॥ श्रीमद्रहस्यत्रयसारे सिद्धोपायशोधनाधिकारः ॥
23.1 युगपदखिलं प्रत्यक्षेण स्वतस्सततं विद
रवधिदयादिव्योदन्वानशक्यविवर्जितः ।
जलधिसुतया सार्धं देवो जगत्परिपालयन्
परमपुरुषस्सिद्धोपायः प्रतीष्टभरस्सताम् ॥ ५१ ॥
23.2 अनादिकालம் संसरिத்துப்போந்த क्षेत्रज्ञன் अवसरप्रतीக்ஷையான भगवत्कृपैயாலே புரிந்து समीचीनशास्त्रमुखத்தாலே तत्त्वहितपुरुषार्थங்களைத் தெளிந்து, मुमुक्षुவாய் स्वाधिकारानुरूपமாயிருப்பதொருவுपायविशेषத்தை परिग्रहिத்து, कृतकृत्यனாய், தன் निष्ठैயைத் தெளிந்து, அதுக்கनुरूपமாகவிங்கிருந்த நாள் यथाशास्त्रं निरपराधமாகப்பண்ணும் कैङ्कर्यरूपपुरुषार्थமிருக்கும்படியும், शरीरपातानन्तरमर्चिरादि-
23.3 गतिயாலே अप्राकृतदेशविशेषத்திலே சென்றால் இவனுக்கनवच्छिन्नभगवदनुभव-परीवाहமாக வரும் परिपूर्णकैङ्कर्यरूपपरमपुरुषार्थसिद्धिயிருக்கும்படியுஞ் சொன்னோம். இவ்வर्थங்களில் ज्ञातव्यतमமான सिद्धोपायத்தைப்பற்றவும் साद्ध्योपायविषयமாகவும் இவ்வுपायप्रभावविषयமாகவும் कर्मवश्यருக்குக்கடுகத்தெளிவு பிறவாமைக்கு स्वतन्त्रனான सर्वेश्वरன் இவர்களுடைய पूर्वापराधத்தாலேயிட்ட நினைப்பீடுமாறுகைக்கு प्रधानकारणம் மூன்றுண்டு. அவையெவை யென்னில்; ‘‘अस्तु मे’’ என்றपेक्षिத்தால் ‘‘अस्तु ते तयैव सर्वं संपत्स्यते’’ என்கிற திருமுகப்பாசுரமும், सदाचार्यानुग्रहமும், सत्संप्रदायसिद्धिயும். இவற்றில் सदाचार्यानुग्रहத்துக்கு व्याजங்களும் இதின் फलविशेषங்களும் पराशरमैत्रेयसञ्जयाश्वलायनादिवृत्तान्तங்களிலே
23.4 கண்டுகொள்வது. सत्संप्रदायसिद्धिயாவது; தான் सत्वोत्तरனாய் सम्यगुपसन्नனாய் सावधानனாயிருக்குமவस्थैயிலே ख्यातिलाभपूजानिरपेक्षனாய் कारुण्यपरतन्त्रனான सदाचार्यன் सर्वருக்கும் प्रथमाचार्यனான सर्वेश्वरன் முதலாக வுपदेशपरंपरैயாலே வந்த तत्त्वहितங்களை अनपेक्षितविस्तरமுமपेक्षितसङ्कोचமுமில்லாதபடி ‘‘सर्वेषामेव लोकानां पिता माता च माधवः । गच्छध्वमेनं शरणं शरण्यं पुरुषर्षभाः’’(பாரதம் ஆரண்யபர்வம் 192-56.) என்கிற கட்டளையிலேயுपदेशिக்கப்பெறுகை. बहुक्लेशமாய் बुद्धिचलनसंभावனை
23.5 யுண்டான शास्त्रपरिश्रमத்திலनधिकृतருமாய் परमास्तिकருமாயிருப்பார்க்கிவ்வுपदेशமே प्रधानம். மற்றுள்ளார்க்குத் தாங்கள் தெளிகைக்காகவும் कुतर्कங்களாலே கலங்குவாரைத் தெளிவிக்கைக்காகவும் समीचीनयुक्तिகளோடே கேட்கप्राप्तம். ‘‘आर्षं धर्मोपदेशञ्च वेदशास्त्राविरोधिना । यस्तर्केणानुसन्धत्ते स धर्मं वेद नेतरः’’(மநுஸ்ம்ருதி 12-106.) என்கிறபடியே இவ்வर्थங்களை समीचीनतर्कங்களாலே தெளியாதவர்கள் ‘‘काणादशाक्यपाषण्डैस्त्रयीधर्मो विलोपितः’’(அத்ரிஸ்ம்ருதி.) என்கிறபடியே हैतुकராய் वेदविरोधितर्कங்களையிட்டு प्रामाणिकार्थங்களையपहरिப்பார்கள். இவ்வपहारம்
23.6 विभूतिயையும் विभूतिमाனையும் பற்றவிரண்டு வகையாயிருக்கும். அதில்
विभूतिமானை யपहरिக்கையாவது; श्रियःपतिயான सर्वेश्वरனை இல்லையென்னுதல், வேறொருத்தனை ईश्वरனாகக் கட்டி सर्वेश्वरனை विभूतिकोटिயிலே வைத்தல் செய்கை. विभूतिயை யपहरिக்கையாவது; विभूतिயையொரு मुखத்தாலேயில்லையென்னுதல், உண்டாக்கி யீश्वरனோடு संबन्धமறுத்து स्वतन्त्रமென்னுதல், परतन्त्रமாக்கித் தன்னோடு பிறரோடு புணைப்புதல் செய்கை. இவ்வपहारங்களிலேதேனு மொன்று स्वरूपத்தில் मृदुप्रज्ञனாயாत्म समर्पணம் பன்ணினவனுக்கு विपरीतसंसर्गத்தாலே வருமாகில் ‘‘दत्तस्य हरणेन च’’(ஶாண்டில்யஸ்ம்ருதி.) என்கிற வपहारத்திலுங்கொடியதாய் களவு கொண்டு கொடுத்த
23.7 द्रव्यத்தை மீளக் களவு கொண்டாற்போலேயாம். ஆகையால் बहुविधங்களான व्यामोहकारणங்களில் हैतुक संसर्गம் போர परिहरணீயம்.
இவ்வर्थத்தை ‘‘पाषण्डिनो विकर्मस्थान् बैडालव्रतिकान् शठान् । हैतुकान् बकवृत्तींश्च वाङ्मात्रेणापि नार्चयेत्’’(விஷ்ணுபுராணம் 3-18-101.) ‘‘डंभिहैतुकपाषण्डिबकवृत्तींश्च वर्जयेत्’’(மநுஸ்ம்ருதி 4-30.) ‘‘नासद्भिः किञ्चिदाचरेत्’’(யாஜ்ஞய்ல்க்யஸ்ம்ருதி 1-130.) ‘‘त्यज दुर्जनसंसर्गं’’() ‘‘वरं हुतवहज्वालापञ्जरान्तर्व्यवस्थितिः । न शौरिचिन्ताविमुखजनसंवासवैशस’’(பாரதம் ஆரண்யபர்வம்) मित्यादिகளிலே प्रपञ्चिத்தார்கள். இந்த हैतुकரோட்டை संभाषणம்
23.8 ‘‘माययापहृतज्ञानाः’’(கீதை 7-15.) என்கிறபடியே கண்டு மதிகெட்டானாக்கி, ‘‘चतुर्विधा मम जना भक्ता एव हि ते श्रुताः’’(பாரதம் ஶாந்திபர்வம் 350-33) என்று ईश्वरன் நம்முடையவர்களென்னும் நாலு வகையிலுங் கூடாதே ’’அளிய நம்பைய’’(திருமாலை 37.) லென்னாதபடி பண்ணி ‘‘न मां दुष्कृतिनोमूढाः प्रपद्यन्ते’’(கீதை 7-15.) என்கிற भगवदिभिमानबाह्यवर्गத்திலே கோப்புண்ணப்பண்ணும். अशरण्यशरण्यனான सर्वेश्वरனை शरणமாகப்பற்றுகிற परमास्तिकனுக்குச் சிலரோடு சேர்த்தியால் बाह्यதை வாராதாகிலும் அவனுக்குக் கலக்கங்கள் வரவும் அதுக்கு सदाचार्यர்கள் परिहारம் பண்ணவுங்காணா நின்றோம். महर्षिகளும் ‘‘एकं यदि भवेच्छास्त्रं ज्ञानं निस्संशयं भवेत् । बहुत्वादिह शास्त्राणां ज्ञानतत्त्वं सुदुर्लभम् ॥’’(இதிஹாஸஸமுச்சயம் 33-105.) என்றும், ‘‘निस्संशयेषु सर्वेषु नित्यं वसति वै हरिः ।
23.9 ससंशयान् हेतुबलान्नाद्ध्यावसति माधवः ॥’’(பாரதம் ஶாந்திபர்வம் 859-71.) என்றுஞ்சொன்னார்களிறே. ‘‘न क्रोधो न च मात्सर्यं न लोभो नाशुभामति’’ (பாரதம் ஆநுஶாஸநிகபர்வம் 254-135.) रित्यादिகளும் आत्मगुणपरिपूर्णाधिकारिविशेषविषयத்திலேயாகக்கடவன. ஆனபின்பு आरुरुक्षुக்களுக்குக் கலக்க முண்டென்னுமிடம் ‘‘श्रूयते किल गोविन्दे भक्तिमुद्वहतां नृणाम् । संसारन्यूनताभीतास्त्रिदशाः परिपन्थिनः’’(விஷ்ணுதர்மம் 2-25.) ‘‘सत्यं शतेन विघ्नानां सहस्रेण तथा तपः । विघ्नायुतेन गोविन्दे नृणां भक्तिर्निवार्यत’’(விஷ்ணுதர்மம் 74-94.) इत्यादिகளிலே प्रसिद्धம். அதில் முற்பட सिद्धोपायத்தைப் பற்ற வருங்கலக்கங்களும் அவற்றின் परिहारங்களுஞ் சொல்லுகிறோம். अनादिकालம் अनादरिத்த வீश्वरன் இன்றொ
23.10 ருத்தனை யாदरिக்கிறது தன் स्वातन्त्र्यमात्रத்தாலேயன்றோ; இங்ஙனன்றாகில் 19’’இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள் வைத்தான் அன்றென்னைப் புறம்போகப் புணர்த்ததென் செய்வா’’(திருவாய்மொழி 10-8-9) னென்று ஆழ்வார் விண்ணப்பஞ்செய்ய, सर्वेश्वरன் 20’’சூழ் விசும்பணிமுகில் தூரியமுழக்கின’’(திருவாய்மொழி 10-9-1) விதொழிய வேறொரு வுத்தரமருளிச் செய்தானோ; ஆகையால் நாமொரு उपायानुष्ठानம் பண்ணுகையென்னென்பது, 21’’நடுவே வந்துய்யக்கொள்கின்ற நாத’’(திருவாய்மொழி 1-7-5) னென்கிறபடியே அருள் புரிந்த சிந்தை
23.11 அடியார்மேல் வைத்து அவன் தானே रक्षिத்தபோது காணுமத்தனையன்றோ வென்று சிலர் கலங்குவர்கள். இவர்களைத் தெளிவிக்கும் படி, ईश्वरன் स्वतन्त्रனேயாகிலும் वैषम्यनैर्घृण्यங்களாகிற दोषங்கள் தனக்குத் தட்டாமைக்காக இவன் பக்கலிலே யொரு व्याजத்தையுண்டாக்கி அத்தை अवलंबिத்துத் தான் रक्षिக்கும். இவ்வर्थத்தை ’’திருமாலிருஞ்சோலை மலையென்றேனென்னத் திருமால் வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தா’’(திருவாய்மொழி 10-8-1.) னென்றாழ்வார் தாமே யருளிச் செய்தார். இந்த व्याजந்தானும் ईश्वरன்
தன்னாலேயாகிலித்தை முன்பேயுண்டாக்காதே விட்டதென்னென்னில்;
23.12 இவ்வாत्माக்களுக்கनादिயான कर्मप्रवाहங்கள் विषमविपाकसमयங்களாய்க் கொண்டு போருகையாலே ईश्वरன் कर्मानुरूपफलप्रदனல்லாதபோது वैषम्यदोषம் வருகையாலே முன்பிதுக்கவसरமாயிற்றில்லை யென்னுமிடம்
कार्यविशेषदर्शनத்தாலே कल्पितம். இங்ஙனிசையாத போது सर्वसिद्धान्तिகளுக்குமிதுக்கு முன்பில்லாத मोक्षश्रद्धादिகளிப்போது பிறக்கைக்கடியென்னெ ன்றாலுत्तरஞ்சொல்லவிரகில்லை. अनादिकर्मप्रवाहवैचित्र्यத்தாலே யென்னுமுत्तरம் ईश्वरனை இசைந்தார்க்கு மிசையாதார்க்கும் तुल्यம். ईश्वरस्वातन्त्र्यமொரு व्याजத்தைக்கொண்டு அவன் நினைத்தபோதே रक्षिக்கைக்கும்
23.13 விலக்கவல்லாரில்லாமைக்குமுறுப்பாம். இப்படியானால் ’’இன்றென்னை’’ யென்கிற பாட்டுக்கும் இதுக்கு मूलமான वचनங்களுக்கும் निर्वाहமென்னென்னில்; அது சொல்லுகிறோம்; ईश्वरனுக்கு सहजங்களான
स्वातन्त्र्यकारुण्यங்களினுடைய प्राधान्यத்தாலே இவற்றுக்கு व्याजभूतங்களான विशेषकारणங்களை अनादरिத்து பண்டென்னை पराङ्मुखனாக்குகைக்கும், இன்றென்னை अभिमुखனாக்குகைக்கும் உன் स्वातन्त्र्यமும் कृपैயுமொழிய வேறோரு प्रधानकारणங்கண்டிலேன்; எனக்குக் காட்டாதே स्वतस्सर्वज्ञனான நீ கண்டதுண்டாகி லருளிச்செய்யவேணுமென்ன ईश्वरன் निरुत्तरனாயிருக் கிறவிருப்பாலே स्वातन्त्र्यकृपैகளினுடைய प्राधान्यத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார். இத்தால், இச்चेतनனை लीलोपकरणமாக்குகைக்கு प्रधानकारणம் ईश्वरस्वातन्त्र्यம், இதுக்கு सहकारिकारणம் प्रवाहानादिயான स्वतंत्राज्ञातिलङ्घनம், இவனை भोगोपकरणமாக்குகைக்கு प्रधानकारणம் ईश्वरனுடைய स्वाभाविककारुण्यம், இதுக்கு प्रतिबन्धकமான ईश्वरनिग्रहத்தை शमिப்பித்துக்கொண்டு सहकारिकारणமென்று
23.14 பேர் பெற்றது இவனுடைய सुकृतविशेषद्वारककृपैயடியாக வந்த वशीकरणविशेष ங்களென்று ईश्वरனுடைய स्वभावத்தையும் वैषम्यनैर्घृण्यங்களில்லாமையையும் बन्धमोक्षादिव्यवस्थैயையும் प्रमाणप्रतिनियतமானபடியிலே अनुसन्धिத்து स्वतंत्रனுடைய कृपैயிலே யூன்றிப் போரவடுக்குமென்று கருத்து. निष्कृपனுடைய स्वातंत्र्यம் बाधकம். अस्वतंत्रனுடைய कारुण्यம் परர்க்கும் अनुपकारकமாய்த் தனக்கும் क्लेशावहமாயிருக்கும். स्वतंत्रனுடைய कारुण्यம் நினைத்தது முடிக்கையாலே தனக்கு अतिरसமாய் आश्रयिப்பார்க்கெல்லாமன்றே யनिष्टनिवृत्ति க்குமிष्टप्राप्तिக்குமுடலாயிருக்கும். இப்படியாகையாலே अवतारदशैயிலும் ‘‘व्यसनेषु मनुष्याणां भृशं भवति दुःखितः’’(ராமாயணம் அயோத்தியாகாண்டம் 2-40.) என்றிப்புடையிற் சொல்லுமவை
23.15 யெல்லாம் अनुग्रहविषयமாயிருப்பார் சிலரை रञ्जिப்பிக்கைக்கும் आसुरप्रकृति களை मोहिப்பிக்கைக்குமாகவத்தனை. இவ்வर्थத்தை 24‘‘कालस्य हि च मृत्योश्च जङ्गमस्थावरस्य च । ईशते भगवानेकस्सत्यमेतत् ब्रवीमि ते ॥ ईशन्नपि महायोगी सर्वस्य जगतः प्रभुः । कर्माण्यारभते कर्तुं कीनाश इव दुर्बलः ॥ तेन वञ्चयते लोकान् मायायोगेन केशवः । ये तमेवप्रपद्यन्ते न ते मुह्यन्ति मानवाः ॥’’(பாரதம் உத்யோகபர்வம் 67-13,14,15)
23.16 ‘‘कृत्वा भारावतरणं पृथिव्याः पृथुलोचनः । मोहयित्वा जगत्सर्वं गतस्स्वं स्थानमुत्तमम् ॥’’(பாரதம் மௌஸலபர்வம் 9-34) 26‘‘मनुष्यदेहिनां चेष्टामित्येवमनुवर्तते । लीला जगत्पतेस्तस्य छन्दतस्संप्रवर्तत ॥’’(விஷ்ணுபுராணம் 5-22-18.) इत्यादिகளிலே महर्षिகளறுதியிட்டார்கள். ஆகையால் अवतारवृत्तान्तங்களிலும் दुःखाभिनयमात्रமேயுள்ளது, அதுதானும் कृपामूलம். இது स्वतंत्रனான தனக்கு लीலையுமாயிருக்கும். கூனர்குறளரைக் கொண்டாடிरक्षिக்கை निरपेक्षரான राजाக்களுக்கு लीலையுமாய் कृपाकार्यமுமாய்க் காணா நின்றோமிறே. இப்படியாகையாலேறே 27‘‘उपादत्ते सत्तास्थितिनियमनाद्यैश्चि-
23.17 दचितौ स्वमुद्दिश्य श्रीमान्’’(ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தரஶதகம் 87) என்றது. இப்படி परहितव्यापाराश्रयமாகையாலே आश्रितர்க்கு रक्षकனுமாய் उपायान्तरस्थाननिवेशத்தாலே उपायமுமாயிருக்கும். रक्षणव्यापारफलाश्रयமாகையாலே शेषिயுமாய் அதடியாக प्राप्यனுமாயிருக்கும். இப்படியிருக்கை இவனுக்கு स्वरूपप्रयुक्तமென்று धर्मिग्राहकप्रमाणसिद्धம். இப்படி रक्षकனான ईश्वरனுக்கு प्रधानமான ज्ञानशक्तिकरुணைகளில் ज्ञानशक्तिகள் निग्रहानुग्रहसाधारणங்கள். कारुण्यமनुग्रहத்துக்கसाधारणம். இங்கு कारुण्यமாவது परहितप्रवणतै । இது त्रिविधचेतनர்களுடைய सत्तास्थितिகளுக்கும், अनुकूलवृत्तिகளுக்கும், नित्यருடைய नित्यानुभवத்துக்கும், मुक्तருடைய अनावृत्तिக்கும், लीलाविभूतिயில் सामान्यसृष्ट्यादिகளுக்கும், स्वावताररूपैயான शुद्धसृष्टिக்கும், शास्त्र-
23.18 प्रवर्तनத்துக்கும், அதடியாக तत्त्वहितविषयமான ज्ञानத்தைப் பிறப்பிக்கைக்கும், मोक्ष श्रद्धैயை யுண்டாக்குகைக்கும், இது கொடுக்கைக்கு व्याजமான सुकृतविशेषத்துக்கும், अधिकारानुरूपங்களான निग्रहशमनोपायங்களைக் கொடுக்கைக்கும், இவற்றில் करणप्रेरणदशैயில் सहकारिயாய் நிற்கைக்கும், उपासकனுக்கन्तरायயம் வந்தால் प्रतिसमाधानம் பண்ணுவிக்கைக்கும், अकिञ्चनர்க்கு उपायस्थानத்திலே நின்று निरपायமாக रक्षिக்கைக்கும், இவ்व्याजங்களைக் கொண்டு प्रसन्नனாய் अनादिकालம் பண்ணின अनन्तमहापराधங்களை अनादरिத்து अनन्तसुखத்திலே विश्रमिக்கும்படி संसारनिवर्तकனாகைக்கும், आर्तप्रपन्नர்க்கப்போதே मोक्षங்கொடுக்கைக்கும், இருந்த நாள் निरपराधனாயிருக்க வேணுமென்று फलங்கோல மறந்த दृप्तप्रपन्नனுக்கு प्रारब्धकर्मवशத்தாலே புகுந்த अपराधத்துக்கनुतापத்தை விளைப்பித்து अधिकारानुरूपமான प्रायश्चित्तविशेषத்திலே மூட்டுகைக்கும், அங்ஙன் मृदुप्रकृतिகளல்லாதார்க்கு यमविषयगमनமும் கோலின फलத்துக்கு प्रतिबन्धமும் வாராதபடி பண்ணி उपक्लेशங்களாலே शिक्षिக்கைக்கும் प्रधानமான सामान्यनिदानமாயிருக்கும். இப்படிப்பட்ட
23.19 कृपाविशिष्टனான ईश्वरன் ‘‘कृष्णं धर्मं सनातनं’’(பாரதம் ஆரண்யபர்வம் 71-123) என்கிறபடியே सिद्धोपायம். இவனுக்குப் प्रसादनங்களான भक्तिप्रपत्तिகள் साध्योपायங்கள். ஓரधिकारिविशेषத்துக்கு कर्तव्यமாக 29‘‘मामेकं शरणं व्रज’’(கீதை 18-66) என்று विधिக்கப்படுகிற प्रपत्तिயை अधिकारिविशेषणமென்று சிலர் சொன்னவிடம் अधिकारिविशेषणத்துக்குச் சொல்லும் लक्षणத்தோடு சேராமையாலே अतिवादம். இங்ஙனல்லாதபோது ईश्वरன் उपायமாய் நிற்க उपासनादिशास्त्रार्थங்களும் अधिकारिविशेषणங்களாம்.
ஆகையால் प्रपत्तिயுங்கூட उपायமன்றென்று சிலர் अतिवादம் பண்ணு கிறதுவும் सिद्धोपायத்தினுடைய प्राधान्यமடியாகவித்தனை. அது प्रधानமான படி; प्रसादनங்களாலே प्रतिबन्धकமான निग्रहம் शमिத்தால் स्वाभाविकानुभवத்து
23.20 க்குப் प्रयोजकமாகையாலே. அதெங்ஙனேயென்னில்; रत्नத்துக்கு அழுக் கற்றால் வரும் स्वाभाविकமான प्रभाविकासமும் அதுக்கनुरूपமான भगवत्सङ्कल्पमात्रத்தாலேயானாற்போலே मुक्तனுக்கு வரும் ज्ञानविकासादिகளும் அதுக்கनुरूपமாய்க்கொண்டு व्यवस्थितமான भगवत्सङ्कल्पமடியாகலாயிருக்கும். இப்படி नित्यர்க்கும். இவ்வर्थத்தை ‘‘इच्छात एव तव विश्वपदार्थसत्ता’’(வைகுண்டஸ்தவம் 36) என்று अभियुक्तர் संग्रहिத்தார்கள். ஆகையால் सिद्धोपायம் प्रधानமேயாகிலும் तद्वशीकरणार्थமான साध्योपायानुष्ठानத்துக்கு ’’இன்றென்னை’’(திருவாய்மொழி 10-8-9) इत्यादिपूर्वाचार्यवाक्य-
23.21 विरोधமில்லை. ‘‘यो मे गर्भगतस्यापि वृत्तिं कल्पितवान् प्रभुः । शेषवृत्तिविधानेऽपि किं सुप्तस्सोऽथवा मृत’’(விஷ்ணுதர்மம் (?)) इत्यादिகளும் रक्षकान्तरந்தேடாமைக்குச் சொன்னவை யத்தனை; அல்லாதபோது भोजनादिव्यापारங்களுந் தவிரவேணும். ‘‘स्वयं मृत्पिण्डभूतस्य परतन्त्रस्य देहिनः’’(பாரதம் ஶாந்திபர்வம் 294-19) ‘‘अज्ञो जन्तुरनीशोऽयमात्मनस्सुखदुःखयोः । ईश्वरप्रेरितो गच्छेत् स्वर्गं वा श्वभ्रमेव वा’’(பாரதம் ஶாந்திபர்வம் 12-36) ‘‘अप्रमेयोऽनियोज्यश्च यत्र काम गमो वशी । मोदते भगवान् भूतैर्बालः क्रिडनकैरिवे’’(பாரதம் ஸபாபர்வம் 40-78) त्यादिகளில் ஜீவனுடைய पारतन्त्र्यமும் ईश्वरனிவனுடைய
23.22 कर्मानुगुणமாக நடத்தும்படியையுஞ்சொன்னவித்தனை. இப்பாட்டுக்குமிவ்வवचनங்களுக்குமிப்படி तात्पर्य மல்லாதபோது सर्वशास्त्रविरोधமும் पूर्वापरविरोधமும் வரும்.
இப்படி ईश्वरस्वातन्त्र्यसहजकारुण्यங்களடியாக வருங்கலக்கங்களுக்குப் परिहारம் சொன்னோம். संबन्धविशेषமடியாக வரும் கலக்கத்துக்குப் परिहारஞ் சொல்லுகிறோம். ईश्वरன் शेषिயாயிருக்க, நாம் ‘‘गर्भभूतास्तपोधनाः’’(ராமாயணம் ஆரண்யகாண்டம் 1-21) யென்னுங்கணக்கிலே स्तनन्धयप्रायராயிருக்க, தாய்முலைப்பாலுக்காर्तனாயழுதல் செய்யுமளவன்றிக்கே கூலி கொடுப்பாரைப் போலே நாம்
आत्मसमर्पणம் பண்ணுகையும், ரக்ஷிக்கவேணுமென்ற पेक्षिக்கையும், विश्वसिக்
23.23 கையுமென்றாற்போலே சொல்லுகிறவிவையெல்லாம் स्वरूपத்துக்குப் பொருந்துமோவென்று சிலர் सिद्धोपायमुखத்தாலே साध्योपायशरीरத்தையழிக்கப் பார்ப்பார்கள். இவர்களை விலக்கும்படி; परमर्षिகளும் भाष्यकारादिகளும் विश्वासपूर्वकप्रार्थनात्मनिक्षेपादिகளைத் தாங்களும் अनुष्ठिத்து இதுக்கு शास्त्रங்களையும் மூதலிப்பித்துக்கொண்டு उपदेशपरंपरैயும் நடத்திப்போருகையாலே शेषित्वादिसंबन्धம் नित्यமேயாகிலும் कर्मவான்களான ஜீவர்கள் விஷயத்தில் ईश्वरனொரு साध्योपायविशेषத்தை முன்னிட்டல்லது रक्षिயானென்று शास्त्रनिष्ठர்க்கு परिग्रहिக்கவேணும். शास्त्रத்தைக்கைவிட்டால் இस्संबन्धஞ்சொல்லுகைக்கு ईश्वरனையுங்கிடையாது. ஆனபின்பு संबन्धமடியாக ईश्वरன் रक्षिக்கப் प्राप्तனென்றும், शेषभूतனான இவன் தன்னைरक्षिத்துக்கொள்ள प्राप्तனன்றென்றும் முன்பு சொன்னதுவும் रक्ष्यरक्षकभावத்துக்கு लोकदृष्टप्रक्रिயையாலே औचित्यஞ்சொன்னபடி இத்தனை. இவ்வளவே
23.24 रक्षैக்கு निरपेक्षकारणமென்றபடியன்று. அப்படிக்கொள்ளில் सर्वரும் नित्यमुक्तராக प्रसङ्गिக்கும். स्वातन्त्र्यத்தாலே नियमஞ்சொல்லில் முன்பு சொன்ன படியே वैषम्यनैर्घृण्यங்கள் प्रसङ्गिக்கும். युक्तिमात्रத்தாலிவ்வर्थங்கள் சொல்லுவார்க்கு संबन्धज्ञानமேயपेक्षितம் रक्षापेक्षादिகள் வேண்டாவென்று சொல்ல வொண்ணாது. अचिद्द्रव्यங்களும் पशुमृगपक्ष्यादिகளும் स्तन्धयரும் रक्षापेक्षारहितங்களானாற்போலே संबन्धज्ञानरहितங்களுமாயிருக்கவவற்றை रक्षिக்கக் காணாநின்றோமிறே. அப்படிக்கண்டோமாகிலும் शास्त्रबलத்தாலே இங்கு संबन्धज्ञानம் अपेक्षितமென்னில்; शास्त्रஞ் சொன்ன கட்டளையிலே ज्ञानविशेषம் स्वीकरिக்கவேணும். தன்னை ईश्वरன் रक्षिக்கும்போது संबन्धத்தோடே கூட விலக்காமையே வேண்டுவதென்னில்; அதுவுமनुपपन्नம்;
23.25 सुषुप्त्याद्यवस्थैகளிலேயெல்லார்க்கும் मोक्षங்கொடுக்கப் प्रसङ्गिக்கையால். தான் விலக்குகைக்கு योग्यதையுள்ளவवस्थैயிலே விலக்காதொழிகையே अपेक्षितமென்னவுமொண்ணாது. விலக்குகைக்கு योग्यதையில்லாதவचिத் தையும் விலக்குகிற पश्वादिகளையும் पुत्रादिகளையும் रक्षिக்கக் காண்கை யால். ஆனபின்பு 37‘‘ये नाथवन्तो हि भवन्ति लोके ते नात्मकर्माणि समारभन्ते । तेषां हि कार्येषु भवन्ति नाथाश्शैब्यादयो राम यथा ययातेः’’(பாரதம் ஆரண்யபர்வம் 161-2) என்கிற श्लोकத்திலும் नाथशब्दத்தில் व्युत्पत्तिயாலும், निर्भरதைக்கு उपयुक्तமான संबन्धविशेषத்தைச் சொல்லுகிற मतुप्प्रत्यயத்தாலும் याचनமும் आत्मनिक्षेपமும் व्यञ्जितமாயிற்று. அல்லாத போது अतिप्रसङ्गादिदोषங்கள் வரும். ‘‘नाथवन्तः’’ என்கிறவிடத்திலித்தனை விவக்ஷை கொள்ளாதபோது लोकनीतिயிலுள்ளதெல்லாம் मोक्षशास्त्रத்திலூ ஹிக்கை वचनविरुद्धம்.
23.26 सर्वरक्षकனான வீश्वरனுண்டாயிருக்க स्वरक्षणव्यापारத்தில் நமக்கन्वयமில் லையென்கிற आप्तர் பாசுரத்துக்குத் तात्पर्यஞ் சொல்லுகிறோம். यदर्थन्तु कृतो न्यासस्तदर्थं न पुनः क्रिया । पूर्वमप्यपराधीनप्रवृत्तावस्य नान्वयः ॥ यथाप्रमाणம் स्वरक्षणभरसमर्पणம் பண்ணினவனுக்குப் பின்பு स्वरक्षणार्थव्यापारத்தில் प्राप्तिயில்லை. முன்பு தானும் स्वरक्षणार्थமாகப் பண்ணின समर्पणादिव्यापारமும் सर्वकर्ताவான வவன் தானே बीजाङ्कुरन्यायத்தாலே अनादिயாக प्रवर्तिப்பித்த कर्मप्रवाहविपाकविशेषத்திலே வந்ததொரு यादृच्छिकसुकृतादि विशेषकारणத்தை முன்னிட்டுக் கொண்டு பண்ணுவித்தானாகையால் நாமே நம்மை रक्षिத்துக் கொள்ளுகிறோ மென்றிருக்கப் प्राप्तिயில்லை. सर्वरक्षकனாக मूलमन्त्रादिகளிலே शिक्षितனான
23.27 விவன்தானே நம்மையொரு उपायத்திலே व्यापरिப்பித்து அந்த व्यापारத்தாலே प्रसन्नனாய் रक्षिக்கிறானென்றிருக்கப் प्राप्तம். स्वामी स्वशेषं स्ववशं स्वभरत्वेन निर्भरम् । स्वदत्तस्वधिया स्वार्थं स्वस्मिन्न्यस्यति मां स्वयम् ॥ இது आत्मसमर्पणदशैயில் ख्यातिलाभपूजाफलसङ्गकर्तत्वोपायत्वங்களாகிற தூராலற்ற भगवदनुसन्धानக் கட்டளை. ஆகையால் தாய் முலைப்பால்போலே வருகிற வீश्वरप्रसादத்துக்கும் स्तनन्धयனுடைய முலையுண்கிற व्यापारம்போலே இவனுடைய अपेक्षादिகள். இத்தால் सिद्धोपायस्वरूपத்துக்குக் கொத்தை வாராது.
இப்படி नारायणशब्दத்தில் सिद्धமான गुणविशेषसंबन्धविशेषங்களடியாகப் பிறக்குங் கலக்கங்களுக்குப் परिहारம் उदाहरिத்தோம்; இனி 38‘‘लक्ष्म्या सह
23.28 हृषीकेशो देव्या कारुण्यरूपया । रक्षकस्सर्वसिद्धान्ते वेदान्तेऽपि च गीयते’’(லக்ஷ்மீதந்த்ரம் 28-14) என்கிறபடியே सपत्नीकனாய்க்கொண்டு सर्वरक्षणयज्ञदीक्षितனான सर्वेश्वरனுக்கு श्रीमच्छब्दத்திலே சொல்லுகிறपत्नीसंबन्धத்தில் வருங்கலக்கங்களுக்கு दिङ्मात्रத்தாலே परिहारங் காட்டுகிறோம். சிலர் द्वयத்தில் पूर्वखण्डத்தில் श्रीमच्छब्दமுपलक्षणपरமென்றும்
23.29 उत्तरखण्डத்தில் श्रीमच्छब्दம் विशेषणपरமென்றும் பிரியச்சொன்னார்கள். இவ் விடத்தில் शब्दம் एकरूपமாயிருக்க स्वारस्यத்துக்கு बाधकமுமன்றிக்கேயிருக்க 39‘‘स्वरूपं स्वातन्त्र्यं भगवत इद’’(ஸ்ரீகுணரத்நகோஶம் 28)मित्यादिகளிலே प्रसिद्धமான कूटस्थसंप्रदाय
23.30 विरुद्धமாகப் பண்ணுகிற இவ்विभागமनुपपन्नம். अनन्योपायत्व विरुद्धமான उपायद्वित्वप्रसङ्गமிவ்விடத்தில் बाधकமானாலோவென்னில்; अनन्यप्रयोजनत्वविरुद्ध மான प्राप्यद्वित्वप्रसङ्गத்தாலே उत्तरखण्डத்திலும் विशेषणत्वந்தவிர प्रसङ्गिக்கும். ஆனாலிரண்டிடத்திலும் उपलक्षणமானாலோ வென்னில்; गुणविग्रहव्यापारविशेषங்களுமிரண்டிடத்திலுமுपलक्षणங்களாகப் प्रसङ्गिக்கும். उपयुक्तங்களாகையாலேயவை विशेषणங்களென்னில்; இது पूर्वोत्तरखण्डங்களில் पत्नीसंबन्धத்திலும் तुल्यம். उपयोगविशेषங்கள் तत्तद्वस्तुக்களுக்கनुरूपமான படியிலே प्रमाणसंप्रदायங்களாலே கண்டுகொள்வது. वस्त्वनुरूपமாயிறே
23.31 उपयोगமிருப்பது. उपायोपेयपरமான वाक्यद्वयத்திலும் श्रुतமான இவ்विशेषणத்தினுடைய उपयोगप्रकारத்தை ’’வேரி மாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்கு’’(திருவாய்மொழி 4-5-11) மென்றும், ’’நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளுங் கொண்டு நின் கோயில் சீய்த்’’(திருவாய்மொழி 9-2-1) தென்றும் நம்மாழ்வாரருளிச்செய்தார். ‘‘अलमेषा परित्रातुं राक्षस्यो महतो भयात्’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 27-44) என்றும், ‘‘अलमेषा परित्रातुं राघवाद्राक्षसीगणम्’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 58-91)
23.32 என்றும் श्री वाल्मीकि भगवाன் शरणागतिसारமான आदिकाव्यத்திலே निबन्धिத்தான். ‘‘संसारार्णवतारिणीं’’(காச்யபஸ்ம்ருதி) என்றும் हिरण्यगर्भकाश्यपादिகளும் சொன்னார்கள். ‘‘वाचः परं प्रार्थयिता प्रपद्येन्नियतःश्रियं’’(ஶௌநகஸம்ஹிதை) என்று शौनकभगवाன் विधिத்தான். ‘‘आत्मविद्या च देवि त्वं विमुक्तिफलदायिनी’’(விஷ்ணுபுராணம் 1-920) என்று वसिष्ठपुलस्त्यवरप्रसादलब्ध-
23.33 परदेवतापारमार्थ्यज्ञानமுடைய श्रीपराशरब्रह्मर्षिயருளிச்செய்தான். ‘‘विमुक्तिफलदायिनी’’ என்கிறவிது आत्मविद्याविशेषणமானாலும் तत्सामानाधिकरण्यத்தாலே அது இவளுடைய विभूतिயாயிற்று. श्रियःपति தானும் 47‘‘यामालंब्य सुखेनेमं दुस्तरं हि गुणोदधिम् । निस्तरन्त्यचिरेणैव व्यक्तध्यानपरायणाः’’(ஸ்ரீ ஸாத்வதஸம்ஹிதை 12-84) என்று श्रीसात्वतसंहितैயிலே श्रीपतिरूपध्यानத்திலே யருளிச்செய்தான். तत्परங்களான शास्त्रங்கள் நிற்க இம்मध्यस्थशास्त्रங்களतिप्रबलங்கள். ஆளவந்தாரும் 48‘‘जगत्समस्तं यदपाङ्गसंश्रयं’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 37) என்றும், 49‘‘श्रेयो न ह्यरविन्दलोचनमनः कान्ताप्रसादादृते संसृत्यक्षरवैष्णवाध्वसु नृणां संभाव्यते कर्हिचित्’’(சதுச்லோகீ 3)
23.34 என்றுமருளிச்செய்தார். श्रीभाष्यकारரும் श्रीवैकुण्ठगद्यத்திலே 50‘‘शेषशेषाशनादि सर्वं परिजनं भगवतस्तत्तदवस्थोचितपरिचर्यायामाज्ञापयन्त्या’’(வைகுண்டகத்யம்) என்று भगवत्कैङ्कर्यरूपपरमपुरुषार्थம் இவள் नियोगத்தின்படியே நடத்தவேணுமென்று அருளிச்செய்தார். கூரத்தாழ்வானும் 51‘‘स्वस्ति श्रीर्दिशतादशेषजगतां सर्गोपसर्गस्थितीस्स्वर्गं दुर्गतिमापवर्गिकपदं सर्वञ्च कुर्वन् हरिः । यस्या वीक्ष्य मुखं तदिङ्गितपराधीनो विधत्तेऽखिलं क्रीडेयं खलु नान्यथास्य रसदा स्यादैकरस्यात्तया’’(ஸ்ரீ ஸ்தவம் 1) என்று संग्रहिத்த अर्थத்தை 52‘‘देवि त्वन्महिमावधिर्न हरिणा नापि त्वया ज्ञायते’’(ஸ்ரீ ஸ்தவம் 8) என்று துடங்கி विस्तरिத்தார். भट्टரும் 53‘‘ऐश्वर्यमक्षरगतिं परमं पदं वा कस्मैचिदञ्जलिभरं वहते वितीर्य । अस्मै न किञ्चिदुचितं कृतमित्यथांब त्वं लज्जसे कथय कोऽयमुदारभावः’’(ஸ்ரீ குணரத்நகோஶம் 58)
23.35 कृतमित्यथांब त्वं लज्जसे कथय कोऽयमुदारभावः’’ என்று श्रुतिயிலுदारशब्दத்துக்கு व्याख्यानம் பண்ணினார். श्रीसूक्तभाष्यத்திலே பெரிய ஜீயரும் अपेक्षितार्थங்களெல்லாம் उपपादिத்தார். இப்படி श्रुतिस्मृतिसंप्रदायம் நிற்கிற நிலைகளைக் கொண்டு श्रीमच्छब्दத்திற் சொன்ன विशेषणத்துக்கு विग्रहादिகளுக்குப்போலே वस्त्वनुरूपமான उपयोगविशेषங்களை सहृदयரறிந்துகொள்வது. *भरस्वीकाररहितं रक्षासङ्कल्पवर्जितम् । गुणादिकमिहेष्टं हि शरण्यस्य विशेषणम् ॥ ऐकरस्यजुषोश्शेषिदंपत्योस्सर्वकर्मसु । विशेषणविशेष्यत्वं श्रुतं कस्मान्न रोचते ॥ प्रतर्दनादिविद्यासु वेद्येऽपि परमात्मनि ।
23.36 अचेतनवदिच्छामश्चेतनञ्च विशेषणम् ॥ इत्थं प्रपत्तिविद्यायां तत्तन्मन्त्रानुसारतः । विभुः पत्न्या गुणाद्यैश्च विशिष्टो विषयोऽत्र नः ॥*
இங்கு केवलकुतर्कங்களையிட்டு प्रमाणங்களை बाधिக்கலாகாதென்னுமிடம் முன்பே சொன்னோம். ஆகையால் यथाप्रमाणம் शरण्याभिप्रायविशेषानुगुणமாக विशिष्टமுपेयமானாற்போலே विशिष्टமுपायமாகக் குறையில்லை. नारायणशब्दத்திலும் चरणशब्दத்திலுந்தோற்றுகிற गुणविशेषविग्रह विशेषादिविशिष्टமான एकம் उपायமானாற்போலே तुल्ययोगक्षेमமான श्रीमच्छब्दத்தில் தோற்றின नित्यपत्नीसंबन्धविशिष्टமானாலுமுपायैक्यத்துக்குக் குறையில்லை. उपायविशेषणங்
23.37 களையெல்லாம் விட்டு उपायத்தையே एकமாக்கவேணுமென்னில்; उपायत्वமும் विशेषणமன்றிக்கேபோம். विशेषणप्रयुक्तமாய் विशेष्यத்துக்கு வருமேற்றத்தால் विशेष्यத்துக்கு वैगुण्यादिகள் வாராதென்று 54‘‘स्वतःश्रीस्त्वं विष्णोस्स्वमसि तत एवैष भगवान् त्वदायत्तर्द्धित्वेऽप्यभवदपराधीनविभवः । स्वया दीप्त्या रत्नं भवदपि महार्घं न विगुणं न कुण्ठस्वातन्त्र्यं भवति च न चान्याहितगुणम्’’(ஸ்ரீ குணரத்நகோஶம் 31) என்கிற श्लोकத்திலே निर्णयिக்கப்பட்டது. विशेषणத்தால் विशेष्यத்துக்கு வரும் अतिशयம் போலே विशेष्यத்துக்கு स्वरूपानुबन्धिயான अतिशयமும் 55‘‘अनन्या राघवेणाहं भास्करेण प्रभा यथा’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 21-15) என்கிற दृष्टान्तத்திலே காணலாம்.
23.38 भास्करனுக்கும் प्रभैக்கும் स्वतस्सिद्धமான तेजस्त्वம்போலே இருவர்க்கும் 56‘‘अनन्याधीनकल्याणं’’(லக்ஷ்மீகல்யாணம்) என்கிறபடியே स्वभावसिद्धकल्याणதையாலே 57‘‘अप्रमेयं हि तत्तेजो यस्य सा जनकात्मजा’’(ராமாயணம் ஆரண்யகாண்டம் 37-18) என்றும், 58‘‘तव श्रिया’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 38) என்றும், 59’’உன் திரு’’(பெரியாழ்வார் திருமொழி 10-10-2) வென்றும், 60‘‘श्रियःश्रीः’’(ஸ்ரீ குணரத்நகோஶம் 9) என்றும், 61’’திருவுக்குந்திரு’’(பெரியாழ்வார் திருமொழி 7-7-1) வென்றும் अन्योन्यातिशयावहங்களாக विशेषणविशेष्यங்களை निर्देशिக்கிறதற்குங் குறையில்லை.
23.39 श्रुतिबलத்தாலே ‘‘द्वौ च सदैकशेषी’’(ஸாத்வதம்) என்கிறபடியே ‘‘उभयाधिष्ठानञ्चैकं शेषित्वं’’(षडर्थसंक्षेपम्) என்றும் சோமாசியாண்டான் षडर्थसंक्षेपத்தில் निष्कर्षिத்தபடியே இருவரு மேकशेषित्वाश्रयமானபடியாலே हविर्विशेषங்களிலே अग्नाविष्णुप्रभृतिகளுக்குப் போலே आत्महविस्समर्पणप्रतिसंबन्धिகளாகக் குறையில்லை. ‘‘युवत्वादौ तुल्येऽप्यपरवशता शत्रुशमनस्थिरत्वादीन् कृत्वा भगवति गुणान् पुंस्त्वसुलभान् । त्वयि स्त्रीत्वैकान्तान्
23.40 मृदिमपतिपारार्थ्य करुणा क्षमादीन्वा भोक्तुं भवति युवयोरात्मनि भिदा’’(ஸ்ரீ குணரத்நகோஶம் 34) என்கிறபடியே पत्निக்கு नित्यपतिपारार्थ्यத்தாலே यागतन्त्रத்திற்போலே पतिप्रधानமாக शास्त्रங் களிலுपदेशங்களுக்கும் एकன் यजमानனென்னுமாப்போலே एकव्यपदेशத்துக்குங் குறையில்லை.
65’’தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்’’(முதல் திருவந்தாதி 67) வென் கிறதற்குமிதுவே तात्पर्यம். 66‘‘तदन्तर्भावात् त्वां न पृथगभिधत्ते श्रुतिरपि”( ஸ்ரீ குணரத்நகோஶம் 28) என்கிற வழிகளுங் கண்டுகொள்வது. ’’எம்பெருமானைச் சொன்னவிடத்திலே
23.41 பிராட்டியையுஞ் சொல்லிற்றா’’ மென்று துடங்கி உடையவரருளிச் செய்த வார்த்தையை ஆச்சான்பக்கலிலே கேட்டு நஞ்சீயர் संग्रहिத்தார். ஆகையாலே काम्यप्रधानமான अधिकारार्चनरूपத்திலும் विष्णुपत्नीत्वம் प्रतिष्ठित மாகையாலே लयभोगार्चनங்களிலே प्रवृत्तராய் अनन्यप्रयोजनரான मुमुक्षुக்களுக் கும் काम्यप्रधानமான भगवद्रूपத்திற்போலே मातृत्वाद्युपाधिकமான प्रणामाद्याचारங் களுக்குக்குறையில்லை.
23.42 இப்படி मध्यस्थदृष्टिயாலே प्रामाणिकार्थங்கள் தோற்றச்செய்தே பற்றினது விடாதொழியில், 67‘‘दृढपूर्वश्रुतो मूर्खो धर्माणामविशारदः । वृद्धानपृच्छन्सन्देहानन्धश्वभ्रमिवर्च्छति’(பாரதம் கர்ணபர்வம் 72-54)’, 68‘‘अन्यथा मन्दबुद्धीनां प्रतिभाति दुरात्मानां । कुतर्क-व्याळदष्टानां विभ्रान्तेन्द्रियवाजिनां’’(இதிஹாஸஸமுச்சயம் 33-108) என்கிற दशैயாம். ஆகையால் सिद्धोपायशब्द-वाच्यविमर्शத்தில் 69‘‘नानयोर्विद्यते परं’’(விஷ்ணுபுராணம் 1-8-35), 70‘‘यथा सर्वगतो विष्णुस्तथैवेयं द्विजोत्तम’’(விஷ்ணுபுராணம் 1-8-17),
23.43 ‘अस्या देव्या मनस्तस्मिन् तस्य चास्यां प्रतिष्ठितं । तेनेयं स च धर्मात्मा मुहूर्तमपि जीवति’’(ராமா-ஸுந்தர 15-52), ‘‘व्यापकावतिसंश्लेषादेकतत्त्वमिवोदितौ’’(அஹிர்புத்ந்யஸம்ஹிதை 4-78) என்கிறபடியே एकशेषित्वத்தாலும் एकाभिप्रायதையாலும் परस्पर प्रावण्यातिशयத்தாலும் स्वरूपरूपादिகளில் பிரிவற்ற अन्वयविशेषத்தாலும் ‘‘गाढोपगूढानि ते’’(சதுச்லோகீ 4) என்னும்படி सुश्लिष्टமான विशिष्टतत्त्वம் நிற்கிறநிலைகுலையாதபடி सविशेषणமான नारायणशब्दம் प्रतिपादिக்கிறபடியை अनुसन्धिக்கை सत्त्वस्थர்க்குப் प्राप्तம்.
*समस्तपुरुषार्थानां साधकस्य दयानिधेः । श्रीमतः पूर्वसिद्धत्वात्सिद्धोपायमिमं विदुः ॥ भक्तिप्रपत्तिप्रमुखं तद्वशीकारकारणम् । तत्तत्फलार्थिसाध्यत्वात्साध्योपायं विदुर्बुधाः ॥ साध्योपायोत्तरङ्गेण
23.44 सिद्धोपायस्य शेषिणः । लीलाप्रवाहः कारुण्य प्रवाहेण निरुध्यते ॥ तेनैव सर्वे लीयन्ते सिकतासेतुबन्धवत् । स्वतन्त्रस्यापि सङ्कल्पास्स्वकैङ्कर्यनिरोधकाः ॥ प्रसादनस्योपायत्वे शास्त्रीयेऽपि फलं प्रति । कर्तत्वाव्यवधानाद्यैस्सिद्धोपायप्रधानता ॥ स्वतन्त्रन्यासनिष्ठानां सिद्धोपाये विभौ स्थितिः । क्षणात्स्वयत्नविरतिव्यक्त्यै प्रोक्ता विशेषतः ॥ अतो यदर्थं स्वभरस्सिद्धोपाये निवेशितः । तदर्थं शान्त-
23.45 यत्नोऽसौ सिद्धोपायं प्रतीक्षते ॥ प्रपत्तेर्लक्षणे मन्त्रे विधौ वाक्यान्तरेषु च । भाष्यादौ संप्रदाये चोपायत्वं ब्रह्मणि स्थितम् ॥ पूर्वसिद्धस्य देशादेर्धर्मत्वं यद्वदिष्यते । एवं तत्त्वविदः प्राहुः कृष्णं धर्मं सनातनम् ॥* இஸ்सिद्धोपायம் रहस्यत्रयத்தில் प्रथमाक्षरादिस्थानங்களிலே अनुसन्धेयம்.
23.46 மன்னுமனைத்துறவாய் மருண்மாற்றருளாழியுமாய்த் தன்னினைவாலனைத்துந் தரித்தோங்குந்தனியிறையாய் இன்னமுதத்தமுதாலிரங்குந் திருநாரணனே மன்னியவன்சரண்மற்றோர்பற்றின்றி வரிப்பவர்க்கே. (34)
23.47 विश्राम्यद्भिरुपर्यपर्यपि दिवानक्तं बहिर्दर्शनै-रस्मद्देशिकसंप्रदायरहितैरद्यापि नालक्षितः । स्वप्राप्तेस्स्वयमेव साधनतया जोघुष्यमाणश्श्रुतौ
सत्त्वस्थेषु भजेत सन्निधिमसौ शान्तावधिश्शेवधिः ॥ ५२ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे सिद्धोपायशोधनाधिकारः त्रयोविंशः ॥