தனி சரமம்
அவதாரிகை
ஸர்வேஶ்வரன், ஜகத்ஸ்ருஷ்டிபண்ணி, வேதோபதேஶத்தைப்பண்ணியருளி, தத்வாரா சேதநருடைய ருச்யநுகூலமாக புருஷார்த்தங்களையும் தத்ஸாதநங்களையும் காட்டி, அவ்வழியாலேதானே ஸாத்யமும் ஸாதநமுமென்கிற ஶாஸ்த்ரத்தையும் உபதேஶித்து விடுகையன்றிக்கே, பரவ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களினாலும் அதிமானுஷ சேஷ்டிதங்களாலும் தானே ரக்ஷகனென்றுமிடத்தைக் காட்டி இத்தனையும் ” செய்த விடத்திலும், “ஆஸுரீம் யோநி மாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி மாமப்ராப்யைவ கௌந்தேய ததோயாந்த்யதமாம் கதிம்” என்று அஸுர ப்ரக்ருதிகளாய், இவ்வாத்மாக்கள் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களையே புருஷார்த்தங்களாகவும், அவை ஸம்பாதிக்குமிடத்திலும் தாங்களே ஸம்பாதித்து கொள்ளுவதாகவும் கோலி, அவை பெற்றபோது ப்ரியப்பட்டும் பெறாதபோது வெறுத்தும் இங்ஙனே. அநுதாபப்படுகிற படியைக்கண்டு க்ருபயாபரயாவிஷ்டனாய், அவர்கள் செய்தபடி செய்கிறார்களென்று தன்குணங்கள் தன்னை இருக்க வொட்டாமையாலே, நான் செய்த குறையிறே. சேதநர் நல்வழிவராதொழிகிற தென்று பார்த்து, ‘க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்”, “பவித்ராணாம் ஹி கோவிந்த: பவித்ரம் பரமுச்யதே” “புண்யாநாமபி புண்யோஸௌ மங்களானாஞ்ச மங்களம் ” என்று இங்ஙனே தானே ஸாதநமும் ஸாத்யமுமென்கிற ஶாஸ்த்ரத்தைக்காட்டிக் கொடுப்போம் என்று பார்த்தருளி ‘தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி’ என்றும், ‘ததோऽகில ஜகத்பத்ம போதாயாச்யுத பாநுநா – தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா’ என்றும் சொல்லுகிறபடியே ஶ்ரீ மதுரையிலே திருவவதாரம் பண்ணியருளி பூதனா ஶகட யமளார்ஜுநாதிகளாகிற ப்ரதிகூல வர்க்கம் மண்ணுண்ணும் படியாகவும் அக்ரூர மாலாகாராத்யநுகூல ஜநங்கள் வாழும்படியாகவும். இப்படி ஸர்வாத்மாக்களினுடைய பாஹ்யாப்யந்தர தமோநிரஸநம் பண்ணி வளர்ந்தருளுகிற காலத்திலே பாண்டவர்களுக்கும் துர்யோதனாதிகளுக்கும் பரஸ்பரம் பிறந்த வைரஸ்யத்தை யுத்த வ்யாஜத்தாலே ஶமிப்பிப்பதாகப் பார்த்தருளி யுத்தார்த்தமாக ஸர்வலோகத்தையும் குருக்ஷேத்ரத்திலே கூட்டி, அர்ஜுந ஸாரதியாய் நிற்க, அவனும் “ஸேநயோருபயோர்மத்யே’ என்று உபயஸேநையுலுமுள்ள தன் பந்துவர்க்கத்தைப் பார்த்து, இவர்களை ஹிம்ஸித்து நான் ஜீவி யாவதென்? என்று தளும்பின அர்ஜுநனுக்கு அவனுடைய தளும்பு நிமித்தமாக ப்ரக்ருத்யாத்ம விவேகத்தையும் ; ஆத்மாவினுடைய நித்யத்வாதிகளையும், தத்ப்ராப்தியினுடைய போக்யதையையும், தத்ப்ராப்திஸாதநம், கர்ம ஜ்ஞாநங்களென்னுமிடத்தையும் அருளிச்செய்ய, அவனுமவ்வளவிலே அஸந்துஷ்டனாக, ‘ஏஷதுவா அதி வததி, யஸ்ஸத்யேநாதி வததி’ என்கிற ஶ்ருதிபோலே-தானே, தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களையும் தத்ப்ராப்தி வைலக்ஷண்யத்தையும் ததுபாயமான கர்மஜ்ஞாந ஸாத்ய பக்தியோக வைபவத்தையும் அருளிச்செய்ய; கீழ் உக்தமான புருஷார்தத்தில் விலம்பாஸகையானருசியாலும், ததுபாயத்தினுடைய துஷ்கரதையாலும், ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலும், துஷ்கரமுமாய், விளம்ப பலப்ரதமுமாய், ஸ்வரூப விருத்தமுமாய் இருக்கிற உபாயத்தாலே, எம்பெருமானை பெற என்பதொன்றில்லை, இனியிழந்து போமித்தனையாகாதே! என்று சோகித்த அர்ஜுநநைக் குறித்து பரமகாருணிகனான கீதோபநிஷதாசார்யன் வேதாந்த ஸித்தமாய், பரம ரஹஸ்யமுமாய், ஸர்வாதிகாரமுமாய், ஸுஶகமுமாய், அவிளம்ப்ய பலப்ரதமுமாயிருந்துள்ள பரம ரஹஸ்யமான சரமோபாயத்தை அர்ஜுந வ்யாஜத்தாலே ஸர்வாத்மாக்களுக்கும் அருளிச்செய்தருளினது சரமஶ்லோக மாகிறது.
ப்ரதம ஶ்லோகமென்று கீழ் ஒன்றுண்டாய்; அத்தைப்பற்ற சரமஶ்லோகமென்கிறதோ வென்னில் – அதன்று -சரமார்தத்தைச்சொல்லுகையாலே. சரமமென்னில் ஸக்ருதேவே இத்யாதிகளிலும் சரம ஶ்லோகத்வ ப்ரஸங்கமுண்டாம். இங்கு கர்மாத்யுபாயங்களைச் சொல்லி அநந்தரம் இத்தை சொல்லுகையாலே இதுக்கவ்வருகு ஒரு உபாயமில்லாத படியான உபாயவிஶேஷத்தைச் சொல்லுகையாலே இத்தை சரமஶ்லோகமென்று ஆசார்யர்கள் சொல்லுவர்கள்.
‘மாஶுச:’ என்று ஶோக நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே, ஶோக ஹேது உண்டாகவேணும், அதாவதென்னென்னில், கீழ் ‘ஶோக ஸம்விக்ந மானஸ:’ என்றதுக்கு ‘மாஶுச:’ என்கிறதாய், ஏகவாக்யமாகிறதல்ல, ‘நாநுஶோசந்தி பண்டிதா:’ என்று தொடங்கி ப்ரக்ருத்யாத்ம விவேகம் பண்ணிவித்தருளினபோதே. அந்த தத்த்வ விஷயஶோகம் போயித்து. இனி கர்மாத்யுபாயங்களைப்பற்ற சோகிக்க, அந்த ஹிதவிஷய ஶோகத்தை பற்றச் சொல்லுகிறதிங்கு. அதாகிறது புருஷார்த்த லாபத்தாலும் உபாய கௌரவாதிஶயத்தாலும் நாம் அதிகாரிகளாய் இவ்வுபாயத்தை அநுஷ்டித்து இப்புருஷார்த்தம் பெறுகை என்பதொன்றில்லை, என்றும், ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத நமக்கு ஸ்வாதந்த்ர்ய கர்பமான உபாயங்களை அநுஷ்டிக்க ப்ராப்தியில்லை என்றும் சோகிக்க, உபாயாந்தர விதாநம் பண்ணுகிறதென்றபடி. ஆகையாலே ப்ரபத்திக்கு இவ்வளவு பிறந்து ஶோகித்தவன் அதிகாரியென்கை. இவ்வளவு பிறவாதவனுக்கு இவ்வர்த்தம் சொல்லுகையாகிறது, பறிப்பான் கையில் சிற்றருவாள் கொடுக்குமோபாதி யென்று திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்வர்.
‘ஸர்வதர்மான்’ இத்யாதி. ஶ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸாதி சோதிதமான நித்ய நைமித்திக காம்ய ரூபமான தர்மங்களையும் மோக்ஷோபயோகி தர்மங்களையும் ஸவாஸநமாக விட்டு என்னையே ஸஹாயாந்தர நிரபேக்ஷமான உபாயமாகப்பற்று. நன் உன்னை ஶோக விஷயமான ஸர்வபாபத்தில் நின்றும் விடுவிப்பேன்; நீ ஶோகியாதே கொள்ளென்றபடி.
வேதங்கள் தர்மங்களை செய்யச் சொல்லாநிற்க விடச்சொல்லுகிற இது வேதங்களெல்லாத்தோடும் விருத்தம் ; ஆதலால்; இதுக்கு வேறொருபடி அர்த்தம் கொள்ளவேணுமென்றுபார்த்து ; விஹித தர்மங்களை விட்டவனுக்கு ப்ராயஶ்சித்தமாக ஶரணாகதியை விதிக்கிறதென்றார்கள். அது கூடாது, எங்ஙனேயென்னில் ஶாஸ்த்ர விரோத மில்லாமையாலே, அதாவது, யாகம் பண்ணும்போது மற்றை ஸ்நாந ஹோமாதி கர்மங்களை விலக்கினாப்போலே ஶரணாகதிக்கங்கமாக மற்ற தர்மங்களை விலக்குகைக்கு விரோதமில்லை. இவ்விதி மோக்ஷார்த்தமாதலால் ஸ்வர்கார்த்தமான விதிகளோடு விரோதமில்லை. அவற்றை இங்கு விலக்காமையால் மோக்ஷார்த்தமான கர்மஜ்ஞாந பக்திகளோடும்’ விரோதமில்லை. அவையாதல் இதுவாதல் என்கையாலும், அர்ஜுனன் முன்பு தர்மங்களைவிட்டு நின்றான் ஒருவனல்லாமையாலும், அவனை நோக்கி ப்ராயஶ்சித்த விதியாகவும் கூடாது.
வேறே சிலர், தர்ம ஶப்தத்தாலே பலத்தைச் சொல்லுகிறதாக்கி தர்மத்தை அநுஷ்டியாநின்றே பலத்தில் இச்சை விடவே, அது மோக்ஷத்துக்கு ஸாதநமாமென்றார்கள்; அதுவும் கூடாது தர்ம ஶப்தம் பலத்தைக் காட்டாமையாலும், ஶரணாகதி விதியோடு அதுக்கு ஸங்கதியில்லாமை யாலும், ஶோகியாதே கொள்ளென்கிறவிது கூடாமையாலும், அதுவும் பொருளன்று.
வேறே சிலர், தர்மத்தில் அதிகாரமில்லாத ஸ்த்ரீ ஶூத்ராதிகளுக்கு மோக்ஷோபாயமாக ஶரணாகதியை விதிக்கிறது என்கிறார்கள். அதுவும் கூடாது. அவர்களுக்கு தர்ம ப்ராப்தியில்லாமையாலே த்யாகம் விதிக்கக்கூடாமையாலும் அர்ஜுனனை நோக்கி அருளிச்செய்கையாலும் அதுவும் அர்த்தமன்று.
வேறே சிலர், தேவதாந்தரங்களைச் சொல்லுகிறதாக்கி, அவற்றை விட்டு எம்பெருமானையே ஆஶ்ரயிக்கை மோக்ஷோபாயமென்று ஐகாந்த்யம் விதிக்கிறதென்று சொன்னார்கள் ; அதுவும் கூடாது. தர்ம ஶப்தம் அப்படி ப்ரஸித்தமல்லாமையாலும், ஶரணாகதியாவது ஸமாஶ்ரயண மாத்ரமல்லாமை யாலும் அதுவும் பொருளன்று.
வேறே சிலர், ஶரணாகதியோடு விரோதித்த தர்மங்களைவிட்டு ஶரணாகதியைப் பண்ண அடுக்குமென்று சொல்லுவர்கள், அப்படியாகில் “ஸர்வ தர்மங்களையும் ” என்னக்கூடாது. விரோதித்தவையை விடுகைக்கு ஒருவிதி வேண்டுவதில்லை. விரோதித்த தர்மமென்கைக்கு ஒரு ஶப்தமுமில்லை, ஆதலால் அதுவும் பொருளன்று.
வேறே சிலர் எல்லா தர்மங்களையும் விட்டாகிலும் ஶரணாகதியைப் பண்ணுவானென்று ஶரணாகதியை ப்ரஶம்ஸிக்கிறது, தர்ம த்யாகத்தில் தாத்பர்யமில்லை என்றார்கள், அதுவும் பொருளன்று.
இப்படி இவ்வாக்யத்தில், ‘ஆகிலும்’ என்ற ஶப்தமில்லாமையாலும், ஶோகியாதே கொள்ளென்கிற ஶப்தம் கூடாமையாலும், இதுவும் பொருளாக மாட்டாது.
வேறே சிலர் ஜ்ஞாநமே மோக்ஷஸாதநமாவது, அதுக்கு விரோதி கர்மம், ஆதலால் கர்மத்தையெல்லாம் விட்டு ஆத்ம ஜ்ஞாநத்திலே யத்னம் பண்ண அடுக்குமென்று சொல்லுகிறதென்றார்கள், அதுவும் கூடாது. கர்மமும் மோக்ஷஸாதநமென்று பலஶாஸ்த்ரங்களிலும் சொல்லுகையாலும், ‘ஶரணம் வ்ரஜ’ என்கிற ஶப்தம் ஆத்ம ஜ்ஞாநத்தைக் காட்டாமையாலும் ; மற்றிங்கு ஆத்ம ஜ்ஞாநத்தை விதிக்கிறதொரு ஶப்தமும் காணாமையாலும், ஆத்ம ஜ்ஞாநத்தாலே மோக்ஷம் பெறுகிறவனை நோக்கி, நானுன்னை எல்லாப் பாபங்களிநின்றும் முக்தனாக்குகிறேனென்று எம்பெருமான் தானே மோக்ஷம் கொடுக்கிறானாகச் சொல்லுகிற சொல் கூடாமையாலும், அதுவும் பொருளன்று.
ஆகையால் இஶ்லோகத்தால் தோற்றுகிற பொருளொழிய மற்றுச் சொல்லுகிற பொருட்கள் பொருளல்லவென்னுமிடம் ப்ரஹ்ம (ப்ரஹ்மாண்ட) புராணத்திலே தெளியச் சொல்லிற்று ‘ஶரணம் த்வாம் ப்ரபந்நாயே த்யாநயோக விவர்ஜிதா:। தேபிம்ருத்யுமதிக்ரம்ய யான்தி தத்வைஷ்ணவம் பதம்।।’ என்று.
ஶரணாகதி-மோக்ஷஸாதநமென்னுமிடம், ஶ்வேதாஶ்வதரோபநிஷத்திலும் சொல்லிற்று . ‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’, ‘யோ வை வேதாம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’ , ‘தக்ம்ஹ தேவமாத்ம புத்திப்ரஸாதம்’ , ‘முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே’ யாவனொருத்தன் பண்டு ப்ரஹ்மாவைப்படைத்தான், யாவனொருத்தன் அந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைக் கொடுத்தான் ; அந்த தேவனை என்புத்திக்கு தேற்றத்தைப் பண்ணினவனை, மோக்ஷார்த்தியான நான் ஶரணம் புகுகிறேன் என்றவாறு.
தைத்திரீயோபநிஷத்திலே, திருநாராயணத்திலே, இவ்வர்த்தம் சொல்லப்பட்டது. ‘ஸத்யம் தபோ தமஶ் ஶமோ தாநம் தர்ம: ப்ரஜநந மக்நயோக்நிஹோத்ரம் யஜ்ஞோ மானஸந்ந்யாஸ:’ என்று ஒன்றுக்கொன்று ஶ்ரேஷ்டமாகச் சொல்லி, மானஸ ஶப்தத்தாலே ஆத்மஜ்ஞாந வைபவத்தைச் சொல்லி, எல்லாத்துக்கும் மேலாக ந்யாஸ ஶப்தத்தாலே ஶரணாகதியைச் சொல்லிற்று.
இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலே ஸுஸ்பஷ்டம்.
ஆகையாலே வேத விருத்தமென்று ஶங்கைக்கு உபாயமில்லை.
இங்கே சிலர் இங்ஙனே சோத்யம் பண்ணினார்கள் ; ஏதென்னில்; தர்மங்களை எல்லாம் த்யஜித்து ஶரணாகதியைப் பண்ணவே மோக்ஷம் பெறலாமாகில்; அநேக ஜந்மங்கள் கூடிப் பண்ணவேண்டி ஒருக்கால் செய்து முடிக்க வொண்ணாத வருத்தங்களை யுடைத்தா யிருந்துள்ள மஹா தபஸ்ஸுக்களாலும் ; வைராக்யத்தாலும், இந்த்ரிய ஜயத்தாலும், யோகாப்யாஸத்தாலும், பிறந்த ப்ரஹ்மஜ்ஞாநத்தால் பெறவேண்டுவதாகச் சொல்லுகிற மோக்ஷ ஶாஸ்த்ரம் வேண்டாதொழியும் ; அறவெளியதாக ஸாதிக்கலா மர்த்தத்தை வருந்தி ஸாதிப்பாருமில்லை; ஆதலால் மோக்ஷோபாயமாகச் சொல்லுகிற பஹ்வாயாஸ ஶாஸ்த்ர ஸந்நிதானத்திலே அல்பயத்நமாயிருக்கிற ஶரணாகதி ஶாஸ்த்ரம் ஜீவியாதென்றார்கள்.
இதுக்கு உத்தரம், லோகத்தில் ; அர்தார்ஜநத்துக்கு ஸாதநமாக, அல்பயத்நமான ரத்ந வாணிஜ்யாதிகளும். மஹாயத்நமான க்ருஷ்யாதிகளும் உளவாகக் கண்டோம்; மஹா யத்நங்களுக்கு அல்ப பலமாகவும் கண்டோம், அல்ப யத்நங்களுக்கு மஹாபலமாகவும் கண்டோம், இவ்விடத்தில் தந்தாம் பூர்வ புருஷர்கள் செய்து வரும்படிக்குத் தக்கபடியும், தந்தாம் பாக்யத்துக்குத் தக்க ருசிகளாலும் ; அல்ப யத்நத்தாலே மஹா யத்நபலம் பெறுவர்கள் சிலர்.
இப்படியே வேதத்திலும், மஹாயத்நமான ஸத்ர யாகாதிகளாலும், தபஶ் சாந்த்ராயணாதிகளாலும், பஶு புத்ராதிகளான அல்ப பலங்களை சிலர் கொள்ள சிலர் அவற்றினாலே ஆதல் அதில் அல்ப யத்நமான கர்மாதிகளாலேயாதல் மஹா பலமான மோக்ஷத்தைப் பெறுவர்கள்.
அப்படியே தந்தாம் பாக்யத்துக்குத் தக்க ருசிபேதங்களாலே, சிலருக்கு ஶரணாகதியே உபாயமாகலாம், சிலருக்கு யோகாப்யாஸாதிகளே உபாயமாகலாம், அந்த ப்ரக்ருதி பேதங்களுக்குத்தக்க ருசி பேதங்கள் லோகத்திலே காண்பதும் செய்யா நின்றோம் ஶரணாகதி தானும் எல்லாரும் செய்யலாம் அத்தனை யெளிதாமோ என்ன, ஜந்மாந்தர ஸஞ்சித மஹாபுண்யங்களை உடையரல்லாதார்க்கு இந்த ருசியும் மஹா விஶ்வாஸமும் பிறக்க மாட்டாமையாலே எல்லார்க்குமெளிதென்று.
ஶரணாகதி ஸ்வரூபம் ‘ஆநுகூலஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம் ரக்ஷிஷ்யதீதி விஶ்வாஸோ கோப்த்ருத்வ வரணஸ்ததா। ஆத்மநிக்ஷேப கார்பண்யே ஷட்விதா ஶரணாகதி:।।’
‘ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப:’ ஆநுகூல்யமென்றது ப்ரியத்வம், அதாவது- ப்ரியோஹி ஜ்ஞாநி நோऽத்யர்த மஹம் ஸச மம ப்ரிய:’ என்கிற படியே அநந்ய ப்ரயோஜநனாகை.
‘ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம்’ என்றது, அதி ப்ரவ்ருத்தி வ்யவஸாய நிவ்ருத்தி
“ரக்ஷிஷ்யதீதி விஶ்வாஸ:’ என்றது, த்ரிவித ஶங்கார ஹிதமான பகவத்குணவத்தா த்யவஸாயம்.
’கோப்த்ருத்வ வரணமாவது’ அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்டப்ராப்திக்கு அவ்யவஹிதோபாயமாக ஸ்வீகரிக்கை.
‘ஆத்மநிக்ஷேபமென்றது’ ரக்ஷ்யத்வேந ஸமர்ப்பிக்கை. அதாகிறது, ஆத்மாத்மீயமான நிகிலபர ஸமர்ப்பணம்.
“கார்பண்யமாவது’ க்ருபாஜநக க்ருபண வ்ருத்தி நிரதத்வம்.
ஏவம் விதமான ஶரணாகதி தன்னையே ஶ்ருதி ஆத்மயாகமாக வர்ணித்தது. “தஸ்யைவம் விதுஷோ யஜ்ஞஸ் யாத்மா யஜமான ஶ்ரத்தாபத்நீ ஶரீரமித்ம முரோவேதிர்லோமானி பர்கி: வேதஶ்ஶிகா ஹ்ருதயம் யூப: காம ஆஜ்யம்மந்யு: பஶுஸ்தபோऽக்நிஶ்ஶமயிதா தக்ஷிணாவாக்கோதா ப்ராண உத்காதா சக்ஷுரத்வர்யுர் மநோ ப்ரஹ்மா ஶ்ரோத்ரமக்நீந் யாவத்த்ரியதே ஸா தீக்ஷா யதஶ்நாதி யத்பிபதி ததஸ்ய ஸோமபாநம் யத்ரமதே ததுபஸதோ யத்ஸஞ்சரத்யுபவிஶத் யுத்திஷ்டதேச ஸப்ரவர்க்யோ யந்முகம் ததாகவநீயோ யதஸ்ய விஜ்ஞாநம் தஜ்ஜுஹோதி யத்ஸாயம் ப்ராதரத்தி தத்ஸமிதோ யத்ஸாயம் ப்ராதர்மத்யந்திநஞ்ச தானி ஸவனானி யே அஹோ ராத்ரே தே தர்ஶபூர்ண மாஸௌ யேऽர்தமாஸாஶ்ச மாஸாஶ்ச தே சாதுர்மாஸ்யாநி யருதவஸ்தே பஶுபந்தா யே ஸம்வத்ஸராஶ்ச பரிவத்ஸராஶ்ச தேஹர்கணாஸ் ஸர்வவேத ஸம்வா ஏதத்ஸத்ரம் யந்மரணம் ததவப்ருத ஏதத்வை ஜராமர்யமக்நிஹோத்ரம் ஸத்ரம் ய ஏவம் வித்வானுதகயநே ப்ரமீயதே தேவானாமேவ மஹிமானம் கத்வாऽதித்யஸ்ய ஸாயுஜ்யம் கச்சத்யதயோ தக்ஷிணே ப்ரமீயதே பித்ருணாமேவ மஹிமானம் கத்வா சந்த்ரமஸஸ்ஸாயுஜ்யம் கச்சத்யேதௌ வை ஸூர்யா சந்த்ரமஸோ ர்மஹிமானௌ ப்ராஹ்மணோ வித்வானபிஜயதி தஸ்மாத்ப்ராஹ்மணோ மஹிமானமாப்நோதி தஸ்மாத்ப்ராஹ்மணோ மஹிமானமித்யுபநிஷத்” என்றுகொண்டு ஶ்ருதி ஶரணாகதியை ஒரு யஜ்ஞமாக ஸங்கல்பித்து இதுக்கு வேண்டும் உறுப்புகளும் யஜமானனும் பத்னியும் முதலாகவுளவற்றை ஶரணாகதன் பக்கலிலே உளவாகக் காட்டுகிறது. ‘யே அஹோராத்ரே’ என்றவிடமே தொடங்கி, “யந்மரணம்” என்கிற விதுக்கு கீழெல்லாம், ஶரணாகதி தன்னையே எல்லா யாகங்களுமாகச் சொல்லுகிறது. “யந்மரணம் ததவப்ருத:” என்று ஶரணாகதி யாகிற யாகத்துக்கு அவப்ருதமாக மரணத்தைச் சொல்லுகிறது. ‘ய ஏவம் வித்வான்’ என்கிற இடந்தொடங்கி, அவன் போம் வழியே போனால், எம்பெருமானுடைய பெருமை எல்லாவற்றையும் அநுபவிக்குமென்கிறது. ‘தஸ்யைவம் விதுஷோ யஜ்ஞஸ்ய’ என்கிற விதுக்கு கீழ் ஓரிடத்தில் ந்யாஸமென்கிற பேரால் சொன்ன ஶரணாகதியை அறியும் வித்வானுடைய ஏற்றமென்றபடி.
ஆக, ஶரணாகதியாகிற யஜ்ஞத்துக்கு உறுப்புக்களிவை என்றதாய்த்து.
`ஏதக் ம் ஹவாவந தபதி, கிமஹக்ம் ஸாதுநாऽகரவம், கிமஹம் பாபமகரவமிதி’ ஶரணாகதி ஜ்ஞாநமுடைய புருஷனையே எந்த புண்யம் பண்ணாதொழிகிறோமோ, எப்பாபம் பண்ணுகிறோமோ என்கிற புத்தி பீடியாது.
‘தஸ்மான் ந்யாஸமேஷாந் தபஸாமதிரிக்தமாஹு:’ த்யான பர்யந்தமான எல்லா தபஸ்ஸுக்களிலும் ந்யாஸமதிரிக்தமென்றபடி. ந்யாஸமாவது, ஶ்ரீமானான நாராயணன் திருவடிகளிலே பண்ணபட்ட ஆத்மாத்மீய அகிலபர ஸமர்ப்பணமாகையாலே, ஶ்ரீமானான நாராயணனையே ஶரணாகதநுடைய ஸர்வயோக க்ஷேமாவகனாக அநுஸந்தித்து, நிர்பரத்வானுஸந்தாநம் ஸர்வதாபண்ணவேணும்.
ஸ்வநிர்பரத்வானு ஸந்தாந ப்ரீத்யுத்ததியாலே பண்ணப்பட்ட ஸந்மர்யாதாதி வர்த்தனமுண்டாய்த்தாகிலும், முன்பு பகவதி பண்ணின விஶ்வாஸாதிஶயத்தாலே த்ருட சித்தனாவானென்று கொண்டு, ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான ரஹஸ்யம், ‘இதம்தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந । ந சா ஶுஶ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி ।।’ என்று இவ்வர்த்தம் சொன்னபடியே ரக்ஷித்தநுஷ்டித்து முடிக்கைக்கீடான பாக்யமில்லாதார்க்கும் குருவானவன் பக்கலிலே பக்தராய் இராதார்க்கும், உனக்கு ஶுஶ்ரூஷை பண்ணாதார்க்கும், சொல்லவேண்டா, என் பக்கலிலே அஸூயையைப் பண்ணுவார்க்கும் சொல்ல வேண்டாவென்கிறது . ‘ய இதம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி । பக்திம் மயிபராம்க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஶய: ।।’ என்று இப்பரம குஹ்யமான அர்த்தத்தை என் பக்தர் பக்கலிலே யாவனொருத்தன் சொல்லுகிறான், அவன் அதுவே காரணமாக தானும் என் பக்கலில் பரமபக்தியை உடையனாம், ஒரு ஸம்ஶயமின்றியே என்னையே வந்தடையும் என்றிவ்வர்த்தம் சொல்லுகைக்கு, ஆகாத விஷயத்தையும், யோக்ய பாத்ரத்திலே சொன்னாலுண்டான நன்மையையும், சொல்லிற்று.
திருமந்த்ர முகத்தாலே ஸ்வரூபஜ்ஞாநத்தை உடையராய், ஸ்வரூபாநுரூப புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்திலே ருசியுடையராய், விடப்பட்ட கர்மஜ்ஞாந பக்தியோகத்தையும் உடையராய் ஆநுகூல்ய மாத்ரமுடையரான ஜந்துக்களைப் பார்த்து பரமகாருணிகனான ஸர்வேஶ்வரன் தானே, பாண்டுபுத்ர வ்யாஜத்தாலே, சதுர்த்தோபாயத்தை வெளியிட்டது, சரமஶ்லோகமாகிறது.
ஶ்லோக வைபவரூப அவதாரிகை ஸம்பூர்ணம்
தனி சரமம்
ப்ரதிபத வ்யாக்யாநாரம்பம்
(௧ ) “ஸர்வதர்மாந்” இத்யாதி ஶ்லோகதுக்கு க்ரியாபதம், “மாஶுச:” என்கிறதாகையாலே, ஶோக நிவ்ருத்தி சொல்லுகையிலே தாத்பர்யம் : இந்த ஶோகம்தான் ப்ரபத்தி விதாயக வாக்யமாகையாலே, இந்த ஶ்லோகமும் ப்ரபத்திக்கு உபயுக்தமாகிறது. எங்ஙனேயென்னில், இப்ப்ரபத்திக்கதிகாரமும், பலமும் சொல்லவேண்டுகையாலே, ஶோகமதிகாரமென்றும், ஶோகநிவ்ருத்தி பலமென்றும் சொல்லுகிறது.
இதில் பூர்வார்த்ததாலே அதிகாரி க்ருத்யம் சொல்லுகிறது ; உத்தரார்தத்தாலே ஈஶ்வரக்ருத்யத்தையும் ; அதிகாரிக்ருத்ய ஶேஷத்தையும் சொல்லுகிறது.
அதிகாரி க்ருத்யமாவது-இதரோபாய த்யாக பூர்வகமான ஸித்தோபாய ஸ்வீகாரம், ஈஶ்வர க்ருத்யமாவது; இப்படி ஸ்வீக்ருதோபாயனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்தியை பண்ணிக்கொடுக்கை. அதிகாரி க்ருத்ய ஶேஷமாவது ; ஸ்வீக்ருதோபாயனான பின்பு யாவத் ப்ராப்தியளவும் நிஸ்ஸம்ஶயநுமாய் நிர்பரநுமாய் அத ஏவ ஹ்ருஷ்டமானஸநுமாயிருக்கை, “வ்ரஜ” என்கிற விதியோபாதி, ‘மாஶுச:’ என்கிறதும் விதியாகையாலே, ஸ்வீகரியாதவனுக்கு உபாய ஸித்தியில்லாதவோபாதி, ஸ்வீகரித்த பின்பு நிர்பரனாயிராதவனுக்கும் பலஸித்தியில்லையென்கை. இத்தைப் பற்றவிறே ‘த்யாகம்மேலிட்டு நரகம் வஸ்தவ்ய பூமியாதல், ஸ்வீகரித்த உபாயம் மேலிட்டு நரகம் வஸ்தவ்ய பூமி யாதல், ஸ்வீகரித்த உபாயம் மேலிட்டு பரமபதமென் சிறுமுறியாதல் ஆம்படி காணேன் அதிகாரமிருப்பது’ என்று நஞ்ஜீயர் அருளிச்செய்தது.
ஸித்தோபாய ஸ்வீகாரத்துக் கிதரோபாயத்யாகம் அங்கமாகையாலே த்யாக விஷயமான தர்மங்களைச் சொல்லுகிறது, ‘ஸர்வதர்மான்’ என்கிற இத்தாலே
தர்மமாவது, ‘சோதனா லக்ஷணார்த்தோ தர்ம:’ என்கிறபடியே, ஶாஸ்த்ரங்களிலே நித்ய நைமித்திக காவ்யரூபமாய், அநுஷ்டேயதயா விஹிதமானது. அதுதான் வர்ணாஶ்ரம விஹித தர்மமென்றும், ப்ரவ்ருத்தி தர்மமென்றும், நிவ்ருத்தி தர்மமென்றும், ஸித்த தர்மமென்றும், நாலுவகைபட்டிருக்கும்.
(க) வர்ணாஶ்ரம விஹித தர்மமாவது, ‘க்ரியமாணம் நகஸ்மை சித்த்யர்த்தாய ப்ரகல்ப்யதே, அக்ரியாவதநர்த்தாய தத்து கர்ம ஸமாசரேத்; ஏஷா ஸா வைதிகீ நிஷ்டாஹ்யுபாயாபாய மத்யமா’ என்கிறபடியே பண்ணினால் ப்ரயோஜநமின்றிக்கே பண்ணாதபோது அநர்த்தத்தின் பொருட்டாயிருக்குமது
(௨) ‘ஶ்ருணுத்வம் பரமம் கர்ம த்விவிதம் ததிஹோச்யதே, ஏகம் ப்ரவர்த்தகம் ப்ரோக்தம் நிவர்த்தகமத: பரம்; ப்ரவர்த்தகஞ்ச ஸ்வர்காதி பலஸாதநமுச்யதே, நிமர்த்தகாக்யம் தேவர்ஷே விஜ்ஞேயம் மோக்ஷ ஸாதநம்’ என்கிறபடியே -ப்ரவ்ருத்தி தர்மமாவது – ஸ்வர்காதி பலஸாதநமான ஜ்யோதிஷ்டோமாதிகள்
(௩) நிவ்ருத்தி தர்மமாவது – மோக்ஷ ஸாதநமான, கர்மயோகாதிகள்.
(௪) ஸித்த தர்மமாவது – “யே ச வேதவிதோ விப்ரா: யே சாத்யாத்மவிதோ ஜநா:। தே வதந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் ।।” என்கிற பரம தர்ம ஸ்வீகாரம், ‘ந்யாஸ இதி ப்ரஹ்மா, ந்யாஸ இத்யாஹுர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்’ என்று ஸ்வீகாரத்தில் உபாயத்வ ப்ரஸங்கமில்லாமையாலே, ஸ்வீகாரத்தையும் ஸ்வீகார்யனாகச் சொல்லக்கடவது.
இவ்விடத்தில் மோக்ஷோபாய ப்ரகரணமாகையாலே, ஸ்வர்காதி பலஸாதநமான ஜ்யோதிஷ்டோமமல்ல என்னுமிடம் ஸித்தம். மேலே ஸித்த தர்மம் ஸ்வீகார்யமாகச் சொல்லுகையாலே அதுவுமன்று. இனி இவ்விடத்தில் மோக்ஷோபாயமாய், வர்ணாஶ்ரம தர்மங்களை இதில் கர்த்தவ்யமாக உடைத்தாய் ஸாத்யமாயிருந்துள்ள நிவ்ருத்தி தர்மங்களைச் சொல்லுகிறது. இது தான் தர்மமும் பஹுவசநமும் ஸர்வஶப்தமுமாய் த்ரிவிதமாயிருக்கும். தர்ம ஶப்தத்தாலே மோக்ஷத்துக்கவ்யவஹித ஸாதநத்தைச் சொல்லுகிறது. அதாகிறது, “பக்த்யாத் வநந்யயாஶக்ய அஹமேவம் விதோர்ஜுந । மத்பக்திம் லபதே பராம் ।” என்று சொல்லுகிற பரமபக்தி, பஹுவசநத்தாலே அங்கஸாதநங்களைச் சொல்லுகிறது. அதாகிறது, ‘ஜ்ஞாநே பரி ஸமாப்யதே’ என்றும்’, ‘கர்மணைவஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜநகாதய:’ என்றும் சொல்லுகிற கர்மஜ்ஞாநங்களையும் ‘ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்திதத்த்வத: ।த்யக்த்வா தேஹம் புநர் ஜந்மநைதி மாமேதி ஸோऽர்ஜுந ।।’ என்றும் சொல்லுகிற அவதார ரஹஸ்ய ஜ்ஞாநமும், “ஏதத்புத்வா புத்திமான் ஸ்யாத் க்ருத க்ருத்யஶ்ச பாரத’ என்று சொல்லுகிற புருஷோத்தம வித்தையும்’, ‘தேஶோऽயம் ஸர்வகாமதுக்’ என்று சொல்லுகிற க்ஷேத்ரவாஸமும்’, ‘யாதி ப்ரஹ்ம ஸநாதநம்’ என்று சொல்லுகிற திருநாம ஸங்கீர்த்தனமும், இவை தன்னை பகவத் ப்ரபாவத்தாலே ஸ்வதந்த்ரோபாயமென்றும் சொல்லுவர்கள். இவைதான், அங்க ஸாதநமாயிருக்கச் செய்தே தர்மஶப்தத்தாலே சொல்லுகிறது. இவைதானும் தனித்தனியே பல ஸாதநங்களாயிருக்கையாலே. சேதந பேதத்தோபாதியும் போருமிறே ருசி பேதத்தாலே உபாயபேதமும். ”நெறியெல்லாமெடுதுரைத்த” என்னக்கடவதிறே, ஸர்வஶப்தத்தாலே ஆஶ்ரமங்கள் பேதித்தாலும் பேதியாத ஸந்த்யா வந்தந பஞ்ச மஹா யஜ்ஞமுள்ளிட்ட தர்மங்களும், லோக ஸம்க்ரஹதயா கர்த்தவ்யமான ஶ்ரேஷ்ட ஸமாசாரமும் பரார்த்தகமாக புத்ராதிகளைக் குறித்தநுஷ்டிக்கும் பும்ஸவநாதி கர்மங்களையும் சொல்லுகிறது. ஆக, ஸர்வஶப்தத்தாலே ப்ரத்யவாய பரிஹாரமுமாய் யோக்யதா பாதகங்களுமாயிருந்துள்ள தர்மவிஶேஷங்களைச் சொல்லுகிறது. தர்ம த்யாகத்தைச் சொன்னபோது யோக்யதா பாதகங்களுமாயிருந்துள்ள தர்மவிஶேஷங்களைச் சொல்லுகிறது.
ஸர்வ ஶப்தத்துக்கு ஸாகல்யம் பொருளானாலோவென்னில் , பஹுவசநத்திலே உபாயங்களை யடைய சொல்லுகையாலும், ஸர்வ ஶப்தத்துக்கு வேறே விஷயமுண்டாகையாலும் உபாய வாசியன்று ஆனால், ‘ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதனை: கிம் ப்ரயோஜநம் ” என்று, “யோக்யதா பாதக தர்மங்களையொழிய பலஸாதநங்களுக்கு உதயமின்றியிலே இருக்கையாலே தர்ம த்யாகத்தைச் சொன்னபோதே யோக்யதா பாதக தர்மம் தூரதோ நிரஸ்தமன்றோ; இதினுடைய த்யாகமிப்போது சொல்லவேணுமோ’ என்னில் ‘ஸந்த்யாஹீநோऽஶுசிர்நித்யம் அநர்ஹ ஸ்ஸர்வகர்மஸு’ என்று ஸந்த்யா ஹீநனான அஶுசிக்கு, ஒரு கர்மத்திலும் அதிகாரமில்லை என்கையாலே, இவ்வுபாயத்துக்கு இப்படியிருப்பதொரு நிர்பந்தமுண்டோ வென்னில் ; இவ்வுபாயத்துக்கிப்படி இருப்பதொரு யோக்யதா ஸாபேக்ஷத்தை இல்லாமையாலே விஶேஷித்து உபாதாநம் பண்ணுகிற உபாயத்துக்கு உபயுக்தமன்றாகிலும் ”விஹித த்வாச்சாஶ்ரம கர்மாபி” என்கிற படியே விஹிதத்வேனானுஷ்டேய மானாலோவென்னில் , யஜ்ஞத்திலே தீக்ஷித்தவனுக்கு விஹிதாம்ஶமும் த்யாஜ்யமானவோபாதி, இங்கு ‘ஸர்வ தர்மான் பரித்யஜ’ என்கையாலே விஹிதாம்ஶமும் த்யாஜ்யம்.
இனியிவ்வுபாயத்துக்கு அதிகாரம், அஶக்தியும் அப்ராப்தியும் விளம்பாஸஹத்வமும், ‘இதம் ஶரணமஜ்ஞாநாம் இதமேவ விஜாநதாம், இதம் திதிர்ஷதாம் பாரம் இதமானந்த்யமிச்சதாம். அவித்யாதோ தேவே. பரப்ருடதயா வா விதிதயா ஸ்வபக்தேர்பூம்நா வா ஜகதி அதிமந்யாமவிதுஷாம், கதிர்கம்யஶ்சாஸௌ ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் ஶௌநகமுநி:’ இப்படி அன்றாகிலிதுவும், அதிக்ருதாதி காரமாமிறே.
ஆக, இத்தால் த்யாஜ்ய ஸ்வரூபம் சொல்லிற்று,
த்யாஜ்யமான தர்மம் தான் ‘இதம் குரு, இதம் மா கார்ஷீ:” என்று விதி நிஷேதாத்மகமாயிருக்கும். விஹிதாநுஷ்டானத்தோபாதி நிஷித்த பரிஹாரமும் த்யாஜ்யமானபோது, அடைத்த கதவைத் திறந்தால், நிஹீந பதார்த்தங்கள் புகருமாப்போலே நிஷித்த ப்ரவ்ருத்தி யுண்டாகாதோவென்னில் , ஸ்வீகார்யமான உபாயம்; ஒன்றையும் ஸஹியாது, ஶாஸ்த்ர ஸித்தமான தர்மம் த்யாஜ்யமாவது -ஸ்வீகார்யமான உபாயம் ஒன்றையும் பொறாமையாலேயிறே; பொறுப்பது நிவ்ருத்தியையிறே. இதுவும் நிவர்த்த்யந்தர்கதமாகிலும் ப்ரவ்ருத்தி ரூபமாயிருக்கையாலே உபாயம் ஸஹாயாந்தர ஸஹமல்லாமையாலும் நிஷித்தாநுஷ்டானம் இவனுக்கு கர்த்தவ்யமன்று. நிஷித்தாநுஷ்டானம் ஈஶ்வர ஹ்ருதயத்துக்கு நிக்ரஹமாகையாலே இவனுக்கு ஈஶ்வரனை அதிஶயிப்பிக்கை ஸ்வரூபமாகையாலும், இவனுக்கவையநுஷ்டேயமன்று. ப்ராப்யமிவனுக்கு, அவனுடைய ப்ரீதியே யாயிருக்கையாலே. இவ்வாகாரத்திலும், அவையநுஷ்டேயமன்று. ஆகையால், உபாயத்தை பார்த்தாலுமாகாது, ஸ்வரூபத்தை பார்த்தாலுமாகாது புருஷார்த்தத்தை பார்த்தாலுமாகாது.
ஆனால் ஸர்வ ப்ரகாரத்தாலும் இவனுக்கு த்யாஜ்யமாயிருக்குமாகில் நிஷித்த பரிஹாரத்தை தர்மஶப்தத்திலே ப்ரஸங்கிக்கிறதுக்கு ப்ரயோஜந மென்னென்னில், இவனுக்கு விஹிதமாயிருப்பதொன்றில்லாமையாலே அவஶமாகப்புகுந்தாலும். இவனுக்கவை பந்தகமாகமாட்டாதென்னும் ஆகாரம் தோற்றுகைக்காகச் சொல்லுகிறது. அதவா மோக்ஷோபாயத்வேந விதி நிஷேதாத்மகமான, ஸகல தர்மத்தையும் சொல்லுவர்கள். ஆகையாலே நரகபதந ஹேதுவாய் ஸகல ஜந்துக்களுக்கும் த்யாஜ்யமுமாய் புத்தி பூர்வகமுமாயிருந்துள்ள பகவதபசாராதிகளும், ப்ரஹ்மஹத்யாதிகளும், பரிஹரணீயமென்றாய்த்து.
ஶரணாகதி ப்ரபாவத்தாலே அவை பந்தகமின்றியிலே யொழிந்தாலும் ஶரணாகதனுக்கு இவை கர்த்தவ்யமென்னுமிடம் சொல்லிற்றாய்த்து.
(௨) ‘பரித்யஜ்ய’ த்யாகப்ரகாரத்தைச் சொல்லுகிறது. இதுவும், த்யாகமும் ‘ல்யப்’பும் உப ஸர்கமுமாய் மூன்று ப்ரகாரத்தோடே கூடியிருக்கும், இங்குச் சொல்லுகிற த்யாகம் ஸ்வரூபேண த்யாகத்தைச் சொல்லுகிறதோ, உபாயபுத்த்யாத்யாகத்தைச் சொல்லுகிறதோ, பலத்யாகத்தைச் சொல்லுகிறதோவென்னில் , ‘மா பலேஷு கதாசந’ என்று கீழ் பலத்யாகத்தைச் சொல்லுகையாலே கேவலம் அதுவுமாகமாட்டாது; இனி உபாயபுத்தி த்யாகமாதல்; ஸ்வரூப த்யாகமாதலாகக்கடவது, உபாயபுத்தி த்யாகமென்றபோது, “நிஜகர்மாதி பக்த்யந்த்யம்” அவஶ்யமநுஷ்டேயமாய் விடும். இப்படி அநுஷ்டேயமாம் பக்ஷத்தில் ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமாக மாட்டாது, ஆகையால் இவை ஸ்வரூபேணத்யாஜ்யமாகமாட்டாது.
இனி இவற்றில் நம்மாசார்யர்கள் அநுஷ்டிக்கிறவை, ஶிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவநார்த்தமாக ஆந்ருஶம்ஸ்யத்தாலே அநுஷ்டிக்கிறார்களித்தனை. இப்படி அநுஷ்டியாதபோது, பகவத் விபூதிபூதரான சேதநர்க்கு நாஶஹேதுவாகையாலே ஈஶ்வரனுக்கபிமத ராவர்; ஆகையாலே, யாதோரளவாலே லோக ஸங்க்ரஹம் பிறக்கும், யாதோரளவாலே ஶிஷ்ய புத்ரர்களுக்கு ஜீவநமுண்டாம், அவ்வளவும் அநுஷ்டேயமென்றாய்த்து. ப்ரவ்ருத்தி தர்மம்தானே, அபிஸந்தி பேதத்தாலே நிவ்ருத்தி தர்மமானவோபாதி, நிவ்ருத்தி தர்மமும் ப்ராப்யதர்மமாகக் கடவது. இவ்விடத்தில் வர்ணாஶ்ரமதர்மம், லோகஸங்க்ரஹதயா அநுஷ்டேயமாயிருக்கும் வைஷ்ணவதர்மம் ப்ராப்யதயா அநுஷ்டேயமாயிருக்கும். இவ்விடத்தில், அகரணே ப்ரத்யவாயமும் எம்பெருமானுடைய அநபிமதத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹாநியுமாகக்கடவது.
ஆகையாலே, ‘விஹிதத்வாச்சாஶ்ரம கர்மாபி’ ‘ஸஹகாரித்வேந ச’ என்கிற உபய ப்ரகாரத்தாலும் அநுஷ்டிக்கிறார்களல்லர்.
பரிஶப்தத்தாலே த்யாகத்தின் மிகுதியைச் சொல்லுகிறது, இப்பரி ஶப்தம் ‘பரி-ஸாகல்வே’ என்று ஸகலத்தையும் விடச் சொல்லுகிறதானாலோவென்னில் , அது ஸர்வ ஶப்தத்திலே உக்தமாகையாலே, இவ்விடத்தில் வேறே அர்த்தமாகவேணும். அதாவது, ஸவாஸந த்யாகத்தைச் சொல்லுகிறது, ஸவாஸநமாக விடுகையாவது,-ஶுக்திகையிலே ரஜத ப்ரமம்போலே அநுபாயங்களிலே உபாயபுத்தி பண்ணினோ மாகாதே என்றுகொண்டு லஜ்ஜா புரஸ்ஸரமாக விடுகை, இப்படி விடுகைக்கு ஹேது, ஸ்வரூபோத்பத்தியினுடைய பகவத் பாரதந்த்ர்யாநு ஸந்தாநத்தாலே, ஸ்வரக்ஷணத்தில் தனக்குப்பிறந்த அநந்வயம், ஸ்வரூபத்தில், தன்னோடும் பிறரோடும் ப்ராப்தியுண்டாமென்றாய்த்து. தானும் பிறரும் ரக்ஷகராகைக்கு ப்ராப்தியுள்ளது, இனி, ஸ்வரக்ஷணத்திலிழிகை யாவது, தாய், முலைப்பாலுக்கு கூலி கேட்குமாபோலே, தன்னுடைய ஶேஷத்வத்தையுமழித்து அவனுடைய ஶேஷித்வத்தையுமழிக்கை. உபாயங்களை விடுகையாகிறது – இவை நமக்குபாயமென்கிற நைராஶ்யம், நைராஶ்யத்துக்கு ஹேது, அஶக்தியும், அப்ராப்தியும்.
‘த்யஜ்ய’ என்கிற ‘ல்யப்’பாலே, ‘ஸ்நாத்வா புஞ்ஜீத’ என்கிறபடியே, உபாய ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகத்தினுடைய அங்கத்வம் சொல்லுகிறது. யாகத்திலிழியுமவனுக்கு தத்வ்யதிரிக்த ஸர்வதர்ம த்யாகமங்க மாகிறாப்போலே இதுவும் ஆத்மயாகமாகையாலே தத்வ்யதிரிக்த ஸர்வதர்ம த்யாகம் அங்கமாகக் கடவதென்று முன்பே சொல்லிற்று. இத்தால் ஶாஸ்த்ர வையர்த்தமும் பரிஹரிக்கப் பட்டது.
விட்டே பற்ற வேணுமாகில் ஸர்வாதிகார பங்கம் வாராதோவென்னில் , அஶக்தநுமாய் அயோக்யநுமானவன் ஸ்வரூப ஜ்ஞாந வைஶத்யத்தாலே விட்டுப்பற்றக்கடவன், அல்லாதவர்களும் உக்த லக்ஷணத்தாலே அஶக்தராயிருக்குமத்தனை போக்கி ஸர்வத்திலும் அஶக்தரா யிருப்பா ரொருத்தரு மில்லையே; அவர்களும் விக்ந விளம்பாதி பயமுடையராகில்; யதா யோக்யம் விட்டுப்பற்றக் கடவர்கள், ஆகையாலே ஸர்வாதிகார பங்கம் வாராது. இப்படிக் கொள்ளாதே ஸர்வோபாய ஶூந்யனுக்கிது உபாயமென்னும் பக்ஷத்தில் ; ஸர்வோபாய ஶூந்யராயிருப்பாரொருத்தருமில்லை ஆகையாலே, அந்த பக்ஷத்துக்கும் இந்த தூஷணம் வரும், ஆகையாலே, த்யாகம் அங்கமென்கிறவிது உபபந்நம்,
ஆக இத்தால் த்யாகப்ரகாரம் சொல்லிற்று.
இவ்விடத்திலே பிள்ளையருளிச்செய்து போருவது ஒருவார்த்தையுண்டு ஆதாவது, “பதர்க் கூட்டைவிட்டு பர்வதத்தை அண்டை கொள்வாரைப்போலே பற்று என்கிறான்” என்று. அது எங்ஙனேயென்னில், அவை ஸாத்யங்களாகையாலும், பலவாகையாலும், அசேதநங்களாகையாலும், பதர் கூட்டிறே. இவன் ஸித்த ஸ்வரூபனாகையாலும்; ஒருவனாகையாலும் ; பரமசேதநனாகையாலும், பர்வதம்.
(௩) அநந்தரம், பற்றும் விஷயத்தையும், பற்றும் ப்ரகாரத்தையும் சொல்லுகிறது. ‘மாம்’ என்று, ஸ்வீகார்யமான உபாயத்தைச் சொல்லுகிறது. உபாயமாவது, இஷ்ட ப்ராப்த்யநிஷ்ட நிவ்ருத்தி ஸாதநமாயிருக்கையாலே, இஷ்ட ப்ராப்த்யநிஷ்ட நிவ்ருத்யுபயோகியான பரத்வ ஸௌலப்யங்கள் ‘மாம் ” என்கிற பதத்திலே விவக்ஷிதம்,
எங்ஙனேயென்னில், “ஏஷ நாராயண: ஶ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதந:। நாகபர்யங்கமுத் ஸ்ருஜ்யஹ்யாகதோ மதுராம் புரீம்।।’ என்கிற படியே, மாம் என்கிறவன் ஶ்ரீமானுமாய் நாராயணநுமாயிருக்கையாலே.
ஶ்ரிய:பதித்வ நாராயணத்வங்கள் பரத்வ ஸௌலப்ய ஹேதுவாகிறபடி எங்ஙனேயென்னில் ; ஶ்ரீயாகிறாள்; ஸர்வருடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸித்யர்த்தமாக ஆஶ்ரயணீயை யாயிருக்கையாலே. இவளுக்கு பதி என்கையாலே, பரத்வம் சொல்லிற்று. ‘ஶ்ரத்தயா தேவோ தேவத்வ மஶ்நுதே’ ‘அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா’ ‘திருவுடையடிகள் ‘ ‘திருமகளார் தனிக்கேள்வன்” “பெருமையுடைய பிரான்” என்னக்கடவதிறே. ஶ்ரீயாகிறாள் ஜகந்மாதாவாயிருக்கையாலே. “இவளுக்குப் பதி” என்கையாலே ஸௌலப்யம் சொல்லிற்று. ‘மாதவோ பக்தவத்ஸல:’, ‘கோலமலர்ப் பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ” என்னும், நாராயண ஶப்தத்துக்கர்த்தம், ஜகத்காரணத்வமும், ஜகதந்தராத்மத்வ முமாகையாலே, ஜகத்காரணத்வ ப்ரயுக்தமான பரத்வமும், ஜகதந்தராத்மத்வ ப்ரயுக்தமான ஸௌலப்யமும் சொல்லப்பட்டது.
ஆக, ‘மாம்’ என்று “ஶ்ரீமானுமாய் நாராயணநுமாயிருந்தவென்னை” என்றபடி. இத்தால் அநுஷ்டான வாக்யத்தில் ஶ்ரீமச்சப்தத்தையும் நாராயண ஶப்தத்தையும் ஸ்மரிப்பிக்கிறது. இதுக்கு ஹேது, வித்யநுஷ்டானங்கள் இரண்டும் ஏகார்த்தமாக வேண்டுகையாலே. ஆக இத்தால், ஶ்ரீமந்நாராயணனே, ஶரண்யனென்றதாய்த்து. நாராயண ஶப்தம் தானே அவனை பரிபூர்ணனாகக் காட்டச்செய்தே ஶ்ரீமச்சப்தத்தாலே விஶேஷித்தது -இவர்கள் அஞ்சாதே சென்று ஆஶ்ரயிக்க வல்லராகைக்கும், அவனிவர்களைத்தன் பேராக ரக்ஷிக்கும் உறுப்பாகச் சொல்லுகிறது, ஆனால் ஶ்ரீமச்சப்தம் தானே, அவனை பரிபூர்ணனாகக்காட்டச் செய்தே, நாராயண ஶப்தத்தாலே விஶேஷிக்கிறது, பிராட்டியை விடிலும், நிலமங்கை கைவிடிலும், கை விடாத ஸ்வபாவனென்றுமிடமும், அந்ய நிரபேக்ஷமாக ஶரணாகத பரிபாலநம் பண்ணவல்லனென்றுமிடமும் சொல்லுகிறது. ஆகையால் இவ்விஶிஷ்ட வேஷத்தில் ஆஶ்ரயித்தாலாய்த்து-பலஸித்தியுள்ளது. பிரிவிலாஶ்ரயிக்கையாவது, தேவதாந்தர ஸமாஶ்ரயண துல்யமாம்.
“அன்று உன்முகம் காணில் முடிவேன்” என்கையாலே முகம் தோற்றாமல் நடத்தினேன்; இன்று உன்முகம் காணாவிடில் முடிவேன் என்கையாலே “முகம் தோற்ற நின்று நடத்தினேன்” என்று, தன் வ்யாபாராதிகளைக் காட்டுகிறான் அதாகிறது, ”என் கையில் மடல்” உன் கையிலே வரும்படியாகவும், என் தலையில் முடி உன்தலையிலே வரும்படி யாகவும், வேணுமென்றாசைப் பட்டு, உன் கால் என் தலையிலே படும்படி தாழ நின்றேன்” என்று தன் ஸௌலப்யத்தைக் காட்டுகிறான் மாம் என்று, ”நீ ஶப்தாதி விஷயங்களிலே மண்டித்திரிகையாலே உன்னுடம்பில் புகரைப்பாராய், உன்னை விநியோகம் கொள்ளப் பெறாமையாலே உடம்பு வெளுத்திருக்கிற வென்னைப்பாராய்” என்று தன் வ்யாமோஹகுணத்தை சட்டையவிழ்த்துவிட்டுக் காட்டுகிறான் என்றதாய்த்து.
இவ்விடத்தில் ஶரண்ய ஶரண்யத்தைக்கு உபயுக்தமாக பத்துகுணங்கள் அநுஸந்தேயங்கள், “மாம்” என்கிற வஸ்து ஸமஸ்த கல்யாண குணாத்மகமாயிருந்ததேயாகிலும், உபாஸிக்குமிடத்து வித்யைகள் தோறும் சில குணவிஶேஷங்கள் உபாஸ்யமாக குணயோகத்தில் நிஷ்கர்ஷித்தாப்போலே. ப்ரபத்தி வித்துக்களான நம்மாசார்யர்கள் ஶரண்யத்வத்துக்கு உபயுக்தமாக பத்து குணங்களை அநுஸந்தித்துப் போருவர்கள். அவையாவன: ஸர்வஜ்ஞத்வ (௧) ஸர்வஶக்தித்வ (௨), பரம காருணிகத்வ (௩), பரமோதாரத்வ (௪), ஆஶ்ரித வத்ஸலத்வ(௫), அஶரண்ய ஶரண்யத்வ(௬), அநாலோசித விஶேஷா ஶேஷலோக ஶரண்யத்வ(௭), ஸர்வஸாமித்வ(௮), ஶ்ரிய: பதித்வ(௯), நாராயணத்வங்கள்(௧௦) இத்தால் ; “உன்னிலும் உன்கார்யம் அறிவேனுமாய், உன்கார்யம் செய்ய க்ஷமநுமாய் உன்னிலும் உன்கார்யத்துக்கு உகப்பேனுமாய், உன்கார்யம் செய்யுமிடத்தில் என்கார்யமாகச் செய்யவேணுமாய், உன்குற்றம் காணாதிருப்பேனுமாய், உன்குற்றம் போக்யமாக விருப்பேனுமாய் உனக்குப்பற்றில்லாத போதும் பற்றாயிருப்பேனுமாம்; உன் பேறு என்பேறாயிருப்பேனுமாய், உன்னிலும் உன்கார்யம் செய்கைக்கு ப்ராப்தநுமாய் உனக்கும் எனக்கும் தாரகையாயிருந்துள்ள ஸர்வேஶ்வரிக்காக உன்கார்யம் செய்வேனுமாய், நீரிலே நெருப்பெழுந்தாப்போலே இவளே குற்றம்காட்டினாலும் விடவொண்ணாத பந்தத்தை உடையேனுமா யிருக்கிற வென்னை” என்றபடி.
அதவா, ‘மாம்’ என்கிற விடத்திலே ஆஶ்ரயணத்துக்கு ஏகாந்தமான சிலகுணங்களையும், ‘அஹம்’ என்கிறவிடத்திலே பலப்ரதானத்துக்கு ஏகாந்தமான சிலகுணங்களையும், அநுஸந்தித்துப் போருவாருமுண்டு ஆஶ்ரயணத்துக்கு ஏகாந்தமான குணங்களாவன-வாத்ஸல்யமும், ஸ்வாமித்வமும், ஸௌஶீல்யமும், ஸௌலப்யமும்.
(௧) வாத்ஸல்யமாவது, அத்ய ஜாதமான வத்ஸத்தின் பக்கல் தேநுவுக்குண்டான காமம் ; அதாவது, சுவடுபட்டத் தரையிலே புல் தின்னாத பசு அன்றீன்ற கன்றின் தோஷத்தைத் தோஷமென்று கருதாதே தனக்குப் போக்யமாகக் கொள்ளுமாபோலே, ஆஶ்ரிதருடைய தோஷத்தைத் தன் பேறாகப்போக்கி, தன் கல்யாண குணங்களாலே தரிப்பிக்கை.
(௨) ஸ்வாமித்வமானது, இழவு பேறு, தன்னதாம்படியான குடல் தொடக்கு
(௩) ஸௌஶீல்யமாவது, ‘அவாக்யனாதர:’ என்கிற படியே நிரவதிக வைபவத்தையுடைய தன்னைத் தாழவிட்டு ஒருநீராகக்கலக்கை.
(௪) ஸௌலப்யமாவது, அதீந்த்ரியமான வடிவை இந்த்ரிய கோசரமாக்கிகொண்டு பவ்யனாகை.
இவையாஶ்ரயணத்துக்கு உபயுக்தமாகிறபடி எங்ஙனேயென்னில், தன்தோஷம் கண்டிராமைக்கு வத்ஸலநாக வேணும்; நம்மை ரக்ஷிக்குமோ ரக்ஷியானோ என்கிற அச்சம் கெடுகைக்கு ஸ்வாமியாகவேணும்; தன் சிறுமையைக்கண்டு பிற்காலியாமைக்கு ஸுஶீலனாகவேணும் ; தூரஸ்தனாயிருக்கும் என்று அஞ்சாமைக்கு ஸுலபனாக வேணும்.
இந்நாலு குணமும் ஆஶ்ரயணோபயோகி யென்னுமிடத்தை, நம்மாழ்வார் ஶரணம் புகுகிற விடத்தில் ‘நிகரில் புகழாய் உலகமூன்றுடையாய் என்னையாள்வானே நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்று அருளிச் செய்தார். ‘மாம்’ என்கிற நிலைதன்னிலே, எல்லா முண்டு; எல்லாருடையவும் கண்ணுக்கிலக்காய் பாண்டவர்களுக்கு பவ்யனாய் நிற்கிற ஸௌலப்யமும், இவர்களில் அந்யதமன் என்னலாம்படி ஸஜாதீயனாய்க் கொண்டு நிற்கிற ஸௌஶீல்யமும், “விஸ்ருஜ்ய ஸஶரம் சாபம்’ என்று கையில் வில்லைப் புகட்டு யுத்தாதுபரதனாய் குதிரைக்குட்டியான அர்ஜுநநை யுத்தத்திலே மூட்டின பின்பு அவனுடைய இழவு பேறு தன்னதாம்படியான ஸ்வாமித்வமும் ‘மம ப்ராணாஹி பாண்டவா:’ என்று அவர்களை ஒழியத் தனக்குச் செல்லாதபடியான வாத்ஸல்யமும், தோற்ற நின்று வ்யாபரிக்கையாலே.
பலப்ரதானத்துக்கு உபயுக்தமான குணங்களாவன ; ஸர்வஜ்ஞத்வ, ஸர்வஶக்தித்வ, அவாப்த ஸமஸ்த காமத்வ, நிருபாதிக ஶேஷித்வ, பரம தயாளுத்வங்கள்.
இவை பலப்ரதானத்துக்கு உபயுக்தமாகிறபடி எங்ஙனே என்னில், ஸர்வஜ்ஞத்வமாகிறது, ஶரணாகதனுடைய இஷ்டானிஷ்டங்களை அறிய வல்லனாகை; ஸர்வஶகித்வமாவது, நித்யஸம்ஸாரிகளை நித்யஸூரிகளோடே ஒருகோவையாக்க வல்லனாகை ; இது செய்யுமிடத்தில் ப்ரயோஜந நிரபேக்ஷமாகச் செய்யும்போது, அவாப்த ஸமஸ்த காமனாகவேணும், தன் பேறாகச்செய்யும் போதைக்கு நிருபாதிக ஶேஷியாகவேணும், இக்குணங்களெல்லாம் சுவர்த்தலையில் பூனைபோலே ஸம்ஸரிப்பிக்கைக்கு உறுப்பாயிருக்கையாலே, இக்குணங்கள் இவனுடைய உஜ்ஜீவநத்துக் உறுப்பாம்போது பரம தயாளுவாக வேணும். ஆகையாலே க்ருபா ஸஹக்ருதமான ஜ்ஞாநஶக்த்யாதிகள் இவனுக்கு உஜ்ஜீவநம் என்றதாய்த்து. “விதிவாய்க்கின்று காப்பாரார், சேமம் செங்கோனருளே, ஆழியானருளே, துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு, க்ருபயா கேவலம் ஆத்மஸாத்குரு, கேவலம் மதீயயைவதயயா என்றாழ்வார்களோடு ஆசார்யர்கள் வாசியற க்ருபா குணத்தினுடைய ப்ராதாந்யம் அருளிசெய்யப்பட்டதிறே. க்ருபா ஸஹக்ருத ஜ்ஞாநஶக்த்யாதிகுணங்கள் ஶரண்யத்தைக்கு உபயுக்தமென்னுமிடத்தை. “ஶக்தேஸ்ஸூபஸதத்வாச்ச க்ருபாயோகாஶ்ச ஶாஶ்வதாத், ஈஶேஶிதவ்ய ஸம்பந்தாதநிதம் ப்ரதமாதபி, ரக்ஷிஷ்யத்யநுகூலாந்ந:, இதி யாஸு த்ருடாமதி:, ஸவிஶ்வாஸோ பவேச்சக்ர ஸர்வ துஷ்க்ருதநாஶந:’ என்று பகவச்சாஸ்த்ரத்திலே சொல்லிற்று. ‘ஏவமவஸ்திதஸ்யாப்யர்தித்வ மாத்ரேண பரமகாருணிகோ பகவானஸ்வானுபவ ப்ரீத்யோபநீதைகாந்திகாத்யந்திக கைங்கர்யைகரதிரூப நித்யதாஸ்யம் தாஸ்யதீதி விஶ்வாஸபூர்வகம் பகவந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த்தயே’ என்று எம்பெருமானார் அருளிச்செய்தருளினார். ‘பாபீயஸோऽபி ஶரணாகதி ஶப்தபாஜோ நோபேக்ஷணம் மம தவோசிதமீஶ்வரஸ்ய, த்வத் ஜ்ஞாநஶக்தி கருணாஸு ஸதீஷுநேஹபாபம் பராக்ரமிதுமர்ஹதி மாமகீநம்’ என்றாழ்வானும் அருளிச்செய்தருளினார், கீழ் உக்தமானகுணங்களெல்லாம் ஶரண்யத்வோபயுக்தங்களாயிருக்கும், `மாம் அஹம்’ என்கிற பதங்களில் பிரித்தநுஸந்திக்கைக்கு ஹேது, மாம் என்கிற பதத்தில் சொல்லுகிற குணங்கள் ‘வ்ரஜ’ என்கிற விடத்திலதிகாரி க்ருத்யமான விஶ்வாஸ ஜநகமாத்ரமாயிருக்கையாலேயும், அஹமென்கிறவிடத்தில் சொல்லுகிற குணங்கள் விஶ்வாஸ ஜநகங்களாயிருக்கச் செய்தேயும், உபாயக்ருத்யமான பாபவிமோசநத்துக்கு பரிகரமாயிருக்கையாலே, பாபவிமோசகனைச் சொல்லுகிற அஹம் ஶப்தத்திலே அநுஸந்திக்க வேண்டுகையாலே கீழுக்தமான குணங்களெல்லாவற்றாலும், ‘வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணிலென்றார்வுற்ற வென்னை யொழியவென்னில் முன்னம் பாரித்துத் தானே என்னை முற்றப்பருகினான்’ என்கிறபடியே ஒருசேதனனைப் பெற்றானாகில் ஜீவித்தல் இல்லையாகில் நாவிலும் பல்லிலும் நீரற்றுக் கிடக்கும் படியான அவனுடைய வ்யாமோஹ குணமேயிவனுக்கு தாரகம், “உய்வு உபாயம் மற்றின்மை தேறி” என்றருளிச் செய்தருளினாரிரே ஆழ்வார்.
நாட்டில் ஶரண்யரைக்காட்டில் இவனுக்கு விஶேஷம், நிருபாதிக ஸம்பந்தம் . நிருபாதிக ரக்ஷகத்வமும், இந்தகுண விஶேஷம், இவ்விடத்திலே, த்வயத்திலே சரண ஶப்தத்தாலே சொல்லப்பட்ட விக்ரஹத்தையும் சொல்லுகிறது. அதாவது, ஸேநாதூளி தூஸரிதமான திருக்குழலும், கையும் உழவுகோலும், பிடித்த சிறுவாய்க் கையிறும், தேருக்குக் கீழே நாட்டின திருவடிகளும், திருச்சதங்கையுமாய் கொண்டிருக்குமிருப்பு.
இத்தால் ஶரண்யவஸ்து ஸர்வரக்ஷகமாய், ஸமஸ்தகல்யாண குணாத்மகமுமாய், ஸவிக்ரஹமுமா யிருக்குமென்றாய்த்து “ஶ்ரீமந்நாராயண சரணௌ” என்றிறே ஶரணாகதி மந்த்ரம், ‘அலர்மேல் மங்கையுறை மார்பா’ என்று தொடங்கி ‘அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்றிறே அபியுக்தர் வார்த்தையும்.
இத்தால் ஸத்வாரகமாக அவனை பஜிக்கும் உபாயாந்தரங்களில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது. உபாயாந்தரங்களிற்காட்டில் இவ்வுபாயத்துக்கு ஐகாந்த்யமுண்டென்றுமிடத்தை: த்யோதிபிக்கிறது. இத்தால் இவ்வுபாயம் ஸ்வரூபத்துக்கநுரூபமாகக்கடவது.
(௪) ‘ஏகம்’ இந்த ஏகஶப்தத்தை ஶரணஶப்தத்துக்கு விஶேஷணமாக்கி அத்விதீயமான உபாயமென்னபடியாய், அதாகிறது, ஸமாப்யதிக தரித்ரமென்று நம்மாசார்யர்களிலே சிலர் நிர்வகிப்பர்கள்.
நஞ்ஜீயரிதுக்கு “அவதாரணத்தைச் சொல்லுகிறது” என்று அருளிச்செய்வர், எங்ஙனே யென்னில் ‘த்வமேவோபாய பூதோ மே பவ’ என்றும், ‘தமேவஶரணங்கச்ச’ என்றும், ‘மாமேவ யே ப்ரபத்யந்தே’ என்று, ‘தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே’ என்று, ஸ்தாந ப்ரமாண ஸித்தமாகையாலே.
ஆனால் இவ்வவதாரணத்துக்கு வ்யாவர்த்தமாவதே தென்றால், கீழே உபாயாந்தரங்களை த்யாஜ்யங்களாகச் சொல்லுகையாலே, அவற்றை வ்யாவ்ருத்திக்கிறது என்னவொண்ணாது. மாம் என்று அஸாதாரணாகாரத்தைக் கீழே சொல்லுகையாலே, தேவதாந்தரம் வ்யாவர்த்த்யமென்னவொண்ணாது.
பின்னை எதாவதென்றால், இனியிங்குள்ளது ஸ்வீகார்யமும் ஸ்வீகாரமும் ஸ்வீகர்த்தாவுமாக வேணுமிறே. அதில், ஸ்வீகார்யநுபாயமாய் நின்றால், இனியுள்ளது ஸ்வீகாரமும் ஸ்வீகர்த்தாவுமிறே. அந்த ஸ்வீகர்த்தாவோபாதி ஸ்வீகாரமும், உபாயத்தில் புகாதென்கிறது. ஆவதென்? ‘உபாயோ பேயத்வே ததிஹ தவதத்வம் நதுகுணௌ’ என்கிறபடியே, உபாயத்வம் நித்யமே யாகிலும், இவனுடைய ஸ்வீகாராநந்தரமாகவன்றோ உபாயமாகிறது ; ‘யதநந்தரம் யத்பவதி தத்தஸ்யகாரணம்’ என்கிறபடியே, இந்த ஸ்வீகாராநந்தரமாகவல்லது, ஈஶ்வரனுடைய உபாயபாவம் ஸித்தியாமையாலே, இது உபாயமாதல் ஸஹகாரியாயாதலாக வேண்டாவோவென்னில் , ‘மாமேகம் ஶரணம் வ்ரஜ’ என்று உபாய ஸ்வீகாரமாகச் சொல்லுகையாலே ஸாக்ஷாதுபாயத்வமில்லை.
இனி ஸஹகரிக்கையாவது, உத்பத்தியிலே ஸஹகரித்தல், பலப்ரதானத்திலே ஸஹகரித்தலாய்த்து; பக்த்யுபாயம் கர்மஸாத்யமாகையாலே, உத்பத்தியிலே, சேதந ஸாபேக்ஷம், அசேதநமாகையாலே பலப்ரதானத்திலீஶ்வர ஸாபேக்ஷம். இவ்வுபாயம் ஸித்தவஸ்துவுமாய் நிருபாதிக ஸர்வ ஸுஹ்ருத்துமா யிருக்கையாலே உத்பத்தி நிரபேக்ஷம். ஸர்வஜ்ஞத்வாதிகுணவிஶிஷ்டமாகையாலே பலப்ரதானத்தில் நிரபேக்ஷம்.
ஆனால், ‘யத்ஸாங்கம் தத்ஸாதநம் ” என்கிறபடியே உபாயம் ஸாங்கமாயன்றோ இருக்கவேணும், இவ்வுபாயம் ஸித்தமாயிருக்கிறபடி என்னென்னில்’ ; உபாயமாகில் ஸாங்கமாய் இருக்கவேணுமென்கிற நிர்பந்தமில்லை. அவை ஸாத்யமுமாய் அந்ய ஸாபேக்ஷமுமாயிருக்கையாலே, ஸாங்கமாக வேண்டித்தித்தனை, இவ்வுபாயம் ஸித்தமுமாய் அந்யநிரபேக்ஷமுமாயிருக்கையாலே, நிரங்கமாயி ருக்கும்.
ஆனால், உபாயாந்தரங்களுக்கும் உபாயத்வ வ்யபதேஶம் பண்ணுகிறது, பலப்ரதைகளான தேவதைகளுக்கு ப்ரஸாதங்களான முகத்தாலேயன்றோ, அவ்வோபாதி இவ்வுபாயமும் ஈஶ்வர ப்ரஸாதக மானாலோவென்னில் ; தேவதைகளில், சேதநர்க்கு பூர்வமே பலத்தைக் கொடுப்பதாக நினைவின்றிக்கே யிருக்கச் செய்தே, இச்சேதநருடைய க்ரியையாய்து, அவர்கள் ப்ரஸாதத்தை ஜநிப்பிக்கிறது.
ஈஶ்வர விஷயத்தில் வந்தால், ஸர்வாத்மாக்களுக்கும் ஸ்வரூபாவிர்பாவத்தை யுண்டாக்குவதாக பூர்வமேவ சிந்தித்து அவஸர ப்ரதீக்ஷகனாய் போருகையாலே. அவனுக்கு ப்ரஸாத ஜநகமாகச் செய்யவேண்டுவ தொன்றில்லை. உண்டென்றிருக்கையாகிறது தன் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தையுமளித்து அவனுடைய ரக்ஷகத்வத்தையும் ஸோபாதிகமாக்குகிறான் இத்தனை.
ஆனால், மோக்ஷதுக்கு, தன்னையொழிய உபாயாந்தரங்களை விதிப்பானென்னென்னில், இதை இவர்களுக்கு ஹிதமாய் விதிக்கிறான் அல்லன், அபவர்கத்தின் பெருமையாலே, கோயிலங்காடியிலே எல்லாச் சரக்கும் பாரித்து வைக்கிறாப்போலே, ‘த்ரைகுண்யவிஷயாவேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந’ ‘முத்திறத்து வாணியத்திரண்டில் ஒன்றும் நீசர்கள் மத்தராய் மயங்குகின்ற திட்டதி லிறந்து போந்து’ என்கிறபடியே சேதநருடைய ருச்யநுகுணமாகத் தன் செல்லாமையாலே விதிக்கிறன் இத்தனை.
புருஷோத்தம வித்யையில், புருஷோத்தமத்வ வேதநத்தாலல்லது வழியில்லையென்கிற இதுவும் அவனிட்ட வழக்கு. ஸர்வேஶ்வரனென்கிற இதுவும் அந்த முக்யாதிகாரிகளுக்கு, ருச்ய நுகுணமான ஸாதநங்களில் இதல்லது போக்கி, அவ்யவ ஹிதஸாதநமொன்றில்லையென்று அல்லாத உபாயங்களிற் காட்டில் இவ்வுபாயத்தினுடைய ஏற்றமும், அல்லாதவதிகாரிகளில் காட்டில் இவ்வதிகாரியினுடைய ஏற்றமும் சொல்லுகிறது இத்தனை.
“மாம் நயேத்யதி காகுத்ஸ்தஸ்தத்தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்றும், ‘முன் நின்றாய்’ என்றும், தோழிமார்களும் அன்னையரும்’ என்றும், “நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்’ என்றும், ‘இருநிலத்தோர் படைத்தேன்’ என்றும், ‘சோம்பரை உகத்தி’ என்றும், சொல்லுகிறபடியே, பதிவ்ரதைக்கு பதியொழிய தன் பாரதந்த்ர்ய ஸ்வரூபத்துக்கு பாதகமாக ஸ்வயத்நத்தாலே அர்த்தமார்ஜித்து ஸ்வதேஹ போஷணம் பண்ணுமாகில் அது தன் ஸ்வரூபத்துக்குச் சேராதே தன்னளவிலும் பர்யவஸியாதே, தன் பர்தாவுக்கு மத்யாவஹமாயிருக்கும். தான் ஒன்றும் செய்யாதே, அவன் ரக்ஷிக்கக் கண்டிருக்குமாகில், அதுயிருவர் ஸ்வரூபத்துக்கும் நன்னிற முண்டாக்கக் கடவது. அப்படியே, தன் ஸ்வரூபத்தையுணர்ந்து தன் ஸ்வரூபாநுகுணமாக அவனையே ப்ராப்யமும் ப்ராபகமுமாக நினைத்திருக்கும் அதிகாரிகளோடு ஸமராய்ச் சொல்லுகிறதல்ல, ‘ஸத்கர்ம நிரதாஶ்ஶுத்தா: ஸாம்க்யயோகவிதஸ்ததா, நார்ஹந்தி ஶரணஸ்யாஸ்ய கலாங்கோடித மீமபி ; விஷ்ணோபாயோ யோந்ய பலஸ்ஸோதம: பரிகீர்தித:, அந்நோபாயோ விஷ்ணுபலோ மத்யம: பரிகீர்தித:, மாதவாம்க்ரி த்வயோபாயோ மாதவாம்க்ரி ப்ரயோஜந: யஸ்ஸ ஏவோத்தம: ப்ரோக்தோ மாதவேநைவ தேநவை என்னக் கடவதிறே.
ஆனால் அவஶ்ய கர்த்தவ்யமான உபாய ஸ்வீகாரத்துக்கு வேஷமேதென்னில், அசித்வ்யாவ்ருத்தி லக்ஷணமுமாய், ப்ரதிபந்தக நிவர்த்தகமுமாய், ஸ்வசித்தஸமாதாநமுமாய் கிடக்கிறது. ‘பகவத்ப்ரவ்ருத்தி விரோதி-ஸ்வப்ரவ்ருத்திநிவ்ருத்தி: ப்ரபத்தி:’ என்று ஸோமாஶியாண்டான் அருளிச்செய்வர்.
இவ்வுபாயந்தான், ஓராகாரத்தாலே ஸாபேக்ஷமுமாய் ஓராகாரத்தாலே நிரபேக்ஷமுமாயிருக்கும் எங்ஙனேயென்னில், ஆஶ்ரயணகாலத்தில் அதிகாரி ஸாபேக்ஷமுமாய், பலப்ரதானத்தில் இதர நிரபேக்ஷமுமாயிருக்கும்.
ஆக எம்பெருமான் நிருபாதிக ரக்ஷகனாகையாலும், ரக்ஷண பலம் தன்னதாகையாலும், ‘ஆள்பார்த்து உழிதருவாய்’ என்கிற படியே பூர்வமேவ ஸ்ருஷ்ட்யவதாரங்களைப் பண்ணி சேதநருடைய இச்சைக்கு அவஸர ப்ரதீக்ஷனாய் போருகிறவனாகையாலும், அவனுடைய நிர்ஹேதுகமான க்ருபா ப்ரஸாதங்களே உபாயமென்றாய்த்து.
“க்ருபயா கேவலமாத்மஸாத்குரு’ ‘கேவலம் மதீயயைவ தயயா நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக, கேவலம் மதீயயைவ தயயாதி ப்ரபுத்த:” என்று ஆளவந்தாரும் எம்பெருமானாரும் ஸ்தோத்ர கத்யங்களிலே இவ்வர்த்தத்தை அருளிச்செய்தருளினார்கள்.
“வ்ருத்த ஸேவைக்கு பலம் அவதாரணார்த்தம் அறிகை” என்று பிள்ளைய ருளிச்செய்வர் இத்தாலும் இவ்வுபாயம் ஸ்வரூபத்துக்கு அநுரூபமாயிருக்குமென்றாய்த்து.
(௫) ‘ஶரணம்’ என்றது ‘உபாயே க்ருஹ ரக்ஷித்ரோஶ் ஶப்த ஶரணமித்யயம், வர்த்ததே ஸாம்ப்ரதம் சைஷ உபாயார்தைக வாசக:’ என்கிறபடியே, ஶரண ஶப்தம், உபாய வாசகமாய் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்டப்ராப்திக்கவ்யவஹிதோபாயமென்றபடி. இஶ்ஶரணஶப்தம், அவ்யவஹிதோபாயமென்னுமிடத்தைக் காட்டுகிற படிதான் எங்ஙனே என்னில், கீழே பகவத்வ்யதிரிக்த ஸாங்க ஸகல தர்மத்தையும் விடச்சொல்லுகையாலே.
(௬) “வ்ரஜ’ “வ்ரஜகதௌ” என்கிற தாதுவிலே, கத்யர்தமாய், ‘கத்யர்த்தா புத்யர்த்தா:?’ என்கிறபடியே, “அத்யவஸி’ என்றபடி அத்யவஸாயமும் விஶ்வாஸமும் பர்யாயமாகையாலே, விஶ்வாஸத்தைச் சொல்லுகிறது. ப்ரபத்தி லக்ஷணவாக்யத்திலே, “மஹா விஶ்வாஸ பூர்வகம்’ என்று சொல்லுகையாலும், அநுஷ்டான வாக்யத்திலும் உபஸர்கத்தாலே மஹாவிஶ்வாஸத்தைச் சொல்லுகையாலும், இங்கும் அந்த விஶ்வாஸத்தையே விதித்ததாகக்கடவது.
மஹா விஶ்வாஸமாவது :- ஶங்காத்ரய ரஹிதமான விஶ்வாஸம் ஶங்காத்ரயமாவது -உபாய பல்குத்வமும், உத்தேஶ்ய துர்லபத்வமும், ஸ்வக்ருததோஷதர்ஶநமும்.
இவை பரிஹ்ருதமாகிறது எத்தாலேயென்னில், மாம் என்கிற பதத்தில் சொல்லுகிற குண பந்தங்களாலே.
ஸர்வஜ்ஞநுமாய் ஸர்வஶக்தநுமாய் பரமகாருணிகனுமாய் பரமோதாரனுமாயிருக்கும் என்கையாலே பல கௌரவத்தால் வந்த ஶங்கை பரிஹ்ருதம்.
ஆஶ்ரித வத்ஸலன் என்கையாலே ஸ்வக்ருத தோஷ தர்ஶநமாகிற ஶங்கை பரிஹ்ருதம், அஶரண்ய ஶரண்யனுமாய் அநாலோசித விஶேஷா ஶேஷ லோக ஶரண்யனுமாயிருக்கும் என்கையாலே உபாய லாகவமாகிற ஶங்கை பரிஹ்ருதம்.
ஆக இத்தனையாலும், குணவத்தாத்யவஸாயம் சொல்லிற்று. இனிமேல் ஸ்வரூபாத்யவஸாயம் சொல்லுகிறது,
ஸர்வஸ்வாமி என்கையாலே, உபாய லாகவமாகிற ஶங்கை பரிஹ்ருதம்,
ஶ்ரீமான் என்கையாலே ஸ்வக்ருத தோஷ தர்ஶநமாகிற ஶங்கை பரிஹ்ருதம்.
நாராயணன் என்கையாலே பலகௌரவமாகிற ஶங்கை பரிஹ்ருதம்,
ஆகவித்தால் தன்னுடைய ஸ்வரூபகுண ஸித்யர்த்தமாகவே ஶரணாகத ரக்ஷணம் பண்ணுமென்கிற மஹாவிஶ்வாஸம் ப்ரபத்தியன்றாய்த்து.
இது தான் ப்ரார்தனா கர்பமாயிருக்கும், “மஹாவிஶ்வாஸ பூரகம்; ததேகோபாய தாயாச்ஞா ப்ரபத்திஶ் ஶரணாகதி:” என்றும், ‘த்வமேவோபாய பூதோமே பவேதி ப்ரார்தநா மதி:। ஶரணாகதி:’ என்றும், லக்ஷண வாக்யங்களில் சொல்லுகையாலே, விஶேஷண ஶரணாகதியில் ப்ரார்தநமாவது அவனை உபாயத்வேந ஸ்வீகரிக்கை அதாகிறது – நமக்கு உபாயமிவனே யென்றிருக்கை.
ஆக கர்மமுமின்றியிலே, கர்மஸாத்யமான ஜ்ஞாநமுமின்றியிலே, ஜ்ஞாந ஸாத்யமான பக்தியுமின்றியிலே, இவற்றினுடைய த்யாகபூர்வகமுமாய், தானுபாயமுமன்றிக்கே உபேயமுமன்றிக்கே அதிகாரிக்கு விஶேஷணமாயிருப்பதோர் அத்யவஸா யாத்மக ஜ்ஞாந விஶேஷமென்றாய்த்து; இனி வாசிக காயிகங்களுண்டாகவுமா மில்லை ஆகவுமாமென்கை.
இந்த வித்யநுஷ்டானத்துக்கு விதியேதென்னில் ‘ஸக்ருதேவ ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவான்யதிஷ்யதே’, ‘ப்ரபத்திர் விஶ்வாஸ:’ ’ஸக்ருத்ப்ரார்தந மாத்ரேணா பேக்ஷிதந்தாஸ்யதீதி விஶ்வாஸ பூர்வக ப்ரார்தநாமிதி யாவத்’, என்கையாலே இந்த வித்யநுஷ்டான மாகிற உபாய ஸ்வீகாரம் ஸக்ருத்தென்றுமிடம், ப்ரபத்தி ஶாஸ்த்ரங்களாலும் ப்ரபத்திவித்துக்களாலும் நிஷ்கர்ஷிக்கப்பட்டது.
இந்த விதிஶேஷமான, ‘மாஶுச:’ என்கிற விதி யாவத் ப்ராப்தியளவுமநுஷ்டேயம். அதாகிறது- இனிநமக்கு கர்தவ்யாம்ஶங்க ளொன்று மில்லை. பல ஸித்தியிலு மொரு குறையில்லை, என்று விமர்ஶ தஶையில் பிறக்கும் விஶ்வாஸமாகையாலே, உபாயாநுஷ்டானமும், அநுஷ்டிதோபாய பரிபாலனமும், கர்தவ்யமென்ற தாய்த்து.
‘பூயஸ்த்வம் ஶ்ருணு ஸம்க்ஷேபம் மநஸாயேऽநஸூயயா। ஶ்ருத்வா சக்ருரயத்நேந ரக்ஷா சாப்ய ப்ரமாதிநீ।।’ என்றும் சொல்லிற்றிறே.
ஆகையால் உபாய ஸ்வீகாரம் ஸக்ருத்தென்றுமிடமும், ஸ்வீகார விஶேஷணமுமான விஶ்வாஸம் யாவாத்ப்ராப்தியளவும் விமர்ஶ தஶையிலும நுவர்த்த்திக்க வேணுமென்னுமிடமும் சொல்லிற்றாய்த்து.
ஸ்வர்கஸாதநமான ஜோதிஷ்டோமம், ஸப்தாஹஸ்ஸிலே விஹிதமாயிருக்கச் செய்தே அந்த யாகாந்தர்பூதமான அக்நிஹோத்ர மாப்ரயாணமஹர ஹரநுஷ்டேய மாகிறாப்போலே, இந்த அக்நிஹோத்ரம் அநுஷ்டியா தொழிந்தால் பலத்துக்கு விளம்பமுண்டாய், அநுஷ்டித்தால் ப்ரதிபந்தக மின்றிக்கே விஶேஷபல முண்டாயிருக்குமாப்போலே, ஆவ்ருத்திரூபமான விஶ்வாஸமும் நிஷ்டாவான்களுக்கு நிஷ்டா ப்ரகாஶகமுமாய் காலக்ஷேபமாகிற பலத்தையும் உடைத்தாயிருக்கும். விஶ்வாஸத்தினுடைய ஆவ்ருத்திகள் கிணற்றுக்குள்ளேயிருந்து உஜ்ஜீவிப்பாரைப்போலே யென்று பிள்ளையருளிச் செய்தருளுவர்.
ஆக, ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகம் அங்கமென்னுமிடத்தையும், த்யாக பூர்வகமான ஸ்வீகாரமதிகாரிக்கு விஶேஷமென்னுமிடத்தையும், ஸ்வீக்ருதனான அதிகாரிக்கு குணவிஶிஷ்டனான ஈஶ்வரன் உபாயமென்னு மிடத்தையும் சொல்லிற்றாய்த்து, ஆகையாலே, த்யாகவிஶிஷ்டம் ஸ்வீகாரம், ஸ்வீகார விஶிஷ்டம் அதிகாரம், குணவிஶிஷ்டம் உபாயம், என்றதாய்த்து.
(௭) ஆக இதுக்குக் கீழே அதிகாரிக்கு கர்தவ்யம் சொல்லிற்று. இனி ஈஶ்வரனுக்கு கர்தவ்யம் சொல்லுகிறது. ‘அஹம்த்வேத்யாதி’ “மோக்ஷயிஷ்யாமி” என்கிற உத்தமனுக்கும் “மாஶுச:” என்கிற மத்யமனுக்கும் ப்ரதிஸம்பந்திதயா ’அஹம்த்வா’ என்கிற ஶப்தங்கள் தன்னடையே வருவதாயிருக்க, வாசிகமாக சொல்லுகிறவிதுக்கு ப்ரயோஜநமென்னென்னில், சிலவபிப்ராயத்தை பற்றச் சொல்லுகிறது. இது “மாமேகம் ஶரணம் வ்ரஜ” என்கிற ஶரண்யாநுவாதமும், ஶரணாகதநுடைய அநுவாதமுமாயிருக்கிறது. அதாகிறது, “உனக்கு உபாயபூதனான என்னையே உபாயமாகப் பற்றிய உன்னை’ என்றபடி.
தேஹாத்பிமானி ‘அஹம்’ என்றால் தேஹத்தைக் காட்டும். ப்ரக்ருதி புருஷவிவேகம் பண்ணினவன், “அஹம்” என்றால் ப்ரக்ருதே: பரனாய் பரமஶேஷபூதனான ஆத்மாவைக்காட்டும். ஈஶ்வரன் “அஹம்” என்றால் உள்ளதெல்லாத்தையும் காட்டுமிறே. இந்த ‘அஹம்’ ஶப்தம் “மாம்” என்கிறத்தோடே சேர்ந்து அஹமாய்த்து. மாமென்கிறவிடம் அதிகாரி க்ருத்யமான மஹா விஶ்வாஸத்துக்கு உறுப்பாகச் சொல்லிற்று. அஹமென்கிறவிடம் ஈஶ்வரக்ருத்யமான பாபவிமோசநதுக்கு உறுப்பாகச் சொல்லுகிறது. அதாகிறது, பந்தகனான நானே விமோசகனானால், நிவாரகருண்டோவென்கை, அதாகிறது, ஸமாப்யதிக தரித்ரனென்றபடி. இவ்விடத்திலே விஶேஷித்து பலப்ரதானத்துக்கு உபயுக்தமான குணங்கள், அநுஸந்தேயங்கள்.
(௮) ‘த்வா’ கீழ்ச் சொன்னபடியே ஸகலதர்மங்களையும் விட்டு என்னையே நிரபேக்ஷ ஸாதநமாக பற்றின உன்னை ‘ என்றபடி. இத்தால், மேல் சொல்ல புகுகிற ஶோக விமோசந ஹேதுவைச் சொல்லிற்று.
(௯) ‘அஹம், த்வா’ என்கிற இரண்டு பதத்தாலும், ஸ்வீகார்யமான உபாய வேஷத்தையும் ஸ்வீகர்த்தாவான அதிகாரி வேஷத்தையும் சொல்லி நின்றது. இனிமேல் ஸ்வீகார்யமான ஈஶ்வர க்ருத்யத்தையும், ஸ்வீக்ருதோபாயனான அதிகாரி க்ருத்யத்தையும், சொல்லுகிற ‘ஸர்வபாபேப்ய:’ பாபமும் பஹுவசநமும் ஸர்வஶப்தமுமாய் இதுவும் த்ரிப்ரகாரமாயிருக்கும்.
பாபமாவது – அநிஷ்டமான பலத்தைத் தருவதுமாய் இஷ்டபலத்துக்கு விரோதியுமாயிருப்ப தொன்று. இங்குற்றை பாபமாகிறது, அநிஷ்டமான ஸாம்ஸாரிக து:கத்தையுண்டாக்கிக் கொடுப்பதாய், இஷ்டமான மோக்ஷத்துக்கு விரோதியுமாயிருப்பதொன்று.
பஹுவசநத்தாலே அவைற்றினுடைய பாஹுள்யத்தைச் சொல்லுகிறது. அதாகிறது, அவித்யா கர்மவாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்கள்.
அவித்யையாவது :- அந்யதாஜ்ஞாநமும், விபரீதஜ்ஞாநமும், ஜ்ஞானானுதயமும்.
கர்மமாவது:-புண்யபாபம் மோக்ஷத்தைப்பற்ற பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யம், “புண்ய பாபே விதூய” என்னக்கடவதிறே.
வாஸநையாவது :- அஜ்ஞாநவாஸநையும், கர்மவாஸநையும், ப்ரக்ரிதி ஸம்பந்த வாஸனையும்
ருசியும் விஷயபேதத்தாலே பஹுவிதையையாயிருக்கும்.
ப்ரக்ருதிஸம்பந்தமாவது: ஸ்தூலஸூக்ஷ்ம ரூபமாயிருந்துள்ள அசித்ஸம்பந்தம்.
இவ்வளவால், உபாஸகனுக்கும் ஸாதாரணமாக, ஈஶ்வரன் கழித்துகொடுக்கும் ஆகாரத்தைச் சொல்லிற்று.
இனி ‘ஸர்வ’ ஶப்தத்தாலே. ப்ரபந்நனுக்கு அஸாதாரணமாகக் கழித்துக் கொடுக்கும். அவற்றைச் சொல்லுகிறது. அதாகிறது, “தததிகம உத்தர பூர்வாகயோ ரஶ்லேஷ விநாஶௌ, தத்வ்யபதேஶாத், இதரஸ்யாப்யேவம ஸம்ஶ்லேஷ: பாதேது” என்று பூர்வோத்தராகங்களாகிற புண்ய பாபங்களுக்கு அஶ்லேஷ விநாஶம் சொல்லி, “போகேந த்விதரேக்ஷபயித்வாத ஸம்பத்யதே’ என்று ப்ராரப்தமநுபவ விநாஶ்யமென்னுமிடம் சொல்லித்திறே. இங்கு அப்படியிருப்பதொரு ஸங்கோசமில்லாமையாலே, அதுவும் ஶோகஹேதுவாமாகில் ஸர்வஶப்தத்திலே அந்தர்பூதமாகக்கடவது. எங்ஙனேயென்னில், இதுக்கு ஸங்கோசக மாயிருப்பதொரு ஶப்தமிங்கில்லாமையாலே.
ப்ரபத்தி ப்ராரப்த கர்மத்துக்கு விநாஶிநி, என்னுமிடத்துக்கு ப்ரமாணமென்னென்று எம்பெருமானாரை ஆண்டான் கேட்க, ‘மாஶுச:’ என்றதிறே’ என்றருளிச்செய்தருளினார்.
இதுதான் ப்ராரப்ததையும் போக்குமென்னுமிடத்துக்கு கண்டோக்தமான ப்ரமாணங்களுமுண்டு. ‘ஸாதநம் பகவத் ப்ராப்தௌ ஸ ஏவேதி ஸ்திராமதி:, ஸாத்ய பக்தி ஸ்ம்ருதாஸைவ ப்ரபத்திரிதிகீயதே ; உபாயோபக்திறேவேதி தத்ப்ராப்தாயாது ஸாமதி:; உபாய பக்தி ரேதஸ்யா: பூர்வோக்தைவ கரீயஸீ, உபாயபக்தி: ப்ராரப்தி வ்யதிரிக்தாக நாஶநீ – ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாஸி பூயஸீ’ என்று ப்ரபந்நனுக்கு ஶரீராந்தர ஹேதுவான பாரப்தம் ஶேஷம் அநுபவிக்கவேண்டுகிறது. ப்ராரப்த ஶரீரத்தில் ஶோகமில்லாமையாலே, “ஆரப்த கார்யான் ’ என்று ப்ராரப்தமும் ப்ரபத்தியாலே ‘க்ஷந்தவ்யம்’ என்று உடையவர் அருளிச்செய்தார்.
உபாஸகனுக்கு உத்தராகத்துக்குச் சொல்லுகிற அஶ்லேஷமும் ப்ராமாதிக விஷயமென்று உடையவர், பாஷ்யத்திலே அருளிச் செய்தருளினார். இப்படி அருளிச் செய்கைக்கு ஹேது, “நாவிரதோ துஶ்சரிதாந் நாஶாந்தோ நாஸமாகித:। நாஶாந்தமானஸோவாபி ப்ரஜ்ஞாநேநைந மாப்நுயாத் ” என்கிற வாக்யங்களோடு விரோதியாமைக்காகவும், ”அபி சேத்பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத:। யோகமேவ நிஷேவேத நாந்யம் யத்நம் ஸமாசரேத்’ என்று யோகிகளுக்கு ப்ராயஶ்சித்தத்தை விதிக்கையாலும்.
ப்ரபந்நனுக்கு உத்தராகத்தில் புத்தி பூர்வமும் ஶோகஹேதுவாமாகில். அந்த புத்தி பூர்வத்துக்கும் பரிஹாரமாகக் கடவது. அதாவது, ஶரீர ஸம்பந்தத்தோடே யிருக்கையாலே வாஸநையாலும் ப்ரபல கர்மத்தாலும் காதாசித்கமாக புத்திபூர்வகம் ஸம்பாவிதம். இவற்றையும் பொருத்தருளவேணு மென்று பூர்வமேவ ப்ரார்த்தித்தானாகில் அவையும் பூர்வப்ரபத்தி தன்னாலே க்ஷந்தவ்யமாகக் கடவதென்கை. ஆகையிறே, ‘வர்த்தமானம் வர்த்த்திஷ்யமாணம் ச ” என்று உடையவர் அருளிச்செய்தது.
புத்தி பூர்வகமான உத்தராகத்தில் ஶோகித்து ஶரணம் புக்கானென்னுமிடம் அறியும்படி எங்ஙனேயென்னில், உத்தர ப்ரவ்ருத்தியில் அநுதாபம் நடக்கையும் , பூர்வ ப்ரவ்ருத்தியை ஸ்மரித்து த்ருடசித்தனாகையும்.
இன்னமும் -ஶ்ரேஷ்டராயிருபார்க்கு ஶிஷ்ய புத்ரர்களைப்பற்ற வித்த்யதிக்ரமம் பண்ணியநுஷ்டிக்க வேண்டிய வருவன சில பாபமுண்டு-அந்தப் பாபங்களையும் சொல்லுகிறது,
ஆந்ருஶம்ஸ்ய ப்ரதானரா யநுஷ்டித்தாலும் ஏறிட்டகட்டி ஆகாஶத்திலே நில்லாதாப்போலே அவையும் ஒருபலத்தோடே ஸம்பந்திப்திக்கக் கடவது. ஆகையாலே, அவையும் பாப ஶப்த வாச்யமாகக் கடவது.
கலங்கி உபாய புத்த்யாப் பண்ணும் ப்ரபத்தியும் பாப ஶப்தவாச்யமாகக்கடவது.
(௧௦) ஆகக் கீழ், விரோதி வேஷம் சொல்லி நின்றது. ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று விரோதி நிவ்ருத்தி ப்ரகாரம் சொல்லுகிறது.
“மோக்ஷயிஷ்யாமி” இவற்றினின்றும் விடுவிப்பான்
‘இஷ்யாமி’ என்கிற ‘ணிச்’ சாலே யாவை யாவை சில பாபங்களைக்குறித்து நீ பயப்படுகிறாய், அவைதானே உன்னைக்கண்டு பயப்பட்டுபோம்படி பண்ணுகிறேன்.
அவை தானே விட்டுப்போம்படி பண்ணுகையாவது, இவை நமக்கு முன்புண்டாய்க் கழிந்ததென்று தோற்றாதபடி போக்குகை. அதாகிறது, இவை ஸ்ம்ருதி விஷயமானாலும் தன்னுடைய ஸ்வாபாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்நம் கண்டாப் போலே இவை நமக்கு வந்தேறியாய் கழிந்ததென்றிருக்கையும், ஸ்ம்ருதியால் து:கமநுவர்த்த்தியாதிருக்கையும்.
கீழிவனை உபாயமாக பற்றிற்று அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்காயிருக்க, அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரத்தை பலமாகச் சொல்லுவானென்னென்னில்; ‘யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம்। ஸதேவ நீயதே வ்யக்திமஸதஸ்ஸம்பவ: குத: ।।ததா ஹேயகுணத்வம் வம்ஸா தவபோதாதயோ குணா: । ப்ரகாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே ।। ; ஸ்வேநரூபேணாபி நிஷ்பத்யதே” ”மம ஸஹஜ கைங்கர்யவிதய:’ என்கிறபடியே அநிஷ்ட நிவ்ருத்தியுண்டானால் , இஷ்டப்ராப்தி தன்னடையே உண்டாமிறே.
ஆனால் அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரத்துக்கு ஈஶ்வரன் உபாயமாயிருக்கிறானோ என்னில் ; இஷ்ட ப்ராப்தியாகிற அநவதிகாதிஶயாநந்த ப்ரஹ்மானுபவத்துக்கு அர்ஹதையேயுள்ளது. இனி ஈஶ்வரனை அநுபவிக்கும் போதாய்த்து, இவனுக்கநுபவிக்கலாவது. ஆகையிறே கைவல்யமாகிற மோக்ஷத்துக்கு அநிஷ்ட நிவ்ருத்தியொத்திருக்கச் செய்தேயும், ஆத்மானுபவ மாத்ரமாயிருக்கிறது. இவ்வைஷம்யத்துக்கு ஹேது, உபாஸந தார தம்யத்தாலே ஈஶ்வரனுக்குண்டான ப்ரஸாத தார தம்யமாகையாலே, சேதநன் புருஷார்த்தத்தை ப்ரார்த்திக்கும்போது இஷ்டப்ராப்திரூபமான கைங்கர்யத்தை ப்ராதாந்யேந ப்ரார்த்திக்கக்கடவன்.
இவனுக்கு, கைங்கர்யமாகிற புருஷார்த்தம் ஸஹஜமாயிருக்கையாலே தத்விரோதி நிவ்ருத்தி மாத்ரத்தையே உபாயமான ஈஶ்வர க்ருத்யமாகச் சொல்லக்கடவது. ஆகையாலே அந்த ப்ராதாந்யத்தை பற்ற இங்கருளிச்செய்கிறான் ; அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட ப்ராப்தியும் ஈஶ்வரனுடைய க்ருபா ப்ரஸாத க்ருத்யமாக கத்யத்திலே உடையவர் அருளிச் செய்தருளினார்,
ஆகையால் இப்படி ஶரண்யன் சொல்லுகைக்கடி இஷ்டப்ராப்திரூபமான கைங்கர்யம் இவனுக்கு ஸ்வாபாவிகமென்னும் ஆகாரம் தோற்றுகைக்காகவும், அநிஷ்ட நிவ்ருத்தியுண்டானபோதே ஸஹஜமான இஷ்டப்ராப்தியும் உண்டென்றும், அநிஷ்ட நிவ்ருத்தியிநுடைய ப்ராதாந்யத்தைப் பற்ற அருளிச்செய்கிறான்.
(௧௧) கீழ் ‘அஹம்’ என்று உபாயக்ருத்யம் சொல்லி நின்றது. மேல், ’த்வா’ என்று நிக்ஷிப்தபரனான அதிகாரி க்ருத்யம் சொல்லுகிறது,
“மாஶுச:’ ஶோகியாதே கொள்ளென்றபடி. “வ்ரஜ” என்கிற விரோதியோபாதி `மாஶுச:’ என்கிறதும் விதியாகையாலே ஸ்வீகாரத்தோபாதி ஶோக நிவ்ருத்தியும் கர்தவ்யமென்கை. ஆகையாலே, ப்ரபந்நனுக்கு யாவத் பலப்ராப்தி, நிர்பரத்வானுஸந்தாநம் கர்தவ்யமென்னதாய்த்து. ஸ்வீக்ருதோபாயனான பின்பு ஶோகித்தானாகில் ப்ரபத்தி நிஷ்டைக்கு ஹாநியுண்டாய் அத்தாலே பல விளம்பமுண்டாகக்கடவது.
“பலியாய்த்து-பலாலாபத்தில் ஶோகிப்பான். உபாய கர்தா வாய்த்து – உபாயமில்லை என்று சோகிப்பான். இவ்வுபாயத்தில் பலித்வ கர்த்ருத்வங்களிரண்டும் உனக்கில்லை, இனி, நானே பலியுமாய் நானே கர்தாவுமாயிருக்கையாலே நீ சோகிக்க வேண்டா”, என்கை “ஸக்ருதேவம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவான்யதிஷ்யதே” என்கையாலே, கர்தவ்யாம்ஶ முண்டென்று சோகிக்கவேண்டா.
”மாம் –அஹம்” என்கையாலே, ‘உன் விலக்காமை பார்த்திருக்கிறோம், சிலராகையாலும், விரோதி நிரஸந ஸமர்த்தனாகையாலும் , சோகிக்கவேண்டா, ஆகையாலே, உன்னைப் பார்த்தாலும் சோகிக்கவேண்டா, என்னைப்பார்த்தாலும் சோகிக்கவேண்டா நிர்பரனாயிரு” என்கை.
‘உடையவனாய்த்து க்ருஷி பண்ணுவான், கர்ஷகனாய்த்து பலம் புஜிப்பான் பலியாய்த்து பலாலாபத்தில் ஶோகிப்பான், இவையித்தனையும் உனக்கில்லாமையாலே ஶோகியாதே” என்றதாய்த்து.
இனி ஶோகித்தாயாகில், உன் ஸ்வரூபத்தையும் அளித்து என் ப்ரபாவத்தையும் அளித்தாயா மித்தனை, முன் ஶோகித்ததில்லையாகில் அதிகார ஸித்தியில்லை. பின்பு ஶோகித்தாயாகில் பல ஸித்தியில்லை.
இத்தால் “அதஸ்த்வம் தவதத் க்ருதோ மத் ஜ்ஞாந தர்ஶந ப்ராப்திஷு நிஸ்ஸம்ஶய ஸுகமாஸ்வ’ என்றபடி.
”துஷ்கரமுமாய் ஸ்வரூப விரோதியுமான ஸாதநங்களை த்யஜிக்கையாலே சோகிக்கவேண்டா, ஸ்வீகரிக்கப் புகுகிற உபாயம் ஸுலபமாகையாலே சோகிக்கவேண்டா அது தான் நிரபேக்ஷமாகையாலே சோகிக்கவேண்டா, அவ்யவஹித ஸாதநமாகையாலே சோகிக்க வேண்டா, மானஸ வ்யாபார மாத்ர மாகையாலே வாய் நோவ உடம்பு நோவ க்லேஶிக்க வேணுமென்று சோகிக்கவேண்டா, உபாயம் பலப்ரதான ஸமர்த்தமாகையாலே சோகிக்கவேண்டா இனி கர்தவ்யாம்ஶமுண்டென்று சோகிக்கவேண்டா, விரோத்யம்ஶத்தில் ஶேஷிப்பதொன்றும்டென்று சோகிக்கவேண்டா, விரோதி போமா போகாதோ வென்று சோகிக்க வேண்டா” என்கிறது.
(1) த்யாஜ்ய ஸ்வரூபம் சொல்லி (2) த்யாக ப்ரகாரம் சொல்லி, (3) உபாய ஸ்வீகாரத்துக்கு த்யாகம் அங்கமென்னுமிடம் சொல்லி (4) ஸ்வீகரிக்கப்புகுகிற உபாயத்தினுடைய சீர்மை சொல்லி (5) அச்சீரிய உபாயம் நிரபேக்ஷமென்னுமிடம் சொல்லி (6) உபேயத்வம் நித்யம், உபாயத்வம் ஔபாதிகமென்னுமிடம் சொல்லி, (7) பற்றுமிடத்தில் மானஸ வ்யாபாரமே அமையுமென்னுமிடம் சொல்லி (8) உபாயத்தினுடைய சீர்மையைச் சொல்லி (9) அச்சீர்மையினுடைய பூர்த்தி சொல்லி (10) விரோதிகளில் கிடப்பதொன்றில்லை என்னுமிடம் சொல்லி (11) அவையடையத்தானே போமென்னுமிடம் சொல்லி (12) ”நிர்பரனாயிரு” வென்றான்.
ஆகவித்தால் (1) ஸ்வீகாரங்களையும், (2) த்யாஜ்ய தர்ம விஶேஷங்களையும், (3) அந்த தர்மங்களினுடைய த்யாக ப்ரகாரத்தையும் (4) அந்த தர்ம த்யாக பூர்வகமாகப் பற்றும் விஷயத்தினுடைய ஸௌலப்யாதி குணயோகத்தையும், (5) தத்விஶிஷ்ட வஸ்துவினுடைய ஸஹாய ஸஹத்வ லக்ஷணமான நைரபேக்ஷத்தையும். (4) அந்த நிரபேக்ஷ வஸ்துவினுடைய உபாயபாவத்தையும், (7) அத்தை உபாயத்வேந ஸ்வீகரிக்கையும், (8) ஸ்வீக்ருதோபாயத்தினுடைய ஜ்ஞாநஶக்த்யாதி குணயோகத்தையும், (9) தத்விஶிஷ்ட வஸ்துவில் ந்யஸ்தபரனான அதிகாரியையும், (10) தத்விரோதி பாபஸமூஹத்தையும், (11) தத்விமோசந ப்ரகாரத்தையும், (12) தத்விமோசனனைப் பற்றின அதிகாரியினுடைய நைர்பர்யத்தையும் சொல்லிற்றாய்த்து
ப்ரபத்தி. நிர்பர த்வானுஸந்தாந ஶிரஸ்கமாகையாலே, நிர்பர த்வானுஸந்தாநம் ஸர்வதா கர்தவ்யமென்றாய்த்து. ‘வ்ரஜ’ என்கிற ஸ்வீகாரத்துக்கு
தனி சரமம் ஸம்பூர்ணம்