॥ श्रीमद्रहस्यत्रयसारे स्वनिष्ठाभिज्ञानाधिकारः ॥ १४ ॥
14.1 स्वरूपोपायार्थेष्ववितथनिविष्टस्थिरमते-
स्स्वनिष्ठाभिज्ञानं सुभगमपवर्गादुपनतात् ।
प्रथिम्ना यस्यासौ (दौ) प्रभवति विनीतस्स्थगयितुं
गभीरान् दुष्पूरान् गगनमहतश्छिद्रनिवहान् ॥ ३२ ॥
14.2 இப்படித் தனக்கு निष्ठैயுண்டென்று தானறியும்படி யெங்ஙனேயென்னில்; परராலே परिभवादिகளுண்டாம்போது தன் देहादिகளைப்பற்ற परि-
14.3 भावकர் சொல்லுகிற குற்றங்கள் தன் स्वरूपத்தில் தட்டாதபடி கண்டு विषादादिகளற்றிருக்கையும், ‘‘शप्यमानस्य यत् पापं शपन्तमधिगच्छति’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 110-64.) என்கிறபடியே परिभवादिகளாலே தன் पापத்தை வாங்கிக்கொள்ளுகிற மதிகேடரைப்பற்ற ‘‘बद्धवैराणि भूतानि द्वेषं कुर्वन्ति चेत्ततः । शोच्यान्यहोऽतिमोहेन व्याप्तानीति मनीषिणा ॥’’(விஷ்ணுபுராணம் 1-7-82) ‘‘आत्मद्रुहममर्यादं मूढमुज्झितसत्पथम् । सुतरामनुकम्पेत नरकार्चिष्मदिन्धनम्’’(ஆயுர்வேதம்) என்கிறபடியே கரைபுரண்ட कृपैயும், ‘‘अमर्यादःक्षुद्रः’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 65.) என்கிற श्लोकத்தாலும், ‘வாடினேன் வாடி'(பெரிய திருமொழி 1-1.) முதலான ஆழ்வார்கள் பாசுரங்களாலும் தனக்கு
14.4 अनुसन्धेयமாக उदाहरिத்த दोषங்களை परिवादादिகளாலே மறவாதபடி பண்ணி னார்களென்கிற उपकारस्मृतिயும், आत्माக்களுக்கெல்லாம் स्वरूपानुबन्धिயான भगवत्पारतन्त्र्यத்தையும் क्षेत्रज्ञரெல்லாரும் कर्मवश्यராய் நிற்கிற நிலையையும் பார்த்து நமக்கும் நம்மளவில் परिभवादिகள் பண்ணுகிற चेतनருக்குமுள்ள कर्मानुगुणமாக இன்புறுமிவ்விளையாட்டுடையனான स्वतन्त्रशेषिயாலே प्रेरितராயவர்கள் परिभवादिகள் பண்ணுகிறார்களென்று அவர்கள் பக்கல் निर्विकारचित्तதையும், प्रारब्धपापविशेषஞ்சிகையறுகிறதென்கிற सन्तोषமும் நடையாடிற்றாகில் प्रथम मध्यमपदங்களிலே शोधितமானபடியே अचिद्वैलक्षण्यத்தையும்,
14.5 सर्वभूतानुकूल्यादिகளுக்கு योग्यமான ज्ञानத்தையும், सर्वतोमुखமான आकिञ्चन्यத்தையும், स्वतस्सर्वसमனாய் कर्मानुरूप फलप्रदனான स्वतन्त्रशेषिக்கு इष्टविनियोगार्हமாம்படி अनन्यार्हशेषत्वपारतन्त्र्यங்களையும், ‘‘यद्धितं मम देवेश’’(ஜிதந்தாஸ்தோத்ரம் 1-18.) इत्यादि களிற்படியே पराधीनहितसिद्धिயையுமுடைய தன் स्वरूपத்திலே निष्ठैயுண்டென்றறியலாம். सर्वेश्वरனையொழியத் தானும் பிறருந்தனக்குத் தஞ்சமன்றென்கிற बुद्धिயும் मृत्युपर्यन्तமான भयहेतुக்களைக் கண்டாலும் ‘‘प्राये-णाकृतकृत्यत्वान्मृत्योरुद्विजते जनः । कृतकृत्याः प्रतीक्षन्ते मृत्युं प्रियमिवातिथिम्’’(இதிஹாஸ ஸமுச்சயம் 7-38) என்கிற
14.6 படியே இச்शरीरानन्तरம் என்படப்புகுகிறோமென்கிற கரைதலற்று अभिमतासक्तिயாலே प्रीतனாயிருக்கையும், ‘‘गजं वा वीक्ष्य सिंहं वा व्याघ्रं वाऽपि वरानना । नाहारयति संत्रासं बाहू रामस्य संश्रिता’’(ராமா அயோத்யா 60-20.) என்றும், ‘‘असन्देशात्तु रामस्य तपसश्चानुपालनात् । न त्वा कुर्मि दशग्रीव भस्म भस्मार्हतेजसा’’(ராமா ஸுந்தர 22-20) என்றும், ‘‘शरैस्तु सङ्कुलां कृत्वा लङ्कां परबलार्दनः । मान्नयेद्यदि काकुत्स्थस्तत्तस्य सदृशं भवेत्’’(ராமா ஸுந்தர 39-30) என்றும் பிராட்டி நடத்திக்
14.7 காட்டின रक्षकावष्टंभத்தாலுள்ள தேற்றமும், தான் भरन्यासம் பண்ணின விஷயத்தில் स्वयत्नமற்றிருக்கையும், அதில் अनिष्टनिवृत्तिயுமிष्टप्राप्तिயும் அவன்கையதே யென்றிருக்கையும் உண்டாயிற்றாகில் தான் கோலின सकलफलத்துக்கும் साधनமாகவற்றாய் चरमश्लोकத்தில் पूर्वार्धத்திலே विहितமாய் द्वयத்தில் पूर्वखण्डத்தில் अनुसन्धेयமாய் திருमन्त्रத்தில் मध्यमपदத்திலும் विवक्षित மான उपायத்தில் தனக்கு निष्ठैயுண்டென்றறியலாம்.
‘‘उत्पत्तिस्थितिनाशानां स्थितौ चिन्ता कुतस्तव । यथोत्पत्तिर्यथानाशस्स्थितिस्तद्वद्भविष्यति ॥’’()
14.8 ‘‘अचेष्टमानमासीनं श्रीः कञ्चिदुपतिष्ठति । कर्मी कर्मानुसृत्यान्यो न प्राश्यमधिगच्छति ॥’’(பாரதம் ஶாந்திபர்வம் 339-15) என்கிற படியே प्रारब्धकर्मविशेषाधीनமாக ईश्वरன் செய்யும் देहयात्रादिகளில் கரைதலற்று தான் கரைந்தாலும் ‘‘उत्पतन्नपि चाकाशं विशन्नपि रसातलम् । अटन्नपि महीं कृत्स्नां नादत्तमुपतिष्ठते’’(), ‘‘यत्किञ्चिद्वर्तते लोके सर्वं तन्मद्विचेष्टितम् । अन्योह्यन्यच्चिन्तयति स्वच्छन्दं विदधाम्यहम्’’(பாரதம் ஶாந்திபர்வம் 359-56.) என்கிறபடியே ईश्वरன் நினைவின்படியல்லதொன்றும் நடவாதென்று प्रतिसन्धानம் பண்ணி ‘‘अप्रयत्नागतास्सेव्या गृहस्थैविर्षयास्सदा । प्रयत्नेनापि कर्तव्यः स्वधर्म इति मे मतिः ॥’’(பாரதம் ஶாந்திபர்வம் 301-36.) ‘‘नाहारं चिन्तयेत् प्राज्ञो धर्ममेवानुचिन्तयेत् । आहारो हि मनुष्याणां जन्मना सह जायते ॥’’() என்று पराशरगीतादिகளிலும், ‘‘न
14.9 सन्निपतितं धर्म्यमुपभोगं यदृच्छया । प्रत्याचक्षे न चाप्येनमनुरुन्धे सुदुर्लभम् ॥’’(பாரதம் ஶாந்திபர்வம் 175-5) என்று अजगरोपाख्यानத்திலுஞ் சொல்லுகிறபடியே शास्त्रविरुद्धமல்லாத விஷயங்கள் தானொரு விரகு செய்யாதிருக்க भगवत्सङ्कल्पத்தாலே தானே வரக்கண்டு प्रारब्धकर्मफलமான தனிசு தீருகிறதென்று விலக்காதே अनुभविக்கையும், இப்படி कर्मविशेषाधीनமாக வருகிற प्राप्यान्तरलाभालाभங்களில் ‘‘तयोरेकतरो राशिर्यद्येनमुपसन्नमेत् । न सुखं प्राप्य संहृष्येन्न दुःखं प्राप्य संज्वरेत् ॥’’(பாரதம் ஶாந்திபர்வம் 175-5) என்றும், ‘உள தென்றிறுமாவா'(இரண்டாந்திருவந்தாதி 45) ரென்றுஞ் சொல்லுகிறபடியே हर्षशोकங்களற்று स्वरूपानुरूपமான परमप्राप्यकैङ्कर्यத்திலே रुचिயும், स्त्रोत्रத்திலும் श्रीवैकुण्ठगद्यादि களிலும் कदा कदा என்று வாய் புலற்றப்பண்ணுகிற प्राप्तिயில் त्वரையும்
14.10 நடையாடிற்றாகில் திருमन्त्रத்தில் नारायणशब्दத்தில் चतुर्थिயாலும், द्वयத்தில் चतुर्थीनमस्सुக்களாலும், चरमश्लोकத்தில் ‘‘अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि’’ என்கிற वाक्यத்தாலும் கடலைக் கையிட்டுக் காட்டுமாப்போலே காட்டப்பட்ட अपरिच्छेद्यமான परमपुरुषार्थத்திலே निष्ठैயுண்டென்றறியலாம். இப்படி
14.11 அவ்வோ அடையாளங்களாலே ‘‘अहमात्मा न देहोऽस्मि विष्णुशेषोऽपरिग्रहः । तमेव शरणं प्राप्तस्तत्कैङ्कर्यचिकीर्षया ॥’’() என்கிறபடியே मूलमन्त्रादिகளைக் கொண்டு स्वरूपोपायपुरुषार्थங்களில் தன்னுடைய निष्ठैயை யுணர்ந்துபோருமிவ்வ धिकारिக்கு ‘‘नैषा पश्यति राक्षस्यो नेमान्पुष्पफलद्रुमान् । एकस्थहृदया नूनं राममेवानुपश्यति ॥’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 16-25.) என்கிறபடியே विरोधिயோடே கூடியிருக்கிற தனக்கு पाक्षिकமாக संभावितமான ब्रह्मविदपचारादिव्यतिरिक्तங்களான ஏதேனுமொரு भीतिहेतुக்களிலும், स्वरूपप्राप्तकैङ्कर्यव्यतिरिक्तங்களான ஏதேனுமொரு प्रीतिहेतुக்களிலும் கண்ணோட்டமுண்டாகாது: यदृच्छया உண்டானாலுமவற்றால் भीतिயும் प्रीतिயுமுண்டாகாது.
14.12 முக்கியமந்திரங்காட்டிய மூன்றினிலையுடையார்
தக்கவையன்றித் தகாதவையொன்றுந் தமக்கிசையார்
இக்கருமங்களெமக்குளவென்னுமிலக்கணத்தால்
மிக்கவுணர்த்தியர் மேதினிமேவிய விண்ணவரே. ( 21 )
14.13 स्वापोद्बोधव्यतिकर निभे भोगमोक्षान्तराळे
कालं कञ्चिज्जगति विधिना केनचित् स्थाप्यमानाः ।
तत्त्वोपायप्रभृतिविषये स्वामिदत्तां स्वनिष्ठां
शेषां कृत्वा शिरसि कृतिनश्शेषमायुर्नयन्ति ॥ ३३ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे स्वनिष्ठाभिज्ञानाधिकारश्चतुर्दशः ॥