[highlight_content]

திருமந்த்ரப்ரகரணம்

பெரியவாச்சான்பிள்ளைஅருளிச்செய்த

பரந்த ரஹஸ்யம்

ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே !     யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ்ஸதா ||

அவதாரிகை

                 நிர்ஹேதுகபகவத்ப்ரஸாதமடியாக வேத பாஹ்யமான ஸாங்க்யாதிதர்சனங்களில் விமுகனாய், நிர்தோஷப்ரமாணமான வேதத்தில் புகுந்து, அதில் பந்தகமான ஸ்வர்காதி, க்ஷூத்ரபுருஷார்த்தங்களையும் தத்ஸாதனங் களையும் ப்ரதிபாதிக்கிற பூர்வகாண்டத்தில் ப்ரயோஜனமில் லாமையாலே ஜ்ஞானபாகத்திலே புகுந்து, அதிலும் ஐச்வர் யத்திற்காட்டில் நித்யத்வாதிகளாலே சிறிது அதிகமான கைவல்யத்தையும் தத்ஸாதனத்தையும் விட்டு, அவ்வைச்வர்ய கைவல்யங்களைப் போலன்றியிலே ஸ்வரூபாநுரூபமான பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷத்திலே ருசியுடையனாய், தத்ஸாதனமான கர்மஜ்ஞானாதிகளுடைய துஷ்கரத்வாத்யநு ஸந்தானத்தாலே க்லிஷ்டனாய், ஸ்வரூபாநுரூபமான உபாயத் திலே ருசியுடையனாயிருக்கும் அதிகாரிக்கு, அபிமதமாய் அநுரூபமாயிருந்துள்ள அந்த உபாயோபேயங்களைத் தனித் தனியே ஜ்ஞாபிக்கிற ரஹஸ்யத்ரயமும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது.

                தனித்தனியே உபாயோபேயங்களைச் சொல்லு கிறதாகில் அவற்றில் ஒன்று ஜ்ஞானகோசரமாக அமைந்திருக்க, மூன்றும் ஜ்ஞாதவ்யமாக வேண்டுகிறது என்னென்னில் புபுத்ஸு, ஓர் அர்த்தத்திலே நிஷ்டனாகைக்கு அநுருபமான ப்ரமாணங்கள் அநேகங்கள் அபேக்ஷிதங்களாகையாலே, அவ்வோப்ராமாண்யபேதத்தாலே மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக் கடவது.

                     அதில் திருமந்த்ரம் “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச | ஸர்வமஷ்டா க்ஷராந்த:ஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” || என்று ஸகலசாஸ்த்ரஸங்கரஹமாகையாலே சாஸ்த்ர முகத்தாலே ப்ரமாணமாகக்கடவது. இம்மந்திரம் ஶாஸ்த்ரத்வாரா ப்ரமாண மாகிறதாகில், சாஸ்த்ரங்களிலே இந்த உபாயோபேயங்களை ப்ரதிபாதிக்கிற சில வாக்யங்கள் ப்ரமாணமாக அமைந்திருக்க, இம்மந்திரத்தையே நிர்பந்திக்கைக்கு ஹேது என்னென்னில்: அவ்வாக்யங்களைக்கொண்டு அர்த்தநிர்ணயம் பண்ணப்பார்க்கில் அவை பூர்வபாகத்திலேயாகில், ஸகலஶாகாப்ரத்யய ந்யாய ஸஞ்சாரத்தாலே ஸஞ்சரித்து அர்த்தநிர்ணயம் பண்ண வேண்டும். உத்தரபராகத்திலேயாகில், ஸகலவேதாந்த ப்ரத்ய்ய ந்யாயம் ஸஞ்சரித்து அர்த்தநிர்ணயம் பண்ணவேண்டும்.

               அதில் ஸகலஶாகாப்ரத்யயந்யாயமாகிறது:– ஒரு வாக்யத்திலே ஓரர்த்தத்தைச் சொன்னால், அதினுடைய அங்கோ பாங்காதிகளை நேராக அறிகைக்காக, சாகாந்தரங்கள் எல்லாவற்றிலும் ஸஞ்சரித்து, அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களிலும் ஜ்ஞானம் பிறந்து, அவ்வர்த்தங்களுக்கு அந்யோந்யம் பிறக்கும் விரோதங்களையும் சமிப்பித்து, தனக்கபிமதமான அங்கியோடே சேருமவற்றைச் சேர்க்கை யிறே. அது, எலியெலும்பனா யிருப்பானொருவனால் செய்து தலைக்கட்டுவதொன்றன்று. அப்படியே ஸகலவேதாந்தப்ரத்யய மாகிறதும்:– ஒரு வேதாந்தத்திலே ஒரு வாக்யம் ஓரர்த்தத்தைச் சொன்னால், அல்லாத வேதாந்தங்களிலும் ஸஞ்சரித்து, அவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு அந்யோந்யம் விரோதம் பிறவாதபடி விஷயவிபாகம் பண்ணி, தனக்கு அபிமதங்களான அர்த்தங்களோடே சேருமவற்றைச் சேர்க்கையிறே.

                 ஆக, இந்ந்யாயத்வயம் அபேக்ஷிதமாகை யாலே, அது துஷ்கரமாய் ஒரு வாக்யமாத்ரங்கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அசக்யமாகையாலும், “ருசோ யஜூம்ஷி ஸாமாநி” இத்யாதி,யில் சொல்லுகிறபடியே ஸகலசாஸ்த்ர ஸாரதயா ப்ரமாணஸித்தமாய், ஸர்வராலும் அவிகீதமாக ஸ்வீக்ருதமான இம்மந்திரத்திலே உக்தமான அர்த்தத்துக்கு அப்படி க்லேசஸாத்யதை இல்லாமையாலும், இம்மந்த்ரமே நிரபேக்ஷப்ரமாணமாகக் கடவது.

                      இப்படி ஸுத்ருடமாக ச்ருதிஸித்தமே யாகிலும், அது ஒருவனுக்கு உபாதேயமாம்போது சிஷ்டாசார கோசரமாகவேணுமென்னுமிடம். யதா தே தேஷு வர்த்தேரந் ததா தேஷு வர்த்தேதா: யதா தே தத்ர வர்த்தேரந் – ததா தத்ர வர்த்தேதா: இத்யாதிகளிலே சிஷ்யனுக்குக் கர்த்தவ்யங்களை விதிக்கிற ப்ரதேசத்திலே அவர்கள் யாதொருபடி அவற்றிலே வர்த்திப்பார்கள், நீயும் அப்படியே அவற்றிலே வர்த்தி என்றும் அவர்கள் யாதொருபடி அவற்றிலே வர்த்திப்பார்கள், அவ்விடத்திலே நீயும் அப்படி வர்த்தி என்றும் உக்தமாகையாலும், அஷ்டகையில் பசுவிசஸநம் சிஷ்டபரிக்ரஹமில்லாமையாலே, அநுஷ்டிக்கில் ஸ்வரூபஹாநியாம்படியாகையாலும், சிஷ்டாசாரம்ப்ரமாணம்என்று சிஷ்டாசாரத்தையே ப்ரதான ப்ரமாணமாக மீமாம்ஸகர் சொல்லுகையாலும், ஸகலசாஸ்த்ர ஸங்க்ரஹமான திருமந்த்ரத்திலே உக்தமான அர்த்தத்துக்கு சிஷ்டாசாரம் அபேக்ஷிதமாகையாலே, இவ்வர்த்தத்துக்கு சிஷ்டாசாரத்வாரா ப்ரமாணமாகிறது த்வயம்.

                  ஆசார்யருசிபரிக்ருஹீதமான  அர்த்தத்துக்கு சரண்யாபிமதத்வ ப்ரகாசகமான சரமஶ்லோகம், சரண்யாநுமதித் வாரா ப்ரமாணமாகிறது. சாஸ்த்ரஸித்தமுமாய் சிஷ்டாசார ஸித்தமுமான அர்த்தம் சரண்யாபிமதமாயன்றோ இருப்பது; ஆனால் ததபிமதமாகைக்குத் தனியே ஒரு ப்ரமாணாபேக்ஷை உண்டோ ? என்னில் ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்ககாமோயஜேத” என்று விஹிதமுமாய், ஸ்வர்கார்த்த மாக ஜ்யோதிஷ்டோமாதிகளை அநுஷ்டிப்பாருமுண்டாய், தத்தத்கர்மஸமாராதிதனாய், அவ்வோருக்கு பலப்ரதனாய்ப் போரா நிற்கச்செய்தேயும், யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்தி விபச்சித: வேதவாதரதா: பார்த்தநாந்யதஸ்தீதி வாதி ந: காமாத்மாநஸ்ஸ்வர்கபரா:என்று க்ஷேபிக்கக் காண்கையாலே அப்படியே அநபிமதமாயிருப்பதொன்றன்று என்கைக்கு சரண்யாநுமதி அபேக்ஷிதமிறே.

        ஆக இப்படி அர்த்ததார்ட்யஹேதுபூதமான ப்ராமாண்யம் இவை மூன்றுக்கும் தனித்தனியே உண்டாகை யாலே, இம்மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக்கடவது. கிஞ்ச திருமந்தரம், ஸ்வரூபயாதாத்ம்ய ப்ரதிபாதநபரமாகையாலும், த்வயம் உபேயயாதாத்ம்ய ப்ரதிபாதநபரமாகையாலும், சரம ஶ்லோகம் உபாய யாதாத்ம்யப்ரதிபாதநபரமாகையாலும், இம்மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக்கடவது.

                இவ்வர்த்தத்தை ஶாஸ்த்ரஸித்தமாக்குகிறது – திருமந்த்ரம்; உபப்ரும்ஹணஸித்தமாக்குகிறது – சரமஶ்லோகம்; ஸ்வாநுஷ்டானமாக்கித் தருகிறது – த்வயம். ப்ரணவத்துக்கு மந்திரஶேஷம் விவரணமானாப்போலே, மந்த்ரஶேஷத்தை த்வயம் விவரிக்கையாலும், த்வயார்த்தத்தை சரமஶ்லோகம் விவரிக்கையாலும் இம்மூன்றும் ஜ்ஞாதவ்யமாகக்கடவது.

          இவற்றில் வைத்துக்கொண்டு ப்ரதமாநுஸந்தேயமான மந்த்ரரஹஸ்யம், “ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்தம் என்கிற படியே ஸகலார்த்த ப்ரதிபாதகமான சாஸ்த்ரங்களோடு, அவ்வோ ஶாஸ்த்ரப்ரதிபாத்யமான அர்த்தங்களோடு வாசியறத் தனக் குள்ளே உடைத்தாகையாலும், ஸகலபல்ப்ரதோ ஹி விஷ்ணு:என்கிற ப்ரமேயவஸ்துவைப்போலே, ஐஹலௌகிகமைஶ்வர்யம் ஸ்வர்காத்யம் பாரலௌகிகம் | கைவல்யம் பகவந்தஞ் ச மந்த்ரோயம் ஸாதயிஷ்யதி || என்கிறபடியே ஸகலபுருஷார்த்தங்களுக்கும் ஏகஸாதநமாகை யாலும், “நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி, தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்” என்று, முமுக்ஷுக்களுக்கு உபாதேயதமமாக விஷ்ணு காயத்ரியிலே ஓதுகிற வ்யாபக மந்த்ரங்களிலே ப்ரதமோபாத்தமாகையாலும் ஈச்வரனுடைய ஒரோகுணங்களுக்கு ப்ரதிபாதகமாயும், பந்தக பலார்த்திகளுக்கு ஒதுக்கி உபதிஷ்டமாயும் போருகிற “அநந்தா வை பகவந் மந்த்ரா: என்கிற பகவந் மந்த்ராந்தரங்களிற் காட்டில் நெடுவாசி உண்டு. அதுக்கு மேலே வ்யாபகாந்தரங்களிற் காட்டிலும் அர்த்த பௌஷ்கல்யத்தாலே நெடுவாசியுண்டு. அவற்றிற்காட்டில் இதுக்கு அர்த்தபூர்த்தியாலுண்டான வாசி ஏதென்னில்; ஷடக்ஷரி, வ்யாப்யபதார்த்தங்களையும், வ்யாபந ப்ரகாரத் தையும், வ்யாப்திபலத்தையும், வ்யாபகனுடைய குணங்களையும் சொல்லாதே. வ்யாப்திமாத்ர ப்ரகாஶகமாகையாலே அபூர்ணம். வ்யாபநப்ரகாரத்தைச் சொல்லாநிற்கச் செய்தேயும், வ்யாப்ய பதார்த்தங்களுக்கு வாசகஶப்தமில்லாமையாலும், ‘ஸர்வம் வஸதி’ என்று, அர்த்தபலத்தாலே ஸர்வஶப்தம் புகுந்தாலும், அதில் குணம் அந்வயியாமையாலும், இனி குணஸித்திக்காக பகவத்ஶப்தத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டுகையாலும், வ்யாப்திபலத்தைச் சொல்லாமையாலும், திருத்வாதஶாக்ஷரியும் அபூர்ணம். இம்மந்த்ரம், அவை போலன்றியே, வ்யாப்ய பதார்த்தங்களோடு வ்யாபநப்ரகாரத்தோடு வ்யாப்திபடலத்தோடு வ்யாபகனுடைய குணங்களோடு வாசியற ஶாப்தமாகக் காட்டுகையாலே, அல்லாத வ்யாபகமந்த்ரங்களைக் காட்டில் இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தநமான ஆதிக்யமுண்டு.

           இவ்வாதிக்யமில்லையானாலும் “”ஆசார்யவாந் புருஷோவேத,” “ஆசார்யாத் தைவவித்யா விதிதா ஸாதிஷ்டம் ப்ராபத்” என்று, ஆசார்யோபதிஷ்டமாய்ப் போருமர்த்தமே ஒருவனுக்கு உஜ்ஜீவநஹேதுவாயறுவது. அதில் இவ்வா சார்யர்கள் இம்மந்த்ரத்திலே நிஷ்டராய் இத்தையே தஞ்சமாக உபதேசித்துப் போருகையாலே, கீழ்ச்சொன்ன ஆதிக்ய மில்லையேயாகிலும், ஆதரிக்க வேண்டும்படியாயிருப்பதோர் ஏற்றமுண்டு.

                      ஸர்வஜ்ஞரான ஆசார்யர்கள் தாங்கள் இம்மந்த்ரத்திலே நிஷ்டராய்ப் போருகைக்கு ஹேது என்னென்னில்: கரதலாமலகம் போலே பகவத்ப்ரஸாதத்தாலே தத்வஸாக்ஷாத்காரம் பண்ணின ஆழ்வார்கள், ஒருமிடறாக இம்மந்த்ரத்தையே ஆதரித்துப் போருகையாலே, இவர்களும் தந்நிஷ்டராய்ப் போந்தார்கள்.

                ஆழ்வார்கள் ஆதரித்துப் போந்தபடி என்னென் னில்: “வண்புகழ் நாரணன்” “செல்வ நாரணன்” என்று தொடங்கி, “வாழ்புகழ் நாரணன்” என்றும் முடிவாக, ஆதிமத்யாவஸாநமாக இம்மந்த்ரத்தையே நம்மாழ்வார் ஆதரித்துப்போந்தார். “நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாய” என்று தொடங்கி, “ஓவாதே நமோ நாரணா” என்று பெரியாழ்வாரும், “நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்று தொடங்கி, “என்னை நலங் கொண்ட நாரணற்கு” என்று நாச்சியாரும், “நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்” என்று உபக்ரம தசையிலே ஒருகால் சொன்னாப்போல் ஒன்பதின்கால் சொல்லி, “நாராயணா !! மணிவண்ணா ! நாகணையாய் ! வாராய் !” என்று திருமங்கையாழ்வாரும், “நாத்தழும்பெழ நாரணா” என்று தொடங்கி, “நலந்திகழ் நாரணன்” என்று பெருமாளும், “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று தொடங்கி, “எட்டெழுத்தும் – ஓதுவார்கள் வல்லர் வானமாளவே” என்று திருமழிசைப்பிரானும், “நன்மாலை பல கொண்டு நமோ நாரணா ” என்று தொடங்கி, “நாமம் பல சொல்லி நாராயணா” என்று முதலாழ்வார்களும், உபக்ரமத்தோடு உபஸம்ஹாரத் தோடு வாசியற ஆதரித்துப் போந்தார்கள்..

                 ஆழ்வார்கள் ஆதரிக்கைக்கடி தத்வப்ரதிபாத கமான வேதாந்தங்கள் ஆதரிக்கை. அவை ஆதரித்தபடி என்னென்னில்: விச்வம் நாராயணம் என்று தொடங்கி – நாராயணபரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:, | நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: | யச்ச கிஞ்சிஜ்ஜகத்யஸ்மிந் த்ருஶ்யதே ஶ்ரூயதேSபி வா | அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: I ” என்று ஸகலவேதாந்தநிகமந பூதமான நாராயணாநுவாகத்திலும்,  “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் | ந ப்ரஹ்மா நேஶாந: | நேமே த்யாவாப்ருதிவீ | ” என்று மஹோபநிஷத்திலும், “சக்ஷுஶ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண: ஶ்ரோத்ரஞ்ச ஶ்ரோதவ்யஞ்ச நாராயண: | ” என்று தொடங்கி, “திஶஶ்ச ப்ரதிஶஶ்ச ஸர்வம் நாராயண:” என்று முடிவாக நடுவடைய ஸுபாலோபநிஷத்திலும், யஸ்யாத்மா ஶரீரம் | யஸ்ய ப்ருதிவீ ஶரீரம் |” என்று தொடங்கி ”யஸ்ய ம்ருத்யுஶ் ஶரீரம்” என்கிறதீறாக நடுவுள்ள பர்யாயங்கள் தோறும் “ஏஷ ஸர்வபூதாந்தராத்மா அபஹதபாப்மா திவ்யா தேவ ஏகோ நாராயண: ||” என்று அந்தர்யாமிப்ராஹ்மணத்திலும் ஏககண்ட மாக ஆதரித்துப் போந்தது.

                 ஆசார்யவாந் புருஷோ வேத உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநிநஸ்தத்ர தர்ஶிந: I” என்று, ஸாக்ஷாத்க்ருததத்வராயிருக்கும் ஆழ்வார்களுடைய ஆதர விஷயம். இம்மந்த்ரமென்று சொன்னபின்பு, இவர்களுக்கு ஸம்வாதமாக வேதாந்தங்களை எடுக்கக்கடவதோ ? ஆயிருக்க இவர்களுக்கு ஸம்வாதமாக வேதாந்தங்களை ப்ரமாணமாக எடுப்பானென்னென்னில்: ஸ்ம்ருத்யநவகாஶதோஷப்ரஸங்க இதி சேந்நாந்ய ஸ்ம்ருத்ய நவகாஶதோஷப்ரஸங்காத் |” “இதரேஷாம் சாநுபலப்தே: என்கிற அதிகரணத்திலே ப்ரதாந காரணவாதநிராகரணம் பண்ணில், ருஷிம் ப்ரஸ்தம் கபிலம் இத்யாதிகளில் “ஆப்ததயா ச்ருதனாய், ஸ்வயோகபலத்தாலே ஸாக்ஷாத்க்ருததத்வனான கபிலனுடைய வேதார்த்தோப ப்ரும்ஹணார்த்தமாக ப்ரவ்ருத்தையான ஸ்ம்ருதியை அநாத ரிக்க வேண்டும்; அத்தாலே ஸ்ம்ருத்யநவகாசதோஷம் வரும்” என்கிற ஸாங்க்யரைக்குறித்து கபிலஸ்மிருதியை ஆதரிக்கில், யத்வை கிஞ்சமநுரவதத் தத் பேஷஜம் என்ற ஆப்தராக ஶ்ருதிஸித்தராய், ஸ்வயோகமஹிமஸாக்ஷாத்க்ருததத்வரான மந்வாதிகளுடைய ப்ரஹ்மகாரணத்வவாதிகளான ஸ்ம்ருதி களை அநாதரிக்க வேண்டி வருமாகையாலே. வேதார்த்தாநு ஸாரம் பண்ணிப்போருகிற மந்வாதிஸ்ம்ருதிகள் உபாதேய மாகக் கடவது: ஶ்ருதிவிருத்தையான காபிலஸ்ம்ருதி ப்ராந்திமூலையாகையாலே, கழியுண்ணக் கடவது என்று அங்கு நிர்ணயித்தபடியே, தத்வஸாக்ஷாத்காரம் பண்ணி, ஆப்ததமரான ஆழ்வார்களாலே ஆதரிக்கப்பட்டதேயாகிலும், இம்மந்த்ரம் வேதாந்த விருத்தமாகில் அநாதரணியமாகக்கடவது; அங்ஙனன் றிக்கே வேதாந்தங்களாலே ஏககண்டமாக ஆதரிக்கப்படுகை யாலே, இவர்கள் ஆதரித்ததே அர்த்தம் என்னுமிடத்துக்கு ஸம்வாதமாக வேதாந்தங்களை எடுக்கவேண்டும்.

                    வேதாந்தத்திலே உக்தமேயாகிலும், இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத், பிபேத்யல்பஶ்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி. என்று, இதிஹாஸ புராணத்வாரத்தாலே வேதோபப்ரும்ஹணம் பண்ணின ருஷிகளும் “கிம் தத்ர பஹுபிர் மந்த்ரை: “கிம் தத்ர பஹுபிர் வ்ரதை:, நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக:ஆஸீநா வா ஶயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரைக ஶரணா வயம்.”நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்திநீ ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்ஆர்த்தா விஷண்ணா: ஶிதிலாச்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷூ வர்த்தமாநா:, ஸங்கீர்த்ய நாராயணசப்தமாத்ரம் விமுக்தது:க்காஸ் ஸுகிநோ பவந்தி என்று, ஏவமாதிகளாலே ஆதரித்துப் போந்தார்கள்.

                   ஆக, ஸோபப்ரும்ஹணங்களான வேதாந் தங்கள் ஆதரிக்கையாலே. அந்த வேதாந்தஸாக்ஷாத்காரம் பண்ணின ஆழ்வார்கள் ஆதரித்தார்கள். ஆழ்வார்கள் ஆதரிக்கை யாலே. ஆசார்யர்கள் ஆதரித்தார்கள். ஆசார்யர்கள் ஆதரித்தபடி யாலே, நமக்கு இம்மந்த்ர விஶேஷமே ஆதரணீயமாகக்கடவது.

                கிஞ்ச, மந்த்ரஸ்ஸர்வார்த்த ஸாதக: என்கிற படியே, க்ஷூத்ரபலத்தோடு அதிக பலத்தோடு வாசியறத் தானே ஸாதித்துக்கொடுக்கும் வைபவத்துக்கு மேலே, அவ்வோபல ஸாதநகர்மங்களுக்கும் ஜபஹோமாதி,முகத்தாலே ஸஹகாரி யாய்ப் போருமதுவும் ஒரேற்றமுண்டு.

                       அதில் க்ஷூத்ரபலஸாதநமான ஜ்யோதிஷ்டோமாதிகளுக்கு, யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம்” என்கிற உத்கீதோபாஸநந்யாயத்தாலே, தத்தத்ஸாதநஸாத்யமான புண்யத்தினுடைய பலோத்பத்திப்ரதி பந்தகமான ப்ரபாலகர்மங்களைத் தலைசாயப் பண்ணிக்கொடுத் தும் அப்புண்யாதிஶயத்தைப் பண்ணிக்கொடுத்தும் ஸஹகாரி யாகக் கடவது.

                   அப்படி விலக்ஷணபுருஷார்த்தஸாதநமான கர்மஜ்ஞாநாதிகளுக்கும் ஸஹகரித்துப் போரும். அதில், கர்ம யோகத்தில் இழியுமவனுக்கு கர்மயோகாரம்பவிரோதிபாபக்ஷய ஹேதுவாயும், அந்தக் கர்மத்தினுடைய அவிச்சேதாபாதகமாய், கர்மஸாத்யமான ஜ்ஞாநத்தைச் சடக்கெனப் பலிப்பித்தும், ப்ரத மத்திலே ஜ்ஞாநயோகத்திலே இழிய நினைக்குமவனுக்கு கர்மஸாத்யமான ஜ்ஞாநாரம்பவிரோதிபாபக்ஷயத்தைப் பண்ணிக்கொடுத்தும், அந்த ஜ்ஞாநத்துக்கு நாடோறும் அதிஶயத் தைப் பண்ணிக்கொடுத்தும், ஜ்ஞாநபலமான பக்தியை சடக்கென பலிப்பித்தும், பக்தியோகத்திலே இழியுமவனுக்கு பக்தியோகா ரம்பவிரோதி பாபக்ஷயத்தைப் பண்ணிக்கொடுத்தும், பக்தி வ்ருத்தி ஹேதுவாயும், பக்திவிபாகமான பரஜ்ஞாநாதிகளைப் பண்ணிக்கொடுத்தும், மூன்றுக்கும் ஸஹகரிக்கும்.

                  இதுக்கு, இந்த வைபவங்களெல்லாம் உண்டாகைக்கடி ஶப்தவைலக்ஷண்யமோ அர்த்த வைலக்ஷண் யமோ ? என்னில்: ஸகலஶப்தகாரணதயா வந்த ஶப்த வைலக்ஷண்யமடியாக வைபவமுமுண்டு; ஸகலார்த்தப்ரதிபாத கதயா வந்த அர்த்தவைலக்ஷண்யமுமுண்டு. அங்ஙனன்றியிலே புழுகு சட்டம் போலே இம்மந்த்ரத்துக்கு வைபவம், உள்வாயிலே கிடக்கிற அர்த்தத்தினுடைய வைலக்ஷண்ய மென்றுமாம்.

                      இப்படி ஶ்லாக்யமான இம்மந்த்ரத்தில் அர்த்தாம்சத்திலே நிஷ்டராய்ப்போருவார்கள் நம்மாசார்யர்கள். அதுக்கடியென்னென்னில்: அவர்கள், தங்கள் இஷ்டாநிஷ்ட ப்ராப்திபரிஹாரங்களுக்கு ஸஹகாரி ஸஹமன்றியிலே இருப்ப தொரு ஸாதநவிஶேஷத்தைப் பரிக்ரஹிக்கையாலே, ஜ்ஞாத வ்யார்த்தமாத்ரஜ்ஞானமே அமைகையாலும், அதுக்கு மேலே பாதமாசார்யபூதரான நம்மாழ்வார், “எண்பெருக்கந்நலத் தொண் பொருளீறில வண்புகழ் நாரணன்” என்றும், “நாரணன் முழு வேழுலகுக்கும் நாதன்’ என்றும், இந்த நாராயண ஶப்தத்தைச் சொல்லும்போது, பூர்வோத்தரங்களிலே இதிலர்த்தத்தைச் சொல்லிப்போருவதொரு வ்யவஸ்தை உண்டாகையாலும், இதிலே அர்த்தாம்ஶத்திலே நிஷ்டராய்ப் போருவர்கள், இவ்வர்த் தத்தைப் பொதிந்துகொண்டு கிடக்கையாலே, கிழிச்சீரையோ பாதி ஶப்தத்தையும் ஆதரித்துப்போருவர்கள்.

அவதாரிகை ஸம்பூர்ணம்

      திருமந்த்ரப்ரகரணம்

அவதாரிகை

                        ஆக, ஸகலஶாஸ்த்ரஸங்க்ரஹமாய், ஜஞாத வ்யார்த்தங்களடையத் தனக்கு உள்வாயிலே புஷ்கலமாக உடைத்தாய், அந்யநிரபேக்ஷமாக ஸகலார்த்தங்களையும் ஸாதித்துத்தரும் வைப வத்தையுடைத்தாய், ஸாதநாந்தரங்களுக்கும் ஸ்வஸம்பந்தத்தாலே உந்மேஷகரமாய் ஸர்வமந்த்ராந்தரங்களிற்காட்டிலும் அதிகமாய், ஆசார்யர்களோடு ஆழ்வார்களோடு வேதாந்தங்களோடு ருஷிகளோடு வாசியற எல்லாராலும் ஏககண்டமாக ஆதரிக்கப்படுகிற இம்மந்த்ரந்தான், “ஓமித்யேகாக்ஷரம் நம இதித்வே அக்ஷரே, நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி இத்யஷ்டாக்ஷரம், சந்தஸா காயத்ரீ சேதி” என்று, எட்டுத் திருவக்ஷரமாய் மூன்று பதமாய் காயத்ரீ என்கிற சந்தஸ்ஸை உடைத்தாயிருக்கும். “ஓமித்யேகாக்ஷரம்” என்று ப்ரணவத்தை மந்த்ரசரீரத்துக்கு அவயவ மாக்குகையாலே, இம்மந்த்ரஶரீரம் ஸகல மந்த்ர ஸாதாரணமா யிருக்கிற ப்ரணவத்தையொழியவே, அஷ்டாக்ஷராத்மகமாய் இருக்கும் என்கிறவர்களை வ்யாவர்த்திக்கிறது.  “நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி” என்று அஞ்சு அக்ஷரமாகச் சொல்லுகையாலே “நார” என்கிற இடத்தில் அகாரத்தை ஓரக்ஷரமாக்கி, இத்தை ஆறக்ஷரமாகச் சொல்லுமவர்களை  வ்யாவர்த்திக்கிறது.

                          ஆக, இப்படி அஷ்டாக்ஷராத்மகமாய், பதத் ரயாத்மகமான இத்திருமந்த்ரம், ஆத்மஸ்வரூபயாதாத்ம்யத்தை ப்ரகாசிப்பிக்கிறது. “ப்ரஹ்மண: ப்ரணவம் குர்யாதாதா வந்தே ச ஸர்வதா, ஸ்ரவத்யநோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விஶீர்யதே.” என்று வேதம் கீழ் ஒழுகிப் போகாமைக்காகவும், மேல் சிதறிப் போகாமைக்காகவும், கீழும் மேலும் செப்புப்போலே மூடிக் கொண்டுகிடக்கக்கடவதாய், ஸகலமந்த்ரங்களுக்கும் ஸ்வஸம்பந்தத் தாலே உந்மேஷகரமாயிருக்கும். இம்மந்த்ரத்திலே ப்ரதமபதமான ப்ரணவம், மந்த்ரஶேஷத்துக்கு ஸங்க்ரஹமாய், ஏகாக்ஷரமுமாய், அக்ஷரத்ரயாத்மகமுமாய். பதத்ரயாத்மகமுமாய், வாக்யாத்மகமுமாய் இருக்கும். “ஓமித்யேகாக்ஷரம்” “ஓமி தயேகாக்ஷரம் ப்ரம்ஹ” “மூலமாகியவொற்றையெழுத்தை’ என்கையாலே ஏகாக்ஷரமாயிருக்கும். “அகார உகார மகார இதி, தானேகதா ஸமபரத், ததேததோமிதி” “அகராஞ்சாப்புகாரஞ்ச மகாராஞ்ச ப்ரஜாபதி:, வேதத்ரயாந்நிர ப்ருஹத்” என்று அகார உகார மகார ரூபமாய் இருக்கையாலே, மூன்றக்ஷரமாயிருக்கும். இவை ஓரோரக்ஷரங்களே, ஒரோ அர்த்தங்க ளுக்கு வாசகமாகையாலே, மூன்று பதமாயிருக்கும். இம்மூன்று பதமும் கூடி ஓரர்த்த விஶேஷத்தோடே தலைக்கட்டிவிடுகையாலே, வாக்யாத்மகமாயிருக்கும். இப்ரணவத்தில் ப்ரதமபதமான அகாரம், “நாமரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச பரபஞ்சநம் வேதசப்தேப்ய ஏவாதெள தேவாதீநாம் சகார ஸ:.” என்று, வேதம் லௌகிக ஶப்தங்களுக்கெல்லாம் காரணமாயிருக்கிறாப்போலேயும், அவ்வேதங் கள் தனக்கு “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச | ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம் ||” என்று இம்மந்த்ரவிஶேஷம் காரணமாமாப்போலே, இம்மந்திரத்துக்கு, ஸங்க்ரஹமான ப்ரணவம் காரணமாமாப்போலேயும், “தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய” என்று ப்ரக்ருதிஶப்தத்தாலே சொல்லுகையாலே, ப்ரணவத்துக்கு, அகாரம் காரணமாயிருக்குமாகையாலே, “அகாரோ வை ஸர்வா வாக்” என்று, ஸர்வஶப்தமும் அகாராந்தர்கதமாய் இருக்கும். அர்த்தாபிதாயியான ஸகலஶப்தங்களையும் கர்பித்துக் கொண்டிருக்கையாலே, அவ்வோஶப்த வாச்யமான அர்த்தங்களுக் கெல்லாம் வாசகமாயிருக்கும்.

அகாரார்த்தம்

இது, ஸர்வார்த்தங்களுக்கும் வாசகமாயிருக்கிறபடி எங்ஙனே யென்னில்: இந்த அகாரம் “அவ-ரக்ஷணே” என்கிற தாதுவிலே ரக்ஷணவாசியாய், அந்த ரக்ஷணமாகிற தர்மந்தான், நிராஶ்ரய மாகவும், நிர்விஷயமாகவும் நில்லாமையாலே ரக்ஷணைக நிரூபணீயமான ரக்ஷகவஸ்துவையும் காட்டி, ரக்ஷணந்தனக்கு ரக்ஷ்யவஸ்து அபேக்ஷிதமாகையாலே ரக்ஷ்யவஸ்துவையும் காட்டுகிறது. அதில், ஒரு ராஜ்யம், ஒரு லோகம், ஒரு த்ரை லோக்யம் என்றாப்போலே ரஷ்யவிஶேஷத்தை ஒதுக்கிச் சொல்லாமையாலே, சிதசிதாத்மகமான ஸர்வமும் ரக்ஷ்ய மாயறும். ஸர்வமும் ரக்ஷ்யகோடியிலே புகுருகையாலே ஆஶ்ரயாபேக்ஷயா புகுந்த ரக்ஷகன் ஸர்வரக்ஷகனாயறும். ரக்ஷணந்தனக்கு ப்ரகாராபேக்ஷை யுண்டாகையாலே, ஸர்வ ப்ரகாரரக்ஷகத்வமும் சொல்லிற்றாயிற்று. ஆக, ரக்ஷ்யரக்ஷகாத் மகமான ஸகலபதார்த்தங்களையும் வசிக்கையாலே, அவ்வோ ஶப்தங்களுக்கு வாச்யமான அர்த்தங்களுக்கும் இந்த அகாரமே வாசகம் என்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம்.

                    “அ இதி ப்ரஹ்ம” “அகாரோ வை விஷ்ணு:” “அக்ஷராணாமகாரோஸ்மி” யத்வேதாதெள ஸ்வர:” “அ இதி பக,வதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதாநமபிதததா கிம் நாம மங்களம் ந க்ருதம்” என்கிற ப்ரமாணங்களாலே ஸர்வரக்ஷகனாகச் சொல்லுகிறதும் ஸர்வேஶ்வரனை என்னு மிடம் ஸம்ப்ரதிபந்நமாகிறது. “ந ஹி பாலந ஸாமர்த்யம் ருதே ஸர்வேஶ்வரம் ஹரிம்” என்று, ரக்ஷணதர்மம் பகவத் வ்யதிரே கேண ஆஶ்ரயாந்தரத்தில் கிடவாது என்கையாலும், அகாரவாச்யனான ஸர்வேஶ்வரனை, ரக்ஷகனாகச் சொல்லு கிறது. பத்தமுக்தநித்யாத்மகமான உபயவிபூதியையும் ரக்ஷ்ய மாகச் சொல்லுகிறது. அதில் பத்தவர்க்கத்தில் அஜ்ஞகோடி யைக் கர்மாதுகுணமாக ரக்ஷிக்கும். முமுக்ஷுக்களை ஸ்வரூபாநு குணமாக ரக்ஷிக்கும். முக்தரையும் நித்யரையும், போகாநுகுணமாக ரக்ஷிக்கும். இனி ஸர்வரக்ஷகனென்று சொல்லுகிறது – இன்னானை; ரக்ஷ்யவஸ்துக்கள் – இன்னவை; ரக்ஷண ப்ரகாரம் – இன்னது; என்னுமிடத்தை மேலே விவரணத்திலே விசதமாக்கக் கடவது. ஆக, அகாரத்தாலே ஸ்வேதரஸமஸ்த பதார்த்தங்களுக்கும் ஸர்வப்ரகாரரக்ஷகன் ஸர்வேஶ்வரன் என்றதாயிற்று.

                       “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி,” என்று. “யாவனொருவன் பக்கல் நின்றும் இந்த ஜகத்து உண்டாகாநின்றது; உண்டான ஜகத்து, யாவனொருவனாலே ரக்ஷிக்கப்படுகிறது” என்று, ஸர்வகாரண வஸ்துவுக்கே ஸர்வரக்ஷகத்வத்தைச் சொல்லுகையாலே, இந்தப் பதத்தில் சொன்ன ஸர்வரக்ஷகத்வம் ஸர்வகாரணத் வத்தையும் காட்டுகிறது. இந்த ரக்ஷணஸ்ருஷ்ட்யாதிகளுக்கு ஜ்ஞாந ஶக்த்யாதிகள் அபேக்ஷிதமாகையாலே, ஸமஸ்த கல்யாணகுணாத்மகத்வத்தையும் சொல்லுகிறது. இந்த கார ணத்வத்தாலே உபாஸ்யத்வமும் ஶரண்யத்வமும் சொல்லிற் றாயிற்று. காரணந்த த்யேய: யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஶ்ச ப்ரஹிணேதி தஸ்மை – முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே என்று, காரண வஸ்து வையே முமுக்ஷுவுக்கு உபாஸ்யமாகவும் ஶரண்யமாகவும் சொல்லிற்றிறே.

                     தத்க்ரதுந்யாயத்தாலே உபாஸ்யமாயும் ஶரண்யமாயுமிருக்கிற வஸ்துவேயிரே முமுக்ஷுவுக்கு ப்ராப்யமாயறுவது. ஆகையாலே ப்ராப்யத்வமும் சொல்லிற் றாயிற்று. ப்ராப்யத்வப்ரயுக்தமான விலக்ஷணவிக்ரஹ யோகாதிகளும் சொல்லிற்றாயிற்று. அநந்யஸாத்யமான அவ்வஸ்துவேயிறே ஆஶ்ரிதனுக்கு விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக அபிமதத்தை ஸாதித்துக்கொடுப்பது. ஆகையாலே உபாயபாவமும் சொல்லிற்றாயிற்று

                “ஶ்ரிய: பதி:” என்கிறபடியே, பிராட்டி, பகவத் ஸ்வரூபநிருபகையாகையாலே “யத்யபி ஸச்சித்தோ ந நிர்புக்ணதைவதம் குணகணம் மநஸாநுதாவேத் ததாப்யந்தர் குணாமேவ தேவதாம் பஜதே, தத்ராபி ஸகுணைவ தேவதா ப்ராப்யதே என்கிற குனஸித்தி நியாயத்தாலே லக்ஷ்மீஸம்பந்த மும் ஆர்த்தமாக இவ்விடத்திலே சொல்லிற்றாயிற்று. அணுரேஷ ஆத்மா என்று, ஆத்மஸாமாந்யப்ரயுக்தமாய் இவளுக்கு வரும் அணுத்வமும், யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ஈஶ்வரனோபாதி இவளுக்குமுண்டான ஸர்வவ்யாபகத்வமும் தன்னில் தான் விருத்தமாய், ஏகாஶ்ரயஸ்தமாகக் கூடாமையாலே இரண்டும் கூடுகைக்காக, அநுபபத்யமாநார்த்ததர்ஶனாத் உபபத்யமாநார்த்தாந்தா – கல்பநமர்த்தாபத்தி: என்கிற அர்த்தாபத்தியின்படியே, அபரிச் சேத்யமான ஸ்வருப வைபவத்தை யுடையனான ஈஶ்வரன் அத்யந்தஸூக்ஷ்மமான பதார்த்தங்களிலே பண்ணும் ஸமாப்ய வ்யாப்திக்கு ஒரு ஶக்திவிசேஷத்தைக் கொள்ளுமோபாதி, இவளும் ஒரு ஶக்தி விஶேஷத்தாலே வ்யக்த்யாஶ்ரயமான ஜாதி போலே, ஈஶ்வரன் வ்யாபித்தவிடமெல்லாம் வ்யாபிக்கக் கடவளாகையாலே, ஈஶ்வரஸ்வரூபநிருபகை என்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். வ்யக்திக்கும் ஜாதிக்குமுண்டான ஸம்பந்தம் போலேயிறே ஈஶ்வரனுக்கும் பிராட்டிக்குமுண்டான ஸம்பந்தம். அதில் ஜாதியாகிறது – வ்யக்தி ஸ்வரூபத்தைப் பற்றிக்கிடக்கக் கடவதாய், அதில்லாதவன்று தான் இல்லையென்னலாம்படி யாய், வ்யக்தியுள்ள விடமெங்கும் வ்யாபிக்கவும் கடவதாய், ஸ்வாஶ்ரயத்துக்கு இதரவ்யவச்சேதகமுமாய், ஶேஷமுமா யிருக்கும். வ்யக்தியாகிறது – ஜாதிக்கு ஆச்ரயமுமாய், ஜாதி யோடே வ்யாப்தமுமாய் ஜாதிவ்யவச்சேத்யமுமாய், ஜாதிக்கு சேஷியுமாயிருக்கும். அதில் ஜாதி போலே பிராட்டியும் அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா” “அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா” “நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோஶ் ஶரீரநபாயிநீ” என்று சொல்லுகிறபடியே, ஆதித்யனுடைய ப்ரபை போல் பிரியில் ஸ்திதியில்லாதபடி ஈஶ்வரஸ்வரூபத்தை ஆஶ்ரயமாகவுடையளாய், “யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததை வேயம் த்விஜோத்தம” த்வயா ச விஷ்ணுநா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் என்று ஈச்வரனுள்ளவிடமெங்கும் வ்யாப்தையுமாய், ஶ்ரிய:பதி:” “நித்யஸ்ரீ: என்கிறபடியே பகவத் ஸ்வரூபத்தினுடைய இதரவ்யவச்சேதபுத்திஹேதுபூதையுமாய், “விஷ்ணுபத்நீ” என்கிறபடி பகவச்சேஷபூதையுமாயிருக்கும். அவனும், வ்யக்தி போலே இவளுக்கு ஆஶ்ரயமுமாய், இவளோடே வ்யாப்தனுமாய், இவளைக் கொண்டறிய வேண்டும்படியுமாய், இவளுக்கு சேஷியுமாயிருக்கும்.

                     இனி, ஜாதிநிரூப்யமான கடவ்யக்தியைச் சொன்னபோதே, நிரூபகமான ஜாதியும் தன்னடையே அந்வித மாமாப்போலே, இப்பதமும் நிரூப்யனான ஈச்வரனைச் சொன்ன போதே, நிரூபகபூதையான பிராட்டியையும் சொல்லிற்றாயிற்று. ஆக, இப்பதத்திலே ஸர்வரக்ஷகத்வமும், ஸர்வகாரணத்வமும், ஸமஸ்தகல்யாணகுணாத்மகத்வமும், உபயவிபூதிநாயகத்வ மும், ஸர்வஸ்மாத்பரத்வமும், உபாஸ்யதையும், ஶரண்யதை யும், உபாயத்வமும், உபேயத்வமும், விலக்ஷணவிக்ரஹயோக மும், ஶ்ரிய:பதித்வமும் சொல்லிற்றாயிற்று.

 

லுப்தசதுர்த்தியின் அர்த்தம்

இந்த அகாரத்திலே சதுர்த்தி ஏறி, “ஸுபாம்ஸுலுக்” என்று லுப்தமாய்க் கிடக்கிறது. இந்த அகாரத்தில் சதுர்த்தி ஏறுமென்னுமிடத்தில் ப்ரமாணமென்னென்னில்: இதினுடைய விவரணமான நாராயணபதம் சதுர்த்யந்தமாகையாலே, ஸங்க் ரஹமான இதுவும் சதுர்த்யந்தமாகவேண்டும். சதுர்த்யந்தமா காதே ப்ரதமாந்தமாய் “தத்த்வமஸி” போலே, ஆத்மபரமாத்மாக் களுடைய ஐக்யபரமாகிறதென்னுமர்த்தம், விவரணத்தோடே விரோதிக்கும். அதுக்கு மேலே நாராயணபதத்திற்சொல்லுகிற சரீராத்மபாவத்தோடும் விரோதிக்கும். “அஹமபி ந மம பகவத ஏவாஹமஸ்மி” என்று ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வக மாக பகவதேகபாரதந்த்ரியத்தைச் சொல்லுகிற நமஶ்ஶப்தத் தோடும் விரோதிக்கும். “பதிம் விஶ்வஸ்ய” “பதிம் பதீநாம்” ப்ரதாநக்ஷேத்ரஜ்ஞபதிர் குணேஶ:” “ஜ்ஞாஜ்ஞௌ த்வாவஜாவீஶநீஶௌ” “கரணாதி பாதிம்” “க்ஷராத் மாநா வீஶதே தேவ ஏக:” “யஸ்யாஸ்மி” “பரவாநஸ்மி” “தாஸபூதாஸ் ஸ்வதஸ்ஸர்வேஹ்யாத் மாந: பரமாத்மந:” “ஆத்மதாஸ்யம் ஹரேஸ்ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதாஸ்மா” “தாஸோஹம் வாஸுதேவஸ்ய” ‘உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத: யோ லோகத்ரய மாவிஶ்ய பிபாத்யவ்யய ஈஶ்வர:II” என்று, ஈஶ்வரனுடைய சேஷித்வத்தையும் சேதனனுடைய ஶேஷத்வத்தையும் சொல்லுகிற ஶ்ருதிஸ்ம்ருதிகளோடு விரோதிக்கும். ஆகையால், இது சதுர்த்யந்தமாகக்கடவது. இச்சதுர்த்திதான் தாதர்த்யே சதுர்த்தியாய் ஈஶ்வரனுக்கு இஷ்டவிநியோகார்ஹமாம்படி சேஷமாயிருக்குமென்கிறது.

 

உகாரார்த்தம்

அநந்தரம் இச்சேஷத்வத்துக்குக்களையான அந்யார்ஹதையைக் கழிக்கிறது – அவதாரணார்த்தமான உகாரம். அதாவது – க்ஷேத்ர புத்ரதாரதேஹகுணாதிகளுடைய ஶேஷத்வத்திற்காட்டில் வ்யா வ்ருத்தமாயிருக்கை; க்ஷேத்ராதிகள் க்ரயவிக்ரயார்ஹமாகை யாலே அநந்யார்ஹசேஷமன்று; புத்ரன் அவைபோலே க்ரய விக்ரயார்ஹனன்றேயாகிலும் மாத்ருபித்ருப்ரப்ருதிகளோடு அஸங்க்யாதரான தேவதைகளோடு வாசியற எல்லார்க்கு மொக்க ஏககாலத்திலே ஸாதாரணஶேஷமாயிருக்கையாலே, அவனுக்கும் அநந்யார்ஹ சேஷத்வமில்லை; அக்நிஸாக்ஷிக மாக பாணிக்ருஹீதையான ஸ்த்ரீயும், கர்மோபாதிகஸம்பந்த மாகையாலே காலாந்தரத்திலே அந்யார்ஹையாகைக்கு யோக்யதையுண்டு; ஆகையாலே இவளுக்கும் நிருபாதிகமான அநந்யார்ஹசேஷத்வமில்லை; அந்த க்ஷேத்ரபுத்ராதிகளைப் போலே ப்ருதக்ஸித்தமாகையன்றியிலே அப்ருதக்ஸித்தமாய் ஶேஷமாயிருந்ததேயாகிலும், தேஹத்துக்கும் அநந்யார்ஹ சேஷத்வமில்லை. பார்யாசரீரம்  பர்த்தாவுக்கு ஶேஷமாயிருக் கும்; பர்த்ருஶரீரம் தேவாதிகளுக்கு ஶேஷமாயிருக்கும்; அதுக்கு மேலே கூழாவணமாக எழுதிக்கொடுக்கும்; ஆகையாலே தேஹத்துக்கும்  அநந்யார்ஹஶேஷத்வமில்லை; குணம், “யஸ்யைதே தஸ்ய தத்தநம் என்கிற ந்யாயத்தாலே, குணி சேஷமானவிடத்துக்குத் தான் ஶேஷமாயிருக்கையாலே, அநந்யார்ஹ  ஶேஷத்வமில்லை; அப்ருதக்ஸித்தியே உள்ளது.

                       ஈச்வரனுக்கு இவ்வாத்மவஸ்து ஶேஷ மாயிருக்குமிடத்தில் க்ஷேத்ராதிகளைப் போலன்றியிலே க்ரய விக்ரயாநர்ஹமாயிருக்கும்; புத்ராதிகளைப்போலே ஸர்வ ஸாதாரணமன்றியிலே, அநந்யஸாதாரணமாயிருக்கும்; பார்யை யைப்போலே ஔபாதிகஸம்பந்தமன்றியிலே ஸ்வாபாவிக ஸம்பந்தத்தை உடைத்தாயிருக்கும்; தேஹத்தோபாதி பிறர்க் காக்கலாயிருக்கையன்றியிலே, ஒழிக்கவொழியாத ஸம்பந் தத்தையுடைத்தாயிருக்கும்; குணங்கள் போலன்றியிலே குணியாய், அநந்யார்ஹஶேஷமாயிருக்கும்; *ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்” – கோ ஹ்யேவாந்யாத், க: ப்ராண்யாத்; யதேஷ ஆகாஶ ஆனந்தோ ந ஸ்யாத் என்று, பகவத்ஸம்பந்தம் அறில், ஆஶ்ரய விதுரமான குணம் போலே, ஸத்தையே பிடித்து இல்லையென்கையாலே, க்ரயவிக்ரயா நர்ஹமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம், ஆத்மைவேதம் ஸர்வம்” “ப்ரஹ்மை வேதம் ஸர்வம்” “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம “யஸ்யாத்மா ஶரீரம்” “யஸ்யப்ருதிவீ ஶரீரம்” “தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு:” “தாநி ஸர்வாணி தத்வபு: என்று, ஸ்வேதர ஸகலபதார்த்தங்களுக்கும் ஈஶ்வரன் ஶரீரியாய், வ்யதிரிக்தங் களடைய அவனுக்கு ஶரீரங்களாயிருக்கையாலே, ஓராத்மா வாலே அதிஷ்டிதமான ஶரீராவயவங்களில் அந்யோந்ய ஶேஷ ஶேஷிபாவமில்லாதவோபாதி ஈஶ்வரஶரீரமான இச்சேதநா சேதநங்களுக்கும் ஒன்றுக்கொன்று சேஷமாகை அயுக்த மாகையாலும், அந்த ஶேஷத்வமுண்டானாலும் ஒளபாதிக மாகையாலும், தேவர்ஷிபூதாத்மந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம்ரூணீ ச” என்று அந்யஶேஷத்வத்தைக் கழிக்கையாலும் அநந்ய ஸாதாரணம் இந்த சேஷத்வ மென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். “தாஸபூதாஸ்ஸ்வத;” “ஆத்மதாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவம்” என்று, ஆத்மபரமாத்மாக்களுடைய ஶேஷஶேஷிபாவத்தை ஸ்வாபா விகமாகச் சொல்லுகையாலும், ஶேஷஶேஷிபாவத்துக்கு ஹேது பூதமான ஶரீராத்மபாவம் நித்யமாகையாலும், “ஸோம: ப்ரத மோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருதீயோ அக் நிஷ்டே பதி:, துரீயாஸ்தே மநுஷ்யஜா:” என்று பாணிக்ரஹ ணாநந்தரம் ஸோமாதிகளுக்கு ஸாதாரணையாக ஶ்ருதையு மாய், பாணிக்ரஹணபூர்வகாலத்தில் மாதாபிதாக்களுக்கு ஶேஷபூதையுமாய், ஶரீராவதியான ஸம்பந்தத்தை உடையளு மாய், சரீரத்தோடேயிருக்கச்செய்தேயும் “ஸந்ந்யஸ்தம் மயா” என்றபோது ஸம்பந்தம் குலையும்படியுமாயிருக்கையாலே, பார்யையைக்காட்டில் அத்யந்த வ்யாவ்ருத்தமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். ‘யஸ்யாத்மா சரீரம், யஸ்ய ப்ருதிவீ சரீரம்” என்று ஶரீரத்வம் உண்டாகா நிற்கச்செய்தேயும், க்ரய விக்ரயாநர்ஹமாகவும், அநந்யஸாதாரணமாகவும், ஸ்வாபாவிக மாகவும், கீழ்ச்சொல்லுகையாலே கர்மோபாதிகமான தேஹத் திற்காட்டில் வ்யாவருத்தமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். இந்த ஹேதுக்களாலும் “ந த்ருஷ்டேர் த்ரஷ்டாரம் பஶ்யே:, ந மதேர் மந்தாரம் மந்வீதா:” என்று குணியாக ஶ்ருதமாகையாலும் குணத்திற் காட்டில் வ்யாவ்ருத்தமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம்.

                     ஆகையாலே க்ஷேத்ராதிகதமான உபாதி விஶேஷங்களின்றியிலே நித்யாநபாயிநியாயிருந்துள்ள பிராட்டி யோபாதி, ஈச்வரனுக்கு இந்த ஆத்மவஸ்து அநந்யார்ஹசேஷம் என்றதாயிற்று. “உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது” என்று, “இஸ்ஸம்பந்தம், உள்னாலும் ஒழிக்கப்போகாது; என்னாலும் ஒழிக்கப்போகாது; இருவராயும் ஸங்கேதித்தாலும் ஒழிக்கப்போகாது;” என்று உகாரார்த்தமான அநந்யார்ஹசேஷத் வத்தை நாய்ச்சியாரும் அநுஸந்தித்தருளினார். “ததேவ பூதம் தது பவ்யமா இதம்” என்று ஏவகாரம் கிடைக்கும் ஸ்தானத் திலே உகாரம் கிடக்கக்காண்கையாலே அந்த ப்ரமாணமடியாக இந்த உகாரமும் அவதாரணார்த்தமாகிறது.

                     ஆக, அகாரத்திலும், சதுர்த்தியிலும், உகாரத்திலும், ஈஶ்வரனுடைய ரக்ஷகத்வமும் “சேதநனுடைய ரக்ஷ்யத்வமும், ஈஶ்வரனுடைய ஶேஷித்வமும், சேதநனுடைய ஶேஷத்வமும் ஶேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும் சொல்லிற்றாயிற்று.

 

மகாரார்த்தம்

                       அநந்தரம், ஸர்வரக்ஷகனாய், ஸர்வ ஶேஷியாய், ஸமாதிகதரித்ரனான ஸர்வேஶ்வரனை பரதி ஸம்பந்தியாக உடைத்தான அநந்யார்ஹஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயம் இன்னதென்கிறது – மகாரம். ஒரு ஸம்பந்தமாகில், ஸம்பந்தித்வயாபேக்ஷிதமாயிறே இருப்பது. அதில், ஸம்பந்தத் தையும் ப்ரதிஸம்பந்தியையுமிறே கீழ்ச் சொல்லி நின்றது. அதில் ப்ரதிஸம்பந்தியையொழிய இஸ்ஸம்பந்தத்துக்கு உதயமில்லாதவோபாதி, ஆஶ்ரய விதுரமாகவும் ஸ்திதி யில்லையிறே. ஆகையாலே ஆஶ்ரயவிஶேஷத்தை மகாரம் சொல்லுகிறது. இம்மகாரம் “மநஜ்ஞாநே” என்கிற தாதுவிலே ஜ்ஞாநவாசியாய் “விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே” என்கிற இடத்தில் விஜ்ஞானஶப்தம் போலே “தத்குண ஸாரத்வாத் தத்வ்யபதே ஶ:ப்ராஜ்ஞவத்” என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞான குணஸாரமாக ஆத்மஸ்வரூபத்துக்கு வாசகமாகிறது.

                      ஆக, ஜ்ஞானகுணகனான ஆத்மாவைச் சொல்லிற்றாயிற்று. ஜ்ஞாத்ருத்வமாகிற குணம் குணாந்தரங்க ளுக்கும் உபலக்ஷணமாய், நித்யத்வம், ஏகரூபத்வம், அணுத்வம் வ்யாபகத்வம், உள்ளிட்ட ஆத்மதர்மங்களும் இப்பதத்திலே அநுஸந்தேயம், அதவாககாராதிமகாராந்தமான இருபத்தைந் தக்ஷரத்தையும் இருபத்தைந்து தத்வத்துக்கும் வாசகமாக்கின மாந்த்ரிகப்ரக்ரியையாலே, “பஞ்சவிம்ஶோயம் புருஷ:, பஞ்ச விம்ஶ ஆத்மாபவதி” என்கிறபடியே இருபத்தைந்தாம் தத்வ மான ஆத்மாவுக்கு இருபத்தைந்தாமக்ஷரமான இம்மகாரம் வாசகமாகிறதென்னவுமாம்.

                   இப்பதத்தில் ஏகவசனம் ஜாத்யேகவசன மாய், பத்தமுக்தநித்யரூபமான த்ரிவிதாத்ம வர்க்கத்தையும் சொல்லுகிறது. ப்ரதானரான சேதநரைச் சொன்னபோதே, அவர்களுக்கு போக்யபோகோபகரண போகஸ்தானரூபேண ஶேஷமான அசித்வர்க்கமும் பகவச்சேஷதயா இப்பதத்திலே அநுஸந்தேயம்,

                      சிதசித்துக்களிரண்டும் சேஷமாயிருக்கு மாகில், சித,சித்துக்களிரண்டையும் உபாதாநம் பண்ணாதே, சேதநத்வாரா அசித்தை உபலக்ஷிக்கவேண்டும்படி சேதந வாசியான பதத்தை எடுக்கைக்கு ஹேது, அந்த அசித்திற் காட்டில் சேதநனுடைய ப்ராதான்யம் தோற்றுகைக்காக, ஶேஷத்வஜ்ஞானம் பிறப்பது சேதநவஸ்துவுக்காகையாலும், இனி ஶேஷத்வஜ்ஞானநிவர்த்யமான ஸ்வாதந்தர்யாநுவ்ருத்தி யும், ஜ்ஞாநாஶ்ரய வஸ்துவுக்கேயாகையாலும், ஶேஷத்வஜ்ஞாந கார்யமான ஶேஷவ்ருத்தியில் ருசியுள்ளதும் அந்த வஸ்துவுக் காகையாலும், ஶேஷத்வ வ்ருத்திப்ரதிஸம்பந்தி, பக்கல் விரோதிநிவ்ருத்தி பூர்வகமாக அந்த வ்ருத்திஸித்திக்கும் உபாயஸ்வீகாரம் பண்ணுவானும் சேதனனாகையாலும் “அஹமந்நம்” என்கிறபடியே ஈஶ்வரனுக்கு கௌஸ்துபம் போலே யும், ஸ்ரீஸ்தனம் போலேயும் ஸ்ப்ருஹாவிஷயமாயிருப்பதும் நிரஸ்தஸமஸ்த ஹேயமான இந்த சேதநவஸ்துவேயாகை யாலும், அவனுக்குக் கர்மாநுபவோபகரணமாயும், கைங்கர் யோபகரணமாயுமிருக்கிற ஜடவஸ்துவிற்காட்டில் சித்வஸ்து விலக்ஷணமாகையாலே, அந்த ப்ராதான்யம் தோற்ற அவனுக்கு வாசகமான பதத்தை இடுகிறது. ஆக, மகாரத்தாலே பகவத நந்யார்ஹஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயம் சொல்லிற்றாயிற்று.

                      ப்ரதானமான ஆஶ்ரயத்தை ப்ரதமத் திலே சொல்லி ஆஶ்ரயியான ஸ்வபாவத்தை அனந்தரம் சொல்ல ப்ராப்தமாயிருக்க, ஆஶ்ரயியான ஶேஷத்வத்தை ப்ரதமத்திலே சொல்லி, ஆஶ்ரயமான ஜ்ஞானானந்த வஸ்துவை அனந்தரம் சொல்லுகைக்கு ஹேதுவென்னென்னில்: “அஹமர்த்தோ ந சேதாத்மா ப்ரத்யக்த்வம் நாத்மநோ பவேத் அஹம்புத்த்யா பராகர்த்தாத் ப்ரத்யகர்த்தோஹி பித்யதே” என்கிறபடியே பராகர்த்தவ்யாவ்ருத்தமான அஹமர்த்தத்துக்கு ஜ்ஞாநாநந்தாதிகளிற்காட்டில் ப்ரதான நிரூபகம் ஶேஷத்வமே என்னுமிடம் தோற்றுகைக்காகவும், நெருப்பிலே புக்குவேவார் சிலருண்டானால் அவர்களை ‘இன்னார்’ என்று பாராதே பற்றியெரிகிற அந்நெருப்பை அவிக்கையிலே யத்னம் பண்ணு வாரோபாதி, அதாஹ்யமான ஆத்மவஸ்துவை அநாதிகாலம் பற்றி தஹித்துப் போருகிற ஸ்வஸ்வாதந்த்ர்யத்தை ஆற்றுகையிலே தாத்பர்யமாகையாலும், புஷ்பத்துக்கு ஶ்லாக் யதை பரிளத்தாலேயாகிறவோபாதி, ஸ்வரூபத்துக்கும் உபாதே யத்வம் இந்த ஸ்வபாவ விஶேஷத்தாலேயாகையாலும், இந்த ப்ராதான்யத்தாலே ஶேஷத்வத்தை ப்ரதமத்திலே உபாதானம் பண்ணுகிறது.

                          இனி, அந்த ஶேஷத்வந்தான் சித சித்துக்களிரண்டுக்கும் பொதுவாகையாலே ஒரு ஆஶ்ரய விஷயத்திலே ஒதுக்கவேண்டுகையாலும், அந்த ஆஶ்ரயந்தான், அசித்தோபாதி அன்னலும் துன்னலுமாயிராது வடிவுபட்டிருக்கு மென்று, கிழிச்சீரையை ஶ்லாகிப்பாரோ பாதியிறே மகாரத்திலே ஜ்ஞானானந்த வஸ்துவைச் சொல்லுகிறது. உத்கர்ஷாப கர்ஷஹேது, ஆஶ்ரயாச்ரயிபாவமல்லாமையிறே, “ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதேதி” என்கிற இடத்தில் ஆஶ்ரயிகளான குணங்களை போக்யதையாலே ப்ரதானமாகச் சொல்லி, ஸஹஶப்தத்தாலே ஆஶ்ரயமான ஸ்வருபத்தை அப்ரதானமாகச் சொல்லிற்று.

                            ஶேஷத்வத்தினுடைய ப்ராதான் யத்தைப் பற்றவிறே ஆளவந்தாரும், “வபுராதிஷூ யோபி கோபிவா” “தவ ஶேஷத்வவிபவாத் பஹிர்பூதம் – ஆத்மாநமபி ந ஸஹே” என்று, “ஆத்மவஸ்து, தேஹேந்த்ரியமன: ப்ராணாதி, களிலே ஏதேனுமொன்றாகவுமமையும்; எனக்கு இதினுடைய ஸ்வரூபநிர்ணயமும் வேண்டா; ஸ்வபாவநிர்ணயமும் வேண்டா; ஏதேனுமாக தேவரீருக்கு ஶேஷமாமித்தனையே வேண்டுவது. ஶேஷமன்றாகில் விலக்ஷணமான இந்த ஆத்மவஸ்துதன்னையும் வேண்டேன்” என்றருளிச்செய்ததும், ஶ்ருதிகளும் “யோஹமஸ்மி ஸ ஸந் யஜே” “யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” என்றதுவும்; ப்ரணவார்த்தம் சொல்ல இழிந்த திருமங்கையாழ்வாரும், “கண்ணபுர மொன்றுடையானுக்கு” என்று அகாரத்துக்கும் சதுர்த்திக்கும் பொருள் சொல்லி, “ஒருவர்க்குரியேனோ” என்று உகாரத்துக்குப் பொருள் சொல்லி, மகாரத்துக்குப் பொருளாக “அடியேன்” என்றதும். ஆக, பதத்ரயாத்மகமான ப்ரணவத்தில் ப்ரதம சரமபதங்கள் ஸம்பந்தித்வயவிசேஷத்தைச் சொல்லிற்று; மத்யமபதம் அவற்றினுடைய ஸம்பந்த விஶேஷத்தைச் சொல்லிற்று.

                       இப்ப்ரணவந்தான் “ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்கையாலே ஜீவவாசகமுமாய், “ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரந்” என்று ஏவமாதிகளிற் சொல்லுகிறபடியே ஈஶ்வரவாசகமுமாய்க் கிடக்கிறது. இது உபயார்த்தத்துக்கும் வாசகமாகிறபடி என்னென்னில்: “ராஜபுருஷ:” என்கிற வாக்யம் ஶேஷஶேஷிகளான ராஜாவையும் புருஷனையும் வசிக்கிறாப்போலே, வாசகமாகக் கடவது. அங்ஙனன்றியிலே ஜீவஸ்வரூப ஶோதநத்தையும், ஈஶ்வரஸ்வரூபஶோதநத்தையும் பண்ணுகையாலே, உபயார்த் தத்துக்கும் வாசகமாகிற தென்னவுமாம். எங்ஙனேயென்னில் மகாரத்தாலே “தேஹேந்த்ரிய மந:ப்ராணதீப்யோந்யோ Sநந்யஸாதந: | நித்யோ வ்யாபீ ப்ரதிக்ஷேத்ரமாத்மா பிந்நஸ் ஸ்வதஸ் ஸுகீ II” என்கிறபடியே, ப்ரக்ருதேபரனாய், ஸ்வயம்ப்ரகாஶனாய், நித்யனாய், வ்யாபகனாய், ப்ரதிஶரீரம் பின்னனாய், ஸ்வாபாவிகஸுகத்தையுடையனாயிருக்குமென்று சொல்லி, அவன்தான் பரதந்த்ரனாயிருக்கும், அந்தப் பார தந்த்ர்யந்தான் அநந்யார்ஹமாயிருக்கும் என்று, சதுர்த்தியாலும் உகாரத்தாலும் சொல்லி, அந்தப் பாரதந்த்ர்யத்துக்கு ப்ரதி ஸம்பந்தியும் ஸர்வரக்ஷகனான ஸர்வேஶ்வரனென்று சொல்லி, ஆக இப்படி ஜீவஸ்ரூபஶோதநம் பண்ணுகையாலே ஜீவ வாசகம் என்னவுமாம்.

                       அங்கனன்றியிலே ஸவிபக்திகமான அகாரத்தில் ஈஶ்வரனுடைய ஸர்வஶேஷித்வத்தைச் சொல்லி, அவற்றுக்கு ஶேஷியாமிடத்தில், அவை அநந்யார்ஹமாம்படி ஶேஷமாயிருக்கும் என்னுமிடத்தை உகாரத்திலே சொல்லி, அந்த ஶேஷித்வத்துக்கு ப்ரதிஸம்பந்தி அபேக்ஷிதமாகையாலே, அசித்ப்ரகாரமான சேதநவர்க்கத்தை மகாரத்திலே சொல்லி, ஆக இப்படி வ்யாவர்த்தகவிஶேஷணமான ஈஶ்வரனுடைய ஶேஷித் வத்தை ஶோதிக்கையாலே ஈஶ்வரவாசகம் என்னவுமாம். ஶேஷித்வத்திலே ப்ரதானமான போதைக்கும், க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஶ்வம் சராசரம் என்றாப்போலே சதுர்த்யந்தமாகவும் தட்டில்லை. .

                     சேதநனுடைய ஶேஷத்வஶோதனத்திலே இப்ப்ரணவத்துக்குத் தாத்பர்யமானபோது அகாரம், ஈஶ்வரனான ப்ரதிஸம்பந்தியைச் சொல்லுகிறதாய், மகாரம், ஆஶ்ரயத்தைச் சொல்லுகிறதாய், உகாரம் அந்த ஶேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையைச் சொல்லுகிறதாகக்கடவது. ஈஶ்வர னுடைய ஶேஷித்வத்திலே தாத்பர்யமானபோது, மகாரம், ப்ரதி ஸம்பந்தியைச் சொல்லுகிறதாய், அகாரம் ஆஶ்ரயத்தைச் சொல்லுகிறதாய், உகாரம் அந்த ஶேஷித்வத்தினுடைய அஸாதாரணதையைச் சொல்லுகிறதாகக்கடவது. அங்ஙனன்றி யிலே தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய ய: பரஸ் ஸ மஹேஶ்வர:என்கிறபடியே ப்ரக்ருத்யவஸ்தமான ப்ரணவம் ஈஶ்வரவாசி யாய், விக்ருத்யவஸ்தமான ப்ரணவம் ஜீவவாசியாகிற தென்னவுமாம்.

                          ஆக, ப்ரணவத்திலே ஆர்த்தமாக வும் ஶாப்தமாகவும் சித்ஸ்வரூபத்தோடு, அசித்ஸ்வரூபத்தோடு, ஈஶ்வரஸ்வரூபத்தோடு, தத்ஸம்பந்தவிசேஷத்தோடு, ப்ராப்யத் தோடு, ப்ராபகத்தோடு, விரோதியோடு வாசியறச் சொல்லுகை யாலே, ஸகலஶாஸ்த்ர ஸங்க்ரஹமான மந்த்ரஶேஷத்துக்கு ஸங்க்ரஹமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம்.

 

நமஶ்ஶப்தார்த்தம்

 

                     ப்ரணவத்திலே உத்தமமான பகவத நந்யார்ஹசேஷத்வத்தையுடையனான இச்சேதநனுக்கு ஸ்வரூபாநுரூபமான உபாயவிஶேஷத்தைச் சொல்லுகிறது: உகாரவிவரணமான நமஶ்ஶப்தம். பதக்ரமத்திலே விவரணம் பண்ணாதே இங்ஙனே வ்யுத்க்ரமமாகைக்காக என்னென்னில்: ஶப்தக்ரமத்திற்காட்டில் அர்த்தக்ரமம் ப்ரபலமென்கிற மீமாம்ஸ கருடைய ந்யாயத்தாலே, கீழ் ப்ரணவத்தில் உக்தமான அநந்யார்ஹ ஶேஷத்வத்தில் வ்யாவ்ருத்தரான அந்யரிலே அந்யதமனான தன்னை வ்யாவர்த்திக்கை, அனந்தர பராப்தமாகையாலும் ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்த, ஜ்ஞானம் பிறக்கும் போதைக்கு ஸ்வரூபயாதாத்ம்யரூபமான ததீயஶேஷத்வ ஜ்ஞானம் பிறக்க வேண்டுகையாலும், கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியைச் சொல்லுமிடத்தே இரண்டொரு கார்யமாக ப்ரதமபதமான அகாரவிவரணம் பண்ணலாயறுகை யாலும், “அஹமபி ந மம, பகவத ஏவாஹமஸ்மி”, என்று ப்ராணவோக்தமான ஸ்வரூபத்தில் கிடக்கிற மமதையையும் யா: காஶ்சந க்ருதயோ ம்ம பவந்தி, தாஸு மம மமதா நாஸ்தி, பகவத ஏவ தா:” என்று மேலே லக்ஷ்யமாணமான புருஷார்த்தத்தில் வரும் மமதையையும், காகாக்ஷிந்யாயத் தாலே கழிக்குமிது. நடுவே கிடக்க வேண்டுகையாலும், ப்ரணவாநந்தரம் உகாரவிவரணமான நமஶ்ஶப்தமாகக் கடவது.

                       இந்த நமஶ்ஶப்தம் “ந” என்றும், “ம:” என்றும், இரண்டு பதமாயிருக்கும். இதில் மகாரம், “மந-ஜ்ஞாநே” என்கிற தாதுவிலே ஷஷ்ட்யந்தமாய், எனக்கு நான் உரியேனென்கிறது; நகாரம், இத்தை நிஷேதித்து “யானே நீ என்னுடைமையும் நீயே” என்கிறபடியே தன்னுடைய மமதா நிவ்ருத்தியையும், மமதைக்கூற்றான அஹங்கார நிவருத்தியை யும், அநுஸந்திக்கிறது. “த்வயக்ஷரஸ்து பவேந் ம்ருத்யுஸ் த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண: பதம், மமேதி த்வ்யக்ஷரோ ம்ருத்யுர் நமமேதி ச ஶாஶ்வதம்” என்கிறபடியே, அஹங்கார மமகாரங்களிறே இவ்வாத்மாவுக்கு நாசகங்கள்; தந்நிவ்ருத்தி யிறே உஜ்ஜீவனமும். ஆக, தொடர்நாழி போலே கிடக்கிற அஹங்காரமமகாரங்களினுடைய நிவ்ருத்தியைச் சொல்லிற் றாயிற்று.

                        கீழே சதுர்த்தியில் சொல்லுகிற பார தந்தர்யத்தாலே ஸ்வாதந்தர்யம் கழியுண்டிருக்க, இங்கு நிவ்ருத்தமாகிற அஹங்காரமமகாரமாகிறது என்னென்னில்: அங்கு பகவத்பாரதந்தர்ய விரோதியான ஸ்வஸ்வாதந்த்ர்யத் தைக் கழித்தது; பகவதேகரக்ஷ்யதைக்கு விரோதியான ஸ்வஸ்வாதந்தர்யத்தைக் கழிக்கிறது இங்கு; ஸ்வரக்ஷணத் திலே தான் இழிகையிறே அதுக்கு விரோதியாயறுவது; அதாகிறது: ஸ்வரக்ஷணமாக ஸாதநாநுஷ்டானம் பண்ணுகை; அது ஸ்வரூபஹாநியாயிறே இருப்பது. பர்த்தாவுக்கு ஶேஷமான ஶரீரத்தை அவகாதாதிவ்யாபாரங்களாலே பதிவ்ரதை ரக்ஷிக்கையாகிறது:- பர்த்தாவுக்கு ஸ்வரூபஹாநி யாய், தனக்கும் ஸ்வரூபஹாநியாயிறே இருப்பது. விஶேஷண ப்ரதானமான விஶிஷ்டாம்ஶமேயிறே பர்த்தாவுக்கு ஶேஷமா யிருப்பது. அங்ஙனன்றியிலே ஸ்வரூபமும் ஶேஷமாயிருக்கு மாகில், நாம் இங்கு சொல்லுகிற பகவதநந்யார்ஹஶேஷத் வத்துக்கு அவகாஶமின்றிக்கே யொழியும். ஆகையாலே ஆத்ம ரக்ஷணத்துக்கு உறுப்பாகப் பண்ணுகிற பாதிவ்ரத்ய தர்மாநுஷ் டானத்தாலே பர்த்தாவுக்கு அநந்யார்ஹஶேஷபூதையாயிருக் கும் இருப்புக்கு வைகல்யம் வாராதிறே. ஆகையாலே நவத் வாரபுரமான லங்காபுரத்திலே நிருத்தையான பிராட்டி, “தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்று, சக்ரவர்த்தித்திருமகன் பக்கலிலே ந்யஸ்தபரையாயிருந்தாப்போலே இருக்கை, இவனுக்கு ஸ்வரூபம் ” ஆக, இத்தால் ஸ்வரக்ஷணத்திலே இழிகை ஸ்வருபஹாநியாம்படி ஈஶ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரம் இந்த ஆத்மவஸ்து என்றதாயிற்று. ஸ்வரக்ஷண க்ஷமனான பர்த்தாவிருக்க, ஸ்வரக்ஷணத்தில் நின்றும் பதி வ்ரதை கைவாங்கினால் பார்த்தாவே ரக்ஷகனாயறுமோபாதி, இவனும் அத்யந்தபரதந்த்ரனாயற்றால் ஈஶ்வரனேயிறே ரக்ஷக னாயறுவான், ஆகையாலே ஈஶ்வரனுடைய உபாயபாவமும் ஆர்த்தமாகச் சொல்லிற்றாயிற்று.

                        ஈச்வரனே ரக்ஷகனாம்படி இவன் அத்யந்தபரதந்த்ரனானால், இந்தப்பாரதந்தர்யபூர்த்தி பிறந்ததா வது, அவனுக்கு இஷ்டவிநியோகார்ஹமாகிலிறே, அவனுக்கு இஷ்டராகிறார்: “ஜ்ஞாநீ த்வாத்மைவ” என்கிற ஸ்ரீவைஷ்ணவர்க ளிறே, “அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்” என்கிறபடியே தனக்கபிமதரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஶேஷமாக்கினால்,  அவர்களுக்கு ஶேஷமாயிருக்கிலிறே இவனுக்கு பகவதநந் யார்ஹஶேஷத்வபூர்த்தி பிறந்ததாவது; ஆகையாலே “நின் திருவெட்டழுத்தும் கற்று நானுற்றதுமுன்னடியார்க் கடிமை” என்று திருமங்கையாழ்வார் அநுஸந்தித்தருளினாப்போலே, இப்பதத்திலே பாரதந்தர்யகாஷ்டையான ததீயஶேஷத்வமும் அநுஸந்திக்கும்படி சொல்லிற்றாயிற்று. பகவச்சேஷத்வம் பூர்ணமாவது ததீயஶேஷத்வம் உண்டானாலாகில்; ததீயஶேஷத் வம் ப்ரணவத்தில் சொன்ன அநந்யார்ஹஶேஷத்வத்தோடு விரோதியாதோ? என்னில்: ஸ்ரீவைஷ்ணவர்களாகிறார், ஜங்கம ஸ்ரீவிமாநாநி என்கிறபடியே ஈஶ்வரனுக்கு திவ்யமங்களவிக்ர ஹத்தோபாதி ஶரீரபூதராயறுகையாலே, பர்த்ருசரீரத்திலே மேல்விழுகிற ஸ்த்ரீக்குப் பாதிவ்ரத்யபங்கம் இல்லாதவோபாதி, அநந்யார்ஹ சேஷத்வத்துக்கும் பங்கம் வாராது.

                          அநந்யார்ஹஶேஷத்வத்தினுடைய அப்ரச்யுதிக்கு ஶரீரத்வம் ப்ரயோஜகமாகில் யஸ்யாத்மா ஶரீரம், யஸ்ய ப்ருதி,வீ ஶரீரம் என்று சேதநாசேதநவிபாகமற ஸர்வமும் ஶரீரமாயன்றோ இருப்பது; ஆனால் ஸர்வருக்கும் ஶேஷபூதனாகவேண்டி வந்ததீ – என்னில்: ஸர்வருக்கும் ஶரீரத்வநிபந்தனமான ஸம்பந்தமுண்டேயாகிலும், ‘நாம் ஶரீரத்வேந ஶேஷபூதர்; ஶரீரியான ஈஶ்வரன் ஶேஷி’ என்கிற ஜ்ஞானமின்றியிலே அஹங்காரமமகாரதூஷிதராய், நிருபாதிக பந்துவான ஈஶ்வரனையும் ‘நாஸ்தி’ என்னப் பண்ணுமள வன்றியிலே, – க்ஷிபாமி – “ந க்ஷமாமி என்று கடல் கொதித் தாப்போல் கொதிக்கும்படி பண்ணும் தன்மையுடையாராகை யாலே, இந்த தோஷங்களொன்றுமின்றியிலே “ஜ்ஞாநீ த்வாத்மைவ” “பத்தராவியை” என்று ஸர்வாதாரபூதனான ஈஶ்வரன்தான் தனக்கு தாரகமாக நினைத்திருக்கும்படி, அவனுக்கு ப்ரஸாதபாத்ரரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஶேஷமா யிருக்கும் இருப்பு ஶரீரத்வ ஸாமான்யத்தாலே வ்யபிசரியாது. பர்த்தாவோடு பார்யைக்கு அவ்யவதாநேந ஸம்பந்தமுண்டாகா நிற்கச்செய்தேயும், ஆர்த்தவாதிதோஷ தூஷிதையானவன்று பர்த்தாவோடு ப்ரஜைகளோடு  வாசியற எல்லாருக்கும் அஸப்ருஶ்யையாய், குளித்தவாறே ஸம்ஶ்லேஷிக்கலாம்படி இருக்கிறாப்போல, அஹங்காரமமகாராதிகளுண்டானவன்று த்யாஜ்யமாய், அவை போனவன்று, இவை தானே உபாதேய மாகக்கடவது. ஆக, ப்ரயோஜனமாயற்றது. ஈஶ்வரனுக்கு ப்ரஸாதபாத்ரமான ஶரீரம் உத்தேஶ்யமாகக்கடவது; நிக்ரஹபாத்ரமான ஶரீரம் த்யாஜ்யமாகக்கடவது.

                     இப்பதத்தில் நாலர்த்தம் சொல்லாநிற்க அநந்யஶரணத்வத்திலே இத்தை ஒதுக்குகிறபடி யென்னென் னில்: “கச்சத்வமேநம் ஶரணம் ஶரண்யம் புருஷர்ஷபா:, என்று ஶரணம் புகுருங்கோளென்று உபதேஶிக்க, த்ரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமஶ்சக்ருநர் ஐநார்தநம் என்று அநுஷ்டான வேளையிலே நமஸ்காரத்தைப் பண்ணினார். களென்கிற ஸ்தானப்ரமாணத்தாலே நமஶ்ஶப்தம் ஶாப்தமாகவே உபாய வாசகமாகக் கடவது. ஆக, பூர்வோக்தக்ரமத்தாலே ஆர்த்தமாகவும், ஸ்தானப்ரமாணத்தாலே ஶாப்தமாகவும் உபாய வாசகமாயறுகையாலே அநந்யஶரணத்வத்திலே நோக்காய்க் கிடக்கிறது. ஆக, ப்ரணவத்தாலும் நமஶ்ஶப்தத்தாலும், ஸ்வரூப மும், ஸ்வரூபாநுரூபமான உபாயமும் சொல்லிற்றாயிற்று.

நாராயணஶப்தார்த்தம்

                       அனந்தரம், உபாயபலமான கைங்கர்யத் தைச் சொல்லக்கடவதாகக்கொண்டு, தத்ப்ரதிஸம்பந்தியைச் சொல்லுகிறது – அகாரவிவரணமான நாராயணபதம். ரக்ஷ்யாம்ஶமும் ரக்ஷணப்ரகாரமுமிறே அகாரத்தில் விவரணீய மாந அம்ஶம்; அதில் நாரஶப்தத்தாலே ரஷ்யாம்ஶத்தை விவரிக்கிறது. நாராயணனென்கிற ஸமஸ்தபதத்தாலே ரக்ஷண ப்ரகாரத்தை விவரிக்கிறது. அதில் ரக்ஷ்யவிவரணம் பண்ணுகிற நாரபதம்:- “நர:” என்றும், “நார:” என்றும், “நாரா:” என்றுமாய், ஸ்வரூபேணவும் ப்ரவாஹரூபேணவும் நித்யமான பதார்த்தங் களைச் சொல்லுகிறது. ஸ்வரூபேண நித்யதையாவது:- ஸத்தான பதார்த்தத்தினுடைய உத்பத்திவிநாஶாத்யந்தாபாவம். ப்ரவாஹரூபேண நித்யதையாவது:- உத்பத்திவிநாசயோகியாகா நிற்கச்செய்தேயும். பூர்வகாலத்திலுண்டான நாமரூபலிங்காதிக ளுடைய அநந்யதாபாவம். ஸூர்யா சந்த்ரமஸௌ தாதா யதாபூர்வமகல்பயத் யதர்த்துஷ்வ்ருது — லிங்காநி நாநாரூபாணி பர்யயே | த்ருஶ்யந்தே தாநி தாந்யேவ ததா பாவா யுகாதிஷுll” என்கிறபடியே, அவ்வோ ருதுக்களில் முன்பு கழிந்த ருதுக்களிலுண்டாம் புஷ்பபலாதிகளையும் சீதோஷ்ணாதிகளையும் நாமத்தையும் உடைத்தாய்க்கொண்டு ததாகாரமாய் வந்து தோற்றுமாப்போலே ஸ்ருஷ்டமாம்போது முன்பு ஸ்வஸம்ஹ்ருதமான ஸம்ஸ்தானத்தையும் நாமாதி, களையும் உடைத்தாய்க் கொண்டு பிறந்துபோருகை.

                            அதிலே ரேபம், ரிங்–க்ஷயே என்கிற தாதுவிலே க்ஷயிஷ்ணுபதார்த்த வாசகமாய்க் கிடக்கி றது நகாரம், அத்தை நிஷேதித்து “நர:” என்று நித்ய பதார்த்தத்தைச் சொல்லுகிறது. இங்ஙனே க்ஷயத்தை ப்ரஸங் கித்து ப்ரதிஷேதிக்கிறது – க்ஷயிஷ்ணுக்களான மஹதாதி களையும். ஒருமுகத்தாலே நித்யபதார்த்தங்களிலே முதலிடு கைக்காகச் சொல்லுகிறது; “நார:” என்கிற இடத்தில் “அண் ப்ரத்யயம்”, ஸமூஹார்த்தத்திலேயாய், நித்யபதார்த்தஸமூத்தைச் சொல்லுகிறது. “நாரா:” என்கிற பஹுவசனம் அந்த ஸமூஹத்தி னுடைய பாஹுள்யத்தைச் சொல்லுகிறது. ஆக, “நாரா:” என்று, நித்யபதார்த்தங்களினுடைய ஸமூஹங்களைச் சொல்லிற் றாயிற்று.

                      அவையாவன:- ஜ்ஞானஶக்த்யாதி திவ்யாத்மகுணங்களும், குணப்ரகாஶகமான திவ்யமங்கள விக்ரஹங்களும், விக்ரஹகுணமான ஸௌந்தர்யாதிகளும், அந்த ஸௌந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீட மகுடாதி திவ்யாபரணங்களும், அவ்வாபரணங்களோடு விகல்பிக்கலாம்படியான ஶங்கசக்ராதி திவ்யாயுதங்களும். இத்தனையும் காட்டிலெரித்த நிலாவாகாதபடி, அருகேயிருந்து அனுபவிக்கிற லக்ஷ்மீப்ரப்ருதிமஹிஷீ வர்க்கங்களும், அச்சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்தகருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான ஸூரிஸங்கமும், அவர்களோபாதிபோய் அடிமை செய்கிற முக்தரும், அவர்களுக்கடிமை செய்கைக்குப் பரிகர மான சத்ரசாமராதி பரிச்சதங்களும், அவ்வடிமைக்கு வர்த்தக மாய் பஞ்சோபநிஷண்மயமான பரமபதமும், குணத்ரயாத்மி கையான மூலப்ரக்ருதியும், புருஷஸமஷ்டியும், அஹோராத் ராதி விபாகயுக்தமான காலதத்வமும், ப்ரவாஹரூபேண நித்யமான மஹதாதிகளும், தத்கார்யமான அண்டங்களும் அண்டாந்தர்வர்த்திகளான சதுர்விதபூதங்களும், பஞ்சோபநிஷண் மயமாகையாலே பரமபதமும், ஸமூஹாத்மகமாயிருக்கும்; குணத்ரயாத்மிகையாகையாலே மூலப்ரக்ருதியும் ஸமூஹாத் மிகையாயிருக்கும்; அஹோராத்ராதிவிபாகங்கள் அனேகமாகை யாலே காலமும் ஸமூஹாத்மகமாயிருக்கும்.

                           ஆக, நாரஶப்தத்தாலே வ்யாப்ய பதார்த்தத்தைச் சொல்லி, அனந்தரம் வ்யாப்யதையையும் வ்யாப்திப்ரகாரத்தையும் சொல்லுகிறது. ‘அயன்’ ஶப்தம், ஆவாஸவாசியாய் “நாராணாம் அயநம் ய:, ஸ:-நாராயண:” “நாரா: அயநம் யஸ்ய ஸ: நாராயண:” என்கிற தத்புருஷ பஹுவ்ரீஹிரூபமான ஸமாஸத்வயத்தாலே, “அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வ வயாப்ய நாராயணஸ் ஸ்தித:” என்கிறபடியே உக்தமான நித்யபதார்த்தங்களுக்குத் தான் ஆவாஸபூமியாய் இருக்குமென்றும், அவற்றைத் தனக்கு ஆவாஸமுடையனாய் இருக்குமென்றும் சொல்லுகிறது. அவற்றுக்குத்தான் ஆவாஸ மாயிருக்கையாவது: ஸ்வேதர ஸகலபதார்த்தங்களையும் “மேரோரிவாணு: “யஸ்யாயுதாயுதாம்ஶாம்ஶே விஶ்வ ஶக்திய: ஸ்திதா” என்கிறபடியே தன் ஸ்வரூபைக்தேஶத்திலே தரிக்கை. அவற்றைத்தான் ஆவானமாக  உடையனாயிருக்கை யாவது: ஸ்வேதரஸகலபதார்த்தங்களையும் சிதசித்விபாகமற தனித்தனியே உள்வாயிலே புக்கு, ஆகாஶம் கடாதிகளிலே வ்யாபிக்குமாப்போலே தன் ஸ்வரூபைகதேஶங்களாலே வ்யாபிக்கை யன்றியிலே, ஜாதி, வ்யக்திதோறும் வ்யாபிக்குமோபாதி ஸமாப்ய ஆத்மதயா வ்யாபித்து தரிக்கை. இந்த அந்தர்வ்யாப்தியையும் பஹிர்வ்யாப்தியையும் நினைத்திறே ஶ்ருதி. “அணோரணீயாந் மஹதோ மஹீயாந்” என்றது. –

                          ஸ்வவ்யதிரிக்தங்களுக்கு ஆவாஸ மாயிருக்குமென்னுமிடத்தில் நாரஶப்தத்தில் ப்ரதமோபாத்தமான குணங்களும் ஸ்வரூபாஶ்ரயமாகையாலே அநுஸந்திக்கக் கடவோ ஸ்வவ்யதிரிக்தங்களை ஆவாஸமாக உடையனா யிருக்குமென்னுமிடத்திலே குணங்களுக்கு வ்யாப்யத்வம் அநுபபந்நமாகையாலே அவற்றையொழிந்தவை, வ்யாப்திக்குக் கர்மீபவிக்கக்கடவன. தன் குணங்களிலே ஈஶ்வரன் வ்யாபிக்கும்போது குணவிசிஷ்டனாலே வ்யாபிக்க வேணும்; நிர்குணமாய் வஸ்து இராமையாலே. அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபகங்களாய், வ்யாபககுணங்களே வ்யாப்யங்களாய் அறுகையாலே ஆத்மாஶ்ரய தோஷமுண்டாம். அதுக்கு மேலே தன் குணங்களிலே குணி வ்யாபிக்கவேணு மென்று புக்கால் ததாஶ்ரயமான குணங்களையும் குணி வ்யாபிக்க வேண்டும். அந்த வ்யாபகனுடைய குணங்களையும் குணி வ்யாபிக்கவேண்டும்; ஆகையாலே அநவஸ்தாது:ஸ்த மாம். ஆக, ஸமஸ்தகல்யாண குணாத்மகத்வம், உபயவிபூதி நாதத்வம், ஸர்வஸ்மாத்பரத்வம், ஸர்வஶாரீரத்வமுள்ளிட்டவை உக்தமாய் நின்றது.

                       நராஜ்ஜாதாநி தத்வாநி நாராணீதி ததோ விது: தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: என்று, “நரனுண்டு: நித்யனான ஸர்வேஶ்வரன்; அவன் பக்கல் நின்றும், ஜாதமான பதார்த்தங்கள் நாரங்களாகின்றன; தன் பக்கலில் உத்பந்நமான அந்த நாரங்களையே தனக்கிருப் பிடமாக உடையன்” என்கையாலே ஸர்வகாரணத்வத்தையும் சொல்லிற்றாயிற்று. இனி, நாரஶப்தேந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே பூதை:, கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயணஸ் ஸ்ம்ருத: என்கிறபடியே நாரஶப்தம் நித்யமான ஜீவஸமஷ் டிக்கு வாசகமாய் அயநஶப்தம், இண்–கதௌ என்கிற தாதுவிலே ப்ராப்யவாசியாய், ஆக நாராயணன் என்று, சேதநவர்க்கத்துக்கு ப்ராப்யபூதன் என்றதாயிற்று. பந்துலாபமும் ப்ராப்யமாகையாலே மாதா பிதா ப்ராதா நிவாஸஶ் ஶரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண: என்றும், “எம்பிரானெந்தை என்னுடைச் சுற்றமெனக்கர சென்னுடை வாணாள்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வவிதபந்துவும் ஸர்வேஶ்வர னென்றும் சொல்லிற்றாயிற்று. விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் எனகிறபடியே அயநஶப்தம் ப்ராபக வாசியாய் சேதநருக்கு ப்ராபகனென்றும் சொல்லிற்றாயிற்று. பிராட்டி நாரஶப்த கோடிகடிதையாகையாலே இப்பதத்தில் லக்ஷ்மிஸம்பந்தமும் அநுஸந்தேயம். ஆக, இந்த நாராயண பதத்தாலே கைங்கர்யப்ரதி ஸம்பந்தியைச் சொல்லிற்றாயிற்று.

ஆயஶப்தார்த்தம்

                         மகாரவிவரணமான “ஆய” என்கிற சதுர்த்தியாலே அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறது. சதுர்த்தி, மகாரவிவரணமானபடி என்னென் னில்: ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயமாகவிறே மகாரவாச்யனைச் சொல்லிற்று. அகிஞ்சித்கரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: என்கிற படியே, அந்த ஶேஷத்வஸித்திதான் கிஞ்சித்காரத்தாலேயாகை யாலே, கிஞ்சித்காரப்ரகாஶகமான இந்த சதுர்த்தி, மகாரவிவரண மாகிறது. கிஞ்சித்காரமில்லாதவன்று ஶேஷத்வமில்லை. ஶேஷத்வமில்லாதவன்று ஸ்வரூபம், அஸந்நேவ ஆய்விடும். ஆக, இம்மூன்று பதத்தாலும் ஈஶ்வரனுடைய ஸ்வரூபமும், – ஆத்மாவினுடைய ஸ்வரூபமும், த்யாஜ்யதயா விரோதி ஸ்வரூபமும் சொல்லிற்றாயிற்று.

                         “ஈஶ்வரன் ஸர்வஶேஷியாயிருக்கும்; சேதநவஸ்து அவனுக்கு அநந்யார்ஹஶேஷமாயிருக்கும்; ஸ்வஸ்வாதந்த்ர்யமும், அந்யஶேஷத்வமும், ஸ்வரூபவிரோதி யாகக்கடவது” என்று சொல்லுகிறது – ப்ரணவத்திலே. நமஶ்ஶப்தத்திலே, ஈஶ்வரனுடைய நிரபாயோபாயத்வமும், சேதநனுடைய அநந்யஶரணத்வமும், ‘ஸ்வரக்ஷணப்ரவ்ருத்தி ஸ்வருபஹாநி’ என்னுமிடமும் சொல்லிற்றாயிற்று. ஈஶ்வர கிஞ்சித்காரத்தினுடைய பரமப்ராப்யத்வமும், இவனுடைய அநந்யபோகத்வமும், ப்ராப்யாந்தரஸம்பந்தம் அப்ராப்தமென்னு மிடமும் சரமபதத்தாலே சொல்லிற்றாயிற்று. ஆக, இத்தால் சேதநனுடைய ப்ரக்ருதே:பரத்வமும், ப்ரக்ருதே:பரனுடைய ஶேஷத்வமும், ஶேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும், அநந்யார்ஹஶேஷத்வப்ரதிஸம்பந்தியையும், அநந்யார்ஹஶேஷ பூதனுடைய அஹங்காரமமகாரநிவ்ருத்தியையும், தந்நிவ்ருத்த மான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்த்ர்யத்தையும், பாரதந்த்ர்யகாஷ்டையான ததீயஶேஷத்வத்தையும், பரதந்த்ர னுக்கு அநுரூபமான உபாயத்தையும், உபாயபலமான கைங்கர் யத்தையும், கைங்கர்யப்ரதி ஸம்பந்தியையும் சொல்லுகிறது.

                         ரக்ஷகாந்தரப்ரதிபத்தியுண்டானபோது, அகாரார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது, ஸ்வஸ்வா தந்த்ர்யம் நடையாடிற்றாகில், சதுர்த்யர்த்தம் நெஞ்சில் பட்ட தில்லையாகக் கடவது, ஶேஷ்யந்தரப்ரதிபத்தி உண்டாயிற் றாகில், உகாரார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது, தேஹாத்மாபிமானம் நடையாடிற்றாகில், மகாரார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது, ஸாதநாந்தரருசியும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல், ஸஜாதீயத்வப்ரதிபத்தியும் நடை யாடிற்றாகில், நமஶ்ஶப்தார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது ஈஶ்வரவிபூதிபூதரோடே ராகத்வேஷம் நடையாடிற்றா கில், நாரஶப்தார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது. அபந்துக்கள் பக்கல் பந்துதவப்ரதிபத்தி யுண்டாயிற்றாகில், அயநஶப்தார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. ப்ரயோஜநாந்தரருசி உண்டாயிற்றாகில், சதுர்த்யர்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது.

பரந்த ரஹஸ்யம் திருமந்த்ரப்ரகரணம் முற்றிற்று.

பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.