ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமல்லோககு3ரவே நம:
ஸ்ரீமத்வரவரமுநயே நம :
ஸ்ரீவசநபூ4ஷணத்திற்குப் பெரிய ஜீயர் திருவாய்மலர்ந்தருளின
வ்யாக்2யாநம்
அவதாரிகை
ஸகலவேத3ஸங்க்3ரஹமான திருமந்த்ரத்தில், பத3த்ரயத்தாலும் ப்ரதிபாதி3க்கப்படுகிற ஆகாரத்ரயமும், ஸர்வாத்ம ஸாதா4ரணமாகையாலே, “यत्रर्षय: प्रथमजा ये पुराणा: (யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:) (யஜு அச்சி2த்3ரம் 62-1) என்கிற நித்யஸூரிகளோபாதி ஶுத்3த4 ஸத்வமான பரமபதத்திலே நித்யாஸங்குசித ஜ்ஞாநராய்க்கொண்டு நிரந்தர ப4க3வத3நுப4வஜநித நிரதிஶயாநந்த3 த்ருப்தராயிருக்கைக்கு யோக்3யதை யுண்டாயிருக்கச்செய்தேயும், ”अनादिमायया सुप्त: (அநாதி3 மாயயா ஸுப்த: ) என்கிறபடியே திலதைலவத் தா3ருவஹ்நிவத் து3ர்விவேச த்ரிகு3ண து3ரத்யயாநாதி3 ப4க3வந்மாயாதிரோஹித ஸ்வப்ரகாஶராய், அநாத்3யவித்3யாஸஞ்சிதாநந்த புண்யா புண்ய கர்மாநுகு3ணமாக ஸுர நர திர்யக் ஸ்தா2ரவரயோநிகள்தோறும் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து தே3ஹாத்மாபி4மாநமும், ஸ்வாதந்த்ர்யமும், அந்ய ஶேஷத்வமுமாகிற படுகுழியிலே விழுந்து, தத்தத3நுகு3ணஸாத்4ய ஸாத4நங்களிலே மண்டி யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக்கொண்டு ப்ராப்தஶேஷியாய், பரமப்ராப்யப்ராபகபூ4தனானவன் பக்கல் அத்யந்த விமுக2ராய், கர்ப்ப4ஜந்மபா3ல்ய யௌவநவார்த்3த4க மரண நரகங்களாகிற அவஸ்தா2 ஸப்தகத்திலே நிரந்தர விதத விவித4 நிரவதி4கது3:க்2கங்களை அநுப4வித்துத்திரிகிற இஸ்ஸம்ஸாரிசேதநரிலே, ஆரேனும் சிலர்க்கு ஜாயமாநகால ப4க3வத்கடாக்ஷ விஶேஷத்தாலே ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலைமடிந்து, ஸத்வம் தலையெடுத்து, மோக்ஷருசியுண்டானாலும், தத்வஹித புருஷார்த்த2ங்களை உள்ளபடியறிந்தே உஜ்ஜீவிக்கவேண்டுகையாலே, அவை தன்னை ஶாஸ்த்ரமுக2த்தாலே அறியப் பார்க்குமளவில், ஶாஸ்த்ரங்களில் தலையான வேத3மானது “अनन्ता वै वेदा:” (அநந்தா வை வேதா3🙂 என்கிறபடியே அநந்தமாய், ஸ்வார்த்த2 நிர்ணயத்தில் ஸர்வஶாகா2 ப்ரத்யய ந்யாயாதி3 ஸாபேக்ஷமாயிருக்கையாலே, அல்பமதிகளுக்கு அவகா3ஹித்து அர்த்த2 நிஶ்சயம் பண்ணவரிதாகையாலும், அந்த வேத3பாரக3ராய், ஸ்வயோக3மஹிம ஸாக்ஷாத்க்ருத பராவரதத்வ விபா4க3ரான (வ்யாஸாதி3) பரமர்ஷிகளாலே ப்ரணீதங்களாய், வேதோ3பப்3ரும்ஹணங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களிலும் ஸாராஸாரவிவேக சதுரர்க்கொழியத் தாத்பர்யாம்ஶம் தெரியாமையாலும், அவைபோலன்றிக்கே ஸம்ஸாரிசேதநோஜ்ஜீவந காமனான ஸர்வேஶ்வரன் தானே ஆசார்யனாய் வெளிப்படுத்தின ஸகலவேத3 ஸாரமான ரஹஸ்யத்ரயமும் அதிஸங்க்3ரஹதயா அதிகூ3டா4ர்த்த2ங்களாகையாலும், ப4க3வதா3கஸ்மிக கடாக்ஷ விஶேஷத்தாலே மயர்வற மதிநலமருளப்பெற்று ஸகல வேத3ஶாஸ்த்ர தாத்பர்யங்களையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்த பராங்குஶ பரகாலாதிகளான ஆழ்வார்கள் அருளிச்செய்த த்3ராவிடவேத3 தத3ங்கோ3பாங்க3ங்களான தி3வ்ய ப்ரப3ந்த4ங்களும் வேத3ஶாஸ்த்ரதாத்பர்யங்களையும், கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்த பராங்குஶ பரகாலாதி3களான ஆழ்வார்கள் அருளிச்செய்த த்3ராவிட3வேத3
தத4ங்கோ3பாங்க3களான தி3வ்ய ப்ரப3ந்த4ங்களும் அளவிலிகளால் அர்த்த2த3ர்ஶனம் பண்ணப்போகாமையாலும், ருசிபித்த சேதநர் இழந்துபோம்படி யிருக்கையாலே, ஆழ்வாருடைய நிர்ஹேதுக கடாக்ஷ லப்3த4 தி3வ்ய ஜ்ஞாநரான நாத2முநிகள் தொடக்கமாக, ஸத்ஸம்ப்ரதா3ய ஸித்3த4ராய் ஸகல ஶாஸ்த்ர நிபுணராய் பரமத3யாளுக்களான பூர்வாசார்யர்கள் அந்த வேதா3தி3களில் அர்த்2தங்களை ஸங்க்3ரஹித்து, மந்த4மதிகளுக்கும் ஸுக்3ரஹமாம்படி ப்ரப3ந்தீ4கரித்தும்; உபதே3சித்தும் போந்தார்கள். அப்படியே ஸம்ஸாரி சேதநர் இழவு ஸஹிக்கமாட்டாத பரம க்ருபையாலே தது3ஜ்ஜீவநார்த்2தமாகத் தாமும் பல ப்ரப3ந்த4ங்களருளிச்செய்த பிள்ளைலோகாசார்யர் ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான அர்த்தங்களில் அவர்கள் தாங்கள் கெள3ரவாதிஶயத்தாலே ரஹஸ்யமாக உபதே3சித்துப் போந்தவையாய், அருமை பெருமைகளைப்பற்ற இதுக்கு முன்பு தாமும் ப்ரகாஶிப்பியாமல் அடக்கிக்கொண்டு போந்தவையுமான அர்த்த2 விஶேஷங்களெல்லாவற்றையும், பின்புள்ளாரும் இழக்கவொண்ணாதென்கிற தம்முடைய க்ருபாதிஶயத்துக்குமேலே பெருமாளும் ஸ்வப்நத்திலே திருவுள்ளமாயருளுகையாலே, ஸ்ரீவசநபூ4ஷணமாகிற இப்ரப3ந்த4முகே2ந வெளியிட்டருளுகிறார்.
முன்பே பேரருளாளப்பெருமாள், தம்முடைய நிர்ஹேதுகக்ருபையாலே மணற்பாக்கத்திலேயிருப்பாரொரு நம்பியாரை வீஶேஷகடாக்ஷம் பண்ணியருளி, தஞ்சமாயிருப்பன சில அர்த்த2 விஶேஷங்களைத் தாமே அவர்க்கு ஸ்வப்நமுகே2ந அருளிச்செய்து, ” நீர்போய் இரண்டாற்றுக்கும் நடுவே வர்த்தியும் : இன்னமுமக்கு இவ்வர்த்த2ங்களெல்லாம் விஶத3மாக நாமங்கே சொல்லுகிறோம்” என்று திருவுள்ளமா யருளுகையாலே, அவரிங்கே வந்து பெரியபெருமாளை ஸேவித்துக்கொண்டு தமக்கு முன்பு அங்கருளிச் செய்த அர்த்த2ங்களையும் அசலறியாதபடி அநுஸந்தி4த்துக்கொண்டு, ஏகாந்தமானதொரு கோயிலிலே வர்த்தியாநிற்கச் செய்தே, தம்முடைய ஸ்ரீபாத3த்துக்கந்த3ரங்கரான முதலிகளும் தாமுமாக, பிள்ளை ஒரு நாள் அந்தக் கோயிலிலே யாத்3ருச்சி2கமாக எழுந்தருளி, அவ்விடம் ஏகாந்த மாயிருக்கையாலே ரஹஸ்யார்த்த2ங்களை அவர்களுக்கு அருளிச்செய்துகொண்டு எழுந்தருளியிரா நிற்க, அவை, தமக்குப் பேரருளாளப் பெருமாள் அருளிச்செய்த அர்த்த2 விஶேஷங்களா யிருக்கையாலே, அவர் போரவித்3த4ராய், உள்ளினின்றும் புறப்பட்டு வந்து, பிள்ளை ஸ்ரீபாதத்திலே விழுந்து. அவரோ நீர்” என்ன, “ஆவதென்?” என்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப்பெருமாள் தமக்கிவ்வர்த்த2ங்களை ப்ரஸாதி3த்தருளினபடியையும், இத்தேஶத்திலே போரவிட்டருளினபடியையும், “இன்னம் உமக்கங்கே விஶத3மாகச் சொல்லுகிறோம்” என்றருளிச் செய்தபடியையும் விண்ணப்பம் செய்யக்கேட்டு மிகவும் ஹ்ருஷ்டராய், அவரையுமபிமானித்தருள, அவருமங்குத்தைக்கு அந்தரங்க3ராய் வர்த்திக்கிற நாளிலே, பெருமாள் அவர்க்கு ஸ்வப்நத்திலே “இவ்வர்த்த2ங்கள் மறந்து போகாதபடி இவற்றையொரு ப்ரப3ந்த4மாக்கச் சொன்னோமென்று நீர் பிள்ளைக்குச் சொல்லும்” என்று திருவுள்ளமாக, அவர் “இப்படிப் பெருமாள் திருவுள்ளமாயருளினார்” என்றுவிண்ணப்பம் செய்ய, “ஆனால் அப்படிச் செய்வோம்” என்று திருவுள்ளம்பற்றி, அநந்தரமிப்ரப3ந்த4மிட்டருளினாரென்று ப்ரஸித்3த4மிறே.
ரத்ந ப்ரசுரமான பூ4ஷணத்துக்கு ரத்நபூ4ஷணமென்று பேராமாப்போலே, பூர்வாசார்யர்களுடைய வசநப்ரசுரமாய், அநுஸந்தா4தாக்களுக்கு ஔஜ்ஜ்வல்யகரமாயிருக்கையாலே, இதுக்கு வசநபூ4ஷண மென்று திருநாமமாய்த்து.
ப்ரகரண விபா4க3ம்
ஜீயர் வ்யாக்2யாந அவதாரிகை தொடர்ச்சி
- ஆறு ப்ரகரணமாய், ஆறர்த்த ப்ரதிபாத3கமான க்ரமம்
இப்ரப3ந்த4த்தில், (வேதா3ர்த்தமறுதியிடுவது) (1) என்று தொடங்கி (அத்தாலே அது முற்பட்டது) (4) என்னுமளவாக வக்ஷ்யமாணார்த்த2 நிர்ணாயக ப்ரமாண நிர்தே3ஶம் பண்ணுகிறதாகையாலே ப்ரப3ந்தோ4போத்,கா4தம். 1.2.(இதிஹாஶ்ரேஷ்ட2ம்) (5) என்று தொடங்கி (ப்ரபத்த்யுபதே3ஶம் பண்ணிற்றும் இவளுக்காக)(22) என்னுமளவும் *ஸாபராத4 சேதநருடைய ஸர்வாபராத4ங்களையும் ஸர்வேஶ்வரனை ஸஹிப்பித்து ரக்ஷிப்பிக்கையே ஸ்வரூபமான புருஷகாரவைப4வமும்,* அந்தப் புருஷகாரமும் மிகையென்னலாம்படியான உபாயவைப4வமும் சொல்லுகிறது [5-22] 2(ப்ரபத்திக்கு) (23)என்றுதொடங்கி(ஏகாந்தீவ்யபதே3ஷ்டவ்ய:) (97) என்னுமளவும், இவ்வுபாய வரணரூபப்ரபத்தியினுடைய தே3ஶகாலாதி3 நியமாபா4வம், விஷயநியமம் ஆஶ்ரயவிஶேஷம், இத்தை ஸாத4நமாக்கில் வரும் அவத்3யம், இதின் ஸ்வரூபாங்க3ங்கள் முதலானவற்றைச் சேரச்சொல்லி ப்ரபத்தவ்யனே உபாயமென்று ஸாதி4க்கையாலே, பூர்வோக்தோபாயஶேஷமாகையால் உபாய ப்ரகரணம்(23-79). இதில் (ப்ராப்திக்கு உகப்பானுமவனே)(70) என்னுமளவும் ப்ரதா4நப்ரமேயம் (23-70]. மேல் ப்ராஸங்கி,கம் [71-79). 3. (உபாயத்துக்கு) (80) என்று தொடங்கி, (உபேய விரோதி4களுமாயிருக்கும்) (307) என்னுமளவும், இவ்வுபாயத்தைக்கொண்டு உபேயத்தைப் பெறுவானொரு சேதநனுக்கு உபாயோபேயாதி4கார ப்ரதா4நாபேக்ஷிதங்களையும், உபாயாந்தர த்யாக3 ஹேதுக்களையும், மற்றும் த்யாஜ்யோபாதே3யங்களாயுள்ளவற்றையும் விஸ்தரேண சொல்லுகையாலே அதி4காரி நிஷ்டா2க்ரமம் சொல்லுகிறது [80-307). 4. (தான் ஹிதோபதே3ஶம் பண்ணும்போது) (308) என்றுதொடங்கி, (உகப்பும் உபகாரஸ்ம்ருதியும் நடக்க வேணும்)(365) என்னுமளவாக, ஹிதோபதேஶ ஸமயத்தில் ஸ்வாசார்ய பாரதந்த்ர்யாதி3களான ஸதாசார்ய லக்ஷணம்.ஸச்சி2ஷ்யலக்ஷணம், தது3ப4யர் பரிமாற்றம், தீமனங்கெடுத்த ஸ்வாசார்ய விஷயத்தில் ஶிஷ்யனுப காரஸ்ம்ருதி க்ரமம், இவற்றைச் சொல்லுகையாலே, ஸித்3தோ4பாயநிஷ்ட2னான அதி4காரியினுடைய ஸ்வாசார்யாநுவர்த்தநக்ரமம் சொல்லுகிறது [308-365]. 5.(ஸ்வதோ3ஷாநுஸந்தா4நம் ப4யஹேது)(366)என்று தொடங்கி (நிவர்த்தக ஜ்ஞாநம் அப4யஹேது) (406) என்னுமளவாக, இவ்வதி4காரிக்கு அத்3வேஷம் தொடங்கி, ப்ராப்திப2லமான கைங்கர்யபர்யந்தமாகவுண்டான பேறுகளுக்கெல்லாம் ஹேதுவாய், ஸ்வகர்மப4ய நிவர்த்தகமான ப4க3வந்நிர்ஹேதுக க்ருபா ப்ரபா4வம்சொல்லுகிறது[366-406). 6.(ஸ்வதந்த்ரனை உபாயமாகத் தான் பற்றின போதிறே) (407) என்று தொடங்கி, மேலெல்லாம் மிக்கவேதியர் வேதத்தினுட் பொருளான சரமபர்வநிஷ்டை2யை வெள்ளிதாகச் சொல்லுகிறது(407-463).(வேதா3ர்த்த2 மறுதியிடுவது) என்று தொடங்கி, இவ்வர்த்தத்திலே தலைக்கட்டுகையாலே, இப்ரப3ந்த4த்தில் சரமப்ரகரண ப்ரதி பாத்3யமான அர்த்த2ம் வேத3 தாத்பர்யமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம்.
ஸ்ரீகீ3தைக்குச் சரமஶ்லோகம் போலேயிறே, இப்பிரப3ந்த4த்துக்குச் சரமப்ரகரணம், அங்கு ஸாத்4யோபாயங்களை உபதே3ஶித்துக்கொண்டு போந்து, ஸ்வஸ்வாதந்த்ர்ய பீ4தனானவனுக்கு, அவற்றைத்தள்ளி, ஸித்3தோ4பாயம் காட்டப்பட்டது. இங்கு, ஸித்3தோ4பாயத்தைச் சொல்லிக்கொண்டு போந்து, ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்துக்கு அஞ்சினவனுக்கு. ப்ரத2மபர்வத்தைத்தள்ளி, சரமபர்வம் காட்டப்பட்டது.
ஆக, இப்படி ஆறு ப்ரகரணமாய், ஆறர்த்த2 ப்ரதிபாத3கமாயிருக்கும்.
- ஒன்பது ப்ரகரணமாய், ஒன்பதர்த்த2 ப்ரதிபாத3கமான க்ரமம்
ஒன்பது ப்ரகரணமாய், ஒன்பது அர்த்த2 ப்ரதிபாத3கமாயிருக்கும் என்னவுமாம். 1.2. அந்தப்பக்ஷத்திலும், ப்ரத2ம ப்ரகரணம் (வா. 5-22) பூர்வவத். 2. மேல் (ப்ரபத்திக்கு) (வா. 23) என்று தொடங்கி, (ப4க3வத்3 விஷய ப்ரவ்ருத்தி சேரும்) (வா.114) என்னுமளவும், பூர்வப்ரகரணோக்தோபாயஶேஷமாகையால், உபாய ப்ரகரணம். 3. (ப்ராபகாந்தர பரித்யாக3த்துக்கும்) (வா. 115) என்று தொடங்கி, (ஆகை யாலே ஸுக2ரூபமாயிருக்கும்) (வா. 141) என்னுமளவும் உபாயாந்தரதோ3ஷ ப்ரகரணம், இப்ரகரணத்தில் ப்ரபத்த்யுபாய வைலக்ஷண்யகத2நம் ப்ராஸங்கி3கம். 4. (இவனவனைப்பெற நினைக்கும்போது) (வா.142) என்று தொடங்கி, (இடைச்சியாய்ப்பெற்று வீடுதல் செய்யும்படியாயிருக்கும்) (வா. 242) என்னுமளவும் ஸித்3தோ4பாயநிஷ்டருடைய வைப4வப்ரகரணம், 5. (இப்படி ஸர்வப்ரகாரத்தாலும்) (வா.243) என்று தொடங்கி, (உபேயவிரோதி4களுமா யிருக்கும்)(வா.307) என்னுமளவும் ப்ரபந்த தி3நசர்யா ப்ரகரணம், 6. (தான் ஹிதோபதே3ஶம் பண்ணும் போது) (வா.308) என்று தொடங்கி (சேதநனுடைய ருசியாலே வருகையாலே) (வா.320) என்னுமளவும் ஸதா3சார்ய லக்ஷணப்ரகரணம். 7. (ஶிஷ்யனென்பது) (வா.321) என்று தொடங்கி, (உபகார ஸ்ம்ருதியும் நடக்கவேணும்) (வா.365) என்னுமளவும் ஸச்சி2ஷ்யலக்ஷண ப்ரகரணம். 8. (ஸ்வதோ3ஷாநுஸந்தா4நம்) (வா.366) என்று தொடங்கி (நிவர்த்தகஜ்ஞாநமப4யஹேது) (வா.406) என்னுமளவும், ப4க3வந்நிர்ஹேதுக விஷயீகார ப்ரகரணம். 9. (ஸ்வதந்த்ரனை) (வா.407) என்று தொடங்கி, மேலடங்கச்சரமப்ராப்யப்ராபகப்ரகரணம்(407-463]. இவ்விரண்டு க்ரமத்தையும்பற்றவிறே,”பேறுதருவிக்குமவள்தன் பெருமை” “திருமாமகள்தன்” என்கிற தனியன்களிரண்டும் அவதரித்தது; ஆகையாலே இரண்டு ப்ரகாரமுமநுஸந்தி4க்கக் குறையில்லை.
ஸ்ரீவசநபூ4ஷணத்தின் ரஹஸ்யத்ரய விவரணத்வம்
ஜீயர் வ்யாக்2யாந அவதாரிகை (தொடர்ச்சி)
இப்ரப3ந்த4ந்தான் தீர்க்க3 ஶரணாக3தியான திருவாய்மொழிபோலே த்3வயவிவரணமாயிருக்கும். எங்ஙனேயென்னில், திருவாய்மொழியில் முதல் மூன்று பத்தாலே உத்தர க2ண்டா3ர்த்தத்தையும், மேல் மூன்று பத்தாலே பூர்வக2ண்டா3ர்த்தத்தையும் சொல்லி, மேல் நாலு பத்தாலே அவ்வுபாயோப யோகி3யான கு3ணங்களையும், ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசையற்றபடியையும், அவனோடு தமக்குண்டான நிருபாதி4க(ஸம்)ப3ந்த4த்தையும், தாம் ப்ரார்த்தி2த்தபடியே பெற்றபடியையும் ப்ரதிபாதி3க்கையாலே, தத3நுரூபார்த்த2ங்களைச் சொல்லித் தலைக்கட்டினாப் போலே, இதிலும், ப்ரத2மத்திலே புருஷகாரத்தையும், அநந்தரம் உபாயத்தையும், அநந்தரம் ஏதது3பாயாதி4காரி நிஷ்டையையும் சொல்லுகையாலே பூர்வ க2ண்டா3ர்த்த2த்தையும், அவ்வதி4 காரி நிஷ்டை2 சொல்லுகிறவளவில் உபேயாதி4காராபேக்ஷிதங்களைச் சொல்லுகிற இதுக்குள்ளே உத்தரக2ண்டா3ர்த்தத்தையும் சொல்லி, மேல் ப்ரப3ந்த4 ஶேஷத்தாலும், தது3பதே3ஷ்டாவான ஆசார்யனளவில் இவனுக்குண்டாக வேண்டும் ப்ரதிபத்த்ய நுவர்த்தந ப்ரகாரங்களையும், இவனுக்கு மஹாவிஶ்வாஸஹேதுவான ப4க3வந்நிர்ஹேதுகக்ருபா ப்ரபா4வத்தையும், வாக்யத்3வயோக்தோபாயோபேய சரமாவதி4யையும் சொல்லித் தலைக் கட்டுகையாலே.)
ஒன்பதர்த்த2 ப்ரதிபாத3கமான பக்ஷத்திலும், பூர்வவாக்யத்தில் க்ரியாபதோ3க்தமான ஸ்வீகாரம் உபாயாந்தர பரித்யாக3 பூர்வகமாயல்லதிராமையாலும், தி3நசர்யையும் அப்பதத்தில் சொல்லப்படுகிற அதி4காரிக்கே உள்ளதாகையாலும், ஸதா3சார்யலக்ஷணம் த்3வயோபதே3ஷ்டாவான ஆசார்யன்படி சொல்லுகிறதாகையாலும் த்3வய விவரணமாக நிர்வஹிக்கக் குறையில்லை.
இப்படி த்3வய விவரணமானவிதிலே, த்3வயந்தன்னிற்போலே, மற்றை ரஹஸ்யத்3வயார்த்த3ங்களும் ஸங்க்3ரஹேணோக்தங்களாயிருக்கும்; எங்ஙனே யென்னில்:
“அஹமர்த்த2த்துக்கு” (வா.73) என்று தொடங்கி “அடியான் என்றிறே” (வா.77)என்னுமளவாகவும், ஸ்வரூபப்ரயுக்தமான தா4ஸ்யமிறே ப்ரதா4நம்: (வா. 111) என்றும், ப்ரணவார்த்த2ம் சொல்லப்பட்டது. ஸ்வயத்ந நிவ்ருத்தி (வா.71) இத்யாதி3யாலும், “தன்னைத் தானே முடிக்கையாவது? (வா.180) என்று தொடங்கி, “இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் (வா.243) என்கிறதற்குக் கீழிலுள்ளத்தாலும், நமஶ்ஶப்3தா3ர்த்த2ம் சொல்லப்பட்டது. பரப்ரயோஜநப்ரவ்ருத்தி (வா.72) இத்யாதி3யாலும், உபேயத்துக்கு இளைய பெருமாளையும், (வா.80) இத்யாதி3யாலும், “கைங்கர்யந்தான் ப4க்தி மூலமல்லாதபோது (வா.281) இத்யாதி3யாலும், த்ருதீயபதா3ர்த்த2ம் சொல்லப்பட்டது.
“அஜ்ஞானத்தாலே” (வா.43) இத்யாதி3யாலும், ப்ராபகாந்தர பரித்யாக3த்துக்கும் (வா.115) இத்யாதி3யாலும், உபாயாந்தர த்யாக3த்தை ஸஹேதுகமாகச் சொல்லுகையாலே தத்த்யாஜ்யதையையும் த்யாக3 ப்ரகாரத்தையும் சொல்லுகிற பத3த்3வயார்த்தமும் சொல்லப்பட்டது. இதுதனக்கு ஸ்வரூபம் (வா.55) இத்யாதி3யாலும், “ப்ராப்திக்குபாயம் அவன் நினைவு” (வா.66) இத்யாதி3யாலும் ” மாமேகம் ஶரணம்” என்கிற பத3ங்களிலர்த்த2ம் சொல்லப்பட்டது. “ப்ரபத்த்யுபாயத்துக்கு” (வா.134) இத்யாதி3யாலே, “வ்ரஜ” என்கிற ஸ்வீகாரவைலக்ஷண்யம் சொல்லப்பட்டது. “அவனிவனை” (வா.143) என்று தொடங்கி, “ஸ்வாதந்த்ர்யத்தாலே வரும் பாரதந்த்ர்யம் ப்ரப3லம் (வா.148) என்னுமளவும் ஸர்வபாபங்களையும் தள்ளி அங்கீகரிக்கும் ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும், “க்ருபா ப3லமுமநுபவித்தேயறவேணும்” (வா. 402) என்று ப2லஸித்3தி4யில் கண்ணழிவில்லாமையும் சொல்லுகை’ யாலே உத்தரார்த்த4த்தில் அர்த்த2ம் சொல்லப்பட்டது.
ஜீயர் வ்யாக்2யாநாவதாரிகை முற்றிற்று.
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான பிள்ளைலோகாசார்யர் அருளிய ஸ்ரீ வசநபூ4ஷணம்
மூலம்
- வேதா3ர்த்த2மறுதியிடுவது ஸ்ம்ருதீதி ஹாஸ புராணங்களாலே.
ஜீயர் வ்யாக்யாநம்
- அவதாரிகை-(வேதா3ர்த்த2 மித்யாதி3) ப்ரமாதாவானவன் ப்ரமாணத்தைக்கொண்டிறே ப்ரமேயத்தை நிஶ்சயிப்பது. அந்த ப்ரமாணந்தான், ப்ரத்யக்ஷாதி3ரூபேண அஷ்டவித4மாகச் சொல்லுவர்கள். அதில் “प्रत्यक्षमेकं चार्वाका:” ( ப்ரத்யக்ஷமேகம் சார்வாகா: ) இத்யாதி3யில் சொல்லுகிற பா3ஹ்யகுத்3ருஷ்டிகளைப் போலன்றியே, ப்ரத்யக்ஷாநுமாநாக3மங்கள் மூன்றையும் ப்ரமாணதயா அங்கீ3கரித்து, உபமாநாதி3பஞ்சகத்தையும் அவற்றிலே யதா2யோக3ம் அந்தர்ப்ப4விப்பித்து, அவற்றில் ப்ரத்யக்ஷம் இந்த்3ரிய க்3ரஹண யோக்3யங்களிலும், அநுமாநம் ப்ரத்யக்ஷஸித்3த4 வ்யாப்தி க்3ரஹணாநுரூபமாக, கதிபயபரோக்ஷார்த்த2ங்களிலும் ப்ரமாணமாகவும், அதீந்த்3ரியார்த்த2த்தில் ஶாஸ்த்ரமே ப்ரமாணமாகவும் நிஷ்கர்ஷித்து, அது தன்னிலும், ” वेदे कर्त्राद्यभावात् बलवति हि नयैस्त्वन्मुखे नीयमाने तन्मूलत्वेन मानं तदितरदखिलं जायते” (வேதே3 கர்த்ராத்3ய பா4வாத் ப3லவதி ஹி நயை:த்வந்முகே2 நீயமாநே தந்மூலத்வேந மாநம் ததி3தரத3கி2லம் ஜாயதே)என்கிறபடியே ஸ்வப்ராமாண்யத்துக்கு மூலஸாபேக்ஷமான பௌருஷேய ஶாஸ்த்ரத்தைப்பற்ற, ஸ்வத:ப்ராமாண்யமுடைய வேத3மே ப்ரப3ல ப்ரமாணமாகவும் அறுதியிட்டிருக்கும் பரமவைதி3கராகையாலே, இப்ரப3ந்த4த்தில் தாமருளிச்செய்கிற அர்த்த2ங்களெல்லாம் வேத3 ப்ரதிபாத்3யமென்னுமிடம் தோற்ற முதலிலே வேத3த்தை ப்ரமாணமாக அங்கீகரித்துக்கொண்டு தத3ர்த்த2 நிர்ணயம் பண்ணும் க்ரமத்தை இவ்வாக்யத்தாலே அருளிச்செய்கிறார்.
வ்யா;- அகி2லஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணைகதாநத்வங்களாலே ஈஶ்வரன் அகி2லப்ரமேய விலக்ஷணனாயிருக்குமாப்போலேயிறே அபௌருஷேயத்வ நித்யத்வங்களாலே வேத3ம் அகி2ல ப்ரமாண விலக்ஷணமாயிருக்கும்படி. வேத3த்தினுடைய அபௌருஷேயத்வாதி3,”वाचा विरूप नित्यया “(வாசா விரூப நித்யயா) இத்யாதி3 ஶ்ருதியாலும், “‘अनादि निधना ह्येषा वागुत्सृष्टा स्वयम्भुवा।आदौ वेदमयीदिव्या यतस्सर्वा: प्रसूतय:” (அநாதி3 நித4நா ஹ்யேஷா வாகு3த்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு4வா | ஆதௌ3 வேத3 மயீ தி3வ்யா யதஸ்ஸர்வா: ப்ரஸுதய:) இத்யாதி3 ஸ்ம்ருதியாலும் ப்ரதிபாதி3க்கப்படா நின்றதிறே. இந்த ஶ்ருதிஸ்ம்ருதிகள் வேத3நித்யத்வத்தைச் சொல்லுகையாலே, தத3பௌருஷேயத்வமும் ஸித்3த4மிறே. அத ஏவப்4ரம விப்ரலம்ப4, ப்ரமாதா3ஶக்திரூப தோ3ஷசதுஷ்டய ஸம்பா4வநாக3ந்த4 ரஹிதமாயிருக்கும், பௌருஷேயத்வமிறே அவை வருகைக்கு மூலம் இப்படியிருக்கையாலே இதுக்கு மேற்பட்டதொரு ஶாஸ்த்ரமில்லை. ஆகையாலேயிறே, ” सत्यं सत्यं पुनस्सत्यं उद्धृत्य भुजमुच्यते । वेदशास्त्रात् परं नास्ति न दैव केशवात्परम् ।।” (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்3த்4ருத்ய பு4ஜமுச்யதே। வேத3ஶாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தை3வம் கேஶவாத் பரம்।।) என்று ஐதிஹாஸிகராலும் பௌராணி கராலும் ஏககண்ட2மாகச் சொல்லப்பட்டது. இதினேற்றமெல்லாம் திருவுள்ளம்பற்றியிறே ”சுடர்மிகு சுருதி” என்று நம்மாழ்வார் அருளிச்செய்தது.
அவரைப் பின்செல்லுமவராய் அபி4யுக்தாக்3ரேஸரரான பட்டரும், “आदौ वेदा: प्रमाणम् ” (ஆதெள3 வேதா3: ப்ரமாணம்) என்றாறிறே. இத்தை வேத3மென்கிறது. “वेदयतीति वेद:” (வேத3யதீதி வேத3🙂 என்கிற வ்யுத்பத்தியாலே பு3பு4த்ஸுக்களாய் ஆஸ்திகராயிருப்பார்க்கு ஸ்வார்த்த2 ப்ரகாஶகமாயிருக்கையாலே.
இப்படியிருந்துள்ள வேத3ந்தான், ப்ரதிபாத்3யார்த்த2 விஶேஷத்தாலே பா4க3த்3வயாத்மகமாயிருக்கும். அத்தை இவ்விடத்தில் உப4யபா4க3ஸாமாந்யவாசியான வேத3ஶப்3த3த்தாலே ஸாகல்யேந சொல்லுகிறது.) (அர்த்த2ம்) என்று- பூர்வபா4க3 ப்ரதிபா4த்யமான கர்மத்தையும், உத்தரபா4க3 ப்ரதிபாத்3யமான ப்3ரஹ்மத்தையும் சொல்லுகிறது. பூர்வோத்தரமீமாம்ஸை களில் “अथातो धर्मजिज्ञासा” (அதா2தோ த4ர்ம ஜிஜ்ஞாஸா) என்றும், “अथातो ब्रह्मजिज्ञासा” (அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா) என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே, பா4க3த்3வயத்துக்கும் ப்ரதிபாத்3யம் ஆராத4நரூபமான கர்மமும், ஆராத்4யவஸ்துவான ப்3ரஹ்மமுமிறே. கர்மத்தினுடைய ப4க3வதா3ராத4 நத் வம், “स आत्मा।अङ्गान्यन्या देवता:”(ஸ ஆத்மா | அங்கா3ந்யந்யா தே3வதா:) என்று, அக்3நீந்த்3ராதி3 ஸகல தே3வதைகளும் ப4க3வச்ச2ரீரபூ4தராக ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே ஸித்3த4மிறே. இவ்வாகாரத்தை அறிந்து, அக்3நீந்த்3ராதி3 தே3வதாந்தர்யாமி ஸமாராத4நமாக அநுஷ்டி2க்குமவர்களிடத்தில், இதினுடைய ப4க3வதா3ராத4 நத்வம் ஸுஸ்பஷ்டமாயிருக்கும். இவ்வாகாரமறியாதார் அவ்வோ தே3வதாமாத்ரங்களை உத்3தே3ஶித்துப்பண்ணும் கர்மமும், வஸ்துக3த்யா ப4க3வதா3ராத4நமாய்த் தலைக்கட்டும். “ये यजन्ति पितृृन् देवान् ब्राह्मणान् सहुताशनान् । सर्वभूतान्तरात्मानं विष्णुमेव यजन्ति ते” (யே யஜந்தி பித்ரூந்தே3வாந் ப்3ராஹ்மணாந் ஸஹுதாஶநாந் ஸர்வபூ4தாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே ||) என்னக்கடவதிறே. “येऽप्यन्यदेवताभक्ता: यजन्ते श्रद्धयाऽन्विता:।तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ।।” (யேऽப்யந்யதே3வதாப4க்தா: யஜந்தே ஶ்ரத்3த4யாऽந் விதா:| தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி4 பூர்வகம் ||’) என்று தானே அருளிச்செய்தானிறே. ஆகையாலே, எல்லாப்படியாலும் கர்மத்துக்கு ப4க3வதா3ராத4நத்வம் ஸித்3த4மிறே. இப்படி ஆராத4ந ஸ்வரூபமான கர்மமும், ஆராத்4யவஸ்துவான ப்3ரஹ்மமுமாகிற அர்த்த2த்3வயத்தையுமறியவே த்யாஜ்யோபாதே3யரூப ஸகலார்த்த2ங்களையும் அறியலாயிருக்கையாலே, பா4க3த்,வய ப்ரதிபாத்3யம் கர்மப்3ரஹ்மங்களென்கிறது.
எங்ஙனேயென்னில்; கர்மந்தான் பு3பு4க்ஷுக்களுக்கு ஐஶ்வர்ய ஸாத4நமாய், முமுக்ஷுக்களில் ப4க்திநிஷ்ட2ர்க்கு உபாஸநாங்க3மாய், ப்ரபந்தர்க்குக் கைங்கர்யரூபமாயிறேயிருப்பது. இப்படியிருந்துள்ள கர்மத்தின் வேஷத்தை உள்ளபடியறியவே, அநந்தஸ்தி2ரப3ல ப்3ரஹ்ம ப்ராப்திகாமரான ஸாத4கர்க்கு, இது உபாஸநாங்க3த்வேந உபாதே3யம், ஐஶ்வர்யார்த்தி2களுக்கு உபாதே3யமான ஆகாரத்தால் த்யாஜ்யம் என்றறியலாம். அநந்யஸாத4நர்க்கு இது கொண்டு ஸாதி4க்கத்தக்கதொன்றில்லாமையாலே, கைங்கர்யரூபேண உபாதே3யம், உபாஸகர்க்கு உபாதே3யமான ஆகாரத்தாலே த்யாஜ்யம் என்றறியலாம். ப்3ரஹ்மத்தையறியும்போது, தத்ஸ்வரூபரூப கு3ணவிபூ4திகளையெல்லாம் அறியவேண்டுகையாலே, விபூ4திபூ4தசேதநாசேதநங்களின் ஸ்வரூபமறியலாம். அதில் ஜ்ஞாநாநந்த3 லக்ஷணமான சேதநஸ்வரூப வைலக்ஷண்யமடியாக வருகிறதாகையாலே கைவல்யத்தின் வேஷமுமறியலாம். ப்3ரஹ்மத்தினுடைய ஶேஷித்வ ப்ராப்யத்வங்களையறியவே தத3ப4வாதி3கள் புருஷார்த்த2மென்றறியலாம். தது3பாஸ்யத்வ ஶரண்யத்வங்களையறியவே, தத்ப்ராப்தி ஸாத4ந விஶேஷங்களையறியலாம். ஸாத்4யாந்தர ஸாத4நாந்தரங்களினுடைய த்யாஜ்யத்வத்தையும்-ப்3ரஹ்மத்தினுடைய நிரதிஶயபோ4க்3யதையையும், அநந்ய ஸாத்4யத்வத்தையும், தத்ப்ரகாரதயா பரதந்த்ரமான ஸ்வஸ்வரூபத்தையும் த3ர்ஶிக்கவே ஸுஸ்பஷ்டமாக அறியலாம். ஆக இப்படியிருக்கையாலே, பா4க3த்3வயத்துக்கும் ப்ரதிபாத்3யம், ஆராத4நஸ்வரூபமான கர்மமும், ஆராத்4யவஸ்துவான ப்3ரஹ்மமுமென்னக் குறையில்லை. “त्वदर्चाविधिमुपरि परिक्षीयते पूर्वभाग:। ऊर्ध्वो भाग: त्वदीहागुणविभवपरिज्ञापनै: त्वत्पदाप्तौ” (த்வத3ர்ச்சாவிதி4 முபரி பரிக்ஷீயதே பூர்வபா4க3: ஊர்த்4வோ பா4க3: த்வதீ3ஹாகு3ணவிப4வபரிஜ்ஞாபநை: த்வத்பதா3ப்தௌ ) என்றிறே பட்டரருளிச்செய்தது.
இப்படி பா4க3த்3வய ப்ரதிபாத்4யங்களான இவ்வர்த்த2ங்களை (அறுதியிடுகையாவது) – கர்மத்தினுடைய ஸ்வரூபாங்க3ப3லாதி3கனையும், ப்3ரஹ்மத்தி னுடையஸ்வரூபரூப3குணவிபூ4த்யாதி3களையும் ஸம்ஶய விபர்யயமற நிர்ணயிக்கை. அதுதான் செய்யும்போது ஸகலஶாகா2 ப்ரத்யய ந்யாயத்தாலும், ஸகல வேதா3ந்த ப்ரத்யய ந்யாயத்தாலும் செய்யவேணும்.
அதில் ஸகலஶாகா2 ப்ரத்யய ந்யாயமாவது-ஒரு வாக்யத்திலே ஓரர்த்த2த்தைச் சொன்னால், அதினுடைய அங்கோ3பாங்கா3தி3களை நேராக அறிகைக்காக, ஶாகா2ந்தரங்களெல்லாவற்றிலும் ஸஞ்சரித்து, அவற்றில் சொல்லுகிற அர்த்த2ங்களிலும் ஜ்ஞாநம் பிறந்து, அவ்வர்த்த2ங்களுக்கு அந்யோந்யவிரோத4ங்களையும் ஶமிப்பித்து, தனக்கபி4மதமான அங்கி3யோடே சேருமவற்றைச் சேர்க்கை, ஸகல வேதாந்த3 ப்ரத்யய ந்யாயமாவது- ஒரு வேதா3ந்தத்திலே ஒரு வாக்யம் ஓர் அர்த்த2த்தைச் சொன்னால், அல்லாத வேதா3ந்தங்களிலும் ஸஞ்சரித்து, அவற்றில் சொல்லுகிற அர்த்த2ங்களுக்கு அந்யோந்யவிரோத4ம் பிறவாதபடி விஷயவிபா4க3ம் பண்ணி , தனக்கபி4மதமான அர்த்த2ங்களோடே சேருமவற்றைச் சேர்க்கை.
இதுதான், மஹாமதிகளான மஹர்ஷிகளுக்கொழிய, அல்லாதார்க்குச் செய்யப்போகாமையால் உபப்3ரும்ஹணங்கள் கொண்டே நிர்ணயிக்கவேணும், ஆகையாலே தந்நிர்ணாயகங்களை அருளிச்செய்கிறார்,-(ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே) என்று. ஸ்ம்ருதிகளாவன:- ஆப்தரான மந்வத்ரி விஷ்ணு ஹாரீத யாஜ்ஞவல்க்யாதி3களாலே அபி4ஹிதங்களான த4ர்ம ஶாஸ்த்ரங்கள். இதிஹாஸங்களாவன:-புராவ்ருத்த ப்ரதி பாத3கங்களான ஸ்ரீ(மத்3) ராமாயண மஹாபா4ரதாதி3கள். புராணங்களாவன:-ஸர்கா3தி3 பஞ்சலக்ஷணோ பேதங்களான ப்3ராஹ்ம பாத்3ம வைஷ்ணவாதி3கள்.
(வேதா3ர்த்த2 மறுதியிடுவது இவற்றாலே) என்று இப்படி நியமேநவருளிச்செய்தது. இவற்றையொழிய ஸ்வபு3த்3த்4யா நிர்ணயிக்குமளவில், அல்பஶ்ருதனானவனுக்கு விப்ரதிபத்திவருமாகையாலே, வேத3காலுஷ்ய ஹேதுவாமென்று நினைத்து. இந்நியமந்தான் “इतिहास पुराणाभ्यां वेदं समुपबृंहयेत् । बिमेति अल्पश्रुताद्वेदः मामयं प्रतरिष्यति ।।”
(இதிஹாஸபுராணப்4யாம்வேத3ம் ஸமுபப்3ரும்ஹயேத் | பி3பே4த்யல்பஶ்ருதாத் வேதோ3 மாமயம் ப்ரதரிஷ்யதி ||) என்று பா3ர்ஹஸ்பத்ய ஸ்ம்ருதியிலும், மஹாபா4ரதத்திலும் சொல்லப்பட்டதிறே. இவ்வுபக்ரமவாக்யப்ரக்ரியையாலே, புருஷகாரவைப4வம் தொடங்கி, ஆசார்யாபி4மாந பர்யந்தமாக இப்ரப3ந்த4த்தில் இவரருளிச் செய்கிற வேதா3ர்த்த2ங்களெல்லாம் உபப்3ரும்ஹணங்கள் கொண்டே நிஶ்சயித்தருளிச்செய்கிறார் என்னுமிடம் தோற்றுகிறது. அதுதான், தத்தத3ர்த்த2ங்கள் அருளிச்செய்கிற ஸ்த2லங்களிலே ஸம்ப்ரதிபந்நம். ஆக, இவ்வாக்யத்தால், ஸகலப்ரமாணங்களிலும் வேத3மே ப்ரப3லப்ரமாணமென்னுமிடமும், தத3ர்த்த2 நிர்ணயம் பண்ணும் க்ரமமும் சொல்லிற்றாய்த்து.
- ஸ்ம்ருதியாலேபூர்வபா4க3த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது. மற்றையிரண்டாலும் உத்தரபா4க3த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது.
- அவ:-இவற்றில் எத்தாலே எந்த பா4க3த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவதென்ன அருளிச்செய்கிறார் (ஸ்ம்ருதியாலே) என்று தொடங்கி.
வ்யா:- உபப்3ரும்ஹமான வேத3த்துக்கு, ப்ரதி பாத்3யார்த்த2 விஶேஷத்தாலேயிறே பா4க3 பே4த3 முண்டாய்த்து; அப்படியே உபப்3ரும்ஹணங்களுக்கும் ப்ரதிபாத்3ய விஶேஷத்தாலே பே4த3முண்டிறே. அதில் ஸ்ம்ருதிகள் பூர்வ பா4கோ3பப்3ரும்ஹணங்களாகவும், இதிஹாஸாதி3கள் உத்தரபா4கோ3பப்3ரும்ஹணங்களாகவும் நிர்மிதங்களாகையாலே, தத்தது3ப ப்3ரும்ஹணங்களைக் கொண்டே தத்தத்3 பா4கா3ர்த்த2 நிஶ்சயம் பண்ணவேண்டியிறேயிருப்பது. அத்தைப்பற்ற, ஆசார வ்யவஹார ப்ராயஶ்சித்தாதி3களுக்கு ப்ரதிபாத3கங்களான த4ர்மஶாஸ்த்ரங்களாலே கர்ம ப்ரதிபாத3கமான பூர்வபா4க3த்தில் அர்த்த2 நிஶ்சயம் பண்ணக்கடவது; ப4க3வத் ஸ்வரூப ரூப கு3ண விபூ4தி சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாத3கங்களான இதிஹாஸபுராணங்களாகிற மற்றையிரண்டாலும் ப்3ரஹ்ம ப்ரதிபாத3கமான உத்தரபா4க3த்தில் அர்த்த2 நிஶ்சயம் பண்ணக்கடவது என்கிறார்.
இப்படி உப4யவித4மானஉபப்3ரும்ஹணங்களாலே உப4யபா4கா3ர்த்த2த்தையும் (அறுதியிடுகையாவது)அநதீ4த ஶாகா2ந்தரார்த்த2ங்களுக்கும் ப்ரதிபாத3கங்களான இவற்றாலே, அதீ4த ஶாகா2ர்த்த2ங்களை அபேக்ஷித விஶேஷங்களோடே கூட நிஶ்சயிக்கை. ஸ்ம்ருதிகள் தன்னிலே ப்3ரஹ்ம ப்ரதிபாத3நமும், இதிஹாஸாதி3களிலே கர்மப்ரதிபாத3நமும் உண்டாயிருந்ததேயாகிலும், ஸ்ம்ருதிகளில் ப்3ரஹ்ம ப்ரதிபாத3நம், கர்மங்களினுடைய ததா2ராத4நரூபத்வ ஜ்ஞாபநார்த்த2மாகவும், இதிஹாஸபுராணங்களில் கர்மப்ரதிபாத3நம், கர்மங்களினுடைய உபாஸநாங்க3 த்வஜ்ஞாபநார்த்த2மாகவுமாகையாலே, இப்படி வகையிட்டுச் சொல்லக்குறையில்லை. ” प्रायेण पूर्वभागार्थपूरणं धर्मशास्त्रतः। इतिहासपुराणाभ्यां वेदान्तार्थ : प्रकाश्यते॥” (ப்ராயேண பூர்வபா4கா3ர்த்த2 பூரணம் த4ர்மஶாஸ்த்ரத:। இதிஹாஸ புராணாப்4யாம் வேதா3ந்தார்த்த2: ப்ரகாஶ்யதே।।) என்னக்கடவதிறே.
- இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரப3லம்.
– 3. அவ:-(1)உத்தர பா4கோ3பப்3ரும்ஹணத்3வயத்துக்கும் தாரதம்யமுண்டோ, தன்னிலொக்குமோ? என்கிற ஶங்கையிலே அருளிச்செய்கிறார் மேல்.
(2) அன்றிக்கே, ஏகபா4க3 விஷயமான இரண்டு உபப்3ரும்ஹணங்களிலும் இன்னது ப்ரப3லமென்னுமத்தையும் த3ர்ஶிப்பிக்கவேணுமென்று தாமே திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிருறாராகவுமாம்,- (இவையிரண்டிலும்) என்று தொடங்கி.
வ்யா:- அதாவது- ஸ்ரேஷ்ட2 பா4கோ3பப்3ரும்ஹணதயா வந்த சேர்த்தியையுடைத்தான இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு, ப்ராமாண்யத்தில் வந்தால், புராணத்திலும் இதிஹாஸத்துக்கு ப்ராப3ல்ய முண்டென்கை. புராணத்திற்காட்டில் இதிஹாஸத்துக்கு ப்ராப3ல்யம் – பரிக்3 ரஹாதிஶயம், மத்4யஸ்த2தை, கர்த்துராப்ததமத்வம் ஆகிற இவற்றாலே.
இவற்றில் பரிக்3ரஹமாவது ஶாஸ்த்ர பரிக்3ரஹம். “वेदवेद्ये परे पुंसि जाते दशरथात्मजे । वेदः प्राचेतसादासीत् साक्षाद्रामायणात्मना।। ” (வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஶரதா2த்மஜே। வேத3: ப்ராசேதஸாதா3ஸீத் ஸாக்ஷாத்3ராமாயணத்மநா।।) – “मतिमन्थानमाविध्य येनासौ श्रुतिसागरात्। जगद्धिताय जनितो महाभारतचन्द्रमाः॥” (மதிமந்தா2நமாவித்4ய யேநாஸௌ ஶ்ருதிஸாக3ராத்। ஜக3த்3தி4தாய ஜநிதோ மஹாபா4ரதசந்த்ரமா:|| ) ” व्यासवाक्यजलौघेन कुधर्मतरुहारिणा। वेदशैलावतीर्णेन नीरजस्का महीकृता” (வ்யாஸவாக்ய ஜலௌகே4ந குத4ர்ம தரு ஹாரிணா। வேத3ஶைலாவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா।।) “बिभेति गहनाच्छास्त्रात् नरस्तीव्रादिवौषधात् । भारत: शास्त्रसारोऽयं अत: काव्यात्मना कृत:।।” (பி3பே4தி க3ஹநாச்சா2ஸ்த்ராத் நரஸ்தீவ்ராதி3வௌஷதா4த்। பா4ரத: ஶாஸ்த்ரஸாரோऽயம் அத: காவ்யாத்மனா க்ருத:।। “विष्णौ वेदेषु विद्वत्सु गुरुषु ब्राह्मणेषु च। भक्तिर्भवति कल्याणी भारतादेव धीमताम् ।। (விஷ்ணௌ வேதே3ஷு வித்3வத்ஸு கு3ருஷு ப்3ராஹ்மணேஷு ச। ப4க்திர் ப4வதி கல்யாணி பா4ரதாதே3வ தீ4மதாம்।। ) இத்யாதி3களாலே புராண விஶேஷங்களிலே இதிஹாஸம் ஶ்லாகி4க்கப்படா நின்றதிறே.
மத்4யஸ்த்தை2யாவது- “यस्मिन् कल्पे तु यत्प्रोक्तं पुराणं ब्रह्मणा पुरा। तस्य तस्य तु माहात्म्यं तत्स्वरूपेण वर्ण्यते।।” (யஸ்மிந் கல்பே து யத்ப்ரோக்தம் புராணம் ப்3ரஹ்மணா புரா। தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||) என்று, ஸர்வபுராணத்துக்கும் ப்ரவர்த்தகன் ப்3ரஹ்மாவாய், அவனுக்கு யாதொரு கல்பத்திலே கு3ணத்ரயத்தில் யாதொரு கு3ணம் விஞ்சியிருந்தது, அந்த கு3ணாங்கு3ண தே3வதையினுடைய மாஹாத்ம்யத்தைப் புராணத்திலே சொல்லுகையாலே பக்ஷபாதிகளாயிருக்கும் புராணங்கள் போலன்றிக்கே, லௌகிக வைதி3க ஸகலார்த்த2 நிர்ணயத்திலே அதி4க்ருதங்களாகையாலே ஒரு விஷயத்திலும் பக்ஷபாதமின்றிக்கேயிருக்கை .
கர்த்துராப்ததமத்வமாவது – ப்ரப3ந்த4 கர்த்தரவானவன், யதா2ர்த்த2 த3ர்ஶந ஸாமர்த்2யத்தையும். யதா2த்3ருஷ்டார்த்த2 வாதி3த்வத்தையும் மிகவுமுடையவனாயிருக்கை.
“अथेतिहासपुराणयोः इतिहासा बलीयांसः; कुतः? तेषां परिग्रहातिरेकात् , सर्वत्र माध्यस्थ्येन भूतार्थप्रतीतेः, वचनसौष्ठवेन, कर्तुराप्ततमत्वावगतेश्च”(அதே2திஹாஸபுராணயோ: இதிஹாஸா ப3லீயாம்ஸ:; குத:? தேஷாம் பரிக்3ரஹாதிரேகாத், ஸர்வத்ர மாத்4யஸ்த்2யேந பூ4தார்த2ப்ரதீதே:, வசநஸௌஷ்ட2வேந, கர்த்துராப்ததமத்வாவக3தேஶ்ச) என்று தொடங்கிப் பரிக்3ரஹாதிஶயாதி3களாலே புராணாத் இதிஹாஸ ப்ராப3ல்யம் ஸாமாந்யேந தத்வநிர்ணயத்திலே உய்யக்கொண்டாராலும், “महाभारतं हि परिग्रह विशेषावसितम् ” (மஹாபா4ரதம் ஹி பரிக்3ரஹ விஶேஷா வஸிதம்) என்று தொடங்கி, “धर्मे चार्थे च कामे च मोक्षे च भरतर्षभ। यदिहास्ति तदन्यत्र यन्नेहास्ति न तत् क्वचित् ।।इति लौकिक-वैदिक-सकलार्थ-निर्णयाधिकृतत्वेन, क्वचिदपि अपक्षपातित्वाच्च, पुराणेभ्यो बलवत्तरम् ” (த4ர்மே சார்த்தே2 ச காமே ச மோக்ஷே ச ப4ரதர்ஷப4। யதி3ஹாஸ்தி தத3ந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத் க்வசித் ।। -இதி லௌகிக வைதி3கஸகலார்த்த2 நிர்ணயாதி4 க்ருதத்வேத3 க்வசித3பி அபக்ஷபாதித்வாச்ச புராணேப்4யோ ப3லவத்தரம்।।) என்னுமதளவாக, பரிக்3ரஹாதிஶயத்தாலும், மத்4யஸ்த்2தையாலும், புராணங்களிற்காட்டில் இதிஹாஸ விஶேஷமான மஹாபா4ரதத்துக்குண்டான ப்ராப3ல்யம் ஸ்ரீஸஹஸ்ரநாம பா4ஷ்யத்திலே ப4ட்டராலும் ப்ரதிபாதி3க்கப்பட்டதிறே.
- அத்தாலே அது முற்பட்டது.
- அவ:-அதின் ப்ராப3ல்யத்தை இசைவிக்கிறர் (அத்தாலே) என்று தொடங்கி
வ்யா:- அந்த ப்ராப3ல்யத்தாலே, “इतिहासपुराणं पञ्चमम् ” (இதிஹாஸபுராணம் பஞ்சமம் ) என்றும் “ इतिहास पुराणाभ्याम्” ( இதிஹாஸ புராணாப்4யாம் ) என்றும் ஶ்ருதிஸ்ம்ருதிகளிலே இரண்டையும் சேரச் சொல்லுகிறவளவில், இதிஹாஸமானது புராணத்துக்கு முன்னே சொல்லப்பட்டதென்கை. த்3வந்த்3வ ஸமாஸத்தில் அல்பாச்தரமாதல் அப்4யர்ஹிதமாதலிறே முற்படுவது. அதில் அல்பாச்தரமன்றியிலேயிருக்க, அது முற்பட்டது அப்4யர்ஹிதத்வத்தாலேயிறே. இந்த அப்4யர்ஹிதத்வத்துக்கு மூலம் அதின் ப்ராப3ல்யமென்று கருத்து.
அத2வா, ( ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே ) என்று பா4க3த்3வயோபப்3ரும்ஹணங்களையும் ஸமஸ்தமாகச் சொல்லுகிறவிடத்தில் “ इतिहासाश्च पुराणानि च इतिहासपुराणानि; स्मृतयश्च इतिहासपुराणानि च स्मृतीतिहासपुराणानि” (இதிஹாஸாஶ்ச புராணாநி ச இதிஹாஸபுராணாநி; ஸ்ம்ருதயஶ்ச இதிஹாஸ புராணாநி ச ஸ்ம்ருதீதிஹாஸ புராணாநி) என்றிப்படி இவர்க்கு ஸமாஸ விவக்ஷையாகையாலே, அல்பாச்தரமான புராணத்துக்கு முன்னே இதிஹாஸத்தையருளிச் செய்ததின் கருத்தை (இவையிரண்டிலும்) (வா. 3)இத்யாதி3யாலே அருளிச்செய்கிறாராகவுமாம். இந்த யோஜனையில் (அத்தாலே அது முற்பட்டது) (வா.4) என்கிறவிதுக்கு, அந்தப்ராப3ல்யத்தாலே(இதிஹாஸ புராணங்களாலே) (வா.1) என்கிறவிடத்தில் புராணத்துக்கு முன்னே இதிஹாஸம் சொல்லப்பட்டது என்று பொருளாகக் கடவது.
ஆக, வேதா3ர்த்த2 நிர்ணயம் பண்ணுமளவில், தது3பப்3ரும்ஹணங்களாலே பண்ணவேணுமென்றும். அதில் பூர்வோத்தர பா4கோ3பப்3ரும்ஹணங்கள் இன்னதென்றும், உத்தரபா4கோ3பப்3ரும்ஹணங்களான இதிஹாஸபுராணங்களில் இதிஹாஸம் ப்ரப3லம் என்றும் அருளிச்செய்கையாலே, மேல் தாம் அருளிச் செய்யப்புகுகிற அர்த்த2ங்களுக்கு ப்ரமாணம் ஒருங்கவிட்டருளினாராய்த்து. 4
புருஷகார வைப4வம்
- அவ:-முதலிலே (வேதா3ர்த்த2ம்) (வா.1) இத்யாதி3யாலே வேத3தத3ர்த்த2 தது3பப்3ரும்ஹணங்களை ஸாகல்யேந உபாதா3நம் பண்ணி, அந்த வேத3த்தினுடைய பா4க3விபா4க3 தது3பப்3ரும்ஹணவிபா4க3ங்களையும் பண்ணினாரேயாகிலும், சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு அபேக்ஷிதார்த்த2ங்களை அருளிச்செய்ய இழிந்தவராகையாலும், அதுதான் பூர்வபா4க3 வேத்3யமன்றிக்கே உத்தர பா4க3வேத்3யமாகையாலும், பூர்வபா4க3த்தில் முமுக்ஷவுக்கு ஜ்ஞாதவ்யாம்ஶமுள்ளதும், உத்தர பா4கா3ர்த்த2ங்களான ஸ்வரூபோபாய புருஷார்த்த2 ப்ரதிபாத3ந ஸ்த2லங்களிலே தத்தத3துகு3ண(மாக) த்யாஜ்யோபாதே3ய கத2நமுகே2ந ஜ்ஞாபிக்கலாயிருக்கையாலும், உத்தர பா4கா3ர்த்த2 நிர்ணயத்திலே ப்ரவ்ருத்தராய், அதுதன்னிலும் ப4க3வத் ஸ்வரூபரூபகு3ணவீபூ4திகளையும் ப4க3வது3பாஸநாதி3களையும் பரக்க நின்று ப்ரதிபாதி3க்கிறவிடங்களில், ஸாராஸார விவேகபூர்வகமாக தாத்பர்யார்த்த2ங்களை ஸங்க்3ரஹித்து, ஸம்ஶய விபர்யயமறச் சேதநர்க்கு ப்ரதிபத்தி விஷயமாம்படி அருளிச்செய்து செல்லுகிறார் மேல். அதில், ப்ரத2மத்திலே, உத்தரபா4கோ3ப ப்3ரும்ஹணத்3வயத்தில் ப்ரப3லமாகச் சொன்ன இதிஹாஸங்களில் வைத்துக்கொண்டு ஸ்ரீராமாயணத்தினுடைய ப்ராப3ல்யத்தை ப்ரகாஶிப்பியா நின்று கொண்டு தத்ப்ரதிபாத்3ய விஶேஷத்தை அருளிச்செய்கிறார் (இதிஹாஸ ஸ்ரேஷ்ட2ம்) என்று தொடங்கி.
- வ்யா:-ஸ்ரீராமாயணத்துக்கு இதிஹாஸம்ரேஷ்ட2தையா(த்வமா)வது. “वाल्मीकये महर्षये सन्दिदेशासनं तत:।ब्रह्मणा समनुज्ञात: सोऽप्युपाविशदासने ||” (வால்மீகயே மஹர்ஷயே ஸந்தி3தே3ஶாஸநம் தத:| ப்3ரஹ்மணா ஸமநுஜ்ஞாத: ஸோऽப்யுபாவிஶதா3ஸநே) என்று ஸகல(ஸர்வ) லோக பிதாமஹனான ப்3ரஹ்மாவா(வினா)லே ஸம்பா4விதனான ஸ்ரீவால்மீகி ப4க3வானாலே ப்ரணீதமாகையாலும்,
- 5. இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது ; மஹாபா4ரதத்தால் தூதுபோனவனேற்றஞ்சொல்லுகிறது.
“न ते वागनृता काव्ये काचिदत्र भविष्यति ” (ந தே வாக3ந்ருதா காவ்யே காசித3த்ர ப4விஷ்யதி) என்று ப்3ரஹ்மா அநுக்3ரஹிக்கையாலே இதிற்சொன்ன அர்த்த2ங்களெல்லாம் மெய்யாகக் கடவதாகையாலும், “यावद्रामायणकथा लोकेषु प्रचरिष्यति” (யா(தா?)வத்3 ராமாயணகதா2 லோகேஷு ப்ரசரிஷ்யதி) என்று ஸகலலோக பரிக்3ரஹமுண்டாகையாலும், இதிஹாஸாந்தரங்களைப்பற்ற ப்ரப3ல ப்ரமாணமாயிருக்கை. இது தன்னை நடுவிற்றிருவீதிப்பிள்ளை பட்டர் தத்வத்ரய ப்ரப3ந்த4த்தில் ப்ரமாணாதி4காரத்திலே அருளிச்செய்தாரிறே. இன்னமும், “वेदवेद्ये परे पुंसि” (வேத3 வேத்3யே பரே பும்ஸி) இத்யாதி3ப்படியே ஸர்வஸ்மாத்பரனான ஸர்வேஶ்வரன் ஸம்ஸாரி சேதந ரக்ஷணார்த்த2மாக இதர ஸஜாதியனாய் வந்து அவதரித்தாப்போலே, ஸர்வப்ரமாணோத்க்ருஷ்டமான வேத3மும், தத3வதார கு3ணசேஷ்டித ப்ரதிபாத3த முகே2ந ததா3ஶ்ரயணருசியை ஸம்ஸாரிகளுக்கு உண்டாக்கி ரக்ஷக்கைக்காக ஸ்ரீராமாயணரூபேண அவதரித்ததென்று சொல்லப்படுகையாலும், இதினுடைய ஏற்றம் ஸம்ப்ரதிபந்தம். பிராட்டி யென்னாதே (சிறையிருந்தவள்) என்றருளிச்செய்தது. அவளுடைய த3யாதிஶயத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காக. தே3வ தே3வதி3வ்யமஹிஷியான தன் பெருமையையும் சிறையிருப்பின் தண்மையையும் பாராதே, தே3வஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருந்தது த3யாபரவஶையாயிறே. ப்ரஜை கிணற்றிலே விழுந்தால் ஒக்கக் குதித்தெடுக்கும் மாதாவைப்போலே இச்சேதநர் விழுந்த ஸம்ஸாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து. இவர்கள் பட்டதைத் தானும்பட்டு ரக்ஷிக்கையாலே, நிருபாதி4க மாத்ருத்வ ஸம்ப3ந்த4த்தால் வந்த நிரதிஶய வாத்ஸல்யத்துக்கும் ப்ரகாஶகமிறேயிது. இந்த கு3ணாதி4க்யத்தை வெளியிடுகைக்காகவிறே பரமாசார்யரான நம்மாழ்வார் “தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள்”- [திருவாய் 4-8-5] என்று அருளிச் செய்தது. அவருடைய தி3வ்யஸுக்தியிறே இவரிப்படி அருளிச்செய்கைக்கு மூலம். சிறையிருப்பு தண்மையாவது கர்ம நிப3ந்த4நமாகிலிறே. ஆஶ்ரிதரான தே3வர்களுடைய ஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக, தன்னநுக்3ரஹத்தாலே தானே வலியச் செய்ததாகையாலே, ஏற்றத்துக்கு உடலாமித்தனையிறேயிது. ஸம்ஸாரிகளோடொக்க க3ர்ப4 வாஸம் பண்ணிப் பிறக்கிறவிது, “பலபிறப்பா யொளிவரும்” [திருவாய் 1-3-2]. என்னும்படி ஸர்வேஶ்வரனுக்குத் தேஜஸ்கரமாகிறது. கர்ம நிப3ந்த4நமன்றிக்கே அநுக்3ரஹநிப3ந்த4நமாகையிறே. ஆன பின்பு, இதுவும் அநுக்3ரஹநிப3ந்த4நமாகையாலே, இவளுக்குத் தேஜஸ்கரமாமித்தனை. இத்தை ராவண ப3லாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் ஶக்திவிஶேஷமறியாத க்ஷுத்3ரரிறே. “शीतो भव ” (ஶீதோ ப4வ) என்றவள், “नष्टो भव ” (நஷ்டோ ப4வ) என்னமாட்டாளன்றே. ஆகையால், இது தன் அநுக்3ரஹத்தாலே பரரக்ஷணார்த்த2மாகச் செய்த செயலாகையாலே, இதுவே இவள் த3யாதி3கு3ணங்களுக்கு ப்ரகாஶகமென்று திருவுள்ளம்பற்றியாய்த்து இவர் (சிறையிருந்தவள்) என்று அருளிச்செய்தது. ஸ்ரீராமாயணமெல்லாம் இவளுடைய ஏற்றம் சொல்லு கிறதென்னுமிடம், “काव्यं रामायणं कृत्स्नं सीतायाश्चरितं महत् ” (காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாஶ் சரிதம் மஹத்) என்று ஸ்ரீவால்மீகி ப4க3வான் தானே வாயோலையிட்டு வைத்தானிறே. “श्रीमद्रामायणमपि परं प्राणिति त्च्चरित्रे ” (ஸ்ரீமத்3 ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச்சரித்ரே) என்றருளிச்செய்தாரிறே ப4ட்டர்,
அநந்தரம் மஹாபா4ரத ப்ரதிபாத்3யத்தை அருளிச்செய்கிறார் (மஹாபா4ரதத்தால்) என்று தொடங்கி. “कृष्णद्वैपायानं व्यासं विद्धि नारायाणं प्रभुम्।को ह्यन्यो भुवि मैत्रेय महाभारतकृद्भवेत् ” (க்ருஷ்ண த்3வைபாயநம் வ்யாஸம் வித்3தி4 நாராயணம் ப்ரபு4ம் । கோஹ்யந்யோ பு4வி மைத்ரேய மஹாபா4ரதக்ருத்3 ப4வேத் ।।) “एवंविदं भारतं तु प्रोक्तं येन महात्मना। सोऽयं नारायणस्साक्षात् व्यासरूपी महामुनि:” (ஏவம்வித4ம் பா4ரதம் து ப்ரோக்தம் யேந மஹாத்மநா। ஸோऽயம் நாராயணஸ்ஸாக்ஷாத் வ்யாஸ ரூபீ மஹாமுநி:।।) என்று ப4க3வதாவேஶாவதாரமாய், “” (ஸ ஹோவாச வ்யாஸ: பாராஶர்ய:) என்று ஆப்ததமனாக ப்ரஸித்3த4னாயிருந்துள்ள ஸ்ரீவேத3வ்யாஸ ப4க3வானாலே, “वेदानध्यापयामास महाभारतपञ्चमान् ” (வேதா3நத்4யாபயாமாஸ மஹாபா4ரத பஞ்சமாந்) என்கிறபடியே பஞ்சம வேத3மாக ப்ரணீதமாய், அநேக புராண ப்ரஶஸ்தமாயிருந்துள்ள மஹாபா4ரதமும், ஸ்ரீராமாயணத்தோபாதி ப்ரப3லப்ரமாணம். இதுவும் நடுவில் திருவீதிப்பிள்ளை ப4ட்டர் தாமேயருளிச்செய்தார். பெரியப4ட்டரும் ஸ்ரீ ஸஹஸ்ரநாம பா4ஷ்யோபோத்3கா4தத்திலே “श्रीराायणवत् महाभारतं शरणम् ” (ஸ்ரீராமாயணவத் மஹாபா4ரதம் ஶரணம்) என்றருளிச்செய்தாரிறே. ஸர்வேஶ்வரன் என்னாதே (தாதுபோனவன்) என்றது, அவனுடைய ஆஶ்ரித பாரதந்த்ர்யத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காக, தே3வதே3வனான தன் பெருமையையும், செய்கிற தொழிலின் தண்மையையும் பாராதே, பாண்ட3வர் களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூது போய்த் தது ப்ரணத பாரதந்தர்யருசிபரவஶனாயிறே. இது தான் இவனுடைய ஆஶ்ரயண ஸௌகர்யாபாத3கமான நீர்மைக்கு உடலாயிருந்துள்ள வாத்ஸல்யாதி3களுக்கெல்லாம் ப்ரகாஶகமாயிருப்பதொன்றிறே. இந்த கு3ணாதி4க்யத்திலே ஈடுபட்டிறே “இன்னார் தூதனென நின்றான்” (பெரியதிருமொழி 2-2-3) என்றும், “குடைமன்னரிடை நடந்த தூதா” (பெரியதிருமொழி 6-2-9]என்றும் திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது. அந்த திவ்ய ஸூக்தியிறே இவரிப்படியருளிச்செய்கைக்கு மூலம். ‘பேசிற்றே பேசுகையிறே இவர்களுக் கேற்றம்”. தூதுபோனது தண்மையாவது- கர்மவஶயதையடியாக வரிலிறே. ஐச்ச2மாக ஆஶ்ரித விஷயத்தில் செய்கிற தாழ்ச்சியெல்லாம் ஏற்றத்துக்கு உடலாயிறே இருப்பது. “स उ श्रेयान् भवति जायमान:” (ஸ உ ஸ்ரேயாந் ப4வதி ஜாயமாந:) என்று, ‘பரார்த்த2மாகப் பிறக்கையாலே நிறம்பெறும்’ என்று ஶ்ருதி சொன்னவிது, பரார்த்த2மாகத் தன்னிச்சை2யாலே செய்யுமவையெல்லாம் இவனுக்குத் தேஜஸ்கர மென்னுமதுக்கு உபலக்ஷணமிறே. இவன் செய்த தூ3த்யத்தை மாந்த்3யஹேதுவாக நினைப்பார் அறிவு கேடரில் தலையானவர்களித்தனை. அறிவில் தலை நின்றவர்கள், “எத்திறம்” [திருவாய் 1-3-1) என்று மோஹிக்கும்படியாயிறே யிருப்பது. இப்படியிருந்துள்ள இந்நீர்மையிலேற்றத்தை வெளியிடுகைக்காக வாய்த்து, இவர் (தூதுபோனவன்) என்றருளிச் செய்தது. மஹாபா4ரதமெல்லாம் இவனுடைய ஏற்றம் சொல்லுகையிலே தத்பரமாகையாலேயிறே – மஹாபா4ரதகதை, சொல்லத் தொடங்குகிறவன் “नारायणकथामिमाम् ” (நாராயண கதாமிமாம்) என்றது. ஆக இப்ரப3ந்த4த்3வயத்துக்கும் ப்ரதா4ந ப்ரதிபாத்3யங்கள் இன்னதென்னுமிடம் ப்ரகாஶிப்பிக்கப்பட்டது.5.
- இவையிரண்டாலும் புருஷகாரவைப4வமும் உபாயவைப4வமும் சொல்லிற்றாய்த்து .
- அவ: உபப்3ரும்ஹணமுகே2ந வேதா3ந்த தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து, உஜ்ஜீவநத்துக்குடலானவற்றைச் சொல்லுவதாகவிறே உபக்ரமித்தது. அதிலிப்போது சொன்ன இவற்றால் வேதா3ந்தத்திலெவ்வர்த்த2ங்கள் சொல்லிற்றாய்த்து என்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் மேல் (இவை) என்று தொடங்கி.
வ்யா:- அதாவது-(சிறையிருந்தவளேற்றம் தூதுபோனவனேற்றம்) என்ற இவையிரண்டாலும், அபராத4பூ4யிஷ்ட2ரான சேதநர்க்கு ஆஶ்ரயணீயையாமளவில், அகி2லஜக3ந்மாதாவான ஸம்ப3ந்த4த்தாலும், க்ருபாதி3களாலும் நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி வந்து ஆஶ்ரயிக்கலாம்படியாய், அபராத4ங்களைப் பார்த்துச் சீறி, ”क्षिपामि” (க்ஷிபாமி) ”न क्षमामि ” (ந க்ஷமாமி) என்னும் ஈஶ்வரஹ்ருத3யத்தைத்திருத்தி, அவர்களை அங்கீ3கரிப்பிக்கும் புருஷகாரபூ4தையானவள் வைப4வமும், அங்கீ3கரித்தால், பின்னையவள் தானே சிதகுரைக்கிலும் “என்னடியார் அதுசெய்யார்” [பெரியாழ்திரு 4-9-2] என்று மறுதலைத்து, தான் திண்ணியனாய் நின்று ரக்ஷிக்கும் உபாயபூ4தனானவன் வைப4வமும் சொல்லிற்றய்த்து-என்கை. (புருஷகாரம்) என்றும் (உபாயம்) என்றும், இவற்றை நிரூபகமாக அருளிச்செய்தது, பிராட்டிக்குப் புருஷகாரத்வமும், ஈஶ்வரனுக்கு உபாயத்வமும் அஸாதா4ரணம் என்று தோற்றுகைக்காக. இதுதன்னை. “मत्प्राप्तिं प्रति जन्तूनां संसारे पततामधः। लक्ष्मीः पुरुषकारत्वे निर्देष्टा परमर्षिभिः॥ ममापि च मतं ह्येतत् नान्यथा लक्षणं भवेत्॥” (மத் ப்ராப்திம் ப்ரதி ஜந்தூநாம் ஸம்ஸாரே பததாமத4: । லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி3ஷ்டா பரமர்ஷிபி4:।। மமாபி ச மதம் ஹ்யேதத் நாந்யதா2 லக்ஷணம் ப4வேத்) என்றும், “अहं मत्प्राप्त्युपायो वै साक्षाल्लक्ष्मीपति: स्वयं। लक्ष्मीः पुरुषकारेण वल्लभा प्राप्तियोगिनी। एतस्याश्च विशेषोऽयं निगमान्तेषु शब्द्यते ।।” (அஹம் மத்ப்ராப்த்யுபாயோ வை ஸாக்ஷால்லக்ஷ்மீபதி : ஸ்வயம்। லக்ஷ்மீ : புருஷ காரேண வல்லபா4 ப்ராப்தியோகி3நீ ஏதஸ்யாஶ்ச
விஶேஷோऽயம் நிக3மாந்தேஷு ஶப்3த்3யதே ।।)என்றும், “आकिञ्चन्यैकशरणाः केचित् भाग्याधिकाः पुनः। मत्पदाम्भोरुहद्वन्द्वं प्रपद्य प्रीतमानसाः।। लक्ष्मीं पुरुषकारेण वृतवन्तो वरानन। मत्क्षमां प्राप्य सेनेश प्राप्यं प्रापकमेव माम् ॥ लब्ध्वा कृतार्थाः प्राप्स्यन्ते मामेवानन्यमानासा: ॥( ஆகிஞ்சந்யைகஶரணா: கேசித் பா4க்யாதி4கா: புந: । மத்பதா3ம்போ4ருஹத்3வந்த்3வம் ப்ரபத்3ய ப்ரீதமாநஸா: ॥ லக்ஷ்மீம் புருஷகாரேண வ்ருதவந்தோ வராநந மத்க்ஷமாம் ப்ராப்ய ஸேனேஶ ப்ராப்யம் ப்ராபகமேவ மாம் ॥ லப்3த்4வா க்ருதார்த்த2: ப்ராப்ஸ்யந்தே மாமேவாநந்யமாநஸா: ॥ ) என்றும் ப4க3வச்சா2ஸ்த்ரத்திலே தானே அருளிச்செய்தானிறே. மற்றைப் பிராட்டிமார்க்கும், ஸூரிகள் முதலான ததீ3யர்க்கும் இவள்ஸம்ப3ந்த4மடியாக வருகிற புருஷகாரத்வமிறேயுள்ளது ; இவளைப்போலே ஸ்வதஸ் ஸித்3த4மன்றே. ஆகையிறே “ एतत्सापेक्षसम्बन्धात् अन्येषाममलात्मनाम्। देवीसूरिगुरूणां च घटकत्वं न तु स्वतः।।” (ஏதத்ஸாபேக்ஷஸம்ப3ந்தா4த் அந்யேஷாமமலாத்மநாம்| தே3வீஸுரிகு3ரூணாம் ச க4டகத்வம், நது ஸ்வத:।।) என்று தீ3பஸங்க்3ரஹத்திலே ஜீயரருளிச்செய்தது. உபாயத்வமும், “कृष्णं धर्मं सनातनम् ” (க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதநம்) என்று ஸநாதந த4ர்மமாகச் சொல்லப்படுகிற அவனுக்கே ஸ்வதஸ் ஸித்3த4மாய், ததீ3யர்க்கு ததா3ஸத்தியடியாக வருகிறதிறேயுள்ளது. ஆகையாலே, பிராட்டிக்குப் புருஷகாரத்வமும், ஈஶ்வரனுக்கு உபாயத்வமும் நிரூபக மாகத் தட்டில்லை. இவ்வர்த்த2த்தை வெளியிடுகைக்காக வாய்த்து, இவரிப்படியருளிச்செய்தது. இப்படி உபப்3ரும்ஹணமான ப்ரப3ந்த4த்3வயத்தாலும் ப்ரதிபாதி3க்கப்படுகிற புருஷகாரத்வமும், உபாயத்வமும் உபப்3ரும்ஹ்யமான வேதா3ந்தத்தில் உக்தமான ஸ்த2லமேதென்னில், கட2வல்ல்யுபநிஷத்ஸித்3த4மான த்3வயத்தில் பூர்வவாக்யத்திலே உப4யமும் சேர உக்தமிறே. இச்சேதநனுக்கு இருவரோடும் (ஸம்) ப3ந்த4முண்டாயிருக்க, ஈஶ்வர ஸமாஶ்ரயணத்துக்க இவள் புருஷகாரமாகவேண்டுகிறது என்னென்னில், மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்ஸல்யாதிரேகத்தாலும், அவனைப்போலே காடி2ந்யமார்த3வங்கள் கலந்திருக்கையன்றிக்கே, கேவல மார்த3வமேயாய், பிறர் கண்குழிவு காணமாட்டாத ப்ரக்ருதியாகையாலும், விமுக2ரையும் அபி4முக2ராக்குகைக்கு க்ருஷி பண்ணு மவளாகையாலும், குற்றவாளர்க்கும் கூசாமல் வந்து காலிலே விழலாம்படி யிருப்பாளாய் – பும்ஸ்த்வ ப்ரயுக்தமான காடி2ந்யத்தோடே பித்ருத்வ ப்ரயுக்தமான ஹிதபரதையையுமுடையனாய், குற்றங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு க்ரூரத3ண்ட3ங்களைப் பண்ணுகையாலே, குற்றவாளர்க்கு முன் செல்லக்குடல் கரிக்கும்படியாயிருக்கும் ஈஶ்வரனை, உசிதோபாயங்களாலே குற்றங்களையடைய மறப்பித்துக்கூட்டி விடுமவளுமாயிருக்கையாலே, அபராத4மே வடிவான இச்சேதநன் அவனை ஆஶ்ரயிக்குமளவில், இவள் புருஷகாரம் ஆகவேணும், ஆகையிறே, அவனை உபாயமாக வரிக்க இழிகிறவளவில், இவளைப் புருஷகாரமாக முன்னிடுகிறது. 116
- புருஷகாரமாம்போது– க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.
- அவ:- அநந்தரம், புருஷகாரத்தின்படிகளை விஸ்தரேண உபபாதி3க்கக்கோலி, ப்ரத2மத்திலே புருஷகாரத்வத்துக்கு அவஶ்யா பேக்ஷித கு3ணங்களை அருளிச்செய்கிறார் (புருஷகாரமாம்போது ) என்று தொடங்கி,
வ்யா:-(புருஷகாரமாம்போது) என்றது- புருஷகாரமாமிடத்தில் என்றபடி. ‘க்ருபையாவது- பரது3:க்கா2ஸஹிஷ்ணுத்வம், பாரதந்த்ர்யமாவது- பராதீ4நத்வம். அநந்யார்ஹத்வமாவது-தத்3வ்யதிரிக்த விஷயாநர்ஹத்வம். இவை புருஷகாரத்வத்துக்கு அவஶ்யா பேக்ஷிதமானபடி யென்னென்னில்; சேதநர் ஸம்ஸாரத்தில் படுகிற து:க்க2ங்கண்டு பொறுக்கமாட்டாமல், ஈஶ்வரனோடே இவர்களைச் சேர்க்கைக்கு உடலான யத்நம் பண்ணுகைக்கு க்ருபை வேணும். ஸ்வதந்த்ரனை வஶீகரிக்கும்போது அநுவர்த்தநத்தாலே வஶீகரிக்கவேண்டுகையாலே பாரதந்த்ர்யம் வேணும், ‘நம்மையொழிந்ததொரு விஷயத்துக்கு அர்ஹமன்றியே, நமக்கே அதிஶயகரமாயிருக்கும் வஸ்துவாகையாலே, நம் கார்யமன்றே சொல்லுகிறது’ என்று. சொன்னபடி அவன் செய்கைக்கு உறுப்பாகையாலே அநந்யார்ஹத்வம் வேணும். ஆகையால், இவை மூன்றும் புருஷகாரத்வத்துக்கு அவஶ்யாபேக்ஷிதமிறே.
ஈஶ்வரக்ருபையிற் காட்டில் இவள்க்ருபைக்கு விஶேஷமென்னென்னில், ஈஶ்வரனாவான் நிரங்குஶ ஸ்வதந்த்ரனாய், நிக்3ரஹாநுக்3ரஹங்களிரண்டுக்கும் கடவனாய், சேதநகர்மங்களை நிறுத்தறுத்துத் தீத்துமவனாகையாலே, அவனுடைய க்ருபை ஸ்வாதந்த்ர்யத்தாலே அமுக்குண்டு கிடந்து, ஓரோத3ஶைகளிலே தலையெடுக்கக் கடவதாயிருக்கும். இவள் அநுக்3ரஹைக ஶீலையாகையாலே, இவருடைய க்ருபைக்கு வேறொன்றல் ஓரபி4ப4வமில்லாமையாலே எப்போதும் ஒருபடிப்பட்டிருக்கும். ஆகையால் இவளுடைய க்ருபை கரையழிந்திருக்கும், ஸம்ப3ந்த4த்தில் வ்யாவ்ருத்திபோலேயாய்த்து க்ருபையில் வ்யாவ்ருத்தியும், இப்படியிருக்கையாலேயிறே இவளை ஆஶ்ரயிப்பார்க்கு வேறெரு புருஷகாரம் தேடவேண்டா தொழிகிறது.
ஈஶ்வர விஷயத்தில் இவளுடைய பாரதந்த்ர்யாநந்யார்ஹத்வங்களும், ஸ்வரூபப்ரயுக்தமான மாத்ரமன்றிக்கே, “ह्रीश्च ते लक्ष्मीश्च पत्न्यौ” (ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ ) என்றும், “विष्णुपत्नी” (விஷ்ணுபத்நீ ) என்றும் சொல்லுகிற பத்நீத்வ ப்ரயுக்தமாயும், “अहन्ता ब्रह्मणस्तस्य साऽहमस्मि सनातनी” (அஹந்தாப்3ரஹ்மணஸ் தஸ்ய ஸாऽஹமஸ்மி ஸநாதநீ) என்றும், “श्रीवत्सवक्षा नित्श्री:” (ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ:) என்றும் சொல்லுகிற ஸ்வரூப நிரூபகத்வாதி3 ஸித்3த4மான அநந்யத்வ ப்ரயுக்தமாயுமிருக்கும். இப்படியிருக்கையாலேயிறே அல்லாதார்க்கடைய மிது2நஶேஷத்வமும், இவளொருத்திக்கும் ததே3க ஶேஷத்வமுமாய்த்து. இந்த அவ்யவதா4நேந உண்டான ஸம்ப3ந்த4த்தாலேயிறே இவளுக்கு ஈஶ்வரனை வஶீகரிக்குமளவில் புருஷகாரம் வேண்டாதொழிகிறது. இம்மூன்று கு3ணத்திலும் வைத்துக்கொண்டு, க்ருபையானது “श्रिञ्-सेवायाम्” (ஸ்ரீஞ்–ஸேவாயாம்) என்கிற தா4துவிலே நிஷ்பந்நமான ஸ்ரீஶப்3த3த்தில் “श्रीयते” (ஸ்ரீயதே) என்கிற கர்மணி வ்யுத்பத்தியிலும், பாரதந்தர்யாநந்யார்ஹத்வங்களிரண்டும் “श्रयते” (ஶ்ரயதே) என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும், நித்ய யோக3வாசியான மதுப்பிலும் ஸித்3த4மிறே. 7.
- பிராட்டி முற்படப் பிரிந்தது, தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக; நடுவிற் பிரிந்தது, பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக; அநந்தரம் பிரிந்தது, அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.
- அவ:- இந்த க்ருபாதி3த்ரயத்தையும் எல்லாருமறியும்படி தானே வெளியிட்டருளின வைப4வத்தை, ஸ்ரீராமாயணத்தில் இவளுக்குச் சொல்லப்பட்ட விஶ்லேஷ த்ரயத்தாலும் த3ர்ஶிப்பிக்கிறார் மேல் (பிராட்டி) என்று தொடங்கி வாக்யத்ரயத்தாலே.
வ்யா:- ( பிராட்டி ) இத்யாதி3 – அதாவது- “देवत्वे देवदेहेयं मनुष्वत्वे च मानुषी। विष्णोर्देहानुरूपां वै करोत्येषात्मनस्तनुम् ।।” (தே3வத்வே தே3வதே3ஹேயம் மநுஷ்யத்வே சமாநுஷீ। விஷ்ணோர் தே3ஹாநுரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ் தநும் ।।) என்கிறபடியே, நாயகனான ஸர்வேஶ்வரனுடைய தத்தத3வதார ஸஜாதீயமான விக்3ரஹபரிக்3ரஹம் பண்ணி வந்து அவதரிக்குமவளாகையாலே, “राघवत्वेऽभवत्सीता” (ராக4வத்வேऽப4வத் ஸீதா) என்கிறபடியே, அவன் சக்ரவர்த்திதிருமகனானவாறே தத3நுரூபமாகத் தானும் ஜநகராஜன் திருமகளான பிராட்டி, த3ண்ட3காரண்யத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ராவணன் பிரித்தான் என்றொரு வ்யாஜத்தாலே ப்ரத2மம் பெருமாளைப் பிரிந்து லங்கைக்கெழுந்தருளிற்று. “देव्या कारुण्यरूपया” (தே3வ்யா காருண்யரூபயா) என்று தத்3கு3ணஸாரத்வத்தாலே காருண்யந்தானாகச் சொல்லும்படியான தன்னுடைய பரமக்ருபையை ப்ரகாஶிப்பிக்கைக்காக- என்கை. எங்ஙனேயென்னில், தே3வஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருக்கையாலும், அவ்விருப்பிலே தன்னை அல்லும் பகலும் தர்ஜநப4ர்த்ஸ்நம்பண்ணி அருவித்தின்ற க்ரூரராக்ஷஸிகள், ராவணன் பராஜிதனாகவும், பெருமாள் விஜயிகளாகவும் த்ரிஜடை ஸ்வப்நம் கண்டத்தாலே பீ4தபீ4தைகளாய் நடுங்குகிற தஶையிலே, “भवेयं शरणं हि व:” (ப4வேயம் ஶரணம் ஹி வ:) என்று. “நீங்கள் நோவுபடுகிற ஸமயத்துக்கு நான் இருந்தேனே, நீங்களஞ்சவேண்டா” என்று அப4யப்ரதா4நம் பண்ணுகையாலும், அது உக்திமாத்ரமாய்ப் போகாமே, ராவணவதா4நந்தரம் தனக்கு ஶோப4நம் சொல்லவந்த திருவடி, ”அவர்களைச் சித்ரவத4ம் பண்ணும்படி காட்டித்தரவேணும்” என்ன. அவனோடே மன்றடி, “राजसंश्रयवश्यानाम्” (ராஜஸம்ஶ்ரய வஶ்யாநாம்) இத்யாதி3யாலே அவர்கள் குற்றத்தை கு3ணமாக உபபாதி3த்தும், “ मर्षयामीह दुर्बला” (மர்ஷயாமீஹ து3ர்ப3லா) என்று பிறர்நோவுகண்டு பொறுத்திருக்கத்தக்க நெஞ்சுரம் தனக்கில்லாமையை முன்னிட்டும், “कार्यं करुणं आर्येण न कश्चिन्नापराध्यति” (கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந்நாபராத்4யதி ) அவனுக்கும் இரங்கியல்லது நிற்கவொண்ணாதபடி உபதே3ஶித்தும், இப்படி ஒரு நிலை
நின்று, தானடியிற்பண்ணின ப்ரதிஜ்ஞாநுகு3ணமாக ஆர்த்3ராபராதை4களானவர்களை ரக்ஷிக்கையாலும் தன்னுடைய க்ருபையை வெளியிட்டாளிறே.
(நடுவில்) இத்யாதி3– நடுவிற்பிரிவாவது-மீண்டு பெருமாளுடனே கூடித் திருவயோத்4யையிலே எழுந்தருளித் திருவயிறு வாய்த்திருக்கிற காலத்திலே,
“अपत्यलाभो वैदेहि ममायं समुपस्थित:।किमिच्छसि सकामा त्वं ब्रूहि सर्वं वरानने।।” (அபத்யலாபோ4 வைதே3ஹி மமாயம் ஸமுபஸ்தி2த: | கிமிச்ச2ஸி ஸகாமா த்வம் ப்3ரூஹி ஸர்வம் வராநநே) என்று, ‘உனக்கு அபேக்ஷை ஏது?’ என்று கேட்டருள, “तपोवनानि पुण्यानि दर्ष्टुमिच्छामि राघव। गङ्गातीरनिविष्टानि ऋषीणां पुण्यकर्मणाम्। फलमूलाशिनां वीर पादमूलेषु वर्तितुम्।एष मे परम: काम: यन्मूलफलभोजिषु। अप्येकरात्रं काकुस्थ वसेयं पुणयकीर्तिषु।” ( தபோவநாநி புண்யாநி த்3ரஷ்டுமிச்சா2மி ராக4வ। க3ங்கா3தீர நிவிஷ்டாநி ருஷீணாம் புண்யகர்மணாம்।। ப2லமூலாஶிநாம் வீர பாத3மூலேஷு வர்த்திதும் । ஏஷ மே பரம: யந்மூலப2லபோ4ஜிஷூ ।। அப்யேகராத்ரம் காகுத்ஸ்த2 வஸேயம் புண்யகீர்த்திஷு।।) என்று தனக்குண்டான வனவாஸ ரஸ வாஞ்சை2யை விண்ணப்பஞ்செய்ய, அத்தைப்பற்றப் போகவிடுவாரைப்போலே, லோகா பவாத3 பரிஹாரார்த்த2மாகப் பெருமாள் காட்டிலே போகவிடப் போனது.
இப்பிரிவுக்கு ப்ரயோஜநம், பெருமாள் கட்டிலே வைத்தபோதோடு காட்டிலே விட்டபோதோடு வாசியற, அவருடைய நினைவையே பின்செல்ல வேண்டும்படியான தன்னுடைய பத்நீத்வப்ரயுக்தமான பாரதந்த்ர்யத்தைப் ப்ரகாஶிப்பிக்கை. கங்கைக்கரையேறின அநந்தரம் இளையபெருமாள் கனக்க க்லேஶப்பட்டுக்கொண்டு, பெருமாள் திருவுள்ளமாய் விட்டருளின கார்யத்தை விண்ணப்பம் செய்ய, அத்தைக்கேட்டு மிகவும் ப்ரலபித்து. “न खल्वद्यैव सौमित्रे जीवितं जाह्नवीजले । त्यजेयं राघवं वंशे भर्तुर्मा परिहास्यति।।” ( ந க2ல்வத்3யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீஜலே।
த்யஜேயம் ராக4வம் வம்ஶே ப4ர்த்துர்மா பரிஹாஸ்யதி ।।) என்றாளிறே; இத்தால்-ஆற்றாமையின் கனத்தாலே முடிந்துபிழைக்கை தேட்டமாகாநிற்கச்செய்தேயும், அது செய்யமாட்டாதே பெருமாள் நினைவைப் பின்சென்று தன் ப்ராணனை நோக்கிக்கொண்டிருக்க வேண்டும்படியான பாரதந்த்ர்யத்தையிறே ப்ரகாஶிப்பித்தது. பிறர்க்காக ஜீவிக்கவேண்டும் பரதந்த்ரர்க்கு , முடிவு தேட்டமானாலும் முடியப் போகாதே. “மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே” (திருவாய்மொழி 5-4-3) என்றாரிறே ஆழ்வார். ப்ரத2ம விஶ்லேஷத்தில் பத்துமாஸத்துக்குள்ளே, படுவதெல்லாம் பட்டவள், “पतिर्हि दैवतं नार्या: पतिर्बन्धु: पतिर्गति:। प्राणैरपि प्रियं तस्मात् भर्तु: कार्यं विशेषत:।।” (பதிர்ஹி தை3வதம் நார்யா: பதிர்ப3ந்து4: பதிர்க3தி:। ப்ராணைரபி ப்ரியம் தஸ்மாத் ப4ர்த்து : கார்யம் விஶேஷத:।।) என்று தானருளிச்செய்தபடியே, ‘பதி சித்தாநுவிதா4நமே நமக்கு ஸ்வரூபம்’ என்னும் பாரதந்த்ர்ய புத்3தி4யாலேயிறே அநேக ஸம்வத்ஸரம் பாடாற்றியிருந்தது. ஆக, இப்படி இப்பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாளிறே.
(அநந்தரம்) இத்யாதி3-அநந்தரத்தில் பிரிவாவது- மீண்டு பெருமாள் ஸந்நிதி4யிலே வந்திருக்கச்செய்தே. பிரிந்து, பிறந்தகத்திலே புக்குவிட்டது. இப்பிரிவுக்கு ப்ரயோஜநம்.- “अनन्या राघवेणाहं भास्करेण प्रभा यथा” (அநந்யா ராக4வேணாஹம் பா4ஸ்கரேண ப்ரபா4 யதா2) “अनन्या हि मया सीता” (அநந்யா ஹி மயா ஸீதா ) என்று உப4யஸம்மதமான தன்னுடைய அநந்யத்வப்ரயுக்தமான அநந்யார்ஹத்வத்தை ஸர்வஸம்மதமாம்படி ப்ரகாஶிப்பிக்கை. எங்ஙனேயென்னில், பெருமாள் அஶ்வமேத4ம் பண்ணியருளாநிற்கச்செய்தே. ஸ்ரீவால்மீகிப4க3வானுடைய நியோக3த்தாலே குஶலவர்கள் வந்து ஸ்ரீராமாயணத்தைப் பாடிக்கொண்டு திரியாநிற்க, அத்தைப் பெருமாள் திருச்செவிசாத்தி, ஸந்நிதி4யிலே அவர்களையழைத்து. விஶேஷஜ்ஞரெல்லாரையும் கூட்டி, அவர்கள் பாட்டுக் கேளாநிற்கிற நாளிலே, அவர்களைப் பிராட்டியினுடைய பிள்ளைகளென்றறிந்த அநந்தரம், பிராட்டியளவிலே திருவுள்ளம் சென்று, ‘தனக்கேற ஶூத்3தை4யாகில், கடுக இத்திரளிலே நாளை வந்து ப்ரத்யயமுக2த்தாலே தன் ஶுத்3தி4யை ப்ரகாஶிப்பிப்பாளாக’ என்று தூ3தமுகே2ந பெருமாள் மஹர்ஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்துவிட, அப்படியே ஸ்ரீவால்மீகிப4க3வானை முன்னிட்டுக்கொண்டு அந்த மஹாபரிஷத்திலே
பெருமாள்ஸந்நிதி4யிலே வந்து ஒடுங்கி நிற்கச்செய்தே, ஸ்ரீவால்மீகி ப4க3வான், இவள் , ஸுத்3தை4யென்னுமிடத்தைப் பல முக2த்தாலும் சொல்ல, பெருமாளும் ‘ இவள் ஸுத்3தை4யென்னுமிடம் நானுமறிவன். மஹர்ஷி சொன்னதுவே போரும்; ஆனாலும் லோகாபவாத3 பரிஹாரார்த்த2மாக ஒரு ப்ரத்யயம் இத்திரளிலே பண்ணவேணும்’ என்று திருவுள்ளமானபடியாலே, “सर्वान् समागतान् दृष्ट्वा सीता काषायवासिनी। अब्रवीत्प्राञ्जलिर्वाक्यं अधोदृष्टिरवाङ्मुखी।।” (ஸர்வாந் ஸமாக3தாந் த்3ருஷ்ட்வா ஸீதா காஷாயவாஸிநீ! அப்3ரவீத் ப்ராஞ்ஜலிர் வாக்யம் அதோ4த்3ருஷ்டிரவாங்முகீ2।) என்கிறபடியே கையுமஞ்ஜலியுமாய்க் கவிழ்தலையிட்டுக்கொண்டு நின்று, “यथाऽहं राघवादन्यं मनसाऽपि न चिन्यते।तथा मे माधवी देवी विवरं दातुमर्हति।।मनसा कर्मणा वाचा यथा रामं समर्थये।तथा मे माधवी देवी विवरं दातुमर्हति।।यथैतत्सत्यमुक्तं मे वेद्मि रामात्परं न च।तथा मे माधवी देवी विवरं दातुमर्हति।। (யதா2ऽஹம் ராக4வாத3ந்யம் மநஸாऽபி ந சிந்தயே। ததா2 மே மாத4வீ தேவீ விவரம் தா3துமர்ஹதி।। மநஸா கர்மணா வாசா யதா2 ராமம் ஸமர்த்த2யே। ததா2 மே மாத4வீ தேவீ விவரம் தா3துமர்ஹதி।। யதை2தத் ஸத்யமுக்தம் மே வேத்3மி ராமாத்பரம் நச। ததா2 மே மாத4வீ தேவீ விவரம் தா3துமர்ஹதி।।) என்று ஶபத3ம்பண்ண, “यथा शपन्त्यां वैदेह्यां प्रादुरासीन्महाद्भुतम् । भूतलादुत्थितं दिव्यं सिंहासनमनुत्तमम् ।।ध्रियमाणं शिरोभिस्तु नागैरमितविक्रमै:।दिव्यं दिव्येन वपुषा सर्वरत्नविभूषितम्।।तस्मिंस्तु धरणी देवी बाहुभ्यां गृह्य मैथिलीम्।स्वागतेनाभिनन्द्यैनां आसने चोपवेशयत्।।तामासनगतां दृष्ट्वा प्रवोशन्तीं रसातलम्। पुष्पवृष्टिरविच्छिन्ना दिव्या सीतामवाकिरत्।।(ததா2 ஶபந்த்யாம் வைதே3ஹ்யாம் ப்ராது3ராஸீந் மஹாத்3பு4தம்। பூ4தலாது3:த்தி2தம் தி3வ்யம் ஸிம்ஹாஸநமநுத்தமம்।। த்4ரியமாணம் ஶிரோபி4ஸ்து நாகை3ரமிதவிக்ரமை: ।தி3வ்யம் தி3வ்யேந வபுஷா ஸர்வரத்நவிபூ4ஷிதம்।। தஸ்மிம்ஸ்து த4ரணீ தே3வீ பா3ஹுப்4யாம் க்3ருஹ்ய மைதி2லீம்। ஸ்வாக3தேநாபி4 நந்த்3யைநாமாஸநே சோபவேஶயத்।। தாமாஸநக3தாம் த்3ருஷ்ட்வா ப்ரவேஶந்தீம் ரஸாதலம் ।புஷ்ப வ்ருஷ்டிரவிச்சி2ந்தா தி3வ்யா ஸீதாமவாகிரத் ।।) என்று – அவ்வளவிலே பூ4மியில் நின்றும் ஒரு தி3வ்ய ஸிம்ஹாஸநம் வந்து தோன்ற, அதிலே, ஸ்ரீபூ4மிப்பிராட்டி இவளை ஸ்வாக3தப்ரஶ்ந பூர்வகமாக இரண்டு கையாலும் எடுத்துக்கொண்டுபோய் வைக்க, ஆஸநக2தையாய்க்கொண்டு ரஸாதலத்தை ப்ரவேஶியா நிற்கிற இவளைக்கண்டு தி3வ்யபுஷ்பவ்ருஷ்டி இடைவிடாமல் இவள் மேலே விழுந்தது-என்கையாலே, இப்பிரிவிலே தன்னுடைய அநந்யார்ஹத்வத்தை ப்ரகாஶிப்பித்தாளிறே.
ஆக, இவ்வவதாரத்தில் இவளுக்குச் சொல்லப்பட்ட விஶ்லேஷத்ரயத்துக்கும் ஹேது, இக்கு3ணங்களை இப்படி வெளியிடுகையாய்த்து. இங்ஙனன்றாகில், அநபாயிநியாய், அகர்மவஶ்யையாயிருக்கிற இவளுக்கு, கர்மவஶ்யரைப்போலே இப்படிப் பிரிவு வருகைக்கு யோக்3யதை யில்லையிறே. தன்னுடைய புருஷகாரத்வோபயோகி3யான கு3ணங்களையும், புருஷகாரத்வத்தையும் ப்ரகாஶிப்பிக்கைக்காக வந்த அவதாரமிறே இது. ஆகையிறே “यदुतान्य दुदाहरन्ति सीतावतारमुखमेतदमुष्य योग्या” (யது3தாந்யது3 தா3ஹரந்தி ஸீதாவதாரமுக2மேதத3முஷ்ய யோக்3யா )என்று ப4ட்டருமருளிச்செய்தது. இப்படிச் சேதநர் பக்கல் அநுக்3ரஹத்துக்குடலான க்ருபையையும், ஈஶ்வரன் பக்கல் அணுகி வஶீகரிக்கைக்குடலான பாரதந்த்ர்யாதி3களையும் தானேவெளியிட்டது- ஶாஸ்த்ரங்களில் கேட்கிற மாத்ரமன்றிக்கே, அநுஷ்டா2நபர்யந்தமாகக்காண்கையாலே, தன்னைப் புருஷகாரமாகப் பற்றுவார்க்கு ருசி விஶ்வாஸங்களுறைக்கைக்குறுப்பாக. 8.
- அவ:-ஏவம்பூ4தகு3ண விஶிஷ்டையான இவளுடைய புருஷகாரத்வம் தோற்றுவது எங்கே? என்ன அருளிச்செய்கிறார் மேல் (ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்கள்) என்று தொடங்கி.
- ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும்.
வ்யா:-புருஷகாரத்வமாவது- க4டகத்வம். இவளுக்கு, அவனோடு கூடியிருக்கும் த3ஶையிலும், நீங்கியிருக்கும் த3ஶையிலும் ப்ரகாஶிக்கும்- என்கை. ஸம்ஶ்லேஷ த3ஶையிலே-இளையபெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிறபோது, பெருமாள் நிறுத்திப்போவதாகத் தேடினவளவிலே, “என்னைக்கூடக்கொண்டு போகவேணும்’ என்று” “स भ्रातुश्चरणौ गाढं निपीड्य रघुनन्दन:। सीतामुवाचातियशा: राघवं च महाव्रतम्।।” (ஸ ப்4ரதுஶ்சரணௌ கா3ட4ம் நிபீட்3ய ரகு4நந்த3ந:। ஸீதாமுவாசாதியஶா: ராக4வம் ச மஹாவ்ரதம்।।) என்கிறபடியே ஶரணம் புகுகிறவளவிலும்; பஞ்சவடியிலே எழுந்தருளின போது, “நீரும் நிழலும் வாய்த்திருப்பதொரு ப்ரதே3ஶத்தைப் பார்த்துப் பர்ணஶாலையைச் சமையும்” என்று பெருமாள் அருளிச்செய்ய, ‘நம் தலையிலே ஸ்வாதந்த்ர்யத்தை வைத்தபோதே பெருமாள் நம்மைக்கைவிட்டார்’ என்று விக்ருதராய், “एवमुक्तस्तु रामेण लक्ष्मणस्संयताञ्जलि:।सीतासमक्षं काकुस्थं इदं वचनमब्रवीत्।।परवानस्मि काकुस्थ त्वयि वर्षशतं स्थिते।स्वयं तु रुचिरे देशे क्रियतामिति मां वद।।” (ஏவமுக்தஸ்து ராமேண லக்ஷ்மணஸ்ஸம்யதாஞ்ஜலி:। ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்த2ம் இத3ம் வசநமப்3ரவீத்।। பரவா நஸ்மி காகுத்ஸ்த2 த்வயி வர்ஷஶதம் ஸ்தி2தே। ஸ்வயம் து ருசிரே தே3ஶே க்ரியதாமிதி மாம் வத3।।) என்கிறபடியே, தம்முடைய பாரதந்த்ர்யத்தைப் பெறுகைக்காகக் கையுமஞ்ஜலியுமாய் நின்று அபேக்ஷிக்கிறவளவிலும், பிராட்டியைப்புருஷகாரமாக முன்னிட்டுத் தம்மபேக்ஷிதம் பெறுகையாலும்; ஆஸுரப்ரக்ருதியான ஜயந்தன் காகரூபத்தைக்கொண்டு வந்து, ஜநநி பக்கலிலே அக்ருத்ய ப்ரவ்ருத்தனாக, “क: क्रीडति सरोषेण पञ्चवक्त्रेण भोगिना” (க: க்ரீடதி ஸரோஷேண பஞ்சவக்த்ரேண போகி3நா) என்று பெருமாள் அவன்மேலே சீறித் தலையை யறுப்பதாக ப்3ரஹ்மாஸ்த்ரத்தை ப்ரயோகி3க்க, “स पित्रा च परित्यक्तः सुरैश्च समहर्षिभिः। त्रीन् लोकान् संपरिक्रम्य तमेव शरणं गत:।।” (ஸ பித்ரா ச பரித்யக்த: ஸுரைஶ்ச ஸமஹர்ஷிபி4:। த்ரீந் லோகாந் ஸம்பரி க்ரம்ய தமேவ ஶரணம் க3த: ।।) என்கிறபடியே எங்கும் சுற்றித்திரிந்தவிடத்திலும் ஒரு புகலிடம் இல்லாமையாலே போக்கற்று ஶரணம் புக “ स तं निपतितं भूमौ शरण्यश्शरणागतम् । वधार्हमपि काकुत्स्थः कृपया पर्यपालयत् ॥” (ஸ தம் நிபதிதம் பூ4மௌ ஶரண்யஶ்ஶரணாக3தம்। வதா3ர்ஹமபி காகுத்ஸ்த2: க்ருபயா பர்யபாலயத்।। ) என்றும், “पुरत: पतितं देवी धरण्यां वायसं तदा।तच्छिर: पादयोस्तस्य योजयामास जानकी।।तमुत्थाप्य करेणाथ कृपापीयुषसागर:।ररक्ष रामो गुणवान् वायसं दययैक्षत।। (புரத: பதிதம் தே3வீ த4ரண்யாம் வாயஸம் ததா3। தச்சி2ர: பாத3யோஸ்தஸ்ய யோஜயாமாஸ ஜாநகீ।। தமுத்தா2ப்ய கரேணத2 க்ருபா பீயூஷ ஸாக3ர:। ரரக்ஷ ராமோ கு3ணவாந் வாயஸம் த3யயைக்ஷத।।) என்றும் ஸ்ரீராமாயண பாத்3ம புராணங்களில் சொல்லுகிறபடியே, இவள் புருஷகாரமாகப் பெருமாள் ரக்ஷிக்கை யாலும்; விஶ்லேஷத3ஶையிலே- “इह सन्तो नवा सन्ति सतो वा नानुवर्तसे। तथाहि विपरीता ते बुद्धिराचारवर्जिता।।” (இஹ ஸந்தோ நவா ஸந்தி ஸதோ வா நாநுவர்த்தஸே। ததா2ஹி விபரீதா தே பு3த்3தி4ராசார வர்ஜிதா।।) இத்யாதி3 யாலே, விபரீதபு3த்3தி4யான ராவணனைப் பெருமான் திருவடிகளிலே சேர்க்கைக்கு விரகுபார்க்கையாலும், ராவணவதா4நந்தரம் ராக்ஷஸிகளைச் சித்ரவத4ம் பண்ணுவதாக உத்3யுக்தனாய் நிற்கிற திருவடியைக் குறித்து, “पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम। कार्यं कारुणमार्येण न कश्चिन्नापराध्यति।।” (பாபாநாம் வா ஶுபாநாம் வா வதா4ர்ஹாணாம் ப்லவங்க3ம கார்யம் கருணமார்யேண நகஶ்சிந் நாபராத்4யதி ।।) என்று. அவனிரங்கத்தக்க வார்த்தைகளைச் சொல்லி அவர்களபராத4ங்களைப் பொறுப்பிக்கையாலும்;-உப4யதஶையிலும் இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றதிறே. திருவடி, ராக்ஷஸிகளை அபராதா4நுகு3ணம் த3ண்டிக்கும்படி காட்டித்தரவேணு மென்றவளவில், பிராட்டி அவனுடனே மன்றாடி ரக்ஷித்தவித்தனையன்றோ . 4 “मातर्मैथिलि राक्षसीस्त्वयि तदैवार्द्रापराधास्त्वया रक्षन्त्या पवनात्मजात् लघुतरा रामस्य गोष्ठी कृता। काक तं च विभीषणं शरणमित्युक्तिक्षमौ रक्षतस्सा नः सान्द्रमहागसस्सुखयतु क्षान्तिस्तवाकस्मिकी।।” (மாதர் மைதி2லி ராக்ஷஸீஸ் த்வயி ததை3வார்த்3ராபராதா4ஸ்த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகு4தரா ராமஸ்ய கோஷ்டீ2 க்ருதா। காகம் தஞ்ச விபீ4ஷணம் ஶரண மித்யுக்திக்ஷமௌ ரக்ஷதஸ் ஸா நஸ் ஸாந்த்3ர மஹா க3ஸஸ் ஸுக2யது க்ஷாந்திஸ்தவாகஸ்மிகீ।।) என்று பவநாத்மஜன் நிமித்தமாக ரக்ஷித்தாள் என்றன்றே ப4ட்டரும் அருளிச்செய்தது. ‘அவ்விடத்தில் புருஷீகரித்தமை எங்ஙனே?’ என்னில், ப3லாத்காரத்தாலன்றிக்கே அநுஸாரத்தாலே அபராத4ங்களைப் பொறுப்பிக்கையாலே புருஷகாரத்வம் என்கிறது. “திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிறே” (முமுக்ஷப்படி 129) என்று திருவடி விஷயமாகவும் புருஷீகரித்தமையை அருளிச்செய்தாரிறே இவர் தாமே. ஆகையால் இரண்டு தஶையிலும் இவள் புருஷகாரத்வம் தோற்றுமென்கிற மாத்ரத்தைச் சொல்லுகிற இவ்வாக்யத்தில் இதுவும் கூட்டக் குறையில்லை. 9.
- ஸம்ஶ்லேஷ த3ஶையில் ஈஶ்வரனைத் திருத்தும் ; விஶ்லேஷ த3ஶையில் சேதநனைத் திருத்தும்.
- அவ:- இவ்வுப4ய த3ஶையிலும் இவள் புருஷீகரிக்கும் ப்ரகாரம் என்னென்ன அருளிச்செய்கிறார் (ஸம்ஶ்லேஷ த3ஶையில்) என்று தொடங்கி.
வ்யா:-ஈஶ்வரனைத் திருத்துகையாவது- அபராத4த்தையே பார்த்து “” (க்ஷபாமி) “” (ந க்ஷமாமி) என்றிருக்குமிருப்பைக் குலைத்து அங்கீ3காரோந்முக2னாக்குகை ; சேதநனைத் திருத்துகையாவது-அக்ருத்யகரணாதி3ஶீலனாய் பகவத் விமுக2னாய்த் திரிகிற ஆகாரத்தைக் குலைத்து ஆஶ்ரயணோந் முக2னாக்குகை, ஸம்ஶ்லேஷ த3ஶையில், இளைய பெருமாளுக்காக ஈஶ்வர விஷயத்திலும், விஶ்லேஷ த3ஶையில் ராக்ஷஸிகளுக்காகத் திருவடி விஷயத்திலும் புருஷீகரித்தமை, உப4ய த3ஶையிலும் புருஷகாரத்வம் தோற்றும் என்கிற மாத்ரத்துக்குக் கூட்டிக் கொள்ளலாயிருந்ததாகிலும், ப்ராகரணிகமான அர்த்த2ம் ஸம்ஸாரி சேதநனையும் ஈஶ்வரனையும் சேரவிடுகையாகையாலே இவ்வாக்யத்துக்கு இப்படியே அர்த்த2மாகக்கடவது. ஆகையால் ஈஶ்வரனோடு தான் கூடியிருக்கும் த3ஶையில் -சேதநன் ஆஶ்ரயணோந்முக2னாய் வந்திருக்கச் செய்தே, பூர்வாபராத4த்தைப் பார்த்து ஈஶ்வரன் அங்கீ3கரியாதிருக்குமளவில், அவன் ஸ்வாதந்த்ர்யத்தைத் தவிர்த்து க்ருபாதி3 கு3ணங்களைக் கிளப்பி இவனை அங்கீ3கரிக்கும்படி யாக்குகையும்; பிரிந்திருக்கும் த3ஶையில்-ஈஶ்வரன் அங்கீ3காரோந்முக2னாய் வந்திருக்கச்செய்தே, இச்சேதநன் கர்மாநுகு3ணமாக விமுக2னாயிருக்குமளவில், இவன் வைமுக்2யத்தை மாற்றி ருசியை விளைப்பித்து ஆஶ்ரயணோந்முக2னாக்குகையும்- இவள் இரண்டு தலையையும் திருத்துகையாவது. ஆகவிப்படி அங்கீ3கார விரோதி4யான ஸ்வாதந்த்ர்யத்தை மாற்றி அங்கீ3காரத்துக்குடலான க்ருபாதி3களை உத்3ப4விப்பிக்கையாலும், ஆஶ்ரயண விரோதி4யான வைமுக்2யத்தை மாற்றி ஆஶ்ரயண ருச்யாதி3களை ஜநிப்பிக்கையாலும், “शृृृ हिंसायां” (ஶ்ரூ ஹிம்ஸாயாம்) என்கிற தா4துவிலும், “शृृृ विस्तारे” (ஶ்ரூ விஸ்தாரே) என்கிற
தா4துவிலும் நிஷ்பந்தமான ஸ்ரீஶப்3த3த்தில் “शृणाति”, “शृृृणाति” (ஶ்ருணாதி, ஶ்ரூணாதி)
என்கிற வ்யுத்பத்தித்3வயார்த்த2மும் இவ்விடத்திலே தோற்றுகிறது. “शृणाति निखिलान् दोषान् शृृृणाति च गुणैर्जगत् ” (ஶ்ருணாதி நிகி2லாந் தோ3ஷாந் ஶ்ரூணாதி ச கு3ணைர்ஜக3த்) என்று.
இவ்யுத்பத்தித்3வயமும் சேதந பரமாய்த் தோற்றிற்றே யாகிலும் x (ஈஶ்வரனைத் திருத்தும்) என்கிற விடத்திலும் இந்த ந்யாயம் தோற்றுகையாலே இப்படிச் சொல்லக்குறையில்லை.
- இருவரையும் திருத்துவதும் உபதேஶத்தாலே.
- அவ:-இருவரையும் திருத்துவது எவ்வழியாலே? என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (இருவரையும்) என்று தொடங்கி.
வ்யா:- ஈஶ்வரனைத் திருத்துவது – இச்சேதநனுடைய அபராத4ங்களைக் கணக்கிட்டு நீரிப்படித் தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறொரு புகலுண்டோ ? உமக்கும் இவனுக்குமுண்டான ஸம்ப3ந்த4 விஶேஷத்தைப் பார்த்தால் “உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது” (திருப்பாவை 28) என்கிறபடியே குடநீர் வழித்தாலும் போகாததொன்றன்றே? ஸ்வம்மான இவனை லபி4க்கை ஸ்வாமியான உம்முடைய பேறாயன்றோ இருப்பது; எதிர் சூழல் புக்குத் திரிகிற உமக்கு நான் சொல்லவேணுமோ? ரக்ஷண ஸாபேக்ஷனாய் வந்த இவனை ரக்ஷியாதபோது உம்முடைய ஸர்வரக்ஷகத்வம் விகலமாகாதோ? ‘அநாதி3 காலம் நம்முடைய ஆஜ்ஞாதிலங்க4நம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கிலக்காய்ப் போந்த இவனை அபராதோ4சிதத3ண்ட3ம் பண்ணாதே அத்தைப் பொறுத்து அங்கீ3கரித்தால் ஶாஸ்த்ரமர்யாதை3 குலையாதோ?’என்றன்றோ திருவுள்ளத்தில் ஓடுகிறது; இவனை ரக்ஷியாதே அபராதா4நுகு3ணமாக நியமித்தால் உம்முடைய க்ருபாதி3 கு3ணங்கள் ஜீவிக்கும்படியென்? அவை ஜீவித்ததாவது இவனை ரக்ஷித்தாலன்றோ; ‘ நியமியாதபோது ஶாஸ்த்ரம் ஜீவியாது, ரக்ஷியாத போது க்ருபாதி3கள் ஜீவியாது. என் செய்வோம்?’ என்றஞ்சவேண்டா; ஶாஸ்த்ரத்தை விமுக2ர் விஷயமாக்கி, க்ருபாதி3களை அபி4முக2ர் விஷயமாக்கினால் இரண்டும் ஜீவிக்கும்; ஆனபின்பு இவனை ரக்ஷித்தருளீர்- என்னும் உபதே3ஶத்தாலே. இவ்வுபதே3ஶ க்ரமம், இவர்தாம் அருளிச்செய்த பரந்தபடியிலும், ஆச்சான்பிள்ளையருளிச்செய்த பரந்த ரஹஸ்யத்திலும் விஸ்தரேண காணலாம். “पितेव त्वत्प्रेयान् जननि परिपूर्णागसि जने हितस्रोतोवृत्त्या भवति च कदाचित्कलुषधीः। किमेतन्निर्दोषः क इह जगतीति त्वमुचितैरुपायैर्विस्माये स्वजनयसि माता तदसि न:।।” (பிதேவ த்வத்ப்ரேயாந் ஐநநி பரிபூர்ணாக3ஸி ஜநே ஹிதஸ்ரோதோவ்ருத்த்யா ப4வதி ச கதா3சித்கலுஷதீ4:। கிமேதந்நிர்தோ3ஷ: க இஹ ஜக3தீதி த்வமுசிதைருபாயைர் விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத3ஸி ந: ।।) என்று, அபராத4 பரிபூர்ண சேதநவிஷயமாக ஹிதபரனான ஸர்வேஶ்வரன் திருவுள்ளம் சீறும்படியையும், அத்த3ஶையில்” இச்சீற்றத்துக்கடியென்? என்பது. “இவன் தீரக்கழியச் செய்த அபராத4ம்” என்று அவன் சொன்னால், “மணற்சோற்றில் கல்லாராய்வார் உண்டோ ? இந்த ஜகத்தில் அபராத4மற்றிருப்பாரார்?” என்பதாய், உசிதோபாயங்களாலே அபராத4ங்களை மறப்பித்து, பிராட்டி சேர்த்தருளும் படியையும் அருளிச்செய்கையாலே, உபதே3ஶத்தாலே ஈஶ்வரனைத் திருத்தும்படியை ஸங்க்3ரஹேண ப4ட்டரும் அருளிச்செய்தாரிறே.
அவதார த3ஶையிலும், “प्राणसंशयमापन्नं दृष्ट्वा सीताऽथ वायसम्। त्राहि त्राहीति भर्तारं उवाच दयया विभुम्” (ப்ராணஸம்ஶயமாபந்நம் த்3ருஷ்ட்வா ஸீதாऽத2 வாயஸம்। த்ராஹி த்ராஹீதி ப4ர்த்தாரம் உவாச த3யயா விபு4ம் ।।) என்று-வாசாமகோ3சரமான மஹாபராத4த்தைப் பண்ணின காகத்தைத் தலையறுப்பதாக விட்ட ப்3ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண்ணழிவு கற்பித்துப் பெருமாள் ரக்ஷித்தருளிற்றும்-இவளுபதே3ஶத்தாலே என்னுமிடம் பாத்3மபுராணத்திலே சொல்லப்பட்டதிறே.
இனி சேதநனைத் திருத்துவது-உன்னபராத4த்தின் கனத்தைப் பார்த்தால் உனக்கோரிடத்திலும் காலூன்றவிடமில்லை, ஈஶ்வரனாவான் நிரங்குஶ ஸ்வதந்த்ரனாகையாலே அபராத4ங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு அறுத்தறுத்துத் தீற்றாநிற்கும்; இவ்வநர்த்த2த்தைத் தப்பவேண்டில் அவன் திருவடிகளிலே தலைசாய்க்கையொழிய வேறொரு வழியில்லை; “அபராத4 பரிபூர்ணனான என்னை அவன் அங்கீ3கரிக்குமோ? தண்டியானோ? என்று அஞ்சவேண்டா; ஆபி4முக்2ய மாத்ரத்திலே அகி2லாபராத4ங்களையும் பொறுக்கைக்கும், போ4க்3யமாகக் கொள்ளுகைக்கும் ஈடான கு3ணங்களாலே புஷ்கலனென்று லோகப்ரஸித்3த4னாயிருப்பானொருவன்; ஆனபின்பு, நீ ஸுக2மேயிருக்கவேணுமாகில் அவனை ஆஶ்ரயிக்கப்பார் என்னும் பரமஹிதோபதே3ஶத்தாலே. அப்படி எங்கே கண்டோமென்னில், பாபிஷ்ட2னாய் வழிகெட நடந்து திரிகிற ராவணனைக் குறித்து, “मित्रमौपयिकं कर्तुं राम: स्थानं परीप्सता। वधं चानिच्छता घोरं त्वयाऽसौ पुरुषर्षभः।।विदितस्स हि धर्मज्ञः शरणागतवत्सलः। तेन मैत्री भवतु ते यदि जीवितुमिच्छसि।।”
(மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம: ஸ்தா2நம் பரீப்ஸதா।
வத4ம் சாநிச்ச2தா கோ4ரம் த்வயாஸௌ புருஷர்ஷப4:।।
விதி3தஸ்ஸ ஹி த4ர்மஜ்ஞ: ஶரணாக3தவத்ஸல:।
தேந மைத்ரீ ப4வது தே யதி3 ஜீவிதுமிச்ச2ஸி।।)
என்று, பெருமாளோடு உறவு பண்ணுகை காண் உனக்கு ப்ராப்தம்; அது செய்யப் பார்த்திலையாகில், வழியடிப்பார்க்கும் தரையிலே கால்பாவி நின்று வழியடிக்கவேணுமே: உனக்கோரிருப்பிடம் வேண்டியிருந்தாயாகிலும் அவரைப் பற்றவேணும்; அவரதல்லாததொரு ஸ்த2லமில்லை காண்; “எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதிற்காட்டில் பட்டுப்போகவமையும்” என்றிருந்தாயோ, உன்னைச் சித்ரவத4ம் பண்ணாமல் நற்கொலையாகக் கொல்லும்போதும் அவரைப் பற்றவேணுங்காண்; “நான் பண்ணின அபராத4த்துக்கு என்னை அவர் கைக்கொள்வரோ?” என்றிருக்க வேண்டா; ஆபி4முக்2யம் பண்ணினால், முன்பு செய்த அபராத4த்தைப் பார்த்துச் சீறும் அந்தப் புன்மை.அவர் பக்கலில்லை காண்; அவர் புருஷோத்தமர் காண்; ஶரணாக3தி பரமத4ர்மம் என்று அறியுமவராய், ஶரணக3த தோ3ஷம் பாராத வத்ஸலராக எல்லாரும் அறியும்படிகாண் பெருமாளிருப்பது. நீ ஜீவிக்க வேணுமென்று இச்சி2த்தாயாகில் அவரோடு உனக்கு உறவு உண்டாகவேணும் – என்று இப்படி அச்சமுறுத்தி உபதே3ஶித்தாளிறே; அவன் திருந்தாதொழிந்தது இவ ளுடைய உபதே3ஶக்குறையன்றே. அவனுடைய பாப ப்ராசுர்யமிறே. இப்படி உப4யரையும் உபதே3ஶத்தாலே திருத்தும் என்கையாலே, “श्रु-श्रवणे” (ஶ்ரு-ஶ்ரவணே) என்கிற தா4துவிலே நிஷ்பந்நமான ஸ்ரீஶப்3த3த்தில் “शृणोति”, “श्रावयति” (ஶ்ருணோதி, ஶ்ராவயதி) என்கிற வ்யுத்பத்திகளில் வைத்துக் கொண்டு “श्रावयति” (ஶ்ராவயதி) என்கிற வ்யுத்பத்த்யர்த்த2ம் சொல்லப்பட்டது. “श्रावयति” (ஶ்ராவயதி) என்கிறவிது ஈஶ்வர விஷயமாகவே பூர்வர்கள்க்3ரந்த3ங்களில் பலவற்றிலும் காணப்பட்டதாகிலும், “अथवा विमुखानामपि भगवदाश्रयणोपदेशः श्रावयितृत्वं, ‘ विदितस्स हि धर्मज्ञः शरणागतवत्सलः। तेन मैत्री भवतु ते यदि जीवितुमिच्छसि।।’ इति रावणं प्रति उपदेशात् ” (அத2வா விமுகா2நாமபி ப4க3வதா3ஶ்ரயணோபதே3ஶ: ஶ்ராவயித்ருத்வம், விதி3தஸ்ஸ ஹி த4ர்மஜ்ஞ: ஶரணாக3தவத்ஸல:। தேந மைத்ரீ ப4வது தே யதி3 ஜீவிதுமிச்ச2ஸி।।” இதி ராவணம் ப்ரதி உபதே3ஶாத்) என்று தத்வதீ3பத்திலே சேதநவிஷயமாகவும் ஜீயர் அருளிச்செய்கையாலே, இவ்விடத்திலும் சேதநவிஷயமாகவும் சொல்லக்குறையில்லை.11
12 உபதே3ஶத்தாலே இருவருடையவும் கர்மபாரதந்தர்யம் குலையும்
- அவ:-‘இவ்வுபதே3ஶத்தால் இரண்டு தலையிலும் ப2லிக்குமதேது?’ என்ன அருளிச்செய்கிறர் (உபதே3ஶத்தாலே) என்று தொடங்கி.
வ்யா:-அதாவது:-இப்படி இரண்டு தலைக்கும் தத்தத3நுகு3ணமாக இவள் பண்ணும் உபதே3ஶத்தாலேபுண்யபாபங்களின் வஶத்திலே இழுப்புண்டு ப4க3வத்3 விமுக2னாய்த் திரிகையாகிற சேதநனுடைய கர்மபாரதந்தர்யமும், ‘இவன் பண்ணின கர்மத்தை ப்ரதா4நமாக்கி அதுக்கீடாகவே செய்வனித்தனை’ என்று இவனுடைய ரக்ஷணத்தில் விமுக2னாயிருக்கையாகிற ஈஶ்வரனுடைய கர்மபாரதந்த்ர்யமும் நிவ்ருத்தமாம் என்கை, சேதநனுடைய கர்மபாரதந்த்ர்யம் அநாத்3யசித்ஸம்ப3ந்த4கார்யமான அவித்3யா நிப3ந்த4நம். ஈஶ்வரனுடைய கர்மபாரதந்த்ர்யம் நிரங்குஶ ஸ்வாதந்த்ர்ய கார்யமான ஸ்வஸங்கல்ப நிப3ந்த4நம், இவையிரண்டும்-அநாதி3 ஸித்3த4மாய்ப் போந்ததே யாகிலும், மாத்ருத்வ ஸம்ப3ந்த4த்தாலே சேதநனுக்கு ஆப்தையாய், மஹிஷீத்வ ஸம்ப3ந்த4த்தாலே ஈஶ்வரனுக்கு அபி4மதையுமான இவள் இரண்டு தலையும் நெஞ்சிளகி ஆஶ்ரயணாங்கீ3காராபி4 முக2மாம்படியாகப் பண்ணும் உபதே3ஶத்தாலே நிவ்ருத்தமாகத் தட்டில்லை. 12.
- உபதே3ஶத்தாலே மீளாதபோது சேதநனை அருளாலே திருத்தும். ஈஶ்வரனை அழகாலே திருத்தும்.
- அவ:-‘இவ்வுபதே3ஶத்தால் இவர்கள் மீளாத போது இவள் செய்வது என்?’ என்ன அருளிச்செய்கிறார். (உபதே3ஶத்தாலே மீளாத போது ) என்று தொடங்கி,
வ்யா:-சேதநன் மீளாமைக்கு அடி-அநாதி3காலம் “யாதானும்பற்றி நீங்கும்” (திருவிருத்தம் 95) என்கிற படியே ப4க3வத்3விமுக2னாய், விஷயாந்தர ப்ரவணனாய்ப் போருகையால் வந்த து3ர்வாஸநாதி3கள். ஈஶ்வரன் மீளாமைக்கு அடி-‘அபராத4ரகு3ணம் இவனை ஶிக்ஷிக்கவேணும்’ என்னும் அபி4ஸந்தி4யாலே நின்ற நிலை இளகாமல் நிற்கைக்கு உடலான நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யம். இவ்வோஹேதுக்களாலே இரண்டு தலையும் தன்னுடைய உபதே3ஶத்தால் ஸ்வஸ்வகர்ம பாரதந்த்ர்யத்தில் நின்றும் மீளாதவளவில்; (சேதநனை அருளாலே திருத்துகையாவது)- ஐயோ! இவனுடைய து3ர்ப்பு3த்3தி4 நீங்கி அநுகூலபு3த்3தி4யுண்டாகவேணும்’ என்று அவன் திறத்தில் தான் பண்ணுகிற “பங்கயத்தாள் திருவருள்” (திருவாய்மொழி 9-2-1) என்கிற பரமக்ருபையாலே அவன் பாபபு3த்3தி4 குலைந்து ப4க3வத3பியமுக2னாம்படி பண்ணுகை. (ஈஶ்வரனையழகாலே திருத்துகையாவது) -”ஓங்காண்போ , உனக்குப் பணியன்றோ இது” என்று உபதே3ஶத்தை உதறினவாறே, கண்ணைப் புரட்டுதல் கச்சை நெகிழ்த்தல் செய்து தன்னழகாலே அவனைப் பிச்சேற்றித் தான் சொன்னபடி செய்தல்லது நிற்கமாட்டாதபடிபண்ணி அங்கீ3காரோந்முக2னாக்குகை, ஆக, (புருஷகாரமாம்போது) (வா 7) என்று தொடங்கி இவ்வளவாக, புருஷகாரத்வோபயோகி3களான கு3ணவிஶேஷங்களையும், அவைதன்னைத்தானே வெளியிட்டபடியையும், ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிரண்டிலும் புருஷீகரிக்கையையும் தத்ப்ரகாரவிஶேஷங்களையும் சொல்லிற்றாய்த்து. 13.
- அறியாத அர்த்தங்களையடைய அறிவித்து, ஆசார்ய க்ருத்யத்தையும், புருஷகார க்ருத்யத்தையும், உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபா4ரதத்தில் உபாயவைப4வ(மு)ம் சொல்லிற்றாய்த்து.
- அவ:- க்ருபாதிகளை வெளியிட்டமை சொன்னபோதே ஸ்ரீராமாயணத்தில் புருஷகாரவைப4ம் உக்தமானபடியை உபபாதி3த்தாராய், மஹாபா4ரதத்தில் உபாயவைப4வம் உக்தமானமையை உபபாதி3க்கிறார் மேல் (அறியாத) என்று தொடங்கி,
வ்யா:- அஜ்ஞாத ஜ்ஞாபநம் ஆசார்ய க்ருத்யமிறே, ஶரண்யக்ருத்யமன்றே. ஆகையிறே, “என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய்” (திருவாய்மொழி 2-3-2) என்று ப்ரியகரத்வ ஹிதகரத்வங்களாகிற மாதா பித்ரு க்ருத்யங்களை ஸ்வயமேவ தமக்குச்செய்த உபகாரத்தை அருளிச்செய்த அநந்தரம், ஆசார்யன் செய்யும் விஶேஷோபகாரத்தையும் தானே தமக்குச் செய்தமையை அருளிச்செய்கிற ஆழ்வார் “அறியாதன அறிவித்த” (திருவாய்மொழி 2-3-2) என்று அருளிச்செய்தது. இவ்விடத்தில் இவரருளிச்செய்கிற வாக்யந்தான் அந்த தி3வ்யஸுக்திக்கு ஸூசகமாயிறேயிருக்கிறது. (அறியாத அர்த்த2ங்களையடைய அறிவிக்கை) யாவது:- தத்வ விவேகம் தொடங்கி ப்ரபத்திபர்யந்தமாக அர்ஜுநனுக்கு முன்பு அஜ்ஞாதமாயிருந்த அர்த்த2ங்களையெல்லாம் அறிவிக்கை; தே3ஹாத்மாபி4மாநியாய், தே3ஹாநுப3ந்தி4களான ப3ந்து4க்கள் பக்கலிலே அஸ்தா2நே ஸ்நேஹத்தைப் பண்ணிநிற்கிற இவனை ப்ரக்ருத்யாத்ம விவேகாதி3களாலே தெளிவிக்கவேண்டுகையாலே,
“ न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः। न चैव न भविष्यामः सर्वे वयमतःपरम्॥
देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा। तथा देहान्तरप्राप्ति: धीरस्तत्र न मुह्यति।।”)
(ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி4பா:। ந சைவ ந ப4விஷ்யாம: ஸர்வே வயமத: பரம்।।
தே3ஹிநோऽஸ்மிந் யதா2 தே3ஹே கௌமாரம் யௌவநம் ஜரா। ததா2 தே3ஹாந்தரப்ராப்தி: தீ4ரஸ்தத்ர ந முஹ்யதி।।)
இத்யாதி3களாலே, ப்ரக்ருத்யாத்மவிவேகம் ஆத்ம பரமாத்மவிவேகம் ஆகிற தத்வவிவேகத்தையும்
“ अन्तवन्त इमे देहाः नित्यस्योक्ताश्शरीरिणः। अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत॥
न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः। अजो नित्यश्शाश्वतोऽयं पुराणः न हन्यते हन्यमाने शरीरे॥
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि। तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देही।।”
“(அந்தவந்த இமே தே3ஹா: நித்யஸ்யோக்தாஶ்ஶரீரிண:। அநாஶிநோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்3யுத்4யஸ்வ பா4ரத।।
ந ஜாயதே ம்ரியதே வா கதா3சித் நாயம் பூ4த்வா ப4விதா வா ந பூ4ய:। அஜோ நித்ய்ஶ்ஶாஶ்வதோऽயம் புராண: ந ஹந்யதே ஹந்யமானே ஶரீரே।।
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா2 விஹாய நவானி க்3ருஹ்ணாதி நரோऽபராணி। ததா2 ஶரீராணி விஹாய ஜீர்ணாணி அந்யானி ஸம்யாதி நவானி தே3ஹீ।।)”
இத்யாதி3களாலே ஆத்ம நித்யத்வ தே3ஹாத்3யநித்யத்வங்களையும் ப்ரத2மம் உபதே3ஶித்து-இவனுடைய ஸ்வாதந்த்ர்ய ப்4ரமத்தைத் தவிர்க்கைக்காக,
“ भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च। अहंकार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा॥
अपरेयं, इतस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम्। जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत्।।”
(பூ4மிராபோऽநலோ வாயு: க2ம் மநோ பு3த்3தி4ரேவ ச। அஹங்கார இதீயம் மே பி4ந்நா ப்ரக்ருதிரஷ்டதா4 ।।
அபரேயம், இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்3தி4 மே பராம்। ஜீவபூ4தாம் மஹாபா3ஹோ யயேத3ம் தா4ர்யதே ஜக3த்।।)
என்கிறபடியே சேதநாசேதநஶரீரியாய்,
“सर्वस्य चाहं हृदिसन्निविष्ट: मत्त: स्मृतिर्ज्ञानमपोहनं च ।”
(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி3 ஸந்நிவிஷ்ட: மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச।) என்றும்,
“ईश्वरस्सर्वभुतानां हृद्देशेऽर्जुन तिष्ठति। भ्रामयन् सर्वभूतानि यन्त्रारूढानि मायया।।”
(ஈஶ்வரஸ் ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3 தே3ஶேர்ऽஜுந திஷ்ட2தி। ப்4ராமயந் ஸர்வ பூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா।।)
என்றும் சொல்லுகிறபடியே ஸகலஜந ஹ்ருத3யஸ்த2னாய் நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கையாகிற தன்னுடைய நியந்த்ருத்வத்தையும்; அப்படி ஸர்வ நியந்தாவாய்க்கொண்டு ஸர்வஸ்மாத்பரனாயிருக்குமளவன்றிக்கே, “परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां। धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे।।” (பரித்ராணாய ஸாதூ4நாம் விநாஶாய ச து3ஷ்க்ருதாம்। த4ர்ம ஸம்ஸ்தா2பனார்த்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3।।) என்று அவதார ப்ரயுக்தமான தன்னுடைய ஸௌலப்4யத்தையும் “समोऽहं सर्व भूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिय:” (ஸமோஹம் ஸர்வபூ4தேஷு ந மே த்3வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய:) என்று தன்னுடைய ஆஶ்ரயணீயத்வே ஸாம்யத்தையும்; “प्रकृते: क्रियमाणानि गुणै: कर्माणि सर्वश:।अहंकारविमूढात्मा कर्ताऽहं इति मन्यते।।)” (ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு3ணை: கர்மாணி ஸர்வஶ: ।அஹங்காரவிமூடா4த்மா கர்த்தாऽஹமிதி மந்யதே।।) என்று 1 அஹங்கார தோ3ஷத்தையும், “यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चित:।इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मन:।।” (யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விப்ஶ்சித:| இந்த்3ரியாணி ப்ரமாதீ2 நி ஹரந்தி ப்ரஸப4ம் மந:) என்று 2 இந்த்3ரிய ப்ராப3ல்யத்தையும், “असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्” (அஸம்ஶயம் மஹாபா3ஹோ மநோ து3ர்நிக்3ரஹம் சலம்) என்று அந்த ப்ராப3ல்யத்தில் மற்றை இந்த்3ரியங்களைப்பற்றவும் 3 மநஸ்ஸினுடைய ப்ராதா4ந்யத்தையும் த3ர்ஶிப்பிக்கையாலே ஆஶ்ரயண விரோதி4களையும்;
“तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्पर:। वशेहि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता।।”
(தாநி ஸர்வாணி ஸ்ம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:। வஶேஹி யஸ்யேந்த்3ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா) என்றும்,
“यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् । ततस्ततो नियम्यैतत् आत्मन्येव वशं नयेत्।।”
(யதோ யதோ நிஶ்சரதி மநஶ்சஞ்சலமஸ்தி2ரம்। ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வஶம் நயேத்।।)
என்றும், ஆஶ்ரயணோபகரணங்களான பா3ஹ்யாப்4யந்தர கரணங்களை ஸ்வாதீ4நமாக நியமிக்கும் ப்ரகாரத்தையும்;
“चतुर्विधा भजन्ते मां जनास्सुकृतिनोऽर्जुन। आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ।।”
(சதுர்விதா4 ப4ஜந்தே மாம் ஜநாஸ்ஸுக்ருதிநோऽர்ஜுந। ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தா2ர்த்தீ2 ஜ்ஞாநீ ச ப4ரதர்ஷப4।।)
என்று ஆஶ்ரயிக்கும் அதி4காரிகளுடைய சாதுர்வித்4யத்தையும்;
“द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन् दैव आसुर एव च। दैवी संपत् विमोक्षाय निवन्धायासुरी मता”
(த்3வௌ பூ4தஸர்கௌ3 லோகேऽஸ்மிந் தை3வ ஆஸுர ஏவ ச।தை3வீ ஸம்பத் விமோக்ஷாய நிப3ந்தா4யாஸுரீ மதா।।)
என்று தன்னுடைய ஆஜ்ஞாநுவர்த்தநபரரானவர்கள் தே3வர்கள், தத3திவர்த்தநபரரானவர்கள் அஸுரர்கள் என்று தே3வாஸுர விபா4கத்தையும்;
“हन्त ते कथयिष्यामि विभूतिरात्मनश्शुभा:। प्राधान्यत: कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे।।”
(ஹந்த தே கத2யிஷ்யாமி விபூ4திராத்மஶ்ஶுபா4:। ப்ராதா4ந்யத: குருஶ்ரேஷ்ட2 நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே।।)
என்று தொடங்கி, இவ்விபூ4தியில் ஸமஸ்த பதா3ர்த்த2ங்களுக்கும் வாசகமான ஶப்3த3ங்கள் தன்னளவிலே பர்யவஸிக்கும்படி இவற்றையடைய ஸ்வப்ரகாரமாகக்கொண்டு வ்யாபித்து நிற்கும்படியையும்;
“दिव्यं ददामि ते चक्षु: पश्य मे योगमैश्वरम् ”
(தி3வ்யம் த3தா3மி தே சக்ஷு: பஶ்ய மே யோக3மைஶ்வரம்)
என்று திவ்ய சக்ஷஸ்ஸைக் கொடுத்து,
“पश्यामि देवान् तव देव देहे सर्वान् तथा भुतविशेषसङ्घान् । ब्रह्माणमीशं कमलासनस्थं ऋषींश्च सर्वान् उरगांश्च दीप्तान् ।।”
(பஶ்யாமி தே3வாந் தவ தே3வ தே3ஹே ஸர்வாந் ததா2 பூ4தவிஶேஷஸங்கா4ந்। ப்3ரஹ்மாணமீஶம் கமலாஸநஸ்த2ம் ருஷீம்ஶ்ச ஸர்வாந் உரகா3ம்ஶ்ச தீ3ப்தாந்।।)
இத்யாதி3யாலே தன்னுடைய விஶ்வரூபத்தைக்கண்டு பேசும்படி பண்ணுகையாலே, தானுகந்தார்க்கு திவ்யஜ்ஞாநத்தைக்கொடுத்துத் தன்படிகளை தர்ஶிப்பிக்கும் என்னுமத்தையும்;
“मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु। मामेवैष्यसि युक्त्वैवं आत्मानं मत्परायण:।।”
(மந்மநாப4வ மத்3ப4க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு। மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மாநம் மத்பராயண:।।|)
என்று. இப்படியிருந்துள்ள பரத்வஸௌலப்4யயுக்தனான தன் திருவடிகளை ப்ராபிக்கையாகிற பரம புருஷார்த்த2த்துக்கு உபாயமாயிருந்துள்ள கர்மஜ்ஞாந ரூபாங்க3 ஸஹிதையான ப4க்தியையும்;
“मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते” “तमेव चाद्यं पुरुषं प्रपद्ये” “तमेव शरणं गच्छ सर्वभावेन भारत”
(மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே”’ “தமேவ சாத்3யம் புருஷம் ப்ரபத்3யே ” ”தமேவ ஶரணம் க3ச்ச2 ஸர்வபா4வேன பா4ரத)
என்று அந்த ப4க்த்யங்க3மான ப்ரபத்தியையும், சரமஶ்லோகத்தாலே அந்த ப4க்த்யுபாயத்தின் து3ஷ்கரத்வாதி3களை உணர்ந்து ஶோகிப்பார்க்கு ஸுகரமுமாய், ஸ்வரூபாநுரூபமுமான உபாயம் ப்ரபத்தியென்னுமத்தையும் தானே அறிவித்தருளினானிறே. ஆகவிப்படி அறியாத அர்த்த2ங்களையெல்லாம் அறிவிக்கையாலே ஆசார்ய க்ருத்யத்தைத் தான் ஏறிட்டுக்கொண்டானென்கிறது.
இனி, புருஷகாரக்ருத்யமும் ஶரண்யனான தன்னதன்றே, பிராட்டி க்ருத்யமிறே.
“मत्प्राप्तिं प्रति जन्तूनां संसारे पततामधः। लक्ष्मीः पुरुषकारत्वे निर्दिष्टा परमर्षिभिः ।। ममापि च मतं ह्येतत् नान्यथा लक्षणं भवेत्।।”
(மத்ப்ராப்திம் ப்ரதி ஜந்தூநாம் ஸம்ஸாரே பததாமத4:। லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி3ஷ்டா பரமர்ஷிபி4:।। மமாபி ச மதம் ஹ்யேதத் நாந்யதா2 லக்ஷணம் ப4வேத்।।)
இத்யாதி3களாலே இதுதன்னை ப4க3வச்சா2ஸ்த்ரத்திலே தானே அருளிச்செய்தானிறே. இவனுக்குத் தத்வ ஜ்ஞாநாதி3களை உண்டாக்கிக் கொள்ளவேண்டுகையாலே ஆசார்யக்ருத்யத்தை ஏறிட்டுக்கொண்டானாகிருன்; புருஷகார க்ருத்யமேறிட்டுக்கொள்ள வேண்டுவானென்? அங்கீ3கரித்து விடவமையாதோ? என்னில் ; அங்கீ3காரத்துக்கு இதுவும் அவஶ்யாபேக்ஷிதமென்(மா)கையாலே; எங்ஙனேயென்னில் – இவ்வுபாயத்துக்குப் புருஷஸாபேக்ஷதையோபாதி புருஷகாரஸாபேக்ஷதையுமுண்டிறே. இவ்வுப4யஸாபேக்ஷதையும் உபாயவரணரூபமான பூர்வவாக்யத்தில் ப்ரத2ம சரம பத3ங்களிலே காணலாம். ஸ்ரீஶப்3த3த்தாலே புருஷகாரத்தையும், உத்தமனாலே அதி4காரியையுமிறே சொல்லுகிறது. ஆகையாலே, சேதநர் தன்னை உபாயமாகப் பற்றுமிடத்தில், ஸ்வாபராத4ப4யத்தாலே பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட, அவள் இவனபராத4 நிப3ந்த4நமான தன் திருவுள்ளத்தில் சீற்றத்தை ஆற்றிச்சேரவிட, கைக் கொள்ளுகை முறையாயிருக்க, அங்கனன்றிக்கே, இவனபராத4 நிப3ந்த4நமான தன் திருவுள்ளத்தின் கலக்கத்தையும் தானே தணித்துக்கொண்டு இவனைச் சேர்த்துக்கொள்ளுகையாலும், அதுதான் செய்கிற வளவில் அர்த்தி2த்வ நிரபேக்ஷமாகச் செய்கையாலும் புருஷகார க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொண்டான் என்கிறது.
இனி உபாயக்ருத்யம் தன்னதாயிருக்க, அத்தையும் தானே ஏறிட்டுக்கொண்டானென்கிறது
“त्वमेवोपायभूतो मे भव”
(த்வமேவோபாயபூ4தோ மே ப4வ )
என்று இவன் அர்த்தி2த்தால் கார்யம் செய்யவமைந்திருக்க, ‘நாமே இவனுக்கு உபாயமாய் அநிஷ்ட நிவ்ருத்த்யாதி3களைப் பண்ணக்கடவோம்’ என்று தானே ஏற்றுக் கொண்டு,
“मामेकं शरणं व्रज -सर्वपापेभ्यो मोक्षयिष्यामि ”
(மாமேகம் ஶரணம் வ்ரஜ-ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி) என்கையாலே; அல்லது
“उपायोपेयत्वे तदिह तव तत्वं न तु गुणौ”
(உபாயோபேயத்வே ததி3ஹ தவ தத்வம் ந து கு3ணௌ) என்கிற வஸ்துவுக்கு உபாய க்ருத்யம் வந்தேறியன்றிறே. உப4யலிங்க3 விஶிஷ்டதையாலே உபாயோபேயத்வங்களிரண்டும் ஸ்வதஸ் ஸித்3த4மாயிறே யிருப்பது. அன்றிக்கே, “உபேயமான தன்னை உபாயமாக்குகையாலே, உபாயக்ருத்யத்தை ஏறிட்டுக்கொண்டானென்கிறது” என்பாருமுண்டு. அது-பால் மருந்தாமாப்போலே, இவன் உபாயமாமிடமெங்கும் உள்ளதொன்றாகையாலே, அர்ஜுநனுக்கு இப்போது அஸாதா4ரணமாகச் செய்ததொன்றல்லாமையாலும், (உபாயம்) என்றே வஸ்துவை நிர்தே3ஶித்து, தத்3வைப4வம் சொல்லுகிற ப்ரகரணமாகையாலும் இவ்விடத்துக்கு உசிதமன்று. ஆன பின்பு கீழ்ச்சொன்னபடியே பொருளாகவேணும்.
ஆசார்யக்ருத்யம் ஏறிட்டுக்கொள்ளுகிறவளவில்,
“ कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वा धर्मसंमूढचेताः। यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्।” (கார்ப்பண்ய தோ3ஷோபஹதஸ்வபா4வ: ப்ருச்சா2மி த்வா த4ர்மஸம்மூட4சேதா:। யச்ச்2ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்3ரூஹி தந்மே ஶிஷ்யஸ்தேऽஹம் ஶாதி4 மாம் த்வாம் ப்ரபந்நம் ।।)
என்று, அவனர்த்தி2த்வம் உண்டாகையாலே அந்யக்ருத்யத்தைத் தான் ஏறிட்டுக் கொண்ட மாத்ரமே விவக்ஷிதமாகையாலும், புருஷகார க்ருத்யம் ஏறிட்டுக்கொள்ளுகிறவளவில், அந்ய க்ருத்யத்தை ஏறிட்டுக்கொண்டமையும், அது தன்னை அர்த்தி2த்வ நிரபேக்ஷமாக ஏறிட்டுக் கொண்டமையும் விவக்ஷிதமாகையாலும், ஸ்வக்ருத்யம் ஏறிட்டுக் கொள்ளுகிறவளவில், அர்த்தி2த்வ நிரபேக்ஷமாகச் செய்தவளவே விவக்ஷிதமாகையாலும் (தானே ஏறிட்டுக்கொள்ளுகையாலே) என்கிறவிது க்ருத்ய த்ரயத்திலும் யதா2யோக3ம் அந்வயிக்கக் கடவது; ஆசார்யன் அஜ்ஞாத ஜ்ஞாபநம் பண்ண, பிராட்டி புருஷீகரிக்க வந்து, தன்னை உபாயமாகப் பற்றினவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்த்யாதி3களைப் பண்ணிக் கொடுக்கவமைந்திருக்க, இவையெல்லாவற்றையும் தானே ஏறிட்டுக்கொண்டது வைப4வமிறே. (ஏறிட்டுக்கொள்ளுகையாலே மஹாபா4ரதத்தில் உபாயவைப4வம் சொல்லிற்றாய்த்து) என்றது ஏறிட்டுக்கொண்டமையை ப்ரதிபாதி3க்கையாலே சொல்லிற்றாய்த்து- என்றபடி.14.
- புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைப4வமாவது–தோ3ஷத்தையும் கு3ணஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே, அங்கீ3காரத்துக்கு அவைதன்னையே பச்சையாக்குகை.
- அவ:-ஆக, புருஷகரரோபாயங்களிரண்டுக்கும் அஸாதா4ரண வைப4வத்தை அருளிச்செய்தார் கீழ், உப4ய ஸாதா4ரண வைப4வத்தை அருளிச் செய்கிறார் மேல் (புருஷகாரத்துக்கும்) என்று தொடங்கி,
வ்யா:-தத்தத3ஸாதா4ரண வைப4வம் சொல்லுகையாலே புருஷகாரத்தையும் உபாயத்தையும் தனித் தனியே உபாதா3நம் பண்ணி அருளிச்செய்தார் கீழ். இது உப4யத்துக்கும் ஸாதா4ரண வைப4வமாகையாலே (புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும்) என்று தந்த்ரேண உபாதா3நம் பண்ணி அருளிச்செய்கிறார். உப4யத்துக்கும் அஸாதா4ரண வைப4வம் சொல்லுகிற இடங்களில், (இருவரையும் திருத்துவதும்) (வா. 11) இத்யாதி3யாலே, ஶாப்3த3மாகப் புருஷகார ஸ்வரூபமும், (உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே) (வா.14) என்கையாலே, ஆர்த்த2மாக உபாயஸ்வரூபமும் சொல்லப்பட்டது. இங்கு, உப4யஸ்வரூபகத2ந பூர்வகமாக வைப4வத்தை அருளிச்செய்கிறார் (தோ3ஷத்தையும் கு3ணஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே, அங்கீ3காரத்துக்கு அவைதன்னையே பச்சையாக்குகை) என்று. தோ3ஷமாவது- அக்ருத்யகரணாதி3 நிஷித்3தா4நுஷ்டா2நம். கு3ணஹாநியாவது-விஹிதாகரணம், இவையிரண்டையும் “मनोवाक्कायै:” (மநோவாக்காயை;) இத்யாதி3 சூர்ணையாலே எம்பெருமானார் அருளிச் செய்தாரிறே. “इदं कुरु” “इदं माकार्षी:” (இதம் குரு; இதம் மாகார்ஷீ:) என்று விதி4 நிஷேதா4த்மகமான ஶாஸ்த்ரந்தான் ப4க3வதா3ஜ்ஞாரூபமாயிறேயிருப்பது. “श्रुतिर्स्मृतिर्ममैवाज्ञा” (ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா) என்று தானே அருளிச்செய்தானிறே. ஏவம்பூ4தஶாஸ்த்ரத்தில் நிஷித்3த4த்தைச் செய்கையும், விஹிதத்தைச் செய்யாமையுமிறே, அநாதி3 காலம் “क्षिपामि” (க்ஷிபாமி) “न क्षमामि” (ந க்ஷமாமி) என்னும் ப4க3வந்நிக்3ரஹத்துக்கு இலக்காய்ப் போருகைக்குக் காரணம், (இவை இரண்டையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே) என்றது- ஆஶ்ரயணோந்முக2 சேதநக3தங்களான இவற்றை த3ர்ஶித்து. இவனை வேண்டோமென்று கைவிடாதே அங்கீ3கரிக்கும் மாத்ரமன்றிக்கே என்றபடி, (அங்கீ3காரத்துக்கு அவைதன்னையே பச்சையாக்குகை)யாவது- அப்படிப்பட்ட தோ3ஷ கு3ணஹாநிகள் தன்னையே முகமலர்ந்து அங்கீ3கரிக் கைக்குறுப்பான உபஹாரமாகக் கொள்ளுகை, உபேக்ஷியாமைக்கு ஹேது-த3யா க்ஷாந்திகள் பச்சையாகக் கொள்ளுகைக்கு ஹேது-வாத்ஸல்யம், சுவடுபட்ட தரையில் புல் கவ்வாத பசு தன் கடையில் நின்றும் விழுந்த கன்றினுடம்பின் வழும்பை போ4க்3யமாக விரும்புமாபோலே இருப்பதொன்றிறேயிது. இக்கு3ணத்துக்கொப்பதொரு கு3ணமில்லையிறே. ஆகையாலேயிறே “நிகரில் புகழாய்” (திருவாய்மொழி 6-10-10) என்று ஆழ்வார் அருளிச்செய்தது. உடையவரும், “अपारकारुण्यसौशील्यवात्सल्य” (அபார காருண்ய ஸௌஶீல்ய வாத்ஸல்ய) என்று கு3ணாந்தரங்களோடொக்க அருளிச்செய்திருக்கச் செய்தே. இதின் வ்யாவ்ருத்தி தோற்ற, மீளவும் “आश्रितवात्सल्यैकजलधे” (ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே4) என்றாறிறே. இவ்வாத்ஸல்யந்தான் மாத்ருத்வ ஸம்ப3ந்த4த்தாலே ஈஶ்வரனிலும் பிராட்டிக்கு அதிஶயித்திறேயிருப்பது. ஆகையாலே இருவரும் தாந்தாம் அங்கீ3கரிக்கும் த3ஶையில், இச்சேதநனுடைய தோ3ஷகு3ணஹாநிகளைப் பச்சையாகக்கொண்டு அங்கீ3கரிப்பர்கள்-என்கை .15.
- இரண்டும், இரண்டுங்குலையவேணும் என்றிருக்கில் இரண்டுக்கும் இரண்டும் உண்டாய்த்ததாம். 16.
- அவ:- இப்படிப் புருஷகாரமும் உபாயமும் தோ3ஷகு3ணஹாநிகள் குலைவதற்கு முன்னே அங்கீ3கரிக்கிறதென்? “அவை குலைந்தே அங்கீ3கரிக்கக் கடவோம்” என்றிருந்தால் வருவதென்? என்ன அருளிச்செய்கிறார் (இரண்டும்) என்று தொடங்கி.
வ்யா;- (இரண்டும்) என்கிறது புருஷகாரோபாயங்களை. (இரண்டும் குலையவேணும் என்றிருக்கை) யாவது-இவனை அங்கீ3கரிக்கும் போதைக்கு, “இவனுடைய தோ3ஷகு3ணஹாநிகளிரண்டும் போய்க் கொள்ளவேணும்” என்று நினைத்து ஆஶ்ரயணோந்முக2னான இவனை அங்கீ3கரியாதிருக்கை. இப்படியிருக்கில்; (இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை) யாவது புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் தோ3ஷகு3ண ஹாநிகள் இரண்டும் வருகை, எங்ஙனேயென்னில் . தோ3ஷம் வருகையாவது- “त्वं माता सर्वलोकानां देवदेवो हरि: पिता” (த்வம் மாதா ஸர்வலோகாநாம் தே3வ தே3வோ ஹரி: பிதா) “अखिलजगन्मातरम् ” (அகி2ல ஜக3ந் மாதரம்) “पितासि लोकस्य चराचरस्य” (பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய) என்கிறபடியே ஸகலசேதநர்க்கும் நிருபாதி4கமான தாயும் தமப்பனுமாகையாலே, இச்சேதநனுடைய நன்மை தீமைகள் இரண்டும் தங்களதாம்படியான உறவு உண்டாயிருக்க, இச்சேதநனுடைய தோ3ஷங்களைப் பார்த்து அங்கீ3கரியாமையாலே தாத்3ருஶ ஸம்ப3ந்த4துக்குக் கொத்தைவிளைகை. கு3ணஹாநி வருகையாவது- இவனுடைய து3:க்க2ம் (குற்றம்) கண்டிரங்காமையாலும், இவனுடைய தோ3ஷத்தை போக்3யமாகக் கொள்ளாமையாலும் க்ருபாவாத்ஸல்யங்களுக்கு ஹாநி வருகை. அத2வா-(இரண்டும் உண்டாய்த்ததாம்) என்கிற விடத்திலும், தோ3ஷகு3ணஹாநிகளாவன-அக்ருத்ய கரண க்ருத்யாகரணங்களாகவுமாம். புருஷகாரத்துக்கு அக்ருத்யகரணமாவது-ஈஶ்வரனயும் உட்பட தோ3ஷம் காணவொட்டாத தான், தோ3ஷாதி3கள்குலைந்தன்றி அங்கீ3கரியேன் என்றிருக்கை, க்ருத்யாகரணமாவது-இவனுடைய தோ3ஷாதி3கள் பாராதே கைக்கொண்டு ஈஶ்வரனோடே சேர்ப்பிக்கையாகிற ஸ்வக்ருத்யத்தைச் செய்யாமை. ஈஶ்வரனுக்கு அக்ருத்ய கரணமாவது-ஸம்ஸாரி சேதநருடைய தண்மையைப் பார்த்துக் கைவிடாதே, ஸ்வாபா4விக ஸம்ப3ந்த4மே ஹேதுவாக அத்3வேஷமே தொடங்கி உண்டாக்குகைக்கு எதிர்சூழல்புக்குத்திரிகிற ஸர்வபூ4தஸுஹ்ருத்தான தான், இச்சேதநனை அங்கீ3கரிக்குமளவில் “இவன் தோ3ஷாதி3கள் குலைந்தாலொழிய அங்கீ3கரியேன்” என்றிருக்கை. க்ருத்யாகரணமாவது- இவனுடைய தோ3ஷாதி3களைப் பாராதே கைக்கொண்டு ஸ்வக்ருத்யமான அநிஷ்ட நிவ்ருத்த்யாதி3களைப் பண்ணாமை. இதுதான் சேதநனுக்குச் சொன்ன அக்ருத்யகரணாதி3களைப்போலே ஶாஸ்த்ரத்தைப்பற்றச் சொல்லுகிறவை யன்றே. இவர்கள் ஸ்பா4வத்தைப்பற்றச் சொல்லுகிறவையித்தனையிறே. விமுக2ரையுமுட்பட தோ3ஷ கு3ணஹாநிகள் பச்சையாக மேல் விழுந்து அங்கீ3கரிக்கும் ஸ்வபா4வரான இவர்களுக்கு அபி4முக2 சேதநர்களை அங்கீ3கரிக்குமளவில் தோ3ஷாதி3கள் குலைய வேணும் என்றிருக்கைதான் முதலிலே கூடாமையாலே, இவர்களுக்கு இவை வருகைக்கு அவகாஶமில்லையிறே. ஆயிருக்கச் செய்தே, இப்படி அருளிச் செய்தது- இவ்வர்த்த2 தத்வமறியாதவர்களுக்கு-ஆஶ்ரயணோந்முக2 சேதநக3தங்களான தோ3ஷ கு3ணஹாநிகள் குலையவேணுமென்றிராமல் அவற்றுடனே அங்கீ3கரிக்கை இவர்களுக்கு அவஶ்யகரணீயம் – என்று அறிவிக்கைக்காக. 16
- இரண்டும் குலைந்தது என்றிருக்கில் இத்தலைக்கு இரண்டும் உண்டாய்த்ததாம்.
- அவ:- இப்படி, “தோ3ஷாதிகள் குலைந்தாலொழிய அங்கீ3கரியோம்” என்றிருக்கில், அத்தலைக்கு அவையிரண்டும் வருமென்னுமிடம் சொல்லி, “தோ3ஷாதி3கள் குலை(யப்)பட்டன்றோ நம்மை அங்கீ3கரித்தது” என்றிருக்கில் இத்தலைக்கு அவையிரண்டும் வருமென்கிறார் மேல் (இரண்டும் குலைந்தது) என்று தொடங்கி.
வ்யா:- (இரண்டும் குலைந்தது என்றிருக்கை) யாவது- இத்தனை நாளும் நம்மை அங்கீ3கரியாதிருந்தவர்கள் இன்று அங்கீ3கரித்தது நம் தோ3ஷாதி3கள் குலை(யப்)பட்டன்றோ. ஆகையால், நமக்கு அவை குலைந்தது என்று அநுஸந்தி4த்திருக்கை, இப்படி யிருக்கில், (இத்தலைக்கு இரண்டு முண்டாகை) யாவது அக்ருத்யகரணமும் க்ருத்யாகரணமும் வருகை. எங்ஙனேயென்னில்; இவ்வதி4காரிக்கு,- “அநாதி3காலம் அங்கீ3கரியாதவர்கள் இன்று நம்மை அங்கீ3கரித்தது நம்முடைய தோ3ஷகு3ணஹாநிகள் இரண்டும் குலைந்தவாறேயன்றே என்றநுஸந்தி4க்கை அக்ருத்யமாயிருக்க, அத்தைச்செய்கையாலும், “நீசனேன் நிறை வொன்றுமிலேன்” (திருவாய்மொழி 3-3-4) “अमर्याद:” (அமர்யாத3🙂 “बुद्ध्वा च नो च” (பு3த்3த்4வா ச நோ ச) “अतिक्रामन्नाज्ञां” (அதிக்ராமந்நாஜ்ஞாம்) இத்யாதி3ப்படியே நம்முடைய தோ3ஷகு3ணஹாநிகள் இப்போதளவாக ஒன்றும் குலைந்ததில்லையென்றும், இப்படியிருக்கச்செய்தே தோ3ஷாதி3களே பச்சையாக நம்மை அங்கீ3கரித்தருளுவதே! என்றும் அநுஸந்தி4க்கை க்ருத்யமாயிருக்க, அத்தைச் செய்யாமையாலும். இரண்டும் வருமிறே. 17.
- ராக்ஷஸிகள் தோ3ஷம் ப்ரஸித்3த4ம்.
- அவ:- “இப்படி, புருஷகாரமும் உபாயமும் தோ3ஷாதி3கள் பச்சையாக அங்கீ3கரித்தவிடமுண்டோ ?” என்னும் அபேக்ஷையிலே, “தத்தத3ங்கீ3காரம் பெற்ற ராக்ஷஸிகளுடையவும் அர்ஜுநனுடையவும் தோ3ஷங்களை த3ர்ஶிப்பிக்கவே அது ஸித்3தி4க்கும்” என்று நினைத்து, ப்ரத2மம் ராக்ஷஸிகள் தோ3ஷங்களை த3ர்ஶிப்பிக்கிறார் (ராக்ஷஸிகள்) என்று தொடங்கி,
வ்யா:- ஏகாக்ஷீ, ஏககர்ணீ முதலான எழுநூறு ராக்ஷஸிகளும், பரஹிம்ஸை பண்ணப்பெறில் உண்ணாதே தடிக்கும்படி ப்ரக்ருத்யா பாபஶீலைகளாய், பத்துமாஸம் ஒருபடிப்பட தர்ஜந ப4ர்த்ஸநம் பண்ணி நலிந்து போந்தவர்களிறே. (இவர்கள் தோ3ஷம் ப்ரஸித்3த4ம்) என்றது-ஸ்ரீராமாயணம் நடையாடும் தேஶத்தில் அறியாதார் இல்லை-என்றபடி. ஏவம் பூ4தைகளானவர்களைக் குறித்து. “राजसंश्रयवश्यानां” (ராஜ ஸம்ஶ்ரயவஶ்யாநாம்) “पापानां वा शुभानां वा” (பாபாநாம் வா ஶுபா4நாம் வா) என்று குற்றத்தை கு3ணமாக உபபாதி3த்து, திருவடியோடே மன்றாடி ரக்ஷிக்கையாலே. தோ3ஷமே பச்சையாக அங்கீ3கரித்தமை ப்ரஸித்3த4மென்று கருத்து. கு3ணஹாநி சொல்லாதொழிந்தது–தோ3ஷமே பச்சையாமிடத்தில் கு3ணஹாநி பச்சையாம் என்னுமிடம் சொல்ல வேண்டாவிறே- என்று. இவர்கள் தங்களுக்கு கு3ணஹாநியாவது-இடைவிடாமல் நலிந்து போருகிற விடத்தில், “இவளும் நம்மோபாதி ஒரு பெண் பிறந்தவளன்றோ!” என்றாகிலும் மறந்தும் அல்பம் நெஞ்சிரக்க முண்டாதல், “भवेयं शरणं हि व:” (ப4வேயம் ஶரணம் ஹி வ:)என்றதற்குப் பின்பும் நலிகிறவிடத்தில், “ஐயோ! இப்படிச் சொன்னவளன்றோ!” என்று சற்றும் நெஞ்சுளுக்குதல் செய்யாமை முதலானவை. 18.
- ஜிதேந்த்3ரியரில் தலைவனாய், ஆஸ்திகாக்3ரேஸரனாய், “கோஶவஸ்யாத்மா” என்று க்ருஷ்ணனுக்கு தா4ரகனாயிருக்கிற அர்ஜுநனுக்கு தோ3ஷம் ஏதென்னில்; ப3ந்து4க்கள் பக்கல் ஸ்நேஹமும், காருண்யமும், வத4பீ4தியும்.
- அவ:- இப்படி தோ3ஷப்ரஸித்3தி4 அர்ஜுநன் பக்கலில்லாமையாலும், கு3ணப்ரதை2யுண்டாகையாலும் “இவனுக்கு தோ3ஷமேது?” என்கிற ஶங்கையை அநுவதி3த்துக்கொண்டு தத்3தோ3ஷங்களை த3ர்ஶிப்பிக்கிறார் (ஜிதேந்த்3ரியரில்) என்று தொடங்கி.
வ்யா:-(ஜிதேந்த்3ரியரில் தலைவன்) என்றது “आभरणस्याभरणं प्रसाधनविधेः प्रसाधन विशेषः। उपमानस्यापि सखे प्रत्युपमानं वपुस्तस्या:।।” (ஆப4ரணஸ்யாப4ரணம் ப்ரஸாத4நவிதே4: ப்ரஸாத4நவிஶேஷ:। உபமாநஸ்யாபி ஸகே2 ப்ரத்யுபமாநம் வபுஸ் தஸ்யா:।।) என்னும் வைலக்ஷண்யமுடைய ஊர்வஶி வந்து மேல்விழ, முறை கூறி நமஸ்கரித்துக் கடக்க நின்றவனாகையாலே, இந்த்3ரியஜயம் பண்ணினாரில் தனக்கு மேற்பட்டார் இல்லாதவன் என்கை. (ஆஸ்திகாக்3ரேஸரன்) என்றது-த4ர்மாத4ர்ம பரலோக சேதநேஶ்வராதி3களுக்கு ப்ரதிபாத3கமான ஶாஸ்த்ரத்தில் ப்ராமாண்ய புத்3தி4யுடையவர்களுக்கு முன் நடக்குமவன் என்கை, (கேஶவஸ்யாத்மா என்று க்ருஷ்ணனுக்கு தா4ரகனாயிருக்கிற) என்றது- “” (அர்ஜுந: கேஶவஸ்யாத்மா க்ருஷ்ணஶ் சாத்மா கிரீடிந:) என்று. அந்யோந்யம் ப்ராண பூ4தராயிருப்பர்கள் என்கையாலே, இவனைப்பிரியில் க்ருஷ்ணன் த4ரிக்கமாட்டான் என்னும்படி அபி4மத விஷயமாயிருக்குமவன்- என்கை . (இப்படியிருக்கிற அர்ஜுநனுக்கு தோ3ஷமேது) என்று ஶங்கை ; (என்னில்) என்று தத3நுவாத3ம். தோ3ஷங்கள் தன்னைச் சொல்லுகிறது மேல்-(ப3ந்து4க்கள் பக்கல் ஸ்நேஹமும் காருண்யமும் வத4பீ4தியும்) என்று. இவற்றில் ஸ்நேஹகாருண்யங்கள் தோ3ஷங்களாகிறது-அஸ்தா2(நே)ந க்ருதங்களாகையாலே; வத4 பீ4தி தோ3ஷமாகிறது- ஸ்வத4ர்மத்தில் அத4ர்மபு,த்3த்4யா வந்ததாகையாலே; “अस्थानस्नेह कारुण्य धर्माधर्मधियाऽऽकुलम्” (அஸ்தா2ந ஸ்நேஹ காருண்ய த4ர்மாத4ர்மதி4யாऽऽகுலம்) என்றிறே ஆளவந்தாரருளிச்செய்தது. “धरमक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सव: ”(த4ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸம வேதா3 யுயுத்ஸவ:) என்கிறபடியே-யுத்3தே4ச்சை2யாலே இரண்டு தலையும் வந்தணை(ணி)ந்து நின்ற பின்பு, யுத்3த4மே கர்த்தவ்யமாயிருக்க, அத்த3ஶையிலே,
“न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा॥”
“येषामर्थे कांक्षितं नो राज्यं भोगास्सुखानि च। त इमेऽवस्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च ॥”
(ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகா2நி ச ।கிம் நோ ராஜ்யேந கோ3விந்த3 கிம் போ4கை3ர் ஜீவிதேந வா।। யேஷாமர்த்தே2 காங்க்ஷிதம் நேர ராஜ்யம் போ4கா3ஸ் ஸுகா2நிச। த இமேऽவஸ்தி2தா யுத்3தே4 ப்ராணந் த்யக்த்வா த4நாநி ச।।) இத்யாதி3ப்படியே “இவர்களைக் கொன்று நாம் ஜீவிப்பதொரு ஜீவநமுண்டோ?” என்று ப3ந்து4க்கள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் ஸ்வவர்ண விருத்3த4மாகையாலே நிஷித்3த4மிறே.
“तान् समीक्ष्य स कौन्तेयस्सर्वान् बन्धूनवस्थितान्। कृपया परयाऽऽविष्टो विषीदन्निदमब्रवीत्।।”
(தாந் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேயஸ் ஸர்வாந் ப3ந்தூ4நவஸ்தி2தாந்। க்ருபயா பரயாऽऽவிஷ்டோ விஷீத3ந்நித3மப்3ரவீத் ।।)
என்னும்படி அத்தஶையில் பண்ணின காருண்யமும், பஶ்வாலம்ப4நத்தில் காருண்யம்போலே நிஷித்3த4மிறே.
“कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् । कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन।।”
(கத2ம் ந ஜ்ஞேயமஸ்மாபி4: பாபாத3 ஸ்மாந்நிவர்த்திதும் ।
குலக்ஷயக்ருதம் தோ3ஷம் ப்ரபஶ்யத்3பி4ர்ஜநார்த3நா।।)
என்று தொடங்கி,
“अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् । यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः ।।”
(அஹோ ப3த மஹத் பாபம் கர்த்தும் வ்யவஸிதா வயம்। யத்3ராஜ்யஸுக2 லோபே4ந ஹந்தும் ஸ்வஜந முத்3யதா:।।) என்னுமளவும், ஸ்வவர்ண த4ர்மமான வத4த்திலே அத4ர்ம புத்3த்4யா பண்ணின பீ4தியும் அப்படியேயிறே. 19.
- த்3ரௌபதீ3 பரிப4வம் கண்டிருந்தது க்ருஷ்ணாபி4ப்ராயத்தாலே ப்ரதா4ந தோ3ஷம்.
- அவ:- இவையெல்லாம் அப்ரதா4நம்; இன்னமும் ப்ரதா4நதோ3ஷம் வேறேயென்கிருர் (த்3ரௌபதீ3) என்று தொடங்கி,
வ்யா:- முன்பு த்3ரௌபதி3யை து3ர்யோத4நாதி3கள் பரிப4விக்கிறபடியைக் கண்டிருக்கச்செய்தே, சூதிலே தோற்றமையை நினைத்து (அ)த4ர்மபீ4தியாலே பொறுத்திருந்தாலும், “गोविन्द पुण्डरीकाक्ष रक्ष मां शरणागताम् ” (கோவிந்த3 புண்ட3ரீகாக்ஷ ரக்ஷ மாம் ஶரணாக3தாம்) என்று க்ருஷ்ணனை ஶரணம் புகுந்த பின்பு பரிப4விக்கிறவளவில், “ப4க3வதா3ஶ்ரிதரைப் பிறர் பரிப4விக்கக் கண்டால் ஶக்தனாகில் விலக்கவேணும்; அஶக்தனாகில் இழவோடே அவ்வருகே போகவேணும்” என்னும் விஶேஷ ஶாஸ்த்ர மர்யாதை3யைப் பார்த்தாதல், தன்னளவில் க்ருஷ்ணனுக்குண்டான ஸ்நேஹ பக்ஷபாதங்களை நினைத்து, “அவனை ஶரணம் புகுந்தவள் பரிப4வப்படப் பார்த்திருந்தால், அவன் முகத்திலே நாளை விழிக்கும்படி என்!” என்றாதல், சடக்கென எழுந்திருந்து விலக்கவிறே அடுப்பது. அத்தைச் செய்யாதே, முன்புத்தையிற் காட்டில் ஒரு விஶேஷமற இருந்தானிறே. இதுவேயாய்த்து இவன்தோ3ஷங்கள் எல்லாவற்றிலும் ப்ரதா4நமாக க்ருஷ்ணன் திருவுள்ளத்திலே பட்டுக்கிடப்பது. அத்தைப்பற்ற (க்ருஷ்ணாபி4ப்ராயத்தாலே ப்ரதா4ந தோ3ஷம்) என்கிறது. தோ3ஷத்துக்கு ப்ராதா4ந்யம் க்ரௌர்யத்தாலேயிறே. அல்லாதவை போலன்றிக்கே “न क्षमामि” (ந க்ஷமாமி) என்னும்படியான தோ3ஷமிறே இது.
21 பாண்ட3வர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது – த்ரௌபதி3 யுடைய மங்கள ஸூத்ரத்துக்காக.
- அவ:- இத்தோ3ஷத்தின் கொடுமையை உபபாதி3க்கிறார் மேல் (பாண்ட3வர்களையும்) என்று தொடங்கி. அன்றிக்கே, ” இத்தோ3ஷம் ஐவர்க்கும் ஒவ்வாதோ? ஆனபின்பு இத்தலையையும் நிரஸித்துப் பொகடாமல் வைத்தது என்?” என்கிற ஶங்கையிலே அருளிச்செய்கிறாராகவுமாம்.
வ்யா:- முற்பட்ட ஸங்க3திக்கு, அர்ஜுநனை யென்னாதே, (பாண்ட3வர்களையும்) என்றது. இத் தோ3ஷம்ஐவர்க்கும் ஒக்குமென்று தோற்றுகைக்காக என்று யோஜிக்கக்கடவது. அநந்தர ஸங்க3திக்குத் தானே தன்னடையே சேருமிறே. பரிப4வித்த து3ர்யோத4நாதி3களோபாதி பரிப4வம் கண்டிருந்த இவர்களும் நிரஸநீயரென்கிறது ”ச” ஶப்3த3த்தாலே. (நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது ) என்றது இவர்கள் செய்த கொடுமைக்குத் தலையை அறுத்துப் பொகடவேண்டியிருக்க, ப்ராணனோடே கூடியிருக் கும்படி வைத்தது- என்றபடி. (த்3ரௌபதி3யுடைய மங்கள ஸுத்ரத்துக்காக) என்றது-அவனு(ளு)க்கு அபி4மதமான மங்கள ஸூத்ரம் போகாமைக்காக என்றபடி. விரித்ததலை காணமாட்டாதவன் வெறுங்கழுத்துக் காணமாட்டானிறே. இத்தால், ஆஶ்ரிதரைப் பரிப4வித்தாரோபாதி அது கண்டிருந்தாரும் நிரஸநீயராவரென்னுமிடமும், அவர்கள் தாங்களே, ஆஶ்ரிதர்க்கு விடவொண்ணாததொரு ப3ந்த4முடைய ராகில், அவர்களுக்காக அவனாலே ரக்ஷிக்கப்படுவர் என்னுமிடமும் ப்ரகடிதமாய்த்து. 21.
- அர்ஜுநனுக்கு தூ3த்ய ஸாரத்2யங்கள் பண்ணிற்றும், ப்ரபத்த்யுபதேஶம் பண்ணிற்றும் இவளுக்காக
- அவ:- “ஆனால், இப்படி நிரஸநீயனானவனுக்கு இழிதொழில் செய்ததும், பரமரஹஸ்யத்தை உபதே3ஶித்ததும் என்செய்ய?” என்ன அருளிச் செய்கிறார் (அர்ஜுநனுக்கு) இத்யாதி3யால்.
வ்யா:- தூது போய்த்தது- பொய்ச் சுற்றம் பேசிச் சென்று பே4த3ம் செய்து, பூசல்(லை) விளைக்கைக்காக; (ஸாரத்2யம் பண்ணிற்று)-ஆயுத4 மெடுக்கவொண்ணாதென்கையாலே கொல்லா மாக்கோல் கொலைசெய்து பா4ரதப்போர் எல்லாச்சேனையும் இருநிலத்தவிக்கைக்காக; (ப்ரபத்த்யுபதே3ஶம் பண்ணிற்று)- “” (ந யோத்ஸ்யாமி) என்றிருந்தவனை, “” ( கரிஷ்யே வசநம் தவ ) என்னப்பண்ணி , யுத்3தே4 ப்ரவ்ருத்தனாக்குகைக்காக, இவையெல்லாம் செய்தது ஶரணாக3தையான இவள்ஸங்கல்பத்தின்படியே து3ர்யோத4நாதி3களை அழியச்செய்து இவள் குழலை(ல்) முடிப்பிக்கைக்காகவிறே. ஆக, அர்ஜுநன் திறத்தில் செய்த தூ3த்யாதி3த்ரயமும் இவளுக்காகச் செய்தான் என்கிறது. (பாண்ட3வர்களையும்) (வா 21) என்று தொடங்கி இவ்வளவும், கீழ்ச்சொன்ன ப்ரதா4நதோ3ஷ க்ரௌர்யம் உபபாதி3தமாய்த்து.
ஆக, இப்படி அஸ்தா2ந ஸ்நேஹாதி3களும். ஶரணாக3தை பரிப4வங்கண்டிருந்த மஹாதோ3ஷமும் இவனுக்கு உண்டாயிருக்க,
“सर्वगुह्यतमं भूय: श्रृणु मे परमं वचः। इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु। मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे।।”
(ஸர்வகு3ஹ்யதமம் பூ4ய: ஶ்ருணு மே பரமம் வச:। இஷ்டோஸி மே த்3ருட4 மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்।।
மந்மநா ப4வ மத்3பக்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு। மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே 1)
என்று இவனளவில் உகப்புத் தோற்ற அருளிச்செய்கையாலே, இவன் தோ3ஷங்களைப் பச்சையாகக்கொண்டு அங்கீ3கரித்தமை ப்ரஸித்3த4மென்று கருத்து. கு3ணஹாநி சொல்லாதொழிந்தது-தோ3ஷம் பச்சையாமிடத்தில் கு3ணஹாநி பச்சையாம் என்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்3த4மாகையாலே. இவன்றனக்கு கு3ணஹாநிகளாவன- “तस्माद्युध्यस्व भारत” (தஸ்மாத்3யுத்4யஸ்வ பா4ரத) என்றருளிச்செய்த போதே, “करिष्ये वचनं तव” (கரிஷ்யே வசநம் தவ) என்றெழுந்திருந்து, ஸ்வக்ருத்யமான யுத்3த4த்தைப் பண்ணாமையும், “க்ருஷ்ணனை ஶரணம் புகுந்தவளைப் பரிப4விக்கவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோமே” என்னும் அநுதாபலேஶமும் நெஞ்சிலில்லாமையும் தொடக்கமானவை. !
தூ3த்யஸாரத்2யங்கள் பண்ணிற்றும், ப்ரபத்த்யுபதே3ஶம் பண்ணிற்றும் இவளுக்காகவாகில், இவன் தோ3ஷத்தைப் பச்சையாகக்கொண்டு அங்கீ3கரித்தான் என்னுமது கூடாதீயென்னில்; அதுக்குக்குறையில்லை ; இவள்கார்யார்த்த2மாக இவனைக் குறித்து இவையெல்லாம் செய்கிறவிடத்தில் இவன் தோ3ஷங்களைப்பார்த்து முகம் சுளியாமல் உகப்போடே செய்கையாலே.
அர்ஜுநனைக் குறித்து ஆசார்ய க்ருத்யாதி3களை ஏறிட்டுக்கொள்ளுகிறவளவில், அவன் தோ3ஷத்தைப் பச்சையாகக்கொண்டும், ஸாரதி2யாய்ப் புரையறக் கலந்து நின்றும் செய்கை முதலானவையுண்டாகையால், (அறியாத அர்த்த2ங்களை) (வா14) இத்யாதி3யாலே-ஆஶ்ரயண ஸௌகர்யாபாத3கங்களான வாத்ஸல்யாதி3 கு3ணங்கள் ஸுசிதம். இங்கே (தூ3த்ய ஸாரத்2யங்கள் பண்ணிற்றும்) என்கிறவித்தாலே-
“अस्मान् वेत्थ परान् वेत्थ वेत्थाऽर्थान् (थं) वेत्थ भाषितुम्। यद्यदस्मद्धितं कृष्ण तत्तद्वाच्यस्सुयोधन:।।”
(அஸ்மாந் வேத்த2 பராந் வேத்த2 வேऽத்தா2ऽர்த்தா2ந்(த2ம்) வேத்த2 பா4ஷிதும்। யத்யத3ஸ்மத்3தி4தம் க்ருஷ்ண தத்தத்3வாச்யஸ்ஸுயோத4ந:।।)
என்கிறபடியே, கார்யாகார்யஜ்ஞனான தான் போனாலல்லது கார்யஸித்3தி4 உண்டாகாதென்று இத்தலையை ரக்ஷிக்கைக்காகத் தான் தூதுபோனமையும், ஆயுத4மெடுக்கவொண்ணாதென்கையாலே, ஸாரத்2யத்திலே ப்ரவ்ருத்தனாய்க்கொண்டு தேர்க்காலாலே ப்ரதிபக்ஷத்தை அழியச்செய்தமையும் தோற்றுகையாலே, ஆஶ்ரித கார்யாபாத3கங்களான ஜ்ஞாந ஶக்த்யாதி3கள் ஸுசிதம். இன்னமும் (ப்ரபத்த்யுபதே3ஶம் பண்ணிற்றும்) என்கையாலும்-சரமஶ்லோகத்தில் “मां अहं” (மாம், அஹம்) என்கிற பத3ங்களால் சொல்லப்படுகிற உப4யவித4 கு3ணமும் ஸுசிதமிறே. ஆகையால், புருஷகார வைப4வம் சொல்லுகிறவிடத்திலே ஸ்ரீமத்பதா3ர்த்த2ம் ப்ரகடிதமானவோபாதி3 உபாய வைப4வம் சொல்லுகிறவிடத்திலே நாராயண பதா3ர்த்த2ம் ப்ரகடிதம். உபாயத்வம் சொல்லுகையாலே “चरणौ शरणं” (சரணௌ ஶரணம்) என்றதுவும் ஸூசிதம்.
ஆக, (இதிஹாஸ ஶ்ரேஷ்ட2ம்) (வா 5) என்று தொடங்கி இவ்வளவும், ஸ்ரீராமாயண மஹாபா4ரதோக்தங்களான புருஷகாரோபாய வைப4வங்கள் தத்தத்ஸ்வரூபங்களோடே விஶதமாக ப்ரதிபாதி3க்கப்பட்டது. 22.
பெரிய ஜீயர் அருளிய ஸ்ரீவசபூ4ஷண வ்யாக்2யாநத்தில் ப்ரத2ம ப்ரகரணம் ஸமாப்தம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்.