பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த
ஸகலப்ரமாணதாத்பர்யம்.
ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவோ |
யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா ||
ஶ்ரிய:பதியாய், விஷ்ணுவாஸுதேவ நாராயணாதிஶப்தவாச்யமான ப்ரஹ்மமொன்றுமே முமுக்ஷுவுக்கு ஜ்ஞாதவ்யமென்று ஸகல ப்ரமாணதாத்பர்யம். அந்த ப்ரஹ்மந்தான் விஶேஷணமென்றும் விஶேஷ்யமென்றும் த்விவிதமாயிருக்கும். விஶேஷணமாகிறது :- விஶேஷ்யத்தோடே பிரிந்திராத தர்மம். விஶேஷ்யமாகிறது:- ஸ்வவிஶேஷணத்தோடே பிரிந்திராத தர்மி விஶேஷணமும், போகோபகரணமென்றும், லீலோபகரணமென்றும் த்விவிதமாயிருக் கும். போகமாகிறது. இஷ்டபலாநுபவம். லீலையாகிறது. காலாந்தரத் திலே ஒரு பலமன்றிக்கே தாத்காலிக ரஸஹேதுவான வ்யாபாரம். போகோபகரணமும், சேதநமென்றும், அசேதநமென்றும் த்விவிதம். சேதநமாகிறது, ஜ்ஞாநாஶ்ரய வஸ்து. அசேதநமாகிறது, ஜ்ஞாந ஶூன்ய வஸ்து. அதில் சேதநஜாதி, நித்யவர்க்கமென்றும், முக்த வர்க்கமென்றும் த்விவிதம். நித்யவர்க்கமாகிறது ஒரு நாளும் ஸம்ஸாரத்தை ஸ்பர்ஶியாதே பகவத் நித்யகைங்கர்யநிரதரஸரா யிருந்துள்ள அநந்த வைந்தேய விஷ்வக்ஸேநாதி, ஸூரிஸங்கம். முக்தவர்க்கமாகிறது:- பகவத்க்ருபையாலே அனாதியான அசித்ஸம் பந்தத்தில் நின்றும் விடப்பட்டு, நித்யவர்க்கத்தோடே கலந்து, அது முதலாக யாவதாத்மபாவி பகவத்கைங்கர்யபரராயிருக்குமவர்கள். அசேதநமாகிறது. ஶுத்த ஸத்வாத்மகமாய், தன்னோடே ஸம்பந்தித்த சேதநர்க்கு ஸ்வரூப ப்ரகாஶகமாய், நித்யமாய், ஸ்வயம்ப்ரகாஶமாய், கர்மநிரபேக்ஷமான பகவதிச்சையாலே திவ்யவிக்ரஹங்களாய் திவ்யாபரணங்களாய், திவ்யாயுதங்களாய், சத்ரசாமராதி, பரிச்சிந்நங்க ளாய், திவ்யநகரங்களாய், திவ்யஜநபதங்களாய், அபரிச்சிந்நமாய், நித்யர்க்கும், முக்தர்க்கும், பகவானுக்கும் கைங்கர்ய போக, பரிகரமா யிருக்கும். இனி, லிலோபகரணமும், சேதநமென்றும், அசேதந மென்றும் த்விவிதமாயிருக்கும்; அதிலே சேதந ஜாதியும், ஸம்ஸாரி களென்றும், முமுக்ஷுக்களென்றும் த்விவிதம். ஸம்ஸாரிகளாகிறார்:- அநாதியான அசித்ஸம்பந்தத்தாலே, திரோஹிதங்களான ஸ்வரூப ஸ்வபாவங்களை உடையராய், அதடியாக அந்யதா ஜ்ஞாநவிபரீத ஜ்ஞாதங்களை யுடையராய், தத்கார்யங்களான ராகத்வேஷாதி, ஜந்யங்களான புண்யபாபரூப நாநாவிதகர்மங்களையுடையராய், அது மூலமாக தேவதிர்யங்மநுஷ்யஸ்தாவரரூபமான சதுர்விதநாநா ஶரீரங்களிலே நிரந்தரமாக ப்ரவேஶியாநின்றுகொண்டு, அந்த ஶரீரங்களிலும், ஶரீராநுபந்திகளிலுமுண்டான அஹங்காரமமகாரங் களாலே வருகிற துக்கங்களிலே ஸுகபுத்தி பண்ணாநின்றுகொண்டு, ஶப்தாதி, விஷயப்ரவணராய், தாபத்ரயதஹ்யமாநராய், நிரந்தரது:க்க ஸாகர நிமக்நராயிருக்குமவர்கள். முமுக்ஷுக்களும், ஆத்மப்ராப்தி காமரென்றும், பகவத்ப்ராப்திகாமரென்றும் த்விவிதராயிருப்பர்கள். ஆத்மப்ராப்திகாமராகிறார்:- ராஜபதமளவாகவுடைத்தான ஐஹிகை ஶ்வர்யமும், ப்ரஹ்மபதமளவாகவுடைத்தான ஆமுஷ்மிகைஶ்வர்ய மும், அஸ்திரமாய் துக்கமிஶ்ரமாகையாலே, விவேகித்து, ஆத்மா ப்ரக்ருதே:பரனாய், நித்யனாய், ஜ்ஞாநாநந்தஸ்வரூபனாயிருக்கை யாலே, ஆத்மபோகமே புருஷார்த்தமென்று தத்ப்ராப்திக்கு யத்நம் பண்ணுமவர்கள். இவர்கள் தததிகமான பகவத்ப்ராப்திஸுகத்தை விமர்ஶியாதவர்கள். பகவத்ப்ராப்திகாமராகிறார்:- ப்ரக்ருதே:பரனாய், நித்யனாய், நிர்மலனாய், ஜ்ஞாநாநந்தமயனுமாய், அபரிச்சிந்நஜ்ஞான குணகனுமாய், பாகவதநந்யார்ஹஶேஷமாகையாலே அநந்யபோக்ய மான ஆத்மாவுக்கு, ஸ்வாநுபவம், அணுவாய், ஸ்வதந்த்ரமாகை யாலே ஸ்வரூபவிருத்தமென்று விஷம்போலே அநாதரித்து, நித்யமாய், நிர்மலமாய், அபரிச்சிந்நஜ்ஞாநாநந்தமயமான ஸ்வரூபத்தையுடையனாய், ஸர்வஶேஷியாய், ஸர்வஶரண்யனாய். ஸர்வப்ராப்யனான ஶ்ரிய:பதியினுடைய திருவடிகளிலே நித்யகைங் கர்யத்தைப் பரமபுருஷார்த்தமாக நிஶ்சயித்து, ஒரு தேஶவிஶேஷத் திலும், தேஹவிஶேஷத்திலும் அது ஸித்திப்பதாகையாலே, தத்ப்ராப் திக்கு விரோதியான தேசஸம்பந்தமும், தேஹஸம்பந்தமும் விட வேணுமென்று ஆசைப்படுமவர்கள். இவர்களும், உபாஸநநிஷ்ட ரென்றும் ந்யாஸநிஷ்டரென்றும் த்விவிதம்.
உபாஸநநிஷ்டராகிறார்:- பலஸங்கபரித்யாகபூர்வகமாக யஜ்ஞதாநாதிகர்மங்களை அனுஷ்டிக்க விபரீதஜ்ஞாநஹேதுவான ரஜஸ்தமஸ்ஸுக்கள் நன்றாக நஶித்து யதாஜ்ஞாநஹேதுவான ஸத்வம்ப்ரகாஶித்து, அதனாலே பகவத்ஜ்ஞாநமுண்டாய், அது ஸாக்ஷாத்காரஸமானமாய், அநவரதபாவனையுண்டாய், பக்திரூபா பந்நமாய், ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிலே ஸுகது:க்கனாகப் பண்ணுவதாய் ஶாஸ்த்ரத்திலே மோக்ஷஸாதநதயாவிஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள். ந்யாஸநிஷ்டராகிறார்:- உபாஸநமும் அநேகஜந்மஸாத்யமாகையாலே துஷ்கரமென்றும், தேஶகாலாதிகாரி ப்ரப்ருத்யநேகநியமாபேக்ஷமாகையாலே ஸாபாய மென்றும், ப்ராரப்தகர்மாவஸாந பலமாகையாலே ஸவிளம்பமென் றும், அசேதநமாகையாலே அஸமர்த்தமென்றும், ஸ்வயத்நஸாத்ய மாகையாலே ஸ்வரூபவிருத்தமென்றும், பின்னையுஞ்சொல்லப்படு கிற உபாயாபாஸங்களெல்லாவற்றையும் ஸாங்கமாகவும் ஸவாஸந மாகவும் விட்டு, அந்த உபாயங்கள் போலன்றிக்கே நிவ்ருத்திஸாத்ய மாகையாலும், ஸக்ருதநுஷ்டேயமாகையாலும், ஸுகரமுமாயும், ஒரு நியமமும் வேண்டியிராமையாலே நிரபாயமாயும், தேஹாவ ஸானபலிதமாகையாலே ஶீக்ர பலப்ரதமாயும் பரமசேதநமாகை யாலே பலப்ரதாநத்தில் ஸ்வயம் ஸமர்த்தமாயும், நிருபாதிகமாகை யாலே ஸ்வரூபாநுரூபமுமான ஶ்ரிய:பதியினுடைய திருவடி களையே விலக்ஷணோபாயமாக நிஶ்சயித்து, அதிலே ந்யஸ்தபரரா யிருக்குமவர்கள். இந்த ந்யாஸநிஷ்டரும், ஸ்வயம் ந்யஸ்தபர ரென்றும், பரந்யஸ்தபரரென்றும் த்விவிதம். ஸ்வயம் ந்யஸ்தபரராகி றார்:- ஸதாசார்யக்ருபையாலே லப்தஜ்ஞாநராய், ஸ்வதோஷத்தை அநுஸந்தித்து, ஹிதபரனான ஸர்வேஶ்வரன் ஸ்ரீபாதத்தைத் தாங்களே ஆஶ்ரயிக்கவஞ்சி, ஸர்வேஶ்வரனுக்குப் பத்நியாய், வல்லபையாய், ஸர்வாத்மாக்களுக்கும் ஸ்வாமினியாய், மாதாவாய், அவனோடே நித்யஸம்யுக்தையான பிராட்டி ப்ரஸாதத்தாலே பயங்கெட்டு, வாத்ஸல்யாதி ஸமஸ்தகல்யாணகுணகணவிஶிஷ்டனான ஶ்ரிய:பதி யினுடைய திருவடி தம்முடைய அநிஷ்டநிவ்ருத்திக்கும், இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக ஆஶ்ரயிக்குமவர்கள். பரந்யஸ்தபரராகிறார்:- தங்களுக்காக ஆசார்யனாலே அநுஷ்டிக்கப்பட்ட ஏதாந்ந ஶந்யாஸத் தையுடையவர்கள். இவரும் ஸநிபந்தநபரநயஸ்தபரரென்றும், நிர்நிபந்தந பரந்யஸ்தபரரென்றும் த்விவிதமாயிருப்பர்கள். ஸநிபந்தந பரந்யஸ்தபரராகிறார். தன்னுடைய அனுவர்த்தனாதிகளாலே மந்த்ர ப்ரதனான ஆசார்யனாலே அநுஷ்டிக்கப்பட பரந்யாஸத்தை உடைய வர்கள். நிர்நிபந்தனபரந்யஸ்தபரராகிறார்:- தனக்கு ப்ராப்தமாக புருஷார்த்தத்தினுடைய உக்தவைலக்ஷண்யத்தை அநுஸந்தித்து, அது இவர்களுக்க இல்லாதமாத்ரமன்றிக்கே, இவர்கள் படுகிற துர்க் கதியைக் காணப்பொறாத கேவலக்ருபையாலே ப்ரீதனான ஆசார்ய னாலே அனுஷ்டிக்கப்பட்ட பரந்யாஸத்தை உடையவர்கள். இவர்க ளில், ஸம்ஸாரிகள், ஈஶ்வரனுடைய ஶிக்ஷைக்கு விஷயமானவர் கள், கேவலர், உபேக்ஷைக்கு விஷயமானவர்கள். உபாஸகர், அநுக்ர ஹத்துக்கு விஷயமானவர்கள். ப்ரபன்னர், க்ருபைக்கு விஷயமான வர்கள். ப்ரபன்னரெல்லாருக்கும் தேஹாவஸாநத்திலே பலமேயொக் கும். உத்தரோத்தராதிகாரிகள் பாக்யாதிகாரிகள், இவர்கள் ஆர்த்தாதி காரிகளென்றும், த்ருப்தாதி காரிகளென்றும் த்விவிதம். ஆர்த்தாதி காரிகளாகிறார்:- பகவத்ப்ராப்திக்கு விரோதியான வர்த்தமான ஶரீரத் தில் ஸ்திதியும் அக்,நிஜ்வாலாபஞ்ஜரத்திலிருப்புப்போலே அத்யந்த துஸ்ஸஹமாய்த் தோற்றித் தந்நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள். த்ருப்தராகிறார்:- பகவத்ப்ராப்திக்கு விரோதியான தே,ஹாந்தரஸம்பந் தமும் ஸ்வர்க்கநரகாதி ப்ரவேஶத்தில் விரக்தியும், பீதியுமுண்டாய் தந்நிவ்ருத்திக்கு பகவானை ஆஶ்ரயித்து, வர்த்தமான ஶரீர வியோ கத்துக்கு த்வரியாதவர்கள். இவரும், ஸ்வதேஹஸம்பந்தத்ருப்த ரென்றும், ஸ்வதேஹிஸம்பந்தத்ருப்தரென்றும் த்விவிதராயிருப் பர்கள். ஸ்வதேஹஸம்பந்தத்ருப்தராகிறார்:- ஶரீராவஸாநத்தில் போகமெத்தனையேனும் விலக்ஷணமானாலும், ருசிவாஸனைக ளாலே இத்தைவிட த்வரியாதவர்கள், ஸ்வதேஹிஸம்பந்தத்ருப்த ராகிறார்:- தனக்கும் அவனுக்கும் உண்டான நிருபாதிஶரீரஶரீரி ஸம்பந்தத்தை அநுஸந்தித்து, அவனுடைய கார்யமென்று த்வரி யாதே ஐஹிகபோகதாஸ்யத்தில் மண்டியிருக்குமவர்கள்: ஆர்த்த ராகிறார்:- பகவத்ப்ராப்திக்கு விரோதியான வர்த்தமான ஶரீரத்தில் ஸ்திதியும் அக்நிஜ்வாலாபஞ்ஜரத்திலிருப்புப்போலே அத்யந்ததுஸ் ஸஹமாய்த்தோன்றி, தந்நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள். இவரும், ப்ரதிகூலபோகார்த்தரென்றும், அநுகூலபோகார்த்தரென்றும் த்வி விதம். ப்ரதிகூலபோகார்த்தராகிறார்:- ப்ரத்யக்ஷஸித்தமான தாபத்ரய து:க்கம் அதிதுஸ்ஸஹமாய்த்தோன்றி, அதுக்கு ஹேதுவான தேஹ ஸம்பந்தத்தையும் தேஶஸம்பந்தத்தையும் தேஶிகருடைய ஸஹ வாஸத்தையும் பொறாதே ஶாஸ்த்ரத்ருஷ்டிகளாலும் ஆசார்யர்க ளுடைய வசநங்களாலும் அறியப்படுமதாய், அந்த து:க்ககந்த மின்றிக்கே நிரதிஶயமான பகவத்ப்ராப்திரூபஸுகத்துக்கு த்வரைப் படுமவர்கள்.
அநுகூலபோகார்த்தராகிறார்:- நிரந்தரமான த்வயாநுஸந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரமபதத்தில் நித்யவாஸத்தினுடைய வைல க்ஷண்யம் விஶதமாக ப்ரகாஶிக்க அதில்லாத க்ஷணகாலமும் கல்பஸஹஸ்ரமாய்த் தோன்றும்படி ஆர்த்தராய், ஏதத்ப்ராப்திக்கு த்வரிக்கிறவர்கள். இந்த ப்ரபன்னவிஷயமான உபாயக்ருத்யம். அநிஷ்ட நிவ்ருத்தியும், இஷ்டப்ராப்தியுமென்று த்விவிதமாயிருக்கும். அநிஷ்டந்தான், பூர்வாகமென்றும், உத்தராகமென்றும், த்விவிதமா யிருக்கும். அகமாகிறது. புண்யபாபருபமான கர்மம். ஸ்வர்க்காதி ஸாதநமான புண்யமும் பாபம்போலே பேற்றுக்கு ப்ரதிபந்தகமாகை யாலே அகமெனப்பட்டது. இதிலே பூர்வாகமாகிறது:- ஆஶ்ரயணத் துக்கு முன்பு அநாதிகாலம் பண்ணப்பட்ட கர்மம், இதுவும் ஸஞ்சித மென்றும், ப்ராரப்தமென்றும் த்விவிதமாயிருக்கும். ஸஞ்சிதமாகிறது:-பலப்ரதாநத்துக்கு உத்யோகியாமலிருக்கிறது. ப்ராரப்தமாகிறது, பல ப்ரதாநத்துக்கு உத்யோகிக்கிறது. ப்ராரப்தமும், வர்த்தமான ஶரீரா ரப்தமென்றும், ஶரீராந்தராரப்தமென்றும் த்விவிதம். உத்தராக மாகிறது. ஆஶ்ரயணத்துக்கநந்தரம் தேஹாவஸாநபர்யந்தம் வாஸநா பலத்தாலே செய்யப்பட்ட கர்மம். இதுவும், ஜ்ஞாநக்ருதமென்றும், அஜ்ஞாநக்ருதமென்றும் த்விவிதமாயிருக்கும். இதுவும் ஸாநுதாப மென்றும், நிரநுதாபமென்றும் ஓரொன்றே த்விவிதமாயிருக்கும். இப்படிப்பட்ட பேதங்களையுடைத்தான அநிஷ்டத்தை இவனிடத்தில் ப்ரீத்யதிஶயத்தாலே உபாயபூதனான ஈஶ்வரன் போக்கும்படியென் னென்னில்:- வர்த்தமான ஶரீராரப்தத்தையொழித்து, பூர்வாகத்தில் புண்யாம்ஶத்தை இவனை ஸ்நேஹித்தவர்களை அநுபவிப்பிக்கும். பாபாம்பலத்தை த்3வேஷித்தவர்களை அநுப விப்பிக்கும். ஶரீராரப்தத்தை ஶரீரத்தோடே போக்கும். இவனுக்கு எப்போதும் அநுகூலபோகார்த்தியுண்டாம். அந்த ஆர்த்திரூபமான மஹாது:க்கத் தினாலும், தத்தேதுவான அனுபவாஹ்லாதரூபமான மஹாஸுகத்தி னாலும் ஶரீரானுபாவ்யத்தையெல்லாம் அப்போதே போக்கும். உத்தராகத்தில் அஜ்ஞாநக்ருதமும், அவனுடைய வாத்ஸல்யத்தி னாலே திருவுள்ளத்துக்கு விஷயமன்றிக்கே போம். ஸாநுதாபமான ஜ்ஞாநக்ருதமும், அவனுடைய க்ஷமைக்கு விஷயமாம்; அது பகவத் விஷயமானால் பகவத்விஷயமான அநுதாபத்திலே போம். பாகவத விஷயமானால் பாகவதவிஷயத்தில் அநுதாபத்திலே போம். நிரநு தாபஜ்ஞாநக்ருதமும், ஶரீராநுபாவ்யம் போலே அநுபவித்துப் போக்குவன். ஸாமாந்ய நிஷித்தாநுஷ்டாநமும், பகவந்நிக்ரஹ ஹேதுவாகையாலும், ஶிஷ்டஜநகர்ஹிதமாகையாலும் கரூரம். பகவத் விஷயமான அநுதாபபாந்யமும், க்ரூரம். பாகவதவிஷய மான அநுதாபஶூந்யமும் க்ரூரதரம். ஆகையாலே ப்ரபன்னன் பகவத் பாகவத ப்ரஸாதத்துக்கொழிய க்ஷமைக்கு விஷயமாகை அநுரூப மல்லாமையாலே ஸாவதாநத்தோடே நடக்கவேணும். ஆகையாலே, ஜ்ஞாநக்ருதமான ஸாநுதாபமும் உதிக்கைக்கு அவகாஶமில்லாமை யாலே அநுதாபஶூந்யமும் தூரதோ நிரஸ்தம். ஆனாலும் ஈத்ருஶ கடிநப்ரக்ருதிகளுண்டாகுவாரோ என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்றா யிற்று. இப்படி ஸர்வமான கர்மங்களும் நிவர்த்யங்களாகையாலே தத்கார்யமான தேஹஸம்பந்தமில்லை. தேஹஸம்பந்தமில்லாமை யாலே தத்கார்யமான அவித்யையில்லை. இம்மூன்றுமில்லாமை யாலே தத்தத் வாஸநா ருசிகளில்லை. ஆகையாலே, ப்ரபன்னனுக்கு ஶரீராவஸாநத்திலே தேஶகாலாதிகாரி நியமங்களும் உத்தரக்ரியை களுமுபாயமன்று. ஆனாலும் உத்தரக்ரியைகளும், ஆந்ருஶம்ஸ்யத் தாலும், பகவத்ப்ரீதிஜநகங்களாகையாலும் செய்யப்படுமத்தனை. இனி, இஷ்டப்ராப்தியும், ஐஹிகமென்றும், ஆமுஷ்மிகமென்றும் த்விவிதம். ஐஹிகம் பகவத்கைங்கர்யமென்றும் பாகவதகைங்கர்ய மென்றும் த்விவிதம், கைங்கர்யமாகிறது:– இஷ்டம் செய்கை. அதுதான் ஸாமாந்யவிஹிதாநுஷ்டாநமும், பகவத்ஸந்தோஷஹேது வாகையாலே, கைங்கர்யமென்னக் கடவதிறே. பகவானுக்கு இஷ்டம் ஶாஸ்த்ரமுகத்தாலே அறியவேணும். பாகவதர்களுக்கிஷ்டம் அவர் கள் நினைவிலே அறியவேணும். ஆக, கைங்கர்யமும் மாநஸ மென்றும் காயிகமென்றும் த்விவிதம். மாநஸமாகிறது:- அந்யபர மாகாமல் தத்பரமாக்குகை, அதுவும், செய்த உபகாரத்தை ஸ்மரிக் கையும், செய்யக்கடவ உபகாரத்தை அபேக்ஷிக்கையுமென்று த்விவிதம், இதில் ஈஶ்வரன் செய்த உபகாரமாகிறது:- ஸதாசார்யனை ஆஶ்ரயிப்பிக்கையும், ததர்த்தமான அதிகாரி ஸம்பத்தும். செய்யத் தக்க உபகாரமாகிறது:- பரமபதத்தில் நித்யகைங்கர்யப்ராப்தியும், ததர்த்தமான அதிகாரி ஸம்பத்தும். ஆமுஷ்மிகமான கைங்கர்யமும் இதவே. அந்த கைங்கர்யமும், வாசிகமென்றும், காயிகமென்றும் த்விவிதம். வாசிகமாகிறது:- ஸ்துதி நாமஸங்கீர்த்தநாதிகள். காயிக மாகிறது. ஸம்மார்ஐநமாலாபந்தநாதிகள், பாகவதகைங்கர்யமும், ஆசார்யகைங்கர்யமும், தத்துல்யரான பாகவதகைங்கர்யமென்றும் த்விவிதம். ஆசார்யரும், மந்த்ரப்ரதரென்றும். மந்த்ரார்த்தப்ரதரென்றும் த்விவிதம். இவர்கள் பக்கல் செய்யும் ப்ரதிபத்தி ஸமமாயிருக்கும். பகவானுடைய திருவடிகளிரண்டிலும் வைஷம்யமுண்டா கிலிறே ஆசார்யவிஷயத்தில் வைஷம்யமுண்டாவது. இப்படிப்பட்ட ஆசார்யர் கள் செய்த உபகாரமாகிறது. அநாதிகாலம் விமுகனான சேதனனை பகவத்விஷயத்தில் அபிமுகனாகச் செய்கையும், மந்த்ரார்த்தமுகத் தாலே அஜ்ஞாநத்தை நிரஸித்து, ஜ்ஞாநத்தை உண்டாக்கி, ததநுரூப மான வ்ருத்தியிலே நியமித்து, ததீயாந்தர்ப்பாவத்தை உண்டாக்கு கையும், கைங்கர்யங்கொள்ளுகையும். இனி பாகவதர் செய்த உபகார மாவது:- குணலேஶமின்றிக்கே தோஷங்களினாலே பூர்ணானான தன்னை, ஆசார்யஸம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூபானுரூபமான போகத்திலே கூட்டிக்கொண்டு கைங்கர்யத்துக்கு விஷயமாக்குகை இனி லீலோபகரணமான அசேதநமும், ப்ரக்ருதியென்றும் காலமென் றும் த்விவிதம் ப்ரக்ருதியாகிறது:- ஸத்வரஜஸ்தமோகுணாத்மகமாய், நித்யமாய், தன்னோடே ஸம்பந்தித்த சேதநருக்கு தத்தத்கர்மாநுகுண மான தேஹேந்த்ரியாதிரூபமாய் அநேகவிகாரங்களையுடைத்தான தாய், ஶப்தாதி விஷயப்ராவண்யத்தையும், பகவத்விஷயவைமுக் யத்தையும் பிறப்பிக்குமதாயிருக்கும் அசித்விஶேஷம். காலமாகிறது. நித்யமாய், நிமேஷகாஷ்டாதி,ரூபமான பஹுவிகாரங்களை உடைத் தாய், சேததருடைய கர்மத்துக்கும் ததநுகுணரூபமான போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும். இனி லீலாபரிகரமும் போகபரிகரமுமான சேதநாசேதநவர்க்கம், ஸ்வவிஶேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு வ்யாப்ய மாய், தார்யமாய், நியாம்யமாய், பாரீரமாய், போஷமாயிருக்கும். பாஸ்மத்துக்கு வ்யாப்யமாய், தார்யமாய், நியாம்யமாய், ஶரீரமாய், ஶேஷமாயிருக்கும். இனி விஶேஷ்யமும், அகிலஹேயப்ரத்யநீக மாய், கல்யாணைகதாநமாய், ஸதைகரஸமாய், விபுவாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்த,ங்களை ஸ்வரூபமாகவுடையதுமாய், ஜ்ஞாநஶக்த்யாத் யநந்தகுணகணபூஷிதமாய், ஸ்வவிஶேஷணமான ஸகலசேதநா சேதநங்களுக்கும் வ்யாபகமாய், தாரகமாய், நியாமகமாய் ஶரீரியாய், ஶேஷியாய், விலக்ஷணவிக்ரஹயுக்தமாய், லக்ஷ்மீபூமிநீளாஸமேத மாய், நித்யமுக்தாநுபாவ்யமாய், ஸகலஜகத்ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரகர்த்தாவாய், ஸர்வலோகஶரண்யமாய், ஸகலபலப்ரதமாய் ப்ரஹ்மருத்ராதிதேவதைகளுக்கும், ஸனகஸனந்த,நாதியோகிகளுக் கும் அவாங்மநஸகோசரமாய், ஶ்ருத்யேகஸமதிகம்யமாய், ஸமாஶ்ரிதைகஸுலபமாய், ததுஜ்ஜீவநைகப்ரயோஜநமாய், பரவ்யூஹ விபவாந்தர்யாம்யர்ச்சாவதாரரூபங்களை உடைத்தாயிருக்கும். இப்படிப்பட்ட ஸமஸ்தவிஶேஷணவிஶிஷ்டமான ப்ரஹ்மமொன்றை யுமறிந்த அதிகாரி வேறொன்றையுமறியவேண்டாத க்ருதக்ருத்யன். இந்த அதிகாரியே ஜ்ஞாநாதிகரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் நித்யமுக்தர்களுக்கும், ஆசார்யனுக்கும், பிராட்டிக்கும், ஶ்ரிய:பதிக்கும் அத்யந்தப்ரியதமன்.
ஸகலப்ரமாணதாத்பர்யம் முற்றிற்று.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.