பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
ஸம்ஸாரஸாம்ராஜ்யம்
( ஸாரார்த்த சதுஷ்டயமென்கிற ரஹஸ்யத்தை (18) ரஹஸ்யத்தில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அது பொருந்தாது. எங்களாழ்வான் அருளிச்செய்ததாக வார்த்தாமாலையில் அது உள்ளது. )
(நாச் திரு 13.10) “துன்பக்கடலாய்” (திருவாய் 10.6.1) “இருள்தருமா” ஞாலமான ஸம்ஸாரத்துக்கு உள்வாயிலே பஞ்சபூதங்களாலே சமைந்து, 1.”நவத்வாரபுரே” என்கிறபடியே–(பெரிய திரு 1.6.9) ஒன்பது வாசலான படைவீட்டுக்கு உள்வாயிலே (திருவாய் 3.2.9) “கொடு வினைத்தூறு” என்பதொரு தூறாய், புக வழிதெரியுமித்தனை யொழியப் புறப்பட வழி தெரியாதிருப்பதொரு காட்டினுள்ளே, அநந்தக்லேஶபாஜநமான மரத்தையிட்டு, அவித்யையென்கிற தேரைச் சமைத்து, அவஸ்தாஸப்தகங்கள் என்கிற உருளைகளைச்சேர்த்து, ராகத்வேஷாதிகளாகிற குதிரைகளை அணைத்து, குணத்ரயங்களென் கிற திரிக்குரும்பை ஊஞ்சலின் மேலே கர்மமென்கிற ஸிம்ஹாஸ நத்தையிட்டு, ருசியென்கிற மேல் விரியை விரித்து. 2. “அவஶ்யமநு போக்தவ்யம்“ என்கிறபடியே – அநுபவித்தன்றி மீளவொட்டாதிருக் கிற (பெரிய திரு 5.2.6) உறுபிணிகளாகிற பார்யாவர்க்கம் பக்கத்தி லிருக்க, அந்தகாரமாகிற விளக்கையேற்றி, அவஸ்துக்களாகிற தாஸவர்க்கம் – பரதோஷம் பரஹிம்ஸை பராநுவர்த்தநம் தொடக்க மான போகங்களை புஜிப்பிக்க புஜித்து, அப்ரகாஶித ஸ்வரூப ஸ்வபாவனான தன்னை வாஸனையென்கிற வீரத்தையிட்டுப் பார்த்து, தாபத்ரயங்களென்கிற விடாய்க்குடையின் கீழே பஞ்சவ்ருத்தி ப்ராணன்களாகிற புரோஹிதர் ஸம்ஸாரத்துக்கு மூர்த்தாபிஷிக்த னாக்கி, க்யாதிலாபபூஜைகள் கொண்டாட, புண்யபாபங்களாகிற சாமரமிரட்ட, அநேகவித து:க்கபரம்பரைகள் அடுக்கொலியல் பணிமாற, அஹங்கார மமகாரங்களாகிற ஆலவட்டம் பணிமாற, து:க்கவர்ஷிணி சுழற்றிப்பணிமாற, அஸ்ம்ருதி–ஓட்டி வட்டிலெடுக்க. அபிநிவேஶம்–காளாஞ்சியெடுக்க, விஷயாந்தர ருசி—அடைப்பை யெடுக்க, பூர்வோத்தராகங்களென்கிற ஆனைகுதிரையோடே வாத பித்த ஶ்லேஷ்மங்களாகிற மந்த்ரிகள் ஸேவிக்க, காம க்ரோத லோப மோஹ மதமாத்ஸர்யம் தொடக்கமான ப்ரபுக்கள் ஸேவிக்க, பகவ தபசார பாகவதாபசார அஸஹ்யாபசார நாநாவிதாபசாரமாகிற காலாள்கள் ஸேவிக்க, நித்ராதேவி ஜ்யேஷ்டை தொடக்கமான பெண்பிள்ளைகள் ஸேவிக்க, ஆசையாகிற பாஶக்கயிற்றாலே பிணைத்து, இந்த்ரியங்களாகிற மதகளிறுகள் வலிக்க, காலமாகிற ஸாரதி நடத்த, ‘தேஹாத்மாபிமாநி வந்தான், ஸ்வதந்த்ரன் வந்தான், அந்யஶேஷபூதன் வந்தான்’ என்று காளங்கள் சிஹ்நங்கள் கலந்து பணிமாற, (திருவிருத்தம் 48) “மெல்லியலாக்கைக் கிருமி குருவில் மிளிர்தந்தாங்கே செல்லியசெல்கைத்துலகையென் காணும்” என்கிறபடியே தானும் தன் பரிகரபூதருமாக ஸுகாநுபவம் பண்ணி , (திருவிருத்தம் 95) “யாதானுமோராக்கையில் புக்கங்காப்புண்டு மாப்பவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே” என்கிற படியே – புக்கபுக்க ஶரீரங்கள்தோறும் அஹங்கார மமகாரங்களைப் பண்ணி, ஸத்தாதாரகனான ஸர்வேஶ்வரனை மறந்து, (திருமாலை 4) மொய்த்த வல்வினையுள் நின்று த்ரிவிதகரணங்களாலும் பாதகம் அதிபாதகம் மஹாபாதகம் தொடக்கமானவற்றாலே போதுபோக்கிக் கொண்டு போருகிறகாலத்திலே ஈஶ்வரனுடைய “நிர்ஹேதுக விஷயீகாரத்தாலே இவனுக்கு அத்வேஷம் பிறக்க, அத்தாலே ரக்ஷணத்துக்கு வழிகண்டு ‘களையெடுக்கக்கொடுத்த கோலைக் கொண்டு கண்ணைக் கலக்கிக்கொள்ளுவாரைப்போலே நம்பக்கல் சேரக்கொடுத்த உடம்பைக் கொண்டு அகலுகைக்குறுப்பாக்கினான்; –(பெரிய திரு 1.9.8) ‘பல்பிறவி நோற்றேன்’ என்று – ஒரு ஜந்மத்திலே அநேக ஜந்மத்துக்கு வேண்டும் பாபங்களை ஆர்ஜித்துக்கொள்ளுகிற இவனை நம்பக்கலிலே சேர்த்துக்கொள்ளும் விரகேதோ’ என்று திருவுள்ளம்பற்றி, வலவட்டத்திலே (திருவாய் 9.9.9) தூதுசெய் கண்கள் கொண்டொன்று பேசி, ஆழ்வானும் (திருவாய் 10.6.8) கருதுமிடம் பொருதுமவனாகையாலே, தன் பரிகரபூதரை ஏவிவிட, (திருவாய் 5.2.6) நின்றிவ்வுலகிற்கடிவான் நேமிப்பிரான் தமர்போந்து, (இராமாநுச 93) அருளென்னு மொள்வாளுருவி, (முதல் திருவந்தாதி 59) “அடைந்த அருவினையோடல்லல் நோய்பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள் தன்விலங்கை வைத்தான் சரண்” என்கிறபடியே-விரோதிவர்க்கத்தையடைய அழிவு செய்து ஜ்ஞாநத்தைக்கொடுக்க, இவனும் சைதந்யம் குடிபுகுந்து, (பெரிய திருவந்தாதி 82) “தெரிந்துணர் வொன்றின்மையால் தீவினையேன் வாளாவிருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம் கரந்துருவில் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து” என்கிறபடியே இழந்தநாளைக்கு அநுதபித்து, ப்ராப்யத்தை உள்ளபடி அறிவித்த ஆசார்யன்பக்கல் க்ருதஜ்ஞனாய், விரோதிவர்க்கத்தில் உபேக்ஷை பிறந்து, ஶ்ரீய:பதியைக்கிட்டியல்லது தரிக்கவொண்ணாதிருக்கிற ப்ரேமம் விளைந்து, “இவ்வளவும் குலையுங்காட்டில் கைக்கொண் டருளவேணும்” என்று பிராட்டி புருஷகாரஞ்செய்ய, அவ்வளவும் பொறுக்கமாட்டாதபடியான வாத்ஸல்யாதிகுண விஶிஷ்டவஸ்து வாகையாலே கீழ்ச்செய்த அம்ஶத்தைத் திருவுள்ளம்பற்றி மேற் செய்யவேண்டும் அம்ஶத்தை ப்ராப்யபர்யந்தமாகத் தலைக்கட்டிக் கொடுத்தருளும்.
ஸம்ஸாரஸாம்ராஜ்யம் முற்றிற்று.
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்
ஜீயர் திருவடிகளே ஶரணம்.