ள ஶ்ரமம் இவர் நெஞ்சிலே சூழவரும்படியான ஸௌகுமார்யம்ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்” (திருவாய்மொழி.8-3-3) என்று அப்ராக்ருத விக்ரஹத்தினுடைய ஸௌகுமார்ய ப்ரகாஶம்வண்பரிசாரத்திருந்த என் திருவாழ்மார்பன்” (திருவாய்மொழி.8-3-7) என்று ஆழ்வார்க்கு அச்சேரியான (ஆய்ச்சேரியான?) திருவண்பரிசாரத்திலே என்கிறார்.

174.    மஹாமதிகள் அச்சம் கெட்டு அமரும் ஶௌர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்.

(மஹாமதிகள் அச்சம் கெட்டமரும் ஶௌர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்)  “ஸம்ஸ்ப்ருஶந்நாஸநம் ஶௌரே: விதுர: : மஹாமதி:” (பார. உத்.). இப்படி ஸர்வஶக்திக்கும் பரியும்படியான மஹாமதிகள் ஸௌகுமார்யாநுஸந்தாநத்தாலே இவனுக்கு எங்ஙனே என்ன தீங்கு வருகிறதென்று அஞ்சுகிறவிவர்எங்கள் செல்சார்வே” (திருவாய்மொழி.8-4-1) என்று எங்களைப் போல்வார்க்கு நிர்பயஸ்த்தாநமென்று அச்சம் கெட்டுநான்முகனை அமர்ந்தேனே” (திருவாய்மொழி.8-4-10) என்று இவர் அமர்ந்து ஸுஸ்திரராம்படியானவார்கடாவருவி” (திருவாய்மொழி.8-4-1) என்று தொடங்கி, குவலயாபீட நிரஸநாதி களாலுண்டான (ஶௌர்யாதிகள்) ஶௌர்யாதிகள் திருச்செங்குன்னூரிலே திருச்சிற்றாற்றிலே ஆறு என்கிற ஸமாதியாலே கொழிக்கும் என்கிறார்.

175.       ஸாத்ய ஹ்ருதிஸ்த்தனாயும் ஸாதநம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே.

(ஸாத்யஹ்ருதிஸ்தனாயும் ஸாதநமொருக்கடுக்கும் க்ருதஜ்ஞதாகந்தம் தாயப் பதியிலே) “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்” (திருவாய்மொழி.8-6-2) என்று ஸாத்யமான ஆழ்வாருடைய திருவுள்ளம் தனக்கு இருப்பிடமாக உடையனாயிருக்கச் செய்தேயும் இவ்வாழ்வார் திருவுள்ளத்தைப் பெறுகைக்கு ஸாதநமான திருக்கடித்தானத்தையும் சேர்த்துப்பிடித்து வசிக்கும்படியான (க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே) திருக்கடித்தான நகரம்தனதாயப்பதி” (திருவாய்மொழி. 8-6-8) என்று அவனுக்கு உரிமையாகக் கிடைக்கப்பெற்றதான திருக்கடித்தானத்திலே என்கிறார். கடித்தானம் வாசப்பொழில் என்றும் சொல்லுகையாலே கந்தமென்கிறது.

176.      அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும்.

 (அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயக லக்ஷணம் வளம்புகழும் ஊரிலே குட்டமிடும்) “அப்பன் திருவருள் மூழ்கினளே” (திருவாய்மொழி.8-9-5) என்று இப்படித் தன்னுடைய க்ருபையிலே மறுநனைய மூழ்கினாரைஅருமாயன் பேரன்றிப் பேச்சிலள்” (திருவாய்மொழி.8-9-1) என்றும், “திருப்புலியூர் புகழன்றி மற்று பரவாளிவள்” (திருவாய்மொழி 8-9-9) என்றும்மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே” (திருவாய்மொழி.8-9-10) என்றும் சொல்லுகிறபடியே அநந்யார்ஹராக்கும் அவயவஶோபை ஆபரணஶோபை தொடக்கமான நாயகலக்ஷணம்;  “திருப்புலியூர் வளம் புகழும்” (திருவாய்மொழி.8-9-3) என்று இவர் கொண்டாடும்படியான  ஐஶ்வர்யத்தையுடைத்தான திருப்புலியூரிலே; குட்ட நாடு என்கையாலே குட்டமிடும் என்கிறார்.

177.      போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்.

      போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)  பசித்த புருஷன் அன்னம் பக்வமாமளவும், நிற்பது, இருப்பது, கிடப்பதாமாபோலே இப்படி அநந்யார்ஹரா கையாலே போக்யமான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம் பிறக்குமளவும் போக்தாவான ஸர்வேஶ்வரனுக்குண்டான த்வரைதெளிந்த என் சிந்தைஎன்கிற சந்தைக்கு முன்னில்புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” (திருவாய்.9-2-4) என்கிற திருப்பதி மூன்றிலும் கிடப்பது இருப்பது நிற்பதாகையாலே ப்ரகடமாய்த் தோற்றுமென்கிறார்.

178.        போகத்தில் தட்டுமாறும் ஶீலம் காட்கரையிலே கரை அழிக்கும்.

(போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்) இப்படி போக்யமான ஆழ்வாரோடே கலந்து பரிமாறுமிடத்து, “ஆட்கொள்வானொத்து என் உயிருண்ட மாயன்” (திருவாய்மொழி.9-6-7) என்றும், “ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது” (திருவாய்மொழி.9-6-9)  என்றும், “தான் என்னை முற்றப் பருகினான்” (திருவாய்மொழி.9-6-10என்றும், அத்தலை இத்தலையாய் ஶேஷஶேஷிபாவம் மாறாடும்படியான ஶீலம் திருக்காட்கரையிலே நிற்கிற நிலையிலே, கரை என்ற ஸமாதியாலே இருகரையும் அழியப் பெருகும் என்கிறார்.

179.      மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்.

மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்) “தமரோடங்குறைவார்” (திருவாய்மொழி. 9-7-2என்றும்ஸக்ருத்வதாகாரேத்யாதி க்ஷணேபி தே யத் விரஹோ அதி துஸ்ஸஹ:” (ஸ்தோத்ரரத்நம்.55)  என்றும் சொல்லுகிறபடியே தன்னுடைய விக்ரஹத்தை ஒருகால் காணவேணுமென்கிற ஆசையாலே போக மோக்ஷங்களையும் த்ருணீகரித்திருக்கிற மஹாத்மாக்களோட்டை விரஹம் தனக்கு அதிதுஸ்ஸஹமாம்படியான அவனுடைய மார்தவம், அதாகிறது நெஞ்சில் மென்மை. “மூழிக்களத்து விளக்கினை” (பெரியதிருமடல்.129) என்கிற திருமூழிக்களத்திலே நிற்கிற நிலையிலே, களம் என்கிற ஸமாதியாலே கூடுபூரிக்கும்   என்கிறார்.

180.     பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணுபோதாந்ருஶம்ஸ்யம் நாவாயிலே நிழலெழும்.

(பிரிந்த துன்பவித்யாதி) “அன்புடையாரைப் பிரிவுறுநோய்துன்பக் கடல் புக்கு” (நாச்சியார் திருமொழி.5-4) என்றும், “யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா” (ரா..30-18)  என்கிறபடியே தன்னைப் பிரிகையாகிற து:க்கஸாகரத்திலே அழுந்துமவர்களை ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்  விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்” (விஷ்ணுதர்மம்என்கிறபடியே அக்கரைப் படுத்துவதான விஷ்ணுபோதத்தினுடைய, “ஆவாவடியான் இவனென்றருளாய்” (திருவாய்மொழி.9-8-7என்கிற ஆந்ருஶம்ஸ்யம் திருநாவாயிலே நிற்கிற நிலையிலே நிழலெழும், “கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ்” (திருவாய்மொழி.9-8-10) என்று சோலையைச் சொல்லுகையாலே நிழலெழும் என்கிறார்.

181.        ஶரண்யமுகுந்தத்வம் உத்பலாவதகத் திலே ப்ரஸித்தம்.

(ஶரண்ய முகுந்தத்வம் உத்பலாவதகத்திலே ப்ரஸித்தம்) “சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்பிரான்” (திருவாய்மொழி.9-10-5என்று இப்படி  ஶரண்யனான அவனுடைய மோக்ஷப்ரதத்வம்உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம் ஶௌரிராஜமஹம் வந்தே ஸதா ஸர்வாங்கஸுந்தரம்” (திருக்கண்ணபுரம் ஸ்தலபுராணம்?) என்று திருக்கண்ணபுரத்திலே  உத்பலாவதகமென்னும் பேரையுடைத்தான திவ்யவிமாநத்தில் நிற்கிற நிலையிலே ப்ரஸித்தம் என்கிறார்.

182.      மார்க்கபந்து ஶைத்யம் மோஹநத்தே மடுவிடும்.

(மார்க்கபந்து ஶைத்யம் மோஹநத்தே மடுவிடும்) இப்படி மோக்ஷப்ரதனாமிடத்தில் முக்திமார்க்கமான அர்ச்சிராதிமார்க்கத்துக்குத் துணையானஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம் அரணே” (திருவாய்மொழி.10-1-6) என்றும், ஆப்தபந்துவானவனுடையசுரிகுழல் கமலக் கண்கனிவாய் காளமேகத்தையன்றி மற்றிலம் கதியே” (திருவாய்மொழி. 10-1-1என்றும், “அவனடி நிழல்தடமன்றி யாமே” (திருவாய்மொழி. 10-1-2) என்றும் ஸாம்ஸாரிகமான தாபத்தை ஆற்றவற்றான ஶைத்யம் மோஹநக்ஷேத்ரமான திருமோகூரிலே, “மரகத மணித்தடம்” (திருவாய்மொழி .10-1-8என்கிற ஸமாதியாலே மடுவிடும் என்கிறார்.

183.      iஸைந்ய புத்ர ஶிஷ்ய ஸாத்யஸித்த பூஸுரார்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை த்வாரத்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்தஶயநத்திலே வ்யக்தம்.

(்ஸைந்யேத்யாதி) (ஸைந்ய) “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப் பணிசெய்வர் விண்ணோர்” (திருவாய்மொழி.10-2-6) என்கிற ஸேநாஸஹிதரான ஸேநைமுதலியாராகிற ஸாத்யர்,  (புத்ர) “உலகுயிர் தேவும் மற்றும் படைத்த” (திருவாய்மொழி. 10-2-7என்று சொல்லுகையாலே புத்ரர்களான ப்ரஹ்மாதி தேவதைகளாகிற ஸித்தர், (ஶிஷ்யர்) “நடமினோ நமர்களுள்ளீர் அனந்தபுரநகர் புகுதுமின்றே” (திருவாய்மொழி. 10-2-8) என்று இவர் உபதேஶிக்கக் கேட்ட ஶிஷ்யர்களாகிற பூஸுரர் என்கிற இவர்கள் மூவரும் அர்ச்சிக்கைக்கு முக நாபி பாதங்களை திருவாசல் மூன்றாலும் காட்டுகையாலே, நித்யஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற முகம் கொடுக்கும் ஸாம்யம் திருவனந்தபுரத்தில் கண் வளருகிற கிடையழகிலே ஸுவ்யக்தமாகக் காணலாமென்கிறார்.

184.      மோக்ஷ தாநத்தில் ப்ரணத பாரதந்த்ர்யம் வளம்மிக்க நதியிலே கரை புரளும்.

(மோக்ஷதாநத்தில் ப்ரணதபாரதந்த்ர்யம் வளம்மிக்க நதியிலே கரைபுரளும்) “அருள்தருவானமைகின்றான் அது நமது விதிவகையே” (திருவாய்மொழி. 10-6-1என்றும், “விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” (திருவாய்மொழி. 10-6-3என்றும், இப்படி ஸர்வஸமனானவன் ஆஶ்ரிதர்க்கு மோக்ஷத்தைக் கொடுக்குமிடத்தில் அவர்கள் விதித்தபடியே செய்யக்கடவோமென்கிற ஆஶ்ரிதபாரதந்த்ர்யம்வளம்மிக்க வாட்டாற்றான்” (திருவாய்மொழி.10-6-3) என்று திருவாட்டாற்றிலே நிற்கிற நிலையிலே, ஆறென்கிற ஸமாதியாலே கரைபுரளும் என்கிறார்.

185.     த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல்மிகுபொழிலிலே தழைக்கும்.

(த்யாஜ்யதேஹவ்யாமோஹம்) “மாயவாக்கை இதனுள் புக்கு” (திருவாய்மொழி.10-7-3)  என்று ஆழ்வாருக்கு த்யாஜ்யமான தேஹத்திலே புகுந்து திருமாலிருஞ்சோலை இத்யாதிப்படியே தேஶவிஶேஷத்திலே பண்ணுமாதரத்தையும் இதிலே பண்ணி இவர்மங்கவொட்டு” (திருவாய்மொழி.10-7-10என்று கால்கட்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம் (மருள்கள் கடியும் மயல்மிகு பொழிலிலே தழைக்கும்) “மருள்கள் கடியும் மணிமலை” (திருவாய்மொழி.10-7-7என்று ஸர்வருடையவும் அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்குமதாய்மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ் சோலை” (திருவாய்மொழி,2-10-3என்று போக்தாக்கள் அடைவுகெடும்படி பிச்சேற்றவற்றாயிருக்கிற தெற்குத் திருமலையில் நிற்கிற நிலையிலே;   சோலை என்கிற ஸமாதியாலே தழைக்கும்  என்கிறார்.

186.      அங்கீகரிக்க அவகாஶம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெருநகரிலே பேர்பெற்றது.

(அங்கீகரிக்க அவகாஶம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெருநகரிலே பேர்பெற்றது) “திருமாலிருஞ்சோலை மலை என்றேனென்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (திருவாய்மொழி.10-8-1என்று இவரை விஷயீகரிக்க அவகாஶம் பார்த்து மடி மாங்காயிட்டும் விஷயீகரிக்கவேணு மென்கிற ஸ்வாமித்வம்பெருநகரரவணை மேல்” (பெரியதிருமொழி.5-9-3என்கிற திருப்பேர் நகரில் கண்வளர்ந்தருளுகிறவிடத்தே ப்ரஸித்தம் என்கிறார்.

187.      இவற்றில் ப்ராவண்யம் இவள் பரமே என்னவுண்டாய் ஷோடஶகலா பூர்ணமான சந்த்ரமண்டலம் போலே பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே தேவபோக்யமானவதில் அம்ருதம் போலன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற்பத்தர் வானவர் என்னம்மான் பார்பரவென்னும்படி ஸேஶ்வரவிபூதி போக்யமான பாலோடமுதன்ன மென்மொழி முகம் செய்தது.

(இவற்றில் ப்ராவண்யம் இவள்பரமே என்னவுண்டாய்) இத்திருப்பதிகளில் நிற்கிற நிலையில் இவர்க்கு உண்டான ப்ராவண்யம்பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” (திருவிருத்தம்.60) என்று நிஷேதகரும் ஆஶ்சர்யப்படும்படி உண்டாய் (ஷோடஶகலாபூர்ணமான  சந்த்ரமண்டலம் போலே பதினாறு திருநக்ஷத்ரம்  நிரம்பினவாறே தேவபோக்யமான அதில் அம்ருதம் போலன்றிக்கே) பதினாறுகலையும் நிறைந்தால் சந்த்ரன் பூர்ணமானாப்போலே இவரும் திருவவதரித்தவன்று தொடங்கி …..த்தோடேயிருந்து பகவதநுபவத்தைப் பண்ணி அந்த பகவதநுபவத்தாலே பூர்ணராய்க் கொண்டு   பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே அந்த சந்த்ரன் பக்கலுண்டான அம்ருதம் தேவர்களுக்கே போக்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய்   அந்த சந்த்ரனுக்கு வ்ருத்தி க்ஷயமுண்டாகையாலே பூர்ணனான காலத்தில் அல்லது கிடையாமையாலே ஸக்ருத் ஸேவ்யமுமாய் தேஹத்தைப் பூண்கட்டுமதாகையாலே ஸம்ஸாரவர்த்தகமாயிருக்கும் அது போலன்றிக்கே, (என்னாத் தமிழர் இத்யாதி மென்மொழி முகம் செய்தது) “என் நாவிலின்கவி” (திருவாய்மொழி.3-9-1) என்னுமாபோலேதமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்” (திருவாய்மொழி.1-5-11) என்றும், “தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன” (திருவாய்மொழி.7-9-3) என்றும்,  “கேட்டாரார் வானவர்கள்” (திருவாய்மொழி.10-6-11) என்றும்தென்னாவென்னுமென்னம்மான்” (திருவாய்மொழி.10-7-5) என்றும், “பார்பரவின்கவி” (திருவாய்மொழி.7-9-5) என்றும் சொல்லுகிறபடியே தம்மோடு பிறரோடு ஈஶ்வரனோடு வாசியற ஸர்வஜநபோக்யமாகையாலே ஸர்வாதிகாரமுமாய், அந்த சந்த்ரனைப் போலே வ்ருத்திக்ஷயங்களின்றிக்கேகாதல் கடல்புரைய” (திருவாய்மொழி.5-3-4) “காதல் (கடலின்) மிகப் பெரிது” (திருவாய்மொழி.7-3-6)அதனில் பெரிய என்னவா” (திருவாய்மொழி.10-10-10) என்கையாலே வ்ருத்தியேயாய், ஸதாபோக்யமுமாய், “உயிரின் மேலாக்கை ஊனிடை ஒழிவிக்குமே” (திருவாய்மொழி.3-2-11) என்று மாம்ஸாஸ்ருகாதிமயமான ஶரீர ஸம்பந்தத்தை யறுத்து ஸம்ஸாரநிவர்த்தகமாமளவே ன்றிக்கேமேலை வைகுந்தத்து இருத்தும்” (திருவாய்மொழி.8-6-11) என்று  அப்ராக்ருத திவ்யதேஶ ப்ராப்தியையும் பண்ணித் தரவற்றானபாலோடமுதன்ன வாயிரம்” (திருவாய்மொழி.8-6-11) என்றும்  “அமுதமென்மொழி” (திருவாய்மொழி.6-5-2) என்றும் சொல்லுகிறபடியே அம்ருதரூபமாய் அதிலும் அதிமார்த்தவத்தையுடைத்தான சொற்களாலானவை முகோத்கமாயிற்றினஎன்கிறார்.

188.        நீர் பால் நெய்யமுதாய் நிரம்பினவேரி நெளிக்குமாபோலே பரபக்த்யாதிமய ஜ்ஞாநா ம்ருதாப்தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழிபட்டு அவாவிலந்தாதி என்று பேர் பெற்றது.

இப்படி போக்யமான ஶப்தப்ரவ்ருத்தி மாத்ரமேயன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க் கொண்டு அந்த ஶப்தஸந்தர்ப்பரூபமான ப்ரபந்தமாய்க் கொண்டு அவதரித்ததென்கிறார். (நீர்பால் நெய்யமுதாய்) நீர் பாலாய், பால் நெய்யாய், நெய் அம்ருதமாய், அவ்வம்ருதத்தாலே நிரம்பினதோர் ஏரி நெளிக்குமா போலே, ஜ்ஞாநம் பக்தியாய், பக்தி பரபக்தியாய், பரபக்தி பரஜ்ஞாநமாய், பரஜ்ஞாநம் பரமபக்தியாய்அச்யுதபக்திதத்த்வ ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹஶுபைர் வசோபி:” (ஸ்தோத்ரரத்நம்.3) என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாலே நிறைந்திருப்பதொரு ஜ்ஞாநாம்ருதாப்தியானது  (நிமிகிற வாய்க்கரை மிடைந்து) பரீவாஹாபேக்ஷை பிறந்துநிமியும் வாய்” (திருவாய்மொழி.6-5-2) என்கிற வாய்க்கரையைமிடைந்த சொல் தொடை” (திருவாய்மொழி.1-7-11) என்கிறபடியே நெருக்கி அதிக்ரமித்துமொழிபட்டோடும் கவியமுதம்” (திருவாய்மொழி.8-10-5) என்று சொற்களாய்க் கொண்டு ப்ரவஹித்து (அவாவிலந்தாதி என்று பேர் பெற்றது) “அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும்” (திருவாய்மொழி.10-10-11) என்று பரபக்த்யாதிகளாலேசொல்லப்பட்ட ஆயிரம்” (திருவாய் மொழி. 8-10-11) என்று லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து என்கிறார்.          

189.     மனம்செய் எல்லையில் ஞானவின்பத்தை நின்மலமாக வைத்தவர் ஞானப்பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வவிவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸௌலப்ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்ரியதோஷபல, மந:ப்ராதாந்ய, கரணநியமந, ஸுக்ருதிபேத, தேவாஸுரவிபாக, விபூதியோக, விஶ்வரூபதர்ஶந, ஸாங்கபக்தி, ப்ரபத்தி த்வைவித்யாதி களாலே அன்றோதிய கீதாஸமம் என்னும்

தத்வதர்ஶிகளான இவர்பக்கலிலே இப்படி பகவத்குணாநுபவஜநித ப்ரீதிப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில் ப்ரதிபாதிதமான அர்த்தங்கள், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து க்ருஷ்ணன் உபயஸேநைக்கும் நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச்செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான  அர்த்தங்களாகையாலே இந்த  ப்ரபந்தம் ஸ்ரீகீதையோடொக்கும் என்கிறார். (மனஞ்செய் எல்லையில் ஞானவின்பத்தை நின்மலமாக வைத்தவர்) “எல்லாப்பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்துன்பெருமை” (திருவாய்மொழி.1-5-2) என்று ஸர்வத்துக்கும் காரணமாகாநிற்கச் செய்தே தான் நிர்விகாரமாய்எல்லையில் ஞானத்தன்” (திருவாய்மொழி.3-10-8) என்று அபரிச்சேத்யமாயிருக்கிற அவனுடைய ஸங்கல்பரூப ஜ்ஞாநத்தையும்சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞானவின்பமேயோ” (திருவாய்மொழி.10-10-10) என்று ப்ரக்ருதிபுருஷர்களிரண்டும் தனக்குள்ளேயாம்படி வ்யாப்தமாய், தான் அபரிச்சேத்யமாய் விஶததமமாய் ஆநந்தரூபஜ்ஞாநமாய் இருக்கிறவனுடைய ஸ்வரூபத்தையும்நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து”  (திருவாய்மொழி.4-7-7) என்கிறபடியே அந்த ஸ்வரூபஸ்வபாவங்களிரண்டும் ஜ்ஞாநமாகையாலே பரிபூர்ண ஜ்ஞாநஸ்வருபனாய் இருக்கிறவனை விஶததமமாக ஸாக்ஷாத்கரிக்கையாலே தத்த்வதர்ஶிகளாயிருக்கிற இவர்,  (ஞானப்பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது) “இருங்கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானை அல்லாலில்லை நான்கண்ட நல்லதுவே” (திருவிருத்தம்.99) என்று உபக்ரமித்துஉளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி.4-10-9) என்று ப்ரளயார்ணவ மக்நையான ஸ்ரீபூமிப்பிராட்டியை மஹாவராஹமாய்க் கொண்டு எடுத்தவனுமாய், ஶ்லோகத்வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனுமாயிருக்கிறவனை ஒழிய ஸர்வர்க்கும் உஜ்ஜீவநஹேதுவாயிருப்பதொன்று இல்லையான பின்பு அவன் நித்யவாஸம் பண்ணுகிற தேஶத்தை  உங்கள் மாநஸஜ்ஞாநத்துக்கு விஷயமாக்குங்கோள் என்று இப்படி உபபாதிக்கிற  இப்ரபந்தம் (1) (தத்த்வவிவேகம்) திருத்தேர்த்தட்டிலேவிஸ்ருஜ்ய ஸஶரஞ்சாபம் ஶோகஸம்விக்ந மாநஸம்” (கீதை.1-47) என்று பந்துஹத்யாபீதனாய்க் கொண்டு ஶோகிக்கிற அர்ஜுநனைக் குறித்து அவனைஸ்திதோஸ்மி” (கீதை.18-73) என்னப் பண்ணுகைக்காகநத்வேவாஹம் ஜாது நாஸம் நத்வம் நேமே ஜநாதிபா: சைவ   பவிஷ்யாம: ஸர்வேவயமத:பரம்” (கீதை .2-12) என்று நீயும் நானும் இந்த ராஜாக்களும் முன்பாக இல்லாமலுமில்லை, மேலும் இல்லாமலுமில்லை என்று ஜீவபரபேதம், ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம், “தேஹிநோஸ்மிந் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ்தத்ர முஹ்யதி” (கீதை.2-13) என்று இத்யாதிகளாலே ப்ரக்ருதி புருஷர்களுக்குண்டான பேதமாகிற  தத்வவிவேகம்; (2,3,4) (நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ) “அச்சேத்யோயமதாஹ்யோயம் அக்லேத்யோ ஶோஷ்ய  ஏவ நித்ய: ஸர்வகத ஸ்தாணுரச லோயம் ஸநாதந:” (கீதை.2-24) என்றும், “வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபராணி ததா  ஶரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ” (கீதை.2-22),  “நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:” (கீதை.2-16) இத்யாதிகளாலே சேதநாசேதநங்களினுடைய நித்யத்வாநித்யத்வம்,  (நியந்த்ருத்நம்) “பூமிராபோநலோவாயு: கம் மநோ புத்திரேவ அஹங்கார  இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா அபரேய மித்ஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம், ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்” (கீதை.7-4,5) என்று சேதநாசேதநங்களை ஶரீரமாகவுடையனாய்க் கொண்டு, ஸர்வஸ்யசாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஜ்ஞாநமபோஹநஞ்ச” (கீதை.15-15) என்றும், “ஈஶ்வரஸ் ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஶேர்ஜுந திஷ்டதி ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா” (கீதை.18-61) என்றும் ஸ்வஶரீரபூதமான ஸர்வஜந்துக்களினுடைய ஹ்ருதயப்ரதேஶத்திலே நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் தானே பண்ணுவிக்கையாகிற அவனுடைய நியந்த்ருத்வம்; (5)   (ஸௌலப்ய) “தஸ்யாஹம் ஸுலப: பார்த்த    நித்யயுக்தஸ்ய யோகிந:” (கீதை. 8-14) என்றும், “பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாயச துஷ்க்ருதாம் தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” (கீதை.18-8) என்றg இத்யாதியாலும் பக்திமான்கள் நிமித்தமாகவும் அவதாரப்ரயுக்தமாகவும் உண்டான அவனுடைய ஸௌலப்யம்; (6) (ஸாம்ய) “ஸமோஹம் ஸர்வபூதேஷு மே த்வேஷ்யோஸ்தி ப்ரிய:” (கீதை 9-29) என்று அவனுடைய ஸர்வபூதஸமத்வம்;  (7) (அஹங்காரதோஷ)   “ப்ரக்ருதே: க்ரியமாணா நிர்குணை:  கர்மாணி ஸர்வஶ: அஹங்காரவிமூடாத்மா  கர்தாஹமிதி மந்யதே”  (கீதை.3-27) என்று அஹங்கார தோஷம்; (8) (இந்த்ரியபல) “இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:” (கீதை.2-60) என்று இந்த்ரிய ப்ராபல்யம்.  (9) (மந:ப்ராதாந்ய) “அஸம்ஶயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண க்ருஹ்யதே” (கீதை.6-35) இத்யாதிகளிலே சொல்லப்பட்ட மந:ப்ராதாந்யம்; (10) (கரணநியமன) தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ஸர்வேந்த்ரியாணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச” (கீதை.2-61) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கரண நியமநம். (11) (ஸுக்ருதிபேத) “சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ பரதர்ஷப” (கீதை.7-16) என்று சொல்லப்பட்ட ஸுக்ருதிபேதம்; (12) (தேவாஸுரவிபாக)த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர  ஏவ தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபத்தாயாஸுரீமதா” (கீதை.16-6) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட தேவாஸுர விபாகம்; (13) (விபூதியோக)  “ப்ராதாந்யத: குருஶ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” (கீதை.10-19),  ஆதித்யாநாம் அஹம் விஷ்ணு: ஜ்யோதிஷாம் ரவிரம்ஶுமாந்” (கீதை.10-21) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட விபூதியோகம்;  (14) (விஶ்வரூபதர்ஶந) “பஶ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஶேஷ ஸங்காந் ப்ரஹ்மாணமீஶம் கமலாஸநஸ்த்தம் ருஷீம்ஶ்ச ஸர்வாநுரகாம்ஶ்ச தீப்தாந்” (கீதை.11-15) இத்யாதியாலே சொல்லப்பட்ட விஶ்வரூப தர்ஶநம்; (15) (ஸாங்கபக்தி)  “மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” (கீதை.18-65) என்று சொல்லப்பட்ட அங்க ஸஹிதையான பக்தி;  (16) (ப்ரபத்தித்வைவித்யம்) “தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா  மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” (கீதை.7-14),தமேவ ஶரணம் கச்ச ஸர்வபாவேந பாரத” (கீதை.18-62) இத்யாதியாலே சொல்லப்பட்ட அங்கப்ரபத்தி, “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” (கீதை.18-66) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஸ்வதந்த்ர  ப்ரபத்தியாகிற  இவ்வர்த்தவிஶேஷங்களை ஸ்ரீகீதாமுகத்தாலே உபபாதித்தாப்போலே,          

(1,2,3) அடியேனுள்ளான் உடலுள்ளான்” (திருவாய்மொழி. 8-8-2)  என்று ஜீவாத்மா, பரமாத்மா வேறுபாடும், ஜீவர்களுக்கு ஒன்றுக்கொன்று பேதமும், “சென்று சென்று பரம்பரமாய் யாதுமின்றித் தேய்ந்தற்று நன்று தீதென்று அறிவரிதாய் நன்றாய் ஞானங்கடந்ததே” (திருவாய்மொழி.8-8-5) என்று தேகத்துக்கும் ஜீவனுக்கும் உண்டான பேதமுமாகிற  தத்த்வ விவேகத்தையும்,                  

 (4)  மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்” (திருவாய்மொழி.1-1-2), “உள்ளதும் இல்லதும் (திருவாய்மொழி.1-2-8) என்று ஆத்மாவினுடையவும் அசித்தினுடையவும் நித்யத்வாநித்யத்வங்களையும்,

 (5)  உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்” (திருவாய்மொழி 1-1-7) என்றும், “கரந்தசிலிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்” (திருவாய்மொழி 1-1-10) என்றும் அந்த சேதநாசேதநங்கள் ஶரீரமாகத் தான் ஶரீரியாய்க் கொண்டுநின்றனர்” (திருவாய்மொழி 1-1-6) இத்யாதியாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வாதீநமாம்படி இருக்கிற அவனுடைய நியந்த்ருத்வத்தையும்,

(6) பத்துடையடியவர்க்கு எளியவன்” (திருவாய்மொழி.1-3-1) என்றும், “பலபிறப்பாய்எளிவருமியல்வினன்” (திருவாய்மொழி.1-3-2) என்றும்,  அவா கொஞ்சம் உடையவர்க்கு ஸுலபன் என்றும், அவதரித்து ஸுலபனாய் என்றும் சொல்லுகிற அவனுடைய ஸௌலப்யத்தையும், “முற்றவும் நின்று” (திருவாய்மொழி.1-2-6) என்று ஆஶ்ரயணீயத்வே ஸர்வஸமனாய் நின்றானென்று சொல்லப்பட்ட அவனுடைய ஸாம்யத்தையும்

(7) நீர் நுமதென்றிவை வேர்முதல் மாய்த்து (திருவாய்மொழி.1-2-3) என்று அஹங்கார தோஷத்தையும்,

         (8) விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன்” (திருவாய்மொழி. 7-1-6) என்று இந்த்ரியபலத்தையும்,

         (9) என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ” (திருவாய்மொழி.3-6-3) என்று மந: ப்ராதாந்யத்தையும்,

         (10) உள்ளமுரைசெயல் உள்ளவிம் மூன்றையும் உள்ளிக்கெடுத்து” (திருவாய்மொழி.1-2-8) என்று கரணநியமநத்தையும்,

         (11) பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்” (திருவாய்மொழி.4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்ரஷ்டைஶ்வர்யகாமன், இறுகலிறப்பு என்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன், “குணங்கொள் நிறைபுகழ்மன்னர்” (திருவாய்மொழி.4-1-8) என்று  இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஶ்வர்யகாமன்திருநாரணன்தாள் காலம்பெறச் சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி.4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச்சரணார்த்தி என்கிற ஸுக்ருதிபேதத்தையும்

        (12)  தேவர்கள் தாமும் புகுந்து அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல்” (திருவாய்மொழி.5-2-5) என்று தேவாஸுர விபாகத்தையும்

        (13) புகழும் நல்லொருவனென்கோ” (திருவாய்மொழி.3-4-1) என்று தொடங்கிநல்குரவும் செல்வும்”  (திருவாய்மொழி.6-3-1)மாயா வாமனனே” (திருவாய்மொழி. 7-8-1) என்கிற திருவாய் மொழிகளிலே சொல்லப்பட்ட விபூதியோகத்தையும்,

                 (14) நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்” (திருவாய்மொழி. 6-9-1) என்று விஶ்வரூபதர்ஶனத்தையும்,    

                  (15) வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு உணக்குமின் பசையற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே” (திருவாய்மொழி.1-3-5) என்றும், “நன்றெனநலம் செய்வது அவனிடை” (திருவாய்மொழி.1-3-7) என்றும்மேவித்தொழுது உய்மினீர்கள் வேதப்புனிதவிருக்கை நாவில் கொண்டச்சுதன்தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி.5-2-9) என்று அங்கஸஹிதமான பக்தியோகத்தையும்,

            (16) சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்” (திருவாய்மொழி.8-10-5) என்றும்மற்றொன்றில்லை” (திருவாய்மொழி.9-1-7) என்கிற பாட்டிலும் சொல்லப்பட்ட ப்ரபத்தி த்வைவித்யத்தையும்

ஆக இவ்வர்த்தவிஶேஷங்களை ப்ரபந்தத்திலே ப்ரதிபாதிக்கக் காண்கையாலேமாயன் அன்றோதிய வாக்கை” (நான்முகன் திருவந்தாதி. 71) என்கிற ஸ்ரீகீதையோடொக்கும் என்கிறார்.

190.       அது தத்த்வோபதேஶம்;    இது தத்த்வதர்ஶி வசநம்.

ஆக இதுக்குக் கீழ் ஸ்ரீகீதையோடொக்கத் திருவாய்மொழிக்கு ஸாம்யம் சொல்லிற்று. இனி மேல் இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும் ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும்       உபதேஶத்தினுடைய பல வைஷம்யமும், ப்ரபந்த ப்ரதிபாத்ய அர்த்த வைஷம்யமும் சொல்லுகிறது.  (அது தத்வோபதேஶம்) அந்த ஸ்ரீகீதை பரதத்த்வபூதனான க்ருஷ்ணன் தானே உபதேஶித்தது. இந்தப்ரபந்தம் (தத்த்வதர்ஶி வசநம்) “தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா உபதேக்ஷ்யந்தி  தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வதர்ஶிந:” (கீதை. 4-34) என்று இது அவனும் ஆப்த தமனாக அருளிச்செய்த தத்வதர்ஶிகளான இவருடைய வார்த்தை.               “அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி  தநஞ்ஜய  (கீதை.7-6)  என்று ஸ்வவைபவத்தைத் தானே அருளிச்செய்கையாலே ஸ்வ ப்ரஶம்i போலிருக்கையாலே மந்தமதிகளுக்கு விஶ்வஸநீயமல்ல. “பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி.4-10-5) என்று மத்யஸ்த்தரான இவர் அருளிச் செய்த இது ஆப்தவாக்யமாகையாலே விஶ்வஸநீயம். ஆகையிறே அவன்தான்  தத்த்வதர்ஶிகளை ப்ரஶம்ஸித்து அவர்கள் உபதேஶிக்கும் அதுவே ஜ்ஞாநம் என்றது.

191.       அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச்சொன்னது; இது நாடாகத் தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான் சொன்னது

(அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச்சொன்னது) அந்த ஸ்ரீகீதைத்ரௌபத்யாஸ் ஸஹிதாஸ்ஸர்வே நமஶ்சக்ருர் ஜநார்த்தநம்” (பார.ஆர.192-56) என்று ராஜ்யகாங்க்ஷிகளாய் வந்து ஶரணம் புகுந்த பாண்டவர்கள் ஐவரையும்  “அன்றைவரை வெல்வித்த” (திருவாய்மொழி. 4-6-1) என்கிறபடியே காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண” (கீதை. 1-32) என்ற இவனைஸ்திதோஸ்மி” (கீதை.18-73) என்னப் பண்ணி  யுத்தத்திலே விஜயிகளாக்கி, “பதித்தைந்திரட்டிப் படை வேந்தர் பட” (பெரியதிருமொழி.2-4-4) என்று அவர்களுக்கு விரோதிகளான துர்யோதநாதிகளை முடிக்கைக்காகச் சொன்னது. (இது நாடாகத் தோற்றோம் என்று ஐயைந்து முடிப்பான் சொன்னது)  இந்த ப்ரபந்தம்தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு” (திருவாய்மொழி.2-1-7) என்று வகுத்த ஶேஷியானவன் பக்கலிலே  ஸர்வரும் தோற்றோம் என்று அநந்யார்ஹ ஶேஷபூதராம்படி ஐயைந்தையும் முடிப்பான் சொன்னது. அந்த ஶேஷத்வ விரோதியான ப்ரக்ருதிப்ராக்ருத ஸங்கத்தையும் ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் அறுத்து ஸம்ஸாரபந்தத்தையும் முடிப்பான் சொன்னது ஆகையாலே அது பந்தமோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேது. இது மோக்ஷைக ஹேதுவாயிருக்கும் என்கிறார்.

192.      அங்கு நம்பிசரணென்று தொடங்கி முடிவில் அப்ரியமென்றது; இங்கு பரமே என்றிழிந்து பொலிகவென்று உகந்தது.

(அங்கு நம்பிசரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியமென்றது) அதினுடைய உபக்ரமத்திலேநாந்தகமேந்திய நம்பிசரண் என்று  தாழ்ந்த தனஞ்சயற்காகி” (பெரியாழ்வார் திருமொழி.1-9-4) என்றுஶிஷ்யஸ்தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம்” (கீதை.2-7) என்று ஶிஷ்யனான அர்ஜுநனுடைய அநுவர்த்தநபூர்வகமாகையாலே ப்ரீதியோடே உபக்ரமித்து, “நூநமஶ்ரத்ததாநோஸி துர்மேதஶ்சாஸி பாண்டவ அபுத்த்யா யந்ந ஜாநீஷே  தந்மே  ஸுமஹத் அப்ரியம்” (அனுகீதை) என்று அவன் பக்கலிலே அவிஶ்வாஸத்தைக் காண்கையினாலே அப்ரீதியோடே தலைக்கட்டிற்று.  (இங்கு பரமே என்றிழிந்து பொலிக என்றுகந்தது) இவர் உபதேஶிக்கிறவிடத்தில் தாந்தராய், ஸமித்பாணிகளாய்க் கொண்டு  அநுவர்த்திப்பாரின்றிக்கே விமுகராயிருக்க க்ருபையாலே உபதேஶிக்கையாலே உபதேஶ உபக்ரமத்திலேஏபாவம் பரமே” (திருவாய்.2-2-1) என்று அப்ரீதியோடே உபக்ரமித்து, அவ்வுபதேஶம் கேட்டு ஜகத்தாகத் திருந்துகையாலே அப்படித் திருந்தினவர்களைக் கண்டு பொலிக பொலிக” (திருவாய்..5-2-1) என்று மங்களாஶாஸநம் பண்ணி உகப்போடே தலைக்கட்டிற்று. ஆகையாலே உபதேஶம் ஸப்ரயோஜநமாய்த்தது இதிலே என்கிறார்.

193.      அதில் ஸித்த தர்மவிதி; இதில் வித்யநுஷ்டாநங்கள்.

(அதில் ஸித்த தர்ம விதியே) அந்த ஸ்ரீகீதைக்கு தாத்பர்யார்த்தம்மாமேகம் ஶரணம் வ்ரஜ” (கீதை.18-66) என்று ஸித்ததர்மவிதாநமொன்றுமேயாய்த்து; (இதில் வித்யநுஷ்டாநங்கள்) இந்த ப்ரபந்தத்திலேதிருநாரணன்தாள் காலம்பெறச் சிந்தித்துய்ம்மினோ” (திருவாய். 4-1-1) என்று விதியும்அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” (திருவாய்.6-10-10) என்று அநுஷ்டாநமும்  இரண்டும் காணலாம்.  இத்தால் இப்ரபந்தம் விதிப்ரகாஶகமானமாத்ரம் அன்றிக்கே அநுஷ்டாந ப்ரகாஶகமும் என்கிறார்.

194.        பகவன் ஞானவிதி பணிவகையென்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்.

அந்த கீதை தனக்கும் உத்கர்ஷம் இவருடைய பரிக்ரஹத்தாலே என்கிறார். (பகவன் ஞானவிதிவகையென்று) “அம்பகவன் வணக்குடைத் தவநெறி” (திருவாய்மொழி. 1-3-5) என்றும்,  “அச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி.5-2-9) என்றும்பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமலமலர்பாதம்” (திருவாய்மொழி.10-4-9) என்றும் ப்ராமாணிகரான இவர் இத்தை  இப்படி ப்ரமாணமாக அங்கீகரிக்கையாலேயாய்த்து அந்த ஸ்ரீகீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கிறார்அல்லது புத்த முநியாயும் கபில முநியாயும் சொன்ன பௌத்தஶாஸ்த்ரமும் ஸாங்க்யஶாஸ்த்ரமும் அவன் சொன்னதேயாகிலும் அந்த ஶாஸ்த்ரங்களுக்கு ப்ராமாணிகபரிக்ரஹ மில்லாமையாலேயிறே அவை அப்ரமாணமாய்த்து.

195.        வேதவேத்ய வைதிகோபதேஶம் ஆவித்யரளவிலே; அஜ்ஞர் ஜ்ஞாநிகள் ஜ்ஞாநவிஶேஷயுக்தர் ஸர்வஜ்ஞனென்னாமல் இவர் திருத்துவர்.

இனி மேல் அவனுடைய உபதேஶம் ஸங்குசிதவிஷயம்; இவருடைய உபதேஶம் அஸங்குசிதவிஷயமென்கிறார் வேதவேத்யனென்று தொடங்கி. (வேதவேத்ய வைதிக உபதேஶம் ஆவித்யரளவிலே) வேதமும் வேதவேத்யனும் வைதிகரான  ருஷிகளும் உபதேஶிப்பதுஆவித்ய: ப்ராக்ருத: ப்ரோக்த:” ( ) என்று அவித்யா ஸம்பந்திகளாய், அத ஏவ தத்த்வ ஹிதபுருஷார்த்த  ஜ்ஞானமின்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளுக்கே. அவ்வளவன்றிக்கே இவர் அஜ்ஞர் ஜ்ஞாநிகள் ஜ்ஞாநவிஶேஷயுக்தர் ஸர்வஜ்ஞனென்னாமல் திருத்துவர். அஜ்ஞரான ஸம்ஸாரிகளோடு தத்வஹிதபுருஷார்த்தங்களில் விஶதஶிக்ஷை பிறந்த முமுக்ஷுக்களோடு பகவத்ஸ்வரூபரூபகுணவிபூதிகளை விஶததமமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி ஸாத்யதஶையிலே நிற்கிற ஜ்ஞாநவிஶேஷ யுக்தரோடு  “நைவ கிஞ்சித் பரோக்ஷம் தே” (ஜிதந்தே ஸ்தோத்ரம்) என்றும், “யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத:” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வத்தையும் ஸர்வகாலமும் ப்ரத்யக்ஷமாக யுகபதேவ ஸ்வத: ஸாக்ஷாத்கரிக்கும் ஸர்வஜ்ஞனோடு வாசியற ஸர்வர்க்கும் இவர் ஹிதாஹிதங்கள் சொல்லித் திருத்துவர்  என்கிறார்.

196.     அறியாதார்க்கு உய்யப்புகுமாறும், இக்கரையேறினார்க்கு இன்ப வெள்ளமும், நிலையறியாதார்க்கு ஆழங்காலும், கரையேற்றுமவனுக்கு நாலாறும் அறிவிக்க வேணும்.

        திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ணுகையிறேஅதில் இவ்வதிகாரிகளுக்கு உபதேஶிக்கும் அர்த்த விஶேஷங்கள் எவையென்னில், (அறியாதார்க்கு உய்யப்புகுமாறும்) “அறியாதார் என்றுமறியாதார் கண்டாமே” (பெரிய திருமொழி,1-7-8) என்று முதலிலே பகவஜ்ஜ்ஞாநமில்லாத ஸம்ஸாரிகளுக்குஅஃதேவுய்யப்புகுமாறு” (திருவாய்மொழி.4-1-11) என்று திருநாரணன் தாள் (திருவாய்..4-1-1) என்கிற இதுவே உஜ்ஜீவநோபாயம் என்று ஸம்ஸாரோத்தீர்ண உபாயத்தையும், (இக்கரை ஏறினார்க்கு இன்பவெள்ளமும்)அக்கரை என்னும் அனந்தக்கடலுளழுந்தி உன் பேரருளால் இக்கரை ஏறி இளைத்திருந்தேன்(பெரியா.திருமொழி.5-3-7) என்று ஸம்ஸாரஸமுத்ரத்திலே அழுந்துகிறவர்களுக்கு பகவதேக உபாயஜ்ஞாநம் பிறக்கையாவது இங்கேயிருக்கச் செய்தே அக்கரை இக்கரை  என்னலாம்படி இருக்குமிறே. ஆகையால் அந்த பகவதேகோபாயஸங்கத்திலே வ்யவஸிதராகையாலே ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தரா யிருக்கிறவர்களுக்குமுகில்வண்ண வானத்திமையவர் சூழவிருப்பர் பேரின்பவெள்ளத்தே” (திருவாய்மொழி. 7-2-11) என்று அவர்கள் அந்த வ்யவஸாயம் குலைந்து த்வரிக்கும்படியான ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும், (நிலையறியாதார்க்கு ஆழங்காலும்) ஶீலகுணத்தில் இழியாமையாலே அதில் நிலை அறியாதவர்களுமாய் ப்ராப்யதஶையிலே நிற்கிறவர்களுக்குசெஞ்சொற்கவிகாள் உயிர்காத்தாட்செய்ம்மின்” (திருவாய்மொழி.10-7-1) என்று பகவத்குணாநுபவம் பண்ணுகிற நீங்கள் ஶீலகுணமாகிற ஆழங்காலில் இழியாதே கொள்ளுங்கோள் என்கிற ஆழங்காலையும், (கரையேற்றுமவனுக்கு நாலாறும் அறிவிக்க வேணும்) “ஸம்ஸாரஸாகரம் கோரமநந்த க்லேஶபாஜநம் த்வாமேவ ஶரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” (ஜிதந்தே ஸ்தோத்ரம்) என்று ஸம்ஸாரஸாகரத்தைக் கடத்தி அக்கரைப்படுத்துமவனுக்குபொங்கைம்புலன்” (திருவாய்மொழி.10-7-10) இத்யாதியாலே சதுர்விம்ஶதி தத்த்வங்களையும் இப்படி அறிவிக்க வேணும் என்கிறார்.     

197.        அவன் முனிந்தார்க்குத் தாம் கண்டது; தம்மை முனிவார்க்குத் தம் கண்; காணாதது காண்பார்க்குக் கண்மாறும் இடம்; ராகாந்தனுக்கு மாயாதோஷம் இவர் காட்டுமவை.

        இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள் ஜஞாதமாகைக்கு ஹேதுவையும், இவர்களுக்கு இவ்வர்த்தவிஶேஷங்களை உபதேஶிக்கைக்கு ஹேதுவையும் அவ்வர்த்தவிஶேஷங்கள் தன்னையும் அருளிச்செய்கிறார். (அவன் முனிந்தார்க்குத் தாம் கண்டது)  “ க்ஷமாமி கதாசந”()  என்றும்க்ஷிபாம்யஜஸ்ரமஶுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு”  (கீதை.16-19) என்று அவன் நிக்ரஹத்துக்கு விஷயமாகையாலே அஜ்ஞராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு  “ஞானப்பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுஎன்றும்பெருங்கேழலார்தம் பெருங்கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார்” (திருவிருத்தம்.45) என்கிற பாட்டாலே மஹாவராஹமான ஸர்வேஶ்வரன் கடாக்ஷிக்கையாலே எனக்கு ஸத்ருஶமில்லை; ஸம்ஸாரஸம்பந்தமும் என்னுடைய ஸம்பந்திகளுக்கும் கிட்டாதென்னும்படி தமக்கு பலித்தபடியாலே ஸர்வர்க்கும் உஜ்ஜீவநோபாயம் அந்த ஜ்ஞாநவராஹமல்லது இல்லை; இது நானறுதியிட்ட விலக்ஷணமான அர்த்தமென்றும்; (தம்மை முனிவார்க்குத் தம் கண்) “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது” (திருவாய்மொழி.5-5-1) என்று உபாயாத்யவஸாய தஶையிலே நின்று துறும்பு  நறுக்கில் ஸ்வரூபஹாநியாமென்னும்  செங்கொடுகுட்டைகளாயிருக்கையாலே ப்ராப்ய வைலக்ஷண்யம் அறியாதே ப்ராப்ய விஷயத்திலே இத்தனை அதிப்ராவண்யமாகாதென்று தம்மைப் பொடியுமவர்களுக்குஎன்னெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே” (திருவாய்மொழி.5-5-2) என்று ப்ராப்யவைலக்ஷண்யத்தை அவகாஹித்த  என் நெஞ்சாலே பார்க்கமாட்டிகோளோ  என்று தம்முடைய உட்கண்ணான ப்ராப்யவைலக்ஷண்ய ஜ்ஞாநத்தையும், (காணாதது காண்பார்க்குக் கண்மாறுமிடம்) ஸர்வம் பஶ்ய: பஶ்யதி” (சா.உ.7-26-2) என்று ஸர்வத்தையும் ஸாக்ஷாத் கரிக்குமவர்களாகையாலே       ஶீல குணம் பாதகம் என்று அறியாதே   இதிலே இழியில் செய்வதென்னென்றஞ்சி தாம் அதிலே ஈடுபட்டவராகையாலே அந்த ஶீல குணத்திலே கண்வையாதே கொள்ளுங்கோள் என்று கண் மாறுமிடத்தையும் (ராகாந்தனுக்கு மாயா தோஷம்) இவர்பக்கல் உண்டான வ்யாமோஹத்தாலே முன்னடி தோற்றாதே இவர்க்கு த்யாஜ்யமான தேஹ தோஷத்தில் கண்வைக்க அறியாதவனுக்குமங்கவொட்டு உன் மாமாயை”  (திருவாய்மொழி.10-7-10) என்று ப்ரக்ருதிதோஷத்தையும் (இவர் காட்டுமவை) இவர்களுக்கு இவர்  தர்ஶிப்பிக்குமவை இவ்வர்த்த விஶேஷங்கள் என்கிறார்.

 198.    ஸாதந ஸாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவேஶ்வரர்க்கு வீடுமின் நினைமின் பிடித்தேன் விடுவேனோ வைத்தெழவூது வாடிநிற்கக் கன்மமன்று ஆன்பின் கைகழியேல் உழிதராய் என் சொற்கொள் என்று இவர் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்.

           ஆனால் அஜ்ஞர்களுக்கு உபதேஶிக்குமாபோலே இவர்களெல்லார்க்கும் எப்போதும் ஒக்கவும் உபதேஶிப்பரோ என்னில்,  (ஸாதந ஸாத்ய மத்யஸ்த்தரைவிட்டு) ஸாதநதஶையிலும் ஸாத்யதஶையிலும் நிற்கிறவர்களாய் அஜ்ஞருக்கும் ஸர்வஜ்ஞனுக்கும் நடுவே சொல்லப்பட்ட முமுக்ஷுக்களுக்கும் நித்யமுக்தர்க்கும் காதாசித்கமாக உபதேஶித்துவிட்டு, (அவற்றில் கலங்கும் ஜீவேஶ்வரர்களுக்கு) அந்த ஸாதந ஸாத்யங்கள் இன்னதென்று அறியாதே கலங்குகிற ஸம்ஸாரி சேதநர்க்கு (வீடுமின் நினைமின்) “வீடுமின் முற்றவும்” (திருவாய்மொழி 1-2-1) என்று பகவத்வ்யதிரிக்த ஸமஸ்தங்களையும் விடுங்கோள் என்று உபக்ரமித்து  “சுனைநன்மலரிட்டு நினைமின் நெடியானே” (திருவாய்மொழி.10-5-10) என்று புஷ்பாத் உபகரணங்களைக் கொண்டு அபரிச்சேத்யஸ்வரூபனான ஸர்வேஶ்வரனை த்ரிவித கரணங்களாலும் ஆஶ்ரயியுங்கோள் என்கிறது முடிவாகவும் ஸம்ஸாரிகளுக்குப் பலகாலும் ஹிதாஹிதங்களைச் சொல்லுவர். (பிடித்தேன் விடுவேனோ இத்யாதி) (ஈச்வரனுக்கும்) பலகாலும் ஹிதாஹிதங்களைச் சொல்லுவர். இவர் இவ்வளவிலே அயோக்யதாநுஸந்தாநம் பண்ணியகலப்புகில் செய்வதென் என்று அதிஶங்கை பண்ணுகிற ஈஶ்வரனைஉன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே” (திருவாய்மொழி.2-6-1), “உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ” (திருவாய்மொழி.2-6-10) என்று அவனைமாஶுச:” (கீதை.18-66) என்றும்,  தோகைமாமயிலார்கள் செவியோசை வைத்தெழ ஆகள் போகவிட்டுக் குழலூது”  (திருவாய்மொழி.6-2-2) என்று ஸாதந ஸாத்யங்களின்னதென்றும்மழறுதேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க என் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே” (திருவாய்மொழி.6-2-5) என்றும்கன்மமன்றெங்கள் கையில் பாவை பறிப்பது” (திருவாய்மொழி.6-2-8) என்றும்  “ஆன் பின் போகேல்” (திருவாய்மொழி. 10-3-8) என்றும்என் கை கழியேல்” (திருவாய்மொழி.10-3-8) என்றும் இப்படி அக்ருத்யங்களைச் செய்யாதே கொள் என்றும், “நீயுகக்கு நல்லவரொடும் உழி தராயே” (திருவாய்மொழி.10-3-8) என்றும்அவத்தங்கள் விளையும் என் சொற்கொளந்தோ” (திருவாய்மொழி.10-3-10) என்றும் ஈஶ்வரனுக்குப் பலகாலும் ஹிதாஹிதங்களைச் சொல்லுவர்.

199.        கதிர்ஞானமூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தமமூடுவார்க்கு வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே.

       ஆனால் இருவர்க்கும் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுகைக்கு ஹேது என்னென்னில், இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள் என்கிறார். (கதிர்ஞான மூர்த்திக்கு உணர்த்தவது ப்ரேமத்தாலே) “பிணக்கியாவரும் யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்திவெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்” (திருவாய்மொழி.6-2-8) என்று ஸம்ஹாரகாலத்திலே ஸர்வத்தையுமொக்கக் கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம் ஒருவர்க்குத் தட்டாதபடி பிரித்து யுகபதேவ ஸாக்ஷாத்கார ஸமமாய் விஶததமமான ஜஞானத்தை உடையவனாகையாலே ஸர்வஜ்ஞனாயிருக்கிறவனுக்கு  உனக்கொன்று உணர்த்துவன்” (திருவாய்மொழி.6-2-5) என்று ஹிதாஹிதங்களைச் சொல்லுகைக்கடி  அவன் பக்கலிலே ப்ரேமத்தாலே. (தமமூடுவார்க்கு வேட்கையெழுவிப்பது ஞானத்தாலே) “கொள்ளென்று தமமூடும்” (திருவாய்மொழி..4-9-4) என்று தமோபிபூதராய் இருக்கிற ஸம்ஸாரிகளுக்குநின்கண் வேட்கை எழுவிப்பனே “ (திருவிருத்தம்.96) என்று பகவத்பக்தியை உபதேஶிக்கிறது பகவத்விமுகரான இவர்களும் நம்மைப்போலே பகவதநுபவம் பண்ண வேணுமென்கிற ஜ்ஞானத்தாலே என்கிறார்.

200.     உயிர் மாய்தல் ஆழுமென்னாருயிர் என்னும் பரது:கம் ஸஹியாமை இரண்டிலுமுண்டு.

இவர்களளவில் இவர்க்குண்டான ஜ்ஞாநப்ரேமங்கள் இரண்டாலும் பரது:க்கம் ஸஹியார் என்னுமிடம் சொல்லுகிறது மேல். (உயிர்மாய்தல் ஆழுமென்னாருயிர் என்னும் பரது:க்கம் ஸஹியாமை இரண்டிலுமுண்டு) “உயிர்மாய்தல் கண்டாற்றேன்”  (திருவாய். 4-9-3) என்று ஸம்ஸாரிகள் து:க்கம் ஸஹியாமையும், “அசுரர்கள் தலைப்பெய்யில்  எவன்கொலாங்கு என்றாழுமென்னாருயிர்” (திருவாய்மொழி.10-3-8) என்று அசுரர்கள் ஒன்றாக வந்து கிட்டினார்களாகில் அங்கென்னாய் விளைகிறதோ என்று என் ஜீவனானது தரைப்படா நின்றதென்கையாலே பரனான ஈஶ்வரனுடைய து:க்கம் ஸஹியாமையும் அந்த ஜ்ஞாநப்ரேமங்கள் இரண்டிலுமுண்டு. ஆகையாலே இவையடியாக இருவர்க்கும்  உபதேஶிப்பர் என்கிறார்.

201.        என்னதுன்னதாவியிலே அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும்.

இன்னும் இவ்வளவன்றிக்கே ஸ்வஶரீரத்திலே ஸர்வர்க்கும் பரிவு நடக்கையாலே  அவனுக்கு ஆத்மபூதரான இவர் அவனுக்குப் பரியக்கடவர் என்னுமிடமும் தோன்றும் என்கிறார் மேல். (உன்னதென்னதாவியிலே (என்னதுன்னதாவியிலே?) அறிவாராத்மாவென்று அவன் மதம் தோன்றும்)  “உன்னதென்னதாவி” (திருவாய்மொழி.4-3-8) என்கிற இடத்திலேஅறிவார் உயிரானாய்” (திருவாய்மொழி. 6-9-8)  என்றும்ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” (கீதை 7-18) என்று ஜ்ஞாநியானவன் தனக்கு தாரகன்; மே மதம், இது க்ருஷ்ணஸித்தாந்தம் என்று அவனுடைய அபிப்ராயத்தாலே இவர்தம்மைத் தனக்கு தாரகராக நினைக்கிற ஆகாரம் தோற்றுகையாலும் அவனுக்கு இவர் பரியக் குறையில்லை ன்கிறார்.

202.        இருத்துமெண்டானாய்ப் பொய்கலவாது அன்பு செய்து பற்றிலனாய் க்ஷுத் த்ருட் பீடித நிர்த்தநரைப்போலே கண்டு கொண்டுண்டு பருகிப் பரிஜனாதிகளோடே தன்னைத்தந்து என்செய்வன் என்றேயிருந்து அகிலபரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லுநன்பகலும் போகு என்றாலும் அகல்வானுமல்லனாய், போகேலென்றால் உகப்பையும் தவிர்ந்து  விதிவகையே நடத்துமவனே உபதேஶ ஸத்பாத்ரம்.

ஆனால் இவர் ஈஶ்வரனுக்கு உபதேஶித்தாரென்னும்போது அவனுக்கு ஶிஷ்ய லக்ஷணம் உண்டோ என்னில், ஶிஷ்யனானவன் ஆசார்யனை ஓரிடத்திலே வைத்துத் தான் அவனுடைய மநோரதமாய் அவன்பக்கலிலே புரையற்ற ஸ்நேஹத்தைப் பண்ணி, புறம்புண்டான ஸங்கங்களை விட்டு, தரித்ரன் நிதி கண்டாப்போலவும், பசித்தவன் சோறு கண்டாற்போலவும், தாஹித்தவன் தண்ணீர் கண்டாப்போலவும் ஆசார்யன் பக்கலிலே அத்யபிநிவேஶத்தைப் பண்ணிஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்” (விஹகேஶ்வர ஸம்ஹிதை) என்கிறபடியே தன்னுடைய ஆத்மாத்மீயங்களை ஆசார்யவிஷயத்திலே ஸமர்ப்பித்து,  “க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் தத்துல்யம் கதஞ்சந” ( ) என்று இவன் எல்லாம் செய்தாலும் ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு ஸத்ருஶமில்லாமையாலே குறைவாளனாய்  ஆசார்யனுடைய தேஹயாத்ரைகளெல்லாம் தானே சுமந்து செய்யுமவனாய் ஆசார்யன் நிக்ரஹித்தாலும் திவாராத்ரவிபாகமற அவனைப் பிரியாதே அவனுக்கிஷ்டமானால் தனக்கு உகப்பானவற்றையும் விட்டு ஆசார்யன் நியமித்தபடியே நடக்குமவனே ஸச்சிஷ்யனாகையாலே இந்த லக்ஷணம் ஈச்வரன் பக்கலிலே உண்டாகையாலே இவனுக்கே ஸச்சிஷ்யலக்ஷணமுள்ளதென்கிறார். (இருத்துமெண்டானாய்) “இருத்தும் வியந்தென்னைத் தன்பொன்னடிக்கீழ்” (திருவாய்மொழி.8-7-1) என்று இவரை ஓரிடத்திலே இருத்திஎன்னெண்டானானான்” (திருவாய்மொழி.1-8-7) என்று  இவருடைய நினைவு தானாய்  (பொய்கலவாத அன்பு செய்து) “பொய்கலவாதென் மெய் கலந்தானே” (திருவாய்மொழி. 1-8-5) என்று இவர் திருமேனியில் பண்ணின ஸங்கத்திலே ஒரு பொய்யின்றிக்கேஅந்தாமத்தன்பு செய்து” (திருவாய்..2-5-1) என்று பரமபதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி (பற்றிலனாய்) “பற்றிலனீசனும்” (திருவாய்மொழி. 1-2-6) என்று இவர்பக்கல் ஸங்கத்தாலே பரமபதத்தில் ஸங்கத்தையும் விட்டு,  (க்ஷுத்ருட்பீடித நிர்த்தநரைப்போலே கண்டு கொண்டுண்டு பருகி) “இருந்தான் கண்டு கொண்டு” (திருவாய்மொழி.8-7-2) என்று நிர்தநனானவன் நிதி கண்டாப்போலே கண்டு கொண்டுஎன்னை முற்றவும் தானுண்டான்” (திருவாய்மொழி.9-6-8) என்றும்தானென்னை முற்றப் பருகினான்” (திருவாய்மொழி.9-6-10) என்றும் சொல்லுகிறபடியே பசி கனத்தவன் சோறு கண்டாப் போலவும் தாஹித்தவன் தண்ணீர் கண்டாப்போலவும் இவரை அபிநிவேஶத்தோடே அநுபவித்து (பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து) “பரிஜநபரிபர்ஹா பூஷணநாந்யாயுதாநி ப்ரவரகுணகணாஶ்ச    ஜ்ஞாநஶக்த்யாதயஸ் தே    பரமபதமதாண்டாந்யாத்மதேஹஸ் ததாத்மா வரத ஸகலமேதத் ஸம்ஶ்ரிதார்த்தம் சகர்த்த” (வரதராஜஸ்தவம்.63) என்றும்எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” (திருவாய்மொழி.2-7-11) என்றும் சொல்லுகிறபடியே தன்னையும் தன் விபூதியையும் இவர்க்குக் கொடுத்து,  “உன்னடியார்க்கென் செய்வன் என்றே இருத்தி” (பெரியதிருவந்தாதி. 53) என்கிறபடியே இவர்க்கு  எல்லாம் செய்தாலும் தான் இழவாளனாய் (அகிலபரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து) இவராத்மாத்மீய ஸகலபரத்தையும் இவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கவேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாங்கடமை அது சுமந்தார் கட்கே” (திருவாய்மொழி. 3-3-6) என்றுபூயிஷ்டாம் தே  நம உக்திம்” (யஜுர்வேதம்) என்கிற படியே இவருடைய நம: என்கிற உக்தி அவனுக்கு கனத்துத் தோற்றுகையாலே இவருடைய அகிலபரத்தையும் சுமந்து  (அல்லுநன் பகலும்  போகு என்றாலும்  அகல்வானுமல்லனாய்) “அல்லுநன்பகலும் இடைவீடின்றி நல்கி ன்னை விடான்” (திருவாய்மொழி.1-10-8) என்று இவர்பக்கல் பண்ணின  ஸ்நேஹத்தாலே திவாராத்ரவிபாகமற இவரை விடமாட்டாதேபோகு நம்பீ” (திருவாய்மொழி.6-2-2) என்று இவர்தாம் உபேக்ஷித்தாலும்  “அகல்வானுமல்லன் இனி” (திருவாய்மொழி.2-6-7) என்று அகலமாட்டாதே (போகேல் என்றால் உகப்பையும் தவிர்ந்து) “ஆன் பின் போகேல்” (திருவாய்மொழி.10-3-8) என்று இவனுக்கு இஷ்டமானத்தையும் நிவர்த்தி என்று இவர் நியமித்தால்திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி” (திருவாய்மொழி.10-3-10) என்ற அவ்வுகப்பையும் தவிர்ந்து (விதிவகையே நடத்துமவனே) “அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே” (திருவாய்மொழி.10-6-1) என்று இவர் விதித்தபடியே நடக்கையாலே ஸதாசார்ய விஷயத்திலே ஸச்சிஷியன் வர்த்திக்கும் க்ரமம் இவன் பக்கலிலே உண்டென்கையாலே இவனே உபதேஶஸத்பாத்ரம் என்கிறார்.

203.        நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஶ்ந ஸேவாபரர்க்கு உளங்கொள் பேசுமளவன்றென்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச்சொல் எவ்வுயிர்க்குமறியவென்று அடைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஶிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க க்ருபையுமிறே.

      ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய் இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஶிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய் ப்ரயோஜநாந்தரபரராய் தன்பக்கல் அநுவர்த்தநமின்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும் பார்த்து இவர் மேல்விழுந்து உபதேஶிப்பான் என் என்னில், அவனோடு இவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள் து:க்கம் கண்டு பொறுக்கமாட்டாத க்ருபையாலும் உபதேஶிப்பர் என்கிறார். (நண்ணாதார் மெய்யிலூனாசை நிர்வேதத்தோடே) “நண்ணாதார் முறுவலிப்பவிலும் (திருவாய்மொழி.4-9)மெய்யில்  வாழ்க்கையிலும் (பெருமாள் திருமொழி.3-1) “ப்ரியஜநமபஶ்யந்தீம் பஶ்யந்தீம் ராக்ஷஸீகணம் ஸ்வகணேந ம்ருகீம் ஹீநாம் ஶ்வகணேநாவ்ருதாமிவ” (ரா.ஸு. 15-24) என்றும் ஶௌரிசிந்தாவிமுகஜநஸம்வாத வைஶஸம் வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:” என்றும் (சொல்லுகிறபடியே?) ஶௌரிசிந்தா விமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸஹவாஸம் ஆழ்வார்தமக்கு அஸஹ்யமானாப்போலே ஸம்ஸாரிகளோடு பொருத்தமுடையார்களன்றிக்கேஊனேறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன்” (பெருமாள் திருமொழி. 4-1) என்றும்ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் (பெரியாழ்வார் திருமொழி.4-5-1) இத்யாதியாலும் ஆழ்வார்களுக்கு அநேகதோஷதுஷ்டமான ஶரீரமும் ஶரீரஸம்பந்திகளும் அஸஹ்மயமானாப்போலே ஶரீரத்தினுடைய அஸ்திரத்ரத்வாதி தோஷங்களை அநுஸந்தித்து அவற்றுடன் பொருந்தாமையை உடையார்களாய்பரீக்ஷ்யலோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத் நாஸ்த்யக்ருத: க்ருதேந” (முண்டகோபநிஷத்.2-11) என்கிறபடியே கர்மஸாத்யங்களான லோகங்கள் அஸ்த்திரங்களாயிருந்தது, ஸ்த்திரமான லோகங்கள் கர்ம ஸாத்யமன்றிக்கே இருந்தது என்று இவற்றினுடைய நிரூபணத்தாலே வெறுப்பை உடையவர்களாய் (ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின) “ஆஸ்திகோ தர்மஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ்ஶுசி: கம்பீரஶ்சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபிதீயதே” () என்றும் ““அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ஆசார்ய உபாஸநம் சௌசம் ஸ்தைர்யமாத்ம விநிக்ரஹ:, (கீதை.13-7) நித்யந்து ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்ட உபபத்திஷு  மயிசாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ( )  என்றும் சொல்லப்படுகிற ஶிஷ்ய  லக்ஷணங்களாலே மிக்கிருப்பாராய் (ப்ரணிபாதாபிவாதந பரிப்ரஶ்ந ஸேவாபரர்க்கு) “தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா” (கீதை.4-34) என்று பக்நாபிமாநராய்க் கொண்டு அநுவர்த்தநபூர்வகமாக சிரகாலஸேவை பண்ணினவர்களுக்கு (உளங்கொள் பேசுமளவன்றென்னும் அர்த்தத்தை) “உளங்கொள் ஞானத்து வைம்மின்” (திருவாய்மொழி.4-10-9) என்றும்பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன்” (பெரிய திருமொழி.2-4-9) என்றும் இப்படி அஷட்கர்ணமாக உபதேஶிக்கவேண்டும்படியான அர்த்தவிஶேஷத்தை (வம்மின் விரோதமீனச்சொல் எவ்வுயிர்க்குமறியவென்று) “வம்மின் புலவீர் நும் மெய்வருத்திக் கைசெய்தும்மினோ” (திருவாய்மொழி.3-9-6) என்றும்சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ”(திருவாய்மொழி.3-9-1) என்றும்  “ஈனச் சொல்லாயினுமாக நான் கண்ட நல்லது ஞானப்பிரானையல்லாலில்லை” (திருவிருத்தம்.99) என்றும்மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிர்க்கும் (திருவாய்மொழி.9-1-7) என்றும்நாமுமக்கறியச் சொன்னோம்” (திருவாய்மொழி.10-2-9) என்றும் (அடைவு கெட அதபஸ்கர்க்கு உபேதஶிக்கிறது) முற்படச் சொன்ன அடைவன்றிக்கேஇதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந சாஶுஶ்ரூஷவே வாச்யம் மாம் யோப்யஸூயதி” (கீதை.18-67) என்று உபதேஶத்துக்கு அதிகாரமில்லாத தேஹயாத்ரா பரவஶராய்ப் பிறரைக் கவிபாடுவார்க்கும் அதுதானுமின்றிக்கே பஶுஸமராய்த் திரிவார்க்கும் ஆசார்யப்ரேமமில்லதார்க்கும் ஆசார்ய ஶுஶ்ரூஷையில்லாதார்க்கும் ஶ்ரோதுமிச்சை இல்லாதார்க்கும் பகவத்விஷயத்தில் அஸூயாபரராயிருப்பார்க்கும் இவர் உபதேசிப்பான் என் என்னில், (ஞாலத்தார் பந்தபுத்தியும்) “ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை” (திருவாய்மொழி.4-5-8) என்று நித்யாநுபவம் பண்ணுகிற நித்யஸூரிகளோபாதி லீலா விபூதியில் உள்ளார்க்கும் அவனோடு ஸம்பந்தமுண்டாயிருக்க இவர்கள் இழக்கவொண்ணாது என்கிற ஸம்பந்தஜ்ஞாநாநுஸந்தாநத்தாலும் (அநர்த்தம் கண்டு ஆற்றாமையும்) “கண்டாற்றேன் உலகியற்கை” (திருவாய்மொழி.4-9-3) என்று இவர்கள் ஸம்ஸாரத்திலே படுகிற அநர்த்தம் கண்டு பொறுக்கமாட்டாமலும் (மிக்க க்ருபையுமிறே) “அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே” (கண்ணிநுண்சிறுத்தாம்பு. 8) என்று இவருடைய மிக்க க்ருபையாலும் உபதேஶித்தார் என்கிறார்.

204.      தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது.

 இப்படி எதிர்த்தலையில் அநுவர்த்தநமின்றிக்கே இருக்க பராநர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலே உபதேஶித்தார் வேறுமுண்டோ என்னில்  (தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது) என்கிறார். (தாய்க்கும்) “நித்யைவேஷா ஜகந்மாதா” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்.1-8-17) என்றும்மாதா கமலாதேவீஎன்றும்த்வம் மாதா ஸர்வலோகாநாம்” (ஸ்ரீவிஷ்ணு.புராணம்.1-9-126) என்றும் சொல்லுகிறபடியே ஸகல ஜகந்மாதாவான பிராட்டி தம்பக்கலிலே விபரீதப்ரதிபத்தி பண்ணியிருக்கிற ராவணனைப் பார்த்து அவனுடைய அநர்த்தங்கண்டு பொறுக்கமாட்டாத க்ருபையாலும் தன்னுடைய மாத்ருத்வப்ரயுக்தமான பந்தவிஶேஷத்தாலும்மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா வதஞ்சாநிச்சதா கோரம் தவாஸௌபுருஷர்ப:, விதிதஸ் ஹி தர்மஜ்ஞ: ஶரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி” (ரா.ஸு.21-19) என்று இப்படி உபதேஶித்தாள். (மகனுக்கும்) “மீள அவன் மகனை” (பெரியாழ்வார் திருமொழி.1-6-2) என்று ஹிரண்யபுத்ரனான ப்ரஹ்லாதாழ்வான் திருநாமம் சொன்ன அது பொறுக்கமாட்டாமையாலே அதிக்ரூரமான தண்டங்களைத் தன்பக்கலிலே ப்ரயோகித்த தமப்பனான ஹிரண்யனைக் குறித்து இவன் அவனுடைய அநர்த்தம் பொறுக்கமாட்டாதேஉர்வ்யாமஸ்த்யுதகேஷுசாஸ்தி¸என்று தொடங்கித்வய்யஸ்தி……மய்யஸ்தி ” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்.1-19-38) என்றும்  ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகந்மயே பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதா குத:” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்.1-19-37) என்று உபதேஶித்தும், அஸாரஸம்ஸார விவர்தநேஷு மா யாத தோஷம் ப்ரஸபம் ப்ரவீமி ஸர்வத்ர தைத்யாஸ் ஸமதாமுபேத ஸமத்வமாராதநமச்யுதஸ்ய।।, தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்ய லப்யம் தர்மார்த்தகாமைரலமல்பகாஸ்தே ஸமாஶ்ரிதாத் ப்ரஹ்மதரோரநந்தாந்நி:ஸம்ஶயம் ப்ராப்ஸ்யத வை   மஹத்பலம் ।। (ஸ்ரீவிஷ்ணுபுராணம். 1-17-90,91) என்று ஆஸுர ப்ரப்ருதிகளைக் குறித்தும் உபதேஶித்தான். (தம்பிக்கும்) “மீண்டும் அவன் தம்பிக்கே” (திருவாய்மொழி.7-6-9) என்று ராவணனுடைய தம்பியான ஸ்ரீவிபீஷணப் பெருமாள் அந்த ராவணனுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாதேத்வாம் து திக் குலபாம்ஸநம்” (ரா.யு.16-15) என்று அவன் தான் திக்கரியாநிற்கச் செய்தேயும் அவனைப் பார்த்து  “யாவந்ந க்ருஹ்ணந்தி ஶராம்ஸி பாணா: ராமேரிதா ராக்ஷஸபுங்கவாநாம் வஜ்ரோபமா வாயு ஸமாந வேகா: ப்ரதீயதாம் தாஶரதாய மைதிலீ, யாவந்ந லங்காம் ஸமபித் ரவந்தி வலீமுகா: பர்வத கூடமாத்ரா:” (ரா.யு.14-4) என்றித்யாதிகளாலே உபதேஶித்தான். (இவர்க்கும்) பின்பு இவர்தாமும் தம் பக்கல் அநுவர்த்தநமின்றிக்கே விமுகரான ஸம்ஸாரிகளைக் குறித்துவீடுமின் முற்றவும் (திருவாய்மொழி.1-2-1) என்று தொடங்கி உபதேஶித்தார். (இவரடி பணிந்தவர்க்கும்) “பாமன்னு மாறனடிபணிந்துய்ந்தவன் “ (இராமானுசநூற்றந்தாதி 1) என்கிற உடையவரும்,வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ  ஜந்ம ஸந்ததி: தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ” (சாண்டில்ய ஸ்ம்ருதி.4-10-9) என்று ருசியில்லாதாரையும் மேல் விழுந்து உபதேஶித்தருளினார். ஆகையாலே பராநர்த்தம் பொறுக்கமாட்டாதே உபதேஶிக்கை இவர்களுக்கே உள்ளது என்கிறார்.

205.      க்யாதிலாப பூஜாபேக்ஷையற மலர் நாடி ஆட்செய்ய உய்யக் கொண்டு ஆரைக் கொண்டு வாளும்வில்லும் கொண்டு என்கிற இழவுகள் தீரப்பெற்றது.

ஆனால் இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத் தம்முடைய க்ருபையாலே இவருபதேஶிக்கிறாராகில், இவ்வுபதேஶம் பலித்தமை உண்டோ என்னில், இவர் க்யாதி லாப பூஜா நிரபேக்ஷராய்க் கொண்டு பகவத் கைங்கர்யமாக உபதேஶிக்க ஜகத்தாகத் திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும் ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும் எம்பெருமானுடைய தனிமைக்கும் க்லேஶப்பட்ட இவருடைய இழவுகளும் தீரப்பெற்றது என்கிறார். (க்யாதிலாபபூஜாபேக்ஷையற மலர்நாடி ஆட்செய்ய) “நீசனேன் நிறைவொன்றும் இலேன்” (திருவாய்மொழி.3-3-4) என்று தம்மைத் தண்மைக்கெல்லையாக நினைத்திருக்கை யாலும்கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக” (திருவாய்மொழி.4-9-4) என்று ஐஶ்வர்யத்தை அக்நிஸமமாகக் காண்கையாலும்தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” (திருவாய்மொழி.8-9-11என்று பாகவத ஶேஷத்வத்தில் எல்லையிலே நிற்கிறவர்களுக்குத் தம்மை ஶேஷமாக நினைத்திருக்கையாலும்ஓதவல்லபிராக்கள் எம்மை ஆளுடையார்கள் பண்டே”  (திருவாய்மொழி. 9-1-11) என்று இப்ரபந்தத்திலே அந்வயித்தவர்களைத் தமக்கு ஶேஷிகளாக நினைத்திருக்கையாலும் க்யாதிலாப பூஜா நிரபேக்ஷராய்க் கொண்டுநறிய நன்மலர் நாடி” (திருவாய்மொழி.5-5-11) என்கிறபடியே ஶேஷத்வமாகிற பரிமளத்தை உடைத்தான ஆத்மபுஷ்பங்களைத் தேடிஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்” (திருவாய்மொழி.4-10-11) என்று கைங்கர்யரூபமாக உபதேஶிக்கையாலே ஜகத்தாகத் திருந்தினபடி. (உய்யக் கொண்டு ஆரைக் கொண்டு வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் தீரப்பெற்றது) “உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி.4-10-9) என்று ஸம்ஸாரிகளுடைய அநர்த்தங்கண்டு பொறுக்கமாட்டாமல் உபதேஶிக்க அவர்கள் திருந்துகையாலே அவர்கள் தனிமை என்கிற அவ்விழவு தீரப்பெற்றது. “ஆரைக் கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி.7-3-4) என்று தமக்கு உசாத்துணை யில்லை  என்று சொல்லப்பட்டதுவும் ஸம்ஸாரிகளடையத் திருந்தித் தமக்கு உசாத்துணை உண்டாகையாலே அவ்விழவு தீரப்பெற்றது. “வாளும் வில்லும் கொண்டு பின்செல்வார் மற்றில்லை” (திருவாய்மொழி. 8-3-3) என்று ஸர்வேஶ்வரனுடைய ஸௌகுமார்யமறிந்து பரியக் கடவார் ஒருவருமில்லை என்று இழவு பட்ட இவர்க்கு பகவத்விஷயத்துக்குப் பரிவராய் மங்களாஶாஸநம் பண்ணப் பலருண்டாகையாலே அவ்விழவும் தீரப்பெற்றது. ஆகையாலே இவருடைய உபதேஶம் பலபர்யந்தமாய்த்து என்கிறார்.

206.        ப்ரஹ்மநிஷ்டரும் ஸம்வத்ஸரவாஸிகளுமாகில் ஏபாவம் பயனன்றாகிலும் சேராது.

       (ப்ரஹ்மநிஷ்டரும் ஸம்வத்ஸரவாஸிகளுமாகில்இப்படி உபதேஶம் பலிக்கும்போது  “பரீக்ஷ்யலோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத் நாஸ்த்யக்ருத: க்ருதேந தத்விஜ்ஞாநார்த்தம் ஸகுருமேவாபிகச்சேத் ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம் தஸ்மை ஸவித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்தசித்தாய ஶமாந்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்மவித்யாம்” (மு.உ.2-11) என்று  ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷாநுஸந்தாநத்தாலும் பரம ப்ராப்யமான தேஶத்தைக் கிட்டப்பெறாமையால் உண்டான வெறுப்போடே ஶமதமாத்யாத்ம குணோபேதனாய் ஸோபஹார ஹஸ்தனாய்க் கொண்டு ஶ்ரோத்ரியனாய் ப்ரஹ்மநிஷ்டனான ஆசார்யனை பக்நாபிமாநனாய் உபஸத்திபண்ண அவ்வாசார்யனும்நாஸம்வத்ஸரவாஸிநே ப்ரப்ரூயாத்என்று ஒரு ஸம்வத்ஸரம் பரீக்ஷித்து பின்னையும் உபதேஶிப்பான் என்று சொல்லுகிற ஶாஸ்த்ரக்ரமத்திலே இவரும் ஸம்ஸாரிகள் அநுவர்த்திக்க உபதேஶித்தா ரானாலோ என்னில், (ஏபாவம் பயனன்றாகிலும் சேராது) ஶிஷ்யனுடைய அநுவர்த்தனம் உண்டாகில்ஏபாவம் பரமே” (திருவாய்மொழி.2-2-2) என்று ”ஓ பாபமே எனக்கு இது பரமாவதே என்று உபதேஶோபக்ரமத்திலே வெறுத்துச் சொல்லுகிற ஆசார்யயோக்தியும் சேராது. ஶிஷ்யன் தன் அனுவர்த்தனத்தாலே இவ்வர்த்தத்தைப் பெற்றானாகில்பயனன் றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்” (கண்ணிநுண்.10) என்கிற ஶிஷ்யோக்தியும் சேராது. ஆகையாலே முன்பு சொன்ன க்ரமத்திலே ஸம்ஸாரி களுடைய அநர்த்தம் கண்டு பொறுக்கமாட்டாதே தம்முடைய க்ருபையாலே உபதேஶித்தார் என்கிறார்.

207.     மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவகர்ப்போபதேஶம்.

ஆனால் அபரிச்சேத்யமாய் நிரதிஶயபோக்யமான பகவத்விஷயத்தை அநுபவிக்கிற இவர் பரோபதேஶம் பண்ணுகிறார் என்னும்போதுஇவர்க்கு அவ்வநுபவம் கூடினபடி எங்ஙனே என்னில், இவருடைய அநுபவபரீவாஹரூபமான சொற்கள்தானே பரோபதேஶமாய் இருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லாநிற்கச் செய்தே பரோபதேஶமாயிருக்கும் என்கிறார். (மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு) “மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திருவிருத்தம்.1) என்று உபக்ரமித்துமங்கவொட்டுன் மாமாயை” (திருவாய்மொழி.10-7-10) என்கிறதளவாக நடுவுள்ள நாலு ப்ரபந்தமும் அநுபவம் உள்ளே செல்லா நிற்கச் செய்தே பரோபதேஶமாயிருக்கிறது; இதுதான் ஸ்வாநுபவகர்ப்ப பரோபதேஶமாய் பரோபதேஶமுகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்த்தையிலும் இவர்க்கு அநுபவத்தில் குறையில்லை.

208.        இவற்றுக்கு மந்த்ரவித்யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.

ஆனால் இந்நாலு ப்ரபந்தத்தாலும் இவருபதேஶிக்கிறவர்த்தம் ஏதென்னில் (இவற்றுக்கு மந்த்ரவித்யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி) ஸகலஶாஸ்த்ர ஸங்க்ரஹமாய் இவ்வாத்மாவுக்கு தத்வஹிதபுருஷார்த்த ப்ரகாஶகமுமாய் ஶரண்யாபிமதமுமாய் ஶிஷ்ட பரிக்ருஹீதமுமாய் மந்த்ரவிதி அநுஸந்தாநரூபமான ரஹஸ்யத்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப் படுகிற அர்த்தபஞ்சகத்தையும் இவற்றிலே ப்ரதிபாதிக்கையாலே இப்ரபந்தங்கள் நாலுக்கும் ரஹஸ்யத்ரயத்தோடு சேர்த்தி என்கிறார்.

209.     அளிப்பானடியேனடைக்கலம் சூடிய பொய் யாதானும் அழுந்தாரென்று ஸ்வரூபவிரோதி நிவ்ருத்திகளையும், தாமரையுந்திப் பெருமாமாயனாளாகவே வாழிய என்று ப்ராப்ய பலங்களையும், நெறிகாட்டி மனத்துக்கொண்டு கண்ணனாலடித்துக் கண்டிலமால் யாதாகிலென்று உபாயத்தையும் சொன்னவை மந்த்ர ஶ்லோகங்களோடே சேரும்

அவற்றில் ப்ரதிபாதிக்கிற அர்த்தபஞ்சகம் இவற்றிலே ப்ரதிபாதிதமாகிறபடி எங்ஙனே என்னில் (அளிப்பான் அடியேன் அடைக்கலம் சூடிய பொய் யாதானும் அழுந்தார் என்று ஸ்வரூபவிரோதி நிவ்ருத்திகளையும்) இதில் ப்ரதமப்ரபந்தமான  திருவிருத்தத்திலேஉயிரளிப்பான்” (திருவிருத்தம்.1) என்று திருமந்த்ரத்திலே ப்ரதமாக்ஷரத்தில் `அவ ரக்ஷணே யென்கிற தாத்வர்த்தத்தாலே சொல்லப்பட்ட ரக்ஷகத்வத்தையும்அடியேன்” (திருவிருத்தம் 1) என்று அவ்வகாரத்தில் லுப்தசதுர்த்தியாலும் உகாரத்தாலும் அந்த ஸர்வரக்ஷகனானவனுக்கு இவ்வாத்மா அநந்யார்ஹஶேஷமாயிருக்கும் என்னுமிடத்தையும் அந்த ஶேஷத்வாஶ்ரயமான ஸ்வரூபம் ஜ்ஞாநாநந்தமயமாயும் ஜ்ஞாநகுணகமாயுமிருக்கிற மகாரார்த்தத்தையும், “அடியேனடியாவி அடைக்கலமே” (திருவிருத்தம்.85) என்று அந்த சதுர்த்தி `ஸம்ப்ரதாநே சதுர்த்தி என்னுமிடத்தில் ஆத்மஸமர்ப்பணத்தையும்திருமால் திருப்பேர் வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்” (திருவிருத்தம்.100) என்று அந்த ப்ரணவத்தில் சொன்ன அநந்யார்ஹ ஶேஷத்வம் ததீயஶேஷத்வபர்யந்தமாயிருக்கும் என்று நமஸ்ஸில் அர்த்தமாகச் சொல்லப்படுகிற ததீயஶேஷத்வத்தையும், “பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்” (திருவிருத்தம்.1) என்றும்யாதானுமோராக்கையில் புக்கு அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்” (திருவிருத்தம்.95) என்றும் அந்த நமஸ்ஸில் `:’ என்கிற ஷஷ்டியாலே சொல்லப்பட்ட அவித்யை அவித்யாகாரிதமான அஹங்காரமமகாரங்கள் அவற்றாலே உண்டான அக்ருத்யகரணாதிகள் தத்கார்யமாய் தேவமநுஷ்யாதிரூபமான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும் சொல்லிவன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தில் அழுந்தார்” (திருவிருத்தம்- 100) என்று அந்த நமஸ்ஸில் நிஷேதவாசியான நஞ்ஞாலே கீழ்ச்சொன்ன அவித்யாதிகளாய் ஸம்ஸாரகர்தமம் எல்லையான விரோதி களினுடைய நிவ்ருத்தியையும் சொல்லி ஆக இப்படி ஸர்வரக்ஷகனான ஸர்வேஶ்வரனுக்கு அநந்யார்ஹஶேஷமாய் ஜ்ஞாநாநந்தலக்ஷணமாய் ததீயஶேஷத்வபர்யந்தமான ஸ்வரூபத்தைiயும், தத்விரோதியான அஹங்காரமமகாரமாகிற விரோதிஸ்வரூபத்தையும் தந்நிவ்ருத்தியையும் சொல்லுகையாலே திருவிருத்தம் ப்ரணவ நமஸ்ஸுக்களிரண்டினுடைய அர்த்தமாயிருக்கிறது. (தாமரையுந்திப் பெருமாமாயன் ஆளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும்)  “தெய்வக்குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரையுந்தித் தனிப்பெரு நாயக” (திருவாசிரியம்.1) என்றும், “ஓராலிலைச் சேர்ந்த எம்பெருமாமாயனை யல்லது ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே” (திருவாசிரியம்.7) என்றும், காரணத்வ ரக்ஷகத்வங்களைச் சொல்லுகையாலே காரணமுமாய் ரக்ஷகனுமாய் இருக்கிறவனே பரமப்ராப்யன்என்கிற நாராயண ஶப்தார்த்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும், “தனிமாத்தெய்வத்தடியவர்க்காளாகவே   இசையுங்கொல்” (திருவாசிரியம்.3) என்றும், ஊழிதோறூழி ஓவாது வாழியவென்று யாம் தொழ இசையுங்கொல்”  (திருவாசிரியம் 4)  என்று அந்த நாராயணபதத்தில் ப்ரார்த்தநா ரூபமான சதுர்த்யர்த்தமான பலஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே அந்தத் திருவாசிரியம் சதுர்த்யந்தமான நாராயணபதத்தில் அர்த்தமாய் இருக்கிறது. (நெறிகாட்டி மனத்துக் கொண்டு கண்ணனால்   அடித்துக் கண்டிலமால்யாதாகில் என்று உபாயத்தையும் சொன்னவிது) பெரிய திருவந்தாதியிலேநெறிகாட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி.6) என்று உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றப் பார்த்தாயோ என்கையாலேஸர்வதர்மாந் பரித்யஜ்ய” (கீதை.18-66) என்கிற உபாயாந்தரங்களினுடைய த்யாஜ்யதையையும்வெங்கோட் டேறுழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு” (பெரிய திருவந்தாதி.48) என்றுமாமேகம் ஶரணம் வ்ரஜ”(கீதை.18-66என்கிற மாநஸாத்யவஸாய ரூபமான உபாயஸ்வீகாரத்தையும்சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோரினத் தலைவன் கண்ணனால் யான்” (பெரிய திருவந்தாதி. 25) என்றும்எம்மிறையார் தந்த அருளென்னும் தண்டாலடித்து” (பெரிய திருவந்தாதி.26) என்றும் சொல்லுகையாலேஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” (கீதை. 18-66) என்று உபாயபூதன் பண்ணும் ஸர்வபாபவிமோசனத்தையும்வானோ மறிகடலோ இத்யாதி மருங்கு வன்துயரை கண்டிலமால்” (பெரிய திருவந்தாதி.54) என்று அந்த விரோதிகள் போனவிடம் தெரியாதபடி தன்னடையே விட்டுப் போய்த்ததென்கையாலேஇஷ்யாமிஎன்கிற ணிச்சாலே சொல்லுகிற அர்த்தத்தையும்அடர்பொன் முடியான்இத்யாதியாதாகில் யாதே இனி” (பெரிய திருவந்தாதி 70) என்றுமாஶுச:” (கீதை. 18-66) என்கிற பதத்தாலே பலிதமான நிர்பரத்வாநுஸந்தானத்தையும்  சொல்லுகையாலே திருவந்தாதியாலே ஶ்லோகார்த்தமான உபாய ஸ்வரூபத்தைச் சொல்லிற்று. ஆகையாலே இவை மந்த்ர ஶ்லோகங்களோடு சேரும். ஆகத் திருவிருத்தம், திருவாசிரியம்,  திருவந்தாதி என்கிற மூன்றும் அர்த்தபஞ்சகத்தையும் ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும் அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதிக்கிற திருமந்த்ரத்தினுடையவும் சரம ஶ்லோகத்தினுடையவும் அர்த்தமாயிருக்கிறது.

210.        த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி யென்றது ஸாரஸங்க்ரஹத்திலே.

(த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி என்றது ஸாரஸங்க்ரஹத்திலேதிருவாய்மொழி த்வயத்தில் அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஶரணாகதி என்கிறார். த்வயத்திலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஶ்ரிய:பதித்வம், நாராயணத்வம், விலக்ஷணவிக்ரஹயோகம், அவனுடைய உபாயத்வம், உபாயபரிக்ரஹம், கைங்கர்யப்ரதாநார்த்தமான லக்ஷ்மீ தத்வல்லபனுடைய நித்யஸம்பந்தம், ஸர்வஸ்வாமித்வம், நிரதிஶயபோக்யத்வம், கைங்கர்யப்ரார்த்தனை, கைங்கர்ய விரோதிநிவ்ருத்தி ஆக இப்பத்து அர்த்தத்தையும் திருவாய்மொழி பத்து பத்தாலும் ப்ரதிபாதிக்கையாலே இத்திருவாய்மொழி தீர்க்க ஶரணாகதி என்று ஸாரஸங்க்ரஹத்திலே பிள்ளை அருளிச் செய்தார் என்கிறார்.  

211.      மூன்றில் சுருக்கிய ஐந்தையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக் கொண்ட நோற்ற நாலும் எம்மா ஒழிவில் நெடு வேய் என்கிற இருபதிலே விஶதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும், அருளினன் வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும், தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணிசெய்யென்கிற முக்த லக்ஷணவ்ருத்தியாலே இரண்டிலொன்றையும் இதுக்கு ப்ரமேயமென்னும்.

இனிமேல் திருமந்த்ரத்திலும் சரமஶ்லோகத்திலும் ஸங்க்ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்தபஞ்சகத்தை த்வயத்திலே விவரித்தாப்போலே திருவிருத்தம் திருவாசிரியம்,  திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும் ஸங்க்ரஹேண சொல்லப்பட்ட அர்த்தபஞ்சகத்தை த்வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத் திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச் சொல்லுகையாலே அர்த்தபஞ்சகமும் இதுக்கு ப்ரமேயமென்றும் அந்த அர்த்தபஞ்சகத்திலும் வைத்துக் கொண்டு உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும் அவைதன்னிலும் உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும் சொல்லக் கடவதென்கிறார். மூன்றில் சுருக்கின ஐந்தையும் என்று தொடங்கி) திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்தில் சுருங்கச் சொல்லப்பட்ட அர்த்தபஞ்சகத்தையும்   திருவாய்மொழியில் (உயர் திண் அணை ஒன்று) முதல் திருவாய்மொழியான உயர்வற உயர்நலத்தில் ஶ்ருதிச்சாயையாலே அந்வயரூபேண ஸ்வாநுபவரூபத்தாலே பரத்வத்திலே பரத்வத்தையும், திண்ணன் வீட்டில் (திருவாய்மொழி.2-2) இதிஹாஸ புராணப்ரக்ரியையாலே அந்வயவ்யதிரேகங்களிரண்டாலும் பரோபதேஶமுகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தையும், அணைவதரவணையில் (திருவாய்மொழி.2-8) மோக்ஷப்ரதத்வத்தாலே வந்த பரத்வத்தையும், ஒன்றும் தேவிலே (திருவாய்மொழி.4-10) அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தையும் சொல்லுகையாலே, ஆக உயர்வற  உயர்நலம்,  திண்ணன்வீடு, அணைவதரவணை, ஒன்றுந்தேவு என்கிற நாலு திருவாய்மொழியாலும் பர ஸ்வரூபத்தையும்;  (பயிலேறு கண் கரு) பயிலும் சுடரொளியில் (திருவாய்மொழி.3-7) இவ்வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாகையாலே அதினுடைய எல்லையான  பாகவதஶேஷத்வத்தையும், ஏறாளுமிறையோனில் (திருவாய்மொழி.4-8) அவன் வேண்டாத ஆத்மாத்மீயங்களை வேண்டேன் என்று இவ்வாத்மா  ஶேஷமானபோது உபாதேயமாய் அல்லாதபோது த்யாஜ்யமென்கிற வ்யதிரேகத்தாலே ஶேஷத்வமே ஸ்வரூபமென்னும் இடத்தையும் கண்கள் சிவந்திலேசென்று சென்று பரம்பரமாய்” (திருவாய்மொழி.8-8-5) இத்யாதியாலே ஶேஷத்வாஶ்ரயமான ஆத்மவஸ்துவினுடைய ப்ரக்ருதே:பரத்வ ஜ்ஞாநாநந்த அமலத்வங்களையும், கருமாணிக்க மலையிலே அந்த ஶேஷத்வத்தினுடைய அநந்யார்ஹத்வத்தையும் சொல்லுகையாலே, ஆக பயிலுஞ்சுடரொளி, ஏறாளுமிறையோன், கண்கள்சிவந்து, கருமாணிக்க மலை என்கிற நாலு திருவாய்மொழியாலும் ஸ்வ ஸ்ரூபத்தையும், (வீடு சொன்னால் ஒரு கொண்டவீடுமின் முற்றத்தில் (திருவாய்மொழி.1-2) ஸ்வரூப விரோதியான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம் என்றும் சொன்னால் விரோதத்தில் (திருவாய்மொழி.3-9) உபாய விரோதியான அஸேவ்யஸேவை முதலானவை த்யாஜ்யம் என்னுமிடத்தையும், ஒரு நாயகத்தில் (திருவாய்மொழி.4-1) ப்ராப்யவிரோதியான ஐஶ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யமென்றுமிடத்தையும், கொண்டபெண்டிரில் (திருவாய்மொழி.9-1) ப்ராப்திக்கு விரோதியான ஶரீர ஸம்பந்திகள்  தொடக்கமானவை த்யாஜ்யம் ன்னும் இடத்தையும்  சொல்லுகையாலே ஆக வீடுமின்முற்றவும் சொன்னால் விரோதம் ஒருநாயகம் கொண்ட பெண்டிர் என்கிற நாலு திருவாய்மொழியாலும் விரோதி ஸ்வரூபத்தையும், (நோற்ற நாலும்) “நோற்றநோன்பிலேன் நுண்ணறிவிலேன்” (திருவாய்மொழி.,5-7-1) என்று தம்முடைய ஆகிஞ்சந்யபூர்வகமாகவும் ஆராவமுதில்,  “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய்மொழி.5-8-8) என்று தம்முடைய அநந்யகதித்வபூர்வகமாகவும், மானேய் நோக்கில்வைகலும் வினையேன் மெலிய” (திருவாய்மொழி.9-9-1) என்று தம்முடைய பக்திபாரவஶ்யதையாலும் அடிமேல் சேமங்கொள்ளென்று ஶரணம் புகுந்து, பிறந்தவாற்றில்நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏகசிந்தையனாய்” (திருவாய்மொழி.5-10-11) என்று தமக்கு அவ்வுபாயத்திலுண்டான அத்யவஸாயத்தையும் சொல்லுகையாலே, ஆக நோற்றநோன்பு, ஆராவமுது, மானேய்நோக்கு, பிறந்தவாறு என்கிற நாலு திருவாய்மொழியாலும் உபாயஸ்வரூபத்தையும், (எம்மா ஒழிவில் நெடு வேய் என்கிற) எம்மாவீட்டிலே (திருவாய்மொழி.2-9) கைங்கர்யத்தினுடைய ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை ப்ரார்த்தித்து, ஒழிவில் காலத்தில்  (திருவாய்மொழி.3-3) அந்த கைங்கர்யந்தன்னை ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமாகச் செய்ய வேணுமென்று ப்ரார்த்தித்து. நெடுமாற்கு அடிமையில் (திருவாய்மொழி.8-10) அந்த கைங்கர்யம் பாகவத பர்யந்தமாக வேணுமென்றும் வேய்மருதோளிணையில் (திருவாய்மொழி.10-3) அதுதான் பரஸம்ருத்தயைக ப்ரயோஜநமாகவும் ப்ரார்த்திக்கையாலே,  ஆக எம்மாவீடு, ஒழிவில்காலம், நெடுமாற்கடிமை, வேய்மருதோளிணை என்கிற நாலு திருவாய்மொழியாலும் பல ஸ்வரூபத்தையும் (இருபதிலே விஶதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்ஆக இவ்வர்த்த பஞ்சகத்தையும் இவ்விருபது திருவாய்மொழியாலும் விஶதமாக அருளிச்செய்து மற்ற எண்பது திருவாய்மொழியாலும் விஸ்த்ருதமாக்குகையாலே இத்திருவாய்மொழிக்கு இவ்வர்த்த பஞ்சகமும் ப்ரமேயமென்றும் (அருளினன் வீடு பெற்ற என்கையாலே ஐந்திலுமிரண்டையும்) “மயர்வறமதிநலமருளினன்” (திருவாய்..1-1-1)அவாவற்றறு வீடுபெற்ற(திருவாய்..10-10-11) என்று அர்த்தபஞ்சகத்துக்கும் ப்ரதாநமான உபாய உபேயங்கள் இரண்டையும் இதுக்கு  ப்ரமேயம் என்றும், (தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணிசெய் என்கிற முக்தலக்ஷண வ்ருத்தியாலே இரண்டிலொன்றையும் இதுக்கு ப்ரமேயம் என்னும்) “தொழுதெழுஎன் மனனே” (திருவாய்மொழி.1-1-1) என்றும், “விருப்பே பெற்று அமுதமுண்டு களித்தேனே”  (திருவாய்மொழி.10-8-6) என்றும், “மேலைத் தொண்டுகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்”  (திருவாய்மொழி .10-8-7) என்றும் சொல் பணிசெய் ஆயிரம்” (திருவாய்மொழி.1-10-11) என்றும் சொல்லுகிறபடியே முக்தர்க்கு அஸாதாரண ரக்ஷணமான வாசிக வ்ருத்தி இத்திருவாய்மொழி என்கையாலே அவ்வுபாய உபேயங்களிரண்டிலும் உபாயமொன்றுமே இதுக்குத் தாத்பர்யார்த்தமென்று சொல்லக்கடவதென்கிறார்.

212.        ரஹஸ்யத்துக்கோரெழுத்தும் அதுக்கோருருவும் போலேயானவற்றிலே, இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே, அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஶ்வர பந்தரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதியோக ததீயாபிமாநோபதேஶவிஷய அந்யாபதேஶ ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம்.

திருமந்த்ரமும் த்வயமும் முதல் பதங்களிலே ஸங்க்ரஹமாய் ஒழிந்தவிடம் அவற்றினுடைய விவரணமாயிருக்குமாபோலே திருவிருத்தமும்  திருவாய்மொழியும் முதல் பாட்டுக்களிலே ஸங்க்ரஹமாயிருக்கும் என்கிறார் மேல். (ரஹஸ்யத்துக்கோரெழுத்தும் அதுக்கு ஓருருவும் போலேயானவற்றிலே) ஓரெழுத்து ஓருருவென்னும்படி திருமந்த்ரத்துக்கு ஸங்க்ரஹமான அகாரத்தையும் அதன் விக்ருதியான ப்ரணவத்தையும் போலே என்னுதல்; அன்றிக்கே த்வயத்துக்கு ஸங்க்ரஹமான அதில் ப்ரதம பதத்தையும் போலேயிருக்கிற திருவிருத்தத்தில் முதல் பாட்டிலும் திருவாய்மொழியில் முதல் பாட்டிலும் (இமையோரதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம் தொழுதெழு என்ற பஞ்சகத்தோடே) “இமையோர் தலைவா” (திருவிருத்தம் 1) என்றும்அயர்வறும் அமரர்கள் அதிபதி” (திருவாய்மொழி 1-1-1) என்றும் சொல்லுகையாலே ஸூரிஸேவ்யமாய் ஸர்வாதிகமா யிருக்குமென்று பரஸ்வரூபத்தையும்அடியேன்என்றும்என் மனனேஎன்றும் சொல்லுகையாலே ஶேஷமாய் அபரிச்சேத்யாந்த:கரணமா யிருக்கும் என்று ஸ்வஸ்வரூபத்தையும்பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்என்றும்மயர்வுஎன்றும் சொல்லுகையாலே அவித்யாதிகளான  விரோதிஸ்வரூபத்தையும்உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்என்றும்மதிநலமருளினன்என்றும் சொல்லுகையாலே லோகரக்ஷணார்த்தமாக அநேகாவதாரங்களைப்  பண்ணின ஸர்வேஶ்வரனுடைய க்ருபையே உபாயமென்று உபாய ஸ்வரூபத்தையும்அடியேன் செய்யும் விண்ணப்பமேஎன்றும்தொழுதெழுஎன்றும் சொல்லுகையாலே ஶேஷிவிஷயத்தில் கரணத்ரயத்தாலும் உண்டான கைங்கர்யமே புருஷார்த்தம் என்று பலஸ்வரூபத்தையும் ஆக இவ்வர்த்தபஞ்சகத்தையும் ஸங்க்ரஹேண சொல்லி அவ்வர்த்தபஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும் அவித்யாதி ஸ்வரூபஸ்வபாவங்கள் முதலானவர்த்தவிஶேங்களும் ஸங்க்ருஹீதமென்கிறார் மேல். (அவித்யாதி ஸ்வரூபஸ்வபாவ) “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்என்று அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களினுடைய ஸ்வரூபஸ்வபாவத்தையும். அன்றிக்கே அவித்யாதி ஸ்வரூபஸ்வபாவமென்ற இவற்றை தத்வத்ரய விஷயமாக்கி அவற்றினுடைய ஸ்வரூபஸ்வபாவங்களைப்பொய்ந்நின்ற ஞானம்என்றும்மயர்வுஎன்றும் அவித்யையாகிற அசித்ஸ்வரூபத்தையும் ஜ்ஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞானங்களாகிற அவித்யா ஸ்வபாவத்தையும்அடியேன்என்று ஆத்ம ஸ்வரூபத்தையும்என்மனனேஎன்று ஆத்மாவினுடைய ஸ்வபாவத்தையும்தலைவாஎன்றும்யவன்என்றும் ஈஶ்வர ஸ்வரூபத்தையும்நலமுடையவன்என்று அவனுடைய ஸ்வபாவத்தையும் சொல்லுகிறார் என்றுமாம்.  (ஆத்மேஶ்வரபந்த) “இமையோர் தலைவா” “அடியேன்” “அதிபதி” “தொழுதெழுஎன்று ஜீவேஶ்வரர்களுக்குண்டான ஶேஷஶேஷிபாவ ஸம்பந்தத்தையும், ரக்ஷணக்ரமம்உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்என்றும்மயர்வற மதிநலமருளினன்என்றும் ஈஶ்வரன் அநேகாவதாரங்களைப் பண்ணி ரக்ஷிக்குமென்றும் அஜ்ஞானத்தைப் போக்கி ஜ்ஞாநபக்திகளைத் தன் க்ருபையாலே தந்தானென்றும் அவனுடைய ரக்ஷணக்ரமத்தையும் (குண விக்ரஹ விபூதியோக) “நலமுடையவன்என்று குணத்தையும் சுடரடிஎன்று விக்ரஹத்தையும்இமையோர்என்றும்அயர்வறும் அமரர்கள்என்றும் விபூதியையும் அந்த ஸூரிகளை முன்னிடுகையாலே  ததீயாபிமானத்தையும்மெய் நின்று கேட்டருளாய்” “தொழுதெழு என் மனனேஎன்று நெஞ்சு போலே பவ்யமான ஈஶ்வரனும் அப்படி பவ்யரானார் உபதேஶத்துக்கு விஷயமென்றும் (அந்யாபதேஶஹேது) “நலமருளினன்என்று பக்தியைத் தந்தான்  என்கையாலே அந்யாபதேஶத்துக்கு ஹேது அந்த பக்தி என்றும். ஆதி ஶப்தத்தாலே வேதாந்தங்களில் யாவை சில அர்த்தங்கள் சொல்லப்பட்டது அவையெல்லாம் ஸங்க்ரஹரூபேண இவற்றிலே சொல்லப்பட்டதென்கிறார்

213.        அடி தொழுதெழென்ற இதிலே வஸ்துநிர்த்தேஶ நமஸ்கார ஆஶீஸ்ஸுக்களுமுண்டு.

ப்ரபந்தாரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்ந பரிஸமாப்த்யர்த்தமாக வும் சொல்லக்கடவதான  ஆஶீர்நமஸ்க்ரியா  வஸ்துநிர்தேஶம் என்கிற இவை இப்ரபந்த ஆரம்பத்திலும் உண்டோ  என்னில்,  (அடிதொழுதெழு என்கிற இதிலே வஸ்து நிர்தேஶ நமஸ்கார ஆஶீஸ்ஸுக்களும் உண்டு) என்கிறார். “துயரறு சுடரடி” (திருவாய்மொழி 1-1-1) என்று வஸ்து நிர்தேஶத்தையும்தொழுதுஎன்று நமஸ்காரத்தையும்எழுஎன்று ஆஶீஸ்iஸயும் சொல்லிற்று என்கிறார்.

214.        சாதுசனம் நண்ணா மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர் அடிமையறவுரிய நோய்களறுக்கும் உடைந்து ஏற்றரும் வானின் தாளின்கீழ் அடிக்கீழ் இன்பக்கதி பயக்கும் ஊடுபுக்கு மூவுலகும் உருகாநிற்பர் என்னும் ஸாம்யத்தாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்ப்பாவம்.

         இனி மேல்பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” (கீதை.4-8) என்று ஸாதுபரித்ராண துஷ்க்ருத் விநாஶார்த்தமான பகவதவதாரம் போலே இத்திருவாய்மொழியினுடைய அவதாரமும் என்கிறார் சாதுசனம் என்று தொடங்கி.  (சாதுசனம்) “சாதுசனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு” (திருவாய்மொழி.3-5-5) என்று ஸர்வேஶ்வரன்பரித்ராணாயஇத்யாதியில்படியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஶார்த்தமாக அவதரித்துமயர்வறமதிநலம் அருளினன்” (திருவாய்மொழி.1-1-1) என்கிறபடியே அஜ்ஞாநத்தை வாஸநையோடே போக்கி ஜ்ஞாநபக்திகளை உண்டாக்கி (அடிமையற) “அடிமையறக் கொண்டாய்” (திருவாய்மொழி.4-9-6) என்கிறபடியே அநந்யார்ஹஶேஷமாக அங்கீகரித்து,          (நோய்களறுக்கும்) “நோய்களறுக்கும் மருந்தே” (திருவாய்மொழி.9-3-3) என்கிறபடியே ஸம்ஸாரவ்யாதிபேஷஜமாய் (ஏற்றரும்) “ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு” (திருவாய்மொழி.7-6-10) என்று ஸ்வயத்நத்தாலே பெறவரிதாயிருக்கிற பரமபதத்தைக் கொடுத்து (தாளின்கீழ்) “தன் தாளின்கீழ்ச் சேர்த்து” (திருவாய்மொழி.7-5-10) என்கிறபடியே தனக்கு பாதோபதாநமாக இட்டுக்கொண்டு (இன்பக்கதி) “இன்பக்கதிசெய்யும்” (திருவாய்மொழி 7-5-11) என்று நிரதிஶயாநந்தியாக்கி (ஊடுபுக்கு) “ஊடுபுக்கெனதாவியை உருக்கி உண்டிடுகின்ற” (திருவாய்மொழி .5-10-10) என்று தன்னுடைய போக்யதாதிஶயத்தாலே சேதநனை த்ரவத்ரவ்யமாம்படி உருக்குமாபோலே திருவாய்மொழியும் (நண்ணா) “நண்ணாவசுரர் நவிவெய்த நல்லவமரர் பொலிவெய்த எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவரின்பம் தலைச்சிறப்ப பண்ணார் பாடல்” (திருவாய்மொழி.10-7-5) என்கிறபடியே ஸாதுபரித்ராண துஷ்க்ருத்விநாஶநார்த்தமாக அவதரித்து (மாசறுக்கும் தெருள்கொள்ளப் பத்தராவர்) “ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்” (திருவாய்மொழி.5-3-11) என்று நெஞ்சுக்கு மாசான அஜ்ஞானத்தை வாஸநையோடே போக்கிதெருள்கொள்ளச் சொன்ன ஓராயிரம்” (திருவாய்மொழி.2-10-11) என்றும்தூயவாயிரத்திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே” (திருவாய்மொழி.6-4-11) என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞாநபக்திகளைக் கொடுத்துஉரிய தொண்டராக்கும்” (திருவாய்மொழி.6-9-11) என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யார்ஹஶேஷமாமாக்கி (உடைந்து) “உடைந்து நோய்களை ஓடுவிக்குமே” (திருவாய்மொழி.1-7-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகலதுரிதங்களையும் ஸவாஸநமாகப் போக்கிவானின்மீதேற்றி அருள்செய்து” (திருவாய்மொழி.8-4-11) என்று தேஶவிஶேஷ ப்ராப்தியைப் பண்ணுவித்து, (அடிக்கீழ்) “அடிக்கீழிருத்தும்” (திருவாய்மொழி.8-8-11) என்கிறபடியே அவனுக்கு பாதோபதாநமாக்கி (பயக்கும்) “எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே” (திருவாய்மொழி.7-9-11) என்கிறபடியே இவனுக்கு ஆநந்தத்தை உண்டாக்கி (மூவுலகும் உருகாநிற்பர்) “ஒன்பதோடொன்றுக்கும் மூவுலகும் உருகுமே” (திருவாய். 9-5-11) என்றும்ஊற்றின்கண் நுண்மணல் போல் உருகாநிற்பர்” (திருவாய்மொழி.6-8-11) என்றும் சொல்லுகிறபடியே தன்னுடைய போக்யதையாலே சேதநரை த்ரவத்ரவ்யமாக்கி இப்படி ஸர்வேஶ்வரனோடு ஸாம்யத்தை உடையதாகையாலே (வாச்யன் பத்தினாய தோற்றம் போலே)  தனக்கு வாச்யனான ஸர்வேஶ்வரனுடையபத்தினாய தோற்றம்” (திருச்சந்த விருத்தம் 79) என்கிற பத்து அவதாரம்போலேதோற்றங்களாயிரம்” (திருவாய்மொழி.6-8-11) என்று இத்திருவாய்மொழியின் பத்துப் பத்தான ஆவிர்ப்பாவமுமென்கிறார்.

215.      ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்து என்னுமவை போலே நூறேசொன்ன பத்துநூறு ஓராயிரமென்றதும் ஸாபிப்ராயம்.

இனிமேல் (ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தும் என்னுமவை போலே) “ஐந்தினோடு ஐந்தும் வல்லார்” (திருவாய்மொழி.10-2-11) என்று ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயம் ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயமுமானாப்போலவும்ஒன்பதோடொன்றுக்கும்” (திருவாய்..9-5-11) என்று ஒன்பது பாட்டுக்கு ஒரு கருத்தும் ஒருபாட்டுக்கு ஒரு கருத்துமானாப்போலவும்பாடலோராயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்”  (திருவாய்..3-4-11) என்று பத்து பாட்டுக்கு ஒரு  கருத்தானாப்போலவும் (நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம் என்றதும் ஸாபிப்ராயம்) “நூறே சொன்ன ஆயிரம்” (திருவாய்மொழி.  9-4-11) என்றும்பத்து நூற்றுள் இப்பத்து” (திருவாய்மொழி.6-7-11) என்றும் சொல்லுகையாலே பத்துக்கள் தோறும் வேறு வேறு கருத்தாயும்அவாவிலந்தாதிகளால் இவை ஆயிரமும்” (திருவாய்மொழி.10-10-11) என்று ஆயிரத்துக்கும் ஓர் அபிப்ராயமாயும் இப்படித் தலைக்கட்டும் என்கிறார்.

216.       பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஶப்பத்து.

(பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஶப்பத்து) அதாவது ஒரு பாட்டுதொழுதெழு” (திருவாய்மொழி.1-1-1) என்று ஒரு க்ரியையோடே தலைக்கட்டுமாப்போலவும், பத்து பாட்டு பரத்வம், பஜநீயத்வம், ஸௌலப்யம், அபராதஸஹத்வம் என்றாப்போலே ஒரு கருத்தோடே தலைக்கட்டுமாபோலவும், நூறுபாட்டு பரோபதேஶமாய் இருப்பதொரு திருவாய்மொழியோடே தலைக்கட்டும் என்கிறார்.

217.        பகவத் பக்த பரங்கள் ஆஶ்ரயண விதி ஶேஷங்கள்.

இவற்றில் பகவத்பக்தபரங்களாய் வருமவற்றுக்குத் தாத்பர்யம் ஏதென்ன, அவற்றுக்குத் தாத்பர்யத்தை அருளிச்செய்கிறார். (பகவத் பக்தபரங்கள் ஆஶ்ரயண விதிஶேஷங்கள்) “பயிலும் சுடரொளி” (திருவாய்மொழி.3-7) நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி.8-10) என்ற பாகவத பரங்களான திருவாய்மொழிகளுக்குக் கருத்து என்னென்னில்,  ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்ககாமோ யஜேத” (ஆபஸ்தம்ப சிரௌ.8-2) என்று ஸ்வர்க்க காமனானவன் ஜ்யோதிஷ்டோமத்தைப் பண்ணுவான் என்கிற விதிக்குப்ரயாஜைர் யஜேத”  இத்யாதி விதிகள் ஶேஷமாய் அவற்றினுடைய அநுஷ்டானத்தோடே பலபர்யந்தமாய்த் தலைக் கட்டுமாபோலேதிருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி.4-1-1) “நலமந்தம் இல்லதோர் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமின் ஓவாதே” (திருவாய்மொழி.2-8-4) என்கிற ஆஶ்ரயணம் பாகவத ஸமாஶ்ரயணத்தோடொழிய தலைக்கட்டாமையாலே அவ்வாஶ்ரயண விதிக்கு ஶேஷமென்கிறார். அன்றிக்கே `பகவத்பக்தபரங்கள் என்கிற இதுக்கு பகவத் பரமாயும் தத்பக்தபரமாயும் வருமவை என்று பொருளானபோது (பாட்டு க்ரியையிலே முடியுமா போலேயும் பத்துப் பாட்டு நிதாநம் சொல்லும் பாட்டிலே முடியுமாபோலேயும் பத்துத் தோறும் உபதேஶமுண்டாகையாலே) பகவத்குணங்களையும் தத்பக்தனான ஜீவனுடைய குணங்களையும் சொல்லுகிறவிடங்களை ஆஶ்ரயண விதிக்கு ஶேஷம் என்கிறார். அன்றிக்கே பகவத்பக்தபரமாம்படி ஒருங்கவிட்டு பரோபதேஶம் பண்ணுகிற திருவாய்மொழியில் என்று இதற்குத் தாத்பர்யமாகக் கடவதென்று ஏகவாக்யமாகச் சொல்லவுமாம்.

218.      பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஶரண்யத்வ, ஶக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்திஹரத்வ விஶிஷ்டன் மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலைசேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷபலவ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த பலாந்யருசி யொழிந்து, விரக்திபல ராகம் கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஶநபலப்ராப்தி மரணாவதியாகப் பெற்று, காலாஸத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறரறியப் பத்துத்தோறும் வெளியிடுகிறார்.

இனி மேல் திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும் பரத்வாதி குண     விஶிஷ்டனான  ஸர்வேஶ்வரன் தமக்குப் பிறப்பித்த தஶாவிஶேஷங்களை வெளியிடுகிறார் என்கிறார். பரத்வ காரணத்வாதி ஸர்வஸ்மாத்பரனாயிருந்த பரத்வலக்ஷணம் காரணத்வத்தாலே யாகையாலே ஸர்வகாரணபூதனாயிருந்த காரணத்வம் நாட்டிலுள்ள காரணகார்யங்களைப்போலே ப்ருதக் ஸித்தனாயிருக்கையன்றிக்கே கார்யவஸ்துக்களிலே வ்யாபித்திருக்கையாலே ஸர்வ வ்யாபகனாய் அந்த வ்யாப்திதான் ஆகாஶவ்யாப்தி போலன்றிக்கே நியந்த்ருத்வேந ஆகையாலே ஸர்வநியந்தாவாய் இப்படி இருக்கிற பரத்வாதிகளைக் கண்டஞ்சவேண்டாதபடி பரமகாருணிகனாய் இப்படிப் பரம காருணிகனாகையாலே ஸர்வஶரண்யனாய் இப்படி ஸர்வஶரண்யனாம்போது அநிஷ்டநிவ்ருத்திபூர்வகமான இஷ்டப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க வேண்டுகையாலே அதுக்கீடான ஸர்வஶக்தித்வத்தை உடையனாய் அந்த ஶக்தி தன்னாலே கற்பிக்கப்பட்ட நித்யபோகத்தையுடையனாகையாலே ஸத்யகாமனாய் இப்படி நித்யபோகத்தை யுடையவனாய்க்கொண்டிருக்கையாலே லீலாவிபூதியை நோவுபட  விட்டிருக்குமோ  என்னில், அதினுடைய ப்ரளயாபத்திலே உதவி   ரக்ஷிக்குமவனாகையாலே ஆபத்ஸகனாய் இப்படி ஆபத்ஸகனாகையாலே ஸம்ஸாரதாபார்த்தரான ஆஶ்ரிதர்களுடைய ஆர்த்தியைப் போக்குமவனாகையாலே ஆர்த்திஹரனாய், ஆக இப்படி (1) பரத்வ, (2)  காரணத்வ, (3) வ்யாபகத்வ, (4) நியந்த்ருத்வ, (5) காருணிகத்வ, (6) ஶரண்யத்வ, (7) சக்திமத்வ, (8) ஸத்ய காமத்வ, (9) ஆபத்ஸகத்வ, (10) ஆர்த்திஹரத்வவிஶிஷ்டன்; இப்படிப் பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட பரத்வாதிகளான பத்து குணங்களோடே கூடியிருக்கிற ஸர்வேஶ்வரன் (மயர்வை அறுக்கத் தத்வவேதந மறப்பற்று) “மயர்வற மதிநலம் அருளினன்” (திருவாய்மொழி.1-1-1) என்றும்மயர்வற என்மனத்தே மன்னினான்” (திருவாய்மொழி.1-7-4) என்றும் சொல்லுகிறபடியே அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி  ஜ்ஞாநத்தைக் கொடுக்கமறப்பனோ இனி யான் என் மணியையே” (திருவாய்மொழி 1-10-10) என்று விபூதியிலில்லாத படியான தத்வஜ்ஞாநத்தையுடையராய்  (ஜ்ஞப்திபலமுக்தி தலைசேர நிஷ்கர்ஷித்து) அந்த தத்வஜ்ஞாநபலமான மோக்ஷத்தைநின் செம்மா பாதபற்புத் தலைசேர்த்து” (திருவாய்மொழி 2-9-1) என்று ஸ்வரூபாநுரூபமாகதனக்கேயாக” (திருவாய்மொழி.2-9-4) என்று நிஷ்கர்ஷித்து (மோக்ஷ பல வ்ருத்திசெய்ய அர்த்தித்து) அந்த ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்துக்கு பலமான வ்ருத்தியைவழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” (திருவாய்மொழி.3-3-1) என்று அர்த்தித்து (புருஷார்த்த பலாந்யருசியொழிந்து) அந்த புருஷார்த்தத்துக்குப் பலம் தத் வ்யதிரிக்தங்களில் ருசியைஐங்கருவிகண்ட இன்பம்சிற்றின்பமொழிந்தேன்” (திருவாய்.4-9-10) என்று தவிர்ந்து (விரக்திபல ராகம் கழியமிக்கு) அந்த விரக்தி விஷய வைராக்யத்துக்குப் பலமான பகவத்விஷயத்தில் ராகம்கழிய மிக்கதோர் காதலிளவள்” (திருவாய்மொழி.5-5-10) என்று அதிஶயித்து (ப்ரேமபலோபாயத்தே புகுந்து) இப்படி நிரதிஶயப்ரேமபலமான விளம்பாக்ஷமத்வத்தால் வந்த த்வரையாலேஅலர்மேல் மங்கை உறைமார்பா அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” (திருவாய்மொழி.6-10-10) என்று உபாயவரணம் பண்ணி (ஸாதநபலோபகாரக் கைம்மாறின்றி) இப்படி ஸித்தஸாதந பரிக்ரஹம் பண்ணின இவர் அந்த ஸாதநபலமான க்ருதஜ்ஞதையாலே ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத் தேடிஅதுவுமற்றாங்கவன் தன்னது  எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி.7-9-10) என்று அவ்வாத்மா அவனுக்கு அநந்யார்ஹஶேஷம் என்று இருக்கையாலே ப்ரத்யுபகாரம் காணாதே தடுமாறி (க்ருதஜ்ஞதாபல ப்ரதிக்ருதமானத்தை உணர்ந்து) அந்த க்ருதஜ்ஞதாபலமான ப்ரத்யுபகாரம் பண்ணத் தேடி ஆத்மஸ்வரூபத்தைநின்றவொன்றை உணர்ந்தேன்” (திருவாய்மொழி.8-8-4) என்று தேஹேந்த்ரியாதிகளில் விலக்ஷணமாய் பகவதநந்யார்ஹ ஶேஷமாயிருக்கிற ஆகாரத்தை அறிந்து (ஆத்மதர்ஶநபலப்ராப்தி மரணாவதியாகப் பெற்று) அந்த ஆத்மதர்ஶனத்துக்குப் பலமான பகவத் ப்ராப்தியைமரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (திருவாய்மொழி.9-10-5) என்கிறபடியே ஶரீராவஸாநத்திலே பண்ணித் தருகிறோம் என்று அவன் நாளிட்டுத்தர பெற்றுடையராய் (காலாஸத்திபல கதிக்குத் துணைகூட்டின) அணித்தாக நாளிட்டுக் கொடுக்கையாலே அதுக்கு பலம் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகையிறே, ஆகையாலே அவ்வர்ச்சிராதி கதிக்குகாளமேகத்தையன்றி மற்றொன்றிலம் கதியே” (திருவாய்மொழி. 10-1-1) என்றும்ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம் அரணே” (திருவாய்மொழி .10-1-6) என்றும் சொல்லுகிறபடியே ஆபத்தநமான அவன் தன்னை இவருக்குத் துணையாக்க அவனைத் துணையாக உடையராய் (தம் பேற்றைப் பிறரறியப் பத்துத்தோறும் வெளியிடுகிறார்) இப்படி ஈஶ்வரன் தமக்குப் பண்ணிக் கொடுத்த தஶைகளைப் பத்துப் பத்தாலும் வெளியிடுகிறார்.    

முன்றாம் ப்ரகரணம் முற்றுப்பெற்றது.

அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்

திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே ஶரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.