ஸப்தகாதை Part 1

ஸ்ரீமதேராமாநுஜாயநம:

விளாஞ்சோலைப்பிள்ளைஅருளிச்செய்த

ஸப்தகாதை

தனியன்.

வாழி நலந்திகழு நாரணதாதனருள்

வாழி யவனமுதவாய்மொழிகள் – வாழியே

ஏறு திருவுடையா னெந்தையுலகாரியன்சொல்

தேறு திருவுடையான் சீர்.

பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாக்யாநம்.

அவதாரிகை.

*உலகங்கட்கெல்லாமோருயிரான திருவரங்கச்செல்வனாருக்குங்கூட(கீதை-எ-கஅ)        ‘

“ஜ்ஞாநீத்வாத்மைவமேமதம்” என்கிற திருமுகப்படியே மிகவும்  தாரகராய்க்கொண்டு, அனைவருமுஜ்ஜீவிக்கும்படி  அத்திகிரியருளாளரனுமதி முன்னாக ப்ரபந்தீகரித்தருளின ஶ்ரீவசநபூஷண ப்ரமுகநிகிலரஹஸ்யக்ரந்தமுகேந சரமப்ரமாணப்ரமேய ப்ரமாத்ருவைபவங்களை ஸப்ரகாரமாகவும் ப்ரகாஶிப்பித்தருளின பிள்ளைலோகாசார்யருடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்து,

அவதாரவிசேஷமான அவருடைய விசேஷ கடாக்ஷத்தாலே *தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலையான திருவாய் மொழியையும், அதுக்கு அங்கோபாங்கங்களான * இருந்தமிழ்நூற்புலவர்பனுவல்களையும், மற்றஎண்மர் * நன்மாலைகளையும், பிள்ளான் முதலானோர் செய்தருளும் தத்தத்வ்யாக்யாநங்களையும், அவற்றின் தாத்பர்யார்த்தங்களுக்கும் ஶப்தரஸஅர்த்தரஸ பாவரஸங்களுக்கும் ஸ்வாபதேஶாதிகளுக்கும் நேப்ரகாஶகங்களான விபோஷரஹஸ்யங்களையும், ஸார்த்தமாகவும் ஶயவிபர்யயமற அடைவேயதி கரிக்கப்பெற்று க்ருதார்த்தராய்,

உடையவருக்குப் பிள்ளையுறங்காவில்லிதாஸரைப்போலவும், நம்பிள்ளைக்கு ஏறுதிருவுடையான்தாஸரைப்போலவும், நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர்க்குப் பிள்ளைவானமாமலைதாஸரைப்போலவும், பிள்ளைலோகாசார்யருக்கு ஆத்மஸமராயும் ப்ராணஸமராயும், த்ருஷ்டிமராயும், பாஹுஸமராயும், ஆபணஸமராயும், பாதஸமராயும், பாதரேகாஸமராயும், பாதச்சாயாஸமராயும், பாதுகாஸமராயும், பாதோபதா நஸமராயுமெழுந்தருளியிருக்குமவராய்,

ப்ரம்ஶம்பாவநையில்லாத உத்க்ருஷ்டஜந்மத்திலே அவதரிக்கப்பெறுகையாலேஸஹஜதாஸ்யத்தையுடையராய், “தீதற்றஞானத் திருவாய்மொழிப்பிள்ளை” என்னும்படி ஸமஸ்தஶாஸ்த்ரபாரங்கதராயும் ஸர்வக்ஞராயும் பெருமதிப்பராயும் போருகிற திருவாய்மொழிப்பிள்ளையுங்கூடத் தம்மருகேசென்று ஶரமார்த்தவிஶேஷங்களைக் கேட்டுப்போரும்படி மிகவும் ஸர்வஜ்ஞராய், “வாழிநலந்திகழு நாரணதாதன்” என்று யாகாநு யாகோத்தரவீதிகளில் காயாந்நஸ்தலஶுத்திபண்ணின ஶுத்தவ்ருத்தாசாரமறியும் பெரியோர்களாலேஸர்வகாலமும் போற்றப்படுமவராய்,

ஸ்வாசார்யரான பிள்ளைலோகாசார்யர் தம்முடைய சரமதசையிலே ”ஶரீராவஸாநகாலத்தளவும் நீர்திருவநந்தபுரத்தேயிரும்” என்று நியமித்தருளுகையாலே அவர் நியமித்தருளின்படியே அங்கே சென்று, (தி-வாய்–க0-உ-அ)”நடமினோ நமர்களுள்ளீர்”என்கிற ஆழ்வாருடைய நியமநத்திலே அந்தர்ப்பூதரானவர்களில் தாம்பரதாநரென்னும்வாசிதோற்ற *படமுடையாவில் பள்ளி பயின்றவன் பாதம்பணிந்து த்வாரத்ரயத்தாலும்முகநாபிபாதங்களை- முகமாகவும் ஸநாபியாகவும், அடிப்பாடாகவும் அடைவேயநுபவித்தி,

வா…மேகமழும்சோலையான புறச்சோலைக்கு….விவிக்தமாயிருப்பதொரு ப்ரதேஶவிசேஷத்திலே சென்று, “குருபாதாம்புஜம் த்யாயேத்” என்றும், “விக்ரஹாலோகநபர:”என்றும்,  ஶ்ரீலோகார்ய முகாரவிந்ததமகிலஶ்ருத்யர்த்தகோஶம்ஸதாம் தாம்கோஷ்டீஞ்சததேகலீநமநஸாஸஞ்சிந்தயந்தம்ஸதா” என்றும் சொல்லுகிறபடியே தேமருவும் செங்கமலத் திருத்தாள்களும், திகழும் வான்பட்டாடை பதிந்த திருமருங்கும், முப்புரி நூலின் தாமமணிவடமமர்ந்த திருமார் பும், முன்னவர் தந்தருள் மொழிகள் நிறைந்ததிருமுறுவலும், கருணைபொழிந்திடுமிணைக் கண்களும், கனநல்லசிகைமுடியும், திங்கள்போலும் திரிநுதலும், திருக்கண்னும் செவ்வாயும், பொங் கொளிசேர் பொன்மொழியும் புரிநூலும் பொற்றோளும் மங்கலமான மலர்மார்பும் மணிவடமும், மருங்குதனில் பரியட்டமும் கமலப்பதயுகமும்,அழகியபத்மாஸநமும், ஈராறு திருநாமமணிந்த வெழிலும், இனி திருப்போடெழில் ஞானமுத்திரையும் தாமுமாகவெழுந்தருளியிருக்கிற பிள்ளைலோகாசார்யருடைய திவ்யமங்களவிக்ரஹத்தைப் பாதாதி கேசாந்தமாகவும், கேசாதி பாதாந்தமாகவும் உருவு வெளிப்பாட்டாலே விஶத விஶததர விஶததமமாக த்யாநித்துக்கொண்டு,

வார்த்தோஞ்சவ்ருத்த்யாபி யதீயகோஷ்ட்ட்யாம் கோஷ்ட்ட்யந்தராணாம்ப்ரதமா பவந்தி” என்கிற வேறுபாட்டையுடைத்தாயிருந்துள்ள நம்பிள்ளை திருவோலக்கத்துக்குப் போலியான அவருடைய திருவோலக்கவாழ்வை (ரா-உத்தர-40-14)பாவோநாந்யத்ரகச்சதி” என்னும்படி அஸ்தமிதாந்ய பாவராய்த்யாநித்துக்கொண்டு, தம் திருமேனியில் சிலந்தி நூலிழைக்கும்படியாகவும் (ரா-ஸு-31-42) “நைவதம்ஶாந்”இத்யாதிப்படியே கடித்ததும் ஊர்ந்ததும் தெரியாதபடியாகவும் நாலாறுநாள் ஸமாதியிலே யெழுந்தருளியிருக்குமவராய்,

–   “வாழி ஏறுதிருவுடையா னெந்தையுலகாரியன்சொல், தேறுதிருவுடையான் சீர்”என்கிறபடியேஸ்வாசார்யரான பிள்ளைலோகாசார்யருடைய திவ்யஸுக்திகளாயிருந்துள்ள ஶ்ரீவசநபூஷணாத்ய கிலரஹஸ்யதாத்பர்ய ஸாரதமார்த்த விஶேஷங்களையே ஸர்வகாலமும் அநுபவித்துக்கொண்டு போருமவராய், “பாருலகைப் பொன்னுலகாப் பார்க்கவும் பெற்றோம்” என்று தாமேபேசும்படி ஸம்ஸாரபரமபதவிபாகமறஇரண்டையும் ஒருபோகியாக்கிக்கொண்டுபோருகிறவிளாஞ்சோலைப்பிள்ளை,

வகுள பூஷண ஶாஸ்த்ரஸாரமாய்சரமரஹஸ்யமாயிருந்துள்ள ஸ்ரீவசநபூஷணதிவ்யஶாஸ்த்ரத்திலே பரக்கச்சொன்ன விசேஷங்களை யெல்லாம் தம்முடைய பரமக்ருபையாலே அனை வர்க்கும் ஸுக்ரஹமாம்படி ஸங்க்ரஹித்தருளுவதாகத் திருவுள்ளம்பற்றி, ஸ்ரீகீதைக்குச் சரமஶ்லோகம் ப்ரதாநமாயிருக்கிறாப்போலே, சரமப்ரமாண ப்ரமேயப்ரமாதாக்களைச் சரமமாகப்ரதிபாதிக்கிற சரமப்ரகரணம்ஶ்ரீவசநபூஷணத்துக்காகப்ரதாநமாயிருக்கையாலே, இதில்ப்ரதிபாதிக்கிற அர்த்தவிசேஷங்களையும் மற்றைப்ரகரணங்களில் ததுபயோகிதயா பரக்கப்ரதிபாதிக்கிற அர்த்தவிஶேஷங்களையும் பரப்பற ஏழுபாட்டாலே ஸங்க்ரஹித்து “வாழியவனமுதவாய் மொழிகள்” என்னும்படி, ஸர்வோபபோக்யமாயிருந்துள்ள “ஸப்தகாதை” என்கிறப்ரபந்தமுகத்தாலே அருளிச்செய்கிறார்.

அதெங்ஙனேயென்னில்; “வேதார்த்த மறுதியிடுவது” என்று துடங்கி “ப்ரபத்தயுபதேஶம் பண்ணிற்றும் இவளுக்காக” என்னு மளவாக புருஷகாரப்ரகரணத்தில் சொல்லுகிற அர்த்தவிசேஷங்களை, (லக்ஷ்மீ-2)அஹந்தாப்ரஹ்மணஸ்தஸ்ய இத்யாதிந்யாயத்தாலே “அம்பொனரங்கர்க்கும்” என்கிறவிடத்தில் தாத்பர்யவிதியாக ஸூசிப்பிக்கையாலும், “ப்ரபத்திக்கு” என்று துடங்கி “எகாந்தீவ்யபதேஷ்டவ்ய:”என்னுமளவாக உபாயப்ரகரணத்தில் சொல்லுகிறவர்த்த விஶேஷங்களை “உம்பர்திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்ததெறி” என்கிறவிடத்தில் ஸூசிப்பிக்கையாலும், “உபாயத்துக்கு” என்று துடங்கி “உபேயவிரோதிகளுமாயிருக்கும்” என்னுமளவாக அதிகாரிநிஷ்டாக்ரமப்ரகரணத்தில் சொல்லுகிறவர்த்தவிசேஷங்களை “அஞ்சுபொருளும், பார்த்த குருவினளவில், தன்னையிறையை”இத்யாதிகளாலே ஸூசிப்பிக்கையாலும்,

“தான் ஹிதோபதேசம் பண்ணும்போது” என்று துடங்கி “உகப்பும் உபகாரஸ்ம்ருதியும் நடக்கவேணும்” என்னுமளவான ஆசார்யாநுவர்த்தந ப்ரகரணத்தில் சொல்லுகிற அர்த்தவிசேஷங்களை “என்பக்க லோதினார்” இத்யாதியால் ஸூசிப்பிக்கையாலும், “ஸ்வதோஷாநுஸந்தாநம் பயஹேது” என்று துடங்கி ‘நிவர்த்தகஜ்ஞாநம் அபயஹேது’ என்னுமளவாக பகவந்நிர்ஹேதுகக்ருபா ப்ரபாவப்ரகரணத்தில் சொல்லுகிற அர்த்தவிசேஷங்களை “அழுக்கென்றிவையறிந்தேன்” என்கிறபாட்டிலேஸூசிப்பிக்கையாலும், “ஸ்வதந்த்ரனை உபாயமாகத்தான் பற்றின போதிறேஇப்ப்ரஸங்கந்தானுள்ளது”என்று துடங்கி, அநந்தரம்பலபர்யந்தமாக்கும்” என்னுமளவான சரமப்ரகரணத்திற் சொல்லுகிற அர்த்தவிசேஷங்களை முதற்பாட்டுத்துடங்கி “தீங்கேதுமில்லா” என்னுமளவாக ஸங்க்ரஹித்து, அடைவே அபிதாநவ்ருத்தியாலும், அந்வயமுகத்தாலும், வ்யதிரேகமுகத்தாலுமாக ப்ரகாஶிப்பித்தருளுகையாலும், இப்ப்ரபந்தம் பரமரஹஸ்யமான ஸ்ரீவசநபூஷணார்த்தங்களுக்கு ஸங்க்ரஹமாமென்னக் குறையில்லையிறே.

ப்ரதமபர்வத்தை “செக்கர்மாமுகில்” என் கொடங்கி நம்மாழ்வார் திருவாசிரியத்தில் ஏழுபாட்டாலே ப்ரகாஶிப்பித்தருளினாப்போலே இவரும் சரமபர்வத்தை “அம்பொனரங்கர்க்கும்” என்று துடங்கி இப்ப்ரபந்தந்தன்னில் ஏழுபாட்டாலே ப்ரகாஶிப்பித்தருளுகிறார்,

இன்னும் அதிலுமிதுக்கு நெடுவாசியுண்டு;அதெங்ஙனே யென்னில்;-பாதப்ராஸாதி நியதியில்லாத ஆசிரியப்பாவாய்க்கொண்டுநடந்து (ஶ்வே-1-11) “- ஸம்ஸாரபந்தஸ்திதிமோக்ஷஹேது:” என்றும்,  ஸித்திர்பவதிவாநேதி ஸம்ஶயோச்யுதஸேவிநாம்” (திருவாய்-3-2-1)

“அந்நாள் நீதந்தவாக்கை” (திருவாய்-10-7-10)“மக்கவொட்டுன் மாமாயை” என்றும் சொல்லுகிறபடியே பந்தமோக்ஷங்களிரண்டுக்கும்பொதுவானப்ரதமபர்வத்தைப் ப்ரதிபாதிக்கும் அது;

பாதப்ராஸாதிநியதியுடைத்தானவெண்பாவாய்க்கொண்டு நடந்து(சாந்தோ-4-14)“       – தமஸ:பாரம் தர்ஶயதி – ஆசார்யஸ் துதேகதிம்வக்தா” என்றும், “–நஸம்ஶயோஸ்திதத்பக்தபரிசர்யாரதாத்மநாம்” என்றும், (ஞானஸாரம்)“நீதியால்வந் திப்பார்க்குண்டிழியாவான்” என்றும், சொல்லுகிறபடியே மோக்ஷைகஹேதுவான சரமபர்வதத்தைச் சதிராகப்ரதிபாதிக்கும் இது,

அன்றிக்கே, ஆண்டாளுடைய திவ்யஸூக்தி ப்ரமாணகமாய், த்ரயோதஶ வாக்யாத்மகமாயிருந்துள்ள வாக்யகுருபரம்பரையிலே துரீயவாக்ய ஸங்க்ரஹமாய், ஸப்தாக்ஷரியானப்ரதம வாக்யத்தில் ப்ரதமாக்ஷரத்தை அம்பொனரக்கர்க்கும்” என்று துடங்கி முதலடியில், முந்துறமுன்னம் முதல்பாட்டும், த்விதீயாக்ஷரத்தை “அஞ்சுபொருளுமளித்தவன்” என்கிறவிடத்தில் இரண்டாம்பாட்டும், த்ருதீயாக்ஷரத்தை “பார்த்தகுரு” என்கிறவிடத்தில் நேராக மூன்றாம்பாட்டும், துரீயாக்ஷரத்தை “ஒரு மந்திரத்தின்” என்கிறவிடத்தில் நாலாம்பாட்டும், பஞ்சமாக்ஷரத்தை “என்பக்கலோதினார்” என்கிறபாட்டில் அஞ்சாம்பாட்டும், ஷஷ்டாக்ஷரத்தை “அம்பொனரங்கா” என்கிறவிடத்தில் நேரே ஆறாம்பாட்டும், சரமாக்ஷரத்தை சேருவரேயந்தாமந்தான்”என்கிறவிடத்தில் சரமதமமாக ஏழாம்பாட்டும் அடைவே உட்கொண்டு நடந்த ஸ்ரீராமாயணம் இருபத்துநாலாயிரமாய் அவதரித்தவோபாதி இப்ப்ரபந்தமும் ஏழுபாட்டாயவதரித்ததென்னவுமாம்

ஸ்ரீமதுரகவிகளும் வடுகநம்பியும் சரமபர்வத்தை உக்த் யநுஷ்டாநங்களாலே அடைவேவ்யக்தமாக்கினாப்போலேகாணும் இவரும் இப்புடைகளிலே சரமபர்வத்தை உக்த்யநுஷ்டாநங்களாலே வ்யக்தமாக்கினபடி.

மூ:அம்பொனரங்கர்க்கு மாவிக்குமந்தரங்க

சம்பந்தங்காட்டித் தடைகாட்டி – உம்பர்

தினமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறிகாட்டு

மவனன்றோவாசாரியன். (௧)

அவ:-முதற்பாட்டு (வ்ருத்தஹாரீத)” ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துஶ்சப்ரத்யகாத்மந | ப்ராப்த்யுபாயம்பலம் ப்ராப்தேஸ்ததாப்ராப்திவிரோதிச | வதந்திஸகலா வேதாஸ்ஸே திஹாஸபுராணகா: | முநயஶ்சமஹாத்மாநோ வேதவேதாந்தபாரகா:” என்கிறபடியே தத்வவிதேக ப்ரமாணமான வேதாந்தவாக்யங்களாலும், தத்ஸங்க்ரஹ்மான திருமந்த்ரத்தில் பதத்ரயத்தாலும், ததர்த்தநிஷ்டரான வாழ்வார்கள் பாசுரத்தாலும், அவஶ்யம் ஜ்ஞாதவ்யதயா அறுதியிடப்பட்ட அர்த்தபஞ்சகத்தை நேராக வுபதேசித்தருளுமவனே ஸதாசார்யனாகிறானென்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார்.

வ்யா:-(அம்பொனரங்கர்க்கு மித்யாதி) “ஸம்ஸாரிகள் தங்களையுமீஶ்வரனையும் மறந்து” இத்யாதியாலே அர்த்தபஞ்சகத்தை உபதேசித்தருளுமவனே ஆசார்யனென்று பிள்ளையருளிச்செய்தாரிறே, இவரும் அத்தையிட்டறிவித்து “காட்டுமவனன்றோ வாசாரியன்” என்கிறார்;பிள்ளையை யடியொத்துமவர் இவரொருவருமேபோலேகாணும்.  பேசிற்றே பேசும் ஏககண்டராயிருக்குமிருப்புள்ளது. நம்முதலிகளுக்கேயிறே,

(உ) உக்தார்த்த விஶதீகாரயுக்தார்த்தாந்தர போதநம் | “மதம்விவர ணம்தத்ர” என்கிறபடியே திருமந்த்ரத்தில் ப்ரதமபதமாய்ப் அஸம்ஹிதாகாரேண பதத்ரயாத்மகமாயிருந்துள்ள ப்ரணவத்தாலே ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்தங்களுக்கு உபயுக்தங்களாயும், தத்ப்ரதிபந்நங்களாயுமிருக்கிற அர்த்தவிசேஷங்களுக்கு நேரேப்காசகமாய்க்கொண்டு பதத்வயாத்மகமான மந்த்ரசேஷம்ப்ரணவத்துக்கு விவரணமாயிருக்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி, முந்துற முன்னம் (தை-நா)“- தஸ்யப்ரக்ருதிலீநஸ்ய ய:பரஸ்ஸமஹேஶ்வர:” என்றும்,   அகாரோவிஷ்னுவாசக:” என்றும், (திருச்சந்த-4) துளக்கமில்விளக்கமாய்” என்றும் “   – அவ-ரக்ஷணே” என்றும் சொல்லுகிறபடியே ஶ்ரிய:பதியானஸர்வேஶ்வரனையும் அவனுடையரக்ஷகத்வ ஶேஷித்வங்களையும் ஶாப்தமாகப்ரதிபாதிக்கிற ஸவிபக்திகமான அகாரத்தினுடையவும், அதிலே அநுக்தங்களாய் ரக்ஷணோபயோகிகளான கல்யாணகுணங்களை ஶாப்தமாகச் சொல்லுகையாலே தத்விவரணமானநாராயண பதத்தினுடைய வுமர்த்தத்தை உட்கொண்டருளிச் செய்கிறார்.

(அம்பொனரங்கர்க்கும்) அழகியதாயும்பாவாநமாயுமிருந் துள்ள திருவரங்கப் பெருநகரத்தை, (திருவாய் –எ-௨-௯) ‘தென் திருவரங்கம் கோயில் கொண்டானே” என்கிறபடியே தமக்கிருப்பிடமாகவுடையராய், ஸர்வரக்ஷகராய், ஸர்வஶேஷியாய் அஶரண்ய  ஶரண்யத்வாதிகல்யாணகுணகணபூஷிதரான பெரியபெருமாளுக்கும், ஶ்ரீமதுரையை – ஶுபா” என்றும், ”    – பாபஹரா” என்றும் சொன்னவோபாதி, கோயிலையும் தென்னரங்கமென்றும் பொன்னரங்கமென்றும் சொல்லுகையாலே இதுதானே போக்யமாயும் பாவநமாயுமிறே யிருப்பது.போக்யதைக்கடி (பெரியாழ்திரு4-8-7) “தெழிப்புடைய காவிரிவந்தடி தொழும்சீரரங்கம்” என்றும், (பெரியாழ் திரு4-8-4)“தேன்தொடுத்தமலர்ச்சோலைத்திருவரங்கம்” என்றும், (பெரியாழ் திரு4-9-10) “இனிதாகத்திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம்” என்றும் சொல்லுகிற நீர்வாய்ப்பும் நிழல்வாய்ப்பும் நிலவாய்ப்புமாகிறவிவை;

பாவநத்வத்துக்கடி (பெரியாழ் திரு4-9-6)”திசைவிளக்காய் நிற்கின்ற திருவங்கம்”என்றும், (பெரியாழ் திரு4-9-7) “செழுமணிகள் விட்டெரிக்கும் திருவரங்கம்” என்றும் செல்வம் அஜ்ஞாநாந்தகார நிரோதித்வமும் ஸ்வப்ரகாஶகத்வமுமாகிறவிவை. பெரியபெருமாளுக்குள்ள உபயலிங்கத்வம் இதுக்குமுண்டுபோலேகாணும்;தம்மைப்பற்றியிருப்பார்க்குத் தம்படியைக்கொடுக்குமவரிறே அவர் தான்.

“அம்பொனரங்கர்க்கும்” என்று அவரை ஒருவிஶேஷவஸ்துவையிட்டாகாதேநிரூபிக்கவேண்டுவது (திருவாய்மொழி 5-6-11) “திருமாலடியார்கள்” என்று அத்தலையாலே இத்தலைக்கு நிரூபணமானாப்போலேகாணும் இத்தலையாலே அத்தலைக்கு நிரூபணமிருக்கிறபடி.  (ரா.ஸு 28-10)       – ராமாநுஜம்லக்ஷ்மணபூர்வஜஞ்ச” என்றதிறே. (அம்பொனரங்கர்க்கு) (நா.திரு 11-2) “என்னரங்கத்தின்னமுதர் குழலழகர்வாயழகர்” என்றும், (திருநெடுந் 14) அரங்கமேயவந்தணனை”என்றும் சொல்லுகிறபடியே அழகும்பாவநத்வமும் பெரியபெருமாளுக்கே யாகவுமாம்.

இத்தால் – ஸமஸ்தகல்யாண குணாத்மகத்வமும், அகிலஹேயப்ரத்யநீகத்வமுமாகிற உபயலிங்கத்வமும் சொல்லுகிறது, இவ்வுபயலிங்கத்வம் பரத்வோத்தம்பகமாகையாலே இத்தையே இவர்க்கு நிரூபகமாகச்சொல்லுகிறார். (லக்ஷ்மீந் 2)” – அஹந்தாப்ரஹ்மணஸ் தஸ்யஸாஹமஸ்மிஸநாதநீ” என்றும் (முமுக்ஷுப்படி )”இவளோடுகூடியே வஸ்துவினுடைய வுண்மை” என்றும் சொல்லுகிறபடியே “அரங்கர்க்கு” என்கிறவிடத்தில் பிராட்டியும் பகவத்ஸ்வரூபாந்தர்ப்பூதையாய்க்கொண்டு தோற்றுகையாலே, புருஷகாரப்ரகரணத்தில், “புருஷகாரமாம் போது க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்”.இத்யாதியாலே சொல்லுகிற புருஷகாரவைபவமும் “அம் பொன்” என்கிற விசேஷண த்வயத்தாலே ஸூசிப்பித்தருளுகிறாரென்று கண்டுகொள்வது.

அன்றிக்கே, “அம்பொன்’ என்று அழகாலே வந்தஸ்ப்ருஹணீயதையைச் சொல்லுகிறதாகவுமாம். , ஸ்ப்ருஹணீயதை    – காமதம்காமகம் காம்யம் ”விமாநம்ரங்கஸம்ஜ்ஞிகம்” என்கையாலே கோயிலுக்கும் –  ஸக்யம்ஸமஸ்தஜந சேதஹிஸந்ததாநம்” என்கையாலே பெரியபெருமாளுக்குமுண்டிறே.(ரங்கமாஹாத்ம்யம்): – ரதிங்கதோயதஸ்தஸ்மாத் ரங்கமித்யுச்யதேபுதை:” என்கிறபடியே பெரியபெருமாளுக்கு நிரதிஶயாநந்த வர்த்தகமாயிருக்கையாலே கோயிலை அரங்க மென்கிறது.

(அம்பொனரங்கர்க்கும்) (திருமாலை 2)”போயிந்திரலோகமாளும்” என்கிறபடியே, அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று விரஜையிலே குடைந்து நீராடி அமரநவகரஸ்பர்ஶம் முன்னாக அப்ராக்ருததேஹத்தைப் பரிக்ரஹித்துப் புகுரவேண்டியிருக்கும் பொன்னுலகுபோலேயும், ஸம்ஸாரவர்த்தகமாயிருக்கும் கொடுவுலகம் போலேயுமிருக்கை யன்றிக்கே, இச்சரீரத்தோடேதானே புகு லாயும் ஸம்ஸாரநிவர்த்தகமாயு மிருக்கையாலே “அரங்கமாநகர்” என்னும்படி விபூதித்வயத்துக்கும் புறம்பாய், அதஏவ த்ருதீய விபூதியாயிருந்துள்ள திருவரங்கம் திருப்பதியிலே (பெரியாழ் திரு 4-9-3)“அடியவரையாட்கொள்வானமருமூர்” என்கிறபடியே இங்குள்ளாரைஅடிமை கொள்வதாகஅவதாரங்கள் போலே தீர்த்தம் ப்ரஸாதியாதே ஸ்தாவரப்ரதிஷ்ட்டை யாய்க்கொண்டு அமர்ந்து எழுந்தருளியிருக்கிற பெரியபெருமாளுக்கும்,

(திருவாய்மொழி 7-2-11)”முகில்வண்ணனடிமேற்சொன்ன சொல்மாலையாயிரம்” என்றும், (திருவாய்மொழி தனியன்)“மதிளரங்கர்வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகளாயிரமும்” என்றும்,  “-சடகோபவாக்வபுஷிரங்கக்ருஹேஶயிதம்” என்றும் சொல்லுகிறபடியே இவர்தாம், ப்ரமாணம் ஶடஜித்ஸூக்தி:ப்ரமேயம் ரங்கசந்த்ரமா:”என்னும்படி மேயசரமமாய்க்கொண்டு மாநசரமமான திருவாய்மொழிக்கு நேரே ப்ரதிபாத்யராகையாலும், *பதின்மர்பாடும் பெருமாளாகையாலும், குருபரம்பரைக்கு முதலடியாகையாலும்,* மாமலை மற்றுமாக உகந்தருளின நிலங்களெல்லாவற்றுக்கும் அடித்தலையாகையாலும், மற்ற எம்பெருமான்களைச் சொல்லாதே இவர் தம்மையே ப்ரதாநரராகச் சொல்லுகிறார்,

“அம்பொனரங்கர்க்கு” என்று விவரணவிவரணியபாவாபந்நங்களான அகாரநாராயண பதங்களினுடைய அர்த்தத்தையும், “அரங்கர்க்கு” என்கிறவிபக்தியாலே லுப்தசதுர்த்தியினுடைய அர்த்தத்தையுமுட் கொண்டருளிச் செய்தாராய், மேல் மகாரோஜீவவாசக:” என்கிறபடியே இச்சேஷத்வாஶ்ரயமான சேதநவஸ்துவை ஶாப்தமாகப்ரதிபாதிக்கிறமகாரத்தினுடையவும், அதிலக(P)பிஹிதங்களான இச்சேதநவஸ்துவினுடைய நித்யத்வைகத்வ பஹுத்வாதிகளை ஶாப்தமாகச் சொல்லுகையாலே ஏதத்விவரணமான நாரபதத்தினுடையவு மர்த்தத்தையுட்கொண்டருளிச் செய்கிறார்.

(ஆவிக்கும்) ப்ரத்யயங்களுக்கு-ப்ரக்ருத்யர்த்தக தஸ்வார்த்தபோத(க) கத்வம் நியதமாகையாலே, லுப்தசதுர்த்த்யர்த்தமான ஶேஷத்வம் ப்ரக்ருத்யர்த்தமான ஈஶ்வரகதமாகவேண்டியிருக்க, சேதநகதமான படியெங்ஙனேயென்னில்;இங்குச் சேஷத்வமாகிறது-ஸம்பந்தவிஶேஷாத்மகமாய்க்கொண்டு உபயநிரூப்யமாகையாலே சேதநகதமானாலும் ஈஶ்வரகதமென்னக்குறையில்லையிறே.

(ஆவிக்கும்) “அம்பொன்” என்கிற பேதங்களை இங்கும் கூட்டிக்கொள்வது;இப்படி நிருபாதிகஶேஷியான பெரியபெருமாளுக்குச் சேஷமாய் ப்ரக்ருதே:பரமாய் ஜ்ஞாநாநந்தமயமாய்ஜ்ஞாநகுணகமாய், நிர்விகாரமாய், ஏகரூபமாய், பத்த(ம) முக்த நித்ய ரூபேண த்ரிவிதமான ஆத்மவஸ்துவுக்கும், (தை-நா) பதிம்விஶ்வஸ்ய” என்றும் (திருவாய் 7-2-10) “மூவுலகாளி”என்றும், (பெ-தி 4- -10)”என்னையாளன்” என்றுமித்யாதிகளாலே பெரியபெருமாளேவகுத்த ஶேஷியாகவும், சேதநவர்க்கம் தச்சேஷமாகவும் சொல்லிற்றிறே. ஸர்வம்ஹிதம்ப்ராணிநாம்வ்ரதம்” என்கையாலே ப்ராணனாகிறது பஞ்சவ்ருத்திப்ராணனே யாகிலும், (திருவாய்10-10-3)“ஆவிக்கோர்பற்றுக்கொம்பு” என்றவோபாதிசேதநனிடத்திலும் ப்ரயோகிக்கக்காண்கையாலே அத்தைப்பின்சென்று இவரும் இப்படியே ப்ரயோகித்தருளுகிறார்.

(அம்பொனரங்கர்க்கு மாவிக்கும்) அர்த்தபஞ்சகம் துடக்கமானவற்றிலே ஸ்வஸ்வரூபம் முன்னாகப்பரஸ்வரூபத்தைப்பிள்ளை அருளிச்செய்தாரேயாகிலும், (யஜு-உ-அஷ்ட)”   – யஸ்யாஸ்மி”இத்யாதிஶ்ருதிகளிலும் அவற்றுக்கடியான ப்ரணவத்திலும் “ப்ராப்யஸ்யப்ரஹ்மணோரூபம்” இத்யாதிவசநங்களிலும் பரஸ்வரூபம் முன்னாக ஸ்வஸ்வரூபத்தைச் சொல்லுகையாலே அத்தை அடியொத்தி இவரும் இப்படியே நிர்த்தேஶிக்கிறார்.

(ங) யுவதிஶ்சகுமாரிணி” என்கிற ஸமுச்சயம் அந்வாச ய மானவோபாதி “அரங்கர்க்குமாவிக்கும்” என்கிற இஸ்ஸமுச்சயம் அந்வாசயமத்தனை போக்கிஸமஸமுச்சயமன்று. ஶேஷஶேஷிகளுக்கு ஸமப்ராதாந்ய மில்லையிறே,(ப்ரஹ்மஸூ- ) போகமாத்ரஸாம்யலிங்காச்ச” ஜகத்வ்யாபாரவர்ஜ்ம்” என்கையாலேசேதநனுக்கு ஈஶ்வரனோடே  போகமாத்ரத்திலே ஸாம்யமொழியஸர்வப்ரகாரஸாம்யமில்லையிறே. (முண்ட-3-1-3) நிரஞ்ஹந: பரமம்ஸாம்யமுபைதி”(கீதை-14-2)” – மம ஸாதர்ம்ய மாகதா:” (பெரிய திரு 11-3-5)“தம்மையேநாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையேயொக்கவருள் செய்வர்” இத்யாதிகளுக்கும் இதிறே  ஹ்ருதயம்.

அநந்தரம், அவதாரண மந்யேது மத்யமாந்தம்வதந்திஹி” என்றும், (பகவச்சாஸ்த்ரம்) அஸ்வாதந்த்ர்யந்து ஜீவநாமாதிக்யம் பரமாத்மந:| நமஸாப்ரோச்யதே தஸ்மிந்நஹந்தாமமதோஜ்ஜிதா” என்றும் சொல்றுகிறபடியே அந்யஶேஷத்வநிவ்ருத்தி பகவச்சேஷத்வங்களை ஶாப்தமாகப்ரதிபாதிக்கிற உகாரத்தினுடையவும், அதில் அநுக்தங்களானஸ்வரநர்ஹத்வ அசித்வத் பாரதந்த்ர்யாதிகளை ஶாப்தமாகச் சொல்லுகையாலே தத்விவரணமான நமஸ்ஸினுடையவுமர்த்தத்தையுட்கொண்டருளிச் செய்கிறார்.

(அந்தரங்கசம்பந்தம் காட்டி) இவ்விருவர்க்கு முண்டான அநந்யார்ஹஶேஷத்வமாகிற அந்தரங்கஸமபந்தத்தைஸ்வஶேஷநிவ்ருத்தி அசித்வத்பாரதந்த்ர்யபர்யந்தமாகவும், தத்பராகாஷ்டையான பாகவதஶேஷத்வ பர்யந்தமாகவும் வெளியிட்டுக்கொடுத்ததிறே, ஸவிவரணமான உகாரத்துக்கர்த்தம்; -உகாரோநந்யார்ஹம் நியமயதிஸம்பந்தமநயோ:” என்னக்கடவதிறே; ஸம்பந்தமாத்ரம் இதரஶேஷத்வோபமர்தி யல்லாமையாலும், ஸ்வவிரோத்யதை அஸஹமாகையாலும் “அந்தரங்கம்” என்றத்தை இங்ஙன்விஶேஷிக்கிறார்.

ஸ்தாநப்ரமாணத்தாலே அவதாரணார்த்தமாக உகாரம் விஶேஷண ஸங்கதமாகையாலே அயோகவ்யவச்சேதமா மித்தனை போக்கி அந்யயோகவ்யவச்சேதமானபடி யெங்ஙனேயென்னில்; விஶேஷணவிஶேஷ்யங்கள் ஸமாநவிபக்த்யா நிர்த்திஷ்டங்களான விடத்திலே அந்நியமமொழிய அஸமாநவிபக்த்யா நிர்திஷ்டங்களான விடத்திலே அந்நியமமில்லாமையாலே, இந்த ஏவகாரம் அந்யயோகவ்யவச்சேதக மென்னக்குறையில்லை. – தேவதத்தம் ப்ரத்யேவ தண்டநம்” இத்யாதி ப்ரயோகங்களிலே இவ்வர்த்தம் ஸம்ப்ரதிபந்நமிறே.

அன்றிக்கே, அந்தரங்கஸம்பந்தமாகிறது  – பிதாசரக்ஷகஶ்ஶேஷீ பர்த்தாஜ்ஞேயோரமாபதி:| ஸ்வாம் யாதாரோமமாத் மாசபோக்தாசாத்யமநூதித:” என்கிறபடியே இவ்விருவர்க்குமுண்டான திருமந்த்ரத்தில் ப்ரக்ருதிப்ரத்யய தாதுபதங்களாலே ப்ரதிபாதிக்கப்படுகிற நவவிதஸம்பந்தமாகவுமாம்.

திருமந்த்ரந்தான் ப்ரதமபதமான ப்ரணவத்தில் வைத்துக்கொண்டு ப்ரதமாக்ஷரமான அகாரத்தில் ப்ரக்ருத்யம்ஶத்தாலே (ஸுபால- )-       “பிதாநாராயண:” என்றும் (வி.பு-1- )  –தேவதேவோஹரி: பிதா” என்றும், (பெரிய திரு 1-1-6)“எம்பிரானெந்தை” என்றும் சொல்லுகிறபடியே பிதாபுத்ரபாவ ஸம்பந்தத்தையும்,

அதில், “அவ-ரக்ஷணே” என்கிற தாத்வம்ஶத்தாலே (தை-ஆந- ) கோஹ்யேவாந்யாத்க: ப்ராண்யாத்” என்றும், (வி.பு-1-22-21)“நஹிபாலந ஸாமர்த்த்யம்ருதே ஸர்வேஶ்வரம்ஹரிம்” என்றும், (திருவாய்2-2-8)“கருத்தில் தேவுமெல்லாப்பொருளும் வருத்தித்தமாயப்பிரானை” என்றும் சொல்லுகிறபடியே ரக்ஷ்யரக்ஷகபாவ ஸம்பந்தத்தையும்,

ப்ரத்யயமானவிதில் லுப்தசதுர்த்த்யம்ஶத்தாலே(ஶ்வேத- ) பதிம்பதீநாம்” என்றும், (பராத)“  – ஜகத் பதிம் தேவதேவம்” என்றும், (திருவாய் 1-1-1)”அமரர்களதிபதி” என்றும் சொல்லுகிறபடியே ஶேஷஶேஷிபாவஸம்பந்தத்தையும், த்விதீயாக்ஷரமான உகாரத்தில் அவதாரணமாகையாலே, -பகவதஏவாஹம்” என்றும், (ராஸு 3-8-59) “05 -லோகபர்த்தாரம்” என்றும், (பெரியாழ்5-4-2)“பறவையேறு பரம்புருடா நீ என்னைக்கைக்கொண்டபின்” என்றும் சொல்லுகிறபடியே பர்த்ருபார்யாபாவ ஸம்பந்தத்தையும், த்ருதீயாக்ஷரமான மகாரத்திலே  – மநு – அவபோதநே” என்கிற தாதுவாலே நிதித்யாஹிதவ்ய:” என்றும், (பார)  – த்யேயோநாராயணஸ்ஸதா”என்றும், (திருவாய் 8-8-3)“உணர்வினுள்ளே இருத்தினேன்” என்றும் சொல்லுகிற படியே ஜ்ஞாத்ருஜ்ஞேயபாவஸம்பந்தத்தையும்,

த்விதீயபதமான நமஸ்ஸாலே(தை-நா )  ஈஶாநோ  பூதபவ்யஸ்ய” என்றும்,

 ஸ்வத்வமாத்மநிஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணிஸ்திதம்” என்றும், (திருவாய் 6-10-10)“உலகம் மூன்றுடையாய்” என்றும் சொல்லுகிறபடியே ஸ்வஸ்வாமி பாவஸம்பந்தத்தையும்,

த்ருதீயபதமான நாராயணபதத்தில் நாரமென்கிற அம்ஶத்தாலே  –யஸ்யாத்மாஶரீரம் யஸ்யப்ருதிவீஶரீரம்”என்றும், (ரா.யு 120-29)  -ஜகத்ஸர்வம் ஶரீரம்தே” என்றும், (திருவாய்1-2-1)“உம்முயிர்வீடுடையானிட” என்றும் சொல்லுகிறபடியே ஶரீரஶரீரிபாவஸம்பந்தத்தையும்,

அயநமென்கிற அம்ஶத்தாலே (சாந்தோ )  -ஸதாயதநா:” என்றும், (கீதை 7-7 ) – மயிஸர்வமிதம்ப்ரோதம் ஸூத்ரேமணிகணா இவ” என்றும், (திருவாய் 8-7-8) “மூவுலகும் தன்னெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந்தார்” என்றும் சொல்லுகிறபடியே ஆதாராதேயபாவ ஸம்பந்தத்தையும்,

வ்யக்தசதுர்த்த்யம்ஶத்தாலே (தை-ப்ருகு)“  -அஹமந்ந மஹமந்நம்” என்றும், (கீதை 10) -போக்தாரம் யஜ்ஞதபஸாம்” என்றும், (திருவாய் 10-7-2)”என்னைமுற்று முயிருண்டு” என்றும் சொல்லுகிறபடியே, போக்த்ருபோக்ய பாவஸம்பந்தத்தையும் ஶாப்தமாகச்சொல்லுகையாலே இது இருவர்க்குமுண்டான நவவிதஸம்பந்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாயிருக்குமிறே,

ஏவம்விதமான ஸம்பந்தத்தை (திருவாய் 2-3-2)”அறியாதனவறிவித்த”என்கிறபடியே ஓராசார்யன் அஜ்ஞாதஜ்ஞாபநம்பண்ண, இச்சேதநன் தெளியவறிந்தபின்பிறே இவனுக்கு (பெரியதிரு 8-9-3) “கண்ணபுரமொன்றுடையானுக்கடியேனாருவர்க்குரியேனோ” என்றிருக்கையாகிற ஸ்வரூபத்திலுணர்த்தியும், (திருவாய் 5-8-3) “என்நான் செய்கேன் யாரேகளைகண்” என்றிருக்கையாகிற ஸ்வரக்ஷணத்திலஶக்தியும் உன்னாலல்லால் யாவராலுமொன்றும் குறை வேண்டேன் ” என்றிருக்கையாகிற ப்ராபகத்திலத்த்யவஸாயமும்,

(திருவாய் 9-3-7) “மாகவைகுந்தம் காண்பதற்கென்மனமேகமெண்ணம்” என்றிருக்கையாகிற ப்ராப்யத்தில் த்வரையும், (பெரிய திரு 11-8-3)“பாம்போடொருகூரையிலே பயின்றாப்போல்” என்றிருக்கையாகிற விரோதியில்பீ(ம )தியும், (திருவாய்8-10-3)“அவனடியார் சிறுமாமனிசராயென்னையாண்டாரிங்கேதிரிய” என்றிருக்கையாகிற உத்தேஶ்யவிஷயத்தில்கௌரவமும், (திருவாய் 10-6-10)“பெரியார்க்காட்பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு” என்றிருக்கையாகிற உபகாரவிஷயத்தில் க்ருதஜ்ஞதையும், (திருவாய் 10-10-3)“ஆவிக்கோர்பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்” என்றிருக்கையாகிற உத்தாரகவிஷயத்தில் ப்ரதிபத்தியும்,

அவனுடைய நிருபாதிகஶேஷித்வத்தையும், தன்னுடைய நிருபாதிக ஶேஷத்வத்தையும் தெளியவறிகையாகிற ஸம்பந்த

ஜ்ஞாநமும், அவனுடைய நிருபாதிகஶரீரித்வத்தையும், தன்னுடைய நிருபாதிக ஶரீரத்வத்தையும் தெளியவறிகையாகிற ஸம்பந்த யாதாத்ம்யஜ்ஞாநமும், அவடைய நிருபாதிக தர்மித்வத்தையும், தன்னுடைய நிருபாதிக தர்மத்வத்தையும் தெளியவறிகையாகிற ஸம்பந்தஸ்வரூபஜ்ஞாநமும், தர்மதர்மிகளுடைய விஶிஷ்ட ஐக்யத்தாலே அவனேயாய், “தானில்லை” என்னலாம்படியிருக்கையைத் தெளியவறிகையாகிற ஸம்பந்தஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநமும்,

பகவத்தாஸ்யத்தையே யிட்டுஸதாசாரத்தை நெகிழாதே ஶப்தாதிவிஷயங்களில் அச்சமும், கைங்கர்யாபாவத்தில் ஆர்த்தியும் விளைகையாகிற ஶேஷத்வத்தில் கர்த்த்ருத்வாதி நிவ்ருத்தியும், நிஷித்தங்களைவிட்டு விஹிதங்களைப் பற்றினவாறே “நான் ஜ்ஞாதாவாகையாலேயன்றோ என்னை அவனங்கீகரித்தது” என்று தன் ஜ்ஞாத்ருத்வத்தையிட்டு இறுமாவாதேயிருக்கையாகிற ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்த்ருத்வ நிவ்ருத்தியும்,

“நிஷித்தங்களை விட்டு விஹிதங்களைப் பற்றினவாறேயன்றோ என்னை அவனங்கீகரித்தது” என்று தன்ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையிட்டு இறுமாவாதே யிருக்கையாகிற ப்ரவ்ருத்திநிவ்ருத்திகளில்கர்த்த்ருத்வநிருத்தியும், அவனுக்குத்தானடிமைசெய்யுமிடத்தில் அது ஸ்வரஸத்துக்குடலென்றிராதே அவயவபூதமான இவ்வாத்மவஸ்து அவயிவியான வெம்பெருமானுக்கு எடுத்துக்கைநீட்டுகிற தென்றிருக்கையாகிற போந்த்ருத்வத்தில் கர்த்த்ருத்வநிவ்ருத்தியும் துடக்கமான ஆகாரவிஶேஷமுண்டாகிறது.

(அந்தரங்கசம்பந்தம் காட்டி) இஸ்ஸம்பந்தந் தான்,  ப்ராப்தம் லஷ்மீபதேர்தா ஸ்யம்ஶாஶ்வதம் பரமாத்மந:“என்றும், (உ)“ தாஸபூதாஸ்ஸ்வதஸ்ஸர் வேஹ்யாத்மாந: பரமாத்மந:” என்றும், (ங)”நாராயணன் திருமால்நாரம் நாமென்னுமுறவு ஆராயில்நெஞ்சேயநாதியன்றோ?”என்றும் சொல்லுகிறபடியே வந்தேறியன்றிக்கே அநாதியாய்ப்போருகையாலே “காட்டி” என்கிறார். முன்கண்டாரிருக்குமதிறே லோகத்திலே காட்டக்கடவது.

இஸ்ஸம்பந்தத்தை ஒருவன் வெளியிட்டுக்கொடுக்கப்பெறமையாலே (திருவாய் 2-9-9)“யானேயென்னை யறியகிலாதேயானே யென்றனதே யென்றிருதேன்” என்கிறபடியே நெடுங்காலம் தன்னை உள்ளபடி அறிய மாட்டாமல் தேஹாத்மாபிமாநியாய், மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து *மற்றோர் தெய்வம் பாடி யாடிப் பணிந்து* வழி திகைத்து (தை ஆக)” – அஸந்நேவ”என்றும் (திருவாய் 5-7-3)“பொருளல்லாத” என்றும் சொல்லுகிறபடியேஉருமாய்ந்து நித்யஸம்ஸாரியாய்ப் போந்திருந்து ” sss – மகாரேணஸ்வதந்த்ரஸ்ஸ்யாத்” என்கிறபடியே பதத்வயாத்மகமான நமஸ்ஸில் ஸ்வஸ்வாதந்த்ர்ய ப்ரதிபாதகமான மகாரத்தினுடைய அர்த்தத்தையுட் கொண்டருளிச்செய்கிறார்.

(தடைகாட்டி) கீழ்ச்சொன்ன இஸ்ஸம்பந்தஜ்ஞாநத்துக்கும்ப்ரதிஸம்பத்தியான ஈஶ்வரனிடத்தில் பரத்வப்ரதிபத்திக்கும் சேதநனிடத்தில் பகவதநந்யார்ஹ ஶேஷத்வப்ரதிபத்திக்கும் மேற்சொல்லுகிற திவமென்னும் வாழ்வாகிற கைங்கர்யத்தில் ப்ராப்யத்வப்ரதிபத்திக்கும் சேர்ந்தநெறியாகிற அவன்திருவடிகளில் ப்ராபகத்வப்ரதிபத்திக்கும் விரோதியின்னதென்னுமிடத்தை வெளியிட்டுக்கொடுத்து,

அவ்விரோதியாகிறது – அபரவஸ்துக்களில் பரத்வ புத்தியும், அரக்ஷகரிடத்தில் ரக்ஷகத்வபுத்தியும், அநீஶ்வரனிடத்தில் ஈஶ்வரத்வபுத்தியும்;அஶேஷிகளிடத்தில் ஶேஷித்வபுத்தியும், அநுபாஸ்யரிடத்தில் உபாஸ்யபுத்தியும், அநாத்மாவில் ஆத்ம்புத்தியும், அஸ்வதந்த்ரனான தன்னிடத்தில் ஸ்வதந்த்ரபுத்தியும், அநுபாயங்களில் உபாயத்வபுத்தியும், அபந்துக்களில் பந்துத்வபுத்தியும், அபோக்யங்களில் போக்யதாபுத்தியும், பகவத்கைங்கர்யத்தில் ஸ்வபோ()க்த்ருத்வபுத்தியும், இவையெல்லாவற்றுக்கும் வேர்ப்பற்றான அஹங்கார மமகாரங்களும்.

இவ்விரோதி வர்க்கத்தையிறே, (க)–புரத:ப்ருஷ்டதஶ்சைவ ஸ்தாநதஶ்ச விசேஷத:| நமஸாவீக்ஷ்யதேராஜந்”என்றும், (அஷ்டஶ்லோகி)“- ஈக்ஷிதேநபுரத: பஶ்சாதபிஸ்தாநத:” என்றும் சொல்லுகிறபடியே காகாக்ஷிந்யாயேந ப்ரதமசரம பதங்களோடே அந்விதமாயும், ஸ்வதஏவஸ்தாநியான நமஸ்ஸோடே அந்விதமாயுமிருத்துள்ள ஸகண்டநமஸ்ஹில்ஷஷ்ட்ட்யந்தமான மகாரம் காட்டுகிறது.

ஏவம்பூதமான இந்தவிரோதிவர்க்கத்தைக்காட்டுகையாவது  -நாராயணம்பரித்யஜ்யஹ்ருதிஸ்தம்பதிமீஶ்வரம் | யோந்யமர்ச்சயதேதேவம் பரபுத்த்யாஸபாபபாக்” என்றும்,  – ஸ்வாதந்த்ர்யமந்ய ஶேஷத்வமாத்மாபஹரணம் விது:” “  – ஈஶாநநந்யார்ஹஶேஷத்வம் விருத்தம் த்யாஜ்யமேவ தத்” என்றும், (ப்ராஜபத்யஸ்ம்ருதி) -வாஸுதேவம்பரித்யஜ்யயோந்யம் தேவமுபாஸதே | த்ருஷிதோஜாஹ்நவீதீரே கூபம்கநதிதுர்மதி:” என்றும்,(லக்ஷ்மீதந் 17-85) “ress that dres-உபாயாபாயஸம்யோகே நிஷ்டயாஹீயதேநயா” என்றும், (ங) ” – விஷயாணாந்துஸம் யோகாத்யோபிபர்த்திஸுகம் நர: | ந்ருத்ய: பணிநஶ்சாயாம் விஶ்ரமாயாஶ்ரயேதஸ:” என்றும்,(ஜிதந்தே 1- )“3-8- ல்  – அஹங்காரார்த்தகாமேஷு ப்ரீதிரத்யைவநஶ்யது” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வேஶ்வரன் துடக்கமானாரிடத்தில் ப்ரத்வாதி ப்ரதிபத்திக்கு விரோதியான இந்தவிபரீதபுத்தி த்யாஜ்யமென்னுமிடத்தை ஸநிதர்ஶநமாகவும் லோபபத்திகமான ஸ்வோபதேஶத்தாலே விஶததமமாம்படி வெளியிட்டுக்கொடுக்கை.

அநந்தரம் -ஸாதநம் நமஸாததா” “-தஸ்மாச்சதுர்த்தயாமந்த்ரஸ்யப்ரதம் தாஸ்யமுச்யதே” என்றும் சொல்லுகிறபடியே உபாயவாசியானநமஸ்ஸினுடையவும் ஸர்வதேஶஸர்வகாலஸர்வாவஸ்தோசிதமானகிஞ்சித்காரத்துக்கு ப்ரகாஶகமாயிருந்துள்ள வ்யக்தசதுர்த்தியினுடையவும் அர்த்தத்தையுட்கொண்டருளிச்செய்கிறார் (உம்பர் திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்தநெறிகாட்டுமவன்) (யஜு ஆரண்ய 1) “PS-தேவாநாம்பூரயோத்யா”என்றும்,(திருவாய் 3-9-9)”வானவர் நாடு” என்றும் சொல்லுகிறபடியே இவ்வருகிலிருப்பார்க்கெல்லாம் மேலாயிருந்துள்ள நித்யஸூரிகளுக்கு இஷ்டவிநியோகார்ஹமாய், (திருவாய் 9-7-5)“தெளிவிசம்பு திருநாடு”என்றும், (பார-ஆரண்ய)“ – அத்யர்க்காநலதீப்தம் தத்ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந:” என்றும் சொல்லுகிறபடியே நிரவதிகதேஜோரூபமாய் (புருஷஸூக்தம்)“ – த்ரிபா தஸ்யாம்ருதம்திவி” என்றும், – “த்ரிபாத்விராட்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வேஶ்வரனுக்கு போக்யபோகோபகரண போகஸ்தாநரூபேண யிருந்துள்ள த்ரிபாத்விபூதியிலே (சாந்தோ 8-15-1) – நசபுநராவர்த்ததே” என்றும், (ப்ரம்ஹஸூ 4-4)“                – அநாவ்ருத்திஶ்ஶப்தாத்” என்றும் (திருவாய் 4-10-10)“மீட்சியின்றி வைகுந்தமாநகர்” என்றும் சொல்லுகிறபடியே புநராவ்ருத்தியின்றிக்கே நித்யகைங்கர்யத்திலே நிரதராயிருக்கையாகிற வாழ்வுக்குநேரே அநுரூபமான உபாயத்தை வெளியிட்டுக்கொடுக்குமவன்.

(உம்பர் திவம்) தேசிகனைப்போலே தேசத்தையும்த்தீயரையிட்டு நிரூபிக்கவேண்டியிருக்கும்போலேகாணும்.திவமென்று சொன்னதுக்கடி – பொன்னுலகென்னும்படியான நிலமிதுவாய்த்தென்றும், (தை ப்ருகு- )“25 சவால் – இமாந்லோகாந் காமாந்நீகாமரூப்யநுஸஞ்சரந்”என்றும் ஸ்வைரஸஞ்சரணமாகையாலேயிறே விரோதியென்றும்,

(வாழ்வுக்கு நித்யகைங்கர்யமென்றும், வாழ்ச்சியென்றும் பர்யாயம்போலேகாணும். (நாச் திரு 8-9) “வேங்கடத்தைப்பதியாக வாழ்வீர்காள்” என்னக்கடவதிறே, (சேர்ந்தநெறி) அநுரூபமான வுபாயம், வாழ்வுக்குச்சேர்ந்த நெறியென்று ப்ராப்யப்ராபகங்களைச் சேர ஒன்றுக்கொன்று ஸத்ருஶமாக வருளிச்செய்தது ஸ்வீகாரவிஷயபூதன் ப்ராபகம்;பரிசர்யாவிஷயபூதன் – ப்ராப்பமென்கையாலே இவ்விரண்டினுடையவும் ஐக்யத்தைப்பற்ற, உபாயப்ரகரணத்தில் “இது தன்னைப்பார்த்தால்” இத்யாதிகளில் சொல்லுகிற உபாயவைபவத்தை, சேர்ந்த” என்கிற விசேஷணத்தால் ஸூசிப்பித்தருளுகிறாராயிற்று.

“சேர்ந்தநெறி” என்கையாலே, சேர்ந்தநெறியுமுண்டாயிருக்கு மாதாதேதான். அதாகிறது

பக்த்யாபரம்யாவாபி” என்கிறபடியே “மோக்ஷஸாதநத்வேந வேதாந்தங்களில் விஹிதமாய்த்தல்ல.” இத்யாதிப்படியே விவேகாதிஶாதநஸப்தக ஸாத்யமாய், த்ரு( )வாநுஸ்ம்ருதிரூபமாய்கீழ்ச்சொன்ன ப்ராப்யத்துக்கு அத்யந்தவிஸத்ருஶமாய் விளம் ப்யப்லப்ரதமாயிருக்கும் பக்த்யுபாயம்,

(காட்டுமவனன்றோ வாசாரியன்) இப்படி ”அம்பொனரங்கர்க்கு” என்று உபயலிங்கத்வ விஶிஷ்டமான பரஸ்வரூபத்தையும் “ஆவிக்கு” என்று – ததநந்யார்ஹஶேஷமான ஸ்வஸ்வரூபத்தையும், “தடை”என்று – த்யாஜ்யமான விரோதிஸ்வரூபத்தையும் “திவமென்னும் வாழ்வுக்கு” என்று – ஏதந்நிவ்ருத்த்யாந்தரபாவியான புருஷார்த்தஸ்வரூபத்தையும், “சேர்ந்த நெறி” என்று – இப்புருஷார்த்தத்துக்கு ஸத்ருஶஸாதநமான உபாயஸ்வரூபத்தையும், திருமந்த்ரோபதேஶமுகேந ஸுக்ரஹமாகவும் ஸுவ்யக்தமாகவும் வெளியிட்டுக் கொடுக்குமவனன்றோ ஸதாசார்யனாகிறானென்கிறார்.

இப்படி உபதேசிக்குமவனுக்கிறே, (க) – ஆசிநோதிஹி ஶாஸத்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி | ஸ்வயமாசரதே யஸ்து ஸ ஆசார்யஇதீரித:”என்று சொல்லுகிற ஆசார்யலக்ஷணமுள்ளது. (ஶ்ரீவசந)“நேரே ஆசார்யனென்பது – ஸம்ஸாரநிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசித்தவனை” என்கிற திவ்யஸூக்தியையுட்கொண்டு “காட்டுமவனன்றோ ஆசாரியன்” என்று ப்ரஸித்திதோன்ற வருளிச்செய்கிறார்.

மூ — அஞ்சுபொருளுமளித்தவன் பாலன்பிலார்

நஞ்சில் மிகக்கொடியர் நாம் சொன்னோம் — நஞ்சு தான்

ஊனைமுடிக்கு மதுயிரைமுடிக்குமென்று

ஈனமிலார் சொன்னாரிவை. (௨)

அவ:- இரண்டாம்பாட்டு. இப்படி ஸ்வோபதேசத்தாலே அர்த்தபஞ்சகஜ்ஞாநமுண்டாம்படி விஷயீகரித்தருளி ஏதந்முகேந மஹோபகாரகனான ஸ்வாசார்யன்பக்கலிலே (திருவாய் 2-3-2) “அறியாதனவறிவித்தவத்தாநீசெய்தன வடியேனறியேனே” என்றும் (திருவாய் 2-7-8) “என்னைத்தீமனம் கெடுத்தாய்” என்றும், (திருவாய் 2-7-7) “மருவித்தொழும் மனமேதந்தாய்” என்றும் சொல்லும்படியான உபகாரஸ்ம்ருதியாலே  – ததா மந்த்ரப்ரதேகுரௌ| த்ரிஷுபக்திஸ்ஸதாகார்யா”, என்கிறபடியே மந்த்ரத்திலும் மந்திரத்துக்குள்ளீடான வஸ்துவிலும் பண்ணக்கடவ ப்ரேமத்திற்காட்டில் அதிஶயிதமான ப்ரேமமில்லாதார் ஸ்வஸ்பர்ஶமாத்ரத்தாலே முடிக்கவற்றான விஷத்திலும் அதிக்ரூரராய், அத்தைப்போலே நஶ்வரமான ஶரீரத்தை நஶிப்பித்து விடுகையன்றிக்கே நித்யமான ஆத்மவஸ்துவை நஶிப்பித்து விடுமவரென்கிறார்.

வ்யா:-(அஞ்சுபொருளுமித்யாதி) (திருவாய் 5-2-5)“உய்யும் வகை” என்றும், (திருவாய் 8-8-5) “நின்றவொன்றை யுணர்ந்தேனுக்கு” என்றும்,  “நன்கறிந்தேன்’ என்றும், (திருவாய் 8-8-3)“உணர்வினுள்ளே” என்றும், (திருமாலை 38) “ஆம்பரிசு” என்றும் அவஶ்யஜ்ஞாதவ்யதயா அறுதியிடப்பட்ட அர்த்தபஞ்சகத்தையுமுபதேசித்த ஆசார்யன்பக்கல்ப்ரேமமற்றிருக்குமவர்கள்,

(அஞ்சுபொருளும்) இவ்வர்த்தபஞ்சகத்தில் ஓரொன்றை யுபதேசித்த வளவிலே கைவாங்கியிருந்தானாகிலன்றோ இவன் ப்ரேமமற்றிருக்கலாவது, (அஞ்சுபொருளும்) (வ்ருத்தஹாரீத) -வதந்திஸகலாவேதா:” என்கிறபடியே வேதைகஸமதிகம்யமான அர்த்த பஞ்சகத்தையிறே இவனுபதேஶிப்பது,

(அளித்தவன்) இவ்வர்த்தபஞ்சகத்தை (கீதை) – ஸேவயா உபதேக்ஷ்யந்தி” என்றும், (பெரியாழ் திரு 4-4-2) “குருக்களுக்கநுகூலராய்” என்றும் சொல்லுகிறபடியே ஸ்வாநுவ்ருத்தியாலே ப்ரஸந்நனாய்க்கொண்டுஉபதேஶிக்கையன்றிக்கே (கண்ணி-10) “பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத்திருத்திப் பணிகொள்வான்” என்கிறபடியே இத்தலையிலேதேனு மொருநன்மையாதல், த்ருஷ்டப்ரயோஜநத்தையாதல், தன்னிடத்திலாசார்யபதத்தையாதல், க்யாதிலாபபூஜைகளையாதல்,  ” – ப்ரப்ரூயாத்” என்று ஒருவிதிபாரதரதந்த்ர்யதையாதல் கணிசியாதே,  “ -க்ருபயாநிஸ்ப்ருஹோவதேத்” என்கிறபடியே தங்கள் துர்க்கதியே பற்றாசாகவுண்டான பரமக்ருபையாலே நிரபேக்ஷனாய்க் கொண்டு உபதேஶித்தருளினவன்.

(அளித்தவன்) (ங) “கங்கள் – ஶுஶ்ருஷுரஸ்யாத்ய” என்கிறபடியே அவஶ்யம் கர்த்தவ்யதயாவிஹிதையான ஶுஶ்ருஷைமுன்னாக உபதேஶித்தவனாகிலிறே இவனுக்கு ப்ரேமமற்றிருக்கலாவது. இத்தலையிலர்த்தித்வமும் கூடவில்லாதிருக்க முலைக்கடுப்பாலே பீச்சுவாரைப்போலே க்ருபை (பா) (வரம்பிட்டு) வடிம்பிட்டுக் கொடுக்க, தத்பரதந்தரனாய்க்கொண்டு அளித்தானாயிற்று.

(அன்பிலார்) அங்கீகரிக்கில், (உபதேசர- ) “உங்குருக்கள் தம்பதத்தேவையுமன்பு தன்னையிந்த மாநிலத்தீர்” என்று தத்வதர்ஶிகளாலே அவஶ்யம் கர்த்தவ்யதயா அறுதியிடப்பட்டப்ரேமமில்லாதவர்கள்.

ஏவம்பூதரான இவர்கள்படியெங்கனே யென்னில்; (நஞ்சில் மிகக்கொடியர்) நஞ்சுகொடிது;இவர்கள் மிகக்கொடியர், விஷம்க்ரூரமாயிருக்கும்;இவர்கள் அதிலுங்காட்டில் க்ரூரராயிருப்பர்கள்,

இவ்வர்த்தத்தையறியும்படி யெங்ஙனேயென்ன; (நாம்சொன்னோம்) வேறொரு ப்ரமாணம் கொண்டாதல், உபதேஶம்கொண்டாதலறிய வேண்டாதபடி அவதாரவிஶேஷமான பிள்ளைலோகாசார்யருடைய திருவடிகளிலே சிலகாலம் ஸேவைபண்ணி, தத்வஹித புருஷார்த்தங்களைச் சரமபர்யந்தமாக அருளிச் செய்யக்கேட்டு தந்நிஷ்டராயிருக்கிற நாம்சொன்னோம். பிள்ளை லோகாசார்யர் திருவடிகளை ஆஶ்ரயித்ததமக்கு ஸப்ரஹ்மசாரிகளான கூரகுலோத்தமதாஸர் துடக்கமானாரைக் கூட்டிக்கொண்டு “நாம்” என்கிறார். நாமறுதியிட்டவர்த்தமென்று லோகம்பரிக்ரஹிக்கும்படியான பெருமதிப்பராய் ஆப்ததமராய் ஸர்வஜ்ஞராயிருக்கையாலே நாம் சொன்னொமென்கிறார்.

(சொன்னோம்)(ஞானஸாரம்) “சொல்லுமவிடுசுருதியாம்” என்னும்படியான ஏற்றமுடையதாயும் (உத்த-ரா-சரி) – ரிஷீணாம்புநராத்யாநாம் வாசமர்த்தோதுதாவதி” என்னும்படி, அர்த்தஸ்பர்ஶியாயுமிறே தத்வதர்ஶிகளாயிருப்பார் வார்த்தையிருப்பது.

நஞ்சின் கொடுமை யெங்ஙனே; இதின் கொடுமை எங்ஙனேயென்ன; அவ்விரண்டையுமடைவே தர்ஶிப்பிக்கிறார் மேல்; (நஞ்சு தானித்யாதி) ஊனாகிறது-மாம்ஸமாய், ஊனையென்றது – மாம்ஸப்ரசுரமான ஶரீரத்தை யென்றபடி, மாம்ஸத்தைச்சொன்னவிது – மற்றுமதிலுண்டான அஸ்ருக்பூயவிண் மூத்ரஸ்நாயு மஜ்ஜாஸ்திகளுக்கெல்லாமுபலக்ஷணம். (வி பு 1-17-63) – மாம்ஸாஸ்ருக்பூயவிண்மூத்ரஸ் நாயுமஜ்ஜாஸ்தி ஸம்ஹதள – தேஹே” என்றுமாம்ஸாதி மயமாகவிறே இத்தேஹத்தை நிரூபகராயிருப்பார் நிரூபிப்பது. (திருவாய் 5-1-5 )”புண்ணை மறையவரிந்து” என்கிறபடியே தோலைமேவிக் கைப்பாணியிட்டு, மெழுக்குவாசியாலே ப்ரமிக்கும்படி பண்ணிவைக்கையாலே ஆந்தரமான மாம்ஸாதிகள் நேராகத் தோற்றுகிறனவில்லை. -யதிநாமாஸ்யதேஹஸ்யயதந்தஸ் தத்பஹிர்பவேத் | தண்டமாதாய லோகோயம்ஶுந: கரகாந்நிவாரயேத்” என்கிறபடியேஅகவாய்புறவாயானால் காக்கைநோக்கப்பணிபோரும்படி இவைநேர்கொடுநேர் தோற்றுமிறே, ஆனாலும் மாம்ஸப்சுரமாகையாலேயன்றோ “ஊன்” என்றும்,(திருவாய் 2-3-1) “ஊனில் வாழுயிர்” என்றும், (திருவாய்10-8-5) “ஊனேய்குரம்பை” என்றும், ஆழ்வார்கள் நீர்த்தேஶித்தவோபாதி இவரும் “ஊனை” என்று நிர்த்தேஶித்தருளுகிறார், (அ)  – ஶரீரம்வ்ரணவத் பஶ்யேத்”என்று சொன்னாருமுண்டிறே.

(நஞ்சுதானூனை முடிக்கும்) – உப்புக்தம் விஷம்ஹந்தி” என்கிறபடியே, விஷமானது– ஸ்பர்ஶமாத்ரத்தாலே மாம்ஸப்ரசுரமானஶரீரத்தை முடிக்கவற்றாயிருக்கும். முடிக்கையில் அதுக்குண்டான ப்ராதாந்யம்தோற்ற “நஞ்சுதான்” என்கிறார். முடிக்குமென்றது – ப்ராயிகாபிப்ராயம். மணிமந்த்ராதிகளுண்டாம்போது – முடிக்கமாட்டாதிறே.

(அதி உயிரைமுடிக்கும் (ஞானஸாரம்) என்று மனைத்துயிர்க்கு மீரஞ்செய் நாரணனும் -அன்றும் தன்னாரியன் பாலன் பொழியில் ” என்கிறபடியே ஆசார்யன்பக்கல் ப்ரேமமில்லா தான், ஸர்வஸுஹ்ருத்தான ஈஶ்வரனுங்கூட*க்ஷிபாமி,*நக்ஷமாமி களைப் பண்ணிக்கைவிடும்படிக்கு இலக்காயிருப்பானொருவனா கையாலே ” -ஸ ஆத்மஹா” என்கிறபடியே, இவன் நித்யமான ஆத்மவஸ்துவை முடித்துக்கொள்ளுமவன்.

(நஞ்சுதானித்யாதி) விஷமானது (வி பு-6)  “

ஶரீராக்ருதிபேதாஸ்து பூபைதேகர்மயோ நய:”என்னும்படியே வந்தேறியான ஶரீரத்தைமுடித்து ஆத்மாவினுடைய ஸ்வாபாவிகாகாரத்துக்கு ஒரிடைச்சுவரைப்போக்கும். இவன், ஆத்மாவினுடைய ஸ்வாபாவிகாகாரத்தைமுடித்து(திருவி-க)“அழுக்குடம்பும் – இனியாமுறாமை” என்னும்படி துஸ்ஸஹமான ஶரீரத்தைப் பூண்கட்டிக்கொண்டு நித்யஸம்ஸாரியாயிருக்கும்.

நஞ்சின்வ்யாபாரம் (திருவாய் 1-2-9)”ஆக்கைவிடும் பொழுதெண்ணே” என்றும், (சு) “இந்தவுடம்போடினியிருக்கப்போகாது” என்றும் சொல்லுகிறபடியே இதுத்யாஜ்யமென்னும் ப்ரதிபத்தியுண்டாய், அத்தைக்கழித்துக்கொள்ளவேணுமென்றிருக்கும் ஜ்ஞாநவிஶேஷயுக்தர்க்கு“இங்ஙனேயாகிலும் இவ்விரோதி இவனுக்குக்கழியப்பெற்றதிறே” என்று உகக்கைக்கு உறுப்பாய்க்கொண்டு அபிமதமாயிருக்கும்.

இவன்வ்யாபாரம்(திருவாய் 4-9-3)“உயிர் மாய்தல் கண்டாற்றேன்”என்றும் (திருவாசிரியம்) “உலகினதியல்வே” என்றும் சொல்லுகிறபடியே ஆண்டாளுக்கு வீரஸுந்தரன் செயல் அநபிமதமானவோபாதி, அவர்கள் நோவுபாட்டுக்கும் ஸ்வோத்கர்ஷத்துக்கும் வெறுப்புக்கு முறுப்பாய்க்கொண்டு அநபிமதமாயிருக்கும்,ஆசார்யவிஷயீகாரத்தைப்பெற்றும் இவனிப்படித் தன்னைத்தானே முடிப்பானொருவனாகையாலே அஸத்ப்ராயனென்றும், அத்ரஷ்டவ்யனென்றும் நினைத்துப் படர்க்கையாக “அது” என்கிறார்,

உம்மைப்போல் மற்றையாராகிலும் இங்ஙன் சொன்னாருண்டோவென்ன (ஈனமிலாரித்யாதி), நாமேயன்று;நமக்கு தேசிகராயிருப்பாரும் இவ்வர்த்தத்தைச் சொன்னாரென்கிறார். (என்றிவை ஈனமிலார் சொன்னார்) நஞ்சுதான் அநித்யமான ஶரீத்தைமுடிக்கும்;ஆசார்யன்பக்கல் ப்ரேமமில்லாதவன் நித்யமான ஆத்மவஸ்துவை முடிக்குமென்கிற இவ்வர்த்தத்தை ஸ்வாசார்யன் பக்கல் ப்ரேமமற்றிருக்கையாகிற தாழ்வில்லாத நம் பூர்வாசார்யர்கள், (வாஸவதத்தா)“ – விஷதரதோப் யதிவிஷம: கலஇதிநம்ருஷாவதந்திவித்வாம்ஸ:| யதயமநகுலத்வேஷீ ஸகுலத்வேஷீபுந: பிஶுந:” என்று லௌகிகர் விஷயமாக அபியுக்தர்சொன்னவோபாதி தந்தம்மைப்பற்றியிருக்குமவர்களைப்பார்த்துத் தாம்தாம் பரோக்திகளாலே விஶததமமாகச் சொன்னார்கள்.

ஆசார்யவிஷயத்தில் ப்ரேமமற்றிருக்குமதிற்காட்டில் நிஹீநதையில்லையென்றும், இதிருக்குமதிற்காட்டில்வேறே உத்கர்ஷமில்லையென்றும் திருவுள்ளம்பற்றி “ஈனமிலார்” என்கிறார்காணும். (சொன்னார்) அவர்கள் கரணத்ரயஸாரூப்யமுடையரா யிருப்பார் சிலரிறே. (சொன்னாரிவை) (ங)- யத்வசஸ்ஸகலம் ஶாஸ்த்ரம்’ என்றும் (ச) க்ரீடார்த்தமபியத்ப்ரூயுஸ்லதர்ம: பரமோமத:” என்றும் சொல்லும்படிகாணும் அவர்கள் திவ்யஸூக்தியின் மெய்ப்பாடிருப்பது.

to be continued…

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.