[highlight_content]

Prk 01-Annavappangar Part 1

ஶ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :

ஸ்ரீமல்லோககு3ரவே நம:

ஸ்ரீமத்3 வரவரமுநயே நம :

பெரிய ஜீயர் அருளிச்செய்த ஸ்ரீவசபூ4ஷண வ்யாக்2யாநத்துக்கு திருமழிசைஅண்ணாவப்பங்கார்ஸ்வாமி அருளிச்செய்த

அரும்பத3 விளக்கம்

அவதாரிகை

பரமகாருணிகரான பெரியஜீயர் ஸ்ரீவசநபூ4ஷணத்துக்கு व्याख्यान மிட்டருளுவதாகத் திருவுள்ளம்பற்றி व्याख्येयग्रन्थத்தினுடைய सात्त्विकजनोज्जीवनहेतुताप्रयोजकप्रामाण्यप्रकर्षप्रदर्शनार्थமாக  प्रमेयलक्षण्यादिகளை அருளிச்செய்கிறார் (ஸகல வேத3 ஸங்க்3ரஹமான) என்று தொடங்கி (திருநாமமாய்த்து) என்னுமளவாக.

प्रारिप्सितग्रन्थ த்தினுடைய अविघ्नेन परिसमाप्त्यर्थ மாக மங்க3ளம் ஸ்ரீபா4ஷ்யாதிகளிற்போலே நிப3ந்தி4க்கவேண்டியிருக்க, அது செய்யாதொழிந்தது கீ3தாபா4ஷ்ய ப்ரக்ரியையாலே. அங்கு श्रिय: पति:” என்றிறே தொடங்கிற்று. அங்கு பெரியபிராட்டியார்க்கு வாசகமான ஸ்ரீஶப்33நிர்தே3ஶமே மங்க3ளம். இங்கு ஸகலவேத3 ஶப்33நிர்தே3ஶம் மங்க3ளம். भगवद्वेदयितृत्व மிறே वेदशब्दयोगार्थம். “त्रैलोक्यराज्यं सकलं सीताया नाप्नुयात् कलाम् என்கிறவிடத்தில் ஸகல ஶப்33ம் स्वपर्यायविश्वशब्दवाच्यரான பெருமாளைச் சொல்லுகிறது–என்று ஈட்டிலே (6-2-6)யிருக்கையாலே (ஸகல) என்கிற ஶப்33மும் மங்க3ளமாகலாம்.

அவதாரிகை முற்றிற்று.

அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் அரும்பத3 விளக்கம்

(सकलेत्यादि) “त्रयी यत्र प्रतिष्ठिता”, “सर्वमष्टाक्षरान्तस्स्थम् என்று சொன்ன ருகா3திஸர்வவேத3ங்களுக்குத் திருமந்த்ரத்திலே प्रतिष्ठितत्वம்,ஶப்33த்திலே शब्दान्तर-த்துக்கு स्थिति-கூடாமையாலே अर्थद्वारेण-வே ஆக வேண்டுகையாலே திருமந்த்ரத்திலே ஸகலவேதா3ர்த்த2ங்களுமிருக்குமென்று சொல்லிற்றாயிற்று. तत्प्रतिपाद्यार्थप्रतिपादक-மாய், ततो न्यूनपरिमाण-மான ஶப்33த்துக்கு तद्विशदिकार्यार्थप्रतिपादकत्वरूपतत्संग्रहत्वம். “पचति”, “पाकं करोति” என்கிறவிடத்திலே पाकं करोति என்கிறவிதின் ‘संग्रहत्वம்   “पचति என்கிறவிதுக்குக்கூடினாப்போலே ஸகலவேத3ங்களைப் பற்றத் திருமந்த்ரத்துக்குக் கூடுமென்று திருவுள்ளம்பற்றி (ஸகலவேத3 ஸங்க்3ரஹமான) என்று அருளிச்செய்கிறார் என்று கண்டுகொள்வது. (ஆகாரத்ரயமும் ) अनन्यार्हशेषत्वம், अनन्यशरणत्वம், अनन्यभोग्यत्वம் ஆகிற இம்மூன்றும். (ஸர்வாத்ம ஸாதா4ரண மாகையாலே) பத்3தா4த்மாக்களுக்கும் முக்தாத்மாக்களுக்கும் நித்யஸூரிகளுக்கும் பொதுவாகையாலே. பொதுவானபடியென்? என்னில்:-“एषोऽणुरात्मा”என்கிறவிடத்தில் यस्मिन् प्राण: पञ्चधा संविवेश என்கிற बद्धत्वग्राहकवाक्यशेषமும். “भागो जीव:” என்கிறவிடத்தில் “स चानन्यत्याय कल्पते” என்கிற मुक्तत्वाग्राहकवाक्यशेषமும்போலே प्रणवस्थमकारத்துக்கு बद्धद्यन्यतमपरत्वव्यवस्थापकवाक्यशेषமில்லாமையாலும், नमश्शब्दोक्तविरोधिनिवृत्ति தான் ஸாதா4ரணமாகையாலும். ‘दासभूता: स्वत: सर्वं ह्यात्मान: परमात्मन: ” என்று भगवद्दास्यं सर्वात्मसाधारणமென்று  कण्ठोक्तिயிருக்கையாலும் என்று கண்டுகொள்வது.

இங்கு उपक्रम த்திலே திருமந்திரத்தை ப்ரஸ்தாவித்தது.  “திருமந்த்ரம் கைபுகுரும்” (வாக்யம் 97) ” பெரியதிருமந்த்ரத்தை” (வா 315) என்று மூலத்திலே असकृत् उपात्त மாகையாலே तद्विवरण மே मूलाभिप्रेत மென்னுமத்தாலே. (यत्रेति) यत्र-பரமபத3த்திலே पुराणा:-पुराऽपि नवा:, प्रथमजा: पूर्वसिद्धाः ऋषयःद्रष्टारः, कालोपाधिनिर्देश மும்  विषयविशेषनिर्देश மும் இல்லாமையாலே द्रष्टृत्वத்திலே नित्यसर्वविषयकत्वं लब्धம். ததநுகு3ணமாக “यत्र” என்கிறவிடத்தில் பரமபத3த்திலே. पश्चशक्तिमये दिव्ये शुद्धसत्वे सुखावहेइत्यादिप्रमाणसिद्धशुद्धसत्त्वात्मकत्वं विवक्षितம். “प्रथमजा:” ‘என்கையாலே अनादिसिद्धत्वமும். “पुराऽपि नवा: என்கிற अपि ஶப்33த்தாலே वर्तमान भविष्यत्काल सम्बनधமும், ஆக कालत्रयसम्बन्धित्वமும்.  “ऋषय:” என்கையாலே सूरित्वமும் लब्धம். இத்தையுட்கொண்டருளிச்செய்கிறார் (நித்ய ஸூரிகளோபாதி)யித்யாதி3 (नित्यासंकुचितेत्यादि) विद्यते सँकुचितं सँकोचः यस्य तदसंकुचितं. नित्यं असंकुचितंनित्यासंकुचितंः तथाविधं ज्ञानं येषां इति विग्रह: இங்கு नित्यत्वंध्वंसाप्रतियोगित्वमात्रमभिमतम्. அதுக்கு नञर्थसंकोचाभावத்திலே அந்வயம். ध्वंसाप्रतियोगि யான अभावந்தான். अत्यन्ताभावமும் प्रध्वंसाभावமும் ஆக, நித்யர்க்கு ज्ञानसंकोचात्यन्ताभाव மாய், முக்தர்க்கு ज्ञानासंकोचप्रध्वंसाभाव மாய், सामान्येन ध्वंसाप्रतियोगिसंकोचाभाववज्ज्ञानवत्तवम् उभायसाधारण மென்று கண்டுகொள்வது. இத்தால் प्रागभावाप्रतियोगित्वे सति ध्वंसाप्रतियोगित्व மே नित्यत्व மாகையாலே  दृष्टान्त दार्ष्टान्तिकங்களுக்கு साधाराणधर्म மில்லையென்னும் चोद्यं निरस्तम्। இனித்தான் யோக்யதை3க்குக் குறையில்லையே. (निरन्तरेत्यादि) अनुभवजनितानन्दத்துக்குமேலே कैङ्कर्यजनितानन्दமிருக்க निरतिशयत्वं अनुभवाजनितानन्दத்துக்குக் கூடாமையாலே (अनुभवजनित) என்றது 1.”अनुभवप्रयोज्य” என்றதாய் “निरतिशयानन्द என்றது अपकर्षानाश्रय மான परार्थकैङ्कर्यप्रयुक्तानन्द மாகிறது என்று கண்டு கொள்வது. 2. அன்றிக்கே, निरवतिशयत्वं  கைவல்யத்தைப்பற்றவாய் अनुभवानन्द த்தையே சொல்லுகிறதாய். कैङ्कर्यानन्दம் अनुभवप्रतिहठात्कारितமாய் வருகையாலே आर्थ மாய் ஸித்3தி4க்கு மென்று அது சொல்லிற்றில்லையாகவுமாம். 3.அங்கனுமன்றிக்கே. उपासननिष्ठன் . साधनप्रपत्तिनिष्ठன் सिद्धोपायनिष्ठன்அதின் चरमपर्वनिष्ठன் என்கிறவிவர்களுக்கு फलத்திலே स्वार्थपरार्थत्वादिभेद ங்கள் கிடக்கச்செய்தேயும்,  सविभूतिकब्रह्मानुभवानन्दம் இவர்கள் எல்லார்க்கும் அவிஶிஷ்டமாகையாலே  तावन्मात्र த்தை அருளிச்செய்தார் என்பாருமுண்டு. *(योग्यதை ) भगवद्भिन्नचेतनत्वம்  *(अनादिमाययेत्यादि) उत्पत्ति ஶூந்யையாய்   विचित्रसृष्टिहेतुவான मूलप्रकृतिயாலே.  (सुप्त🙂 तोरोहितस्वरूप: माययाा என்கிற हेतुस्वभावத்தாலும். “अजमनिद्रं पश्यतिஎன்ற  वाक्यशेषத்தாலும் सुप्तपदம் – तिरोहितस्वरूप गौणம்  स्वाप 3ஶையிலே   मनुष्यत्वादिस्वरूपतिरोधानमात्रம் உண்டிறே. இத்தைப்பற்ற அருளிச்செய்கிறார். (तिलतैलेत्यादि) *तिले तैलमिव-दारुणि वह्निरिव (दुर्विवेचा) पृथग्प्रहणानर्हा (त्रिगुणा) सत्त्वरजस्तमोयुक्ता (दुरत्यया) भगवदन्येन दुर्निवर्त्या अनादिश्च वा माया तया (तिरोहित:) प्रतिबद्धग्रहण: (स्वप्रकाश:) प्रकाशमानस्वकीयदेहातिरिक्तत्वादिधर्म: येषाम् *इति विग्रहம் கண்டு கொள்வது.  श्रुत्युक्तानादित्वफलितம் (दुर्विवेचत्वம்) त्रिगुणं तत् जगद्योनि இத்யாதி3யைப்பற்ற (त्रिगुणेति). “मम माया दुरत्यया” என்கிறத்தைப்பற்ற (दुरत्ययेत्यादि) (तिलतैलवत्) இத்யாதி3 ஸ்ரீஸுக்தி गद्यश्रीसूक्ति ச்சா2யையாயிருக்கிறது. (अनाद्यविद्येत्यादि) இங்கு प्रवाहानादित्वमभिमतம். (अविद्या) अनात्मन्यात्मबुद्धिயும்.अस्वे स्वबुद्धिயும். (மாறி மாறி) पर्यायेण. (स्वातन्त्रयம்) स्वशेषत्वம்  (अन्यशेषत्वம்) देवतान्तरादिशेषत्वம் (படுகுழிகள்)  पतनहेतुगर्तங்கள். (तदनुगुणेत्यादि) *देहात्माभिमानानुगणसाध्यம் – स्त्र्यन्नपानादिகள்;  तत्साधनம் -अर्थर्जनादिகள்; स्वातन्त्र्यानुगुणसाध्यம் – स्वर्गादिகள்;  तत्साधनம்– यागादिகள்;   अन्यशेषत्वानुगुणसाधनம் -देवतान्तरोपासनம்;  तत्साध्यம் -तत्सायुज्यादि* என்று கண்டுகொள்வது. (மண்டி)  अत्यन्तம் அவகா3ஹித்து, (யாதானும்) ஏதேனும் (பற்றி) அவலம்பி3த்து. (நீங்கும் விரதத்தை) எம்பெருமானைக்கிட்டாமைக்கு ஹேதுவான வ்ரதத்தை. (प्राप्तशेषित्यादि) पूर्वोक्ताकारत्रयप्रतिसंबन्धि  யான ईश्वरगताकारत्रयம் இம்மூன்றும்.(प्राप्तशेषित्वம்) उचितशेषित्वம். * (परमप्राप्यत्वம்)स्वापेक्षयोत्कृष्टरहितप्राप्यत्वம். (परमप्रापकत्वம்) स्वापेक्षयोत्कृष्टरहितप्रापकत्वம். चरमप्राप्य प्रापकங்கள் இதினுடைய பர்வபே43மாகையாலே, उक्तपारम्यमुपपन्नம். இம்மூன்றும் திருமந்த்ரத்தில் पदत्रयलब्‌धம், “अल्पाच्तरम्” என்றாதல். ”अभ्यर्हितं (पूर्वं)” என்றாதல் प्राप्यத்துக்குப் पूर्वनिर्दैशம் என்று கண்டுகொள்வது. (अत्यन्तेति) -*अन्यशेषत्वात् वैमुख्यம். स्वातन्त्र्यात् अतिवमुख्यம். देहात्माभिमानात् अत्यन्तवैमुख्यம். *वैमुख्यமாவது – भगवद्विषयज्ञानरुच्याद्यभावம். (गर्भेत्यादि) गर्भஶப்33ம்  गर्भस्थितिயைக் காட்டுகிறது. ஆகையால்  अवस्था ஶப்33த்தோடே सामानादिकरण्यमुपपन्नம். (निरन्तरेत्यादि) இங்கே.  “अत्यम्लकदुतीक्ष्णोष्णलवणैर्मातृभोजनै: अतितापिभिरत्यर्थे वर्धमानातिवेदनः।। क्लेशान्निष्क्रान्तिमाप्नोति जठरात् मातुरातुरः। कण्डूयनेऽपि चाशक्तः परिवर्तेऽप्यनीश्वरः॥ स्नानपानादि चाहारमवाप्नोति परेच्छया।இத்யாதி3யைக் கண்டுகொள்வது. (அநுப4வித்துத் திரிகிற) என்கிறவிடத்தில் “एवं संसृतिचक्रस्थे भ्राम्यमाणे”இத்யாதி3யைக் கண்டுகொள்வது. “जायमानं हि पुरुषं यं पश्येन्मधुसूदन:।सात्विकस्सतु विज्ञेय: वै मोक्षार्थचिन्तक:।।” என்கிற வசநத்தையுட்கொண்டு அருளிச்செய்கிறார் (ஆரேனுமித்யாதி3) यम् इत्यनियतनिर्देशफलितம் (ஆரேனும் इति) मोक्षरुचिக்கு स्त्रीपुरुषनियमமில்லாமையாலும் இந்த ருசிதான் बाहुल्येन காண்கையாலும், “पुरुषम्”  என்கிற பத3ம் “पुरुषावात्ममानवौ” என்கிறபடியே आत्मपरம். एकवचनம் दौर्लभ्याभिप्रायकம்  என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார்.- (சிலர்க்கென்று) जायमानं मधुसूदन:-पश्येत् என்கிற பத3ங்களையுட்கொண்டருளிச் செய்கிறார்.-(जायमानकालेत्यादि) * जायमानस्य काल: जायमानकाल: जननकाल ति फलतिம். जायमानकाले भगवत्कटाक्षविशेषः इति विग्रह:।*पश्येत् என்கிறதின் அர்த்த2ம் (கடாக்ஷவிஶேஷத்தாலேயென்று). விஶேஷயுக்த கடாக்ஷத்தாலே என்றபடி.”दृशिर् प्रेक्षणे என்றிறே தா4து பாடம். அங்கு ப்ரஶப்3தா4ர்த்தத்தை இங்கு விஶேஷஶப்33த்தாலே சொல்லிற்று. ஈக்ஷணத்தைக்கடாக்ஷபதத்தாலே சொல்லுகிறது. விஶேஷமாவது.-उत्तरकालफलपरम्परापर्यन्तत्वம்.* मधुसूदनशब्दरूढ्यर्थம் (43வதி3தி). योगार्थोपलक्षितविरोधिनिवृत्तया प्रकरणानुगृहीतया फलितம் (ரஜஸ் தமஸ்ஸுக்கள்தலை மடிந்தென்று). (தலைமடிந்து) अभिभूतமாய்। *सत्वं शीलम् अस्यसात्विक: सत्वेन जयतीति वा सात्विक:* “शीलम् என்கிற ஸூத்ரத்தாலேயாதல். तेन दीब्यति जयतिஇத்யாதி3யாலேயாதல் ठक् ப்ரத்யயம் என்று திருவுள்ளமாயருளிச்செய்கிறார்.-(ஸத்வம் தலையெடுத்தென்று). मोक्षार्थ चिन्तक:-मोक्षरूपप्रयोजनचिन्तक:  என்றாய். “चिति स्मृत्याम्” “स्मृआध्याने” என்ற தா4துபாடத்தாலே चिन्तनस्मरणाध्यानशब्दங்கள் பர்யாயங்களாய். आध्यानம் उत्कण्ठापूर्वकस्मरण மாய். உத்கண்டை3தான் “सर्वेन्द्रियसुखास्वादो यत्रास्तीत्यभिमन्यते। तत्प्राप्तीच्छां ससंकल्पां उत्कणठां कवयो विदु: ।।” என்று उत्कटेच्छा ரூபையாகையாலே अभिप्रीतिरूपरुचिயாகிறதென்று मोक्षरूपप्रयोजनरुचियुक्त: என்று லபி4க்கிறது.  இத்தையருளிச் செய்கிறார்.- (மோக்ஷருசியுண்டானாலுமென்று). (तत्वம்) भगवच्छेषत्वरूपस्वरूपம். (हितம்)सिद्धोपाय: (पुरुषार्थ🙂 प्रतिबन्धकनिवृत्त्यादिप्रयोजनम्   (உள்ளபடியறிகை) तदीयपर्यन्तமாய் அறிகை. இச்சேதனனுக்கு நம:ஶப்33த்தாலே *अदृष्टद्वारकमोक्षसाधन प्रवृत्त्यनर्हत्वरूपமான अत्यन्तपारतन्त्र्यம் * स्वरूपம் என்று निष्कर्पितமானாலும், अधिकारविधया दृष्टरूपेण स्वरूपयाथात्म्यज्ञानादिகள் ஆவஶ்யகமென்று திருவுள்ளம்பற்றியருளிச் செய்கிறார்.-(அறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலேயென்று). “पशुर्मनुष्य:” இத்யாதி3களிற் சொல்லுகிற पश्वाद्युज्जीवनத்துக்கும்  अभिमानिயுடைய ज्ञानपूर्तिயே  ஹேதுவாகையாலே (அறிந்தே) என்கிற अवधारणம்  उपपन्नम् . (ஶாஸ்த்ரங்களில் தலையான ) என்கிறவிடத்திலே धर्मं जिज्ञासमानानां प्रमाणं प्रथमं श्रुतिः। द्वितीयं धर्मशास्त्रं हि तृतीयं लोकसंग्रह:।।” இத்யாதி3யைக் கண்டுகொள்வது. अनाधितवेदங்களிலே विरुद्धार्थपरत्वसंशयादिகள் கிடக்கில், मीमांसामुखेन  ஸம்பாதி3த்த अधीतशाखार्थनिर्णयமும் अकोञ्चित्करமாகையைப் பற்றவருளிச்செய்கிறார் (सर्वशाखेत्यादि). आदिशब्दத்தாலே सर्ववेदान्तप्रत्ययन्यायம் विवक्षितம். அந்த ஆநந்த்ய தோ3ஷமில்லாமையைப் பற்றவருளிச்செய்கிறார்.– ( அந்த இத்யாதி3) (அந்த) अनन्तत्वेन पूर्वप्रकृतமான. (ஸ்வயோக3 மஹிம) என்கையாலே ஸுக2தா3தி3களையும். (பரமர்ஷி)பத3த்தாலே “ऋषिं प्रसूतं कपिलम्” என்று ருஷிமாத்ரமான கபிலாதி3களையும் வ்யாவர்த்திக்கிறது. பரதத்வத்துக்கும் அவரதத்வங்களுக்கும் அந்யோந்யம் स्वरूपस्वभाववैलक्षण्यம்(பராவரதத்வவிபா43:). இத்தால் யோக3ஜ ஜ்ஞாநவான்கள்  என்று ப2லிதம். ஸாரா ஸாரவிவேகமாவது– 1.साात्विकराजसादि विभागज्ञान மும்  2.पुराणोपक्रमप्रश्नप्रतिवचन ங்களிலே प्रमेयविषयपक्षपातित्वापक्षपातित्वविभागझान மும் 3.सर्गाचारादितत्परत्वातत्परत्वविभागज्ञान மும் என்று கண்டு கொள்வது. (தாத்பர்யாம்ஶம்) सात्विकभागाभिप्रेतமான ஸாராம்ஶம். இத்தால்  வேத3வத் ஆநந்த்யமாகிற குற்றமில்லாவிடிலும், அஸார மிஶ்ரத்வமாகிற குற்றம் உண்டென்று தாத்பர்யம். (அவை) ஸ்ம்ருத்யாதிகள். उज्जीवनंपरमपुरुषार्थप्रापणम् (ஸம்ஸாரிசேதந) இத்யாதி3யாலே आसुरव्यामोहनार्थबुद्धागमव्यावृत्तिயும், (ஸர்வேஶ்வரன் தானே) என்றத்தாலே योगजज्ञानसम्भावितवक्तृदोषविरहமும், (ஸகல வேத3ஸாரமான) என்றத்தாலே असारबहुलस्मृत्यादिव्यावृत्तिயும், (த்ரயம்) என்று आनन्त्यदोषाभावமும் சொல்லிற்று. (அதிஸங்க்3ரஹதயா) அத்யல்ப பரிமாணதயா (அதிகூ3டா4ர்த்தங்களாகையாலும்) दुर्ज्ञेयार्थங்களாகையாலும். இத்தால்- * வேத3வத் ஆநந்த்ய தோ3ஷமும். ஸ்ம்ருத்3யாதிவத் அஸாரப3ஹூளத்வரூப தோ3ஷமும் ரஹஸ்யத்ரயத்துக்கின்றியேயிருந்தாலும், கூ3டா4ர்த்தத்வமாகிற தோ3ஷமுண்டென்று சொல்லிற்று.* (43வதி3த்யாதி3) कटाक्षवीशेषकतृत्वத்துக்கு அபேக்ஷிதமான निर्दोषकल्याणगुणाकरत्वம்,”भगवच्छब्दवाच्यानि विना हेयैर्गुणादिभि:” இத்யாதிகளாலே निरुक्तभगवच्छब्दத்தாலே சொல்லுகிறது. – *அகஸ்மாத் ப4வம்ஆகஸ்மிகம். நிர்ஹேதுகமென்று ப2லிதம்*. இது “வெறிதே யருள் செய்வர்” இத்யாதி3யில் வ்யக்தம். (மயர்வற மதி நலம்) अज्ञानशून्यपरमभक्त्यात्मकज्ञान த்தை: ( அருளப்பெற்று) ப்ரஸாதி3க்க. லபி4த்து. இத்தால் पूर्वोक्तयोगजज्ञानத்திற்காட்டில் अत्यन्तविलक्षणமான दिव्यज्ञानवैभवம் சொல்லிற்று. *ज्ञाने द्विविधम् आर्षं दिव्यं च। तत्रार्षेयोगजं पराशरादीनाम्। दिव्यं निर्हेतुकभगवत्प्रसादजं परांकुशादीनाम् என்றுசொல்லிற்றிறே.

(ஸகல)பத3ம், வேத3ங்களிலும், ஶாஸத்ரஶப்3தோ3க்த ஸ்ம்ருத்யாதி3களிலும். தாத்பர்யஶப்3தோ3க்த ரஹஸ்யங்களிலும் அந்வயிக்கக்கடவது. இத்தால் பூர்வோக்த ப்ரமாணத்ரயத்தில் பாரகத்வம் சொல்லுகிறது. (கரதலாமலகமாக) “पाणावामलकं यथा“என்கிறபடியே கையிலங்கு நெல்லிக்கனிபோலே. (பராங்குஶ பரகாலாதி3களான) என்கிற ஆதி3ஶப்33ம் முதலாழ்வார் (களில் முதலானவர்?)களைச் சொல்லுகிறது. – (த்3ராவிட வேத3ங்கள்) நம்மாழ்வாரருளிச்செய்த நாலுப்ரப3ந்த4ங்கள். (தத3ங்க3ங்கள்) திருமங்கையாழ்வாரருளிச்செய்த ஆறு ப்ரப3ந்த4ங்கள். (உபாங்க3ங்கள்) மற்றையாழ்வார்களருளிச் செய்த பதினாலு ப்ரப3ந்த4ங்கள்*. அவற்றுக்கு வேத3த்வம். மார்க்கண்டே3ய புராணத்திலே “संस्कृतश्रुतयो यद्वत् द्रामिडश्रुतयस्तथा। नित्यास्तद्वत् प्रणीयन्ते मुनिभिश्च कलौ कलौ” இத்யாதி3யாலே விஸ்தரேண சொல்லப்பட்டது. *दिव्यज्ञानमूलकप्रबन्धகள்-தி3வ்யப்ரப3ந்த4ங்கள்*. இங்கே தி3வ்யப்ரப3ந்த4ங்களுக்கு நாலாயிரமென்கிற ஸங்க்2யேயதையாலே, வேத33தாநந்த்ய வ்யாவ்ருத்தியும், अत एव अक्षराधिकग्रन्थद्वयपरिमिततया, அதி ஸங்க்3ரஹமான ரஹஸ்யத்ரய வ்யாவ்ருத்தியும் (भगवदाकस्मिक) இத்யாதி3யாலே दिव्यज्ञानमूलकत्वात् योगजज्ञानमूलकस्मृत्यादिव्यावृत्तिயும் சொல்லிற்று. (அளவிலிகளால்) அல்பஜ்ஞரால், அல்பஜ்ஞதையாவது. -1.”அரியை அயனை அரனை” என்கிற सामानाधिकरण्यம் शरीरात्मभावनिबन्धनம் என்றும், 2.”அஞ்சிறைய மடநாரை’யில் சொல்லுகிற காமம்-வேதா3ந்த விஹித ப4க்தி என்றும் அறிகைக்கீடான ஜ்ஞாநமில்லாமை. மற்றும் இப்ரகாரத்திலே கண்டுகொள்வது. (ஆழ்வாருடைய) இத்யாதி3– निर्हेतुककटाक्षलब्ध மாயும், अत एव दिव्य முமான ஜ்ஞாநத்தையுடையவரான வென்றபடி. இவ் விஶேஷணம் நாத2முநிகளிலே யந்வயிக்கிறது. ‘भगवन्निर्हेतुककटाक्षलब्धदिव्यज्ञानापेक्षया, खातन्त्र्यं கலசாத भागवताग्रेसर ரான  ஆழ்வாருடைய निर्हेतुककटाक्षलब्धदिव्यज्ञानம் अतिविलक्षणம் என்றபடி.. “तत: कालेन महता विनष्टां भुवि तत्कृतिं ।नाथनामा मुनिवर: ज्ञानवानादवप्स्यति।।” என்று புராணத்திலும். “எங்களாசார்யரான மது4ரகவிகள் அடியேனுக்கு ‘கண்ணிநுண்சிறுத்தாம்பு’ என்கிற ப்ரப3ந்த4த்தை ப்ரஸாதி3த்தருளி, இப்ரப3ந்த4த்தை ஆழ்வார் திருமுன்பே. ஏகாஸநத்திலே ஏகாக்3ரசித்தராய். ஆழ்வாரை த்4யாநித்துக்கொண்டு நியமத்துடனே பன்னீராயிரமுரு அநுஸந்தி4க்க. ஆழ்வார் ப்ரஸந்தராவரென்றருளிச்செய்தார்.” என்று பராங்குஶநம்பி அருளிச்செய்ததாகவும், நாத2முநிகள் அப்படியநுஸந்தி4த்ததாகவும், அத்தால் ஆழ்வார் ப்ரஸங்கராய், ”ஏன் காணும் நம்மைக் குறித்து ப3ஹுஶ: உபாஸநம் பண்ணா நின்றீர்?” என்று கேட்டருளின தாகவும் பின்பழகராம் பெருமாள் க்ரந்த3த்திலுமிருக்க, ஆழ்வாருடைய निर्हेतुककटाक्षलब्धदिव्यज्ञान ரானமை எங்ஙனேயென்னில்:- ஆழ்வார் நாத2முநிகளைக்கேட்டருளின துக்குத் தாம் விண்ணப்பம் செய்யுமளவில் “திருவாய்மொழி முதலான தி3வ்யப்ரப3ந்த4ங்களை அடியேனுக்கு இரங்கியருளவேணும்” என்று இவ்வளவே நாத2முநிகள் அபேக்ஷித்திருக்க. – தி3வ்யப்ரப3ந்த4மாத்ரத்தை த3ர்ஶிபித்து விடாமல், அநபேஷிதமான दिव्यज्ञानचक्षु: प्रदान-மும், रहस्यत्रयार्थप्रदर्शन-மும், अखिलदर्शनतात्पर्यप्रदर्शन-மும்,अष्टाङ्गयोगरहस्यप्रदर्शन-மும் ஆழ்வார் செய்தருளினவிது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலேயிறே. – இன்னமும். ”यस्वापकाले करुणाकरस्सन् भविष्यदाचार्यवरखरूपम्। संदर्शयामास महानुभावः तं कारिसूनुं शरणं प्रपद्ये।।” என்று. “ஸ்வப்நத்திலே நாத2முநிகளுக்கு भविष्यदाचार्यवरस्वरूप-த்தை निर्हेतुककाराण-த்தாலே ஆழ்வார் காட்டிக்கொடுத்தருளினார் ” என்று சரமோபாய நிர்ணயத்திலே ஸுஸ்பஷ்டமிறே. ப்ரதா4நாம்ஶம்  நிர்ஹேதுக கடாக்ஷலப்34மானால். அந்யத் ஸர்வம் தத்ப்ராய மாகலாமிறே. ஆகையால், நாத2முநிகளுக்கு ஆழ்வாருடைய निर्हेतुककटाक्षलब्धदिव्यज्ञानत्व-ம் उपपन्न-ம் என்று கண்டுகொள்வது.

(ஸத்ஸம்ப்ரதா3 ) இத்யாதி3. ‘प्राथमिकं दायं-प्रदाय:’ உபதே3ஶமென்றபடி; ‘समीचीन: प्रदाय: संप्रदाय:’ உபதே3ஶத்துக்கு ஸமீசீநத்வமாவது- உபதே3ஶ ஸமயத்தில் உபதே3ஷ்டாக்கள் யதா2ப்ரதிபத்தியுக்தராய் உபதே3ஶிக்கை. सतां  ब्रह्मविदग्रेसराणां संप्रदायः सत्संप्रदायः, तस्मिन् सिद्धाः इति विग्रह: तस्मिन् सिद्ध- ராகையாவது तदधीनज्ञानव्यवसायप्रेमसमाचारपूर्ण-ராகை. (ஸகல ஶாஸ்த்ர நிபுணராய்) என்கிறவித்தால், उपदेशप्रावीण्य-மும், प्रबन्धीकरणप्रावीण्य-மும் विवक्षित-ம். (பரம) இத்யாதி3– “स्वार्थनिरपेक्षा परदु:खासहिष्णुता दया” என்று ஸ்ரீபாஷ்யத்திலே दयास्वरूपं निरुक्तமிறே. அதில்  स्वार्थनिरपेक्षा என்கிறவித்தால் உபதே3ஶத்திலும். ப்ரப3ந்தீ4கரணத்திலும் ख्यातिलाभपूजानैरपेक्ष्यம் सिद्धம். அதில் பாரம்யம்-ஆநுஷங்கி3கமாக வருமவற்றிலும் கண்வையாமை; பரது3க்கா2ஸஹிஷ்ணுதையில் பாரம்யம்.- “सेवध्वमेतदमृतं प्रणिपत्य याचे ” என்று பால்குடிக்கக் கால் பிடிக்கை. இங்கே. “सिद्धं सत्संप्रदाये” இத்யாதி3ஶ்லோகார்த்தத்தி2ல் ப்ரதா4நாம்ஶம் சொல்லப்பட்டது. அங்கு उपदेशमात्रविवक्षया, दयालु  என்றவளவிலே நின்றது. இங்கு प्रबन्धीकरणरूपाधिकांशहेतुतया (பரமத3யா ளுக்களான) என்று அருளிச்செய்தது என்று கண்டுகொள்வது.

(பூர்வாசார்யர்கள்) உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி முதலாக வடக்குத் திருவீதிப்பிள்ளையளவாக நடுவுள்ளவர்கள். (வேதா3தி3களில்) என்கிற ஆதி3ஶப்தத்தால்  उपबृंहणरहस्यत्रय दिव्यप्रबन्ध-ங்கள் संगृहीत-ங்கள். ( प्रबन्धी-கரித்தும். உபதே3ஶிலித்தும் போந்தமை) यथायथ-ம் विकल्पेनவும் -समुञ्चयेन-வும் யோஜித்துக்கொள்வது. (ஸஹிக்கமாட்டாத பரமக்ருபையாலே) ஸஹிக்கமாட்டாமையாகிற பரமக்ருபையாலே. (பல ப்ரப3ந்த4ங்கள்)- யாத்3ருச்சி2கப்படி முதலான அநேக ப்ரபந்தங்களை. (அவர்கள் தாங்கள் ) ஆசார்யர்கள். (ரஹஸ்யமாக உபதே3ஶித்துப் போந்தவையாய்) ப்ரப3ந்தீ4கரியாமல் உபதே3ஶித்து மாத்ரம் போந்தவையாய். (அருமை) सूक्ष्मत्व-மும் दुरापत्व-மும். (பெருமை) महत्व-மும்,गौरव-மும். ” सुसूक्ष्मत्वात् दुरापत्वात् महत्त्वात् गौरवादपि। मयाऽयं परमो धर्मः प्रोक्तः सिद्धयै पुनःपुन:|| ” என்று சொன்னானிறே भरद्वाजभगवान् . (இதுக்கு முன்பு) ஸ்ரீவசபூ4ஷணமருளிச் செய்வதற்கு முன்னே. (பின்புள்ளாரும்) என்ற ஸமுச்சயத்தாலே, उपदेशक्षम-ரான समकालवर्ति-களை ஸமுச்சயிக்கிறது. (க்ருபாதிஶயத்துக்குமேலே) कृपातिशय-மாகிற हेतु-விருக்கச்செய்தே. (பெருமாளும்) பெரிய பெருமாளும், இந்த உம்மையை. (திருவுள்ளமாயருளுகை யாலும்) என்று கூட்டுவது. (இப்ரப3ந்த4முகே2)अस्मद्वयाचिख्यासितवचनभूषणप्रबन्धद्वारेण  (வெளியிட்டருளுகிறார்)  कृपया ப்ரகாஶிப்பிக்கிறார்.

இங்கே (அருமை பெருமை)(30) என்கிறவித்தால் “प्रमेयवैलक्षण्य-மும்.’ (ஸத்ஸம்ப்ரதாய) இத்யாதி3யை அதிதே3ஶரிக்கிற (அப்படியே)(28) என்கிறவித்தாலும் (லோகாசார்யர்)(29) என்கிற திருநாமத்தாலும் वक्तृवैलक्षण्य-மும். (பலப்ரப3ந்த4ங்களருளிச்செய்த )(29) இத்யாதி3யால். अनेकप्रबन्धोपरि प्रवृत्त-மாகையாலே सिद्ध-த்த तदसाधितार्थसाधकत्वरूप- மான प्रबन्धवैलक्षण्य-மும் भगवन्नियोगेन-அவதரித்தமையால் व्यञ्जित-மான भगवदत्यन्ताभिमतत्वरूपமான अनितरसाधारणवैलक्षणय-மும் (वचनभूषणं) என்கிற ஸமாக்2யையாலே லப்34மான – सत्संप्रदायैकमूलकत्व-மாகிற वैलक्षण्य-மும் அருளிச்செய்தாராய்த்து.

43வந்நியோக3த்தை விவரிக்கிறார். – (முன்பே) इत्यादिना (ப்ரஸித்34 மிறே)(36) इत्यन्तेन. மணற்பாக்கம்-க்ராமவிஶேஷம். “திருச்சானூர் நம்பியார் ” என்று ஆய்ப்படியிலே யிருக்கிறது. वस्तुनि विकल्प-ம் கூடாமையாலே. ‘ அந்தநம்பியார்க்குத் திருச்சானூர் அபி4ஜமாய், மணற்பாக்கம் நிவாஸமாய் விரோத4மில்லையென்று கொள்ளவேண்டியது. ஆகையிறே (மணற்பாக்கத்திலேயிருப்பாரொரு நம்பியார்) என்று இங்கும், (திருச்சானூர் நம்பியார்) என்று அங்கும் நிர்தே4ஶபே43ம் கிடக்கிறது.  “यत्र पूर्वै: उषितं सोऽभिजन:”, “यत्र स्वयं निवसति स निवास:” என்றிறே ஶாப்3தி3கராலே अभिजन निवास-ங்களுக்கு भेद-ம் சொல்லப்பட்டது. (தஞ்சமாயிருப்பன) ரக்ஷகமாயிருப்பன. (இரண்டாற்றுக்கும் நடுவே) उभयकावेरीमध्य-மான கோயிலிலே. (ஏகாந்தமான) தமக்கே வாஸநியதமான, “शून्यागारे देवगृहे” என்றிறே யோக3த்துக்கு ஸ்தா2நம் சொல்லிற்று. அப்படியே रहस्यानुर्थानुसन्धानस्थान-மிருந்தபடி. (பிள்ளை ) பிள்ளைலோகாசார்யர், (யாத்3ருச்சி2கமாக ) நம்பியார் அங்கு வர்த்திக்கிறாரென்ற அநுஸந்தி4யாமல். (அவர்) மணற்பாக்கத்து நம்பியார். (போர) மிகவும். (வித்3த்4ராய்) ஈடுபட்டு. (அவர்க்கு) நம்பியார்க்கு. (அப்படிச் செய்வோம் என்று திருவுள்ளம்பற்றி)(36) इत्येतदनन्तरं ”பிள்ளை ” என்று இவ்வளவும் அநுஷங்கி3த்துக்கொள்ளவும்.

ஸமாக்2யையை விவரிக்கிறார் (ரத்நப்ரசுரமான) என்று தொடங்கி (திருநாமமாய்த்து) (38) என்னுமளவாக. रत्नं च तत् भूषणं च रत्नभूषणम् என்று கர்மதா4ரயனை ஆஶ்ரயிக்குமளவில். “कनककन्दलेनैव रत्नमुन्मील्यते ” என்கிறபடியே பொன் சேராத ரத்நம் ஒளியுடைத்தல்லாமையாலே. அது பூ4ஷணமாக மாட்டாது என்று கர்மதா4ரயனை விட்டு. “रत्नै:प्रचुरं  रत्नप्रचुरं; रत्नप्रचुरं च तत् भूषणं च रत्नप्रचुरभूषणम् ” என்றாய் “शाकप्रिय: पार्थिव: शाकपार्थिव: “ என்னுமாப்போலே उत्तरपदलोप-த்தாலே प्रचुरपद-ம் लुप्त-மாய்  रत्नभूषणम् என்கிறது. அதில் प्राचुर्य-த்துக்கு,स्वाश्रयं प्रति विशेष्यतया भानस्थल-த்தில்  स्वाश्रय समानाधिकरण-तद्विजातीयनिष्ठाल्पत्व-प्रतियोगित्व-ம்,  प्राचुर्य-த்திலே தோற்றும் – என்னும் நியமத்தாலே. இங்கும் “प्राचुर्याश्रय रत्नसमानाधिकरण-तद्विजातीयनिष्ठाल्पत्व-प्रतियोगित्वம்  प्राचुर्य-த்திலே தோற்றக்கடவது. – रत्नप्रचुरभूषण-த்தில்  रत्नविजातीय-ந்தான் பொன்னேயாகையுசிதமென்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார்.- (ரத்நப்ரசுரமான பூ4ஷணத்துக்கு ரத்நபூ4ஷணமென்று பேராமாப்போலே) என்று “वचनै: प्रचुरं वचनप्रचुरम् वचनप्रचुरं च तत् भूषणं च वचनप्रचुरभूषणम्  என்றாய். पूर्ववत् प्रचुरपदलोप-ம் வந்து, वचनभूषणम् என்றாய். पूर्वोक्तरीत्या प्राचुर्याश्रयवचनसमानाधिकरणतद्विजातीयनिष्ठाल्पत्वप्रतियोगित्व-ம்  प्राचुर्य-த்திலே  தோற்றக்கடவதாய். शब्द-த்துக்கு विजातीय-மாவது அர்த்த2மாய். அர்த்த2மல்பமாய் ஶப்த3ம் ப்ரசுரமென்று ஸித்3தி4த்ததாக ப்ரஸங்கி3க்குமாகையால், ”वचनभूषणम्” என்கிற திருநாமத்தில் वचनशब्द-ம் पूर्वाचार्यवचनपर-மாய் तत्प्राचुर्य-ம் तदपेक्षया विशेष्य-மாய்த் தோற்றுமளவில்,

पूर्वाचार्यवचनसमानाधिकरणतद्विजातीयनिष्ठाल्पत्वप्रतियोगिक-மாய்த் தோற்றக்கடவது. . அதில் पूर्वाचार्यवचनविजातीय-மாவது स्ववचन-ம். स्ववचन-ம் स्वल्प-மாய். पूर्वाचार्यवचन-ம் प्रचुर-மாயிருக்கை। स्वकपोलकल्पितत्वशंकाव्युदसनद्वारा प्रामाण्य-த்துக்கு अत्यन्तावश्यक-ம் என்று திருவுள்ளம்பற்றி யருளுகிறார். – (பூர்வாசார்யர்களுடைய வசந ப்ரசுரமாய்) என்று. ஆகையால், “साङ्गाखिलद्रमिडसंस्कृतरूपवेदसारार्थसंग्रहमहारसवाक्यजातम् ” என் றத்தோடு இந்தத் திருநாமத்துக்கு விரோத4மில்லையென்று கண்டுகொள்வது. “गुरुभ्योऽर्थ: श्रुत: शब्दै: तत्प्रयुक्तैश्च योजित:” என்கிறபடியே. உபதே3ஶஸமயங் களிலே பூர்வாசார்யர்களாலே पारम्पर्येण ப்ரயுக்தங்களான வசநங்களுடைய प्राचुर्य-ம் विवक्षित-ம். ஆகையால் (அவர்கள் தாங்கள் கெளரவாதி3ஶயத்தாலே ரஹஸ்யமாக உபதே3ஶித்துப்போந்தவையாய்)(30) இத்யாதி3யோடே இதுக்கு விரோத4மில்லையென்று கண்டுகொள்வது. “भूषण” ஶப்33ம் गौण्या वृत्तया, धारयिता-க்களுக்கு औज्जवल्यहेतुपर-ம் ; இங்கு धारणம்-अनुसंधान-ம் என்று திருவுள்ளம்பற்றியருளிச் செய்கிறார்.– (அநுஸந்தா4தாக்களுக்கு ஔஜ்ஜ்வல்யகரமாயிருக்கையாலே) இத்யாதி3.

இங்கு பூர்வோக்தமான சேதநனுடைய ஆகார த்ரயாதி3கம் साक्षाद्विक्षय:. திருமந்த்ர पदत्रयादिकं अवान्तरविषय: चेतनोज्जीवनं साक्षात्प्रयोजनम्. आकारत्रयज्ञानादिकं अवान्तरप्रयोजनम्. இவற்றுக்கும் இதுக்கும் प्रतिपाद्यप्रतिपादकभावம் ஸம்ப3ந்த4ம். उज्जीवनादिकामன் அதி4காரி என்று अनुबन्ध-चतुष्टयमनुसंन्धेयम्

व्याचिख्यासित மான ஶாரீரக சதுரத்4யாயியினுடைய ஷோட3ஶ பாத்3யர்த்த2ங்களை “सुखग्रहणाय संग्रहेणोपन्यस्ते ” என்று தொடங்கி உபந்யஸித்த வேதா3ந்த தீ3ப ப்ரக்ரியை யாலே. இங்கும் வ்யாசிக்2யாஸிதமான வசநபூ4ஷணத்தினுடைய षट्प्रकरणी-नवप्रकरण्यर्थ-ங்களை सुखग्रहणार्थ-மாக  संग्रहेण உபந்யஸித்தருளுகிறார். (இப்ரபந்தத்தில்) என்று தொடங்கி (சரமப்ராப்ய ப்ராபகப்ரகரணம்) என்னுமளவாக.

(वक्ष्यमाणार्थ-ங்கள்) पुरुषकारोपायवैभवप्रभृति-चरमपर्वनिष्ठापर्यन्तமான अभिधेय-ங்கள். (ப்ரமாணநிர்தே3ஶம்) ப்ரமிதிஜநகவேத3கீர்த்தநம். (ப்ரபந்தோ4போத்3கா4தம்) प्रबन्धारम्भसिद्ध्यर्थ-ம் वस्तुनिरूपणम्। “चिन्तां प्रकृतसिद्ध्यर्थो उपोद्धातं विदुर्बुधा:” என்னக்கடவதிறே. “प्रमेयशरीरं साधीय:, यदि प्रमाणमुपलभामहे”  என்கிற படியே மாநாதீ4நையாயிறே மேய ஸித்3தி4யிருப்பது. प्रबन्धोपोद्धात-மான (வேதா3ர்த்த2ம்)(ஸு1) इत्यादि संदर्भ-த்துக்கு प्रथमप्रकरणसंगति-தான் अर्थात् விழுந்ததித்தனையன்றி प्रथमप्रकरणासाधारणत्वेन प्रथमप्रकरणान्थर्भाव-மன்று. “तस्या: शास्त्रारम्भार्थत्वेन शास्त्रोपोद्धातरूपत्वात् अर्थत: प्रथमपादान्थर्गतत्व न तु प्रथमपादस्य, प्रथमाध्यायस्य वा असाधारणत्वासंगति:” என்றிறே ஶ்ருதப்ரகாஶிகை. அந்த ந்யாயம் இங்கும் ஒக்குமே. ஆகையிறே. உபாய ப்ரகரணம், உபாயாந்தர தோ3ஷப்ரகரணம். உபாயநிஷ்ட2 வைப4வ ப்ரகரணம். ப்ரபந்நதி3நசர்யா ப்ரகரணம். ஸதா3சார்யலக்ஷண ப்ரகரணம். ஸச்சி2ஷ்யலக்ஷண ப்ரகரணம். நிர்ஹேதுக விஷயீகார ப்ரகரணம். சரமப்ராப்ய ப்ராபக ப்ரகரணம் என்று தத்தத் ப்ரதா4நப்ரதிபாத்3யத்தையிட்டு நிரூபித்து தத்தத்  ப்ரகரணங்களை வ்யபதே3ஶித்தாப்போலே உபோத்3தா4தப்ரகரணம் என்றாதல். புருஷகாரஉபாயவைப4வ ப்ரகரணமென்றாதல் ப்ரதிபாத்3யத்தையிட்டு நிரூபித்து வ்யபதே3ஶியாதே ப்ரத2மப்ரகரணமென்று வ்யபதே3ஶித்தது.

(सापराधेत्यादि)-“लक्ष्मीं पुरुषकारेण वृतवन्तो वरानन। मत्क्षमां प्राप्य” இத்யாதி3யை உட்கொண்டருளிச் செய்கிறார்.– (ஸர்வாபராத4ங்களையும் ஸர்வேஶ்வரனை ஸஹிப்பித்து) என்று.”क्षमूष् सहने ” என்றிறே தா4து. “शिक्षणक्षमेषु अपराधसहत्वं क्षमा” என்று क्षमास्वरूप-ம் சொல்லப்பட்டது. ஸஹிப்பிக்கையாவது -अपराधानुगुणदणडाभावविषयक-भगवदीयसंकल्प-प्रयोजकत्व- ம். “प्रापकं लब्ध्वा” என்கிறத்தை அருளிச்செய்கிறார் (ரக்ஷிப்பிக்கையே) என்று. ”पुरुषकारेण वृतवन्त:” என்று சொல்லி வைத்து “मत्क्षमां प्राप्य” “मां प्रापकं लब्ध्वा ” என்கையாலே. – क्षमोद्भावनं, तद्द्वारा भगवत्कर्तृकरक्षण-प्रयोजकत्वं-पुरुषकारत्वम् என்று லபி4க்கிறது  என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார்.– (ஸ்ரூபமான) என்று. क्षमोद्भावनं कृपावात्सल्याद्युद्भावनத்துக்கும் உபலக்ஷணம். “कारुण्यरूपया” என்னக்கடவதிறே. श्रीमत्पदानन्तமிறே नारायणपदं . இப்படி कृपोद्भावन-ம் சொல்லுகிற விடம் क्षमोद्भावान-த்துக்கும் உபலக்ஷணம் என்று கண்டுகொள்வது. (ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிரண்டிலும்)(ஸூ9) என்கிறவிடத்தில்  पुरुषकारात्वं घटकत्वं என்று व्याख्यास्यमानமாயிருந்ததேயாகிலும், இங்கு உபாய வைப4வத்தோடே ஸமபி4வ்யாஹ்ருதமாகையாலே निरुक्तविधमेव पुरुषकारत्वं प्रकृतोचित மென்று திருவுள்ளம் என்று கண்டு கொள்வது.  “पुरुषं करोतीति-पुरुषकारः कर्मण्यण. शब्दस्वभावात् पुल्लिङ्गत्वम्. “पुरुषकारेण वृतवन्त: इत्यादौ पुरुषकार शब्द: भावप्रधाननिर्देष:(1) पूर्णत्वात् पुरुष: इति निरुक्त्या क्षमादिपूर्णं करोतीत्यर्थ:(2), पृृ-पालनपूरणयो: ” என்கையாலே புருஷஶப்33ம் पालकवाचि யுமாகிறது. அப்போது पुरुषं करोति -रक्षकं करोति इति-அர்த்தம் வரக்கடவது. (3) “यदिवा बहुदानाद्वै पुरुष:” என்கையாலே पुरुषं करोति-बहुप्रदं करोति என்றும் அர்த்த2மாகக்கடவது. भगवदाश्रयणोन्मुख விஷயத்தில் புருஷகாரமாமதுக்குமேலே தத்விமுக2ரையுங்கூட உபதே3ஶாதி3யாலே தது3ந்முக2ராக்குகை அதிஶயாவஹமாகையாலும். விமுக2ரையுமுட்பட உபதே3ஶாதி3யாலே ஆஶ்ரயணோந்முக2ராக்கும்படி கண்டால், அபி4முக2 விஷயத்தில் புருஷகாரமாமிடம் किम्पुनन्यार्यसिद्धமிறே யென்று ஆஶ்ரயணோந்முக2னுக்கு तत्प्रवृत्त्यविलम्बहेतु வாகையாலும், विमुखानामपि भगवदाश्रयण-श्रावयितृत्वம் वक्षमाणरीत्या श्रीशब्दार्थமாகக்கடவது. पुरुषकारवरण-करणमन्त्रभुत-द्वयगत-श्रीशब्दप्रकाश्यत्वம் புருஷகாரத்துக்கு ஆவஶ்யகமாகையாலே, तादृशश्रीशब्दप्रकाश्यமான भगवदाश्रयण-श्रावयितृत्वமும் புருஷகாரபா4வத்தில் அநுப்ரவிஷ்டமாக வேணும். ஆகையால் (4) पुरुष ஶப்33ம் சேதநவாசியுமாகக்கடவது. “पुर:कुष:” “पुर अग्रगमने” “पुरुष:” என்கிற வ்யாகரண ப்ரக்ரியையாலே. புருஷ ஶப்தம் அக்3ரக3ந்தாவைச் சொல்லுகிறதாய். “पुरुषं करोति-अग्रगामिनं करोति ” என்று भगवदाश्रयणविमुख-னானவிவனை ப43வதா3ஶ்ரயணத்தில் முன்னடியிடுவிக்கையும் புருஷகாரஶப்3தா3ர்த்த2மாகிறது. முன்னடியிடுவிக்கையாவது- முன்னடியிடுகைக்கு ஹேதுவான உபதே3ஶாதி3யைப் பண்ணுகை. “यूपं रक्षति”, “यूपं प्रोक्षति” இத்யாதி3 களைக்கொண்டு, तक्षणादि विशिष्टदारु-விலே யூபஶப்33த்துக்கு ரூடி4ஶக்தி க்3ரஹிக்கப்படுகிறாப்போலே, “मत्क्षमां प्राप्य” “कारुण्यरूपया” ”उपायैर्विस्मार्य” இத்யாதி3களாலே क्षमाद्यद्भावकत्वविशिष्टस्वरूप-த்திலே புருஷகார ஶப்33த்துக்கு ஸமுதா3யஶக்தி  க்3ரஹிக்கப்படுகிறதென்கையைப்பற்ற. “मत्क्षमां प्राप्य” இத்யாதி3கள் योगार्थतात्पर्यलिङ्गங்களாய், புருஷகார ஶப்33ம் पूर्वोक्तरीत्या यौगिक-மென்னுமது प्रोक्षणीन्याय-த்தாலே உசிதம். करणं-कार:, पुरुषस्य कार:, पुरुषकार: என்று புருஷகாரஶப்33ம் – भावे घञन्तம். राजकुलशब्दवत् ஆஶ்ரயத்திலே लाक्षणिक-ம் என்னுமதிலும். पूर्वोक्तरीत्या कर्मणि अणन्तत्व-மே யுக்தம். அகார மகார நாராயண ஸ்ரீப்தா3தி3களைப்போலே अनेकमुखेन स्वार्थप्रतिपादक-மான புருஷகாரஶப்33மும் यथायोग्यं एकैकार्थपर-மாய். முமாயிருக் கும். ஆகையால் புருஷகாரஶப்33த்துக்கு, அவ்வோவிடங்களிலே அவ்வோவர்த்த2பரதயா வ்யாக்2யாநமும் யுக்தம்.

இந்தப் புருஷகாரபத3யோகா3ர்த்த2 பூர்த்திதான் நிரு பாதி4கமாயிருப்பது பெரியபிராட்டியார் பக்கலிலேயாகையாலே, இங்கே இது முக்2யவ்ருத்த்யா வர்த்திக்கும். अन्यत्र तत्गुणलेशयोगादौपचारिक-ம். இவ்வர்த்த2ம் மேலே. ”एतत्सापेक्षसंबन्धात्” இத்யாதி3யாலே வ்யக்தம். இவற்றையெல்லாம் திருவுள்ளம்பற்றியாய்த்து. புருஷீகரிக்கும் ப்ரகாரம். புருஷீகரித்கமை, புருஷீகரிக்கையென்று புருஷகார ஶப்333தயௌகி3கத்வ வ்யஞ்ஜக நிர்தே3ஶங்கள் பலவும் பண்ணியருளிற்று என்று கண்டுகொள்வது. (அந்தப் புருஷகாரமும் மிகை இத்யாதி3) இரண்டை ஒக்க நிர்தே3ஶிக்குமிடத்தில் पूर्वनिर्दिष्ट-த்துக்கு प्राधान्य-மும். अनन्तरनिर्दिष्ट-த்துக்குத் तदपेक्षया किञ्चिदप्राधान्य-முமுண்டென்று கொள்ளுகிறவிடமுமுண்டு. அங்ஙனன்றிக்கே, ‘पूर्वत्र अपरितोषो वा ‘ என்கிற ந்யாயத்தாலே अप्रधान-த்துக்குப் பூர்வநிர்தே3ஶமும். ப்ரதா4நத்துக்கு अनन्तरनिर्देश-முமென்று கொள்ளுகிறவிடமுமுண்டு. மூலத்திலே. (புருஷகார வைப4வமும் உபாயவைப4வமும்) (ஸூ6) என்று உபாயத்துக்கு अनन्तरनिर्देश-த்தாலே, புருஷகாரத்தைப் பற்ற, அதுக்கு உத்கர்ஷம் சொல்லவேணும். ‘உத்கர்ஷந்தான் “पुरुषकारसंबन्धोऽप्यधिक:’ என்னும்படியான  गुणप्राशस्त्यமும். புருஷகாரந்தானே दोषोद्भावनம் பண்ணினாலும் கைவிடாத திண்ணிமையும் ஆகக்கடவது. அதிலிவ்விடத்திலே गुणप्राशस्त्यरूपोत्कर्षத்தையருளிச்செய்து. स्वावसर-த்திலே திண்ணிமையாகிற உத்கர்ஷத்தையருளிச் செய்கிறாராகையாலே उपायवैभवशब्दघटक-उपायशब्द-த்துக்கு अर्थवैरूप्य-மில்லையென்று கண்டுகொள்வது.

(இவ்வுபாய வரணேத்யாதி3).उपायवणं-उपायो भवति प्रार्थनम्. இத்தால் ஸ்வயமுபாயமான ப்ரபத்தியுமுண்டென்று அபி4ப்ரேதமென்னுமிடம் வ்யஞ்ஜிதம். (தே3ஶநியமாபாவம்) ”நல்ல தே3ஶத்திலே பண்ணவேணும். அல்லாத தே3ஶத்திலே பண்ணக்கடவதல்ல’ என்கிற நிர்ப்ப3ந்தா4பா4வம். இப்படிக் காலநியமாபா4வமும் கண்டுகொள்வது. (மேல் ப்ராஸங்கி3கம்) என்றது. ‘ஸ்வயத்ந நிவ்ருத்தி பாரதந்தர்ய ப2லம் ‘ (ஸூ71) இத்யாதி3 ஸந்த3ர்ப்ப4ம், ‘ப்ராப்தாவும்” (ஸூ70) இத்யாதி3 पूर्ववाक्याधीन-स्मृतिविषयतया उपेक्षानर्ह-மாய் வந்ததென்றபடி. “उपस्थितस्योपेक्षानर्हत्वं प्रसङ्ग:” என்னக்கடவதிறே. (உபாயோபேயேத்யாதி3) उपेयश्चोपेयं च उपायोपेये। तयोधिकारभुतानो यानि प्रधानापेक्षितानि तानि என்றபடி. “उपायाधिकारत्वं -उपायाधीनफलान्वयितावच्छेदकत्वं, तेन रूपेण प्रधानापेक्षित-ங்கள் शक्तिलज्जास्वव्यापारत्याग-ங்கள். उपेयाधिकारात्वञ्च-(1) तदविलाम्ब-प्रयोजकत्वं (2) नियत-तदव्यवहित-पूर्वभावित्वं वा; तेन रूपेण प्रधानापेक्षित-ங்கள் प्रेमादि-களென்று கண்டுகொள்வது. ( उपायान्तरत्यागहेतुகள் ) अप्राप्तत्वादि-கள். (மற்றும் त्याज्योपादेयங்கள்) देहयात्रा-आत्मयात्रादिகள். ‘(அதி4காரி நிஷ்டா2க்ரமம்) अधिकारिण: उपायाधिन फलान्वयिन:, या निष्ठा उपायाधीनफलव्यतिरेक-प्रयोजकव्यतिरेक-प्रतियोगिनी स्थितिः, तस्याः क्रम: परिपाटिஎன்றபடி (தீமனங்கெடுத்த) மநோதோ3ஷத்தைப்போக்கின. सिद्धोपायेनिष्ठा -स्थिति: यस्य स तथोक्त: सिद्धोपाय वरणरूपानुपायप्रपात्तिप्रयोगकर्ता என்றபடி.(अनुवर्तनं) प्रसादजनकव्यापार: (மிக்கவேதியர் வேதத்தினுட்பொருளான)- परमवैदिकादृत-वेद-अन्तस्स्थ-सारार्थ-மான, (சரமபர்வநிஷ்டையை) सिद्धोपाय-த்தினுடைய प्रकारभेद-ங்களில் வைத்துக்கொண்டு முடிந்த நிலமான ஆசார்யாபி4மாநமாகிற ப்ரகாரத்தையென்றபடி.तरतमभापन्न-पुरुषार्थतत्साधन-ங்களையொக்க உபபாதி3க்கையால் विप्रलम्भकत्व-ம் வாராதோ என்ன அருளிச்செய்கிறார்.-(வேதா3ர்த்த2மறுதியிடுவதுஎன்று தொடங்கி) “रत्नकरीषसमावेशन्यायेन” प्रथमप्वप्रतिपादनं अन्यार्थं तात्पर्य-ம் சரமபர்வத்திலேயாகையாலே தோ3ஷமில்லையென்றபடி. (संप्रतिपन्न-ம்) निर्विवादतया प्रसिद्ध-ம்.

वेदतात्पर्य-ம் சரமபர்வமென்னுமத்தை हेतूक्ति-யாலே த்3ருடீ4கரிக்கிறார்.. (ஸ்ரீகீ3தைக்கு என்று தொடங்கி) ‘चरमोक्तिव्यञ्जितप्रबन्धतात्पर्यपर्यवसानभूमिकत्वं दृष्टान्तदार्ष्टान्तिक-ங்களுக்கு  साधारणधर्म-ம். வேதா3ர்த்த2த்தை யுள்ளபடி ப்ரதிபாதி3க்கிற இப்ரப3ந்த4 பரமதாத்பர்ய விஷய-அர்த்த2மே एतद्व्याख्येय-वेद-परम-तात्पर्यविषय-மென்றபடி. “उपायतां परित्यज्य न्यस्येत् देवे तु तामभी:। एकान्तात्यन्तदास्यैकरतिस्तत्पदमाप्नुयात् ॥ तत्प्रघानमिदं शास्त्रं इति गीतार्थसङ्ग्रह:” என்கிறத்தை யிங்கே யநுஸந்தி4ப்பது. दृष्टान्तदार्ष्टान्तिक-ங்களின் படிகளை விவரிக்கிறார், (அங்கு ஸாத்4யோபாயங்களை என்று தொடங்கி) அங்கு-கீ3தையிலே. ஸாத்4யோபாயங்களை-கர்ம ஜ்ஞாந ப4க்தி ப்ரபத்திகளையும். அவதார ரஹஸ்ய ஜ்ஞாநாதி3களையும். (உபதே3ஶித்துக்கொண்டு போந்து) स्वशरीरत्वकथनादि-களாலே அத்யந்த  பாரதந்த்ர்யத் தோடேகூட உபதே3ஶித்துக்கொண்டு போந்து. (स्वस्वातन्त्र्यभीत-னானவனுக்கு)-*உபாயாந்தரத்தை யநுஷ்டி2க்குமிடத்தில் வரக்கடவதான தன்னுடைய स्वयत्नाधीन-भगवदनभिमतत्वरूप-भाव्यनर्थाशङ्कि யானவனுக்கு என்றபடி*. (அவற்றைத் தள்ளி) உபாயாந்தரங்களை நிஷேதி4த்து. (ஸித்3தோ4பாயம் காட்டப்பட்டது) ‘अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि” என்று  अज्ञातज्ञापनं பண்ணப்பட்டது. (இங்கு) இப்ரப3ந்த4த்திலே. (ஸித்3தோ4பாயத்தைச் சொல்லிக்கொண்டு போந்து) प्रथमप्रकरण-ம் முதலாக उपान्त्यप्रकरण-ம் அளவாக, चेतनयत्नसाध्य-மன்றிக்கே नित्यसिद्ध-மான எம்பெருமானாகிற உபாயத்தைச் சொல்லிக்கொண்டு போந்து. (ஈஶ்வரஸ்வாதந்தர்யத்துக்கஞ்சினவனுக்கு)- *ஶரண்யஹ்ருத3யாதநுகு3ண மல்லாதபோது வரணமும் அகிஞ்சித்கரமாகையாலே*. “क्षिपामि” என்று நினைக்கில் நிவாரகரின்றிக்கேயிருக்கிற भगवत्स्वातन्त्र्यभि-தனுக்கு. (ப்ரத2மபர்வத்தைத்தள்ளி)-सिद्धोपायप्रभेद-மாயிருக்கிற अर्चाविशिष्ट-வேஷத்தை  நிஷேதி4த்து*. (சரம பர்வம் காட்டப்பட்டது) सिद्धोपाय-த்தினுடைய अवस्थाभेद-மாய், “आसन्नत्वात् दयालुत्वात् ज्ञानित्वात् गुणभावत:” என்கிறபடியே. பரதந்த்ரனுமாய் த3யாளுவுமான ஆசார்யாவதார விஶிஷ்ட வேஷம் உபாயோபேயங்கள்* என்று காட்டப்பட்டதென்றபடி. இந்தச் சரமப்ரகரணத்தை நாயக ரத்நம்போலேயென்று நாயகரத்நஸ்தா2நீயமாக  மேலே (443 வா.வ்யா.அவ) வ்யப்தே3ஶிப்பது முண்டு. சரமத்துக்கு  मध्यस्थितनायकरत्नस्थानीयत्वम् கூடும்படியென்னென்னில்-நாயகக்கல்லுக்கு स्थित्यवस्थै-யும் निर्माणावस्थै-யும் இரண்டவஸ்தை2யுண்டு . அதில் ஸ்தி2த்யவஸ்தை2– परितोऽवस्थितरत्नमध्य-த்திலேயாய். நிர்மாணாவஸ்தை2 प्रतिसम्बन्धितया मध्यप्रदैशनिष्पादक-ங்களான ரத்நாந்தரங்களினுடைய निर्माण-ங்களுக்குச் சரமமாயிருக்கும். ஆகையால், நிர்மாணாவஸ்தை2யைப்பற்ற चरमत्वमुपपन्न-மென்று கண்டு கொள்வது.

(ஆறு ப்ரகரணமாயித்யாதி3) नानारत्नमय-மான भूषण-த்துக்குப்  परभागातिशयसम्पादकतया ஷட்3ரூபங்களும் அபேக்ஷிதங்களாயிருக்குமிறே. அத்தைப்பற்ற இங்கும் ஆறு ப்ரகரணமாயிருக்கிறது. (ஒன்பதுப்ரகரணமாயித்யாதி3) நவரத்தப்ரஸித்3தி4யைப்பற்ற, रत्नभूषणस्थानीय-மான இந்த ப்ரப3ந்த4த்துக்கும் नवप्रकरणात्मकत्व-மென்று கண்டுகொள்வது. இந்த संख्याद्वय-மும் இப்ரப3ந்த4 வ்யாக்2யேயமான மந்த்ரரத்ந பத3ஸங்க்2யா பே43த்தை அவலம்பி4த்திருக்கும். ஷட்ஸங்க்2யை தான் “षट्पदोऽयं” என்று சொல்லப்பட்ட பத3ஸங்க்2யைக்கு ஸுஸங்க3தமிறே. நவஸங்க்2யையும்-த்3வயத்திலே “श्रीमन्” என்றும் “नारायण” என்றும் “चरणौ” என்றும் “शरणं”என்றும் “प्रपद्ये” என்றும் “श्रीमते” என்றும் “नारायणाय” என்றும் “न” என்றும் “म:” என்றும் सम्बुद्यन्तपक्ष-த்திலே ஒன்பது பத3ங்கள் என்கிற ஸங்க்2யைக்குச் சேருமென்று கண்டுகொள்வது. (प्रथमप्रकरणं पूर्ववत् ) என்றது- पुरुषकारोपायवैभवप्रतिपादकं என்றபடி. இப்படி உபந்யஸித்த ப்ரகாரத்3வயத்துக்கும் – प्राचीन संवाद- ம் காட்டுகிறார். (இவ்விரண்டு க்ரமத்தையும்பற்ற விறே) इत्यादिना. (தனியன்கள்) முக்தகமான गाथाद्वयं . (பேறு தருவிக்குமவள்தன் பெருமை) என்று புருஷகார வைப4வமும். ( ஆறு) என்று உபாயமும் ( பெறுவான் முறை) என்று அதி4காரி க்ருத்யமும். (அவன் கூறு கு3ருவைப் பனுவல்) என்று அந்த அதி4காரியினுடைய ஸத்கு3ரூபஸேவநமும். (கொள்வதிலையாகிய குளிர்ந்தவருள்) என்று ஹேதுத்வேந  ஒன்றையும் கொள்ளாமலிருக்கிற நிர்ஹேதுக ப43வத் க்ருபையும். (மாறில் புகழ் நற்குருவின் வண்மை) என்று निस्तुलकल्याणगुणसद्गुरूपायात्व-முமாகிற ஷட3ர்த்த2ங்களைஇத்யாத்3யர்த்த2ம் கண்டுகொள்வது.

(திருமாமகள் இத்யாதி3) (திரு) “विष्णो: श्री:”  என்கிற பெரிய பிராட்டியாரென்ன. (மாமகள் தன் சீர்) பெரியபிராட்டியார்க்கும் ஸம்பத்தான- திருவுக்கும் திருவாகிய எம்பெருமானென்ன, இவர்களுடைய. (அருளேற்றமும்) க்ருபாதி4ஶயப்ரயுக்தமான புருஷகாரோபாய வைப4வமும். இது ப்ரத2மப்ரகரணார்த்த2ம். (திருமால் இத்யாதி3) இது உபாய ப்ரகரணார்த்த2ம். (அவ்வழி யொழிந்தன) பூர்வோக்தோபாய வ்யதிரிக் தங்களான. (அனைத்தின்) ஸர்வோபாயங்களினுடைய. (புன்மை) ஸ்வரூபாநுசிதத்வாதி3தோ3ஷங்கள். இது உபாயாந்தர தோ3ஷப்ரகரணார்த்த2ம். (மெய் இத்யாதி3 ) (மெய்வழி) வஸ்துஸத்தான உபாயமான ஸித்3தோ4பாயத்தில். (ஊன்றிய) இடையில் ஸ்வீகாரமநுபாயமாகையாலே अव्यवधानेन ஸக்தரான. (மிக்கோர் ) “स उत्तमोऽधिकारि स्यात् ” என்கிற, உத்தமாதி4காரிகளுடைய. (பெருமையும்) வைப4வமும். இது ஸித்3தோ4பாயநிஷ்டருடைய வைப4வப்ரகரணார்த்த2ம். (ஆரணம் இத்யாதி3) ( ஆரணம் வல்லவர் ) பரமரஹஸ்யமான வேதா3ந்தார்த்த2ஜ்ஞாநமுடைய இவ்வதி4காரிகள். (அமர்) ஸ்வயம் ப்ரயோஜநம் என்று வர்த்திக்கிற. (நன்னெறி யும்) ஸமீசீநமான அநுஷ்டா2ந பரிபாடியும். இது ப்ரபந்ந தி3நசர்யா ப்ரகரணார்த்த2ம். (நாரணனித்யாதி3) (நாரணன் தாள் தரு) நாராயண சரண ப்ரத3னான. (நற்குரு) ஸத்குருவினுடைய, (நீதியும்) லக்ஷணமும். இது ஸதா3சார்யலக்ஷண ப்ரகரணார்த்த2ம். (சோதியித்யாதி3) (சோதி) ஜ்யோதிர்மயமான. (மாமலர்) பெருமலரான பத்3மம் போன்ற. இவை தாளிலே யந்வயிக்கிறது. (தொல்லருள் கு3ருவின்) “कारुणयात् शास्त्रपाणिना” என்று பூர்வஸித்34மான க்ருபையை நிரூபகமாக உடைய ஆசார்யனுடைய. (பாதம்) திருவடிகளிலே, (மாமலர்) மஹநீய புஷ்பங்களைக்கொண்டு. (பணிபவர்) ஆஶ்ரயிக்கும் ஸச்சி2ஷ்யர்களுடைய. (தன்மையும்) லக்ஷணமும். இது ஸச்சி2ஷ்யலக்ஷண ப்ரகரணார்த்த2ம். (தீதிலித்யாதி3). (தீதில்) நிர்தோ3ஷனான. (வானவர் தே3வன்) நித்ய ஸுரிஸ்வாமியான நிரங்குஶ ஸ்வதந்த்ரன். (உயிர்களை ) ஆத்மாக்களை. (ஏதுவின்றி) ஹேது வில்லாமல். (எடுக்கும் படியையும்) “उद्धरिष्याम्यहं देवि संसारात् स्वयमेव तान् ” என்கிறபடியே ஸம்ஸாரத்தினின்றும் உத்34ரிக்கும் ப்ரகாரமும். இது ப43வந்நிர்ஹேதுக விஷயீகார ப்ரகரணார்த்த2ம். (மன்னிய வித்யாதி3) (மன்னிய வின்பமும்) ஆத்மாந்தஸ்தா2யியான ஆநந்த3மும், (மாகதியும்) स़्वपरस्वातन्त्रयभीतिविरह- கத்தாலே ஶ்லாக்4யமான உபாயமும். (கு3ருவென்னும் நிலை ) திருமந்த்ரத்தையுபதே3ஶித்த ஆசார்யனே யென்கிற நிஷ்டை2 (பெறும் இன்பொருள் தன்னையும்) லபி4க்கையாகிற விலக்ஷண ப்ரமேயத்தையும், இது சரமப்ராப்ய ப்ராபக ப்ரகரணார்த்த2ம். (அசைவிலாவித்யாதி3) सदृढप्रमाणवेद-अन्तर्गत-पूर्वोक्तसर्वार्थ-ங்களையும், இது ஸர்வப்ரகரண ஶேஷமாய் அர்த்தா2த் पर्थमप्रकरणसन्निविष्ट-மான உபோத்3கா4தார்த்த2ம்- இத்யாதி3யைக் கண்டு கொள்வது.

ஈட்டின்படியே த்3வய விவரணத்வத்தை அருளிச்செய்கிறார். -(இப்ரப3ந்த4ந்தான் இத்யாதி3நா) ஶரணாக3தி யாவது த்3வயம். तदर्थप्तिपादक-மாய். அத்தைப்பற்ற அதி4க பரிமாணமாய். “मत्प्रिये” என்கிற அத்தைப்போலே எம்பெருமானுக்குப் பரமபோ4க்3யமாயிருக்கையாலே திருவாய் மொழியை (தீ3ர்க்க4 ஶரணாக3தி) என்கிறது. இங்கே. ” मन्त्रररत्नं द्वयं न्यासः प्रपत्तिः शरणागतिः। नामानि मन्त्रररत्नस्य पर्यायेण नोबोध मे” என்கிற वचनमनुसन्धेय-ம். பூர்வோத்தர க2ண்ட3ங்களைத் திருவாய்மொழியிலே  व्यत्यासेन விவரிக்கையாலும், இங்கு क्रमेण விவரிக்கையாலும். க்ரமத்தைப்பற்ற   साम्य-ம் विवक्षित-மன்று. द्वयविवरणत्वमात्र-த்திலே साम्य-ம் विवक्षित-மென்று கண்டு கொள்வது.

(முதல் மூன்று பத்தாலே) என்றது- “தொழுதெழு”, “எம்மா வீட்டுத் திறமும்”, “ஒழிவில் காலமெல்லாம்” இத்யாதி3யைப்பற்ற. (மேல் மூன்று பத்தாலே) என்றது “திருநாரணன் தாள்”, ”ஆறெனக்கு”, ”அகலகில்லேன்” இத்யாதி3யைப்பற்ற. (மேல் நாலு பத்தாலே) என்றது “கடல்ஞாலம் காக்கின்ற மின்னுநேமியன்”, “உங்களோடெங்களிடையில்லையே” ‘நாராயணன் நங்கள் பிரான்”,  “அவாவற்று வீடுபெற்ற”  என்றத்தைப்பற்றவென்று கண்டு கொள்வது. (ஆறு ப்ரகரணம்) என்கிறத்தை உட்கொண்டு அருளிச்செய்கிறார்.– (இதிலும் ப்ரத2மத்தில் இத்யாதி3). (तदुपदेष्टाவான ஆசார்யன்)- த்3வயோபதே3ஶேஷ்டாவான ஆசார்யன். இங்கே . “यस्तु मन्त्रं द्वयं सम्यक् अध्यापयति वैष्णव:। आचार्यस्य तु विज्ञेय: भवबन्धविमोककृत् ।”  என்கிற वचनमनुसंधेय-ம். (மஹாவிஶ்வாஸ  ஹேதுவான) प्रपद्ये என்கிற क्रियापदार्थान्तर्गतविश्वासहेतु-வான.  विश्वासे महत्वं-उपायलाघवादिभिरप्रकम्प्यत्वम् இங்கு “அதுவுமவன தின்னருளே” இத்யாதி3யைக் கண்டுகொள்வது. (வாக்யத்3வயேத்யாதி3) सिद्धोपायोपेय- चरमावधिभूत- மான आचार्योपायोपेयत्व-ம் आर्थिक-மாகவும். नमश्शब्दतात्पर्यगति-யாலும். वाक्यद्वयोक्त-மென்று विवक्षित-ம். (அப்பதத்தில் சொல்லப்படுகிற) “प्रपद्ये” என்கிற பத3த்தில் உத்தமபுருஷனாலே சொல்லப்படுகிற வென்றபடி. (த்3வய விவரணமாக) என் றது “अविशदमुक्तस्य विशदं उक्तिः, विशदमुक्तस्य अपेक्षितार्थान्तरकथनञ्च विवरण-மாகையாலே विवरणत्वमुपपन्न-மென்றபடி.

(த்3வய விவரணமானவிதிலே இத்யாதி3) द्वयविवरणत्वादेव तद्विवरणिय மந்த்ரத்துக்கும். तद्विवरण-மான ஶ்லோகத்துக்கும் संग्रहेण व्याख्यान -மாயிருக்குமென் றபடி.

(வேதார்த்த2மித்யாதீ3தி) मूल-த்திலும் पूर्वोक्तरीत्या(ப.2) – वेदशब्दोच्छारणं मङ्गलानुष्ठान-மென்று கண்டுகொள்வது. இன்னமும், “भूवादीनां वकारोऽयं मङ्गलार्थं प्रयुज्यते” என்று மஹாபா4ஷ்யத்தில் சொல்லுகையாலே. (வேதா3ர்த்த2ம்) என்று वकारप्रयोग-ம் मङ्गलानुष्ठान-மாகிறது. இது शास्त्रादि-யில் मङ्गलम्. ‘ மங்களாஶாஸனம்” (வா. 244) என்கிறவிடத்தில் मङ्गलशब्द-ம் शास्त्रमध्य-த்தில் मङ्गलम् “ப2லபர்யந்தமாக்கும்” (வா. 463) என்கிறவிடத்தில் खलशब्दप्रयोग-ம் शास्त्रान्तमङ्गलम्. ஆக. “मङ्गलादीनि मङ्गलमध्यानि मङ्गलान्तानि हि शास्त्राणि प्रथन्ते। वीर पुरुषाण्यायुष्मत्पुरुषाणि च।।” என்கிற ப்ரக்ரியையும் இங்கு உண்டென்று கண்டுகொள்வது.

“चोदनालक्षणार्थो धर्म:” என்கிறவிடத்திலே “चोदनैव लक्षणं यस्य” என்கிற அம்ஶத்தில், அவதா4ரணத்தாலே चोदनेतरप्रमाण-ங்களுக்கு धर्मे प्रामाण्याभाव-ம் ஸித்3தி4த்ததாய். அத்தை ஸ்தா2பிப்பதாக. “सत्सम्प्रयोगे पुरुषस्येन्द्रियाणां बुद्धिजन्म तत्प्रत्यक्षं” இத்யாதி3களாலே प्रत्यक्षादिप्रमाण-ங்களையும் तद्विषय-ங்களையும் அவற்றுக்கு धर्मप्रामाण्यविरह-த்தையும் உபபாதி3த்தாப்போலே. இங்கும். (வேதா3ர்த்த2ம்) (வா. 1) என்ற ஸாவதா4ரண நிர்தேஶத்தாலே वेदेतरव्यावृत्ति लब्धै-யாய். तत्स्थापनार्थ-மாக प्रत्यक्षादिप्रमाण-ங்களையும் तद्विषय-ங்களையும். அவற்றுக்குத் तदर्थे प्रामाण्याभाव-த்தையுமுபபாதி3க்கவேண்டுகையாலே. அத்தையுபபாதி3த்துக்கொண்டு வாக்ய தாத்பர்யத்தை அருளிச்செய்கிறார்,- (प्रमाताவானவன்) என்று தொடங்கி (அருளிச்செய்கிறார்) என்னுமளவாக. (ப்ரமாதாவானவன்)- ப்ரமிதியை ஸம்பாதி3த்துச்கொள்ளுமவன். இங்கு “निखिलोऽपि चेतयमान: प्रमाणत: प्रमेयं परिच्छिन्दन्” இத்யாதி3 ஸஹஸ்ரநாமபா4ஷ்யப்ரக்ரியையும், “सर्वेषां पुरुषाणां  प्रमाणाधीन प्रमेय निश्चयानाम्  इत्यादि श्रुतप्रकाशिकाप्रक्रिययै” யும்  सूचित-ம்.

(प्रत्यक्षादि)इति आदिपद- த்தாலே अनुमानादिकं विवक्षित-ம். (சொல்லுவர்கள்)-तत्तद्वादि-களென்றபடி.(प्रत्यक्षमेकमित्यादि) प्रत्यक्षमेकं चार्वाका: कणादसुगतौ पुनः। अनुमानञ्च तच्चापि सांख्याः शब्दं च ते अपि। न्यायैकदेशिनोऽप्येवं उपमानं च केचन। अर्थापत्या सहैतानि चत्वार्याह प्रभाकरः। अभावषष्ठान्येतानि भाट्टा वेदान्तिनस्तथा। संभवैतिह्ययुक्तानि तानि पौराणिका जगु: ||” என்கிறவிடத்தில் என்றபடி. (பா3ஹ்யர்கள் ) चार्वाकादिन्यायैकदेशिपर्यन्त-ர்கள். (குத்3ருஷ்டிகள்) प्राभाकरादिपौराणिकपर्यन्त-ர்கள். (ப்ரத்யக்ஷாநுமாநாக3மங்கள் மூன்றையுமிதி) “प्रत्यक्षमनुमानञ्च शास्त्रं च विविधागमम् ” इत्यादि मनुवचन-ம் இங்கு अनुसन्धेय-ம்.

(உபமாநாதி3 பஞ்சகத்தையுமித்யாதி3) உபமாநத்தையும், அர்த்தா2பத்தியையும், ஸம்ப4வத்தையும் அநுமாநத்திலே அந்தர்ப்ப4விப்பித்து, அபா4வம் ப்ரத்யக்ஷத்திலே அந்தர்பூ4தம், ஐதிஹ்யம் अनिर्दिष्टवक्तृक-प्रवादपरम्परै-யாகையாலே ஶப்33த்திலே அந்தர்பூ4தமென்று கண்டுகொள்வது. “प्रत्यक्षानुमानागमाख्यं प्रमाणजातम् ” என்கிற பா4ஷ்யத்தையும் “प्रत्यक्षादिदृष्टसम्बन्ध विशिष्टाविषयत्वात्”  என்கிற பா4ஷ்யத்தையும் உட்கொண்டருளிச்செய்கிறார்.-(ப்ரத்யக்ஷமித்யாதி3). (இந்த்3ரியக்3ரஹணம்) இந்த்3ரியஸந்நிகர்ஷ:. सन्निकर्षयोग्य-ங்களிலென்றபடி .(ப்ரத்யக்ஷ ஸித்34 வ்யாப்தீதி) प्रत्यक्षगृहीतव्यप्तिविषयक-परामर्शात्मक-प्रहरणानुरूप-மாக வென்றபடி. चक्षुराद्युत्पन्नव्याप्तिनिश्चयानुगुण-மாகவென்று மாம். (அதீந்த்3ரியார்த்த2த்தில்) அத்யந்தாதீந்த்3ரியார்த்த2த்தில் (ஶாஸ்த்ரமே) என்கிற அவதா4ரணத்தால் प्रत्यक्षानुमान-ங்கள் अनर्ह-ங்களென்கிறது. இத்தால், ஸாங்க்2யர்களும் प्रत्यक्षानुमानागम-ங்கள் மூன்றையுமே ப்ரமாணமாகக் கொண்டார்களேயாகிலும், அநுமாநத்துக்கு அத்யந்தாதீந்த்3ரிய விஷயத்தில் ப்ரவ்ருத்தியும், ஶாஸ்த்ரத்துக்கு अनुमानसिद्धार्थविषयकत्व-மும் கொண்டார்களாகையாலே, अभ्युगमप्रकारभेद-மிருக்கையாலே सांख्यवैषम्यमुपपन्न-மென்று तात्पर्य-ம்.

“प्रवृत्तिर्वा निवृत्तिर्वा कृतकेणेतरेण वा। पुंसां येनोपदिश्येत तत्च्छास्त्रमुपपद्यते” என்கிற வார்த்திகக்3ரந்தத்தை உட்கொண் டருளிச்செய்கிறார். – (அது தன்னிலுமித்யாதி3). (வேத3 இதி) கர்த்தாவான புருஷனும் அவனடியாகவரும் தோ3ஷ மூலத்வமுமின்றிக்கே யிருக்கையாலே ஸ்வவ்யதிரிக்த ப்ரமாணங்களைப்பற்ற ப3லிஷ்ட2மான வேத3மானது. ஸாமாந்ய விஶேஷந்யாயாதி3களாலே தேவர் விஷயமாக நஶிக் கப்படாநின்றுள்ளவளவில் तद्वयतिरिक्तस्मृत्यादिसकल-மும் அந்த வேத3த்தை மூலமாக உடைத்தாய்க்கொண்டே ப்ரமாணமாகிறதென்று अर्थाभिप्रायेण அருளிச்செய்கிறார்.-(ஸ்வப்ராமாண்யத்துக்கித்யாதி3). (பௌருஷேய ஶாஸ்த்ரத்தைப்பற்ற)புருஷ க்ருத ஶாஸ்த்ரத்தைப்பற்ற. (ஸ்வத: ப்ராமாண்ய முடைய வித்யாதி3) ஜ்ஞாநத்துக்கும் ஶப்33த்துக்கும் प्रामाण्य-ம் स्वाभाविक-ம். अप्रामाण्य-ம் दोषकृत-ம். வேத3த்துக்கு வக்தாவில்லாமையாலே, प्रामाण्य-ம் निर्बाधமென்று तात्पर्य-ம், (பரம வைதி3கராகையாலே இதி) வைதி3க பத3த்தாலே பா3ஹ்யரையும். பரம பத3த்தாலே குத்3ருஷ்டிகளையும் வ்யாவர்த்திக்கிறது. (முதலிலே வேத3த்தை ப்ரமாணமாக அங்கீ3கரித்துக் கொண்டு) என்றத்தால். “वेदोऽखिलो धर्ममूलं तद्विदां च स्मृतिशीले” என்று உபக்ரமித்த கௌ3தம த4ர்மஶைலீ இவ்விடத்திலே தோற்றுகிறதென்று ஸுசிதம். (அர்த்த2 நிர்ணயம் பண்ணும் க்ரமத்தை) उपबृंहण करणकत्वरूप-மான ப்ரகாரத்தை யென்றபடி.

வேத3த்தினுடைய ப்ராப3ல்யத்தை உபபாதி3க்கிறார். (அகி2லேத்யாதி3யாலே). “वेदशास्त्रात् परं नास्ति न दैवं केशवात्परम् ” என்று  सहोपादान-ம் இருக்கையாலே साम्य-ம் व्यञ्जित-ம். அதில், केशवशब्द-த்தாலே क्लेशनाशनत्व-केशिहन्तृत्व-ங்கள் சொல்லுகையாலே अखिलहेयप्रत्यनीकत्व-மும், ब्रह्मरुद्रोत्पादकत्व प्रशस्तकेशयुक्तत्वங்கள் சொல்லுகையாலே, कल्याणैकतानत्व-மும் சொல்லப்பட்டது. एवंभुत-னான கேஶவனோடே ஸஹநிர்தே3ஶிக்கையாலே लब्ध-மான ஸாம்யமும் निर्दोषगुणत्त्व-ங்களாலேயாகிறது. “वेदयतीति वेद:” என்கிற வ்யுத்பத்தியிலே कालोपाधिनिर्देश-மில்லாமையாலே नित्यत्व-மும் अपौरुषेयत्व-மும் லப்34ம். இத்தையுட்கொண்டருளிச்செய்கிறார் (அகி2லேதி). (அகி2லப்ரமேயவிலக்ஷணனாயிருக்குமாப்போலே). என்றது-त्रिविधचेतनाचेतनविलक्षण-னாயிருக்குமாப்போலே என்றபடி, उपमानानुगुण-மாக अपौरुषेयत्वरूपनिर्दोषत्वं प्रथमनिर्दिष्ट-மாகிறது. नित्यत्वं सर्वकालसंबन्धित्वरूपं विवक्षितम्

ஆகையாலே, उपमानकल्याणैकतानत्वस्थानीय-மான கு3ணமாகிறது. (அகி2ல ப்ரமாண விலக்ஷணம்) स्मृतीतिहासपुराणादिरूपत्रिविध-प्रमाण-व्यावृत्त மென்றபடி. இங்கே, வேத3த்துக்கு நித்யத்வம் आनुपूर्वि-नित्यत्व-ம் विवक्षित-ம். ஶ்ருதியிலே ‘विरूप’ इति-ஸம்பு3த்3தி4 (விரூபையாய்-ப3ஹுவிதை4யாய். நித்யையாய்-ஸர்வ காலஸம்ப3ந்தி4நியுமான வாக்கினாலேயென்றபடி(றுமாம்?)  ஶ்ருதிஸ்ம்ருதிகளிலே நித்யத்வமாத்ரம் சொல்லியிருக்க, அபௌருவேயத்வம் ஸித்3தி4த்தபடி எங்ஙனே? என்னும் ஶங்கையிலே அருளிச்செய்கிறார். (இந்த விதயாதி3) नित्यत्वादपौरुषेयत्वं, अपौरुषेयत्वान्निर्दोषत्वं என்கிறவிது विवक्षितம். भ्रमः-अन्यथाज्ञानम्. विप्रलम्भः बुद्धिपूर्वकपरभ्रमोत्पादनरूपवञ्चनम् . प्रमादः-अनवधानम् . अशक्तिः-करणापाटवम्. यथार्थ-द्रष्ट्टत्वे सति यथार्थवक्तृत्वम्-आप्तत्वम्  அதில் பூர்வத3ளதோ3ஷம்  ப்4ரமப்ரமாத3ங்கள்; உத்தரத3ளதோ3ஷம் — விப்ரலம்பா4ஶக்திகள் என்று கண்டுகொள்வது. ( இதுக்கு மேற்பட்டதொரு ஶாஸ்த்ரமில்லை)-வேத3த்துக்கு மேற்பட்டதொரு ஹிதாநுஶாஸநமில்லை யென்றபடி. உக்தார்த்த2ங்களுக்கு ப்ரமாணம் (ஸத்யம் ஸத்யம் இத்யாதி3)  प्रामाण्यातिशय सिद्धयर्थं “सत्यं सत्यं सत्यं” என்று த்ரிவாரம் சொல்லிற்று. (வேத3ஶாஸ்த்ராத் பரம்)  वेदात्मकशास्त्रादुत्कृष्टं। अत्र योग्यतया “शास्त्रम्” என்கிற

விஶேஷ்யம் வரும். (केशवात्)-ब्रह्मरुद्रोत्मादकात्, प्रशस्तकेशात्, क्लेशनाशनात्, केशिहन्तुश्च, (परं)-उत्कृष्टं ,(दैवं)-देवता, नास्तीत्यर्थ-ம் கண்டுகொள்வது. (ஐதிஹாஸிகராலும்)- இதிஹாஸ வித்துக்களாலும். (பௌராணிகராலும்)-புராண வித்துக்களாலும். (ஏககண்ட2மாக) “कण्ठो वाचकशब्दे स्यात्”  ஏகாநுபூர்வீக ஶப்33மாக வென்றபடி. இவ்விடத்திலே, “यथाहुरैतिहासिका: पौराणिकाश्चैव सत्यं सत्यं पुनस्सत्यं” इत्यादि-सहस्रनामभाष्यसन्दर्भ-த்தைக் கண்டுகொள்வது. (சுடர்) தேஜஸ்ஸாலே. (மிகு) அதிஶயிதையான. (சுருதி) ஶ்ருதியென்றபடி. (அவரைப் பின்செல்லுமவராய்) தத3நுஸாரிகளாய், अभियुक्तानाम्  அக்3ரேஸரரான-முன் நடக்குமவரான என் றபடி. ஆழ்வாரைப் பின்செல்லுகையே அபி4யுக்தாக்3 ரேஸ்ரத்வத்துக்கு ஹேதுவென்று வ்யஞ்ஜிதம். இங்கே (அபி4யுக்தத்வமாவது) -वेदप्रामाण्यनिरूपणादिकृतत्वं, “अभियुक्ताश्च ये यत्र यन्निबन्धप्रयोजना: तत्रत्यगुणदोषाणां ज्ञाने चाधिकृता मता:”   என்றிறே அபி4யுக்த ஸ்வருபம் சொல்லிற்று. ( ஆதெ3ள வேதா3: ப்ரமாணம்)  “धर्मं जिज्ञासमानानां प्रमाणं प्रथमं श्रुति:” என்கிறபடியே வேத3ங்கள் அநந்யமூலகப்ராமாண்ய யுக்தங்களென்று ஸ்ரீரங்க3 ராஜஸ்தவத்திலே அருளிச்செய்தாரென்றபடி. (இத்தை யித்யாதி3) (வேத3யதீதி வேத3:- என்கிற வ்யுத்பத்தியாலே இதி) ” ” “विद ज्ञाने” என்கிற தா4துவின் மேலே णिच् வந்து. அதின் மேலே पचाद्यच् प्रत्यय-ம் வந்து, णिच् प्रत्यय-த்துக்கு லோபம் வந்து வேத3ஶப்33ம் நிஷ்பந்தமானபடியாலே யென்றபடி. (பு3பு4த்ஸுக்களாய்)-போ3தே4தேச்சு2க்களாய். (ஆஸ்திகராயிருப்பார்க்கு)- परलोकास्तित्वज्ञान- முடையவர்க்கு. (स्वार्थप्रकाशक- மாயிருக்கையாலே)- ஸ்வப்ரதிபாத்3யனான ஸர்வகர்மஸமாராத்4யனான எம்பெருமானை ப்ரகாஶிப்பிக்கையாலே (வேத3மென்கிறது) என்று கூட்டுவது. இப்படி வேத3ஶப்33த்தினுடைய यौगिकत्व-ம், ”य आत्मन: परो वेद्य: तं विष्णुं वेदयन्ति यत् । तत् वेदानां हि वेदत्वं यस्तं वेद स वेदवित् ।।” என்று ப4ரத்3வாஜ ப43வானாலே சொல்லப்பட்டது.) “वेदास्याक्षरराशि” என்கிற பா4ஷ்யநிர்தே3ஶம் வேத3ஶப்33 யௌகி3கத்வ விருத்34மன்று. “योगादिना अर्थान्तरवृत्तिसम्भवेऽपि एकत्र नियतत्वं हि नामत्वम् ।।” என்றிறே ஸஹஸ்ரநாமபா4ஷ்யம். யாக3விசேஷ நாமதே4யங்களான உத்4பி4கா3தி3 பத3ங்களுக்குக் கேவல யௌகி3கத்வம் மீமாம்ஸகராலே சொல்லப்பட்டது यद्वा  वेदयितृतवं யோகா3ர்த்த2ம். ஆநுபூர்வவிஶேஷம் रूढ्यर्थतावच्छेदक-ம் ) என்று. வேத3ஶப்33ம் யோக3ரூட3மாய். रूढ्यंशाभिप्रायेण “वेदाख्ये”ति निर्देशம் என்றுமாம். ஸர்வதா2 வேத3ஶப்33த்தில் யோக3 ஶக்தியில் விவாத3மில்லை. வையாகரணராலும் “हलश्च” என்கிற ஸூத்ரவ்யாக்2யாநத்திலே “विद्येते-ज्ञायेते  अनेन धर्माधर्माविति वेद:” என்று யோக3வ்ருத்தி காட்டப்பட்டது. “असिश्छिनत्ति” என்னுமாபோலே बोधकत्वातिशयतात्पर्य-த்தாலே கரணத்தைக் கர்த்தாவாக விவக்ஷித்து.  णिच् प्रत्ययान्तर्भावेन வ்யுத்பத்தி ப4ரத்3வாஜ ப43வானாலே சொல்லப்பட்டது. “उपेयप्रतिपत्तयर्था उपाया अब्यवस्थिता: ” என்று வையாகரணர் சொல்லுகையாலே இதுவுமவர்களுக்கு அபி4மதம். ஆக, ப4ரத்3வாஜவசநாநுஸாரேணவாய்த்து இவர் (‘வேத3யதீதி வேத3:” என்கிற வ்யுத்பத்தியாலே) என்றருளிச் செய்தது என்று கண்டுகொள்வது. வேத3ஶப்33ம் பா43த்3வயாத்மகவேத3பரம். மேலே பூர்வோத்தர பா4கா3நுவாத3ம் பண்ணுகிறாராகையாலே. इत्यभिप्रेत्याह-(ப்ரதிபாத்3யார்த்த2 விஶேஷத்தாலே இதி), கர்மப்3ரஹ்மரூபப்ரதிபாத்3யஸ்வபா4வ விஶேஷத்தாலே பூர்வோத்தர பா43ரூப பா43த்3வயாத்மகமென்றபடி. இங்கே, விதா4யகத்வ ப்ரகாஶகத்வரூப ஸ்வபா4வவிஶேஷங்களாலே மந்த்ர ப்3ராஹ்மணரூப பா43த்வயாத்மகத்வம் விவக்ஷிதமன்று. (உப4யேதி) பா43த்3வய ஸாதா4ரணவேத3த்வபோ34க வேத3 ஶப்33த்தாலே யென்றபடி. ”வேதா3ர்த்த2ம்” (வா.1) என்கிற ஏகவசநம் ஜாத்யேகவசநம்; மேலே(“ஸ்ம்ருதியாலே பூர்வபா43த்திலர்த்த2ம்”. வா.2) இத்யாதி3விபா43 மிருக்கையாலேயென்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார்.–(அர்த்த2 மென்று பூர்வ பா4கே3த்யாதி. ). அதுக்கு நியாமகமருளிச்செய்கிறார்.– ( பூர்வோத்தரேத்யாதி3நா ). कर्मविधिशेषदेवतानिरूपणपर- மாகையாலே. தே3வதாமீமாம்ஸை கர்மமீமாம்ஸாந்தர்க3தையென்று “जैमिनीयेन षोडशलक्षणेन” என்று வ்ருத்திகாரர் சொன்னாரென்னும் தாத்பர்யத்தாலே (பூர்வோத்தரமீமாம்ஸைகளில்) என்றது. அந்த தே3வதாமீமாம்ஸா ஸமாப்தியிலே “अन्ते हरौ तद्दर्शनात्,स विष्णुराह हि, तं ब्रह्मेत्याचक्षते तं ब्रह्मेत्याचक्षते” என்று तत्तत्कर्माराध्यदेवतान्तर्यामिभगवदुपक्षेप ம் பண்ணுகையாலே,  तत्तद्-देवताराधनकर्म-ங்கள் तदन्तर्यामिभगवदाराधन-ங்களென்று ஸித்34 மென்று திருவுள்ளமாய் அருளிச்செய்கிறார்.-(ஆகையாலே

  பா43த்3வயத்துக்குமித்யாதி3). உக்தார்த்த2த்தில் ஶ்ருதி ஸ்ம்ருதிகளை ப்ரமாணமாகக் காட்டுகிறார் (கர்மத்தினுடைய) இத்யாதி3நா. -स आत्मा – அந்தப் பரமாத்மாவானவன் ஶரீரி. अन्या देवता:- அக்3நீந்த்3ராதி3 தே3வதாந்தரங்கள். अङ्गानि-ஶரீரங்கள். (ஸித்34மிறே)-शरीरप्रोणनं शरीरिपर्यवसित- மாயல்லதிராமையாலே अर्थात् लब्ध-மிறேயென்றபடி. (இவ்வாகாரத்தை) ப43வதா3ராத4நரூபதையை. (வஸ்துக3த்யா)-भगवच्छरीरत्व- रूपार्थस्वभाव-த்தாலே. (ஆராத4நமாய்த்தலைக்கட்டும்)- ஆராத4நமாய்ப்பர்யவஸிக்குமென்றபடி. வசநத்திலே. “विष्णुमेव”  என்கிற அவதா4ரணத்தாலே भगवदाराधनत्वबुद्धिविरहित-ரைச் சொல்லுகிறது. ”विष्णुमेव यजन्ति” என்கிறதுக்கு  हेतुकथनं “सर्वभूतान्तरात्मानं” என்கிற பதம் என்று திருவுள்ளம்பற்றி (இவ்வாகாரமறியாதார்) என்றும். (வஸ்துக3த்யா) என்றும் – அருளிச்செய்தது என்று கண்டுகொள்வது. (அவிதி4பூர்வகம்- யஜந்தி) விதி4யாவது -अज्ञातज्ञापनं . அதாவது “चतुर्होतारो यत्र सम्पदं गच्छन्ति देवै:” இத்யாதி3 வேதா3ந்த வாக்யங்களாலே. அக்3நிஹோத்ராதி3கர்மங்கள். யாதொரு பரமாத்மாவானவன் आत्मतयाऽवस्थित-னாயிருந்துள்ளவளவில் तच्छरीरभूतेन्द्रादि தேவதைகளாலே ஸம்பத்தையடைகிறதுகள் என்று பண்ணப்பட்ட அஜ்ஞாதஜ்ஞாபநம்; तत्पूर्वक-மன்றிக்கே யஜிக்கிறார்களென்றபடி. இத்தையும்பற்ற (இவ்வாகாரமறியாதார்)  இத்யாதி3-என்று கண்டுகொள்வது. இப்படி பா43த்3வயாத்மக வேத3ப்ரதிபாத்3யம் கர்மமும் ப்3ரஹ்மமுமிரண்டேயானால் மற்றும் த்யாஜ்யோபாதே3ய விபா43ம் எத்தாலே ஸித்3தி4ப்பதென்ன அருளிச்செய்கிறார்,(ஆராத4நஸ்வரூபேத்யாதி3). அத்தையுபபாதி3க்கிறார் -(கர்மந்தானித்யாதி3நா) (பு3பு4க்ஷுக்களுக்கு)- ஐஶ்வர்ய போ4கே3ச்சு2க்களுக்கு. (ஐஶ்வர்ய ஸாத4நமாய்) “प्राजापत्यं गृहस्थानां ” “सर्वेभ्य: कामेभ्य:” என்றித்யாதி3களிற்சொல்லுகிறபடியே. पुत्रपशुस्वर्गादिसाधन-மாயென்றபடி. (முமுக்ஷுக்களில்)- மோஷேச்சு2க்களில். (ப4க்திநிஷ்ட2ர்க்கு ) – உபாயப4க்திநிஷ்ட2ர்க்கு. ( உபாஸ நாங்க3மாய்)-“यज्ञेन दानेन” ‘सहकारित्वेन च” என்கிறபடியே उपासननिष्पत्तिविरोधिरजत्तमोनिबर्हणहेतुभगवत्प्रसादजननार्थं नियमेनो-पादेय-மாய் என்றபடி. (ப்ரபந்நர்க்கு)-सिद्धोपायवरणनिष्ठ-ர்க்கு. (கைங்கர்யரூபமாயிறேயிருப்பது) என்றது-(1) பரார்த்த2 மாக. ஆந்ருஶம்ஸ்யத்தாலே अनुष्ठीयमानत्व-மாகிற कैङ्कर्यत्वं रूपं-असाधारणधर्मो यस्य, तथाविध-மாயிறேயிருப்பதென்றபடி. (2)यद्वा, विनियोग-पृथक्त्वन्यायத்தாலே अधिकार्यन्तरविषय-த்திலே विहितत्व-ऐश्वर्यसाधनत्व-विद्याङ्गत्व- ங்களை யுடைத்தாயிருக்குமாப்போலே. ப்ரபந்ந விஷயத்திலே  स्वयंप्रयोजनभगवन्मुखोल्लासोद्देशेनानुष्ठीयमानत्व-மாகிற कैङ्कर्यत्वं रूपं यस्य, तथाविध-மாயிறேயிருப்பதென்றபடி. (3) अथवा, ஊற்றமற்றநுஷ்டி2க்கையாகிற कैङ्कर्यत्वं रूपं यस्य, तथाविध-மாயிறேயிருப்பதென்றபடியாகவுமாம். இம்மூன்று ப்ரகாரமும் ” இஷ்டா நிஷ்ட2ங்கள் வர்ணாஶ்ரம த4ர்மத்தையும் ” (வா. 278) இத்யாதி3 வ்யாக்2யாநத்திலே ஸ்பஷ்டமாகப் போகிறது. (அநந்தம்)-देशपरिच्छेदवस्तुपरिच्छेदरहित-மாய். ( ஸ்தி2ரம்)- कालपरिच्छेदरहित-முமான. ப2லமுண்டு -புருஷார்த்த2ம். அதுவான ப்3ரஹ்மத்தினுடைய ப்ராப்தியை அபி4லஷித்திருக்கிற உபாயாந்தரநிஷ்ட2ர்க்கு. (உபாஸநாங்க3 த்வேந உபாதே3யம்). पूर्वोक्तप्रकारेण उपासननिष्पत्त्यर्थं नियतानुष्ठेयतया स्वीकार्य-மென்றபடி. (ஐஶ்வர்யார்த்தி2களுக்கு உபாதே3யமான ஆகாரத்தாலே)- ஐஶ்வர்யஸாத4நத்வத்தாலே. (த்யாஜ்யம்)அருநுஷ்டே2யமென்றபடி: ஐஶ்வர்யம் மோக்ஷவிரோதி4யாகை யாலேயென்று கருத்து. (அநந்ய ஸாத4நர்க்கு)-परित्यक्तसाध्यसाधन-ரான सिद्धोपायनिष्ठ-ர்க்கு. (இதுகொண்டு) -கர்மத்தாலே. ) ( ஸாதி4க்கத்தக்கதொன்றில்லாமையாலே ) என்றது ப்ரத்ய வாய நிவ்ருத்தியாதல். ஐஶ்வர்யமாதல். வித்3யாநிஷ்பத்தியாதல். ஸித்3தோ4பாயத்துக்கு ஶக்த்யாதா4நமாதல். ஸஹஜ ஶக்த்யுத்3போ34மாதல். ஸாதி4க்கப்படும்தொன்றில்லாமையாலே யென்றபடி. ( கைங்கர்ய ரூபேண உபாதே3யம்) पूर्वोक्तप्रकारेण கைங்கர்யமாக அநுஷ்டே2யமென் றபடி. (உபாஸகர்க்கு உபாதே3யமான ஆகாரத்தாலே) – விஹிதத்வ வித்3யா ஸஹகாரித்வங்களாலே என்றபடி. (த்யாஜ்ய மென்றறியலாம்)- அருநுஷ்டே2யமென்றறியலாமென்றபடி.

(தத்ஸ்வரூபேத்யாதி3) (தத்ஸ்வரூபம்)- அந்த ப்3ரஹ்மத்தினுடைய த4ர்மீ ஸ்வரூபம். (ரூபாணி)-விக்3ரஹா:- (கு3ணா: )ஜ்ஞாநாத3ய: ஸௌந்த3ர்யா த3யஶ்ச. (விபூ4தய:) नियाम्यभूतास्त्रिविधचेतनाचेतनवर्गा: (ஜ்ஞாநாநந்த3லக்ஷணமான)

ஜ்ஞாநாநந்த3 ஸ்வரூபமான. (சேதநஸ்வரூப வைலக்ஷண்யமடியாக)- हेयविकारास्पदानित्याचेतन-த்தைப்பற்ற व्यावृत्तिरूप-ங்களான स्वयंप्रकाशत्व-आनन्दत्व- सततैकरूपत्व- नित्यत्व- ங்களடியாக. (வருகிறதாகையாலே)- एतज्ज्ञानहेतुक-  आत्मानुभववेच्छामूलक -साधनानुष्ठानसाध्य-மாகையாலே யென்றபடி. (கைவல்யத்தின் வேஷமும்) ஆத்மமாத்ராநுப4வத்தினுடைய நித்யத்வாத்3யாகாரமும். இந்த உம்மையாலே, त्रिगुणाचिद्विशेष-तन्मिश्रजीवानुभवरूप-மாய், அல்பமாய். க்ஷயிஷ்ணுவான ஐஶ்வர்யத்தின் வேஷம் समुच्चित-ம் என்று கண்டுகொள்வது.

உபாஸநாऽஶக்தரான  ஸ்வக3தஸ்வீகாரநிஷ்ட2ருடைய रक्षणेसाधुत्वरूप-மான शरण्यत्व-த்தையறியவே. अशक्ताधिकारतया-  अनुकल्पभूत- स्वगतस्वीकाररूप- साधनविशेष-த்தையறியலாம் என்றபடி. (2) यद्वा, निरपेक्षोपायत्वरूप-भगवच्छरण्यत्व-த்தையறியவே सिद्धोपाय ரூபமான அந்த அநுப4வகைங்கர்யரூப புருஷார்த்த2 ஸாத4நவிஶேஷத்தையறியலாமென்றுமாம். (ஸாத்4யாந்தரேத்யாதி3) अनन्तत्व-स्थिरत्व-स्वरूपोचितत्व-ங்களாலே स्वोत्कृष्टावधिरहित- மான ப்3ரஹ்மத்தினுடைய போ4க்3யதையை தர்ஶிக்கவே. ऐश्वर्य-कैवल्यरूप-साध्यान्तर-ங்களினுடைய  अल्पत्व-अस्थिरत्व-अनुचितत्व ங்களாகிற த்யாகா3ர்ஹதையை ஸுஸ்பஷ்டமாகவறியலாம். आवृत-अनावृत्त-कर्मजन्म-स्वर्ग-ங்களுக்கு मिथस्तारतम्य-ம்போலே உந்நேயமன்று என்கைக்காக (ஸுஸ்பஷ்டம்) என்றது. “नायमात्मा प्रवचेनन” இத்யாதி3களாலே प्रमित-மான எம்பெருமானுடைய स्वेत्साध्यत्वाभाव-மாகிற अनन्तसाध्यत्व-த்தையும். तादृशानन्यसाध्यभगवत्प्रकारत्वात्मक- त्तपारतन्त्र्यरूप- चेतनस्वरूप-த்தையும் தர்ஶிக்கவே உபாஸநாதி3களான இதர ஸாத4நங்களினுடைய भगवदसाधनत्व- भगवदनभिमतत्व- ரூபையான த்யாகா3ர்ஹதையை அறியலாமென்றபடி. இங்கும் “न ह्यध्रुवै :” इत्यादिश्रुत्यनुसंहितव्यतिरेकव्याप्ति யாலும் उपायान्तरत्यागविधिயாலும். उत्तममध्यमाध माधिकारिविभाग-த்தாலும் साधनान्तरत्याज्य-தையை ஸ்பஷ்டமாக அறியலாம். अनन्यसाध्यत्वरूप-மான भगवत्परिधृढत्व-த்தையும். “अनैश्वर्यात् स्वभावजात्'” இத்யாதி3யில் अवगत-மான अनन्यसाध्यत्वरूप-மான चेतनगतभगवत्पारतन्त्र्य-த்தையும் தர்ஶிக்கவே. ஸுஸ்பஷ்டமாக அறியலாம் என்றபடி. ”தது3பாஸ்யத்வத்தை யறியவே அநுப4வஸாத4நவிஶேஷமறியலாம்”  என்று வைத்து, இங்கே (ப்3ரஹ்மத்தினுடைய – அநந்ய ஸாத்4யத்வத்தை) என்கையாலே. उपासनसाध्यमोक्ष-த்துக்கும், सिद्धोपायसाध्यमोक्ष-த்துக்கும் मिथोभेद-முண்டு என்று अभिमत-ம் என்று व्यञ्जितம்.

(पूर्वभाग:)- வேத3ங்களில் பூர்வபா43மானது. (त्वदर्चाविधिमुपरि)- தேவரீருடைய ஆராத4நகர்த்தவ்யதா ஜ்ஞாபநத்திலே. (परिक्षीयते)- பரிக்ஷீணமாகிறது; ஆராத4நத்தை ஜ்ஞாபித்து, निवृत्तव्यापार-மாகிறது என்றபடி. (ऊर्ध्वो भाग:)- உத்தரபா43மானது. (त्वदीहागुणविभवपरिज्ञापनै:)- தேவரீருடைய ஜக3ந்நிர்மாணாதி3 சேஷ்டையென்ன, ஜ்ஞாநஶக்த்யாதி3 குணங்களென்ன. நித்ய விபூ4தி லீலாவிபூ4தியாகிற விப4வங்களென்ன. இவற்றினுடைய सर्वप्रकारैस्सह ज्ञापन-ங்களாலே. (त्वत्पदाप्तौ)-ப்ராப்த ஶேஷியான தேவரீருடைய திருவடிகளை ப்ராபிக்கிறத்திலே. (परिक्षीयते)-उपक्षीण-மாகிறது என்றபடி. “आदौ वेदा: प्रमाणम्”  என்று पूर्वोपात्तशेष மிது. (இவ்வர்த்தங்களை )-கர்மப்3ரஹ்மங்கள். (ஸ்வருபம்)-1 அங்கி3, (அங்க3ம்)-நியமேந உபாதே3யமான ப்ரயாஜாதி3 (ப2லம்)-ஸ்வர்கா3தி3. (ஸம்ஶயம்)- அநதீ4தஶாகை2களிலும் அநதீ4த வேதா3ந்தங்களிலும் ஏதத்3விருத்3தா4ர்த்த2 ஸம்ஶயம். (விபர்யயம் )- அவைகளில் ஏதத்3விருத்3தா4ர்த்த2 நிஶ்சயம். இங்கே, ”अधीतशाखार्थस्य संशयविपर्ययादिनिरासकोन्याय:” என்று பூர்வோத்தரமீமாம்ஸைகளை अधीतवेदार्थनिर्णयोपयोगि-களாக ஶ்ருதப்ரகாஶிகையிலே சொல்லுகையாலே அவற்றையுமெடாதே ஸ்ம்ருத்யாதி3மாத்ரத்தை யெடுத்தது “अनधीतशाखार्थैककणठ्येन अधीतशाकार्थज्ञापनार्थे उपबृंहणम् ”  என்று ஶ்ருதப்ரகாஶிகையில் சொன்னபடியே अनधीत-ஶாகைகளில்  विरुद्धार्थपरत्वज्ञानं வர்த்தித்தால்,मीमांसामुखेन பண்ணப்பட்ட अधीरशाकार्थनिर्णय-மும் अकिञ्चित्कर-மாமென்னும் प्राधान्य-த்தைப் பற்றவும். “स्मरन्ति च”; “स्मृतेश्च” என்று மீமாம்ஸையிலும் श्रुत्यर्थनिर्णायकत्वेन पुरस्कृत-ங்களாகிற प्राधान्य-த்தைப் பற்றவும், ஸ்ம்ருத்யாதி3மாத்ரத்தையெடுத்தது. अत: तदनुगुण-மாக. “हस्तेनावद्यति” என்கிறவிடத்தில். हस्तरूपकरणसामर्थ्यानुगुण-மாக पुरोडाशावदानं प्रतिपादित-மானாப்போலே, இங்கும். स्मृतीतिहासपुराणरूप करणसामर्थ्य-த்தாலே, ‘வேதா3ர்த்த2மறுதியிடுவது’ (வா 1) என்கிறவித்தால் अनधीतशास्वार्थैककण्ठ्येन अधीतशाखार्थनिर्णय-ம் விவக்ஷிதமாகக்கடவதென்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார்.- ( அதுதான் செய்யும்போது ) என்று தொடங்கி.

( ஸகலஶாகா2 ப்ரத்யய ந்யாயத்தாலும் ) என்றது-”नाम- रूप- धर्मविशेष-  पुनरुक्ति-निन्दा- अशक्ति- समाप्तिवचन-प्रायश्चित्त- अन्यार्थदर्शनात् -शाकान्तरे-कर्मभेदस्स्यात् एकं वा संयोगरूपचोदनाख्याविशेषात् ” என்று பூர்வமீமாம்ஸையில் த்3விதீயாத்4யாயத்தில் சொன்ன ஶாகா2ந்தராதி4கரண ந்யாயத்தாலுமென்றபடி. ( ஸகல வேதா3ந்த ப்ரத்யய ந்யாயத்தாலும் ) என்றது-“सर्ववेदान्तप्रत्ययं चोदनाद्यविशेषात्” என்று உத்தரமீமாம்ஸையில் த்ருதீயாத்4யாயத்தில் சொன்ன ஸர்வவேதா3ந்த ப்ரத்யய ந்யாயத்தாலுமென்றபடி. शाखान्तराधिकरणोक्तन्याय-த்திலுங்காட்டில் अतिरिक्त-மானதொரு ந்யாயம், “सर्ववेदान्तप्रत्ययं चोदनाद्यविशेषात्” என்கிற ஸுத்ரத்தில் व्युत्पाद्यமன்று என்னுமிடம், “विद्यासु गुणोप संहारादिचिन्तनार्थं शाखान्तराधिकरणोक्तन्यायः तत्फलं च स्थिरीकृतम्” என்று வேதா3ந்த தீ4பத்திலும். “अत्र तु   शाखान्तराधिकरणोक्तन्यायो वेदान्तवाक्येषु किं प्रवर्तते, उत न, इति संशय्य, प्रवर्तत इति निर्णीयते ” என்று ஶ்ருதப்ரகாஶிகையிலும் இருக்கிறபடியாலும். “सर्वशाखाप्रत्ययन्यायश्चात्र भवतो विपरीतफल: सर्वशाखासु कारणान्वयिनां सर्वशत्वादीनां गुणानां अत्रोपसंहारहेतुत्वात्” என்கிற ஸ்ரீபாஷ்யத்தாலும். “कुत्रचित् कस्यचित् वचनं अन्यत्रापि तत्प्रतिपत्तिं वारयति चेत् सर्वशाखाप्रत्ययन्यायो निर्विषयस्स्यात्” என்கிற ஶ்ருதப்ரகாஶிகையாலும், வேதா3ந்த வாக்ய விஷயத்திலும் ஸர்வ ஶாகா2 ப்ரத்யய ந்யாயம் ஸஞ்சாரிதமாகையாலேயும் ஸ்பஷ்ட மாயிருக்க, ந்யாயத்3வயமாகவருளிச் செய்தபடியென்னென்னில்; விவக்ஷா பே43த்தாலே ஒருந்யாயம் என்னவுமாய். ப்ருத2ங்ந்யாயம் என்னவுமாயிருக்கும். எங்ஙனேயென்னில்: ” विशेषानुगुण्येन सामान्यस्य तात्पर्यवर्णनमात्रं सामान्यविशेषन्यायः ” என்று விவக்ஷித்தால் छागपशुवाक्यविषय-த்திலும். पदाहवनीयवाक्यविषय-த்திலும் ஸாமாந்ய விஶேஷ ந்யாயம் ஸஞ்சரிக்கும் என்னவுமாய். विरोधपरिहाराय ஸங்கோசத்தை விவஷித்தால்  उत्सर्गापवादन्याय-மும். उपात्तविषये-ஸங்கோசத்தை விவக்ஷித்தால் छागपशुन्याय-முமென்று ந்யாயத்3வயம் என்னவுமாயிருக்கும். गोबलीवर्दवाक्यदृष्ट- न्यायत्वरूप- सामान्यधर्मविवक्षया- गोबलीवर्दन्याय-ம் ஒன்று என்னவுமாய். वैयर्थ्यपरिहाराय संकोच-த்தையும். गामानय बलीवर्दे माऽऽनय என்று विधिनिषेध-ங்களையும் விவக்ஷித்தால் ज्ञानद्वयं என்னவுமாயிருக்கும்.  “सन्दिग्धे तु वाक्यशेषात्” “छागो वा मन्त्रवर्णात्” என்கிற அதி4கரண த்3வயத்தில் विशेषाणुसारेण सामान्यनिर्णयविवक्षया ஒரு ந்யாயமே வ்யுத்பாத்3யம் என்னவுமாய், விஶேஷஶப்33த்தினுடைய एकवाक्यगतत्व-भिन्नवाक्यगतत्वरूप-हेतुभेद-विवक्षया न्यायद्वयं ब्युत्पाद्यं என்னவுமாயிருக்கும். அப்படியே இங்கும். तत्तदध्येताக்களுக்காக ஓரர்த்த2மே நாநாவேத3ங்களிலும் விதே4யமென்று விவக்ஷித்தால் सर्वशाखाप्रत्ययन्याय-மே என்னவுமாய். तादृश नानावेद-த்தினுடைய साध्यतैकवेषक्रियारूपत्व-த்தை நியாமகமாக விவக்ஷித்தால் सर्वशाखाप्रत्ययन्यायமும். அந்த நாநா வேதா3ந்த விதே4யத்தினுடைய सिद्धरुपत्व-த்தை நியாமகமாக விவக்ஷித்தால் सर्ववेदान्तप्रत्ययन्याय-மும் என்று ந்யாயத்3வயம் என்னவுமாயிருக்கும். இவ்வர்த்த2ம். पूर्वोक्तदीप-भाष्यादिपर्यालोच-நையாலும், ‘सर्ववेदान्तप्रत्ययत्वे स्थितेऽपि प्रतिवेदं स्वरभेदात् उद्गीथादयो भिद्यन्ते….सर्वशाखाप्रत्ययन्यायेन च सर्वासु शाखासु क्रतुरेक:” என்கிற भाष्यस्थ-विभज्यनिर्देश-स्वारस्य-पर्यालोच-நையாலும் सिद्धम्. இத்தையெல்லாம் திருவுள்ளம்பற்றி, x பெரியவாச்சான் பிள்ளை ந்யாயத்3வயமாக அருளிச்செய்தார். அப்படியே இவரும் ந்யாயத்3வயம் என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார்.

x பெரியவாச்சான் பிள்ளை பரந்தரஹஸ்யத்திலே அருளிச்செய்தார் என்கை .

(அதில் ஸகல ஶாகே2த்யாதி3) “प्रतीयते यत् तत् प्रत्ययं प्रतीयमानं इत्यर्थः। सकलशाखासु प्रत्ययं सकलशाखाप्रत्ययम्। तत्र दृष्टो न्याय: सकलशाखाप्रत्ययन्याय:” என்று விக்3ரஹம் கண்டு கொள்வது. இப்படியே सर्ववेदान्तप्रत्ययन्यायशब्द-த்துக்கும் விக்3ரஹமாகக் கடவது. विहितस्य पुनर्विधानं கூடாமையாலே நாநா ஶாகை2களில் விதி4க்கப்படுகிற ஜ்யோதிஷ்டோமம் பி4ந்ந பி4ந்நமாகக் கடவதென்று பூர்வபக்ஷித்து. तत्तच्छाखाध्येतृप्रतिपत्त्यर्थ-மாக पुनर्विधानमुपपन्न-மாகையாலே நாநாஶாகை2களில் विधेयज्योतिष्टोम-ம் ஒன்றேயென்று நிர்ணயித்து. तत्फल-மாக शाखान्तरोक्त-ங்களான அங்க3ங்களும் உபஸம்ஹார்யங்ளென்றும், அதில் விருத்3தா4ங்க3ங்களுக்கு विकल्पाङ्गिकार-த்தாலே विरोधशमन-மென்றும், அவிருத்3தா4ங்க3ங்களுக்கு समुञ्चित्यानुष्ठान-மென்றும் நிர்ணயிக்கை- ஸகல ஶாகா2ப்ரத்யய ந்யாயம்: இத்தையருளிச்செய்கிறார்.-( ஒரு வாக்யத்திலே)इत्यादिना . ( ஸகலவேதா3ந்தேத்யாதி3 ) पूर्वोक्ररीत्या छान्दोग्यादिवेदान्त-ங்களிலே सदादिशब्द-ங்களாலே ஓரர்த்த2த்தைச் சொன்னால் வேதா3ந்தாந்தரங்களிலும் அவ்வர்த்த2ம் சொல்லுகிறதென்று. தத்ஸ்த3ப்3ரஹ்மாதி3ஶப்33ங்களும் छागपशुन्याय-த்தாலே ஏகவிஷயமென்றும். அதுக்கு ப்ரயோஜநம். காரண வஸ்துவுக்கு अबृहत्त्वादिव्यावृत्ति என்றும். त्रिवृत्करणाद्युयुपसंहार-மும். सर्वशत्वादि-कारणत्वापेक्षित-गुणान्वय-மும். कारणत्वशङ्कितदोषनिवृत्ति-யும் இத்யாதி3களென்று நிர்ணயிக்கை-ஸர்வ வேதா3ந்த ப்ரத்யய ந்யாயம்; இத்தையருளிச்செய்கிறார்.- ஒரு வேதா3ந்தத்திலே) இத்யாதி3நா. सकलशाखाप्रत्ययन्याय-ம் कर्मविषय-மென்னு மிடந்தோற்ற. पूर्वत्र, अङ्गोपाङ्गाङ्गिशब्दनिर्देश-ம்; இங்கு सर्ववेदान्तप्रत्ययन्याय-ம் सिद्धवस्तुवुषय-மென்னுமிடந்தோற்ற, अङ्गादि-शब्दनिर्देशம்  பண்ணாதே अर्थशब्दनिर्देशं-ம் பண்ணிற்றென்று கண்டுகொள்வது. ( அல்லாதார்க்கு )- அல்பஶ்ருதர்க்கு. “श्रुतिस्स्मृति:” என்று  सहोपादानस्थल-ங்களில் स्मृतिशब्द-ம் – धर्मशास्त्रेतिहासपुराण-ங்களுக்கு   सामान्येन वाचकम्; इतिहासपुराणशब्द ங்களோடே सहनिर्देशस्थल-த்திலே, स्मृतिशब्द-ம் गोबलीवर्दन्याय-த்தாலே धर्मशास्त्रमात्रपर-மென்று திருவுள்ளம்பற்றியருளிச் செய்கிறார் (ஸ்ம்ருதிகளாவன) என்று தொடங்கி. (ஆப்தரான)-यथार्थद्रष्टा-க்களாய், यथार्थवक्ता-க்களுமான. “यद्वै किञ्च मनुरवदत् तत् भेषजम्”, “मन्वर्थविपरीता तु या स्मृतिः सा न शस्यते” “धर्मशास्त्रेषु मानवम् ” இத்யாதி3யை உட்கொண்டு (மந்வத்ரி) இதி மதுவை முன்னே உபாதா3நம் பண்ணிற்றென்று கண்டு கொள்வது. “ वासिष्टञ्चैव हारीतं व्यासं पाराशरं तथा। भारद्वाजं काश्यपीयं स्मृतिषट्कन्तु सात्त्विकम्॥ मानवं याज्ञवल्क्यञ्च आग्नेयं दाक्षमेव च।  कात्यायनं वैष्णवञ्च स्मृतिषट्कन्तु राजसम्” என்று மநுஸ்ம்ருதியை ராஜஸ ஸ்ம்ருதிகளிலே பரிக3ணித்தாலும், सुबालोपनिषदुपबृंहणत्व-த்தாலே  सात्विकांशभूयस्त्वं உண்டாயிருக்கும். किन्तु, ஹாரீதாதி3 ஸ்ம்ருதிகளிற்போலே ஸாத்விகாஸாதா4ரண த4ர்மங்கள் मुखत: ப்ரதிபாதி3தங்களல்லாமையாலே, राजसेषु परिगणनं பண்ணிற்றென்று திருவுள்ளம்பற்றி, ஹாரீத ஸ்ம்ருதியோடேயொக்க மநு, விஷ்ணு, யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதிகளை உபாதா4நம் பண்ணியருளிற்றென்று கண்டு கொள்வது. (அபி4ஹிதங்களான)-உக்தங்களான. (4ர்ம ஶாஸ்த்ரங்கள்) -आचार-व्यवहार-प्रायश्चित्तात्मक-धर्म-प्रमितिजनक-ग्रन्थ-ங்களென்றபடி. இங்கே,”धर्मशास्त्रं तु वै स्मृति:’ என்கிறவிது अभिप्रेतम्. (புராவ்ருத்த ப்ரதிபாத3கங்களான) என்றது-“इतिहास: पुरावृत्तम्  ” என்றத்தைப்பற்ற. (ஸர்கா3தி3)என்கிற ஆதி3ஶப்33த்தாலே – प्रतिसर्गशब्दित-प्रलयादि-கள் விவக்ஷிதம். இங்கே. “सर्गश्च प्रतिसर्गश्च वंशो मन्वन्तराणि च। वंशानुचरितं चैव पुराणं पञ्चलक्षणम् ” என்கிறவிது விவக்ஷிதம். (ப்3ராஹ்மேதி)-இங்கும். ஸாத்விகங்களான பாத்3ம வைஷ்ணவங்களோடே ராஜஸமான ப்3ராஹ்மத்தை ஸஹோபாதா3நம் பண்ணியருளிற்று सात्विकांशभूयस्त्व-த்தைப்பற்ற.

  1. வேதா3ர்த்த2மறுதியிடுவது ஸ்ம்ருதீதி ஹாஸ புராணங்களாலே.

வேதா3ர்த்த2மறுதியிடுவதித்யாதி3  पूरवापरनिर्देश-த்தாலே उद्देश्य-विधेयभावம் தோற்றுகிறதாய், அதில் उद्देश्यतावच्छेदकव्यापकत्वं विधेय-த்துக்குத் தோற்றக்கடவதாய். “वेदार्थसम्यङ्निर्णयत्वं यत्र तत्र स्मृत्यादिकरणकत्वम् ”  என்னும் வ்யாப்தி தோற்றுகிறதாய். அத்தால் व्यापकनिवृत्तया व्याप्यनिवृत्ति லபி4க்கிறதாய், அது ஶாஸ்த்ர ஸித்34மென்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார். (நியமேநவருளிச்செய்தது ) என்று தொடங்கி. (நியமேநவருளிச்செய்தது) – வ்யாப்தி தோற்ற அருளிச்செய்ததென்றபடி. (விப்ரதிபத்தி)- विरुद्ध ப்ரதிபத்தி. (வேத3காலுஷ்யஹேதுவாம்)-अन्तस्स्थदर्शन-प्रतिबन्धक-क्षोभहेतु-வாம். अथवा, वेदपुरुषकोपहेतु வாமென்றபடி. उक्तव्याप्ति-க்கு शास्त्रानुसंहितत्व-த்தை த3ர்ஶிப்பிக்கிறார் (இந்நியமந்தானித்யாதி3நா). 1. पूर्वार्ध-ம் उपबृंहणकर्तव्यताविधिपर-ம். तत्र वेदशब्द: वेदान्तपर:. उत्तरार्ध-ம் व्यतिरेकव्याप्तिपर-மாய். अन्वयव्याप्तिव्यञ्जक மென்று கருத்து. 2. அன்றிக்கே, पूर्वार्ध-த்திலும் सकरणक-उपबृंहणक्रियाविधि-யாய். क्रिया करणं आक्षिप्त-மாயிருக்க. “इतिहासपुराणाभ्यां” என்று கரணவிதி4  प्राक्षिकाप्राप्ति விஷயத்திலும் ப்ராபகமாய். “सर्वे द्रव्यविधयो नियमविधय: ” என்கிறபடியே பூர்வோக்த வ்யாப்தி லபி4க்கிறது: உத்தரார்த4ம் व्यापकनिवृत्तया व्याप्यनिवृत्ति-யையநுவதி3க்கிறது – என்று திருவுள்ளம்பற்றி ( இந்நியமந்தானித்யாதி3 ) என்றருளிச்செய்கிறார் என்றுமாம். பூர்வம் “पुरुषकारवैभवप्रभृति-आचार्याभिमानपर्यन्त-प्रेमयजात-ம் வேதா3ர்த்த2ம்”என்னுமத்தை “வேதா3ர்த்த2ம்” (வா.1) என்கிற परमोपक्रमस्वारस्य-த்தாலே வ்யஞ்ஜிப்பித்தார்.

இங்கு ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களாலே (வா.1 ) என்கிற அநந்தர வாக்யத்தாலே புருஷகாரவைப4வ ப்ரப்4ருதிகளினுடைய  वेदार्थत्वं उपबृंहणस्वारस्यसिद्धम्  என்றருளிச்செய்கிறார். – (இவ்வுபக்ரம வாக்ய ப்ரக்ரியையாலே) இக்யாதி3நா. उपक्रम-वाक्यस्य- வேதா3ர்த்த2மறுதியிடுவது ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே” इतिवाक्यस्य (प्रक्रिया)- पुरुषकारवैभवादिप्रतिपादकग्रन्थ- सन्निधिस्थत्वम्, கண்டோக்திகளும் உண்டு என்கிறார் (அதுதான்) இத்யாதி3நா. (ஸம்ப்ரதிபந்நம்)- ஸ்பு2டம். 1.)

  1. ஸ்ம்ருதியாலேபூர்வபா43த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது. மற்றையிரண்டாலும் உத்தரபா43த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது.

2.(उपबृंहणங்களுக்கும் प्रतिपाद्यविशेषத்தாலே பே43முண்டிறே) என்றது – உபப்3ரும்ஹ்யத்தினுடைய ப்ரதிபாத்3ய பே43த்தையிட்டு உபப்3ரும்ஹ்யபே43முண்டாய். அத்தாலே உபப்3ரும்ஹண பே43முண்டிறே யென்றபடி. (அதில் ஸ்ம்ருதிகள் பூர்வபா4கோ3பப்3ரும்ஹணங்களாகவும். இதிஹாஸாதி3கள் உத்தரபா4கோ3பப்3ரும்ஹணங்களாகவும் நிர்மிதங்களாகையாலே) என்கிறவிடத்திலே. “वेदोपबृंहणभूतेषु धर्मशास्त्रेतिहासपूराणेषु धर्मशास्त्राणि पूर्वभागोपबृंहणानि। इतिहासपुराणानि उपरितनभागोपबृंहणपराणीति हि विभाग:” என்கிற श्रुतप्काशिकावाक्यमनुसन्धेयम्  (ஆசார:)-शौचस्नानादि: (வ்யவஹார🙂 ऋणादान-दायविभागादि-विवादनिर्णय:; (ப்ராயஶ்சித்தம்) पापविशोधकचान्द्रायणादि। “प्रायः पापं विजानीयात् चित्तं तस्य विशोधनम् ” என்னக்கடவதிறே. “बृहि विद्धौ” என்கிற தா4துவிலே உபப்3ரும்ஹண ஶப்33ம் நிஷ்பந்நமாகையாலே वर्धनवाचि-யாய். வ்ருத்3தி4யும் ஜ்ஞாநத்3வாராவாய். அதுதான்  स्वविषयबाहुल्य ப்ரயுக்தையாய். அதீ4தவேத3த்தில் அநவக3தமாய், அநதீ4த வேத3ப்ரதிபாத்3யமான விஶேஷ விஷயத்தினுடைய நிஶ்சயத்தில் பர்யவஸிக்கிறது என்று திருவுள்ளம்பற்றி அருளிச் செய்கிறார். (இப்படி உப4யவித4மான) இத்யாதி3. (அநதீ4 ஶாகா2ர்த்த2ங்களுக்கும்) என்கிற சகாரத்தாலே அதீ4த ஶாகா2ர்த்த2ங்கள் ஸமுச்சிதங்கள். (அபேக்ஷித விஶேஷங்களோடே) என்றது–கர்மவிஷயத்தில் ஶாகாந்தரோக்த அங்கோ3பா3ங்காதி3களும், ஸித்34 ரூபப்3ரஹ்ம விஷயத்தில் कारणत्वाद्यपेक्षितसर्वज्ञत्वदि-களும் என்ற இவற்றோடேயென்றபடி. இங்கே, “व्यक्तीकरणं अज्ञातविशेषैस्सह स्वावगतार्थनिष्कर्ष:” என்கிற ஶ்ருதப்ரகாஶிகாஸுக்தியை அநுஸந்தி4ப்பது. ஸ்ம்ருதிகளிலும் உத்தர பா4கா3ர்த்த2 ப்ரதிபாத3நமும், புராணங்களிலும் பூர்வபா4கா3ர்த்த2 ப்ரதிபாத3நமும் உண்டேயென்ன அருளிச்செய்கிறார் (ஸ்ம்ருதிகள் தன்னிலே) இத்யாதி3. இவ்விடத்திலே “ धर्मशास्त्रेषु ब्रह्मप्रतिपादनं, कर्मणां  तदाराधनरूपत्यज्ञापनार्थः इतिहासपुराणेषु कर्मप्रतिपादनं, कर्मणां ब्रह्मोपासनाङ्गत्वज्ञापनार्थम्”  என்கிற श्रुतप्रकाशिकावाक्यमनुसन्धेय-ம். உக்தார்த்த2த்துக்கு ப்ராசீநஸம்வாத3ம் காட்டுகிறார் (ப்ராயேணேத்யாதி3). (प्रायेण)-प्राचुर्येण  “प्रायो वयसि बाहुल्ये”என்றிறே நிகண்டு. उपबृंहणत्वफलितं-(पूरणं) इति; अज्ञातविशेषैस्सह निष्कर्ष:। (धर्मशास्त्रत:)धर्मशास्त्रेण  உத்தரார்த4த்திலும்  प्रायेण என்கிற பத3ம் अनुषञ्जनीय-ம். प्राचुर्येण वेदान्तार्थ-மானது இதிஹாஸபுராணங்களாலே  अज्ञातविशेषैस्स्ह निष्कृष्यते என்றபடி. ஆயிட்டு. “भूयसा च व्यपदेशो मल्लग्रामादिवत् ” என்கிற ந்யாயத்தாலே. ப்ராசுர்யத்தையிட்டு வகையிட்டுச் சொல்லலாம் என்று தாத்பர்யம். மூலத்திலே “ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களாலே” (வா.1) என்கிற ப3ஹுத்வம்  असङ्काचात् ஸ்ம்ருத்யாதி3களில் ப்ரத்யேகமந்வயிக்கிறது என்று திருவுள்ளம்பற்றி (ஸ்ம்ருதிகளாவன)  என்றருளிச்செய்தார். “ஸ்ம்ருதியாலே பூர்வபா43த்தில் அர்த்த2மறுதியிடக்கடவது” (வா 2) என்கிறவிடத்தில். “ஸ்ம்ருதியாலே” என்கிற ஏகவசநம்- ஜாத்யேகத்வபரம் என்ற திருவுள்ளம்பற்றி (4ர்மஶாஸ்த்ரங்களாலே) என்றருளிச்செய்தார். இந்த ந்யாயம் மேலும் கண்டுகொள்வது.)

  1. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரப3லம்.
  2. “यच्छब्दयोग: प्राथम्यं इत्याद्युद्देश्यलक्षणम्” என்கிறபடியே பூர்வாபர நிர்தே3ஶத்தாலே உத்3தே3ஶ்ய விதே4யபா4வம் தோற்றுகிறபடியாலே, அஜ்ஞாத ஜ்ஞாபநம் ஸ்பு2டமாயிருக்கிறதாகையாலே அஜ்ஞாநம் ஸ்பு2டம் என்று திருவுள்ளம்பற்றி ஶங்கா பூர்வகமாக அவதரிப்பிக்கிறார் (உத்தரபா4கே3த்யாதி3நா), “இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான (வா5) என்று उत्तरत्र सिद्धवन्निर्देश-த்தாலே अज्ञातज्ञापनं தோற்றாமையாலே शङ्कारूपेण வன்றிக்கே.) தாமே த3ர்ஶிப்பிக்கிறார் என்று கொள்ளவேண்டுகையாலே तत्तुल्यतया இங்கும் தாமே த3ர்ஶிப்பிக்கிறாரென்று அவதரிப்பிக்கிறார் (அன்றிக்கே ஏகபா43விஷயேத்யாதி3நா). அதில், “इतिहासपुराणाम्” इत्यादितारतम्यबोधक-द्वन्द्वसमाससपूर्वापरनिर्देश- த்தாலே तारतम्यास्तित्वकोटि-க்கும், स्मृतिवत् उपबृंह्यभेद-மில்லாமையாலே तन्नास्तित्वकोटि-க்கும் – உத்தி2தியுண்டாகையாலே. ப்ரத2மாவதாரிகையில்  शङ्कागर्भत्वं கண்டுகொள்வது. स्मृतिवदेव द्वन्द्वस्थपूर्वापरनिर्देशம் तारतम्यव्यभिचरित-மாகையாலும், तद्वदेव उपबृंह्य-भागभेदप्रयुक्त-विशेष-மில்லாமையாலும் तारतम्य ஶங்கைக்கு अनुन्मेष-ம் என்று, தாமே த3ர்ஶிப்பிக்கிறார் என்னுமிடம் த்3விதீயாவதாரிகையில் கண்டுகொள்வது.

( ப்ரமாண்யத்தில்)- प्रमितिजनकत्वविषये-என்றபடி. (புராணத்திலும்) புராணங்களிற்காட்டிலுமென்றபடி. (இதிஹாஸத்துக்கு)- இதிஹாஸங்களுக்கென்றபடி. (ப்ராப3ல்யம்)-परस्परविरोधे स्वानुराधेन पुराणानां नेतव्यत्वप्रयोजक-प्रामाण्यप्रकर्षवत्त्वम्। ப்ராப3ல்ய ஹேதுக்களை அருளிச்செய்கிறார் (புராணத்திற்காட்டில்) இக்யாதி3நா. அதில், பரிக்3ரஹாதிஶயமும். மத்4யஸ் த2தையும் ஜ்ஞாபகஹேதுக்கள்: கர்த்துராப்ததமத்வம் காரகஹேது என்று விவேகம் கண்டுகொள்வது.

परिग्रहातिशयघटकपरिग्रह-த்தை நிர்வசிக்கிறார் (பரிக்3ரஹமாவது ஶாஸ்த்ர பரிக்3ரஹம்) என்று. ஶாஸ்த்ரஶப்33ம் பௌருஷேய ஶாஸ்த்ரங்களான புராணபரம். (பரிக்3ரஹமாவது)-तेषु श्लाग्यमानत्व-மென்று மேலே ஸ்பு2டம். “इतिहासपुराणं पञ्चमम् ” என்று வேத3த்திலே पुराणात्पूर्वनिर्देश-த்தாலே व्यञ्चित-மான ஶ்லாகை4யை மேலே அருளிச்செய்கிறார் என்று கண்டுகொள்வது. (வேத3வேத்3 இத்யாதி3) இதுக்கர்த்த2ம் மேலே வ்யக்தம். (मतिमन्थानं ) –ஜ்ஞாநமாகிற மத்தை . (आविध्य) நன்றாகத் தாடி3த்து. “व्यध ताडने” என்றிறே தா4து. x(சுழற்றியென்றுமாம்; “व्यध चलने” என்றுமுண்டிறே. x வ்யத44யஸஞ்சலநயோ: என்று தா4து பாட2மாகையால் இது ப்ரக்ஷிப்தம்) (येन)-व्यासेन. (व्यासवाक्येति)- குத4ர்மங்களாகிற-த4ர்மாபா4ஸங்களாகிற வ்ருக்ஷங்களை. (ஹாரிணா)-வேரோடே பிடுங்கிக் கடலிலே பொகடுகிற; हरणं प्रापण-மிறே. नाशन மென்றுமாம். ஜலெளக4பக்ஷத்திலே-भूनिष्ठवृक्षनाशिना-என்றுமாம். வ்யாஸ வாக்யபக்ஷத்திலே – பூ4ஸம்ப3ந்தி44ர்மவ்ருக்ஷ ஹந்தாக்களுக்கு. (அரிணா)- ஶத்ருணா என்றுமாம். (जलौघेन)-जलप्रवाहेण (मही)- வ்யாஸ வாக்யபக்ஷத்திலே மஹீஸ்த2ர் என்றபடி. ஐலௌக4 பக்ஷத்திலே-பூ4மி என்றபடி. (நீரஜஸ்கா)-வ்யாஸவாக்ய பக்ஷத்திலே- ரஜோகு3ண ஸூந்யராகப் பண்ணப்பட்டார்கள் என்றபடி. ஜலெளக4 பக்ஷத்திலே – பாம்ஸுஶூந்யையாகப் பண்ணப்பட்டது என்றபடி. (பி3பே4திக3ஹநாதி3த்யாதி3), (गहनात्) -दुष्प्रवेशात्, (शास्त्रात्)-वेदात्, (तीव्रादौषधादिव)  ஸேவிக்கவரியதான ஔஷத4த்தில் நின்றும் போல. (बिभेति)-அநர்த்தா2ஶங்கியாகிறான்.

इति यत् (अत:)-हेतो: (शास्त्रसार:) வேத3ஸாரமானது, (काव्यात्मना)-காவ்ய ஸ்வருபத்தோடே யுக்தமான. ( अयं भारत:)இந்த மஹாபா4ரதமாக. (कृत:) பண்ணப்பட்டதென்றபடி. க்ராந்தத3ர்ஶியானவனுடைய கர்மமிறே காவ்யம்.  “शब्दार्थौ सगुणौ सालङ्कारौ दोषवर्जितौ काव्यं” என்றிறே काव्यलक्षण सूत्रम्. (शास्त्रसार: अयं कृत:) என்கிற  सामानाधिकरण्यं அம்ஶாம்ஶிபா4வத்தைப்பற்ற. (श्रुतिसागरात् ) என்று வேத3த்தினுடைய अगाधत्व-மும் (वेदशैल) என்று दुरारोहत्व-மும். (गहनात्) என்று दुष्प्रवेशत्व-மும். (तीव्रादौषधादिव) என்று दु:खसेव्यत्व-மும் சொல்லப்பட்டது. (भारतचन्द्रमा:) என்று ज्ञानजनकत्वाह्लादकरत्व-ங்களும். (नीरजस्का) என்று ज्ञानोत्पत्ति-प्रतिबन्धकनिवर्तकत्व-மும். (काव्यात्मना) என்று து3ஷ்கரத்திலும் सुखरूपप्रवृत्तिकरत्व-மும் சொல்லப்பட்டது. வேத3வாக்யம் ப்ரபு4வாக்யம் போலே; புராண வாக்யம் ஸுஹ்ருத்3 வாக்யம் போலே; காவ்யம் அபி4மதவிஷயமான காந்தையினுடைய உபதே3,ஶம்போலே.’ “यद्वेदात् प्रभुसंमितात् अधिगतं शब्द प्रधानाञ्चिरम्, यथार्थप्रवणात् पुराणवचनात् प्राप्तं सुहृत्संमितात्। कान्तासंमितया यया सरसतामापाद्य काव्यश्रिया कर्तव्ये कुतुकी बुधो विरचित: तस्यै स्पृहां कुर्महे।।”  என்கிறவித்தை யோஜித்துக் கொள்வது. (விஷ்ணாவித்யாதி3) (विष्णौ ) “विष्णुपोतम् ”  என்கிற ஸித்3தோ4பாய விஷயத்திலும். (वेदेषु)-”विष्णुनामा स वेदेषु” என்கிறபடியே அந்த ஸித்3தோ4பாயத்தை ப்ரதி பாதி4க்கிற வேத3ங்களிலும். (विद्वत्सु)-“विदु: कृष्णं” என்கிறபடியே அந்த வேத3ங்களைக் கொண்டு விஷ்ணுபோதத்தை  யறிகிற அநுகூலர் விஷயத்திலும், (गुरुषु)- அந்த ப்ரமாண ப்ரமேயங்களை அந்த ப்ரமாதாக்களுக்கு உபதே3ஶிக்கிற ஆசார்ய விஷயத்திலும். (ब्राह्मणेषु) – அந்த ஆசார்யர்களுக்கு உகந்த விஷயமென்று கிஞ்சித்கார்யரான ப்3ரஹ்மநிஷ்ட2ர் விஷயத்திலும். (कल्याणी)-स्वयंप्रयोजन-பூ4தையான. (भक्ति:)ப்ரேமவிஶேஷமானது. (धीमतां)-ஸத்வோத்கர்ஷமடியாகப் பிறந்த நிஷ்கர்ஷ ஜ்ஞாநமுடையவர்களுக்கு, (भारतादेव भवति)-ग्रनथान्तरनिरपेक्ष மாக பா4ரதத்தினாலே உண்டாகிற தென்றபடி. (மதி மந்தா2நம்) इत्यादि-प्रमाणोपादान பரிபாடிக்கு இந்த ஶ்லோகோபாதா3நத்தில் விஶ்ராந்தியாலே ஒரு விஶேஷேம் வ்யஞ்ஜிதம். எங்ஙனே யென்னில்; (ஸித்3தோ4பாயத்தைச் சொல்லிக்கொண்டு போந்து. ஈஶ்வரஸ்வாதந்தர்யத்துக்கஞ்சினவனுக்கு ப்ரத2மபர்வத்தைத்தள்ளி, சரமபர்வம் காட்டப்பட்டது) என்றிறே மூலத்துக்கு ப்ரதா4ந ப்ரமேயம் சொல்லிற்று. அதுதான் வேத3தாத்பர்யவிஷயம் என்னுமிடம் இதிஹாஸாதி3களைக்கொண்டு நிஷ்கர்ஷிக்கிறார் என்றும் சொல்லிற்றிறே. அப்படி ஸித்3தோ4பாயப்ரப்4ருதி சரமபர்வ பர்யந்தமான அர்த்த2ங்களிலே பா4ரதத்துக்குத்தாத்பர்யம் என்னுமிடம் மஹாபா4ரத வைப4வ ப்ரதிபாத3கமான புராண விஶேஷஸ்த2மான இந்த வசநஸ்த2 நிர்தே3ஶ, க்ரமவிஶேஷத்தாலே ஆவிஷ்க்ருதம் என்று திருவுள்ளம்பற்றியாய்த்து – முடிவில் இந்த வசநம் உபாத்தம் என்று கண்டுகொள்வது. ( வேத3 வேத்3யே) என்கிறவிது ஸ்காந்த3வசநம். (மதிமந்தா2நம்) என்கிறவிது वाायुप्रोक्तशैव-ங்களில் வசநம். (பி3பே4திக3ஹநாத்) என்கிறவிது ப4விஷ்யத் புராணஸ்த2 வசநம். (வ்யாஸ வாக்ய) इति மார்க்கண்டே3ய புராண வசநம். (ஆதி3), ஶப்33த்தாலே  “ तस्माद्रामायाणं देवि वेद एव न संशयः। सर्वव्याकरणान्यत्र स्वयं न्यस्तानि वेधसा” என்கிற ஸ்காந்த3 வசநமும். “यस्य द्वैपायन: पुत्र: स्वयं विष्णुरजायत। प्रकाशो जनितो येन महाभारतचन्द्रमा:।।” என்கிற மாத்ஸ்ய வசநமும். “कृष्णद्वैपायनं व्यासं विद्धि नारायणं प्रभुम्।कोह्यन्यो भुवि मैत्रेय महाभारतकृद्भवेत्  ” என்கிற புராணரத்ந வசநமும் விவக்ஷிதம்.

(மத்4யஸ்த்தை2யாவது) இத்யாதி3– “यस्मिन् कल्पे तु” என்கிற வசநம் मास्त्यपुराणस्थம். அதுக்கர்த்த2ம் ( ஸர்வ புராணத்துக்கும்) இத்யாதி3. (यत्पुराणं) என்கிற यच्छब्दफलितं(ஸர்வபுராணத்துக்கும்) இதி. (यस्मिन्)-यद्गुणप्रचुरे, (कल्पे- ब्रह्मणो दिवसे, (सः)-बुद्धिस्थः कल्पविशेषणभूतो गुणः, (स्वरूपं)-निरूपक, धर्मो यस्य, स: तथोक्त: तेन (ब्रह्मणा), (यत्पुराणं) (प्रोक्तं)-प्रवर्तितं  “तस्मिन् कल्पे” “तस्मिन् पुराणे” इत्यध्याहारः, यत्तदोनित्यसम्बन्धात्. तस्मिन् कल्पे, तस्मिन् पुराणे, (तस्य तस्य)-कल्पगुणविशिष्टस्य कर्तृ-गुणविशिष्टस्य अग्न्यादे: , (महात्म्यं वर्ण्यते) என்று விவக்ஷித்து அருளிச்செய்கிறார் (அவனுக்கு யாதொரு கல்பத்திலே) இத்யாதி3. (யாதொரு கல்பத்திலே) -यद्गुणप्रचुर-மான கல்பத்திலே. (तत्स्वरूपेण) इत्यत्र स्वरूपपदं-प्राचुर्योपलक्षक- மென்று திருவுள்ளம்பற்றியருளிச் செய்கிறார் (யாதொருருணம் விஞ்சி யிருந்தது) என்று. (तस्य तस्य) என்கிற तच्छब्दद्वय-மும். ( यस्मिन् ) (तत्स्वरूपेण) इति यत्तच्छन्दनिर्दिष्ट-कल्प-कतृ-गुणविशिष्टपर மென்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார் (அந்த கு3ணாநு கு3ணேதி). गुणानुगुणत्वं च-स्वयं तद्गुणप्रचुरत्वे सति स्वोपासकानामपि तत्प्रयोजकत्वम्। “अग्ने: शिवस्य” इत्यादिप्रकरणस्थ -अग्नि -शिव- चतुर्मुख- पितृ- सरस्वति- हरि- शब्दार्थ – ங்களை  क्रीडी-கரித்து ஸாமாந்யேந அருளிச்செய்கிறார் (தேவதையினுடைய) இதி. (यत्प्रोक्तं)इति यच्छब्दबलाध्याहृत-तच्छब्दार्थ ம் (புராணத்திலே) இதி. அந்த கல்பத்திலே என்று ஶேஷ:. இங்கே “ अत: तस्मिन् कल्पे तस्मिन् पुराणे तत्तद्गुणप्रचुरस्य तस्य तस्य दैवतस्य माहात्म्यं वर्ण्यत इत्यर्थ:” என்கிற वेदार्थसङ्ग्रहदीपिकावाक्य-த்தைக் கண்டுகொள்வது. (லௌகிகார்த்த2ங்கள்)- த3ண்ட3நீதி முதலானவற்றில் சொல்லுகிற அர்த்த2ங்கள். (வைதி3கார்த்த2ங்கள்)-கர்ம ப்3ரஹ்மங்கள். (அதி4க்ருதங்களாகையாலே)- தத்பரங்களாகையாலே என்றபடி. (பக்ஷபாதம்) – अर्थस्थितिमनपेक्ष्यापि तात्पर्यातिरेक-ம். இதில்லாமலிருக்கை மத்4யஸ்த2தை என்று கூட்டுவது.)

(கர்த்துரித்யாதி3) तमप्प्रत्ययार्थ-ம் (மிகவும்) இதி. உக்தார்த்த2த்துக்கு ப்ராசீநஸம்வாத3ம் (अथेतिहासेत्यादि). (इतिहासपुराणयोः) इति निर्धारणे सप्तमी. (बलीयांसः)-स्मृत्यपेक्षया புராணங்கள் ப3லவத்துக்கள். तदपेक्षया இதிஹாஸங்கள் ப3லவத்துக்கள் என்றபடி. (सर्वत्र)-லௌகிக வைதி3க விஷயங்களிலே (भूतार्थप्रतीते:)-विद्यमानार्थेप्रतीते: (वचनसौष्ठवेन)-वाक्य-सौघटयेन; पूर्वापराविसंवादेन अतिवादतात्पर्यविरहेण- என்றபடி. (ஸாமாந்யேந)-ஸ்ரீராமாயணம். பா4ரதம் என்கிற விஶேஷநிர்தே3ஶம்  இன்றிக்கே என்றபடி. (परिग्रहविशेष:)-पुराणेषु ஶ்லாகி4க்கப்படுகை. (यत् अन्यत्रास्ति तत् इहास्ति) इति கூட்டுவது. யாதொரு ப்ரமேயம் இதுக்கு அந்யமான லோகவேத3ங்களிலே ப்ரதிபாத்3யதயா இருக்கிறது – அது இங்கே ப்ரதியாத்3யதயா இருக்கிறது என்று விவக்ஷித்து (லௌகிகவைதி3) इत्याद्युक्त-ம். (यन्नेहास्ति न तत् क्वचित् )இதிலின் றிக்கேயிருப்பது புறம்பின்றிக்கேயிருக்கும் என்றபடி. (यदिहास्ति तदन्यत्र) என்று அந்வயவ்யாப்தியும் (यन्नेहास्ति न तत् क्वचित्)  என்று வ்யதிரேகவ்யாப்தியும் சொல்லிற்றென்று விவக்ஷித்து, (सकलार्थ) इत्युक्तம். (இதிஹாஸ விஶேஷமான) என்றது-“महाभारतं हि” என்று इतिहासत्वव्याप्याव्यमहाभारतत्वरूपविशेषधर्म-த்தையிட்டு நிர்தி3ஷ்டமான என்றபடி, இது. “रामायणवत् महाभारतं शरणम् ” என்று ப4ட்டராலே அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீராமாயணத்துக்கும் உபலக்ஷணம். இது உய்யக்கொண்டார் க்3ரந்த3த்தில் பண்ணின सामान्यनिर्देशவ்யாவ்ருத்தி. (ஸ்ரீஸஹஸ்ரநாம பா4ஷ்யத்திலே)-ப4கவத்3கு3ண த4ர்ப்பணத்திலேயென்றபடி. அதுக்கு,  “महाभारतसारस्वात्” இத்யாதி3 ஸ்வபத3ங்களை. “महाभारतं हि” இத்யாதி3 ஸ்வவாக்யங்களாலே வர்ணிக்கையாலே. “स्वपदानि च वर्ण्यन्ते” என்கிற பா4ஷ்யலக்ஷணமுண்டென்று பா4ஷ்ய ப்ரஸித்3தி4 உபபந்நையென்று (ஸஹஸ்ரநாம பா4ஷ்யத்திலே ) என்று அருளிச்செய்தார் என்று கண்டுகொள்வது.

(அதின் ப்ராப3ல்யத்தை) -புராணங்களிற் காட்டில் இதிஹாஸத்துக்குண்டான ப்ராப3ல்யத்தை. (இசைவிக்கிறார்) – ஸம்வதி3ப்பிக்கிறார் என்றபடி. “इतिहासपुराणं पञ्चमम्”  इति भूमविद्यावाक्यम् . इतिहासाश्च पुराणानि च इतिहासपुराणम्;  समाहारद्वन्द्व: “इतिहासपुरानाभ्यां इति” जात्येकवचनान्त-ங்களான इतिहास पुराणशब्द-ங்களுக்கு इतरेतरयोगद्वन्द्व:| இது बार्हस्पत्यस्मृतिवचनस्थम्  ப்ரப3லம் முற்படும் என்னுமதுக்கு ஶப்3தா3நுஶாஸநத்தை ப்ரமாணமாகக் காட்டுகிறார் (த்3வந்த்3 ஸமாஸத்தி லித்யாதி3நா). (த்3வந்த்3 ஸமாஸத்தில்) என்றது- ப்ரக்ருதமான “இதிஹாஸ புராண”  என்கிற த்3வந்த்3வ ஸமாஸத்திலென்றபடி. அல்லது “த்3வந்த்3வ ஸமாஸ ஸாமாந்யத்தில்” என்று சொல்லப்பார்க்கில்.  “ध्यन्तम्” “लघ्वक्षरम्” “ऋतुनक्षत्राणाम्” “भ्रातुर्ज्यायस:” “अजाद्यदन्तम्” என்று த்3வந்த்3வ ஸமாஸத்தில் முற்படுமவை பலவுமுண்டாகையாலே, “அல்பாச்தரமாதல் அப்4யர் ஹிதமாதலிறே முற்படுவது” என்று நியமிக்கவொண்ணாதிறே. “இதிஹாஸ புராண” என்கிற த்3வந்த்3வத்திலே கீழ்ச்சொன்ன மக்3யந்தாதி3களுக்கு விஷயந்தான் முதலிலேயில்லையிறே. இனி பரிஶேஷிப்பது அஜாத்3யத3ந்தம், அல்பாச்தரம். அப்4யர்ஹிதம் என்கிற மூன்றுமிறே. அதில் ” அஜாத்3யத3ந்தம்’ என்கிற இத்தை “அல்பாச்தரம்” “அப்4யர்ஹிதம்”  என்கிறவிரண்டும் பரத்வாத் பா3தி4க்குமிறே. இனி அதிலும் பரிஶேஷித்தது ” அல்பாச்தரம். அப்4யர்ஹிதம்” என்கிற இரண்டுமேயிறே. இத்தையெல்லாம் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் ( அல்பாச்தரமாதல் அப்4யர்ஹிதமாதலிறே முற்படுவது) என்று. அல்பாச்தரமாவது- இரண்டில் வைத்துக்கொண்டு ஒன்றிற்காட்டில் ஒன்று ந்யூந  ஸங்க்2யாகமான உடலெ(உயிரெ?)ழுத்தையுடைத்தாயிருக்கிற பத3ம். அப்4யர்ஹிதமாவது- ஒன்றிற் காட்டில் ஒன்று ஶ்ரேஷ்ட2வாசகமாயிருக்கிற பத3ம். ( அதிலித்யாதி3) புராணஶப்33த்திற்காட்டில் ந்யூநாச்கமன்றிக்கே அதி4காச்கமான இதிஹாஸபத3ம் புராண ஶப்33த்திற்காட்டில் முற்பட்டது. புராணாபேக்ஷயா ஶ்ரேஷ்ட2மான இதிஹாஸத்துக்கு வாசகமாகவிருக்கையாலேயென்றபடி.  अल्पाच्तरत्वात् புராண ஶப்33ம் முற்பட ப்ரஸங்கி3க்க. अभ्यर्हितत्वात् இதிஹாஸ ஶப்33ம் முற்பட ப்ரஸங்கி3க்க. இப்படித் துல்யப3ல விரோத4ம்வரில். . परत्वात् “अल्पाच्तरम्” என்கிற வித்தை பா4தி4த்து “अभ्यर्हितम् पूर्वम् ” என்கிற ஶாஸ்த்ரமே ப்ரவர்த்தித்து. இதிஹாஸப்33ம் முற்பட்டது என்று கருத்து. இத்தைத் திருவுள்ளம்பற்றியிறே. “ इतिहासस्य पुराणेभ्योऽप्यभ्यर्हितत्वं विशेष:। अल्पाच्तरम् इति पुराणशब्दस्य पूर्व निपाते प्राप्ते ‘अभ्यर्हितं पूर्वं प्रयोक्तव्यं’ इति पूर्वानिपातितस्य इतिहासस्य अभ्यर्हितत्वप्रतीते:।।”என்று ஶ்ருதப்ரகாஶிகா ப4ட்டரருளிச்செய்ததென்று கண்டுகொள்வது. “सर्वतोऽभ्यर्हितं पूर्वम्” என்றிறே महाभाष्यकारवचनम्. இங்கே –

  1. அத்தாலே அது முற்பட்டது.

அத்தாலே அது முற்பட்டது” (வா.4) என்னுமதுக்கு உதா3ஹரணமாக “यद्ब्राह्मणानीतिहासान् पुराणानि” என்கிற வ்யஸ்த ப்ரயோக3ஸ்த2லத்தை எடாதொழிந்தது. “इतिहासपुराणाभ्यां वेदं समुपबृंहयेत्” என்கிற वचनच्छायानुकारि-யான “வேதா3ர்த்த2 மறுதியிடுவது” (வா. 1) என்கிற வாக்யத்திலே “इतिहासपुराणाभ्याम्” என்கிறவிதுவே झटिति बुद्धिस्थ மாகையாலும் த்3வந்த்3வ ஸமாஸத்தில் அப்4யர்ஹிதத்துக்குப் பூர்வ ப்ரயோக3ம் ஶாஸ்த்ரீயமாகையாலும், வ்யாஸ ஸ்த2லங்களில் அதுக்குப் பூர்வப்ரயோக3ம் पुरुषेच्छाधीन-மாய் அநியதமாகையாலும், த்3வந்த்3வ ஸமாஸோதா4ஹரணமே உசிதமென்னுமபி4ப்ராயத்தாலேயென்று கண்டுகொள்வது.

(அத2வேதி) “அத்தாலே அது முற்பட்டது”(வா4) என்றால் அது எவ்விடத்திலே முற்பட்டது என்னும் அதி4கரணாகாங்ஷையிலே. ग्रन्थान्तरस्थप्रयोग-ம்  अधिकरणत्वेन ஸம்ப3ந்தி4க்கு மதிலுங்காட்டில் प्रकृतग्रन्थ-த்திலே पूर्वप्रसतुत-மான ப்ரயோக3மே अधिकरणत्वेन ஸம்ப3ந்தி4க்கை शीघ्रभावि என்று கருத்து, (इतिहासाश्च पुराणानि च इतिहासपुराणानि) इति प्रथमं द्वन्द्वसमासः। अभ्यहिर्तत्वात्  इतिहासस्य पूर्व निपातः, अनन्तरं (स्मृतयश्च इतिहास पुराणानि च स्मृतीतिहासपुराणानि) इति द्वन्द्वगर्भो द्वन्द्व: (स्मृतयश्च इतिहासश्च पुराणानि च  स्मृतीतिहासपुराणानि) என்று त्रिपदद्वन्द्व-மும் ஸாது4வேயாகிலும், இதிஹாஸபுராணங்களுக்கு உத்தர பா4கோ3ப ப்3ரும்ஹணத்திலே तुल्यवदेकक्रियान्वयित्व-மிருக்கையாலும், “இதிஹாஸ புராணம்” இத்யாதி3 த்3வந்த்3வ ப்ரயோக3ம் பலவிடங்களிலேயிருக்கையாலே “अवयवप्रसिद्धे: समुदायप्रसिद्धिर्बलीयसो”  என்கிற ந்யாயம் – இங்கு ப்ரவர்த்திக்கையாலும், த்3வந்த்3வ க3ர்ப4 த்3வந்த்3வமே யுக்தம். இங்கே. “अभ्यर्हितं पूर्वम् ” என்கிற ஶாஸ்த்ரத்தாலே “इतिहासपुराणस्मृतय:” என்று அப்4யர்ஹிதமான इतिहासपुराणद्वन्द्व-ம் முற்படக்கடவதீயென்னில். “अभ्यर्हितं पूर्वम् ”  என்கிறவிது அநித்யமாகையாலே இது முற்படக்கடவதல்ல. அல்பாச்தரமான ஸ்ம்ருதிஶப்33ம் முற்படக்கடவது. ஆனால். ப்ரத2ம த்3வந்த்3வத்திலே अभ्यर्हितत्वात् इतिहासशब्द-ம் முற்படும். द्वन्द्वगर्भद्वन्द्व-த்திலே “अभ्यर्हितं पूर्वम्” என்று அநித்யம் என்னுமத்தாலே अल्पाच्तरं पूर्वम् என்னுமதுவே ப்ரவர்த்திக்கிறது என்கிற விவக்ஷையில் நிதா3நமென்னென்னில்; (1) “अभ्यर्हितं पूर्वे अनित्यम्” என்கிறவிது ज्ञापकसिद्ध-மாகையாலே असार्वत्रिक-ம். அப்படி க்வாசித்கமான அநித்யத்வத்தை प्रथमद्वन्द्व-த்திலே கொள்ளுமதிற்காட்டில் जधन्य-மான द्वन्द्वगर्भद्वन्द्व-த்தில் கொள்ளுகை न्याय्यम्. (2) किञ्च, पूर्वोत्तरभागात्मक-மான வேத3த்தில் பூர்வபா43த்துக்கு उपबृंहण-ம் पूर्वनिर्दिष्ट-ங்களான ஸ்ம்ருதிகளென்றும். उत्तरभागोपबृंहण-ம் उत्तरनिर्दिष्ट-ங்களான இதிஹாஸபுராணங்களென்றும் विभागज्ञापन-ம் ஆவஶ்யகமாகையாலே. द्वन्द्वगर्भद्वन्द्व-த்திலே “अभ्यर्हितं पूर्वम्” என்கிற விதினுடைய  अनित्यत्व-மும். “अल्पाच्तरम्” என்கிற ஶாஸ்த்ர ப்ரவ்ருத்தியும் கொள்ளுகை யுக்தம்; अपेक्षितक्रमानुगुण-மாக अनुशासनप्रवृत्ति-யும் ஸித்3தி4த்தால் அநுகூலமிறே. ” இதிஹாஸ புராணம்” इत्यादिप्रथमद्वन्द्व-த்திலே இங்ஙனொரு ப்ரயோஜநமில்லாமையாலே औत्सर्गिकமான अभ्यर्हितपूर्वनिपातशास्त्रप्राबल्य-ம் கொள்ளுகையே யுக்தம். இக்தையெல்லாம் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (இப்படி இவர்க்கு ஸமாஸ விவக்ஷையாகையாலே) இத்யாதி3. (ஒருங்க விடுகை) வ்யவஸ்தை2 பண்ணுகை. “ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களாலே” (வா.1) என்கிறவிடத்திலே. “பக3வச் சா2ஸ்த்ரத்திலே” (வா.392) என்று தாம் மேலே प्रमाणत्वेन  உதா3ஹரிக்கிற ஸ்ரீபாஞ்சராத்ரத்தையும் ஒக்க உபாதா3ம் பண்ணாமையென்னென்னில்; ஸ்ம்ருதியையெடுத்தவித்தால், அந்த ஸ்ம்ருதிக்கு மூலபூ4தமான ப43வச்சா2ஸ்த்ரமும் அர்த்தா2த்  உபாத்தம் என்றும். இதிஹாஸபுராணங்களை யெடுத்தவித்தால், அவற்றில் ப்ரமாண தமத்வோப்ரதிபாதிக்3கப்பட்ட பா43வச்சா2ஸ்த்ரமும் அர்த்தா2த் உபாத்தமாம் என்னுமபி4ப்ராயத்தாலே ப43வச்சா2ஸ்த்ரத்தையெடுத்தருளிற்றிலர். भगवच्छास्त्र-ம் मन्वादिस्मृति-களுக்கு मूलभूत-மென்னுமிடமும் इतिहासादौ प्रामाणतमत्वेन प्रतिपादित-மென்னுமிடமும். “अत्र सूत्रकाराभिप्रायो मोक्षधर्मवचनैः अवगम्यते। तथाहि तत्र श्रीपाञ्चरात्रस्य बहुमुखं प्रामाण्यं प्रपञ्चितम्” என்றும். “अस्मात् प्रवक्ष्यते धर्मान् मनुस्स्वायम्भुवस्स्वयम्-इति मन्वादिभिरुपजीत्रयत्वम्” என்றும் ஶ்ருதப்ரகாஶிகையிலே வ்யக்தம். ஆனாலும், ப்ரதா4ந ப்ரமாணத்துக்கு अर्थात् उपादान-மும், अप्रधान-த்துக்கு आभिधानिकोपादान-மும் ஆகிற இதுக்கு மூலமென்னென்னில்,  शारीरकसूत्र-ப்ரக்ரியையாயிருக்கும். எங்ஙனேயென்னில், शारीरक-ஸூத்ரத்திலே “स्मृत्यनवकाशदोषप्रसङ्ग इति चेन्न अन्यस्मृत्यनवकाशदोषप्रसङ्गात् என்று. मन्वादिस्मृति-களுக்கு प्रामाण्यसिद्धवत्कारेण कपिलस्मृतिबाधकत्व-த்தைச் சொல்லி, அந்த மந்வாதி3 ஸ்ம்ருதிகளுக்கும் மூலபூ4தமான ஸ்ரீபாஞ்சராத்ரத்தினுடைய ப்ராமாண்யத்தை “उत्पत्त्यसम्भवात् ” இத்யாதி3 ஸூத்ரங்களாலே ஆக்ஷேபித்து, ஸமாதா4நம் பண்ணிற்றிறே; அத்தை யநுரோதி4த்தாய்த்து இவர் இப்படிச்செய்தருளிற்றென்று கண்டுகொள்வது. 4

  1. 5. இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது ; மஹாபா4ரதத்தால் தூதுபோனவனேற்றஞ்சொல்லுகிறது.
  2. (வேதா3ர்த்த2மறுதியிடுவது) வா 1) என் று தொடங்கி, साकल्येन वेदार्थनिरूपणप्रतिज्ञाप्रत्यभिज्ञापक-மான உபோத்3கா4தத்தைப்பண்ணி. प्रतिज्ञानुगुण-மாக साकल्येन वेदार्थनिरूपण-ம் பண்ணாமல் तदेकदेशोत्तरभाग-த்தில் ஏகதே3ஶமான पुरुषकारवैभवादिमात्र-த்தை நிரூபித்தபடியென்? என்கிற ஶங்கையைப் பரிஹரித்துக்கொண்டு உபோத்3கா4தத்தோடே ப்ரப3ந்த4க்துக்கு ஸங்க3தியை அருளிச்செய்கிறார் (முதலிலே) இத்யாதி3நா. இங்கே, (பண்ணினாரேயாகிலும்) इत्यन्तं शङ्कानुवाद-ம், (சேதநருடைய) इत्यादिकं पारिहार-மென்று கண்டுகொள்வது. (उज्जीवनं)-मोक्ष:. இங்கே. “सामान्येन विशेषसमर्थनं अर्थान्तरन्यास: ” என்கிறபடியே விவக்ஷித விஶேஷத்தில் தாத்பர்யாதிஶயத்தாலே सामान्यकीर्तन-ம் श्रोतृबुद्ध्यतिशयकर-மாகையாலே ஸாமாந்ய ப்ரதிஜ்ஞையும் ஏகதே3ஶமாத்ரநிரூபணமும் கூடும் என்று. பரிஹாராபி4ப்ராயம் கண்டுகொள்வது. இவ்விடத்திலே. “अथातो ब्रह्मजिज्ञासा”என்கிறது. வேத3த்தினுடைய பா43த்3வயார்த்த2 நிரூபணத்துக்கும் ஸாமாந்ய ப்ரதிஜ்ஞை என்கிற யோஜனையிலே प्रतिज्ञातवेदार्थसामान्यैकदेश-மான பூர்வபா4கா3ர்த்த2த்தை நிரூபியாமல் ததே3கதே3ஶமான உத்தரபா4கா3ர்த்த2 மாத்ரத்தை நிரூபித்த ஸுத்ரகார ஶைலியையும். “अथातो कर्मजजिज्ञासा” என்றே भागद्वयविचात- த்துக்கும் ஸாமாந்ய ப்ரதிஜ்ஞை யென்கிற யோஜனையிலே. प्रतिज्ञातार्थैकदेश மான உத்தர பா4கா3ர்த்த2த்தை நிரூபியாமல் ததே3கதே3ஶமான பூர்வபா4கா3ர்த்த2 மாத்ரத்தை நிரூபித்த பூர்வமீமாம்ஸா ஸுத்ர காரருடைய ஶைலியையும் दृष्टान्ततया கண்டுகொள்வது. அங்கே, क्रमेण கு3ருஶிஷ்யர்களாலே भागान्तरार्थनिरूपण-ம் பண்ணப்பட்டதே யென்ன அருளிச்செய்கிறார்.( பூர்வபாகத்தில் முமுக்ஷவுக்கு ஜ்ஞாதவ்யாம்ஶமுள்ளதும் ) இத்யாதி3 अत्रापि பூர்வபா4கா3ர்த்த2த்தையும் स्वयमेव विवक्षानुगुण-மாக ஸங்க்3ரஹமாக நிரூபித்தாரென்று கருத்து. (தத்தத3நுகு3ணத்யாஜ்யோபாதே3 கத2நமுகே2) என்றது – स्वरूपाद्यननुगुणनिषिद्धकाम्याङ्गत्वादि-களாலே த்யாகா3ர்ஹதையென்ன. लोकसङ्गरहतया कैङ्कर्यत्वादिना ஸ்வீகாரார்ஹதையென்ன एतत्कथनद्वारेण-என்றபடி, இங்கே, “ उत्तरभागे च तत्तदर्थौपयिकतया प्रसक्तानां पूर्वभागार्थानां शिक्षणीयत्वं, प्रदर्शितयैव दिशाऽनुक्तानामपि शिक्षणीयार्थान्तराणां सुकरनिर्वाहत्वञ्चाभिप्रेत्य ब्रह्मसूत्राण्येव भगवान् भाष्यकार: प्रारभते विवरीतुम् ” என்கிற श्रुतप्रकाशिका-ச்சா2யை ஸ்பு2ரிதையென்று கண்டுகொள்வது. (43வது3பாஸநாதி3களையும் ) என்கிற ‘ ஆதி3″ ஶப்33த்தாலே. நாமகீர்தநாத்3யுபாயாந்தரங்களும். ஸித்3தோ4பாயவரணாதி3களும். அநுப4வ கைங்கர்யாதி3களும் ஸங்க்3ருஹீதங்கள். ஸாரம் -ஸித்3தோ4பாயவரணாதி3கள். அஸாரம் -உபாஸநாதி3கள். அஸாரம் – ஸ்வார்த்தா2நுப3வாதி4கள். ஸாரம் -பரார்த்த2 கைங்கர்யாதி3கள். (அருளிச் செய்து செல்லுகிறார் மேல்) “இதிஹாஸ ஸ்ரேஷ்ட2மான” (வா. 5) என்று தொடங்கி. “2லபர்யந்தமாக்கும்” (வா 463) என்னுமதளவான उपरितनसन्दर्भ-த்தாலே ப்ரதிபாதி3த்துக்கொண்டு போருகிறார் என்றபடி. கீழ் ப்ரமாண நிர்தே3ஶம் பண்ணியருளினார்; இனி தத3நுகு3ணமாக ப்ரமேய நிர்தே3ஶம் பணணியருளுகிறார் என்று ஸங்க3தியென்று கருத்து. அநந்தரம். “இவையிரண்டிலும்” (வா3) इत्याद्यनन्तरपूर्ववाक्य-த்தோடே “இதிஹாஸஶ்ரேஷ்ட2மான” (வா.5) इत्यादिप्रबन्धादिमवाक्य-த்துக்கு सङ्गतिकथनपूर्वकं வாக்யார்த்த2மருளிச்செய்கிறார்.– (அதில் ப்ரத2மத்திலே) இத்யாதி3நா. “அத்தாலே அதுமுற்பட்டது” (வா. 4) என்று. द्वन्द्वसमास-த்தில் पूर्वप्रयोग-மாகிற अभ्यर्हितत्वलिङ्गம் पुराणापेक्षया இதிஹாஸத்துக்கிருக்கிறாப்போலே. இதிஹாஸங்களிலே தாரதம்யம் இருக்கிறமைக்கு ஸூசகமான तादृशपूर्वनिपात-ம் காணாமையாலே அவற்றில் தாரதம்யமில்லையென்று ப்ரதிபத்தி பண்ணி ப்ரஶ்நம் பண்ணாமலிருக்கிற ஶ்ரோதரர்களைக்குறித்து भूमविद्याचार्यன் . “एष तु वा अतिवदति, यस्सत्येनातिवदति” என்று स्वयमेव भूमोपदेशपर्यवसानभुमिभूत-னான புருஷோத்தமனை உபபாதி3த்தாப்போலே-இவரும் स्वयमेव ஸ்ரீராமாயணத்தினுடைய இதிஹாஸோத்தமத்வத்தை அருளிச்செய்கிறாரென்று கருத்து. இதுதான் “இதிஹாஸஶ்ரேஷ்ட2மான” (வா. 5) என்று सिद्धवनिर्देश-த்தாலே व्यञ्जित-ம். இத்தால் इतिहासेषु श्रीरामायणप्राबल्यं, पुराणापेक्षया इतिहाससामान्य த்தைப்பற்ற प्रसिद्ध-மென்று सूचितम् . இஸ்ஸித்3த4வந்நிர்தேஶமும், “श्रीरामायणवत्महाभारतं शरणम् ” என்கிற  श्रीसहस्रनामभाष्यस्थनिर्देशानुसारेण என்று தாத்பர்யம். प्रमाणग्रन्थ-த்துக்கு  तथाविधग्रन्थान्तरापेक्षया श्रेष्ठ्यं प्रामाण्यप्रकर्षहेतु-க்களான कर्त्रादिप्रकर्ष-த்தாலென்றே கொள்ளவேணும்; प्रतिपाद्यार्थविशेष-த்தைப்பற்ற ஶ்ரேஷ்ட2மென்கை உசிதமன்று; प्रमाण्यसन्देह-ம் கிடக்கில் प्रतिपाद्यार्थ-த்துக்கு आत्मलाभ-மே து3ர்லப4மாகையாலே स्वप्रतिपादकग्रन्थ-த்துக்குத் தான்  श्रेष्ठताहेतु -வாகமாட்டாதென்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார்.– (ஸ்ரீராமாயணத்துக்கித்யாதி3). (ஸம்பா4விதனான)-கௌ3ரவிதனான. இது भागवदवतारभूतव्यासप्रणीतभारतापेक्षया श्रेष्ठताहेतु வானபடியென்னென்னில்; பா4ரதம் பண்ணின பின்பும் அபரிதுஷ்டனான வ்யாஸப43வானுக்கு ஸ்ரீநாரத343வாந் வந்து தோற்றி. சில அர்த்த2விஶேஷங்களை உபதேஶித்து. ஸ்ரீபா43வதத்தைப்பண்ணச்சொல்ல. வ்யாஸ ப43வானும் அப்படிச்செய்ய. அந்த அபரிதோஷம் தீர்ந்ததென்கையாலே. ப்3ரஹ்மபுத்ரனான நாரத343வானடியாக ப்ரவ்ருத்தமான பா43வதநிர்மாணத்தாலே தீரக்கடவ அபரிதோஷஸஹமான பா4ரதத்தைப்பற்ற அந்த நாரத343வானுக்குப் பிதாவான ப்3ரஹ்மாவாலே பூஜிதனான வால்மீகி ப43வானாலே ப்ரணீதமான ஸ்ரீராமாயணம் ஶ்ரேஷ்ட2 மாகக் கடவதிறே. ( தே வாகி3த்யாதி3) “अज्ञातं नास्ति किञ्चित् ” என்னுமாப்போலே வ்யதிரேகோக்தியாலே ஸத்யத்தினுடைய प्रायिकत्व  நிவ்ருத்தி லப்4தை4யாகையாலே, अन्यत्र याथार्थ्यं प्रायिक மென்று வ்யஞ்ஜிதமாகையாலே, भारतापेक्षया श्रैष्ठ्यं सिद्धम् (யா(தா?)வதி3த்யாதி3) . “லோகேஷு” என்கிற ப3ஹுவசநார்த்த2ம் (ஸகலலோகேதி). ” ப்ரசரிஷ்யதி” என்கிற இதினுடைய அர்த்த2ம் (பரிக்3ரஹமித்யாதி). இது भारतापेक्षया अधिककालपरिग्रह-த்துக்குமுபலக்ஷணம். இப்படி अधिककालाधिकदेशपरिग्रह-முண்டாகையாலே भारतापेक्षया श्रेष्ठ-மென்றபடி. (இன்னமும்)-किञ्च इत्यर्थ: (வேதே3த்யாதி3) “பரே என்கிறதினர்த்த2ம் (ஸர்வஸ்மாத் பரனான) இதி. புருஷ ஶப்3த3 பர்யாயமான பும்ஶப்3த3ர்த்த2ம் (ஸர்வேஶ்வரன்) இதி. “उत्तम: पुरुषस्त्वन्य: . . विभर्त्व्यय: ईश्वर:” என்னக்கடவதிறே. “परित्राणाय” இத்யாதி3யையுட்கொண்டருளிச்செய்கிறார்.- (ஸம்ஸாரீத்யாதி3). ”3ஶரதா2த்மஜேஜாதே‘ என்கிறதினர்த்த2ம் (இதரேத்யாதி3). ப்ரமேயஶேஷமிறே ப்ரமாணம்; गुणानां प्राधानानुवर्तित्वात्, गुणभूत-மானவேதம்  प्रधानभूतवेद्यानुगुणजन्मभाक् ஆய்த்து என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (அவதரித்தாப்போலே) என்று. வேத3ஶப்33த்தில் कालोपाधिनिर्देशविरहलब्ध-மான நித்யத்வாதி3 ஸித்34மான इतरवैलक्षण्यम्  (ஸர்வப்ரமாணேதி). ஶப்33ப்ரமாணத்தினுடைய வஸ்து ஸாமர்த்2யாநுகு3ண ப்ரயோஜநத்தை அருளிச்செய்கிறார் ( தத3வதாரேத்யாதி3நா).  “ஸாக்ஷாத்ஆஸீத்” என்று ப்ரத்யக்ஷமாய்த்தென்றாய், ப்ரத்யக்ஷபா4வமாவது- அவதாரம் என்றருளிச்செய்கிறார்,- (அவதரித்ததென்று சொல்லப்படுகையாலும்) இதி. இத்தால். *வ்யாஸப43வாந் வேத3த்தைக் காவ்யாத்மநா பண்ணின பா4ரதத்தைப்பற்ற. அந்த வேத3மே வால்மீகி ப43வாந் பக்கல் நின்றும் ராமாயணாத்மநா ஆவிர்பூ4தம் என்று சொல்லப்பட்ட ஸ்ரீராமாயணம் அஜஹத் ஸ்வபா4வமான வேதா3வதார விஶேஷமாகையாலே ஶ்ரேஷ்ட2ம்* என்று ஸ்பு2டம் என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் ( ஸம்ப்ரதிபந்நமிறே ) என்று. (ஸம்ப்ரதிபந்நம்)- निर्विवादतया प्रसिद्धम् “சிறையிருந்தவள்” என்கிற நிர்தே3ஶ ப்ரயோஜநத்தை அருளிச்செய்கிறார் (பிராட்டியென்னாதே ) இத்யாதி3நா. (3யாதிஶயத்தை)  எம்பெருமானுடைய த3யையிலுங்காட்டில் விஞ்சின த3யையை. “द्रष्टुं न सहते देवी क्लिष्टान् स्वपरिचारकान् । करुणास्त्रान्वितमुखी” என்கிறவிது विवक्षित-ம். (தண்மை )- நிகர்ஷம். (தே3வஸ்த்ரீகளிதி ) “एवमार्तासु योषित्सु कृपा कस्य न जायते” என்கிறவிது பிராட்டி பக்கல் சொல்லவேண்டாவிறே யென்று கருத்து, (நிரதிஶய வாத்ஸல்யத்துக்கும்)- நிரதிஶய  ஸ்நேஹத்துக்கும். (இந்த கு3ணாதி4க்யத்தை) – த3யாதி4க்யத்தையும், நிரதிஶய வாத்ஸல்யத்தையும். (.தனிச்சிறையிலித்யாதி3) (தனிச்சிறையில்)-தனிமைக்கு அநர்ஹையாயிருக்குமவளுக்கும் தனிமையை உண்டாக்கின சிறையிலே. (விளப்புற்ற) – விளப்பு -விளம்ப3நம். ப்ரஸித்3தி4யென்றபடி.; அத்தை. உற்ற -ப்ராபித்த. “தே3வஸ்த்ரீகள் காலில் விலங்கை வெட்டிவிடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக்கொண்டவள் என்று நாட்டிலே ப்ரஸித்3தை4யானவள்”  என்று ஈட்டிலர்த்த2ம். (கிளிமொழியாள்)-கிளிபோன்ற வாக்கையுடையவள் என்றர்த்த2ம். “उत्पत्स्यते हितार्थं व:” என்று இவளுடைய உத்பத்தி தே3வஹிதார்த்த2மென்றபோதே, துல்ய ந்யாயேந  உத்பத்த்யநுப3ந்தி44ர்மங்களும் தே3வஹிதார்த்த2மென்று ஸித்3தி4க்குமே; अनुग्रहहेतुकत्व-த்தாலே இதுக்கு தோ3ஷத்வமில்லை; गुणादिशयप्रयुक्ततया गुणत्व-முமுண்டென்று கருத்து. (பலபிறப்பாய்)-ப3ஹுஜந்மங்களையுடையவனாய். (ஒளி வரும் )-तत्प्रयुक्ततेजोतिशय-த்தையுடையவன் என்றபடி.

(காவ்யமித்யாதி3) “रामायणं कृत्स्नं- काव्यम्-महत् -सीतायाश्चरितम् ” என்றந்வயம். ராமாயணமான காவ்யம் முழுதும் ப்ரதா4நமான பிராட்டியுடைய சரிதமென்றர்த்த2ம். ஶப்3தா3ர்த்த2 ரூபமான காவ்யத்தோடே. அர்த்த2ரூபமான சரிதத்துக்கு. अंशांशिभावात्सामानाधिकरण्यम् ” ராமாயணம் ” என்கிற ஸமாக்2யையைப் பற்ற, “ஸீதாயாஶ் சரிதம்” என்கிற வாக்யப்ரமாணம் ப்ரப3லம். “ரகு4வரசரிதம்” என்கிற வாக்யத்தைப்பற்ற. “க்ருத்ஸ்நம்” என்கிற பத3ஶ்ருதி ப்ரப3லை. “மஹத்” என்று, பிராட்டி சரிதத்துக்கு ப்ரதா4ந  ப்ரதிபாத்3யத்வம் சொல்லுகையாலே. பெருமாளுடைய  अप्रधानतया प्रतिपाद्यत्वमादाय வாக்யஸமாக்2யைகளும் உபபந்நங்கள். प्राणेभ्योऽपि க3ரீயஸிக்கு प्रधानप्रतिपाद्यत्वमुपपन्न-ம். பரம ப்ரணயியானவர்க்கு प्रणयिनीपारतन्त्र्य-மும் गुणावह-ம். இத்தையருளிச்செய்கிறார்,-(வாயோலையிட்டு வைத்தானிறே) என்று. வாயென்று ஶப்33மாய், पूर्वोक्त-वाक्यप्रमाण த்தையும் पदश्रुति-யையும் சொல்லிற்றாய், அத்தை ஓலையிட்டு வைத்தானென்றபடி. அன்றிக்கே, (வாயென்று) உக்தாநுபூர்வியாலே ஓலை வாயிலிட்டு வைத்தானென்றுமாம். வாய் – இடம். (ஸ்ரீமதி3த்யாதி,) श्रीरत्रास्ति इति श्रीमतृृ. “ऋचः सामानि यजूंषि सा हि श्रीरमृता” என்கிறபடியே वेदत्रयप्रतिपाद्यपुरुषार्थ-மாகிற ஸ்ரீயையுடைத்தான வென்றபடி. “वेदैश्च संमितम् ” என்னக்கடவதிறே. இத்தால், भगवद्गुणमात्रप्रतिपादक-ங்களான புராணங்களைப்பற்ற வ்யாவ்ருத்தி சொல்லிற்று. (பரம்)-உத்க்ருஷ்டம். இத்தால் இதிஹாஸாந்தரங்களைப்பற்ற வ்யாவ்ருத்தி சொல்லிற்று. (ராமாயணமபி)-ராமாயணமும். கீழே உபநிஷத்தைச் சொல்லிற்றிறே:- அத்தை ஸமுச்சயிக்கிறது. அபி” என்கிற பத3ம். அன்றிக்கே. மேலே “வேதா3நபி ” என்று ஸமுச்சயத்3வயமாய், அதிலொன்று இங்கே வரக்கடவதாய். இங் குத்தை அபி” என்கிறவிது விரோத4வாசகமாய். ஸமாக்2யா ப3லத்தாலே பெருமாளுக்கு ப்ரதிபாத4கமாயிருந்ததேயாகிலுமென்றபடி. (தவச்சரித்ரே) -தேவரீருடைய சிறையிருப்பு முதலான தி3வ்ய சேஷ்டிதங்களிலே. (ப்ராணிதி) “अन प्राणने”  என்கிற தா4தவர்த்த2த்திலே ‘பரஶப்3தா3ர்த்த2ம் அந்தர்நீதமாயிருக்க. மீளவும் “ப்ர” ஶப்33த்தாலே. மிகவும் ப்ராணதா4ரணத்தைப் பண்ணுகிறதென்று சொல்லுகிறது. (த்வச்சரித்ரேப்ராணிதி) என்கிறவித்தால் ஶ்ரீராமாயணத்துக்குப் பிராட்டியுடைய சரித்ரம் ஜீவிதம் என்று லபி4த்தது. இத்தால், ஸ்ரீராமாயணத்துக்கு व्यङ्ग्यमर्यादया प्रतिपाद्य-ம்- பிராட்டியினுடைய சரித்ரமென்று ஸித்3தி4த்தது. “जीवितं व्यङ्ग्यवैभवम्” என்றிறே काव्यज्ञसमय-ம். அதில் “அநிதி” என்று गुणीभूतव्यङ्ग्यविधया प्रतिपाद्यत्व-த்தை வ்யாவர்த்திக்கிற (ப்ராணிதி) என்கிறவித்தால்-वाच्याति शायिव्यङ्ग्यविधया प्रतिपाद्य-ம் பிராட்டியுடைய சரிதமென்று லபி4த்தது. ஆக,  वाच्याविधया பெருமாள் ப்ரதிபாத்3யரான மையைப்பற்ற. ‘ ராமாயணம் என்கிற ஸமாக்2யைக்கும் விரோத4மில்லையென்று ஸித்3தி4த்தது. ध्वनिप्रधानं काव्य-மிறே उत्तमं काव्य-ம். இத்தைத் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார். (அருளிச்செய்தாரிறே பட்டர்) என்று.

(பாராஶர்ய: ) – பராஶராத்மஜ: अनन्तरापत्य-த்திலே गोत्रत्वारोपात् प्रत्यय-ம் வந்து கிடக்கிறது.  वेदान् व्यस्यतीति-वेद  व्यास:, “व्यास: पाराशर्य:” என்கிறவிடத்தில் வ்யாஸ ஶப்33ம் नामैकदेशे नामग्रहण-ம். இத்தைத் திருவுள்ளம்பற்றியருளி ச்செய்கிறார் (வேத3வ்யாஸ 43வானாலே) யென்று. (மஹாபா4ரதமுமிதி).  “ एकतश्चतुरो वेदा भारतं चैकमेकत:। समागतैस्सुंरर्षिभि: तुलामारोपितं पुरा॥ महत्त्वे च गुरुत्वे च श्रीयमाणं ततोऽधिकम्। महत्वात् भारवत्तवाञ्च महाभारतमुच्यते।।” என்கிற  विरुक्तिवचनं இங்கே अभिप्रेतम् . (ஸ்ரீராமாயணத்தோபாதி)-தத்துல்யதயா; இத்தால் उपमानतया निर्दिष्ट-மான ஸ்ரீராமாயணத்தைப்பற்ற. उपमेयतया निर्दिष्ट மான மஹாபா4ரதத்துக்கு किञ्चिदप्राधान्य-ம் உண்டென்று கருத்து. இதுதான் . மூலத்திலே, மஹாபா4ரதத்துக்கு  “இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான” என்று விஶேஷணாநுபாதா3நத்தாலே வ்யஞ்ஜிதம். (செய்கிற தொழிலின் தண்மை)- செய்யப்படுகிற தூ3த்யமாகிற க்ருதயத்தினுடைய நிகர்ஷம். प्रणतानां पारतन्त्र्यं ப்ரண தரிட்ட வழக்காயிருக்கை; : तत्र रुचि: अभिप्रीति: तया विवश: -अस्वाधिन: என்றபடி. (ஆஶ்ரயண ஸௌகர்யாபாத3கமான) என்றது- चाक्षुशपूर्वकसमाश्रयणे निग्रहापादकत्वाशक्यत्वान्यतरबुद्धिनिवर्तनद्वारा आश्रयणप्रवृत्तिजनकज्ञानविषय- மானவென்றபடி. வாத்ஸல்யம் -निग्रहापादकत्वबुद्धि-யையும். ஸௌலப்யம் – अशक्यत्वबुद्धि-யையும் நிவர்த்திப்பிக்கும். (நீர்மை)- परत्वप्रतिद्वन्द्विயான सौलभ्य-ம். ( இந்த கு3ணாதி4க்யத்திலே)- தூ3த்ய ப்ரயோஜகமான सौलभ्यादिगुणादिशय- த்திலே. (ஈடுபட்டு)-विद्ध-ராய். (இன்னார் தூ3தனென )-லோகத்தார் பாண்டவ தூ3தனென்று சொல்ல, (நின்றான்)- அதுவே ஹேதுவாக நிலைபெற்றானென்றபடி. (குடைமன்னரிடை) அபி4ஷிக்த க்ஷத்ரியராகையாலே குடைக்கு அர்ஹரான குரு ராஜாக்களான து3ர்யோத4நாதி3கள் நடுவிலே. (நடந்த தூ3தா)- நடந்த தூ3தனே என்றபடி. (பேசிற்றே பேசுகையிறே இவர்களுக்கேற்றம்) என்றது – பூர்வர்களுடைய ஶப்33த்தையே அநுஸரித்து ஶப்33ப்ரயோகா3தி3களைப் பண்ணுகை. ஸம்ப்ரதா3யைக நிரதரான பிள்ளைலோகாசார்யர் முதலான பூர்வாசார்யர்களுக்கு. கு3ருஶிஷ்ய க்3ரந்த2 விரோத4ங்களைப் பரமதாதி3களாலே பரிஹரிக்க வேண்டும் அருமையுடைய ஜைமிந்யாதி3களைப்பற்றவும், “अस्मिन्नर्थे पातयाम: ” என்னுமவர்களைப்பற்றவும் उत्कर्षपर्यवसायि யான वैलक्षण्यமென்றபடி. (அறிவில் தலைநின்றவர்) ஸம்யக்3ஜ்ஞாநபராகாஷ்டை2யிலே நிலைநின்ற நம்மாழ்வார் போல்வார். (எத்திறம் என்று)-பிரானே! இதென்னப்ரகாரமென்று. (மோஹிக்கும்படியாய்)-மூர்ச்சி2க்கும்படியாய்; பக்வனாகிறதுக்கு முன்பு. ப்ராப்தையுமாய், ஸ்நிக்3தை4யுமான தாயாராலே கட்டுண்டமைக்கு ஆறுமாஸம் மோஹித்தபடி கண்டால், ப்ரௌட4னான பின்பு. அதத3ர்ஹருமாய். நெஞ்சில் ஶாத்ரவமுடையருமான து3ர்யோத4நாதி3கள் விஷயத்திலே தண்மைக்கெல்லையான தூது போனமைக்கு மோஹிப்ப ரென்னுமிடம் சொல்ல வேண்டாவிறேயென்று கருத்து. (தத்பரமாகையாலே) – தாத்பர்யயுக்தமாகையாலே. இத்தால் अभिधानवृत्तया गाङ्गेयादिप्रतिपादन-ம் பண்ணிலும் விரோத4மில்லை யென்றபடி.

  1. இவையிரண்டாலும் புருஷகாரவைப4வமும் உபாயவைப4வமும் சொல்லிற்றாய்த்து .
  2. ”இவை” என்கிறவிது अव्यवहितप्रधानपरामर्शि-யென்று திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார் (சிறையிருந்தவளேற்றம் தூதுபோனவனேற்றம்என்ற) இத்யாதி3. (அகி2 ஜக3ந்மாதாவான ஸம்ப3ந்த4த்தாலும்) என்றது- “देव देवो हरि: पिता” என்கிற पितृत्वरूपसम्बन्ध-ம் போலன்றிக்கே. “त्वं माता सर्वलोकानां” என்கிற प्रियैकपरता-प्रयोजक-निरुपाधिकमातृत्व மாகிற ஸம்ப3ந்த4த்தாலுமென் றபடி. (க்ருபாதி3களாலும்) என்றது दण्डधरत्वस्वातन्त्र्यगन्ध-மில்லாமையாலே அபி4பூ4தங்களன்றிக்கே, நித்யோத்3பூ4தங்களான க்ருபா க்ஷமா வாத்ஸல்யாதி4களாலுமென்றபடி. (நடுவொரு புருஷகாரம்) – ஈஶ்வர புருஷகார பூ4தையான தனக்கொரு புருஷகாரம். (சீறி) – கோபித்து. (க்ஷிபாமி)- “संसारेषु नराधमान् क्षिपामि” என்றும். ( க்ஷமாமி) “पद्मकोटिशतेनापि न क्षमामि” என்றும் சொல்லுகிற. (திருத்தி)அக்ஷமாதி3களைப்போக்கி ரக்ஷணோபயோகி3யாக்கி. (வைப4வம்)- அதிஶயம். (சிதகு)-छिद्रं. (உரைக்கிலும்)- சொல்லிலும். (மறுதலைத்து) எதிர்த்தலையாய் நின்று. புருஷீகரித்த பிராட்டி தானே சி2த்3ரம் சொல்லுகை स्वोद्भावितवात्सल्यदार्ढ्य-परीक्षर्थम् . (திண்ணியனாய் )-ஸ்தி2ரனாய். (புருஷகாரமென்றும் உபாயமென்றும் இவற்றை நிரூபகமாக அருளிச்செய்தது) என்றது – புருஷகாரம் என்கிற த4ர்மிநிர்தே3ஶத்தாலே புருஷகாரத்வத்தைப் பிராட்டிக்கு இதர வ்யாவர்த்தக த4ர்மமாக நிர்தே3ஶித்ததும். உபாயமென்கிற த4ர்மி நிர்தே3ஶத்தாலே உபாயத்வத்தை ஈஶ்வரனுக்கு இதர வ்யாவர்த்தக த4ர்மமாக நிர்தே3ஶித்ததும் என்றபடி. (பிராட்டிக்கு ) இத்யாதி3 क्षमाद्युद्भावनद्वारा भगवदीयोपायभाव प्रयोजकत्व-மாகிற पुरुषकारत्व-ம் – பிராட்டிக்கு तदितरावृत्तित्वे सति तद्वृत्तिயான த4ர்மமென்றும், *उपायानपेक्षोपायत्व-மாதல். फलप्रदत्वे सति फलकरणत्व மாதலாகிற  उपायत्वं ஈஶ்வரனுக்கு तदितरावृत्तित्वे सति तद्वत्ति-யான த4ர்மமென்றும் தோற்றுகைக்காக என்றபடி. நிரூபகத்வம். व्यावर्तकत्वम्. அதுதான் அஸாதா4ரண த4ர்மத்துக்கேயுள்ளதொன்றாகையாலே. निरूपकत्यव्यञ्जकनिर्देशம் तन्नियत-மான असाधारणधर्म த்துக்கு  व्यञ्जकமிறேயென்று கருத்து. (இதுதன்னை)- “பிராட்டிக்குப் புருஷகாரத்வம் அஸாதா4ரணம்; ஈஶ்வரனுக்கு உபாயத்வம் அஸாதா4ரணம்” என்கிற இத்தையென் றபடி. (மத் ப்ராப்திம்) இத்யாதி3– “मत्प्राप्तिं प्रति पुरुषकारत्वे” என்றந்வயிப்பது. (ஏதத்)- புருஷகாரத்வம். (அந்யதா2 லக்ஷணம் 4வேத்) ப்ராப்தி பூர்வபா4வியாய், புருஷகாரத்வாதிரிக்தமாய். ப்ராப்த்யுயோகி3யான அஸாதா4ரண த4ர்மமில்லை

யென்றபடி. இங்கே. “अन्यल्लक्षणं नास्ति” என்கிறவித்தாலே पुरुषकारत्व-ம் लक्षण-மென்று ஸித்34மென்று கருத்து. ( அஹமித்யாதி3) “लक्ष्मीपति: -अहं साक्षात्-स्वयंप्राप्त्युपाय:”. ( லக்ஷ்மீபதி: ) इति विश्वासहेतु-पुरुषकारसम्बन्ध-மும். ( ஸாக்ஷாத் ) इति-உபாயாந்தர வ்யாவ்ருத்தியும். (ஸ்வயம்) என்று லஷ்மீ வ்யாவ்ருத்தியும் ஸித்34ம். ‘( லக்ஷ்மீரித்யாதி3 ) ( வல்லபா4 ) इत्यस्य मम इति आदि:।(मम वल्लभा-लक्ष्मी: पुरुषकारेण-प्राप्तियोगिनि)-புருஷகாரத்வமாகிற ப்ராப்தி ஸம்ப3ந்த4த்தையு டையவளென்றபடி. இங்கே, (मम वल्लभा) इति, पुरुषकारहेतुवल्लभ्य-ம் சொல்லிற்று. இங்கே, “रथन्तरे प्रस्तूयमाने सम्मीलयेत्. बृहति प्रस्तूयमाने समुद्रं मनसा ध्यायेत्” इत्यत्र, रथन्तरसाम-ம்  प्रस्तूयमान-மாய் இருந்துள்ளவளவில் ஸம்மீலநமும், ப்3ருஹத்ஸாமம் ப்ரஸ்தூயமாநமாயிருந்துள்ளவளவில் ஸமுத்3ரத்4 யாநமும். “साम्नोव्यवर्थया स्मान्निर्देशोमीलनादिषु। तस्मान्न संकरो युक्तो न त्वेवं प्रोक्षणादिषु।।” என்று व्यवस्थाम्नान-த்தாலே व्यवस्थित-ங்களென்று “एकार्थत्वात् विभाग: स्यात् ” என்கிற नावमिकाधिकरण-த்திலே நிர்ணயிக்கப்பட்டது. அந்த ந்யாயத்தாலே “अहं मत्प्राप्त्युपाय:– लक्ष्मी: पुरुषकारेण वल्लभा प्राप्तियोगिनि ” என்று व्यवस्थाम्ना-த்தாலே. ஈஶ்வரனுக்கு உபாயத்வமும், பிராட்டிக்குப் புருஷகாரத்வமும் வ்யவஸ்தி2தமென்று ஸ்பஷ்டம். (ஏதஸ்யாஸ்ச) இதி- இங்கே. “अहं मत्प्राप्त्युपाय:” என்று இருவர்க்கும் த4ர்மவ்யவஸ்தை2  ப்ரக்ருதையாகையாலே. (வல்லபா) என்கிறவிடத்திலே க்லுப்தமான (மம ) என்கிறபத3ம் இங்கும் வரக்கடவது. ஆக (மமஏதஸ்யாஶ்ச) என்று ஸித்3தி4த்தது. (விஶேஷோऽயமிதி) கீழே வ்யவஸ்தா2ம்நாநத்தாலே उपायत्वं भगवदितरावृत्तित्वे सते भगवद्वृत्ति என்றும், पुरुषकारत्वं लक्ष्मीतरावृत्तित्वे सति लक्ष्मीवृत्ति என்றும் ஸித்34மாகையாலே. तद्वृत्तित्वे सति तदितरावृत्ति யான த4ர்மத்துக்கு வாசகமான விஶேஷஶப்33த்தாலே. உபாயத்வத்தையும், புருஷகாரத்வத்தையும் அநுவதி3க்கிறது. (அஹம் மத்ப்ராப்தி ) इत्यादिपूर्ववाक्य- த்திலே प्रतिनियतधर्मद्वय-ம் प्राप्त-மாகையாலே. प्रापकवाक्यावगतद्वित्वविरुद्धैकत्व-மும். प्रापकवाक्यावगतबहुत्वविरुद्धग्रहैकत्व-ம் போலே अविवक्षित-ம். ஆக (1) “मम एतस्याश्च इमौ विशैषौ-उपायत्व-पुरुषकारत्वरूपप्रतिनियतधर्मौ ” என்று पर्यवसितम्. இது उद्देश्यसमर्पक-ம். (நிக3மாந்தேஷு ஶப்3த்3யதே ) इति विधेयसमर्पकम्. இந்த விஶேஷங்கள் வேதா3ந்தங்களிலே ப்ரதிபாதி3க்கப்படுகிறன என்றபடி. இப்படி प्रातेनियतधर्मत्वेन வேதா3ந்தங்களிலே ப்ரதிபாதி3க்கப்படுகிறன வென்கையாலே, ஈஶ்வரனுக்கும் பிராட்டிக்கும் सामान्येन मोक्षोपयोगित्वबोधकश्रतिस्मृत्यादिवचन-ங்களுக்கு இந்த व्यवस्थितविशेष-ங்களிலே छागपशुन्यायेन पर्यवसान மென்று இந்த व्यवस्थापकवचन-த்துக்குத் தாத்பர்யம். (2) यद्वा   (நிக3மாந்தேஷு ஶப்3த்3யதே) என்கிறவிது उद्देश्यसमर्पक-ம்; मम एतस्याश्च अयं विशेषः- इमो विशेषौ என்று विधेयसमर्पक-ம்.  ஆக. வேதா3ந்தங்களிலோ प्रतिपाद्यमान-மானது இப்படியிருவர்க்கும் प्रतिनियत-ங்களான पुरुषकारत्वोपायत्व-ங்களென்றபடி. இங்கே . “मैत्रायणीयोपनिषदि, “तस्मिन्नेव यजमाना: सैन्धवधन इव लीयन्त्येषा वै ब्रह्मैकता नाम, अत्र हि सर्वे कामाः समाहिताः”  इति. “सैन्धवधन इव” इति, यथा सैन्धवघन उदके प्रास्तः तत्र लयं प्राप्नोति-तत्समानरूपतया दुर्ग्रहविवेको भवति, रसविशेषेण विवेक्तुं च योग्यः, तद्वत् ब्रह्मणि (प्र) लीनोऽपीति भावः। अत्र च ब्रह्मकतानुवादेन लयरूपताविधिः प्रतीयते, तदयं भावः-सर्वेषु मोक्षप्रकरणेषु “ब्रह्म वेद ब्रह्मैव भवति” इत्यादिरूपेण अभेदप्रतिपादकत्वेन प्रतीयमानानां वाक्यानामयमेवार्थ इति ॥” என்று பாராஶர்ய விஜயத்தில் சொல்லுகிறபடியே. வேதா3ந்த ப்ரதிபாத்3யமான அர்த்த2ம் இந்த ப்ரதிநியத த4ர்மங்களென்கிறவித்தால். सर्वत्र उपायप्रकरण-ங்களிலே, “उदाराम्” “अमृतं दुहाना” “परनिर्वाणदायिनी” “संसारार्णवतारिणी”  “विमुक्तिफलदायिनी” “अहं हि शरणं प्राप्ता” “शरणं भव मेऽम्बुजे” “एषा प्रसादसुमुखी स्वपदं प्रापयिष्यति” “अलमेषा परित्रातुं”  “பூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” [திருவாய் 4-5-11] “பூவளரும் திருமகளாலருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர்” [பெரிய திருமொழி 11-6-10] “अरविन्दलोचनमन:कान्ताप्रसादात्” “अञ्जलि-भरं वहते वितीर्य” “पद्मायास्तव चरणौ नरशरणयन्” “अन्यकल्याणकारणम्”इत्यादि रूपेण उपायत्वप्रतिपादक-ங்களாக प्रतीयमान-ங்களான வாக்யங்களுக்கு இந்த ப்ரதிநியத த4ர்மங்களே அர்த்த2மென்று, प्रबलप्रमाण-மான ப43வச்சா2ஸ்த்ரமே. वेदान्ततदुपबृंहणस्थवाक्य-ங்களுக்கு வ்யாக்2யாநம் பண்ணினபடியால். तद्विरुद्धकल्पन-ம் கூடாதிறே. இப்படி ப43வச்சா2ஸ்த்ரமே வ்யவஸ்தை2 பண்ணுகையாலே ரஹஸ்யத்ரயஸாரத்தில் त्रयोविंश-सप्तविंश-अष्टाविंशाधिकार-ங்களில் उक्तமான பிராட்டியுடைய उपायत्वம் अनुपपन्न-மென்று தாத்பர்யம். (एतस्या अयं च विशेषो-निगमान्तेषु शब्द्यते ) என்றந்வயிக்கில். समुञ्चेतव्यம்-प्रकृत-மல்லாமையாலே समुञ्चयம் व्यर्थ-மாம். “एतस्या अयं तु विशेष:” என்னப்பார்க்கில். சகாரத்துக்கு तुशब्दार्थकत्व-ம் क्लिष्ट-ம். சகாரத்துக்கு भिन्नक्रमत्व-மும் क्लिष्ट-ம். “अयमेव विशेष:” என்னப்பார்க்கில், விஶேஷாந்தரங்கள் பலவுமிருக்கையாலே बाध-மும் ப்ரஸங்கி3க்கும். இருவர்க்கும் धर्मप्रतिनियम-ம் प्रक्रान्त-மாகையாலே पुरुषकारत्वमात्र-த்துக்கு निगमान्तप्रतिपाद्यत्वकथनம் न्यूनமாகையாலே. “एतस्यास्तु अयं विशेष: निगमान्तेषु शब्द्यते” என்னவும் கூடாது. ஆகையாலே. “मम एतस्याश्च इमौ विशेषौ निगमान्तेषु शब्द्येते” என்றே பொருளாகக்கடவது.

த்3வயத்திலே விஶிஷ்ய(ட?) நிர்தே3ஶமும். विशिष्टकारणताग्राहकन्यायமும். जायापत्योरविभागन्यायமும்.  सर्वभावानुगामिनीत्वமும். இந்த व्यवस्थापकवचनबलानुरोधि-களாய்க்கொண்டு இந்த ப்ரதிநியமத்திலே விஶ்ரமிக்கக்கடவது. இங்கே अज्ञातनिगर्हत्वादि-களும் अनुग्राहकतर्क-ங்களாகிறது. “उदाराम्” இத்யாதி3களும். तत्तद्वाक्यस्वारस्यपर्यालोचन-ம் பண்ணுமிடத்தில், उपायत्व-த்தில் ப்ரமாணமாகமாட்டாதென்னுமிடம் पूर्वाचार्यग्रन्थ-ங்களிலே विशद-ம். உபாயத்வத்தில் ப்ரமாணமாக प्रत्याशाविषयवचन-ங்களெல்லாம் उभयाप्युभेतपुरुषकारत्व-த்திலே उपक्षीण-ங்களாகையாலே. अनन्यथासिद्धप्रमाण-முமில்லை. ஆகையாலே उपायत्व-ம் भगवदसाधारणம் पुरुषकारत्वம் பிராட்டிக்கு அஸாதா4ரணமென்றபடி.

(ஆகிஞ்சந்யேத்யாதி3)-(பா4க்3யாதி4கா:-கேசித்) என்னுடைய निर्हेतुककृपाविषयत्वமாகிற பா4க்3யம் விஞ்சியிருக்கிற சிலர். (ஆகிஞ்சந்யைக ஶரணா:) – ஸ்வரூபாநுப3ந்தி4யான அநந்யோபாயத்வத்தை அதி4காரமாகவுடையராய்க்கொண்டு, (லக்ஷ்மீம் புருஷகாரேண வ்ருதவந்த:)-பிராட்டியைப் புருஷகாரமாக வரித்து. (மத்க்ஷமாம் ப்ராப்ய )-ஆஶ்ரயணமும் அபராத4கோடியாகாதபடியான (க?) என்னுடைய அபராத4 ஸஹத்வத்தைப்பெற்று. (மத்பதாம் போ4ருஹத்3வந்த்3வம் ப்ரபத்3)- என்னுடைய நிரபேஷோபாயமான திருவடிகளை உபாயமாக வரித்து. (ப்ராப்யம்மாம்ஏவப்ராபகம்லப்3த்4வா)- அதி4கார பூ4தமான அந்த வரணத்தாலே ப்ராப்யனான என்னையே ப்ராபகமாகப்பெற்று, (ப்ரீதமாநஸா🙂 ப்ராப்யத்வரையையுடையராய்க்கொண்டு, (அநந்யமாநஸா:) यावत्प्राप्ति उपायोपेयान्तरங்களிலே நெஞ்சு செல்லாதவராய்க் கொண்டு. (க்ருதார்த்தா2:)-1. க்ருதக்ருத்யராய்க்கொண்டு. 2. यद्वा, वरणोत्तरक्षणप्रभृति कैङ्कर्यरूपप्रयोजन-லாப4வான்களாய்க் கொண்டு (மாமேவ ப்ராப்ஸ்யந்தே) உடாயபூ4தனான என்னையே ப்ரதா4ந ப்ராப்யமாக ப்ராபிக்கப்புகுகிறார்கள் – என்றபடி, (மத்ப்ராப்திம் ப்ரதி) (150) இத்யாதி3 வசநத்தில் पुरुषकारत्व-த்தினுடைய लक्षणत्व-மும், (அஹம் மத்ப்ராப்தி) (150) இத்யாதி3 வசநத்தில் व्यवस्थाम्नानादि-களும், (மத்பதா3ம்போ4ருஹ) (154) இத்யாதி3வசநத்திலே ஏவகாரமும் व्यवस्थास्फुरण-மும் விவக்ஷிதம். இங்கே उपायत्व-ம் उभयपर्याप्त-மென்றாதல். प्रत्येकपर्याप्त-மென்றாதல் சொல்லப்பார்க்கில். द्विष्ठस्य एकत्र व्यदेश-மும். एवकार एकशब्दादि-களும் व्यवस्थाम्नानமும் விரோதி4க்கும். प्राधान्याभिप्राय-த்தாலே पतिमात्रव्यपदेश-மென்கைக்கு विशिष्य नियामक-மில்லை. विशेक्षणविशेष्यभावेन उपायत्व-மென்னில். पुरुषकारत्वातिरिक्त மாய். भगवदुपायत्वाद्विलक्षण-மான विशेषणतयोपायत्वं  பிராட்டிக்கே அஸாதா4ரணமாயிருப்பதொன் றாகையாலே. पुरुषकारत्वातिरिक्तप्राप्त्युपयोग्यसाधारणधर्मान्तरनिषेधपर மான “नान्यथा लक्षणं भवेत्”  என்கிற நிஷேத4த்துக்கு விஷயமாம். பிள்ளான் முதலான மத்4யஸ்த2ர்க்3ரந்த2ங்களிலும். अवश्यवक्तव्यस्थल-ங்களிலே பிராட்டிக்கு पुरुषकारत्वातिरिक्त-மான उपायत्व-ம் ப்ரஸ்தாவிக்கப்படவில்லை. पुरुषकारत्वेन-வும் उपायत्वेन-வும் பிராட்டிக்கு இருகால் ஆஶ்ரயணமும். ப்ரமாணங்களிலும் ஆசார்ய ஸுக்திகளிலும் கண்டதில்லை. स्वरूपनिरूपकतया भगवच्छरणवरणविषयत्वमात्र-ம் उपायत्वप्रयोजक-மாகாது. पतिकर्तृक-सर्वव्यापारानुविधानप्रयुक्त-மான ज्ञानशक्त्यादिवर्धन-த்துக்கு चेतनव्यापार-மும் अनपेक्षितம்  पुरुषकारभावம் प्रपन्नमात्रविषय மாகையாலே पुरुषकारवरणमावश्यकम्. विशेषणतया निर्देश-மும் पुरुषकारभाव-த்திலே  चरितार्थ மாகையாலே  प्रतर्दनादिविद्यान्यायமும் उपायत्वसाधन மாகாது. இப்படி दिङ्मात्रं சொல்லப்பட்டது. விஸ்தரம் பூர்வாசார்ய க்3ரந்தங்களிலே கண்டுகொள்வது. மற்றைப் பிராட்டிமார் முதலானார்க்கும் புருஷகாரத்வம் காண்கிறபடியாலே. இது பெரிய பிராட்டியார்க்கே யுள்ளதொன்றென்று நியமிக்கும்படியென்? என்ன அருளிச்செய்கிறார் (மற்றையித்யாதி3). (மற்றைப் பிராட்டிமார்)- भूमिनीलाप्रभृति-கள். ( ஸூரிகள் )- திருவநந்தாழ்வான் ப்ரப்4ருதிகள். ( முதலான ) என்கிறவித்தால்-ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸங்க்3ருஹீதர்கள். “மண்மகளாய்மகள்” [திருவாய் 8-3-1] * முன்னையமரர் ” [திருவாய் 1-7-8] நாகணைமிசை ” [திருவாய் 5-10-11) “வேதம் வல்லார்களைக்கொண்டு ” [திருவாய்4-6-8] இத்யாதி3களைக் கண்டுகொள்வது. ( இவள் ஸம்ப3ந்த3மடியாக) இத்யாதி3-गन्धवत्तव-ம் पृथिव्यसाधारण-மென்று प्रमाणोपपत्ति-களாலே ஸித்3தி4த்த பின்பு. जलादिभूतान्तर-ங்களிலே उपलभ्य-மான गन्ध-ம் पृथिवीसम्बन्धनिबन्धन-மென்று கொள்ளுகிறாப்போலே. पुरुषकारत्व-ம் लक्ष्म्यसाधारण-மென்று व्यवस्थापकवचनादिप्रमाणोपपत्तिसम्प्रदाय-ங்களாலே ஸித்3தி4த்த பின்பு, एतद्विभूतिभूत-ரான महिष्यन्तरप्रभृति-களில் प्रतीयमान-மான पुरुषकारत्व-மும், “विशेषाधिष्ठानं तप्ताय:पिण्डवत् ” என்கிற अधिष्ठानविशेष-மாகிற இந்தப் பெரியபிராட்டியாருடைய ஸம்ப3ந்த4 ஹேதுகமென்றபடி. (ஸ்வதஸ்ஸித்34மன்றே) என்றது – अन्याधिष्ठाननिरपेक्ष-மன்றே யென்றபடி. இவ்வர்த்த2த்துக்குப் பூர்வாசார்ய ஸம்வாத3ம் காட்டுகிறார் (ஆகையிறே) இத்யாதி3நா. ( ஏததி3தி )- “अपेक्षया सहित: सापेक्ष:। एतस्यां लक्ष्म्यां सापेक्षः एतत्सापेक्षः। एतत्सम्बन्धक इति यावत्। तथाविधात्सम्बन्धात् – लक्ष्म्यधिष्ठितत्वरूपलक्ष्मीसम्बन्धात्, घटकत्वं-पुरुष – कारत्वम् । स्वतो न-लक्ष्म्यधिष्ठाननिरपेक्षस्वरूपप्रयुक्तं नेत्यर्थः॥ (தீ3பஸங்க்3ரஹத்திலே) – தத்வ தீ3பஸங்க்3ரஹத்திலே. (ஜீயர்) – வாதி4 கேஸரி அழகிய மணவாள ஜீயர்.

இனி. ப43வத3ஸாதா4ரணமான உபாயத்வத்துக்கும் இந்த ந்யாயமொக்குமென்கிறார் (உபாயத்வமும்) இத்யாதி3நா. (உபாயத்வமும்)-उपायानपेक्षोपायत्व-மும். (க்ருஷ்ணம்) இத்யாதி3 -सनातनम् नित्यसिद्धं-स्वरूपसनातनत्व-ம் सर्वात्मसाधारण-மாகையாலே. இங்கே तत्कथन-ம் नातिप्रयोजनक-ம். ஆகையாலே “महाशूर:” இத்யாதி3களில் महत्त्वं शौर्यादि-களிற்போலே. இங்கும் सनातनत्वं धर्मत्व-த்திலே விஶேஷணமாய். “नित्यसिद्धं-नतु-चेतनयत्नादिसाध्यम्, धर्मत्वं-अदृष्टद्वराकमोक्षसाधनत्वं, यस्य तथाविधं ” என்று லபி4க்கிறது. இத்தையருளிச் செய்கிறார் (ஸநாதந த4ர்மமாக) இதி. “कृष्णं धर्मं सनातनम् इत्यसाधारणनिर्देशसिद्ध” மான அர்த்த2த்தை அருளிச்செய்கிறார் (அவனுக்கே ஸ்வதஸ் ஸித்34மாய் ) இதி. (ஸ்வதஸ்ஸித்34மாய்)- स्वेतरनिरपेक्षस्वरूपप्रयुक्त-மாய். (ததீ3யர்க்கு)-तत्सम्बन्धयाथात्म्यज्ञानहेतुकतदधिष्ठानविशेष-முடைய தேவீ ஸூரி கு3ருக்களுக்கென்றபடி. (ததா3 ஸத்தியடியாக)-पूर्वोक्ताधिष्ठानविशेषात्मकभगवत्प्रत्यासन्नताहेतुक-மாக என்றபடி. இத்தால், நாயகப்ரகரணத்தில் வக்ஷ்யமாணமான ததீ3யோபாயத்வத்தோடு. இந்த उपायत्वीयभगवदसाधारणत्वव्यञ्जकनिरूपकधर्मतानिर्देश-த்துக்கு விரோத4மில்லையென்று கருத்து. एवंरीत्या பெரிய பிராட்டியார்க்கு उपायत्व-ம் அநிஷ்டமன்று. நிரஸநீயமான உபாயத்வந்தான். प्रथमपर्वनिष्ठाधिकारिविषय-த்தில் எம்பெருமானோடொக்கத் துல்யமாகவாதல். விஶேஷணமாகவாதல் प्रपत्तव्यताप्रयोजकतया अभिमत-மான उपायत्व-மென்று கண்டுகொள்வது.

கீழே ”இவள் ஸம்ப3ந்த4மடியாக” (பக்கம் 156) என்று நிர்தே3ஶித்தது . “ஏதத் ஸாபேக்ஷ ஸம்ப3ந்தா4த்”  என்கிற  दीपसङ्ग्रहनिर्देशप्रत्यभिज्ञापनार्थ-மாக. இங்கே “ததா3ஸத்தியடியாக” என்று நிர்தே3ஶித்தது. “शोषिणश्च शरण्याश्च प्राप्याश्चानेन ते मता: । तत्तदाकारसंयुक्ता: परासत्तिप्रभावत:।।” என்கிற दीपसङ्ग्रहनिर्देशप्रत्यभिज्ञापनार्थ-மாகவென்று கண்டுகொள்வது. “उपायत्वं भगवदसाधारणं पुरुषकारत्वं लक्ष्म्यसाधारणम्” என்கிற ப்ரதா4ந ப்ரதிதந்த்ரத்தை நிக3மிக்கிறார் (ஆகையாலே) இத்யாதி3நா. (உபப்3ரும்ஹணமான ப்ரப3ந்த4 த்3வயத்தால்) – உத்தர பா4கோ3பப்3ரும்ஹணங்களான ஸ்ரீராமாயண மஹாபா4ரதங் களால். ( உபப்3ரும்ஹ்யமான வேதா3ந்தத்தில்) என்றது தந்நிஷ்கர்ஷணீயங்களான அஜ்ஞாத விஶேஷங்களில் தாத்பர்யயுக்தமான உபநிஷத்3 பா43த்தில் என்றபடி. (கட2வல்ல்யுபநிஷத்3 ஸித்34மான) என்றது- “कठवल्लीखण्ड:” என்று சொல்லப்பட்ட கட2வல்ல்யுபநிஷத்திலே படித்த ப்ரகாரேணவன்றிக்கே,  ஸர்வாதி4காரத்வார்த்த2மாக. ப்ரஶ்ந ஸம்ஹிதாதி3களிலே வர்ணோத்3தா4ர கரணத்தாலே कठवल्ली  खण्डगत-व्यवहितफठितवाक्य-ங்களைச் சேரப்பிடித்தமையாலே லப்34மான வென்றபடி. (த்3வயத்தில்)-उपायोपेयप्रतिपादकतया वाक्यद्वयात्मक-மான மந்த்ரரத்நத்திலென்றபடி. (சேர உக்தமிறே) என்றது- புருஷகாரமும் உபாயமுமாகிறவிரண்டும். “ஸ்ரீமந்நாராயண” என்கிற ஸமாஸ பத3த்திலே சொல்லப் பட்டதிறே என்றபடி. शब्दत: अर्थतश्च ப்ரத்யபி4ஜ்ஞையைக் கொண்டிறே उपबृंह्योपबृंहणभाव-த்தை நிர்ணயிப்பது. அதில். “श्रीमान् शत्रुनिबर्हण:” என்று ஸ்ரீராமாயணோபக்ரமத்திலும், “नारायणकथामिमाम् ” என்று மஹாபா4ரதோபக்ரமத்திலும் शब्दत: ப்ரத்யபி4ஜ்ஞையும். ஸ்ரீஶப்33 நாராயண ஶப்33ங்களினுடைய व्युत्पत्तिविशेषसिद्ध-மான कृपावात्सल्यसौलभ्यादि-களுக்கு வ்யஞ்ஜகங்களான. சிறையிருப்பு தூது போனமை முதலான வ்ருத்தாந்த ப்ரதிபாத3நத்தாலே अर्थत: ப்ரத்யபி4ஜ்ஞையும் இருந்தபடியாலே *कठवल्ल्युपनिषद्गतद्वयपूर्ववाक्योपबृंहणत्वம்  ஸ்ரீராமாயண மஹாபா4ரதங்களுக்கு ஸ்புட2ம்* என்று கருத்து. இப்படிப் புருஷகாரத்தில் ப்ரமாணங் காட்டி அதில் உபபத்தியை ஶங்காபரிஹாரரூபேண த3ர்ஶிப்பிக்கிறார் (இச்சேதநனுக்கு) இத்யாதி3நா. (3ந்த4ம்)– புத்ரத்வாதி3 ஸம்ப3ந்த4ம். ( ஈஶ்வர ஸமாஶ்ரயணத்துக்கு) ப43வச்ச2ரணவரணத்துக்கு, “ஈஶ்வர ஸமாஶ்ரயணத்துக்கு” என்ற அஸாதா4ரண நிர்தே3ஶத்தாலே. “निरुपाधीश्वरत्वं तु वासुदेवे प्रतिष्ठितम् । भूमानीलापतिर्योऽसौ ईश्वरस्य उदाहृत: ” என்கிற ஈஶ்வர தத்வநிஷ்கர்ஷம் ஸ்போ2ரிதம். (வாத்ஸல்யாதிரேகத்தாலும்)-வாத்ஸல்யாதிஶயத்தாலும் वात्सल्यं गोषेषु गुणत्वबुद्धि: ।

(அவனைப்போலே)- ஈஶ்வரனைப்போலே. * “काठिन्यं हितबुद्ध्या दु:खोत्पादकत्वं।मार्दवं-सञ्जातबाष्प: परवीरहन्ता” என்கிறபடியே अवर्जनीयदु:खोत्पादकत्वेऽपि दयमानमानसत्वम् ।(கேவலமார்த3வமேயாய்) -काठिन्यासहकृत-மாய்.  हितबुद्द्यापि दु:खोत्पादकत्वगन्धासहत्वप्रयोजक- மான த3யாதிஶயமேயாய். (கண்குழிவு)-दु:खानुभवप्रयुक्तनेत्रविकारविशेष-ம். (ப்ரக்ருதி)-ஸ்வபா4வம் “मार्दवं स्वरूपयोग्यता  பிறர் கண்குழிவு காணமாட்டாத ப்ரக்ருதி फलोपधान-ம்” என்று பே43ம் கண்டுகொள்வது. व्यत्यासेन சொல்லவுமாம். (விமுக2ரையும்)- “न नमेयं” என்றிருப்பாரையும். (க்ருஷி)-उपदेशादिव्यापार-ம். (குற்றவாளர்க்கு) – அபராத4 பூ4யிஷ்ட2ர்க்கு . (கூசாமல்)- “ஆஶ்ரயணமும் அபராத4 கோடியிலேயாகிற் செய்வதென்?” என்று ப4யப்படாமல். (பும்ஸ்த்வ ப்ரயுக்தமான) பும்ஸ்த்வ வியாபகமான. (ஹிதபரதை)- “यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ” என்று சொல்லப்பட்ட शुखविशेषप्रयोजकत्वम्. (பத்தும் பத்தாக)- பத்தும் பத்தாயேயிருக்கும்படியாய். ஐந்தாகையன்றிக்கே யென்றபடி. (குடல் கரிக்கும்படியாய்)- அத்யந்தம் ப4யப்படும்படியாய். (உசிதோபாயங்களாலே)-कुपितेश्वरवशीकारर्हकटाक्षादि-களாலே. (அபராத4மே வடிவான) அபராத4 பூ4யிஷ்ட2னான. (அவனை ஆஶ்ரயிக்குமளவில்) ஈஶ்வரனை உபாயமாக வரிக்குமளவில். (இவள்)- பெரிய பிராட்டியார். இப்படி ப்ரமாணோபபத்திகளைக் காட்டியருளி. அநுஷ்டா2நம் காட்டுகிறார் (ஆகையிறே) இத்யாதி3நா. (முன்னிடுகிறது)-வரணதி3யிலே புரஸ்கரிக்கிறது. “सीतासमक्षम्”, “सीतामुवाच”  “அலர்மேல் மங்கையுறை மார்பா” (திருவாய் 6-10.10) “भगवन्नारायणाभिमत” इत्यादिना இளையபெருமாள், நம்மாழ்வார். உடையவர் முதலான பூர்வர்கள். எம்பெருமானை உபாயமாக வரிக்கைக்குப் பூர்வத்திலே பிராட்டியைப் புருஷகாரமாகப் புரஸ்கரித்தார்களென்றபடி.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.