॥ श्रीमद्रहस्यत्रयसारे कृतकृत्याधिकारः ॥ १३ ॥
13.1 समर्थे सर्वज्ञे सहजसुहृदि स्वीकृतभरे
यदर्थं कर्तव्यं न पुनरिह यक्किञ्चिदपि नः ।
नियच्छन्तस्तस्मिन्निरुपधिमहानन्दजलधौ
कृतार्त्थीकुर्मः स्वं कृपणमपि कैङ्कर्यधनिनः ॥ ३० ॥
13.2 இவ்வுपायविशेषनिष्ठன் प्रपत्तिக்கு अनन्तरकालந்துடங்கித் தானிதுக்குக் கோலின फलத்தைப்பற்ற தனக்கு कर्तव्यांशத்தில் अन्वयமில்லாமையாலும் कर्तव्यांशம் सकृदनुष्ठानத்தாலே सिद्ध(कृत)மாகையாலும் स्वतन्त्रனாய் सत्यसङ्कल्पனான फलप्रदன் ‘‘माशुचः’’ என்றருளிச்செய்கையலும், தனக்குப் பிறந்த
13.3 भरन्यासरूपदशैயைப் பார்த்து निर्भरனாய், ‘‘मामेकं शरणं व्रज’’ என்கிறபடியே सिद्धोपायत्वेन स्वीकृतனான सर्वेश्वरன் ‘‘अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि’’ என்று फलप्रदानसङ्कल्पத்தைப் பண்ணுகையாலே இப்படி विश्वसनीयனுமாய் समर्थனுமாய் उपायभूतனுமான ईश्वरனைப் பார்த்து फलसिद्धिயில் निस्संशयனுமாய் निर्भय னுமாய் கடையறவிட்ட अन्यपुरुषार्थங்களையும் காம்பறவிட்ட उपायान्तरங்
13.4 களையும் अकिञ्चनன் अयत्नமாகमहानिधिயைப்பெறுமாப்போலே தான் பெறப்புகுகிற परमपुरुषार्थத்தையும் பார்த்து हृष्टमनाவாய் ‘‘देवर्षिभूतात्मनृणां पितॄणां न किङ्करो नायमृणी च राजन् । सर्वात्मना यश्शरणं शरण्यं नारायणं लोकगुरुं प्रपन्नः ॥’’(பாகவதம் 11-5-41)
13.5 என்கிற श्लोकத்தின்படியே प्रजापतिपशुपतिயென்றாப்போலே பேரிட்டுக் கொண்டிருக்கிற सजातीयரான क्षेत्रज्ञரைப்பற்ற ஒரோரवसரங்களிலே கைக்கூலிபோலே சில उपाधिகளடியாக எழுதாமறையிலே யேறிட்டுக்கிடக்கிற அடிமைத்தீட்டும் முதல் மாளாதேபொலிசையிட்டுப்போருகிற தனிசு தீட்டுங் கிழித்தவனாகையாலே पञ्चमहायज्ञादिகளான नित्यनैमित्तिकங்களில் அவர்கள் பேர் சொல்லும்போது ‘‘ये यजन्ति पितॄन् देवान् ब्राह्मणान् सहुताशनान् ।
13.6 सर्वभूतान्तरात्मानं विष्णुमेव यजन्ति ते ।’’(பாரதம் ஶாந்திபர்வம் 355-41) इत्यादिகளில் महर्षिகள் அறுதியிட்டபடியே राजसेवकர் राजाவுக்குச் சட்டைமேலே மாலையையும் आभरणத்தையுமிட்டாலும் சட்டையில் துவக்கற்று राजाவின் प्रीतिயே प्रयोजनமாகத் தெளிந் திருக்குமாப்போலே यज्ञाग्रहराद्ध्यायादिகளிலும் श्रीहस्तिगिरिमाहात्म्यத்திலும்,
13.7 ‘‘साक्षादप्यविरोधं जैमिनिः’’(ப்ரம்மஸூத்ரம் 1-2-29) என்கிற सूत्रத்திலும் சொல்லுகிறபடியே देवர்கள் पितृக்கள் என்கிற சட்டைகளோடு துவக்கற அவ்வோ शब्दங்கள் अवयव- शक्तिपौष्कल्यங்களாலே ईश्वरன்பக்கலிலே नारायणादिशब्दங்கள் போலே
13.8 நிற்கிற நிலையையுங்கண்டு அவற்றினுடைய उच्चारणादिகளில் श्वेतद्वीपवासिகளான शुद्धयाजिகளுக்குப்போலே தன் परमैकान्तित्वம் குலையாதே நிற்கிறபடியை निरूपिத்துத் தன் वर्णाश्रमनिमित्तगुणाद्यधिकारத்துக்கு अनुरूपமாக அடிமைகொள்ள संकल्पिத்திருக்கிற शासिताவான शेषिயினுடைய शास्त्रवेद्याज्ञानुज्ञापरिपालनरूपकैङ्कर्यमुखத்தாலே प्रत्यक्षविदितपरमपुरुषाभिप्रायரான मुक्तரைப்
13.9 போலே किञ्चित्करனாய்க்கொண்டு मुक्ततुल्यனாய் उपायपूर्तिயாலே कृतकृत्य னென்றும் पुरुषार्थपूर्तिயாலே कृतार्थனென்றும், शास्त्रங்களாலும் तन्निष्ठராலும் கொண்டாடும்படியாயிருக்கும். இவனுடைய விந்த कृतकृत्यत्वानुसन्धानத்தை ‘‘अतस्त्वन्तव तत्वतो मत् ज्ञानदर्शनप्राप्तिषु निस्संशयस्सुखमास्व’’(ஶரணாகதிகத்யம்.) என்று शरणागतिगद्यத்திலே निगमिத்தருளினார். இதுக்குக் கருத்து अनादिकालம் आज्ञाति-
13.10 लङ्घनமடியாகவுண்டான भगवन्निग्रहத்தாலே संसरिத்துப்போந்த நமக்கு अवसरप्रतीक्षैயான भगवत्कृपैயடியாகவுண்டான सदाचार्यकटाक्षविषयीकारத்தாலே வந்த द्वयोच्चारणानूच्चारणத்தாலே प्रपत्त्यनुष्ठानம் பிறந்த பின்பு शरण्यप्रसादनங் களில் இதுக்கு மேலொன்றில்லாமையாலே निग्रहहेतुக்களை யெல்லாம் க்ஷமித்து, தீர்ந்தவடியவர்தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல सर्व-शेषिயான श्रियःपति தன்பேறாகத் தானே रक्षिக்குமென்று தேறி निर्भरனாயிரு என்கை. இது मा शुचः என்கிற शरण्यवाक्यத்திலும் தீர்ந்த பொருள்.
13.11 இவனுக்குப் प्रपत्तिக்கு முன்புற்ற शोकம் अधिकारத்திலே சேருகையாலே முன்பு शोकिத்திலனாகில் अधिकारिயல்லாமையாலே, कारणाभावात् कार्याभावः என்கிற न्यायத்தாலே उपाय निष्पत्तिயுண்டாகாது. उपायस्वीकारம் பண்ணினா னாகத் தன்னை நினைத்திருந்த பின்பு शरण्योक्तिயிலே நெகிழ்ச்சியுடையனாய் சோகித்தானாகில், कार्याभावात् सामग्र्यभावः என்கிற न्यायத்தாலே पूर्णोपायனல்லாமையாலே फलம் उपायपूर्तिसापेक्षமாய்க்கொண்டு विळंबिக்கு
13.12 மென்றறியலாம். முன்பு प्रसक्त शोकனாய்ப் பின்பு मा शुचः என்று प्रतिषेधिத் திருக்கிறபடியே वीतशोकனானவன் कृतकृत्यனென்றறியலாம்.
மன்னவர் விண்ணவர் வானோரிறையொன்றும் வான்கருத்தோர்
அன்னவர் வேள்வியனைத்துமுடித்தனரன்புடையார்க்-
கென்னவரந்தரவென்று நம்மத்திகிரித்திருமால்
முன்னம் வருந்தி யடைக்கலங்கொண்ட நம்முக்கியரே. (20)
13.13 भगवति हरौ पारं गन्तुं भरन्यसनं कृतं
परिमितसुखप्राप्त्यै कृत्यं प्रहीणमकृत्यवत् ।
भवति च वपुर्वत्तिः पूर्वं कृतैर्नियतक्रमा
परमिह विभोराज्ञासेतुर्बधैरनुपाल्यते ॥ ३१ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे कृतकृत्याधिकार स्त्रयोददशः ॥