03 முமுக்ஷுப்படி சரமஶ்லோக ப்ரகரணம்

முமுக்ஷுப்படி

மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர்

வ்யா விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள்

சரமஶ்லோக ப்ரகரணம்

வ்யாக்யாந அவதாரிகை

மத்யம ரஹஸ்யமான த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்த அநந்தரம் அதில் பூர்வ வாக்யத்திற் சொல்லுகிற உபாயவரணம் ஸர்வேஶ்வரன் தானே விதிக்கையாலே ததபிமதமென்னுமத்தையும், வரணாங்கமான ஸாதநாந்தர பரித்யாகத்தையும், வரணத்தில் ஸாதநத்வ புத்திராஹித்யத்தையும் ஶாப்தமாகப் பூர்வார்த்தத்தாலே ப்ரதிபாதிக்கையாலும், உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்குப் பூர்வபாவியான ப்ராப்தி ப்ரதிபந்தக ஸகலபாப விமோசநத்தையும், உத்தரார்த்தத்தாலே ஶாப்தமாக ப்ரதிபாதிக்கையாலும், த்வயத்துக்கு விவரணமாய், பஞ்சம வேதஸாரபூத கீதோபநிஷத்  தாத்பர்யமாய், சரம ரஹஸ்யமாய் இருந்துள்ள சரம ஶ்லோகத்தினுடைய அர்த்தத்தை ஸம்ஶய விபர்யயமற அருளிச்செய்கிறார்.

இதில் அர்த்தங்  கேட்கைக்காகவிறே- எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் திருக்கோட்டியூர் நம்பி பக்கல் எழுந்தருளிற்று.

நம்பி தாமும் இதில் அர்த்தத்தினுடைய கௌரவத்தையும் இதுக்கு அதிகாரிகள் இல்லாமையும் பார்த்திறே – இவருடைய ஆஸ்திக்ய ஆதர  பரீக்ஷார்த்தமாகப் பலகால் நடந்து துவளப்பண்ணிச் சூளுரவு கொண்டு மாஸோபவாஸம்  கொண்டு அருமைப்படுத்தி அருளிச் செய்தருளிற்று.

நிஷ்க்ருஷ்ட ஸத்வ நிஷ்டனாய், பரமாத்ம நிரக்தனாய், அபரமாத்மநி வைராக்யமுடையனாய், ப்ரமாண பரதந்த்ரனாய், பகவத் வைபவம் ஶ்ருதமானால் அது உபபந்நமென்னும் படியான விஸ்ரம்ப பாஹுள்யமுடையனாய் ஆஸ்திக அக்ரேஸரனாயிருப்பான் ஒருவனுண்டாகில் அவன் இந்த ஶ்லோகார்த்த ஶ்ரவண அநுஷ்டாநத்துக்கு அதிகாரியாகையாலே, அதிகாரி துர்லபத்வத்தாலும் அர்த்த கெளரவத்தாலும் இத்தை வெளியிடாதே மறைத்துக்கொண்டு போந்தார்கள் எம்பெருமானாருக்கு முன்புள்ளார். ஸம்ஸாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி க்ருபை கரை புரண்டிருக்கையாலே, அர்த்தத்தின் சீர்மை பாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டருளினார் எம்பெருமானார்.

அப்படி உபதேஶித்து விடுகிற மாத்ரமுமின்றிக்கே, இவ்வர்த்தத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்க வேணுமென்னும் பரம க்ருபையாலேயிறே. இது தன்னைப் பலப்ரபந்தங்களிலும் ஸங்க்ரஹ விஸ்தர ரூபேண இவர் அருளிச் செய்தது. மற்றுள்ள ப்ரபந்தங்கள் எல்லாவற்றிலும் போலன்றிக்கே ஸ்த்ரீ பாலர்களுக்கும் அதிகரிக்கலாம்படி தெளிய அருளிச்செய்தது இப்ரபந்தத்திலேயிறே.

அவதாரிகை முற்றிற்று

அவ: இதில் ப்ரதமத்திலே இந்த ஶ்லோகார்த்தத்தினுடைய கெளரவத்தை எல்லாருடைய நெஞ்சிலும் படுத்துகைக்காக, இது தனக்குச் சரமஶ்லோகமென்று திருநாமமாகைக்கு ஹேதுவை அருளிச்செய்கிறார் –‘கீழே சில உபாயவிஶேஷங்களை’ என்று தொடங்கி.

மூ:185.கீழே சில உபாய விஶேஷங்களை உபதேஶிக்க, அவை துஶ்ஶகங்களென்றும், ஸ்வரூப விரோதிகளென்றும் நினைத்து ஶோகாவிஷ்டனான அர்ஜூநனைக் குறித்து அவனுடைய ஶோக நிவ்ருத்த்யர்த்தமாகஇனி இதுக்கு அவ்வருகில்லைஎன்னும்படியான சரமோபாயத்தை அருளிச்செய்கையாலே, சரமஶ்லோகமென்று இதுக்குப் பேராயிருக்கிறது.

வ்யா: அதாவது, இந்த ஶ்லோகத்துக்குக் கீழே அநேகாத்யாயங்களிலே கர்மஜ்ஞாநாதிகளான சில உபாய விஶேஷங்களை ஸ்வப்ராப்திலக்ஷண மோக்ஷ ஸாதநமாக விஸ்தரேண உபதேஶித்தருளக்கேட்டு, காயக்லேஶ ரூபமாகையாலும், இந்த்ரியஜயம் அரிதாகையாலும், ஸாவதாநமாகச் சிரகாலம் ஸாதிக்க வேண்டியிருக்கையாலும் அவை அநுஷ்டிக்க அஶக்யங்களென்றும், ஸ்வஶரீரத்வ கதநாதிகளாலே ப்ரதிபாதிக்கப்பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வயத்ந ரூபங்களான இவை விரோதிகளென்றும் புத்தி பண்ணி, ‘இவற்றாலே எம்பெருமானைப்பெறவேணும் என்பது ஒன்றில்லை; இனி இழந்தே போமித்தனையாகாதே’ என்கிற ஶோகத்தாலே ஆவிஷ்டனான அர்ஜுநனைக் குறித்து, அவனுடைய அந்த ஶோகம் போகைக்காக, ‘ஸூஶகத்வத்தாலும் ஸ்வரூபாநு ரூபதையாலும் இனி இதுக்கு மேலில்லை’என்னும்படியான சரமமான உபாயத்தை அருளிச்செய்கையாலே, சரமஶ்லோகமென்று இதுக்குத் திருநாமமாயிருக்கிறது- என்கை.

அவ: இனி இஶ்லோகத்துக்கு வாக்யார்த்தம் அருளிச்செய்கிறார் –‘இதில் பூர்வார்த்தத்தாலே’ என்று தொடங்கி.

மூ:186. இதில் பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச்செய்கிறான்; உத்தரார்த்தத்தாலே உபாயக்ருத்யத்தை அருளிச்செய்கிறான்.

வ்யா: அதாவது, அர்த்தத்வயாத்மகமான இந்த ஶ்லோகத்தில் பூர்வார்த்தத்தாலே இவ்வுபாயத்துக்கு அதிகாரியானவன் செய்யும் அம்ஶத்தை அருளிச்செய்கிறான்: உத்தரார்த்தத்தாலே உபாயபூதனான தான் இவனுக்குச் செய்யும் அம்ஶத்தை அருளிச் செய்கிறான்- என்கை.

அவ: ‘அதிகாரிக்ருத்யமாவது எது?’ என்ன அருளிச்செய்கிறார்- அதிகாரிக்கு க்ருத்யமாவது- உபாயபரிக்ரஹம்’- என்று.

மூ:187. அதிகாரிக்கு க்ருத்யமாவது – உபாய பரிக்ரஹம்.

வ்யா: அதாவது, அதிகாரியானவனுக்கு இங்குச் செய்யத்தக்கது இவ்வுபாயத்தை ஸ்வீகரிக்கை- என்கை.

அவ: ‘ஆனால், அவ்வளவை விதியாதே உபாயாந்தர பரித்யாகம் சொல்லுவானென்?’ என்ன, அருளிச்செய்கிறார் “அத்தை ஸாங்கமாக விதிக்கிறான்’ என்று.

மூ:188. அத்தை ஸாங்கமாக விதிக்கிறான்.

வ்யா: அதாவது, அந்த உபாய ஸ்வீகாரத்தை உபாயாந்தர பரித்யாகமாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான் என்கை.

प्रक्षाल्य पादावाचामेत् स्नात्वा विधिवदर्चयेत् |

स्थित्वार्घ्यं  भानवे दद्यात् ध्यात्वा देवं जपेन्मनुम् ||

(ப்ரக்ஷாள்ய பாதா3 வாசாமேத் ஸ்நாத்வா விதி4வத3ர்ச்சயேத்|

ஸ்தி2த்வார்க்4யம் பா4நவே த3த்3யாத் த்4யாத்வா தே3வம் ஜபேந்மநும்||)

என்று ஆசமநாதிகளுக்கு அங்கமாகச்சொன்ன பாத ப்ரக்ஷாளநாதிகளையொழிய அவை அநுஷ்டிக்கவொண்ணாதாற்போலே. இங்கும் ல்யபந்த பதத்தாலே அங்கமாகச் சொல்லுகிற உபாயந்தர த்யாகத்தையொழிய ஸ்வீகாரம் அநுபபந்நம் என்னுமிடம் ஸித்தமிறே. ஆகையால், “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய ஸ்திதஶ்சேத்” என்று துஷ்கரத்வ புத்தியாலே ஸ்வத:ப்ராப்தமான உபாயாந்தர பரித்யாகத்தை அநுவதித்து ஸித்தோபாய ஸ்வீகாரத்தை விதிக்கிறதென்கிற அநுவாதபக்ஷம் அயுக்தம்- என்றதாயிற்று.

அவ: ‘ஆனால், ஸூஶகத்வாதிகளாலே ராகப்ராப்தமான இதுக்கு விதிதான் வேணுமோ?’, என்ன அருளிச்செய்கிறார் – ‘ராகப்ராப்தமான’ என்று தொடங்கி.

மூ:189. ராகப்ராப்தமான உபாயந்தானே வைதமானால் கடுகப்பரிக்ரஹிக்கைக்கு உடலாயிருக்குமிறே.

வ்யா: அதாவது, போக்யதையாலே ராகப்ராப்தமான க்ஷீரத்தைப் பித்த ரோகத்துக்கு மருந்தாகக் கொடுக்கச் சொல்லி விதித்தால் ஶீக்ரமாகக் கைக்கொள்ளுகைக்கு உடலாமாபோலே. உபாயாந்தரங்களிற் காட்டில் இதுக்கு உண்டான வைலக்ஷண்யத்தாலே சேதநனுடைய ராகத: ப்ராப்தமாயிருந்துள்ள உபாயந்தானே இத்தை ஸ்வீகரியென்னும் விதிப்ரயுக்தமுமானால் ஶீக்ரமாக ஸ்வீகரிக்கைக்கு உடலாயிருக்குமிறே- என்கை.

அவ: இனி, இதுக்கு ப்ரதிபதம் அர்த்தம் அருளிச்செய்வதாக, பூர்வார்த்த பதஸங்க்யையை அருளிச்செய்கிறார் ‘இதில் பூர்வார்த்தம் ஆறுபதம்’ என்று.

 

மூ:190. இதில் பூர்வார்த்தம் ஆறு பதம்.

அவ: அதில் ப்ரதமபதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘ஸர்வ தர்மாந்’ என்று. அதுக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் ‘எல்லா தர்மங்களையும்’ என்று.

மூ:191. ஸர்வதர்மாந்- எல்லா தர்மங்களையும்.

அவ: அதுதான் தர்மமும் பஹுவசநமும் ஸர்வ ஶப்தமுமாய் த்ரிப்ரகாரமாயிருக்கையாலே இம்மூன்றுக்கும் அர்த்தம் அருளிசெய்வதாக, ப்ரதமம் தர்மலக்ஷணத்தை அருளிச்செய்கிறார்- ‘தர்மமாவது பலஸாதநமாயிருக்குமது’- என்று.

மூ:192. தர்மமாவது – பலஸாதநமாயிருக்குமது.

அவ: தர்ம ஶப்தம் த்ருஷ்டபல ஸாதநத்திலும் வ்யாப்தமாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் – ‘இங்குச் சொல்லுகிற தர்ம ஶப்தம் – என்று தொடங்கி.

மூ:193. இங்குச் சொல்லுகிற தர்மஶப்தம் த்ருஷ்ட பலஸாதநங்களைச் சொல்லுகையன்றிக்கே, மோக்ஷ, பலஸாதநங்களைச் சொல்லுகிறது.

வ்யா: அதாவது, பூர்வோபாயங்கள் தன்னை உபதேசிக்கிறபோதே த்ருஷ்டபல ஸாதநங்கள் வ்யாவ்ருத்தங்களாகையாலும், மோக்ஷோபாயங்களை உபதேஶித்து வருகிற ப்ரக்ரணமாகையாலும், இவ்விடத்திற் சொல்லுகிற தர்ம ஶப்தம் புத்ர பஶ்வந்நாதி ஐஹிகமாயும், ஸ்வர்க்காதி ஆமுஷ்மிகமாயும் இருந்துள்ள த்ருஷ்டபலங்களுக்கு ஸாதநங்களானவற்றைச் சொல்லுகையின்றிக்கே, பகவத் ப்ராப்திரூபமான மோக்ஷ பலத்துக்கு ஸாதநமாயுள்ளவற்றைச் சொல்லுகிறது- என்கை.

அவ: இனி மேல் பஹுவசநார்த்தத்தை அருளிச்செய்கிறார் ‘அவைதான்’ என்று தொடங்கி.

மூ:194. அவைதான்- ஶ்ருதிஸ்ம்ருதி விஹிதங்களாய்ப் பலவாயிருக்கையாலே பஹுவசநப்ரயோகம் பண்ணுகிறது.

வ்யா: அதாவது, அந்த மோக்ஷபல ஸாதநங்கள்தாம் உப ப்ரும்ஹ்ய உப ப்ரும்ஹணங்களாயிருந்துள்ள ஶ்ருதி ஸ்ம்ருதிகளாலே விஹிதங்களாய்க் கொண்டு அநேகங்களாய் இருக்கையாலே,‘தர்மாந்’ என்று பஹுவசந ப்ரயோகம் பண்ணுகிறது- என்கை.

அவ: ‘அப்படியிருந்துள்ளவைதாம் எவை?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘அவையாவன’ என்று தொடங்கி.

மூ:195. அவையாவன- கர்ம ஜ்ஞாந பக்தியோகங்களும், அவதார ரஹஸ்யஜ்ஞாநம், புருஷோத்தம வித்யை, தேஶவாஸம், திருநாமஸங்கீர்த்தநம், திருவிளக்கெரிக்கை, திருமாலையெடுக்கை தொடக்கமான உபாய புத்த்யா செய்யுமவையும்.

வ்யா: அதாவது, கீழ் பலவாகச் சொல்லப்பட்ட அவையாவன,

कर्मणैव हि ससिद्धिमास्थिता जनकादय:|

तस्मादसक्तस्सततं कार्यं कर्म समाचर ||

(“கர்மணைவ ஹி ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா ஜநகாத3ய:|

தஸ்மாத3ஸக்தஸ்ஸததம் கார்யம் கர்ம ஸமாசர||”)

என்று ஸ்வதந்த்ர ஸாதநமாக உக்தமான கர்மயோகமும்,

सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते

(“ஸர்வம் கர்மாகி2லம் பார்த2 ஜ்ஞாநே பரிஸமாப்யதே”),

नहि ज्ञानेन सदृशम् पवित्रमिह विद्यते |

ज्ञानाग्निस्सर्व कर्माणि भस्मसात्कुरुते तथा ||

(“ந ஹி ஜ்ஞாநேந ஸத்3ருஶம் பவித்ரமிஹ வித்3யதே|

ஜ்ஞாநாக்3நிஸ்ஸர்வ கர்மாணி ப4ஸ்மஸாத் குருதே ததா2||”) என்று சொல்லப்பட்ட கர்ம ஸாத்யமான ஜ்ஞாநயோகமும்,

भक्त्या त्वनन्यया शक्य:

(“ப4க்த்யா த்வநந்யயா ஶக்ய:”),

मन्मना भव मद्भक्त:

(“மந்மநா ப4வ மத்ப4க்த:”) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கர்மஜ்ஞாந ஸஹக்ருதமான பக்தியோகமும் ஆகிற இவையும்,

जन्म कर्म च मे दिव्यं एवं यो वेत्ति तत्वत:|

त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन||

(“ஜந்ம கர்ம ச மே தி3வ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:|

த்யாக்வா தே3ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந||”) என்று விரோதி நிவ்ருத்தி பூர்வகமான பகவத்ப்ராப்திக்கு ஸாதாநமாகச் சொல்லப்பட்ட அவதார ரஹஸ்ய ஜ்ஞாநம்,

एतद्बुध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत

(“ஏதத்3பு3த்3த்4வா பு3த்3தி4மாந் ஸ்யாத் க்ருதக்ருத்யஶ்ச பா4ரத”) என்று அபிமத பலலாபத்தாலே க்ருதக்ருத்யனாக்குமென்கிற புருஷோத்தமவித்யை,

देशोऽयं सर्वकामधुक्

(“தே3ஶோSயம் ஸர்வகாமது4க்”) என்று ஸர்வகாம பல ப்ரதமாகச் சொல்லுகிற புண்யக்ஷேத்ரவாஸம்,

सर्व पापविशुद्धात्मा याति ब्रह्म सनातनम्

(“ஸர்வபாப விஶுத்3தா4த்மா யாதி ப்3ரஹ்ம ஸநாதநம்”) என்று ஸர்வ பாபவிமோசந பூர்வகமான பகவத் ப்ராப்தியைப் பலமாகச் சொல்லுகிற திருநாமஸங்கீர்த்தநம்,

धृतेन वाऽथ तैलेन दीपं यो ज्वालयेन्नर 😐

विष्णवे विधिवद्भक्त्या तस्य पुण्यफलं शृणु ||

(க்4ருதேந வாSத2 தைலேந தீ3பம் யோ ஜ்வாலயேந்நர|:

விஷ்ணவே விதி4வத்34க்த்யா தஸ்ய புண்ய ப2லம் ஶ்ருணு|| )

विहाय सकलं पापं सहस्रादित्य सन्निभ:|

ज्योतिमता विमानेन विष्णुलोकं महीयते ||

விஹாய ஸகலம் பாபம் ஸஹஸ்ராதித்ய ஸந்நிப4😐

ஜ்யோதிஷ்மதா விமாநேந விஷ்ணுலோகே மஹீயதே||)

என்று பாபநிவ்ருத்தி பூர்வகமான பகவத் ப்ராப்தி ஸாதநமாகச் சொல்லப்படுகிற திருவிளக்கெரிக்கை,

அப்படி விரோதிநிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி ஸாதநமாகச் சொல்லப்படும் திருமாலையெடுக்கை முதலாக ஸாதநபுத்த்யா செய்யப்படுமவையும்- என்கை.

அவ: இனி, ஸர்வ ஶப்தார்த்தத்தை அருளிச்செய்கிறார் ‘ஸர்வ ஶப்தத்தாலே’ என்று தொடங்கி.

மூ:196. ஸர்வ ஶப்தத்தாலே அவ்வவஸாதந விஶேஷங்களை அநுஷ்டிக்குமிடத்தில் அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது.

வ்யா: அதாவது, தர்மவிஶேஷணமான ஸர்வ ஶப்தத்தாலே பஹுவசநோக்தமான அவ்வோ ஸாதந விஶேஷங்களை அநுஷ்டிக்கும் இடத்தில்

संध्या हीनोऽशुचिर्नित्यम् अनर्ह: सर्व कर्मसु

(“ஸந்த்4யாஹீநோஶுசிர் நித்யம் அநர்ஹஸ் ஸர்வ கர்மஸு”) என்கிறபடியே அயோக்யனாகாமல் தன்னை அநுஷ்டிக்கையாலே அவற்றுக்கு யோக்யனாகையை உண்டாக்கிக் கொடுக்கும் ஸந்த்யாவந்தந பஞ்சமஹா யஜ்ஞாதிகளான நித்யகர்மங்களைச் சொல்லுகிறது- என்கை.

அவ: உக்தத்தை நிகமிக்கிறார் ‘ஆக’ என்று தொடங்கி.

மூ:197. ஆக, ஶ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய் நித்ய நைமித்திகாதி ரூபங்களான கர்மயோகாத்யுபாயங்களை என்றபடி.

வ்யா: அதாவது, ஆக கீழ்ச்சொன்ன எல்லாவற்றாலும் चोदनालक्षणार्थो धर्म: (“சோதநாலஷணார்த்தோ தர்ம:”) என்று சோதனையாகிற விதிவாக்யத்தை ப்ரமாணமாகவுடைத்தான அர்த்தம் தர்மம் என்கையாலே, ஶ்ருதி ஸ்ம்ருதிகளாகிற ப்ரமாணங்களாலே விதிக்கப்பட்டுள்ளவையாய், நித்யம் நைமித்திகம் முதலானவற்றை வடிவாகவுடைத்தான கர்மயோகம் தொடக்கமான உபாயங்களையென்றபடி- என்கை.

அவ: ஸ்வரூப விருத்தத்வாத் அதர்மமாகச் சொல்ல வேண்டுமவற்றை தர்மம் என்கிறதுக்கு ஹேதுவை அருளிச்செய்கிறார் ‘இவற்றை’ என்று தொடங்கி.

மூ:198. இவற்றை தர்மம் என்கிறது- ப்ரமித்த அர்ஜுநன் கருத்தாலே.

வ்யா: அதாவது, பகவதத்யந்த பாரதந்த்ர்யமாகிற உத்தேஶ்யத்துக்கு விரோதியாயிருக்கையாலே அதர்ம ஶப்த வாச்யங்களாக ப்ராப்தங்களாயிருக்கிற இவற்றை தர்மமென்று சொல்லுகிறது. ஸ்வதர்மமான யுத்தத்தை அதர்மம் என்றும், இவற்றை தர்மம் என்றும் ப்ரமித்த அர்ஜுநனுடைய நினைவாலேயித்தனை- என்கை. ஆக, ப்ரதம பதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.

அவ: அநந்தரம் த்விதீயபதத்தை உபாதாநம் பண்ணுகிறார்- ‘பரித்யஜ்ய’ என்று.

மூ:199. பரித்யஜ்ய.

அவ: இதுவும் தியாகமும் ல்யப்பும் உபஸர்க்கமுமாய், த்ரிப்ரகாரமாயிருக்கையாலே, அதில் த்யாகவேஷத்தை முந்துற அருளிச்செய்கிறார் – ‘த்யாகமாவது’ என்று தொடங்கி.

மூ:200. த்யாகமாவது – உக்தோபாயங்களை அநுஸந்தித்துஶுக்திகையிலே ரஜதபுத்தி பண்ணுவாரைப் போலேயும், விபரீததிஶா கமநம் பண்ணுவாரைப் போலேயும் அநுபாயங்களிலே உபாயபுத்தி பண்ணினோம்என்கிற புத்தி விசேஷத்தோடே த்யஜிக்கை.

வ்யா: அதாவது, இவ்விடத்திற் சொல்லுகிற த்யாகமாவது- கேவலம் விடுகை அன்று; கீழ்ச்சொல்லப்பட்ட உபாயங்களின்படியை அநுஸந்தித்து, ‘ரஜதமல்லாத ஶுக்திகையிலே ரஜதபுத்தி பண்ணுவாரைப்போலேயும், ஸ்வகார்யஸித்திக்கு உடலான ஒருதிக்கிலே போகக்கோலித் தத்விபரீதமான திக்கை அதுவாக நினைத்துப் போவாரைப் போலேயும், பகவத் ப்ராப்த்யுபாயாபேக்ஷரான நாம் உபாயமல்லாதவற்றிலே உபாய புத்தி பண்ணினோம்’ என்கிற புத்தி விஶேஷத்தோடே விடுகை- என்றபடி.

 

அவ: இனி உபஸர்க்கார்த்தத்தை அருளிச்செய்கிறார் ‘பரி என்கிற’ என்று தொடங்கி.

மூ:201. ‘பரிஎன்கிற உபஸர்க்கத்தாலேபாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும் லஜ்ஜையோடுங் கூட மறுவலிடாதபடி விடவேணுமென்கிறது.

வ்யா: அதாவது, ‘பரி ஸாகல்யே’ என்று ஸாகல்ய பரமாகக் கொள்ளுமளவில், அது ஸர்வ ஶப்தத்திலே உக்தமாகையாலே அபேக்ஷிதமல்லாமையாலே, மிகுதிக்கு வாசகமான பரியென்கிற இந்த உபஸர்க்கத்தாலே

ब्रह्महत्या सुरापानो स्तेयं गुर्वङ्गनागम:

(“ப்ரஹ்மஹத்யா ஸுராபாநோ ஸ்தேயம் கு3ர்வங்க3நாகம:”) என்கிற பாதகங்கள் முதலானவற்றை விடுமளவில் அவற்றில் புநரந்வயத்துக்கு உறுப்பான ருசி வாஸனைகளோடேகூட ‘நாம் இதைச் செய்வதே!’என்கிற லஜ்ஜா ஸஹிதனாய்க்கொண்டு விடுமாபோலே.

अथ पातक भीतस्त्वं  (“அத2 பாதகபீ4தஸ் த்வம்”) என்று தர்மதேவதை பாதமாகச் சொன்ன உபாயாந்தரங்களை விடுமளவில் புத்தி பூர்வகமாக அவற்றிலே ப்ரவர்த்திக்கைக்கு உறுப்பான ருசியும் அபுத்தி பூர்வகமாக மூளுகைக்கு உறுப்பான வாஸனையும் ஆகிற அவற்றோடே கூட‘பகவதேக ஸாதநதைக வேஷமான ஸ்வஸ்வரூபத்துக்கு அத்யந்த விருத்தமானவற்றை நாம் செய்வதே!’ என்கிற லஜ்ஜா ஸஹிதனாய்க்கொண்டு மீளவும் அவற்றில் அந்வயம் வாராதபடி விடவேண்டுமென்று சொல்லுகிறது- என்கை.

அவ: இனி ‘ல்யப்’ அர்த்தத்தை அருளிச்செய்கிறார் –‘ல்யப்பாலே’ என்று தொடங்கி.

மூ:202. ல்யப்பாலேஸ்நாத்வா புஞ்ஜீதஎன்னுமாபோலே, உபாயாந்தரங்களைவிட்டே பற்ற வேணும் என்கிறது.

வ்யா: அதாவது,  ‘(பரி)த்யஜ்ய என்கிற ல்யப்பாலே भुक्त्वा चान्द्रायणं चरेत् (“பு4க்த்வா சாந்த்3ராயணம் சரேத்”) என்னுமாபோலன்றிக்கே, स्नात्वा भुञ्जीत (“ஸ்நாத்வா பு4ஞ்ஜீத”) என்கிற விதி ‘புஜிக்குமளவில் ஸ்நாநம்  பண்ணியே புஜிக்கவேணும்’என்கிற நியமத்தைச் சொல்லுமாபோலே. ஸித்தோபாயத்தை பரிக்ரஹிக்குமளவில் த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணுமென்கிற நியமத்தைச் சொல்லுகிறது – என்கை.

 

அவ: இப்படி விட்டே பற்றவேணுமென்கிற இதன் கருத்தை அருளிச் செய்கிறார் ‘சசால’ என்று தொடங்கி.

மூ:203. ”சசால சாபஞ்ச முமோச வீர:என்கிறபடியே இவை அநுபாயங்களான மாத்ரமன்றிக்கே கால் கட்டு என்கிறது.

வ்யா: அதாவது,

यो वज्र पाताशनि सन्निपातान्न चुक्षुभे नापि चचाल राजा|

स रामबाणाभिहतो भृशार्तश्चचाल चापाञ्च मुमोच वीर: ||

(“யோ வஜ்ரபாதாசநிஸந்நிபாதாந் ந சுக்ஷுபே4 நாபி சசால ராஜா|

ஸ ராமபா3ணாபி4ஹதோ ப்4ருஶார்த்த: சசால சாபஞ்ச முமோச வீர:||”) என்கிற ஶ்லோகத்தில்- ராவணன் ராமஶரங்களாலே மிகவும் ஈடுபட்டு, நிலைகலங்கி போகப் பார்த்தவளவிலும், கையில் வில்லிருக்குமளவும் பெருமாள் போகவொட்டாமையாலே பின்பு பொகட்ட வில்லு கையில் இருந்தபோது ப்ரதிபக்ஷ ஜயத்துக்கு ஸாதநமாகாத மாத்ரமன்றிக்கே गच्छानुजानामि  (“கச்சாநுஜாநாமி”) என்று பின்பு பண்ணின அநுமதி பெருமாள் அப்போது பண்ணக்காணாமையாலே போகவுமொண்ணாதபடி கால்  கட்டானமையைச் சொல்லுகிறபடியே. உபாயாந்தரங்களான இவற்றிலே ஈஷதந்வயங் கிடக்கிலும் இவை பேற்றுக்கு ஸாதநமாகாத மாத்ரமின்றிக்கே பேற்றுக்கு ப்ரதிபந்தகமாய்த் தலைக்கட்டும் – என்றபடி.

அவ: இன்னமும், இவற்றில் அந்வயம் இழவுக்கு உடலாமென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் ‘சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு’ என்று.

மூ:204. சக்ரவர்த்தியைப்போலே இழக்கைக்கு உறுப்பு.

வ்யா: அதாவது, முன்பே வரப்ரதாநத்தைப் பண்ணி வைத்து, இப்போதாக மறுக்கவெண்ணாதென்று ஆபாஸமான ஸத்ய தர்மத்தைப்பற்றி நின்று  रामो विग्रहवान् धर्म: (“ராமோ விக்3ரஹவாந் த4ர்ம:”) என்கிற பெருமாளோடே கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்ரவர்த்தியைப் போலே ஆபாஸமான உபாயாந்தரங்களிலே அந்வயித்து நிற்கையாகிறது  कृष्णं धर्मं सनातनम् (“க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதநம்”) என்று ஸநாதந தர்மமான பகவத்  விஷயத்தோடே கூடி வாழுகையாகிற பேற்றை இழக்கைக்கு உறுப்பாய் விடும்- என்கை.

அவ: இனி இங்குச் சொன்ன ஸர்வ தர்ம பரித்யாகத்தின் கருத்து அறியாதார் சொல்லும் தூஷணத்தைப் பரிஹரிக்கைக்காக. தத்பக்ஷத்தை உத்க்ஷேபிக்கிறார் ‘ஸர்வதர்மங்களையும்’ என்று தொடங்கி.

மூ:205. ஸர்வதர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே, சிலர்அதர்மங்கள் புகுரும்’, என்றார்கள்.

வ்யா: அதாவது, த்யாஜ்யமான தர்மந்தான் ‘இதம் குரு இதம் மாகார்ஷீ:’என்று விதிநிஷேதாத்மகமா ய் இருக்கையாலே ‘ஸர்வதர்மங்களையும் விட்டு’ என்று சொல்லுகையாலே விஹிதாநுஷ்டாநத்தோபாதி நிஷித்த பரிஹாரமும் ஒக்கத் தள்ளுண்ணுமளவில், அடைத்த கதவைத் திறந்தால் நிஹீந பதார்த்தங்கள் புகுருமாபோலே அதர்மங்களான நிஷித்த ப்ரவ்ருத்திகள் புகுருமென்று சிலர் சொன்னார்கள்- என்கை.

அவ: அத்தை பரிஹரிக்கிறார் ‘அது கூடாது; அதர்மங்களைச் செய் என்று சொல்லாமையாலே’ என்று.

மூ:206. அது கூடாது; ‘அதர்மங்களைச்செய்என்று சொல்லாமையாலே.

வ்யா: அதாவது, ஸர்வதர்மங்களையும் விடச் சொன்ன இத்தால் அதர்மங்கள் புகுருமென்கிற இது ஸம்பவியாது; தர்மங்களை விடச் சொன்ன மாத்ரமொழிய அதர்மங்களைச் செய்யென்று சொல்லாமையாலே- என்கை.

அவ: அதர்மநிவ்ருத்தியும், தர்மஶப்த வாச்யமாகையாலே, அத்தைவிடச்சொன்னால், அதர்மத்தைச் செய்யென்னுமிடம் அர்த்தாத் உக்தமாகாதோ?’ என்கிற ப்ரதிவாத்யுக்தியை அநுவதிக்கிறார் ‘தன்னடையே சொல்லிற்றாகாதோவென்னில்’ என்று.

மூ:207. ‘தன்னடையே சொல்லிற்றாகாதோ?’என்னில்.

அவ: அதுக்கு உத்தரம் அருளிச்செய்கிறார் ‘ஆகாது; தர்மஶப்தம் அதர்ம நிவ்ருத்தியைக் காட்டாமையாலே’ என்று.

மூ:208. ஆகாது; தர்மஶப்தம் அதர்மநிவ்ருத்தியைக் காட்டாமையாலே.

வ்யா: அதாவது தர்மங்களை விடச்சொன்ன இத்தால் ‘அதர்மங்களைச் செய்’என்னுமிடம் தன்னடையே சொல்லிற்றாகாது; தர்மஶப்தம் அதர்ம நிவ்ருத்த்யாதி அங்கஸஹிதமாய் ப்ரதாநமாயிருந்துள்ள விஹிதாநுஷ்டாநத்தைக் காட்டுமதொழிய, ஸாமாந்யேந அதர்ம நிவ்ருத்தி மாத்ரத்தைக்காட்டாமையாலே – என்கை.

அவ: அதர்மநிவ்ருத்திக்கு தர்மஶப்த வாச்யத்வம் முக்யமாக இல்லையேயாகிலும் ஸர்வஶப்த ஸாஹித்யத்தாலே தர்மஶப்தம் விஶேஷண பூதமான இது தன்னையுங் காட்டாதோ?’ என்ன அருளிச் செய்கிறார் ‘காட்டினாலும்’ என்று தொடங்கி.

மூ:209. காட்டினாலும், அத்தை ஒழிந்தவற்றைச் சொல்லிற்றாமித்தனை.

வ்யா: அதாவது, அப்படிக் காட்டிற்றாகிலும், அது இவ்விடத்தில் விவக்ஷிதமல்லாமையாலே, அத்தையொழிந்த விஹிதாநுஷ்டாநரூப தர்மங்களானவற்றைச் சொல்லிற்றாமித்தனை – என்கை.

அவ: இங்ஙன் ஒதுக்குகிறது என்கொண்டு?’, என்ன அருளிச் செய்கிறார் ‘தன்னையும்’ என்று தொடங்கி.

மூ:210. தன்னையும், ஈஶ்வரனையும், பலத்தையும் பார்த்தால் அவை புகுர வழியில்லை.

வ்யா: அதாவது, அதர்மாநுஷ்டாநம் ஶேஷிக்கு அநிஷ்டமாகையாலே, அவனுக்கு அதிஶயகரனாமது ஒழிய அநிஷ்டகரனாகை சேராதபடியான ஸ்வரூபத்தையுடைய தன்னைப் பார்த்தாலும், ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹதையாலே இத்தலையில் ஸ்வயத்ந நிவ்ருத்தியொழிய ப்ரவ்ருத்யம்ஶத்தில் ஒன்றையும் பொறாத உபாயபூதனான ஈஶ்வரனைப் பார்த்தாலும், இவனுடைய ப்ரவ்ருத்திக்கு பலம் அவனுடைய ப்ரீதியாகையாலே தாத்ருஶமான பலத்தைப் பார்த்தாலும். இம்மூன்றுக்கும் விருத்தங்களான அவை புகுரவழியில்லை – என்கை. ஆகையால் தர்மஶப்தம் அதர்ம நிவ்ருத்தியைக் காட்டிற்றாகிலும் அத்தை ஒழிந்தவற்றைச் சொல்லிற்றாகக் கொள்ள வேணும் என்று கருத்து.

 

அவ: அநந்தரம் த்ரூதீயபதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘மாம்’ என்று; அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்‘ஸர்வ ரக்ஷகனாய்’ என்று தொடங்கி.

மூ:211. மாம்- ஸர்வரக்ஷகனாய், உனக்குக் கையாளாய், உன்னிசைவு பார்த்து, உன் தோஷத்தை போக்யமாகக் கொண்டு, உனக்குப் புகலாய், நீர்சுடுமாபோலே சேர்ப்பாரே பிரிக்கும்போதும் விடமாட்டாதே ரக்ஷிக்கிற என்னை.

வ்யா: அதாவது, ‘நம்முடைய ரக்ஷணம் இவன் பண்ணுமோ? பண்ணானோ?’, என்று ஸம்ஶயிக்கவேண்டாதபடி ஸர்வருடையவும் ரக்ஷணத்தில் தீக்ஷிதனாய், “தன் பெருமையையும் நம் சிறுமையையும் பார்த்து நம்மோடு கலப்பற்று இருக்குமோ?’, என்ன வேண்டாதபடி.

सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय (“ஸேநயோருபயோர் மத்4யே ரத2ம் ஸ்தா2பய”) என்று ஏவிக்  கார்யங்கொள்ளலாம்படி உனக்குக் கையாளாய், உன்னை ரக்ஷிக்கையில் உண்டான நசையாலே रक्ष्यापेक्षाम् प्रतीक्षते  (“ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே”) என்கிறபடியே ரக்ஷ்யபூதனான உன் இசைவுபார்த்து. ‘நங்குற்றங்கண்டு இகழுமோ?’ என்று அஞ்ச வேண்டாதபடி அஸ்தாநஸ்நேஹ காருண்ய தர்மாதர்மாதியாகுலனான உன் தோஷத்தை போக்யமாகக்கொண்டு, அஶரண்ய ஶரண்யனாகையாலே நீயும் பிறரும் உனக்குத் தஞ்சமல்லாத தஶையில் ஒதுங்கலாம்படியான புகலாய். ஶைத்யமே ஸ்வபாவமான ஜலம் ஒளஷ்ண்யத்தை பஜிக்குமாபோலே அபராத க்ஷாமணம் பண்ணிக் கடிப்பிக்கும் புருஷகாரபூதரே “தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்” என்கிறபடியே குற்றத்தைக் காட்டி அகற்றும் போதும் விட க்ஷாமணமன்றிக்கே, “என்னடியாரது செய்யார்” என்று மறுதலித்து ஒருதலை நின்று ரக்ஷிக்கும் என்னை – என்கை.

அவ: ‘மாம்’என்று விபவ ரூபத்தைக் காட்டுகையாலே வ்யாவர்த்திக்கப்படுகிறவற்றை அருளிச்செய்கிறார் ‘இத்தால்’ என்று தொடங்கி.

மூ:212. இத்தால் பரவ்யூஹங்களையும் தேவதாந்தர்யாமித்வத்தையும் தவிர்க்கிறது.

வ்யா: அதாவது “என்னை” என்று அவதரித்துக் கண்ணுக்கிலக்காய் அணுகி நிற்கிற தன்னை வரணீயனாகச் சொன்ன இத்தாலே தேஶ விப்ரக்ருஷ்டதையாலே காணவும் கிட்டவும் ஒண்ணாதபடி யிருக்கிற பரவ்யூஹங்களையும், அஸாதாரண விக்ரஹ யுக்தமன்றிக்கே உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேஶ்யமாயிருக்கிற அக்நீந்த்ராதி தேவதாந்தர்யாமித்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது- என்கை.

அவ: தர்மங்களையெல்லாம் விட்டுத் தன்னைப் பற்றச் சொல்லுகையாலே பலிதமானதொரு அர்த்த விஶேஷத்தை அருளிச் செய்கிறார் ‘தர்ம ஸம்ஸ்தாபநம்’ என்றுதொடங்கி.

மூ:213. தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணப் பிறந்தவன்தானேஸர்வதர்மங்களையும் விட்டு என்னைப் பற்றுஎன்கையாலே ஸாக்ஷாத் தர்மம் தானேயென்கிறது.

வ்யா: அதாவது, धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे (“த4ர்ம ஸம்ஸ்தா2பநார்த்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3”) என்கிறபடியே ஸ்வப்ராப்திக்கு உடலான தர்மத்தை ஸ்தாபிப்பதாகப் பிறந்தவன் தானே- “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்று ‘மோக்ஷஸாதநதயா ஶாஸ்த்ர ஸித்தங்களான ஸர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று’ என்று சொல்லுகையாலே, அவை ஸாக்ஷாத் தர்மங்களன்று. ஸ்தாபநீயமான ஸாக்ஷாத் தர்மம் कृष्णं धर्मं सनातनम् (“க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதநம்”) என்று ஸநாதந தர்மமான தானேயென்னுமிடம் சொல்லுகிறது- என்கை.

அவ: ‘இத்தால் என் சொல்லுகிறது?’என்ன அருளிச் செய்கிறார் ‘இத்தால், விட்ட ஸாதநங்களில் ஏற்றஞ்சொல்லுகிறது’என்று.

மூ:214. இத்தால், விட்ட ஸாதநங்களில் ஏற்றஞ் சொல்லுகிறது.

வ்யா: அதாவது, இப்படிச் சொன்ன இத்தால் கீழ் விட்ட ஸாதநங்களிற் காட்டில் இந்த ஸாதநத்துக்கு உண்டான ஏற்றஞ்சொல்லுகிறது – என்கை.

அவ: அதுதான் எது?’என்ன, அருளிச் செய்கிரார் ‘அதாவது’ என்று தொடங்கி.

மூ:215. அதாவது, ஸித்தமாய், பரமசேதநமாய், ஸர்வஶக்தியாய், நிரபாயமாய், ப்ராப்தமாய், ஸஹாயாந்தர நிரபேக்ஷமாயிருக்கை.

வ்யா: இத்தால் கீழ்விட்ட ஸாதநங்களிற் காட்டில் இதுக்கு ஏற்றமாவது- சேதநப்ரவ்ருத்தியாலே தன் ஸ்வரூப ஸித்தியாம்படி இருக்கையன்றிக்கே ஸநாதந தர்மமாகையாலே ஸித்தமாய். यस्सर्वज्ञ: सर्ववित्  (“யஸ்ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்”) இத்யாதிகளிற் சொல்லுகிற ஸர்வஜ்ஞ விஷயமாகையாலே பரமசேதநமாய், परास्य शक्ति:विविधैव श्रूयते  (“பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே”) என்கிறபடியே ஸர்வ ஶக்தியாய், சேதநஸாத்யமாய் நடுவே அபாயங்கள் புகுருகைக்கு அவகாஶமுண்டாம்படியிருக்கையன்றிக்கே, ஸித்த வஸ்துவாயிருக்கையாலே நிரபாயமாய், பரதந்த்ரனான இச்சேதநனுடைய ஸ்வரூபத்துக்கு அப்ராப்தமாயிராதே ப்ராப்தமாய் கீழ்ச் சொன்ன பரமசேதநத்வாதிகளாலே ஸஹாயாந்தர நிரபேக்ஷமாயிருக்கை- என்றபடி.

அவ: இந்த ஸஹாயாந்தர நிரபேஷத்வத்தை ஸஹேதுகமாக ஸ்தாபிக்கிறார் ‘மற்றை உபாயங்கள்’ என்று தொடங்கி மேல் மூன்று வாக்யத்தாலே.

 

மூ:216. மற்றை உபாயங்கள் ஸாத்யங்களாகையாலே, ஸ்வரூபஸித்தியில் சேதநனை அபேக்ஷித்திருக்கும்; அசேதநங்களுமாய்,அஶக்தங்களுமாயிருக்கையாலே கார்ய ஸித்தியில் ஈஶ்வரனை அபேக்ஷித்திருக்கும். இந்த உபாயம் அவற்றுக்கு எதிர்த்தட்டாயிருக்கையாலே, இதர நிரபேக்ஷமாயிருக்கும்.

வ்யா: அதாவது, இத்தையொழிந்த உபாயங்கள் சேதந ப்ரவ்ருத்தியாலே ஸாதிக்கப்படுமவையாகையாலே தம்முடைய ஸ்வரூபஸித்தியில் ப்ரவிருத்திகரனான சேதநனை அபேக்ஷித்திருக்கும்; இவனுக்குச் செய்யவேண்டுமவையறிகைக்கும் அதுதன்னைச் செய்து தலைக்கட்டுகைக்கும் யோக்யதையில்லாத அசேதநங்களுமாய் அஶக்தங்களுமாயிருக்கையாலே, சேதநனுடைய இஷ்டாநிஷ்டப்ராப்தி பரிஹாரரூபமான கார்யத்தினுடைய ஸித்தியில்,  फलमत उपपत्ते: (“பலமத உபபத்தே:”) என்கிறபடியே பலப்ரதத்வோப யோகியான ஸர்வஶக்தித்வாதி உபபத்தியுடையனான ஈஶ்வரனை அபேக்ஷித்திருக்கும்; இந்த உபாயம் ஸித்தத்வ பரமசேதநத்வ ஸர்வஶக்தித்வங்களாலே அவற்றுக்கு எதிர்த்தட்டாயிருக்கையாலே அந்ய நிரபேக்ஷமாயிருக்கும் – என்கை.

அவ: இனி, இப்பதத்திலே ஆஶ்ரயண ஸௌகார்யாபாதகங்களான குணவிஶேஷங்களெல்லாம் ப்ரகாஶிக்கிறபடியை அருளிச்செய்கிறார் ‘இதிலே’ என்று தொடங்கி.

மூ:217. இதிலே, வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஶீல்ய ஸௌலப்யங்களாகிற குணவிஶேஷங்கள் நேராக ப்ரகாஶிக்கிறது.

வ்யா: அதாவது, அதர்மபுத்தியாலே தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுநனுக்குக் குற்றம்  பாராதே அபேக்ஷிதார்த்தங்களை அருளிச்செய்கையாலே, வாத்ஸல்யம் ப்ரகாஶிக்கிறது; தன்னுடைய பரத்வத்தைப் பலகாலும் அருளிச்செய்த அளவன்றிக்கே அர்ஜுநன் ப்ரத்யக்ஷிக்கும்படி பண்ணுகையாலே, ஸ்வாமித்வம் ப்ரகாஶிக்கிறது; हे कृष्ण हे यादव (“ஹே கிருஷ்ண ஹே யாத3வ”) என்று அர்ஜுநன் தானே சொல்லும்படி இவனோடே கலந்து ப்ரியமான திருமேனியைக் கண்ணுக்கு இலக்காம்படிப் பண்ணுகையாலே, ஸௌசீல்யம் ப்ரகாசிக்கிறது; அப்ராக்ருதமான திருமேனியைக் கண்ணுக்கு இலக்காம்படி பண்ணுகையாலே ஸௌலப்யம் ப்ரகாசிக்கிறது – என்கை. “குணவிஶேஷங்கள்” என்றது, ஆஶ்ரயணத்துக்கு அபேக்ஷிதங்களானவையென்று தோற்றுகைக்காக. ‘நேராக ப்ரகாஶிக்கிறது’என்றது- ஸ்புடமாக ப்ரகாஶிக்கிறது – என்றபடி.

அவ: இவை எல்லாவற்றிலும் வைத்துக் கொண்டு, மிகவும் அபேக்ஷிதம் ஸௌலப்யமாகையாலே, அவதார ப்ரயுக்தமான ஸௌலப்யத்தளவன்றிக்கே ஸாரத்யேவஸ்திகனாய் நிற்கிற ஸௌலப்ய அதிஶயத்தை தர்ஶிப்பித்தமையை அருளிச்செய்கிறார் ‘கையும் உழவுகோலும்’ என்று தொடங்கி.

மூ:218. கையும் உழவுகோலும், பிடித்த சிறுவாய்க் கயிறும், ஸேநா தூளிதூஸரிதமான திருக்குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸாரத்ய வேஷத்தைமாம்என்று காட்டுகிறான்.

வ்யா: அதாவது, குதிரைகளை ப்ரேரித்து நடத்துகைக்காகத் திருக்கையிலே தரித்த உழவுகோலும், அவற்றை இடவாய் வலவாய்த் திருப்புகைக்காகவும், நிறுத்தருள வேண்டும் இடத்திலே தாங்கி நிறுத்துகைக்காகவும் பிடித்த சிறுவாய்க்கயிறும், திருமுடியில் ஒன்று ஆச்சாதியாமல் நிற்கையாலே ஸேநா தூளியாலே புழுதி படைத்த திருக்குழலும், “தேர்கடவிய பெருமான் கனைகழல்” என்கிறபடியே, சாத்தின சிறுசதங்கையுந் தானுமாகத் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸாரத்யவேஷத்தை ‘என்னை’என்று காட்டுகிறான்- என்கை. ஆக, த்ருதீய பதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.

அவ: அநந்தரம், சதுர்த்தபதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘ஏகம்’ என்று.

மூ:219.ஏகம்.

அவ: அதுக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் ‘இந்த ஏகசப்தம்’ என்று தொடங்கி.

மூ:220. இந்த ஏகசப்தம் ஸ்தாநப்ரமாணத்தாலே அவதாரணார்த்தத்தைக் காட்டுகிறது.

வ்யா: அதாவது, இவ்வுபாயவிஶேஷத்தைச் சொல்லும் இடங்களிலே பலவிடங்களிலும் அவதாரண ப்ரயோகம் உண்டாகையாலே. உகாரம்போலே இந்த ஏகஶப்தமும் ஸ்தாநப்ரமாணத்தாலே அவதாரணமாகிற அர்த்தத்தைக் காட்டுகிறது – என்கை.

அவ: இவ்வுபாயத்தை நிர்த்தேஶித்த அநந்தரம் அவதாரண ப்ரயோகம் பண்ணின வசநங்கள் பலவற்றையும் இதுக்கு உதாஹரணமாக அருளிச் செய்கிறார் ‘மாமேவ’ என்று தொடங்கி.

மூ:221. ”மாமேவ யே ப்ரபத்யந்தே”, “தமேவ சாத்யம்“, “த்வமேவோபாய பூதோ மே பவ”, “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்என்றுஞ்சொல்லுகிறபடியே.

வ்யா: அதாவது, मामेव ये प्रपद्यन्ते (“மாமேவ யே ப்ரபத்3யந்தே”) என்று என்னையே யாவர் சிலர் ப்ரபத்தி பண்ணுகிறர்கள் என்றும்,  तमेव चाद्यं पुरुषं प्रपद्ये (“தமேவ சாத்3யம் புருஷம் ப்ரபத்3யே”) என்று ஆத்யனான அந்தப் புருஷனையே ப்ரபத்தி பண்ணுகிறேன் என்றும், त्वमेवोपायभूतो मे भव (“த்வமேவோபாய பூ4தோ மே ப4வ”)என்று நீயே எனக்கு உபாயமாகவேணும் என்றும், “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று ‘எனக்கு உபாயந்தருகிற இடத்தில் உன் திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்’ என்றுஞ்சொல்லுகிற இவ்விடங்களில், “மாமேவ”, “தமேவ”, “த்வமேவ”, “நின் பாதமே” என்று ஸ்வீகார்ய வஸ்து நிர்த்தேஶாநந்தரம் அவதாரணத்தைச் சொல்லுகிற ப்ரகாரத்திலே – என்கை.

அவ: ஏதத்வ்யாவர்த்யம் எது’என்ன, அருளிச் செய்கிறார் ‘இத்தால்’ என்று தொடங்கி.

மூ:222. இத்தால், ‘வ்ரஜஎன்கிற ஸ்வீகாரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது.

வ்யா: அதாவது, உபாயாந்தரங்கள் வ்யாவர்த்யமாமளவில் பௌநருக்த்யம் ப்ரஸங்கிக்கையாலும், தேவதாந்தரங்கள் வ்யாவர்த்யமாமளவில் ‘மாம்’என்று அஸாதாரணாகாரத்தைச் சொல்லுகையாலே அது கீழே ஸித்தமாகையாலும், இந்த அவதாரணத்தால் ‘வ்ரஜ’ என்று மேல் சொல்லுகிற ஸ்வீகாரத்தில் உபாயத்வத்தைச் கழிக்கிறது – என்கை. இந்த ஸ்வீகாரந்தானும் அந்வய வ்யதிரேகத்தாலே ஸாதநம் என்று நினைக்கலாயிருக்கையாலே, இதன் ஸாதநத்வம் அவஶ்யம் கழிக்கவேணுமிறே.

அவ: ஸ்வீகாராநந்தரமொழிய உபாயம் கார்யகரமாகாமையாலே பேற்றுக்கு இது அவசியம் வேண்டியிருக்க, இதில் உபாயத்வத்தைக் கழிக்கிறபடிதான் எங்ஙனே என்ன, அருளிச்செய்கிறார் – ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது – என்று.

மூ:223. ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது.

வ்யா: அதாவது ஸ்வீகாராநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்டப்ராப்தியும் பண்ணுகையாகிற இது அவனாலே ஆனாற்போலே தத்பூர்வபாவியான ஸ்வீகாரந்தானும் அவனாலே உண்டானது- என்கை. இத்தால், ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வமொழிய உபாயத்வம் இல்லை என்றதாயிற்று.

அவ: அவனாலே வருகையாவது என்?’ என்ன, அருளிச் செய்கிறார் ‘ஸ்ருஷ்டி’ என்று தொடங்கி,

மூ:224. ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷிபலம்.

வ்யா: அதாவது கரண களேபர விதுரனாய், போக மோக்ஷ ஶூந்யனாய், அசிதவிஶேஷிதனாய்க் கிடக்கிற தஶையிலே, கரண களேபர விஶிஷ்டனாய், ஜ்ஞாந விகாஸயுக்தனாம்படி ஸ்ருஷ்டித்து ‘எதிர்சூழல்புக்கு’ என்கிறபடியே இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி, அவதரித்த இடங்களிலே ஆஶ்ரயணருசி விஶ்வாஸ ஜநகமான தன் குண சேஷ்டிதாதிகளை ப்ரகாஶிப்பித்து, இவ்வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது இது- என்கை.

அவ: இவ்வர்த்தத்தில் ப்ரமாணம் காட்டுகிறார்‘அதுவுமவனதின்னருளே’ என்று.

மூ:225. “அதுவும் அவனது இன்னருளே”.

வ்யா: அதாவது “உணர்விலும்பரொருவனை அவனதருளாலுறற்பொருட்டு என்னுணர்வினுள்ளேயிருத்தினேன்” என்று. ‘உணர்வுமிக்கிருக்கக் கடவரான நித்ய ஸூரிகளுடைய ஸத்தாதிகளுக்கு நிர்வாஹகனான அத்விதீயனானவனை, அவனுடைய அருளாலே ப்ராபிக்கைக்காக. என்னுடைய அபேக்ஷாரூப ஜ்ஞாநத்துக்குள்ளே இருத்தினேன் என்று தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் “அதுவுமவனதின்னருளே” என்று அந்த ஸ்வீகாரந்தானும் அவனுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே உண்டானது என்று ஆழ்வாரருளிச்செய்கையாலே, ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷிபலமென்றே கொள்ளவேணும்- என்கை.

அவ: இப்படியாகையால் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக்கடவனென்கிறார் ‘இத்தையொழியவும்’ என்று தொடங்கி.

மூ:226. இத்தை ஒழியவும் தானே கார்யஞ்செய்யும் என்று நினைக்கக்கடவன்.

வ்யா: அதாவது, இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுவனொருவனாகையாலே, இதுக்காகவன்று அவன் நமக்குக் கார்யஞ்செய்கிறது; இத்தை ஒழியவும் இவ்வாத்மோஜ்ஜீவநகரனான தானே நம்முடைய இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரரூபமான கார்யத்தைச் செய்யுமென்று ப்ரதிபத்தி பண்ணக்கடவன் – என்கை.

அவ: ‘இப்படி நினைக்கவேண்டுகிறது என்?’ என்ன அருளிச்செய்கிறார்- ‘அல்லாதபோது’ என்று தொடங்கி.

மூ:227. அல்லாதபோது உபாய நைரபேக்ஷ்யம் ஜீவியாது.

வ்யா: அதாவது, ‘இத்தையொழியவுங் கார்யஞ்செய்யும்’என்று நினையாதே, ‘இதுவும் வேணும் அவன் கார்யஞ்செய்கைக்கு’ என்று நினைக்குமளவில். உபாயத்தினுடைய ஸஹாயாந்தர நைரபேக்ஷ்யம் ஜீவிக்கப்பெறாது – என்கை.

அவ: ஆனால் இந்த ஸ்வீகாரந்தான் ஏதாவதென்ன அருளிச்செய்கிறார் ‘இது’ என்று தொடங்கி.

மூ:228. இது ஸர்வமுக்தி ப்ரஸங்க பரிஹாரார்த்தம், புத்தி ஸமாதாநார்த்தம், சைதந்ய கார்யம், ராக ப்ராப்தம், ஸ்வரூப நிஷ்டம், அப்ரதிஷேதத்யோதகம்.

வ்யா: அதாவது, இந்த ஸ்வீகாரம் ‘இத்தலையிலொன்றுமின்றிக்கேயிருக்க, ஈஶ்வரன்தானே உஜ்ஜீவிப்பிக்குமளவில், எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாவோ’என்கிற ஸர்வ முக்தி ப்ரஸங்க பரிஹாரத்துக்குறுப்பு; இதுதான், ‘நெடுங்காலம் நம்மை ரக்ஷியாதவன் இன்று நம்மை ரக்ஷிக்கும் என்றிருக்கிறது நாமென்கொண்டு?’என்று இவன் தளும்பாமல் புத்தி ஸமாதாநம் பிறந்திருக்கைக்கு உறுப்பு; இவன்தான் அசேதநமன்றிக்கே சேதநனாகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவஸாயம் இவன் சைதந்யத்தினுடைய கார்யம்; வைதமாக அன்றிக்கே இதில் ரஸஜ்ஞனான இவனுடைய ராகத்தாலே ப்ராப்தமான இது, ஸ்வரூபாதிரேகியன்றிக்கே ததேக ரக்ஷ்யத்வரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது; அநாதி காலம் ஸ்வரக்ஷணாதிகளாலே அவன் பண்ணும் ரக்ஷணத்தை விலக்கிப் போந்த இவன் அது தவிர்ந்தமைக்குப் ப்ரகாஶகம் – என்கை.

அவ: இனி ‘மாம்’என்கிற பதத்துக்குக் கீழும்,‘இங்கும் ஈஶ்வரனுடைய செயல்களை அருளிச்செய்கிறார் ‘கீழ்’ என்று தொடங்கி.

மூ:229. கீழ் தானும் பிறருமான நிலையைக் குலைத்தான்; இங்குத்தானும் இவனுமான நிலையைக் குலைக்கிறான்.

வ்யா: அதாவது “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்ற இடத்தில் ஸகலோபாயங்களையும் விடச் சொல்லுகையாலே, பலப்ரதனான தானும் உபாயாந்தரங்களுமாய்க் கூடி நிற்கிற நிலையைக் குலைத்தான்; “ஏகம்” என்கிற இடத்தில் ஸ்வீகாரத்தில் உபாய பாவத்தைக் கழிக்கையாலே, உபாய பூதனான தானும் தன் ஸ்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணி நிற்கிற இவனுமான நிலையைக் குலைக்கிறான்- என்கை. உபாயாந்தரங்களைப் பிறர் என்றது “உன்னாலல்லால் யாவராலும்” என்றாற்போலே.

அவ: இனி, ஸாதந புத்த்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை அருளிச்செய்கிறார் ‘அவனை’என்று தொடங்கி.

மூ:230. அவனை இவன் பற்றும்பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம்.

வ்யா: அதாவது, நிருபாதிகரக்ஷகனான அவனை, தத்ரக்ஷ்யபூதனான இவன், தன் ரக்ஷணத்துக்கு உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம், ஸ்வகர்த்ருத்வரூப அஹங்கார கர்ப்பமுமாய் பிதாவுக்குப் புத்ரன் எழுத்து வாங்குமாபோலே அவத்யகரமுமாயிருக்கும்- என்கை.

அவ: ஆனால், ரக்ஷகமாவதுதான் எது?’ என்ன, அருளிச் செய்கிறார்‘அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்’ என்று.

மூ:231. அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்.

வ்யா: அதாவது, இவ்வாத்மாவினுடைய ரக்ஷணத்துக்குக் கடவனான அவன், ‘இவனை நான் ரக்ஷிக்கக்கடவோம்’, என்று அபிமாநித்துக் கொள்ளுகையாகிற ஸ்வீகாரமே இவனுக்கு ரக்ஷகமாயறுவது- என்கை.

 

அவ: சேதந ப்ரவ்ருத்தியில் ஒன்றையும் இவ்வுபாயம் ஸஹியாது’ என்னுமத்தைத் தெளிவிக்கைக்காக, உபாயாந்தரங்களுக்கும் இவ்வுபாயத்துக்கும் உண்டான விஶேஷத்தை அருளிச் செய்கிறார் ‘மற்றை’ என்று தொடங்கி.

மூ:232. மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம், இதுக்கு ப்ரவ்ருத்தி தோஷம்.

வ்யா: அதாவது, ஸித்தோபாயமான இத்தையொழிந்த உபாயங்களுக்குச் சேதந ப்ரவ்ருத்தியாலே ஸ்வரூபஸித்தி ஆக வேண்டுகையாலே, இவனுடைய ஸ்வயத்ந நிவ்ருத்தி தோஷமாயிருக்கும்; இந்த உபாயத்துக்கு ஸஹாயாந்தர ஸம்ஸர்க்கம் அஸஹ்யமாகையாலே, இச்சேதநனுடைய ப்ரவ்ருத்தி என்பது ஒன்றுமே தோஷமாயிருக்கும்- என்கை.

அவ: சேதந வ்யாபாரம் ஒன்றும் வேண்டா?’ என்னுமிடத்துக்கு ப்ரமாணங் காட்டுகிறார் ‘சிற்றவேண்டா’ என்று.

மூ:233. “சிற்றவேண்டா”.

வ்யா: அதாவது, ஸித்தோபாய ஸ்வீகாரஞ்சொல்லுகிற “மற்றொன்றில்லை” என்கிற பாட்டிலே “சிற்ற வேண்டா” என்று சிற்றுதல் சிதறுதலாய், ‘பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா’ என்கையாலே, இவ்வுபாயத்தில் இழியுமவனுக்கு ஒரு வ்யாபாரம் பண்ண வேண்டா என்னுமிடஞ்சொல்லிற்றிறே- என்கை.

அவ: இதுதான் இஶ்லோகந்தனக்குள்ளே சொல்லிற்றென்கிறார் ‘நிவ்ருத்தி கீழே சொல்லிற்று’ என்று.

மூ:234. நிவ்ருத்தி கீழே சொல்லிற்று.

வ்யா: அதாவது ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்று ஸகல ப்ரவ்ருத்தியினுடையவும் நிவ்ருத்தியினுடையவும் நிவ்ருத்தியே இவனுக்கு வேண்டுவதென்னுமிடம் கீழே சொல்லிற்று- என்கை.

 

அவ: ‘ஆனால், உபகார ஸ்ம்ருதிதான் வேணுமோ? அது உபாயத்தில் முதலிடாதோ?’என்ன, அருளிச் செய்கிறார்‘உபகார ஸ்ம்ருதியும்’ என்று தொடங்கி.

 

மூ:235. உபகார ஸ்ம்ருதியும் சைதந்யத்தாலே வந்தது; உபாயத்தில் அந்தர்பவியாது.

வ்யா: அதாவது, “என்னைத் தீமனங்கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” இத்யாதியாலே இவ்வுபாயவிஷயத்தில் இவன் பண்ணும் உபகார ஸ்ம்ருதியும் இவனுடைய சைதந்ய ப்ரயுக்தமாய் வந்ததித்தனை; இது உண்டாகையாலேயன்றோ ஈஶ்வரன் கார்யஞ்செய்தது என்று உபாயத்தில் உட்புகாது – என்கை. ஆக சதுர்த்த பதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.

அவ: இனி, பஞ்சம பதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘ஶரணம்’ என்று. அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் ‘உபாயமாக’ என்று.

மூ:236. ஶரணம் – உபாயமாக.

அவ: அர்த்தாந்தரங்களையுங் காட்டவற்றாயிருக்க, இவ்விடத்தில் இது உபாயத்தையே காட்டுகிறமையை ஸஹேதுகமாக அருளிச்செய்கிறார் ‘இந்த ஶரண ஶப்தம் என்று தொடங்கி.

மூ:237. இந்த ஶரணஶப்தம்ரக்ஷிதாவையும் க்ருஹத்தையும் உபாயத்தையும் காட்டக்கடவதேயாகிலும், இவ்விடத்தில் உபாயத்தையே காட்டுகிறது; கீழோடே சேர வேண்டுகையாலே.

வ்யா: அதாவது, उपाये गृहरक्षित्रो: शब्द: शरणमित्ययं वर्तते (“உபாயே க்3ருஹரக்ஷித்ரோஶ்ஶப்த3ஶ்ஶரண மித்யயம்-வர்ததே”) என்கிறபடியே ஶரண ஶப்தமான இது ரக்ஷிதாவையும் க்ருஹத்தையும் உபாயத்தையும் காட்டக் கடவதேயாகிலும், सांप्रतं चैष उपायार्थैक वाचक: (“ஸாம்ப்ரதம் சைஷ உபாயார்த்தை2கவாசக:”) என்கிறபடியே இந்த ஸ்தலத்திலே உபாயத்தையே காட்டுகிறது. ஸர்வ தர்மங்களையும் விட்டுத் தன்னையே பற்றச் சொல்லுகிற ப்ரகரணமாகையால், கீழோடே சேரவேண்டுகையாலே – என்கை.

‘ஆனால் கீழ்ச்சொன்ன ஸாதநாந்தர பரித்யாகந்தானே ஸ்வீகார்ய வஸ்துவின் உபாயத்வத்தைத் தோற்றுவிக்குமதாயிருக்க ஶரண ஶப்த ப்ரயோகந்தான் வேணுமோ?’ என்னில், வேணும்; ப்ராபக ஸமயத்திற்போலே ப்ராப்ய ஸமயத்திலும் நதீநிஸ்தரணாநந்தரத்தில் ப்லவ பரித்யாகம் போலே ஸாதநாந்தர பரித்யாகம் ஸமாநமாகையாலே, தத்விஶிஷ்டமேயாகிலும் ஸ்வீகாரமாத்ரம் வ்யவச்சேதகமாகமாட்டாமையாலே.

‘அங்ஙனஞ்சொல்லலாமோ? இந்த உபாயாந்தரத்யாகம் ஸ்வீகாரத்துக்கு அங்கமாக விதிக்கப்படுகின்றது ஆகையாலே, ஸ்வீகாரத்தினுடைய உபாயத்வத்தைக் காட்டவற்றாகையால் ஶரண ஶப்த ப்ரயோகத்துக்கு ப்ரயோஜநம் இல்லையே?’ என்னில்;

அப்படிச்சொல்லவொண்ணாது, ஆர்த்தமாக வருமதிற்காட்டில் ஶாப்தமாகச்  சொல்லுமது யுக்தமாகையாலே. आक्षेपत: प्राप्तादाभिधानिकस्यैव ग्राह्यत्वात् (“ஆக்ஷேபத: ப்ராப்தாத் ஆபி4தா4நிகஸ்யைவ க்3ராஹ்யத்வாத்”) என்றிறே பாஷ்யகாரரும், அருளிச்செய்தது.

ஆக, உபாய வாசியான இந்த ஶரண ஶப்தத்தாலே இவ்வஸ்துவுக்கு ப்ராப்யதயா ஸ்வீகார்யத்வமும் ப்ராபகதயா ஸ்வீகார்யத்வமும் உண்டாகையாலே. அதில் ப்ராப்யதயா ஸ்வீகாரத்தை வ்யவச்சேதித்ததாயிற்று

அவ: இனி, ஷஷ்டபதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘வ்ரஜ’என்று. அதுக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் ‘புத்தி பண்ணு’ என்று.

மூ:238. வ்ரஜ- புத்தி பண்ணு.

அது தன்னை விஶதீகரிக்கிறார்- ‘கத்யர்த்தமாவது’ என்று தொடங்கி.

மூ:239. கத்யர்த்தமாவது புத்த்யர்த்தமாய், அத்யவஸியென்றபடி.

வ்யா: அதாவது, ‘வ்ரஜ கதெள’ என்கிற தாதுவிலே கத்யர்த்தமாய். गत्यर्था बुद्ध्यर्था: (“கத்யர்தா2 புத்3த்4யர்தா2:”) என்கிற ந்யாயத்தாலே கத்யர்த்தமாவது புத்த்யர்த்தமாய், அத்யவஸியென்றபடி – என்கை.“இந்த புத்தியாகிறது த்யாஜ்ய கோடியில் உத்தீர்ணமாய், உபாய கோடியில் அநநுப்ரவிஷ்டமாய், ப்ராபகாந்தர பரித்யாகபூர்வகமாய், பகவத்ரக்ஷகத்வாநுமதிரூபமாய், சைதந்ய கார்யமாய், ப்ரார்த்தநாகர்பமாய், பகவந்முகவிகாஸ ஹேதுவாய், ஸ்வரூபாநுரூபமாய், வ்யபிசார விளம்ப விதுரமாய் இருப்பதொரு அத்யவஸாயாத்மக ஜ்ஞாநவிஶேஷம்” என்று பரந்தபடியில் இவர் அருளிச்செய்த இது இவ்விடத்திலேஅநுஸந்தேயம்.

அவ: ‘ஸாமாந்யேந கதிவாசியான இது, மாநஸ வாசிக காயிக ரூபமான கதித்ரயத்தையும் காட்டவற்றாயிருக்க, மாநஸமான அத்யவஸாய மாத்ரத்திலே ஒதுக்குகிறதென்?’என்ன, அருளிச்செய்கிறார் ‘வாசிக காயிகங்களும்’ என்று தொடங்கி.

மூ:240. வாசிக காயிகங்களும் இதுக்கு அபேக்ஷிதங்களாயிருக்கச் செய்தேயும், ஜ்ஞாநாந்மோக்ஷமாகையாலே மாநஸமான அநுஷ்டாநத்தைச் சொல்லுகிறது.

வ்யா: அதாவது, ‘சிந்தையாலுஞ் சொல்லாலுஞ் செய்கையினாலும்’என்கிறபடியே கரணத்ரயத்தாலும் உண்டான ஸ்வீகாரம் அதிகார பூர்த்திக்கு உடலாகையாலே வரணோக்தி ரூபமான வாசிகமும் அஞ்ஜல்யாதி ரூபமான காயிகமும் இந்த ஸ்வீகாரத்துக்கு அபேக்ஷிதங்களாயிருக்கச் செய்தேயும் “ஜ்ஞாநாந்மோக்ஷ:” ஆகையாலே அவையிரண்டையுமொழிய, மாநஸமான அநுஷ்டாந மாத்ரத்தைச் சொல்லுகிறது- என்கை. ஆக ப்ரதிபதம் அர்த்தம் அருளிச் செய்தாராயிற்று.

அவ: இனி பூர்வார்த்தத்தாற்சொல்லுகிற அர்த்தத்தை அநுவதித்து நிகமிக்கிறார் ‘ஆக த்யாஜ்யத்தைச்சொல்லி’ என்று தொடங்கி.

மூ:241. ஆக, த்யாஜ்யத்தைச் சொல்லி, த்யாக ப்ரகாரத்தைச் சொல்லி, பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி, உபாயநைரபேக்ஷ்யஞ்சொல்லி, உபாயத்வஞ்சொல்லி, உபாயஸ்வீகாரம் சொல்லுகிறது.

வ்யா: அதாவது, ஆக பூர்வார்த்தத்தால் ‘ஸர்வதர்மாந்’ என்று த்யாஜ்யத்தைச் சொல்லி, ‘பரித்யஜ்ய’என்று த்யாக ப்ரகாரத்தைச் சொல்லி, ‘மாம்’ என்று பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி, ‘ஏகம்’ என்று உபாய நைரபேக்ஷ்யஞ் சொல்லி, ‘ஶரணம்’என்று உபாயத்வஞ்சொல்லி, ‘வ்ரஜ’ என்று உபாய ஸ்வீகாரஞ் சொல்லுகிறது – என்கை.

அவ: அநந்தரம், உத்தரார்த்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாகக்கோலி, அதில் ப்ரதமபதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘அஹம்’ என்று.

மூ:242. அஹம்.

அவ: இவ்வுத்தரார்த்தத்தில் ஈஶ்வரன் செய்தருளுகிற அம்ஶத்தை அருளிச்செய்கிறார் ‘ஸ்வக்ருத்யத்தை அருளிச்செய்கிறான்’ என்று.

மூ:243. ஸ்வக்ருத்யத்தை அருளிச்செய்கிறான்.

வ்யா: அதாவது அதிகாரி க்ருத்யமிறே பூர்வார்த்தத்திற் சொல்லிற்று; உபாய பூதனான தன்னுடைய க்ருத்யத்தை அருளிச்செய்கிறது இதிலேயிறே.

அவ: இனி இப்பதத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் –‘ஸர்வஜ்ஞனாய்’ என்று தொடங்கி.

மூ:244. ஸர்வஜ்ஞனாய், ஸர்வசக்தியாய், ப்ராப்தனான நான்.

வ்யா: அதாவது यस्सर्वज्ञ: सर्ववित्  (“யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்”) என்கிறபடியே ஸர்வத்தையும் அறியுமவனாய், परास्य शक्ति:विविधैव श्रूयते (“பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே”) என்கிறபடியே எல்லா ஸாமர்த்யத்தையும் உடையனாய் ஶேஷியாகையாலே ப்ராப்தனாயிருக்கிற நான்- என்கை.

அவ: அல்லாத குணங்கள் எல்லாங்கிடக்க, இந்த குண விஶேஷங்களை இவ்வஹம் ஶப்தம் காட்டுகிற இதுக்கு ப்ரயோஜநம் அருளிச்செய்கிறார் – ‘இவன் கீழ்நின்ற நிலையும்’ என்று தொடங்கி.

மூ:245. இவன் கீழ்நின்ற நிலையும், மேல் போக்கடியும் அறிகைக்கும், அறிந்தபடியே செய்து தலைக்கட்டுகைக்கும் ஏகாந்தமான குணவிசேஷங்களையும், தன் பேறாகச் செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான பந்த விஶேஷத்தையும் காட்டுகிறது.

வ்யா: அதாவது இச்சேதநனுக்கு அநிஷ்டநிவ்ருத்தி இஷ்டப்ராப்திகளைப் பண்ணுமளவில், இவன் பூர்வத்தில் நின்ற நிலையும், மேல் போகத்தக்க வழியும் அறிகைக்கும், அறிந்தபடியே அவற்றைச் செய்து தலைக்கட்டுகைக்கும் தக்கவையாயிருந்துள்ள ஸர்வஜ்ஞத்வ ஸர்வஶக்தித்வங்களாகிற குண விஶேஷங்களையும், இவன் கார்யஞ்செய்யுமிடத்தில் இவனுக்காக அன்றிக்கே தன்பேறாகச் செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான ஶேஷித்வரூப பந்த விஶேஷத்தையும் ப்ரகாஶிப்பிக்கிறது – என்கை.

‘மாம்’ என்கிற இடத்தில் ஆஶ்ரயணத்துக்கு ஏகாந்தமான குண விஶேஷங்கள் ப்ரகாஶித்தாற்போலே ‘அஹம்’என்கிற இடத்திலும் கார்ய கரத்வத்துக்கு ஏகாந்தமான குண விஶேஷங்கள் பிரகாஶிக்குமிறே; வாத்ஸல்யாதிகள் இல்லாதபோது ஆஶ்ரயணம் கூடாதாபோலே, ஜ்ஞாந ஶக்த்யாதிகள் இல்லாதபோது கார்யகரத்வம் கடியாமையாலே, இவ்விடத்தில் ஜ்ஞாநஶக்திகளும் ப்ராப்தியுஞ் சொன்ன இது, பூர்த்திக்கும் உபலக்ஷணம்.

அவ: இப்பதத்தில் “மாம்” என்கிற இடத்தில், ஸாரதியாய் நின்ற பாரதந்த்ர்யத்துக்கு எதிர்த்தட்டான அதன் ஸ்வாதந்த்ர்யத்தை ப்ரகாஶிப்பித்தமையை அருளிச்செய்கிறார் ‘தனக்காகக் கொண்ட’ என்று தொடங்கி.

மூ:246. தனக்காகக் கொண்ட ஸாரத்ய வேஷத்தை அவனையிட்டுப் பாராதே தன்னையிட்டுப்பார்த்து, அஞ்சின அச்சந்தீரத் தானான தன்மையைஅஹம்என்று காட்டுகிறான்.

வ்யா: அதாவது, ‘மாம்’என்ற ஸாரத்ய வேஷத்தோடே நிற்கிற தன்னைப் பற்றச் சொன்னபோது, அர்ஜுநன், தன்னுடைய ரக்ஷணார்த்தமாக ஏறிட்டுக்கொண்ட ஸாரத்ய வேஷத்தை ‘ஸர்வாதிகனானவன் இப்படித் தாழநின்றது, தன் குணத்தாலேயிறே’, என்று அவனையிட்டுப் பாராதே, ‘நமக்கு இழிதொழில் செய்து ஸாரதியாய் நிற்கிறவனன்றோ?’என்று தன்னையிட்டுப் பார்த்து, ‘ஸர்வதர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்னா நின்றான்; இது என்னாகக் கடவது?’என்று அஞ்சின அச்சம் தீர ஸ்வாதீந த்ரிவித சேதநா சேதந ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகனாய்க் கொண்டு நிரங்குஶ ஸ்வதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை ‘அஹம்’என்று தர்ஶிப்பிக்கிறான்- என்கை.

அவ: ஏவம் பூதனானவன் பரதந்த்ரனானதும், தனக்கு ஸ்வரூபமாய்ச் செய்ததன்று என்னுமிடத்தை அருளிச் செய்கிறார் – ‘கீழில்’ என்று தொடங்கி.

மூ:247. கீழில் பாரதந்த்ர்யமும் இந்த ஸ்வாதந்த்ர்யத்தினுடைய எல்லை நிலமிறே.

வ்யா: அதாவது கீழ், ஸாரதியாய் நின்ற பாரதந்த்ர்யமும், நினைத்தது செய்யுமளவில் தனக்கொரு நிவாரகரில்லாதபடியான இந்த ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ஸீமாபூமியிறே – என்கை.

அவ: அநந்தரம் த்வீதீயபதத்தை உபாதாநம் பண்ணுகிறார்- ‘த்வா’ என்று. அதுக்கு அர்த்தம் அருளிச்செய்கிறார் ‘அஜ்ஞனாய்’ என்று தொடங்கி.

மூ:248. த்வா – அஜ்ஞனாய், அஶக்தனாய், அப்ராப்தனாய், என்னையே உபாயமாகப் பற்றியிருக்கிற உன்னை.

வ்யா: அதாவது, உன் கார்யங்கள் அறிகைக்குத் தக்க ஜ்ஞாநமில்லாதவனாய், அறிந்தாலும் செய்து தலைக்கட்டிக் கொள்ளுகைக்கு ஶக்தியில்லாதவனாய், அதுதான் உண்டானாலும் உன்னுடைய ரக்ஷணத்தில் உனக்கு ப்ராப்தியில்லாதவனாய், இப்படியிருக்கையாலே ஸர்வ தர்மங்களையும் விட்டு என்னையே நிரபேக்ஷ உபாயமாகப் பரிக்ரஹித்திருக்கிற உன்னை- என்கை.

அவ: அநந்தரம், த்ருதீயபதத்தை உபாதாநம் பண்ணுகிறர் –‘ஸர்வபாபேப்ய:’ என்று. இதுவும்- பாபமும், பஹுவசநமும், ஸர்வ ஶப்தமுமாய் த்ரிப்ரகாரமாய் இருக்கையாலே, இம்மூன்றையும் உட்கொண்டு இப்பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் ‘மத் ப்ராப்தி ப்ரதி பந்தகங்கள்’ என்று தொடங்கி.

மூ:249. ஸர்வபாபேப்ய: – மத் ப்ராப்தி ப்ரதி பந்தகங்கள் என்று யாவையாவை சில பாபங்களைக் குறித்து அஞ்சுகிறாய், அவ்வோபாபங்கள் எல்லாவற்றில் நின்றும்.

வ்யா: அதாவது பாபமாகிறது – இஷ்ட விரோதியாயும் அநிஷ்ட ஹேதுவாயும் இருக்குமதாகையாலும், மோக்ஷ ப்ரகரணமாகையாலே இவ்விடத்தில் இஷ்ட விரோதிகளாகிற பகவல்லாப விரோதிகளாகையாலும், அதில் ஜ்ஞாந விரோதியும் ருசி விரோதியும் உபாய விரோதியும் பண்டே நிவ்ருத்தமாகையாலும், இனி உள்ளது ப்ராப்தி விரோதியாகையாலே நீ என்னை ப்ராபிக்கைக்கு ப்ரதி பந்தகங்கள் என்று யாவை யாவை சில பாபங்களை உத்தேஶித்து பயப்படுகிறாய். அந்த அந்தப் பாபங்களெல்லாவற்றில் நின்றும்- என்கை.

அவ: அதில் பஹுவசந விவக்ஷிதங்களை அருளிச்செய்கிறார் – “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும்” என்று தொடங்கி.

மூ:250. “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்என்கிறபடியே அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களைச் சொல்லுகிறது.

வ்யா: அதாவது, “பொய் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்” என்று ‘உத்பத்தி விநாஶாதி யோகத்தாலே அஸத்ய ஶப்தவாச்யமான அசேதந விஷயத்தில் ஆத்ம ஜ்ஞாநமும், அந்த தேஹாத்மாபிமாநமடியான ஸாம்ஸாரிக துஷ்கர்ம ப்ரவ்ருத்தியும், அந்தக் கர்மமடியாக வரக்கடவதான மாம்ஸ அஸ்ருகாதி மலரூப தேஹ ஸம்பந்தமும்’என்று சொல்லுகிறபடியே அவித்யையும், கர்மமும், வாஸநையும், ருசியும், ப்ரக்ருதி ஸம்பந்தமுமாகிற அவற்றைச் சொல்லுகிறது- என்கை. இவற்றில், அவித்யையாவது – ஜ்ஞாநாநுதய ரூபமாயும், அந்யதா ஜ்ஞாந ரூபமாயும், விபரீத ஜ்ஞாந ரூபமாயும் மூன்று வகைப்பட்ட அஜ்ஞாநம். கர்மமாவது – புண்யபாபம்; மோக்ஷத்தைப் பற்ற பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யமாம்; पुण्यपापे विधूय  (“புண்யபாபே விதூ4ய”) என்னக்கடவதிறே. வாஸனையாவது- அஜ்ஞாந வாஸனையும், கர்ம வாஸனையும், ப்ரக்ருதிஸம்பந்த வாஸனையும், ருசியும் – விஷய பேதத்தாலே பஹுவிதையாயிருக்கும். ப்ரக்ருதி ஸம்பந்தமாவது – ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபமாயிருந்துள்ள அசித் ஸம்பந்தம்.

அவ: இனி, ஸர்வ ஶப்த விவக்ஷிதத்தை அருளிச் செய்கிறார்- ‘த்ருணச்சேத’ இத்யாதியாலே.

மூ:251. த்ருணச்சேத கண்டூயநாதிகளைப்போலே ப்ரக்ருதி வாஸனையாலே அநுவர்த்திக்குமவையென்ன, லோகாபவாத பீதியாலும், கருணையாலும், கலக்கத்தாலும் செய்யுமவையென்ன, எல்லாவற்றையும் நினைக்கிறது.

வ்யா: அதாவது துரும்பு நறுக்குகை, தினவுதின்றவிடம் சொறிகை தொடக்கமானவைபோலே அபுத்தி பூர்வகமாக ப்ரக்ருதி வாஸனையாலே அநுவர்த்திக்கும் உத்தராகங்களென்ன; நாம் இவற்றைச் செய்யாதபோது ‘லோகம் நம்மை அபவாதஞ் சொல்லுமே’ என்கிற பயத்தாலும், ‘நம்மைக் கண்டு லௌகிகர் இவற்றைத் தவிருவர்களாகில் அவர்களுக்கு விநாஶமாமே; ஐயோ!’ என்கிற க்ருபையாலுஞ்செய்யும் நித்ய நைமித்திக கர்மங்களென்ன; ரஜஸ்தமஸ்ஸுக்களாலே கலங்கி த்யக்த உபாயங்களிலே அந்வயித்தல் புந: ப்ரபத்தி பண்ணுதல் செய்யுமவையென்ன; எல்லாவற்றையும் நினைக்கிறது- என்கை.

அவ: ‘ஸாதந புத்த்யா செய்யாதவையும் வஸ்துகதயா ஸாதந கோடியிலே அந்வயிக்கும்’ என்னுமத்தை ஶங்காபூர்வகமாக அருளிச்செய்கிறார் ‘உந்மத்த’ என்று தொடங்கி.

மூ:252. ‘உந்மத்த ப்ரவ்ருத்திக்கு கிராம ப்ராப்தி போலே த்யஜித்த உபாயங்களிலே இவை அந்விதங்களாமோ?’என்று நினைக்கவேண்டா.

வ்யா: அதாவது, उन्मादश्चित्त विभ्रम: (“உந்மாத3ஶ்சித்தவிப்4ரம:”) என்கிறபடியே சித்த விப்ரமம் பிறந்தானொருவன் ‘இன்னவூருக்குப் போகிறோம்’என்கிற நினைவு இன்றிக்கே ஒருவழியே போகாநின்றால், அவ்வழிக்கு ஓரூரோடே ஸம்பந்தமுண்டாயிருக்கையாலே அவ்வூரிலேசென்று சேருமாபோலே, ஸாதந புத்திரஹிதமாக லோகாபவாத பீத்யாதிகளாலே செய்யப்படுகிற இவை, விட்ட உபாயங்களிலே அந்விதங்களாமோவென்று நினைக்கவேண்டா; அந்விதங்களாயே விடுமென்றபடி. “ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநராய் அநுஷ்டித்தாலும், ஏறிட்ட கட்டி ஆகாஶத்திலே நில்லாதாபோலே, அவையும்ஒரு பலத்தோடே ஸந்திப்பிக்கக்கடவது; ஆகையாலே, அவையும் பாப ஶப்தவாச்யமாகக் கடவது” என்றிறே தனி சரமத்தில் இவர்தாமே அருளிச்செய்தது.

அவ: அதுதானேயாகிறது புந:ப்ரபத்திக்கு தோஷம் எது?’ என்ன அருளிச் செய்கிறார் ‘கலங்கி’ என்று தொடங்கி.

மூ:253. கலங்கி உபாயபுத்த்யா பண்ணும் ப்ரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும்.

வ்யா: அதாவது, ஸக்ருத் அநுஷ்டாநமொழியப் புநரநுஷ்டாநத்தை ஸஹியாத ப்ரபத்தி ஸ்வபாவத்தை அறியாதே கலங்கி அநிஷ்ட நிவ்ருத்திக்காகவாதல், இஷ்ட ப்ராப்திக்காகவாதல் உபாயபுத்த்யா மீண்டு பண்ணும் ப்ரபத்தியும்,  अथ पातक भीतस्त्वं (“அத பாதக பீ4தஸ்த்வம்”) என்று உபாயாந்தரம் போலே பாதக ஸமம் – என்கை.

அவ: அநந்தரம், சதுர்த்த பதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று, அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்- ‘முக்தனாம்டி பண்ணக்கடவேன்’ என்று.

மூ:254. மோக்ஷயிஷ்யாமி- முக்தனாம்படி பண்ணக்கடவேன்.

வ்யா: அதாவது இவற்றில் ‘நின்றும் விடப்பட்டவனாம்படி பண்ணக்கடவேன்’ என்கை.

அவ: இனி, ணிஜர்த்தத்தை அருளிச்செய்கிறார் ‘ணிச்சாலே’ என்று தொடங்கி.

மூ:255. ணிச்சாலே – நானும் வேண்டா, நீயும் வேண்டா, அவை தன்னடையே விட்டுப்போங்காணென்கிறான்.

வ்யா: அதாவது “யிஷ்யாமி” என்கிற ணிச்சாலே ஸ்வயம் கர்த்தாவாகையன்றிக்கே தான் ப்ரயோஜக கர்த்தாவாய் விடுவிக்கக் கடவேனென்கையாலே, நானும் இதுக்கு ஒரு யத்நம் பண்ணவேண்டா, நீயும் இதுக்கு ப்ரார்த்திக்க வேண்டா; நீ என்னை ஆஶ்ரயித்த ராஜகுல மாஹாத்ம்யத்தாலே உன்னைக் கண்டு தாமே பயப்பட்டு ”கானோவொருங்கிற்றுக் கண்டிலமால்” என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப்போங்காணென்று அருளிச்செய்கிறான் – என்கை.

அவ: இப்படி அருளிச்செய்ததன் கருத்தை வெளியிடுகிறார் – ‘என்னுடைய’ என்று தொடங்கி.

மூ:256. என்னுடைய நிக்ரஹபலமாய் வந்தவை நானிரங்கினால் கிடக்குமோ? என்கை.

வ்யா: அதாவது, பாபங்களாகிறன, குப்பையில் ஆமணக்குப்போலே மிடற்றைப் பிடிப்பதொன்றன்றிறே; சேதநன் பண்ணின கர்மங்கள் க்ஷணத்வம்ஸிகளாகையாலே, அப்போதே நஶித்துப்போம்; அஜ்ஞனாகையாலே கர்த்தாவான இவனும் மறந்து போக, ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனாய் ஒன்றொழியாமல் உணர்ந்திருந்து ப்ராப்த காலங்களிலே தப்பாமல் நிறுத்து அநுபவிப்பிக்கிற என்னுடைய நிக்ரஹ ரூபமாகையாலே, அந்த நிக்ரஹ பலமாய் வந்தவை, நிக்ரஹத்துக்கு ப்ரதி கோடியான அநுக்ரஹத்தை நான் பண்ணினால் அவ்விஷயத்திற்பின்னை கிடக்குமோ? என்கை இதுக்குக்கருத்து- என்கிறபடி.

அவ: தன்னடையே விட்டுப்போம்’ என்கிற இடத்தில் அபிப்ரேதத்தை அருளிச்செய்கிறார் ‘அநாதிகாலம்’ என்று தொடங்கி.

மூ:257. அநாதிகாலம் பாபங்களைக்கண்டு நீ பட்ட பாட்டை அவைதாம் படும்படி பண்ணுகிறேன்.

வ்யா: அதாவது, அநாதியான காலமெல்லாம் து:க்காவஹமான பாபங்கள் வந்து மேலிடப்புக்கால், அவற்றைக் கண்டு நீ நடுங்கின நடுக்கமெல்லாம் மதாஶ்ரயண ராஜகுல மாஹாத்ம்யமுடைய உன்னைக் கண்டு அவைதான் குடல் கரிந்து நடுங்கும்படி பண்ணக்கடவேன்- என்கை. “அவை தானே விட்டுப்போம்படி பண்ணுகையாவது, இவை நமக்கு முன்பு உண்டாய்க் கழிந்தது என்று தோற்றாதபடி போக்குகை; அதாகிறது- இவை ஸ்ம்ருதி விஷயமானாலும், தன்னுடைய ஸ்வாபாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்நங்கண்டாற்போலே இவை நமக்கு வந்தேறியாய்க் கழிந்ததென்றிருக்கையும், ஸ்ம்ருதியாலே து:க்கம் அநுவர்த்தியாதிருக்கையும்” என்று தனிசரமத்தில் இவர் தாமே அருளிச்செய்தது இவ்விடத்தில் அநுஸந்தேயம்.

அவ: “மோக்ஷயிஷ்யாமி” என்கிற உத்தமனில் அபிப்ரேதமான ஓரர்த்த விஶேஷத்தை அருளிச்செய்கிறார் ‘இனி’ என்று தொடங்கி.

மூ:258. இனி உன்கையிலும் உன்னைக்காட்டித் தாரேன். என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ?

வ்யா: அதாவது, இத்தனை காலமும், ‘நம் கார்யத்துக்கு நாம் கடவோம்’, என்று நீ திரிகையாலே, தன் கார்யம் தானே செய்து கொள்ளுகிறானென்றிருந்த இத்தனை போக்கி, ‘எனக்கு நீ ஶரீரதயா ஶேஷம்’, என்று அறிந்து என்பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு உன்னுடைய பாப விமோசநார்த்தமான யத்நம் நீ பண்ணிக்  கொள்ளென்று உன்கையிலும் உன்னைக் காட்டித் தாரேன்; எனக்கு ஶரீரபூதனான உன்னுடைய அவித்யா ரூபமாலிந்யத்தை ஶரீரியான நானே போக்கிக் கொள்ளேனோ’- என்கை. யத்நபலித்வங்கள் இரண்டும் தன்னதென்று தோற்றுகைக்காக. ஆகையால், உன்னுடைய விரோதியில் கிடப்பதொன்றில்லை என்றபடி. “விரோதி நிவ்ருத்தியும், அபிமத ப்ராப்தியும் இரண்டும் பலமாயிருக்க ஒன்றைச் சொல்லுவானென்னென்னில், ஒன்றைச்சொன்னால் மற்றையது தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்லை;  मामेवैष्यसि (“மாமேவைஷ்யஸி”) என்று, கீழில் உபாயத்துக்குச் சொன்ன பலமொழிய இவ்வுபாயத்துக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்றில்லை என்னவுமாம்; ஆனால், விரோதி நிவ்ருத்திதன்னைச் சொல்லுவானென்? என்னில்- அது அதிகமாகையாலே சொல்லிற்று. விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் ஸித்தமாயிருக்கையாலே, தனித்துச் சொல்ல வேண்டாவிறே” என்று ஸங்க்ரஹேண ஶ்ரிய:பதிப்படி ரஹஸ்யத்திலும், விஸ்தரேண பரந்தபடி தனி சரமங்களிலும் அருளிச்செய்த ஶங்கா பரிஹாரங்கள் இவ்விடத்திலே அநுஸந்தேயம்.

அவ: அநந்தரம், சரமபதத்தை உபாதாநம் பண்ணுகிறார் ‘மாஶுச:’ என்று. அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் ‘நீ உன் கார்யத்திலே’ என்று தொடங்கி.

மூ:259. மாஶுச:– ‘நீ உன் கார்யத்திலே அதிகரியாமையாலும், நான் உன்கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு போருகையாலும், உனக்கு ஶோக நிமித்தம் இல்லை காண்என்று அவனுடைய ஶோக நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான்.

வ்யா: அதாவது, நீ உன் கார்யத்திலே அதிகரித்து நின்றாயாகில், ‘நம் கார்யத்துக்கு என் செய்வோம்?’, என்று கரைந்து ஶோகிக்க ப்ராப்தம்; நான் உன் கார்யத்திலே அதிகரியாதிருந்தேனாகில், ‘நம் கார்யத்தில் இவன் உதாஸீநனாயிரா நின்றான்; நாம் எங்ஙனே உஜ்ஜீவிக்கப் போகிறோம்?’, என்று ஶோகிக்க ப்ராப்தம்; இங்ஙனன்றிக்கே யத்நபலித்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாதபடியான ஸ்வரூப பாரதந்தர்யத்தை உணர்ந்து, நீ உன்னுடைய ரக்ஷண கார்யத்திலே அதிகரியாதொழிகையாலும், உன்னுடைய ரக்ஷணத்தில் யத்ந பலித்வங்கள் இரண்டும் என்னதாம்படி ஸ்வாமியான நான் உன் பக்கத்தில் தடையறுக்கையாலே உன்னுடைய ரக்ஷண கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு போருகையாலும், உனக்கு ஶோகிக்கைக்கு நிமித்தம் இல்லை காண்’ என்று. முன்பு ஶோகாவிஷ்டனாய் நின்ற அவனுடைய ஶோகத்தினுடைய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கிறான்- என்கை.

இத்தால்,‘அஹம் த்வா’என்கிற பதங்களாலே சொல்லப்பட்ட ரக்ஷக ரக்ஷ்யபூதரான இருவருடைய ஸ்வபாவத்தையும் அநுவதித்துக் கொண்டு ஶோகாபநோதநம் பண்ணினபடியை அருளிச் செய்தாராயிற்று.

அவ: இனிமேல், நிவர்த்தகனாக தன்னுடையவும், நிவர்த்யங்களான பாபங்களினுடையவும் ஸ்வபாவங்களைச் சொல்லி ஶோகாபநோதநம் பண்ணினபடியை அருளிச்செய்கிறார்- ‘நிவர்த்தக ஸ்வரூபத்தை’ என்று தொடங்கி.

மூ:260. நிவர்த்தக ஸ்வரூபத்தைச் சொல்லி, நிவர்த்யங்கள் உன்னை வந்த மேலிடாதென்று சொல்லி, உனக்கு ஶோக நிமித்தம் இல்லைகாண் என்கிறான்.

வ்யா: அதாவது, “அஹம்” என்று ஸர்வஜ்ஞத்வாதி குண விஶிஷ்டனாய்க் கொண்டு விரோதி நிவர்த்தகனாயிருக்கிற தன் ஸ்வரூபத்தைச் சொல்லி, “த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று ணிச்சால் நிவர்த்யங்களான பாபங்கள் உன்னைக்கண்டு தானே அஞ்சி ஓடிப்போமொழிய, என்னையே உபாயமாக ஸ்வீகரித்திருக்கிற உன்னை வந்து மேலிடாது என்னுமிடம்சொல்லி, அநந்தரம் “மாஶுச: “ என்கையாலே ‘இப்படியான பின்பு உனக்கு ஶோகிக்க நிமித்தமில்லை’ என்கிறான்- என்கை.

அவ: இத்தலையில் விரோதியைப் போக்குகைக்குத் தான் ஒருப்பட்டு நிற்கிற படியை அறிவித்து, இவனுடைய ஶோகத்தை போக்குகிறமையை அபியுக்தோக்தியை நிதர்ஶநமாக்கிக் கொண்டு அருளிச் செய்கிறார்- ‘எத்தினால்’ என்று தொடங்கி.

மூ:261. ‘எத்தினாலிடர்க் கடற்கிடத்தியேழை நெஞ்சமேஎன்கிறான்.

வ்யா: அதாவது, திருமழிசைப்பிரான் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து, ஸர்வேச்வரன் இத்தலையில் விரோதியைப் போக்கி அடிமை கொள்வதாக ஏன்றுகொடு வந்து புகுந்திருக்கிறபடியைச் சொல்லி, ‘இனி எதுக்காக நீ து:க்க ஸாகரத்திலே அழுந்துகிறாய்?’, என்றாப்போலே, ஈஶ்வரனும் இப்போது இத்தலையில் ஸகல பாபங்களையும் போக்குவதாகத் தானே ஏறிட்டுக் கொண்டமையை அறிவித்து, ‘இனி எதுக்காக ஶோகிக்கிறாய்?’ என்று இவனைக் குறித்து அருளிச் செய்கிறான்- என்கை.

அவ: இனி, இவனுடைய ஶோகம் மறுவலிடாமல் போக்குகைக்கு உறுப்பானதொரு பகவதபிப்ராய விஶேஷத்தை அருளிச்செய்கிறார் ‘பாபங்களை நான் பொறுத்து’ என்று தொடங்கி.

மூ:262. பாபங்களை நான் பொறுத்துப் புண்யமென்று நினைப்பிடா நிற்க, நீ ஶோகிக்கக்கடவையோ?

வ்யா: அதாவது, நீ செய்த பாபங்கள் நான் முந்துற என்னுடைய க்ஷமாவிஷயமாக்கி, அவ்வளவுமன்றிக்கே பின்னை உன்பக்கல் எனக்கு உண்டான வாத்ஸல்யத்தாலே “செய்த குற்றம் நற்றமாகவேகொள்”, “செய்தாரேல் நன்றுசெய்தார்” என்கிறபடியே அவைதன்னைப் பாபமாக நினையாதே புண்யமென்று நினைப்பிடா நிற்க, இனி நீ ஶோகிக்கக் கடவையோ?- என்கை.

ஆக, இவ்வுத்தரார்த்தத்தில் அஞ்சுபதத்தாலும்- நிவர்த்தக ஸ்வரூபத்தையும், நிவர்த்யாஶ்ரயத்தையும், நிவர்த்யங்களான பாபங்களையும், அவற்றினுடைய நிவ்ருத்தி ப்ரகாரத்தையும், தத்கார்யமான ஶோக நிவ்ருத்தியையும் சொல்லிற்றாயிற்று.

அவ: இனி, இந்த ஶ்லோகார்த்தத்தில் ருசி ஒருவனுக்கு உண்டாகையில் உள்ள அருமையையும், இந்த ஶ்லோகந் தனக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தையும், இதில் விஶ்வாஸோத்பத்தியின் அருமையையும், ஈஶ்வரன் தான் முதலிலே இத்தை உபதேஶியாமைக்கு ஹேதுவையும், வேதபுருஷன் உபாயாந்தரங்களை விதிக்கைக்கு ஹேதுவையும், உபாயாந்தரங்களை ஸ்வரூபேண த்யஜிக்குமளவில் தோஷமில்லை என்னுமத்தையும், அவைதான் முகாந்தரேண அந்விதங்கள் ஆகையாலே ஸ்வரூபேண த்யக்தங்கள் அன்று என்னுமிடத்தையும், பேற்றுக்கு ஸாதநம் இன்னது என்னுமத்தையும், பலஸித்திக்கு இவன் பக்கல் வேண்டும் அம்ஶத்தையும், ஈஶ்வரனுக்கு இவனுடைய ஸுக்ருதம் அநிஷ்டம் என்னுமத்தையும், இவ்வர்த்தத்தில் ஆஸ்திக்யாதிகள் உண்டாய்ப் பிழைத்தல் இல்லையாகில் நஶித்தலித்தனை என்னுமத்தையும், வ்யவஸாயஹீநன் இதில் அந்வயித்தால் விநாஶபர்யந்தமாம் என்னுமத்தையும், இதுக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தையும் அடைவே அருளிச்செய்து தலைக்கட்டுகிறார்.

அவற்றில் ப்ரதமத்தில், இதில் ஒருவனுக்கு ருசி பிறக்கையில் உள்ள அருமையை தர்ஶிப்பிக்கைக்காக ஓர் ஐதிஹ்யத்தை அருளிச் செய்கிறார் ‘உய்யக்கொண்டார் விஷயமாக’ என்று தொடங்கி.

மூ:263. உய்யக்கொண்டார் விஷயமாக உடையவர் அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.

வ்யா: அதாவது, தத்வநிர்ணயம் பண்ணின உய்யக்கொண்டார் பக்தி நிஷ்டராயிருக்கையாலே, அவரை ப்ரபத்தி நிஷ்டராம்படி பண்ண வேணுமென்று, அவருக்கு இந்த ஶ்லோகார்த்தத்தை அருளிச்செய்த அளவிலே, ‘அர்த்த ஸ்திதி அழகிதாயிருந்தது; ஆகிலும், அத்தைவிட்டு இத்தைப் பற்றத்தக்க ருசி எனக்கு இல்லை’, என்ன. “வித்வானாகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்; பகவத்ப்ரஸாதம் இல்லாமையாலே ருசி பிறந்ததில்லை”, என்று அவர் விஷயமாக உடையவர் அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது – என்கை.

அவ: இனி, இந்த ஶ்லோகத்துக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச் செய்கிறார்- ‘இதுக்கு ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு’ என்று.

மூ:264. இதுக்கு ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு.

வ்யா: அதாவது, ஶாஸ்த்ரங்களெல்லாம் ஒருதலையும், தான் ஒருதலையுமாயிருக்கிற இந்த ஶ்லோகத்துக்கு ஶாஸ்த்ர விஹிதமான ஸகல தர்மங்களையும் ஸவாஸநமாக விடுவித்து, இச்சேதநனுக்குத்தானே நிரபேக்ஷ ஸாதநமாய், ப்ராப்தி ப்ரதிபந்தக ஸகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு ஸ்வப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் ஸ்வாதீந ஸகல ப்ரவர்த்தகனான ஈஶ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பர்யம்- என்கை.

அவ: இனி, இதில் விஶ்வாஸோத்பத்தியில் அருமையை அருளிச்செய்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி.

மூ:265. “இதுதான் அநுவாதகோடியிலேஎன்று வங்கிப்புரத்து நம்பி வார்த்தை.

வ்யா: அதாவது, இந்த ஶ்லோகார்த்தந்தான் அநுவாதத்தினுடைய கோடியிலே என்று ஆப்ததமரான வங்கிப்புரத்து நம்பி அருளிச்செய்யும் வார்த்தை- என்கை.

அவ: அது எத்தாலே’ என்ன அருளிச் செய்கிறார் அர்ஜுநன் – என்று தொடங்கி.

மூ:266. அர்ஜுநன், க்ருஷ்ணனுடைய ஆனைத் தொழில்களாலும், ருஷிகள் வாக்யங்களாலும், க்ருஷ்ணன் தன் காரியத்திலே அதிகரித்துக் கொண்டு போருகையாலும், இவனே நமக்குத் தஞ்சமென்று துணிந்த பின்பு தன்னைப்பற்றச் சொல்லுகையாலே.

வ்யா: அதாவது, இதுக்கு அதிகாரியான அர்ஜுநன் பால்யமே தொடங்கி க்ருஷ்ணனுடைய அகடிதகடநா ஸாமர்த்ய ப்ரகாஶகமான அதிமாநுஷ சேஷ்டிதங்களாலும்,

एष नारायण: श्रीमान् क्षीरार्णव निकेतन:|

नाग पर्यङ्कमुत्सृज्य ह्यागतो मथुरां पुरीम् ||

(“ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந:|

நாக3பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக3தோ மது4ராம் புரீம்||”),

पुण्या द्वारवती यत्र तत्रास्ते मधुसूदन:|

साक्षाद्देव: पुराणोऽसौ स हि धर्म: सनातन:||

(“புண்யா த்3வாரவதீ யத்ர தத்ராஸ்தே மது4ஸூத3ந:|

ஸாக்ஷாத் தே3வ: புராணோSஸெள ஸஹி த4ர்மஸ் ஸநாதந:||”),

यत्र नारायणो देव: परमात्मा सनातन:|

तत्र कृत्स्नं जगत् पार्थ तीर्थान्यायतनानि च ||

(“யத்ர நாராயணோ தே3வ: பரமாத்மா ஸநாதந:|

தத்ர க்ருத்ஸ்நம் ஜகத் பார்த2 தீர்தா2ந்யாயதநாநி ச||”),

ये च वेदविदो विप्रा: ये चाद्यात्मविदो जना:|

ते वदन्ति महात्मानं कृष्णम् धर्मं सनातनम् ||

(“யே ச வேத3 விதோ3 விப்ரா: யே சாத்3யாத்மவிதோ3 ஜநா:|

தே வத3ந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதநம்||”),

परित्राणं हि गीविन्द: पवित्रं परमुच्यते |

पुण्यानामपि पुण्योऽसौ मङ्गलानाञ्च मङ्गलम् ||

(“பவித்ராணாம் ஹி கோ3விந்த3: பவித்ரம் பரமுச்யதே|

புண்யாநாமபி புண்யோSஸெள மங்க3ளாநாஞ்ச மங்க3ளம்||”),

कृष्ण एव हि लॊकानामुत्पत्तिरपि चाप्यय:

कृष्णस्य हि कृते भूतमिदं विश्वं चराचरम् ||

(“க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய:|

க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூ4தமித3ம் விஶ்வம் சராசரம்||”)

என்றும் இத்யாதிகளாயிருந்துள்ள பராவர தத்த்வ யாதாத்ம்ய வித்துக்களான ருஷிகள் வாக்யங்களாலும், பால்யாத் ப்ரப்ருதி புரவாஸ தஶையோடு வநவாஸ தஶையோடு வாசியற க்ருஷ்ணன் தன் கார்யத்துக்குக் கடவனாய் நோக்கிக் கொண்டு போருகையாலும், ‘இவன் சொல்லுகிற உபாயங்கள் எல்லாம் நமக்குத் தஞ்சமன்று; இவனே நமக்குத் தஞ்சம்’என்று விஶ்வஸித்த பின்பு ‘ஆனால் என்னைப் பற்று’ என்று சொல்லுகையாலே – என்கை.

அவ: இது தன்னை முதலிலே உபதேஶியாமைக்கு ஹேதுவை அருளிச்செய்கிறார் ‘புறம்பு’ என்று தொடங்கி.

மூ:267. புறம்பு பிறந்தது எல்லாம், இவன் நெஞ்சை ஶோதிக்கைக்காக.

வ்யா: அதாவது,

यच्छ्रेय: स्यान्निश्चितम् ब्रूहि तन्मे शिष्य: तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ||

(“யச்2ரேய: ஸ்யாந் நிஶ்சிதம் ப்3ரூஹி தந்மே ஶிஷ்யஸ்தேSஹம் ஶாதி4 மாம் த்வாம் ப்ரபந்நம்”)

என்ற இவனுக்கு உபாயோபதேஶம் பண்ணத் தொடங்குகிறவளவிலே முதலிலே இத்தை உபதேஶியாதே உபாயாந்தரங்களைப் பரக்க நின்று உபதேஶித்தது எல்லாம் ‘அவ்வளவிலே பர்யவஸித்துவிடுமோ? அவற்றினுடைய தோஷ தர்ஶநத்தாலே இவ்வுபாயோபதேஶத்துக்கு அதிகாரியாமோ?’ என்று இவனுடைய ஹ்ருதயத்தை ஶோதிக்கைக்காக- என்கை.

அவ: ஆனால், இவனன்றோ இப்படி ஹ்ருதய ஶோதநார்த்தமாக உபாயாந்தரங்களை உபதேஶித்தவன்? வேதபுருஷன் அவற்றை விதிப்பானேன்? என்ன அருளிச்செய்கிறார்- ‘வேதபுருஷன்’ என்று தொடங்கி.

மூ:268. வேதபுருஷன் உபாயந்தரங்களை விதித்தது, கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டி விடுவாரைப்போலே, அஹங்காரமமகாரங்களால் வந்த களிப்பு அற்று ஸ்வரூபஜ்ஞாநம் பிறக்கைக்காக.

வ்யா: அதாவது, ஆப்ததமனான வேதபுருஷன்

विज्ञाय प्रज्ञां कुर्वीत

(“விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத”),

ओमित्यात्मानं ध्यायथ

(“ஓமித்யாத்மாநம் த்4யாயத”),

आत्मानमेव लोकमुपासीत

(“ஆத்மாநமேவ லோகமுபாஸீத”),

आत्मा वा अरे द्रष्टव्य: श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्य:|

(“ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யஶ்ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்3யாஸிதவ்ய:”) இத்யாதிகளாலே உபாயாந்தரங்களை மோக்ஷஸாதநமாக விதித்தது- பட்டி தின்று திரிகிற பசுவுக்கு இடைஞ்சு வஶப்படுகைக்காகக் கழுத்திலே தடியை கட்டி விடுவாரைப் போலே, அஹங்கார மமகார வஶ்யனாய்க் களித்துத் திரிகிற இவனுக்கு,

जन्मान्तर सहस्रेषु तपोज्ञान समाधिभि:

(“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதி4பி4:”)

என்கிறபடியே காய க்லேஶரூபமான கர்மாநுஷ்டாநம் இந்த்ரிய ஜயம் முதலான அருந்தேவைகளாலே செறுப்புண்டு அந்தக்களிப்புப்போய் பகவத் பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூப ஜ்ஞாநம் பிறக்கைக்காக- என்கை.

அவ: ஆனால், இப்படி ஸ்வரூப ஜ்ஞாநோதய ஹேதுவான இவற்றைவிட்டால் குற்றமாகாதோ?’, என்ன, அருளிச்செய்கிறார் ‘ஸந்யாஸி’ என்று தொடங்கி.

மூ:269. ஸந்யாஸி முன்புள்ளவற்றை விடுமாபோலே இவ்வளவு பிறந்தவன் இவற்றைவிட்டால் குற்றம் வாராது.

வ்யா: அதாவது, சரமாஶ்ரமத்திலே அந்விதனானவன் பூர்வாஶ்ரம தர்மங்களை விடுகிறாபோலே, அந்யோபாயங்களினுடைய ஸ்வரூப விரோதித்வாதிகளாலே ஸித்தோபாயத்திலே இழியும்படி இவ்வளவான ஜ்ஞாநபாகம் பிறந்தவன் இவ்வுபாயந்தரங்களை விட்டால் தோஷமாகாது- என்றபடி.

அவ: இவைதான் ஆகாராந்தரத்தாலே அந்விதங்களாகையாலே, இவற்றில் இவன் தனக்கு ஸ்வரூப த்யாகம் இல்லை’ என்னுமத்தை அருளிச் செய்கிறார் ‘இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன்’ என்று.

மூ:270. இவன்தான் இவை தன்னை நேராக விட்டிலன்.

வ்யா: அதாவது, ஸாதநாந்தர பரித்யாக பூர்வகமாக ஸித்த ஸாதந பரிக்ரஹம் பண்ணின இவ்வதிகாரிதான் கர்ம ஜ்ஞாநாதிகள் ஆகிற இவைதன்னை ஸ்வரூபேண த்யஜித்திலன்- என்கை.

அவ: ‘அது எங்ஙனே?’ என்ன, அருளிச்செய்கிறார் ‘கர்மம்’- என்று தொடங்கி.

மூ:271. கர்மம் கைங்கர்யத்திலே புகும்; ஜ்ஞாநம்ஸ்வரூப ப்ரகாஶத்திலே புகும்; பக்தி ப்ராப்ய ருசியிலே புகும்; ப்ரபத்தி ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்திலே புகும்.

வ்யா: அதாவது, ஸ்வவர்ண ஸ்வாஶ்ரமோசிதமாக இவன் அநுஷ்டிக்கும் விஹித கர்மம், ஸாதந புத்த்யாவன்றிக்கே ஆந்ருஶம்ஸ்யத்தாலே பரார்த்தமாக அநுஷ்டிக்கையாலே, ஈஶ்வரனுக்கு மிகவும் உகப்பாகையாலே, தத்ப்ரீதி ஹேதுவாகப் பண்ணும் கைங்கர்யத்திலே அந்தர்பவிக்கும்.“நுண்ணறிவு” என்கிறபடியே ஸ்வஸ்வரூப ஜ்ஞாந பூர்வகமாகப் பரஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கைக்கும் உறுப்பான ஸூக்ஷ்ம ஜ்ஞாநம், ஸாதந புத்தி கழிந்தவாறே ஸ்வரூபத்தினுடைய ப்ரகாஶத்திலே அந்தர்பவிக்கும்.

भक्त्या त्वनन्यया शक्य: (“ப4க்த்யா த்வநந்யயா ஶக்ய:”) என்கிறபடியே பகவத்ப்ராப்திக்கு ஸாதநமான பக்தி, அந்த ஸாதந புத்தி போனவாறே போஜநத்துக்கு க்ஷூத்துப்போலே ப்ராப்யமான கைங்கர்யத்துக்குப் பூர்வ க்ஷணத்திலே அநுவர்த்திக்கக் கடவதான ருசியிலே அந்தர்பவிக்கும். ஸித்தோபாய வரண ரூபையான ப்ரபத்தி ஏகபதத்திலே சொல்லுகிறபடியே ஸாதந பாவம் கழிந்தவாறே அத்யந்த பரதந்த்ரதயா அநந்ய ஶரணமாயிருந்துள்ள ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய ஜ்ஞாநத்திலே அந்தர்பவிக்கும்- என்கை.

அவ: பக்தி ப்ரபத்திகள் இரண்டையுங் கழித்தால் இவன் தனக்குப் பலஸாதநமாவது எது?’ என்ன, அருளிச் செய்கிறார் ‘ஒரு பலத்துக்கு’ என்று தொடங்கி.

மூ:272. ஒரு பலத்துக்கு அரிய வழியையும், எளிய வழியையும் உபதேஶிக்கையாலே, இவை இரண்டும் ஒழிய பகவத் ப்ரஸாதமே உபாயமாகக்கடவது.

வ்யா: அதாவது, பகவத் ப்ராப்தியாகிற ஒரு பலத்துக்கு

जन्मान्तर सहस्रेषु तपोज्ञान समाधिभि:

नराणां क्षीणपापानां कृष्णे भक्ति: प्रजायते

(“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதி4பி4😐

நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே ப4க்தி: ப்ரஜாயதே||”) என்கிறபடியே அநேக ஜந்மங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளாகிற அங்கங்களாலே ஸாதிக்கப்படுமதாகையாலே அரிதாயிருந்துள்ள பக்தி மார்க்கத்தையும், “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்று ஸகலப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸக்ருதநுஷ்டேயமாகையாலே எளிதாயிருந்துள்ள ப்ரபத்தி மார்க்கத்தையும் உபதேஶிக்கையாலே, ஸாதந கௌரவ லாகவங்களில் தாத்பர்யமின்றிக்கே தத்தத்வ்யாஜேந பலப்ரதனாகா நின்றுள்ள அவனுடைய ப்ரஸாதமே ப்ரதாநமாகையாலே பக்தி ப்ரபத்திகளாகிற இவையிரண்டுமொழிய பகவானுடைய ப்ரஸாதம் உபாயமாகக் கடவது – என்கை.

அவ: ஆனாலும், பேற்றுக்கு இவன் பக்கலிலும் ஏதேனும் உண்டாக வேண்டாவோ?’, என்ன, அருளிச்செய்கிறார் ‘பேற்றுக்கு’ என்று தொடங்கி.

மூ:273. பேற்றுக்கு வேண்டுவது- விலக்காமையும் இரப்பும்.

வ்யா: அதாவது, பலஸித்திக்குச் சேதநன் பக்கல் உண்டாக வேண்டுவது- ஸ்வயத்நத்தாலே அவன் பண்ணும் ரக்ஷணத்தை விலக்காதொழிகையும், அது புருஷார்த்தமாகைக்கு உறுப்பான இரப்பும்- என்கை.

அவ: இங்ஙனன்றிக்கே, இவன் பக்கலிலும் சில ஸுக்ருதம் உண்டானால் ஆகாதோ?’என்ன, உபாயபூதனுக்கு அநிஷ்டமென்னுமத்தை அருளிச்செய்கிறார் ‘சக்ரவர்த்தித் திருமகன்’ என்று தொடங்கி.

மூ:274. சக்ரவர்த்தித் திருமகன், பாபத்தோடே வரிலும் அமையுமென்றான்; இவன், புண்யத்தைப் போகட்டு வரவேணுமென்றான்.

வ்யா: அதாவது, रामो विग्रहवान् धर्म: (“ராமோ விக்ரஹவாந் தர்ம:”) என்கிற சக்ரவர்த்தித் திருமகன்,  यदि वा रावण: स्वयं  (“யதிவா ராவணஸ் ஸ்வயம்”) என்று ‘பாபிஷ்டனான ராவணன்தானாகிலும் அழைத்துவாரும்’, என்கையாலே பாபம் பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கைக்கு உடல் அல்லாமையாலே, ‘பாபத்தோடே வரிலும் அமையும்’ என்றான்.

ये च वेदविदो विप्रा: ये चाद्यात्मविदो जना:|

ते वदन्ति महात्मानं कृष्णम् धर्मं सनातनम् ||

(“யே ச வேத3 விதோ3 விப்ரா: யே சாத்3யாத்மவிதோ3 ஜநா:|

தே வத3ந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதநம்||”)

என்கிற இவன் ‘ஸர்வதர்மாந்பரித்யஜ்ய’ என்கையாலே, பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கைக்கு உடலான புண்யத்தைப் போகட்டு வரவேணுமென்றான் – என்கை. ஆகையால், ஸஹாயாந்தர ஸம்ஸர்க்க அஸஹனான உபாயபூதனுக்கு இவன்பக்கல் ஸுக்ருதம் அநிஷ்டம் என்று கருத்து.

அவ: இவ்வர்த்தத்தில் இழிந்தவனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல், நாஸ்திகனாய் நஶித்தல் ஒழிய, மத்யமஸ்திதியில்லை என்னுமத்தைப் பூர்வாசார்ய வசநத்தாலே அறிவிக்கிறார்- ‘ஆஸ்திகனாய்’ என்று தொடங்கி.

மூ:275. ”ஆஸ்திகனாய் இவ்வர்த்தத்தில் ருசி விச்வாஸங்களுடையனாய் உஜ்ஜீவித்தல், நாஸ்திகனாய் நஶித்தல் ஒழிய நடுவில் நிலையில்லைஎன்று பட்டர்க்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை.

வ்யா: அதாவது, இவ்வர்த்தத்தில் அந்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் ‘இது ஸத்யம்’என்று ஆஸ்திகனாய் இவ்வர்த்தத்தில் ருசியும், ‘இது தப்பாது’ என்கிற விஶ்வாஸமுமுடையனாய் உஜ்ஜீவித்தல், ஶாஸ்த்ரங்களெல்லாம் ஒரு தலையும் இது ஒருதலையுமாய் இப்படியிருப்பதொன்றுண்டோ?’ என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தலித்தனையொழிய, நடுவிலொரு நிலையில்லை” என்று ஸகல ஶாஸ்த்ர வித்தமரான பட்டருக்கு ஆப்ததமரான எம்பார் அருளிச்செய்த வார்த்தை- என்கை.

அவ: வ்யவஸாய ஹீநனுக்கு இதில் அந்வயம் விநாஶத்துக்கு உடலாம்’ என்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச்செய்கிறார் ‘வ்யவஸாயம்’ என்று தொடங்கி.

மூ:276. வ்யவஸாயம் இல்லாதவனுக்கு இதில் அந்வயம், ஆமத்தில் போஜநம்போலே.

வ்யா: அதாவது, இதிற் சொல்லுகிற த்யாக ஸ்வீகாரங்களுக்கு ஈடான வ்யாவஸாயம் இல்லாதவனுக்கு இதிலுண்டான அந்வயம், அஜீர்ண தஶையிற் பண்ணின போஜநம் மரண ஹேதுவாமாபோலே விநாஶஹேதுவாய்ப் பர்யவஸிக்கும்- என்கை.

அவ: இது தனக்கு அதிகாரிகள் இன்னாரென்னுமத்தை அருளிச்செய்கிறார் ‘விட்டுசித்தர் கேட்டிருப்பரென்கிறபடியே அதிகாரிகள் நியதர்’ என்று.

மூ:277. “விட்டுசித்தர் கேட்டிருப்பர்என்கிறபடியே அதிகாரிகள் நியதர்.

வ்யா: அதாவது, “செம்மையுடைய திருவரங்கர்தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்” என்று ‘கரண த்ரயத்தாலும் செவ்வியராய், அது தன்னை அர்த்த க்ரியாகாரியாய்க் கொண்டு கோயிலிலே சாய்ந்தருளினவர்தாம், அர்ஜுந வ்யாஜத்தாலே திருத்தேர்த்தட்டிலே நின்று அருளிச்செய்த யதார்த்தமுமாய்ச் சீரியதுமாய் ஸுலபமுமான “மாமேகம் சரணம் வ்ரஜ” என்கிற வார்த்தையைப் பெரியாழ்வார் கேட்டு தந்நிஷ்டராயிருப்பார்’ என்கிறபடியே இவ்வர்த்தத்துக்கு அதிகாரிகள் இது கேட்டால் இதன்படியே நியதராயிருக்குமவர்கள்- என்கை.

அவ: இவ்வர்த்தநிஷ்டரான ஆழ்வார்களுடைய திவ்யஸுக்தியில் இதுக்கு அர்த்தமாக அநுஸந்திக்கப்படுமவற்றை அருளிச்செய்து, இது தன்னை நிகமிக்கிறார் ‘வார்த்தையறிபவர்’ என்று தொடங்கி.

மூ:278. ”வார்த்தையறிபவர்என்கிற பாட்டும், “அத்தனாகிஎன்கிற பாட்டும் இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்.

வ்யா: அதாவது “வார்த்தையறிபவர்- பேர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யுஞ்சேமத்தை எண்ணித் தெளிவுற்று மாயவற்கு ஆளன்றியாவரோ” என்று “மாமேகம் ஶரணம் வ்ரஜ – ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்ற நல்வார்த்தையை அறியுமவர்கள் பரணிக்கூடு வரிந்தாற்போலே இவ்வாத்மாவைச் சூழப்பொதிந்துகிடக்கிற ஜந்மங்களோடும், அவை புக்கவிடத்தே புகக்கடவதான வ்யாதியோடும், அங்ஙனேயாகிலும் சிறிது நாள் செல்லாதபடி இடிவிழுந்தாற்போலே வரும் ஜரையோடும், அங்ஙனேயாகிலும் இருக்கவொண்ணாதபடி இவனுக்கு அநபிமதமான விநாஶமுமாகிற இவற்றை விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே தள்ளி, அவை போன அநந்தரம் வரக்கடவதான கைவல்யமாகிற மஹா துக்கத்தை ஸவாஸநமாகப் போக்கி, பாதரேகை போலே தன் திருவடிகளின் கீழே சேரும்படி பண்ணி, புநராவ்ருத்தியறும்படி அவன் பண்ணும் ரக்ஷயை அநுஸந்தித்து வ்யவஸிதராய்க் கொண்டு தங்களுக்கு ஆஶ்ரயணீயனாய் விரோதி நிவர்த்தகனான ஆஶ்சர்ய பூதனுக்கு ஒழிய வேறொருவர்க்கு ஆளாவரோ?-என்று நம்மாழ்வாரருளிச் செய்த “வார்த்தையறிபவர்” என்கிற பாட்டும், “முத்தனார் முகுந்தனார் ஒத்தொவ்வாத பல் பிறப்பொழித்து நம்மையாட்கொள்வான்- அத்தனாகி அன்னையாகியாளுமெம்பிரானுமாய்ப் புகுந்து- நம்முள் மேவினார்; ஏழைநெஞ்சமே! எத்தினால் இடர்க்கடல் கிடத்தி” என்று ஹேய ப்ரத்யநீகராகையாலே அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் முக்திபூமி ப்ரதரானவர் ஸகல தேஹவர்த்திகளான ஆத்மாக்களும் ஜ்ஞாநைகாகாரதயா ஒத்து, தேவாதி பேதத்தாலே ஒவ்வாமலிருக்கும் பலவகைப்பட்ட ஜந்மங்களைப் போக்கி, நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போந்த நம்மை நித்யஸுரிகள் கொள்ளும் அடிமையைக் கொள்ளுகைக்காக ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவாயும், ப்ரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவாயும், அடிமை கொள்ளக்கடவ நம்முடைய ஸ்வாமியாயும், இப்படி ஸர்வவித பந்துவுமாய், நம்முடைய தண்மையையும் தம்முடைய பெருமையையும் பாராதே, நம்முடைய ஸர்வ பரத்தையும் தாமேயேறிட்டுக் கொண்டு செய்வாராக ஹேயமான நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; அறிவிலியான நெஞ்சே! நம்முடைய ஹிதம் அறிகைக்கு நாம் ஸர்வஜ்ஞராயோ, அவன் அஜ்ஞனாயோ; ஹிதத்தைப் ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் ஶக்தராயோ, அவன் அஶக்தனாயோ; கார்யஞ்செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ, அவன் அப்ராப்தனாயோ; தன் மேன்மைபாராதே தாழநின்று உபகரிக்குமவனாயிருக்க எத்தாலே நீ து:க்கஸாகரத்திலே கிடக்கிறது?” என்று திருமழிசைப்பிரானருளிச் செய்த “அத்தனாகி” என்கிற பாட்டும் இந்த ஶ்லோகத்துக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்- என்கை.

ஆக, இத்தால் ஸ்வீகாராங்கதயா த்யாஜ்யமான தர்ம விஶேஷங்களையும், அந்த தர்மங்களினுடைய த்யாகப்ரகாரத்தையும், அந்த தர்மத்யாக பூர்வகமாகப் பற்றும் விஷயத்தினுடைய ஸௌலப்யாதி குணயோகத்தையும், அக்குணவிஶிஷ்ட வஸ்துவினுடைய ஸஹாய அஸஹத்வ லக்ஷணமான நைரபேக்ஷ்யத்தையும், நிரபேக்ஷ வஸ்துவினுடைய உபாயபாவத்தையும், அத்தை உபாயத்வேந ஸ்வீகரிக்கையையும், ஸ்வீக்ருதமான உபாயத்தினுடைய ஜ்ஞாந ஶக்த்யாதி குணயோகத்தையும், அக்குண விஶிஷ்ட வஸ்துவிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும், அதிகாரிக்கு விரோதியான பாப ஸமூஹத்தையும், அப்பாப விமோசந ப்ரகாரத்தையும், அப்பாப விமோசகனைப் பற்றின அதிகாரியுடைய நைர்பர்யத்தையும் சொல்லிற்றாயிற்று.

சரமஶ்லோக வ்யாக்யானம் முற்றிற்று

பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்

பெரியஜீயர் திருவடிகளே சரணம்

மணவாள மாமுனிகள் அருளிச்செய்த முமுக்ஷுப்படி வ்யாக்யானம் ஸம்பூர்ணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.