பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
ப்ரமேயஶேகரம்
நிர்ஹேதுக பகவத்கடாக்ஷமடியாக அஜ்ஞாத ஸுக்ருதமுண்டாம் ; அதடியாக அத்வேஷமுண்டாம் ; அதடியாக பகவத்பாகவத விஷயங் களில் ஆபிமுக்யமுண்டாம்; ஆபிமுக்யமுண்டானவாறே த்யாஜ்யோ பாதேயவிபாக ஜ்ஞாநத்தில் கௌதுகமுண்டாம்; அத்தாலே ஸாத்விக ஸம்பாஷணமுண்டாம் ; அத்தாலே ஸதாசார்ய ஸமாஶ்ரயணமுண் டாம்; அதுண்டானவாறே த்யாஜ்யோபாதேய நிஶ்சயமுண்டாம்; அதுண்டானவாறே ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும், பரமப்ராப்யத் தில் அபிநிவேஶமுமுண்டாம்; அநந்தரம், ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும், பரமப்ராப்ய ஸித்திக்குமடியான ஸித்தோபாய ஸ்வீகாரமுண்டாம்; அநந்தரம், பகவத்ப்ராப்தியிலே த்வரையுண்டாம்; அநந்தரம், 1. “அஹம் ஸ்மராமி” என்கிறபடியே – ஈஶ்வரஸ்ம்ருதிக்கு விஷயபூதனாம்; அநந்தரம், பூதஸூக்ஷ்ம ஶரீரபரிஷ்வங்கமுண்டாம், அநந்தரம், பரமாத்மஸம்ஸர்க்கமுண்டாம்; பின்பு, ஹார்த்தாநுக்ரஹத்தாலே மார்க்க, விஶேஷப்ரகாஶமுண்டாம்; பின்பு ஹ்ருதயகுஹாநிர்க்கமா முண்டாம்; அநந்தரம், மூர்த்தந்யநாடீ நிஷ்க்ரமணமுண்டாம்; அநந்தரம், அர்ச்சிராதிமார்க்ககமநமுண்டாம்; அநந்தரம், ஆதிவாஹிக ஸத்கார முண்டாம்; அநந்தரம், ஆவரணாதிக்ரமணமுண்டாம்; அநந்தரம், ப்ரக்ருத்யதிலங்கநமுண்டாம்; அநந்தரம், விரஜாஸ்நாநமுண்டாம்; அநந்தரம், ஸுக்ஷ்மஶரீர விஶ்லேஷமுண்டாம்; அநந்தரம், அபஹத பாப்மத்வாதி, குணகண ப்ராதுர்பாவமுண்டாம்; அநந்தரம், அமாநவகர ஸ்பர்ஶமுண்டாம்; அநந்தரம், பகவத்ஸங்கல்ப கல்பிதமான திவ்ய தேஹ ப்ராப்தியுண்டாம்; அநந்தரம், அகாலகால்ய திவ்யதேஶ ப்ராப்தியுண்டாம்; அநந்தரம், அரம்ஹ்ரத தடஸ்நாநமுண்டாம்; பின்பு, திவ்யாலங்காரமுண்டாம்; பின்பு திவ்யவிமாநாரோஹண முண்டாம்; பின்பு, திவ்யகாந்தார ப்ரவேஶமுண்டாம்; அநந்தரம், திவ்யாப் ஸரஸ்ஸத்காரமுண்டாம்; அநந்தரம், திவ்யகந்த ப்ரவேஶமுண்டாம்; அநந்தரம், ப்ரஹ்மகந்த ப்ரவேஶமுண்டாம்; அநந்தரம், அப்ராக்ருத கோபுர ப்ராப்தியுண்டாம்; அநந்தரம், திவ்யநகர ப்ராப்தியுண்டாம்; அநந்தரம், ஸூரிபரிஷத் ப்ரத்யுத்கமநமுண்டாம்; அநந்தரம் ராஜ மார்க்க கமநமுண்டாம்; அநந்தரம், ப்ரஹ்ம தேஜ:ப்ரவேஶமுண்டாம்; அநந்தரம், திவ்யகோபுர ப்ராப்தியுண்டாம்; அநந்தரம், ப்ரஹ்மவேஶ்ம ப்ரவேஶமுண்டாம்; அநந்தரம், திவ்யமண்டப ப்ராப்தியுண்டாம் ; அநந்தரம், திவ்ய பரிஷத் ப்ராப்தியுண்டாம்; அநந்தரம், ஸபத்நீக ஸர்வேஶ்வர தர்ஶநமுண்டாம்; அநந்தரம், ஸ்துதிப்ரணாமாஞ்ஜலி ப்ரமுக ஸம்ப்ரமாநுவர்த்தநமுண்டாம்; அநந்தரம், பரமாத்ம ஸமீப ப்ராப்தியுண்டாம்; அநந்தரம், பாதபீட பரியங்கா ரோஹண முண்டாம்; அநந்தரம் பகவதுத்ஸங்களங்கமுண்டாம்; அநந்தரம், ஆலோகநாலா பாத்யநுபவமுண்டாம்; அநந்தரம், ஆலிங்கநாத்யநுபவமுண்டாம்; அநந்தரம், ஸ்வரூபரூபகுணவிக்ரஹாத்யநுபவ முண்டாம்; அநந்தரம், அநுபவஜநித ப்ரீதிப்ரகர்ஷமுண்டாம்; அநந்தரம், நாநாவித விக்ரஹ பரிக்ரஹமுண்டாம்; அநந்தரம், ஸர்வதேஶஸர்வகால ஸர்வாவஸ் தோசிதமான ஸர்வப்ரகார கைங்கர்யமுண்டாம்.
ப்ரமேயஶேகரம் முற்றிற்று.
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்.