ஶ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
ஸ்ரீமத் வரவரமுநயே நம :
பெரியஜீயர் அருளிச்செய்த ஸ்ரீவசபூ4ஷண வ்யாக்யாநத்துக்கு எம்பார் ஜீயர்ஸ்வாமி அருளிச்செய்த அரும்பத3 விளக்கம்
அவதாரிகை
பரமகாருணிகரான பெரிய ஜீயர் ஸ்ரீவசநபூ4ஷணமாகிற இப்ரப3ந்த4த்துக்கு व्याख्यान மிட்டருளுவதாகத்தொடங்கி. முதலிலே प्रेक्षावत्प्रवृत्त्यंगமான अनुबन्धिचतुष्टयத்தையும் आर्थिकமாக அறிவிப்பியாநின்று கொண்டு. மோக்ஷருசியுடையார் எல்லாரும் இத்தைப்பேணிய நுஸந்தி4க்கைக்குடலாக, “शास्त्रज्ञानं बहुक्लेशम्” என்கிறபடியே, எத்தனையேனுமளவுடை யார்க்கும் அவகா3ஹித்து அர்த்த2 நிஶ்சயம் பண்ணவரிதான வேதா3தி3ஶாஸ்த்ரங்களைப்பற்றித் தத்வஹித புருஷார்த்தங்களை ருசிபிறந்தார் இழவாதபடி மந்த3மதிகளுக்கும் ஸுக்3ரஹமாக உள்ளபடியறிவிப்பிக்கவற்றான உபதே3ஶாத்மக ப்ரப3ந்த4ங்களில் வைத்துக்கொண்டு உத்க்ருஷ்டதமமாகையாகிற இதின் வைலக்ஷண்யத்தை இதினுடைய ஸஹேதுகாவதரணக்ரமகத2நமுக2த்தாலே வெளியிடுகிறார்.– (ஸகல வேத3) என்று தொடங்கி, (வெளியிட்டருளுகிறார்) என்னுமளவாக. மேல் स्वप्रवृत्तान्तकथनமும் திருநாமநிர்வசநமும் இதுக்கு ஶேஷம். ஆக (ஸகலவேத3) என்று தொடங்கி (திருநாமமாய்த்து) என்னுமளவும் ப்ரவேஶம். प्रबन्धाभ्यासे अधिकारिण: प्रवेशयतीति प्रवेश: என்னக்கடவதிறே.
பேரருளாளப் பெருமாளுடைய திருவவதாரம் என்று ப்ரஸித்3த4ரான பிள்ளை லோகாசார்யர் தம்முடைய ஸம்ஸாரி சேதநர் இழவு காண மாட்டாமையாகிற அபாரகாருண்யமும். பெரிய பெருமாள் நியமநமுமிறே அத்யந்த கு3ஹ்யமான இப்ரப3ந்த4த்தினவதரணத்துக்கு ஹேது. அதில் प्रधानहेतु வான காருண்யத்தை. இப்ரப3ந்த4த்தை வெளியிட்டல்லது த4ரிக்கவொண்ணாதபடி விகரிப்பித்ததுகளான ஸம்ஸாரி சேதநர்களுடைய स्वरूपप्राप्तपरमपुरुषार्थानुभव த்துக்கு இடைச்சுவரான अप्राप्तानन्तापुरुषार्थ ங்களினுடைய अनादिकालानुभव மும், அதினுடைய अनागतानन्तकालानुवर्तनार्ह தையுமாகிற அநர்த்த2ங்களை (ருசிபிறந்த சேதநர் இழந்துபோம்படியிருக்கையாலே) என்னுமளவாலே த3ர்ஶிப்பியா நின்றுகொண்டு. प्रथमं, ஸர்வாத்மாக்களினுடையவும் परमपुरुषार्थानुभवयोग्यताहेतु வை ஸப்ரமாணமாக அருளிச்செய்கிறார் (ஸகலவேத3ஸங்க்3ரஹ) இத்யாதி3 வாக்யத்தாலே.
அவதாரிகை முற்றிற்று.
எம்பார் ஜீயர் ஸ்வாமியின் அரும்பத விளக்கம்
திருமந்த்ரமிறே “भजेत्सारतमं शास्त्रे” என்கிறபடியே प्रबलप्रमाणம். “सर्वमष्टाक्षरान्तस्स्थं” என்றும். “सर्ववेदान्तसारार्थ:” என்றும் சொல்லுகிறபடியே–“सर्ववेदसंग्रहंம்” என்னாதே, (ஸகல வேத3) என்றருளிச்செய்தது, 1. कम् -परंब्रह्म, लाति-आददाति वशीकरोतीति कला श्रीः; “शक्तीनां चैव सर्वासां योनिभूता परा कला” என்று சொல்லிற்றிறே: “तया सह वर्तत इति-सकल:” என்றாய். பரமைகாந்திக்கும்கூட कैङ्कर्यतया शिष्टाचारसिद्धश्रिय:पतिरूपप्रकृतग्रन्थंप्तिपाद्यवस्तुनिर्देशात्मकमङ्गलம் விழுக்காட்டாலே முதலிலே ஸித்3தி4க்கைக்காகவாதல். 2. “कलाभि: सह वर्तन्त इति-सकला:” என்று வேத3ஶப்3த3விஶேஷணமாய்’ “यच्चान्यदपिवाङ्मयम्”என்று पृथगुक्तोपबृंहणसंग्रहत्वं திருமந்த்ரத்தில் எங்கும் ஸித்3தி4க்கைக்காகவாதல். 3.”वदन्ति सकला वेदा:”என்கிற वचनप्रत्यभिज्ञापन मुख த்தாலே திருமந்த்ரத்தினுடைய वेदसंग्रहत्वம் अर्थद्वारक மென்று सूचनार्थமாதல். 4. रहस्यत्रयத்திலும் வைத்துக்கொண்டு उपबृंहण स्थानीयமான चरमश्लोकத்தைக் कलाशब्दத்தாலும். कठवल्लीद्वयोपनीयத்தில் “वेदोऽयं ब्राह्मणा विदु:” “वेदेनानेन वेदितव्यं” என்கிற வாக்யத்தாலே வேதமாகச் சொல்லப்பட்ட த்3வயத்தை வேத3 சப்3த3த்தாலும் சொல்லி இது இரண்டுக்கும் संग्रहமான திருமந்த்ரமென்று विशेषार्थलाभतात्पर्य த்தாலே யாதல் என்று கண்டுகொள்வது.
(வேத3ஸங்க்3ரஹமான) என்றது வேதா3ர்த்த2 ஸங்க்3ரஹமான என்றபடி. “वेदवित्” “शास्त्रवित्” என்னக்கடவதிறே. (ஸங்க்3ரஹமான) என்றது “सम्यक् गृह्यते अनेनेति-संग्रह: ” என்றாய் நன்றாகவறிவிப்பிக்குமதான என்றபடி. அறிவுக்கு நன்மையாவது.–सुखपूर्वமாய், काष्ठापर्यन्त மாய், अविचाल्य மாயிருக்கை . “त्रैगुण्यविषया वेदा:” என்கிறபடியே गुणानुगुणसाधनपरवेदवाक्यसंग्रहत्मம் திருமந்த்ரத்துக்குக் கூடும்படியென்னென்னில்: அவ்வோ साध्यसाधनங்களுக்கு विरोधिस्वरूपपरषषठ्यन्तमकारத்திலும். तत्तदाराध्यत्वतत्तत्फलप्रदत्व-रूपभगवत्कल्याणगुण ங்களுக்கு नारपदத்திலும் संग्रह மென்று கண்டுகொள்வது. (पदत्रयத்தாலும்) என்றது ‘प्रणवाद्यं नमोमध्यं नारायणपदान्तिमाम् ‘” என்றுசொல்லுகிற पदत्रयத்தாலு மென்றபடி. (ப்ரதிபாதி3க்கப்படுகிற) அடைவே சொல்லப்படுகிற. (आकारत्रय மும்) शेषित्व மும் शरण्यत्व மும் प्राप्यत्वமும்.(ஸர்வாத்மஸாதா4ரணமாகையாலே) என்றது – அநேக புத்ரர்களுக்கு ஒரு पितृत्वம்போலே सर्वात्मनिरूपितமாய்க் கொண்டு பொதுவாய் இருக்கையாலேயென் றபடி. பொதுவானபடியென்னென்னில்:- शेषित्वपर மான प्रथमपद த்தில் शेषत्वाश्रयवाचि யான மகாரம் “दासभूता: स्वतस्सर्वे ह्यात्मान:” என்கிற उपबृंहणसहकारத்தாலே जात्येकवचनமாய்க்கொண்டு सर्वात्मवाचकமாயிருக்கையாலேயும். அந்த மகாரத்தையே மற்றவிரண்டு பதங்களிலும் कर्तृवाचकமாக அந்வயித்து “எம்பெருமானுக்கேயுரியனான நான் எனக்குரியனன்றிக்கேயொழியவேணும். ஸர்வஶேஷியான நாராயணனுக்கே எல்லாவடிமைகளும் செய்யப்பெறுவேனாகவேணும்” என்று வாக்யார்த்த2ம் அருளிச்செய்கையாலும் ஸர்வாத்ம ஸாதா4ரணம் என்னக்குறையில்லையென்று கண்டுகொள்வது.- सकलात्मसाधारणமென்னாதே, सर्वात्मसाधारणமென்றது. पूर्वोक्तोपबृंहणसहकारज्ञापनार्थ மாக. ஆக இவ்வாக்யத்தால்-திருமந்த்ரஸித்3த4மான शेषित्वादिनिरूपकत्वமே ஸர்வாத்மாக்களுக்கும் भगवदनुभवस्वरूपयोग्यताहेतुவென்றருளிச்செய்தார். மேலொரு வாக்யத்தால் அந்தயோக்3யதையின் கனத்தை सदृष्टान्तமாக த3ர்ஶிப்பிக்கிறார். दृष्टान्तभूतரான நித்யஸுரிகளுடைய नित्यानुभवத்தில் प्रमाणம் காட்டுகிறார்.-(यत्रर्षय:) இத்யாதி3யாலே. यत्र யாதொரு பரமபத3த்திலே. ये யாதொரு நித்யஸுரிகள். (நித்யஸுரிகளோபாதி)யென்றது நித்யஸுரிகளைப்போலே யென்றபடி. முக்தரை दृष्टान्तமாக்கில் அவர்களுக்கு अतीत-कालानुभवமில்லாமையாலே யோக்3யதைகுறையத்தோன்று மிறே. ஆகையிறே திருமந்த்ரார்த்த2த்திலும் ”அந்தநித்யஸுரிகளோபாதி” என்று सन्निहितரான முக்தரை விட்டு நித்யஸுரிகளையே दृष्टान्त மாகவருளிச்செய்தது. “यत्रर्षय:” என்கிற வாக்யத்தில் “ऋ-गतौ”என்கிற धातु விலே निष्पन्नமான ऋषि ஶப்3த3ம் असंकोचात् अपरिच्छिन्नமான ज्ञानपरமென்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார். – (நித்யாஸங்குசித ஜ்ஞாநராய்க்கொண்டு) என்று. नित्यत्वं कालपरिच्छेदरहितत्वं।असंकुचितत्वं विषयदेशपरिच्छेदराहित्यं। “प्रथमजा:”என்கிற पदம் सहजदास्याधिनात्म ஸத்தையாகிற ஜந்மபரமென்றும். पुराणा:என்கிற பத3ம் ‘पुरापि नवा: पुराणा:’ என்றாய். அந்த दास्यத்தாலுண்டான निरतिशयानन्दத்தால் என்று மொக்க இளகிப்பதித்திருக்கையாகிற सततैकरूपதையைச் சொல்லுகிறது என்றும்திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார் (நிரந்தர) इत्यादि இருக்கச்செய்தேயும். इत्यन्तம் – निरन्तर-இடைவீடில்லாமல்.अनुभव ஶப்3த3ம் दास्यपरம். “भृत्यमनुभवति स्वामि”என்றால் அடிமை கொள்ளுகையையும். “भर्तारमनुभवति भार्या” என்றால். பலபடியாலும் அத்தலைக்கே ரஸமாக விநியோக3ப்படுகையையும் காட்டக்கடவதிறே. *(யோக்3யதை) अनन्यार्हशेषत्वानन्यशरणत्वानन्यभोग्यत्व ங்களாகிற आकारत्रयம்; अनन्यभोग्यர்க்கே யெம்பெருமான் भोग्यனாகையாலேயும். விரோதி4யைப்போக்கி போ4க்3யனான தன்னைத்தருகைக்குடலான शरण्यत्वமும் अनन्यशरणர்க்கேயாயிருக்கையாலேயும். இத்தலையில் பேறிழவுகளை அத்தலையதாம்படியமைத்துக்கொடுக்கிற शेषित्वமும் अनन्यार्हशेषित्वनिरूपितமாயிருக்கையாலேயும். தன் பேறாக எம்பெருமான்றானே निरपेक्षप्रापकனாய் நின்று தன்னை அநுப4விப்பித்தாலல்லது स्वरूपसिद्धि உண்டாகாதபடியிருக்கிற शेषित्वादिகளுக்கு प्रतिसम्बन्धिस्वरूपங்களான अनन्यार्हशेषत्वाद्याकारत्रयமுமே भगवदनुभव யோக்3யதையென்னக் குறையில்லையிறே. (உண்டாயிருக்க) என்று கனக்கப் பொருளாகவருளிச் செய்தது.- “नित्यस्य स्वरूपयोग्यत्वे फलावश्यम्भाव:” என்கிற ந்யாயத்தாலே ஒருக்கால் இந்த யோக்3யதை फलोपधानहेतुவாமென்று. उपासनविशेषजनितभगवत्संकल्पविशेषத்தாலே கேவலர்க்கு இந்த யோக்3யதை நஶிக்கையாலேயிறே அவர்களுக்கு ஒருக்காலும் परमपुरुषार्थान्वयம் இன்றிக்கேயொழிந்தது. (உண்டாயிருக்கச் செய்தேயும்) என்கிற ”அபி'” ஶப்3த3ம் विरोधार्थकம். (யோக்யதையுண்டாயிருக்கச் செய்தேயும்) என்கிறவிதுக்கு (து3க்க2ங்களை அனுப4வித்துத்திரிகிற) என்கிறத்தோடேயந்வயம். ஆக இவ்வாக்யத்தால் ஸம்ஸாரிகளுக்குண்டான भगवदनुभवयोग्यதையின்உறைப்பையருளிச்செய்தார்.
மேலொரு சூர்ணையாலே भगवदनुभवத்துக்கு இட்டுப் பிறந்து வைத்தும் கிட்டப்பெறாதபடி அந்த ஸம்ஸாரி சேதநர் படுகிற அநர்த்த2 பரம்பரையை அடைவேயருளிச் செய்யத்தொடங்கி, அவையெல்லாவற்றுக்கும் மூலகாரணமான अनाद्यचित्सम्बन्धத்தில் प्रमाण ம் காட்டுகிறார். – (“अनादि मायया सुप्त:” என்கிறபடியே) என்று. மாயாஶப்3தா3ர்த்தமான ப்ரக்ருதியின் கொடுமையை அறிவிக்கைக்காக गद्यश्रीसूक्तिயாலே விஶேஷித்து அந்த ஶ்ருத்யர்த்த2மருளிச் செய்கிறார்,– (तिलतैलवत्) என்றுதொடங்கி, (तिलतैलवत्) என்றது எள்ளுள் எண்ணெய்போலே என்றபடி; (दारुवह्निवत्)என்றது. அரணியில் நெருப்புப்போலே என்றபடி. (दुर्विवेच) என்றது குறியழியாதபடி பிரித்துக்காணவொண்ணாத என்றபடி. (त्रिगुण) என்றது- सत्वरजस्तमोमय மானஎன்றபடி. (दुरत्यय) என்றது-எம்பெருமானையொழிய ஒருவராலும் கடக்கவரிதான என்றபடி. ”அநாதி3” என்று தொடங்கி ஶ்ருத்யர்த்த2ம்:(अनादित्व)மாவது வந்தேறின காலத்துக்கு அடிதெரியாதிருக்கை. “मम माया”என்கிற उपबृंहणத்தைத் திருவுள்ளம் பற்றி मायाशब्दार्थமருளிச்செய்கிறார் (भगवन्माया) என்று. மாயை-விசித்ரகார்யகரியான ப்ரக்ருதி. (सुप्त)पदம் तिरोहितज्ञानपर ம் என்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார் (माया–तोरोहित) என்று. (माया–तोरोहित) என்றது-ப்ரக்ருதியாலே மறைக்கப்பட்ட என்றபடி. (ஸ்வப்ரகாஶராய்). 1. स्वविषयकदेहादिवेलक्षण्यज्ञान த்தையுடையராய். 2. அன்றிக்கே, மறைக்கப்பட்டிருக்கிற ஸ்வஸ்வரூபத்தையும், ப்ரகாஶ த4ர்மபூ4த ஜ்ஞானத்தையும் உடையராய் என்றுமாம். ஆக, இவ்வாக்யத்தால் नित्यासंकुचितज्ञानராய்க்கொண்டிருக்கைக்கு எதிர்த்கட்டாக तिरोहितस्वप्रकाशत्वமாகிற அநர்த்த2த்தை அருளிச்செய்தார்.
மேல், निरन्तरभगवदनुभव த்துக்கு எதிர்த்தட்டான भगवदत्यन्तवैमुख्य த்தை அருளிச்செய்யத் தொடங்கி, அந்த வைமுக்2ய ஹேதுக்களான प्रकृतिसंबन्धकार्यपरंपरैயை அருளிச் செய்கிறார்.-(அநாத்3ய வித்3யா என்று தொடங்கி. பிறந்து என்னுமளவும்) (அநாத்3ய வித்3யா) என்றது ப்ரவாஹரூபேண அநாதி3களான देहात्मबुद्धिயும், अस्वे स्वबुद्धिயுமாகிற அஜ்ஞாநங்களாலே என்றபடி. (புண்யாபுண்யங்கள்) புண்யபாபங்கள். *(பாபஸாத4நம்) देहात्मभ्रमம், (புண்யஸாத4நம்) अस्वे स्वत्मभ्रमமென்று கண்டுகொள்வது. (யோநிகள் தோறும்) ஜந்மங்கள் தோறும். (மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து) என்றது, ஒரோயோநிகளிலே மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து என்றபடி. ஆக, இவ்வாக்யத்தால் ज्ञानात्मकமான வஸ்து அசித்தோடொக்க மசக்குப்பரலிட்டு மயக்கும்படி பிறந்து பட்ட அநர்த்த2த்தை அருளிச்செய்தார்.
மேல் அத்தாலுண்டான प्राप्तशेषि யினுடைய அநுப4வத்துக்கு எதிர்த்தட்டான अन्यशेषत्वादि களாகிற படுகுழிகளை யருளிச்செய்கிறார் (देहात्माभिमान மும் என்று தொடங்கி விழுந்து) என்னுமளவாக. (देहात्माभिमानம்) தே3ஹமே ஆத்மா என்கிற भ्रमம். (स्वातन्त्र्य ம்) स्वातन्त्र्यभ्रमம். (अन्यशेषत्वம்) देवतान्तरशेषत्वம். (படுகுழி) स्वरूपनाशहेतुவான குழி . ஆக இவ்வாக்யத்தால் प्राप्तशेषि யானவன் பக்கலிலே अत्यन्तवैमुख्यத்தை யருளிச்செய்தார். वैमुख्यம் -अन्यशेषत्वம்; अतिवैमुख्यம்-स्वस्वातन्त्र्यம்; अत्यन्तवैमुख्यம்-देहात्माभिमानம் என்று विभागம் கண்டுகொள்வது.
மேல் परमप्राप्यप्रापकभूतனானவனுடைய அநுப4வத்துக்கு எதிர்த்தட்டான पूर्वानर्थकार्यानर्थविशेषங்களை அருளிச் செய்கிறார். (तत्तनुगुण இத்யாதி3யால் ஏறிட்டுக் கொண்டு इत्यन्तेन) (तत्तनुगुण) என்றது, प्रत्येकं देहात्माभिमानाद्यनुगुण என்றபடி. (साध्यसाधनங்கள்) पुरुषार्थोपायங்கள். அதில் (देहात्माभिमानानुगुणसाध्यसाधनங்கள்) ऐहिकैश्वर्यतत्साधनங்கள்; (स्वातन्त्र्याभिमानानुगुणங்கள்) पारलौकिकतत्साधनங்கள்; (अन्यशेषत्वानुगुणங்கள்) देवतान्तरसायुज्यतदाराधनங்கள் என்று विभागம் (மண்டி) ஆழ்ந்து (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு) ஏதேனுமொன்றை அவலம்பி4த்து प्राप्यप्रापकभूतனான எம்பெருமானை அகலுகையாகிற வ்ரதத்தை ஆரோ பித்துக்கொண்டு. இத்தால், भगवद्विषयद्वेषம் फलितம். ஆக, இவ்வாக்யத்தால் प्राप्यप्रापकाभासान्वयத்தாலே परमप्राप्यप्रापकனானவன் பக்கலிலே वैमुख्यத்தையும், அதுகளில் மண்டுகையாலே अतिवैमुख्यத்தையும், நீங்கும் விரதத்தை யேறிட்டுக்கொள்ளுகையாலே अत्यन्तवैमुख्यத்தையும் அருளிச்செய்தாராய்த்து.
கீழ் तत्तच्छब्दங்களாலே விஶேஷித்துக்காட்டப்பட்ட वैमुख्यங்களை स्वशब्दத்தாலே स्पष्टமாகத் தொகுத்துக் காட்டுகிறார் (प्राप्तशेषिயாய் इत्यादिना अत्यन्तविमुखராய் என்னுமளவாக) (प्राप्तशेषि) उचितशेषि. (परम) ஶப்3த3ம் (प्राप्यप्रापक)ங்களிரண்டிலும் विशेषणம். -* (प्राप्यत्वம்)शेषवृत्तिप्रतिसम्बन्धित्वம். (प्रापकत्वம்)संकल्पद्वारा फलजनकत्वம். *(परमत्व)மாவது தனக்கொரு प्राप्यप्रापकங்களின்றிக்கே தானே प्राप्यனாயும் प्रापकனாயுமிருக்கை, *“स्वापेक्षया उत्कृष्टरहितत्वं परमत्वं ” என்னில், स्वतन्त्रोपायமாகச் சொல்லப்பட்ட चरमोपाय மொழிந்ததாமிறே. * ஆக, இவ்வளவால் निरन्तरभगवदनुभवத்துக்கு எதிர்த்தட்டான भगवदत्यन्तवैमुख्यமாகிற अनर्थपरम्पரையை அருளிச்செய்தார்.
மேல், निरतिशयानन्दतृप्तனாயிருக்கைக்கு எதிர்த்தட்டான இவர்களுடைய संसारचक्रभ्रमणமாகிற अनर्थத்தையருளிச்செய்கிறார் (गर्भजन्म இத்யாதியாலே திரிகிற என்னுமளவாக). (गर्भ ம்)गर्भवास ம்; (जन्म) योनिसंकटம். (यौवनம்) कामबाधा. (मरणம்) उत्क्रमणம். (निरन्तर) இடைவீடில்லாமல் (वितत) विस्तृतமாய். (विविध) आध्यात्मिकादिभेदभिन्नமாய். (निरवधिक) ஒருக்காலும் முடிவில்லாததாயிருக்கிற. ஆக, (திரிகிற) इत्यन्तத்தாலே, “एवं संसृतिचक्रस्थे भ्राम्यमाणे स्वकर्मभि:। जीवे दु:खाकुले विष्णो: कृपा काऽप्युपजायते।।” என்கிறபடியே, निरङ्कुशस्वतन्त्रனாய். சேதநருடைய குற்றங்களைப் பத்தும் பத்தாக நிறுத்தறுத்துத்தீத்துமவனான ஸர்வேஶ்வரனுக்கும். ஒருக்கால் “ஐயோ” என்று இரங்கவேண்டும்படியான अनर्थपरम्पரைகளாலே விஶேஷித்துக்கொண்டுபோந்து, विशेष्यनिर्देशம் பண்ணுகிறார் (இஸ்ஸம்ஸாரி சேதநரிலே) என்று. (திரிகிற இஸ்ஸம்ஸாரி சேதநரிலே) என்கிற समभिव्याहारத்தாலே, संसारिशब्दம் “सृ-गतौ” என்கிற धातुவிலே निष्पन्नமென்று सूचितம். (சேதநரிலே) என்று निर्धारणे सप्तमि.
ஆக இவ்வளவும் வர, அநாதிகாலமாக ஸம்ஸாரி சேதநர்படும் அநர்த்தபரம்பரையையருளிச்செய்து, இவர்களுடைய उज्जीवनार्थமாகப் பண்ணும் எம்பெருமானுடைய सत्वप्रवर्तनशास्त्रप्रवर्तनादिकृषिகங்களும் இவர்கள் திறத்தில் कार्यकरமன்றிக்கே யொழிகையாலே. अनागतानन्तकालத்திலும் ஈடேற விரகில்லாமையாகிற அநர்த்த2த்தை அருளிச்செய்யத் தொடங்கி, இவர்களுடைய उज्जीवनांशத்தில் सत्वप्रवर्तनात्मक भगवत्कृषिயினுடைய तत्वज्ञानसापेक्षதையை அருளிச்செய்கிறார்,-(ஆரேனும் என்று தொடங்கி वाक्यद्वयத்தாலே). ‘जायमानं हि” என்கிற ஶ்லோகத்தை உட்கொண்டது प्रथमवाक्यம்; அந்த ஶ்லோகத்தில். कटाक्षविषयभूतனை जात्याश्रमादिகளாலே விஶேஷியாமல், “जीवे दु:खाकुले ” என்கிறபடியே केवलம் आत्मवाचक पुरुषशब्दத்தாலே அருளிச்செய்கையாலே, கடாக்ஷத்துக்கு अधिकारिनियमமில்லை என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் ( ஆரேனும்) என்று. “यं पश्येत्” “स तु” “स वै” என்று यच्छब्दतच्छब्दप्रयोगம் व्याप्तिप्रदर्शनाभिप्रायம் என்னும் கருத்தாலே அருளிச்செய்கிறார் (சிலர்க்கு) என்று. ”जायमानम्” என்று वर्तमानजन्मविशिष्टतया புருஷனை விஶேஷித்தது. कटाक्षकालनियमाभिप्रायத்தாலே என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (ஜாயமாநகால) என்று. द्वितीयावस्थासमानकालத்திலென்றபடி. உருகுபதத்தில் வளைவு போலிறே இதின் பாகம்.
இவ்விடத்தில். ஆழ்வானோடு பள்ளியோதினான் ஒரு ப்3ராஹ்மணன் பக்கல் அவர்க்கு ஸ்நேஹம் பின்னாட்டி, “இவனை அங்கீகரித்தருளவேணும்’ என்று பெரிய பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்ய, அவரும் ‘ஜாயமாநகால கடாக்ஷமில்லையே. என் செய்வோம்” என்ன, இவரும் “ஸர்வஶக்தரான தேவரீர்க்கு அஶக்யமுண்டோ ” என்று மிகவும் ப்ரார்த்திக்க. அந்த ப்ராஹ்மணனுடைய பிள்ளைக்கு ஜாயமாநகாலகடாக்ஷம் செய்தருளி அவ்வழியாலே அவனைப் பெருமாள் அங்கீகரித்தருளினார் என்கிற ऐतिह्यம் अनुसंधेयம்.
*मधुसूदन ஶப்,த3ம் कटाक्षोपयोगिसकलकल्याणगुणोपलक्षकம்’ என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (भगवत्) என்று. “ज्ञानशक्तिबलैश्वर्यवीर्यतेजांस्यशेषत:|भगवच्छब्दवाच्यानि विना हेयैर्गुणादिभि:” என்னக்கடவதிறே. “पश्येत्” என்கிற पदம், “दृशिर् प्रेक्षणे” என்று उपसर्गगर्भமாயிருக்கையாலும், “प्रेक्षे कंचित् कदाचन” என்றிருக்கையாலும். विशेषकटाक्षपरம் என்னுமபி4ப்ராயத்தாலேயருளிச்செய்கிறார் (கடாக்ஷவிஶேஷத்தாலே) என்று. விஶேஷ கடாக்ஷத்தாலே என்றபடி. (विशेष)மாவது निर्हेतुकत्वம். “नाहं पुरुषकारेण न चान्यन्येन हेतुना” என்னக்கடவதிறே. “स तु” என்கிற तुशब्दம் पूर्वदशावैलक्षण्यपरமாய். அதுதான் “निस्त्रैगुण्यो भवार्जुन” என்கிற निस्त्रैगुण्यत्वம் என்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார்.- ( ரஜஸ் தமஸ்ஸுக்கள் ) என்று. (தலைமடிந்து ) என்றது பல்வாங்கின பாம்புபோலே नष्टसक्तिकமாய் என்றபடி. ताच्छील्ये ठक् प्रत्ययान्तமான सात्विकशब्दार्थம் (ஸத்வம் தலையெடுத்து) என்று. (தலையெடுத்து) என்றது -निरन्तरोद्रिक्तशाक्तिकமாயென்றபடி. मोक्षार्थचिन्तक: என்கிறவிடத்தில். “मुक्तिर्मोक्षो महानन्द:” என்று – महानन्दवाचिயான मोक्षशब्दத்துக்குமேலே प्रयोजनवाचक अर्थशब्दप्रयोगம் चिन्तायां अत्यन्तप्रीतिरूपत्वज्ञापनार्थம் என்று திருவுள்ளம்பற்றி யருளிச்செய்கிறார்.- (மோக்ஷருசியுண்டானாலும் ) என்று. (ஆனாலும்) என்று यद्यालिंगितமாக அருளிச்செய்தது. “पश्यति” என்னாதே “पश्येत्” என்று सम्भावनार्थकलिङ्न्तமான प्रयोगம் कटाक्षदौलभ्याभिप्रायமென்னுமத்தாலே என்று கண்டு கொள்வது. (ஆனாலும்) என்கிற अपिशब्दம், वक्ष्यमाण तत्वज्ञानमन्तरा मोक्षरुच्यकार्यकरत्वद्योतकம்.
இனி, அந்த ருசியினுடைய ஸாபேக்ஷதையை அருளிச் செய்கிறார்.–(तत्त्व इत्यादिवाक्य த்தாலே) (तत्त्व)ங்கள்-स्वस्वरूपरस्वरूपविरोधिस्वरूपங்கள்.(हितம்) उपायस्वरूप ம். (पुरुषार्थம்) फलस्वरूपம் – (உள்ளபடி) எல்லையளவாக. (அறிந்தே) என்று अवधரித்தது “கனங்குழையிடக்காதுபெருக்குதலும். மாஸோபவாஸி போ4ஜனப்புறப்பூச்சும்போலே. அநுப4வ கைங்கர்யங்களை அநாதி3காலமிழந்து கிடந்த ஸம்ஸாரிகளுக்கு நலக்கேடு வாராதபடி ஒரு தே3ஶவிஷேத்திலே अपरिच्छिन्नங்களாக அவைகளைப்பெற்று உண்டறுத்துக்கொள்ள யோக்3யதையுண்டாம்போது. இவ்விபூ4தியில் தத்வஹித புருஷார்த்த2ங்களை உள்ளபடியறிந்து, अर्चावताराद्यनुभवकैङ्कर्यங்களில் சிரமம் செய்தே உண்டாகவேணும்” என்னுமபி4ப்ராயத்தாலே. शास्त्रज्ञानायोग्यமான कोसल गोकुल चराचरங்களுக்குங்கூட संश्लेषविश्लेषैकसुखदु:खत्वपर्यन्तமான अनुभवपाकம் प्रसिद्धமிறே. विषयवासित्वं முதலான மறுக்கவொண்ணாத सम्बन्धமுண்டாய், विपरीतप्रवृत्तिயின்றியிலேயிருக்கையாலேயிறே, அவ்விஷயத்தில் எம்பெருமான்றானே फलपर्यन्तமாக க்ருஷிபண்ணிற்று. विपरीतप्रवृत्तिயுண்டாய்ச் செல்லுமவர்களுக்கு அவன் பண்ணும் க்ருஷியை விலக்காமைக்குத் தத்வஹித புருஷார்த்த2 ஜ்ஞாநம் வேண்டுகையாலே (அறிந்தே) என்று अवधரிக்கக் குறையில்லையிறே. ஆக எம்பெருமானுடைய चेतनोज्जीवनार्थसत्त्वप्रवर्तनத்தினுடைய ज्ञानஸாபேக்ஷதையையருளிச்செய்தார்.
மேல், அந்த ज्ञानोत्पादनार्थமான शास्त्रप्रवर्तनத்தினுடைய नैष्फल्यपर्यवसानத்தையருளிச்செய்கிறார் (அவைதன்னை) என்று தொடங்கி ( அர்த்த2 த3ர்ஶநம் பண்ணப்போகாமையாலும்) என்னுமளவாகப் पञ्चम्यन्तवाक्यचतुष्टयத்தாலே.(அவைதன்னை) तत्त्वहितपुरुषार्थங்களை. (ஶாஸ்த்ர முக2த்தாலே) नाथयामुनादि पूर्वाचार्यपरम्पराप्राप्तोपदेशबहिर्भावेन संस्कृतद्राविडभेदभिन्न केवलशास्त्रमुखத்தாலே யென்றபடி. ரஹஸ்யத்ரயத்திலும் வைத்துக் கொண்டு. சரமஶ்லோகம் विधायकமாயிருக்கையாலேயும், दिव्यप्रबन्धங்களில் परोपदेशங்களெல்லாம் विधायकங்களாயிருக்கையாலேயும், ‘शासनात् शास्त्रम्’” என்கிற शास्त्रत्वம் सर्वसाधारणமிறே. மேல், வேத3ங்களினுடைய अनन्तत्वादिदोषप्रयुक्ताकार्यकरत्वத்தையருளிச்செய்கிறார். – (ஶாஸ்த்ரங்களில்) என்று தொடங்கி. (ஶாஸ்த்ரங்களில் தலையான) என்றது “वेदसास्त्रात् परं नासति” என்கிறபடியே ஶாஸ்த்ரங்களுக்குள்ளே ஸ்வத:ப்ராமாண்யாதி3களாலே உத்தமமானவென்றபடி. “சுடர்மிகு சுருதியுள்’ என்று ஆழ்வார் பரிக்3ரஹத்தாலே யென்றுமாம். ( வேத3மானது) என்று एकवचनं. ”वेदैश्च सर्वै: अहमेव वेद्य:” என்று * ஸர்வவேத3ங்களும் साराधनभगवदेकप्रतिपादकतया एकवाक्यतापन्नங்கள்* என்று ஸுசிப்பிக்கைக்காக. ( அநந்தமாய் ) என்றது- அளவில்லாததாய் என்றபடி, अधीर्ताशங்கொண்டு. அர்த்த நிஶ்சயம்பண்ணக் குறையென் னென்னவருளிச்செய்கிறார் (सर्वशाखेत्यादि)யாலே. सर्वशाखाप्रत्ययन्यायமாவது:–ஒரு ஶாகையில் ஒரு கர்மத்தைச் சொல்லி, ஶாகாந்தரங்களில் அதன் அங்கோ3பாங்கங்கள் சொல்லியிருந்தால், இரண்டையும் அத்யயாம்பண்ணி, அதில்வரும் விரோதங்களையும் பரிஹரித்து, அங்கியான கர்மத்தோடே அந்த அங்கோபாங்கங்களைச் சேர்த்து एकवाक्यार्थनिश्चयம் பண்ணுகைக்குடலான ந்யாயம். ( ஆதி3) ஶப்3த3த்தாலே ஸர்வவேதா3ந்த ப்ரத்யய ந்யாயாதி3 விவக்ஷிதம். அதுவும் பூர்வம்போலே வேதா3ந்தங்களில் गुणोपसंहारार्थन्यायமென்று கண்டுகொள்வது. (அல்பமதிகளுக்கு ) வேதங்களைக் கரைகாணமாட்டாத மந்தமதிகளுக்கு. (அவகா3ஹித்து) ஸர்வஶாகா ப்ரத்யயந்யாயாதிகளைக்கொண்டு விசாரித்து. ( அர்த்த2 நிஶ்சயம்பண்ண) “इदमेकं सुनिष्पन्नम्” என்கிறபடியே ஏகவாக்யார்த்த2 நிஶ்சயம் பண்ண. (அரிதாகையாலும்) து3ர்லப4மாகையாலும்.
மேல், अनधीतशाखार्थप्रतिपादकங்களான उपबृंहणங்களினுடைய अकार्यकरत्वத்தையருளிச்செய்கிறார் ( அந்த வேத3பாரக3ராய்) இத்யாதி3நா. (அந்த வேத3பாரக3ராய்) என்றது स्वाराधनप्रीतभगवत्प्रसादविशेषத்தாலே அநந்தமான அந்த வேத3ங்களையும் கரைகண்டவர்களாயென்றபடி. (स्वयोगमहिमसाक्षात्कृत) என்றது-कर्मयोगादिप्रीतभगवत्प्रसादத்தாலே நன்றாக அறியப்பட்ட என்றபடி.परतत्त्व-शेषित्वं अवरतत्त्वं-शेषतत्त्वं (विभाग:)हेयोपादेयतादिवैलक्षण्यज्ञानம். (ஸாரங்கள்) भगवद्वैभवतदाराधनपरங்களான ஸாத்விக ஸ்ம்ருத்யாதி3கள். (அஸாரங்கள்) अन्यवैभवतदाराधनपरங்களான ராஜஸ தாமஸங்கள். (விவேகம்) प्राबल्यदौर्बल्यझानம். (தாத்பர்யாம்ஶம்) “वदन्ति सकला वेदा: सेतिहासपुराणका:” என்கிறபடியே அர்த்த2பஞ்சகம். (அம்ஶ)ஶப்3த3 ப்ரயோக3த்தாலே. “यावानर्थ उपादेन ” என்கிறபடியே, उपबृंहणங்களிலும். சேதநர்களுடைய ருசிக்கீடாக “सैषोऽन्यो ग्रन्थविस्तर:” என்கிறபடியே விஸ்தரிப்பித்துக்கொண்டு *आवरणभ्रमणेन गोपुरप्रवेशन्यायेन* அர்த்த பஞ்சகத்தையே ப்ரதிபாதி3க்கையாலே அல்பாம்ஶமே முமுக்ஷவுக்கு க்3ராஹ்ய மென்று ஸுசிதம். ஆக இவ்வளவால். ஸர்வேஶ்வரன் போ4க3லீலைகளிரண்டுக்கும் பொதுவாக ஸத்3வாரகமாகவும் அத்3வாரகமாகவும் ப்ரவர்த்திப்பித்த वेदतदुपबृंहणங்களினுடைய तत्त्वज्ञानाप्रयोजकत्वத்தையருளிச்செய்தார்.
மேல், சேநநோஜ்ஜீவநத்துக்கே அஸாதா4ரணஹேதுவாக, எம்பெருமான் தானே அத்3வாரமாகவும் ஸத்3வாரமாகவும் ப்ரவர்த்திப்பித்தருளின ரஹஸ்யத்ரய த்3ராவிட வேத3த3ங்கோபாங்கங்களினுடையவும் अकार्यकरत्वத்தை யருளிச் செய்வதாகத் தொடங்கி, முதலிலே ரஹஸ்யத்ரயத்தினுடைய अकार्यकरत्वத்தையருளிச்செய்கிறார். –(அவை போலன்றிக்கே) என்று தொடங்கி, (அவை போலன்றிக்கே) என்றது- जगत्सर्गार्थतया ब्रह्मणे भगवता स्वेनैव प्रवर्तितत्वानन्तत्वस्वार्थबोधनांशे सर्वशाखाप्रत्ययन्य:यादिसापेक्षत्वादिदोषयुक्त ங்களான வேத3ங்கள் போலேயும் स्वयत्नसंवर्धितज्ञानपरमर्षिद्वारा भगवत्प्रवर्तितत्व असारबहुलत्वदोषयुक्तங்களான उपबृंहण-ங்கள் போலுமன்றிக்கே யென்றபடி. ரஹஸ்யத்ரய வைலக்ஷண்யத்தை வெளியிடுகிறார் (ஸம்ஸாரி) இத்யாதி3யால். இத்தால் अन्यार्थप्रवर्तितत्वदोषமில்லையென்று சொல்லிற்று. (தானே) என்கையாலே द्वारभूतब्रह्मादिகளுடைய கு3ணாநுகு3ணமாய் வரும் தோ3ஷமில்லையென்று சொல்லிற்று. (ஆசார்யனாய்) என்கையாலே अनाचार्योपदिष्टत्वदोषமில்லையென்று சொல்லிற்று. இங்கு தானே சிஷ்யனுமாய் ‘ என்னாதொழிந்தது. रहस्यत्रयसाधारण्यसिद्ध्यर्थமாக. மந்த்ரமாத்ரத்தையிறே சிஷ்யனாய் நின்று ப்ரவர்த்திப்பித்தது. (வெளிப்படுத்தின) என்கையாலே स्वकपोलकल्पितत्वदोषமில்லையென்று சொல்லிற்று. (ஸகலவேத3ஸார) என்றது ”सर्ववेदान्तसारार्थ:” என்றத்தைப்பற்ற. (ரஹஸ்யத்ரயம்) திருமந்த்ர த்3வய சரமஶ்லோகங்கள். ( அதிஸங்க்ரஹதயா ) அதிஸ்வல்ப ஶப்3த3தயா. (கூ3டா4ர்த்தங்களாகையாலும்) உபதே3ஶகம்யார்த்த2ங்களாகையாலும், ஆக இவ்வாக்யத்தால் ரஹஸ்யத்ரயத்துக்கும் उपदेशसापेक्षत्वदोषமருளிச்செய்தார்.
மேல், ஆழ்வார்களைக்கொண்டு எம்பெருமான் வெளியிட்டருளின தி3வ்யப்ரபந்தங்களினுடைய अकार्यकरत्वத்தை யருளிச்செய்கிறார் (भगवदाकस्मिक) இத்யாதி3யால். आकस्मिकம் निर्हेतुकம். இத்தால் ருஷிகளுடைய ஜ்ஞாநத்துக்கும் ஆழ்வார் களுடைய ஜ்ஞாநத்துக்குமுண்டான हेतुवैलक्षण्यஞ்சொல்லிற்று. (மயர்வற) अनुदयसंशयविपर्ययविस्मृतिர்களாகிற अज्ञानம் अपुनरङ्कुरமாய் அற்றுப்போம்படியாக. இத்தால் மிஶ்ரஸத்வரான அவர்களுடைய ஜ்ஞாநத்துக்கும் இதுக்கும் வாசி சொல்லிற்று. (ஶாஸ்த்ர) பதம் गोबलीवर्दन्यायात् वेदाभिन्नशास्त्रपरம் . (தாத்பர்யங்களையும்) தாத்பர்யார்த்த2ங்களையும். (பராங்குஶ பரகாலாதி3களான ஆழ்வார்களருளிச்செய்த ) என்கிறவாக்யத்தை (த்3ராவிட வேத3 தத3ங்கோ3பாங்க3ங்களான) என்கிறத்தோடே क्रमेण யோஜித்துக்கொள்வது. (அளவிலிகளால்) अदीर्घदर्शिகளால்; • अदीर्घदर्शित्वமாவது. -स्वापदेशतात्पर्यग्रहणायोग्यதை.* ஸகல வேதா3ந்தார்த்த2ங்களையும் அந்யாபதே3ஶத்தாலே மறைத்துச்சொல்லுகையிறே இதுக்கு असाधारणस्वरूपம். ‘निदिध्यासितव्य’:” என்கிற காமம்வழிந்த சொற்களிறே இப்ரப3ந்த3ங்கள். ஆக, இவ்வளவால் संस्कृतद्राविडभेदभिन्नங்களான ஶாஸ்த்ரங்களினுடைய तत्वज्ञानाप्रयोजनकत्वத்தை सहेतुकமாக அருளிச்செய்தார். அவற்றால் பாலித்த சேதநாநர்த்த2த்தையருளிச்செய்கிறார் மேல் (ருசி பிறந்த) என்று. (ருசி) மோக்ஷருசி. (இழந்து போம்படியிருக்கையாலே) அநாகதா3நந்த காலத்திலும் இழந்துபோம்படியிருக்கையாலே.
ஆக இவ்வளவால், ஶாஸ்த்ரங்களிற்காட்டில் அதிவிலக்ஷணங்களான உபதே3ஶாத்மக ப்ரப3ந்த3ங்கள் அவதரிக்கைக்கு மூலமான பூர்வாசார்ய க்ருபாதி3ஶயத்துக்கு உத்3போ3த4கங்களான சேதநாநர்த்த2ங்களைச் சொல்லிக்கொண்டுபோந்து. அவ்வநர்த்த2 கர்ஶநமாத்ரத்தாலுண்டான பரமக்ருபையாலே, நாத2முநிகள் தொடக்கமான பூர்வாசார்யர்கள். அந்த ஸம்ஸாரிகளில் ருசியுள்ளசேதநர்களெல்லாரும் தத்வஹித புருஷார்த்த2ங்களைअनायासेन உள்ள படியறிந்து. தங்களிழவு தீரும்படியாக उपदेशात्मकप्रबन्धங்களை வெளியிட்டருளினபடியை அருளிச்செய்கிறார்.
(ஆழ்வாருடைய) என்று தொடங்கி (உபதேஶித்தும் போந்தார்கள்) என்னுமளவாக. (ஆழ்வாருடைய) என்றுலீலாபரனாயும். ஸ்வதந்த்ரனாயுமிருந்துள்ள शास्त्रप्रवर्तनप्रयोजककर्ता-விற்காட்டில். उपदेशात्मकप्रबन्धप्रवर्तनप्रयोजककर्ता-வின் வைலக்ஷண்யம் சொல்லுகிறது. (நிர்ஹேதுக ) என்றது “பன்னீராயிரமுரு கண்ணி நுண்சிறுத்தாம்பை ஏகாஸநத்தில் அநுஸந்தி4ப்பார்க்கு ஆழ்வார் ப்ரஸந்நராகிறார் என்கிற நிர்ப3ந்த4ம் அதி4காரிக்கு வேண்டுமதான ஆஸ்தி3க்யாத3ர பரீஷார்த்த2மாக” என்னுமபி4ப்ராயத்தாலே.. நாத2முநிகள் தாமும் தம்முடைய உபாஸாத்துக்குப் ப2ல மாக திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அடியேனுக்கு இரங்கியருளவேணும்” என்று ப்ரார்த்தி2த்தாரித்தனையொழிய. தி3வ்ய ஜ்ஞாநத்தை ப்ரார்த்தி2க்க வில்லையிறே. (தி3வ்யஜ்ஞாநம்)-1. லஷ்மீநாத2 லக்ஷ்மீ ஸேநேஶ முகே2ப்4ய: பாரம்பர்யேண ப்ரவ்ருத்தமான அதிகூ3டா4ர்த்த2 விஷயகமான ஓளபதே3ஶிக ஜ்ஞாநம். 2. ஸாத்4 யப4க்தியோக3 மாகிலுமாம். (ஸம்ப்ரதா3ய ஸித்3த4ராய்) ஸாம்ப்ரதா3யிக ஜ்ஞாநாநுஷ்டா2நங்களை யுடையராய். (பரம த3யாளுக்களான) என்றது. (ப்ரப3ந்தீ4கரித்தும் உபதே3ஶித்தும் ) என்கிறவிடத்துக்கு हेतुगर्भविशेषण-ம்.(ஆழ்வாருடைய) (26) என்று தொடங்கி (நிபுணராய்) इत्यन्त-ம் (வேதா3தி3களில் அர்த்த2ங்களை ஸங்க்3ரஹித்து) என்கிறவிடத்துக்கு हेतुगर्भविशेषण-ங்கள். (ஸங்க்3ரஹித்து) என்றது. லௌகிகபா4ஷைகளாலேஸங்க்3ரஹித்து என்றபடி. (மந்த3மதிகளுக்கும்) பெண்ணுக்கும் பேதைக்கும். (ஸுக்3ரஹமாம்படி) ஸுக2பூர்வகமா கவறியலாம்படி, (ப்ரப3ந்தீ4கரித்தும் உபதே3ஶித்தும் போந்தார்கள்) என்றது-ஸ்ரீவசநபூ4ஷணார்த்த2ங்களையுபதே3ஶித்தும், மற்றவைகளை यथासंभवं ப்ரப3ந்தீ4கரித்தும் உபதே3ஶித்தும் போந்தார்களென்றபடி. ஆக இவ்வளவும் வர. ஶாஸ்த்ரங்களிற் காட்டில் पूर्वाचार्योपदेशात्मकप्रबन्ध-ங்களுக்குண்டான, तत्वहितपुरुषार्थ- ங்களை ஸர்வர்க்கும் உள்ளபடி अनायासेन அறிவிப்பிக்கவற்றாகையாகிற வைலக்ஷண்யத்தையருளிச்செய்து, அவற்றிற்காட்டில் ஸ்ரீவசநபூ4ஷணத்துக்குண்டான वैलक्षण्यातिशय-த்தை வெளியிடுகைக்காக, லோகாசார்யருடைய प्रबन्धान्तर-ங்களுக்குண்டான पूर्वप्रबन्धवैलक्षण्य-த்தையருளிச்செய்கிறார்.
மேல் ( அப்படியே ) என்று தொடங்கி. ( அப்படியே ) என்றது – நாத2முநிகள் – தொடக்கமான பூர்வாசார்யர்கள் ப்ரப3ந்தீ4கரித்து உபதே3ஶித்தபடியே என்றபடி. ( ஸம்ஸாரி சேதநர் ) ருசி பிறந்த ஸம்ஸாரி சேதநர். (பல ப்ரப3ந்த4ங்கள் ) ஒரோ விஷயங்களுக்கே संग्रहविस्तररूपेण ப3ஹுப்ரப3ந்த4ங்கள். இத்தால் பூர்வப்ரப3ந்த4ங்களில் இப்ரப3ந்த4ங்களினுடைய வாசி சொல்லிற்று.
மேல் ஸ்ரீ வசநபூ4ஷணத்தினுடைய அத்யந்த வைலக்ஷண்யத்தையருளிச் செய்கிறார் (ஆசார்ய) என்று தொடங்கி, (ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான) நாத2முனிகள் தொடங்கித் தம்மளவாக ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான. (அர்த்த2ங்களில்) என்று निर्धारणे सप्तमि. (அவர்கள்) பூர்வாசார்யர்கள். (கௌ3ரவாதிஶயம்) “देवानां गुह्यं” என்றும். “गुह्यानां गुह्यमुत्तमं” என்றும் சொல்லுகிற परमगुह्यत्व-ம். (ரஹஸ்யமாக) अषट्कर्ण-மாக. ( அருமை) दुरूहत्व-மும் दुर्लभत्व-மும். (பெருமை) गौरव-ம். (ப்ரகாஶிப்பியாமலடக்கிக்கொண்டு) அடக்கிக் கொண்டிருக்கிறமையையுங்கூட ப்ரகாஶிப்பியாதபடி அடக்கிக் கொண்டு. (அர்த்த2விஶேஷங்களெல்லாவற்றையும்) என்றது விஶேஷார்த்தங்களில் ஒன்றொழியாமேயெல்லாவற்றையு மென்றபடி. (பின்புள்ளாரும்) என்றது. பின்புள்ளாரில் ருசி பிறந்தாரில் ஒருவரும் என்றபடி. (பின்புள்ளாரும்) என்கிற சகாரத்தாலே. ஸமாநகாலீநர்களை ஸமுச்சயிக்கிறது. ( இழக்கவொண்ணாது என்கிற ) இழக்கவொண்ணாதென்றிருக்கையாகிற. இவருடைய க்ருபைக்கு அதிஶயமாவது பூர்வர்கள். ஸம்ஸாரிகளினுடைய இவ்விஶேஷர்த்த2ங்களினிழவை யநுஸந்தி4த்து து3:க்கி2களாயிருக்கச் செய்தேயும் அந்தது3:க்க2ம் கத2ஞ்சித் ஸஹ்யமாம்படியிருக்கையாலே, விஶேஷார்த்த2ங்களை ப்ரப3ந்த4ரூபேண வெளியிடாதே போந்தார்களாகையாலே, அவர்களுடைய க்ருபை परदु:खदु:खित्वमात्र-மாய் விட்டது; இவர்க்கு. அந்த दु:ख-ம் असह्य-மாயிருக்கையாலே. இப்ரப3ந்த4முகே2ந அதினுடைய अपाकरण-த்திலுண்டான உத்கடேச்சை2யோடேயிருக்கையாலே, இவருடைய க்ருபை परदु:खापाकरणेच्छापर्यन्त-மாய் விட்டது. இதிறே அதிஶயாவஸ்தை2. இந்த அவஸ்தா2பே4த3ங்களை அறிவிக்கைக்காகவாய்த்து முன்பு (சேதநர் இழவு ஸஹிக்கமாட்டாத பரம க்ருபை) (29) என்றருளிச்செய்து. இவ்விடத்தில் (பின்புள்ளாரும் இழக்கவொண்ணாதென்கிற தம்முடைய க்ருபாதிஶயம்) என்றருளிச்செய்தது. परदु:खदु:खित्वं, परदु:खासहिष्णुत्वं, परदु:खापाचिकीर्षत्वं என்றிறே க்ருபையினுடைய உத்தரோத்தராவஸ்தை2. ( க்ருபாதிஶயத்துக்கு மேலே) என்றது- அந்த க்ருபைதானே பர்யாப்தஹேதுவாயிருக்க, அதுக்கு மேலேயுண்டான भगवन्नियमन-ம் अधिक-மான हेतु- என்றறிவிக்கைக்காக. இத்தால், இப்ரப3ந்த4ம் அவதரிக்கைக்குப் பிள்ளை லோகாசார்யருடைய க்ருபையே प्रधानहेतु என்று सूचितम्.
மேல், भगवन्नियमनरूपाप्रधानहेतु-வையருளிச்செய்கிறார்.– (பெருமாளும்) பேரருளாளரும், चकार-ம் अन्वाचये. (வசநபூ4ஷணமென்கிற) என்னாதே, (வசநபூ4ஷணமாகிற) என்கையாலே இப்ரப3ந்த4த்தினுடைய, अन्वर्थनामत्वं सूचितम्। (प्रभनदधमुखेन) प्रबन्धद्वारा। ப்ரப3ந்த4மாகிற முகத்தாலேயென்றுமாம். (வெளியிட்டருளுகிறார்) என்கிறவிடத்திலும். (அர்த்த2விஶேஷங்களெல்லாவற்றையும்) என்கிற த்3விதீயாந்தத்தை யநுஷங்கித்து யோஜித்துக்கொள்வது. (அருளிச்செய்கிறார்) என்னாதே, (வெளியிட்டருளுகிறார்) என்றது, ரத்நங்களை முகமறிந்து கோத்தாப்போலே. पूर्वाचार्यवचन-ங்களை संगतस्थल-ங்களிலே சேர்த்து, ப்ரப3ந்தீ4கரித்ததித்தனையொழிய ஸ்வல்பாம்ஶமும் பிள்ளைலோகாசார்யர் தம்முடைய வசந மில்லையென்றறிவிக்கைக்காக. ஆக, இவ்வளவால், ஶாஸ்த்ரங்களிற்காட்டில் விலக்ஷணமான உபதே3ஶ ப்ரப3ந்த4ங்களில் வைத்துக்கொண்டு அத்யந்த விலக்ஷணமான இந்த ஸ்ரீவசநபூ4ஷணத்தை முமுக்ஷுக்களெல்லாரும் ப்ரேமத்தோடே பேணியநுஸந்தி4க்கைக்குடலாக. ஶாஸ்த்ரங்களிற்காட்டில் பூர்வாசார்யோபதே3ஶ ப்ரப3ந்த4ங்களுக்குண்டான வைலக்ஷண்யத்தையும், அதிற்காட்டில் பிள்ளைலோகாசார்யருடைய ப்ரப3ந்தா4ந்தரங்களுக்குண்டான அதிவைலக்ஷண்யத்தையும். அதுகளிலுங்காட்டில் ஸ்ரீவசநபூ4ஷணத்துக்குண்டான सर्वाप्रकटितार्थवप्रतिपादकत्वरूप-மான அத்யந்த வைலக்ஷண்யத்தையு மருளிச்செய்தாராய்த்து.
மேல் पूर्वप्रस्तुतस्वप्नप्रकार-த்தை வெளியிடுகிறார்,- (முன்பே) என்று தொடங்கி. (ப்ரஸித்3த4மிறே) (36) என்னுமளவாக. ( முன்பே ) என்றது – ஜாயமாநகாலத்திலே என்றபடி. இதுக்கு ( விஶேஷ கடாக்ஷம்பண்ணி) என்கிறத்தோடே அந்வயம். ( பேரருளாளப்பெருமாள் )- பெருமாள் கோயிலில் ” கருணாகரர் ” என்கிற பெரிய பெருமாள். (தம்முடைய) कृपामात्रप्रसन्नाचार्य-ரையுங்கூட உபகரித்த தம்முடைய. (மணற்பாக்கத்திலேயிருப்பாரொரு நம்பியாரை) மணற்பாக்க மென்கிற க்3ராமத்திலே இருப்பாரொரு திருச்சானூரர்ச்ச2கரை. (நம்பியார்) அர்ச்சகர். “देव्येवं समजायत” என்றாப்போலே. இவர்க்கு. பிராட்டிக்குப்பண்ணும் அந்தரங்க3விருத்தியே நிரூபகமாமளவே அளவாகவாய்த்து, இவரிடத்தில் பேரருளாளருடைய கடாக்ஷம் பெருகினபடி.
(இரண்டாற்றுக்கும் நடுவே) कावेर्योर्मध्ये (இங்கே வந்து) அங்கே போய். இத்தால், கோயிலிலிருந்து வ்யாக்2யாந மிட்டருளினமை தோற்றுகிறது. (பெருமாளை) அழகிய சிங்கரை. (ஒரு கோயிலிலே) “பலமண்டலப்பெருமாள்” என்கிற காட்டழகியசிங்கர் கோயிலிலே. (பெருமாளருளிச் செய்த) பேரருளாளப் பெருமாளருளிச்செய்த.
(இவ்விரண்டிடங்களிலும் ‘பெருமாள்‘ என்று எம்பார் ஜீயர்ஸ்வாமி பாடம்).
(வித்3த4ராய்) ஈடுபாட்டையுடையராய். (அவரோ நீரென்ன) “விஶதமாக நாமங்கே சொல்லுகிறோம்” என்று சொன்னவவரோ நீர்? என்ன. (ஆவதென் ) அவரோ நீர் என்கையாவதென்? (கேட்டு மிகவும் ஹ்ருஷ்டராய்) என்கையாலே. ” அவரே தாம்” என்கிற அர்த்த2த்துக்கு இசைந்தமை தோற்றுகிறது. (பெருமாள் ) பெரிய பெருமாள். ( இவ்வர்த்த2ங்கள் ) श्रीवचनभूषणप्रतिपादितार्थ-ங்கள். (மறந்து போகாத படி) திருவடிகளை ஆஶ்ரயித்துக் கேட்டவர்களும் மறந்து போகாதபடி. (ப்ரஸித்3த4மிறே) என்றது. शिष्टगोष्ठीप्रसिद्ध-மிறே யென்றபடி.
மேல், (ஸ்ரீவசநபூ4ஷணமாகிற இப்ரப3ந்த4முகே2ந) (32) என்கிறவிடத்தில் சொன்ன அந்வர்த்த2நாமதையை விஶதீ3கரியாநின்று கொண்டு. இதனுடைய உபதே3ஶாத்மகதையை த்3ருடீ4கரிக்கிறார் (ரத்நப்ரசுரமான) என்று தொடங்கி, (திருநாமமாய்த்து) (38) என்னுமளவாக. அதில் पूर्वाचार्योपदिष्टवचनात्मक-மான இப்ரப3ந்த4த்துக்கு. “वचनभूषणम्” என்கிற பதம் अन्वर्थनाम-மாய்க்கொண்டு திருநாமமானபடியை, ஒரு பூ4ஷணத்துக்கு ஒரு பேரானமையை த்3ருஷ்டாந்தமாக்கி அறிவிக்கைக்காக. नानाविधरत्नस्थानीय-ங்களான पूर्वाचार्यवचन-ங்களையடைய. முகமறிந்து சேர்த்தாப்போலே. ஸங்க3த ஸ்த2லங்களிலே பொருந்தவிட்டுக்கொண்டு. அவற்றுக்கு எல்லா வைஶத்3யாவஹமாய். அடைய வளைந்து கொண்டி ருக்கையாலே ஸ்வர்ண ஸ்தா2நீயமான பிள்ளைலோகாசார்யருடைய पूर्वाचार्यवचनानुपूर्वीविशेषरूपमहावाक्यघटितமான இப்ரப3ந்த4த்துக்கு. केवलरत्नात्मकभूषणम् த்3ருஷ்டாந்தமாக மாட்டாமையாலே सर्वतोरत्नस्वचित-மாய். स्वर्णनिर्मित-மான भूषण-த்தை த்3ருஷ்டாந்தமாக்கிக்கொண்டு, அதுக்கு இப்ரப3ந்த4த்தினுடைய திருநாமத்துக்கு सदृश-மானதொரு पद-ம் अन्वर्थमान-மாய்க்கொண்டு பேரானமையை தர்ஶிப்பிக்கிறார் (ரத்நப்ரசுரமான) என்று தொடங்கி. (போலே) என்னுமளவாக. ( ரத்நபூ4ஷணமென்று பேராமாப்போலே ) என்றதுஆத்மாவினுடைய ज्ञानप्राचुर्यம் தோன்றுகைக்காக. ஜ்ஞாந ஶப்3த3த்தாலே ஸமாநாதி4கரித்துச் சொல்லுகிறாப்போலேயும். ‘ செய்யடைய நெல்” என்றும். ” இத்தாழிகளடையத்தயிர் ” என்றும் லோகவ்யவஹாரமாமாப்போலேயும். பூ4ஷணத்தினுடையவும் रत्नप्राचुर्य-ம் தோன்றுகைக்காக. “रत्नं च तत्, भूषणं च-रत्नभूषणं” என்று भूषणशब्द-த்தோடே रत्नशब्द-த்தை ஸமாநாதி4கரித்துப்பண்ணும் “रत्नभूषणम्” என்று निरूढव्यवहार-த்தாலே அப்படிப்பேராமாப்போலே யென்றபடி.
மேல், பூ4ஷணத்துக்கு दार्ष्टान्तिक-மான ப்ரப3ந்த4த்திலே அதின் பேருக்கு தா3ர்ஷ்டாந்திகமான பேரை யோஜித்துக் காட்டுகிறார் (பூர்வாசார்ய) என்று தொடங்கி, (திருநாமமாய்த்து) என்னுமளவாக. अवचनप्रचुरप्रबन्ध-மில்லாமையாலே. वचनशब्द-ம் अव्यावर्तक-மாகாமைக்காக, ” வசநஶப்3த3ம் பூர்வாசார்ய வசநபரம்” என்று திருவுள்ளம்பற்றியருளிச் செய்கிறார் (பூர்வாசார்யர்களுடைய) என்று. (பூர்வாசார்யர்கள்) என்றது – லோகாசார்யருக்குப் பூர்வாசார்யர்களென்றபடி. (அநுஸந்தா4தாக்களுக்கு ஔஜ்ஜ்வல்யகரமாயிருக்கையாலே) என்று भूषणशब्दार्थ-ம். (திருநாமம் ) என்று கௌரவித்தருளிச்செய்தது – இப்படி अन्वर्थ-மான இந்தத் திருநாமம். “முன்னம் குரவோர்” என்கிற பாட்டிற்படியே, புத்ரனுக்குப் பிதாவே பேரிடுமாபோலே, இப்ரப3ந்த4மிட்டருளின பிள்ளைலோகாசார்யர் தாமே சாத்தின திருநாமத்தினுடைய வைப4வத்தை அறிவிப்பிக்கைக்காக.
ஆக. ‘கீழ் ஸ்வப்நப்ரகார கத2நமுக2த்தாலே भगवदवतारविशेषात्मकत्वरूप-மான இப்ரப3ந்த4த்தினுடைய कर्तृवैलक्षण्य-மும், भगवदत्यन्ताभिमतत्वरूपप्रबन्धवैलक्षण्य-மும், वचनभूषणम् என்கிற திருநாமமானபடியைச் சொல்லுகிற ப்ரகரணத்தாலே सर्वाचार्यवचनात्मकत्वरूपप्रबन्धवैलक्षण्य-மும், தத்வஹித புருஷார்த்த2ங்களை நன்றாக அறிவிக்கையாலே अनुसंधातृस्वरूपौज्ज्वल्यकर-மாகையாகிற विषयवैलक्षण्य-மும் அருளிச்செய்தாராய்த்து.
ஆக, (ஸகலவேத3 ஸங்க்3ரஹ) (4) என்று தொடங்கி. (திருநாமமாய்த்து) (38)என்னுமளவும் ப்ரவேஶமாகையாலே, இதிலே अनुबन्धिचतुष्टय-மும் आर्थ-மாகக் காட்டப்பட்டது.
எங்ஙனேயென்னில்:- ( தத்வஹித புருஷார்த்த2ங்களை உள்ளபடியறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்) (16.18) என்றும், (அந்த வேதா3தி3களில் அர்த்த2ங்களை ஸங்க்3ரஹித்து) (28) என்றும், (அருமை பெருமைகளைப்பற்ற இதுக்கு முன்பு தாமும் ப்ரகாஶிப்பியாமலடக்கிக்கொண்டு போந்தவையுமான அர்த்த2 விஶேஷங்களெல்லாவற்றையும் ) (30) என்றும் சொல்லுகையாலே, सकलवेदशास्त्रतात्पर्य-மாய், पूर्वाचार्योपदेशगम्य-மான तत्वहितपुरुषार्थयाथात्म्यமே விஷயமென் றும்.’ (ஸுக்3ரஹமாம்படி) (28) என்றும் (இழக்கவொண்ணா தென்கிற) (31) என்றும் சொல்லுகையாலே, அதினுடைய सुखपूर्वकज्ञान-மே प्रयोजन-மென்றும், (ஸுக்3ரஹமாம்படி ப்ரப3ந்தி4கரித்தும் உபதே3ஶித்தும்) (28) என்றும், (அர்த்த2 விஶேஷங்களெல்லாவற்றையும்….ஸ்ரீவசநபூ4ஷணமாகிற இப்ரப3ந்த4 முகே2ந வெளியிட்டருளுகிறார்) (30. 31. 32) என்றும் சொல்லுகையாலே तत्वहितपुरुषार्थयाथात्म्य-த்துக்கும் இப்ரப3ந்த4த்துக்கும் प्रतिपाद्यप्रतिपादकभाव-ம் ஸம்ப3ந்த4மென்றும், (ருசிபிறந்தசேதநர் இழந்துபோம்படியிருக்கையாலே) (25 26) என்றும், (மந்த3 மதிகளுக்கும் ஸுக்3ரஹமாம்படி)(28) என்றும், (பின்புள்ளாரும் இழக்கவொண்ணாதென்கிற) (30,31) என்றும் சொல்லுகையாலே. ‘மோக்ஷருசியுடையாரெல்லாரும் அதி4காரிகளென்றும். (அறிந்தே உஜ்ஜீவிக்கவேண்டுகையால்)(16.18) என் கையாலே निरतिशयपुरुषार्थप्राप्ति-யாகிற उज्जीवन-மே चरमप्रयोजन-மென்றும் தர்ஶிக்கப்படுகையாலே, ‘விஷய ப்ரயோஜா ஸம்பந்தா4தி4காரிகளாகிற மும் காட்டப்பட்டதிறே.
மேல், இப்ரபந்தத்துக்கு விகல்பேந மந்த்ரரத்தபத3ஸங்க்2 யைகளையுட்கொண்டு ஆறு வாக்யமாகவும். ஒன்பது வாக்யமாகவும் யோஜித்து வாக்யார்த்த2மருளிச் செய்கிறார். ( இப்ரபந்தத்தில் ) என்று தொடங்கி, “नेतृत्वं नित्ययोगं समुचितगुणजातं तनुख्यापनं चोपायं कर्तव्यभागं त्वथ मिथुनपरं प्राप्यमेवं प्रसिद्धम्। स्वामित्वं प्रार्थनां च प्रबलतरविरोधिप्रहाणं दशैतान् मन्तारं त्रायते चेत्यधिगतनिगम: षट्पदोऽयं द्विखण्ड: ||” என்கிறபடியே, த்3வயம், 1. ஆறு பத3மாயும். 2. “पद्यते अनेनेति पदं”என்கிற ப்ரக்ரியையாலே த3ஶபத3மானவிதில், கைங்கர்ய ப்ரார்த்தனை, சதுர்த்2யந்வயார்த்த2ம் அத்4யாஹ்ருதமான, “ஸ்யாம்” என்கிற க்ரியா பதா3ர்த்த2மாகையாலே, அத்தையொழிய ஒன்பதர்த்த2ங்களுக்கும் பூர்ணமாக வாசகாப்த3ஶ்ருதி யுண்டாயிருக்கையாலேயாதல், “श्रीमन् नारायण तव चरणारविन्दयुगलं शरणमहं प्रपद्ये ” என்ற ஸ்ரீக3த்ரய ப்ரக்ரியையாலே என்று श्रीमन्! नारायण! என்று संबुद्धय्नन्त-ங்களாய் பூர்வகண்டம் அஞ்சுபத3மாய், सखण्डनम: पदघटित-மான உத்தரகண்டம் நாலுபதமாயிருக்கையாலேயாதல் ஒன்பதுபத3மாயுமிறே யிருப்பது. அதில் ப்ரத2மம். இப்ரப3ந்த4த்தை ஆறு வாக்யமாக யோஜித்துக்கொண்டு, முதல் அஞ்சு வாக்யங்களையும் சரமவாக்யத்துக்கு ஶேஷமாக்கி ஏகவாக்யார்த்த2மருளிச் செய்கிறார்.– (வேத3தாத்பர்யம் என்னுமிடம் ஸம்ப்ரதிபந்தம்) என்னுமளவாக.
(உபோத்3கா4தம்) शास्त्रारम्भसमर्थनम्। ”चिन्तां प्रकृत-सिद्ध्यर्थो उपोद्धातं विदुर्बुधा:’என்னக்கடவதிறே. “मत्प्राप्तिं प्रति जन्तूनां संसारे पततां अधः। लक्ष्मीः पुरुषकारत्वे निर्दिष्टा परमर्षिभिः॥ ममापि च मतं ह्येतत् नान्यथा लक्षणं भवेत् ।।” என்கிற வசநங்களையுட்கொண்டருளிச் செய்கிறார்.- (ஸாபராத4) என்று தொடங்கி. (ஸாபராத4 சேதநருடைய) என்றது “संसारे पततामध:” என்றத்தைப் பற்ற. “शृणाति निखिलान् दोषान् शृृृणाति च गुणैर्जगत्” என்று விவரிக்கப்பட்ட पुरुषकारत्वशब्दार्थ-ம் (ஸர்வாபராத4ங்களையும்) என்று தொடங்கி (ஸஹிப்பித்து) என்னுமளவும்; “शृृृ-हिंसायां ” என்கிற தா4துவிலே நிஷ்பந்தமான ஸ்ரீஶப்3த3த்தாலே சொல்லப்பட்ட चेतनानिष्टनिवर्तनरूपोपायकृत्य-த்தில் க்ஷமாதி3களைக் கிளப்பிப் பண்ணும் புருஷகாரபா4வம் சொல்லுகிறது. (ரக்ஷிப்பிக்கை) என்று, “शृृृ-विस्तारे” என்கிற தா4துவிலே நிஷ்பந்நமான ஸ்ரீஶப்3த3விவ்ருதமான चेतनेष्ट-प्रापणरूपोपायकृत्यांश-த்தில் प्राप्ति-पूर्त्याद्धुद्भावनमुख-த்தாலே பண்ணுகிற புருஷகார பா4வம் சொல்லுகிறது. (ஸ்வரூபமான) என்றது “नान्यथा लक्षणं भवेत्” என்றத்தைப்பற்ற. (ஸ்வரூபமான) என்றது ஸ்வரூபநிரூபகமாகவுடையதானவென்றபடி, ‘ (புருஷகாரவைப4வமும் ) என்றது-1. “पुरुषौ-जीवात्मपरमात्मानौ,करोति-परस्परलाभेन सत्तावन्तौ करोतीति पुरुषाकार:” என்றாதல்; 2. पुरु-बहु यथातथा सुनोति-ददातीति पुरुषः-ईश्वरः। तं तथाविधं करोतीति पुरुषकारः” என்றாதல்; புருஷகாரஶப்3த3ம் க4டகையான பிராட்டியைச்சொல்லி, அவளுடைய वैभव-மும் என்றபடி. (மிகையென்னலாம்படி) என்றது. ”नाहं पुरुषकारेण” இத்யாதி3யைப் பற்ற. (மிக்கவேதியர் வேத3ம்) திருவஷ்டாக்ஷரம். ”திருவெட்டெழுத்தும் கற்று …. உற்றதுமுன்னடியார்க்கடிமை” என்னக்கடவதிறே. உபக்ரமோபஸம்ஹார ந்யாயத்தாலே சரமப்ரகரணார்த்த2ம் இப்ரப3ந்த4 முக்2யார்த்த2மென்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார்.- (வேதா3ர்த்த2ம் என்று தொடங்கி). (ஸம்ப்ரதிபந்தம்) என்றது – सकलवेदार्थनिर्णयार्थप्रवृत्त-மான இப்ரப3ந்த4த்தில் उपक्रमोपसंहारन्याय-த்தாலே चरम-प्राप्य-प्रापक-प्रधान-एकवाक्यार्थ-बोधமே உண்டாகையாலே.गत-मत्सर-सहृदय-जन-संप्रतिपन्न-மென்றபடி. இவ்வர்த்த2த்துக்கு த்3ருஷ்டாந்தம் காட்டுகிறார்.– (ஸ்ரீகீ3தைக்கு) என்று தொடங்கி. (ஸ்ரீகீ3தைக்குச் சரமஶ்லோகம் போலே) என்றது – “यच्छ्रेयस्स्यान्निस्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्” என்று அர்ஜுநன் உபஸந்நனாய்க்கேட்க. “अस्थानस्नेहकारुण्यधर्माधर्मधियाकुलम्। पार्थं प्रपन्नं उहिश्य शास्त्रावतरणं कृतम् என்று அவனுக்கு ஹிதோபதே3ஶார்த்த2மாக ப்ரவர்த்தித்த கீ3தாஶாஸ்த்ரம் சரமஶ்லோகத்தோடே தலைக்கட்டுகையாலே. “स्वधर्मज्ञानवैराग्यसाध्यभक्त्येकगोचर:।नारायण: परं बृह्म गीताशास्त्रे समीरित:।।” என்றும். – “निजकर्मादि भक्त्यन्तं कुर्यात्प्रीत्यैव कारित:।उपायतां परित्यज्य न्यस्येत् देवे तु तामभीः॥ एकान्तात्यन्तदास्यैकरति: । तत्पदमाप्नुयात्। तत्प्रधानमिदं शास्त्रं इति गीरार्थसंग्रह:||” என்றும். “मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु। मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे॥”, “सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं ब्रज। अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच:||” என்ற चरमश्लोकद्वयार्थ-मुख्यविशेष्यकएकवाक्यार्थबोधतात्पर्य-த்தாலே கீ3தார்த்த2 ஸங்க்3ரஹத்திலே शास्त्रसंग्रह-ம் பண்ணுகைக்குடலான சரமஶ்லோகம்போலே யென்றபடி. மேல் கீ3தாசரமஶ்லோகத்துக்கும் இப்ரப3ந்த4 சரமப்ரகரணத்துக்கும் உண்டான வைலக்ஷண்யத்தை யருளிச்செய்கிறார்.-(அங்கு என்று தொடங்கி, சரமபர்வம் காட்டப்பட்டது என்னுமளவாக) (ஈஶ்வரஸ்வாதந்தர்யத்துக்கு அஞ்சினவனுக்கு) என்கிறவிடத்தில் “सिद्धिर्भवति वा नेति संशयोऽच्युतसेविनां। न संशयोऽस्ति तद्भक्तपरिचर्यारतात्मनाम्॥” என்கிற ஶ்லோகமநுஸந்தே4யம். भगवत्स्वातन्त्र्य-த்தையமுக்கக்கடவ புருஷகாரஸம்ப3ந்த4ம் இருக்கச்செய்தே அதுக்கு அஞ்சுவான் என்னென்னில்; 1. ”यस्या वीक्ष्य मुखं तदिङ्कितपरादीनो-विधत्तेऽखिमं। स्वर्गं दुर्गतिम्” என்றும். “यद् भ्रूभङ्गा प्रमाणं स्थिरचररचनातारतम्ये मुरारे:”என்றும், பிராட்டி தம்முடைய अरविन्दलोचनमन:காந்தையாகையாகிற தன்மையாலே, भगवत्स्वातन्त्र्यकार्य-மான चेतनदुर्गतिप्रदानादि-லீலைகளிலுங்கூட எம்பெருமானுக்கு ரஸம் விளையும்படியாக முகங்கொடுத்து ரஞ்ஜிப்பித்துக்கொண்டு, உசிதகாலங்களிலே “उपायैर्विस्मार्य ” என்கிறபடியே கச்சை நெகிழ்த்(து)தல் முதலான வ்யாபாரங்களாலே க்ரமேண வஶீகரிக்கவேண்டும்படி भगवत्स्वातन्त्र्य-ம் निरङ्कुशமாயிருக்கையாலேயும். 2. பிராட்டி தாமும் அகி2லஜக3ந்மாதாவாயிருக்கையாலே. ப்ரியபரையாய்க்கொண்டு “एश्वर्यमक्षरगतिं” என்கிறபடியே சேதநருசியை மீட்கமாட்டாதே, ஐஶ்வர்யாதி3களைக் கொடுக்கத்தேடுமவளாயிருக்கையாலேயும் स्वदोषानुसन्धान-த்தால் அஞ்சக்குறையில்லையிறே. ஆனால், சரமபர்வரிஷ்ட2ர்க்கு இதில்லாதபடியென்னென்னில்; 1. பிராட்டிமார்கள் திருமுலைத்தடத்தாலே நெருக்கினா லும் அவ்வருகொன்றுமறியாதபடி எம்பெருமான்றானே மேல்விழுந்தநுப4விக்கவேண்டும்படி அவனுக்கு அத்யந்தம் அபி4மதராய். “கொடுவுலகம் காட்டேலே ” என்று லீலா விபூ4தி ப்ரஸக்தியில் முடியும் தன்மையராய். ” நின்கண் வேட்கையெழுவிப்பனே” என்று கேவலஹிதபரரான பராங்குஶ, பரகால, நாத2, யாமுந யதிவராதி3 பூர்வாசார்யர்களுடைய ஸம்ப3ந்த4 முடையாருடைய தோ3ஷமெல்லாம். வேர்ச்சூடுவார் மண்பற்றுப்போலேயும், திருவாய்ப்பாடியில் வெண்ணெய்போலேயும் அத்தலைக்கு போ4க்3யமாயிருக்கையாலேயும். 2. விபீ4ஷணாழ்வானோடு வந்த நால்வரையும் ராமகோ3ஷ்டி2யில் பரீக்ஷை பண்ணாமல் உள்ளே புகுர விட்டுக்கொள்ளுகையாலேயும். 3. “न संशयोऽस्ति तद्भक्तपरिचर्यारतात्मनाम् ” என்று ஶாஸ்த்ரமுண்டாகையாலேயும். 4. உடையவருக்கு. ‘உப4யவிபூ4தியையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம்” என்று நிரங்குஶ ஸ்வதந்த்ரனான எம்பெருமான்றானே தெற்குவீடான கோயிலிலும், வடக்கு வீடான திருமலையிலும், திருப்பவளச்செவ்வாய்திறந்து
“मा ते भूदत्र संशय:” என்று ப்ரதிஜ்ஞை பண்ணியருளிச் செய்கையாலேயும். ஆசார்யாபி4 மாநாந்தர்க3தர்கள் ப4க,வத் ஸ்வாதந்தர்யத்துக்கு விஷயபூ4தரல்லாமையாலே அவர்கள் அதுக்கு அஞ்சவேண்டா என்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம் என்று கண்டுகொள்வது.
ஆக, இத்தால். சரமஶ்லோகத்துக்கும் இப்ரப3ந்த4 சரமப்ரகரணத்துக்கும் सभयत्व-अभयत्वरूप மான वैलक्षण्य-ம் காட்டப்பட்டது. மேல் ஆறுவாக்யப்ரக்ரியையை நிக3மிக்கிறார்,(ஆக என்று தொடங்கி).
மேல். ஒன்பது வாக்யமான யோஜனையைப் பிரித்துக் காட்டுவதாக, அவ்வர்த்த2த்தை ப்ரதிஜ்ஞை பண்ணுகிறார்.- (ஒன்பது என்று தொடங்கி) (प्रकरणं) अवान्तरवाक्यं (ஒன்பதர்த்த2 ப்ரதிபாத3கமாயிதி) नवप्रकरणत्वे हेतुः. एवं पूर्वत्रापि. “अर्थैकत्वादेकं वाक्यं साकाङ्क्षं चेत् विभागे स्यात्” என்னக்கடவதிறே. அத்தை வகுத்துக் காட்டுகிறார்.- ( அந்தப் பக்ஷத்திலும் என்று தொடங்கி ) இந்த ஒன்பது ப்ரகரணபக்ஷத்திலும், ஆறு ப்ரகரணபக்ஷத்தில் சொன்ன முதல் ப்ரகரணமும், கடையில் இரண்டு ப்ரகரணங்களும் ஸமாநம். நடுவில் மூன்று ப்ரகரணத்திலே, முதலிரண்டு ப்ரகரணங்களை நாலுப்ரகரணங்களாயும், மேலொன்றையும் இரண்டு ப்ரகரணங்களாயும். ஆக ஒன்பது ப்ரகரணமாக வகுத்தருளிச்செய்கிறார் என்று கண்டுகொள்வது. இப்படி இருவகையாக அவாந்தரவாக்ய யோஜனைகளுக்குப் பூர்வாசார்ய ஸம்ப்ரதா3யம் காட்டுகிறார். – (இவ்விரண்டு க்ரமத்தையும் பற்றவிறே என்று தொடங்கி). ஆறு வாக்யமாக யோஜனைக்குச் சேர்ந்த தனியன் (பேறித்யாதி3). (பேறு) அத்3வேஷம் தொடங்கியுண்டான ப2ல பரம்பரைகளை. (தருவிக்குமவள்தன்) எம்பெருமானைக் கொண்டு கொடுப்பிக்கும் பெரியபிராட்டியாருடைய, (பெருமை) அஸாதா4ரணவைப4வமும். இத்தால், “पुरुषकार वैभवञ्च” என்கிற அர்த்த2ம் சொல்லிற்று. (ஆறு) உபாயம். இத்தால், “साधनस्य गौरवं” என்கிற அர்த்த2ம் சொல்லிற்று. (பெறுவான்முறை) अधिकारिकृत्य-மும். (அவன் கூறுகு3ருவைப் பனுவல்) அந்தவதி4காரியினுடைய सद्गुरूपसेवन-மும் (கொள்வதிலையாகிய குளிர்ந்த அருள் தான் ) निर्हेतुकभगवत्कृपै-யும். (மாறில்) ஒப்பில்லாமலிருக்கிற. (புகழ்) கல்யாண குணங்களையுடைய. ( நற்குருவின்) ஸத்3குருவினுடைய (வண்மை ) உபாயத்வமும். இத்தால் “गुरोरुपायताञ्च” என்கிற அர்த்த2ம் சொல்லிற்று என்று ஆறு ப்கரணார்த்த2ங்களையும் கண்டுகொள்வது.
ஒன்பது ப்ரகரணமாகப் பண்ணும் யோஜனைக்குச் சேர்ந்த தனியன் (திருமாமகளித்யாதி3). (திரு)-பெரிய பிராட்டியார் தாமேயான. (மாமகள் தன்) தலைமகளான ஜநகநந்தி3நியினுடைய. (சீரருளேற்றமும்) நிர்ஹேதுகக்ருபா ப்ரபா4வமும்; (திருமால் சேவடி சேர்வழி நன்மையும்) ஸித்3தோ4பாய ஸ்வீகாரத்தினுடைய ஸ்வரூபாநுரூபதையும் (அவ்வழியொழிந்தன அனைத்தின் புன்மையும்) तदितरसर्वधर्मங்களி|னுடைய स्वरूपविरुद्धत्वादिदोष-மும்; (மெய்வழியொன்றியமிக்கோர் பெருமையும் ) सिद्धोपायनिष्ठ-ருடைய வைப4வமும்;(ஆரணம் வல்லவர் அமரும் நன்னெறியும்) வேத३ம் வல்லார்பொருந்தி வர்த்திக்கும் அநுஷ்டாந நியமமும்; (நாரணன் தான்தரு நற்குருநீதியும்) எம்பெருமானை உபகரிக்கும் ஆசார்யனுடைய லக்ஷணமும், (சோதி வானருள் தூய மா குருவின் பாத மாமலர் பணிபவர் தன்மையும்) ஜ்யோதிர்மயமான பரமபத3த்தைக் கொடுத்தருளுமவனாய். தன்னிடத்திலும் ஶிஷ்யனிடத்திலும் ப2லத்தினிடத்திலும் ப்ரதிபத்தி மாறாட்டம் இல்லாத உரைகளில் தனியன் பாடபேதங்கள் குறிக்கொள்ளத்தக்கவை. ஶுத்3த4னாயிருக்கிற ஸத்3கு3ருவினுடைய திருவடித்தாமரைகளை ஆஶ்ரயிக்கும் ஶிஷ்யர்களுடைய லக்ஷணமும். (தீதில் வானவர் தேவன் உயிர்களை ஏதுவின்றி யெடுக்கும்படியையும்) அநாலோசித விஶேஷனான நித்யஸுரி ஸ்வாமியானவன், ஸம்ஸார மக்3நரான சேதநர்களை ஆகஸ்மிகமாக உத்3த4ரிக்கும்படியையும்; (மன்னியவின்பமும் மாகதியும் கு3ருவென்னு நிலைபெறும் இன்பொருள் தன்னையும்) நித்யஸித்3த4மான பரம புருஷார்த்த2மும். தத3நுரூபமான உபாயமும் ஆசார்யனே என்கிற நிஷ்டை2 பெறுகையாகிற ஶ்லாக்4யமான அர்த்த2ங் விஶேஷத்தையும்; இவ்வளவால் ஒன்பது ப்ரகரணார்த்த2ங்களும் அடைவே சொல்லப்பட்டது. (அசைவிலா வேத3மதனுள் அனைத்தையும்) நித்ய நிர்தோ3ஷ ஸகலவேத3 ஸாரார்த்த2ங்களையும். இத்தால். ஸர்வப்ரகரணங்களுக்கும் ஶேஷமான உபோ3த்கா4தார்த்த2ம் சொல்லப்பட்டது. மேல் ஸ்பஷ்டம்.
மேல், ஸ்ரீவசநபூ4ஷணத்தினுடைய सकलवेदसंगृहीतार्थोपदेशात्मक-தையை सकलवेदसंग्रह -रहस्यत्रय-विवरणात्मकत्व-प्रदर्शनमुख- த்தாலே த3ர்ஶிப்பிக்கத் தொடங்கி, முதலிலே. இப்ப்ரப3ந்த4ம் ஆபாத3 சூடம் प्राधान्येन द्वयविवरणात्मक-மாயிருக்கையாலே. அத்தையே सदृष्टान्त-மாகக் காட்டுகிறார் (இப்ப்ரப3ந்த4ந்தான்) என்று தொடங்கி. (தீ3ர்க்க4 ஶரணாக3தியான) என்று நீண்டத்3வயமென்று சொல்லப்படுமதான என்றபடி. (திருவாய்மொழிபோலே ) என்றது – “उक्तार्थविशदीकारयुक्तार्थान्तरबोधनम्। मतं विवरणं ह्यत्र महितानां मनीषिणाम् ” என்கிறபடியே. திருவாய்மொழியில் முதல் மூன்று பத்தாலே. “தொழுதெழு”, “எம்மா வீட்டுத்திறம்”, “ஒழிவில் காலம்” இத்யாதி3களாலே उत्तरखण्डोक्तपरमपुरुषार्थस्वरूपं விவரிக்கப்படுகையாலேயும். மேல் மூன்று பத்தாலே ” திருநாரணன் தாள் ”, “ஆறெனக்கு”, “அகலகில்லேன்” ‘இத்யாதி3களாலே. पूर्वखण्डोक्त-सिद्धोपाय-स्वीकार-ம் விவரிக்கப்படுகையாலேயும். மேல் நாலு பத்தால் ”கடல் ஞாலம் காக்கின்ற மின்னுநேமியன்”, “உங்களோடெங்களிடையில்லை”, “நாராயணன் நங்கள் பிரான்”, “அவாவற்று வீடு பெற்ற” இத்யாதி,களாலே. भगवत्कल्याणगुण-स्ववैराग्य- आत्मेश्वरनिरुपाधिकबन्ध- फलावश्यंभावादिक களாகிற खण्डद्वयानुक्तोपयुक्तार्थ-ங்களெல்லாம் விவரித்துச் சொல்லப்படுகையாலேயும். उक्तार्थविशदीकारकत्व -उपयुक्तार्थान्तरबोधकत्वरूप-प्रकारद्वय-த்தாலும் द्वयविवरण மான திருவாய்மொழிபோலே யென்றபடி. ( த்3வய விவரணமாயிருக்கும் ) என்றது पूर्वोक्तप्रकारद्वय-த்தாலும் द्वयविवरण-மாயிருக்கும் என்றபடி.
இப்ரப3ந்த4த்தில் विवरणप्रकारद्वय-த்தையும் வகுத்துக்காட்டுகிறார். – (இதிலும்) என்று தொடங்கி, முதலிலே ஆறு ப்ரகரணமென்கிற பக்ஷத்தைப்பற்ற முதல் மூன்று ப்ரகரணமும் खणडद्वयोक्त-अर्थद्वय-विशदीकरणरूप-மாகவும். மேல் மூன்று ப்ரகரணமும் आचार्यानुवर्तनक्रम-भगन्निर्हेतुक-कृपाप्रभाव-उपायोपेयचरमावधि-களாகிற उपयुक्तार्थान्तरबोधनरूप-மாகவும் வகுத்து. (இதிலும்) என்று தொடங்கி. ( தலைக்கட்டுகையாலே) என்னுமளவாகக் காட்டியருளி; ஒன்பது ப்ரகரணமென்னும் பக்ஷத்திலும். உபாயப்ரகரணத்தில் பிரிந்த உபாயாந்தர தோ3ஷ ப்ரகரணமும். அதி4காரி நிஷ்டா2 ப்ரகரணத்தில் பிரிந்த ப்ரபந்நதி3நசர்யா ப்ரகரணமும், “सद्गुरूपसेवनम्” என்கிற ஆசார்யாநுவர்த்தந க்ரம ப்ரகரணத்தில் பிரிந்த ஆசார்ய லக்ஷணப்ரகரணமும், ஆகிற மூன்று ப்ரகரணங்களும். आक्षेपत:प्राप्तार्थ-विशदीकरणरूप- ங்களாயிருக்கையாலே. अनुक्त-उपयुक्त-अर्थान्तर-बोधकत्वरूप-द्वयविवरणत्व-முண்டா கையாலே, அப்படிச் சொல்லக் குறையில்லையென்கிறார் (ஒன்பதர்த்த2ப்ரதி பாத3கமான என்று தொடங்கி, குறையில்லை என்னுமளவாக). இவ்விடத்தில் उक्तार्थविशदीकरणप्रकरण-ங்களிலே अनुक्तार्थप्रतिपादन-மும், மற்றவிடங்களில் மற்றவையுமுண்டேயாகிலும் ,ஊற்றத்தைப்பற்ற இப்படிச் சொல்லக்குறையில்லையென்று கண்டு கொள்வது. மேல், மற்ற ரஹஸ்யார்த்த2ங்களுக்கும் இது संग्रहेण प्रतिपादक-மாம்படியைத் தனித்தனியே தர்ஶிப்பிக்கிறார்.- (இப்படியென்று தொடங்கி). (संग्रहेण) என்றது – த்3வயார்த்தம்போலே विस्तरेण வன்றியே संग्रहेण-வென்றபடி ரஹஸ்ய த்ரயத்திலும் வைத்துக்கொண்டு. திருமந்த்ரம் इतर रहस्यमूल-மாய்க்கொண்டு सर्वोत्कृष्ट-மாயிருக்க, அதினுடைய அர்த்த2ம் இப்ரப3ந்த4த்தில் ப்ராதேஶிகமாய் த்3வயார்த்த2 ப்ரதி பாத3நமே सार्वत्रिक-மாவானென்னென்னில்; 11. திருமந்த்ரத்துக்கு साधकपरिग्रह-முண்டாகையாலே அதில்லாதடி”सदाचार्य-मूलोऽनादिसिद्धो मन्त्ररत्न:” என்று ஶ்ருதி சொல்லுகையாலேயும், 2. ‘. பிள்ளை புருஷகாரமாக ஜீயர் திருவடிகளை ஆஶ்ரயித்தாரொரு ஸ்ரீ வைஷ்ணவர்க்கு. ஜீயர் முந்துற த்3வயத்தில் பூர்வ வாக்யமாத்ரத்தை இடையனெறிந்த கொம்பு போலே உபதேஶித்துவிட்டு, பின்பு, அவருடைய அதி4காரமறிந்து கொண்டு, உத்தரவாக்யத்தையு மருளிச்செய்தார் என்கிற ஐதிஹ்யமுண்டாகையாலேயும், सदाचार्य-सम्प्रदाय-परम्पराप्राप्त-மாய் अनन्यसाधारण-மான த்3வயந்தானே उपदेशात्मक-மான இப்ரப3ந்த4த்துக்கு உள்ளுறையாகவேணும் என்கிற ஔசித்யத்தாலே அப்படியாகக் குறையில்லையென்று கண்டு கொள்வது. மேல் (அஜ்ஞாநத்தாலே என்று தொடங்கி) चरमरहस्यविवरण-த்தை அருளிச்செய்கிறார். – (உத்தரார்த்த4த்தில் அர்த்த2ம் சொல்லப்பட்டது) என்னுமளவாக.
ஆக, (இப்ரப3ந்த4த்தில் – வேதா3ர்த்தமறுதியிடுவது) என்று தொடங்கி, இவ்வளவால் இப்ரப3ந்த4த்தின் अवान्तरवाक्ययोजनाप्रकार-ங்களையும். महावाक्ययोजनाप्रकार-த்தையும், इतररहस्यद्वयसहित-மான द्वयार्थनिर्णयात्मकत्व-த்தையும். व्याख्यानाङ्ग-மாக அருளிச்செய்தாராய்த்து.
மேல், அடைவே व्याख्यान-மிட்டருளுகிறார். “पदच्छेद: पदार्थोक्तिः विग्रहो वाक्ययोजना। आक्षेपस्य समाधानं व्याख्यानं पञ्चलक्षणम्” என்னக்கடவதிறே. (வேதா3ர்த்த2 மித்யாதி3) என்கிறதுக்கு இவ்வாக்யத்தாலே அருளிச்செய்கிறார். என்கிற வாக்யத்தோடே அந்வயம். மூலத்தில் प्रथमवाक्यावतारि-கை.(ப்ரமாதாவானவனித்யாதி3). மூலத்தில் (வேதா3ர்த்த2ம்) என்கிற முதல் வாக்யத்திலே. “வகாரம்-அம்ருதவாசியாய். ஈகாரம்-ஐஶ்வர்யவாசியாய். இதிரண்டையும் கொடுக்குமவனை “वश्च ईश्च वयौ। वयौ ददातीति वेद:” என்று வேத3ஶப்3த3ம் சொல்லுகையாலே. “सकलफलप्रदो हि विष्णु:” என்றும். “सर्व लाभाय केशव:” என்றும் சொல்லுகிறபடியே भोगमोक्षप्रद-सिद्धोपायरूप-वस्तुनिर्देशरूप-मङ्गलं सिद्ध-மென்று கண்டுகொள்வது.
(அஷ்டவித4மாக) என்றது – “प्रत्यक्षमेकं चार्वाका: कणादसुगतौ पुनः। अनुमानञ्च तच्चापि सांख्याः शब्दं च ते अपि। न्यायैकदेशिनोऽप्येवं उपमानं च केचन। अर्थापत्या सहैतानि चत्वार्याह प्रभाकरः। अभावषष्ठान्येतानि भाट्टा वेदान्तिनस्तथा। संभवैतिह्ययुक्तानि तानि पौराणिका जगु: ||” என்கிறபடியே. ப்ரத்யக்ஷம், அநுமாநம், ஆக3மம், உபமாநம், அர்த்தா2பத்தி, அபா4வம், ஸம்ப4வம், ஐதிஹ்யம் என்று அஷ்டவித4மாகவென்றபடி. அதில், ப்ரத்யக்ஷமாவது-சக்ஷுராதீ3ந்த்3ரியங்கள். இது சார்வாகர்க்கு ப்ரமாணம். அநுமாநமாவது-ப்ரத்யஷாதி3ஸித்3த4மான தூ4மாதி3 ஹேதுக்களாலே அப்ரத்யக்ஷங்களான வஹ்யாதி3களை உண்டென்று அறிகைக்குடலான. “यत्र धूम: तत्राग्नि:” इत्यादिव्याप्तिनिश्चयविशिष्टமான हेतुसंसर्गज्ञान-ம், இதிரண்டும் காணாத3 ஸௌக3தர்களுக்கு ப்ரமாணம். ஆக3மமாவது-ஶாஸ்த்ரமும், ஆப்தவாக்யமும். இது மூன்றும் ஸாங்க்2ய பூ4ஷணர்களுக்கு ப்ரமாணம். உபமாநமாவது பசுவைக்கொண்டு மரையை யறிகைக்குடலான सादृश्यज्ञान-ம். இது நாலும் உத3யநாசார்யனுக்கு ப்ரமாணம். அர்த்தா2பத்தியாவது- “पीनो देवदत्त: दिवा न भुङ्क्ते” என்றால் “भोजनमन्तरापीनत्वमनुपपन्न” மாகையாலே रात्रिभोजनसाधक-மான श्रुतदृष्टार्थान्यथानुपपत्तिज्ञान-ம். இது அஞ்சும் ப்ராபா4கரர்களுக்கு ப்ரமாணம். அபா4வமாவது-घटाभावादिग्राहक-மான घटाद्यनुपलब्धि. அதாவது கண்ணுக்குத் தோற்றாமை. இது ஆறும் பா4ட்ட வேதா3ந்திகளுக்கு ப்ரமாணம். ஸம்ப4வமாவது- ” ஆயிரமுள்ளவனிடத்தில் நூறுண்டு” என்கிற உபபத்தி. ஐதிஹ்யமாவது, अज्ञातमूलपुरुषक-மாய், शिष्टपरिगृहीत-முமான “इह वटे यक्षस्तिष्ठति” இத்யாதி3களான ப்ரவாத3ங்கள். இது எட்டும் பௌராணிகர்களுக்கு. (சொல்லுவர்கள்) என்றது – பௌராணிகர் சொல்லுவர்களென்றபடி. பரமப்ராமாணிகரான பிள்ளை லோகாசார்யர் பண்ணுமிடத்தில் (வேதா3ர்த்த2ம்) என்று தொடங்கி, ஆக3மமாத்ரத்தை நிர்தே3ஶிப்பானென்னென்ன அருளிச்செய்கிறார் (அதில்) என்று தொடங்கி. (பா3ஹ்யர்) வேத ப்ராமாண்யாநப்4யுபக3ந்தாக்கள். (குத்3ருஷ்டிகள்) பா4ட்டப்ராபா4கராதி3கள். (அவர்களைப் போலன்றியே) என்றது முன்சொன்ன எட்டு ப்ரமாணங்களில் சிலவற்றுக்கு ப்ராமாண்யமும், மற்றவைகளுக்கு அப்ராமாண்யமும் சொல்லும் அவர்களைப் போலன்றிக்கே யென்றபடி. இத்தால் ஸாங்க்2ய ஸாம்யம் நிரஸ்தம். (யதா2யோக3ம்) என்றது யதா2ந்யாயம் என்றபடி. (அந்தர்ப்ப4விப்பித்து) என்றது அபா4வத்தை ப்ரத்யக்ஷத்திலும். ஐதிஹ்யத்தை ஆக3மத்திலும் மற்ற மூன்றையும் அநுமாநத்திலும் அந்தர்ப்ப4விப் பித்து என்றபடி. (ஶாஸ்த்ரமே) என்று அவதா4ரணம் अन्येषां प्रामाण्यनिरसनार्थ-ம்
(அதுதன்னிலும்) என்றது “शृति स्मृति इतिहास पुराण पाञ्चरात्र कर्मब्रह्ममीमांसा ऐतिह्य भेदभिन्न ” மான அந்த ஆக3மந்தன்னிலு மென்றபடி. வேத3ம் ப்ரப3லமென்னுமிடத்துக்கு ப்ரமாணம் காட்டுகிறார். (वेदे कर्त्राद्यभावात्) इत्यादिना “कर्त्राद्यभावात् बलवति वेदे-नयै: हि-त्वन्मुखे-नीयमाने सति तदितरदखिलं तन्मूलत्वेन मानं जायते” என்று ஶ்லோகாந்வயமாய் पुरुषबुद्धिमूलक மல்லாமையாலே த்தில்
மாய்க்கொண்டு ப4லவத்தான வேத3மானது, வேதா3ந்த ப்ரஸித்3த4ங்களான ஸத்தர்க்கங்களாலே தேவரீரையே ப்ரதிபாதி3க்கிறதாக வொருங்கவிடப்பட்டிருந்துள்ள வளவில். புருஷபு3த்3தி4 மூலகங்களான இதர ஶாஸ்த்ரங்களெல்லாம் வேத3த்தை மாக உடையதாயிருக்கையாலே ப்ரமாணங்களாகிறன” என்றர்த்த2ம் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (ஸ்வப்ராமாண்யத்துக்கு) என்று தொடங்கி.
(பௌருஷேயேதி) मूलापेक्षत्वे हेतुगर्भविशेषण-ம். (பௌருஷேய ) என்றது- पुरुषबुद्धिमूलक-மான என்றபடி. இங்கு புருஷஶப்3த3ம் चेतनेश्वरसाधारण-ம். स्वप्रामाण्यमूलसापेक्षत्व-த்துக்கு पौरुषेयत्व-ம் ஹேதுவானபடியென்னென்னில், ஒருவன் ஒரு வாக்யம் சொல்லும் போது “अर्थं बुद्ध्वा शब्दरचना” என்கிற ந்யாயத்தாலே அர்த்தமறிந்தே சொல்லவேண்டியிருக்கையாலும், அந்த அறிவுதான் வேத3மூலகமல்லாதபோது भ्रमप्रमादादिसम्भाव-நையாலே அந்த வாக்யத்தில் अप्रामाण्यसंशय முண்டாகையாலும், भ्रमप्रामादिदोष-ங்களில்லாத வேத3த்தாலுண்டான ஜ்ஞாநத்தால் சொல்லப்படுகிற வாக்யத்திலேயே அந்த அப்ராமாண்ய ஶங்கை வாராதபடியிருக்கையாலும், அப்ராமாண்ய ஶங்காவிநிர்முக்தமான வாக்யமே ப்ரமாணமாகவேண்டுகையாலும் पौरुषेयत्वं स्वाश्रयप्रामाण्यवेदसापेक्षत्वहेतु வென்னத்தட்டில்லை. (ஶாஸ்த்ரத்தைப்பற்ற) என்றது-ஶாஸ்த்ரங்களைப்பற்ற என்றபடி. “पाञ्चरात्रस्य कृत्स्नस्य वक्ता नारायण: स्वयम् ” என்கிறபடியே भगवत्कर्तृक-மான पाञ्चरात्र-த்துக்கு भ्रमप्रमादादिसम्भावनामूलकाप्रामाण्य-ஶங்கையில்லையேயாகிலும். “इदं महोपनिषदं सर्ववेदसमन्वितम् । सांख्ययोगकृतान्तेन पाञ्चरात्रानुशब्दितम् ।।” என்று. அது வேத3வ்யாக்2யாநமாகச் சொல்லப்படுகையாலே, व्याख्यानप्रामाण्य-ம் मूलप्रामाण्यसापेक्ष-மாகையாலே, அதுவும் वेदसापेक्ष-ம் என்று கண்டுகொள்வது. (இவ்வாக்யத்தாலே) என்றது- கீழ் உபாத்தமான (வேதா3ர்த்த2) (வா.1) இத்யாதி3யான இவ்வாக்யத்தாலேயென்றபடி.
- வேதா3ர்த்த2மறுதியிடுவது ஸ்ம்ருதீதி ஹாஸ புராணங்களாலே.
- ஸ்ம்ருதியாலேபூர்வபா4க3த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது. மற்றையிரண்டாலும் உத்தரபா4க3த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது.
கீழ்ச்சொல்லப்பட்ட वेदप्रामाण्यान्यनैरपेक्ष्य-த்தை, அந்த வேத3ங்களுக்கு, “वेदैश्च सर्वै: अहमेव वेद्य:” என்கிறபடியே स्वप्रतिपाद्यवस्तु-வோடுண்டான ஸௌஸாத்3ருஶ்ய ப்ரதர்ஶநமுக2த்தாலே “समस्तशब्दमूलत्वात् अकारस्य स्वभावत:। समस्तवाच्य मूलत्वात् ब्राह्मणोऽपि खभावतः॥ वाच्यवाचकसंबन्धः तयोरर्थात्प्रतीयते।” என்று औचित्यातिशय-த்தாலே காரணஶப்3த3ம் காரணவஸ்துவான ப்3ரஹ்மத்தைச் சொல்லக்கடவது என்றாப்போலே, அகி2லஹேயப்ரத்யநீயகனாய், கல்யாணைகதாநனான ஸர்வேஶ்வரனை நித்யநிர்தோ3ஷ ஸகலகு3ணபூர்ணமான ஶ்ருதி ப்ரதிபாதி3க்கை உசிதம் என்று காட்டி ஸ்தி2ரீகரிக்கிறார்.– (அகி2லஹேயப்ரத்யநீக) இத்யாதி3யாலே. अखिलहेयप्रयनीकत्वसदृशधर्म-ம், अपौरुषेयत्व-ம், कल्याणैकतानत्वसदृशधर्म-ம், नित्यत्व-ம். இந்த நித்யத்வம், ஸாத்விகவிஷயத்தில் भगवद्वदयितृत्व-மும்.
ஆஸுரப்ரக்ருதிகளுக்கு அவகா3ஹிக்கவொண்ணாதபடி மறையாயிருக்கையுமாகிற ப்ரமேயவஸ்துவான ஈஶ்வரனுடைய பரத்வ ஸௌலப்4யங்களுக்கு ஸத்3ருஶமான கு3ணங்களுக்கும் உபலக்ஷணம். வேதா3 பௌருஷேயத்வாதி3களில் ப்ரமாணம் காட்டுகிறார் (வேத3த்தினுடையவித்யாதி3) (”வாசா விரூப நித்யயா வ்ருஷ்ணே சோத3ஸ்வ”) என்றதுககர்த்த2ம் வாராய் விரூபனான வ்ருஷ்ணியே! (நித்யயா )-நித்யையாய் இருந்துள்ள. (வாசா) -ஶ்ருதியாலே. ஸ்தோத்ரம் பண்ணக்கடவாய் என்று. ஶ்ருத்யுக்தமான நித்யத்வத்தை ஸ்ம்ருதி வசநத்தாலே விவரித்துக் காட்டுகிறார்.- (அநாதி3) இக்யாதி3நா. उत्पत्तिविनाशरहितनित्यनिर्दोष-மான இந்த ஶ்ருதிரூபமான வாக்கானது. கல்பாதி3யிலே ப்3ரஹ்மாவினாலே ப்ரவசநம் பண்ணப்பட்டது. யாதொரு அந்த வேத3த்தாலேயே எல்லாப் பதா3ர்த்த2ங்களினுடைய நாமரூப ஸ்ருஷ்டிகளும் உண்டாய்த்தின என்று ஸ்ம்ருத்யர்த்த2ம். இந்த ஸ்ம்ருதிவசநத்தால் ஶ்ருத்யுக்த நித்யத்வம் உத்பத்தி விநாஶஶூந்யத்வரூபமென்று சொல்லுகையாலே. அபௌருஷேயத்வம் அந்யதா2 நுபத்திஸித்3த4ம் என்று அருளிச் செய்கிறார் (இந்த) என்று தொடங்கி. அபௌருஷேயத்வம் ஸித்3தி4த்தபோதே நிர்தோ3ஷத்வமும் ஸித்3த4மென்று அருளிச்செய்கிறார் (அதஏவ) என்று தொடங்கி. (ப்4ரமம்)ப்4ரமப்ரயுக்தமான விருத்3தா4ர்த்த2கத்வம். (விப்ரலம்ப4ம்)வஞ்சநாப்ரயுக்த விருத்3தா4ர்த்த2கத்வம். (ப்ரமாத3ம்)– அநவதா4நப்ரயுக்த அர்த்த2பா3த4ம். (அஶக்தி)- अशक्तिप्रयुक्तं वस्तुबोधनासामर्थ्यम् भ्रमविप्रलम्भप्रमादाशक्ति-களாகிற कर्तृदोष-ங்கள் प्रबन्धमत-மாம்போது இப்படியேயாகவேணுமிறே.
அபௌருஷேயத்வ ஸித்3தி4யால் இந்த தோ3ஷாபா4வம் அர்த்த2ஸித்3த4மானபடி யென்னென்ன அருளிச்செய்கிறார் – (பௌருஷேயத்வமிறே) என்று தொடங்கி. “कारणाभावात्कार्याभाव:” என்று கருத்து. வேத3த்தினுடைய அகி2லப்ரமாண வைலக்ஷண்யத்தை நிக3மிக்கிறார் (ஆகையாலே) என்று. அதினுடைய நிஸ்ஸமாப்4யதி4கதையை शपथगर्भप्रमाणमुख-த்தாலே இசைவிக்கிறார்.- (ஆகையாலேயிறே) என்று தொடங்கி. (வேத3ஶாஸ்த்ராத் பரம் நாஸ்தி) என்றது – வேத3த்தைக் காட்டில் வேறு ஸாக்ஷாத் ஶாஸ்த்ரம் இல்லையென்றபடி. • இதர ஶாஸ்த்ரங்களும் வேத3மூலகங்களாகையாலே வேத3ஶாஸ்த்ரங்களாகக் கடவதித்தனையொழிய, ஸ்வதந்த்ர ஶாஸ்த்ரங்களாக மாட்டாதிறே. இந்த ஶ்லோகத்தில் “பர” ஶப்3த3ம் உத்க்ருஷ்டவாசியாம்போது வேத3ஸமமான தொரு ஶாஸ்த்ரமுண்டென்று தோன்றுமாகையாலே, ” பரஶப்3த3ம் அந்யவாசி” என்று மீமாம்ஸையில் அண்ணனய்யன் அருளிச்செய்தருளினார். ஆனால், இதுக்கு மேற்பட்டதொரு ஶாஸ்த்ரமில்லையென்கைக்கு இத்தை ப்ரமாணமாகவெடுத்தபடி யென்னென்னில் : இதரஶாஸ்த்ரஸாமாந்யத்தை நிஷேதித்தால், ஶதே பஞ்சாஶந்ந்யாயத்தாலே உத்க்ருஷ்டஶாஸ்த்ரம் கழியுண்ணும் என்று கருத்தாலேயென்று கண்டுகொள்வது. “வலங்கொண்ட இதுக்குச் சேராதவை மநுவிபரீதங்கள் போலே” (ஆசார்ய ஹ்ருதயம் வா. 64) என்று, திருவாய்மொழிக்குச் சேராதவை த்யாஜ்யங்களாயிருக்கையாலே. அதில் பரிக்3ரஹாதிஶயத்தாலேயும் வேத3ங்களினுடைய நிஸ்ஸமாப்4யதி3கதையை அறிவிக்கிறார் (இதினேற்றமெல்லாம்) என்று தொடங்கி, ‘ சுடரடி” என்று சொன்ன ப்ரமேயத்துக்கு ஸத்ருஶமாக ”சுடர்மிகு சுருதி” என்கையாலே पूर्वोक्तप्रमाणप्रमेयसौसादृश्यं व्यञ्जितम् – இத்தால் த்3வய விவரண ப்ரவ்ருத்தரான ஆழ்வார். முதலிலே வேத3ங்களையே ப்ரமாணமாகப் பரிக்3ரஹிக்கையாலே மூலத்திலும் முதலிலே वेदरूपप्रमाणनिर्देशம் மிகவும் संप्रदायानुरूप-மென்று सूचितम्।
ஆழ்வார்கள் உண்டபோதொரு வார்த்தையும் உண்ணாதபோதொரு வார்த்தையும் சொல்லுமவர்களாகையாலே. அவருடைய ஸம்மதிமாத்ரம் போராதென்று ஆசார்ய ஸம்வாத3ம் காட்டுகிறார் (அவரை ) என்று தொடங்கி. இன்னமும், அந்த வேத3த்தினுடைய ஸர்வாதி4கத்வத்தை அதினுடைய நாமநிர்வசநத்தாலும் அறிவிக்கிறார்.-(இத்தை) என்று தொடங்கி. “विद्यते ज्ञायते अनेनेति वेद:” என்னாதே “वेदयतीति वेद:” என்று கர்தரிவ்யுத்பத்தியாலே அருளிச் செய்தது. “अविस्तृतास्सुंगभीरा: रामानुजमुनेर्गिर:। दर्शयन्तु प्रसादेन स्वं भावमखिलं दृढं।।” என்கிறவிடத்திலும். “तद्भाष्यं स च भाष्यकृत् स च हरि: सम्यक् प्रसीदन्तु न:” என்கிறவிடத்திலும் போலே, வேத3ஶப்3த3மும் வேதா3பி4மாநிதே3வதாபர்யந்த பர்யவஸந்நமென்னுமபி4ப்ராயத்தாலேயென்று கண்டு கொள்வது ஆகையிறே. மூலத்தில் ” இவ்வர்த்த2த்தை வேத3 புருஷனபேக்ஷித்தான்” (வா. 149) என்றருளிச் செய்தது. (ஆஸ்திகாக்3ரேஸர்) “अस्ति शास्त्रार्थ:” என்றிருக்குமவரில் தலைவர். “மூலத்தில் ஸாமாந்யமாக வேத3 ஶப்3த3நிர்தே3ஶம் பண்ணினது. உத்தமாதி4காரிகளுக்கு உபாதே3யமான ஆகாரத்தாலே ஸகலவேதா3ர்த்த2ங்களும் இப்ரப3ந்த4த்தில் நிர்ணயிக்கப்படுகிறன என்று அறிவிக்கைக்காக” என்று திருவுள்ளம்பற்றி, அத்தையருளிச் செய்வதாக. முதலிலே வேத3ங்களினுடைய ப்ரதிபாத்3ய பே4த3ங்களையும். அத்தால் வந்த பா4க3 பே4த3ங்களையும். அவ்வர்த்த2ங்களில் பூர்வபா4கா3ர்த்தத்தினுடைய த்யாஜ்யோபாதே3யாகாரபே4த3ங்களையும், அதி4காரி பே4த3ங்களையும் அருளிச்செய்கிறார் ( இப்படியிருந்துள்ள ) என்று தொடங்கி, (ப்ரதிபாத்3யார்த்த2 விஶேஷத்தாலே பா4க3த்3வயாத்மகமாயிருக்கும்) என்றது, प्राप्य-प्रापकरूपार्थभेद-த்தாலே द्वय-ம் खण्डद्वयात्मक-மானாப்போலே. साध्यधर्मरूपकैङ्कर्य-மும் सिद्धधर्मरुप-மான ப்3ரஹ்மமுமாகிற उपायोपायात्मकार्थभेदத்தாலே -भागद्वयात्मक-மாயிருக்குமென்றபடி. पूर्वभाग-ம் कर्मपर-மாகவும், उत्तरभाग ம் ब्रह्मपर-மாகவும் அறிவதெத்தாலே யென்ன அருளிச்செய்கிறார்.-(பூர்வோத்தரமீமாம்ஸைகளில்) என்று தொடங்கி, இப்படி பூர்வோத்தர பா4க3ங்களுக்கு அர்த்த2 பே4த3முண்டாகில் ஏகஶரஸ்த்ரமானபடியென்னென்ன அருளிச்செய்கிறார். – (ஆகையாலே) என்று தொடங்கி. இத்தால், ஆராத4நம் ப்3ரஹ்மத்துக்கு ஶேஷமாகையாலே एकशास्त्र्य विरोध-மில்லையென்று சொல்லப்பட்டது. ‘கர்மங்களெல்லாம் ப4க3வதா3ராத4நம்” என்னுமிடத்தை ப்ரமாணோபபத்திகளாலே இசைவிக்கிறார் (கர்மத்தினுடைய) என்று தொடங்கி, (ஸ ஆத்மா) என்றது – அந்த எம்பெருமான் ஶரீரி என்றபடி. ஶ்ருதி தாத்பர்யம் (அக்3நீந்த்3ராதி3) என்று தொடங்கி. (ஸித்3த4மிறே) என்றது.- சட்டையிலிட்ட பூமாலையுமுட்பட அரசனதாமாப்போலே, ந்யாயஸித்3த4மிறே என்றபடி. ( அநுஷ்டி2க்குமவர்களிடத்தில்) என்றது – அநுஷ்டி2க்கும் உபாஸகரிடத்தில் என்றபடி. (வஸ்துக3த்யா ) அர்த்த2ஸ்வபா4வத்தாலே. (தலைக்கட்டும்) பர்யவஸிக்கும். இவ்வர்த்த2த்துக்கு ப்ரமாணம் காட்டுகிறார். ( யே யஜந்தி ) என்று தொடங்கி. (ஸர்வபூ4தாந்தராத்மாநம்) என்று देवतान्तराराधन-ம் भगवदाराधन-மாகையில் हेतुर्गर्भविशेषणम् . (அவிதி4பூர்வகம்) என்றது -कर्माणं भगवदाराधनत्वज्ञापक- மான वेदान्तवाक्यज्ञानपूर्वक-மன்றியிலே என்றபடி. ( எல்லாப்படியாலும் ) என்றது – ज्ञानकृतत्वाज्ञानकृतत्व-ங்களாகிற இரண்டு படியாலுமென்றபடி. “प्राप्यस्य ब्रह्मणो रूपं” இத்யாதி3யாலே. வேத3ம் அர்த்த2 பஞ்சகத்தையும் ப்ரதிபாதி3ப்பதாகச் சொல்லா நிற்க. புருஷார்த்த2 விஶேஷமான கர்மத்தையும், உபாய விஶேஷமாய் ப்ராப்யமாயிருந்துள்ள ப்3ரஹ்மத்தையும் மாத்ரம் ப்ரதிபாதி3க்கிறதென்கை உபபந்நமோ என்கிற ஶங்கையிலே. இவ்விரண்டையும் நன்றாக அறியும்போது மற்றவைகளும் அறியவேண்டுகையாலே. அதுகள் இதிரண்டுக்கும் ஶேஷங்களாகையாலே விரோத4மில்லை என்றருளிச் செய்கிறார் (இப்படி) என்று தொடங்கி.
அதில் இவ்வர்த்த2த்தை அறியும்போது அர்த்த2 பஞ்சகங்களில் எவ்வர்த்த2ம் அறிந்ததாம் என்கிற ப்ரஶ்நத்திலே வகுத்துக் காட்டுகிறார்.- (எங்ஙனே யென்னில்) என்று தொடங்கி. (உபாஸகர்க்கு உபாதே3யமான ஆகாரத்தாலே த்யாஜ்யமென்றறியலாம்) என்னுமளவும், கர்மஜ்ஞாநத்தால் ஸித்3தி4க்கும் சில அர்த்த2 பஞ்சகார்த்த2 ஜ்ஞாநம் -என்று ப்ரதிபாதி3க்கப்படுகிறது. மேல் (ஸுஸ்பஷ்டமாகவறியலாம்) Page 87 என்னுமளவாக ப்3ரஹ்ம ஜ்ஞாநத்தால் சில அர்த்த2 பஞ்சகார்த்த2ஜ்ஞாநம் ஸித்3தி4க்குமென்று ப்ரதிபாதி3க்கப்படுகிறது.
அதில், கர்மத்துக்கு- भोगसाधनत्वं, उपासनाङ्गत्वं, कैङ्कर्यत्वं என்று மூன்று ஆகாரமுண்டு. அதில் ப்ரத2மாகாரத்துக்கு அதி4காரியை அருளிச்செய்கிறார்.-(பு3பு4க்ஷுக்களுக்கு) என்று. இத்தால் ஸ்வஸ்வரூபத்தில் ப3த்3த4 ஸ்வரூபஜ்ஞாந ஸித்3தி4 சொல்லிற்று. (ஐஶ்வர்ய ஸாத4நமாய்) என் கையாலே, அந்தக் கர்மங்களுக்கு ஸாத்4யமாய்க்கொண்டு ஐஹலௌகிக பாரலௌகிக காமாநுப4வரூபமான ஐஶ்வர்யமறியவேண்டுகையாலே, காமரூப புருஷார்த்த2 ஜ்ஞாநஸித்3தி4 சொல்லிற்று. (ஸாத4நமாய்) என்கையாலே, அதிலேயொன்றான அர்த்த2 ரூபபுருஷார்த்த2ஜ்ஞாநஸித்3தி4 சொல்லிற்று. முதலிலே (பு3பு4க்ஷுக்களுக்கு) என்று பு3பு4க்ஷையையதி4காரமாக வெடுக்கையாலே புருஷார்த்த2, விரோதி4யான पुरुषार्थान्तरेच्छै-யினுடைய ஜ்ஞாநஸித்3தி4 சொல்லிற்று.
உபாஸநாங்க3த்வ கைங்கர்யத்வரூப ஆகாரத்3வயத்துக்கும் ஸாதா4ரணாதி4காரத்தையருளிச்செய்கிறார்-(முமுக்ஷுக்களில்) என்று. ( முமுக்ஷுக்கள் ) – ப்ரக்ருதி ஸம்ப3ந்த4 விமோசநத்தில் இச்சை2யுடையார். உபாஸாங்க3த்வாகாராதி4காரியை விஶேஷிக்கிறார் (ப4க்தி நிஷ்ட2ர்க்கு) என்று. (ப4க்தி நிஷ்ட2ர்க்கு) என்றது -ஸாத4நப4க்தி நிஷ்ட2ர்க்கு என்றபடி. இந்த ப4க்தி ஶப்3தம். கேவலனுடைய ஜ்ஞாந யோக3த்துக்கும் உபலக்ஷணம். இத்தால், ஸ்வாத்ம ப்ராப்தி ஸ்வார்த்தா2நுப4வ கைங்கர்யப்ராப்தி ப்ரதிப3ந்த4க அசித்3 விமோசநேச்சை2களாகிற புருஷார்த்த2 விரோதி4 ஸ்வரூபங்களுடையவும். ஸ்வஸ்வரூபத்தில் முமுக்ஷு விஶேஷங்களினுடையவும் ஜ்ஞாநஸித்3தி4 சொல்லிற்று. (உபாஸநாங்க3மாய்) என்றது उपासनप्रतिबन्धकपापनिबर्हणद्वारा அதுக்கு வர்த4கமாய்க்கொண்டு உபகாரகமாய் என்றபடி. (ப4க்திநிஷ்ட2ர்க்கு உபாஸநாங்க3மாய்) என்கையாலே. अङ्गितया अधिकारतया च भक्तियोग-ज्ञानयोग-ங்களாகிற உபாய விஶேஷங்களினுடைய ஜ்ஞாநஸித்3தி4 சொல்லிற்று. கைங்கர்யத்வாகாரத்துக்கு அதி4காரியை விஶேஷிக்கிறார் (ப்ரபந்நர்க்கு ) என்று. ( ப்ரபந்நர் ) ஸித்3தோ4பாய நிஷ்ட2ர். இத்தால், ஸ்வஸ்வரூபத்தில் ப்ரபந்நரூப முமுக்ஷு விஶேஷ ஜ்ஞாநஸித்3தி4 சொல்லிற்று. (கைங்கர்ய ரூபமாய்) என்றது स्वयंप्रयोजन- भगवन्मुखोल्लासोद्देश्यक- किङ्करवृत्त्यात्मक-மாய் என்றபடி. இத்தால், புருஷார்த்த2 விஶேஷமான आज्ञाकैङ्कर्यज्ञानसिद्धि சொல்லிற்று. (கைங்கர்ய ரூபமாய்) என்கையாலே. कैङ्कर्यात्वाकार-ம் ஸ்வாபா4விகமாகையாலே உபாதே3யமென்றும். மற்றவை சேதநருச்யநுகு3ணமாய் வருகையாலே த்யாஜ்யங்கள் என்றும் ஸுசிதம். இவ்வர்த்த2த்தை ஸோபபத்திகமாக விஶதீகரிக்கிறார் (இப்படியிருந்துள்ள) என்று தொடங்கி. (இப்படியிருந்துள்ள) என்றது. அதி4காரி பே4த3த்தாலே மூன்று வகைப்பட்டிருந்துள்ள என்றபடி. (கர்மத்தின் வேஷத்தை)- கர்மயோக3த்தினுடைய ஸ்வாபா4விகாகாரமான साक्षाद्भगवन्मुखोल्लासैकप्रयोजनकत्व மாகிற கைங்கர்யத்வத்தை மறைத்துக்கொண்டு. சேதநருச்யநுகு3ணமாக வந்தேறியான भगवन्मुखोल्लासद्वारा भोग-மும். उपासनप्रतिबन्धकपापक्षय-முமாகிற ப2லாந்தரங்களுக்கு ஹேதுவாகையாகிற ஆகாரத்தை. (உள்ளபடியறியவே)- சேதநருச்யநுகு3ணமாக வந்தேறியென்று அறியவே. उपासनाङ्गत्वोपाधि-யான அதி4காரிருசிவிஶேஷத்தையருளிச்செய்கிறார்.-(அநந்த) இத்யாதி3நா. (அநந்த ஸ்தி2ர ப2லப்3ரஹ்ம ப்ராப்தி காமரான) என்றது ஸ்வார்த்த2மாக. அநந்த ஸ்தி2ர ப2லரூபமான ப்3ரஹ்மத்தினுடைய ப்ராப்தியிலே இச்சை2யுடையரான என்றபடி. இத்தால். “अल्पास्थिरफलैश्वर्य ப்ராப்தீச்சை2 भोगसाधनत्वाकारोपाधि” என்று ஸுசிதம். (உபாதே3யம்) என்றது- அதி4காராநுகு3ணமாக உபாதே3யம் என்றபடி. (ஐஶ்வர்யார்த்தி2களுக்கு) என்கையாலே. भोगसाधनत्वाकारोपाधि-யான अधिकारिदोष-ம் சொல்லிற்று. (உபாதே3யமான ஆகாரத்தால்) என்றது भोगसाधनत्वाकार-த்தாலே யென்றபடி. (த்யாஜ்யம் என்றறியலாம்) என்றது – அவ்வாகாரோபாதி4யான ஐஶ்வர்யேச்சை2 स्वाधिकारविरुद्ध-மாகையாலே இவ்வதி4காரியினிடத்தில் இல்லாமையாலே. அவ்வாகாரத்தாலே த்யாஜ்யம் என்றறியலாம் என்றபடி. கைங்கர்யத்வாகாரம் நிருபாதி4கமாகையாலே உபாதே3யம் என்றருளிச்செய்கிறார்.- (அநந்யஸாத4 நர்க்கு ) என்று தொடங்கி. (அநந்ய ஸாத4நர்க்கு) என்றது – सिद्धोपायव्यतिरिक्त-साधनान्तररहित- ர்க்கு என்றபடி. (ஸாதி4க்கத்தக்க தொன்றில்லாமையாலே) என்றது – ஸாத்4யாந்தர ஸாத4நாந்தரங்கள் ஸ்வாதி4கார விருத்3த4ங்களாகையாலேயும். உபாயம் ஸித்3த4ரூபமாயிருக்கையாலேயும் ஸ்வயம்ப்ரயோஜந ப4க3வந்முகோ2ல்லாஸமொழிய. இது கொண்டு ஸாதி4க்கத்தக்கது வேறொன்றில்லாமையாலே யென்றபடி, இத்தால், இவ்வதி4காரியினிடத்தில் கர்மங்கள் போ4க3ஸாத4 நத்வாத்3யாகாரத்தாலே உபாதே3யமாகைக்கடியான फलान्तरेच्छारूप-மான அதி4காரிதோ3ஷமில்லையென்னுமிடம் சொல்லிற்று. (கைங்கர்யரூபேண ) என்றது कैङ्कर्यत्वरूप-மான स्वाभाविकाकार-த்தாலே என்றபடி. (உபாஸகர்க்கு உபாதே3யமான ஆகாரத்தாலே த்யாஜ்யம் என்றறியலாம்) என்றது–स्वाधिकारविरुद्ध-மான उपासनाङ्गत्वोपाधि இல்லாமையாலே த்யாஜ்யம் என்றறியலாம் என்றபடி. ஆக இவ்வளவால், பூர்வபா4க3த்தால் कैङ्कर्यत्वरूप-स्वाभाविकाकारविशिष्ठ மாகக் கர்மத்தையறியும்போது, கு3ணாநுகு3ணமாக விதி4நிஶேத4ங்களைப்பண்ணுகிற வேத3வாக்யங்களை அதி4காரிவிஶேஷ விஷயங்களாக்கி, பூர்வோத்தர விரோத4ங்கள் வாராதபடி விசாரித்து அறியவேண்டுகையாலே. 1 அவ்வோ அதி4காரி பரவாக்யங்களிலே பு3பு4க்ஷு முமுக்ஷுக்களாகிற ஸ்வஸ்வரூப விஶேஷங்களும், பு3பு4க்ஷை முமுக்ஷைகளாகிற புருஷார்த்த2 விரோதி4 ஸ்வரூபங்களும், 2 அங்கி3யாகவும். அங்க3மாகவும் அவ்வோகர்மங்களை விதி4க்கிற வாக்யங்களிலே கர்மஜ்ஞாந ப4க்தியோக3ங்களாகிற உபாய விஶேஷஸ்வரூபங்களும். 3 தத்தத்ப2லவாக்யங்களிலே புருஷார்த்த2 விஶேஷ ஸ்வரூபங்களும், 4 தத்தத்கர்மாராத்4ய தே3வதா ஸமர்ப்பண பரவாக்யங்களிலே தே3வதாந்தர ஶேஷித்வ ப்ரதிபத்தியாகிற பரஸ்வரூப விரோதி4 ஸ்வரூபமும். 5 ஸர்வகர்மங்களினுடையவும் ப4க3வதா3ராத4நரூபதா விதா4யக வாக்யங்களிலே பரஸ்வரூபமும். கைங்கர்யரூப நிரதிஶய புருஷார்த்த2 ஸ்வரூபமும். 6 தே3ஶகாலாதி3 நியமபர வாக்யங்களிலே ப4க3வத்3விபூ4திவிஶேஷங்களும் ப்ரதிபாதி3க்கப்படுகையாலேயும், 7 அவ்வோ ஸாத4நங்களினுடைய விதி4நிஷேத4ங்களிலே பூர்வோக்தார்த்த2ங்களினுடைய த்யாஜ்யோபாதே3யதைகளும் ப்ரதிபாதி3க்கப்படுகையாலே பூர்வபா4கம் ப்ராதா4ந்யேந கர்மப்ரதிபாத3கமாயிருந்ததேயாகிலும், அதுக்கு ஶேஷமாக அர்த்த2 பஞ்சகார்த்த2 விஶேஷங்களையும் ப்ரதிபாதி3க்கை யாலே “प्राप्यस्य ब्रह्मणो रूपम् ” இத்யாதி3ப்படியே. அர்த்த2 பஞ்சகவிபா4கபரம் என்னக்குறையில்லை என்றருளிச்செய்தார்.
மேல் உத்தரபா4க3ம் ப்3ரஹ்மஶேஷதயா அர்த்த2 பஞ்சகார்த்த2 விஶேஷப்ரதிபாத3கமாம்படியை அருளிச்செய்கிறார், (ப்3ரஹ்மத்தையறியும்போது) என்று தொடங்கி. (ஸ்வரூபம்) தி3வ்யாத்மஸ்வரூபம். (ரூபம்) பரவ்யூஹாதி3 (கு3ணங்கள் ) வாத்ஸல்ய ஸ்வாமித்வாதி3. (விபூ4திகள்) லீலாவிபூ4தி நித்ய விபூ4திகள். (அறியவேண்டுகையாலே) என்றது-जगज्जन्मादि कारणत्वं ब्रह्मलक्षण-மாகையாலே அந்த லக்ஷணத்தாலே ப்3ரஹ்ம ஶப்3தார்த்த2மான अपरिच्छिन्नज्ञानानन्दस्वरूप-மான லஷ்யத்தை அறியும்போது. निमित्तकारणत्व-த்துக்குடலான ஜ்ஞாந ஶக்த்யாதி3களையும். उपादानकारणत्व-த்துக்கடியான सकलचिदचिच्छरीरकत्व-த்தையும் அறியவேண்டுகையாலே ஸ்வரூபாதி3களை யறிந்தே அறியவேணும் என்னுமபி4ப்ராயத்தாலே. (சேதநா சேதநங்களின் ஸ்வரூபம் அறியலாம்) என்றது – नित्य-मुक्त-केवल-बद्ध-मुमुक्षु-रूपेण पञ्चविध-மான சேதநஸ்வருபமும், तत्तत्प्राप्यदेशविशेष-देहविशेष-परिच्छदविशेष-ங்களான அசேதந ஸ்வரூபங்களும் அறியலாம் என்றபடி. (அதில்) என்றது-विभूत्यन्तर्भूत-மான அந்த சேதநாசேதந வஸ்துக்களிலே யென்றபடி. (கைவல்யத்தின்) கைவல்ய புருஷார்த்த2த்தின். (அநுப4வாதி3கள்) என்கிற ஆதி3ஶப்3த3த்தாலே. கைங்கர்ய மங்களாஶாஸநங்களைச் சொல்லுகிறது. ( ஸாத4நவிஶேஷங்களை அறியலாம்) என்றது- உபாஸ்யத்வத்தாலே ப4க்தி ப்ரபத்திகளையும். ஶரண்யத்வத்தாலே ஸித்3தோ4பாயத்தையும் அதின் ப2லமான ஆசார்யாபி4மாநத்தையும் அறியலாமென்ற படி. மேல் உபாயோபேய விரோதி4 ஸ்வரூபங்களையறியும் படி சொல்லுகிறது.-(ஸாத்4யாந்தர ஸாத4நாந்தரங்களினுடைய ) இத்யாதி3நா. இதில் ப்3ரஹ்மத்தினுடைய निरतिशयभोग्यताज्ञान-த்தாலே साध्यान्तरत्याज्य-தையும், अनन्यसाध्यत्वस्वपारतन्त्र्य-ங்களினுடைய ஜ்ஞாநத்தாலே साधनान्तरत्याज्य-தையும் அறியலாம் என்று क्रमेण யோஜநை கண்டுகொள்வது. ( அநந்ய ஸாத்4யத்வம்)-भगवद्वयतिरेकेण साधनान्तरासाध्यत्व-ம். ஆக. இவ்வளவால்- உத்தரபா4க3ம் प्राधान्येन ब्रह्मप्रतिपादक-மாயிருந்ததேயாகிலும், அர்த்த2 பஞ்சகத்தையும் ப்ரதிபாதி3க்கையாலே. அர்த்த2பஞ்சக ப்ரதிபாத3கமென்னக் குறையில்லை என்றருளிச்செய்தார். மேல். “प्राप्यस्य ब्रह्मणो रूपम् ” என்று இத்யாதி3வசநத்தோடே कर्मब्रह्मरूपार्थद्वयप्रतिपादकंவேத3ம் என்கிறது விரோத4மில்லை என்னுமிடத்தைத் தலைக்கட்டுகிறார் (ஆக இப்படி) என்று தொடங்கி. (இப்படி யிருக்கையாலே) என்றது – பா4க3வத்3வயம் अप्राधान्येन அர்த்த2 பஞ்சகத்தையும் ப்ரதிபாதி3த்துக்கொண்டு. प्राधान्येनகர்மத்தையும் ப்3ரஹ்மத்தையும் ப்ரதிபாதி3த்துக்கொண்டிருக்கையாலே என்றபடி. (குறையில்லை ) என்றது-“प्राप्यस्य ब्रह्मणो रूपम् ” इत्यादिवचनविरोध-மாகிற குறையில்லை யென்றபடி. பூர்வோத்தரபா4க3ங்கள் ஆராத4ந ஆராத்4ய ஸ்வரூபபரங்கள் என்னுமிடத்துக்கு ஆசார்யஸம்மதி காட்டுகிறார். (தவத3ர்ச்சாவிதி4 மித்யாதி3). (அர்ச்சாவிதி4 முபரி பரிக்ஷீயதே) என்றது- அர்ச்சாவிதி4யிலே பர்யவஸிக்கிறதென்றபடி. (ईहा) सङ्कल्प: (காமத்தினுடைய)-யாகா3தி3 கர்மத்தினைடய. (ஸ்வரூபம்) भगवदाराधनात्मकत्वம். (அங்க3ம்)- நியமேந உபாதே3யங்களாக அவ்வவ்விடங்களிலே விஹிதங்களானவை. (ப2லம்)ஸ்வயம்ப்ரயோஜந ப4க3வந்முகோ2ல்லாஸம். ஆதி3ஶப்3த3த்தாலே அதி4காரியைச் சொல்லுகிறது. (விபூ4த்யாதி3கள்) என்கிறவிடத்தில். ஆதி3ஶப்3த3த்தாலே சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது. (அல்லாதார்க்கு) என்றது- இப்ரப3ந்தா4தி4காரிகளில் பெண்ணுக்கும் பேதைக்கும் என்றபடி. “वेदार्थे उपबृमहयति-विस्तारयति-सम्यक् ज्ञापयतीति-उपबृंहणम् ” என்று वेदवाक्यार्थनिर्णायक-ங்களை (உபப்3ரும்ஹண) शब्द-ம் சொல்லுகிறது.
(ஸர்கா3தி3பஞ்சலக்ஷணோபேதங்களான) என்றது- “सर्गश्च प्रतिसर्गश्च वंशो मन्वन्तराणि च। वंशानुचरितं चेति पुराणं पश्चलक्षणम् ॥” என்றத்தைப்பற்ற. (நியமம்) நிர்ப3ந்த4ம். (அல்பஶ்ருதர்) ஸ்வல்ப உபப்3ரும்ஹண ஜ்ஞாநமுடையவர். ( விப்ரதிபத்தி) விருத்3தா4ர்த்த2ப்ரதிபத்தி. (காலுஷ்யஹேதுவாம்) என்றது – விருத்3தா4ர்த்த2ப்ரதிபாத3நத்தாலே பூர்வோத்தரவிரோத4ரூப காலுஷ்ய ஹேதுவாமென்றபடி. ( இதிஹாஸபுராணாப்4யாம்) என்றது. “सर्वे वाक्यं सावधारणं” என்கிற ந்யாயத்தாலே इतिहासपुराणाभ्यामेव-என்றபடி. (வேத3ம்)- வேதா3ர்த்த2ம். (ஸமுபப்3ரும்ஹயேத்)-विस्तारयेत्। सुविशदं जानीयात् इत्यर्थ:।| (வேத3:)-वेदपुरुष:. (ப்ரதரிஷ்யதி) : अपार्थ-प्रतिपादनेन वञ्चयिष्यति। “इति” इति शेष: . இவ்வசநத்தில் உத்தரார்த4த்தால் உபப்3ரும்ஹணங்களின்றியிலே வேதா3ர்த்த2 நிர்ணயத்தில் இழியுமளவில் अपार्थप्रतिपादन-த்தாலே வேத3 விக்க்ஷோப4ணத்தால் வரும் ப்ரத்யவாய (மாத்ர?) மன்றிக்கே. இவனுடைய விக்ஷோப4ணத்தால் பீ4தனான வேத3புருஷனுடைய ஶாபமாகிற அநர்த்த2முங்கூட வருமென்று ஸுசிதம். ( ப்ரக்ரியையாலே ) என்றது वक्ष्यमाण- सकलार्थनिर्णायक- प्रमाण- निर्देशात्मकतारूप- प्रकार-த்தாலே என்றபடி. (ஆசாரம்)- நித்யகாம்யாத்3யநுஷ்டா2நம் (வ்யவஹாரம்) தா3யவிபா4கா3தி3. (ப்ராயஶ்சித்தம் ) க்ருச்2ர சாந்த்3ராயணாதி3. (அநதீ4த ஶாகா2ந்தரங்கள்) -அநுமித ஶாகா2ந்தரங்கள். (அதீ,த ஶாகை2கள்)-ப்ரத்யக்ஷ ஶாகை2கள். (அபேக்ஷித விஶேஷங்களோடே ? ) – ஸ்வாபேக்ஷிதங்களான அங்கோ3பாங்கா3தி3களோடே. இவ்விடத்தில் பாஞ்சராத்ரத்தைச் சொல்லாதொழிந்தது – குத்3ருஷ்டிகளையும் இப்ரப3ந்தா4ர்த்த2த்தில் இசைவிக்கைக்காக. (வகையிட்டு)- விப4ஜித்து. இந்த விபா4க3த்துக்கு ப்ரமாணம் காட்டுகிறார்.-(ப்ராயேணேத்யாதி3) பூரணம் அநுக்தாபேக்ஷித விஶேஷபூரணம். (ப்ராயேண) என்றது. க்வாசித்கமாகப் புராணாதி3களாலும் பூரணம் உண்டு என்கைக்காக. 2.
- இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரப3லம்.
- அத்தாலே அது முற்பட்டது.
3.”அத்தாலே அது முற்பட்டது” (வா 4) என்று. இதிஹாஸ ப்ராப3ல்யத்தை ஹேதுவாலே ஸ்தா2பிக்கையாலே. “இவை யிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரப3லம்” (வா 3) என்கிற மேல் வாக்யம் விப்ரதிபந்நனைக் குறித்து ப்ரதிஜ்ஞாவாக்யமாகவேணுமென்று திருவுள்ளம்பற்றி, மேல் வாக்யத்துக்கு ப்ரத2மாவதாரிகை யருளிச்செய்கிறார்.- (உத்தரபா4கோ3பப்3ரும்ஹணத்3வயத்துக்கும்) என்று தொடங்கி. வக்ஷ்யமாணார்த்த4ங்களுக்கெல்லாம் ப்ரமாண மொருங்கவிடுகிற இப்ரகரணத்தில். அப்ப்ரமாணங்களுக்கு ஒரு விஷயத்தில் பரஸ்பரவிரோத4ம் வருமளவில் அந்யதர ஸங்கோசத்தாலே விரோத4 பரிஹாரம் பண்ணி அர்த்த2 நிஶ்சயம் பண்ணுகைக்குடலாக அதுகளினுடைய ப்ராப3ல்ய தௌ3ர்ப3ல்யங்களையும் த3ர்ஶிப்பிக்கவேண்டுகையாலே. அத்தைத் தாமே ஸோபபத்திகமாக த3ர்ஶிப்பிக்கவும் கூடும் என்று திருவுள்ளம்பற்றி இரண்டாமவதாரிகை.
இதிஹாஸ ப்ராப3ல்ய ஹேதுக்களிலே பரிக்3ரஹாதிஶயமும், மத்3யஸ்த்2தையும். “இது ப்ரப3லம்” என்று அறிகைக்கு ஹேது. கர்த்து ராப்ததமத்வம். “ப்ரப3லப்ரமாணம்” என்றறிகைக்கும், அது தானப்படியாகைக்கும் ஹேது.
(மந்தா2நம்)- மத்து. (நீர ஜஸ்கா) என்கிறவிடத்தில் ரஜஶ்ஶப்3த3ம் தூளையும் ரஜோகுணத்தையும் சொல்லுகிறது. (ஶாஸ்த்ரஸார: ) என்கிற விடத்தில் ஶாஸ்த்ர ஶப்3த3ம் வேதாதி3 ஶாஸ்த்ரபரம். (வித்3வத்ஸு)- மயர்வறமதிநலம் பெற்றவர்களிடங்களிலேயும். (ப்3ராஹ்மணேஷு) ब्रह्मण इमे ब्राह्मणाः, भागवताः तेषु; (कल्याणी)-स्वतः प्राप्यभूता; (भारतादेव) என்று அவத4ரித்துச் சொன்னது, உபாயவைப4வபரமான இதில் விஷ்ணுப4க்தி உண்டாகிறாப்போலே புருஷகார வைப4வபரமான ஸ்ரீராமாயணத்தில் உண்டாகாதென்கைக்காக. (கல்பம்)- ப்3ரஹ்மதி3வஸம். (யஸ்மிந் கல்பே)என்றது-ஸாத்விக ராஜஸ தாமஸ தி4நங்களிலே யாதொரு தி4நத்திலே என்றபடி. (தஸ்ய தஸ்ய) என்றது – அந்தந்த கு3ணாது கு3ணதே3வதையினுடைய என்றபடி. (தத்ஸ்வரூபேண) என்றது- அந்தந்த கு3ணங்களையுடைய புராணத்தாலேயென்றபடி. பக்ஷபாதமில்லாதமை தெரிந்தபடி யென்னென்ன அருளிச்செய்கிறார். – ( லௌகிகவைதி3க) இத்யாதி3யாலே. (லௌகிகங்கள்)- இந்த்3ரிய க்3ரஹண யோக்3ய பதா3ர்த்த2ங்கள். இத்தால், லௌகிக விஷயங்களில் பக்ஷபாதமின்றிக்கே யிருக்கையாலே வைதி3கங்களிலும் அப்படியென்னுமிடம் நிஶ்சிதம் என்று சொல்லப்பட்டது. இவ்விடத்திலே. “ஒரு நாயக” (4.1 ) திருவாய்மொழியைக் கொண்டு. “சூழ் விசும்பணி முகிலின்” (10-9) ப்ராமாண்ய மறிந்தபடியை த்3ருஷ்டாந்தமாக்கிக்கொள்ளவும்.
(வசநஸௌஷ்ட2வேந)என்றது – “यन्मनसा मन्यते (चेतयते?) तद्वाचा भवति” என்கிற ந்யாயத்தாலே. மநஸ்ஸிலே அந்யதா2பா4வம் உண்டாகில் வாக்கிலே தோன்றுமென்று கருத்தாலே. (உய்யக்கொண்டார் ) உடையவர் காலத்திலே ப்ரஸித்3த4ரான தூப்புல் உய்யக்கொண்டார். 3அல்பமான அச்சையுடையது (அல்பாச்தரம்). அச் உயிரெழுத்து. (அப்4யர்ஹிதத்வம்) ஶ்ரைஷ்ட்2யம், ஶ்ருதிஸ்ம்ருதிகளிலேமுற்படுகையை உபபாதி3க்குமதிலுங்காட்டில், “लीलार्थमपि यद्ब्रूयु:” “ता एव भवन्ति शास्त्राणि” “சொல்லு மவிடு சுருதியாம்” என்கிறபடியே முன்பு இப்ரப3ந்த4த்திலே சேர்க்கப்பட்ட பூர்வாசார்ய வசநத்தில் முற்பட்டமையை உபபாதி3க்கையே ஆப்த்யதிஶயத்துக்கும் உபஸ்தி2திலாக4வத்துக்கும் சேர்ந்திருக்கையாலே அருளிச்செய்கிறார் (அத2வா) என்று தொடங்கி, (சொல்லுகிறவிடத்தில்) என்றது – சொல்லுகிற இப்ரப3ந்த4 க4டிதமான பூர்வாசார்ய வாக்யத்தில் என்றபடி. ஆனால் ”ஸ்ம்ருதீதிஹாஸ” (வா1)இத்யாதி3 வாக்யத்தில். ஸ்ம்ருதியிலுங்காட்டில் ஶ்ரேஷ்ட2ங்களான இதிஹாஸபுராணங்கள் முற்பட்டு “இதிஹாஸ புராணஸ்ம்ருதிகளாலே” என்ற வாக்ய ஶைலியாக வேண்டாவோ? என்னில்; இவ்விடத்தில் ப்ராப3ல்ய தௌ4ர்ப3ல்யங்கள் अभ्यर्हितत्वानभ्यर्हितत्वहेतु-க்களாக விவக்ஷதங்களாகையாலே. उत्तरभागाविवरण-த்தில் இதிஹாஸத்துக்கு ப்ராப3ல்யம்போலே पूर्वभागाविवरणांश-த்தில் ஸ்ம்ருதிகளுக்கு ப்ராப3ல்யம் துல்யமாகவுண்டாகையாலே. அல்பாச்தரமான ஸ்ம்ருதி ஶப்3த3மே முற்படவேண்டுகையாலே விரோத4மில்லையென்று கண்டுகொள்வது. ஆராத4நம் ப்3ரஹ்மத்துக்கு ஶேஷமானாப்போலே, ப்3ரஹ்மமும் கர்மதயா ஆராத4நத்துக்கு ஶேஷமாயிருக்கையாலும். ஸாத4க ஸாதா4ரண ப்ராப்யபூ4தமான ப்3ரஹ்மத்தையபேக்ஷித்து. ப்ரபந்நாஸாதா4ரண ப்ராப்யமாய். व्यक्तचतुर्थीप्रार्थनीय-மாயிருந்துள்ள ஆராத4நத்துக்கு प्राप्यत्वाकार-த்தாலே உத்கர்ஷமுண்டாகையாலும் अर्थोत्कर्षमूलक-மான स्मृतीतिहासादिप्राबल्यदौर्बल्य-ங்கள் विवक्षानुगुण-மாக அவ்யவஸ்தி2தங்களாகக் கடவதிறே.
“प्राबल्यात् स्मृतित: पुराणववसाम्” என்று ஸ்ம்ருதியிலுங்காட்டில் புராணம் ப்ரப3லமென்று அண்ணனய்யன் அருளிச் செய்தது.-भगवदाराधनरूपकर्म-த்தை फलान्तरार्थ-மாகவும். – देवतान्तराराधनरूप-மாகவும் शास्त्रास्तिक्यादिजननार्थे चेतनगुणानुगुण- மாக ப்ரதிபாதி3த்து ப4க3வத்3 வைபவம் குன்றும்படி பண்ணுகிற அஸாத்விக ஸ்ம்ருதிகளையபேக்ஷித்து, ஸாத்விகாசாரவிஷயத்தில் தத்வநிர்ணயைக பரங்களாய். ப4க3வத்3 வைப4வத்தை நன்றாகச் சொல்லுகிற புராணங்கள் ப்ரப3லமென்னும் கருத்தாலே. ஆகில், புராணங்கள் போலே பக்ஷபாதமுடையதுகளான ஸ்ம்ருதிகள் வேதா3ர்த்த2 விவரண ப்ராமாண்யத்தில் து3ர்ப3லமென்னக்குறையென்? என்னில் இங்கு. वक्तृदोषप्रयुक्त-மான பக்ஷபாதமே पुराणदौर्बल्यहेतु-வாக விவக்ஷிதமாகையாலே. “त्रैगुण्यविषया वेदा:” என்கிறடியே आस्तिक्यायादिजननार्थ-மாக गुणानुगुणसाध्यसाधन-ங்களை விதி4க்கிற வேத3வாக்யங்களினுடைய பக்ஷபாதமடியாக அதுகளினுடைய உபப்3ரும்ஹணங்களான ஸ்ம்ருதிகளுக்கும் பக்ஷபாதம் வருகையாலேயும். அந்தப் பக்ஷபாதந்தான் மூலாநுகு3ணமாகவிருக்கையாலே प्रामाण्यातिशयहेतु-வாகையாலேயும். प्रयोजनान्तरतात्पर्य-மின்றிக்கே सञ्जातमोक्षाभिलाष-ரான சேதநர்க்குத் தத்வஹித புருஷார்த்த2ங்களை உள்ளபடியறிவிக்கையிலே ऐदम्पर्येण-ப்ரவ்ருத்தமான உத்தர பா4க3த்துக்கு உபப்3ரும்ஹணங்களாயிருந்துவைத்தும் புராணங்கள் साध्यान्तरसाधनान्तरपर- ங்களாகைக்கடியான केवलवक्तृदोषप्रयुक्तपक्षपात-ம் ஸ்ம்ருதிகளுக்கில்லாமையாலே அதுகளுக்கு स्वार्थप्रामाण्य-த்தில் इतिहासापेक्षया दौर्बल्य-மில்லையென்று கண்டுகொள்வது. அன்றிக்கே.
पूर्वभागोपबृंहण-த்தைப் பூர்வமும், उत्तरभागोपबृंहण- ங்களைப் பிற்பாடும் சொல்லுகையே க்ரமத்துக்கு உசிதமாகையாலே ஸ்ம்ருதி முற்பட்டது என்றுமாம். 4
- 5. இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது ; மஹாபா4ரதத்தால் தூதுபோனவனேற்றஞ்சொல்லுகிறது.
- அடியிலே (வேதா3ர்த்த2மறுதியிடுவது) (வா.1) என்று ஸாமாந்யமாகச்சொல்லி. “இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான” (வா.5) என்று தொடங்கி उत्तरभागार्थनिर्णय-த்தில் முதலிலே இழியலாமோ? என்கிற ஶங்கையிலே; “முமுக்ஷக்களுக்கு முந்துற முன்னம் அறியவேண்டும் ஸித்3தோ4பாயமானது உத்தர பா4க3வேத்3யமாயிருக்கையாலேயும். பூர்வபா4க3ப்ரதிபாத3யமான கைங்கர்யம் सिद्धोपायाधिकारिकृत्यान्तर्भत- மாயிருக்கையாலேயும். த்3வயவிவரணரூபமான இப்ரப3ந்த4த்தில் – முதலிலே पुरुषकारोपायवैभवात्मक-उत्तरभागार्थनिर्णय-மும் – உத்தரபா4கா3ர்த்த2மான புருஷார்த்தா2தி3களை நிர்ணயிக்கிற த்3வயோத்தர க2ண்டா3ர்த்த2 விவரணரூப ப்ரகரணங்களிலே கைங்கர்ய ரூப கர்மங்களும். “प्रपद्ये” என்கிற उत्तमाक्षिप्ताधिकारिस्वरूपविवरणस्थल-ங்களிலே நிஷித்3த4 பரிஹாராதி3களும் நிர்ணயிக்க வேண்டுகையாலே, अधिकारिकृत्यप्रकरण-த்தில் பூர்வபா4க3த்தில் उपेदेयार्थविशेषनिर्णय-மும்-ஸங்க3தம்” என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (முதலிலே) இத்யாதி3நா. (ப்ரதிபாத3ந ஸ்த2லங்களிலே ) என்றது – இப்ரப3ந்த4த்தில் ப்ரதிபாத3ந ஸ்த2லங்களிலே என்றபடி. (தத்தத3நுகு3ணமாக) – ஸ்வரூபோபாய புருஷார்த்தா2நுகு3ணமாக. (த்யாஜ்யோபாதே3ய கத2நமுகே2ந) என்றது-அதி4காரி ஸ்வரூபமான நிஷித்3த4பரிஹாரமும். கைங்கர்யரூபமான விஹிதாநுஷ்டா2நமுமே பூர்வபா4க3ப்ரதிபாத்3யமென்னும் கருத்தாலே. உபப்3ரும்ஹணங்களைக்கொண்டு வேதா3ர்த்த2ம் நிர்ணயிக்கிறாராகில். விஷயவிஶய பூர்வபக்ஷாதி3களின்றிக்கே லௌகிகோக்தியாலே அருளிச்செய்கிறதென்? என்ன அருளிச்செய்கிறார் (அது தன்னிலும்) என்று தொடங்கி. (பரக்கநின்று ப்ரதிபாதி3க்கிறவிடங்களில்) இதிஹாஸபுராண பாஞ்சராத்ர ப்3ரஹ்மமீமாம்ஸைகளில் (ஸாராஸார விவேக:) ஸாராஸார விபா4க3: (ஸங்க்3ரஹித்து) -ஆசார்ய முக2த்தாலே தாம் கேட்டு நிஶ்சயித்தபடியே. “गुरुभ्योऽर्थश्श्रुतश्शब्दै: तत्प्रत्युक्तैश्च योजित: ” என்கிறபடியே பூர்வாசார்ய ஸ்ரீஸுக்திகளாலே ஸங்க்3ரஹித்து. (சேதநர்க்கு)-ஸ்த்ரீபா3லாதி3 சேதநர்க்கு. (ப்ரதிபத்தி)- அவிசால்யமான நிஶ்சயம்.
இத்தால், விஷய விஶயாதி, ப்ரதர்ஶந பூர்வகமாக விசாரித்து நிர்ணயிக்குமளவில். பெண்ணுக்கும் பேதைக்கும் அவகா3ஹிக்கவொண்ணாதாகையாலே இப்ரப3ந்தா4ரம்ப3ம் நிஷ்ப3லமாம் என்று ஸுசிதம்.
(ஸகலலோக பிதாமஹனான ப்3ரஹ்மாவினாலே ஸம்பா4விதனான) என்றது- “ब्रह्मणा समनुज्ञात:” என்றதினர்த்த2ம். ( (ஸம்பா4விதனான )- பூஜிதனான. ப்3ரஹ்ம பூஜிதனானால் இவன் ப்ரப3ந்த4ம் ஶ்ரேஷ்ட2மானபடி யென்னென்னில்; “विप्राणां ज्ञानत: श्रैष्ठ्यं” என்றும், “योऽनूचान: स नो महान् ” என்றும் சொல்லுகிறபடியே. ஸர்வலோக பிதாமஹனான ப்3ரஹ்மா இவனை ஸம்மாநிக்கும்போது. தன்னில் இவனுக்குண்டான ஜ்ஞாநாதி4க்யத்தைக் கொண்டே ஸம்மாநிக்கவேண்டுகையாலே. அவ்வளவு ஞாநமுடையவனுடைய ப்ரப3ந்த4ம் ஶ்ரேஷ்ட2மாகக்குறையில்லையிறே. ஆசார்ய ஸந்நிதி4யில் உச்ச2வாஸநிஶ்வாஸங்களைக் கூச்சமறவிடுகையுங்கூட நிஷித்3த4மாகச்சொல்லா நிற்க, ஸ்வாசார்யனான நாரத3 ப4க3வானுக்கும் ஆசார்யனாய். தனக்குப் பரமாசார்யனாய். அவனுக்கு “ये केचास्मच्छ्र्येंसो ब्राह्मणा:” என்று உபதே3ஶ ப்ரகரணத்தில் பூஜ்யதமனாகச் சொல்லப்பட்ட ப்3ரஹ்மா வின் முன்னே “सोऽप्युपाविशदासने ” என்று ஆஸநத்திலிருந்தானென்று சொல்லுகிறது. ஶ்ரைஷ்ட்2யத்துக்குடலாம்படி யென்னென்னில்: “போ4க3த3ஶையில் ஈஶ்வரன் அழிக்கும்போது நோக்க வேணுமென்று அழியா தொழிகை” (முமுக்ஷப்படி 92) என்கிறபடி, नम:पदार्थपारतन्त्र्यज्ञानं ஆசார்ய விஷயத்தில் இவனுக்கு அநுஷ்டா2ந பர்யந்தமானபடி சொல்லுகிறதாகையாலே உத்கர்ஷஹேதுவாகக் குறையில்லை. कर्तुराप्ततमत्वे प्रमाण-ங்காட்டினார் கீழ் : மத்4யஸ்த2தையிலே ப்ரமாணங்காட்டுகிறார் – (ந தே வாகி3த் யாதி3நா). பரிக்3ரஹாதிஶயத்திலே ப்ரமாணங்காட்டுகிறார்.(யா(தா?)வதி3த்யாதி3நா). या (ता?)वत्पदं साकल्यपरम्. (இதிஹாஸாந்தரங்களைப் பற்ற) என்றது- மற்ற இதிஹாஸங்கள் இப்படி ப்3ரஹ்மாவினுடைய அநுக்3ரஹமூலகங்களாகக் காணாமையாலும். இது नारदमुखादधीत-மாய் வந்தாப்போலே மற்றவைகளுக்கு ஸம்ப்ரதா3ய பரம்பரை காணாமையாலும். *எம்பெருமான் றானே இத்தைத் திருவோலக்கமாக எழுந்தருளியிருந்து ஸாமகா3நத்தோபாதி திருவுள்ளமுகந்து திருச்செவி சாத்தியருளின தாகையாலும்*. ப4விஷ்யத3ர்த்த2 ப்ரதிபாத3கமான உத்தரகாண்ட3மெல்லாம் ஒன்று தப்பாமல் மெய்யாகக் காண்கையாலும் பா4ரதாதி3களைப்பற்ற இதுக்கு ஏற்றம் சொல்லக்குறையில்லை – என்னுமபி4ப்ராயத்தாலே. இன்னமும் இதின் வைலக்ஷண்யத்தை “ஸாக்ஷாத்3 வேத3மே ராமாயணமாக அவதரித்தது” என்று சொல்லுகிற ப்ரமாணத்தாலே த்3ருடீ4கரிக்கிறார் (இன்னமும்) என்று தொடங்கி.
ஶ்லோகார்த்த2ம் (ஸர்வஸ்மாத் பரனானவித்யாதி3). இவ்விடத்தில் ஶப்3த3த்துக்கு ஶப்3தா3ந்தரரூபேண அவதாரம் கூடாமையாலே வேதா3பி4மாநி புருஷனானவன் வேதா3ர்த்த2ப்ரதிபாத3கமான ஸ்ரீராமாயணத்தில் பண்ணுமதி4ஷ்டா2நத்தை வேதத்தினுடைய அவதாரமாகச் சொல்லுகிறதென்று கண்டுகொள்வது. சிறையிருப்பால் த3யை ப்ரகாஶிக்குமோ வென்ன அருளிச்செய்கிறார்.- (தே3வதே3வேத்யாதி3நா). स्वानर्थशतानादरेणापि परदुःखापाकरणप्रवृत्ति-யும் दयापारवश्यकार्य-மாகையாலே, கார்யம் காரணத்துக்கு ப்ரகாஶகமாகக் குறையில்லை யென்று கண்டுகொள்வது. “यद्भ्रूभङ्गा: प्रमाणम् ” என்கிறபடியே ஸர்வத்தையும் ப்4ரூப4ங்க3 மாத்ரத்தாலே நிர்வஹிக்க வல்லளாயிருக்க, தே3வஸ்த்ரீ சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருந்தாள் என்கை உபபந்நமோ? ஆனபின்பு. ப்4ருகு3 ஶாபாதீ4நமாய் வந்த அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காகச் சிறையிருந்தாளாகச் சொல்லவேண்டாவோ? என்கிற ஶங்கையிலே. “இவளிப்படி இவ்விபூ4தியிலவதரித்துச் செய்ததெல்லாம் ஸம்ஸார மக்3நரான் சேதநர் பக்கல் நிருபாதி4க வாத்ஸல்யத்தாலே” என்னுமத்தை த்3ருஷ்டாந்த முக2த்தாலே அறிவித்து. அது தானே இவளுடைய நிரதிஶய வாத்ஸல்யத்துக்கும் ப்ரகாஶகமென்கிறார் (ப்ரஜை) என்று தொடங்கி. (விளப்புற்ற) ப்ரஸித்3த4மான. ஆனால் இவள் இப்படி வாத்ஸல்யத்தாலே சிறையிருந்தாள் என்னில் தோ3ஷமாகாதோவென்ன அருளிச்செய்கிறார், (சிறையிருப்பு) என்று தொடங்கி. க3ர்ப4வாஸாதி3களும் கு3ணப்ரகாஶங்கள் என்னுமத்தை த்3ருஷ்டாந்தத்தாலே இசைவிக்கிறார். (ஸம்ஸாரிகளோடு) இத்யாதி3நா. “काव्यं रामायाणम् ” என்கிறவிடத்தில் “रामायणं कृत्स्नं सीतायाश्चरितं महत् ” என்றிருக்கையாலே, “रघुवरचरितम् ” என்கிற வசநம் सीताचरितशेषभूतराघवचरितपर- மென்று கண்டுகொள்வது. அடிதொடங்கி இருவருடைய சரிதமும் சொல்லா நிற்க. ஸீதா சரிதமாகச் சொல்லுகிறபடியென்னென்னில். ப்3ரஹ்ம ப்ரஸாத3த்தாலே வால்மீகி வாயிலே முதலிலே ராமாயணத்துக்கெல்லாம் ஸங்க்3ரஹமாக வந்த “मानिषाद” என்கிற ஶ்லோகத்திலே. க்ரௌஞ்சியினுடைய க்ரௌஞ்சவியோக3ம் ப்ரதா4ந தாத்பர்ய விஷயமாயிருக்கையாலே. பிராட்டியினுடைய பிரிவொன்றுமே ராமாயணத்துக்கு ப்ரதா4ந ப்ரதிபாத்3யமாக வேண்டுகையாலேயும், “दशशिरसश्च वधम् ” என்று ப்ராதே3ஶிகமான ராவண வத4த்தோடொக்க “रघुवरचरितम् ” என்று மற்றும் ரகு4வரசரிதங்களையும் சொல்லுகிறது என்று சொன்னாப்போலன்றியே. ப்ரப3ந்த3 வக்தாதாமே. “कृत्स्नम् ” என்றும் “महत् ” என்றும் ப்ரதிபாத3கத்துக்கு ஒரு விஶேஷணமும், ப்ரதிபாத்3யத்துக்கொரு விஶேஷணமும் இட்டுவைக்கையாலே, “रघुवरचरितम्” என்கிற ஶ்லோகத்தில், ப்ருத2க்காகச் சொன்ன ராவணவத4ம் ரகு4வரசரிதாந்தர்க3தமானாப்போலே. ரகு4வர சரிதமும் ஸீதாசரிதஶேஷமென்று वक्त्रभिप्रायமாகையாலேயும். ஸீதாசரிதமென்னக் குறையில்லை. ஸஹ்ருத3யராகில் वक्त्रभिप्र-த்தையிறே அர்த்த2மாக நிஶ்சயிப்பது. இவ்வாக்யத்துக்கு ஆசார்ய ஸம்மதி காட்டுகிறார் (ஸ்ரீமத்3ராமாயணமபி) இத்யாதி3நா.. (சரித்ரே)-புருஷகாரவைப4வே. (ப்ராணிதி)
ஜீவதி. “जीवितं व्यङ्ग्यवैभवम् ” என்னக்கடவதிறே.
“स उ श्रेयान् भवति जायमान: ” என்கிறவிடத்தில் உகாரம்-ஏவகாரார்த்த2ம். “அந்தப்பரமபுருஷன் அவதரித்தே ஶ்ரேயஸ்வியாகிறான்” என்றர்த்த2ம். (அறிவில் தலைநின்றவர்கள்)ஆழ்வார்கள். ( “नारायणकथामिमाम्” ) என்கிறவிடத்தில் நாராயணஶப்3த3ம் தூதுபோன க்ருஷ்ணனையே காட்டும்படி யெங்கனேயென்னில். “नरो मनुष्यार्जुनयो:” என்கிறபடியே நரனென்று அர்ஜுநனுக்குப்பேராய், “नरसम्बन्धिनो नारा:” என்று பாண்ட3வர்களை நாரஶப்3த3ம் சொல்லி. “कृष्णाश्रया: कृष्णबला:” என்கிறபடியே. அவர்களுக்கெல்லாம் ஆஶ்ரய பூத4னாயும். நிரங்குஶ ஸ்வாதந்தர்யத்தாலே அவர்களே நிரூபகராம்படி தௌ3த்யாதி3ளாலே அவர்களை ஆஶ்ரயித்து மிருக்கிற கண்ணனை நாராயண ஶப்3த3ம் சொல்லுகிறதென்று கண்டு கொள்வது.
- இவையிரண்டாலும் புருஷகாரவைப4வமும் உபாயவைப4வமும் சொல்லிற்றாய்த்து .
- (சிதகு )- குற்றம். (மறுதலைத்து )-எதிரிட்டு.
(திண்ணியனாய்)- அவிசால்யனாய். (புருஷகாரத்வே நிர்தி3ஷ்டா) என்றது-க4டக க்ருத்யத்திலே அதி4கரித்தவளாகச் சொல்லப்பட்டாளென்றபடி. (நாந்யத2ர லக்ஷணம் ப4வேத்) என்றது- புருஷகாரத்வமொழிய வேறொரு லக்ஷணமில்லை யென்றபடி. ( லக்ஷ்மீ: புருஷகாரேண ) என்கிறவிடத்தில் புருஷகாரஶப்3த3ம் भावे घञन्त-மாய் புருஷகார வ்யாபாரத்தைச் சொல்லுகிறது. (வல்லபா4)-वशीकरणसमर्था (ப்ராப்தி யோகி3நீ) “प्राप्तिं चेतनेश्वरयो: परस्परप्राप्तिं योजयति-घटयतीति प्राप्तियिगिनि” என்றாய் க4டகையென்றபடி. (விஶேஷ: ) असाधारणधर्म:। சகாரத்தாலே भगवदसाधारणधर्म-மான उपायत्व-ம் சொல்லப்படுகிறது. (ஆகிஞ்சந்யைக ஶரணா:) என்றது ஆகிஞ்சந்யத்துக்கெல்லாம் முக்2யவா ஸஸ்தா2ந பூ4தராயென்றபடி. (பா4க்3யாதி4கா: ) என்றது-ஜாயமாநகால கடாக்ஷமாகிற நிரதிஶய பா4க்3யத்தையுடையவர்களென்றபடி. (மத்பதா3ம் போ4ருஹ த்3வந்த்3வம் ப்ரபத்3ய) என்றது- என்னுடைய திருவடிகளையே உபாயோபேயமாக அறிந்தென்றபடி. (ப்ரீதமாநஸா🙂 என்று உபாயத்தினுடைய ராக3ப்ராப்தி சொல்லுகிறது. (லக்ஷ்மீம் புருஷ காரேண ) இத்யாதி3க்கு, “लक्ष्मीं वृतवन्त:, तस्या: पुरुषकारेण, मत्क्षमां प्राप्य, प्राप्यं मामेव प्रापकं लब्ध्वा, अनन्यमानसाः कृतार्थास्सन्तः என்று அந்வயம். மற்றைப்பிராட்டி மார்க்கும் புருஷகாரத்வமும். ஆசார்யனுக்கும் உபாயத்வமும் உண்டாயிருக்க. இதிரண்டும் இவர்களுக்கு நிரூபகமாம்படியென்னென்ன அருளிச்செய்கிறார் (மற்றைப் பிராட்டி மார்க்கும்) என்று தொடங்கி. (நிரூபகமாகத் தட்டில்லை) என்னுமளவாக. இத்தால். மற்றைப் பிராட்டிமார்க்குண்டான புருஷகாரத்வம் लक्ष्मीसम्बन्धोपाधिक-மாகையாலே आचार्योपायत्व-ம். भगवत्सम्बन्धोपाधिक-மாகையாலேயும் निरुपाधिकपुरुषकारत्वोपायत्वங்கள் இவர்களுக்கு நிரூபகமாகத் தட்டில்லை என்று சொல்லப்பட்டது. (நிக3மாந்தேஷு ஶப்3த்3யதே) என்று சொன்ன நிக3மாந்த பா4க3த்தை ஶங்கா2 பூர்வகமாகக் காட்டுகிறார் – ( இப்படி ) என்று தொடங்கி. (கட2வல்ல்யுபநிஷத்ஸித்3த4மான)- कठवल्ल्युपनिषत्खण्डसिद्ध-மான என்றபடி.
- புருஷகாரமாம்போது– க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.
- (புருஷகாரத்தின்படிகள்) -चेतनविषयत्व-மும், ईश्वर-முமாகிற ப்ரகாரங்கள். (புருஷகாரமாமிடத்தில்) புருஷகாரமாமளவில். (பரது3:க்காஸஹிஷ்ணுத்வ)மாவது निरुपाधिकमातृत्व-த்தாலே பிறருடைய து3:க்க2ம் தன்னுடைய து3:க்க2மாய், அது “இனியதுக்கு அவ்வருகில்லை” என்னும்படி, அஸஹ்யமாயிருக்கையே தன்மையாக உடையளாயிருக்கை . “पर: इतर: तन्त्र: प्रधान: यस्य, तस्य भाव: पारतन्त्रयं ” என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (பாரதந்தர்யம்) என்று தொடங்கி, (அநந்யார்ஹத்வம்) என்கிறவிடத்தில். “अन्यस्य अर्ह: अन्यार्ह: अन्यार्ह्ये न भवतीति अनन्यार्ह:” என்று ஸமாஸமாய், அந்யஶப்3த3ம். इतरानन्यार्हत्व-விஷயத்தில் भगवद्भागवतोभयान्यभाव-ம் சொல்லுமாப்போலன்றியே, பிராட்டியினுடைய அநந்யார்ஹத்வ விஷயத்தில் भगवदन्यमात्र-த்தைச் சொல்லுகிறதென்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (அநந்யார்ஹத்வம்) என்று தொடங்கி. (அநுவர்த்தநத்தாலே வஶீகரிக்கவேண்டுகையாலே) என்றது – ஆனைக்கு மருந்திடுமாப்போலே அநுவர்த்தநத்தாலே வஶீகரிக்கவேண்டுகையாலே என்றபடி. (நிறுத்து) – திராசு நிறையாகக் கணக்கிட்டு. (அறுத்து)- “இப்போது அநுபா4வ்யமிவ்வளவு. இப்போது அதுபா4வ்யமிவ்வளவு” என்று விப4ஜித்து. (தீத்துமவனாகையாலே )-அது மறவாமைக்காகச் சுவரிலே சாணிக்குறியிட்டு வைக்குமவனாகையாலே. (அநுக்3ரஹைக ஶீலையாகையாலே) என்கையாலே. ताच्छील्ये इष्णुच् प्रत्ययान्त-மான पसदु:खासहिष्णुशब्द-ம் இவளிடத்திலேயே मुक्यवृत्तமென்று सूचित-ம்.
பிராட்டியினுடைய க்ருபையின் வைலக்ஷண்யத்தை உபபாதி3த்தார் கீழ். पारतन्त्र्यानन्यार्हत्व -ங்களினுடைய வைலக்ஷண்யத்தை உபபாதி3க்கத்தொடங்கி. पारतन्त्र्यानन्यार्हत्व-ங்கள் सर्व-चेतनसाधारण-மாகையாலும். महिषीत्व-மும் भूमिनीलासाधारण-மாயிருக்கையாலேயும். இவளுடைய पारतन्त्र्यानन्यार्हत्व-ங்களுக்கு விஶேஷமென்னென்ன அருளிச்செய்கிறார் மேல் (ஸ்வரூப) இத்யாதி3. (ஸ்வரூபப்ரயுக்தமான மாத்ரமன்றிக்கே)என்றது शरीरतया धार्य-மாய். नियाम्य-மாய், शेष-மாயிருக்கையாகிற सर्वात्मसाधारण-மான ஸ்வரூபத்தாலே ஸித்3த4மானமாத்ரமன்றிக்கே என்றபடி.
“ह्रीश्च” இத்யாதி3ஶ்ருதிக்கு: “(ह्रीश्च ते लक्ष्मीश्च पत्न्यौ) “हीच-भूमिश्च, लक्ष्मीश्च, ते-देवराजस्य तव, पत्न्यौ। सपत्नीकस्सन्निधत्स्व इत्यर्थः। यथोक्तं श्रीरामायणे- ‘रामस्य दक्षिणे पार्श्वे पद्मा श्रीस्समवर्तत। सव्ये तु ह्रीर्विशालाक्षी व्यवसायस्तथाग्त:’ इति” என்று வரத3 வல்லபா4சார்யர் செய்தருளின பா4ஷ்யம். (விஷ்ணுபத்நீத்வ பரயுக்தமாயும்) என்றது – எம்பெருமானுடைய நித்யேச்சை2யாலே வந்த பதிபத்நீ பா4வமாகிற முறையாலும் ஸித்3த4மாயுமென்றபடி. இத்தால். நித்யாதி3களுடைய अनन्यार्हत्वादिव्यावृत्ति சொல்லிற்று. (அஹந்தா) अहंप्रत्ययविषय-மான ஸ்வருபநிரூபக த4ர்மம். இத்தால். பிராட்டியினுடைய ஸ்வரூபத்துக்கு भगवत्स्वरूपनिरूपकत्व-ம் சொல்லிற்று. விக்3ரஹத்துக்கு விக்3ரஹ நிரூபகத்வம் சொல்லுகிறது மேல் (ஸ்ரீவத்ஸ வக்ஷா:) इत्यादिना. (நித்ய ஸ்ரீ:) ஒருகாலும் மார்வைவிட்டுப் பிரியாத ஸ்ரீயையுடையவன். (ஸ்வரூப நிரூபகத்வாதி3) என்கிறவிடத்தில். ‘ஆதி3’ ஶப்3த3த்தாலே विग्रहनिरूपकत्व-ம் சொல்லுகிறது. இத்தால் பூ4மிநீளாதி3 வ்யாவ்ருத்தி சொல்லிற்று. (இப்படியிருக்கையாலே)- ஸ்வரூபத்தாலும் விக்3ரஹத்தாலும் ஶேஷிஸ்வரூப நிரூபகையா யிருக்கையாலே. (அல்லாதார்க்கு) – பூ4ம்யாதி3களுக்கு. (ஸம்ப3ந்த4த்தாலே)- தன்னையொழிய அவனுக்குச் செல்லாத படியான ஸம்ப3ந்த4த்தாலே.
(ஸ்ரீஶப்3த3த்தில் கர்மணி வ்யுத்பத்தியில்) ஸாபராத4 சேதநர்க்கு ஆஶ்ரயணம் க்ருபையில்லா தபோது ஸம்ப4வியாதாகையாலே आक्षेपात् कृपासिद्धि என்று கண்டுகொள்வது. 7.
- பிராட்டி முற்படப் பிரிந்தது, தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக; நடுவிற் பிரிந்தது, பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக; அநந்தரம் பிரிந்தது, அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.
8.மதுப்பிலே நித்யயோக3த்தைச் சொல்லாநிற்க, ஸ்ரீராமாயணத்தில் விஶ்லேஷத்ரயம் உபபந்நமாம்படி யென்னென்னில்; மதுப்பிலே ஸ்வரூபத்தினுடைய நித்யயோக3த்தையும் திருமார்பில் நித்ய யோக3த்தையும் சொல்லுகிறதாகையாலும். ஸ்ரீராமாயணத்தில் அவதாரத்தில் பிரிவு சொல்லுகிறதாகை யாலும் விரோத4மில்லை. ஆனால் பெருமாள் பிராட்டிகளுடைய வியோக3வ்யஸநமெல்லாம் பா4வநாமாத்ரமோவென்னில். அன்று.
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு’ (குறள் 1187)
என்றும்.
“காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவழிப் பரத்தலானே” (குறுந்தொகை 399) என்றும்
சொல்லுகிறபடியே த்3ருடா4லிங்க3நாத்3யர்த்த2மாக வுண்டான ஒரோ அவயவவிஶ்லேஷங்கூடக் காமிகளுக்கு वैवर्ण्यपर्यन्तदु:खहेतु வாமோபாதி. எம்பெருமானுடைய ஸர்வ ரூபங்களும் பிராட்டியினுடைய அநுரூப ரூப விப4வங்களாலே गाढोपगूढ-மாயிருக்கச் செய்தேயும். ஓர் அவதார விக்3ரஹமாத்ரத்தில் ஸ்வேச்சை2யாலே வந்த பிரிவிலுங்கூட விஷஶஸ்த்ரங்கள் தேடிப் படாதனப்படும்படியாயிறே இவர்களுடைய தன்மையிருப்பது.
ப்3ருகு3ஶாபத்தை வ்யாஜமாகச் சொல்லாதொழிந்தது, அது மூன்று பிரிவுக்கும் ஸாதா4ரணமாகையாலே. ( தத்3கு3ண ஸாரத்வத்தாலே )-க்ருபையையே ஸாரகு3ணமாக உடையளாயிருக்கையாலே. ( தே3வஸ்த்ரீகள் ) இத்யாதி3க்கு. “सुन्दरी रघुनाथस्य सुरस्त्रीदु:खशान्तये। दशाननस्य भवने दशमासानुवास ह ।।” என்கிற ஶ்லோகத்தை யோஜித்துக் கொள்வது. (அல்லும் )- இரவும். (தர்ஜந ப4ர்த்ஸநங்கள் )-वाचिककायिकभयोत्पादनव्यापार-ங்கள். (அருவித்தின்ற) என்றது-‘அருவித்தின்னுகிறோம்” என்று வாயாலே சொன்னத்தைப்பற்ற. (பீ4தபீ4தைகளாய்) அத்யந்தபீ4தைகளாய். (நடுங்குகிற)-உதறலிடுகிற. (சித்ரவத4ம்)- உயிரைப் போக்காதபடி பலபடியாலும் நலிகை. (ராஜஸம்ஶ்ரயவஶ்யாநாம்) -रावणाश्रितराक्षसवश्यानाम्. (அவர்கள் குற்றத்தை) என்றது. த்ரிஜடாதி3களைப்போலே இவளுக்கு அந்தரங்கை3களாயிருந்துகொண்டு மேலுக்கு ராஜகார்யம் செய்யலாயிருக்க. அப்படிச் செய்யாமையாலே, அவர்களிடத்தில் பூர்ணமாகக் குற்றமுண்டென்று அறிவிக்கைக்காக. து3ர்ப3லாஶப்3தா3ர்த்த2ம் (பிறரித்யாதி3). (ந கஶ்சிந்நாபராத்4யதி) என்றது. ஊன்றிப்பார்க்கில், நானிங்கிருக்குமிருப்பை விமர்ஶியாதபடி லங்கையடையத் தீயூட்டின நீயும் ப்ரத2மாபராதி4யாவாயாகையாலே, அபராத4ம் பண்ணாதாரில்லை – என்றபடி. (அடியில் பண்ணின ப்ரதிஜ்ஞை) “भवेयं शरणं हि व:” என்கிற ப்ரதிஜ்ஞை.
(திருவயிறு வாய்த்திருக்கிற காலத்திலே)- க3ர்ப்ப4மாயிருக்கிற காலத்திலே. (போகவிடுவாரைப்போலே) என்றது व्याजत्वसूचनार्थम्. (லோகாபவாத3 பரிஹாரார்த்த2மாக) என்கையாலே. ஸர்வேஶ்வரனுக்குங்கூட ஸர்வப்ரகாரத்தாலும் லோகாபவாத3 பரிஹாரம் ஆவஶ்யகமென்று ஸுசிதம்.
(இப்பிரிவுக்கு ப்ரயோஜநம் ) என்றது – பெருமாளுக்குப் ப்ரயோஜநமான லோகாபவாத3 பரிஹாரமுங்கூட வ்யாஜ மென்னலாம்படி பிராட்டி திருவுள்ளக் கருத்தாலுள்ள ப்ரயோஜநம்- என்றபடி. (ந க2லு) இத்யாதி3க்கு அர்த்த2ம்-பிள்ளாய்! பெருமாளைச் சுட்டியிருக்கிற ரகு4ஸந்தாநமானது பெருமாளுடைய திருவம்ஶத்திலேயின்றிக்கே யொழியவொண்ணாதென்று. க3ங்கா3 ஜலத்திலே இப்போதே ப்ராணனை விடுகைக்கு அர்ஹையாகிறிலேன் என்று உனக்கும் தெரியுங்கிடாய்- என்று. இந்த ஶ்லோகத்தில் (ப4ர்த்து🙂 इति पञ्चम्यन्तम् (ராக4வம்) इति प्रथमान्तम् (க2லு) इति प्रसिद्धौ (மாபரிஹாஸ்யதி)–परिहीणं मा भविष्यत्. இவ்விடத்தில். – முதலிலேயே பிராட்டி தே3ஹத்தை விடில், ஸந்தாநம். முதலிலே ஒழியுமாகையாலே ரகு4வம்ஶத்திலின்றிக்கேயொழியும்; ஸந்தாநமுண்டான பின்பு விடில், “இவள் தனக்கேறக் குற்றமுண்டானபடியாலன்றோ க3ங்கை3யிலே விழுந்து முடிந்தாள்” என்று லோகத்துக்கு தோ3ஷம் த்3ருடீ4கரிக்கப்படுகையாலே. ஸந்தாநம் ரகு4வம்ஶத்திலன்றிக்கேயொழியும் – என்று கருத்து என்று கண்டுகொள்வது. (பெருமாள் நினைவை)-. லோகாபவாத3 பரிஹாரம் பண்ணவேணும்” என்கிற பெருமாள் நினைவை. ஆகையிறே லோகாபவாத3 பரிஹாரத்துக்குப் பின்பு உத்பத்தி ஸ்தா2நத்திலே, லயித்தது. இவள் சடக்கென
முடியில் அபவாத3ம் த்3ருட4 மாமிறே. அன்றிக்கே. ”முடிய வொண்ணாது” என்கிற நினைவென்றுமாம். இது பெருமாளுக்குண்டேன்று அறிந்தபடியென்னென்னில் ; ஜாஹ்நவீ ஜலத்திலே விழுந்து, விடவேண்டும்படி ப்ராணன் வலியதாயிருக்கை. அத்தலையில் நினைவுண்டென்று காட்டக்கடவதிறே. அத்தலையில் நினைவாலேயிறே இத்தலை ஜீவிப்பது. (பாடாற்றி)- த4ரித்து. (பிறந்தகத்திலே)- பூ4மியிலே. (அநந்யத்வம்) – அப்ருத2க்ஸித்3த4த்வம். (ஸர்வஸம்மதமாம்படி) –
திருவயோத்4யையில் ரஜகனுக்குங்கூட ஸம்மதமாம்படி (காஷாய வாஸிநீ) – விரக்த்யதிஶயத்தாலே த4ரித்த காஷாயத்தையுடையளாய். (மாத4வீ)-பூ4மி:. (ததா2 விவரம் தா3து மர்ஹதி) என்றது – அப்படி மெய்யானால் இடங்கொடுக்கக்கடவளென்றபடி. (யது3தாந்யத் ) இத்யாதி3க்கர்த்த2ம் ஸீதாவதார ப்ரப்4ருதியான யாதோர் அவதார ஜாதத்தைச்சொல்லுகிறார்கள். அதெல்லாம் புருஷகாரபூ4தையான ஸ்ரீரங்க3 நாச்சியாராக அவதரிக்கைக்குப் பண்ணின ஶ்ரமம்-என்று. (யோக்3யா) அப்4யாஸ:.8.
- ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும்.
- ( நம் தலையிலே ஸ்வாதந்த்ர்யத்தை ) என்றது-பெருமாள் தானுகந்த அடிமையில் ஏவாதே. “நீயுகந்தவிடத்தே பர்ணஶாலையைச் சமை” என்றபோதே. ”நம்மை ஸ்வதந்த்ரனாக்கினார்” என்ற கருத்தாலே இளையபெருமாள் விக்ருதரானார்-என்னுமத்தைப்பற்ற. ( ஸீதாஸமக்ஷம்)
பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு.(வர்ஷஶதம்) யாவதா3த்ம பா4வி. (த்வயி ஸ்தி2தே ஸதி) என்றது- தம்முடைய பாரதந்தர்யத்துக்கு ஹாநிவருமளவில் பெருமாளுடைய ஸத்தையுமழியவேணும் என்ற கருத்தாலே, (ஸ்வயந்து ருசிரே) இத்யாதி3 வாக்யத்தாலே. கீழ்ச்சொன்ன பாரதந்த்ர்யத்தை ஏவிக்கொண்டு ஸப2லமாக்கவேணுமென்று ப்ரார்த்தி2க்கிறது. (ஜயந்தன்)-இந்த்3ரபுத்ரன். (காக ரூபத்தைக் கொண்டு வந்து) என்றது- यथा पिता तथा पुत्र: என்கிறபடியே. அஹல்யா விஷயத்தில் இந்த்3ரன் வந்தாப்போலே. இவனும்
பிராட்டி பக்கல் து3ர்ப்பு3த்3தி4யாலே அன்றாகக் காக ரூபத்தைக்கொண்டு வந்து என்றபடி. இப்படியன்றிக்கே. वायसत्वं जन्मसिद्ध-மென்னில், स दृश्ट्वा जानकीं तत्र कन्दर्पशरपीडितः। विरराद नखै: तीक्ष्णै: पीनोन्नत पयोधरौ।।என்று சொல்லுகிற ப்ரகாரத்திலே. பிராட்டிபக்கல் து3ர்ப்பு3த்3தி4 பண்ணுகைக்கு யோக்3யதையில்லையிறே. “भक्षार्थी बलिभोजन:” என்று மாம்ஸார்த்தி2யாயன்றோ பிராட்டி திறத்தில் அபசாரப்பட்ட தென்னில், “सद्यश्चण्डालतां व्रजेत्” என்கிறபடியே. வஶிஷ்ட2னிடத்தில் அபசாரத்தாலே த்ரிஶங்கு அப்போதே சண்டாளனானாப்போலே. த்ரிஜக3தாம் மாதாவான பிராட்டி விஷயத்தில் து3ர்ப்பு3த்3தி4 பண்ணின போதே வஞ்சநார்த்த2 மாகத்தான் கொண்ட திர்யக் சண்டாள ஜாதியின் வேஷம் அவனுக்கு அப்படியே யதா2ர்த்த2 மாய் விடுகையாலே, மாம் ஸார்த்தி2யாகச் செய்தான் என்னக் குறையில்லை. இப்படியில்லையாகில் “जयन्तत्राणवरद: सुग्रीवेप्सितराज्यद:” என்கிற पाद्मोत्तरैकत्रिंशाध्यायस्थ-रामनामोष्टोत्तरशत-वचन-த்தோடே விரோதி4க்குமிறே. அன்றிக்கே. (ஜயந்தன் காக ரூபத்தைக் கொண்டு வந்து) என்கிற வாக்யத்தை. ”காக ரூபத்கைக் கொண்டிருக்கிற ஜயந்தன் வந்து” என்று ஶிக்ஷித்து पूर्ववासिष्ठानुगुण-மாகயோஜிக்கவுமாம். पूर्ववासिष्ठ-த்தில் – गौतमशाप-த்தால் இந்த்ரனுக்கு வந்த காகத்வத்தை தே3வதைகள் ஜயந்தனிடத்தில் மாற்றி இந்த்3ரனை ராஜ்யார்ஹனாக்கிக் கொண்டதாகவும், அந்த ஜயந்தன் தானே, “अतो राममहास्त्रेण जयन्तो भयविद्रुत:।तेनानुद्रवता भद्रे द्रावितो नैव मारित:।।” என்று ब्रह्मास्त्रविषयीभूत-னானான் என்று சொல்லிற்றிறே. (அக்ருத்ய ப்ரவ்ருத்தனாக) என்று வாயால் சொல்லமாட்டாமையாலே (புரத: பதிதம் தே3வீ) இத்யாதி3 பாத்3மோத்தர வசநங்கள். (விரகு) உபாயம். 9.
- ஸம்ஶ்லேஷ த3ஶையில் ஈஶ்வரனைத் திருத்தும் ; விஶ்லேஷ த3ஶையில் சேதநனைத் திருத்தும்.
- (இவ்வாக்யத்துக்கு)– “விஶ்லேஷத3ஶை” இத்யாதி3 மூலவாக்யத்துக்கு. (இப்படியே அர்த்த2மாகக் கடவது) என்றது. “சேதநனைத் திருத்துகையாவது” என்று தொடங்கி
அருளிச்செய்தபடியே அர்த்த2மாகக் கடவது – என்றபடி. 10.
- இருவரையும் திருத்துவதும் உபதேஶத்தாலே.
11.(குடநீர் வழித்தாலும்)-க4டப்ரஹாரம் பண்ணினாலும். அச்சமுறுத்தி)-ப4யப்படுத்தி. 11. (233ல் தொடரும்)
12 உபதே3ஶத்தாலே இருவருடையவும் கர்மபாரதந்தர்யம் குலையும்
- உபதே3ஶத்தாலே மீளாதபோது சேதநனை அருளாலே திருத்தும். ஈஶ்வரனை அழகாலே திருத்தும்.
- உபதே3ஶத்தால் மீளாத ராவணனைப் பிராட்டி அருளாலே திருத்தாதபடியென்னென்னில்; (1) இவள், அவன் பாப பு3த்3தி4 குலையும்படி அவன் விஷயத்தில் விஶேஷ கடாக்ஷம் பண்ணினாலும். கடாக்ஷம் ஈஶ்வர ஸங்கல்பத்தாலேயே ப2லிக்கவேண்டுகையாலே. இவனுடைய வத4த்திலே ப3த்3த4 கௌதுகனான ஈஶ்வரனிடத்தில் ரக்ஷணஸங்கல்பத்தையுண்டாக்கும்போது, அவனை அந்த விருத்3த4 ஸங்கல்பத்தை மறப்பிக்க வேண்டுகையாலே, அதுதான் இவனுடைய ஸந்நிதி4யில்லாமையாலே, அல்லும் பகலும் இடைவீடின்றியே உறாவிக்கிடக்கிறவனை, தான் கிட்டி போ4கோ3போத்3கா4தகேளியிலே சுழியாறுபடுத்தினாலல்லது செய்யவொண்ணாமையாலேயும்: (2) எம்பெருமானுக்கு ஶௌர்யகு3ணம் உத்3ரிக்தமாய், தமக்குத் தினவடங்கும்படி ப்ரதியுத்3த4ம் தரவல்லாரார்? என்று பார்த்து. வீரர்களில் தலைவரான திருவாசல் காக்கும் முதலிகளை நேராக யுத்3த4ம் தரக்கடவீர்கள் என்று நியமித்தால். பரிவரில் தலைவரான இவர்கள் இசையார்கள் என்று. அகர்மவஶ்யரான நித்யர்க்கு முட்பட அநுப4வித்தேயறவேண்டும்படியான பா4க3வதாபசாரம் என்று தானே ஒரு வ்யாஜத்தை ஸங்கல்பித்து. அவ்வழியாலே யுத்3தோ4பயோகி3யான ஶௌர்யதை4ர்யாதி3களையொழிந்த ஜ்ஞாநாதி3களையெல்லாம் ப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தையிட்டு மறைத்து. அவர்களோடே யுத்3த4ரஸம் அநுப4விக்கவேணும் என்று ஸர்வேஶ்வரன் பண்ணுகிற க்ருஷியை விப2லமாக்கவொண்ணாதென்கிற அபி4ப்ராயத்தாலேயும்; (3) இவர்கள் முன்பே ஶ்வேத த்3வீபத்திலே பா4க3வதாபசாரத்தால் ப்ராக்ருதலோகத்திலே மூன்று ஜந்மம் பிறக்கும்படி வந்ததே. இனி நாங்கள் எப்போதோ மீளவும் வந்து எம்பெருமான் திருவடிகளைச் சேருவது” என்று போர க்லேஶித்தபோது. திருவநந்தாழ்வானும் பெரிய பிராட்டியாரும் திருவாழியாழ்வானும் ஓரொருவர் ஓரோ ஜந்மத்தைக் கடுக நிவர்த்திப்பிப்பதாக வரம் கொடுத்தமை திருவுள்ளத்திலே கிடக்கையாலும், அருளாலே திருத்திற்றில்லையென்று கண்டுகொள்வது. ஆனால். “मित्रमौपयिकं” இத்யாதி3யாலே உபதே3ஶிப்பானென்? என்னில், பிறர் அநர்த்த2ம் கண்டால் கண்ணாஞ்சுழலையிட்டுத் தத்வங்களையடைய விளாக்குலை கொண்ட ஜ்ஞாநமெல்லாம் அடிமண்டியோடே கலங்கி इतिकर्तव्यतामौग्ध्य-ம் வரும்படியான ஶீலத்தையுடையவளாகையாலே. ஒரு நாடடங்க அநர்த்தப்படுகிறபடியைக்கண்டு “अन्यदुपक्रान्तमन्यदापतितम्” என்றாப்போல தன்னை மறந்து உபதே3ஶித்தாளித்தனை. இப்படி மறந்து பண்ணின உபதே3ஶத்தை. சேதநனைத் திருத்துகையில் உதா3ஹரித்துக் காட்டலாமோவென்னில். உபதே3ஶத்துக்கு யோக்3யதையில்லாதவிடத்திலேயும் உபதே3ஶிக்கக் கண்டால். யோக்3யதையுள்ளவிடத்தில் உபதே3ஶமுகத்தாலே திருத்துகை कैमुतिकन्यायसिद्ध-மாமாகையாலே. உதா3ஹரிக்கக் குறையில்லை. அன்றிக்கே. பெருமாள் காகத்தின் விஷயத்திலே க்ரூரபு3த்3தி4யைப்பண்ணி, “இது ஒரு காகமாத்ரமன்றோ” என்று அதின் சிறுமைபாராதே. அறப்பெரிதான ப்3ரஹ்மாஸ்த்ரத்தையிட்டுத் தலையையறுக்கத்தேட. அருகிருந்த பிராட்டி. ‘வலியச்செய்த ஸ்தந்யப்ரஜையை நலியத்தேடுவர்களோ? ஒரு நிர்க்4ருணன் நம்மைச் சுட்டி ஒரு ப்ரஜையை நலியத்தேடுவதே இதென்தான்!’ என்றிரங்கி. அம்பன்ன கண்களிரண்டாலும் குளிரநோக்கி, “शीतो भव” என்றப்போலே ப்3ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு ப்ரத்யஸ்த்ரமும். காகத்துக்கு ஒரு ரக்ஷையுமிட்டு முன் வளைத்துக்கொண்டு வரும்படியாக ப்3ரஹ்மாஸ்த்ரத்தையும் ஏவிவிட. அந்தக் கடாக்ஷமடியாக, “त्रीन् लोकान् संपरिक्रम्य तमेव शरणं गत:” என்கிறபடியே அவனும் ஸர்வலோகங்களிலும் ஒருக்கால் திரிந்தவிடத்திலே பதின்கால் திரிந்து புகலற்று आकिञ्चन्यानन्यगतित्व-ங்களை யுடையனாய்ப் பெருமாள் முன்னேவந்து விழுந்தாப்போலே, ராவணனும்- “स रामबाणाभिहतो भृशार्त: चचाल चापं च मुमोच वीर:” என்கிறபடியே. இதுக்கு முன்பு வீரனாய்த் தன்னை மதித்திருந்தவன். “மற்றமரர் ஆட் செய்வார்” (திருவாய் 8-1-1] என்கிறபடியே. பிராட்டிக்கு நிதே3ஶகாரிகளான தி3வ்யாஸ்த்ர புருஷர்களுடைய घटककृत्य-த்தாலே தன்னிலை குலைந்து தன் கையில் வில்லைப்பொகட்டு विपरीतप्रवृत्तिनिवृत्त-னாய், “गच्छानुजानामि” என்று பெருமாளுடைய அநுஜ்ஞை கொண்டு பெயர்த்து அடியிடவேண்டும்படி பரதந்த்ரனாய் நின்றநிலை பிராட்டியினுடைய கடாக்ஷப2லமாகையாலே ராவணனையும் அருளாலே திருத்தினாள் என்னவுமாம். காகனைப்போலே இவனும். “भगवत्प्रवृत्तिविरोधिस्वप्रवृत्तिनिवृत्ति: प्रपत्ति:” என்கிறபடியே ஶரணாக3தனாகில் ப2லியாதொழிந்ததென்? என்னில் ; “प्राणसंशयमापन्नं दृष्ट्वा सीताऽथ वायसं।त्राहि त्राहीति भर्तारं उवाच दयया विभुम्।।” என்று. காகன் தன்னை மறந்து வந்து விழுந்த த3ஶையிலே. “मिथिलायां प्रदीप्तायां” என்றவன் குடிப்பிறப்பால் வந்த வைலக்ஷண்யாதி3ஶயத்தாலும் முறையாலும் பெருமாளைத் தன்சொல்வழி வரும்படி ஆழங்காற்படுத்தி “உமக்கு ஸ்வாமித்வமும் காருண்யமும் உண்டு என்று பேர்பெறவேணுமென்றிருந்தீராகில். நீர் செய்யும் ஹிதத்தை விலக்காதபடி இவ்வளவு ஆநுகூல்யமுடைய நின்றவா நில்லா நெஞ்சினையுடைய இவனைச் சடக்கென முடிவதற்கு முன்னே ரக்ஷித்தருளப்பாரீர்” என்று பெருமாளை ரக்ஷணோந்முக2ராக்கி. அவனுக்குச் செய்ய வேண்டும் ஹிதத்தைப் பெருமாள் திருவுள்ளத்திலேப்படுத்தி, அவன் தலையை அறுக்கவந்த ப்3ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண்ணழிவே ப2லமாகவும். அவன் தனக்கு ஒரு கண் இரண்டு கண்ணாம்படியாகவும் ஒரு குறையின்றியே ரக்ஷிப்பித்த பிராட்டி, தே3வஸ்த்ரீகள் சிறை விலங்கைத் தன் காலிலே கோத்துக்கொண்டிருக்கையாலே. இவளுடைய வியோக3த்தால் கலங்கின பெருமாள். ராவணன் விபரீத ப்ரவ்ருத்திநிவ்ருத்தனாய் நின்ற நிலைக்கு அப்போதே அவனத் தலையை அறுக்காதே படைவீடேறப் போக விடுகையே ப2லமென்று கருதி. “गच्छानुजानामि” என்று போகவிடுகையாலே ப2லஸித்3தி4யின்றிக்கே ஒழிந்தது என்று கண்டு கொள்வது. ஆகையிறே. ”இவள் ஸந்நிதி4யாலே காகம் தலைபெற்றது. அதில்லாமையாலே ராவணன் முடிந்தான்” (135) என்று முமுக்ஷுப்படியிலே அருளிச்செய்தது.
ஆக, ராமாவதாரத்தில் புருஷகார பட்டாபி4ஷேகத்தையுடைய பிராட்டிக்கு . விஶ்லேஷ த3ஶையில்-ராவணவத4ம்
- தீ3க்ஷிதனான ஈஶ்வரனை அழகாலே திருத்தவொண்ணாமையாலே விபரீத ப்ரவ்ருத்திநிவ்ருத்தனான ராவணனுக்கு ப2லமின்றிக்கேயொழிந்ததென்று நிர்க3ளிதார்த்த2ம் கண்டு கொள்வது. 13.
- அறியாத அர்த்தங்களையடைய அறிவித்து, ஆசார்ய க்ருத்யத்தையும், புருஷகார க்ருத்யத்தையும், உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபா4ரதத்தில் உபாயவைப4வ(மு)ம் சொல்லிற்றாய்த்து.
- (தத்வ விவேகம் தொடங்கி ப்ரபத்தி பர்யந்தமாக) என்கிறவிடத்திலே. ‘தத்வவிவேக நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ ஸௌலப்4ய ஸாம்ய அஹங்காரதோ3ஷ இந்த்3ரிய ப2ல மந:ப்ராதா4ந்ய கரணநியமந ஸுக்ருதிபே4த3 தே3வாஸுரவிபா4க3 விபூ4தியோக3 விஶ்வரூப த3ர்ஶந ஸாங்க3 ப4க்தி ப்ரபத்தி த்3வைவித்4யாதி3களாலே” [189] என்கிற ஆசார்ய ஹ்ருத3ய வாக்யார்த்த2 க்ரமத்தைக் கண்டுகொள்வது. விஶ்வரூப த3ர்ஶநம் உபதே3ஶ ரூபமாயிராமையாலே அத்தாலே எவ்வர்த்த2ம் அறிவிக்கப்பட்டதென்ன அருளிச்செய்கிறார் (தானுகந்தார்க்கு) இத்யாதி3யாலே. புருஷகாரம் மிகையென்னலாம்படியான கு3ணம் எம்பெருமானுக்கு உண்டாயிருக்கையாலேயும். பிராட்டிக்கு இவனுடைய வஶீகரணம் ஸாத்4யமாயிருக்குமாப்போலே இவன் தனக்கும் தன் வஶீகரணம் அஸாத்4யமல்லாமையாலும் புருஷகார க்ருத்யத்தை ஏறிட்டுக்கொள்வான் என்? என்கிற ஶங்கையிலே. கு3ணாதி4க்யம் உண்டாயிருந்ததே யாகிலும் அது காதா4சித்கமாகையாலே அர்ஜுநனுடைய அபராத4மடியாகக் கிளர்ந்த தன்னுடைய கர்மபாரதந்தர்யத்துக்குத் தான் பராதீ4நன் ஆகாமைக்கும். அர்ஜுநன் தன் அபராத4த்தைக் கண்டு அஞ்சாதபடி ஸ்வாஶ்ரயணோந்முக2னாகைக்கும் புருஷகாரக்ருத்யம் அவஶ்யாபேக்ஷிதமாகையாலே. அதுதான் பிராட்டிக்கே அஸாதா4ரணமாயிருப்பதொன்றாகையாலே ஏறிட்டுக்கொள்ள வேணுமென்று ஶங்கா (பரிஹார?) பூர்வகமாக அருளிச்செய்கிறார் (இவனுக்கு) என்று தொடங்கி, (மாமேகம் ஶரணம் வ்ரஜ– ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி என்கையாலே) என்றது – “என்னை ஶரணமாக அடைகையே அதி4காரி க்ருத்யம். நானே அவர்களுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளைத் தலைக்கட்டிக் கொடுக்குமவன்” என்று அஜ்ஞாத ஜ்ஞாபநமான ஆசார்யக்ருத்யமாத்ரத்தைப் பண்ணி விடாதே. “मामेकं शरणं व्रज” என்று தன்னை எளியனாக அமைத்துக்கொடுத்து. அவனைப்பற்றுவித்து. “सर्वपापेभ्यो मोक्षयिष्यामि” என்று फलप्रदानसंकल्प-த்தையும் பண்ணுகையாலே-என்றபடி. ஆனால் அர்ஜுனுக்கு தே3ஹாவஸாநத்தில் மோக்ஷம் வாராதொழிந்ததென்னென்னில்; கேட்ட அர்த்த2த்தில் நிலை நில்லாதே பின்பு மறக்கையாலேயும். இப்படி மறக்கைக்கும் அடி- த்ரௌபதீ3 பரிப4வம் கண்டிருந்த பா4க3வதாபசாரம் உண்டாகையாலேயும், ஶரீராவஸாநத்தில் ப4க3வத்ப்ராப்தி யின்றிக்கேயொழிந்ததென்று கண்டுகொள்வது. (க்ருத்ய த்ரயத்திலும்) என்றது-ஆசார்யாதி3 க்ருத்யத்ரயத்திலும் என்றபடி. (யதா2யோக3ம்) என்றது-ஆசார்ய க்ருத்யத்தில் (தானே) என்கிற பத3த்தில் ஏவகாரார்த்த2மான -पेक्षानैरपेक्ष्यं बाधित-மாகையாலே, அதிலே ஏறிட்டுக் கொண்டமை மாத்ரமும், உபாய க்ருத்யத்தில் ஏறிட்டுக் கொள்ளுகை பா3தி4தமாகையாலே. (தானே) என்கிற ஏவகாரார்த்த2மான अन्यनैरपेक्ष्यमात्र-மும், புருஷகார க்ருத்யத்தில் இரண்டுக்கும் பா3த4மில்லாமையாலே अन्यापेक्षानैरपेक्ष्य-மும் ஏறிட்டுக்கொண்டமையுமாகிற இரண்டுமாக யதா2யோக3ம் என்றபடி. 14.
- புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைப4வமாவது–தோ3ஷத்தையும் கு3ணஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே, அங்கீ3காரத்துக்கு அவைதன்னையே பச்சையாக்குகை.
- (தந்த்ரேண) என்றது- சேர்த்து என்றபடி. (ஆர்த்த2மாக) என்றது- தன்னுடையதான உபாய க்ருத்யத்தை அபேக்ஷாநிரபேக்ஷமாகச் செய்கையை வைப4வமாகச் சொல்லுகிற “உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே” (வா 14) என்கிற வாக்யத்தில் உபாயஸ்வரூபம் ஸித்3தி4யாதபோது அந்த வைப4வம் ஸித்3தி4யாதாகையாலே. ஆர்த்த2மாக – என்றபடி. (வாத்ஸல்ய)மாவது – “वत्सस्येदं वात्सं ”-கன்றின்மேல் உண்டான உல்பா3தி3யான அழுக்குக்கள். “वात्सं-लाति-भोग्यतया स्वीकरोति इति वत्सला; तस्या: कर्म” वात्सल्यम् -என்றாய். கன்றின் பக்கல் தே4நு இருக்கும் இருப்பு என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (சுவடு) இத்யாதி3யால். (சுவடு) – கத்தம். (கடை) – வால்புறம். (வழும்பு)- உல்பா3தி3
- இரண்டும், இரண்டுங்குலையவேணும் என்றிருக்கில் இரண்டுக்கும் இரண்டும் உண்டாய்த்ததாம். 16.
- ஶேஷித3ம்பதிகளுக்குங்கூட அக்ருத்யகரணக்ருத்யாகரணங்கள் உண்டென்றால் கர்மவஶ்யத்வம் வாராதோ என்கிற ஶங்கையிலே அருளிச்செய்கிறார் (இதுதான்) என்று தொடங்கி வாக்யத்3வயத்தாலே.
- இரண்டும் குலைந்தது என்றிருக்கில் இத்தலைக்கு இரண்டும் உண்டாய்த்ததாம்.
17-வது வாக்யத்துக்கு எம்பார் ஜீயர் ஸ்வாமியுரை இல்லை.
- ராக்ஷஸிகள் தோ3ஷம் ப்ரஸித்3த4ம்.
- (எழுநூறு ராக்ஷஸிகளும்) என்றது – திருவடி ஶிம்ஶுபா வ்ருக்ஷத்தின் மேலிருக்கும் போது, ராவணனுடைய ஶாஸநத்தாலே நலிந்த ராக்ஷஸிகளிலே. ஏகஜடையென்றும். ஹரிஜடையென்றும். விகடையென்றும். துர்முகி2யென்றும், விந்தை3 (விநதை) யென்றும். லம்ப3மாநபயோத4ரை யான விகடை யென்றும். சண்டோ3த3ரியென்றும், ப்ரக4ஸையென்றும், அஜாமுகி2யென்றும் ஶூர்ப்பநகை2யென்றும் பத்துராக்ஷஸிகள் நலிந்தபடிகளைச் சொல்லுகிற விடத்தில். “अजामुख्या यदुक्तं वै तदेव मम रोचते।सुरा चानीयतां ”
(क्षिप्रं सर्वशोकविनाशिनी ॥ मानुषं मांसमास्वाद्य नृत्यामोऽथ निकुम्भिलाम्” என்று ஶூர்ப்பநகை2 என்பாளொருத்தி- தன்னுடைய ப்ராதா4ந்யம் தோற்ற “இவ்வொன்பது பேர்களிலும் வைத்துக்கொண்டு அஜாமுகி2 என்னுமவள் சொல்லுகிறதே எனக்கபி4மதமாயிருக்கையாலே கடுக அப்படிச் செய்யப்பாருங்கோள். பின்பு அந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாகக் காளிக்கூத்தாடுவுதோம்” என்று சொல்லுகையாலே. பத்து பேருக்கொருத்தி ப்ரதா4நையாயிருக்கையாலேயும் “स्त्रीसहस्राणि ते सप्त वशे स्थास्यन्ति सुन्दरि” என்று விகடாவாக்யத்தின்படியே ராவணாந்த: புரத்துக்கு அந்தரங்க3வ்ருத்தி செய்து போரும் ராக்ஷஸ ஸ்த்ரீகள் ஏழாயிரம் பேர் உண்டாகையாலேயும். பத்து பேருக்கொருத்தியாக ஏழாயிரம் பேருக்கும் எழுநூறு பேர் ப்ரதா4நைகள் உண்டு என்னுமபி4ப்ராயத்தாலே.
- ஜிதேந்த்3ரியரில் தலைவனாய், ஆஸ்திகாக்3ரேஸரனாய், “கோஶவஸ்யாத்மா” என்று க்ருஷ்ணனுக்கு தா4ரகனாயிருக்கிற அர்ஜுநனுக்கு தோ3ஷம் ஏதென்னில்; ப3ந்து4க்கள் பக்கல் ஸ்நேஹமும், காருண்யமும், வத4பீ4தியும்.
- பஶ்வாலம்ப4நத்தில்-யாக3 மத்4யஸ்த்த2மான -பஶுஹிம்ஸையில். 19.
- த்3ரௌபதீ3 பரிப4வம் கண்டிருந்தது க்ருஷ்ணாபி4ப்ராயத்தாலே ப்ரதா4ந தோ3ஷம்.
- ( न क्षमामि என்னும்படியான தோ3ஷம்) என்றது भागवतावमानात्मकदोषம் – என்றபடி. 20.
21 பாண்ட3வர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது – த்ரௌபதி3 யுடைய மங்கள ஸூத்ரத்துக்காக.
- (‘ச‘ என்னும் ஶப்3த3த்தாலே )- “பாண்ட3வர்களையும்” என்கிற உம்மையாலே. நிரஸநீயரான பாண்ட3வர்களை அப்படிச் செய்யாதே, ரக்ஷித்தமையைச் சொல்லுகிற இத்தாலும் உபாயவைப4வ விஶேஷம் ஸித்3தி4த்ததென்றருளிச் செய்கிறார் (இத்தால்) இத்யாதி3யாலே. 21.
- அர்ஜுநனுக்கு தூ3த்ய ஸாரத்2யங்கள் பண்ணிற்றும், ப்ரபத்த்யுபதேஶம் பண்ணிற்றும் இவளுக்காக
- (இழிதொழில் ) दौत्यसारथ्य-ங்கள். (பே4த3ம் செய்து) பே4த3ம் பண்ணி; ஸந்தி4க்குக் கூடுவாரையும் கலைத்து என்றபடி. இதுக்கிறே அல்லாதார் எல்லாருமிருக்க தௌ3த்யத்துக்கு இவன் முற்பட்டது. (கொல்லா) வத4பரிகர மன்றிக்கேயிருக்கிற. (மாக்கோல்)- முட்கோலை. (கொலைசெய்து) வதோ4பகரணமாக்கிக்கொண்டு.22.
எம்பார் ஜீயர் ஸ்வாமியின் அரும்பதவுரையில் ப்ரத2ம ப்ரகரணம் ஸமாப்தம்