॥ श्रीमद्रहस्यत्रयसारे प्रधानप्रतितन्त्राधिकारः ॥ ३ ॥
3.1 आधेयत्व-प्रभृति-नियमैरादिकर्तुश्शरीरं
सत्ता-स्थेम-प्रयतन-फलेष्वेतदायत्तमेतत् ।
विश्वं पश्यन्निति भगवति व्यापकादर्शदृष्टे
गंभीराणामकृतकगिरां गाहते चित्तवृत्तिम् ॥ १० ॥
3.2 प्रतितन्त्रமாவது மற்றுள்ள सिद्धान्तिகளொருவருமிசையாதே தன்னுடைய सिद्धान्तத்திற்கே असाधारणமான अर्थம். இங்கு वेदान्तिகளான நம்முடைய दर्शनத்திற்கே असाधारणமாய் प्रधानமுமான अर्थம் எதென்னில் चेतनाचेतनங்களுக்கும் ईश्वरனுக்குமுண்டான शरीरात्मभावसंबन्धादिகள். அதில் ईश्वरனுக்கு शरीरित्वமாவது चेतनाचेतनद्रव्यங்களைப்பற்ற नियमेन धारकனுமாய் नियन्ताவுமாய், शेषिயுமாயிருக்கை. चेतनाचेतनங்களுக்கு शरीरत्वமாவது, नियमेन ईश्वरனைப்பற்ற धार्यமுமாய், नियाम्यமுமாய், शेषமுமான द्रव्यமாயிருக்கை.
3.3 चेतनाचेतनங்களைப்பற்ற धारकனுமாய் नियन्ताவுமாகையாவது, தன் स्वरूपத்தாலும் सङ्कल्पத்தாலும் यथार्हं सत्ता-स्थिति-प्रवृत्तिகளுக்கு प्रयोजकனாயிருக்கை. அதெங்ஙனேயென்னில், ईश्वरன் தன் स्वरूपनिरूपकधर्मங்களுக்கும் निरूपितस्वरूपविशेषणங்களான குணங்களுக்கும் போலே स्वव्यतिरिक्तसमस्तद्रव्यங்களுக்கும் अव्यवहितமாக स्वरूपेण आधारமாயிருக்கும்.
3.4 அவ்வோ द्रव्यங்களை आश्रयिத்திருக்கும் गुणादिகளுக்கு அவ்வோ द्रव्यद्वारा आधारமாகயிருக்கும். ஜீவர்களாலே धरिக்கப்படுகிற शरीरங்களுக்கு जीवद्वारा आधारமாக இருக்குமென்று சிலர் சொல்லுவார்கள். ஜீவனை द्वारமாகக் கொண்டும் स्वरूपத்தாலும் आधारமாக இருக்குமென்று சில आचार्यர்கள் சொல்லுவார்கள். இப்படி सर्वமும் ईश्वर स्वरूपத்தைப்பற்ற अपृथक्सिद्धविशेषणமாகையாலே இவற்றின் सत्तादिகளாश्रयसत्ताधीनங்கள்.
3.5 सर्ववस्तुக்களுடையவும் सत्तै संकल्पाधीनैயாகையாவது, अनित्यங்கள் अनित्येच्छैயாலே उत्पन्नங்களாயும், नित्यங்கள் नित्येच्छासिद्धங்களாயுமிருக்கை. இவ்வर्थத்தை ‘‘इच्छात एव तव विश्वपदार्थसत्ता’’ என்கிற श्लोकத்தாலே अभियुक्तர் விவேகித்தார்கள். இத்தாலே सर्वத்தினுடையவும் सत्तानुवृत्तिरूपैயான स्थितिயும் ईश्वरेच्छाधीनैயானபடியாலே सर्वமும் ईश्वरसंकल्पाश्रितமென்று சொல்லுகிறது. गुरुद्रव्यங்கள் संकल्पத்தாலே धृतங்களென்று शास्त्रங்களில்
3.6 சொல்லுவது – ‘‘द्यौस्सचन्द्रार्कनक्षत्रं खं दिशोभूर्महोदधिः । वासुदेवस्य वीर्येण विधृतानि महात्मनः ॥’’ என்கிறபடியே ஓரோரு देशविशेषங்களிலே விழாதபடி நிறுத்துகையைப்பற்ற.
இப்படி इच्छाधीन सत्तास्थितिप्रवृत्तिகளான वस्तुக்களுக்கு परमात्म स्वरूपம் என் செய்கிறதென்னில். परमात्माவினுடைய इच्छै இவ்வஸ்துக்களை परमात्माவின் स्वरूपाश्रितங்களாக வகுத்துவைக்கும். இப்படி सर्ववस्तुவும்
3.7 ईश्वरस्वरूपाधीनமுமாய் ईश्वरेच्छाधीनமுமாயிருக்கும். लोकத்திலும் शरीरं शरीरिயினுடைய स्वरूपाश्रितமுமாய் संकल्पाश्रितமுமாய் இருக்கக்காணா நின்றோம். ஜீவனிருந்தகாலமிருந்து இவன் விட்டபோதழிகையாலே स्वरूपाश्रितम् । இவ்வर्थं संकल्पமில்லாத सुषुप्त्याद्यवस्थैகளிலே தெளிவது. जागरादि दशैகளில் संकल्पத்தாலே விழாதபடி தாங்கும்போது संक्लपाश्रितம் என்னக்கடவது. இதில் स्वरूपाश्रितமாயிருக்கிறபடியை आधेयत्वமென்றும், संकल्पाधीनமாயிருக்கிறபடியை नियाम्यत्वமென்றும் சொல்லுகிறது.
3.8 ईश्वरன் सर्वशेषिயாகையாவது ‘‘उपादत्ते सत्ता-स्थिति-नियमनाद्यैश्चिदचितौ स्वमुद्दिश्य श्रीमानिति वदति वागौपनिषदी । उपायोपेयत्वे तदिह तव तत्त्वं न तु गुणौ अतस्त्वां श्रीरङ्गेशय शरणमव्याजमभजम् ॥’’ என்கிறபடியே தன் प्रयोजनத்துக்காகவே पारार्थ्यैक स्वभावங்களான விவற்றை उपादानம்பண்ணி அவற்றாலே अतिश-यवाனாகை.
3.9 இந்த आधाराधेयभावादिகளாலிச் चेतनனுக்கு फलिப்பதென்னென்னில்:- आधाराधेयभावத்தாலே யவனுடைய ज्ञानशक्त्यादिகளுக்குப் போலே अपृथक्सिद्धस्वरूपलाभமும், शेषशेषिभावத்தாலே आत्माभिमानानुगुणपुरुषार्थव्यवस्थैயின் படியே स्वरूपानुरूपமான पुरुषार्थरुचिயும், शेषशेषिभावத்தாலும் नियन्तृनियाम्यभावத்தாலும் स्वरूपानुरूपமான पुरुषार्थத்துக்கनुरूपமுமாய் निरपेक्षமுமாயிருந்துள்ள उपायविशेषத்தை அறிகையும் फलिக்கும். ஆக இவற்றால் இச்चेतनன் अनन्याधारன், अनन्यप्रयोजनன், अनन्यशरणன் என்றதாயிற்று.
இவ்வर्थம் प्रथमरहस्यத்தில் கிடைக்கிறபடி எங்ஙனேயென்னில்:- नारायणशब्दத்தில் तत्पुरुष बहुव्रीहि समासद्वयத்தாலுமுண்டான धारकत्व व्यापकत्वादिகளாலே अनन्याधारत्वादि विशिष्ट स्वरूपलाभமும், पारार्थ्य पारतन्त्र्यगर्भமான
3.10 கீழில் पदद्वयத்தாலே अनन्यप्रयोजनत्वமும் अनन्यशरणत्वமும் फलिக்கும். प्रपत्त्यनुष्ठानप्रकाशकமான मन्त्ररत्नத்தில் पूर्वखण्डத்தாலே अनन्यशरणत्वமும், उत्तरखण्डத்தாலே अनन्यप्रयोजनत्वமும் उभयभागத்தாலும் अनन्याधारत्वமும் प्रकाशिக்கிறது. இப்படி शाब्दமாகவும் आर्थமாகவும் चरमश्लोकத்திலும் இவ்வகுப்புக் கண்டுகொள்வது.
3.11 இப்படி चरमश्लोकத்திலே सिद्धोपाय वशीकरणार्थமாக विहितமான साद्ध्योपाय विशेषத்தை द्वयத்தாலே अनुष्ठिக்கும் போதைக்கு अनुसन्धेयங்களாய்க்கொண்டு अवश्यापेक्षितங்களான अर्थங்களையெல்லாம் சிறிய கண்ணாடி பெரிய உருக்களைக் காட்டுமாப்போலே சுருங்கத் தெளிவிக்கும் திருमन्त्रம்.
3.12 இதில் प्रथमपदத்திலर्थங்களை अर्जुनरथத்திலும், ‘अग्रतः प्रययौ रामः’ என்கிற श्लोकத்திலும் கண்டுகொள்வது. द्वितीयपदத்தில் शब्दத்தாலும் अर्थस्वभावத்தாலும் வரும் अर्थங்களை श्रीभरताதாழ்வானுடையவும் श्रीशत्रुघ्नाழ்வானுடையவும் वृत्तान्तங்களிலே அறிவது. “நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணனே நீ யென்னை யன்றியிலை” என்னும்படி நிற்கிற नारायणशब्दार्थத்தை कोसलजनपदத்தில் जन्तुக்களையும் चक्रवर्तिத் திருமகனையும் उदाहरणமாக்கிக் கண்டுகொள்வது. पूर्वपदद्वयத்தில் தோற்றின काष्ठाप्राप्त पारार्थ्य पारतन्त्र्यங்கள் பேரணியாகத் तृतीयपदத்தில் चतुर्थिயில் கருத்திலே
3.13 प्रार्थनीयமான शेषिயுகந்த कैङ्कर्यத்தை இளையபெருமாளுடையவும், இவருடைய अवतारविशेषமான திருவடிநிலையாழ்வாருடையவும், प्रवृत्तिनिवृत्तिகளிலே தெளிவது. இது திருमन्त्रार्थानुसन्धानத்துக்குக் குறிப்பாக அப்புள்ளாரருளிச் செய்த விரகு. இதின்படியிலே द्वयத்திலும் चरमश्लोकத்திலுமுள்ள अर्थங்கள் தெளிந்துகொள்வது.
3.14 இவற்றில் ईश्वरனுக்கு प्रकाशिத்த शेषित्वं चेतनाचेतन साधारणधर्मமாகையாலே चेतनैकान्तமான स्वामित्वமாகிற विशेषத்திலே पर्यवसिப்பித்து अनुसन्धिக்கப் प्राप्तம். இப்படித் தன்னுடைய शेषत्वமும் सामान्यமாகையாலே दासत्वமாகிற विशेषத்திலே विश्रमिப்பித்து अनुसन्धिக்கவேணும். இவற்றில் सामान्यமான शेषशेषिभावம் प्रथमाक्षरத்தில் चतुर्थिயாலே प्रकाश्यம். இதின் विशेषமான दासत्व स्वामित्वங்கள் இருவரும் चेतनராய்த் தோற்றுகையாலே अर्थसिद्धம். இப்படி नारायणशब्दத்திலும் सामान्यமும் विशेषமும் கண்டுகொள்வது. இதில் सामान्य மான शेषत्वத்தாலே चेतनனுக்குப் प्राप्तமான किञ्चित्कारம் दासत्वமாகிற विशेष த்தாலே कैङ्कर्यरूपமான पुरुषार्थமாயிற்று. இப்படி शेषित्वத்தாலே வந்த
3.15 ईश्वरனுடைய अतिशययोगமும் स्वामित्वமாகிற विशेषத்தாலே அவனுக்கு पुरुषार्थமாய் फलिக்கிறது. चेतनருடைய रक्षणத்தில் ईश्वरன் प्राप्तனுமாய் शक्तனுமாய், तदधीन-प्रवृत्तिயையொழிய चेतनர் अप्राप्तருமாய் अशक्तருமாயிருக்கைக்கு निबन्धनம், ईश्वरனுடைய निरुपाधिक-शेषित्वமும், निरुपाधिक-नियन्तृत्वமும்; இவர்களுடைய निरुपाधिक-शेषत्वமும், निरुपाधिक-नियाम्यत्वமும். உடையவன் உடைமையை रक्षिக்கையும் समर्थன் असमर्थனை रक्षिக்கையும் प्राप्तமிறே. रक्षिக்கும்போது कर्मवश्यரை ஒரு उपायத்திலே மூட்டி रक्षिக்கை ईश्वरனுக்கு स्वसङ्कल्पनियतம்.
3.16 நிலைதந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலதொன்றெனாவகை யெல்லாந் தனதெனுமெந்தையுமாய்த்
துலையொன்றிலையென நின்ற துழாய் முடியானுடம்பாய்
விலையின்றி நாமடியோமென்று வேதியர்மெய்ப்பொருளே. (10)
3.17 यद्येतं यतिसार्वभौमकथितं विद्यादविद्यातमः-
प्रत्यूषं प्रतितन्त्रमन्तिमयुगे कश्चिद्विपश्चित्तमः ।
तत्रैकत्र झटित्युपैति विलयं तत्तन्मतस्थापना-
हेवाक-प्रथमान-हैतुक-कथा-कल्लोल-कोलाहलः ॥११॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे प्रधानप्रतितन्त्राधिकारस्तृतीयः ॥