ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
நாலூராச்சான் பிள்ளை அருளிச்செய்த
சரமோபாய தாத்பர்யம்
சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் |
யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் ||
பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத்சரணாரவிந்தப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி , தத்சித்யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானாரபிமானத் திலே ஒதுங்கி , தத்விஷய ப்ரபத்தி நிஷ்டையையுடையவனாயிருக்க வேணும் . பகவத் ப்ராப்திரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத்யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க , அத்தை விட்டு , அதில் லகுவான சரமபர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனேயென்னில்;
1 ”யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந: | ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே” என்கிற கணக்கிலே ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள், அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள் ;
2 “கர்மஞானஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதானாலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந்தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தானபூர்வே யதிவர சரண த்வந்த்வமூர்தாபியுக்தாஸ்தத் காருண்யாபிமாநாத்ததநுச குரவோ
1 பகவத்கீதா – அத்யா 3 ஶ்லோ 21 யத் யதா சரதி ஶ்ரேஷ்ட: —
எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன் , யத்யதாசரதி — எந்தபடியநுஷ்டிக்கிறான் , தத்ததேவ – அந்த அந்த படிகளையே , இதரோஜந: — பூர்ணஜ்ஞாநமில்லாதவனும் , ஆசரதி – அநுஷ்டிக்கிறான் , ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் , யத்ப்ரமாணம் –
( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு , குருதே — அநுஷ்டிக்கிறானோ , தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து , லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் , அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.
2 பூர்வாசார்ய ஸூக்தி ( கர்மஜ்ஞாநஞ்சேதி ) கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்மஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற , ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் , ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து , புந: — திரும்பவும் , ஏதாந் -– இந்த உபாயங் களை , ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று , ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து , இஹ -– இந்த உபாயங்களில் , சுதராம் – மிகவும் , தோஷத்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை , விதாய —- செய்து
( அதாவது கர்ம,ஜ்ஞாந,பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே , இவை பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமாயிருக்கிற தென்றும் ; ப்ரபத்யுபாயம் மஹாவிஸ்வாஸரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமாயிருக்கிறதென்றும் ; ( நன்றாக அறுதியிட்டு என்கை ) , கர்தும் – இவற்றையநுஷ்டிக்கைக்கு ,
முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்மஜ்ஞாநபக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக்குடலாக பற்றலாமோ என்று உணர்ந்துணர்ந்து பார்த்தவிடத்தில் ஸ்வரூப விருத்தத்வ துஸ்ஸ கத்வ விஸ்வாஸபூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கை யாலே இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரித்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசாரிகளும் பின்புள்ள வாசாரிகளும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிகாக்ரேசருமா யிருக்கையாலே பரம காருணிகராய் ப்ரபந்நஜநகூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய் எம்பெருமானாருடைய காருண்யப்ரவாஹஜநித மான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே ; பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும்போது அது ப்ரமாணபுரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர்பவிதாயோவென்னில் ;
1 “ தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் “ என்றும் “ மேலையார் செய்வன கள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல
ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் , மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற , பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் , யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு , தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானா ருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே , ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை யென்னபடி ) பின் சென்றவர்க ளோடு கூட , முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .
1 ( தர்மஜ்ஞ ஸமய இதி ) தர்மஜ்ஞ ஸமய: — அதிகாரானு குணமாக விஹிதங்களாயும் நிஷித்தங்களாயுமிருந்துள்ள ஸகல தர்மங்களையும் அறிந்திருக்குமவர்களுடைய வாசாரமாவது , ப்ரமாணம் – ப்ரபல ப்ரமாண மாகக் கடவதென்கை .
திராதிறே , 1 “ விதயஶ்ச வைதிகாஸ்தவதீய கம்பீரா மனோனு சாரிண: “ என்றதிறே . இதுக்கு மேலே முக்தகண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனேயென்னில் , ஸ்ரீஶாஸ்த்ரத்திலே பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லு கிறவிடத்திலே 2 “ ஸம்யக்உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந்தவ வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரம்பிமேவத ||
3 த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |
க்ருதஸ்யாப்வயதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||
4 இதி ப்ருஷ்டோ மஹாலக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |
குருரூபாவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||
1 ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 ( வ்யதயஶ்ச வைதிகா இதி ) வைதிகா:
விதயஶ்ச – இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் , த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன , மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , க்ஷஊத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,“ நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்திலவகாஹியாதார்க்கிறே வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .
2 ( ஸம்யக் உக்தமிதி ) – ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே , த்வயா – தேவரீராலே , தவஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய , வைபவம் – ப்ரபாவமானது , ஸம்யகுக்தம் – நன்றாக சொல்லப்பட்டது , த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீ ருடைய வாசார்யரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் , மே – எனக்கு , வத – அருளிச் செய்யவேணும் , என்று பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .
3 ( த்வயாசார்யாவதாரஸ்த்விதி ) – ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ , ஆசார்யாவ
தாரஸ்து – ஆசார்ய ரூப அவதாரமானது , ( இவ்விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும் ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது .) த்வயா – தேவரீ ராலே , கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப்படுகிறது , க்ருத்ஸ்யாப்யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்டவந்த வவதார விசேஷத் துக்கு , கிம்வாபலம் – எந்த பலன் தான் , அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .
4 ( இதி ப்ருஷ்ட இதி ) – பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரிபூர்ண னாயும் , நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் , மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே , இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகார மாக கேட்கப்பட்டவராய்க்கொண்டு , குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்யரூப மான அவதாரத்தினுடைய , வைபவம் –- வைபவத்தை , வக்தும் – சொல்லுகைக்கு , உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத: || ஸ்ரீபகவாந் | 1 ஸாது ப்ருஷ்ட்டஸ் த்வயா தேவீ ஸாராம்ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷ்யே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ || 2 ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாநுஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கே நாபி முக்திர்லப்தா ந பூதலே ||
3 ததோ விபவரூபேண ஜந்மாநி ஸுபஹுநிமே || ஜாதாநிதேவி மோக்க்ஷார்த்த கோபி ந பவத் ||
1 ( ஸாது ப்ருஷ்ட்ட இதி ) சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான , ஹே தேவி -– ஸர்வஸமாஶ்ரயணீயையானவளே , ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள , ஸாராம்ஸ: — ஸாரபூதமான விஷயம், ப்ருஷ்ட: — கேட்கப்பட்டது , மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய , வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை, தவ – உனக்கு , வக்ஷ்யே -– சொல்லுகிறேன் , ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .
2 ( ஸம்ஸாரஸாகர இதி ) ஸம்ஸாரஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே , மக்நாந் –- முழுகிக் கிடக்கிற , சேதநாந் –– பத்தசேதநரை , உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே , ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்யநிர்தோஷ மாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும் த்துபப்ருஹ்மணங்க ளான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் , ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டதுகள் , ( இத்தனையும் செய்தபோதிலும் ) தேநமார்கேண – கீழ்ச்சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே , பூதலே -– லீலாவிபூதியில் , கேநாபி – ஒருத்தனாலேயும் , முக்தி: — பகவத்ப்ராப்திரூப மோக்ஷமானது , ந லப்தா – அடையப்படவில்லை .
3 ( ததோ விபவரூபேணேதி ) – இப்படி மதாஜ்ஞாரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு , விபவரூபேண – ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே , ஸுபஹுநி -– அநேகங்களான , ஜந்மாநி – அவதாரங்களானதுகள் , மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு , ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே , தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் , ( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதிசெய்கை
1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |
தேஷ்வப்யஶக்தாஸ்யாத் மாநஸ்ஸம்ஸரந்தி புந:புந: ||
2 ஏவம் பஹுவிதோபாயேஷ்வநிஷ்பந்நபலேஷ்வஹம் | ஸதாசார்யஸ்வரூபேண ஜநித்வா ஸர்வசேதநாந் | வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யாமீத்வசிந்தயம் ||
3 ஏவம் சந்சிந்த்ய பத்மாக்ஷிகுருரூபேணவைபுரா |
அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித்ஜநாந் பவாதப்யுத்தரம் ரமே ||
4 இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புராதேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்நசேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜப்ரபாவத: ||
யாலே ) , கோபி — ஒருத்தனாவது , மோக்ஷார்த்தி — மோக்ஷாபேக்ஷை யுடையவனாக , ந பவது — ஆகவில்லை .
1 ( வேதாந்தே விவிதோபாய இதி ) “ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) , மயா — என்னாலே , வேதாந்தே — ப்ரம்மப்ரதிபாதநபரமான வேதாந்தஶாஸ்த்ரங்களிலே , பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான , விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் , விஹிதா: — விதிக்கப்பட்டதுகள் , ( இப்படி விதித்தவிடத்திலும் ) , ஆத்மாந: — பத்தசேதநர்கள் , தேஷ்வபி — அந்த பக்த்யாதயுபாயங்களை யனுஷ்டிக் கும் விஷயத்திலும் , அஶக்தாஸ்ஸந்த: — ஶக்தியில்லாதவர்களாய்க் கொண்டு , புந:புந: — அடிக்கடி , ஸம்ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .
2 ( ஏவம் பஹுவிதோபாயேஷ்விதி ) ஏவம் — இந்தப்ரகாரமாக , பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க
ளெல்லாம் , அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் , அஹம் — ஸர்வஜ்ஞனான நான் , ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் , ஜநித்வா — அவதரித்து , ஸர்வசேதநாந் — எல்லா சேதநர்க ளையும் , வ்யூஹக்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப்பிடியாக பிடித்துக் கொண்டே , கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று , அசிந்தயம் — எண்ணினேன் .
3 ( ஏவம் ஸந்சிந்த்யேதி ) ஏ பத்மாக்ஷி — தாமரைப்பூப்போன்ற திருக் கண்களையுடையவளாய் , ரமே — நமக்கானந்த வஹையும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே , ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி , புரா — முற்காலத்திலே , குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் , அவதீர்ண: — அவதரித்தவனாய்க்கொண்டு , காம்ஸசித்ஜநாந் — சில பத்தசேதநர்கள் , பவாத் — ஜன்மமரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும் , அப்யுத்தரம் — கரையேத்தினேன் .
4 ( இத:பரமிதி ) ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயுமிருந் துள்ள விக்ரஹகுணங்களு மாத்மகுணங்களுமுடையவளே , புரா — முன்பு , மயா — என்னாலே , ஜநி: — ஆசார்யரூபாவதாரமானது , யதாக்ருதா — எவ்விதமாக செய்யப்பட்டதோ , ததா — அவ்விதமாகவே , இத:பரஞ்சாபி — இனிமேலும் , கரிஷ்யதே — செய்யப்படப்போகிறது , குருஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்யரூபியாய்க்கொண்டு , நிமக்நசேதநாந் — ஸம்ஸாரஸாகரத்தில் முழுகிக்கிடக்கிற பத்தசேதநர் களை , நிஜப்ரபாவத: — ஆசார்யாபிமானரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே , ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப்போகிறேன் .
1 லக்ஷ்மீ: || 2 கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர்ஜநிம் | கஸ்மிந் யுகேவதீர்ணஸ்த்வம் பவிஷ்யஸி வத
ப்ரபோ: || 3 ஶ்ரீபகவான் || 4 அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||
1 ( லக்ஷ்மீ: ) — ( இப்படி எம்பெருமானார் அருளிச்செய்த வார்த்தை களைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .
2 ( கஸ்மிந் குல இதி ) ஹே விஷ்ணோ — ஸர்வவ்யாபியான ஸ்வாமீ , பவாந் — தேவரீர் , குரோர்ஜநிம் — ஆசார்யரூபமான விலக்ஷணாவ தாரத்தை , கஸ்மிந் குலே — எந்த திருவம்ஸத்திலே , கரிஷ்யதி — செய்யப் போகிறது , ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ , த்வம் — தேவரீர் , கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலேதான் , அவதீர்ணோ பவிஷ்யஸி
-அவதரிக்கப் போகிறீர் ? வத — ( இவ்வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் ) தேவரீரே அருளிச்செய்யவேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .
3 ( ஶ்ரீபகவான் ) இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்கிறார் .
4 ( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிகதேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி ( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ்விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) , அஹம் — ஸர்வஜ்ஞனான நான் , ஆசார்ய ரூபேண — ஆசார்யரூபியாய்க்கொண்டு , யுகே யுகே — யுகங்கள் தோறும் , பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் , தத்ராபி — அப்படி யவதரிக்குமிடத்
திலும் , யோகிநாம் பும்ஸாம் — ப்ரம யோகிகளாயிருக்கிற மஹாபுருஷர்க ளுடைய , மஹதி — ஸர்வஶ்லாக்யமாயிருந்துள்ள , குலே — திருவம்ஸத் திலே , மே — எனக்கு , ஜந்ம — அவதாரமானது , பவிஷ்யதி — உண்டாகப் போகிறது
தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||
1 விஶிஷ்யமே தேவிகலௌ யுகே குரோர்ஜநிர்பவித்ரீ கலு ஸத்குலே ரமே | த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் பவிஷ் யதி ஸா ஹி புஜிஷ்ய பூயஸீ || 2 ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குருஸரீரிண:
1 ( விஶிஷ்ய மே தேவீதி ) ஹே ரமே தேவி — நிரதிஶயாநந்த யுக்தை யாய்க்கொண்டு நமக்கு பட்டமஹிஷியாயிருக்குமவளே , கலௌ யுகேது — கலியுகத்திலேயோவென்றால் , ( இவ்விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்லவேண்டுகையாலே , து — என்கிற அவ்யயம் அத்யாஹ
ரிக்கப்பட்டது ) ஸத்குலே — ஒரு வில க்ஷுணமான திருவம்ஶத்திலே மே — எனக்கு , விஶிஷ்ய — பூர்வாவதாரங்களைக்காட்டில் விலக்ஷணமாக , குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது , பவித்ரீகலு — உண்டாகப்போகி றது ( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ்வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது
( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின்படியே , மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸரூபத்விவிதாஹங்கா
ரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் , தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) , புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்யஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு , த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “
என்கிற ஶ்லோகத்தின்படியே , த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வதசோர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது , பவிஷ்யதி — ஆகக்கடவது . இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது , இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ்வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .
2 ( ஸர்வோபாய தரித்ராணாமிதி ) ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுகமண்டலத்தை உடைய பிராட்டி , ஸர்வோபாய தரித்ராணாம் — கர்மஜ்ஞாநபக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவரா
யிருக்கிற , ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்திவிவசருமான எல்லா சேதநர்களுக் கும் , ( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்யப்ரேமாதிஸயத்தாலே ஸிதிலகரணராய் ஆந்ருஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையு மடவுபடவநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) , குரு ஸரீரிண: — பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்யரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய , அபிமாநாத் — அபிமாநத்தாலே , முக்தி: — மோக்ஷ மானது , ( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ்ஶம்ஶயமாக உண்டாகக்கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து ஆகர்ஷிக்கப்படுகிறது . )
1 மத்பக்தாஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே | த்ரிதண்டினோபிமாநாந் மே தே ஸர்வே குருரூபிண: | முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||
2 மத் க்ருதோ யோபிமாநஸ்யாதாசார்யத்வே ஸுபாநநே |
ஸ யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||
3 குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||
1 ( மத் பக்தா இதி ) கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் , ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்தபஞ்சக ஜ்ஞாநபூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு, ( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்தவிடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற ஶ்ரீஸூக்திபடியேயெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) , மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்யரூபியான வென்னிடத்தில் நிரதிஶயபக்தி யுடையவர்களாகிறார்களோ , தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும், த்ரிதண்டிந: — த்ரிதண்டதாரியாயும் , குருரூபிண: — ஆசார்யரூபியாயுமிருக் கிற , மே — என்னுடைய , அபிமாநாத் — அபிமாநத்தாலே , முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள் ( இவ்வர்த்தத்தை ) ,அஹம் —நான் , தே — உனக்கு , ஸத்யேந — ஸபதபூர்வமாக , ப்ரவீமி — சொல்லுகிறேன் .
2 ( மத்க்ருதோ யோபிமாநஸ்ஸ்யாத் இதி ) ஹே ஸுபாநநே — ஸர்வருக் கும் மங்களாவஹமான திருமுகமண்டலத்தை யுடையவர்களாயும் , தேவி — நம்முபய விபூத்யைஶ்வர்யத்துக்கு ஸஹதர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி , ஆசார்யத்வே — ஆசார்யகார்யமான வுபதேச விஷயத்திலே , மத்க்ருத இதி — ( பின்புள்ளாருபதேசித்தாலும் , அது க்ருபாமாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால் செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற , யோபிமாநஸ்ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ , ஸயேவ — அதுவே தான் , முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோக்ஷப்ரதமாக , பவிஷ்யதி — ஆகப்போகி றது , ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .
3 ( குரு ரூபஸ்யேதி ) ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத் தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது , குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற , மே — என்னுடைய , நாம்நா — திருநாமத்தாலே , விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக்கடவது ; இவ்விடத்தில் என்னுடைய திருநாமத்தாலே யென்னது , இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம்
( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜயஶீலமாகக் கடவதென்கை .
1 மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||
2 குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ரதத்ர நிதாயவை |
ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||
3 மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர்பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||
1 ( மத்காலாதந் விதி ) ஹே பத்மக்ஷி — தாமரை போன்ற திருக்கண் அழகையுடைய பிராட்டி , ஸமய: — அப்படி வ்ருத்தியடைந்து வருகிற பரமவைதிக ஸித்தாந்தமானது , மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு , ( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர
முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே , யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ளவேணும்)
லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப்போகிறது .
2 ( குருரூபஸ்ய மே ஶக்தி மிதி ) — ( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற , மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்யஶக்தியை , தத்ரதத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே , நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து , ஸமயம் — லோபிக்கப்போகிற ஸித்தாந்தத்தை , யதா — எந்த ப்ரகாரமாக , நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ , ததா — அந்த ப்ரகாரமாக , ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப்பிடிக்கப் போகிறோம் .
3 ( மமாசார்யாவதாரேத் இதி ) யேஷாம்து — யவர்களுக்கானால் , மம — என்னுடையதான , ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே , பக்தி: — ஸ்நேஹபூர்வகமாய் , இடைவிடாத நினைவு , பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ , தேஷாமேவ — அவர்களுக்குத்தானே , முக்தி: — பகவத்ப்ராப்தியாவது , ஸுலபா — சுகமாக லபிக்குமது , பவேத் — ஆகக்கடவது , அந்யேஷாம் — அந்த வாசார்யபக்தி யில்லாதவர்களுக்கு , ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .
1 அஸ்மிந்நர்தேஹி விஸ்வாஸஸ்ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி |
மத்கடாக்ஷஓ பவேத்யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: || என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே , முக்தகண்டமாக முக்யப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன . இவையெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாணப்ரதிபாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து , நம்மாசார்யக ளனைவரும் தந்நிஷ்டராய் , தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் . இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் , த்ரிதண்டதாரியா யாசார்யரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச்செய்கையாலே மற்றுமவனருளிச்செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலைநின்றிருப்பது ; ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தியுள்ளது மவரிடத்திலேயேயிறே , அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶயவிபர்ய
மற நம் பூர்வாசார்யர்களும் அறுதியிட்டார்களிறே ; ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாணப்ரதிபந்நமென் றும் , சொல்லிற்றாயிற்று .
1 ( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே , விஶ்வாஸ: — இது தான் பரமார்த் தம் என்கிற நினைவு , ஸர்வேஷாம் — எல்லாருக்கும் , ந ஜநிஷ்யதி: — உண்டாகப்போகிறதில்லை என்பது நிச்சயம் ; ( ஆனால் பின்னை யுஜ்ஜீ
விக்கும் விறகேதென்னில் ) யஸமிந் — எந்த சேதநந் விஷயத்திலே , மத்கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது , பவேத் — உண்டாகக்கடவதோ , ய: — எந்த சேதநந்தான் , மய்யேவ — என்னிடத்தலேயே , ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ , தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு , ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்ற தாக , அயம் -– இந்த பாவ விசேஷமானது ( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) , பவிஷ்யதி -– உண்டாகப்போகிறது, ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை , ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .
இனி சரமபர்வமான வெம்பெருமானா ரபிமாநத்திலே யொதிங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ; பக்திதான் ஸ்வயத்ந ஸாத்யமாகையாலும் , பகவத்பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வப்ர வ்ருத்தி விரோதியாகையாலும் , ஸ்வஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்மசத் தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ; பாரதந்த்ரிய ஸ்வரூபத் துக் கனுகுணமாய் பகவத்விஷய விஸ்வாசரூபமான ப்ரபத்யுபாய மும்
1 “ பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே “ என்கிறபடியே பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப்படப்பண்ணும் . இப்படி ஸ்வப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த்யுபாயமும் , ஸ்வப்ரவ்ரு த்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே சரமபர்வநிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;
1 ( பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப்போலே அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்திருக்கு மவரே , ஜந்து: — சேதநநாநவன், த்வயைவ –- உன்னாலேதான் , பவமோக்ஷணயோ: — பந்தமோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக , க்ரியதே -– செய்யப்படுகிறான் ; “ இல்லவல் லருள் நல்வினைகள் ” என்னும் மாசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்திப்படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ; இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்கதர்ஶந மாத்ரத்தாலே நிர்ஹேதுகமாக கடாக்ஷித்து நிரதிசயானந்தரூப ஸ்வப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் , இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ; இதற்கு மேல் சொல்லவேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்யதோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டுகொள்வது .
ஆகையாலிறே , இவ்வதிகாரிக்கு பக்திப்ரபத்திக ளுபாயமன்னென் றும் , எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் , நம் பூர்வாசார்யர்க ளறுதியிட்டதும் . ( ப்ரயாணகாலே ) இத்யாதி , — அதாவது பக்திப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர்ஹேதுகமாக கடாக்ஷித்து பவ்யனாக்கி கொண்டுபோறும் பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே , இவனுக்கு ஸம்சாரோத்தாரக மென்றபடி .ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரு மருளிச்செய்தாறிறே .
இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் , உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் , மஹாவிஸ்வாசரூபையான ப்ரபத்தியா னது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக பாபஹரத்வேந தத்வர்த்தகமான வங்கமுமாய் , 1 “ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
1 ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178 ( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,
“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில் பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவை யை . இதுதான் , உபாய விஷயத்திலாம்போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ; உபாயபக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது , ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்துவிடும்; பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற , ஸா -– ஸாத்ய பக்திஸ்து – “ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் , ப்ராரப்தஸ்யாபி – கர்மஜ்ஞாந ஸஹக்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் , ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ; து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துகுகுண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ; இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவக்ஷிதராகையாலே ,
அநிஷ்டநிவ்ருத்திபூர்வகமான இஷ்டப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ; இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத்வாதிகளாலே , அங்கமுமாய் ,
“ 1 தேவமிவாசார்ய துபாஸீத “ , 2 “ ஆசார்யான் புருஷோ வேதா “ , 3 “ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “ என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் . பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே இந்த வாசார்யாபி மாநமாகிற சரமப்ரபத்தியும் , ஸ்வதந்த்
ரோபாயமாய் வந்தது ; பக்திக்கந்தர்யாமி விஷயம் , ப்ரபத்திக்கச் சாந்வதாரம் விஷயம் , சரம்ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெரு மானார் விஷயம் . ப்ராக்ருத விக்ரஹயுக்தரா யெழுந்தருளியிருக்கை யாலே ,
—————————————————————————————————————————–
அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;
“ ததப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்தபோதே கிடைக்கவில்லை யென்னுமாற்றாமையாகிற மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லித்திறே .
1 ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே என்மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல்வழி போங்கோளென்று சொல்லுகிற “ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உபப்ரும்மணத்தின்படியே மனிசர்க்குத்தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப்போலே , உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்தப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .
2 ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –- ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற , புருஷ: — முமுக்ஷஉவாந புருஷன் , வேத -– அர்த்த பஞ்சகங்களையலகலகாக வறியக்கடவன் .
3 ப்ரபந்ந பாரிஜாதே – குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) – தமேவ -– அப்படிப்பட்ட ஆசார்யனையே , உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே , சரணம் –- ரக்ஷகனாக , வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .
ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததேயாகிலும் , எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் , இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச்செய்கை யாலும் , பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .
1 ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;
2 மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே || 3 பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||
1 ( ததுக்தமிதி ) – தத் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென் கிற விவ்வர்த்தம் , பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் , பகவதா -– ஈஶ்வரனாலே , ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து , உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .
2 எங்ஙனேயென்னில் ( மமஸ்வரூபமிதி ) – ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே , ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற , மம -– என்னுடைய , தத் –-
ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான , ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது , பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாணகுண புஷ்கலமாயும் , ஷட்விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் , பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .
3 ( பரத்வேதி ) -– அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன , பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் , அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ; ( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள் வது ) அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே ஸமஸ்த கல்யாணகுண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியதவிஷயமான வர்ச்சாவதாரம் , இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற
விவையிரண்டுமென்றும் , மே -– என்னுடையதான , ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது , ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .
1 பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||
2 ஜ்ஞாநாதிகுணதஸ்தத்ர விஶேஷாதிஷ்டிதிர் பவேத் | ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குருபாவத: | சரமஸ்யவதாரஸ்ய குருரூபஸ்ய மே ஸதா ||
3 ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந்மத்பாதயுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||
1 ( பூர்வஸ்மாதபீ இதி ) – பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன்முன்னானவைகள்காட்டில் , உத்தரோத்தர: — பின்பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக்காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் , தேஷு – அவைகளில் வைத்துக்கொண்டு , ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே , காருண்யம் – ஆஶ்ரிதஸம்ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது , பரிபூரிதம் –- வடிவிலே தொடைக்கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்
2 ( ஜ்ஞாநாதிகுணத இதி ) குருரூபஸ்ய –- ஆசார்யரூபத்தை யுடைத்தா யிருக்கிற , சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது , ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்கவேண்டிய தான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே “ பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடிவந்து கிட்டியிருப்பதாலும் , தயா ளுத்வாத் -– கர்மாநுகுணமாகவிவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே ஸர்வப்ரகாரத்தாலுமிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் , ஜ்ஞாநித்வாத் –
“ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் , குருபாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் , தத்ர – அந்த அவதாரத்தில் , ஜ்ஞாநாதிகுணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தினவவதார பஞ்சகத்திற் காட்டில் , மே – என்னுடைய , விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது , ஸதா –- எப்போதும் , பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .
3 ( ப்ராப்யத்வ ப்ராபகத்வே இதி ) – (அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் , ஸ்வநிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ; குணௌ – நமக்கவை குணங்களாக , நமதௌ – எண்ணப்பட்டதன்று , தஸ்மாத் -– ஆனபடியாலே,
என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே | இத்தாலும் , எம்பெரு மானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் . இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹாப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன் அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனிய னாய் இவன் கார்யம் செய்கைக்கும் ஸ்வதந்த்ரனாய் சீறியுதறியுபே க்ஷிக்கைக்குமுடலாயிருக்கும் ; அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக்கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதறமாட்டா மல் , கார்யம் செய்துவிடுமோபாதி , சரணஸ்தாநீயரான வெம்பெரு மானாரை பற்றினால் , அவன் பரமதயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .
1 “ லோகே ச பாதபதநம் பாணிஸங்க்ரஹணாதபி | தயா ஹேதுதயா த்ருஷ்டுமித்யுக்தம் சரணாவிதி “ என்றும் ;
2 “ அநதிக்ரமணீயம்ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரணக்ரஹண மமோகோபாயமிறே |
நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்காலவர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்
மோக்ஷகாமிநாம் முமுக்ஷஉக்களுக்கு , மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே , சரண்யம் — ரக்ஷகமாக்க் கடவது .
1 ( லோகே ச பாதபதநமிதி ) லோகே ச -– இருள்தருமா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட , பாதபதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது , பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் , தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக , த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று , சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) , உக்தம் –- சொல்லப்பட்டது .
2 ( அநதிக்ரமணீயமிதி ) சரணக்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப்பிடித்துக் கொள்கையென்றால் , அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக்கூடாத தாய் இருக்குமிறே ; பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின்
இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன , உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ளவந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டுவந்தான் , ஒருவனும்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ; காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன , அப்ப டியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம் , அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் . உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி குலையாமல் ஸத்தையுடன் கிடைக் கப்பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வஜ்ஞாநமும் , அநந்யபக்தி யும் , அந்யவைராக்யமும் இல்லாவிடிலும் , மேலந்த ஸம்பந்தத் தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ; ம்ருதஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்தாநுஷ்டாநாந்வயலேஸத் தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் , அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப்போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் . ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட் டும் ; அவத்யகரமாகையாவது , பகவந்நிக்ரஹத்தை விளைத்து யாவ தாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோ டுண்டான ஸம்பந்தம் ஸ்வரூபவிகாஸஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .
1 “ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ்ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ என்று எம்பெருமான் தானேயருளிச்செய்தானிறே .
விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .
1 விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் — ( மய்யாசார்யாவதாரேத்விதி ) ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே , ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற , மயி -– என்னிடத்தில் , யஸ்யது –- எவனுக்கா னால் , பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
1 “ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: | தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாதரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாதபாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “ என்றிரே நம்பிள்ளையருளிச் செய்யும்படி ; அதாவது எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரியபெருமாள் , என்னையா
தரித்து “ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ; அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு , எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத்ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திதுவன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே , தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ; இதென்ன வாச்சர்ய மென்று கண்டருளினாரென்றபடி , இத்தாலெம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியுமெம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது, நிர்ஹேதுகமா விஷயீகரிக்கும் பரமகாருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே ஸம்ஸாரோத் தாரகமென்று
கூடிய தாஸ்யருசியானது , ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ , தஸ்ய –- அந்த சேதநநுக்கு , ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது , பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ; ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை . 1 ( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ; ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் , அன்றிக்கே பகவதநுபவ கைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் , அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேக்ஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;
சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கியம்மாளுக்கு , எங்களாழ் வான் தாமுமருளிச் செய்தாறிறே . ஸோமாஸியாண்டானும் ,
1 “ பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்யரூபாஹங்கார
—————————————————————————————————————————–
லக்ஷ்மணதேஶிகேந்த்ர – ஆசார்யகுல ஶிகாமணியான வெம்பெருமானா ருடைய ( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக்காலைக் காட்டுகிறது ) , சரணத்வந்த்வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே ( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான , ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் , மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று எம்பெருமானார் தாமே காட்டிக்கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை , ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி , மஹா:பல ப்ரசவிதா – நித்யகைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) , ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே , தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை , த்ருஷ்ட்வா – கடாக்ஷித்தருளி , ரங்கநாத ரமணீ —
( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநை யும் திருத்தி சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெரு மாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –- பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் , அயம் –- இந்த நம்பிள்ளை , ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபயவிபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும்படியான ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று , மயி –- அடியேனிடத்தில் , ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற , தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை , ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ; அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே , எம்பெருமா னார் செய்தருளின விவ்வுபகாரமாச்சர்யகரமா யிருக்கிறதென்கிறார் .
1 ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) – பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய்
ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத்சரணாரவிந்தயுகள சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி ஸாத்யாயா: — ஸ்வயத்நரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே
ஸாதிக்கப்படுமதான, பக்தே: — கர்மஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தியோகத் திற்கு , ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் , ( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் , வர்ணா ஶ்ரம விஹிதகர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தியோகத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )
( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்தவிஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே , பக்தியோகமானது நழுவும்போது , “ ஏவம் நியமயுக்தஸ்யாஶ்ரம விஹிதகர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று அந்த பக்தியோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் , தத் ஸாத்யையான பக்தியோகத்தோடு , ஸ்வஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று , இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ; “ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே , இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு , அத்தாலேயவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட ( நிரவதிக
ப்ரேமரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தியோகத்துக்கு நாடோறுமதி ஶயாவஹங்களாகையாலே , மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் | இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லா
தார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி வசநபூஷண திவ்யஶாஸ்த்ரத்திலே பரக்கவருளிச் செய்தாறிறே | இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து . இனி ப்ரக்ருதார்த்தங் கள் சொல்லப்படுகிறது | பகவந்தமுபேத்ய தத்சரணாரவிந்தயுகள சரணா கதேரபி – பகவந்தம் -– ஈஶ்வரனை , உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவக்ஷிதமாகையாலே யதுக்கு நியதவிஷயமான வர்ச்சாவதாரத்
திலே நோக்காய் , அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு ஆஶ்ரித கார்யாபாதகங்களான
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று ஸ்வப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச்செய்தாறிறே | வாதிகேசரி அழகிய மணவாளஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வஜீவாத்மநாமபி | தத்வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||
குணங்களோடு வாசியற ஸகலகல்யாண குணபூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத்ஶப்தம் காட்டுகிறது ) , தத்சரணாரவிந்தயுகள சரணா
கதேரபி — தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ; சரணாகதேரபி — உபாயாந்தர
பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி , ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக் கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா — நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ; பகவத் – எம்பெருமானுடையதான , ஸ்வாதந்த்ர்ய -– கர்மநிபந்தன மாக ஸம்ஸரிப்பிக்கவும் , காருண்யநிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ; ஸ்மரணத்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ; பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ; ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ; ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ; பகவத் — ஈஶ்வரனுடைய ; அவதாரபூத -– அவதார விஶேஷமான , பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷைக ஹேதுவாயிருக்கையாலே ) ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற , ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய , இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) , சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) , சரணாகதிரேவ – ப்ரபத்திதானே ,
ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு , பவதி இதி – ஆகிறதென்று , ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |
1 வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரமகுரு சரிதையில், ( பாரதந்த்ர்யமிதி ) ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் , பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக் கை ,ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலு மந்தரங்க நிரூபகமாக வேயிருக்கும் , ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“ புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழி
த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய
சைப்பிரானருளிச்செய்த ) சேதநப்ரயத்நங்களை யபேக்ஷித்திருக்கிற பக்திஸ்து — ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதிரூபேண ஸாதிக்கப்படுவதான)
பக்தியோகமோவென்னில் ; தத்விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |
( த்யாக இதி ) – நிவ்ருத்தி ஸாத்ய: — “ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியி
னாலே ஸாதிக்கப்படுமதான , அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ;
( இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே , ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் , தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் , சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் , பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ), நிர்மலானந்த ஸாயிந: ; நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகநாயும் , அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ; ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண – ஸ்வாதந்த்ர்ய – நிரங் குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய , ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தி னாலே , பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக , பவிஷ்யதி – ஆகக்கடவது |
( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “ அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற “ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “ ( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது , ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் , அகில ஹேயப்ரத்யநீகநாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ; இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன்தான் சேதந்நோடே ஏகதத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் , “ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேக்ஷித்திருக்கை யாலே ,“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|
இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் , கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று ப்ரேம்மில் லாதவராக விலக்கவேண்டும்படி நித்யநிரவத்யநிரதிசய ப்ரேமமுடையராய் “ அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ
ஸ்ம்ருதிமாத்ரேண பீதிஹேதுர்பவிஷ்யதி || 1 தஸ்மாத் பக்திம் ப்ரபத் திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந: சரணாஶ்ரயா:|
————————————————————————————————————————-—
ஸ்வதாநமாக கொடுத்துக்கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே , அநாதிகர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேமகந்தமே கண்டறியாத
நம்மை “ க்ஷிபாமி “ என்று தள்ளிவிடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ; இதுக்கு மேலே , பரதந்த்ரஶேஷியாய்,
மோக்ஷைகஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் , பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,
“ தஹ்யமாநாவநந்தஸ்ய விஷஜ்வாலாப்ரவேஸ “ என்று , க்ஷஈராப்திநாத னைக் கிட்டத்தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷஜ்வாலைக ளாலே உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பயஹேதுவாயிருக்கும் | “ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே , ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி | ( ஸ்ரீநாரதபகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்யபுருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று , ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹாபுருஷ ஸ்தவமென்கிற பரமகுஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் , இவருக்கு தன்னுடைய விஶ்வரூபத்தை அநேகவர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து , ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக்காணவரிதான இந்த திவ்யரூபத்தை , ஏகாந்திஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் . இவ்விடத்திலிருக்கிற திவ்யபுருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர் இவ்விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக , ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷதர்மபர்வத்தில் 339-340 அத்யாயங்களில் சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக்கடவது | )
1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ; விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய் , மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ; ( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் , “ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே “ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரணஸுத்திதான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ ) அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ; பக்திம் – ஸ்வரூபவிருத்தமான பக்தியோகத்தையும் , ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக்குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் , விஹாய –- விட்டு , ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு , தத்க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட , அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே , பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |
தத்க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||
1 லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் | குரூபாய த்வயாத் கிம்வா கர்த்தவ்யம்ஸ்யாந் முமுக்ஷஉபி: || என்று சரமகுரு சரிதையிலே யருளிச்செய்தாறிறே | ப்ராமாணிகாக்ரேசரரான பட்டரும் , “ 2 பரம காருணிகச்ய பரமகுரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தளா மலாயதேக்ஷணமுக கமல விகாஸ
1 ( லகூ பாயேநேதி ) தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு , மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான பெருமையை யுடையதாய் ஸகலபுருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது , லகூபாயேந –- ( க்ருபமாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ; லப்தவ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க , முமுக்ஷஉபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறி ந்து ப்ராப்ய ருசி தலையெடுத்திருக்குமதிகாரிகளாலே ; குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் , துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ; கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ; கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் | ப்ரக்ருதி பரவசராகையாலே முமுக்ஷஉத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க , முமுக்ஷஉக்களாசார்யாபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்லவேண்டாவிரே ; ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லையென்னபடி |
2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி | ( பரம காருணிகேத்யாதி )பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப் திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ; பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ; பகவத: — அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநநாய் ; ஸ்ரீமந்நாராய ணஸ்ய – ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற , நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ; புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -– புண்டரீகதள – வெள்ளைத்தாமரை தளங்களைப் போன்றதாயும் , அமல — நிர்மலங்களா யும் , ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற , ஈக்ஷண -– திருக்கண்களை
ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் | தஸ்மாத் ததேவாஸ்மாக முஜ்ஜீவனாயாலமித்யஸ்மத்தாத பாதா
மேனிறே “ என்று ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குருப்ரபாவதீபி கையிலே யருளிச்செய்தார் |
1 லக்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..
யுடைத்தான , முககமல — திருமுகமண்டலமாகிற செந்தாமரையினுடைய, விகாஸ — மலர்கைக்கு , ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ? பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் — பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ; ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வகல்யாண குணங்களையும் , பரிபூர்ண ஜ்ஞாநத்தை யும் உடையரான எம்பெருமானாருடைய , சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் , சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை | ( இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று ) தஸ்மாத் -– அந்த ஹேதுவி னாலே , ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே , அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு , உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு , அலமிதி -– போறுமென்று , அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே –
திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |
1 ( லக்ஷ்மணார்யேதி ) – இந்த ஶ்லோகம்தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் | இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது | தத்க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் , கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே , ஆசார்ய ப்ராப் திக்கு பூர்வபாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப்போக்கி , ஆசார்யப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ; “ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே | உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகையன்றிக்கே,
கலுதத்க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்க்ஷிணோதி ……..
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷை ப்ரஸாதிப்பித்தருளினார் ; இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூபசிக்ஷை ப்ரஸாதித்தருளினார் |
“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் , ததீயர்க்கும்
அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ; ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே | இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய , அந்த்த உத்தேஸ்யம் தலைக்கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ? அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ நக்ஷமாமி “ என்று கொண்டு “ அவமானக்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே இவர்களைத் திருத்த விசையமாட்டான் ; இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன்கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து க்ருபாமாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே “ லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாயகலு தத்க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் | யத் – எந்த காரணத்தினாலே ( எம்பெருமானார்
நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை) நிஜ முக்யமாநிதாம் – நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்திலுண்டா கக் கடவதான , முக்யமாநி தாம் – முக்குறும்பை , ஃபலரீதி தத்வத: — ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய , ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே , ( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) | க்ஷணேன – ஒரு நிமிஷத் திலே ஏகதேசமான அல்ப காலத்திலேயே , வ்யுத்க்ஷிணோதி –- ஸவாஸ நமாக எடுத்துப்பா கடுகிறாரோ , தத் —அந்தக் காரணத்தினாலே , ( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது ) லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸர்வலக்ஷண ஸம்பந்ந ராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு , உத்தாரக ஆசார்ய ரான எம்பெருமானாருடைய , பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான ) திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய , ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு , த்த் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது | இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து
:பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |
1 “ ஸ்வவ்யாபாரேண ஸாத்யா பஜநகதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா | கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “ என்று பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலேயாக்கி
தத்க்ருபையினாலேயாயிருக்க , பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென் பது , கிம் புநர் ந்யாயஸித்தமிறே யென்கை |
1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வவ்யாபாரே ணேதி ) – ஸ்வவ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே ( இங்குச் சொல்ல வேண்டியவர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ; ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான , இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது ( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யமிவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது ) ஸ்வாநு ரூபத்வஹாநாத் — ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு , அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை , ஹாநாத் -– விட்டிருக்கை யாலே , பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற , ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே , த்யாஜ்யா -– த்யஜிக்கத்தக்க தாய்விட்டது ; ( அப்படியே ) தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே , சரணவரணிதாபி -– பகவச்சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் , ஸ்வாநுரூபத்வ ஹாநாத் – ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு , அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும்படியை , ஹாநாத் -– விட்டிருக்கையாலே , நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை | அதவா -– பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் | கிந்து -– பின்னையோவென்னில் , ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே | பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது , லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் ) அந்யத: — பகவத் பாரதந்த்ர் யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன , இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ; ( என்றும் அந்த வாசார்யகளறுதியிட் டார்களென்றபடி ) அஹோ – ( “ தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி , நாந்ய:பந்தா அயநாய வித்யதே “,” நாஹம் வேதைர் , ந தபஸா ந தாநேந
யெம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணாரவிந்தங்களை யுபாயமாக வறுதியிட்டாரிரே நாயனாராச்சாம் பிள்ளையும் | இப்படி நம் பூர்வாராசார்யார்க ளனைவரும் ப்ரமாண புரஸ்ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே | ஆகையால் எம்பெருமானாரோடு ண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே “ தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு பரப்ரா மகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணிமிண்டர்க்கு , யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்திபோறும்படி யிட்டுவைப்பன் | இவ்வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும் நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “ என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தாரிரே |
1 “ யஸ்ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய சரணத்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத்குணநிதிர் நாராயண ஸ்ரீபதி: |
ந சேஜ்யயா “ ) பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே | “ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “ ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது , ஆசார்யாபிமானரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி | தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே , ந: — அஸ்மதாதிகளுக்கு இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய , அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே, அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற , ஸாதநம் -– உபாயமாக , பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1 நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி ( யஸ்ஸ்ரீலக்ஷ்மணேதி ) – ய: — எந்த சேதநந் , ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மணயோகிவர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய ( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும் “ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) | சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தியழகையுடைய இரண்டு திருவடிகளுமே யுபாயோபேயத்வேந
தாதும் முக்திமனாதரோபவ ப்ருஹத்வாராஸயே ஸந்ததம் நிக்ஷிப்யைவ ஹ்ருதாபிநோ கணயதி ப்ராக்சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் ; அதாவது எம்பெருமா னார் திருவடிகளில் ஸம்பந்தரஹிதநாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன் ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் , புருஷகாரபூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் , தயாதிகுணபரிபூர்ணனாயிருந் தாலும் , மோக்ஷபலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து , அவன்தான் தன்னுடைய அநாதிசித்தமான கர்மத்துக்கு பரவசநாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு , என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலு மெண்ணானென்னபடி — இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானாரபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி , தனக்கு ஸஹவாஸ யோக்யரும் ஸதாநுபவயோக்யரும் , ஸத்காரயோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்கவேணும் ; இல்லையாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதிவந்து அத:பதித்து விடுவன் , இதில் , ஸஹவாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரமபர்வ நிஷ்டராய் , எம்பெருமானா ருடைய
பற்றினவனாக , ந பவத் — ஆகவில்லையோ , தஸ்ய — அந்த சேதநநுக்கு , ( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் ) நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் , ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும் அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதிகுண பரிபூர்ணனாயிருந்தாலும் , முக்திம் -– மோக்ஷத்தை , தாதும் -– கொடுக்கைக்கு , அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு
( ராமாநுஜ பதாஶ்ரயனாகாதவந்த சேதநநை ) , ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே , நிக்ஷிப்யைவ — “ க்ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு , ( அயம் ) ப்ராக்ஸித்திகர்மேரித: —
( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதிசித்தமான கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோகதியடைந்தானென்றுகொண்டு ) , ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட , நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |
# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் , இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதிகாலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி யீடுபட்டிருக்கு
மவர்கள் ; ஸதாநுபவ யோக்யராகிறார் , எம்பெருமானார் திருநாம த்தை யுச்சரியாவிடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் , ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் , தத்விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்; ஸத்காரயோக்யராகிறார் , தேஹயாத்ரையி லுபேக்ஷை பிறந்து , ஆத்மயாத்ரையில் மிக்கவபிநிவேஶத்தை யுடையராய் , ததீயாபிமா நத் திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹதாரணம் பண்ணி வர்த்திக்குமவர் கள் | எம்பெருமானாருடைய கல்யாணகுணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹவாஸம் , சரமபர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக் கும் ; “ இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச்செய்து வைத்தா ரிரே | இவ்வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலக்ஷஏபத்துக்கு விஷயமாகிறது “ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலக்ஷஏபோஸ்து
# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷய மான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் . இதில் எம்பெருமானா ராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீல நத்தால் காலயாபநம் பெறவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “ பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச்செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர் அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
என்கிறபடியே தத்ப்ரதிபாதிதமான வேதாந்தக்ரந்தங்களும் , பகவத்
குணாநுபவரூபாதி திவ்யஸூக்திகளும் ; திவ்யஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச்செயல்களும் , திருப்பாவையும் பூர்வா சார்யர்களருளிச்செய்த ரஹஸ்யங்களும் . இனியிந்த சரமாகாதிகா ரிக்கு நாலு நிலையுண்டு , அதாவது , ஸ்வரூபஜ்ஞாநமென்றும் , ஸ்வரூபநிஷ்டையென்றும் , ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநமென்றும் , ஸ்வரூபயாதாத்ம்யநிஷ்டையென்றும் நாலுவகையாயிருக்கும் ; இவற்றில் ஸ்வரூபஜ்ஞாநமாவது பகவத்பரதந்த்ரமாயிருக்கிற வசா தாரணாகாரத்தை யெவ்வழியாலும் ஸத்தை குலையாமல் நின்று ணர்ந்து , அதுதான் ததீயபர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமாயிருக்கு மென்றறுதியிட்டு , ததேகநிஷ்டராயிருக்குமிருப்பையுள்ளபடியறிகை ;
ஸ்வரூபநிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான
“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யரு ளிச்செயல்களுக்குக் காவலாகச்சொல்லுகையாலே . இனி , இந்த ஶ்லோகத் தில் “ ஆமோ௸ம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக்கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது . ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே , ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை , உபேயுஷாம் – அடைந்திருக்கிற , ந: — அடியோங்க ளுக்கு , தத்ப்ரபந்தபரிசீலனை – த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட , ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்தக்ரந்தங்களினுடைய , பரிசீலனை –- பரிசீல நத்தாலே ( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களிலறுதியிடப்பட்ட அர்த்தங்களிலொன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) , காலக்ஷஏப: — காலயாபநமாநது , அஸ்து –- ஆகக்கடவது ; இப்படியெத்தனை நாள் வரையென்னில் ? ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலு மந்யதாப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் , அதுகளை ஸ்ரீபாஷ்யாதிஸூக்திகளாலே பலபடியாக நிரஸித்திருக்கையாலும் , மோக்ஷமுண்டாகிறவரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலுமப்போது மிதுகளினுடைய பரிஶீலநமே காலக்ஷஏபமாயிருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .
Two lines of handwritten Telugu manuscript
எழுதியது புரியவில்லை
ததீயஶேஷத்வம் ; 1 “ அகிஞ்சித்காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே , தத்சித்யர்த்தமாக , தத்ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் , த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப்போரும் நிலையிலேயொரு படப்பண்ணுகை . ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநமானது எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத்விஷயகிஞ்சித்காரத்தாலே நிலையையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் , அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத்விஷய விஷயீகாரத்திலே ஸ்வஸ்வரூபத் தைச்சொறுகியிட்டு , இந்த ஸ்வரூபமத்தலைக்கே யுறுப்பாய் விநியோகப்படவேணுமென்று இவ்வர்த்தத்தினுடைய நித்யப்ரார்த் தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ;
“ உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தா றிறே . ஸ்வரூபயாதாத்ம்யநிஷ்டையாவது , சரமபர்வமான எம்பெரு மானாருடைய முகவிகாஸத்துக்குடலாக ததீயவிஷய கிஞ்சித்காரத் தாலும், தன் முகவிகாஸஹேதுவான தத்சேஷவிஷய கிஞ்சித்காரத் தாலும், ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத்சந்தாநு வர்த்தன பூர்வகமாக வஶேஷஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அதுதான் தத்தத் விஷயபூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பரம்பரா பர்யந்தமாக த்ரிவிதகரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி , தத்விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்மஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேகநிஷ்டையிலே தத்பரனாயிருக்கை . இனி இவ்வர்த்த நிஷ்டைதான் ஓரொருவர்க்கு சரமஶேஷியான.
1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —- அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு , ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை
வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ; ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் ஸார்வத்ரி கமன்றிக்கே , தேடிப்பிடிக்க வேண்டும்படி க்வாசித்கமாயிருக்கிறது .
“ அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ்ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாக்ஷஓ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய: “ என்று , எம்பெரு மான் தானே சரம்பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத்கடாக்ஷமடியாக வுண்டாகவேணுமென்று சொல்லிவைத்தானிறே . உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரமபர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக்குடலாக , ததபிமாநநிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரணத்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி , ததவசர ப்ரதீக்ஷனாய் , தனக்கவர்கள் ஸ்வரூபஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல்விழுந்து , தத்குணவைபவத்தை யுபதேசிக்க , சுக்கான் பாறைபோலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவிதாழ்த்து , கண்ணும் கண்ணீருமாயிருக்கும்படியான பரிபாகதசை பிறந்தால் ,சரமசேஷி கடாக்ஷம் பிறந்து தடையின்றி யிலே யிவன்பக்கல் ப்ரவஹிக்கும் ; பின்பு , தத்ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோரூபேண நடந்து செல்லுமிறே . இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும்போது , இவன் அறியாததாய் , எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்கவேணுமிறே ; அவையாவன : — நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிகஶேஷியான வெம்பெருமான் , இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும்படியான குளுர்ந்த திருவுள்ள த்தை யுடையனாகவேணும் ; அதுக்கடியாக விவனுக்கஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக சுக்ருதம் பிறந்திருக் கவேணும் ; இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும்போது என்றோவென்று , எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷவிஶேஷ மிவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ; இப்படி யெம்பெருமானுடைய விஶேஷகடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந் தால் , சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதிப்ரதனா யிருக்கவேணும் ; இதடியாக பகவத்குண விக்ரஹவிபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகநாயிருக்கும்படியான நினைவு பிறக்க வேணும் ; இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூபரூபகுண விபூதி விஷயஜ்ஞாநத்தையுடையராய் நிஷ் க்ருஷ்ட ஸத்வகுணநிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்து க்கு பூர்வபாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ; இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரமபர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது . “ ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்
( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி ) – இந்த ஶ்லோகந்தானிப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது . ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்குமேல் வக்தவ்யாம்ஶமில்லை . ஆஶ்ரயண ஸௌகர்யாபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும், ஆஶ்ரித கார்யாபதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே , ஆசார்யப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக்குணங்களோடிவத்துக்குண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தரபயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் . ஈஶவரஸ்ய –- ஸர்வநியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் – சேதநவிஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் , ( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக பந்தமோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது . ச -– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதிஸங்கையைக் காட்டுகிறது ; நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸாரஹேது வான நிக்ரஹஸக்திக்கிலக்காக்கி “ க்ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதிசங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது . இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டு கிறது ; பிதாபுத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ; “ க்ஷிபாமி “ என்பதும் ஹிதபரனாய்ச் செய்தவித்தனை ) இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத்வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்றிரே இதுக்கு
நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் , யத்ருச்சா ஸுஹ்ருதம் – விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்கு நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் , ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே , விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே , அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன பகவத்குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன , விவையிரண் டும் , ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் , ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்யப்ராப்திக்கி காரணங்களாகின்றன . ( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லு கையாலே நிருபாதிக ஸ்நேஹவிஶிஷ்டனான வீஶ்வரன் சேதநநிடத்தில் யத்ருச்சாஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று , அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது . ததா – என்கிற அவ்யயமும், ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே , க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது . அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம் வசநபூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் . பகவத்ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ; இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத்ப்ரஸாதமும் அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .அத்வேஷ பதம் ஸமதமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ; “ ஆசார்ய லாபமாத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே “ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரமஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது . ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத் தில் ஜந்மவ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே , அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் , ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் , ஜந்மவ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந
ப்ரமாணம் . இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது , “ இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே , எம்பெருமானார் திருவடிக ளில் ப்ராவண்யமுடையவராய் , பெரியமதிப்பராய் , தத்ஸம்பந்த வைலக்ஷ்ண்யாபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷப்ர ஹர்ஷத்தாலே ஸஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரமபாவனமான தேசம் .
“ அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரணயுகள ———
விஶேஷத்தையே பார்த்து “ தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே , பரமஸாத்விகரோடு கலந்து பலிமாறும்படியைச் சொல்லுகிறது .
ஷடேதாநி , என்கையாலே , ஆசார்யப்ராப்திக்கு இவையித்தனையும் வேண்டுமென்றதாயித்து ; அவையாவன ; கர்மமடியாக , “ க்ஷிபாமி “ என்கிற பகவந்நிக்ரஹம் மாறி , நிருபாதிகஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ; அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ; ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக்கொண்டு பகவத்க்ருபை பிறக்கவேணும் . அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் . அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாநாபேக்ஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் . ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து . ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே , ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது . ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது . ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் , சேதநநைப் பார்த்தால் அத்வேஷமுள் பட பகவத்க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவபூவா யிருக்கையாலும் , கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்மகல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் , அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்மகுணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் , ஆசார்யலாபம் பெறாப்பேறாகவே யிருக்கும் ) நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி ) அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் – அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான , பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வ
மாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம் தத்குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய
கல்யாணகுணங்களையும் , பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜ
யோகி — “ அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே , ஸர்வேஶ் வரன் ஸவிபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோகநிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய , ( யோகரஹஸ்யக்ரமம் குருகைக்காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும் “ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா | ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே “ உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசயப்ரேமத்தை இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ; இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“ ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும், அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) . சரணயுகளம் –- இரண்டு திருவடி களை , ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் , ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும், தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் – தத்குணஸந்தோஹ – ( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான ) அவருடையதான கல்யாணகுண ஸமூஹத்தினுடைய , அநுபவ – அநுபவத்தினாலுண்டான , ஆனந்த – ஆனந்தமாகிற , அம்ருதஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய , தரங்க -– அலைகளின் , ஷீகர – திவலைகளுடைய , ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே , ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திருவுள்ளத்தை யுடையவர்களாயும் , ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் – ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான , திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய , உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே , ஜநித -– உண்டான , ஹர்ஷப்ர கர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே , ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் , நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் , ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் , ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும் ( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷப்ரகர்ஷவஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம் ஸமதமாதிகுணேபேதாநாம் தத்வவித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ரபூர்ண கோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்யஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தானமேவ அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி: “ என்று நாயனா ராச்சாம்பிள்ளை யருளிச்செய்தாரிரே . இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டுமம்ஶங்கள் சிலவுண்டு ; அவையாவன – பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான ஸ்ரவண த்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும் , அவர்களுடன் ஸஹவாஸமும் , அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் , தத்பாததீர்த்தமும் , பாணி பக்வாந்நபோஜந மும் , ஶரீரஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன்.
தமமென்கிறது பாஷ்யகரண நியமனத்தை ) , தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் , அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் , ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் , உபாதேயதமதிவ்யஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் – உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான , திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,
“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ; ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன , பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன , வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன , இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற , ( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து , அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக்காட்டுகிறது ) . ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய , ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே , அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –- அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலே போக்கற்ற செயல் மாண்டு “ த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யா
சராமி “ என்கைக்குத்
பரந்தவாஸக்தி யுண்டாகையும் , தத்க்ருத பகவத்குணாநுஸந்தான ஶ்ரவணமும் , தத்ததீய ஸத்காரமும் , தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும், தத் விஷய ப்ரணாமமும் , ஆக இந்த 10 க்ருத்யமும் , சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் , ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரி க்கு விஶேஷித்து பரிஹரிக்கவேணும் . இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போறுமிவநுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை . ஸ்ரீய:பதியாய் , பரமதயாளு வாய் , பரமஶேஷியாய் , ஸர்வஶக்தியுக்தனான வெம்பெருமானு டைய திருவடிகளை யுபாயமாகப்பற்றி , தத்குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி , “பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போதுபோக்கி வர்த்திக்கிற நமக்கு , பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம்பர்வத் திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணிமிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் , அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் , ஈஶ்வரன் ஸர்வஜ்ஞநாகையாலே , சரமபர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக்கொடாத மாத்ரமே யன்றியே , இவர்கள் ஸ்வரூபத்தையும் , காலக்ரமத்திலே , ஸங்குசி தமாம்படி பண்ணிவிடுவன் . “ ஸ்ரீச ஸ்ரீமத்பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி
தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும் , ஆவாசபூமி: —
( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு ) வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி # யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .
எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி ) ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே – ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய , ஸ்ரீமத் பதாப்ஜே –- “ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே “ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற , தியா –- புத்தியினாலே , தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி
த்வராணாம் ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூடசித்தா ஸயாநாம் | காருண்ய க்ஷாந்தி ஸிந்து ஸ்வபத நிவஸதிம் நேஸ்வரோ தாதுமிச்சேதித்யேவம் சிந்தகாநாமபி பரமபதம் தாதுகா மஸ் ஸஜாது “ என்று , எம்பாரருளிச்செய்த இந்த திவ்யஸூக்தி , உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமா வநுஸந்தேயமாகக் கடவது .
த்வராணாம். – “ ஸ்நேஹபூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதிபூர்வக ஸ்மரணத்தில் மேன்மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவரா ய்க் கொண்டு , ( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக்கடவதான சரணவரணரூப ப்ரபத்தியில் த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு , இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷதர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற
தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிமபஜதாம் – ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமேயென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற , ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய , ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக்கடவதான ) சரணாகதியை , அபஜதாம் – செய்யாதவர்களாய் , கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரையுபேக்ஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் , தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டையுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு , ( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடிதற்கந்வயம் ). காரு ண்யக்ஷாந்திஸிந்து: — காருண்ய –- ( அத்வேஷம் துடங்கியாசார்யப்ராப்தி பர்யந்தமாக செய்துகொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , க்ஷாந்தி: —
( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே “ என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் , ஸிந்து: — ஸமுத்திரம்போலே யிருக்கு மவனான , ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் , ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை , தாதும் -– கொடுக்கைக்கு , நேச்சத் –- இச்சிக்கமாட்டான் . ( இவ்வளவேயன்றிக்கே ) இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே , சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட , ஜாது –- ஒருகாலும் , பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை , தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக , ந பவேத் -– ஆகமாட்டான் ) ( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு
கிறது . இத்தால் காலக்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தை யும் மலிநமாம்படி பண்ணி ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து .
இன்னமும் ராமாநுஜ பதச்சாயையென்று புகழ் பெற்றவிவர் , “ ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவோஜ்ஜீவநாய பவதீதி புத்யா , பகவந்தம் பரமகாருணிகம் பரமோதார மபார கல்யாணகுணாகர மபரி மித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரமசரண்யாகில ஜநசரண்ய மநவரதமாஶ்ரயணீய சரணகமலயுகளமபி மதாநுரூப நிரவதிகானந்த சந்தோஹ ஜநக “ நித்யஸூரி பரிஷதந்தர்பாவ மஹா:பலப்ரஸாதக மஸ்மதுத்தாரக மதிரமணீய
( 1 ) எம்பார் ஸ்ரீஸூக்தி ( ஸ்ரீமந்நாராயணேத்யாதி ) ஸ்ரீமந்நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித்தாமரைகளில் பண்ணும் , சரணாகதிரேவ -– ப்ரபத்திதானே , உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு , பவதீதி -– ஆகிறதென்கிற, புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாநவிஶேஷத்தாலே ; பகவந்தம் -– பரிபூர்ணஜ்ஞாநத்தை யுடையராயும் , பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் , பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே ) இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் , அபார கல்யாணகுணாகரன் -– அபாரமான கல்யாணகுணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் , அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்யஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்களபரிமிதமா யிருக்கையாலே , அதுகளுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் , ( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் , ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை ) அசரண்யாகில ஜநசரண்யம் – அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே ) கத்யந்தரமில்லாத , அகில ஜந -– ஸமஸ்தசேதநர்களுக்கும் , சரண்யம் -– ரக்ஷகராயும் , அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் — அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்யவிபூதியிலும் , ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான , சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் , அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் – அபிமதாநுரூப – ( ஸ்வரூபஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள , நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய , ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு , ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான , நித்யஸூரிபரிஷத் –- நித்யஸூரிகோஷ்டியில் , அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற , மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
விமலதர , லாவண்யகர திவ்யமங்கள விக்ரஹமதிஶீதல விமல கம்பீர ஜலாஸயப்ரபவ மிஹிரதருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்யநயனயுகளம் ஸ்வவசகமிதி சிதசிதீஶ்வர தத்வத்ரயஸூசக தண்டத்ரயரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் , அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும் ( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் , அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) . அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் — அதிரமணீய -– பரமபோக்யமாய் ( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது ) விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் , லாவண்யகர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் , திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற , விக்ரஹம் –- திருமேனியையுடையவராயும் , அதிஶீதல + நயனயுகளம் — அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து , விமல –- தெளிந்து , கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற , ஜலாஶய –- ஏரியில் , ப்ரபவ –- பிறந்ததாய் , மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே , விகசித – அலர்த்தப்பட்டதாய் , விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற , கமலதள -– தாமரையிதழைப்போலே , ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான , திவ்யநயனயுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக்கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும் இரண்டாயிருக்கையாலும் உபயவேதாந்த விஷயஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) . ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட , சிதசிதீஶ்வர -– சேதந தத்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் , ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற , தண்டத்ரயரூப -– த்ரிதண்டரூபமான , மண்டன -– அலங்காரத்தாலே , மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் , அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் , அஸ்மத் பிதரம் -–
நிஜஸூக்திகலாபைராஸ்ரி தாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யமஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிண மஸ் மதாதி ரக்ஷ்யவர்க ஸர்வப்ரகார ரக்ஷணைக தீக்ஷாகுரும் ஸ்ரீராமா நுஜாசார்யமநாத்ருத்ய , பரமகாருணிக: பகவாநேவ ஸ்வசரணகமல ஸமாஶ்ரிதாநாமஸ்மாகம்
இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் , அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —- அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் , நவ்ய –- அபூர்வங்களாய் , திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்யஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் , கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி , விமல –- நிர்தோஷங்களாய் , மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே ) தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ; நிஜஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ; ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த , அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ; ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக்கொண்டிருக்குமவராயும் , ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே அடியார்களுடைய நிரவதிகஸம்பத்தை உடையவராயும் , ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் , அஸ்மத் குலநாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் , அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் , அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷாகுரும் –– அஸ்மதாதி –- அடியேன் முத லான , ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்யபூதருடைய திரளை , ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் , ரக்ஷண -– ரக்ஷிக்கையென்கிற , ஏக –- முக்யமான , தீக்ஷா – தீக்ஷையுடைய , குரும் – ஆசார்யராயுமிருக்கிற , ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை , அநாத்ருத்ய -– அநாதரித்து , பரமகாருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான , பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரிதகார்யாபாதகங்களோடு வாசியற ஸமஸ்த கல்யாணகுண ங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே , ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்கவைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தால றிந்து தம் திருவடித்தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான , அஸ்மாகம் –- நமக்கு , ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த்
ஸ்வப்ராப்திரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வமதேந விசிந்த்ய வர்த்தமாநா
நாம் , தத்வஜ்ஞாநலவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாநஸஹக்ருத , பரப்ராமக வ்ருத்தாநாம் ரூபவேஷதாரிணாம் வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி , ஸ்வமதேநாத்மாநம் பஹுமந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண்யௌதார்ய வாத்ஸல்ய ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:
தத்தை , ப்ரயச்சதீதி — தருகிறானென்று , ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே , விசிந்த்ய –- ஆலோசித்து , வர்த்த மாநாநாம் -– அந்நிலையில் நின்றும் பேராதவர்களாயும் , தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் — தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய, லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற , தேஶ — ப்ரதேஶத்தை , அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே த்த்வஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய் அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய் அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே , ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம் அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து ) துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் ) துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர்காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி , பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ; ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக ) க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் , வயமேவ + மந்யமாநாநாம் — வயமேவ – நாங்களே, ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று , ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே , ஆத்மாநம் -– தங்களை, பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக ) போரப்பொலியக் கொண்டாடிக்கொள்ளு மவர்களாயுமிருக்கிற , சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்னது அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே ) பகவான் -– அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதானனாய் , புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: | அதோ
ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ: சரணயுகள ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: , யாவதாத்ம பாவி ஸம் ஸார நிரயகர்த்தே “ க்ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிக்ஷிப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் , ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு
ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “ என்கிறபடியே க்ஷரஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன , அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் , அபார காருண்ய + நிதிரபி , அபார –- பாரமில்லாத , காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்து
க்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன , ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன , வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன , ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு , ஏக –- அத்விதீயனான , நிதிரபி – நிவாச ஸ்தானபூதனாயிருந்தாலும் , அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய — அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் , பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண் டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாணகுணங்களையும் , பரிபூர்ணஜ்ஞாந
த்தையும் உடையராய் , ஸ்ரீமத்ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற ) நிலை நின்ற ஆசார்ய பதஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாரு டைய , சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் — சரணயுகள -– இரண்டு திருவ டிகளில் , ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமை யை , ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே , நிதாய -– வைத்து , கதாசிதபி –- ஒருக்காலமும் , ஸ்வ:ப்ராப்திரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை , அகுர்வாண: — செய்து கொடுக்காமல் , யாவதாத்ம பாவி + நிக்ஷிப்ய — யாவதாத்ம பாவி – ஆத்மஸத்தையுள்ளதனையும் , ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரககூபத்திலே “ க்ஷிபாம்ய ஜஸ்ர “ மிதிவதன் , நிக்ஷிப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி “ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷிபாம்யஜஸ்ரம் “ என்று அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வரு கிற ஸம்ஸாரத்தில் க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும்படியாகவே
நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: , ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “ என்று எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வப்ரகாரத்தா லுமீஶ்வரன் ஸ்வப்ராப்தி பண்ணிக்கொடாமல் , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து , திருவுள்ளத் தாலுமவர்களை நினையாநின்றருளிச் செய்தாரிரே . ஆகையால் ஸர்வப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்கவேணுமென்றும் நினைவுடைய வன் , அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய் , “ தேவுமத்தரியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,
நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு , கதாசிதபி — ஒருக்காலமும் , தான்— அவர்களை , ஹ்ருதா — திருவுள்ளத்தால் , ந கணயன் –- நினையாமல் , ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய , க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின , ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே , நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு , தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —– தேப்ய: — அவர்களுக்கு , ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் , கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று , அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் , ராமாநுஜா + வர்த்ததே — ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய , சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) , ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு , நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை , ப்ரதான கொடுக் கையில் , ஏக -– அத்விதீயனான , நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும் வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போறுமவனாய் ) வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .
சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாசயா: |
பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.
பேற்றுக்குடலாக ப்ரதமபர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரையனாய் யாதாயாதம் பண்ணியலமாவாதே , எம்பெருமாநா ரபிமாநத்திலே யொதுங்கி , நமக்குப்பேற்றில் கண்ணழிவில்லையென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் , எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரமஸாத்விக வர்க்கத்துடன் , “ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு , பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் , எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப்போலே , இருள்தருமாஞாலமான விக்கொடுஉலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே
யென்று ஷர்ஷபுலகிதஶரீரனாய் , யாவச்சரீரபாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக்கொண்டு ., எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி , மநஸ்ஸை ஸாவதாநமாய்ப்பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்கவேணும் .
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
நாலூராச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்
சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்
சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் |
ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||
மங்களம்