प्रधानशतकम्
ப்ரதாந சதகம்
यः प्रधानः प्रपन्नानां प्रधानशतकं व्यधात् । तं नौमि वेङ्कटाचार्यं धुर्यं मार्गे यतीशितुः ॥
परविदुपदर्शितं नः प्रधानशतकं प्रमाणसिद्धमिदम् । भजति शतकोटिभावं परपक्षे च प्रयोजने च सताम् ॥
பொங்கு புனலாறுகளில் புவனமெல்லாம்
பொன்கழலால் அளந்தவன்தன் தாளால் வந்த
கங்கையெனும் நதி போலக் கடல்களேழில்
கமலை பிறந்து அவனுகந்த கடலே போல
சங்குகளில் அவனேந்தும் சங்கே போலத்
தாரில் அவன் தண்துளவத் தாரே போல
எங்கள் குலபதிகள் இவை மேலாமென்றே
எண்ணிய நல்வார்த்தைகள் நாம் இசைகின்றோமே.(25)
“வார்த்தை அறிபவர் மாயவற்காளன்றி ஆவரோ” என்று ஆழ்வார் ஓரவதாரத்தில் வார்த்தையை उदाहरिத்த இது மற்றும் ஆசார்யர்கள் முமுக்ஷுக்களுக்கு அருளிச்செய்யும் प्रधाननिष्कर्षकவாக்யங்களுக்கும் உபலக்ஷணம். அவை எல்லாம் கூட இங்கே விவக்ஷிதங்களாகவுமாம். அவை எவை என்னில்
- प्रत्यक्षादि ப்ரமாணங்களிற் காட்டிலும் “वेदात् शास्त्रं परं नास्ति” इत्यादिகளிற்படியே மற்றுள்ள ஶாஸ்த்ரங்களிற் காட்டிலும் पारलौकिकपुरुषार्थतदुपायங்களை यथावस्थितமாகக் காட்டுகிற वेदம் प्रधानம்.
- அதில் परावरतत्वहितपुरुषार्थங்களில் अन्यथासिद्धप्रमाणान्तरங்களால் வரும் கலக்கங்களை எல்லாம் தீர்க்கவல்ல वेदान्तம் प्रधानம்.
- அது தன்னில் “इदं पुरुषसूक्तं हि सर्ववेदेषु पठ्यते” என்கிறபடியே सर्ववेदपठितமாய்க் கொண்டு श्रियःपतिயான மஹாபுருஷனை மூலகாரணமாகவும் மோக்ஷோபாயமாகவும் காட்டுகிற புருஷஸூக்தம் प्रधानம்.
- இம்மஹாபுருஷனை ஆராதிப்பார்க்கு மந்த்ரங்களாகச் சொன்னவற்றில் व्यापकवर्गம் प्रधानம்.
- அதிலும் सर्वाचार्यपरिग्रहातिशयத்தாலும், शेषशेषिसर्वतत्वकण्ठोक्तिயாலும் “न मन्त्रोऽष्टाक्षरात् परः” என்னும் படியான ஸ்ரீமதஷ்டாக்ஷரம் प्रधानம்.
- இம் मन्त्रोक्ति மாதாவாக, ஆசார்யன் பிதாவாகப் பிறக்கிற विद्याजन्मம் ஜன்மங்களெல்லாத்திலும் प्रधानம்.
- இம்மந்த்ரத்தில் पदங்கள் மூன்றில் “गिरामस्म्येकमक्षरं”, “प्रणवो ह्यक्षरं परं” என்கிற மூலமாகிய ஒற்றை எழுத்து प्रधानம்.
- त्र्यक्षरब्रह्मமான இதில் श्रुतिகள் பிரித்துக் காட்டின அக்ஷரங்கள் மூன்றில் “अक्षराणामकरोऽस्मि” என்கிற सर्ववाचकजातप्रकृतिயான प्रथमाक्षरம் प्रधानம்.
- இதில் लुप्तविभक्त्यंशத்திற் காட்டில் सर्ववाच्यजातप्रकृतिயான ஸர்வரக்ஷகனைச் சொல்லுகிற प्रकृत्यंशம் प्रधानம்.
- இதில் धात्वर्थங்கள் பல உண்டானாலும் उपयुक्ततमமாகையாலே ரக்ஷணம் प्रधानம்.
- ரக்ஷகமாக இங்கு प्रथमोपात्तविशेष्यத்தினுடைய रक्षकत्वोपयुक्त्तविशेषणங்களில் मूलमन्त्रविवरणமான द्वयத்தில் முற்பட்ட विशेषणம் प्रधानம்.
- இப்படி ஸ்ரீமானாய் अकारवाच्यனான विश्वपतिயை सर्वपरविद्यावेद्यன் என்று நிர்ணயிக்கிற நாராயணாநுவாகம் तत्वनिर्णायकவாக்யங்களில் प्रधानம்.
- “अस्या मम च शेषं हि विभूतिरुभयात्मिका” इत्यादिகளிற்படியே विभूतिயைப்பற்ற விஷ்ணுபத்நியும் श्रियःपतिயும் प्रधानர்கள்.
- एकமான இச் शेषित्वमुभायाधिष्ठानமானாலும் दम्पतिகளில் पतिप्राधान्यம் लौकिकवैदिकमर्यादैயின்படியே नित्यनियतமாகையாலே पतिகளுக்கும் परमனான पति என்னும்படி நின்ற நாராயணனே सर्वप्रधानனாம்.
- இவனை बृहत्वबृंहणत्वங்களுடையவை எல்லாத்திலும் प्रकृष्टனாகையாலே “परब्रह्मம்” என்றும், स्वनिष्ठतत्वமாகையாலே “परतत्वம்” என்றும், ப்ரகாஶகங்கள் தமக்கும் प्रकाशकனாகையாலே “परं ज्योतिस्” என்றும், ஸர்வாத்மாக்களுக்கும் அந்தராத்மாவாகையாலே “பரமாத்மா” என்றும், தேவதைகள் தங்களுக்கும் आराध्यனாகையாலே “परदेवதை” என்றும், मुक्तருக்கும் प्रधानप्राप्यனாகையாலே “परा गति” என்றும், முமுக்ஷுக்களுக்கு वशीकरणीयवर्गத்தின் ஸீமாவாகையாலே “परा काष्ठै” என்றும், सर्वोपायप्रसादनीयसिद्धोपायமாகையாலே “परायणம்” என்றும், सिद्धिहेतुக்களில் सर्वसिद्धिहेतुவாகையாலே “பரமதபஸ்” என்றும், பாவநங்கள் தமக்கும் पावनत्वशक्तिप्रदனாகையாலே “पवित्राणां पवित्रं” என்றும், “गुणायत्तं” इत्यादिகளிற்படியே, தன் गुणங்கள் முதலான मङ्गलங்களுக்கெல்லாம் मङ्गलत्वावहனாகையாலே “मङ्गलानां च मङ्गलम्” என்றும் – இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் வரும் प्राधान्यங்கள் எல்லாத்தையும் நினைத்து “लोकप्रधानன்” என்று சொல்லுகிறது.
- மற்றும் லோகத்திற்குப் प्रधानராய்த் தோற்றுமவர்கள் द्वारशेषिகளாகையாலே அவர்களைப் பற்றி நித்யமாகவாதல், कादाचित्कமாகவாதல் शेषமாமவற்றுக்கும் सर्वेश्वरனே निरुपाधिकप्रधानशेषिயாய் நிற்கும்.
- இப்படி विश्वशेषिயான நாராயணனையும் शेषभूतனான நரனையும் अर्जुनरथं போலே முன்னும் பின்னுமாகக் காட்டுகிற ப்ரணவத்தில் ஶேஷமாகச் சொல்லப்பட்ட ஜீவன் शब्दवृत्तिயாலே प्रधानனாய்த் தோற்றும்.
- இஜ்ஜீவனுக்கு निरूपकனாய் நின்றாலும் राजपुरुषरामानुजादिशब्दங்களில் போலே अर्थस्वभावத்தாலே सर्वशेषिயே प्रधानனாம்.
- இச் शेषशेषिகளை समानाधिकरणशब्दங்களாலே சொல்லுமிடத்திலும் अपृथक्सिद्धविशेषणवाचिशब्दங்கள் निष्कर्षपर्यवसायिயல்லாத போது विशेष्यपर्यन्तங்களாகிற ந்யாயத்தாலே ஜீவனுடைய अत्यन्तपारतन्त्र्यादिளை अनुसन्धिக்கை प्रधानம்.
- இங்கு व्यधिकरणமாகச் சொல்லுகிற இது रक्ष्यत्वरक्षकत्वाणुत्वविभुत्वादि वैधर्म्यानुसन्धानத்தில் प्रधानம்.
- இப் ப்ரணவத்தில் பிறந்த तत्वज्ञानம் मोक्षोपायाधिकारानुप्रविष्टज्ञानங்களில் प्रधानம்.
- இப்படி सिद्धस्वरूपனான अधिकारिயினுடைய उपायानुष्ठानங்களில் मध्यमपदसंगृहीतமான साङ्गप्रपदनம் प्रधानம்.
- இதில் “न्यासः पञ्चाङ्गसंयुतः” என்கையாலே आनुकूल्यसङ्कल्पादिகளைப்பற்ற ஸமர்ப்பணம் प्रधानம்.
- ஸமர்ப்பணம் தன்னில் “वपुरादिषु”, “मम नाथ”, “फले स्वाम्यवियुक्तता”, इत्यादिகளிற்படியே तत्वज्ञानरूपமாய்க் கொண்டு அந்வயிக்கிற स्वरूपसमर्पणादिभागத்திற் காட்டில் “आत्मात्मीयभरन्यासो ह्यात्मनिक्षेप उच्यते” என்கிற भरन्यासம் प्रधानம்.
- இது विधिவாக்யத்தில் साध्यமாகச் चोदितமான रूपத்தாலே प्रधानம்.
- இத்தாலே वशीकरणीयமான सिद्धोपायம் सर्वकारणत्वस्वतन्त्रत्वाव्यवहितोपायत्वादिகளாலே प्रपत्तिதன்னையும் பற்ற प्रधानம்.
- இந்த நமஸ்ஸில் स्थूलयोजनैயில் साध्योपायம் प्रधानம்.
- सूक्ष्मयोजनैயில் निरपेक्षस्वातन्त्र्यादिनिषेधம் प्रधानம்.
- परयोजनैயில் “नमननामवान्” என்கிற இதின் ஸ்வாரஸ்யத்தைப் பார்த்தால், முன்பு சொன்ன साध्योपायம் प्रधानம்.
- “तत्प्राप्तये प्रधानोऽयं पन्था नमननामवान्” என்று ஈஶ்வரன் தன்னையே விவக்ஷித்தால் सिद्धोपायமான அவன்தானே प्रधानம்.
- இஸ் सिद्धोपायத்தை सुप्रसिद्धविशेषनामமாய்க் கொண்டு विशदीகரிக்கிற तृतीयपदத்தில் समासद्वयத்தில் उत्तरपदार्यप्रधानமாய் उपायभावத்தையும் कण्ठोक्तिபண்ணுகிற तत्पुरुषसमासம் प्रधानம்
- திருமந்திரத்திலே योजनाभेदங்களாலே स्वरूपोपायपुरुषार्थங்களில் ஓரொன்றும், இவ்விரண்டும், மூன்றும் சேரவும் प्रधानம்.
- இதில் சொன்ன सिद्धसाध्योपायங்கள் இரண்டையும் இதன் फलविशेषத்தையும் विशिष्टமாக विशदीகரிக்கிற द्वयம் शरणागतिमन्त्रங்களில் प्रधानம்.
- இங்குத் திருவடிகளை உபாயமாகச் சொன்ன இது ப்ரபத்திக்கு இலக்கான श्रियःपतिயினுடைய ஸ்வரூபத்திற்காட்டில் शुभाश्रयविग्रहத்திற்கு प्रतिपत्तिसौकर्यத்தாலே “सालम्बनो महायोगः” என்னும்படியான प्राधान्यத்தையும், அதுதன்னில் “अनतिक्रमणीयं हि चरणग्रहणम्” इत्यादिகளிற்படியே திருவடிகளைப் பற்றுமதுக்கு कृपोत्तम्भकत्वातिशयத்தால் உண்டான प्राधान्यத்தையும் ப்ரகாஶிப்பித்தபடி.
- இப்படிச் சொன்னாலும், இத்தாலே विशिष्टனானவனே फलप्रदानसंकल्पाश्रयமான प्रधानोपायம்.
- गुणादिகளால் வரும் वैशिष्ट्यம் सिद्धोपाय-ऐक्यத்திற்கும் सिद्धप्राप्य-ऐक्यத்திற்கும் विरुद्धமல்லாமையாலே உபநிஷத்துக்களின்படியே இங்கும் सिद्धोपायफलभागத்தில் उपायप्राप्य-ऐक्यம் प्रधानமாகலாம்.
- திருமந்த்ரத்திலும் द्वयத்திலும் ப்ரகாஶித்த प्रपत्तिशास्त्रத்தை उपबृंहिக்குமவற்றில் भगवच्छास्त्रம் प्रधानம்.
- இவ் अर्थத்தை चित्तरञ्जनத்தோடே ஸர்வரையும் எளிதாகத் தெளிவிக்குமவற்றில் தொண்டர்க்கு அமுதுண்ணலாய் “பொய்யில் பாடலான” ஆழ்வார்கள் அருளிச்செயல் प्रधानம்.
- இதற்கு இதிஹாஸங்களில் शरण्यदम्पतिवाक्यविशेषभूषितமான श्रीमद्रामायणம் प्रधानம்.
- न्यासोपासनादिरूपसर्वशास्त्रार्थोपबृंहणங்களில் “चत्वार एकतो वेदाः भारतं चैकमेकतः” என்னும்படி நிற்கிற महाभारतம் प्रधानம்.
- “धर्मे चार्थे च कामे च मोक्षे च भरतर्षभ” इत्यादिகளிற்படியே चतुर्विधपुरुषार्थस्थापकமான இதில் अध्यात्मभागம் प्रधानம்.
- அதிலும் “अत्रोपनिषदं पुण्यां कृष्णद्वैपायनोऽब्रवीत्” என்னும்படி ஸர்வோபநிஷத்ஸாரமான गीताशास्त्रம் प्रधानம்.
- அது தன்னில் “सर्वगुह्यतमं” என்று प्रशंसिத்து, अनन्तरம் शास्त्रसारार्थसङ्ग्रहம் பண்ணுகிற இரண்டு श्लोकம் प्रधानம்.
- அவை இரண்டிலும் द्वयार्थமான प्रपदनத்தினுடைய अधिकारिनैरपेक्ष्यविषयस्वरूपफलविशेषங்களைச் சுருங்கத் தெளிவிக்கையாலே சரமஶ்லோகம் प्रधानம்.
- இதில் வாக்யங்கள் மூன்றில் उत्तरवाक्यங்கள் विधिशेषங்களாய் அந்வயிக்கின்றனவாகையாலே पूर्ववाक्यம் प्रधानம்.
- फलवाक्यத்தில் சொன்ன प्रतिबन्धकनिवृत्तिயைப் பற்ற अर्थस्वभावத்தாலே “मामेवैष्यसि” इत्यादिகளிற் சொன்ன “स्वतःप्राप्तस्वामिलाभம் प्रधानம்.
- அர்ஜுனனுடைய शोकनिवर्तकवाक्यங்களில் द्वितीयाध्यायोक्तமான अस्थानस्नेहादिनिबन्धनशोकनिवर्तनத்திலும் षोडशाध्यायத்தில் சொன்ன अनधिकारत्वशंङ्कानिबन्धनशोकनिवर्तनத்திலும் காட்டில், இங்கு சொல்லுகிற शीघ्रकारिसुकरोपायोपदेशத்தாலே विलम्बितफलकृच्छ्रसाध्योपायोपदेशजनितशोकनिवर्तनம் प्रधानம்.
- இப்படி रहस्यत्रयार्थம் தெளிந்து भरन्यासம் பண்ணுகிற अधिकारिகளில் दृप्तரைக் காட்டில் आर्तர் प्रधानர்.
- आर्तர்தங்களில் क्षणान्तरादिकालक्षेपक्षमतैயில் तारतम्यத்தாலே प्रधानதாரதம்யமுண்டாம்.
- दृप्तனுக்கு स्वयंप्रयोजनगतिचिन्तनादिகளில் “மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகமெண்ணும்”, “வாங்கு எனை நீ மணிவண்ணா” என்று இருக்குமது प्रधानம்.
- இவனுக்கு अन्तिमप्रत्ययம் “मदीययैव दयया अतिप्रबुद्धः” என்கிறபடியே स्वयत्ननिरपेक्षமாக सिद्धिக்கும்படி அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்குமது प्रधानம்.
- இவனுக்கு இங்கிருந்த காலம் प्राप्तமான आज्ञानुज्ञासिद्धங்களான கைங்கர்யங்களில் आज्ञासिद्धமானவை अकरणத்தில் अधिकारोचितप्रायश्चित्तம் பண்ண வேண்டும்படி நிற்கையாலே प्रधानங்களாம்.
- அவை தம்மில் “श्रूयतां धर्मसर्वस्वं”, “पररन्ध्रेषु जात्यन्धाः” इत्यादिகளிற்படியே विहितकरणங்களிற் காட்டில் निषिद्धवर्जनம் प्राचुर्येण प्रधानம்.
- अनुज्ञासिद्धकैङ्कर्यங்களில் क्रियांशத்தில் ज्ञानांशம் प्रधानமானபடியாலே ज्ञानोपयुक्तप्रबन्धपरिशीलनமும் ज्ञातार्थप्रतिसन्धानहेतुவான द्वयवचनादिகளும் प्रधानங்கள்.
- परोपदेशरूपத்தாலே இவற்றைப் பரிஶீலிக்கும் போது கேட்கிற ஶிஷ்யர்களில் “नास्तिको भिन्नमर्यादः”, “विद्याचोरो गुरुद्रोही”, “न स्थास्यन्त्युपदेशे च”, “उपदिष्टेप्यविश्वस्ताः” इत्यादिகளிற் சொன்ன दोषமுடையவர்களிற் காட்டிலும் अन्तर्यामिपर्यन्तनित्यकर्मबहिर्भूतदेवतान्तरस्पर्शம் விடாதவன் வர்ஜநீயரில் प्रधानன்.
- यथोपदेशம் प्रतिष्ठितबुद्धिயாய் यथाशास्त्रம் आचरिத்து, அடைந்தவர்களையும் आचरिப்பிக்கைக்கு ருசியும் ஶக்தியும் உடையனாய், “ब्रह्मविद्भिः परं भूतं न किञ्चिदिह विद्यते” என்று கொண்டாடும் படியானவன் उपादेयரில் प्रधानன்.
- चत्वारिंशत् ஸம்ஸ்காரங்களெல்லாம் உடையவனேயாகிலும் “दया सर्वभूतेषु”, “अमानित्वमदम्भित्वं” इत्यादिகளிற் சொன்ன आत्मगुणपूर्तिயில்லாதவனிற் காட்டில் ஸம்ஸ்காரங்களில் एकदेशமுடையவனேயாகிலும் अधिकारानुगुणकैङ्कर्यपर्यन्तात्मगुणपूर्तिயுடையவன் प्रधानன்.
- இக்கைங்கர்யம் स्वनिदानभूतशेषत्वம் போல भागवतपर्यन्तமாய் நின்றால் “स्वाराधनं विहायापि” इत्यादिகளிற் படியே भागवतकैङ्कर्यம் प्रधानம்.
- भागवतரில் सम्यक्-ज्ञानाधिकர் सत्कारयोग्यரில் प्रधानர்.
- निर्वेदाधिकர் सल्लापयोग्यரில் प्रधानர்.
- वैराग्याधिकர் सहवासयोग्यரில் प्रधानர்.
- अपराधभीरुக்களாய், அவதாரங்கள் போலே, स्वमाहात्म्यத்தை மறைத்து वर्तिக்குமவர்கள் भीतियोग्यரில் प्रधानர்.
- “आह्लादशीत” इत्यादिகளிற்படியே भक्तिपरवशர் प्रीतियोग्यரில் प्राधानர்.
- இப் भागवतருடைய கைங்கர்யங்களில் “गुरोः गुरुतरं नास्ति” इत्यादिகளிற் சொன்ன ஆசார்யகைங்கர்யம் प्रधानம்.
- உத்தமமான இது मध्यमத்தோடே கூடினால் प्रधानतरம்.
- प्रथममध्यमங்கள் இரண்டோடும் கூடினால் प्रधानतमம்.
- இவர்களுடைய கைங்கர்யங்களில் தனக்குப் பலவும் अशक्यமானால் शास्त्रानुगुणமாக शक्यமானவற்றில் प्रतिसम्बन्धि உகந்தது प्रधानம்.
- இப்படி உகப்பிக்குமவற்றில் भावविशेषம் प्रधानம் என்னுமிடத்தை “செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை” முதலான ப்ரமாணங்களிலே கண்டுகொள்வது.
- चेतनव्यापारங்களெல்லாம் स्वप्रयोजनार्थங்கள் என்கிற ந்யாயத்தாலே கைங்கர்யத்தில் தன் உகப்பும் ப்ரயோஜநமானாலும், இதுதானும் परशेषம் என்று தெளிகையாலே “प्रहर्षयिष्यामि” என்கிற परன் உகப்பே प्रधानம்.
- கைங்கர்யலக்ஷ்யங்களான भगवद्विग्रहங்களில் परव्यूहादिक्रमத்தாலே प्राधान्यक्रमம்.
- அவை எல்லாவற்றிலும் परत्वप्रतिपत्तिदार्ढ्यமுடையவனுக்கு தனக்கு रुचिத்த भगवदवतारமெல்லாம் प्रधानம்.
- अच्छिद्रமாக இவனுக்கு ஸர்வகாலங்களும் यथाशास्त्रம் ஏதேனுமொரு प्रवृत्तिनिवृत्तिरूपकैङ्कर्ययोग्यங்களானாலும் सत्वादिகளாலுண்டான औचित्यातिशयத்தாலே कृतयुगादिகளுக்கு प्राधान्यம்.
- “ध्यायन् कृते यजन् यज्ञैः त्रेतायां” इत्यादिகளிற்படியே लघुவான आनुकूल्यव्यापारம் गुरुவான भगवत्प्रीतिயைப் பிறப்பிக்கையாலே कलिप्राधान्यம் சொல்லப்பட்டது.
- कैङ्कर्योपकरणங்களில், “विचित्रा देहसम्पत्तिः” इत्यादिகளிற் சொன்ன உள்ளம், உரை, செயல் உள்ள இம்மூன்றும் प्रधानம்.
- இவை अनुगुणங்களாகில், तुलसीतोयादिबाह्योपकरणங்களில் शास्त्राविरुद्धமாகப் பெற்றது प्रधानம்.
- कैङ्कर्यदेशங்களில் अनापத்தில் भागवतोत्तरமான भगवत्क्षेत्रம் प्रधानம்.
- அதில் स्वयंव्यक्तसैद्धार्षमानुषवैष्णवங்களில் पूर्वपूर्वம் प्रधानம்.
- இவை கிட்டாத காலத்தில் கருந்தடமுகில் வண்ணனைக் கடைக்கொண்டு தொழும் பத்தர்கள் இருந்த ஊர்தானே “வைகுந்தமாகும் தம்மூரெல்லாம்” என்னும்படி प्रधानம்.
- कैङ्कर्ययोग्यताऽऽपादकतीर्थங்களில் यथाधिकारம் अवगाहनाहिகளைப் பண்ணுமவனுக்கு मानसतीर्थமும் அத்तीर्थத்திலே अवगाहिத்தவர்களும் प्रधानர்.
- कैङ्कर्यदशैகளில் शाण्डिल्यादिகள் சொன்ன करणत्रयशुद्धिயுள் दशाविशेषம் प्रधानம்.
- “रागाद्यपेतं हृदयं” इत्यादिகளாலே करणत्रयदोषங்களில் प्रधानங்களும் காட்டப்பட்டன आन्तरशत्रुக்களாய் जेतव्यங்களான இத் दोषங்கள் எல்லாவற்றிலும் “क्रुद्धः पापं न कुर्यात् कः” इत्यादिகளிற்படியே क्रोधமாய் பரிணமிக்கும்படி अतिप्रवृद्धமான காமம் प्रधानம்.
- दोषங்கள் புகுராதபடி பண்ணுமவற்றில் अनुशासनத்தாலும் अनुग्रहத்தாலும் शिक्षकரான ஸாத்விகரோடு உண்டான सहवासம் प्रधानம்.
- दोषமூலகங்களாய் “न क्षमामि” என்னப் பண்ணும் அபசாரங்களில் அஸஹ்யாபசாரம் प्रधानம்.
- அது தன்னில் कृतघ्नதை அடியாக வரும் आचार्यद्रोहம் प्रधानம்.
- “न क्षमामि” என்கிறவனைக் கடுகப் प्रसादिப்பிக்குமவற்றில் “अन्तरेणाञ्जलिं बध्वा”, “अञ्जलिः परमा मुद्रा” इत्यादिகளிற்படியே अनुतापकृतज्ञत्वादियुक्तமான अञ्जलिबन्धம் प्रधानம்.
- भागवतापचारपरिहारங்களில் भागवतரை முன்னிட்டே க்ஷமிப்பிக்குமது प्रधानம்.
- अनुतापादिகள் இல்லாதபோது, முடிவில் अधःपातिயாகாதபடி பண்ணுமவற்றில் ஆசார்யனுடைய आनृशंस्यம் प्रधानம்.
- இது தனக்கு மூலமாய் “தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல” सर्वपरमाचार्यனுடைய वानरराक्षसवर्गஸாக்ஷிகமான व्रतविशेषம் अनुतप्तரைத் தேற்றுமவற்றில் प्रधानம்.
- “आचार्यः श्रेष्ठो गुरूणां” என்கையாலே गुरुवर्गத்தில் आचार्यன் प्राधानம்.
- अध्यात्मोपदेष्टाக்கள் பலருண்டானபோது, मूलमन्त्रादिमुखத்தாலே अव्यवहितமோக்ஷோபாயத்தை உபதேஶித்தவன் प्रधानன்.
- आचार्यप्राचार्यसमवायத்தில் प्राचार्यानुवर्तनம் प्रधानம்.
- “तमिमं सर्वसम्पन्नं” इत्यादिகளிற்படியே ஸர்வபரமாசார்யனான ஸர்வேஶ்வரன் सन्निधिயில் आचार्यानुशिष्टமான भगवदनुवर्तनம் प्रधानம்.
- भगवत्सन्निधिயில் “राजा वा राजपुत्रो वा”, “एकान्तिनो महाभागाः” इत्यादिகளிற்படியே एकान्तिव्यतिरिक्तोपचारம் அபசாரங்களில் प्रधानம்.
- एकान्तिகளில் மோக்ஷமாத்ரப்ரயோஜநன் प्रधानன்.
- कृतकृत्यனான அநந்யப்ரயோஜநனுடைய கைங்கர்யம் मुक्तகைங்கர்யஸமமாகையாலே முமுக்ஷுகைங்கர்யங்களில் प्रधानம்.
- भगवद्भागवतसमृद्धिயையும் भक्तितत्वज्ञानங்களையும் तद्विरोधिपापनिवृत्तिயையும் பற்றக் காம்யகர்மம் प्राप्तமானாலும், भगवाன்தன்னையேயாதல் அவனுக்கு असाधारणரையேயாதல் அபேக்ஷிக்குமது प्रधानம்.
- सम्यक्-ज्ञानादिवर्घकங்களில் ஸர்வகாலத்திலும் “मानं त्यक्त्वा यो नरो वृद्धसेवी” इत्यादिகளிற் சொன்ன ज्ञानवृद्धोपासनம் प्रधानம்.
- இஸ் सम्यक्-ज्ञानाभिवृद्धिயாலே வரும் सत्त्वोन्मेषம் भगवदनुभवरसविरोधिमानसव्याधिபரிஹாரங்களில் प्रधानம்.
- गुणाधीनसुखங்களில் शमदमादिसहितமான सात्विकसुखம் प्रधानம்.
- இப்படி இவன் பெறும் प्रयोजनपरम्परैயில் முமுக்ஷுக்களுடைய परोक्षापरोक्षविच्छिन्नानुभवத்தில் सम्भावितமான स्वातन्त्र्योन्मज्जनப்ரஸங்கமில்லாத अविच्छिन्नसाक्षात्कारபரீவாஹமாய், நாராயணஶப்தத்தில் चतुर्थिயிலே விவக்ஷிதமாய், நமஸ்ஸாலே शोधितமாய், नित्यनिर्दोषनिरुपाधिकகைங்கர்யத்தாலே வரும் निरतिशयानन्दरूपமான मुक्तसुखம் सर्वसुखங்களிலும் प्रधानம். இஸ் सुखம் ईश्वरसुखங்களிலும் காட்டிலும் ந்யூநமில்லாதபடியை “தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர்” என்கிறதாகையாலே मुक्तனுக்கு வரும் स्वातन्त्र्यமும் இக்கைங்கர்யத்தளவிலேயாய் पराधीनமாய் நிற்கையாலே, मोक्षप्रदனான सर्वशरीरिக்கு पूर्वोक्तनित्यसिद्धनिरुपाधिकप्राधान्यம் सुप्रतिष्ठितம்.
சீர்க் கடலின் திரையென்னத் தகவால் மிக்க
தேசிகனாய் திணி இருளாம் கடலை நீக்கி
பாற்கடலோன் திருவணையாய் நின்று பாரம்
காணாத பவக்கடலைக் கடத்துகின்றான்
நீர்க்கு மரக்கலமென்ன விறைவர் இன்பம்
எழுந்தழியும் குமிழியென இகழ்ந்தொழிந்தோம்
ஆர்க்கினி நாமென் கடவோம் நமக்கும் ஆரென்
கடவாரென்று அடைந்தவர்கட்கு அறிவித்தோமே. (26)
காசினியில் மணியனைத்தும் காயாவண்ணன்
கடைந்தெடுத்த கெளத்துவத்தின் சீர்மைக்கு ஒவ்வா
காசி முதலாகிய நன்னகரியெல்லாம்
கார்மேனி அருளாளர் கச்சிக்கு ஒவ்வா
மாசில் மனந்தெளி முனிவர் வகுத்தவெல்லாம்
மாலுகந்த ஆசிரியர் வார்த்தைக்கு ஒவ்வா
வாசியறிந்து இவையுரைத்தோம் வையத்துள்ளீர்!
வைப்பாக இவை கொண்டு மகிழ்மின் நீரே. (27)
श्रीमद्वेङ्कटनाथः सहृदयहृदयप्रसादनं श्रेष्ठम् । व्यक्तं प्रधानशतकं व्यतनुत कविकथककरिघटासिंहः ॥
प्रधाने सर्वशास्त्राणां प्रधानशतके स्थिते । अप्रधानेषु शास्त्रेषु किं मनोऽन्येषु धावसि ॥
इति कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु प्रधानशतकं सम्पूर्णम् ।
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः