॥ श्रीमद्रहस्यत्रयसारे अर्थपञ्चकाधिकारः ॥ ४ ॥
4.1 आदौ प्राप्यं परममनघं प्राप्तृरूपं च मादौ
इष्टोपायं त्वयननमसोरीप्सितार्थं चतुर्थ्याम् ।
तद्व्याघातं ममकृतिगिरि व्यञ्जयन्तं मनुं तं
तत्प्रायं च द्वयमपि विदन् संमतस्सर्ववेदी ॥ १२ ॥
4.2 नारायणादिशब्दங்களிலே विवक्षितமான संबन्धविशेषத்தை सिद्धान्तத்துக்குத் தளமாக்கி இத்தை अनुबन्धिத்திருக்கும் अर्थपञ्चकத்தை சிலர் विचारिத்தார்கள்.
4.3 இஸ்संबन्धத்தோடே கூட षडर्थங்களென்று சிலர் अनुसन्धिத்தார்கள். இஸ் संबन्धம்போலே मुमुक्षुவுக்கு विशेषिத்தறிய வேண்டுவதாகச் சேர்த்த अर्थपञ्चकம் எதென்னில்:- ‘‘प्राप्यस्य ब्रह्मणो रूपं प्राप्तुश्च प्रत्यगात्मनः । प्राप्त्युपायं फलं चैव तथा प्राप्तिविरोधि च ॥ वदन्ति सकला वेदास्सेतिहासपुराणकाः ॥’’(ஹாரீதஸம்ஹிதை) என்று சொல்லப்பட்டன.
இவற்றில் प्राप्यமான ब्रह्मத்தினுடைய स्वरूपம் திருमन्त्रத்தில் प्रथमाक्षरத்திலும் नारायणशब्दத்திலும், द्वयத்தில் सविशेषणங்களான नारायण शब्दங்களிலும், चरमश्लोकத்தில் ‘माम्’ ‘अहम्’ என்கிற पदங்களிலுமनुसन्धेयம்.
4.4 அவ்விடங்களில் अनुसन्धिக்கும் போது ‘‘श्रिया सार्धं जगत्पतिः’’ (லைங்க புராணம்) ‘‘एष नारायणः श्रीमान्’’ (हरिवंशம் 113.62) ‘‘भवान्नारायणो देवः श्रीमांश्चक्रधरो विभुः’’(ராமாயணம் யுத்தகாண்டம் 120-13) ‘‘श्रीवत्सवक्षा नित्यश्रीः’’ (ராமாயணம் யுத்தகாண்டம் 114-15) ‘‘विष्णोः श्रीरनपायिनी’’ (விஷ்ணுபுராணம் 1-8-17) ‘‘सीतासमक्षं काकुत्स्थमिदं वचनमब्रवीत्’’ (ராமாயணம் ஆரண்யகாண்டம் 15-6.) ‘‘सीतामुवाचातियशा राघवं च महाव्रतम्’’ (ராமாயணம் அயோத்யா 31-2) ‘‘अलमेषा परित्रातुं राघवाद्राक्षसीगणम्’’ (ராமாயணம் ஸுந்தரகாண்டம் 58-87) ‘‘भवेयं शरणं हि वः’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 58-90) ‘‘भवांस्तु सह
4.5 वैदेह्या’’ (ராமாயணம் அயோத்யா 31-27) ‘‘तया सहासीनमनन्त-भोगिनि’’ (ஆளவந்தார் ஸ்தோத்ரம் 39) ‘‘कान्तस्ते पुरुषोत्तमः’’ (சதுச்லோகீ 1) ‘‘स्वपरिचरणभोगैः श्रीमति प्रीयमाणे’’ (ஆத்மஸித்தி) ‘‘श्रीमते निर्मलानन्दोदन्वते विष्णवे नमः’’ (வேதாந்தஸாரம்) ‘‘श्रियः कान्तोऽनन्तो वरगुणगणैकास्पदवपुः’’ (வேதாந்ததீபம்) ‘‘ब्रह्मणि श्रीनिवासे’’ (ஸ்ரீபாஷ்யம்) ‘‘श्रियःपतिर्निखिल-हेयप्रत्यनीक-कल्याणैकतान-अनन्तज्ञानानन्दस्वरूपः’’ (கீதாபாஷ்யம்) “நீயுந்திருமகளும் நின்றாயால்” (முதல் திருவந்தாதி 86) “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” (திருவாய்மொழி 4-9-1) “கோலத்திருமாமகளோடு உன்னை”(திருவாய்மொழி 6-9-3) “நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்” (திருவாய்மொழி 9-2-1)
4.6 “உன் தாமரைமங்கையும் நீயும்” (திருவாய்மொழி 9-2-3) “அகலகில்லேனிறையும்”(திருவாய்மொழி 6-10-10) “உணர்முழு நலம்” (திருவாய்மொழி 1-1-2) “நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்” (பெரியதிருமொழி 3-8-1) என்றும் प्रमाणங்கள் சொல்லுகிறபடியே सर्वप्रकारத்தாலும், सर्वावस्थैயிலும் सहधर्म-चारिणिயான பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான अनन्त-ज्ञानानन्दस्वरूपமாக अनुसन्धिக்கவேணும்.
4.7 இப்படி ‘‘समस्तहेयरहितं विष्ण्वाख्यं परमं पदं’’ (விஷ்ணுபுராணம் 1-22-53) ‘‘परः पराणां सकला न यत्र क्लेशादयस्सन्ति परावरेशे’’ (விஷ்ணுபுராணம் 6-5-85) என்கிறபடியே हेयप्रत्यनीकமாக अनुसन्धेयம். ‘‘तैर्युक्तश्श्रूयतां नरः’’ (ராமாயணம் பா-கா 1-7.) ‘‘तमेवं गुणसंपन्नं’’ (ராமாயணம் அ-கா 2-48.) ‘‘ज्येष्ठं श्रेष्ठगुणैर्युक्तं’’ (ராமாயணம் பா-கா 1-20) ‘‘एवं श्रेष्ठगुणैर्युक्तं’’ (ராமாயணம் அ-கா 1-32) ‘‘गुणैर्विरुरुचे रामः’’ (ராமாயணம் அ-கா 2-47) ‘‘तमेवं गुणसंपन्नं अप्रधृष्यपराक्रमं’’ (ராமாயணம் அ-கா 1-34) ‘‘बहवो नृप कल्याणगुणाः पुत्रस्य सन्ति ते’’ (ராமாயணம் அ-கா 2-26) ‘‘आनृशंस्यमनुक्रोशः श्रुतं शीलं दमश्शमः । राघवं शोभयन्त्येते षड्गुणाः पुरुषोत्तमम्’’ (ராமாயணம் அ-கா 33-12) ‘‘विदितस्स हि
4.8 धर्मज्ञश्शरणागत वत्सलः’’(ராமாயணம் ஸூந்தரகாண்டம் 21-20) ‘‘शरण्यं शरणं च त्वां आहुर्दिव्या महर्षयः’’ (ராமாயணம் யுத்த காண்டம் 120-18) ‘‘निवासवृक्षस्साधूनां आपन्नानां परा गतिः’’ (ராமாயணம் கிஷ் காண்டம் 15-19) ‘‘तेजो-बलैश्वर्य-महावबोध-सुवीर्य-शक्त्यादि-गुणैकराशिः’’ (விஷ்ணுபுராணம் 6-5-85) ‘‘सर्वभूतात्मभूतस्य विष्णोः को वेदितुं गुणान्’’(ப்ராம்மபுராணம்) ‘‘यथा रत्नानि जलधेः असङ्ख्येयानि पुत्रक । तथा गुणाश्च देवस्य त्वसङ्ख्येया हि चक्रिणः ॥’’ (வாமனபுராணம் 74-40) ‘‘वर्षायुतैर्यस्य गुणा न शक्या वक्तुं समेतैरपि सर्वदेवैः । ‘‘चतुर्मुखायुर्यदि कोटिवक्त्रो भवेन्नरः क्वापि विशुद्धचेताः । स ते गुणानाम् अयुतैकमंशं वदेन्न वा देववर प्रसीद ॥’’(பாரதம் கர்ணபர்வம் 83-15) ‘‘तवानन्तगुणस्यापि षडेव प्रथमे गुणाः । यैस्त्वयेव जगत् कुक्षावन्येप्यन्तर्निवेशिताः ॥’’(விஷ்ணுபுராணம்) ‘‘इषुक्षयान्निवर्तन्ते नान्तरिक्षक्षितिक्षयात् । मतिक्षयान्निवर्तन्ते न
4.9 गोविन्दगुणक्षयात् ॥’’ “வல்வினையேனை ஈர்கின்ற குணங்களையுடையாய்” (திருவாய்மொழி 8-1-8) “உயர்வறவுயர் நலமுடையவன்” (திருவாய்மொழி 1-1-1) என்கிறபடியே प्राप्यत्व-प्रापकत्वोपयुक्त ங்களான गुणங்களாலே विशिष्टமாக अनुसन्धेयம்.
‘‘सदैकरूपरूपाय’’ (வி-பு. 1-2-1) ‘‘नित्यसिद्धे तदाकारे तत्परत्वे च पौष्कर । यस्यास्ति सत्ता हृदये तस्यासौ सन्निधिं व्रजेत् ॥’’ (பெள-ஸம்) ‘‘समस्ताश्शक्तयश्चैता नृप यत्र प्रतिष्ठिताः । तद्विश्वरूप-वैरूप्यं
4.10 रूपमन्यद्धरेर्महत्’’ (விஷ்ணுபுராணம் 6-7-70.) ‘‘इच्छागृहीताभिमतोरुदेहः’’ (விஷ்ணுபுராணம் 6-5-84) ‘‘न भूतसङ्घसंस्थानो देहोऽस्य परमात्मनः’’ (பாரதம் ஶாந்திபர்வம் 206-60) ‘‘न तस्य प्राकृता मूर्तिर्मांसमेदोस्थिसंभवा’’ (வராஹபுராணம் 34-40) ‘‘भुजैश्चतुर्भिस्समुपेतमेतद्रूपं विशिष्टं दिवि संस्थितञ्च’’(பாரதம் மெளஸல 5-34) ‘‘रुक्माभं स्वप्नधीगम्यं’’ (மனுஸ்ம்ருதி 12-123 (12-122)) ‘‘तत्रैकस्थं जगत् कृत्स्नं ’’(கீதை 11-13) ‘‘पश्यामि देवांस्तव देवदेहे’’ (கீதை 11-15) ‘‘अस्त्र-भूषण-संस्थान-स्वरूपं’’(விஷ்ணுபுராணம் 1-22-76) ‘‘भूषणास्त्र-स्वरूपस्थं यथेदमखिलं जगत्’’ (விஷ்ணுபுராணம் 1-22-66) ‘‘तमसः
4.11 परमो धाता शङ्खचक्रगदाधरः’’(ராமாயணம்-யுத்த காண்டம் 114-15) என்கிறபடியே सर्वजगदाश्रयமான अप्राकृत-दिव्यमङ्गळ-विग्रह-विशिष्टமாக अनुसन्धेயம். இவ்विग्रहம் – पर-व्यूह-विभव-हार्दार्चावताररूपेण पञ्च-प्रकारமாயிருக்கும்படியும், இவற்றிலுள்ள विशेषங்களும், भगवच्छास्त्र-संप्रदाय-த்தாலே அறியப்படும்.
4.12 ‘‘विष्णोरेता विभूतयः’’(விஷ்ணுபுராணம் 1-22-32) ‘‘महाविभूतिसंस्थान!’’ (விஷ்ணுபுராணம் 5-6-50) ‘‘नान्तोस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप’’ (கீதை 10-40) इत्यादिகளுடைய संग्रहமான ‘‘यदण्डमण्डान्तरगोचरञ्च यत्’’(ஆள-ஸ்தோ 17) என்கிற श्लोकத்தின்படியே अनन्त विभूति-विशिष्टமாக अनुसन्धेयம்.
இவ்विभूतिகளில் चेतनங்களாயும் अचेतनங்களாயுமுள்ள இரண்டுவகையும் लीलार्थங்களாயும், भोगार्थங்களாயும், विभक्तங்களாயிருக்கும். आनुकूल्यमात्रம் பொதுவாயிருக்க रसवैषम्यத்தாலே लीला-भोग-विभागம் यथालोकங் கண்டு கொள்வது.
4.13 அப்படியே ‘‘जन्माद्यस्य यतः’’(शा-सू 1-1-2.) ‘‘ क्रीडा हरेरिदं सर्वं’’(பாரதம் ஶாந்திபர்வம் 206-58) ‘‘ क्रीडतो बालकस्येव’’(விஷ்ணுபுராணம் 1-2-18) ‘‘बालः क्रीडनकैरिव’’(பார -ஸபா 12-57) ‘‘हरे विहरसि क्रीडा-कन्तुकैरिव जन्तुभिः’’(வி-த.) ‘‘लोकवत्तु लीलाकैवल्यं’’(ஶா-ஸூ. 2-1-33) என்கிறபடியே लीलारूप-जगद्वयापार-लक्षणமாக अनुसन्धेयம்.
4.14 இப்படி लक्ष्मीसहायமாய் अपरिमित-ज्ञानानन्दமாய் हेयप्रत्यनीकமாய் ज्ञान-शक्त्याद्यनन्त-मङ्गळगुणविशिष्टமாய் दिव्यमङ्गळ-विग्रहोपेतமாய் शरीरभूत-विभूतिद्वययुक्तமாய் जगत्सृष्ट्यादि-व्यापारलीलமாய்க் கொண்டு प्राप्यமான ब्रह्मத்தை प्रापिக்கும் प्रत्यगात्माவினுடைய बद्ध-मुक्त-नित्य-साधारणरूपமும் उपायाधिकारिயான தனக்கிப்போது असाधारणமான रूपமு மறியவேணும். இவர்களில் बद्धராவார், अनादि-कर्म-प्रवाहத்தாலே अनुवृत्त-संसारராய் ब्रह्मादि-स्तंब-पर्यन्त-विभागभागिகளான क्षेत्रज्ञர். मुक्तராவார் शास्त्रचोदितங்களான उपायविशेषங்களாலுண்டான भगवत्प्रसादத்
4.15 தாலே अत्यन्त-निवृत्त-संसारராய் सङ्कोच-रहित-भगवदनुभवத்தாலே निरतिशयानन्द ராயிருக்குமவர்கள். नित्यராவார் ईश्वरனைப்போலே अनादिயாக ज्ञानसङ्कोचமில்லாமையாலே ‘‘सवयस इव ये नित्य-निर्दोष-गन्धाः’’ (ஸ்ரீகுணரத்நகோஶம் 27) என்கிறபடியே अस्पृष्टसंसारராய்க்கொண்டு नित्यकैङ्कर्यம் பண்ணுகிற अनन्त-गरुड-विष्वक्सेनादिகள். இவர்களெல்லார்க்கும் साधारणமான रूपம் अणुत्व-ज्ञानानन्द-अमलत्वादिகளும், भगवच्छेषत्व-पारतन्त्र्यादिகளும். मुमुक्षुவான தனக்கு असाधारणமாக
4.16 அறியவேண்டும் आकारங்கள் उपोद्घातத்திலே சொன்னோம்; மேலுங் கண்டு கொள்வது. இப்प्राप्ताविனுடைய स्वरूपம் प्रणवनमस्सुக்களில் मकारங்களிலும், नार-शब्दங்களிலும், ‘प्रपद्ये’ என்கிற उत्तमனிலும், ‘व्रज’ என்கிற मध्यमனிலும், ‘त्वा’என்கிற पदத்திலும் ‘मा शुचः’ என்கிற वाक्यத்திலும் अनुसन्धेयம்.
प्राप्त्युपायமும் இதின் परिकरங்களும் फलस्वरूपமிருக்கும்படியும் மேலே प्राप्तस्थलங்களிலே பரக்கச்சொல்லக்கடவோம். இவற்றில் उपायம் திருमन्त्रத்
4.17 தில் नमस्ஸிலும் अयन-शब्दத்திலும், द्वयத்தில் पूर्वखण्डத்திலும் चरमश्लोकத்தில் पूर्वार्द्धத்திலும் अनुसन्धेयம். फलस्वरूपம் चतुर्थ्यन्त-पदங்களிலும் द्वयத்தில் नमस्ஸிலும், सर्वपापेभ्यो मोक्षयिष्यामि’’ என்கிறவிடத்திலும் अनुसन्धेयம்.
प्राप्तिविरोधिயாவது अविद्या-कर्म-वासनादि-रूपமான मोक्ष-प्रतिबन्धकवर्गம். அதில் प्रधानம் अनादिயாக सन्तन्यमानமான आज्ञातिलङ्घनமடியாகப் பிறந்த भगवन्निग्रहம்.
4.18 இது क्षेत्रज्ञர்க்கு ज्ञानसङ्कोचकरமான त्रिगुणात्मक-प्रकृतिसंसर्ग-विशेषத்தை உண்டாக்கியும், प्रकृति-परिणाम-विशेषங்களான शरीरेन्द्रियादिகளோடே துவக்கி, “”திண்ணமழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால் புண்ணை மறைய வரிந்தென்னைப் போரவைத்தாய் புறமே””(திருவாய்மொழி 5-1-5) என்றும், “”அந்நாள் நீ தந்தவாக்கையின் வழியுழல்வேன்””(திருவாய்மொழி 3-2-1) என்றுஞ்சொல்லுகிறபடியே
4.19 देहेन्द्रियादि-परतन्त्रனாக்கியும், அவ்வவस्थैயிலும் शास्त्रवश्यதை கூடாத तिर्यगादि-दशैகளிலே நிறுத்தியும், शास्त्रयोग्यங்களான मनुष्यादि-जन्मங்களில் बाह्य-कुदृष्टि-मतங்களாலே கலக்கியும், அவற்றில் இழியாதவர்களையும் உள்பட ‘‘भगवत्स्वरूप-तिरोधानकरीं विपरीत-ज्ञानजननीं स्वविषयायाश्च भोग्यबुद्धेर्जननीम्’’(பெரிய கத்யம்) என்கிற படியே இம்मूलप्रकृति முதலான मोहन-पिञ्छिகை தன்னாலே तत्त्वाज्ञान-विपरीत-ज्ञान-विषय-प्रावण्यங்களைப் பண்ணியும், இவையடியாக “”””ஆவி திகைக்க
4.20 ஐவர்குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப்பல நீ காட்டிப்படுப்பாயோ””(திருவாய்மொழி 6-9-9.) என்கிறபடியே सुखलवार्थமான अकृत्यकरणादिरूपமான आज्ञाति-लङ्घनத்தைப் பண்ணுவித்தும், ‘‘पापं प्रज्ञां नाशयति क्रियमाणं पुनःपुनः । नष्टप्रज्ञः पापमेव पुनरारभते नरः ॥’’(பாரதம்-உத்யோகபர்வம் 35-73.) என்கிறபடியே மேலும் अपराधपरंपरैகளிலே மூட்டி அதின் फलமாக ‘‘क्षिपाम्यजस्रं’’(கீ. 16-19.) इत्यादिகளிற்படியே गर्भ-जन्म-जरा-मरण-नरकादि-चक्र-परिवृत्तिயிலே परिभ्रमिப்பித்தும், क्षुद्र-सुखादिகளுக்கு साधनமான
4.21 राजस-तामस-शास्त्रार्थங்களைக்கொண்டு ‘‘यक्ष-रक्षांसि राजसाः । प्रेतान् भूतगणां-श्चान्ये यजन्ते तामसा जनाः’’(கீ. 17-4) என்கிறபடியே தன்னோடொக்க ஒழுகு சங்கிலியிலே கட்டுண்டு உழலுகிற क्षेत्रज्ञர் காலிலே விழப்பண்ணியும், அவர்கள் கொடுத்த जुगुप्सावह-क्षुद्र-पुरुषार्थங்களாலே क्रिमिகளைப்போலே कृतार्थராக மயக்கியும், योग-प्रवृत्तரானவர்களையும் क्षुद्र-देवता-योगங்களிலே
4.22 யாதல் नामादि अचेतनोपासनங்களிலேயாதல் மூளப்பண்ணி சில்வானங்களான फलங்களாலே योगத்தைத் தலைசாய்ப்பித்தும், आत्मप्रवणரையும் प्रकृति-संसृष्टம் प्रकृति-वियुक्तமென்கிற இவ்விரண்டுபடியிலும் ब्रह्मदृष्टिயாலேயாதல், स्वरूपमात्रத்தாலேயாதல் उपासिக்க மூட்டி அவை நாலுவகைக்கும் फलமாக अल्पास्वादங்களைக் கொடுத்து पुनरावृत्तिயைப்பண்ணியும், ब्रह्मात्मक-स्वात्मचिन्तन-प्रवृत्तரானவர்களையும் स्वात्म-शरीरक-परमात्म-चिन्तनपरரையும்
4.23 अन्तरायமான आत्मानुभवத்தாலேயாதல், अष्टैश्वर्यसिद्धिகளாலேயாதல், वस्वादिपद प्राप्ति ब्रह्मकाय-निषेवणादिகளாலேயாதல், अभिषेकத்துக்கு நாளிட்ட राजकुमारனுக்குச் சிறையிலே எடுத்துக் கைநீட்டின चेटिமார் பக்கலிலே கண் ணோட்டமுண்டாமாப்போலே प्रारब्ध-कर्म-फलமான देहेन्द्रियங்களிலும்
4.24 तदनुबन्धिகளான परिग्रहங்களிலும் तन्मूल-भोगங்களிலும் கால்தாழப் பண்ணியாதல் अन्यपरராக்கியும், இப்படிப் பலमुखங்களாலே भगवत्प्राप्तिக்கு விலக்காயிருக்கும், முப்பத்திரண்டடியான துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பத்தோராமடியிலே விழுந்ததோடு வாசியில் லாதாப்போலே ஏதேனுமொரு पर्वंத்திலே अन्तरायமுண்டானாலும் இவன் संसारத்தைக் கடந்தானாகான். कर्मयोगादिகளில் प्रवृत्तனுக்கு ‘‘नेहाभिक्रमनाशोऽस्ति’’(கீ. 2-40) इत्यादिகளிற்படியே இட்டபடை கற்படையாய் என்றேனு
4.25 மொருநாள் फलसिद्धिயுண்டாம் என்கிறவிதுவும் कल्पान्तर-मन्वन्तर-युगान्तर-जन्मान्तरादिகளில் எதிலேயென்று தெரியாது. आनुकूल्यம் மிகவும் உண்டாயிருக்க वसिष्ठादिகளுக்கு विळम्बங்காணாநின்றோம். प्रातिकूल्यம் மிகவும் உண்டாயிருக்க वृत्र-क्षत्रबन्धुप्रभृतिகளுக்குக் கடுக मोक्षமுண்டாகக்காணா நின்றோம். ஆதலால் विळम्ब-रहित-मोक्षहेतुக்களான सुकृतविशेषங்கள் ஆர் பக்கலிலே கிடக்குமென்றுந் தெரியாது. विळंबहेतुவான निग्रहத்துக்குக் कारणங்களான दुष्कर्म-विशेषங்களும் ஆர் பக்கலிலே கிடக்குமென்றும் தெரியாது.
இப்படி अनिष्ट-परंपरैக்கு मूलங்களான आज्ञातिलङ्घनங்களாலே வந்த भगव-न्निग्रहविशेषமாகிற प्रधानविरोधिக்குச்செய்யும் परिहारத்தை ‘‘तस्य च वशीकरणं तच्छरणागतिरेव’’ என்று कठवल्लिயில் वशीकार्य-परंपरैயை வகுத்தவிடத்தில் श्रीभाष्यकारர் அருளிச்செய்தார்.
4.26 இவ்विरोधिवर्गத்தையெல்லாம் रहस्यत्रयத்தில் विधिக்கிற अर्थங்களுடைய व्यवच्छेद-शक्तिயாலும், नमस्ஸுக்களில் मकारங்களில் षष्ठिகளாலும், सर्व-पापशब्दத்தாலும் अनुसन्धिத்து संसारத்தில் அடிச் சூட்டாலே பேற்றுக்கு உறுப்பான வழிகளிலே त्वरिக்க प्राप्तம்.
4.27 பொருளொன்றென நின்ற பூமகள் நாதன் அவனடிசேர்ந்து
அருளொன்றும் அன்பனவன் கொளுபாயம் அமைந்த பயன்
மருளொன்றிய வினை வல்விலங்கென்று இவையைந்தறிவார்
இருளொன்றிலாவகை என்மனந்தேற இயம்பினரே. // 11 //
4.28 प्राप्यं ब्रह्म समस्तशेषि परमं प्राप्ताऽहमस्योचितः
प्राप्तिर्दाय-धन-क्रमादिह मम प्राप्ता स्वतस्सूरिवत् ।
हन्तैनामतिवृत्तवान् अहमहंमत्या विमत्याश्रयः
सेतुस्संप्रति शेषि-दंपति-भरन्यासस्तु मे शिष्यते ॥१३॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे अर्थपञ्चकाधिकारश्चतुर्थः ॥