॥ श्रीमद्रहस्यत्रयसारे शिष्यकृत्याधिकारः ॥
31.1 अशिथिलगुरुभक्तिस्तत्प्रशंसादिशीलः प्रचुरबहुमतिस्तद्वस्तुवास्त्वादिकेऽपि ।
गुणवति विनियोक्तुङ्गोपयन् संप्रदायं
कृतविदनघवृत्तिः किन्न विन्देन्निधानम् ॥ ७१ ॥
31.2 இவ்வर्थங்களையெல்லாம் மிடியனுக்கு அகத்துக்குள்ளே महानिधिயைக் காட்டிக்கொடுக்குமாப்போலே வெளியிடுகையாலே महोपकारकனான வாचार्यன்றிறத்தில் शिष्यன் कृतज्ञனாயிருக்கவேணுமென்றும், द्रोहம் பண்ணாதொழியவேணுமென்றும், शास्त्रங்கள் சொன்னவிடம் இரண்டு विभूतिயும் विभूतिमाனும் இவனைச் சீச்சீயென்னும்படியுமாய், हितஞ் சொன்ன प्रह्लाद विभीषणादिகளுக்கு प्रतिकूलரான हिरण्यरावणादिகளோடு तुल्यனுமாய், 1‘‘विद्याचोरो गुरुद्रोही वेदेश्वरविदूषकः । त एते बहुपाप्मानस्सद्यो दण्ड्या इति श्रुतिः’’() என்கிற படியே दण्ड्यனுமாகாமைக்காகவத்தனை; प्रत्युपकारஞ் சொன்னபடியன்று. 2‘‘शरीरमर्थं प्राणं च सद्गुरुभ्यो निवेदयेत्’’(விஹகேச்வரஸம்ஹிதை) என்றும், 3‘‘सर्वस्वं वा तदर्धं वा तदर्धार्धार्धमेव वा ।
31.3 गुरवे दक्षिणां दद्याद्यथाशक्त्यपि वा पुनः’’() என்றுமிப்புடைகளிற் சொல்லுகிறவையும் प्रणिपाताभिवादनादि களைப்போலே இவனுக்குச் சில कर्तव्यங்களைச் சொல்லிற்றத்தனை போக்கி, ‘‘कृपया निःस्पृहो वदेत्’’(சாண்டில்ய ஸ்ம்ருதி 1-116) என்னும்படியிருக்கிற अनन्यप्रयोजनனான आचार्यனுக்கு प्रत्युपकारஞ் சொன்னபடியன்று. भगवाன் பக்கலில் போலே आचार्यன்பக்கலிலே वर्तिப்பானென்றும், அவனுக்கு நல்லனானாற்போலே आचार्यனுக்கும் நல்லனாயிருப்பான் என்றும் वेदान्तங்களிற்சொன்னதுவும் ‘‘न प्रमाद्येद्गुरौ शिष्यो वाङ्मनःकायकर्मभिः । अविभज्यात्मनाऽचार्यं वर्तेतास्मिन् यथाच्युते”(சாண்டில்ய ஸ்ம்ருதி 1-118), 6”देवमिवाचार्यमुपासीत’’(6 ஆபஸ்தம்பதர்மம் 2-6-13) என்றும் शाण्डिल्यापस्तंबादिகள் சொன்னதும் आचार्यனுக்குப் प्रत्युपकारஞ்சொன்னபடியன்று. शास्त्रचक्षुஸ்ஸான விவன் விழிகண்குருடனாகாமைக்கும் भगवदनुभवம் போலே विलक्षणமான இவ்வनुभवத்தை जन्मभिक्षुவான விவனிழவாமைக்குஞ் சொல்லிற்றத்தனை.
31.4 இப்படி இவ்விஷயத்தில் प्रत्युपकारமில்லையென்னுமிடத்தை ‘‘ब्रह्मविद्याप्रदानस्य देवैरपि न शक्यते । प्रतिप्रदानमपि वा दद्याच्छक्तित आदरात्’’(சாண்டில்ய ஸ்ம்ருதி 1-117) என்று शाण्डिल्यभगவானருளிச்செய்தான். இதில் यथाशक्तिदानஞ்சொன்னதுவும் தன்னாदरத்துக்குப்போக்கு வீடாகச்சொன்னதத்தனை. இவ்வளவைக் கொண்டு प्रत्युपकारம் பண்ணினானாகத் தன்னை நினைத்திருக்கப்பெறான்.
இப்படி प्रत्युपकाररहितனான இவனுக்குச் செய்யவடுப்பதென்? என்னில்; இவனுपदेशिத்தவर्थங்களை ‘‘कपालस्थं यथा तोयं श्वदृतौ च यथा पयः । दुष्टं स्यात् स्थानदोषेण वृत्तहीने तथा श्रुतम्’’(பாரதம் சாந்திபர்வம் 35-42) என்கிறபடியே தன் विपरीतानुष्ठानங்களாலே कपालस्थतोयादिகளைப்போலே अनुपजीव्यமாக்காதொழியவும், 9‘‘यच्छ्रतं न विरागाय न धर्माय न शान्तये । सुबद्धमपि शब्देन काकवाशितमेव तत्’’(இதிஹாஸஸமுச்சயம் 14-43) என்கிறபடியே
31.5 கற்கையே प्रयोजनமாக்காதொழியவும், இவற்றைக்கொண்டு वान्ताशिயா காதொழியவும், இவற்றையெல்லாம் ‘‘पण्डितैरर्थकार्पण्यात् पण्यस्त्रिभिरिव स्वयम् । आत्मा संस्कृत्य संस्कृत्य परोपकरणीकृत’’() इत्यादिகளிற் பரிஹஸிக்கிறபடியே गणिकालங்காரமாக்குதல், விலைச்சாந்தாக்குதல், அம்பலத்திலவல்பொதியாக்குதல், குரங்கின் கையில் பூமாலையாக்குதல் செய்யாதொழியவும், அடியிலே विद्यैதான் ‘‘शेवधिष्टेऽस्मि रक्ष माम्’’(மநுஸ்ம்ருதி 2-114) என்று ब्राह्मणனை अपेक्षिத்தபடியிலே முன்பே असूयादिகளைக்கைப்பிடித்துவைப்பார் கையிற் காட்டிக்கொடாதே रक्षिத்துக்கொள்ளவும் பிறவிக்குருடனான தன்னை அயர்வறுமமரர்கள் परिषத்துக்கर्हனாம்படி திருத்தின परमोपकारकனுக்குச்
31.6 செய்யலாம் प्रत्युपकारமில்லை என்னுமிடத்தைத் தெளிந்து, ‘‘एकान्ती व्यपदेष्टव्यो नैव ग्रामकुलादिभिः । विष्णुना व्यपदेष्टव्यस्तस्य सर्वं स एव हि’’(விஷ்வக்ஸேநஸம்ஹிதை) என்கிற நிலை யிலுங்காட்டில், ‘‘वसिष्ठव्यपदेशिनः’’(ராமாயணம் பாலகாண்டம் 19-2) என்கிறபடியே शरण्यனானபெருமாள் वंशक्रमागतமாகப்பிறந்து படைத்துக் கைக்கொண்ட நிலை இந்நிலை யென்று परिग्रहिத்து ’’என்னைத் தீ மனங்கெடுத்தாயுனக்கென் செய்கே’’(திருவாய்மொழி 2-7-8) னென்றிருக்கவும் प्राप्तம்.
தானிப்படிப்பெற்ற रहस्यत्रयसारार्थமான महाधनத்தை முன்னிலधिकारத்திற் சொன்னபடியே उचितस्थानமறிந்து समर्पिக்கும்போது ‘‘कथयामि यथापूर्वं दक्षाद्यैर्मुनिसत्तमैः । पृष्टः प्रोवाच भगवानब्जयोनिः पितामहः ॥ तैश्चोक्तं पुरुकुत्साय भूभुजे नर्मदा-
31.7 तटे । सारस्वताय तेनापि मम सारस्वतेन च’’(விஷ்ணுபுராணம் 2-8-9) என்று श्री पराशरब्रह्मर्षि मैत्रेयभगवाனுக் கருளிச்செய்தாற்போலே गुरुपरंपरैயைप्रकाशिப்பித்துக்கொண்டு தன் कृतज्ञதையும் अर्थத்தின் சீர்மையுந்தோற்ற उपदेशिக்கவேணும். अध्यात्मरहस्यங்களைச் சொல்லுமவன் संप्रदायமன்றிக்கேயிருக்க ஏடுபார்த்தாதல், சுவரேறக்கேட்டாதல் சொல்லுமாகில் களவுகொண்டாभरणம் பூண்டாப் போலே கண்டாற்கெல்லாம் தானஞ்சவேண்டும்படியாம். 16‘‘यदृच्छया श्रुतो मन्त्रश्छन्नेनाथच्छलेन वा । पत्रेक्षितो वा व्यर्थस्स्यात् प्रत्युतानर्थदो भवे’’(பாத்மஸம்ஹிதை சர்யாபாதம் 23-49) दित्यादिகளிற்
31.8 படியே प्रत्यवाय पर्यन्तமுமாம். கேட்டுச் சொல்லச்செய்தே ‘‘तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया’’(கீதை 4-34), ‘‘प्रणिपत्याभिवाद्य चे’’(விஷ்ணுபுராணம் 1-1-1) त्यादिகளிற் சொல்லுகிற முறை யொழியக் கேட்டுச் சொல்லுமாகில் காலன்கொண்டாभरणம் பூண்டாற் பொலே கண்டாரெல்லாருந்தன்னையருவருக்கும்படியாம். 19‘‘यश्चाधर्मेण विब्रूते यश्चाधर्मेण पृच्छति । तयोरन्यतरः प्रैति विद्वेषं वाधिगच्छति’’(பாரதம் சாந்திபர்வம் 335-5) என்கிறபடியே अनर्थावहமுமாம். यथान्यायம் கேட்டுச் சொல்லச்செய்தே சொல்லும்போது गुरुவை प्रकाशिப்பியாதொழியுமாகில், இவன் சொல்லுகிற अर्थங்கள் வேரில்லாக் கொத்தான் போலே யடியற்றவையோவென்று शिष्यனுக்கு-
31.9 शिष्यனுக்குமतिशङ्कै பிறக்கும்படியா யनादरविषयமாம். ‘‘स्वगुरूणां स्वशिष्येभ्यः ख्यापनं चाकृतं तथा’’() என்று द्वात्रिंशदपचारवर्गத்திலே गुरुவை प्रकाशिப்பியாதொழிகையும் पठिக்கப்பட்டது. அப்போது ‘‘गुरुं प्रकाशयेद्धीमान् मन्त्रं यत्नेन गोपयेत् । अप्रकाशप्रकाशाभ्यां क्षीयेते संपदायुषी’’() என்கிறபடியே ज्ञानवैशद्यपूर्वकமான भगवदनुभवसंपத்தும் आत्माவுக்கு सत्तानुवृत्तिहेतुவான शेषत्वानुसन्धानपूर्वकस्वनिष्ठैயுங் குலையும் படியாம். गुरुவை प्रकाशिப்பியாநிற்கச்செய்தே அவன்பண்ணின शास्त्रीयोपदेशத்துக்கு विरुद्धஞ்சொல்லுமாகில் विप्रलंभकனென்று பேருமாய் ‘‘ज्यौतिषं व्यवहारं च प्रायश्चित्तं चिकित्सकम् । विना शास्त्रेण यो ब्रूयात् तमाहुर्ब्रह्मघातकम्’’(சேஷதர்மம்) என்கிற படியே पापिष्ठனுமாம். सच्छिष्यனுக்கு प्राप्तदशैயிலுपदेशத்தைத் தவிருமாகில் लुब्धனென்றுபேருமாய் ‘‘पात्रस्थमात्मज्ञानं च कृत्वा पिण्डं समुत्सृजेत् । नान्तर्धाय स्वयं याति जगद्बीजमबीजकृत्’’(பௌஷ்கரம்) என்கிற भगवन्नियोगத்தையுங்கடந்தானாம். ஆகையால்
31.10 விளக்குபிடிக்குமவன் தன்னை राजा ஒரு कार्यத்துக்குப் போகச்சொன்னால் தன்கையில் விளக்கையதுக்கு प्राप्तரானார் கையிலே கொடுத்துப் போமாப் போலே सत्पात्रமானார்க்குத் தான் சொல்லும்போது தனக்குपदेशिத்த आचार्यனை முற்படவெளியிட்டு பின்பு தனக்குपदिष्टமானவर्थங்களையே சொல்லவும், சில कारणங்களாலே दिव्यचक्षुश्श्रोत्रங்கள் பெற்றுத்தானிவற்றாலே யறிந்து சொல்லுமவற்றையும் ‘‘व्यासप्रसादात् श्रुतवानेतद्गुह्यमहं परम् । योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥“(கீதை 18-75) என்கிறபடியே सदाचार्यप्रसादமடியாக இவ்வर्थமறிந்தேன், என் கைமிடுக்காலே யறிந்து சொல்லுகிறேனல்லே னென்றிவ்வுண்மையை வெளியிட்டுக்கொண்டு சொல்லவும் பெறில் இவன் சொல்லுமर्थங்களெல்லாம் सर्वர்க்குமாदरणीयங்களுமாய், இவன் कृतज्ञனாயிருந்தானென்று सात्विकரும் प्रसादिக்கும்படியாய்,
31.11 सत्यवादिயாயிருந்தானென்றுपनिषத்துக்களும் औपनिषदपरमपुरुषனும் தங்களோடொக்க இவனை प्रमाणभूतனென்றாदரிக்கும்படியுமாம். இப்படி कृतज्ञனாயवहितனான शिष्यனைப்பற்ற நாம் செய்த कृषि फलिத்ததென்று अचार्यனும் कृतार्थனாயிருக்கும்.
*साक्षान्मुक्तेरुपायान् यो विद्याभेदानुपादिशत् ।
कथ्यते मोक्षशास्त्रेषु स तु श्रेष्ठतमो गुरुः ॥
आचार्यवत्तया मोक्षमामानन्ति स्मरन्ति च ।
इहामुत्र च तत्पादौ शरणं देशिका विदुः ॥ * ॥
31.12 ஏற்றி மனத்தெழின் ஞானவிளக்கை யிருளனைத்தும் மாற்றினவர்க்கொரு கைம்மாறு மாயனுங் காணகில்லான் போற்றியுகப்பதும் புந்தியிற்கொள்வதும் பொங்குபுகழ்ச் சாற்றி வளர்ப்பதுஞ் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே. (48)
31.13 अध्यासीनतुरङ्गवक्त्रविलसज्जिह्वाग्रसिंहासना
दाचार्यादिह देवतां समधिकामन्यां न मन्यामहे ।
यस्यासौ भजते कदाचिदजहद्भूमा स्वयं भूमिकां
मग्नानां भविनां भवार्णवसमुत्ताराय नारायणः ॥ ७२ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे शिष्यकृत्याधिकार एकत्रिंशः ||