[highlight_content]

சிறிய ரஹஸ்யங்கள் Part 1

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :

சிறிய ரஹஸ்யங்கள் Part 1

 

திருக்கோட்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு

 

அருளிச்செய்த

 

பதினெட்டு ரஹஸ்யங்கள்

 

திருக்கோட்டியூர் நம்பியார் எம்பெருமானாரை

பதினெட்டுதரம் நடப்பித்தருளி ஒருதரத்துக்கு

ஓரோரர்த்தத்தைப்ரஸாதித்தருளினதெங்ஙனேயென்னில்;

முமுக்ஷவுக்கு ஸம்ஸாரபீஜம் நசிக்கவேணும். நசிக்கிற

எங்ஙனேயென்னில்; பார்யா புத்ராதிகள் பக்கல்

”பங்காதுத்பத்யதே கிட: கீட: பங்கம் நபத்யதே-லோ

காதுத்பத்யதே ஜ்ஞாநீ ஜ்ஞா நீலோகம் நபத்யதே’,

சொல்லுகிறபடியே,பிள்ளைப் பூச்சிக்கு

ஸந்த்ருப்தி புழுதியிலேயானாலும் அதுக்கு அந்த

புழுதியொட்டாதாப்போலே ஸம்ஸார பீஜம் நசிக்க

வேணும், 1. அது நசித்தாலொழிய அஹங்கார

மமகார நிவ்ருத்தியாகமாட்டாது. அஹங்கார மமகார நிவ்ருத்தி எங்ஙனேயென்னில்; அஹங்காரம் – கர்வம்; மமகாரம் மாத்ஸர்யம்;

“அக்நேர் மித்ராத்யதா தீபம் சீதாத் கர்வம்விவர்ஜயேத்” என்கிற

படியே-அக்நியினாலே பிறந்த விளக்கு சீதளமான

காற்றினாலே அமர்ந்தாப்போலே அஹங்கார மமகார

நிவ்ருத்தியாகவேணும், 2. அஹங்கார மமகார நிவ்ருத்தியானாலொழிய தேஹாபிமாநம் 3. தேஹாபிமாநம் போனாலொழிய ஆத்மஜ்ஞநம் பிறக்கமாட்டாது, 4. ஆத்மஜ்ஞாநம் பிறந்தாலொழிய

ஐச்வர்ய போகாதிகளிடத்தில் உபேக்ஷை பிறக்காது,

  1. ஐச்வர்ய போகாதிகளிடத்தில் உபேக்ஷை பிறந்தாலொழிய பகவத்ப்ரேமம் பிறக்கமாட்டாது, 6. பகவத்ப்ரேமம் பிறந்தாலொழிய

          விஷயாந்தரருசி விடாது, 7. விஷயாந்தர ருசி விட்டாலொழிய

பாரதந்த்ர்யம் பிறக்கமாட்டாது,

  1. பாரதந்த்ர்யம் பிறந்தாலொழிய அர்த்த காம ராக த்வே

த்வேஷாதிகளொழியாது, 9. ராகத்வேஷாதிகளொழிந்தாலொழிய

ஸ்ரீவைஷ்ணவத்வம் கைகூடாது, 10. ஸ்ரீவைஷ்ணவத்வம் கைகூடினாலொழிய ஸாத்விக பரிக்ரஹம்பிறக்கமாட்டாது,

11, ஸாத்விக பரிக்ரஹம் பிறந்தாலொழிய பாகவத பரிக்ரஹம் பிறக்கமாட்டாது,12. பாகவத பரிக்ரஹம் பிறந்தாலொழிய பகவத்பரிக்ரஹம் பிறக்கமாட்டாது, 13. பகவத்பரிக்ரஹம்

பிறந்தாலொழிய அநந்ய ப்ரயோஜநனாகமாட்டான்,

14.அநந்ய ப்ரயோஜநனாகாதே அநந்யார்ஹ சேஷபூதனாகான்

  1. அநந்யார்ஹசேஷபூத னாகாதே

அநந்யசரணனாகமாட்டான், 16. அநந்ய சரணனாகாதே

அதிகாரிபுருஷனாகமாட்டான். 17. அதிகாரிபுருஷனாவானுக்கே திருமந்த்ரார்த்தம்கைகூடும், 18. இப்படி பதினெட்டுதரம்

எழுந்தருளின எம்பெருமானாருக்கு பதினெட்டு ரஹஸ்யங்கள்

நம்பியருளிச்செய்த க்ரமம்.

நம்பி திருவடிகளே சரணம்

 

திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்த

ஆறு வார்த்தை

முமுக்ஷவாய் ப்ரபந்நனாயிருக்குமவனுக்குஅஞ்சுகுடி த்யாஜ்யமும் மூன்றுகுடி உபாதேயமுமாயிருக்கும். அதென்போலவென்னில்; பதிவ்ரதையாயிருப்பாளொரு ஸ்த்ரீக்கு அஞ்சுகுடி த்யாஜ்யமும்

மூன்றுகுடி உபாதேயமுமானாப்போலே. அவளுக்கு

த்யாஜ்பர் – கன்னிகைகள், வேச்யைகள், வேச்யாபதிகள்,

ஒருவனுக்குக் கைகொடுத்து வைத்ழந்து போனவள்,

உள்ளேயிருந்துமசக்குகிறவள் :

இனி உபாதேயராவார் – மாதாபிதாக்கள், தன் பர்த்தாவுக்கு

அவர்ஜநீயரான பந்துக்கள், தன்னோடொத்த

பதிவ்ரதைகள். இவனுக்கு த்யாஜ்யர் – ஸம்ஸாரிகள்,

தேவதாந்தரங்கள், தேவதாந்தர பரதந்த்ரர்கள்,

தர்சநத்திலே புகுந்து நின்று தர்சந பராங்முகராய்ப்

போருமவர்கள், ரூபநாமங்களையுடையராயுள்ளே

புகுந்து அநந்யப்யோஜநரோடேமாக்குப் பாராட்டித்

திரிகிறவர்கள்; இனி உபாதேயர், ஆசார்யர்கள், ஸ்ரீ

வைஷ்ணவர்கள், அநந்ய ப்ரஹ்மசாரிகள்.

அம்மங்கி அஞ்சுவார்த்தை

அம்மங்கியம்மாள் உடையவருக்குத் தீர்க்கப்ரணாமமாக

தண்டம் ஸமர்ப்பித்து, “அடியேன் திருக்கண்ணபுரம் ஸேவித்து விடைகொள்ளுகிறே”னென்று விண்ணப்பஞ் செய்ய,

உடையவரும் அஞ்சுவார்த்தை யருளிச்செய்தார்.

அதென்னென்னில்,அக்நிஜ்வாலையையணுகாதே

அசுசியைமிதியாதே – அறநஞ்சு தின்னாதே – அபலர்களைக்கூடாதே

-ஆர்த்தரோடிகூடி அணுகி வர்த்தித்து வாரு”

மென்று அருளிச் செய்தார். அக் நிஜ்வாலையாவது –

சைவமாயாவாதிகள். அவர்களைக் கண்டால் அக்நியையும் ஸர்ப்பத்தையுங்கண்டாற்போலே கண்டு

விலகி வாருமென்றருளிச் செய்தார். அசுசியாவது-

சரீரதத்பரரான ஸம்ஸாரிகள். அவர்களைக் கண்டால்

காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டாற் போலே கண்டு

விலகி வாருமென்றருளிச்செய்தார். அறநஞ்சாவது-

ரூபநாமங்களையுடையராய், அந்யோந்ய பரராய்,

ப்ரயோஜநாந்தரபராய் மயக்கப்பட்டவர்கள், அவர்களைக்

கண்டால் கர்ப்பூரத்தையும், எலுமிச்சம்பழத்

தையுங்கண்டாற்போலே கண்டு விலகிவாருமென்றருளிச்

செய்தார். அபலர்களாவது – அருளிச்செயலில்

வாஸனைபண்ணி ஸ்வரூபசிக்ஷையில்லாதவர்கள்.

அவர்களைக் கண்டால் காமரஸமறியாத கன்னிகைகளைக்

கண்டாற்போலேகண்டு நிவர்த்தித்து வாருமென்றருளிச்செய்தார்

. ஆர்த்தராகிறார். பூர்ணாதிகாரிகள், அவர்களைக் கண்டால் தென்றல் நிலாவைக்கண்டாற்போலேயும், சந்தந குஸும தாம்பூலாதிகளைக்

கண்டாற்போலேயும் பசியன் சோற்றைக் கண்டாற்போலேயுங்கண்டு, சேர்ந்து அணுகி வர்த்தித்துவாருமென்றருளிச் செய்தார்.

எம்பார் பட்டருக்கு அருளிச்செய்த

 

பத்துவார்த்தை

  1. ஸ்ரீவைஷ்ணவன் சரீராவஸானத்திலே எம்பெருமான்

             திருவடிகளிலே சேரலாம் என்றிருக்கை.

  1. அப்போதும் அவனாலே பெறவேணுமென்றிருக்கை.
  2. தேவதாந்தர பஜனை பண்ணாதொழிகை.
  3. தேவதாந்தர பஜனம் பண்ணுவாரோட்டைச் சேர்த்தி

வருந்தியுந்தவிருகை 5. ஆழ்வார்களுகந்தருளின

திவ்ய தேசங்களிலேப்ரவணனாய் வர்த்திக்கை.

  1. அநுகூல ஸங்கல்பனாயிருக்கை. 7. பகவத்

பாகவதாசார்யாபசாரங்களை வருந்தியுந் தவிருகை.

  1. ஆழ்வார்களருளிச்செயலில் அர்த்தாநுபவம் பண்ணுகை,
  2. ஆழ்வார்களீரச்சொல்லிலே நெஞ்சு நிற்கும்

ஸாதுக்களோடே ஸஹவாஸம் பண்ணுகை. 10. ஆசார்ய

கைங்கர்யம் பண்ணுகை. பண்ணாநாள்

இழவுபட்டிருக்கையும் பண்ணும் நாளுகந்திருக்கையும்.

எம்பார் திருவடிகளே சரணம்

முதலியாண்டான் பத்துவார்த்தை

  1. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருக்குமிருப்பு – பிராட்டி ராவணபவநத்திலிருந்து காட்டியருளினார். எங்ஙனேயென்னில்,

பிராட்டி இளையபெருமாள் விஷயமாகப்பேசின வார்த்தையாலே பெருமாளைப் பிரிந்து போனாற்போலே, இந்தச் சேதனனுக்குத்

ததீயவிஷயத்தில் பண்ணுமபசாரம் ஈச்வரன்

திருவடிகளில் நினைவைலபியாமற் பண்ணும்,

  1. பிராட்டிக்கு அசோகவனம்போலே, இவனுக்கு

ப்ரக்ருதி ஸம்பந்தமான தேஹம். 3. பிராட்டிக்குக்

கந்த மூல பலங்கள் ஸமர்ப்பிக்கிற ராக்ஷஸ ஸ்த்ரீகளுடைய ஸஹவாஸம்போலே, இவனுக்குப் புத்ரமித்ராதி ஸஹவாஸம். 4. பிராட்டிக்கு மாரீச தர்சனம்போலே, இவனுக்கு விஷயப்ராவண்யம்,

  1. பிராட்டி திருவடியைக் கண்டதைப் போலே, இவனுக்கு

ஸ்ரீராமாயண பாரத பாகவத புராணரத்னாதிகளையும்,

ஆழ்வாராசார்யர்களுடைய திவ்யப்ரபந்த ரஹஸ்யங்களையுங்கேட்கை.

  1. பிராட்டிக்கு ஸ்ரீமுத்ரை கொடுத்து வரவு சொன்னாற்போலே,

இவனுக்கு ஆசார்யனருளிச்செய்த குருபரம்பரை.

  1. பிராட்டி திருவடிக்கு சிரோரத்நங்கொடுத்தாற்

போலே, இவனுக்கு ஆசார்யன் சொன்ன திருமந்த்ரம்.

  1. பிராட்டிக்கு ஸ்ரீவிபீஷணாழ்வானுடைய திருமகளார்

பேச்சுத்துணையானாற்போலே, இவனுக்கு

பாகவத ஸஹவாஸமும் அவர்கள் திவ்ய ஸூக்தியும்

10 பிராட்டிக்கு விரோதிகளான ராவண கும்பகர்ணாதிகளை

ஸம்ஹரித்து, பெருமாள் பிராட்டியாரைக்

கூட்டிக்கொண்டு திருவயோத்திக்கெழுந்தருளினாற்

போலே. இவனுக்கு விரோதியான தேவதாந்தர

மந்த்ராந்தரங்களையும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும்

ஸம்ஹரித்து, உடையவன் இச்சேதனனை திருத்திப்

பணிகொண்டு, ததநந்தரம் நித்யஸுரிகளோடே ஒரு

கோவையாகத் தன்னை நித்யாநுபவம்பண்ணிவைப்பான்.

முதலியாண்டான் திருவடிகளே சரணம்.

சின்னியம்மாள் ரஹஸ்யம்

 

சேற்றுத் தாமரைக் கயத்திலே ஜீயர் நீராடாநிற்க,

சின்னியம்மாள் வந்து தண்டம் ஸமர்ப்பிக்க

பெண்ணே! உங்கள் தேசமேது? நித்யவாஸமேது?

நாடேதென்ன – திருவழுதிவளநாடென்ன;

ஊரேதென்ன – திருக்குருகூரென்ன;

வீடேதென்ன – அச்சுதகுலமென்ன;

வேதமேதென்ன – த்ராவிட வேதமென்ன;

கோத்ரமேதென்ன – பராங்குசகோத்ரமென்ன;

ஸூத்ரமேதென்ன – ராமாநுஜ ஸூத்ரமென்ன :

காரிகையேதென்ன – பரகால காரிகையென்ன;

குடியேதென்ன – அஞ்சுகுடியென்ன;

பந்துக்களாரென்ன – ஆத்மபந்துக்களென்ன;

உறவரென்ன – ஒட்டவுணர்ந்தவரென்ன; உற்றாராரென்ன

உற்றதுமுன்னடியாரென்ன; தகப்பனாராரென்ன –

தைவநாயகனென்ன; தாயாராரென்ன-ஸ்ரீ வரமங்கையென்ன;

புக்கிடமெவ்விடமென்ன – வானமாமலையென்ன;

பர்த்தாவாரென்ன – வரமங்கைமாமுனிவனென்ன;

மாமனாராரென்ன- காந்தோபயந்தாவென்ன;

உத்யோகமேதென்ன பாகவத கைங்கர்யமென்ன;

       அத்தால் ப்ரயோஜனமேதென்ன – அதுவே

ப்ரயோஜநமென்ன;    அதிகாரமேதென்ன – ஸர்வாதிகாரமென்ன;

நிஷ்டையேதென்ன – பஞ்சமோபாய நிஷ்டையென்ன : அபிமானமேதென்ன – பாகவதாபிமானமென்ன; ப்ரார்த்தனையேதென்ன – கைங்கர்ய ப்ரார்த்தனையென்றாள். அந்த அம்மையாருடைய வத்யவஸாயத்துக்கு, வானமாமலை ஜீயர் திருவுள்ளமுகந்துபரமபதம் ப்ரஸாதித் தருளினார்.

வானமாமலைஜீயர் திருவடிகளே சரணம்.

 

ரஹஸ்யத்ரய தீபிகை

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துஸ்ச

ப்ரத்யகாத்மந: – ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ்ததா

ப்ராப்திவிரோதிச – வதந்தி ஸகலாவேதாஸ்

ஸேதிஹாஸ புராணகா: – முநயஸ்ச மஹாத்மாநோ

வேத வேதாந்த வேதிந:” என்கிறபடியே ஸகல வேதாந்த

ப்ரதிபாத்யமான அர்த்த பஞ்சகத்தைத்

திருமந்திரத்தில் விவரிக்கிறபடியெங்ஙனேயென்னில்-

ப்ரணவத்தில் அர்த்தபஞ்சகத்தை விவரிக்கிறபடி

எங்ஙனேயென்னில் – மகாரத்தாலே ஸ்வஸ்வரூபஞ்

சொல்லிற்று அகாரத்தாலே பரஸ்வரூபஞ் சொல்லிற்று.

உகாரத்தாலே விரோத்யுபாயங்களைச் சொல்லிற்று.

அகாரத்தில் சதுர்த்தியாலே புருஷார்த்த

ஸ்வரூபஞ்சொல்லிற்று.

அகாரத்தில் அர்த்த பஞ்சகத்தை விவரிக்கிறபடி

யெங்ஙனேயென்னில் – அகாரத்தால் பரஸ்வரூபமும்,

அதில் சதுர்த்தியாலே ஸ்வஸ்வரூப புருஷார்த்த

ஸ்வரூபங்களையும், அதில் ‘அவ-ரக்ஷணே’ என்கிற

 தாதுவினாலே விரோத்யுபாயங்களையுஞ் சொல்லிற்று.

ப்ரணவத்தில் லுப்தசதுர்த்தியாலே சேஷத்வத்தைச்

சொல்லி, அகாரத்தாலே சேஷத்வ ப்ரதிஸம்பந்தியைச்

சொல்லி, மகாரத்தாலே சேஷத்வாச்ரயஞ்சொல்லி,

அவதாரணத்தாலே சேஷத்வத்தினுடைய

வநந்யார்ஹதையைச் சொல்லி, ஸ்வஸ்வரூபஞ்

சொல்லிற்று. அகாரத்தாலே ரக்ஷகனைச் சொல்லி மகாரத்

தாலே ரஷ்ய வஸ்துவைச்சொல்லி, சதுர்த்தியாலே

ரஷ்ய ரக்ஷகபாவத்துக்கு வேண்டுமுறவு சொல்லி,

அவதாரணத்தாலே ரஷ்ய ரக்ஷகங்களினுடைய

லக்ஷ்யலக்ஷணஞ் சொல்லுகையாலே உபாயஞ் சொல்

லிற்று. ப்ரணவத்தாலே ஆத்மஸ்வரூபஞ் சொல்லிற்று.

“நாராயண” பதத்தாலே ஸ்வரூபஞ் சொல்லிற்று.

சதுர்த்தியாலே புருஷார்த்த ஸ்வரூபஞ் சொல்லிற்று.

நமஸ்ஸில் – (ம:) என்கிற வித்தாலே விரோதிஸ்வரூபஞ்

சொல்லிற்று. (நம:) என்கிற வித்தாலே உபாய ஸ்வரூபஞ்

சொல்லிற்று. ஆகையாலே, ஸகலவேதார்த்த

ப்ரதிபாத்யமான அர்த்தபஞ்சகஞ்சொல்லிற்ருயிற்று.

இவ்வாத்மாவுக்கு எம்பெருமான் கட்டின ஸூத்ரம் திருமந்த்ரமென்று

பிள்ளை திருநறையூரரையர்அருளிச்செய்வர். ஸம்ஸாரவர்த்தகமான தாலிக்கயிறு பதினாறிழையாய், இரண்டு சரடாயிருக்கும்.

கைங்கர்ய வாத்தகமான. மங்களஸூத்ரம் எட்டிழையாய்

மூன்று சரடாயிருக்கும். ஸ்வரூபத்தினுணர்ச்சியைப்

பற்றியிருப்பதொரு சரடும், ஸ்வரக்ஷணத்திலசக்தியைப்

பற்றியிருப்பதொரு சரடும், ஸ்வரூபத்தினுணர்த்தியாலும்,

ஸ்வரக்ஷணத்தி லசக்தியாலும்,

பலித்தவர்த்தம் ஈச்வரனைப் பேணுகை : இதை

வெளியிட்டிருப்பதொரு சரடுமாயிருக்கும். சேஷத்வ

ஜ்ஞாநமில்லாதார்க்கு ப்ரணவத்திலந்வயமில்லை.

தேஹாத்மாபிமானிகளுக்கு நமஸ்ஸிலந்வயமில்லை.

கைங்கர்ய ருசியில்லாதார்க்கு நாராயண பதத்திலந்வயமில்லை. சேஷத்வஜ்ஞானமிருக்கும் படியை

இளையபெருமாள் ஆசரித்துக் காட்டினார். ஈச்வர

சேஷபூதன் அந்ய சேஷத்வ நிவர்த்தகனென்றும்,

விலக்ஷண நிரூபகனென்றும், அஹங்கார

நிவர்த்தகனென்றும், ததீயபரதந்த்ரனென்றும்,

தத்ஸம்பந்தயுக்தனென்றும், கிங்கரஸ்வபாவனென்றும்

தன்னையநுஸந்திப்பான் ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களைச்

சேரவநுஸந்திக்கும்படி, ஆத்மாவுக்கு ஸ்வரூபம்

அநந்யார்ஹ சேஷத்வம் –  ஏதத்ப்ரகாசகம் ப்ரணவம்.

அநந்யார்ஹ சேஷத்வ ப்ரதிஸம்பந்தி – பெருமாள்

பொருந்தவிட்ட திருவடிகள். ஆத்மாவுக்கு ஸ்வருபம்

அநந்யசரணத்வம். ஏதத்ப்ரகாசகம் நமஸ்ஸு. அநந்யசரணத்வ ப்ரதிஸம்பந்தி – பெருமாளமைத்த திருக்கை.

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் – அநந்யபோக்யத்வம்.

ஏதத்ப்ரகாசகம் நாராயண பதம். அநந்ய

போக்யத்வப்ரதிஸம்பந்தி பெருமாள் திருமுறுவல்,

இதுக்குக் கருத்துத்தானறிகை – சேதநமறிகை – ஸாராந்

தரமறிகை. அதாவது – பேறறிகை – வ்யாபாரமறிகை

விஷயாந்தரமறிகை. ஸ்வாதந்த்ர்யம் மேலிட்டால்

ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தின்

அர்த்தத்தையநுஸந்திப்பான். இதரர் பக்கல் சேஷத்வ ப்ரதிபத்தி

நடையாடிற்றாகில், உகாரார்த்தத்தையநுஸந்திப்பான்.

தேஹோஹமென்றிருந்தானாகில், மகாரார்த்தத்தையநுஸந்திப்பான். ஸ்வரக்ஷண விஷயத்தில் கரைந்தானாகில் நமஸ்சப்தார்த்தத்தை யநுஸந்திப்பான் ஈச்வரவிபூதிகளோடே கலங்கா நின்றானாகில் நாரசப்

தார்த்தத்தை யநுஸந்திப்பான். ஆபாஸபந்துக்கள்

பக்கல் பந்துத்வம் நடையாடிற்றாகில், அயந சப்தார்த்

தத்தை யநுஸந்திப்பான். சப்தாதி விஷயங்களிலே

போக்யதா புத்தி நடையாடிற்றாகில், ஆய

சப்தார்த்தத்தையநுஸந்திப்பான்.

ப்ரமாணம் பதத்ரயாத்மகமாயிருக்கும். ப்ரமேயம்

பர்வத்ரயாத்மகமாயிருக்கும். அதிகாரி

ஆகாரத்ரயாத்மகனாயிருக்கும். ப்ரமாணம்

பதத்ரயாத்மகமாகையாவது ; ப்ரதமபதம், மத்யமபதம்,

 த்ருதீயபதம். ப்ரமேயம் பர்வத்ரயாத்மகமாகையாவது

பொருந்தவிட்ட திருவடிகளும், அஞ்சேலென்ற

திருக்கையும், சிவந்த திருமுகமண்டலமும் அதிகாரி

ஆகாரத்ரயாத்மகனாகையாவது – அநந்யார்ஹ சேஷபூதனாய்,

அநந்யசரணனாய், அநந்ய போக்யனாயிருக்கை. ப்ரதமபதம்

அநந்யார்ஹப்ரகாசகம். பொருந்தவிட்ட திருவடிகள் அநந்யார்ஹ

சேஷத்வத்துக்கு ப்ரதிஸம்பந்தியாயிருக்கும். மத்யமபதம் அநந்யசரணத்வத்துக்கு ப்ரகாசகமாயிருக்கும்.

அஞ்சேலென்றதிருக்கை அநந்ய சரணத்வத்துக்கு

ப்ரதி ஸம்பந்தியாயிருக்கும். த்ரூதீயபதம் அநந்யபோக்யத்வ ப்ரகாசகமாயிருக்கும்.சிவந்த திருமுகமண்டலம்

அநந்யபோக்யத்வ ப்ரதிஸம்பந்தியாயிருக்குமென்று ஆச்சான்பிள்ளையருளிச்செய்வர். திருமந்த்ரத்தாலே

திருவபிஷேகத்தையநுஸந்திப்பான். சரமச்லோகத்தாலே

திருமார்பில்நாச்சியாரோட்டைச் சேர்த்தியையநுஸந்திப்பான்.

த்வயத்தாலே திருவடிகளையநுஸந்திப்பான்.

அர்த்த பஞ்சகத்தையும் ரஹஸ்யத்ரயத்திலே

சொல்லுகிறபடி யெங்ஙனேயென்னில்-திருமந்த்ரத்தில்

நாராயண பதத்தாலே பரமாத்மஸ்வரூபஞ்சொல்லிற்று

ப்ரணவத்தாலே ஆத்மஸ்வரூபஞ் சொல்லிற்று. சதுர்த்

தியாலே புருஷார்த்த ஸ்வரூபஞ்சொல்லிற்று. நம :

என்று உபாயஸ்வரூபஞ்சொல்லிற்று. நமஸ்சப்தத்திலே

ஷஷ்ட்யந்தமான மகாரத்தாலே விரோதி ஸ்வரூபஞ்

சொல்லிற்று. சரமச்லோகத்தில் மாம் – அஹமென்கிற

பதங்களாலே பரமாத்ம ஸ்வரூபஞ் சொல்லிற்று. வ்ரஜ

என்கிற மத்யமனாலும், த்வா – மாசுச:

என்கிற பதங்களாலும் ஸ்வஸ்வரூபஞ் சொல்லிற்று. ஸர்வ

பாப்பேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கையாலே

அநிஷ்டநிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த

ஸ்வரூபஞ் சொல்லிற்று. ஸர்வபாபேப்ய: என்று

விரோதி ஸ்வருபஞ் சொல்லிற்று. ஏகபதத்தாலே

ஸ்வரூபஞ் சொல்லிற்று. த்வயத்தில்

 ஸவிசேணமான நாராயண பதத்தாலே பரமாத்ம

ஸ்வருபஞ் சொல்லிற்று. ப்ரபத்யே என்கிற

உத்தமனாலே ஆத்ம ஸ்வரூபஞ் சொல்லிற்று

சதுர்த்தி – நமஸ்ஸுக்களாலே புருஷார்த்த ஸ்வரூபஞ்

சொல்லிற்று. நமஸ்சப்தத்தில் – மகாரத்தாலே விரோதி

ஸ்வரூபஞ் சொல்லிற்று. சரணௌ – சரண பதங்

களாலே உபாய ஸ்வரூபஞ் சொல்லிற்று. ஸ்வரூபஞ்

சொல்லுகிறது திருமந்த்ரம். ஸ்வரூபாநு ரூபமான உபாயத்தை விவரிக்கிறது சரம ச்லோகம். இவ்விரண்டர்த்தத்திலும் ருசியுடையாருடைய அநுஸந்தான

ப்ரகாரம் தவ்யம். சாஸ்த்ரருசி பரிக்ருஹீதம் திருமந்த்ரம்.

சரண்யருசி பரிக்ருஹீதம் சரமச்லோகம்.

ஆசார்யருசி பரிக்ருஹீதம் த்வயம்.

ப்ராப்ய ப்ரதாநம் திருமந்த்ரம். ப்ராபக ப்ரதாநம்

சரமச்லோகம். புருஷகார ப்ரதாநம் த்வயம்.

ஆசார்யாங்கீகார முடையவனுக்கு ஆசார்யனிரங்கி

திருமந்த்ரத்திலுபதேசித்த வர்த்தத்தை க்ரமச:அநுஸந்திக்கும்படி சொல்லுகிறது. ஈச்வர சேஷபூதன், அந்ய சேஷத்வ நிவர்த்தகன்,

விலஷணநிரூபகன், ததீயபரதந்த்ரன், தத்ஸம்பந்த யுக்தன்,

கிங்கரஸ்வபாவனென்று தன்னையநுஸந்திப்பது,

ஸவிபக்திகமான அகாரத்தை அநந்தராக்ஷரத்வயமும்

விவரிக்கிறது. அவ்வக்ஷர த்வயத்தையும் மந்த்ர

சேஷபத த்வயமும் விவரிக்கிறது. அப்பதத்வயத்தையும்

த்வயத்தில் வாக்யத்வயமும் விவரிக்கிறது. அவ்

வாக்யத்வயத்தையும் சரமச்லோகத்தில்

அர்த்தத்வயம் விவரிக்கிறது. அதில் அகாரத்தை

அக்ஷரத்வயத்தில் ப்ரதமாக்ஷரம் விவரிக்கிறது. விபக்தியை

அநந்தராக்ஷரம் வரிக்கிறது. ப்ரதமாக்ஷரத்தை ப்ரதமபதம்

விவரிக்கிறது.அநந்தராக்ஷரத்தை அநந்தரபதம் விவரிக்கிறது.

 அதில் ப்ரதமபதத்தை ப்ரதம வாக்யம்

அநந்தரப்பதத்தை அநந்தர வாக்யம் விவரிக்கிறது.

இதில் பூர்வவாக்யத்தைப் பூர்வார்த்தம் விவரிக்கிறது.

உத்தர வாக்யத்தை உத்தரார்த்தம் விவரிக்கிறது.

அதில் சேஷத்வ ப்ரதிஸம்பந்தியைச் சொல்லுகிற

அகாரத்துக்கு அநந்யார்ஹ சேஷத்வ வாசகமான

உகாரம் விவரணமாகிறபடியெங்ஙனேயென்னில்,

அகாரவாச்யனுடைய சேஷித்வம் ஆச்ரயாந்தரங்களிலும்

கிடக்குமோ அநந்ய ஸாதாரணமாயிருக்குமோவென்று

ஸந்திக்தமானால், அதனுடைய

அநந்ய ஸாதாரணத்வ ப்ரகாசகமாகையாலே, உகாரம்

அகார விவரணமாகிறது. எங்ஙனேயென்னில்,

உகாரத்தில் சொல்லுகிற சேதனனுடைய அநந்யார்ஹ

சேஷத்வம் ஸித்திப்பது அதற்கு ப்ரதிஸம்பந்தியான

சேஷித்வம் ஓரிடத்திலிளைப்பாறில் ; அங்ஙனன்றியிலே

அநேக சேஷிகளாகில், அநந்யார்ஹ

சேஷத்வம் ஸித்தியாது. ஆகையாலே அகாரவாச்யனுடைய

ஸமாப்யதிக தாரித்ர்யத்தைச் சொல்லிற்றாயிற்று. சதுர்த்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்குஆச்ரயவிஷய ப்ரகாசகமாய்க்கொண்டு விவரணமாகிறது மகாரம். நிராச்ரபமாக தர்மத்துக்கு

ஸ்திதியில்லையே. பகவத் வ்யதிரிக்தரைத் தன்னோடு பிறரோடு

வாசியற அந்யராகச் சொல்லி, அவர்களுக்கு

                     அநர்ஹன் இச்சேதனனென்கிறது உகாரம். இதில்

கழிகிற தேவதாந்தராதி மாத்ரத்தாலே அந்ய சப்தத்துக்குப் பூர்த்தியில்லாமையாலே அவ்வந்ய சப்தத்தில் அந்விதனான

தன்னையுங்கழித்து, அநந்யார்ஹத்வத்தைப் பூரிக்கிற

முகத்தாலே உகாரவிவரணமாகிறது நமஸ்சப்தம்.“ அஹமபி ந மம ‘ என்கிறபடியே ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத அத்யந்த

பாரதந்தர்யத்தைச் சொல்லுகிறது நமஸ்சப்தத்திலேயிறே ;

ஆகையாலே உகார விவரணமாகிறது.

நமஸ்சப்தம். சேஷத்துவத்துக்காச்ரய விசேஷ

ப்ரகாசகமான மகாரவாச்யனுடையசேஷத்வபூர்த்தி ப்ரகாசிப்பது ‘ அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வாநுபபத்தி :” என்கிறபடியே

கிஞ்சித்காரத்தாலேயாகையாலே, கிஞ்சித்கார ப்ரகாசகமாய்க்கொண்டு

மகார விவரணமாகிறது நாராயணபதம். அத்யந்த

பாரதந்த்ர்ய ப்ரயுக்தமாய் வருகிற உபாய வேஷத்தினுடைய ஸ்வரூபமென்ன, இதிலிழிகைக்கேகாந்தமான துறையென்ன,

அவ்வுபாயமாகச் செய்ய வேண்டுமம்சமென்ன,

இவற்றை ப்ரகாசிப்பிக்கையாலே நமஸ்சப்த

விவரணமாகிறது த்வயத்தில் பூர்வவாக்யம். கைங்கர்ய

ப்ரதிஸம்பந்தியொருமிதுநமென்னுமிடத்தையும்,

அதற்குக்களையான அம்சத்தையுமொழித்துத் தருகையாலே

நாராயண சப்தத்துக்கு விவரணமாகிறது

 த்வயத்திலுத்தரவாக்யம்.அவ்வுபாயஸ்வீகாரம்

ஸாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகையாலே, தத்ப்ரகாசகமாய்க்கொண்டு பூர்வவாக்யகத்துக்குவிவரணமாகிறது பூர்வார்த்தம்.

உத்தர வாக்யத்தில் சொன்ன ப்ராப்யஸித்தி விரோதி

நிவ்ருத்தி பூர்வகமாகக் கடவதென்று விவரிக்கிறது

உத்தரார்த்தம்.

ஸர்வாதிகாரமாயும், அதிக்ருதாதிகாரமாயும்,

ஆசார்ய ருசிபரிக்ருஹீதமாயுமிருந்துள்ள வாக்ய்த்வயத்தில்

பூர்வவாக்யம் ப்ராபகமாயிருந்ததேயாகிலும்,

பதத்ரயாத்மகமாயும் அர்த்தத்ரயாத்மகமாயுமிருக்கும்.

இதில் ஸ்ரீமந் என்கிற பதம் புருஷகாரம்.

சரணம்ப்ரபத்யே என்கிற பதம் அதிகாரி க்ருத்யம்.

நடுவே நாராயண சரணௌ என்கிறபதம் உபாயம்.

உபாயம் புருஷகார ஸாபேக்ஷமாயும் அதிகாரி

ஸாபேக்ஷமாயுமிருக்கும். பலத்தில் வந்தால் அந்ய

நிரபேக்ஷமாயுமிருக்கும். உத்தர வாக்யமும்

பதத்ரயாத்மகமாயிருக்கும். அதில் ஆயவென்கிறவிடம்

கைங்கர்யத்தைச் சொல்லுகிறது. இதுக்குக்கீழ் கைங்கர்ய

ப்ரதிஸம்பந்தியைச் சொல்லுகிறது. மேலில் பதம்

கைங்கர்யத்தில் களையறுக்கையைச் சொல்லுகிறது.

நம்மாசார்யர்கள் திருமந்த்ரத்தையும்,

சரமச்லோகத்தையும் த்வயத்தில் அனுஸந்திக்கும்படி.

தான் உபாயோபேய மிரண்டையுஞ்சொல்லுகையாலே

த்வயமென்கிறது. திருமந்திரத்தில் உபேய

ப்ராதாந்யேந சொல்லுகிறவர்த்தத்தையும்,

சரமச்லோகத்தில் உபாயப்ராதாந்யேந சொல்லுகிறவர்த்தத்தையும்,

இதில் பூர்வ வாக்யத்தாலும் உத்தர

வாக்யத்தாலும் சொல்லுகிறது. எங்ஙனேயென்னில்

அகாரத்தில் ஸ்வரூபாநுபந்தித்வத்தால் சொல்லுகிற

லஷ்மீஸம்பந்தத்தையும், நாராயண பதத்திலே

பிராட்டிக்கும் அந்தர்ப்பாவமுண்டாகையாலேவருகிற

லக்ஷ்மீ ஸம்பந்தத்தையும், த்வயத்தில் உத்தர வாக்யத்தில்

 ஸ்ரீமதே என்கிற பதத்தாலே சொல்லுகிறது.

அகாரத்திலே சொல்லுகிற ஸர்வரக்ஷகத்வத்தையும்

அதில் விவரணமான நமஸ்ஸில் சொல்லுகிற அத்யந்த

பாரதந்த்ர்யத்தையும்,தத்ப்ரவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற சதுர்த்யர்த்தத்தையும் உத்தர வாக்யத்தில்

சதுர்த்தியாலே சொல்லுகிறது. திருமந்த்ரத்தில்

நமஸ்சப்தார்த்தமான அஹங்கார மமகார நிவ்ருத்தியைப்

பூர்வ வாக்யத்தில் நமஸ்ஸிலே சொல்லுகிறது.

ஆக – திருமந்த்ரம் த்வயத்தில் உத்தரவாக்யத்திலே அந்வயித்தது.

இனி சரமச்லோகம் பூர்வவாக்யத்திலே அந்வயிக்கும்படி

சொல்லுகிறது. மாம் என்கிற பதத்தில் ஸ்வரூபாநுபந்தித்வத்தால்

சொல்லுகிற லக்ஷ்மீ ஸம்பந்தத்தையும், த்வயத்தில்

பூர்வ வாக்யத்தில் ஸ்ரீமத் பதத்தாலே சொல்லுகிறது.

மாம் என்கிற பதத்தில் சொல்லுகிற ஸௌலப்யத்தையும்,

அஹம் என்கிற பதத்தில் சொல்லுகிற

ஸ்வாமித்வத்தையும், இதில் நாராயண பதத்தாலே

சொல்லுகிறது. மாம் என்கிற பதத்தில் சொல்லுகிற

ஸேநாதூளியும், சிறுச்சதங்கையும், தாங்கின

வுழவுகோலும், பிடித்த சிறுவாய்க்கயிறும், நாட்டின

திருவடிகளுமாய் நிற்கிற விக்ரஹத்தை த்வயத்தில்

சரணௌ என்கிற பதத்தாலே சொல்லுகிறது. ஏக

சப்தத்தால் சொல்லுகிற அவதாரணார்த்தத்தையும்,

சரண சப்தார்த்தத்தையும்,‘ஸர்வ பாபேப்யோ

மோக்ஷயிஷ்யாமிமாசுச:’ என்கிற விரோதி

நிவ்ருத்தியையும், த்வயத்தில் சரணசப்தத்தாலே

சொல்லுகிறது. வ்ரஜ என்கிற விடத்தினர்த்தத்தையும்,

ஸர்வதர்மான்பரித்யஜ்ய’ த்வா என்கிற விடத்தில்

சொல்லுகிறவதிகாரியையும், ப்ரபத்யே என்கிற

க்ரியா பதத்தாலே சொல்லுகிறது . தர்ம

த்யாகமங்கேயுண்டோவென்னில் உபாயஸ்வீகாரம்

உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக வல்லது

நில்லாமையாலே, ஸ்வீகாரம் சொன்னவிடத்திலே

த்யாகஞ்சொல்லுகிறது. ஆக – சரமச்லோகம் த்வயத்தில்

பூர்வ வாக்யத்திலே அந்வயித்தது. திருமந்த்ரத்திலும்,

சரம ச்லோகத்திலும் சொல்லுகிறவர்த்தம்

த்வயத்திலே சேரவநுஸந்திக்கும்படி சொல்லிற்றாயிற்று.

சரம ச்லோகத்தாலே பூர்வகண்டத்தை

விசதீகரிக்கிறது. திருமந்த்ரத்தாலே உத்தரகண்டத்தை

விசதீகரிக்கிறது. மாம், அஹம் என்கிற

பதங்களில் லக்ஷ்மீ ஸம்பந்தத்தை பூர்வகண்டத்தில்

ஸ்ரீமத் பதத்தாலே சொல்லுகிறது. மாம் – அஹம்

என்கிற பதங்களில் ஸௌசீல்ய, ஸர்வஜ்ஞத்வாதிகளை

த்வயத்தில் பூர்வகண்டத்தில் நாராயண பதத்தாலே

சொல்லுகிறது. மாம் என்கிற பதத்தில் விக்ரஹத்தையும்,

ஏகம் என்கிற பதத்தில் அர்த்தத:வந்த

அவதாரணார்த்தத்தையும், சரணௌ என்கிற பதத்தாலே

சொல்லுகிறது. சரமச்லோகத்தில் சரண

சப்தத்தின் அர்த்தத்தையும், இங்குற்ற சரண

சப்தத்தாலே சொல்லுகிறது. ஸர்வதர்மாந்

 பரித்யஜ்ய, வ்ரஜ, த்வா,ஸர்வபாபேப்யோ

மோக்ஷயிஷ்யாமி மாசுச: என்கிற பதங்களின் அர்த்தங்களை

ப்ரபத்யே என்கிற பதத்தாலே சொல்லுகிறது. அகாரத்தில் ஸ்வரூபாநுபந்தியான லக்ஷ்மீ ஸம்பந்தத்தையும், நாராயண

பதத்தில் நாரசப்தத்தினர்த்தத்தையும், இங்குற்ற நாராயண – லக்ஷ்மீ ஸம்பந்தத்தையும் உத்தர கண்டத்திலே ஸ்ரீமதே

என்கிற பதத்தில்சொல்லுகிறது. அகாரத்திலர்த்தத்தையும், லுப்த

சதுர்த்தியிலர்த்தத்தையும், உத்தர கண்டத்தில்

நாராயண பதத்தாலும், சதுர்த்தியாலும் சொல்லுகிறது.

ப்ரணவத்தில் மத்யமாக்ஷரத்தினர்த்தத்தையும்,

நமஸ்ஸினர்த்தத்தையும், உத்தர கண்டத்தில் நமஸ்ஸாலே

சொல்லுகிறது. மத்ஸ்யத்தினுடைய

ஆகாரமெல்லாம் ஜலமயமாயிருக்குமாப்போலே,

ஸ்ரீமானுடைய வடிவத்தனையும் ஸ்ரீமயமாயிருக்குமென்று

பெரியமுதலியார் அருளிச்செய்வர்.

ரஹஸ்யத்ரயதீபிகை முற்றிற்று.

திருக்குருகூர் ரத்னம்

 

திருநாமதாரி, மந்த்ரஸம்பந்தி முத்ராதாரி

என்கிறவன் ப்ரக்ருதி ருசியையொழிய ஸ்வரூப ருசியறியான் ; ஆகையாலே ரூபநாமங்களாகிறது

போராது. ஸச்சிஷ்யஸதாசார்ய ஸம்பந்தமும், ஜீவாத்ம

பரமாத்ம ஸம்பந்தமுஞ்சேர திருமந்த்ரத்திலே

தன்னையுள்ளபடியறியவேணும். சரமச்லோகத்தாலே

எம்பெருமானே உபாயமென்றுதெளியவேணும். த்வயத்தாலே உபாயோபேய நிஷ்டனாய் த்வயாநுஸந்தாநபரனாய்,

நிர்ப்பரனாய், நிர்விகாரனாய்,ஸ்ரீமந்நாராயணன்

திருவடிகளிலே பண்ணும் நித்யகைங்கர்யமறியவேணும். இப்படியன்றிக்கே அசித்தாலே பாவித்து

நானறிகிறேனென்கிறவனறியான்.

அவனுடைய ஸஹவாஸமும் அந்ய சேஷத்வ ஸமம்.

ஆகையாலே ஸ்வரூப நாசமாம். அங்ஙனன் றிக்கே

ஸ்வரூபவானாய், புருஷகார பூதனான ஆசார்யனறிவிக்க,

தத்வத்ரய சிக்ஷையுடையனாகில்

அவனோட்டை ஸஹவாஸமே ஸ்வரூபோஜ்ஜீவநமாம்.

இப்படியன்றிக்கே உபாயாந்தரபரனாகையாலேயிறே

கூழாளாகிறது. தானும் பிறரும் தஞ்சமன்றென்றிருக்கும்

அகிஞ்ச நனன்றோ ”நாடுநகரமும்நன்கறியநமோநாராயணாய” என்கிறபடியே “ அநந்தாவை’,வேதங்களுக்கு

அதிகாரியாய், தேஹமிட்ட வழக்கன்றிக்கே,

தேஹாநுபந்திகளான பதார்த்தங்களிட்ட வழக்கன்றிக்கே,

ஸ்வரூபமிட்ட வழக்கானபோதன்றோ அவன்

திருவுள்ளமறிந்த ஸ்ரீவைஷ்ணவனாவது?

பூர்வதசை பரித்யாஜ்யம் –  உத்தரதசைபரிக்ராஹ்யம்

என்கிறபடியே ஆத்ம ஸாக்ஷாத்கார

ஜ்ஞாநமுடையனாய், பாரதந்த்ர்ய ஸாக்ஷாத்காரஜ்ஞாந

முடையனாய், ஆசார்யாநுபவ ஸாக்ஷாத்கார

ஜ்ஞாநமுடையனாய் – இப்படி பிடித்தார் பிடித்தாரைப்

பற்றித் திருவடிகளிலே பண்ணும் அனவரத நித்ய

கல்யாணபோக ஸர்வரஸ ஸர்வகந்தனானவனை

”ஸதாபச்யந்தி” பண்ணுகையன்றோ ஸ்வரூபலாபம்?

இப்படி ஜ்ஞாநமும் விரக்தியும்

சாந்தியுமுடையனாயிருக்குமொரு ப்ரபன்னாபிமானத்திலேயொதுங்கி

வர்த்திக்கை. அப்போதன்றோதன் ஸ்வருபத்துக்கநுரூபமான

ப்ரீதியும், ஸ்வயம் ப்ரகாசமும்திருமண்ணும் ஸ்ரீ சூர்ணமும் தீர்த்த ப்ரஸாதமுடையனாய் வாழலாவது ? அப்போதன்றோ “ சரீர

“மர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்”

என்று ப்ரமாணம் சொல்லுகையையறிகை.

இத்தையறிகையன்றோ தன்னுஜ்ஜீவனமறிகை.

இது தர்சநார்த்தமுள்ளபடியறிகை, இது ஸ்வருப்

சோதனை, அதிகாரிக்கறியவேண்டுவது;

அவ்வதிகாரி தீர்த்த ப்ரஸாதமும் ஸ்வரூபோஜ்ஜீவனம்.

அவன் தீர்த்த ப்ரஸாத முடையவனாகையாலே,

வருகிற ஜ்ஞாநமெல்லாம் அடைவிலே வந்து

நிறைந்து, “ வைகுந்தமாநகர் மற்றது கையதுவே”

என்கிறவனன்றோ அதிகாரி? இப்படியன்றிக்கே

ஸகல வேதசாஸ்த்ரங்களாலும் ஸகல

ப்ரமாணங்களாலும், சொல்லுகிறதென்று

சப்தத்தாலேயறியவொண்ணாது. ஸதாசார்ய கடாக்ஷத்தாலே

அநுபவஸித்தி தன்னைக் கொடுத்து ரக்ஷித்தபோது

இவையித்தனையும் ப்ரமாணம். தர்சனவார்த்தை

சொன்னானென்றும், தர்சந ப்ரபாவங்கள் போமென்றும் ரூபா

நாமங்களைக் கொண்டு தன் ப்ரேமத்தாலே

செய்யுமாகில் அவன் தீர்த்த ப்ரஸாதம் ஆத்ம நாசனமாம்.

பெருக்காற்றிலேயிழிவானொருவன் துறையறியாதே

யிழிந்தானாகில் தன் கார்யம் முடியும்.

அதிகாரியோடேயிழியிலன்றோ அக்கரைபடலாவது?

அக்கரையாவது – விரஜைக்கக்கரை. அப்போதன்றோ

நித்யனாய், நித்யாநுபவம் பண்ணி, நித்யரோடேயொரு

கோவையாய்க் கலக்கலாவது? இது பெரிய பிராட்டியாருக்குப்

பெருமாளருளிச்செய்த தவயத்தினுடைய

அர்த்தாநுஸந்தாநம். ஆசார்ய பரம்பரா

ப்ராப்தமாக வந்ததென்று அஸ்மதாசார்யோக்தம். இது

“ ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம்.”

 

எம்பார் திருவடிகளே சரணம்.

 

திருக்குருகூர் ரத்னம் முற்றிற்று.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.