ஸப்தகாதை Part 2

ஸ்ரீமதேராமாநுஜாயநம:

விளாஞ்சோலைப்பிள்ளைஅருளிச்செய்த

ஸப்தகாதை (Continued)

பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாக்யாநம்.

      மூ.- பார்த்தகுருவினளவில் பரிவின்றி

சீர்த்தமிகு ஞானமெல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல்

மண்ணின் மேல் துன்புற்று மங்குமே தேங்காமல்

நண்னுமேகீழாநரகு. (௩)

அவ:- மூன்றாம்பாட்டு. ஸ்வாசார்யன்பக்கல்ப்ரேம மற்றிருந்தானேயாகிலும் அவனுபதேசத்தாலே அர்த்தபஞ்சகம் முத லாகத் தாத்பர்யங்களோடினது, ஞானக்கலைகளான அவ்வவஶாஸ்த்ரங்களைப் பரக்கக்கற்று, அத்தால்பிறந்த ஜ்ஞாநவிஶேஷத்தாலே இவனுக்கீடேறக் குறையென்னென்ன;அந்தப்ரேமமின்றிக்கே யுண்டாயிருக்கிற ஜ்ஞாநவிஶேஷமானது  – ஶ்ருதம் தஸ்யஸர்வம் குஞ்ஜரஶௌசவத்” என்கிறபடியே கஜஸ்நாநத்தோபாதி நிரர்த்தகமாயிருப்பதொன்றாகையாலே; ஆதலால், (உபதேசரத்தினமாலை) “நண்ணாரவர்கள் திருநாடு” என்னும்படி அத:பதநமொன்றுமேகாணும் இவர்களுக்குப் பலித்துவிடுவதென்கிறார்.

வ்யா:- (பார்த்தவித்யாதி) (பார்த்தகுருவினளவில்) *எதிர்சூழல் புக்குத்திரிகிற ஸர்வேஶ்வரனுங்கூட ஆந்தனையும்பார்த்து “இனிநம்மாலாகாது” என்று கைவாங்கிக்கண்ணநீரோடே மீளும்படியான தன்னை  “பலமொன்றும் காணாமைகாணும் கருத்தர்” என்கிறபடியே, க்யாதிலாபபூஜைகளில் கண்வையாதே உஜ்ஜீவநஹேதுவாய்க்கொண்டு நிர்ஹேதுமாகக் கடாக்ஷித்தருளி  – அஜ்ஞாநதிமிராந்தஸ்ய ஜ்ஞாநாஞ்ஜந ஶலாகயா | சக்ஷுருந்மீலிதம்யேந” என்கிறபடியே அஜ்ஞாநாந்தகாரத்தையுபதேஶித்து இப்புடைகளிலே மஹோபகாரகனான ஆசார்யன் பக்கலிலே,

(பரிவின்றி) (உபதேசரத்தினமாலை)“தன் குருவின் தாளிணைகள் தன்னிலன்பொன்றில்லாதார்” என்கிறபடியே இம்மஹோபகாரத்துக்குத் தோற்று, “உனக்கென்செய்கேன்” என்று பரிவர், கிமிவஶ்ரீநிதே வித்யதேமே” என்று சொல்லும்படி ”இவ்விஷயத்திலே அகிஞ்சநனானநான் எத்தைச்செய்வது” என்று நெஞ்சாறல்பட்டுக் கிஞ்சித்காரத்திலேமீளும்படி பண்ணக்கடவதானப்ரேமமின்றிக்கேயிருப்பான்;பரிவாவது – பக்ஷபாதம் : இத்தால் ப்ரேமத்தை நினைக்கிறது.  பூயோநாதேமமது ஶததாவர்த்ததாமேஷபூய:” என்று அளவுடையார் ஆசார்யவிஷயத்திலே ஆஶாஸிக்கிறப்ரேமத்தைக்காணும் இவன் பண்ணாதொழிகிறது,

ப்ரேமமின்றியிலே யொழிந்தாலும் இவன் தன்னுடைய ஜ்ஞாநவிஶேஷத்தாலே உஜ்ஜீவிக்கக் குறையென்னென்ன (சீர்த்தவித்யாதி) (வி பு 6-5-87) – தத்ஜ்ஞாநம்”என்றும்,  “தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்றும் சொல்லுகிறபடியேரிய ஶ்ரிய:பதியானஸர்வேஸ்வரனை யுள்ளபடி யறிவிக்கப்பெறுகையாலே கனத்திருப்பதாய், (கீதை  )   – .நஹிஜ்ஞாநேநஸத்ருஶம்பவித்ரமிஹ்வித்யதே” என்னும்படி ஶ்லாக்யதரமாயிருந்துள்ள ஜ்ஞாநமெல்லாம் தன்னிடத்திலே கூடுபூரித்துக்கிடந்தாலும்: “ஆகலைன்னா -அர்த்தேநைவவிஶேஷோஹி நிராகாரதயாதியாம்” என்கிறபடியேகர்த்தவிஷயமாசு ஜ்ஞாநத்துக்கு – விஷயபேதா( )யத்தமான ஸ்வரூபபேதமுண்டாகையாலே “ஞானமெல்லாம் சேர்ந்தாலும்” என்கிறார். “சேர்ந்தாலும் “என்று யத்யா லிங்கிதமாகச் சொல்லுகையாலே தத்தத்ஶாஸ்த்ரஜந்யமானஜ்ஞாநமானது,

– ஆத்மநோநாத்மகல்பஸ்ய ஸ்வாத்மேஶாநஸ்யயோக்யதாம் | க்ருதவந்தம் நயோவேத்தி க்ருதக்நோநாஸ்திதத்ஸம:”என்னும்படி ஸ்வாசார்யவிஷயத்தில் க்ருதஜ்ஞதையின்றிக்கே க்ருதக்க்நனானவிவனுக்கு ஒருகாலும் உண்டாகாது. உண்டானாலும் கார்யகரமன் றென்றுமிடம் தோன்றுகிறது.

கார்யகரமாகாதபடி யெங்ஙனேயென்ன (கார்த்தவித்யாதி) அந்தஜ்ஞாநத்தைப் பெற்றும் அவன் அத: பதிக்கை யாலேயென்கிறார் (கார்த்தகடல்மண்ணின்மேல் துன்புற்றுமங்குமே) ஏவம்பூதனானவிவன் (வி பு 4-)-ஸாகரமேகலாம்” என்கிறபடியே நீர்ச்செறிவாலே கார்போலே கறுத்துத்தோற்றுகிற கடலாலே சூழப்பட்ட இந்த பூமியிலேதானே – அத்யுத்கடைபுண்யபாபைரிஹைவபலமஶ்நுதே” என்கிறபடியே (திருவாய் 8-5-11)“இங்கேகாணவிப்பிறப்பே மகிழ்வர்” என்கிறதுக்கு எதிர்த்தட்டாக ஐஹிகத்திலேதானே அனைவரும் நேராகக்காணும்படி, இனி இதுக்கவ்வருகில்லை யென்னும்படியான நிரவதிக து:க்கத்தையநுபவித்து (வி பு 4- ) -க்லேசாதுத்த்ராந்தி மாப்நோதியாம்யகிங்கரபீடித:” என்கிறபடியே உத்க்ரமணதசையில் யமதூதராலே இழுப்புண்டு ம்ருத்யுபரவஶனாய்நஶிக்கும்.

“கார்த்தசடல்” என்கிறவிடத்தில் “த” என்பது சாரியைச் சொல்லாய், கார்க்கடலென்றபடி. (துன்புற்று) இவனநுபவிக் கிற ஆத்யாத்மிகாதி து:க்கங்கள்தான், (திருவாய் 4-9-1)“எண்ணாராத் துயர்” என்னும்படி அஸங்க்க்யாதங்களா யிருக்கையாலே அவற்றைத் தனித்தனியே பரிகணித்துச்சொல்லில் பணிப்படுமென்று, ப்ரயோஜகத்தாலே சொல்லுகிறார் (மங்குமே) மங்குதல் – நஶித்தல், அவன் நஶிப்பனோநஶியானோ வென்று பயம் வேண்டா;நஶித்து விடுவனென்கிறார் .

– இவனிப்படி ஐஹிகத்தில் து:த்தானேயாகிலும் ஆமுஷ்மிகத்தில் ஸுகித்திருப்பனோவென்ன; (தேங்காமலித்யாதி) ஓரிடத் திலும் இவன்ஸுகித்திரானென்கிறார் (தேங்காமல் நண்ணுமேகீழாம்நரகு) இங்கன் மங்கினவிவன் யமலோகத்திலே சென்றுயாதநாஶரீரத்தைப்பரிக்ரஹித்து (திருவாய் 3-10-7) “இன்பமில்வெந்நரகாகி” என்கிறபடியே ஸுகமிஶ்ரமின்றிக்கே நிஷ்க்ருஷ்டது:க்கமேயானநரகத்தைஸர்வகாலமும் இடைவிடாமல் அநுபவித்துக் கொண்டு போரக்கடவன். அன்றிக்கே, துன்புற்றுமங்கினவிவனுக்குக்கரையேற்றமுண்டோவென்ன, (தேங்காமலித்யாதி) ஒருகாலும் ஸம்ஸாரமாகிற பெருங்கடலில் நின்று கரையேற்றமில்லை யென்கிறார்.

(தேங்காமல்நண்ணுமேகீழாம்நரகு)இவனிப்புடைகளிலே துன்புற்று மங்கினவநந்தரம் யமலோகத்திலே சென்று, யாதநாஶரீரத்தைப்பரிக்ரஹித்து நரகாநுபவம் பண்ணுவது,

(சாந்தோ) – அதை தமேவாத்வாநம் புநர்நிவர்த்தந்தே, அதைதமாகாஶம், ஆகஶாத்வாயும், வாயுர்பூத்வாதூமோபவதி, தூமோபூத்வா அப்ரம்பவதி, அப்ரம்பூத்வாமே கோபவதி, மேகோபூத்வாப்ரவர்ஷதி” இத்யாதியாலே பஞ்சாக்நிவித்யையிற் சொல்லுகிறபடியே இச்சரீரத்தைப்பொகட்டு ஸூக்ஷ்மஶரீரத்தோடே நிராலம்பநமான வாகாஶத்திலே ஸஞ்சரிப்பது, ஆதித்யன் தன் கிரணங்களாலே உபாத்தமான ஹிமத்தாலே ஆகாஶத்திலே மங்கிக்கிடக்கிற தன்னை மேகத்திலே புகுரவிட, அது தன்னில் புக்கிருப்பது, அந்தஜலம் ஸஸ்யத்துக்கு ஆதாரமாய்ப்புகுமளவிலே தத்த்வாராஸஸ்யத்திலேபுகுவது.அந்தஸஸ்யம் பக்வமாய், அந்தமாய்ப்பரிணமிக்குமளவில் தத்த்வாரா புருஷஶரீரத்திலே புகுவது;அந்த அந்நமானது ஶுக்லமாய்ப் பரிணமிக்குமளவிலே ஶுக்லத்வாரா ஸ்த்ரீஶரீரத்திலே ப்ரவேஶிப்பது, பின்புகர்ப்பமாய்ப் பரிணமிப்பது.அங்கே கிடக்கும்போது மாத்ருபோஜநாந்தர்ப்பூதங்களான தீக்ஷ்ணோஷ்ணத்ரவ்யங்களாலே துடரலிட்டஈயம்போலே துடிப்பது.இந்தக்லேஶத்தோடே கர்ப்பதும்பமாகிற பையிலேகட்டுண்டு அவயவங்களை நீட்டவும் மாட்டாதேகிடப்பது, க்லேஶத்தோடே மாத்ருகர்ப்பத்தில் நின்றும் நிஷ்க்ரமிப்பது.

பால்யதஶையில் அஶுசிப்ரஸ்தரங்களிலே வஸிப்பது, ஸ்வாதந்த்ர் யேண ஒருப்ரவ்ருத்தியையும் பண்ணக்ஷமனன்றிக்கே யொழிவது,

பின்னையுமிவையோடே காலத்தைப்போக்குவது, யௌவநத்தில் நரகஹேதுவான விஷயாந்தரங்களையே விரும்புவது, காலத்ரயத்திலும் கரணத்ரயத்தாலும் துஷ்கர்மங்களையே ஆசரிப்பது, ஆஶாத்ரயத்தாலே அலமாவது, தாபத்ரயத்தாலே தப்தனாவது, ஈஷணாத்ரயத்தாலே ஈடுபடுவது. அபராதத்ரயத்தை ஆர்ஜிப்பது;ஜரையிலே அஶக்தனாய்க்கொண்டு மிகவும் தளருவது, நினைவின்றிக்கே மரணத்தைப்ராபிப்பது;பின்னை உத்க்ரமணக்லேஶத்தையநுபவிப்பது, புநஶ்ச, ம்ருத்யுபரவஶனாய்க்கொண்டு,  – மரணம் ஜநநம் ஜந்மமரணாயைவ கேவலம்” என்கிறபடியே இப்படி யிடைவிடாதே நடந்து செல்லுகிற ஸம்ஸாரமாகிற *விடியா வெந்நரகத்திலேயழுந்தி ஒருநாளும் கரையேற்றமின்றிக்கே நித்யஸம்ஸாரியாய்ப் போரக்கடவன்.

(கீழாம்நரகு) (ஞானஸாரம்)“நீள் நிரயம்” என்கிறபடியே ஒருகாலவிஶேஷத்திலே கரையேற்றமுடைத்தான யமன் தண்டலாதிற நரகம் போலன்றிக்கே, ஒருகாலவிஶேஷத்திலும் கரையேற்றமில்லாதபடி நெடுகச்செல்லாநிற்கிற நரகமிறே இஸ்ஸம்ஸாரம் (நண்ணுமே கீழாம் நரகு) ஏவம்பூதமான விந்நரகத்தைக் கடக்கப் பெறாதேயாவதாத்மபாவியாக, அழுந்தியிருப்பன். (ங)

மூ: – தன்னையிறையைத் தடையைச்சரணெறியை

மன்னுபெருவாழ்வையொருமந்திரத்தி-னின்னருளால்

அஞ்சிலுங்கேடோட வளித்தவன்பாலன்பிலார்

நஞ்சிலும் கேடென்றிருப்பன் நான்.        (௪)

அவ:-நாலாம்பாட்டு, பின்னையும் ஸிம்ஹாவலோகநந்யாயேந இரண்டாம்பாட்டைக் கடாக்ஷித்தருளி, அதிலேநிர்தேஶித்த அஞ்சுபொருள் தானின்னதென்றும், அதுதான் இவ்விடத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டதென்று மருளிச்செய்யா நின்றுகொண்டு, ஏவம்பூதமான இவ்வர்த்தபஞ்சகத்தைத் தன்னுடைய பரமக்ருபையாலே உபதேஶித்த ஆசார்யன் பக்கலிலே ப்ரேம மற்றிருக்குமவன் விஷத்திலுங்காட்டில் அதிக்ரூரனென்கிறார்.

வ்யா:-(தன்னையித்யாதி) ஆதரத்தில் பெளந:புந்யம் அலங்க்ருதியாயிருக்கும் போலேகாணும். “தன்னையிறையை” இத்யாதிகளில் த்விதீயையை ப்ரதமையாக்கி, “திருமந்த்ரப்ரதி பாத்யமாயிருந்துள்ள ஸ்வஸ்வரூபாதிகளாகிற ஐந்திலும் கேடோட வளித்தவன்” என்றந்வயிக்கவுமாம். அன்றிக்கே, “மந்திரத்தினைந்திலும் வைத்துக்கொண்டு, தன்னையிறையைத் தடையைச் சரணெறியை மன்னுபெருவாழ்வை – கேடோடவளித்தவன்” என்றந்வயிக்கவுமாம்.

(யஜு-உ-அஷ்ட) -யஸ்யாஸ்மி” இத்யாதிகளையுட்கொண்டு பரஸ்வரூபம் முன்னாக அர்த்தபஞ்சகத்தை நிர்தேஶித்தார் முதற்பாட்டில்;பிள்ளையருளிச்செய்த அர்த்தபஞ்சக ரஹஸ்யத் தையுட்கொண்டு ஸ்வஸ்வருபம் முன்னாக அர்த்தபஞ்சகத்தை நிர்த்தேஶிக்கிறார். இதில்,

(தன்னை) திருமந்த்ரத்தில் ப்ரதமபதமான ப்ரணவத்தில் பகவச்சேஷத்வாஶ்ரயமாக மகாரத்தாலே ப்ரதிபாதிக்கப்படுகிறதானும், (இறையை) தனக்கு வகுத்தஶேஷியாக ப்ரதிபாதிக்கப்படுகிற அகாரவாச்யனான வெம்பெருமானும், (தடை யை) தானவனைப்பற்றுமிடத்தில் இடைச்சுவராக த்விதீயபதமான நமஸ்ஸில் ஷஷ்ட்யந்தமகாரோக்தமான விரோதியும். (சரணெறியை) அப்படியே தான் அவனைப்பெறுகைக்கு நிரபாயோபாயமாக அகண்ட  நம: பதோக்தமானஶரணாகதியும் (மன்னுபெருவாழ்வை) இஶ்ஶரணாகதிலப்யமான ஸவிபக்திகநாராயணபதோக்தமான கைங்கர்யமாகிற நித்யபுருஷார்த்தமும்,

(ஒருமந்திரத்தின்) இப்போதுபடும் துறை இது ஒன்றுமே போலேகாணும், மற்றைவ்யாபகத்வயத்துக்கும் இப்பேறு பாடில்லையிறே. (ஒரு)இவ்வர்த்தவிசேஷங்களை பாதிபாதிக்கக்கடவதாயும், ப்ரபந்நனாகிற ப்ரமாதாவுக்கு அர்ச்சாவதாரமாகிற ப்ரமே யத்தை யறிவிக்கும் ப்ரமாணமாயும், ஸர்வோபாய ஸூந்யர்க்கு ஸர்வஸ்வம்மாயும், அந்தனுக்கும் அஶக்தனுக்கும் வைத்ததண்ணீர்ப்பந்தலாயும், ஸம்ஸாரவிதஷ்டனுக்கு ஸித்தௌஷதமாயும், அதநனுக்குநிதியாயும், எம்பெருமானைப்பற்று மதிகாரிக்கு மங்களஸூத்ரமாயும், ஒருபாகவதநியமநத்தை வெறுத்தல் மறுத்தல் செய்யாதே அதுபோக்யமென்றிருக்கையாகிற பலஜ்ஞாநத்தை யுண்டாக்கக்கடவதாயும், தனக்குப்ராப்தி அணித்தாயிருக்குமளவிலும் பகவத்விஷயத்தி லபிநிவிஷ்டரான. ஸ்ரீவைஷ்ணவர்களைக்கண்டு தத்கிஞ்சித்காரத்துக் குறுப்பாக இங்குத்தைவாஸத்திலே ஒருப்படுகையாகிற பலயாதாத்ம்யஜ்ஞாநத்தை விளைக்கக்கடவதாயும், “ஜ்ஞாநப்ரதன் ஆசார்யன்” என்னும் நினைவை ஜநிப்பிக்குமதாயும், ஜ்ஞாநவர்த்த( )கர் ஸ்ரீவைஷ்ணவர்களென்னும் ப்ரதிபத்தியைப் பிறப்பிக்குமதாயும், ஜ்ஞாநவிஷயம் எம்பெருமானென்னு முணர்வை யுண்டாக்குமதாயும், ஜ்ஞாநபலம். பகவதநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்ய மென்னும் தெளிவைக்கொடுக்குமதாயும், அக்கைங்கர்பத்துக்குச்சரமாவதி பாகவதகைங்கர்பமென்னும் ப்ரதிபத்தியைப் பிறப்பிக்குமதாயும் போருகையாலே (நாரஸிம்ஹபு-18) ”                    – நமந்த்ரோஷ்டாக்ஷராத்பர:”என்றும், (நாரதீய-1-41)“ஏகைச, 81 –நாஸ்திசாஷ்டாக்ஷராதபர:“- என்றும் சொல்லுகிறபடியே வாசகங்களில் தனக்கவ்வருகாயிருப்ப தொன்றில்லாதபடி, தனக்குள் நின்றவஸ்துவைப்போலே அத்விதீயமாயாய்த்துப் பெரிய திருமந்த்ரந்தானிருப்பது,

(ஒருமந்திரத்தின்)  – மந்தாரம் த்ராயத இதிமந்த்ர:” என்கிறபடியே தன்னை யநுஸந்திப்பாராரேனுமாகவுமாம், அவர்களுடைய இஷ்டப்ராபண பர்யந்தமாயும், அநிஷ்ட நிவாரண பர்யந்தமாயுமிருந்துள்ள ரக்ஷணத்தைப் பண்ணுமதாகையாலே இத்தை மந்த்ரமென்கிறது.

இப்படி இவ்வர்த்தபஞ்சகத்தை உபதேசித்தது இத்தலையிலேதேனுமொரு நன்மைகண்டோவென்ன; (இன்னருளால்) அங்ஙனன்றிக்கே நிர்ஹேதுகமாக வென்கிறார். (இன்னருளால்) (முதல் திருவந்-15)“பல்லாருளும்பழுது” என்னும்படியான் ஈஶ்வரனுடைய அருளிலும் அதிஶயிதமாயிறே இவ்வருள்தானிருப்பது;அது – ஸ்வதந்த்ரமாயும், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயுமிருக்கும்;இவனுடையவருள் – பரதந்த்ரமாயும் மோக்ஷைகஹேதுபூதமாயுமிருக்கும். (இன்னருளால்) (கண்ணினுண்-8) “அருள் கண்டீரிவ்வுலகினில்மிக்கதே” என்கிறபடியே இத்தலையிலேதேனு மொருநன்மை யபேக்ஷியாத பரமக்ருபையாலே.

(அஞ்சிலும் கேடோடவளித்தவன்) இம்மந்த்ரப்ரதிபாத்யமான அர்த்தபஞ்சகத்திலும் அஜ்ஞாநஸம்ஶய விபர்யயங்க ளறும்படி ஜ்ஞாநோபதேசம்பண்ணியருளின ஸதாசார்யன்பக்கலிலே.

அஞ்சிலும்கேடோட வளிக்கையாவது. மகாரவாச்யனான சேதநஸ்வரூபம் ப்ரக்ருதே:பரமாய், ஜ்ஞாநாநந்தலக்ஷணமாய், ஜ்ஞாநகுணகமாய், நித்யமாய், நிர்விகாரமாய், அணுவாய், ஏகரூபமாய், பகவதநந்யார்ஹஶேஷமாயிருக்குமென்றும்,

அகாரவாச்யனான பரஸ்வரூபம் – லக்ஷ்மீ ஸநாதமாய், ஸமஸ்த கல்யாணகுணாத்மகமாய், ஸ்வேதரஸமஸ்தவஸ்துவிலக்ஷணமாய், தரிவிதபரிச்சேத ரஹிதமாய், உபயவிபூதி நிர்வாஹகமாய், ஸர்வாபாஶ்ரயமாய், ஸர்வப்ரகாரத்தினாலும் ரக்ஷக மாய் ஶேஷியாயிருக்குமென்றும்,

ஷஷ்ட்ட்யந்த மகாரோக்தமான விரோதிஸ்வருபம் – தேஹாத்மாபிமாநரூபமாய், தேவதாந்தரபரத்வபுத்திவிலக்ஷணமாய், ப்ராபகாந்தரோபாயத்வ ப்ரதிபத்த்யாத்மகமாய், கைங்கர்ய ஸ்வார்த்ததாபுத்திரூபமாய், ப்ராரப்த ஶரீரஸம்பந்தாத்மகமாய், ஸம்ஸாரவர்த்தகமாய், அஹங்கார மமகாரரூபமாய், அத்யந்தஹேயமாய், த்யாஜ்யமாயிருக்குமென்றும்,

அகண்டநம:பதோக்தமான உபாயஸ்வருபம் – ஸித்தமாய் பரமசேதநமாய், ஸர்வஜ்ஞமாய், ஸர்வஶக்தியாய், ஸஹாயாந்தர நிரபேக்ஷமாய், ஸர்வபலப்ரதமாய், ப்ராப்தமாய், வ்யபிசாரவிளம்பவிதுரமாய், ஸ்வீகாரவிஷய பூதமாயிருக்குமென்றும்,

ஸவிபக்திகமான நாராயணபதோக்தமான புருஷார்த்த ஸ்வரூபம் – அநுபவஜநித ப்ரீதிகாரிதமாய், ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமாய், பரமப்ராப்யமாய், பரார்த்ததைக வேஷமாய், ஸ்வரூபாநுரூபமாய், ஸ்வார்த்ததாகந்தரஹிதமாய், நிரதிஶயபோக்யமாய், யாவதாத்மபாவியா யிருக்குமென்றும் வெளியிடாநின்றுகொண்டு,

தேஹாத்மப்ரமம், ஸ்வதந்த்ராத்மப்ரமம், அந்யஶேஷத்வப்ரமம், பகவத்விஷயத்தி லநீஶ்வரத்வப்ரமம், தேவதாந்தரபரத்வப்ரமம், தத்ஸமத்வப்ரமம், அஹங்காரமமகாராத்யு பாதேயத்வப்ரமம், ப்ராரப்த()ஶரீரஸ்ய அநிவர்த்த்யத்வப்ரமம், ததநு பந்திஷு பந்துத்வப்ரமம், ஸ்வீகாரோபாயத்வப்ரமம், கைங்கர்ய ஸ்வார்த்தத்வப்ரமம், தத்ஸ்வீகர்த்த்ருத்வப்ரமம் ப்ரப்ருதிகமான அஜ்ஞாசா உந்யதாஜ்ஞாநாதிகளெல்லாம் வாஸநையோ கேபோம்படி க்ருபைபண்ணுகை,

(அளித்தவன் பாலன்பிலார்) இப்படி உபதேஶித்த ஸ்வாசார்யன் விஷயத்திலே. (ஶ்வேதா-6-23) -யஸ்யதேவே பராபக்திர்யதா தேவேததாகுரௌ” என்று அவஶ்யகர்த்தவ்யதயா விதிக்கப்பட்ட ப்ரேமமின்றிக்கே யிருக்கு மவர்கள்.

இப்படி யிருந்துள்ள விவர்களை நீர் நினைத்திருப்ப தெங்ஙனேயென்ன (நஞ்சிலும் கேடென்றிருப்பன் நான்) நஞ்சுகேடு;இவர்கள் அதிலும் கேடு, ஹேயமாய் ஈஶ்வரமான ஶரீரத்தை ஸ்வபக்ஷணத்தாலே முடிக்கவற்றான விஷத்திலுங்காட்டில், உபாதேயமாய் நித்யமான ஆத்மவஸ்துவை முடித்துக்கொள்ளுமவர்களாகையாலே , நாபக்ராமதிஸம்ஸாராத்ஸகலுப்ரஹ்மஹாபவேத்”என்று மஹாபாதகியாகச்சொல்லப்படுகிற நித்யஸம்ஸாரியோபாதி அதிக்ரூரரென்று அறுதியிட்டாய்த்து நானிருப்பதென்கிறார்.

“இருப்பன்நான்” என்று ஸ்வப்ரதிபத்தி விசேஷத்தை யருளிச்செய்கிறார் (இருப்பன்) இவ்விருப்பில் எனக்கொரு சலநமில்லை. ‘இதுவேயாய்த்து யாத்ரை. (நான்) பிள்ளை லோகாசார்யருடைய விஷயீகாரத்தைப் பெற்றவெனக்கு இவ்விருப்பு வந்தேறியாயிராதிறே.

ஆக, இம்மூன்று பாட்டாலும், அதிகாரி நிஷ்டாக்ரம ப்ரகரணத்தில், ”அஸஹ்யாபசாரமாவது – நிர்நிபந்தநமாக பகவத்பாகவத விஷயமென்றால் “அஸஹமாநனாயிருக்கையும், ஆசார்யாபசாரமும்” “அவையுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமேபோரும்;இவையொன்றுக்கொன்று க்ரூரங்களு மாய்” இத்யாதிகளிற் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை வெளி யிட்டருளினாராயிற்று.

மூ:- என்பக்கலோதினாரின்னா ரெனுமியல்வும்

என்பக்கல்நன்மையெனுமியல்வும்-மன்பக்கல்

சேவிப்பார்க்கன் புடையோர்சந்மநிரூபணமும்

ஆவிக்குநேரேயழுக்கு                          (௫)

அவ:– அஞ்சாம்பாட்டு, இப்படி உபசேஶ்யனான சிஷ்யனுக்கு ஸ்வாசார்யவிஷயத்தில் ப்ரேமமற்றிருக்கைஸ்வரூபஹாநியானவோபாதி உபதேஷ்டாவான ஆசார்யனுக்குத் தன்னிடத்தில் தன்னை மாறாடிநினைக்கையாகிற ஆசார்யத்வப்ரதிபத்தியும், ஶிஷ்யனிடத்திலே ஶிஷ்யனை மாறாடி நினைக்கையாகிற ஸ்வஶிஷ்யத்வப்ரதிபத்தியும், அப்படியே ஸஹஜதாஸ்யத்தை யுடையராயிருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலிலே ஜந்மநிரூபணமும் ஸ்வஸ்வரூப ஹாநியாய் விடுமென்கிறார்.

வ்யா:-(என்பக்கலித்யாதி)(என்பக்கலோதினாரின்னா ரெனுமியல்வும்) சிலர் தன்பக்கலிலே ஜ்ஞாநோபஜீவநம் பண்ணுமளவில், “அறிவிலேன்” என்றும், – அஜ்ஞாநாமக்ரகண்யம்மாம்” என்றும் சொல்லுகிறபடியே தன்னை அஜ்ஞரில் தலைவனாக நினைத்து, அவர்களும் தானும், – போதயந்த:” பரஸ்பரம் பண்ணினார்களாகப்ரதிபத்திபண்ணியிராதே, “என்னிடத்தில் இன்னார் இன்னார் இவ்வர்த்தவிஶேஷங்களை அதிக ரித்துப் போந்தார்களாகையாலே அவர்கள் எனக்கு ஶிஷ்யராயிருப்பார்கள்” என்று நினைத்திருக்கையிறே இந்த துஸ்ஸ்வபாவம்,

அவ்வளவேயோ? (என்பக்கல்நன்மையென்னுமியல்வும்) அப்படியேதான் சிலர்க்கு ஜ்ஞாநோபதேபம் பண்ணுமளவில்(திருவாய் 7-9-2) “என்முன் சொல்லும் மூவுருவா”என்றும், – ஶ்ரோத்ருஷுப்ரதம: – ஸ்வயம்” என்றும் சொல்லுகிறபடியே ஸ்வாசார்யனை உபதேஷ்டாவாகவும், ஶ்ரோதாக்களில் தன்னை முந்தினஶ்ரோதாவாகவும், ஸ்வோபதேஸ்யரைகளை தனக்கு ஸப்ரஹ்மசாரிகளாகவும் ப்ரதிபத்திபண்ணியிராதே தன்னை இவர்களுக்கு உபதேஷ்டாவாகவும், அவர்கள் தனக்கு உதபசேஶ்யராகவும் நினைத்து” நான் இன்னார்க்கு இன்னபடி அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ணிக்கொண்டு போந்தேன்;ஆகையாலே, என்னிடத்தில் ஆசார்யத்வமாகிற நன்மையிராநின்றது:” என்று நினைத்திருக்கையாகிற இந்த துஸ்ஸ்வபாவமும். இயல்வு – ஸ்வபாவம்.

இந்த நினைவைவையுடையவன் அஹங்காரதூஷிகனாகையாலே, * – டாமபிகம்க்ரோதிநம் மூர்க்கம் ததாஹங்காரதூஷிதம் | த்யக்ததர்மஞ்ச விப்ரேந்த்ர குரும்ப்ராஜ்ஞோ ந கல்பயேத்” என்கிற வசநத்தின்படியே அவனை ஆசார்யனாக ப்ரதிபத்தி பண்ணவொண்ணாதிறே,

அவ்வளவேயோ? (மன்பக்கல்சேவிப்பார்க் கன்புடையோர் சந்மநிரூபணமும்) அப்படியே, (தை நா-11) -பதிம் விஶ்வஸ்ய” என்றும், (பார ஆது- ) – ஜகத்பதிம்” என்றும், (திருவாய் 2-7-2) “நாரணன் முழுவேமுலகுக்கும் நாதன்” என்றும், (திருப்பாவை 28)”இறைவா” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வஸ்வாமியான எம்பெருமான் பக்கலிலே (லைங்க11-14) – ஸ்நேஹ பூர்வமநுத்யாசம் பக்திரித்யபி தீயதே | பஜ இத்யேஷ தாதுர்வைஸேவாயாம் பரிகீர்த்தித:“என்னும்படியாக ஸ்நேஹபூர்வகமாக நித்யஸேவை பண்ணுமவர்களுக்கு;(திருவாய்3-7-4) “நடையாவுடைத் திருநாரணன் தொண்டர் தொண்டர்”என்கிறபடியே பரமஸ்நேஹிகனாய்க்கொண்டு அஶேஷ ஶேஷவ்ருத்திகளிலும் அந்விதராய் ஸஹஜதாஸ்யத்தை யுடையராயிருந்துள்ள ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலே, – வைஷ்ணவோத்பத்தி சிந்தநம் | மாத்ருயோநி பரீக்ஷாயாஸ்துல்ய மாஹுர்மநீஷிண:” என்று மாத்ருயோநி பரீக்ஷையோடொக்க ஶாஸ்த்ரங்களால் சொல்லப்படுகிற ஜந்மநிரூபணமும்,

ஜந்மதிரூபணமாவது – ஜாதிநிரூபணம். இது – குற்றத்துக்கும் இழவுக்கு முபலக்ஷணம், – பகவத்பக்தி தீபாக்நிதக்த துர்ஜாதி கில்பிஷ:” இத்யாதிகளாலே தப:ப்ரபாவத்தாலே விஶ்வாமித்ரனுக்கு கூத்ரியத்வம் நிவ்ருத்தமானாப்போலே பகவத்ப்ரஸாதத்தாலே துர்ஜாதி நிவ்ருத்தமாமென்று சொல்லுகையாலே அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம் – அதஸ்மிம்ஸ் தத்புத்தியாயிறே யிருப்பது,

(அன்புடையோர்) “நிதியுடையோர்”, என்னுமாபோலே. இதுக்குமேற்பட்டிருப்பதொரு ஸம்பத்தில்லையிறே. (அன்புடையோர் சந்மநிரூபணமுமாவிக்குநேரேயழுக்கு) மற்றையாரிடத்தில் ஜந்மநிரூபணம் யதாவஸ்த்தித வஸ்துவிஷயமாகையாலே அழுக்கன்றுபோலே காணும் ,

(சன்மநிரூபணமுமாவிக்கு நேரே யழுக்கு) கீழ்ச்சொன்னவிரண்டும், தேஜோத்ரவ்யமான ஆத்ம வஸ்துக்களுக்கு பாகவதாபராரத்தில் முற்படப்பரிகணிதமான ஜந்ம நிரூபணமானவிது நேரேயழுக்கு. அன்றியே ஸ்வாசார்ய விஷயத்திலன் பிலாமையும், (வி பு- ) – ஆத்மா ஜ்ஞாநமயோமல: என்கிற ஆத்மவஸ்துக்களுக்கு இம்மூன்றும் நேரே அழுக்கென்னவுமாம்;அங்ஙனுமன்றிக்கே, அஞ்சுபொருளுமளித்தவன் பாலன்பிலாமை நித்யமான ஆத்மவஸ்துவுக்கு நேர்கொடுநேர் நாஶகமானாப்போலே, என்பக்கலோதினா ரின்னாரெனுமியல்வு முதலான விம்மூன்றும் ஆத்மாவுக்கு நேர்கொடுநேர் நாஶக மென்னவுமாம். (நேரேயழுக்கு) அஹங்காரார்த்த காமாதிகளைப்போலே ஸத்வாரகமாகவன்றியே அத்வாரகமாகவே அழுக்கு. “க்ரூரநிஷித்தம்”என்னும்படியீறே இவற்றின் கொடுமையிருப்பது.

ஆக, இப்பாட்டில், பூர்வார்த்தத்தாலே, ஆசார்யாநுவர்த்நப்ரகரணத்தில், “தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யனென்று நினைக்கை.” இத்யாதியாலும், மநஸ்ஸுக்குத் தீமையாவது – ஸ்வகுணத்தையும் பகவத்பாகவத தோஷத்தையும் நினைக்கை” இத்யாதியாலும், “பாகவதாபசாரந்தான் அநேகவிதம். அதிலொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிருபணம்.” இத்யா தியாலே கீழ்ப்ரகரணத்தில் சொன்ன அர்த்தவிஶேஷங்களை அருளிச்செய்தாராயிற்று.

மூ:-அழுக்கென்றிவை யறிந்தோம் பொனரங்கா

ஒழித்தருளாயுள்ளில்வினையை — பழிப்பிலா

வென்னாரியர்க்காக வெம்பெருமானார்க்காக

உன்னாரருட்காகவுற்று  (சு)

அவ:-ஆறாம்பாட்டு, இப்படி ஆத்மநாஶத்தை விளைக்கக் கடவ இந்நாலுமே யாத்ரையாயிருக்கிற இஸ்ஸம்வாரிகள் நடுவேவர்த்திக்கிற நீர் இங்ஙன் உபதேஶிக்கும்படி இவற்றில் அகப்படாதே தப்பியிருந்தீரே’ என்று பெரியபெருமாள் உகந்தருளக்கண்டு, இவைநேரே யழுக்கென்றறிந்தேனேயாகிலும் இப்படி இவ்வறிவை அடி.மண்டியோடே கழிக்கவற்றானஎன் ஆந்தர தோஷத்தை எனக்கு அஜ்ஞாதஜ்ஞாபகரான பிள்ளைலோகாசார் யரையும் தேவர்க்கு அபிமதரான எம்பெருமானாரையும் தேவருடைய பரமக்ருபையையும் கடாக்ஷித்துப் போக்கியருள வேணுமென்று விண்ணப்பம் செய்கிறார்.

வ்யா:- (அழுக்கென்றித்யாதி) ( இவை – அழுக்கென்றறிந்தேன்) கீழ்ச்சொன்னவை யடங்கலும் தேஜோத்ரவ்யமான ஆத்மவஸ்துவுக்கு நேரே அவத்யகரமென்னுமிடத்தை -நாராயணோபிவிக்ருதிம் யாதிகுரோ:ப்ரச்யுதஸ்ய துர்ப்புத்தே:” இத்யாதிகளாலும், (ஞானஸாரம்) “என்று மனைத்துயிர்க்கு மீரஞ்செய் நாரணனுமன்றும் தன்னாரியன்பாலன்பொழியில்” இத்யாதியான அருளாளப்பெருமாளெம்பெருமானார் திவ்யஸூக்திகளாலும், (ஶ்ரீவசநபூ)”தான் ஹிதோபதேசம் பண்ணும்போது தன்னையும் ஶிஷ்யனையும் மாறாடி நினைக்கை க்ரூரநிஷித்தம்,பாகவதாபசாரந்தான் அநேகவிதம், அதிலேயொன்று அவர்கள்பக்கல் ஜந்மதிரூபணம்,” இத்யாதியான பின்ளைலோகாசார்யருடைய திவ்யஸூக்திகளாலும், – வைஷ்ணவோத்பத்தி சிந்தநம் | மாத்ருயோநிபரீக்ஷாயாஸ்துல்யம்” இத்யாதி வசநங்களாலும் ஸம்ஶயவிபர்யயங்களறும்படி விஶதமாகவும்பரோபதேஶக்ஷமமாகவு மறிந்தேன்.

இவற்றின் தோஷப்பரப்பைத் தனித்தனியே யெடுத்துச்சொல்லப்புக்கால் பணிப்படுமென்று ப்யோஜகத்திலே இழிகிறார் (அம்பொனரங்கா) நான் இவ்வறிவைப் பெறும்படி, அழகிய தாயும் மநோஜ்ஞமாயும் பாவநமாயுமிருந்துள்ள திருவரங்கப் பெருநகரிலே ஸ்தாவரப்ரதிஷ்டையாகவிருந்து க்ருஷிபண்ணினவர் தேவரீரன்றோ. (அம்பொனரங்கா) நான் இவ்வறிவைப் பெற்றபின்பிறே (திருவாய் 1-1-1)”துயரறு சுடரடி” என்னும்படி தேவரீர்க்கு இவ்வழகும் இம்மநோஜ்ஞதையும், நிறம்பெற்றது. இவர்தான் திருவநந்தபுரத்திலே யெழுந்தருளியிருந்து இப்ப்ரபந்தத்தை யிட்டருளினாரேயாகிலும் உருவு வெளிப்பாட்டின் மிகுதியாலே “அரங்கா”என்று ஸம்போதிக்கும்படி பெரியபெருமாள் இவர்க்கு முன்னிலையாய்த் தோற்றுகிறார் போலேகாணும்.

(அம்பொனரங்கா ஒழித்தருளாய்உள்ளில்வினையை) தேவரீருடைய பாவநத்வத்துக்கும் தேவரீரைப்பற்றின வென்னுடைய அஶுத்திக்கும் -அக்நிஸிஞ்சேத்போலே என்ன சேர்த்தியுண்டு;(பெரியதிரு 11-3-5)“தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்கவருள் செய்வர்” என்று தத்வதர்ஶிகள் சொன்னபாசுரம் மதே கவர்ஜமா யிருப்பதொன்றோ? (நா திரு 11-10) “செம்மையுடைய திருவரங்கர் தாம்பணித்த மெய்ம்மைப்பெருவார்த்தை” என்னும்படி கையுமுழவுகோலும் பிடித்த சிறுவாய்க்கயிறுமான ஸாரத்யவேஷத்தோடே திருத்தேர்க்தட்டிலே யெழுந்தருளியிருந்து ஸ்வாஶ்ரிதனான வர்ஜூரனை வ்யாஜீகரித்து (கீதை 18-66)” -ஸர்வபாபேப்யோமோக்ஷயிஷ்யாமி” என்று தேவர் சொன்னவார்த்தை அர்த்த ஸ்பர்ஶியா யிருப்பதொன்றன்றோ?(ரா கி 7-22)  – அந்ருதம் நோக்தபூர்வம் மே” என்றும் (பார) – நமேமோகம் வசோபவேத்” என்றும் தேவர் தாமேயருளிச் செய்கையாலே தேவரீர்க்கு அந்ருதத்தில் வ்யுத்பத்தியில்லை.

(ஒழித்தருளாய்) இத்தலை அர்த்தியாதிருக்க, பூர்வஜராய்க்கொண்டு செய்யக்கடவ தேவரீர்க்கு இத்தலை அர்த்தித்தால் ஆறியிருக்கப்போமோ?

(அரங்காவொழித்தருளாய்) பயிர்த்தலை யில் குடியிருப்பாரோபாதி இத்தலையைக் * காக்ககுமியல்வனராய், அவதாரம்போலேதீர்த்தம் ப்ரஸாதிக்கையன்றிக்கே நித்யஸந்நிதி பண்ணிக்கொண்டுபோருகிற தேவரீருக்கு இது தக்கோர்மையோ (தகாததொன்றோ)(அருளாய்) நிர்க்க்ருணர் செய்யுமது அருளாளியான தேவரீர்க்குப் போருமோ,

(உள்ளில்வினையை) உண்பார்மிடற்றைப் பிடிக்குமவளைப் போலே(திருவாய் 1-1-2)“மனன கமலம்” என்னும்படிஜ்ஞாநப்ரஸரணத்வாரத்தைபற்றியிறே இவ்வினைதானிருப்பது, (உள்ளில்வினையை) (திருமாலை 34) “உள்ளத்தேயுறையும்மாலை” என்கிறபடியே உள்ளேபதிகிடந்து ஸத்தையை நோக்குகிற தேவரீர்க்கு உள்ளிலுண்டான விரோதியைப்போக்குகை பெரும்பணியோ;

(ஒழித்தருளாயுள்ளில்வினையை) பாசியானது தெளிந்த ஜலத்தை யெங்குமொக்க வ்யாபரித்தாப்போலே இப்படிப்புக் குத்திரோதாயகமாய்க்கொண்டு உள்ளே பிணையுண்டிருக்கிற பாபத்தைப் போக்கியருளீர்.

நீர் ஒழித்தருளாய்” என்று இங்ஙன் உறைப்புத்தோற்றச் சொல்லுகிறதென் கொண்டென்ன (பழிப்பிலா வித்யாதி) தேவரீர்க்கு அபிமதராயிருப்பாரையும் தேவரீருடைய தகவையும் அண்டைகொண்டுகாணும் நான் இவ்வார்த்தை சொல்லுகிறதென்கிறார். (பழிப்பிலாவென்னாரியர்க்காக) கீழ்ச்சொன்ன குற்றங்களொன்றுமின்றிக்கேயிருந்து வைத்து ஸ்வோபதேஶமுகத்தாலே, இவை யடங்கலுமாகாதென்னு மறிவிலனானவெனக்கறிவித்த பிள்ளைலோகாசார்யருக்காகவும், இப்பழிப்புத்தான் சிலநாளுண்டாய்க் கழிந்ததில்லாமையாலே ததத்யந்தா பாவம்தோற்ற “பழிப்பிலா” என்கிறார்.

(என்னாரியன்) – குரும்வாயோபிமந்யதே” என்கிற ஸ்வீகாரம் போன்ற ஸ்வீகாரமன்று, அவ்வளவேயோ, (எம்பெருமானாருக்காக) அதுக்குமேலே அவர்க்குப் பரமஶேஷியாய் தேவரீர்க்கு அத்யந்தாபிமதராய் ஆசார்யபதத்துக்கு எல்லைநிலமாய், சரமார்த்தத்தை அனைவர்க்கும் தூளிதாநம் பண்ணியருளின எம்பெருமானார்க்காகவும்,

அவ்வளவேயோ? (உன்னாரருட்காக) அதுக்குமேலே தேவரீர்க்கு அஸாதாரணமான நிரூபகமாய், மற்றைகுணங்களுக்கு அதிஶயாதா யகமானவளவிலே அகஞ்சுரிப்பட்டிராதே என்னளவிலேயாய்க்கொண்டு கரைகட்டாக்கா வேரிபோலே கரைபுரண்டிருக்கிற க்ருபாகுணத்துக்காகவும், உன்றன் ரக்ஷண ஶக்தியிலேவந்தால் தேவரையும் விஞ்சிக்காணும் தேவரீருடைய க்ருபையிருப்பது. விரோதியில் பீதியாலும், தந்நிவ்ருத்தியிலுண்டான த்வரையாலும், அந்தரங்கரைமுன்னிடில் பலம் சடக்கெனக்கைபுகுருமென்கிறத்வரையாலும் இங்ஙன் சொல்லுகிறார்.

(உற்று) (வரவரமுநிஶ)- குருவரம் வரதம் விதந்மே” என்றும், (வரதராஜஸ்த) – ராமாநுஜாங்க்ரி ஶரணோஸ்மி”, என்றும், (ஸ்தோத்ரரத்ந) -பிதாமஹம் நாதமுநிம்விலோக்ய” என்றும், (திருவாய் 1-4-7) “என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” என்றும் சொல்லுகிறபடியே ஏவம் பூதரான விவர்களுக்காகவும் அடியேனை அங்கீகரித்தருளி என்னுடைய உள்ளில்வினையை யொழித்தருளவேணும், அல்லாவிடில் தேவரீர்க்கு ஆஶ்ரிதபாரதந்த்ர்யமும் க்ருபாபாரதந்த்ர்யமும் குலையுமிறே;என்னைப்பார்த்துச் செய்தருளுவதாக நினைத்திருந்தவன்றிறே தேவரீர்க்குக் காலக்கழிவு செய்யலாவது,

ஆக, இப்பாட்டால் பகவந்நிர்ஹேதுக க்ருபாப்ரபாவப்ரகரணத்தில் “பேற்றுக்கடி க்ருபை” இத்யாதியாலும், க்ருபை பெருகப்புக்கால் இருவருடைய ஸ்வாதந்த்ரயத்தாலும் தகையவொண்ணாதபடி “யிருகரையுமழியப்பெருகும்” இத்யாதியாலும் சொல்லுகிற அர்த்தவிஶேஷங்களை யருளிச்செய்தாராய்த்து,

மூ:- தீங்கேதுமில்லாத் தேசிகன்றன் சிந்தைக்குப்

பாங்காகநேரே பரிவுடையோர் – ஓங்காரத்

தேரின் மேலேறிச் செழுங்கதிரினூடுபோய்ச்

            சேருவரேயந்தாமந்தான்.                            (எ)

ஸப்தகாதை முற்றிற்று

அவ:— ஏழாமபாட்டு, பலபடியாலும் ஆசார்யன்பக்கல் ப்ரேமமில்லாதவனுக்கு அத:பதநமொழிய உஜ்ஜீவநமில்லையென்று சொல்லாநின்றீர்;ஆசார்யப்ரேமம் கனத்திருக்குமவனுக்கு உஜ்ஜீவநமுண்டோவென்ன, (ஞானஸாரம்) “தாளிணையை வைத்தவவரை நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்” என்று தத்வதர்ஶிகளாயிருப்பாரும் அறுதியிட்டார்களாகையாலே இப்படி யிருக்குமவனுக்கு உஜ்ஜீவநமுண்டென்று சொல்லாநின்றுகொண்டு இப்ப்ரபந்தத்தை நிகமித்தருளுகிறார்.

வ்யா:-(தீங்கேதுமில்லாத் தேசிகன் தன் சிந்தைக்கு) (ஞானஸாரம்)–“தப்பில்குருவருளால்’ என்றும், (உபதேஶரத்தி 3 ) “தாழ்வாதுமில்குரவர்” என்றும், .காமக்ரோத விவர்ஜிதம்” என்றும், – அநகம்” என்றும் சொல்லுகிறபடியே ஸ்வாசார்யன்பக்கல் ப்ரேமமற்றிருக்கையாதல், தன்பக்கலிலே சிலமினுக்கங்களை நினைத்திருக்கையாதல்ஶிஷ்யனுக்கு ஜ்ஞாநோபதேஶம்பண்ணுமிடத்தில் ஸாபேக்ஷனாயிருக்கையாதல், க்ராமகுலாதிகளையிட்டு ஶ்ரீவைஷ்ணவர்களைத் தாழநினைக்கையாதல், ப்ராபகாந்தரங்களி லந்வயமாதல், பராப்யாந்தரங்களில் ருசியாதல், ஜ்ஞாநாநுஷ்டாரங்களில் குறையாதல், ஆத்மகுணங்களில் வைகல்யமாதல், இவையாகிற பொல்லாங்கொன்று மின்றிக்கேயிருப்பானாய்.

(வரவரமுநி) – தத்ஸம்ப்ராப்தௌப்ரபவதி ததாதேசிக:” என்றும், – தத்ஷம்பராப்தௌ வரவரமுநிர்தேஶிக:” என்றும் சொல்லுகிறபடியே தன்னைப்போலே அங்குத்தைக்குப்புதியரன்றிக்கே தன்நிலமாய்க்கொண்டு தன்னையங்கே சேர்த்துவிடக் கடவனாயிருந்துள்ள ஸ்வாசார்யன் திருவுள்ளத்துக்குத் தீங்கில்லாமையாகிற ப்ராபகாந்தரங்களிலந்வயம் துடக்கமான பொல்லாங்கில்லாமை –

தீங்கே துயில்லாமையாகிறது – ஸ்வாசார்யன் பக்கல் ப்ரேமமற்றிருக்கை துடக்கமான பொல்லாங்கில்லாமை, இத்தீங்கு ஒரு காலவிசேஷத்திலே யுண்டாய்க்கழிந்ததன்றிக்கே, ஏதந்நிவ்ருத்தி ஸ்வதஸ்ஸித்தமாய்க் காணுமிருப்பது. (தேசிகன் தன்) ஸ்வத: உத்தாரகத்வத்தால் வந்த ப்ராதாந்யமிருக்கிறபடி,

(சிந்தைக்குப் பாங்காகநேரே பரிவுடையோர் ) இப்படி மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவுள்ளத்துக்கு – அநுகூல மாம்படி, – தத்யாத்பக்தித ஆதராத்’ என்றும், – ஆசார்யஸ்ய ஸ்திரப்ரத்யுபகரணதியா தேவவத்ஸ்யாதுபாஸ்ய:” என்றும் சொல்லுகிறபடியே நேர்கொடுநேர் கிஞ்சித்காரமுகேந (உபதேசரத் 65) “தேசாரும் சிச்சனவன் சீர்வடியை யாசையுடன் நோக்குமவன்” என்கிறபடியே தனக்கு அநுபாவ்யமான அவன் திருமேனியைப் பேணிக்கொண்டு அவன் பக்கலிலே நிரவதிகப்ரேமத்தையுடையவன்,

(பாங்காக) சிஷ்யனுக்கு நிக்ரஹகாரணம் த்யாஜ்யமென்கையாலே அவனுக்கு ஸ்வரூபம் தத்ப்ரியம் நடத்துகையொ ன்றும் போலேகாணும்; (நேரே) ஆளிட்டந்திதொழவொண்ணாதவோ பாதியும், மஹிஷீஸ்வேதத்துக்கு ஆளிடவொண்ணாதவோபாதியும், தான் செய்யக்கடவ அநுகூலவருத்தியை அந்யரை யிட்டுச்செய்விக்க வொண்ணாதிறே.

(பரிவுடையோர்) -யஸ்மாத்ததுபதேஷ்டா ஸௌதஸ்மாத்குருதரோகுரு:” அர்ச்நீயஶ்சவந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்சஸர்வதா | த்யாயேஜ்ஜபேந்நமேத்பக்த்யா பஜேதப்யர்ச்சயேத் ஸதா | உபாயோபேயபாவேந தமேவஶரணம் வ்ரஜேத் | இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம்” இத்யாதிகளாலே ஸர்வகரணங்களாலும் ஸர்வப்ரகாரங்களாலும் ஸர்வகாலமும், (ஸ்தோத்ரத்) “பாதுககக – ஸர்வம்யதேவ” என்கிறபடியே ஸ்வாசார்யன் தன்னையே எல்லாமாக ப்ரதிபத்திபண்ணி அவன்பக்கல் ப்ரேமயுக்தனாயிருக்கை யொன்றுமே ஶிஷ்யனுடைய ஜ்ஞாநபலமாகிறதென்று சொல்லாநின்றதிறே.

(பரிவுடையோர்) –“நிதியுடையோர்” என்னுமாபோலே இதுதான் பெறாப்பேறாயிருப்பதொன்றிறே. (பாக 11-2-21)“சசங்கக 5-SE காலை 5 – தத்ராபிதுர்லபம் மந்யேவைகுண்டப்ரியதர்ஶநம்” என்றதிறே (பரிவுடையோர்) மேற்சொல்லுகிற புருஷார்த்தஸித்திக்கு வேண்டுவது ஈதொன்றுமேயாய்த்து,

இங்ஙன் பரிவுடையனான விவனுக்கு ஸித்திக்கப்புகுகிற பலந்தானேதென்ன (ஓங்காரத்தேரின் மேலேறி யித்யாதி) * வைகுந்தமாநகரன்றோ இவன்கையதென்கிறார். (ஒங்காரத்தேரின்மேலேறி) இப்படி ஸ்வாசார்யவிஷயத்திலே நிரதிஶயப்ரேமஶாலியான விவன் (திருவாய் 4-3-11)“வையம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே” என்கிறபடியே இங்கிருக்கும் நாள் ஸ்வவ்யாவ்ருத்தி தோற்றவும், ஸ்வரூபாநுரூபமாகவும், பரமபதமும் கூடத் தன் சிறுமுறிக்குச் செல்லும்படியாகவும், உபயவேதாந்தகாலக்ஷேபஶ்ரீயோடும், ததீயாராதாஸ்ரீயோடும், உகந்தருளின நிலங்களில் மங்களாஶாஸநஶ்ரீயோடும், தத்கைங்கர்யஶ்ரீயோடும்,உடையவரைப்போலே நூற்றிருபதாண்டு குறைவுநிறைவுகளின்றிக்கேயிருந்து ஶரீராவஸாநகாலத்திலே தடுத்தும் வளைத்த்தும் பெறவேண்டும்படியான பரமபக்திதலையெடுத்து அந்தமில் பேரின்பத்தடியரோடு ஒருகோவையாயிருக்க வேணுமென்னும் ப்ராப்யத்வரைவிஞ்சி, ஹார்தா()நுக்ருஹீதனாய்க்கொண்டு ஹ்ருதயகமலத்தினின்றும் புறப்பட்டு ஸுஷும்நை யென்னும் பேரையுடைத்தான மூர்த்த( )ந்யநாடியாலே ஶிர:கபாலத்தைபேதித்து (க) “சடmts – ஓங்காரரதமாருஹ்ய’ என்கிறபடியே மநஸ்ஸு ஸாரத்யம்பண்ண, ப்ரணவமாகிற தேரின்மேலேயேறி,

(செழுந்கதிரினூடுபோய்) அநந்தரம் (சாந்தோ 4-15-5)  – அர்ச்சிஷமேவா பிஸம்பவந்தி;அர்ச்சிஷோஹ:, அந்ஹ ஆபூர்யமாணபக்ஷம், ஆபூர்யமாணபக்ஷாத் ஷடுதங்மாஸாந், மாஸேப்யஸ்ஸம்வத்ஸரம், ஸவாயுமாகச்சதி” என்கிறபடியே முற்பட அர்ச்சிஸ்ஸைக் கிட்டி, பின்பு அஹஸ்ஸையும், ஶுக்லபக்ஷாபிமாநியையும், உத்தராயணாபிமாநியையும் ஸம்வத்ஸராபிமாநியையும், வாயுவையும் சென்று கிட்டி அவர்கள் பெரியப்ரீதியோடே வழிநடத்துகை முன்னாக, (ங)”Hiseas5,8- ஸஆதித்யமாகச்சதி” என்றும், – ப்ரவிஶ்யசஸஹஸ்ராம்ஶும்’ என்றும், (சிறிய திருமடல்) தேரார்நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு” என்றும் சொல்லுகிறபடியே நெருங்கியிருந்துள்ள கிரணங்களையுடையனான ஆதித்யனுடைய மண்டலத்தை பேதித்துக் கொண்டு அவன் ஸத்கரிக்க அவ்வருகேபோய்ச் சென்று, ‘

(சேருவரே அந்தாமந்தான்) அநந்தரம் – ஆதித்யாச்சந்த்ரமஸம், சந்த்ரமஸோவித்யுதம், ஸவருணலோகம், ஸ இந்த்ரலோகம், – ஸப்ரஜாபதி லோகம், ஆகச்சதிவிரஜாம்ந்தீம், தம்பஞ்சஶதாந்யப்ஸரஸாம்ப்ரதிதாவந்தி, தம்ப்ரஹ்மாலங்காரேண” என்கிறபடியே அம்ருதாத்மகனான சந்த்ரனையும், ஆதிவாஹிககோடியிலே பரிகணிதனான அமாநவனையும், ஸர்வாப்யாயகனான வருணனையும், த்ரைலோக்யபாலகனான இந்த்ரனையும், முக்தராய்ப்போருமவர்களை ஸர்வப்ரகாரத்தாலும் மிகவும் ஶ்லாகிக்கக்கடவனான ப்ரஜாபதியையும் சென்றுகிட்டி, அவர்கள் ஸத்கரிக்கும் ஸத்காரம் முன்னாக அவ்வோலோகங்களையும் கடந்து,

ஈஶ்வரனுக்கு க்ரீடாகந்துக ஸ்தாநீயமான அண்டத்தையும் ஒன்றுக்கொன்று பத்துமடங்கான ஆவரணஸப்தகத்தையும், * முடிவில் பெரும்பாழானமூலப்ரக்ருதியையும் கடந்து முன்பு ஸம்ஸாரியானநாளில் தான்பட்ட விழவெல்லாம்தீர மிகவும் ஸுகோத்தரமான மார்க்கத்தாலே தனக்குஉபாயமான * பார ளந்தபாதப் போதுபோலே கடுநடையிட்டுப்போய் அம்ருதவாஹிநியான விரஜையிலே குடைந்து நீராடி, * வன்சேற்றள்ளலையும் வாஸநாரேணுவையும் விரஜாஸ்நாநத்தாலே கழியப்பெற்று,

அவ்விரஜைக்கரையிலே ஶங்கசக்ர கதாதரனாய்க்கொண்டு எழுந்தருளியிருக்கிற அமாநவகரஸ்பர்ஶம் முன்னாக, லாவண்ய ஸௌந்தர்யாதி கல்யாணகுணாகரமாய்,  ஶுத்தஸத்வமயமான பகவதநுபவைகபரிகரமாய், * ஒளிக்கொண்ட சோதியான விக்ரஹத்தையும் ஸ்வஸ்வரூபா விர்ப்பாவத்தையும் பெற்று, பகவதாநுகூல்யைக போகரான நித்யஸித்தராலே நெருங்கி, அவர்களாலும் அளவிடவொண்ணாத அளவையும் ஐஶ்வர்யத்தையும் ஸ்வபாவத்தையுமுடைத்தான திவ்யதேஶத்தைக் கண்களாரளவும் நின்றுகண்டு, கைகள்கூப்பித்தொழுது,

அமாநவ பரிஸத்தில் ஶங்ககாஹௗபேரீம்ருதங்கங்களினுடைய முழக்கத்தைக்கேட்டு, ஓடுவார்விழுவார் போற்றுவார் புகழுவார் பூமழைபொழிவார் பாவாடைவிரிப்பார் பாதங்கள் கழுவவாராய்க்கொண்டு எதிரே திரள் திரளாகப்புறப்பட்டுவருகிற நித்யமுக்தருடைய ஆநந்தகோலாஹலத்தை அநுபவித்துக் கொண்டுபோய், அவர்கள் எதிர்கொண்டு அலங்கரித்து ஸத்கரிக்கை முன்னாக, (சாந்தோ) -ஸப்ரஹ்மலோகமபி ஸம்பத்யதே” என்றும், (திருவாய் 2-5-1) ” அந்தாமம்’ என்றும், (திருவாய் 6-8-1) பொன்னுலகு” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வப்ரகாரத்தாலும் ஸ்ப்ருஹணீயமாய், தன்னுடைய வரவாலே புதுக்கணித்து மிகவு மழகியதாய்க்கொண்டு ஸ்ரீவைகுண்டநாதனுக்கு போகஸ்தாநமாயும், அவனுடைய செங்கோலாலே ஏகாதபத்ரமாய் நடத்தக்கடவதாயும் அவன் திருவடிகளிலே அஶேஷ ஶேஷ வருத்திகளிலும் அந்விதமாகைக்கு ஏகாந்தமாயிருந்துள்ள * ஏர்கொள்வைகுந்தமாநகரத்தைச் சென்றுகிட்டி, (திருவாய்8-10-”சுழிபட்டோடும்சுடர்ச்சோதி வெள்ளத்தின்புற்றிருந்து” என்கிறபடியே, * அம்ருதஸாகராந்தர்நிமக்ந ஸர்வாவயவனாய்க்கொண்டு யாவத்காலமுமிருப்பன்

(சேருவரே) இவ்வர்த்தத்தில் அசிர்ப்புப்பண்ண வேண்டுவதில்லை. இதுஶரதமென்கிறார்.  “- நஸம்ஶயோஸ்தி” என்றதிறே. (அந்தாமந்தரன்) லீலாவிபூதியிலுங்காட்டில் நித்யவிபூதிக்குண்டான ப்ராதாந்யமிருக்கிறபடி.

ஆக , இப்பாட்டாலே, சரமப்ரகரணத்தில் “ஆசார்யஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்” இத்யாதிகளாற் சொல்லுகிற அர்த்தவிசேஷங்களை ப்ரதிபாதித்தருளினாராய்ந்து.

நிகமம்;–ஆக இப்ப்ரபந்தத்தால் – அர்த்தபஞ்சகோபதேஷ்டாவே ஆசார்யனாகிறானென்னு மிடத்தையும், அவனிடத்தில் ப்ரேமமற்றிருப்பார் ஸ்வாத்மகாதகரென்னுமிடத்தையும், அவர்கள் ஜ்ஞாநவிஶேஷ.புக்தரேயாகிலும் நித்யஸம்ஸாரிகளாய்ப்போருவரென்னுமிடத்தையும், அதுக்கு க்ருதக்நரான விவர்கள் அதிக்ரூரரென்னுமிடத்தையும், ஸ்வோத்கர்ஷத்தைத் தேடுகை ஆசார்யனுக்கு அழுக்கென்னுமிடத்தையும், இவ்வழுக்குக்கடியான தோஷத்தைப் பெரியபெருமாள் தாமே தமக்குப் போக்கியருள வேணுமென்னுமிடத்தையும், ஆசார்யன் பக்கல் ப்ரேமயுக்தனானவன் அர்ச்சிராதிமார்க்கத்தாலே பரமபதத்திலேசென்று முக்தைஶ்வர்யத்தைப்பெற்றுக் கைங்கர்யஸாம்ராஜ்யத்திலே மூர்த்தாபிஷிக்தனாய்க்கொண்டு யாவதாத்மபாவியாக விருப்பனென்னுமிடத்தையும் அருளிச்செய்து நின்றாராய்த்து,

விளாஞ்சோலைப்பிள்ளை யருளிச்செய்த ஸப்தகாதைக்கு

பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாக்யாநம்முற்றிற்று.

விளாஞ்சோலைப்பிள்ளை திருவடிகளேஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.