॥ श्रीमद्रहस्यत्रयसारे उपोद्घाताधिकारः ॥ १ ॥
1.1 आभगवत्तः प्रथितामनघामाचार्यसन्ततिं वन्दे ।
मनसि मम यत्प्रसादाद्वसति रहस्यत्रयस्य सारोऽयम् ॥ ४ ॥
1.2 कर्मब्रह्मात्मके शास्त्रे कौतस्कुतनिवर्तकान् ।
वन्दे हस्तिगिरीशस्य वीथीशोधककिङ्करान् ॥ ५
1.3 ஆளுமடைக்கலமென் றெம்மையம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்தெமக்குமவைதந்த தகவுடையார்
மூளுமிருட்கள் விள முயன்றோதிய மூன்றினுள்ளம்
நாளுமுகக்கவிங்கே நமக்கோர்விதி வாய்க்கின்றதே ( 7 )
1.4 मणिवर इव शौरेर्नित्यहृद्योऽपि जीवः
कलुषमतिरविन्दन् किङ्करत्वाधिराज्यम् ।
विधिपरिणतिभेदाद्वीक्षितस्तेन काले
गुरुपरिषदुपज्ञं प्राप्य गोपायति स्वम् ॥ ६ ॥
1.5 श्रियःपतिயான सर्वेश्वरனுக்கு श्रीकौस्तुभस्थानीयனாய்க் கொண்டு हृदयङ्गमனாய், कुमारனென்றும், पुत्रனென்றும், शिष्यனென்றும், प्रेष्यனென்றும், शेषभूतனென்றும், दासभूतனென்றும், அவ்வோ शास्त्रங்களிலே प्रतिपन्नனாயிருக்கும் जीवात्मा । இவன் தனக்கு வகுத்த शेषिயாய், அயர்வறும மரர்களதிபதியாய், உயர்வறவுயர் நலமுடையவனாய், நமக்கும் பூவின்மிசை நங்கைக்குமின்பனாய், ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான सर्वेश्वरன் ‘‘वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पतिः । आस्ते’’
1.6 என்றும், “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” வென்றும் சொல்லுகிறபடியே பெரியபிராட்டியாரோடேகூடத் தெளிவிசும்பிலே ‘‘याऽयोध्येत्यपराजितेति विदिता नाकं परेण स्थिता’’ என்கிறபடியே अयोध्यादिशब्दवाच्यமான கலங்காப்பெருநகரிலே सहस्रस्थूणादिवाक्यங்களாலே யோதப்படுகிற திருமாமணிமண்டபத்திலே कौषीतकिब्राह्मणादिகளிலே யோதப்படுகிற पर्यङ्कविशेषத்திலே “சென்றால்குடையாமிருந்தால்சிங்காதனமா” மென்றும், ‘‘निवासशय्यासन’’ என்றுஞ் சொல்லுகிறபடியே सर्वदेश सर्वकाल सर्वावस्थोचितसर्वविधकैङ्कर्यங்களையும் सर्वविधशरीरங்களாலே अनुभविத்து शेषत्वமே தனக்கு निरूपकமாகையாலே शेषனென்றே திருநாமமாம்படியான திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளிமெத்தையிலே வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை सर्वात्माக்களும் अनुभविத்து कृतार्त्थராக வேணுமென்று सहृदयனாயிருக்கிறவிருப்படியாக नित्यानुभवं பண்ணுகிற அந்தமில் பேரின்பத்தடியரான नित्यसूरिகளோடொக்கத் தானும் स्वामिकैङ्कर्यத்துக்கு स्वरूपयोग्यதையாலே யிட்டுப்பிறந்துவைத்து, अनादिमायैயாலே
1.7 सुप्तனாய் ‘‘अनेकजन्मसाहस्रीं संसारपदवीं व्रजन् । मोहश्रमं प्रयातोऽसौ वासनारेणुकुण्ठितः’’ என்கிறபடியே प्रकृतिயாகிற பாழிலே விழுந்து ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து தட்டித் தாவற்று அழுக்கடைந்தொளியழிந்தபடியாலே तत्त्व-हितविषयமாய் यथावत्प्रकाशरहितனாய் நிற்க; ஒரு ராஜா अन्तःपुरத்துடனே
1.8 வேட்டைக்குச்சென்று விளையாட்டிலே सक्तனானவளவிலே வார்த்தை யறிவதற்கு முன்பே வழி தப்பின राजकुमारன் எடுத்தார் கையிற்பிள்ளையாய் ஏதேனுமொரு குருச்சியிலே வளர, தனக்கில்லாத शबरत्वादिजातिகளை
1.9 யேறிட்டுக் கொண்டு ‘‘माताप्येका पिताप्येको मम तस्य च पक्षिणः । अहं मुनिभिरानीत-स्सचानीतो गवाशनैः ॥ अहं मुनीनां वचनं शृणोमि गवाशनानां स वचश्शृणोति । प्रत्यक्षमेतद्भव-ताऽपि दृष्टं संसर्गजा दोषगुणा भवन्ति ॥’’ என்கிறபடியே வேடுவச்சேரியில் கிளிபோலேயவர்கள் பழக்கிவைத்த பாசுரமே தனக்குப் பாசுரமாய், அவர்க்குப்பிறந்தவர்களைப்போலே யவர்களூணும் वृत्तिயுமே தனக் கூணும் वृत्तिயுமாய், தன் பிறவிக்குரிய भोगங்களிலும், आचारसंस्कारादिகளிலும் புதியதுண்ணாதே राजभोगविरुद्धங்களான जुगुप्सितविषयங்களிலே தனக்குப்
1.10 பேறுமிழவும் हर्षशोकங்களுமாய், राजकुमारனென்று தன்னடியறிவார் சில ऋषिप्रायருண்டானாலுமவர்களுக்குங்கிட்டவொண்ணாத अवस्थैயுடைய னாய், இப்படி भ्रान्तिसिद्ध शबरत्वाद्यवस्थैயோடே यावज्जीवं நடக்கில் उत्तरजन्म-ங்களிலுமொரு योग्यதை பெற விரகில்லாதபடியாய்த் தட்டுப் பட்டு நிற்குமாப்போலே இவனும் देहात्माभिमानादिகளாலே தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு நிற்க, அந்த राजकुमारனுடைய लक्षणादिகளாலே जाति विशेषத்தை யறிவார் சில धार्मिकர் ஒரு விரகாலே யிவனை மீட்கப்
1.11 பெற்று अभिमानिக்க விவனுக்கு வந்தேறியான जात्यन्तराभिमानத்தை வழி விலக்கி, दृष्टादृष्टसंस्कारादिகளாலே उत्तरोत्तरभोगतदुपायங்களுக்கு योग्यனாம் படி விரகுசெய்து, இவனுக்கு स्वजात्यनुरूपமான गुणवृत्तங்களைத் தங்களு- पदेशानुष्ठानங்களாலே குடிப்புகுரவிட்டு, இவனுக்கு अनेकदोषदुष्टங்களான शबरादि भोग्यक्षुद्रविषयங்களை யருவருப்பித்து, राजादिभोग्यங்களான अतिशयित-पुरुषार्थங்களை ஆய்ந்தெடுக்கவல்ல அளவுடைமையையுண்டாக்கி நிறுத்துமாப்போலே இவ்வாत्माவுக்கு சில धार्मिकர் पित्रादिमुखेन நொடித்து
1.12 ‘‘पुमान्न देवो न नरो न पशुर्न च पादपः । शरीराकृतिभेदास्तु भूपैते कर्मयोनयः ॥’’ என்கிற படியே உருவியந்தவிந் நிலைமையையுணர்த்தி, அதுக்கு अनुरूपமான पुरुषार्थतदुपायங்களிலே अन्वयिக்கலாம்படி விரகுசெய்து, உடம்பு தின்னார் படியன்றிக்கே ஒரு வெளிச்சிறப்புடையார்க்கு வரும் गुणवृत्तங்களை யுண்டாக்கி हेयोपादेयविभागक्षमனுமாக்கி நிறுத்தின வளவிலே, இவனுடைய அடியுடைமையையும் சில धार्मिकரடியாக வந்த योग्यதையையும் அளவுடை மையையும் நேராகக்கண்டு परमकारुणिकனான परमशेषिயாலே प्रेरितராய்த்
1.13 தாங்களும் कारुणिकोत्तमராயிருப்பார் சில देशिकர் ‘‘ईश्वरस्य च सौहार्दं यदृच्छासुकृतं तथा । विष्णोः कटाक्षमद्वेषमाभिमुख्यं च सात्विकैः ॥ संभाषणं षडेतानि ह्याचार्यप्राप्तिहेतवः ।’’ என்கிறபடியே நேர்பட்டு, அந்த राजकुमारனுக்குச் சில राजान्तरङ्गர் நேர் பட்டுப் பிறவியையுணர்த்தி மேலுள்ள प्रियतमங்களையும் हिततमங்களையுந்தெளிவித்து ஒருவிரகாலேயந்த राजाவுக்கும் राजकुमारனுக்கும் परस्परसंश्लेषाकाङ्क्षैயை யுत्तम्भिக்குமாப்போலே யிவனுக்கும் ‘‘नायं देवो न मर्त्यो वा न तिर्यक्स्थावरोपि वा । ज्ञानानन्दमयस्त्वात्मा शेषो हि परमात्मनः’’ என்றும் ‘‘दासभूतास्स्वतस्सर्वे ह्यात्मानः परमात्मनः’’ என்றும் प्रमाणங்கள் சொல்லுகிறபடியே பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகுமங்காதுஞ் சோராமே யாள்கின்ற செங்கோலுடைய श्रियःपति नारायणனுடனே குடல் துவக்கைத் தெளிவித்து, இவனுக்கு तत्प्राप्त्युपायங்களிலே முயன்று, இவன் பெறுகிற பேறே தங்களுக்குப் பொன்னுலகையும் புவனி முழுவதையுமாளுகையாக உகந்து அதடியாக அன்றீன்ற கன்றுக்கிரங்கிச் சுரக்கும் धेनुவைப்
1.14 போலே யிद्देशिकரிவ்வாत्माவுக்கு अज्ञान संशयविपर्ययங்கள் தீரவேண்டு மென்று மிகுதி குறைவறச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு ‘‘तत्त्वेन यश्चिदचिदीश्वर तत्स्वभावे’’ त्यादिகளிற்படியே ईश्वरனுடையவும் ईशितव्यங்களு டையவும் स्वरूपस्वभावसंबन्धங்களும், भोगापवर्गங்களும், त्याज्योपादेयங்களான இவற்றினுடையவுபாயங்களும், அவற்றின் गतिप्रकारங்களும், उक्तानुक्तங் களான मोक्षविरोधिகளாகிற இவ்वर्थங்கள் मुमुक्षुவான இவ்வாत्माவுக்கு ज्ञातव्यங்கள். இவ்வर्थங்களெல்லாம் अध्यात्मविषयशब्दराशिயில் सारतमமான रहस्यत्रयத்திலே प्रतितन्त्रसारोद्धारेण संग्रहिக்கப்படுகிறதுகள்.
1.15 திருவுடன் வந்த செழுமணிபோற்றிருமாலிதயம்
மருவிடமென்ன மலரடி சூடும் வகைபெறு நாம்,
கருவுடன்வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகா-
தருவுடனைந்தறிவா ரருள்செய்ய வமைந்தனரே. ( 8 )
1.16 कर्माविद्यादिचक्रे प्रतिपुरुषमिहानादिचित्रप्रवाहे
तत्तत्काले विपक्तिर्भवति हि विविधा सर्वसिद्धान्तसिद्धा ।
तल्लब्धस्वावकाशप्रथमगुरुकृपागृह्यमाणः कदाचि
न्मुक्तैश्वर्यान्तसंपन्निधिरपि भविता कश्चिदित्थं विपश्चित् ॥ ७ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे उपोद्घाताधिकारः प्रथमः ॥