அர்ச்சிராதி
த்ருதீயப்ரகரணம்
உபயவிபூதியும் தொழிலாக வகுப்புண்டு, ஸர்வாஶ்சர்யமயமான (திருப்பாவை 23) கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே பன்னிரண்டி தழாய், நாநாஶக்திமயமான திவ்ய கமலமாய், அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப ஸஞ்சய விசித்ரமான திவ்யயோகபர்யங்க மாய், அதின்மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கிவார்த்தாற் போலே குளிர்ந்த புகரையுடைத்தான திருமேனியையுடையனாய், கல்யாணகுணங்களுக்கு அந்தமில்லாமையாலும் ஸர்வவித கைங் கர்யத்திலும் அதிக்ருதனாய், கைங்கரியபரர்க்கெல்லாம் படிமாவா யிருக்கையாலும் அனந்தனென்றும் ஶேஷனென்றும் திருநாமத்தை யுடையனாய், பகவதநுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த் தலைகளையுமுடையனாய், விஜ்ஞாநபலங்களுக்கும் ஶைத்ய மார்த் தவ ஸௌரப்யாதி, குணங்களுக்கும் கொள்கலமான திருவனந்தாழ் வானாகிற படுக்கையிலே, ரஜதகிரி ஶிகரத்திலே அநேகமாயிரமாதித் யர்கள் சேர உதித்தாற்போலேயிருக்கிற பணாமண்டலங்களில் ஜ்யோதிர்மண்டலத்தின் நடுவே, 1. “பதிம் விஶ்வஸ்ய” என்கிறவ னுக்கும் தன் பூர்த்தியாலே பொறிபுறந்தடவ வேண்டும்படியான பூர்த்தியையும், (திருவாய் 10.10.2) “வாசஞ்செய் பூங்குழலாள்” என்கிற படியே நாற்றத்துக்கும் நாற்றங்கட்டலாம்படியான பூங்குழலையும், புண்டரீகாக்ஷனையுங்கூடக் குடநீர் வார்ப்பித்துக்கொண்டு ஒருமூலை யிலே குமிழிநீரூட்டும்படியான (இரண்டாந் திரு 82) வடிக்கோல வாணெடுங் கண்களையும், போகத்துக்கு ஏகாந்தமான ஒப்பனை போலே பால்யமத்யத்திலே மெய்க்காட்டுகிற யௌவநத்தையும், பேசில் பிசகும்படியான ஸௌகுமார்யத்தையும், (திருநெடுந் 18) “பித்தர் பனிமலர் மேற்பாவைக்கு” என்கிறபடியே அல்லாதவர்கள் பக்கல் போலே நூல்பிடித்துப் பரிமாறவொட்டாத போக்யதாப்ரகர்ஷத்தையும் போகோபோத்காத கேளியிலே பகவத்வைஶ்வரூப்யத்தைச் சிறாங்கிக் கும்படியான பெருமையையுமுடையளாய், திவ்யபரிஜநங்களை தத்ததவஸ்தாநுரூபமாக திவ்யபரிசர்யையிலே நியோகியா நிற்பா ளாய், ஸர்வாத்மாக்களுக்கும் என்றுமொக்கச் (மூன்றாந் திரு 100) சார்வாய், ஶீலரூபகுண விலாஸாதிகளாலே (திருவாய் 10.10.6) ”உனக்கேற்கும்” என்னும்படியிருக்கிற (திருவாய் 6.7.8) ஒசிந்த வொண் மலராளான பெரிய பிராட்டியார் வலவட்டத்திலே யெழுந்தருளி யிருக்க, அவளிலுங்காட்டில் விஞ்சின க்ஷமாதயாதிகுணங்களையும், நாவால் தொகைக்க வொண்ணாத அழகையுமுடையராய், அவளுக்கு (திருவிருத்தம் 3) நிழல் போல்வனரான மற்றையிரண்டு நாய்ச்சி மாரும் இடவட்டத்திலே ஸேவித்திருக்க, இவர்களுக்கு நடுவே மூன்று மின்கொடிகளோடேகூடி, தாமரை பூத்ததொரு காளமேகம் வெள்ளிமலையைக் கினியப்படிந்திருக்குமா போலே (திருவாய் 3.1.1) “முடிச்சோதியா யுனது முகச்சோதி மலர்ந்ததுவோ” என்கிறபடி திருமுகமண்டலத்தில் ஒளிவெள்ளமானது மேல் நோக்கிக் கொழித்தாற்போலேயாய், உபயவிபூ,திக்கும் நிர்வாஹகனென்னு மிடத்தைக் கோட்சொல்லித் தரக்கடவதாய், தன் புகராலே அல்லாத புகரையடைய முட்டாக்கிடுகிற (திருவிருத்தம் 50) “விண் முதல் நாயகன் நீண்முடி” என்கிற திருவபிஷேகத்தையும், கண்டார் கண்ணும் நெஞ்சுமிருளும்படி இருண்டு சுழன்று, அஷ்டமீசந்த்ரனிலே அம்ருததாரை விழுந்தாற்போலே திருநெற்றியிலே சாத்தின் திரு நாமத்தை மறைப்பது காட்டுவதாய்க்கொண்டு அசைந்து விழுகின்ற (திருவாய் 2.6.10) பூந்தண்டுழாய் விரைநாறுகிற (திருவாய் 9.9.3) நீலப்பனியிருங் குழல்களையும், ஸௌகுமார்யாதிஶயத்தாலே குறுவேர் பரம்பினாற்போலேயாய், (திருவாய் 7.7.7) நயந்தார்கட்கு நச்சிலையான திருநெற்றியையும், அலர்ந்து குளிர்ந்திருக்கிற இரண்டு தாமரைப்பூக்களை மதத்தாலே அமுக்கியாடுகிற இரண்டு வண்டொழுங்கு போலேயிருக்கிற (நாச் திரு 14.6) தன்கைச்சார்ங்க மதுவேபோல் அழகிய திருப்புருவங்களையும், கலந்து பிரிந்தவர்க ளுக்கு (திருவாய் 7.7.1) இணைக்கூற்றங்களாய், அல்லாதவர்களைத் (பெரிய திரு 7.1.9) தாயாயளிக்கக் கடவதாய், சேதநர்பக்கல் வாத்ஸல் யாதிஶயத்தாலும், (திருவாய் 9.4.1) செய்யாளான பிராட்டியை எப்போது மொக்கக் கடாக்ஷிக்கையாலும், உபயவிபூத்யைஶ்வர்யத்தாலும் சிவந்து, 1. “பதிம் விஶ்வஸ்ய” என்கிற ப்ரமாணம் வேண்டாதபடி (திருவாய் 6.7.10) “அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனை” என்கிறபடியே ஸர்வேஶ்வரத்வ சிஹ்நமாய், வேறோழகில் செல்ல வொட்டாதே தனக்கேயற்றுத்தீரும்படி பண்ணி (திருவாய் 2.6.3). “தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந்தலைமகனை” என்கிற படியே த்ரிபாத்விபூதியையும் எழுத்து வாங்கிக் கூப்பிடும்படி பண்ணக்கடவதாய், குளிர்ந்து செவ்விபெற்று, பெரிய பெருமாள் திருக் கண்கள்போலே (அமலனாதிபிரான் 8) கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, (பெரிய திரு 2.5.8) இலங்கொளி சேரரவிந்தம் போன்று நீண்டு, மிதோபத்தஸ்பர்தஸ்புரிதஶபரத்வந்த் வலளிதங்களாய், அழகோலக்கங் கிளம்பினால் அடையாளங்களான (திருவாய் 9.9.9) தூது செய்கண்களையும், (திருவாய் 7.7.2) ‘மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்” என்று நித்யஸந்தேஹஜநகமான (திருவாய் 5.5.6) கோலநீள் கொடிமூக்கையும், அதினுடைய பல்ல வோல்லாளம்போலேயிருக்கிற திவ்யகபோலங்களையும், அதினு டைய நவகுஸுமம்போலேயாய், (திருவாய் 9.2.5) “பன்னிலாமுத்தந் தவழ்கதிர் முறுவல் செய்து” என்கிறபடியே பூர்ணசந்த்ரன் முழு நிலாவைச் சொரிந்தாற்போலே திருமுத்தினொளியை ப்ரவஹிக்கிற ஸ்மிதத்தையும், (திருவாய் 7.7.3) கோலந்திரள் பவளக் கொழுந் துண்டம் போலேயாய், பேச்சில் செல்லவொட்டாதே வாய்கரையிலே நீச்சாம்படி பண்ணி, நட்டாற்றிலே தெப்பத்தைப் பறிப்பாரைப்போலே அது பவபரிகரமான சிந்தையைக் கவர்ந்து, கூப்பிடும்படி பண்ணக் கடவதாய், (திருவாய் 10.3.4) கள்வப்பணி மொழிகளுக்கு ஆகரமான திருவதரத்தையும், (திருவாய் 8.8.1) “இலகுவிலகுமகரகுண்டலத்தன்” என்கிறபடியே ப்ரீத்யதிஶயத்தாலே ஶிர:கம்பநம் பண்ணுகையாலே அசைந்து, திகந்தங்களிலே முட்டி, தேஜஸ்ஸு அலையெறிந்து. லாவண்யஸாக,ரத்திலே யேறித்தள்ளுகிற (திருவாய் 8.1.3) மின்னுமா மணி மகர குண்டலங்களையும், காந்தி ஶைத்ய மார்த்தவ ஸௌரப்யாதி, குணங்களாலே, (பெரியாழ் திரு 1.4.3) “சுற்றுமொளி வட்டஞ்சூழ்ந்து” என்கிறபடியே, ஸகலகலாபூர்ணமாய், ஸர்வாஹ்லாதகரமாய், மறுக்கழற்றின சந்திரமண்டலத்தையும் அப்போதலர்ந்த செந்தாமரைப் பூவையும் தோற்பிக்கக்கடவதாய், கிட்டினாரைப் பிச்சேற்றி, (நாச்சி திரு 2.4) மையலேற்றி மயக்கும் மாயமந்திரமான (திருவாய் 7.7.8) கோளிழை வாண்முகத்தையும், நாய்ச்சிமாருடைய ஹஸ்தாபரணங்களாலே முத்ரிதமாய், க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிமமான திருக்கழுத்தையும், நாய்ச்சி மாருடைய திருச்செவிப்பூக்களாலும், கர்ணபூஷணங்களாலும், விகஸிதமான திருக்குழற்கற்றையாலும் உண்டான விமர்த்தத்தாலே 1. “ஸீதயா ஶோபிதம்” என்கிறபடியே அலங்க்ருதங்களாய், இரண்டு அட்டத்திலும் மரதககிரியைக் கடைந்துமடுத்தாற்போலே திண்ணிய வாய் உபயவிபூதியையும் தன் நிழலிலே நோக்கக்கடவனவாய், கணையத்துக்குள்ளே யிருப்பாரைப்போலே தன்னையண்டை கொள்ளுகையாலே, ஸம்ஸாரத்திலேயிருக்கச்செய்தேயும் நிர்பர னாம்படிபண்ணி, (திருநெடுந் 6) “அலம்புரிந்த” என்கிறபடியே தனக்கு உபயவிபூதியையும் வழங்கி, திவ்யாஸ்த்ர புஷ்பிதங்களாயிருக்கிற (திருவாய் 6.6.6) கற்பகக்காவன நற்பலதோள்களையும் பெரிய பிராட்டி யாருக்குக் கோயிற்கட்டணமாய், நித்யாநுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் (திருவாய் 6.10.10) “இறையு மகலகில்லேன்” என்னும்படி பிச்சேற்றக்கடவதாய், அவள் திருவடிகளிற்சாத்தின செம்பஞ்சுக் குழம்பாலும், ஸ்ரீபூமிப்பிராட்டியாருடைய (நாச்சி திரு 8.7) கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பாலும் அலங்க்ருதமாய், வநமாலா விராஜிதமாய், பெரியபிராட்டியார்க்கு ஹிரண்யப்ராகாரமான (அமலனாதிபிரான் 9) கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் ஸ்ரீகௌஸ்துபம் தொடக்கமான (பெரியாழ் திரு 1.2.10) குருமாமணிப் பூண் குலாவித்திகழுகிற அழகிய திருமார்பையும், காளமேகத்திலே மின்கொடி படர்ந்தாற்போலே திருமேனிக்குப் பரபாகரஸாவஹமாய், அழகு வெள்ளத்தக்கு அணைகட்டினாற்போலே யிருக்கிற (திருவிருத்தம் 79) . வெண்புரி நூலையும், (அமலனாதிபிரான் 4) “உள்ளத் துள் நின்றுலாகின்றதே” என்கிறபடியே நித்யமுக்தருடைய திருவுள்ளங்களிலே அழகு செண்டேறுகிற (அமலனாதிபிரான் 4) திரு வுதரபந்தத்தையும், ஸௌந்தர்யஸாகரம் இட்டளப்பட்டுச் சுழித்தாற் போலே நெஞ்சையும் கண்ணையும் சுழியாறுபடுத்துகிற திருவுந்தி யையும், ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும், திருவாழியையும் சந்த்ராதித்யர்க ளாகக்கருதி, (மூன்றாந் திருவந் 67) “ஆங்கு மலருங் குவியும்” என்கிறபடியே அலருவது குவிவதாய், விதிஶிவநிதாநமான நாபீ பத்மத்தையும், (திருவாய் 8.5.3) துடிசேரிடையையும், ஸந்த்யாராக ரஞ்ஜிதமான ஆகாஶம்போலேயிருக்கிற திருவரைக்குப் பரபாகரஸா வஹமாய், திருவரைபூத்தாற்போலே யிருக்கிற (அமலனாதிபிரான் 3) அந்திபோல் நிறத்தாடையையும், ரம்பாஸ்தம்பாதிகம்பீரமான திருத்தொடைகளையும் தாமரைநாளம்போலே கண்டகிதங்களான திருக்கணைக்கால்களையும், ஶங்கரதாங்க, கல்பகத்வஜார விந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநமாய், நாய்ச்சிமாருங்கூடக் கூசித்தொட வேண்டும்படி அத்யந்தம் ம்ருதுக்களாய், (திருவாய் 1.5.5) ‘தேனே மலரும்” என்கிறபடியே நிரதிஶயபோக்யங்களான (திருவாய் 1.1.1) துயரறு சுடரடிகளயும், லாவண்யஸாகரத்தினுடைய திரையொழுங்கு போலே யிருக்கிற திருவிரல்களையும், அதிலே அநேக சந்த்ரர்கள் தோற்றினாற்போலேயிருக்கிற திவ்ய நகங்களையும், வயிரவுருக்காய் ஆண்களையும் பெண்ணுடையுடுத்தி, பந்துக்களோடு உறவறுத்து நாட்டைப் பகைவிளைத்து, (திருவாய் 5.3.9) சேணுயர்வானத்திருக்குந் தேவபிரான்தன்னை (அமலனாதிபிரான் 4) ‘குதிரியாய் மடலூர்தும்” என்கிறபடியே கண்டபோதே கையும் மடலுமாய்க்கொண்டு புறப் படும்படி பண்ணக்கடவதாய், கண்டபோதே எல்லா விடாயுங்கெட்டு, கண்டகண்கள் மயிரெறியும்படி இருண்டு குளிர்ந்து, ஸாம்யா பந்நரான ஸூரிகளுடைய நெஞ்சையும் கண்ணையும் படையறுத்து : (பெரிய திரு 10.10.9) ”இன்னாரென்றறியேன்” (பெரிய திரு 8.1.9) பண்டிவரைக்கண்டறிவ தெவ்வூரில்” என்று மதிமயங்கும்படி பண்ணக்கடவதாய், ஸகலஜந ஜீவாதுவாய், வைதக்த்ய வித்யா க்ருஹமாய், மநோரதாநாம் அபூமியாய், ஶ்ருத்யந்தவாக்ய ஸர்வ ஸ்வமாய், மாணிக்கச்செப்பிலே பொன்னையிட்டு வைத்தாற்போலே யிருக்கப் (திருநெடுந் 1) பொன்னுருவான திவ்யாத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஶகமாய், ஒன்றுக்கொன்று தள்ளி இட்டளத்தில் வெள்ளம் போலே சுழித்துநின்று முழாவுகிற ஆயுதாபரணங்களுடைய (திருவாய் 5.5.10) சோதிவெள்ளத்தினுள்ளே உந்நேயமான (கண்ணிநுண் 3) கரிய கோலத் திருவுருவையும், நித்யஸூரிகள் அடுத்தடுத்துப் பார்க்கிற பார்வையுங்கூடப் பொறாதென்னும்படியான ஸௌகுமார்யத்தையும், பெரியபிராட்டியாருடைய (இரண்டாம் திரு 82) வடிக்கோல வாணெடுங் கண்களுக்கு நித்யலக்ஷ்யமாகையாலே (பெரிய திரு 7.101) அரும் பென்றும் அலரென்றம் சொல்லலாம்படியான செவ்வியையும் கிண்ணகத்துக்குப் படலிட்டாற்போலேயிருக்கிற (திருவாய் 6.6.7) மெய்யமர்பல்கலன்களையும், நித்யஸூரிகளைக் கொள்ளையூட்டிக் கொண்டு, விடாயர்முகத்திலே நீர் வெள்ளத்தைத் திறந்து விட்டாற் போலே ஸகல ஶாமங்களுமாறும்படி குளிர்ந்து. தெளிந்து கநககிரியையுருக்கிக் கடலிலே விளாசினாற்போலே (திருவாய் 1.10.9.) செம்பொனே திகழுகிற ஶ்யாமமான திருமேனியொளியாலே 1.”விஶ்வமாப்யாயயந்” என்கிறபடியே ஸகலஜகத்தையும் ஆப்யா யநம்பண்ணி, (திருவாய் 9.6.1) “தெருவெல்லாங்காவிகமழ்” என்கிற படியே கண்டவிடமெங்கும் புறப்பட்டு ப்ரவஹிக்கிற திருமேனியில் பரிமளத்தாலே ஶ்ரீவைகுண்டத்தை யெங்குமொக்கப் பரிமளிதமாக்கி, ஆலங்கட்டியை விட்டெறிந்தாற்போலே உடம்பெங்கும் வவ்வலிடும் படி குளிர்ந்து அரைக்ஷணமாறில் நித்யமுக்தரை ஒரு நீர்ச்சாவி யாக்குகிற கடாக்ஷாம்ருத வ்நஷ்டிகளாலே திவ்யகோஷ்டியைத் தளிரும் முறியுமாக்கி, காம்பீரிய மாதுர்யாத்யநவதிககுணகண பூஷிதங்களாய், அதிமநோஹர திவ்யபாவகர்ப்பங்களாய், பூவலர்ந் தாற்போலேயிருக்கிற திருமுகத்தை எங்குமொக்கச் செவ்வி பெறுத்து வனவான லீலாலாபங்களாலே ஸூரிகளுடைய ஹ்ருதயங்களை உகப்பியாநின்று கொண்டு, உபயவிபூதியையும் ஆஸநபலத்தாலே ஜயித்து, —
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.