பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
ரஹஸ்யத்ரய விவரணம்
(இந்த க்ரந்தம் ‘ரஹஸ்யத்ரய தீ3பிகை’யில் சிறிது மாறுதல்களுடன் காணப்படுகிறது.)
ஓரொன்றில் அநுக்தங்களாய், அவஶ்யம் ஜ்ஞாதவ்யங்களான அர்த்த2விஶேஷங்களுக்கு விவரணமாகையாலே, அதிலே ரஹஸ்யத்ரயமும் ஒருவனுக்கு ஜ்ஞாதவ்யமாகக்கடவது. எத்தை எது விவரிக்கிறதென்னில்:-
ஸவிப4க்திகமான அகாரத்தை அநந்தராக்ஷரத்3வயம் விவரிக்கிறது. அவ்வக்ஷரத்3வயத்தையும் மந்த்ரஶேஷபத3த்3வயம் விவரிக்கிறது. அப்பத3த்3வயத்தையும் த்3வயத்தில் வாக்யத்3வயம் விவரிக்கிறது. அவ்வாக்யத்3வத்தையும் சரமஶ்லோகத்தில் அர்த்த4த்3வயம் விவரிக்கிறது. அதில் அகாரத்தை அக்ஷரத்3வயத்தில் ப்ரத2மாக்ஷரம் விவரிக்கிறது. விப4க்தியை அநந்தராக்ஷரம் விவரிக்கிறது. இதில் ப்ரத2மாக்ஷரத்தை ப்ரத2மபத3ம் விவரிக்கிறது. அநந்தராக்ஷரத்தை அநத்ரபத3ம் விவரிக்கிறது. இதில் ப்ரத2மவாக்யத்தைப் ப்ரத2மவாக்யம் விவரிக்கிறது. அநந்தரபத3த்தை அநந்தரவாக்யம் விவரிக்கிறது. இதில் ப்ரத2மவாக்யத்தைப் பூர்வார்த்த4ம் விவரிக்கிறது. உத்தரவாக்யத்தை உத்தரார்த்த4ம் விவரிக்கிறது. இதில் ஶேஷத்வப்ரதி ஸம்ப3ந்தி4யைச் சொல்லுகிற அகாரத்துக்கு அநந்யார்ஹஶேஷத்வ வாசகமான உகாரம் விவரணமானபடி எங்ஙனே? என்னில்: அகாரவாச்யனுடைய ஶேஷித்வம் ஆச்ரயாந்தரங்களிலும் கிடக்குமோ? அநந்யஸாதா4ரணமாயிருக்குமோ? என்று ஸந்தி3க்3த4மானால், அதனுடைய அநந்யஸாதா4ரணத்வப்ரகாஶகமாகையாலே, உகாரம் அகாரவிவரணமாகிறது. எங்ஙனேயென்னில்: உகாரத்தில் சொல்லுகிற சேதனனுடைய அநந்யார்ஹஶேஷத்வம் ஸித்3தி4ப்பது அதற்கு ப்ரதிஸம்ப3ந்தி4யான ஶேஷித்வம் ஓரிடத்திலிளைப்பாறில்; அங்ஙனன்றியிலே, அநேகம் ஶேஷிகளாகில், அநந்யார்ஹஶேஷத்வம் ஸித்3தி4யாது. அந்யராயிருப்பார் சில ஶேஷிகள் உண்டாகில் அந்யஶேஷத்வம் ஸித்3தி4ப்பதொழிய அநந்யார்ஹ ஶேஷத்வம் ஸித்3தி4யாது.
ஆகையாலே, அகாரவாச்யனுடைய ஸமாப்4யதி4கதா3ரித்3யத்தைச் சொல்லிற்றாயிற்று. சதுர்த்தி2யில் சொல்லுகிற ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயவிஶேஷப்ரகாஶகமாய்க் கொண்டு விவரணமாகிறது மகாரம். நிராஶ்ரயமாக த4ர்மத்தின் ஸ்தி2தியில்லையே. ப4க3வத்3வ்யதிரிக்தரைத் தன்னோடு பிறரோடு வாசியற அந்யராகச் சொல்லி, அவர்களில் அந்யதமன் சேதனன் என்கிறது உகாரம். இதில் கழியுண்கிற தே3வதாந்தராதி3மாத்ரத்தாலே அந்யஶப்3த3த்துக்குப் பூர்த்தியில்லாமையாலே அவ்வந்யஶப்3த3த்தில் அந்விதனான தன்னையும் கழித்து, அநந்யார்ஹதையைப் பூரிக்கிற முக2த்தாலே உகார விவரணமாகிறது நமஶ்ஶப்3த3ம். “அஹமபி நமம ப4க3வத ஏவாஹமஸ்மி” என்கிறபடியே ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத அத்ய்ந்தபாரதந்த்ர்யத்தைச் சொல்லுகிறது நமஶ்ஶப்3த3த்திலேயிறே; ஆகையாலே உகாரவிவரணமாகிறது நமஶ்ஶப்3த3ம். ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயவிஶேஷப்ராகஶகமான மகாரவாச்யனுடைய ஶேஷத்வபூர்த்தி பிறப்பது “அகிஞ்சித்கரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி:” என்கிறபடியே கிஞ்சித்காரத்தாலேயாகையாலே, கிஞ்சித்காரப்ரகாஶகமாய்க்கொண்டு மகாரவிவரணமாகிறது நாராயணபத3ம். அத்யந்தபாரதந்த்ர்யப்ரயுக்தமாய் வருகிற உபாயவிஶேஷத்தினுடைய ஸ்வரூபமென்ன, இதிலிழிகைக்கு ஏகாந்தமான துறையென்ன, இவ்வுபாயவிஶேஷமாகச் செய்யவேண்டும் அம்ஶமென்ன, இவற்றை ப்ரகாஶிப்பிக்கையாலே நமஶ்ஶப்த3 விவரணமாகிறது த்3வயத்தில் பூர்வவாக்யம். கைங்கர்யப்ரதிஸம்ப3ந்தி4 ஒரு மிது2நமென்னுமிடத்தையும், அதற்குக்களையானவற்றையும் கழித்துத் தருகையாலே நாராயணஶப்3த3த்துக்கு விவரணமாகிறது உத்தரவாக்யம். அவ்வுபாயஸ்வீகாரம் ஸாத4நாந்தரநிவ்ருத்தி பூர்வகமாகையாலே, தத்ப்ரகாஶகமாய்க்கொண்டு பூர்வவாக்யத்துக்கு விவரணமாகிறது பூர்வார்த்த4ம். உத்தரவாக்யத்தில் சொன்ன ப்ராப்யஸித்3தி4 விரோதி4 நிவ்ருத்தி பூர்வகமாகக் கடவதென்று விவரணமாகிறது உத்தரார்த்த4ம்.
ஸர்வாதி4காரமாயும், அதி4க்ருதாதி4காரமாயும், அர்த்த2த்ரயாத்மகமாயும் இருக்கும் இதில் “ஶ்ரீமத்” என்கிற பத3ம் புருஷகாரம். “ஶரணம் ப்ரபத்3யே” என்கிற பத3ம் அதி4காரிக்ருத்யம். நடுவில் “நாராயண சரணௌ” என்கிற பத3ம் உபாயம். உபாயம் புருஷகாரஸாபேக்ஷமாயும் அதி4காரிஸாபேக்ஷமாயும் இருக்கும். ப2லத்தில் வந்தால் அந்யநிரபேக்ஷமாய் இருக்கும். உத்தரவாக்யமும் பத3த்ரயாத்மகமாயிருக்கும். இதில் “ஆய” என்கிறவிடம் கைங்கர்யத்தைச் சொல்லுகிறது. இதுக்குக்கீழ் கைங்கர்யப்ரதிஸம்ப3ந்தி4யைச் சொல்லுகிறது. மேலில் பத3ம் கைங்கர்யத்தில் களையறுக்கிறது.
ரஹஸ்யத்ரய விவரணம் முற்றிற்று.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.