பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
அர்த்த பஞ்சகம்
ஸம்ஸாரியான சேதகனுக்குத் தத்வஜ்ஞாநம் பிறந்து உஜ்ஜீவிக்கும் போது, அர்த்தபஞ்சக ஜ்ஞாநம் உண்டாக வேணும். அர்த்தபஞ்சக ஜ்ஞாநமாவது – (1) ஸ்வஸ்வரூப, (2) பரஸ்வரூப, (3) புருஷார்த்த ஸ்வரூப, (4) உபாயஸ்வரூப, (5) விரோதிஸ்வரூபங்களை உள்ளபடி அறிகை. இவற்றில் ஓரொருவிஷயந்தான் – அஞ்சுபடிப்பட்டிருக்கும்.
- ஸ்வஸ்வரூபம் என்கிறது – ஆத்மஸ்வரூபத்தை; ஆத்மஸ்வரூபந் தான் – நித்யர், முக்தர், பத்தர், கேவலர், முமுக்ஷக்களென்று ஐந்து.
- பரஸ்வரூபம் என்கிறது – ஈஶ்வரஸ்வரூபத்தை; ஈஶ்வரஸ்வரூபந் தான் – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவ தாரமென்று ஐந்து.
- புருஷார்த்த ஸ்வரூபம் என்கிறது – புருஷனாலே அர்த்திக்கப் படுமது புருஷார்த்தம். அந்தப் புருஷார்த்தந்தான் – தர்ம, அர்த்த, காம, ஆத்மாநுபவ, பகவதநுபவமென்று ஐந்து.
- உபாயஸ்வரூபமென்கிறது – கர்ம, ஜ்ஞாந, பக்தி, ப்ரபத்தி,
ஆசார்யாபிமாநமென்று ஐந்து.
- விரோதி ஸ்வரூபமென்கிறது – ஸ்வரூபவிரோதி, பரத்வவிரோதி, புருஷார்த்தவிரோதி,, உபாயவிரோதி, ப்ராப்திவிரோதியென்று ஐந்து.
1. (1) இவற்றில் நித்யராவார் – ஒருநாளும் ஸம்ஸாரஸம்பந்தமா கிற அவத்யமின்றிக்கே நிரவத்யராய், பகவதநுபவாநுகூல்யைக போகராய், “வானிளவரசு வைகுந்தக்குட்டன் வாசுதேவன்” (பெரியாழ் திரு 3-6-3) என்கிற ஸ்ரீவைகுண்டநாதனுக்கு “விண்ணாட்டவர் மூதுவர்”
(திருவிருத்தம் 2) என்கிறபடியே பட்டங்கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரிகளாய், ஈஶ்வரநியோகாத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணவும் ஶக்தராய், பரவ்யூஹாதி ஸர்வா வஸ்தைகளிலும் தொடர்ந்தடிமை செய்யக்கடவராய், “கோயில்கொள் தெய்வங்களான” (திருவாய் 8-6-5) ஸேநைமுதலியார் தொடக்கமான அமரர்கள்.
(2) முக்தராவார் – ப.கவத்ப்ரஸாதத்தாலே ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் வந்த க்லேஶமலங்களெல்லாம் கழிந்து பகவத்ஸ்வரூபரூபகுண விபவங்களை அநுபவித்து, அவ்வநுபவஜநிதப்ரீதி உள்ளடங்காமை யாலே வாயாரப் புகழ்ந்து, (திருவாய் 4-10-11) மீட்சியின்றி வைகுந்த மாநகரத்திலே களித்து ஆநந்திக்கிற முனிவர்கள்.
(3) பத்தராவார் – பாஞ்சபௌதிகமாய், அநித்யமாய், ஸுகது:க்காநுபவ பரிகரமாய், ஆத்மவிஶ்லேஷத்தில் தர்ஶந ஸ்பர்ஶநயோக்யமல்லாத படி அஶுத்தாஸ்பதமாய், அஜ்ஞாந அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ஜநகமான ஸ்வதேஹமே ஆத்மாவாகவும், ஶப்தாதி விஷயாநுபவ ஜநிதமான ஸ்வதேஹபோஷணமே புருஷார்த்தமாகவும், ஶப்தாதி, விஷயாநுபவத்துக்கு உறுப்பாக வர்ணாஶ்ரம தர்மங்களை அழிய மாறியும், அஸேவ்யஸேவைபண்ணியும், பூதஹிம்ஸைபண்ணியும், பரதார பரத்ரவ்யாபஹாரம் பண்ணியும், ஸம்ஸாரவர்த்தகராய், பகவத்விமுககரான சேதநர்.
(4) கேவலனாவான் – தனியிடத்திலே மிகவும் க்ஷுத்பிபாஸைக ளாலே நலிவுபட்டவன், பக்ஷ்யாபக்ஷ்ய விவேகம் பண்ணமாட்டாதே தன்னுடம்பைத் தானே ஜீவித்து ப்ரஸந்நனாமா போலே ஸம்ஸார தாவாக்நியாலே தப்தனானவன்–ஸம்ஸார து:க்கநிவ்ருத்திக்கு உறுப்பாக ஶாஸ்த்ரஜந்ய ஜ்ஞாநத்தாலே ப்ரக்ருத்யாத்மவிவேகம் பண்ணி, ப்ரக்ருதி – து:க்காஶ்ரயமாய், ஹேயபதார்த்தஸமுதாயமாய் இருக்கிற ஆகாரத்தையும், ஆத்மா – ப்ரக்ருதே:பரனாய், பஞ்சவிம்ஶக னாய், ஸ்வயம்ப்ரகாஶனாய், ஸ்வதஸ்ஸுகியாய், நித்யனாய், அப்ராக்ருதனாய் இருக்கிற ஆகாரத்தையும் அநுஸந்தித்து, முன்பு தான் பட்ட து:க்கத்தின் கநத்தாலே இவ்வல்பரஸத்திலே கால் தாழ்ந்து, “உணர்முழுநல”மான (திருவாய்மொழி 1-1-2) பரமாத்ம விவேகம் பண்ணமாட்டாதே, (திருவாசிரியம்-2) அமுதவெள்ளத் தானாஞ்சிறப்புவிட்டு, அவ்வாத்மப்ராப்திக்கு ஸாதநமான ஜ்ஞாந யோகத்திலே நிஷ்டனாய், யோகபலமான ஆத்மாநுபவமாத்ரத்தையே புருஷார்த்தமாக அநுபவித்து, பின்பு ஸம்ஸார ஸம்பந்தமும், பகவத் ப்ராப்தியும் அற்று, யாவதாத்மபாவி அஶரீரியாய்க்கொண்டு திரிவானொருவன்.
(5) மோக்ஷத்திலே இச்சையுடையவர்களுக்கு முமுக்ஷுக்களென்று பேராகக்கடவது. இதுதான் – முமுக்ஷுக்களாய், உபாஸகராயிருப் பாரும், முமுக்ஷுக்களாய், ப்ரபந்நராயிருப்பாருமாய் இரண்டுபடிப் பட்டிருக்கும்.
- (1) ஈஶ்வரவிஷயத்தில் பரத்வமாவது–பரமபதத்திலே (அவாக்ய நாதர:) என்று எழுந்தருளியிருக்கிற (திருவாய் 3-5-5) ஆதியஞ்சோதி யுருவான பரவாஸுதேவர்.
(2) வ்யூஹமாவது – ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாக்களான ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்கள்.
(3) விபவமாவது – ராமக்ருஷ்ணாத்யவதாரங்கள்.
(4) அந்தர்யாமித்வம் – இரண்டுபடிப்பட்டிருக்கும். அதாவது –
1.”அடியேனுள்ளான்” (திருவாய் 8-8-2) என்றும், “எனதாவி” (திருவாய் 2-3-4) என்றும், (திருவாய் 9-5-1). “என்னுயிர்” என்றும் சொல்லுகிறபடியே ஆத்மாவுக்குள்ளும்,
2.”போதிற்கமலவன்னெஞ்சம் புகுந்து” (பெரியாழ்—திரு 5-2-8) என்றும், (பெரியாழ்—திரு 5-2-10) “அரவிந்தப்பாவையும் தானுமகம்படி வந்து புகுந்து” என்றும், (திருமாலை-16) “புந்தியிற்புகுந்து தன்பாலாதரம் பெருக வைத்தவழகன்” என்றும், (திருமாலை-34) “உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறிதி” என்றும், சொல்லுகிறபடியே லக்ஷ்மீ ஸஹிதனாய், விலக்ஷண விக்ரஹ யுக்தனாய்க்கொண்டு, ஹ்ருதய கமலத்துக்குள்ளே ஸகலப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் ஸதாவலோகநம் பண்ணிக்கொண்டும் எழுந்தருளியிருக்கும் இருப்பு.
(5) அர்ச்சாவதாரமாவது – (முதல் திருவ-44) “தமருகந்ததெவ் வுருவமவ்வுருவந்தானே தமருகந்ததெப்பேர் மற்றப்பேர்” என்கிற படியே தனக்கென்ன ஓருருவும், ஓர் பெயரும் இன்றிக்கே ஆஶ்ரிதருகந்தவடிவே வடிவாகவும், அவர்களிட்ட பெயரே பெயராகவும், ஸர்வஜ்ஞனாயிருக்கச்செய்தே அஜ்ஞனைப் போலேயும், ஸர்வஶக்தனாயிருக்கச் செய்தே அஶக்தனைப் போலேயும், அவாப்தஸமஸ்தகாமனாயிருக்கச் செய்தே ஸாபேக்ஷனைப்போலேயும், ரக்ஷகனாயிருக்கச்செய்தே ரக்ஷ்யம் போலேயும், ஸ்வஸ்வாமிபாவத்தை மாறாடிக்கொண்டு கண்ணுக்கு விஷயமாம்படி ஸர்வஸுலபனாய்க்கொண்டு, கோயில்களிலும், க்ருஹங்களிலும், தேஶகாலாவதியின்றிக்கே எழுந்தருளியிருக்கும் நிலை.
- (1) புருஷார்த்தங்களில் தர்மமாவது – ப்ராணி ரக்ஷணத்துக் குறுப்பாகப் பண்ணும் வ்ருத்தி விசேஷங்கள்,
(2) அர்த்தமாவது – வர்ணாஶ்ரமாநுரூபமாக தநதாந்யங்களை ஸங்க்ரஹித்து தேவதாவிஷயங்களிலும், பைத்ருகமான கர்மங்களி லும், ப்ராணிகள் விஷயமாகவும், உத்க்ருஷ்டமான தேஶகால பாத் ரங்களையறிந்து, தர்மபுத்த்யா வ்யயிக்கை.
(3) காமமாவது – (A) ஐஹலௌகிகமாயும், (B) பார லௌகிக மாயும் த்விவிதமாயிருக்கும்.
(A) இஹலோகத்தில் காமமாவது-பித்ரு மாத்ரு ரத்ந தநதாந்ய வஸ்த்ராந்ந பாந புத்ர மித்ர களத்ர பஶுக்ருஹ க்ஷேத்ர சந்தந குஸும தாம்பூலாதி பதார்த்தங்களில் ஶப்தாதி விஷயாநுபவத்தால் வந்த ஸுகவிஶேஷங்கள்.
(B) பரலோகத்தில் காமமாவது- இதில் விலக்ஷணமாய், தேஜோரூபமான ஸ்வர்க்காதி லோகங்களிலே சென்று, பசி தாக ஶோக மோஹ ஜரா மரணாதிகள் இன்றிக்கே, ஆர்ஜித்த புண்யத்துக் கீடாக அம்ருதபாநம்பண்ணி, அப்ஸரஸ்ஸுக்களோடே ஶப்தாதி விஷயாநுபவம் பண்ணுகை.
(4) ஆத்மாநுபவமாவது – து:க்கநிவ்ருத்தி மாத்ரமான கேவலாத் மாநுபவ மாத்ரத்தையும் மோக்ஷமென்று சொல்லுவர்கள்.
(5) (இனி, பகவதநுபவரூபமான) – (சில ஶ்ரீகோஶங்களிலில்லை) பரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷமாவது–ப்ராரப்த கர்மஶேஷமாய் அவஶ்யமநுபாவ்யமான புண்யபாபங்கள் நஶித்து. (அஸ்தி-ஜாயதே – பரிணமதே – விவர்த்ததே –அபக்ஷீயதே–விகல்யதி என்கிறபடியே ஷட்பாவ விகாராஸ்பதமாய், தாபத்ரயாஶ்ரயமாய், பகவத் ஸ்வரூபத்தை மறைப்பித்து, விபரீத ஜ்ஞாநத்தை ஜநிப்பிக்கக்கடவதாய், ஸம்ஸாரவர்த்தகமான ஸ்தூல ஶரீரத்தை உபேக்ஷையோடே பொகட்டு, ஸுஷும்நா நாடியாலே ஶிர:கபாலத்தை பேதித்துப் புறப்பட்டு, ஸூக்ஷ்ம ஶரீரத்தோடே வானேற வழிபெற்று. . (பெரிய திருமடல்) மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுள் அன்னதோரில்லியினூடுபோய், ஸூக்ஷ்ம ஶரீரத்தையும் வாஸநாரேணுவையும் விரஜாஸ்நாநத்தாலே கழித்து, ஸகலதாபங்களுமாறும்படி அமாநவ கரஸ்பர்ஶமும் பெற்று, ஶுத்த ஸத்வாத்மகமாய், பஞ்சோபநிஷண்மயமாய், ஜ்ஞாநாநந்தஜநகமாய், பகவதநுபவைகபரிகரமாய், (திருவாய் 2-3-10) ஒளிக்கொண்ட சோதியு மாய் இருக்கிற அப்ராக்ருத விக்ரஹத்தைப் பெற்று, (திருவாய் 10-9-8) முடியுடை வானவர் முறைமுறையெதிர்கொள்ள, நிரதிஶயாநந்த மயமான திருமாமணி மண்டபத்தை ப்ராபித்து, லக்ஷ்மீஸஹிதனாய், பூமிநீளாநாயகனாய், விலக்ஷணவிக்ரஹயுக்தனாய், (திருவாய் 5-5-10) குழுமித்தேவர் குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருருவான ஸ்ரீவைகுண்டநாதனை நித்யாநுபவம் பண்ணி, நித்யகிங்கர ஸ்வபாவனாகை.
- (1) உபாயங்களில் கர்ம யோகமாவது – யஜ்ஞ, தாந, தபோ, த்யாந, ஸந்த்யாவந்தந, பஞ்சமஹாயஜ்ஞகக்கடவதான பகவத்விஷயாநு பவங்களெல்லாம் ப்ராப்யகோடிகடிதங்களாகையாலே ஸ்வரூபாநு ரூபமாயிருக்கும்.
இதுதான் (A) ஆர்த்தரூப ப்ரபத்தியென்றும், (B) த்ருப்தரூப ப்ரபத்தி யென்றும் இரண்டுபடிப்பட்டிருக்கும்.
(A) ஆர்த்தரூபப்ரபத்தியாவது – நிர்ஹேதுகபகவத் கடாக்ஷமடி யாக ஶாஸ்த்ராப்யாஸத்தாலும், ஸதாசார்யோபதேஶத்தாலும் யதா ஜ்ஞாநம் பிறந்தவாறே, பகவதநுபவத்துக்கு விபரீதமான தேஹ ஸம்பந்தமும், தேஶஸம்பந்தமும், தேஶிகருடைய ஸஹவாஸமும் துஸ்ஸஹமாய், பகவதநுபவத்துக்கு ஏகாந்தமாம்படி விலக்ஷணமான தேஹத்தையும், தேஶத்தையும், தேஶிகரையும் ப்ராபிக்கையில் த்வரை விஞ்சி, (திருவாய் 3-3.9) “ஒயுமூப்புப் பிறப்பிறப்புப்பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயனா”கையாலே, (திருவாய் 6-10-10.) “திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன்” , (திருவாய் 3-3-6) “வேங்கடத்துறைவார்க்கு நம:” என்று பூர்ணப்ரபத்திபண்ணி, (திருவாய் 6-9-9) “பல நீ காட்டிப்படுப்பாயோ” (திருவாய் 6-9-8) “இன்னங் கெடுப்பாயோ” (பெரியாழ் திரு 5-3-7) “இக்கரையேறியிளைத்திருந்தேன்” (பெரிய திரு 11-8-6) ”அடையவருளாய்” (திருவாய் 10-10-2) ”திருவாணை நின்னாணை கண்டாய்” (திருவாய் 10-10-1) “இனி நான் போக லொட்டேன்” என்று தடுத்தும், வளைத்தும் பெறுகை.
(B) த்ருப்தரூப ப்ரபத்தியாவது – ஶரீராந்தர ப்ராப்தியிலும் ஸ்வர்க்க, நரகாநுபவங்களிலும் விரக்தியும் பீதியும் பிறந்து, அதினு டைய நிவ்ருத்திக்கும், பகவத்ப்ராப்திக்கும் உறுப்பாக ஸதாசார்யோப தேஶ க்ரமத்தாலே உபாய ஸ்வீகாரம் பண்ணி. விபரீதப்ரவ்ருத்தி நிவ்ருத்தராய், வேதவிஹிதமான வர்ணாஶ்ரமாநுஷ்டாகமும், பகவத் பாகவத கைங்கர்யமும், மாநஸ வாசிக காயிகங்களாலே யதாபலம் அநுஷ்டித்து, ஈஶ்வரன் – ஶேஷியாய், நியந்தாவாய், ஸ்வாமியாய், ஶரீரியாய், வ்யாபகனாய், தாரகனாய், ரக்ஷகனாய், போக்தாவாய், ஸர்வஜ்ஞனாய், ஸர்வஶக்தியாய், ஸர்வ ஸம்பூர்ணனாய், அவாப்த ஸமஸ்தகாமனாய் இருக்கிற ஆகாரத்தையும், ( தான் – அவனுக்கு ஶேஷமாய், நியாம்யமாய், ஸ்வம்மாய், ஶரீரமாய், வ்யாப்யமாய், தார்யமாய், ரக்ஷ்யமாய், போக்யமாய், அஜ்ஞனாய், அஶக்தனாய், அபூர்ணனாய், ஸாபேக்ஷனாய் இருக்கிற ஆகாரத்தையும், அநுஸந்தித்துக்கொண்டு ) (திருவாய் 5-8-8) “களைவாய் துன்பங் களையாதொழி வாய்களைகண் மற்றிலேன்” என்று உபாயத்தில் ஸர்வபரங்களையும் அவன் பக்கலிலே பொகட்டு, நிர்பரனாயிருக்கை.
(5) ஆசார்யாபிமாநமாவது – இவை ஒன்றுக்கும் ஶக்தனன்றிக்கே யிருப்பானொருவனைக் குறித்து, இவனுடைய இழவையும்,இவனைப் பெற்றால் ஈஶ்வரனுக்குண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து, ஸ்தநந்தயப்ரஜைக்கு வ்யாதியுண்டானால் அது தன் குறையாக நினைத்து ஒளஷத, ஸேவைபண்ணும் மாதாவைப்போலே இவனுக் காகத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்கவல்ல பரமதயாளு வான மஹாபாகவதன் அபிமாநத்திலே ஒதுங்கி, (நாச் திரு 10-10) “வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்” என்று சொல்லுகிற படியே ஸகலப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக் குகை. எம்பெருமான் தனித்து நித்யஸித்தப் ப்ராப்யனாகா நிற்கச் செய்தே ஸகலதேவதாந்தர்யாமியாய்க் கொண்டு ப்ராப்யனாகிறாப் போலே, இவ்வாசார்யாபிமாநமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும், எல்லா உபாயங்களுக்கும் ஸஹகாரியுமாய் ஸ்வதந்த்ர முமாய் இருக்கும்.
- (1) விரோதி, வர்க்கத்தில் ஸ்வரூபவிரோதியாவது தேஹாத்மாபி மாநமும், அந்யஶேஷத்வமும், ஸ்வஸ்வாதந்தர்யமும்.
(2) பரத்வவிரோதியாவது – தேவதாந்தர பரத்வப்ரதிபத்தியும், ஸமத்வப்ரதிபத்தியும், க்ஷுத்ரதேவதா விஷயத்தில் ஶக்தியோக ப்ரதி பத்தியும், அவதாரவிஷயத்தில் மாநுஷ ப்ரதிபத்தியும், அர்ச்சாவதார விஷயத்தில் அஶக்தியோக ப்ரதிபத்தியும்.
(3) புருஷார்த்த விரோதியாவது – புருஷார்த்தாந்தரங்களில் இச்சையும், தானுகந்த பகவத்கைங்கர்யங்களில் இச்சையும்
(4) உபாய விரோதியாவது – உபாயாந்தர வைலக்ஷண்ய ப்ரதி பத்தியும், உபாயலாகவமும், உபேயகெளரவமும், விரோதி பாஹுள்யமும்.
(5) ப்ராப்திவிரோதியாவது – ப்ராரப்த ஶரீரஸம்பந்தமும், அநுதாபஶூந்யமாய் குருவாய் ஸ்திரமாய் இருந்துள்ள பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களும். இவை எல்லாவற்றுக்கும் விரோதியென்று பேராகக் கடவது. அந்நதோஷம் – ஜ்ஞாந விரோதி, யாகக்கடவது. ஸஹவாஸதோஷம் – போகவிரோதியாகக்கடவது. அபிமாநம் – ஸ்வரூபவிரோதியாகக் கடவது.
இப்படி அர்த்தபஞ்சக ஜ்ஞாநம் பிறந்து முமுக்ஷவாய் ஸம்ஸாரத் திலே வர்த்திக்கிற சேதநனுக்கு மோக்ஷஸித்தியளவும் ஸம்ஸாரம் மேலிடாதபடி காலக்ஷேபம் பண்ணும் க்ரமம் – வர்ணாஶ்ரமாநுரூப மாகவும், வைஷ்ணவத்வாநுரூபமாகவும், அஶநாச்சாதநங்களை ஸம்பாதித்து “யதந்ந: புருஷோ பவதி ததந்நாஸ்தஸ்ய தேவதா:“ என்கிறபடியே ஸகலபதார்த்தங்களையும் பகவத்விஷயத்திலே நிவேதித்து (யதாபலம் பாகவதகிஞ்சித்காரமும்பண்ணி, தேஹதாரண மாத்ரத்தை ப்ரஸாத ப்ரதிபத்தியோடே ஜீவிக்கையும், வருந்தியும் தத்வஜ்ஞாநம் பிறப்பித்த ஆசார்யன் ஸந்நிதியிலே–கிஞ்சித்காரத் தோடே அவனுக்கு அபிமதமாக வர்த்திக்கையும்,) ஈஶ்வரன் ஸந்நிதி, யிலே – தன்னுடைய நீசத்வத்தை அநுஸந்திக்கையும், ஆசார்யன் ஸந்நிதியில் தன்னுடைய அஜ்ஞதையை அநுஸந்திக்கையும், ஸ்ரீவைஷ்ணவ ஸந்நிதியில் – தன்னுடைய பாரதந்தர்ய அநுஸந்திக் கையும், ஸம்ஸாரிகள் முன்னில் – தன்னுடைய வ்யாவ்ருத்தியை அநுஸந்திக்கையும், ப்ராப்யத்தில் – த்வரையும், ப்ராபகத்தில்- அத்யவ ஸாயமும், விரோதியில்-பயமும், தேஹத்தில்- அருசியும், ஆர்த்தியும், ஸ்வரூபத்தில் உணர்த்தியும், ஸ்வரக்ஷணத்தில் – அஶக்தியும், உத், தேஶ்யவிஷயக்தில் – கெளரவமும், உபகாரவிஷயத்தில் க்ருதஜ்ஞ தையும், உத்தாரகப்ரதிபத்தியும், அநுவர்த்திக்கையும் வேணும்
எஸந்தி க்கையும், பாரதந்த்ர்ய இப்படி ஜ்ஞாநாநுஷ்டாநங்களோடே கூடிவர்த்திக்குமவன் – ஈஶ்வர னுக்குப் பிராட்டிமாரிலும், நித்யமுக்தரிலும் அத்யந்தாபிமத விஷய மாகக்கடவன்.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்.
அர்த்தபஞ்சகம் முற்றிற்று.