தத்த்வ ஶேகரம்

தத்த்வ ஶேகரம்

ப்ரதமம் பரஸ்வரூபநிர்ணய ப்ரகரணம்

உபோத்காதம்

     பும்ஸ்பர்ஶ க்லேஶ ஸம்பாவநாகந்த விதுரமாய் ப்ரத்யக்ஷாதி ப்ரமாண விலக்ஷணமாயிருந்துள்ள நிகில வேதஜாதத்துக்கும் ததுபப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளுக்கும் க்ருத்யம் ஸகல ஸம்ஸாரி சேதனர்க்கும் தத்வ ஜ்ஞாநத்தை ஜநிப்பிக்கை.

 தத்த்வஜ்ஞாநமாவது-ஸர்வஸ்மாத் பரனான நாராயணனுக்கு, ஸர்வப்ரகார பரதந்த்ரரான ஸர்வாத்மாக்களினுடையவும் ஸ்வரூபதுக்கநுரூப  புருஷார்த்தமான கைங்கர்யத்தை, அநாதியாக ப்ரதிபந்தித்துக்கொண்டு போருகிற கர்ம ஸம்பந்தத்தை நிவர்திப்பிக்குமுபாயம் தச்சரணாரவிந்த ஶரணாகதியென்கிற நிரூபண ஜ்ஞாநவிஶேஷம்.

     நாராயணன் ஸர்வஸ்மாத்பரனானபடி யெங்ஙனே என்னில்; பரத்வ சின்னங்களான ஜகத்காரணத்வ முமுக்ஷோ பாஸ்யத்வ மோக்ஷப்ரதத்வங்களுள்ளது இவனுக்கே யாகையாலே இவனே ஸர்வஸ்மாத்பரன்.  மஹோபநிஷத்தும், ஸுபாலோபநிஷத்தும், நாராயணோபநிஷத்தும், ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும் ‘ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்’ ‘திவ்யோ தேவ ஏகோ நாராயண:’ “அத புருஷோ ஹவை நாராயணோऽகாமயத’ ‘அப ஏவ ஸஸர்ஜாதௌ’  ‘நாராயணோ  ஜகந்மூர்த்தி:’  “விஷ்ணோஸ்ஸகாஶாதுத்பூதம்”  என்று நாராயணாதி திவ்ய ஶப்தங்களாலே. ஜகத்காரணத்வத்தைச் சொல்லுகையாலே இவனே காரணபூதன்.

 சாந்தோக்ய வாஜஸநேய கௌஷீதக்யாதிகளில் ஸத் ப்ரஹ்ம ஆத்மாவாதி ஶப்தங்களாலேயும் சில வஸ்துக்களைக் காரணமாகச் சொல்லாநின்றதே யென்னில்; பஶ்வதிகரண ந்யாயத்தாலே ஸாமான்ய ஶப்தம் விஶேஷ பர்யவஸாயியாகையாலே ஸதாதி ஶப்தங்களும் இவனையே ப்ரதிபாதிக்கின்றன.

சதுர்முககாரணத்வபக்ஷாநுவாதம்

     நநு ‘ஹிரண்யகர்பஸ் ஸமவர்த தாக்ரே’  ‘தாதா யதாபூர்வமகல்பயத்’ ‘ப்ரஜாபதி: ப்ரஜா அஸ்ருஜத’  ‘அஜஸ்ய நாபா வத்யேகமர்ஷிதம் யஸ்மிந் விஶ்வா புவனானி தஸ்து:’ என்று ஹிரண்யகர்பாதி விஶேஷ ஶப்தங்களாலே சொல்லுகையாலே ப்ரஹ்மா காரணமாகக் குறையென்னென்னில்;

தத்பக்ஷநிராஸம்

அது சொல்ல வொண்ணாது. ‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ ‘தத்ர ப்ரஹ்மா சதுர்முகோSஜாயத’ “நாராயணாத்ப்ரஹ்மா ஜாயதே”  ‘ஸப்ரஜாபதிரேக: புஷ்கர பர்ணே ஸமபவத்’ ’விராஜோ அதி பூருஷ:’ ‘யந்நாபிபத்மாதபவந்மஹாத்மா ப்ரஜாபதிர் விஶ்வஸ்ருட் விஶ்வரூப:’ ’ப்ரஹ்மவை ப்ரஹ்மாணம் புஷ்கரே ஸஸர்ஜ ஹிரண்யகர்பம் பஶ்யதி ஜாயமானம்’  என்று-ஸ்ருஜ்யனென்றும், ‘ந ப்ரஹ்மா,  ‘ப்ரஹ்மாதிஷு ப்ரலீநேஷு’ என்று ஸம்ஹார்ய னென்றும்  ‘யுககோடிஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ: । புநஸ் த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஶுஶ்ரும:।।’  ‘ப்ராஜாபத்யந் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேஶிதம்’ ‘மமவேதா ஹ்ருதாஸ்ஸர்வே தாநவாப்யாம் பலாதித:’  ‘யஸ்மாதந பராதஸ்ய ஶிரஶ்சிந்நம் த்வயா மம’ என்று – ஸர்வேஶ்வர ஸமாராதநத்தாலே தன் பதம் பெற்றானென்றும், அஸுரர் கையிலே வேதங்களைப் பறிகொடுத்தானென்றும், ருத்ரனாலே பரிபூதனானானென்றும், இவனைக் கர்மவஶ்யனாகச் சொல்லுகையாலே.

 ஹிரண்யகர்ப தாத்ரு ப்ரஜாபதி ஶப்தங்கள்  அபர்யவஸாந வ்ருத்தியாலேயாதல் அவயவ ஶக்தியாலேயாதல் (நாராயண ப்ரவ்ருத்தியாலேயாதல்) நாராயண வாசகங்கள்.

“அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதம்” என்கிறவிடத்தில் அர்ப்பிதமென்றது ஆவிர்பூதமென்றபடி. ஏகம் என்றது புஷ்கரத்தை. ‘அஜஸ்ய நாபாவத்யேகம் யஸ்மிந்விஶ்வம் ப்ரதிஷ்டிதம் | புஷ்கரம் புஷ்கராக்ஷஸ்ய தஸ்மை பத்மாத்மநே நம:||’ என்று மஹாபாரதத்திலே வ்யாக்யாதமாகையாலே.

ருத்ரகாரணத்வப்க்ஷாநுவாதம்

           நநு, “யதா தம ஸ்தந்நதிவா நராத்ரி: நஸந்நசாஸச்சிவ ஏவ கேவல:”  “காரணம் து த்யேய:” ‘ஸர்வைஶ்வர்ய ஸம்பந்ந ஸ்ஸர்வே ஶ்வரஶ்ஶம்புராகாஶ மத்யே த்யேய:’ என்று ஶ்வேதாஶ்வதர ஆதர்வ ஶிகாதிகளிலே ருத்ரனைக் காரணபூதனாகச் சொல்லாநின்றதே என்னில்.

தத்பக்ஷநிராஸம்

 அதுவும் அநுபபந்நம். : ‘புத்புதாத் த்ர்யக்ஷஶ் ஶூலபாணி: புருஷோsஜாயத’  ‘நாராயணாத் ருத்ரோ ஜாயதே”  ‘லலாடாத் க்ரோதஜோ ருத்ரோSஜாயத’  ‘இந்த்ரோ வருண ஸ்ஸோமோ ருத்ர: பர்ஜந்யோ யமோ ம்ருத்யு ரீஶாந:’ ‘த்ர்யக்ஷ: கண்ட பரஶு மஜீஜநத்’  “ப்ரஹ்மண: புத்ராய” என்று ஏவமாதி வாக்யங்களாலே மஹோபநிஷத்தும், நாராயணோபநிஷத்தும் ஸுபாலோப நிஷத்தும் ப்ருஹதாரண்யகமும், அதர்வணமும், ஸாமவேதமும் ஸ்ருஜ்யனாகவும், நேஶாந: என்று ஸம்ஹார்யனாகவும் சொல்லுகையாலே.

      ஶதபத ப்ராஹ்மணத்திலே ‘ஸம்வத்ஸரே குமாரோऽஜாயத,  ஸோऽரோதீத், தம் ப்ரஜாபதிரப்ரவீத், குமார கிம் ரோதிஷி, யச்ச்ரமாத் தபஸோऽதிஜாதோऽஸீதி, ஸோऽப்ரவீத், அநபஹத பாப்மாऽஹமஸ்மி ‘ இத்யாதிகளிலே-ருத்ரன் உத்பன்னனானவளவிலே ரோதநம் பண்ண அவனைப் பார்த்து ப்ரஜாபதி “நீ அழுகிறதேன்”? என்று கேட்க, நான் அநபஹத பாப்மா, என் பாபங்கள் போம்படி எனக்கு நாமகரணம் பண்ணவேணும்’ என்ன, அழுகையாலே உனக்கு ருத்ரனென்று பேராகக்கடவது’ என்ன,  எனக்கு இன்னமும் சில பேர்கள் வேணும் ‘ என்ன  பவஶர்வே ஶாநபஶுபதி  பீமோக்ர மஹாதேவரூபமான நாம ஸப்தகத்தையும் அஷ்ட மூர்தித்வத்தையும் கொடுத்தானென்று சொல்லிற்று.

இதுதான் ஸ்காந்த புராணத்திலே “உந்மத்த வதநுந்மத்த: ப்ரபு: ப்ரபவதாமபி| ராத்ரௌ ஶ்மஶாநே பர்யடஸி தத்கிமே தத்தவேஶ்வர ||” இத்யாதியாலே தேவி  ‘ஶ்மஶாந பர்யடநன் தொடக்கமான நிஹீந வ்ருத்திகளை நீ அநுபவிக்கைக்கு அடியென்?” என்று கேட்க “அஹம் ஶோணித பங்கால: கரால வதநோம்ऽபிகே | ரௌத்ரே முஹூர்தே ஸம்பூதோ ஹரே ரோதிமி விஸ்வரம் ||” இத்யாதியாலே தன்னுடைய உத்பத்தியையும் ரோதநத்தையும் நாம ஸப்தக மூர்த்யஷ்டகங்களையும்  பெற்றபடியையும் சொல்லி ‘. “ரௌத்ரே முஹூர்தே ஜாதோsஹம் ரௌத்ர கர்மா ததோஹ்யஹம் | யத்பவத்யுசிதம் கர்ம புருஷஸ்ய கிரேஸ்ஸுதே”|| ’தத்தேநாவஶ்யகர்தவ்யம் ம்ருதுவா யதி வேதரத் । ப்ரஜாபதேஶ்ச கஶ்ஶக்த ஆதேஶம் கர்துமந்யதா।।’ இத்யாதியாலே தன்னுடைய நிஹீநா சரணஹேது கர்மமென்று சொன்னான் என்று வ்யாக்யாதமாய்த்து. இவ்விடத்திலே ‘ஹரேரோதிமி விஸ்வரம் | ததோ மாம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா லோகேஶ: ப்ராஹ கேஶவ:’ என்று ஹரிகேஶவ ஶப்தங்களாலே உபக்ரமித்து, ப்ரஜாபதி ஶப்தத்தாலே உபஸம்ஹரிக்கையாலே இந்த ஶ்ரு(ஸ்ம்ரு)தியில்‌ ப்ரஜாபதி ஶப்தம் நாராயண பர்யவஸாயியாகக்கடவது.

     மார்கண்டேய வைஷ்ணவ புராணாதிகளிலேயும்,’ ருத்ர, ஸர்கம் ப்ரவக்ஷ்யாமி தந்மே நிகதித ஶ்ஶ்ருணு’ என்று இவ்வர்த்தத்தைச் சொல்லிற்று.

 ‘அஸ்ய தேவஸ்ய மீடுஷ:’,  ‘மஹாதேவஸ் ஸர்வமேதே மஹாத்மா ஹத்வாऽऽத்மாநந் தேவதேவோ பபூவ’ என்று இவனுடைய பதம் கர்மாதீநமென்று சொல்லிற்று.

ஶ்ரீவராஹ புராணத்திலே “தவ விஷ்ணோ: ப்ரஸாதேந மயாதத் த்ரிபுரம் ஹதம் | தஸ்ய பாபஸ்ய தோஷேண நஶக்நோமி விசேஷ்டிதும் ||” என்னு த்ரிபுர தஹநத்தாலுண்டான பாபமடியாக யோகமாயை, ஐஶ்வர்ய நாஶம், ஹ்ருதய ஸந்தாபம் நிஶ்சேஷ்டித்வங்கள் இவனுக்குண்டாய்த்ததென்றும் சொல்லிற்று.

‘ததோ வாக்யாந் முநீந்த்ரஸ்ய தேவோ பாலேந்து ஶேகர: | ஶங்கரஶ் பின்னலிங்கஸ்து காநநே விசசார ஹ || ஏவம் ஶாபோ யதாऽஸ்மாகம்  தாப்யாம் தத்தஸ்ஸுதாருண:|| அவஶ்யகரணீயம் மே ததா காஷ்டமயம் வபு:||’ என்று ப்ருகு தத்பத்நீ ஶாபங்களாலே சிந்நலிங்கத்வ காஷ்டரூபுத்வங்களுமுண்டாய்த்தென்று ப்ராஹ்மபுராணத்திலே சொல்லிற்று.

வாயவ்யத்திலே ‘ததோऽபி வ்யாஹ்ருதோ தக்ஷோ ருத்ரம் ஸோऽப்யஶபத்புந: | யஸ்மாத் த்வம்  மத்க்ருதே க்ரூரம் ருஷீந் வ்யாஹரதவாநஸி || தஸ்மாத் ஸார்தம் ஸுரைர்யஜ்ஞைர் நத்வா யக்ஷ்யந்தி வை த்விஜா: | ஹுத்வாऽऽஹுதிம் தவ க்ரூராமபஸ் ஸ்ப்ருஶ்யந்து கர்மஸு||’  என்று, “அப உபஸ்ப்ருஶதி மேத்வாய . . . .  நாந்வீக்ஷேத யதந்வீக்ஷேத- சக்ஷுரஸ்ய ப்ரமாயுகம் ஸ்யாத்- தஸ்மாந்நாந்வீக்ஷ்ய:’ என்று ஶ்ருதியிலே போலே தக்ஷஶாபத்தாலே இஜ்யத்வாதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று.

மாத்ஸ்ய புராணத்திலே ‘யஸ்மாதந பராதஸ்ய ஶிரஶ்சிந்நம் த்வயாமம। தஸ்மாச்சாப ஸமாயுக்த: கபாலீ த்வம் பவிஷ்யஸி . . . .  விஷ்ணோ: ப்ரஸாதாத் ஸுஶ்ரோணி கபாலந் தத்ஸஹஸ்ரதா | ஸ்புடிதம் பஹுதாயாதம் ஸ்வப்நலப்தம் தநம் யதா।’ என்று ப்ரஹ்மாவாலே இவன் ஶாபோபஹதனான படியையும், ஸர்வேஶ்வரன் ஶாபத்தை போக்கின படியையும் சொல்லிற்று.

     ஶ்ரீ விஷ்ணுபுராணத்திலே க்ருஷ்ண வைபவமறியாதே தன்னையாஶ்ரயித்த பாணனை நோக்குகைக்காக ஸபரிகரனாய் வந்து க்ருஷ்ணனோடே எதிரிட்டு ‘ஜ்ரும்பாபி பூதஸ்து ஹரோ ரதோபஸ்த உபாவிஶத்| ந ஶஶாக ததா யோத்துங் க்ருஷ்ணேநாக்லிஷ்ட கர்மணா ||’ என்று தானும் பரிகரமும் தோற்றுத் தேர்த் தட்டிலே விழுந்து கிடந்து, ‘க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்’ என்று பின்பு க்ருஷ்ணவைபவத்தை யுணர்ந்து பாணனுடைய ப்ராண ப்ரதாநார்தமாக  க்ருஷ்ணனை யிரந்தானென்றும்;

ஶ்ரீவிஷ்ணு தர்மோத்தர ஶ்ரீராமாயணங்களிலே ‘விஷ்ணோராதிக்ய மந்விச்சம் ஸ்தஸ்ய மாயா விமோஹித: | க்ருதவாநஸ்மி தேவேஶோ தேவவாக்யேந விக்ரஹம்||’ என்று பகவந்மாயா விமோஹிதனாய் க்ருஷ்ணனோடேயெதிரிட்டு, ‘ஆரோபிதும் ந மே ஶக்தி ஸ்ஸர்வ யத்நேந சாऽபவத்’ என்று அவன் கையில் வில்லை வளைத்து நாணிலே யேறிடவும் மாட்டாதே, ’ததாது ஜ்ரும்பிதம் ஶைவந்தநுர்பீம பராக்ரமம் | ஹுங்காரேண மஹாதேவ ஸ்ஸ்தம்பிதோऽத த்ரிலோசந: ||’ என்று வில்லும் முறிந்துபோய், தானும் ஹுங்காராபிபூதனாய், “ததஶ்சகதமோஹேந மயா ஜ்ஞாநோஹரி: பர: | ஜ்ஞாத்வாவிஸ்ருஷ்டசாபேந ஸ்துதஶ்ச பகவாம் ஸ்ததா||” என்று பின்பு தெளிந்து ஸ்தோத்ரம் பண்ணினானென்றும்‌ இவனுடைய அஜ்ஞாநாஶக்திகளைச் சொல்லிற்று.

வ்ருகாஸுரன் இவனை ஆராதித்து ‘நான் யாவனொருவனுடைய தலையை ஸ்பர்ஶித்தேன், அவனுடைய தலை ஶததாவாக வேணும் ‘” என்றபேக்ஷிக்க, அவனுமப்படியே வரம் கொடுக்க, அநந்தரம் ‘ஸதத்வர பரீக்ஷார்த்தம் ஶம்போர்மூர்த்நி வ்ருகாஸுர: | ஸ்வஹஸ்தந் தாது மாரேபே ஸோऽபிப்யத்ஸ்வ க்ருதாச்சிவ: || தேநோப ஸ்ருஷ்டஸ்ஸம்த்ரஸ்த: உபதாவந் ஸவேபது: | யாவ தந்தந் திவோபூமே:  காஷ்டா நாம தராபுவ: |’ என்கிறபடியே, அவன் அத்தைப் பரீக்ஷிக்கைக்காக இவன் தலையைத்தொட, ஶோகபீதனாய் இவனோட, அவன் கண்டவிடமெங்கும் ‌தொடர, ஓடிப்போக்கற்று ஶ்ரீ வைகுண்டத்தேறச்செல்ல, ஸர்வேஶ்வரன் இவனுடைய க்லேஶத்தைக்கண்டு நடுவே வந்து ஆவிர்பவித்து வ்ருகாஸுரனைப் பார்த்து, ‘இவன் ப்ராந்தன், பொய்யல்லது சொல்லான், உன் தலை தன்னைத் தொட்டுப்பார்க்க மாட்டாயோ?’ என்ன, அநந்தரம், அவன் தன்னுடைய தலையைத்தொட்டு ம்ருதனாய் விழுந்தானென்று ஶ்ரீபாரதத்திலே ‘வ்ருகாஸுராய கிரிஶோ வரம் தத்வாऽபஸங்கடம்’ என்று தொடங்கி இவன் ஆபந்நனானபடியையும், ஸர்வேஶ்வரன் இவன் ஆபத்தைப் போக்கின படியையும், இவனுடைய அஜ்ஞாநா ஶக்திகளையும் சொல்லிற்று.

அந்தகா ஸுரனை நிரஸிக்கைக்காக மாத்ருகணங்களை ஸ்ருஷ்டிக்க ’த்ரைலோக்யே பக்ஷ்யமாணே து ததா மாத்ருகணேந வை| ந்ருஸிம்ஹமூர்திம் தேவேஶம் ப்ரதத்யௌ பகவான் ஶிவ:||’ என்று அத்தாலே நோவுபட, தன்னாலே ஶமிபிக்க வொண்ணாமையாலே ஸர்வேஶ்வரனை த்யானம் பண்ண, அவன் ஶமிப்பித்தானென்று மாத்ஸ்ய புராணத்திலே இவனுடைய அஜ்ஞாநா ஶக்திகளைச் சொல்லிற்று.

     ஆக, இப்படி ஸ்ருஜ்யத்வ ஸம்ஹார்யத்வ கர்மவஶ்யங்களைச் சொல்லுகையாலே இவனுக்கு காரணத்வம் கூடாது.

ஆகையால் ஹிரண்ய கர்பாதிஶப்தங்கள் போலே ஶிவஶம்ப்வாதி ஶப்தங்களும் நாராயணபரங்கள். ஶிவனென்றது ஸர்வ ப்ரகார ஶுத்தனென்றபடி. ஶிவஶப்தம், ’ஶிவமஸ்து ஸர்வ ஜகதாம், ‘ஶிவாஸ்தே ஸந்து ப்ரஸ்தாந:, ஶிவம் கர்மாஸ்து’ என்று ஶுத்தி மாங்கல்யகுண விஶிஷ்ட வஸ்துக்களிலேயும் ப்ரயுக்தம்.  ஶம்புவென்றது ஶம்-ஸுகம் பாவயதீதி ஶம்பு: ‘, என்கிற வ்யுத்பத்தியாலே ஸர்வ ஸுகப்ரதனென்றபடி. ஶம்பு ஶப்தம் த்ருஹிணனையும் சொல்லும்.  “ஸர்வஶ் ஶர்வஶ் ஶிவஸ்தாணு:, ஸ்வயம்பூஶ் ஶம்புராதித்ய:’ என்று குணவிவக்ஷையாலே இவைதான் நாராயணன் பக்கலிலே ப்ரயுக்தங்கள். ‘யாநி நாமானி கௌணாநி’ என்கையாலே இவைதான் யௌகிகங்கள். நாராயணஶப்தம் ருத்ரனைச் சொல்லமாட்டாது. இது தன்னைப்பல உபநிஷத்திலும் பலகாலும் சொல்லிற்று. ஶிவஶப்தத்துக்கதில்லை.

     நநு ‘ப்ரஹ்ம விஷ்ணு ருர்தேந்த்ராஸ்தே ஸர்வே ஸம்ப்ரஸூயந்தே’ என்று இவர்‌களோடொக்க நாராயணனும் பிறந்தானென்றும், ஶ்ரீ ராமாயணத்திலும் லைங்காதிபுராணங்களிலும் ப்ருகு ஶாபத்தாலே இவனுக்கு து:காநுபவம் உண்டாய்த்தென்றும் சொல்லுகையாலே இவனுக்கு கர்மவஶ்யத்வமுண்டேயென்னில்;

அது சொல்லவொண்ணாது. ‘ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே’ என்கிறவிடத்தில் இவனை அவர்‌களைப் போலே பிறந்தானென்கிறதன்று; ‘ரக்ஷார்த்தம் ஸர்வபூதாநாம் விஷ்ணுத்வமுபஜக்மிவாந்’ என்கிறபடியே ராகவ யாதவ ஸஜாதீயனானாப்போலே ப்ரஹ்ம விஷ்ணு ஸஜாதீயனாய்க் கொண்டு விஷ்ணுவாய் வந்து அவதரித்தபடியைச் சொல்லுகிறது.

‘அஜாயமானோ பஹுதா விஜாயதே’ என்று ஶ்ருதி தானே கர்மமூலமான ஜந்மத்தை நிஷேதித்து ஐச்சிகமான ஜந்மத்தை விதித்தது. ‘ஏஷஸர்வபூதாந்தராத்மா அபஹத பாப்மா’,  ‘ஸ ஏஷஸத்வேப்ய: பாப்மப்ய: உதித:’, ‘பஶ்ய தேவஸ்ய மாஹாத்ம்யம்  மஹிமானம் ச நாரத, ஶுபாஶுபை: கர்மபிர்யோ நலிப்யேத கதாசந’,  ‘ஸஸர்வபூத ப்ரக்ருதிம் விகாரந்’,  ‘ஶுபாஶுபைர் விநிர்முக்தம் ஊர்மிஷட்காத்பரம் ப்ராபும்’,  ‘தம் வேத்யமமலம் விஷ்ணும் ஸதா த்யாயந்விமுச்யதே’ என்று இவனை அகர்மவஶ்யநாகச் சொல்லிற்று.

 ‘ஸர்வாவஸ்தாஸு வை விஷ்ணோர்ஜநநம் ஸ்வேச்சயைவது | லீலயாசைவ க்ருஷ்ணேந ஸ்வகுலஸ்யச ஸம்ஹ்ருதி: || ஐரகாஸ்த்ரச்சலேநைவ கமநம் ஸ்டேச்சயைவது | த்விஜஶாபச்சலேநைவமவதீர்ணோsபி லீலயா ||’  இத்யாதியாலே லைங்காதிகள் தன்னிலே பகவதவதாரம் ஐச்சிகமென்று சொல்லிற்று.

     ஶ்ரீ விஷ்ணு புராணத்திலே, ‘தேவ திர்யங் மநுஷ்யேஷு ஶரீர க்ரஹணாத்மிகா | லீலேயம் ஸர்வபூதேஷு தவசேஷ்டோபலக்ஷணா || நாகாரணாத்காரணாத்வா காரணாகாரணாந்ந ச || ஶரீரக்ரஹணம் வ்யாபிந் தர்மத்ராணாய கேவலம் ||  இச்சா க்ருஹீதாபி மதோருதேஹ:, ஸமஸ்தஶக்தி ரூபாணி தத்கரோதி ஜநேஶ்வர | தேவ திர்யங் மநுஷ்யாக்யா சேஷ்டாவந்தி ஸ்வலீலயா|| ஜகதாமுபகாராய ந ஸா கர்மநிமித்தஜா ||” என்று ஜகத் ரக்ஷணார்த்தமாக இச்சையாலே அவதரிக்கிறான், ருஷிஶாபத்தை ஸர்வமர்யாதா ஸ்தாபநார்த்தமாகத் தானும் அநுவர்தி க்கிறானத்தனையென்று  சொல்லிற்று.

 ‘அஜோऽபிஸந்நவ்யயாத்மா பூதாநாமீஶ்வரோऽபி ஸந் | ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்ம மாயயா || யதாயதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத| அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் || பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாயச துஷ்க்ருதாம் | தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||  ’ஜந்ம கர்மச மே திவ்யம்’ என்று தானுமருளிச்செய்தானிறே.

 ஆகையாலிவன் கர்ம வஶ்யனன்று.

     நநு – க்ருஷ்ணன் புத்ரார்த்தியாய் கைலாஸத்திலே சென்று ருத்ரனை யாசித்து அவன் பக்கலிலே புத்ரனை அபேக்ஷித்தான்; அவனும் புத்ரனைக் கொடுத்தான், என்று மஹாபாரதத்திலே சொல்லுகையாலே நாராயணனும் கர்மவஶ்யனாய் ருத்ரனுக்கு ஶரண்ய பூதனாக வேண்டாவோ வென்னில் ;

அங்கு சொல்லுகிற அர்சந-ப்ரார்தநாதிகள் கர்மவஶ்யத்வாதி ஸூசகங்களன்று வரப்ரதான க்ருதம் என்னுமத்தை, ‘அந்யம் தேவ வரம் தேஹி ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷு | மர்த்யோ பூத்வா பவாந் தேவ மாமாராதய கேஶவ || மாம் வஹஸ்வ ச தேவேஶ வரம் மத்தொ க்ருஹாணச | யேநாஹம் ஸர்வபூதாநாம் பூஜ்யாத்பூஜ்ய தமோபவம் ||” என்று ருத்ரன் அபேக்ஷிக்க, ‘தேவகார்யாவதாரேஷு மநுஷ்யத்வமுபேயிவாந் | த்வாமேவாராதயிஷ்யாமி மம த்வம் வரதோபவ ||’ என்று ஸர்வேஶ்வரனும் வரம் கொடுத்தானென்று ஶ்ரீ வராஹ புராணத்திலே சொல்லிற்று.

 புத்ரப்ரதாநாநந்தரம் ருத்ரன் தேவர்களையும் ருஷிகளையும் பார்த்து ‘க்ருஷ்ணன் ஜகந் மோஹநார்த்தமாக புத்ரார்த்தியாய் வந்தானித்தனை. இவனே ஸர்வ காரணபூதன், ஸர்வஸ்மாத்பரன்; மோக்ஷப்ரதனுமிவனே ; இவனையே உபாஸித்து முக்தராகப்பாருங்கோள்” என்று உபதேஶிக்கையாலும், இவன் பரத்வத்தை பஹுமுகமாக ஸ்தோத்ரம் பண்ணுகையாலும் , புத்ரனைப் பெறுகைக்குப் பிறர் காலிலே விழுகிற க்ருஷ்ணன் தானே வழியிலே கண்டா கர்ணனுக்கு மோக்ஷம் கொடுகையாலும் இவனுக்கு கர்மவஶ்யத்வாதி ஶங்கையில்லை.

     லைங்காதி புராணங்களில் க்ஷேத்ர ப்ரக்ருதி யோநி ஶக்தி மாயா ஶப்தங்களாலே ருத்ரனைப் பார்க்க நாராயணனுக்குச் சொன்ன குணபாவம், ருத்ராதுத்பத்தி மூர்த்தி த்ரயாதீத ஸதாஶிவ பாரம்யம் தொடக்கமானவை, ப்ரத்யக்ஷ ஶ்ருதி விரோதத்தாலும் ஸ்வக்ரந்தத்தில் பரஸ்பர விரோதத்தாலும், ”அக்நேஶ் ஶிவஸ்ய மாகாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்யதே” என்கிறபடியே இவைதான் தாமஸ புராண ஸித்தங்களாகையாலும் ப்ராந்தி பரிகல்பிதங்கள்.

     ப்ரஹ்மருத்ரர்களுடைய ஜந்மங்களும் ஸ்வேச்சையாலே ஆனாலோவென்னில் ; அது சொல்லவொண்ணாது ‘ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்த ஜகதந்தர் வ்யவஸ்திதா:|  ப்ராணிந: கர்மஜநித ஸம்ஸார வஶவர்திந: || ப்ரஹ்மாத்யாஸ்ஸகலா தேவா மநுஷ்யா: பஶவஸ்ததா | விஷ்ணோர்மாயா மஹாவர்தே மோஹாந்த தமஸாவ்ருதா: ||’ என்று இவர்‌களை கர்மபரதந்த்ரராகச் சொல்லுகையாலே.

     இப்படி நாராயணனே காரணபூதனென்கிற இவ்வர்த்தத்துக்கு, ந்யாயம் வேண்டாதபடி அநந்தஶாகா நிகில வேதநிகமனமாய், உபாஸந விதிவிதுரமாய், ஸமஸ்த பரவித்யோபாஸ்ய விஶேஷ நிர்ணாயகமாய், நிகில வேதாந்த நிர்வாஹகமாயிருந்துள்ள நாராயணாநுவாகம் ஸர்வ வேதாந்தங்களிலும் பரம்ப்ரஹ்ம, பரம்தத்வ பரமாத்ம, பரம்ஜ்யோதி: பராயண, புருஷாக்ஷாராச்யுத விஶ்வாத்ம ஶிவஶம்பு ப்ரமுக ஶப்தங்களாலே நிர்திஷ்டமான வஸ்துவை அவ்வோஶப்தங்களாலே அநுவதித்து, நாராயணனென்று விஶேஷித்து ‘ஸப்ரஹ்மாஸஶிவஸ்ஸேந்த்ர:’ என்று கார்யத்வேன ஸம்ப்ரதிபன்னனான இந்த்ரனோடே ப்ரஹ்ம ருத்ரர்களை ஸஹபடித்து, இவனுக்குக்கார்ய பூதநாகவும் சொல்லிற்று.

     ஆக, இப்படி ந்யாய ஸ்வபாவத்தாலும் ந்யாய நிரபேக்ஷமாக ஶ்ருதி தானே விஶேஷிக்கையாலும், ‘ஸநோஹரி:’ என்று ஹரிஶப்தத்தாலே உபஸம்ஹரிக்கையாலும், ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஸ்ருஜ்யத்வ ஸம்ஹார்யத்வ கர்ம வஶ்யத்வங்களைச் சொல்லுகையாலும் நாராயணனே காரண பூதன்.

                ‘யேந ஜாதாநி ஜீவந்தி’, ‘ஏஷ பூத பால:’, ‘பரித்ராணாய ஸாதூநாம்’,  ‘நஹி பாலந ஸாமர்த்யம்ருதே ஸர்வேஶ்வரம்ஹரிம்”, “ஸ ஏவபாதி’ என்கிறபடியே ஸ்தாபகநுமிவனே.

                “யத்ப்ரரந்த்யபிஸம்விஶந்தி’ ,  ‘யேநேதம் விஶ்வம் பரிபூதம் யதஸ்தி’, ‘யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரம் ச உபே பவத ஓதந: ,  ம்ருத்யுர்யஸ்யோபஸேசநம்’, ‘க்ருஸேத் ஸம்ஹார ஸமயே ஜகதௌதும்பராண்டவத் | லீலயா யஸ்து பகவாம்ஸ்தங்கச்ச ஶரணம் ஹரிம் ||’  ஸம்பக்ஷயித்வா என்கிறபடியே, ஸம்ஹர்தாவுமிவனே.

நநு, ருத்ரன் ஸம்ஹர்தாவென்னுமிடமுபயவாதி ஸித்தமாயிருக்க இவனே ஸம்ஹர்தா வென்னும்படியென்னென்னில் ; ‘கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரஸதே த்வகிலம்ஜகத் | தமந்த புருஷம் விஷ்ணும் ப்ரணதோऽஸ்மி ஜநார்தநம்||’  ‘ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாம் | ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவாநேக ஏவ ஜநார்தந:||’  ‘ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸச ஸர்ககர்தா ஸ ஏவ பாத்யத்திச பால்யதேச’ என்கிறபடியே ருத்ராந்தர்யாமியாய் நின்று இவனே ஸம்ஹரிக்கிறான். ஆகையாலே இவனே ஜகஜ்ஜந்மாதிகாரணபூதன்.

                யதோ வா இமானி பூதாநி ஜாயந்தே….தத்திஜிஜ்ஞாஸஸ்வ’ ’அஸத்வா இதமக்ர ஆஸீத்’ ’ரஸக்க் ஹ்யேவாயம்  லப்த்வாऽऽநம்தீ பவதி’,  ‘தமேவம் வித்யாநம்ருத இஹ பவதி’,  ’பித்யதே ஹ்ருதயக்ரம்தி:’ ‘த்வாமாராத்ய பரம் ப்ரஹ்ம யாதா முக்திம் முமுக்ஷவ:, வாஸுதேவ மநாராத்ய கோ மோக்ஷம்  ஸமவாப்நுயாத் ||”  “ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் |  விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் ||  ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்தக்லேஶ பாஜநம் | த்வாமேவ ஶரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: || ஸமஸ்தஜகதாம் மூலே யஸ்ய பக்தி: ஸ்திராத்வயி | தர்மார்த்த காமை: கிம் தஸ்ய முக்திஸ்தஸ்ய கரேஸ்திதா||’ இத்யாதியாலே காரண வஸ்துவே  உபாஸ்யம் மோக்ஷப்ரதம் முக்த ப்ராப்யமென்கையாலே, முமுக்ஷூபாஸ்யனும் மோக்ஷப்ரதனும் முக்த ப்ராப்யனுமிவனே.

பூர்வ பக்ஷம்

நநு ச, சாந்தோக்ய தஹரவித்யையிலேயும், தைத்திரீய தஹரவித்யையிலேயும், ப்ருஹதாரண்யத்திலும், அதர்வஶிகையிலும், ‘தஹரோऽஸ்மிந்நந்தர ஆகாஶ:….. தஸ்மிந்ய தந்தஸ்த தந்வேஷ்டவ்யம்’ என்றும், ‘ககநம் விஶோகஸ் தஸ்மிந் யதந்தஸ் ததுபாஸிதவ்யம்’  என்றும் ‘ய ஏஷோऽந்தர்  ஹ்ருதய ஆகாஶஸ் தஸ்மிம்ச்சேதே ஸர்வஸ்யவஶீ ஸர்வஸ்யேஶாந:’  என்றும், ‘ஶம்புராகாஶமத்யே த்யேய:’ என்றும்‌ ஆகாஶ ஶப்தத்தாலே நாராயணனைச் சொல்லி அதுக்கவ்வருகே ஶம்பு ஶிவ ஈஶாந மஹேஶ்வர ஶப்தங்களாலே ருத்ரனை உபாஸ்யனாகச் சொல்லிற்று ‘ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:, நாமானி க்ருத்வா’ என்று நாராயணனுக்கு அஸாதாரணமான நாமரூப கர்த்ருத்வத்தை,

 ‘ஆகாஶோ ஹவை நாமரூபயோர்நி ர்வஹிதா’  என்று சொல்லுகையாலே சாந்தோக்ய தஹர வித்யையில்’ ஆகாஶஶப்தம் நாராயண பரம், அத்தோடு ஏகார்த்தமாக வேண்டுகையாலே அல்லாதவிடத்திலும் ஆகாஶ ககந ஶப்தங்களும் நாராயண பரங்கள்.

      அதர்வஶிரஸ்ஸிலே நாலுகண்டத்தாலே ருத்ரனுடைய ஸர்வைஶ்வர்யத்தைச் சொல்லி ஐந்தாம் கண்டத்தாலே ‘தமாத்மஸ்தம் யேsநுபஶ்யந்தி தீராஸ் தேஷாம் ஶாந்தி ஶாஶ்வதீ, நேதரேஷாம்  என்று ஹ்ருதயாந்தர்வர்த்தியான ருத்ரனுடைய உபாஸநத்தையும், அதுக்குபலம் மோக்ஷமென்றுமிடத்தையும், ‘தஸ்ய பஸ்மம் க்ருஹீத்வா விம்ருஜ்யாங்காநி ஸம்ஸ்ப்ருஶேத், தஸ்மாத்வ்ரதமேதத் பாஶுபதம் பஶுபாஶ விமோக்ஷாய’ என்று பாஶுபத வ்ரதத்தைச் சொல்லுகையாலே, உபாஸ்யத்வ மோக்ஷ ப்ரதத்வங்கள் கண்டோக்தம்.

 ஶ்வேதாஶ்வதரோபநிஷத்திலே, ‘ததோ யதுத்தர தரம்’ என்று நாராயணனிற் காட்டில் பரத்வத்தையும், ‘ய ஏதத்விதுரம் ருதாஸ்தே பவந்தி’ என்று மோக்ஷ ப்ரதத்வத்தையும் சொல்லிற்று; தஸ்மாத் ஸர்வகதஶ்ஶிவ:’ என்கையாலே இதுதான் ருத்ரபரமென்றுமிடம் ஸித்தம்.

 ருத்ரஸ்தாரகம் ப்ரஹ்ம வ்யாசஷ்டே. தேநாஸாவம்ருதீபூத்வா மோக்ஷீ பவதி’ என்கிற ஜாபாலி ஶ்ருதியாலும் மோக்ஷப்ரதத்வம் கண்டோக்தம்.

 ஶ்ரீருத்ர (த்வரித) ஶதருத்ர ருத்ரபஞ்சர பஞ்சப்ரஹ்ம மந்த்ரங்களிலேயும் ருத்ரவைபவத்தைச் சொல்லிற்று. ஆகையாலே ருத்ரனே உபாஸ்யனும் மோக்ஷ ப்ரதனுமாகவேண்டாவோ வென்னில்;

ஸித்தாந்தம்

அது அநுபபந்நம்:– சாந்தோக்ய தஹரவித்யை தன்னிலே ‘கிம் தத்ர வித்யதே யதந்வேஷ்டவ்யம்’ என்று ஶ்ருதி தானே சோத்யம் பண்ணி,  ‘தஸ்மிந் காமாஸ்ஸமாஹிதா:- ஏஷ ஆத்மாऽபஹத பாப்மா’ இத்யாதியாலே தஹராகாஶத்திலே உபாஸ்யமாகச் சொல்லிற்று. அபஹத பாப்மத்வாதி குணங்களென்று ஸமாதாநம் பண்ணிற்று.

தைத்திரீய தஹரவித்யா வாக்யமித்தோடு ஏகார்த்தம். யம் என்று அகார வாச்யனைச் சொல்லுகையாலே மஹேஶ்வர ஶப்தம் அவயவ ஶக்த்யா ஸர்வ நியாந்தாவான நாராயணனைச் சொல்லிற்று. ‘அகாரோ விஷ்ணுவாசக:’ என்கையாலே அகாரவாச்யன் நாராயணன்.

ப்ருஹதாரண்யகத்திலும் அதர்வ ஶிகையிலும் சொன்ன ஆகாஶ ஶப்தம் பரமபுருஷ பரமன்று, ஸர்வ ப்ரஸித்தாகாஶபரம். தஹராகாஶாதிகளில்‌ போலே புருஷோத்தமனுக்கு அஸாதாரணமான தர்மமில்லாமையால். இவ்விடங்களில்‌ ஈஶாந ஶம்பு ஶிவ ஶப்தங்கள், வஶித்வ ஜகத்காரணத்வாதி பரமாத்மா  ஸாதாரணதர்ம ஸம்பந்தத்தாலே, ‘ஈஶாந: ப்ராணத:’ ‘ஸ்வயம்பூஶ்ஶம்பு:’  ‘ஸர்வஶ்ஶர்வஶ்ஶிவ:’ என்கிற ஶப்தங்களோடு பர்யாயங்கள்.

  ’காரணம் து த்யேய:’ என்கிற வாக்யம் காரணத்வ த்யேயத்வங்களிரண்டையும் விதிக்கிறதன்று ; த்யானத்தை விதிக்கிறது. இரண்டையும் விதிக்கும் போது வாக்யபேதம் ப்ரஸங்கிக்கும்.  அநுவதிக்கும்போது அந்யத: ப்ரஸித்தமானத்தை அநுவதிக்க வேண்டுகையாலே காரண வாக்யங்களில் காரண பூதனாகச் சொன்ன நாராயணனை அநுவதித்து தத்த்யானத்தை விதிக்கிறது.

     அதர்வ ஶிரஸ்ஸிலே ப்ரதம கண்டத்தில், ’அஹமேக: ப்ரதமமாஸம் வர்தாமிச பவிஷ்யாமிச நாந்ய: கஶ்சிந்மத்தோ வ்யதிரிக்த:’ இத்யாதியாலே ருத்ரன்‌ தனக்கு விஶ்வைஶ்வர்யத்தைச் சொல்லிற்று, “மத்தஸ் ஸர்வமஹம் ஸர்வம்’ ‘அஹம் மநுரபவம் ஸூர்யஶ்ச’  ‘ப்ராணோऽஸ்மி ப்ரஜ்ஞாத்மா தம்மாமாயுரம்ருத மித்யுபாஸ்வ’ என்று ப்ரஹ்லாத வாமதேவேந்த்ராதிகளைப்போலே பரமாத்ம பாவநா ப்ரகர்ஷ பலத்தாலே யென்னுமிடத்தை ‘ஸோऽந்தரா தந்தரம் ப்ராவிஶத்’ என்று ஶ்ருதி தானே சொல்லிற்று.

த்விதீய கண்டத்தில் சொன்ன தேவவாக்யம் ருத்ர வாக்யாநுவாத மாகையாலே தத்வாக்ய துல்யம்‌.

(த்ருதீய கண்டத்தில் பரமாத்மாவின் வைபவம் சொல்லுகிறது. சதுர்த பஞ்சம கண்டங்களில்) த்ருதீய சதுர்த கண்டங்களில் ஓம்காராதி ப்ரணவ நாமங்களையும் தந்நிர்வசநங்களையும் சொல்லுகிறது;  ஆகையாலே ருத்ரபரங்களன்று அந்த ஶப்தங்கள் ப்ரணவ வாச்ய நாராயண பரங்கள்.

 (ஷஷ்ட) பஞ்சமகண்டத்தில் சொன்ன ருத்ரோபாஸநம், மதுவித்யையில் சொன்ன ஆதித்யோபாஸநம்போலே பரமாத்மோபாஸநம். இதில் சொன்ன பஸ்ம ஸ்பர்ஶநம், ஸௌத்ராமணியில் சொன்ன ஸுரா க்ரஹணம் ஸர்வ க்ரது ஸாதாரண மல்லாதாப்போலே ஸர்வோபாஸந ஸாதாரணமன்று.

சாந்தோக்யாதிகளில் ’அஸதேவேதமக்ர ஆஸீத்’ இத்யாதிகளிலே பரமதோபந்யாஸம் பண்ணினாற் போலே  இவ்விடத்திலும் பரமதோபந்யாஸம் பண்ணுகிறது.

     லைங்கத்திலே நக்நத்வாதி தர்மாங்கமாகச் சொல்லுகையாலும், அதர்வ ஶிரஸில் சொன்ன மந்த்ரங்களை பஸ்மோத்தூளநத்திலே விநியோகிக்கையாலும், அதர்வ ஶிரஸ்ஸிலும் லைங்கத்திலும் சொன்ன பாஶுபத வ்ரதம் ஏகமாகையாலும் ; அர் (தை) தைர்தஶா (ர்த)ர்த ஸம்யுக்தம் கூடம் ப்ராஜ்ஞவிநிந்திதம் | வர்ணாஶ்ரம க்ருதைர் தர்மைர்விபரீதம் க்வசித்ஸமம் || என்று லைங்கம் தன்னிலே அவைதிகமாகச் சொல்லுகையாலும் ; அதர்வ ஶிரஸ்ஸில் அதிகார ஶ்ரவணதாலே விஶேஷேண ஸர்வாதிகாரத்வம் ப்ராப்தமாக, ஶ்ரீவராஹ புராணத்திலும், ஆதித்ய புராணத்திலும்  வேத பாஹ்யாதிகாரமென்று ஸங்கோசிக்கையாலும் ; பஸ்மச்சந்நோ பஸ்மஶய்யாஶயாந:: என்று. ஶாதாதப தர்மஶாஸ்த்ரத்தில் மஹாபாதக நிவர்த்தகமாகச் சொன்ன பஸ்மோத்தூளநம் ப்ராயஶ்சித்த விஷயமாகையாலும்,  லோகப்ரஸித்தியாலும் இது அவைதிகமென்று சிலர் சொன்னார்கள்.

     ஶ்வேதாஶ்வதரத்தில் நாராயணாத் பரத்வமும் மோக்ஷப்ரதத்வமும் சொல்லுகிறதென்கிற இதுவும் அநுபபந்நம். வேதாஹமேதம் என்று தொடங்கி, நாந்ய: பந்தா: என்று மஹாபுருஷ வேதநம் மோக்ஷஸாதநமென்றும், தததிரிக்தோபாயமில்லையென்றும், ‘யஸ்மாத்பரம் நாபரம்’ இத்யாதியாலே ப்ரஸ்துத புருஷனே பரன், தத்வ்யதிரிக்தரடைய அபரரென்று சொல்லிவைத்து, அநந்தரம் வேறேயொரு வஸ்துவை பரமென்றும்‌ மோக்ஷப்ரதமென்றும்  சொல்லுகையாகிறது ப்ரதிஜ்ஞாஹேது விரோதத்தாலே அஸங்கத மாகையால்,

‘மஹாந் ப்ரபுர் வை புருஷஸ் ஸத்த்வஸ்யைஷ ப்ரவர்தக:’  என்று ப்ரஸ்துதனான மஹாபுருஷனை ஸத்வப்ரவர்த்தகனாகச் சொல்லுகையாலும், ஸத்த்வப்ரவர்த்தகன் விஷ்ணு வென்னுமிடம் ’அத யோ ஹவை கலு ஏஷ வாऽஸ்ய ஸாத்த்விகாம்ஶ: ஸோऽஸௌ ப்ரஹ்மசாரிணோ யோऽயம் விஷ்ணு:’ என்கிற மைத்ராயண்யுபநிஷத் ஸித்தமாகையாலும் , ஶ்ரீ புருஷஸூக்த நாராயணாநுவாக ப்ரப்ருதிகளில் சொன்ன ஸர்வாநநத்வாதிகளை ‘ஸர்வாநந ஶிரோக்ரீவ:’ இத்யாதிகளிற் சொல்லுகையாலும், இப்ப்ரகரணம் நாராயணபரம். ததோ யதுத்தரதரம் என்கிற விடத்தில் தச்சப்தம் ஹேதுபரம் ; அன்றிக்கே இதம்  ஸர்வமென்று கீழ்ச்சொன்ன ப்ரபஞ்சத்தை பராமர்ஶிக்கிற தாகவுமாம்.  ஶிவஶப்தம் அவயவ ஶக்த்யா நாராயணபரம்.

 ‘ருத்ரஸ்தாரகம்’ இத்யாதிகளில் சொல்லுகிறது மோக்ஷ ப்ரதத்வத்தையன்று, ஜ்ஞாநோபதேஷ்ட்ருத்வத்தை.  ‘ஸநோ தேவஶ்ஶுபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து’  என்கிற விடத்தில் சொல்லுகிறதும், ஜ்ஞாந ப்ரதத்வத்தை ‘உபாயோऽஸ்மி ஹரேஸ்ம்ருதௌ’  ‘ஈஶ்வராத் ஜ்ஞாந மந்விச்சேத்’ இத்யாதிகளாலே இவனுடைய ஜ்ஞாநோபதேஷ்ட்ருத்வமும் நாராயணனுடைய மோக்ஷப்ரதத்வமும் ஸித்தம் ‘ஶங்கரஸ்யது யோ பக்த:  ஸப்த ஜநாந்தராந்நர: | தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணுபக்த: ப்ரஜாயதே ||’ என்கிறபடியே ருத்ரன் பகவத்பக்தியை யுண்டாக்குமித்தனை. ஆகையாலேயிறே, ருத்ர பக்தனான பாணன் ‘நிர்வைரிதா ச விபுதைர் விஷ்ணு பக்திரநுத்தமா | வாஸுதேவாத்து மரணம் கல்பாந்தே குபிதாத் புந: ||’ என்று ருத்ரன் பக்கலிலே பகவத்பக்தியை அபேக்ஷித்தது.

ஶ்ரீ ருத்ராதிகளும் பரத்வ சின்னமான ஜகத்காரணத்வ முமுக்ஷூபாஸ்யத்வ  மோக்ஷப்ரதத்வங்களாகையாலும் , ப்ரபல ஶ்ருத்யந்தர விரோதத்தாலும் , அக்நி சயநாதிகளிலே விநியுக்தங்களாகையாலும், ருத்ர பரத்வத்தைச் சொல்லுகிறவனன்று. ஆகையாலே ருத்ரனுக்கு உபாஸ்யத்வ மோக்ஷப்ரதத்வங்கள் கூடாது.

     கிஞ்ச ‘யே ஸ்வதர்மஸ்திதா வர்ணா விப்ராத்யா: குருநந்தந। விகர்மஸு நிவர்தந்தே ப்ரீதிமாம் ஸ்தேஷு கேஶவ:||”  “ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தாத்யா:’ ‘தஸ்மாத்ப்ரியத்வம் க்ருஷ்ணஸ்ய…. யேஷாம் அதுஷ்டி: பாரக்யே.. வேதா: ப்ரமாணம் ஸ்ம்ருதய:’ ‘பர த்ரவ்யேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வ பும்ஸகா: | பரவாதேஷு யே மூகாஸ்தே ஸர்வே தயிதா மம ||’ , ‘ஶ்ருதிஸ்ம்ருத்யுதிதம் கர்மம்’  ‘ஶ்ருதி ஸ்ம்ருதீமமைவாஜ்ஞா’, ‘த்விவிதோ பூதஸர்கோऽயம் தேவ ஆஸுர ஏவ ச | விஷ்ணுபக்தி பரோ தேவோ விபரீத ஸ்ததாऽऽஸுர:’ என்கிற ஶ்ரீ விஷ்ணுதர்ம வசநங்களாலும், “தேவாநாம் பரமோ தர்மஸ்ஸதா யஜ்ஞாதிகா: க்ரியா: | ஸ்வாத்யாய தத்த்வ வேதித்வம் விஷ்ணுபூஜா இதி ஶ்ருதி: || தைத்யாநாம் பஹுமானித்வம் மாத்ஸர்யம் ஸத்ஸ்வஸத்க்ரியா | நிந்தநம் வேதஶாஸ்த்ராணாம் ஹரபக்தி ருதாஹ்ருதா||’ என்கிற ஶ்ரீவாமந புராண வசநத்தாலும், “ஸுரபதிரஸுரைஸ்ஸதாऽபியுக்த: பஶுபதிரப்யவிநீத ப்ருத்யவர்க: | ஸுரகுரு ரத்ருட ப்ரஸாதகர்தா ஹரிசரணௌ ஸ்மரதாபவர்கஹேது: ||’ என்கிற ஶ்ரீ நாரஸிம்ஹ புராண வசனத்தாலும், ‘விஷ்ணு பக்தி ஸமாயுக்தாந் ஶ்ரௌத ஸ்மார்த ப்ரவர்தகாந் | ப்ரியோ பவதி யோ த்ருஷ்ட்வா வைஷ்ணவோsஸௌ ப்ரகீர்தித: ||” என்கிற லைங்க வசனத்தாலும், ‘யேச வேதவிதோ விப்ரா: மஹாத்மானஸ்து மாம் பார்த’ என்கிற மஹாபாரத வசனத்தாலும், பகவத் பக்தர்கள் ஸத்வ ப்ரக்ருதிகளாய் வைதிகராயிருப்பார்கள் என்னுமிடம் ஸித்தம்.

 ருத்ரபக்தர்கள் தம: ப்ரக்ருதிகளாய் அவைதிகராயிருப்பார்கள் என்னுமிடமும் ஸித்தம். வாஸுதேவ பராயத்ர வேதமார்காநுஸாரிண: | ருத்ர பக்தாஸ்த்ரயீபாஹ்யா பஸ்மோத்தூளநவிக்ரஹா: || என்கிற லைங்கவசநத்தாலும் பஸ்மோத்தூளநம் ருத்ர பக்தர்களுக்கு லக்ஷணமென்றுமிடம் ஸித்தமாய் நின்றது. பஸ்மோத்தூளநம் தான் ‘தஸ்மாத் ஸர்வப்ரயத்நேந பஸ்மோத்தூளந விக்ரஹ: | ஜடிநோ முண்டிநஶ்சைவ நக்நா நாநா ப்ரகாரிண: || ஜடிலா முண்டிதா வாபி யென்று லைங்கத்திலும் மஹாபாரதத்திலும் நக்நத்வாதி தர்ம ஸஹசரிதமாகச் சொல்லுகையாலும் – ‘ந பஸ்ம கேஶதுஷகரீஷ கபாலாமேத்யாந்யதிதிஷ்டேத் ‘ என்று நிஷித்த த்ரவ்யங்களோடே சேரவைக்கையாலும் , பஸ்மம் தான் அஶுத்த த்ரவ்யமாகையாலும் , நக்நம் வாऽநுபவீதம் –வா  விப்ர த்ருஷ்ட்வா ப்ரமாதத: | ம்ருத்பித்வாந் தஶபிஸ்ஸ்நாத்வா வாஸோபிஸ்ஸஹ ஶுத்யதி|| தஸ்மாதேதாந்நரோ நக்நாம் ஸ்த்ரயீ ஸந்த்யாக தூஷிதாந் | ஸர்வதா வர்ஜயேத்ப்ராஜ்ஞ ஆலாப ஸ்பர்ஶநாதிஷு|| என்று நக்நத்வாதிகள் வேத பாஹ்யங்களாகையாலும், த்ரிபுண்ட்ர தாரிணோ நித்யம் பஸ்மோத்தூளந தத்பரா: | பவிஷ்ய த்வம் த்ரயீபாஹ்யாமித்யா ஜ்ஞாந ப்ரலாபிந: || ருஷீணாம் மாயயா ஸர்வமிதி ஸம்சிந்த்ய தத்ரவை | ஶஶாப தாஞ்ஜடாபஸ்ம மித்யா வ்ரததராம் ஸ்ததா || பவிஷ்யத த்ரயீபாஹ்யா வேதகர்ம பஹிஷ்க்ருதா: || என்கிற ஆதித்யபுராண ஶ்ரீவராஹ புராண வசநங்களாலும் வேதபாஹ்ய லக்ஷணமென்கிறன.

     இப்படி வேதபாஹ்ய லக்ஷணரான தாமஸ புருஷர்களாலே ஸேவ்யனாகையாலும் , ஜ்ஞாநாதி கார்யங்களாலும், தேவதாத்வத்தாலும் ருத்ரனுக்கு ஸக்ருஸ்தத்வ குணமுண்டேயாகிலும், ‘ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா’ என்று குணத்ரய வஶ்யனாகையாலும், தமோகுணமுண்டாகையாலும், அது தான் ப்ரஹ்மாதிகளுக்குமுண்டேயாகிலும் அவர்களிலுமிவனுக்கு அதிஶயித்திருக்கையாலே அபேக்ஷிதமான தாமஸத்வ வ்யபதேஶம் யுக்தமாகையாலும் , தானும் தாமஸ புருஷனாகையாலும், ஸாபேக்ஷத்வ ஸூசகங்களான ஜடாசர்ம வஸநாதி ஸாதக தர்மங்களோடே (சின்னங்களோடே) கூடியிருக்கையாலும் ருத்ரனுக்கு உபாஸ்யத்வாதிகள் கூடாது.

     ஶ்ரீ புருஷஸூக்த ப்ரக்ரியையாலும் நாராயணனுடைய காரணத்வ முமுக்ஷூபாஸ்யத்வ மோக்ஷ ப்ரதத்வாதிகள் ஸித்தங்கள்.

 நநு, இவனுக்கு அஸாதாரணங்களான வாஹநாயுத நாம ஸ்ம்ருதிகளிலே அந்யதம ஸங்கீர்தந மில்லாமையாலும், ஈஶாந பதம் கிடக்கையாலும், நாராயண பரமன்றே என்னில்.

 அது அநுபபந்நம், ஸஹஸ்ர ஶீர்‌ஷத்வாதிகளைச் சொல்லுகையாலும், அவைதான் இவனுக்கு அஸாதாரண மென்னுமிடம் நாராயணாநுவாகாதி ஸித்தங்களாகையாலும்; லக்ஷ்மீபதித்வ லிங்கத்தாலும், நாராயண ப்ரதிபாதக ஸுபாலோபநிஷத்திலே, புருஷ ஏவேதமென்று புருஷஸூக்த வாக்யத்தாலே நிகமிக்கையாலும், அதர்வணத்திலே, வைஷ்ணவ்யாம் புருஷ ஸூக்தம் என்று வைஷ்ணவ மஹாஶாந்தி மந்த்ரமாக விநியோகிக்கையாலும், சாந்தோக்யத்திலே ஏஷா வை வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா என்கையாலும்; பகவத் ஸமாராதந ரூபகர்மாதிகளிலே போதாயந ப்ரப்ருதி பரமர்ஷிகளாலே விநியுக்தங்களாகையாலும், புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம் ஸ்வர்க்யம் தந்யம் யஶஸ்கரம் என்கிற ஶௌநகவாக்யத்தாலும், பலவிடங்களிலும் புருஷ ஶப்தப்ரயோகம் பண்ணுகையாலும், ‘புருஷம் நாராயணம்’ என்கிற ஸமாக்யையாலும் நாராயணபரமென்னுமிடம் ஸித்தம்.

இவ்விடத்தில் ஈஶாநஶப்தம் நாராயண ஶப்தம்போலே  ஸம்ஜ்ஞையல்ல; அம்ருதத்வஸ்யேஶாந: என்கையாலே.  புருஷஶப்தமிவன் பக்கலிலே ரூடம். சேதந ஸாமான்ய வாசியாகிர அவ்வளவால் ப்ரயுக்தமாகிறதன்று. ஸாலபாதபாதி ஶப்தங்கள் போலே ஸாமான்ய விஶேஷவாசியாயிருக்கும். முண்டகோபநிஷத்து தொடக்கமான பல உபநிஷத்துக்களாலும்; “புருஷ: புண்டரீகாப:’ த்விர் த்வாதஶேப்யஸ் தத்வேப்ய: க்யாதோऽயம் பஞ்சவிம்ஶக: | புருஷோ வாஸுதேவஶ்ச பரமாத்மேதி சோச்யதே||  ‘வித்யாத்து புருஷம்பரம்  இத்யாத் யுபப்ரும்ஹணங்களாலும், அதாதோ மஹா புருஷஸ்யா ஹரஹ: பரிசர்யாவிதிம் வ்யாக்யாஸ்யாம:’ என்கிற போதாயந வசநத்தாலும், ‘பரம: புமானிவ பதி: பத்ய: ’  என்கிற அர்வாசீந ப்ரஸித்தியாலும் புருஷஶப்தம் நாராயண பரமென்றுமிடம் ஸித்தம்.

                 “தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹி’ ‘புருஷோவை ருத்ர:’ இத்யாதி ப்ரதேஶங்களிலே ருத்ரனையும் புருஷ ஶப்தத்தாலே சொல்லா நின்றதேயென்னில். அவ்வோவிடங்களில் நாமதயா ப்ரயுக்த மாகிறதன்று ; நமஸ்கார்யத்வ ஹேதுவான பரமாத்ம ப்ரகாரத்வ மடியாகவந்த த்ரிபுர தஹந பராக்ரமாதி குணயோகம் தொடக்கமானவத்தாலே ப்ரயுக்த மாகிறதித்தனை.

     ஆக, இப்படி பரத்வ சின்னங்களான ஜகத் காரணத்வ முமுக்ஷூபாஸ்யத்வ மோக்ஷ ப்ரதத்வங்களுள்ளது இவனுக்கேயாகையாலும், ‘ஸர்வே வேதாயத்பதமாமநந்தி’ ’ஸர்வேவேதா யத்ரைகம் பவந்தி’  “வசஸாம் வாச்யமுத்தமம்’ ‘யஶ்சந்தஸா ம்ருஷபோ விஶ்வரூப:’ என்று வேதம் தானே தனக்கு ப்ரதிபாத்யன் நாராயணனென்கையாலும், ’வேதைஶ்ச ஸர்வைரஹமேவவேத்ய:” என்று நானே வேதப்ரதிபாத்யனென்று அவன் தானே சொல்லுகையாலும், ‘நாராயணபரா வேதா:”,  வேதே ராமாயணே புண்யே பாரதே பரதர்ஷப | ஆதௌ மத்யேததாऽந்தேச விஷ்ணுஸ்ஸர்வத்ர கீயதே|| ஏநமேகே வதந்த்யக்நிம் மருதோऽந்யே ப்ரஜாபதிம் | இந்த்ரமேகே பரே ப்ராணமபரே ப்ரஹ்மஶாஶ்வதம் ||  என்றிங்ஙனே ருஷிகளும், சொல்லுகையாலும் “ஆலோட்ய ஸர்வ ஶாஸ்த்ராணி விசார்யச புந: புந: | இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணஸ்ததா||” தத்த்வம் ஜிஜ்ஞாஸமானாநாம் ஹேதுபிஸ்ஸர்வதோ முகை: | தத்த்வ மேகோமஹாயோகீ ஹரிர்நாராயண: பர: || ஶ்ரூயதாம் து நரவ்யாக்ர வேதவேதாந்தநிஶ்சயம் | யஜ்ஞேஶோ யஜ்ஞபுருஷ: புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞித: | யஸ்ஸ விஷ்ணு: பரம் ப்ரஹ்ம யதோ நாவர்ததே புந: | விஷ்ணுரேவ பரம்ப்ரஹ்ம த்ரிவேதமிஹ பட்யதே | வேத ஸித்தாந்த மார்கேஷு தந்நஜாநந்தி மோஹிதா: || யதே தத்பரமம் ப்ரஹ்ம வேத ஶாஸ்த்ரேஷு பட்யதே| ஸ தேவ: புண்டரீகாக்ஷ ஸ்ஸ்வயம் நாராயண: பர: || பகவாந் வாஸுதேவஶ்ச கீர்த்யதேsத்ர ஸநாதந: | ஸஹிஸத்யம்ருதம் சைவ பவித்ரம் புண்யமேவச || என்று ப்ரமாண தர்க்கங்களையிட்டு ஆராய்ந்தவர்கள் இவனையே , பரதத்வமென்று நிர்வஹிக்கையாலும்,   அவற்றை யொழியவே ப்ரஹ்ம விஷ்ணு ஶிவர்கள் மூவரிலும் அதிகராரோ என்று ஆராய்ந்துவாவென்று  ப்ருகுவைப் போகவிட்டுப் பரீக்ஷித்து, “தந்நிஶம்யாத முநயோ விஸ்மிதா முக்த ஸம்ஶயா: | பூயாம்ஸம் ஶ்ரத்த துர்விஷ்ணும் யதஶ்ஶாந்திர்யதோऽபயம் ||”  என்று ஶாந்த்யாதி குண யோகத்தாலே இவனே அதிகனென்று நிர்ணயிக்கையாலும், ஜ்ரும்பிதந்தத் தநுர்த்ருஷ்ட்வா ஶைவம் விஷ்ணுபராக்ரமை:| அதிகம் மேநிரே விஷ்ணும் தேவாஸ்ஸர்ஷிகணாஸ்ததா || என்று தேவர்கள் பரீக்ஷித்து-நிர்ணயித்தபடியே பார்கவன் சொல்லுகையாலும், அவன் தான் ருத்ரன் பக்கலிலே செல்ல, அவன் த்யாந பரனாயிருக்க, ‘நீர் ஆரை த்யானம் பண்ணுகிறது?” என்று அவனைக் கேட்க, “யோகீஶ்வரம் ஜகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் ஸநாதநம்| பத்மநாப: விஶாலாக்ஷம் சிந்தயாமி ஜகத்பதிம் ௥“  என்று ஜகத்பதியான ஶ்ரீமஹாவிஷ்ணுவை த்யானம் பண்ணுகிறேனென்று சொல்லுகையாலும், ‘நஹ்யேஸ்மாதிதி நேத்யத்வரமஸ்தி’  ‘நதஸ்யேதே கஶ்சந’  ‘ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம்’ ‘நாராயணாத்பரோதேவோ நபூதோ நபவிஷ்யதி’  ‘ஏதத்ரஹஸ்யம் வேதாநாம் புராணாநாம்ச ஸம்மதம் ஸத்தம’  “நப்ரமாதுர் மஹாயோகீ ஶக்யோ பாரத கேஶவ: | பரமேப்ய: பரம் தஸ்மாத்விஶ்வரூபாந்ந வித்யதே ||’ என்று இவனிற் காட்டில் பரராயிருப்பரில்லை யென்கையாலும் இவனே ஸர்வஸ்மாத்பரன்.

ப்ரதம ப்ரகரணம் ஸம்பூர்ணம்

த்விதீயம் ஜீவஸ்வரூப நிர்ணய ப்ரகரணம்

     இவனுக்கு ஸர்வாத்மாக்களும் ஸர்வப்ரகார பரதந்த்ரர் . அவர்‌கள் தாம் தேஹாதி விலக்ஷண‌ர்.  நநு, “ஸ்தூலோsஹம் க்ருஶோsஹம்” என்று தேஹத்திலே அஹம்புத்தி வ்யவஹாரம் காண்கையாலே அஹமர்த பூதனான ஆத்மா தேஹம் தானாமித்தனை இந்த அஹம்புத்தி வ்யவஹாரங்களுக்கு, தேஹாதிரிக்தன் விஷயமென்ற வொண்ணாது; அவனுக்கு ஸ்தௌல்யாதிகள் கூடாமையாலே கடபடாதிகளைப்போலே பார்த்திவமான ஶரீரதுக்கு சைதந்யம் கூடாதே என்னில் ; மதஶக்தி போலே பரிணாம விஶேஷத்தாலே கூடுமிறே.

     நநு, பால யுவ  வ்ருத்த ஶரீரங்கள் அந்யோந்யம் பின்னங்களென்று சொல்லவேணும் : ஏகமாகில் பரிணாமபேதங்கள்  கூடாது. பேதத்தை யிசையில் ; பால்யத்தில் அநுபவித்தவத்தை யௌவநத்திலே ஸ்மரிக்கக்கூடாது,; கூடில்,  ஒருவன் அநுபவித்தத்தை மற்றையவன் ஸ்மரிக்க வேணும், அது காண்கிறிலோம், இங்கு ஸ்ம்ருதிகாணா நின்றோம். ஆகையாலே ஆத்மா தேஹாதிரிக்தனாக வேணுமென்னில் ; அதுவும் அநுபபந்நம் ; ஶரீரபேதம் இல்லாமையாலே. ஒருவன் தனக்கே காலபேதத்தாலே பரிணாமபேதம் கூடும், ’பால்யத்தில் து:கித்த நானே யௌவநத்தில் ஸுகியாநின்றேன்.  பாலனான நானே யுவாவானேன்’ என்கிற ப்ரத்யபிஜ்ஞைகளாலே யுவஶரீரம் பழைய ஶரீரம் என்னுமிடம் ஸித்தம்;  அல்லாதபோது, பால்யத்தில் அநுபவித்ததை யௌவநத்தில் ஸ்மரிக்கக்கூடாது. ஸ்ருதி ப்ரத்யபிஜ்ஞைகள் அஹமர்தத்துக்கன்றோ, தேஹதுக்கன்றே யென்ன வொண்ணாது ; தேஹவ்யதிரிக்த மாயிருப்பதொரு அஹமர்தம் காணாமையாலே. கிஞ்ச, தேஹத்திலே நெடும்காலம் செல்லச் செய்தேயும் “ஸ ஏவாய” மென்று பரனுக்குப் பிறக்கும் ப்ரத்யபிஜ்ஞையும் கூடாது. ப்ரத்யபிஜ்ஞைகளுக்கு விஷயம் தேஹாதிரிக்தனென்ன வொண்ணாது; அவன் சாக்ஷுஷனல்லாமையாலே. ப்ரத்யபிஜ்ஞை ப்ராந்தியென்னவொண்ணாது ; பாதகமில்லாமையாலும் விபக்ஷே ஸ்மரணாநுபபத்தியாகிற பாதகமுண்டாகையாலும்;  இப்படி தேஹத்தில் அஹம்புத்தி கொள்ளாத போது விதிநிஷேதமும் தேஹாத்மப்ரமமும் அதனுடைய நிவ்ருத்த்யர்த்தமான ஶாஸ்த்ர ஶ்ரவணாதிகளும் கூடாது. ஆகையாலே தேஹமே ஆத்மாவாமித்தனையென்னில்;

தத்கண்டனம்

     அது அநுபபந்நம், தேஹம் அநேகாவயவ ஸங்காதாத்மகம் என்னுமிடம் ஸித்தம். அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதந்யமுண்டாகில் அநேக சேதநோபலப்தி ப்ரஸங்கிக்கும். அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும், அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் கூடாது. ஒரு அவயவத்துக்கே சைதந்யம் கொள்ளில், அது விச்சின்னமானால் அவயாந்தரம் அது அநுபவித்தத்தை அவயவாந்தரத்தாலே ஸ்மரிக்கக்கூடாது. பின்பு அஹம்புத்தி வ்யவஹாரங்களும் மமதாபுத்தி வ்யவஹாரங்களும் தவிர வேணும். ஸர்வ ஶரீர வ்யாபியான ஸுகது:காநுபவமும் கூடாது. அவயவ ஸங்காதாத்மகமன்று ஶரீரம். அவயவி அதிலே சைதந்யம் என்னவுமொண்ணாது; உபலம்பாநுபபத்திகளில்லாமையாலே அவயவி ஸ்வீகாரமநுபபந்நமாகையாலே. கிஞ்ச  பாலதேஹோSஹம் மந்வஜ்ஞாந:, யுவதேஹோsஹம் பஹுஜ்ஞாந:, மம ஶரீரம் என்று ஶரீராஹமர்த்தங்களில் பிறக்கிற பேத ப்ரதிபத்தியும் பேத வ்யவஹாரமும்  கூடாது. “மமாயமாத்மா’ என்கிற விடத்தில் போலே அமுக்யமென்னவொண்ணாது; முக்யே பாதகமில்லாமையாலே. அன்றிக்கே, அஹம்புத்திக்கு ஶரீரமே விஷயமென்று கொண்டாலும்  ஶ்ருதியாலும்  ஶ்ருத்யர்தாபத்திகளாலும் தேஹாதிரிக்தனாய் தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மாஸித்தன்.

     பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாகமாட்பாது. ஒருவனே ஸர்வேந்த்ரிய விஷயங்களையுமறிகையாலே, இப்படி கொள்ளாதபோது யாவனொருவன் நான் இவ்வர்தத்தைக் கண்டேன், அந்த நானே ஸ்பர்ஶியா நின்றேன் என்கிற ப்ரதிஸந்தாநமும் கூடாது. சக்ஷுஸ்ஸே ஆத்மாவாகில் அந்யன் ரூபத்தை ஸ்மரியா தொழிய வேணும் ஶ்ரோத்ரமே ஆத்மாவாகில் பதிரன் ஶப்தத்தை ஸ்மரியா தொழியவேணும். இப்படி மற்ற இந்த்ரியங்களிலும்  கண்டு கொள்வது.

ஶங்கரமதகண்டனம்

     அந்த:கரணமும் ஆத்மாவாக மாட்டாது. (ஸ்ம)கர்தாவினுடைய ஸ்மரணாதிகார்யங்களுக்குக் கரணமாக கல்பிதங்களாகையாலே. இது தானே ஸ்மரிக்கிறதென்ற வொண்ணாது ; ஸ்மரணத்துக்கு கரண மில்லாமையாலே. கரணமும் தானேயென்ன வொண்ணாது; விருத்தமாகையாலே. வேறேயொன்று கரணமென்றில், அது பாஹ்ய கரணமாகில். அதில்லாதவனுக்கு ஸ்ம்ருதிகூடாது. ஆந்தரகரணமாகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேரிட்டதாய் விடும். ஆந்தரகரணம் அநபேக்ஷிதமாகில் இந்த்ரியார்த்த ஸம்பந்தமுண்டான போதெல்லாம் ஜ்ஞாநம் பிறக்கவேணும் ; ஆகையால் மநஸ்ஸும் ஆத்மாவாக மாட்டாது.

     ப்ராணன்களும் அத்மாவாக மாட்டாது ; ஸங்காத ரூபங்களாகையாலே. தேஹமாத்மாவென்கிற பக்ஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம்.

பௌத்தமதகண்டனம்

     ஜ்ஞாநமும் ஆத்மாவாகமாட்டாது ; “எனக்கு ஜ்ஞாநம் பிறந்தது நஶித்தது’ என்று க்ஷணிகமுமாய் ஆத்மதர்மமுமாய்த் தோற்றுகையாலே.

ஸ்திரனாயிருப்பானொரு ஆத்மாவுண்டென்னுமிடம்  ‘நேற்றுக்கண்ட நானே இன்றும் காணாநின்றேன்’ என்கிற ப்ரத்யபிஜ்ஞையாலே ஸித்தம்.

இதுவும் ஶங்கரமத கண்டனம்

நிர்விஷயையுமாய் நிராஶ்ரயையுமான ஸம்வித்து ஆத்மாவென்னவொண்ணாது, அப்படியிருப்பதொரு ஸம்வித்து காணாமையாலே. நநு, ஜ்ஞாநம் ஆத்ம தர்மமாயன்று தோற்றுகிறது, அந்த:கரண ரூபமாக அஹங்காரத்துக்கு தர்மமாயன்றோ, தோற்றுகிறது, என்னவொண்ணாது ; அசேதநமுமாய்  ப்ரக்ருதி பரிணாமமுமாய் த்ருஶ்யமுமாய் பராகர்தமுமாய் பரார்தமுமாய் யிருக்கையாலே தேஹாதிகளைப்போலே அஹங்காரமும் ஜ்ஞாதாவாகக் கூடாமையாலே. நநு, சைதந்ய ஸந்நிதி யடியாக சாயாபத்தியாலே ஜ்ஞாத்ருத்வம் கூடுமேயென்னில், அது கூடாது.  சைதந்யதுக்கு ஜ்ஞாத்ருத்வம் கூடாமையாலே.  நநு ச, தர்பண ஜல கண்டங்கள் . முக சந்த்ரகோத்வங்களுக்கு  வ்யஞ்ஜகமாகிறாப்போலே அஹங்காரமும் சைதந்யத்துக்கு  வ்யம்ஜகமாகையாலே தன்னிஷ்டமாய் தோற்றுகிறதென்னில்,  ஸ்வயம் ப்ரகாஶனான ஆத்மாவுக்கு ஜடமான அஹங்காரம் வ்யஞ்ஜகமாகை என்கிறது, ஶாந்தாங்காரம் ஆதித்யனை ப்ரகாஶிப்பிக்கு மென்றாப்போலே இருப்பதொன்று. தர்பணமும் ஜலமும் முகத்துக்கும் சந்த்ரனுக்கும் வ்யஞ்ஜகமன்று : சாக்ஷுஷ தேஜ: ப்ரதிபலநத்துக்கு ஹேதுவித்தனை. அபிவ்யஞ்ஜகம் அலோஹாதிகள் போலே. ஜாதி வ்யக்திநிஷ்டையாய்த் தோற்றுகிறது வ்யக்திக்காகாரமாகையாலே. கிஞ்ச, சைதந்யத்தாலே வ்யங்க்யமான  அஹங்காரம் அதுக்கு வ்யஞ்ஜகமாக மாட்டாது. ஆதித்ய கிரணத்தாலே அபிவ்யங்க்யமான  கரதலம் அதுக்கு வ்யஞ்ஜகமாகக் காணாநின்றோமே யென்னில்; கரதலம் வ்யஞ்ஜகமல்ல; கிரண பாஹுள்யத்துக்கு ஹேதுவித்தனை.

     ஸுஷுப்தியிலும் முக்திதஶையிலும் அஹமர்த்த மில்லாமையாலே அதுவும் ஆத்மா வாகமாட்டா தென்னில்; அவற்றிலுமுண்டு.  ஸுஷுப்தி இல்லையாகில் உறங்கி யெழுந்திருந்தவன், ‘முன்பு நான் இத்தைச்செய்தேன், இத்தைக்கண்டேன் , இத்தையநுபவித்தேன்’ என்று பராமர்ஶிக்கக்கூடாது. முக்தி தஶையில் ஆத்மாவில்லையாகில் ஆத்மநாஶம் மோக்ஷமாய் விடும் ஸ்வ நாஶத்தையுமிசைந்து மோக்ஷோபாயத்திலிழிவாரில்லாமையாலே. மோக்ஷஶாஸ்த்ரமப்ரமாணமாம். ‘மத்தஸ்ஸர்வமஹம் ஸர்வம்’;  ‘அஹமேக: ப்ரதமமாஸம்’  ‘அஹம் மநுரபவம் ஸூர்யஶ்ச’ என்று தத்த்வ ஜ்ஞாநம் பிறந்த முமுக்ஷுக்களும், அஹமந்நம் என்று முக்தனும்’ ‘யஸ்மாத்க்ஷரமதீதோsஹம்” ; “அஹமாத்மா குடாகேஶ:, ந த்வேவாஹம்’, ‘அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத:’ என்று பரப்ரஹ்மமும் அஹமென்று வ்யபதேஶிக்கக்கூடாது.

     அஹமர்த்தமாத்மாவாகில், மஹாபூதாந்யஹம்கார: என்று க்ஷேத்ராந்தர்பாவம் கூடும் படியென்னென்னில்; அஹங்காரத்தையாயிற்று அங்குச் சொல்லுகிறது, அஹமர்த்தத்தையென்று அஹங்காரத்தை ஶாஸ்த்ரங்களிலே ஹேயமாகச் சொல்லா நின்றதேயென்னில், அங்குச் சொல்லுகிறது கர்வ ரூபமான அஹங்காரத்தையாகையாலே அஹமர்த்தம் அஹங்காரமல்ல.  ஆத்மாவேயாகையால்.

ஆத்மநித்யத்வஸ்மர்தநம்

     ஆத்மாதேஹாதி விலக்ஷணன். அவைபோலே  அநித்யனல்லன் ; `ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்; ‘நித்யோ நித்யாநாம் சேதநஶ்சேதநாநாம் ஏகொ பஹூநாம் யோ விததாதி காமான்”  ஜ்ஞாஜ்ஞௌ த்வாவஜாவீஶநீஶௌ’ ” அஜோ நித்யஶாஶ்வதோSயம் புராண:’ என்று உத்பத்திவிநாஶங்களில்லை. என்கையாலே. நநு, `ப்ரஜாபதி: ப்ரஜா அஸ்ருஜத’, ‘ஸந்மூலாஸ்ஸோம்யேமாஸ்ஸர்வா: ப்ரஜா ஸ்ஸதாயதநாஸ்ஸத்ப்ரதிஷ்டா:’ ‘யதோ வா இமானிபூதாநி ஜாயந்தே’  “யத: ப்ரஸூதா ஜகதி ப்ரஸூதீ தோயேந ஜீவாந்வ்யஸர்ஜபூம்யாம்‘  என்று உத்பத்தி விநாஶங்களைச் சொல்லாநின்றதேயென்னில்; அவற்றில் சொல்லுகிறது தேஹஸம்பந்தத்தையும், தேஹவியோகத்தையும். நித்யனாகில் ஸ்ருஷ்டிக்கு முன்பு ஏகத்வாவதாரணம் கூடாதேயென்னில் : ஏகத்வமாவது நாமரூப விபாகாபாவமாகையாலே கூடும்.  ஸம்ஹாரதஶையில் ஆத்மாவில்லையாகில், ஈஶ்வரனுக்கு உபாதாநத்வம் கூடாது, அக்ருதாப்யாகமக்ருத விப்ர நாஶங்களும் வரும். ஆகையாலே ஆத்மா நித்யன்.

ஏகரூபத்வஸமர்த்தனம்

                ‘அம்ருதாக்ஷரம் ஹர:’  ‘ஆத்மா ஶுத்தோऽக்ஷர:” “ஏகம் ஸ தேகம்’ என்கையாலும் அவைபோலே உபசயாபசயங்களுக்கு அர்ஹனன்றிக்கே ஏகரூபனாயிருக்கும்.

ஜைநமதகண்டனம்

     தேஹ பரிமாணமென்கிற பக்ஷம் ஆத்மா நிர்விகாரனென்கிற ஶ்ருதியாலே பாதிதம். ‘ஸ்தூலோsஹம், க்ருஶோsஹம், பாதேநே மே வேதநா, ஶிரஸி மே ஸுகம்’  என்கிற ப்ரதிபத்தியும் கூடாதேயென்னில் ; அது தேஹாத்ம ப்ரமத்தாலே கூடும், ஏககாலத்தில் அநேக ஶரீர பரிக்ரஹம்    பண்ணுகிற யோகிகளுடைய ஸ்வரூபத்துக்கு ஶைதில்யமும் ப்ரஸங்கிக்கும்.

அஜடத்வஸமர்த்தனம்

     இவன் ஸ்வரூபம் அவைபோலே ஜடமன்றிக்கே ‘ஹ்ருத்யந்தர்ஜ்யோதி: புருஷ:’, ’அத்ராயம் புருஷஸ்ஸ்வயம் ஜ்யோதிர்பவதி’ ‘விஜ்ஞாநகந: தச்சஜ்ஞாநமயம் வ்யாபி ஸ்வஸம்வேத்ய மநூபமம் ‘  ‘ஆத்மா ஜ்ஞாநமய:’ ‘ஆத்மஸம்வேத்யம் தஜ்ஞாநம்’  என்கிறபடியே ஸ்வயம் ப்ரகாஶமாயிருக்கும். ஸ்வயம் ப்ரகாஶமாகையாகிறது- ஜ்ஞாநத்தை ஒழியவும் தானே தோற்றுகை. நநு, ஸ்வரூபமும் நித்யமுமாய்த் தானே தோற்றுமாகில் ஸுஷுப்தியிலும் தோற்ற வேண்டாவோவென்னில்; அப்போது தோற்றாதாகில்  உணர்ந்தபோது, ‘இத்தனை போதும் ஸுகமாக உறங்கினேன்’ என்னக் கூடாது. நநு, நான் ஒன்றையும் அறிந்திலேன் என்னும்படி யென்னென்னில்; அறிந்திலேன் என்கிறது என்னையொழிந்தவற்றை  அறிந்திலேனென்றபடி. ‘நான் என்னையும் அறிந்திலே’ னென்றாலோ வென்னில் ; என்னையும் அறிந்திலேன் என்கிறது ஶரீர விஶிஷ்டனான என்னையும் அறிந்திலேன் என்றபடி. ஸ்வரூபம் ப்ரகாஶித்ததில்லை யாகில் நான் என்னக் கூடாது “அயமஹமஸ்மி’ என்று இவ்வர்த்தத்தை ஶ்ருதியும் சொல்லிற்று. அப்போது விஶதமாக தோற்றாதொழிகிறது தமோகுணாபிபவத்தாலே.

ஆநந்தரூபத்வஸமர்த்தனம்

     ப்ரகாஶந்தான் அநுகூலமாயிருக்கும், ‘ஸுகமாக உறங்கினேன்’ என்கிற ப்ரத்யபிஜ்ஞை தானே இதில் ப்ரமாணம். இப்பொழுது ஸுகம் பிறக்கும்படி உறங்கினேனென்றன்றோ, ‘ஸுகமாக உறங்கினேன் என்கிறவிதுக்கு பொருளென்ன வொண்ணாது ; ப்ரதிபத்தி ஶரீரம் அப்படியன்றிக்கே “இனிதாகப் பாடினேன்’ என்கிறாப் போலேயிருக்கையாலே. ஸ்வரூப மநுகூலமன்றாகில் ப்ரேமாஸ்பதத்வம் கூடாது ’ஆஶ்சர்யவத் பஶ்யதி கஶ்சிதேநம்’  இத்யாதிகளாலும் இவ்வர்தம் ஸித்தமாகையாலே ‘ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிரஹமஸ்மி’ என்கிறபடியே ஆத்மா ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாயிருக்கும்.

ஜ்ஞாத்ருத்வஸமர்த்தனம்

     அவ்வளவுமன்றிக்கே ஜ்ஞாநாநந்தங்களுக் காஶ்ரயமுமாயிருக்கும், ‘அதயோ வேதேதம் ஜிக்ராணீதி ஸ ஆத்மா மநஸை வைதாந் காமான் பஶ்யந் ரமதே’  ‘ந பஶ்யோ ம்ருத்யும் பஶ்யதி’  “யோsயம் விஜ்ஞாநமய: ப்ராணேஷு ஹ்ருத்யந்தர்ஜ்யோதி: புருஷ:” “விஜ்ஞாதாரமரே கேந விஜ்ஞாநீயாத்’  ‘ஜாநாத்யேவாயம் புருஷ:’ ‘ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்ராதா ரஸயிதா மந்தா போத்தா கர்தா விஜ்ஞாநாத்மாபுருஷ:’  ‘ஏவ மேவாஸ்ய பரித்ரஷ்டு:’  இத்யாதி ஶ்ருதியாலும், ‘இவ்வர்த்தத்தை, நானறியாநின்றேன்’ என்கிற ப்ரத்யக்ஷத்தாலும் ஜ்ஞாதாவென்னுமிடம் ஸித்தம். இப்ப்ரத்யக்ஷம் தன்னை ‘ஜாநாத்யேவாயம் புருஷ:’ என்று ஶ்ருதியும் சொல்லிற்று.

பௌத்தமதகண்டனம்

     ஜ்ஞாநமாத்ரமாத்மா, அதுவும் க்ஷணிகமென்றும் பக்ஷத்தில், ‘நேற்று  கண்டவர்த்தத்தை, இன்று காணாநின்றேன்’ என்கிறவிது கூடாது, நேற்றை ஜ்ஞாநமென்று ஒன்று இல்லாமையால், அது அநித்யமென்கிற பக்ஷமும் அப்படி இருப்பதொரு ஜ்ஞாநம் காணாமையாலே நிரஸ்தம், கிஞ்ச, ஜ்ஞாநமாத்ரமே ஆத்மாவாகில், தேஹாத்ம ப்ரமம்கூடாது, தேஹத்தை ஜ்ஞாதாவாக ப்ரமிக்கையால்.

தர்மபூதஜ்ஞாநநித்யத்வஸமர்த்தனம்

                 ‘நஹி த்ரஷ்டுர்த்ருஷ்டேர்விபரிலோபோவித்யதே, நஹி விஜ்ஞாதுர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே’,  ‘யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் | ஸதேவ நியதே வ்யக்தி ரஸத ஸ்ஸம்பவ: குத: ததா ஹேயகுணத்வம்ஸா தவபோதாதயோ குணா: | ப்ரகாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹிதே||  ஜ்ஞாநம் வைராக்யமைஶ்வர்யம் தர்மஶ்ச மநுஜேஶ்வர | ஆத்மநோ ப்ரஹ்மபூதஸ்ய நித்யமேத சதுஷ்டயம்.  என்கிறபடியே ஜ்ஞாத்ருத்வம் நித்யம்.  ஆனால் உத்பத்தி விநாஶங்கள்  உண்டென்று சொன்னபடியென் என்னில் ; “ஸர்வம் ஹ பஶ்ய: பஶ்யதி’  ‘ஸ சாऽநந்த்யாய கல்பதே, என்று முக்தி தஶையில் ஸர்வ விஷயமாகச் சொல்லுகையாலே ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்கைக்கு யோக்யமாயிருக்கச் செய்தேயும் ; ‘யயா க்ஷேத்ரஜ்ஞ ஶக்திஸ்ஸாவேஷ்டிதா – ந்ருப ஸர்வகா’ என்கிறபடியே கர்மத்தாலே ஸங்குசிதமாய் ‘தயா திரோஹிதத் வாச்ச ஶக்தி: க்ஷேத்ரஜ்ஞஸ்ஸம்ஜ்ஞிதா |  ஸர்வபூதேஷு பூபால தாரதம்யேந வர்ததே।।  அப்ராணிமத் ஸுஸ்வல்பாஸா ஸ்தாவரேஷு ததோsதிகா |’  என்கிறபடியே கர்மானுகுணமாக தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு ’இந்த்ரியாணாம் ஹி சரதாம் யத்யேகம் க்ஷரதீந்த்ரியம் | தேநாஸ்ய க்ஷரதி ப்ரஜ்ஞா த்ருதே: பாதாதிவோதகம் ||” என்கிறபடியே இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிக்கக் கடவதாயிருக்குமாகைலே ப்ரஸரணாதியையிட்டு உத்பத்தி விநாஶம் சொல்லுகிறது. ஏகமாயிருக்கச்செய்தே அநேகமாய்த் தோற்றுகிறதும் அத்தாலே.

தர்மபூத ஜ்ஞாநஸ்ய த்ரவ்யத்வஸமர்த்தனம்

     இது தான் அஜடமுமாய் ஸங்கோச விகாஸங்களுக்கும், ஸம்யோக வியோகாதிகளுக்கும் ஆஶ்ரயமுமாயிருக்கையாலே த்ரவ்யம்.  நநு, ஜ்ஞாநம் நித்யமுமாய் அஜடமுமாயிருக்குமாகில் ஸுஷுப்தியில் தோற்ற வேண்டாவோ வென்னில் ; அப்போது தோன்றாதொழிகிறது திரோஹிதங்களான மணிப்ரகாஶாதிகளைப்போலே ப்ரஸரணமில்லாமையாலே.

தர்மபூத ஜ்ஞாநஸ்யாநந்தத்வஸமர்த்தனம்

     ஸர்வமும் பகவதாத்மகமாகையாலே அநுகூலமாய் கொண்டு தோற்றுகையாலே இதுதான் ஆநந்தரூபமாயிருக்கும்.  நநு, ஆனாலிப்போது விஷஶஸ்த்ராதிகள் ப்ரதிகூலங்களாயும், சந்தந குஸுமாதிகள் அநுகூலங்களாயும், காஷ்டலோஷ்டாதிகள் உபேக்ஷா விஷயங்களாயும், இவை தான் ஸ்வதந்த்ரங்களாய்க் கொண்டு தோற்றுவானென் என்னில் ; கர்ம தேஹாத்மாபிமானங்களாலே அப்படி தோற்றுகிறதத்தனை, ஸ்பாவமாயன்று.  ஸ்வபாவமாகில் ஒருகால் அநுகூலங்களான சந்தந குஸுமாதிகள் காலாந்தரத்திலே ப்ரதிகூலங்களாக தோற்றக்கூடாது ‘வஸ்த்வேகமேவ து:காய ஸுகாயேர்ஷ்யாகமாய ச | கோபாய ச யதஸ்தஸ்மாத் வஸ்து வஸ்த்வாத்மகம் குத: || ததேவ ப்ரீதயே பூத்வா புநர்து:காய  ஜாயதே| ததேவ கோபாய யத: ப்ரஸாதாய ச ஜாயதே | தஸ்மாத்து:காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸுகாத்மகம்| ‘ என்று ருஷியும் அருளிச்செய்தான், ஆகையால் ஜ்ஞாநத்துக்கு ஆநந்தத்வமே  ஸ்வபாவம். இப்படிபட்ட ஜ்ஞாநத்தையுடையனாகை ஆநந்தியாகிறது.

புநரபிஜீவாத்மநோ ஜ்ஞாத்ருத்வஸமர்த்தனம்

     இப்படி ஆத்மா ஜ்ஞாதாவாகில், ‘யா விஜ்ஞாநே திஷ்டந்’ ’விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே’ என்று ஜ்ஞாநஶப்தத்தாலே சொல்லுவானென் என்னில் ; ஜ்ஞாநைக நிரூபணீயமுமாய் : ஸ்வயம் ப்ரகாஶமுமாகையாலே அப்படிச் சொல்லுகிறது. ஆகையாலே ஜ்ஞாதாவுமாய் ஆநந்தியுமாயிருக்கும்.

ஜீவாத்மந: அணுத்வஸமர்த்தனம்

                ‘தேந ப்ரத்யோதேநைஷ ஆத்மா நிஷ்க்ராமதி’ என்று உத்க்ரமணத்தைச் சொல்லுகையாலே. ஆத்மா அணுபரிமாணன், உத்க்ராந்தியென்கிறது ஶரீர வியோகத்தளவே யென்னில் ; அது அப்படியானாலும்  ‘யேவை கேசாஸ்மால் லோகாத்ப்ரயந்தி சந்த்ரமஸமேவ தே ஸர்வேகச்சந்தி, “தஸ்மால்லொகாத் புநரேத்யஸ்மை லோகாய கர்மணே” என்கிறபடியே கத்யாகதிகள் கூடாது “ஏஷோऽணுராத்மா சேதஸா வேதிதவ்ய:’ ‘வாலாக்ர ஶதபாகஸ்ய ஶததாகல்பிதஸ்ய ச | பாகோ ஜீவஸ்ஸவிஜ்ஞேய:’ இத்யாதிகளாலே ஶ்ருதிதானே அணுவென்று முக்த கண்டமாகச் சொல்லிற்று, ‘ஹ்ருதிஹ்யயமாத்மா’  ‘ஹ்ருத்யந்தர்ஜ்யோதி: புருஷ:’ என்கையாலே இவன் தான் நிற்பது ஹ்ருதய ப்ரதேஶத்திலே. ஆத்மா அணுவாய் ஹ்ருதய ப்ரதேஶத்திலே நிற்குமாகில் பாணிபாதாதிகளில் ஸுகது:காநுபவம் கூடும்படி எங்ஙனேயென்னில், ஜ்ஞாந வ்யாப்தியாலே கூடும்.

ஆத்மபஹுத்வஸமர்த்தனம்

     ஆத்மாக்கள் தான் அநேகங்கள். சிலர் ஆத்மபேதமில்லை, ஏகாத்மாவேயுள்ளது என்றார்கள் ; அது அயுக்தம், ஸுகாதி வ்யவஸ்தாநுபபத்தி வருகையால்.

 ஸுகது:கேச்சாத்வேஷாதிகள் நியதங்களாகையாலே தேஹ பேதத்தாலேயாதல் அந்த:கரணபேதத்தாலேயாதல், இவை நியதங்களாகின்றன வென்னில் ; ஸௌபரி ஶரீரத்திலுமிதுவே நியதங்களாகவேணும், தேஹபேதமும் ; அந்த:கரணபேதமும் ஸுகது:காதி நியமத்துக்கு ஹேதுவவென்றாகில் ஜந்மாந்தராநுபவத்தை ஜந்மத்திலே ஸ்மரிக்கவேண்டாவோ? வென்னில் ; ஸ்மரியாதொழிகிறது,  ஸம்ஸ்காரத்தினுடைய அநுத்பவத்தாலேயாதல், நாஶத்தாலேயாதல். ஆனால் ஶரீராந்தரத்தில் ஸுகது:கஸ்ம்ருத்யாதிகள் இன்றிக்கே யொழிகிறதும், இரண்டத்தொன்றாலே யென்னில், ஒரு ஶரீரம் தன்னிலும் ஸ்ம்ருதிகூடாதொழியவேணும்.  ஆகையால் ஸுகது:க நியமத்துக்கு ஹேது தேஹாதி பேதமென்ன வொண்ணாது. ஒருவனாகில் பந்தமோக்ஷ வ்யவஸ்தையும், ஶிஷ்டாசார வ்யவஸ்தையும், விஷம ஸ்ருஷ்டியும் கூடாது. வைஷம்ய நைர்க்ருண்யங்களும் ப்ரஸங்கிக்கும் ‘நித்யோ நித்யானா’ மென்று இத்தை ஶ்ருதியும் சொல்லிற்று. அந்த ஶ்ருதி ஔபாதிகபேதத்தைச் சொல்லுகிறது.  அல்லாத போது,  ஜீவாத்வைத ஶ்ருதிகளோடே விரோதிக்குமென்ன வொண்ணாது ; அவற்றில் சொல்லுகிறது ப்ரகாராத்வைதத்தை யாகையாலே. ‘ஸதா பஶ்யந்தி’, ‘மம ஸாதர்ம்ய மாகதா’,  ‘முக்தாநாம் பரமாகதி:’ என்று மோக்ஷதஶையிலும் பேதத்தைச் சொல்லுகையாலே பேதம் ஔபாதிகமென்ன வொண்ணாது. ஆகையால் ஆத்மாக்கள் அநேகரென்னுமிடம் ஸித்தம்.

அமலத்வகதநம்

                ’ஆத்மா ஶுத்த:’ “ஜ்ஞாந மயோऽமல:’ ‘ஜ்யோதிர் ஜ்வலதி’ என்கிறபடியே இவர்கள்தான் பரிஶுத்தர்.

ஶேஷத்வகதநம்

                “யஸ்யாஸ்மி ’ ’யோऽஹமஸ்மி’  ‘ப்ரஹ்மாகமஸ்மி’ ‘தாஸபூதா:” “க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே” என்கையாலே * பகவச்சேஷபூதர்‌, ‘யஸ்யாத்மா ஶரீரம்’ `’பூ: ப்ராணிந:’ ‘தத்ஸர்வம்வை ஹரேஸ்தநு:’  ‘தாநி ஸர்வாணி தத்வபு:’,  ‘அபரேயமிதஸ்த்வந்யாம்’ என்கையாலே இந்த ஶேஷத்வம் தான் ஶரீரதயாவாயிருக்கும்.

உக்தார்த்தநிகமநம்

     ஆக இப்படி ஆத்மாக்கள் தேஹேந்த்ரிய மந:ப்ராணதிகளில் விலக்ஷணராய், ஸ்வயம் ப்ரகாஶராய், ஆநந்தரூபராய், ஜ்ஞாநாநந்தங்களுக்காஶ்ரயபூதராய், நித்யராய், அணுக்களாய், பரிஶுத்தராய், பகவச்சேஷபூதராயிருப்பர்கள்.

த்விதீய ப்ரகரணம் ஸம்பூர்ணம்

த்ருதீயம் புருஷார்த ஸ்வரூபநிர்ணய ப்ரகரணம்

     இவர்‌களுக்கு புருஷார்த்தம் ‘தம் யதா’ இத்யாதி ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே’ என்கிறபடியே ஸ்வரூபாவிர்பாவ பூர்வகமாய் நித்ய நிர்தோஷ நிஸ்ஸீமானந்தாத்மகமாயிருக்கிற ஸவிபூதிஸமஸ்த கல்யாணகுணாத்மக பரமாத்ம யாதாத்ம்யானுபவ ப்ரீதிகாரித கைங்கர்யம்.

     நநு, கைங்கர்யம் து:க ரூபமாக லோகத்திலே காணா நின்றோம் : ‘ஸேவா ஶ்வவ்ருத்திர்வ்யாக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜயேத்’ என்று நிஷித்தமாயிருக்க இதுவே புருஷார்த்தமாம்படி எங்ஙனேயென்னில் ; லோகத்திலே கைங்கர்யமெல்லாம் அபுருஷார்த்தமன்று;  ப்ரியதம விஷயத்திலே கைங்கர்யம் புருஷார்த்தமாகக் காண்கையாலே ஶ்வவ்ருத்தியென்று நிஷேதித்தது இதர ஸேவையை. இது ‘புருஷார்த்த’ மென்கிறவிடம் தர்மிக்ராஹக ப்ரமாணத்தாலே பாதிதம். அபுருஷார்த்தமாகைக்கு ஹேது பாபாரப்தத்வம், ‘புண்யபாபே விதூய’ என்கையாலே. இது பாபகார்யமன்று. தன் ஸ்வரூபத்தை யாதொருபடி நினைத்தான் அதுக்கீடாயிருக்கும். இது புருஷார்த்தமென்னுமிடம் ஸுர நர திர்யகாதிகளிலே காணா நின்றோம், ஆகையாலே முக்தனும் தன்னை ஶேஷமாக நினைக்கையாலே கைங்கர்யமே புருஷார்த்தமாம் ; அத்தையொழிந்தது அபுருஷார்த்தமாயிருக்கும்.

சார்வாகமத நிரஸநம்

     தேஹாதி விலக்ஷணனாகையாலே ஶப்தாத்யநுபவம் புருஷார்த்தமன்று.

யோகாதிமதநிரஸநம்

பரதந்த்ரனாகையாலே ஸ்வாநுபவமாத்ரம் புருஷார்த்தமன்று.

பௌத்தாதிமதநிரஸநம்

ஸ்வரூபம் நித்யமாகையாலே ஸரூபோச்சேதநம் புருஷார்த்தமன்று.

நைய்யாயிகமதநிரஸநம்

நித்யஜ்ஞாநாதி குணகனாகையாலே ஜ்ஞாநாதி வைஶேஷிககுண விநாஶம் புருஷார்த்தமன்று. நநு, ஸுகமாகில் து:க மிஶ்ரமாயல்லதிராமையாலே ஸுகம் புருஷார்த்தமன்று, விஷஸம்ப்ரயுக்தமான அன்னம் போலே த்யாஜ்யமென்றவொண்ணாது; மோக்ஷ ஸுகம், ‘நரோகம் நோத து:கதாம்’ என்று து:க மிஶ்ரமல்லாமையாலே. து:க நிவ்ருத்தி தான் புருஷார்த்த மாகமாட்டாது; ஸுகரூபமல்லாமையாலே, ஆனால் து:க நிவ்ருத்தியில் யத்நம் கூடாதென்னில், து:கமும் ப்ரதிகூலமாகையாலே கூடும்.  ஸுகத்திற் காட்டிலும் து:க நிவ்ருத்தியே புருஷார்த்தமென்னில், து:க மிஶ்ரமான ஸுகஸாதநங்களிலிழியக்கூடாது.

ஶங்கரமதநிரஸநம்

     அவித்யா நிவ்ருத்தியே மோக்ஷமென்கிற பக்ஷமும் அநுபபந்நம், அது ஸுகரூபமல்லா மையாலே. ஸுகஸாதந மென்றவொண்ணாது; ப்ரஹ்மத்துக்கு ஸுகம் கொள்ளாமையால், ஸுகம்  கொள்ளில் ப்ரஹ்மம் ஸவிஶேஷமாம்.

பாஸ்கரமதநிரஸநம்

     உபாதிவியோகம் மோக்ஷமென்கிற பக்ஷமும் சேராது; ஸுகரூபமல்லாமையால்.  திரோஹிதமான ஸுகத்துக்கு ப்ரகாஶ(க)மென்னில்,  ஜீவனுடைய ஸுகத்துக்கு ப்ரகாஶ(க)மோ, பரனுடைய ஸுகத்துக்கு ப்ரகாஶ(க)மோ?;  ஜீவஸுகத்துக்கு ப்ரகாஶ (க)மென்ன வொண்ணாது. ஜீவன் நஶிக்கையால்.  பரஸுகப்ரகாஶ க)மென்ன வொண்ணாது,  அதுக்கு திரோதான மில்லாமையால்.  உபாதி ப்ரதேஶத்தில் ஸுகம் திரோஹிதமென்னில் ; ஸர்வஜ்ஞனன்றிக்கே ஒழியும்.

யாதவப்ரகாஶமதநிரஸநம்

     ஸ்வாபாவிக பேதாபேத பக்ஷத்திலும், மோக்ஷம் புருஷார்த்தமன்று; முக்தனுக்கு பத்தனோடு அபேதமுண்டாகையால் பத்தனுடைய து:கமே முக்தனுக்கு வருமாகையால். ஈஶ்வரனுக்கு ஜீவனோடு அபேதமுண்டாகையால், ஈஶ்வரன் ஜீவனுடைய து:கத்தைத் தன்னுடைய து:கமாக நினைத்து ஸத்ய ஸங்கல்பனாகையாலே தானே கழிக்கும்;  ஆகையால் ஆத்மாவுக்கு மோக்ஷோபாயத்திலிழியவேண்டா; ஸர்வமுக்தியும் ப்ரஸங்கிக்கும்.

ஸ்வஸித்தாந்தஸங்க்ரஹம்

     ஆகையால், நிர்தோஷ நிரதிஶயானந்தரூபமான பரமாத்மானுபவ கைங்கர்யமே மோக்ஷம், ‘தம் யதா யதோபாஸதே ததைவ பவதி’  ‘ப்ருதகாத்மானம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேநாऽம்ருதத்வ மேதி”  “ஏதத்ஸாமகாயந்நாஸ்தே’  ‘கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா: “ ஆகச்ச வத்ஸ பத்ரம் தே புண்டரீக மஹாமதே | மத் ரூபதாரீ நித்யாத்மா மம பாரிஷதாஶ்ரய: |’ இத்யாதி ப்ரமாணங்கள் அநந்தம்.

மோக்ஷேஜீவபரைக்யவாதிஶங்கோபந்யாஸம்

     நநு, ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி,  ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூத்’ ’விபேத ஜநகே ஜ்ஞாநே நாஶமாத்யந்திகம் கதே | ஆத்மநோ ப்ரஹ்மணோ பேதமஸந்தம்  க: கரிஷ்யதி||”  “பரமாத்மநா பவத்யபேதீ’ இத்யாதிகளாலே மோக்ஷதஶையிலே ஐக்யம் சொல்லா நிற்க, கைங்கர்யம் கூடும்படி என்னென்னில்;

தத்கண்டநம்

’பரமாத்மாத்மநோர்யோக: பரமார்த இதீஷ்யதே| மித்யை ததந்யத்த்ரவ்யம் ஹி நைதி தத்த்ரவ்யதாம் யத: ||” என்கிறபடியே. ஹேயப்ரதிபட வஸ்துவுக்கும் ஹேயயோக்ய வஸ்துவுக்கும் ஐக்யம் சொல்லுகை வ்யாஹதம், ஐக்யம் கொள்ளில்; ‘ஆத்மபாவ நயத்யேநம் தத்ப்ரஹ்மத்யாயிநம் முநே | விகார்யமாத்மநஶ் ஶக்த்யாலோஹ மாகர்ஷகோ யதா ||”  “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி’ ‘மம ஸாதர்ம்யமாகதா:;’ ‘தத்பாவபாவ மாபந்ந:” என்று சொன்ன பரமாத்ம ஸாதர்ம்யம் கூடாது. ’ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி’ என்கிறவிடத்தில் சொல்லுகிறது ஸாதர்ம்யத்தை; ‘விஷ்ணுரேவ பூத்வா’ என்கிற விடத்திற் போலே , ஏவ என்றது இவ என்றபடியாய்  ப்ரஹ்மம் போலேயாம் என்றபடி, அவதாரணமானாலுமிதுவே அர்த்தம்.

                ‘யத்ர த்வஸ்ய’ என்கிறவிடத்தில் எல்லாம் பரமாத்மாவுக்கு ப்ரகாரமென்று ஸாக்ஷாத்கரித்தபடியை சொல்லுகிறது.

                 ‘விபேத ஜநகே…. பரமாத்மநா அபவத்யபேதீ’ என்கிறவிடத்தில் தேவாதிரூப பேதமில்லையென்றபடி. ‘தேவாதி பேதேsபத்வஸ்தே’  என்று இதுதான் கண்டோக்தம். நநு, கிங்கரனாகில் ‘ஸஸ்வராட் பவதி’ என்கிற ஸ்வாதந்த்ர்யம் சேரும்படி என்னென்னில்; ஸ்வராட் என்றது கர்மவஶ்யன் அன்றென்றபடி. ஆனால் ஸாம்யம் தான் கூடும்படி என்னென்னில், ஸாம்யம் போகமாத்ரத்திலே. ஸாயுஜ்யமென்கிறது மித்தனையே.  ஸர்வதா ஸாதர்ம்யமில்லை ஜகத் வ்யாபாராதிகளில்லாமையாலே, ஜகந்நியமநாதிகளில்லையாகில் போக ஸாம்யம் தான் கூடும்படி என்னென்னில்;  அவை இருவர்க்குமொக்க அநுகூலமாகக்கொண்டு ப்ரகாஶிக்கையாலே கூடும். ‘அஶரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருஶத:’ என்கிறபடியே ஶரீரஶூந்யனானவனுக்கு கைங்கர்யம் கூடாதென்னில்;  “ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி’  என்று ஸஶரீரனாகச் சொல்லுகையாலே கூடும்.  இது தன்னாலே ஸஶரீரத்வம் ஸித்தம்.  அஶரீரமென்றது கர்மக்ருத மானஶரீரமிவனுக்கில்லையென்றபடி. ‘ஸஹவை ஸஶரீரஸ்ய ஸத: ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்தி” என்கிறபடியே ஶரீர விஶிஷ்டனாகில் ஸுக து:கங்களுண்டாகாதோவென்னில், அங்குச் சொல்லுகிறது கர்மக்ருத ஶரீரத்தை. ஶரீரமாகில் கர்மக்ருதமாயன்றோ இருப்பதென்றவொண்ணாது, பகவத்விக்ரஹம் கர்மக்ருதமல்லாமையாலே. அவன் ஸர்வஶக்தனாகையாலும், ஸத்யஸங்கல்பனாகையாலும் அவனுக்குக் கூடும்; இவனுக்குக் கூடாதென்றவொண்ணாது; அவனுடைய ஸங்கல்பத்தாலே இவனுக்கும் கூடுகையாலே. “ஸங்கல்பாதேவாஸ்ய பிதரஸ்ஸமுத்திஷ்டந்தி’ என்று ஸத்ய ஸங்கல்பனாகச் சொல்லுகையாலே. இவன் தன்னுடைய ஸங்கல்பத்தாலும் ஶரீரம் கூடும். ஈஶ்வரன் ஸத்யஸங்கல்பனாகையாலே புனராவ்ருத்தியும் கூடுமேயென்னில், ‘ப்ரியோ ஹி ஜ்ஞாநி நோऽத்யர்தம்…… ஸமஹாத்மா ஸுதுர்லப:’ என்றிருக்கிற ஈஶ்வரன் இவனை ஸம்ஸரிப்பிக்க கூடாமையாலும், ஸம்ஸாரஹேதுவான கர்மம் நிஶ்ஶேஷமாக நிவ்ருத்தமாகையாலும் , ‘நசபுனராவர்ததே’  ‘இமம் மானவமாவர்தந்நாவர்தந்தே’  ‘மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமஶாஶ்வதம்  | நாப்நுவந்திமஹாத்மானஸ்ஸம்ஸித்திம் பரமாம் கதா: ||  ஆ ப்ரஹ்ம புவநால்லோகா: புனராவர்திநோSர்ஜுந | மாமுபே து கௌந்தேய புநர்ஜந்ம நவித்யதே||” என்கையாலும் புனராவ்ருத்தி ப்ரஸங்கமேயில்லை.

     ஆகையாலே ஸவிபூதிக ஸமஸ்த கல்யாண குணாத்மக பரமாத்ம யாதாத்ம்யானுபவ ஜநித ப்ரீதிகாரித கைங்கர்யமே (பரம) புருஷார்த்தம்.

த்ருதீய ப்ரகரணம் ஸம்பூர்ணம்

சதுர்தம் விரோதி ஸ்வரூப நிரூப நிர்ணய ப்ரகரணம்

    இப்புருஷார்த்தத்துக்கு ப்ரதிபந்தகம் – இப்படி பரமாத்ம யாதாத்ம்யானுபவத்தாலே நிரதிஶயானந்தி யாகைக்கு யோக்யனான ஆத்மா, ஈஶ்வரனுடைய ஸ்வரூபரூபகுண சேஷ்டிதங்களையும், ஸ்வஸ்வரூப யாதாத்ம்யத்தையுமறியாதே,ஸ்வரூப விபரீதங்களாய் க்ஷணக்ஷரண ஸ்வபாவத்வாதி தர்மவிஶிஷ்டங்களான நாநாவித தேஹங்களிலே ஆத்மபுத்தியைப்பண்ணி, தேஹாநுபந்திகளாய்  பகவதீயங்களாயிருக்கிற  க்ருஹக்ஷேத்ராராமாதிகளை ஆத்மீயங்களாகவும், அத்தை பகவதீயத்வாகாரத்தையொழிய ஸ்வாதந்த்ர்யேண போக்யங்களாகவும் நினைத்து அவை லபிக்கைக்கு அநுகூலித்தவர்கள் பக்கலிலே ராகத்தையும் ப்ரதிகூலித்தவர்கள் பக்கலிலே த்வேஷத்தையும் பண்ணி, அவற்றை லபிக்கைக்கு ஸாதநங்களான பரஸ்தோத்ர பரஹிம்ஸா தேவதாந்தர பஜனங்களிலே அந்வயித்து, அவற்றால் நாநாவித ஶரீரங்களை  பரிக்ரஹித்து பால்ய யௌவந வார்தக்யாத் யவஸ்தைகளிலே ஆத்யாத்மிகாதிதாபத்ரய தப்தனாய், மரணதஶையிலே யமகிங்கரபீடிதனாய், து:கேந ஶரீரங்களைவிட்டு யாதநா ஶரீரங்களிலே ப்ரவேஶித்து ரௌரவாதி நரகங்களிலே நாநாவித து:கங்களையநுபவித்து, தூமராத்ரி அபர பக்ஷ தக்ஷிணாயந பித்ருலோகாகாஶ சந்த்ர க்ரமத்தாலே உபரிதந லோகங்களிலே போய் , நாரகீ தர்ஶந நைரந்தர்யத்தாலும் அதிகஸுகாநுபவத்தாலும் , அஸுர ராக்ஷஸபீடையாலும் பதநபீதியாலும் து:க பஹுளமான க்ஷுத்ர ஸுகங்களையநுபவித்து, த்யுபர்ஜந்யப்ருதிவி புருஷயோஷித் ஸ்தாநங்களிலே ஶ்ரத்தாஸோம வர்ஷாந்நரேதோ ரூபாவஸ்தாவிஶிஷ்டனாய் க்கொண்டு ப்ரவேஶித்து, இப்படி ஜந்மஜராமரண நிரயாதிகளிலே நாநாவித து:கங்களை சக்ரநேமி க்ரமதாலே அநுபவிக்கும்படி பண்ணும் கர்மஸம்பந்தம்.

ஜகந்மித்யாத்வவாதி ஶங்கரமதோபந்யாஸம்

     நநு, ‘அந்ருதேந ஹி ப்ரத்யூடா:’  ‘தஸ்மிம்ஶ்சாந்யோ  மாயயா ஸந்நிருத்த:’ ‘மம மாயாதுரத்யயா’  ’வஸ்த்வஸ்திகம்’ ’மஹீ கடத்வம்’ ’தஸ்மாந்ந விஜ்ஞாநம்ருதேऽஸ்தி கிஞ்சித்’ ’ஸத்பாவ ஏவம்’ என்று ஶ்ருதீதிஹாஸ புராணங்களிலே, அந்ருதம் -மாயை-நாஸ்தி – அஸத்யம்- இத்யாதி ஶப்தங்களாலே சொல்லுகையாலே மித்யா பூதமான அஜ்ஞாநம் பந்தஹேது, பந்தமும் மித்யை என்று சிலர்  சொன்னார்கள்.

தத்கண்டநம்

     அது அநுபபந்நம் ; அதில் ப்ரமாணமில்லாமையாலும், அநேக ப்ரமாணபாதித மாகையாலும்,

அந்ருத ஶப்தத்தாலே சொல்லுகிறது ஸாம்ஸாரிக பலத்துக்கு ஹேதுவான கர்மத்தை. ருதேதரதந்ருதம்.  ருதமாவது கர்மபலம். ‘ருதம்பிபந்தௌ’ என்கையாலே  இவ்விடத்தில் அந்ருதமென்கிறது. பகவத்ப்ராப்திக்கு விரோதியான கர்மத்தை.  ‘ஏதம் ப்ரஹ்மலோகம் ந விந்தந்தி  அந்ருதேந ஹி ப்ரத்யூடா:|’ என்கையாலே.

 மாயை என்கிறது ப்ரக்ருதியை.  ‘மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத்’ என்கையாலே. ப்ரக்ருதியை மாயை என்கிறது விசித்ர கார்யங்களை பண்ணுகையாலே.

 ‘வஸ்த்வஸ்திகிம்’ இத்யாதி ஶ்லோகங்களாலே விநாஶித்வத்தைச் சொல்லுகிறது, மித்யாத்வத்தைச் சொல்லுகிறதன்று. மித்யாபூதமாகில் ஶுக்திகாரஜதம் போலேயும், ரஜ்ஜு ஸர்ப்பம் போலேயும் பாதிதமாகவேணும். ‘ம்ருத்திகேத்யேவ ஸத்யம்’  ‘ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம்  வதஸி கேஶவ’  ‘காலஸ்ய ஹி ச ம்ருத்யோஶ்ச ஜங்கம ஸ்தாவரஸ்ய ச | ஈஶதே பகவானேகஸ் ஸத்யமேதத்ப்ரவீமிதே|  “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம்  உத்த்ருத்ய புஜமுச்யதே | வேத ஶாஸ்த்ராத்பரம் நாஸ்தி ந தைவம் கேஶவாத்பரம் ||” இத்யாதி ப்ரமாணங்களோடு விரோதிக்கும். ஆகையால் பந்தமும் பந்த ஹேதுவும் பரமார்த்தம்.

ப்ரஹ்மாஜ்ஞாந வாதநிரஸநம்

                ‘தத்த்வமஸி’ ‘அயமாத்மா ப்ரஹ்ம’ என்று ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் தாதாத்ம்யம் சொல்லுகையாலே ப்ரஹ்மம் தானே ஸம்ஸரிக்கிறது என்கிற இதுவும் அஸங்கதம். ப்ரஹ்மம் நித்ய நிர்தோஷம், ஸமஸ்த கல்யாணகுணாத்மகம், ஜீவாத்விலக்ஷணம் என்று சொல்லுகிற, ‘அபஹத பாப்மா’ ‘யஸ்ஸர்வஜ்ஞ:’ ‘ப்ருதகாத்மானம்’ இத்யாதி ஶாஸ்த்ரங்களோடே விரோதிக்கையால் தத்த்வமஸீத்யாதி வாக்யங்களில் ஶரீர ஶரீரிபாவத்தை சொல்லுகிறது. ஆகையால் ‘தஸ்மிம்ஶ்சாந்ய: தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்வத்தி’  ‘ஈஶ்வர ப்ரேரித:’ என்கிறபடியே ஜீவன் ஸம்ஸரிக்கிறான்.

சதுர்த்தம் ப்ரகரண ஸம்பூர்ணம்

பஞ்சமம் உபாய ஸ்வரூப நிர்ணய ப்ரகரணம்

     இனி இப்ப்ரதிபந்தக நிவ்ருத்திக்கு உபாயம் ஸந்ந்யாஸ த்யாக நிக்ஷேப ஶரணாகத்யாதி ஶப்த வாச்யமாய் ஸத்ய வசநாதி தர்மங்கள்  போலே ஸர்வாதிகாரமாயிருந்துள்ள பரமாத்ம ப்ரபதநம்.

ப்ரபத்திஸ்வரூபகதநம்

அதாவது பகவதாஜ்ஞாதி வர்தந நிவ்ருத்தி, பகவதானுகூல்யம், ஸர்வஶக்தித்வாநுஸந்தாநம் தொடக்கமானவற்றோடே கூடியிருந்துள்ள ஆஜ்ஞாகர்பமான விஸ்ரும்ப ரூப ஜ்ஞாநவிஶேஷம். அதில் ஜ்ஞேயாகாரம் ஈஶ்வரனுடைய நிரபேக்ஷஸாதநத்வம்; ஜ்ஞாநாகாரம் வ்யவஸாயம், இது தான் ஶாஸ்த்ரார்த்தமாகையாலே ஸக்ருத்கர்தவ்யம்,  ‘முமுக்ஷுர்வைஶரணமஹம் ப்ரபத்யே’ தஸ்மான்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு:’ என்றும் ‘த்வாமேவ ஶரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:’  ‘அஹமஸ்ம்யபராதாநா மாலய:” “அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹா விஶ்வாஸ பூர்வகம் | ததேகோபாய தாயாச்ஞா ப்ரபத்திஶ் ஶரணாகதி: ||’  ‘யத்யேந காமகாமேந. . . யாநி நிஶ்ஶ்ரேய ஸார்தாநி சோதிதாநி தபாம்ஸி வை | தேஷாந்து தபஸாம் ந்யாஸமதிரிக்தம்  தபஶ்ஶ்ருதம் ||’  ‘பவ ஶரணம்’  ‘ஸக்ருதேவ ப்ரபந்நாய’  ‘மாமேகம் ஶரணம் வ்ரஜ’  என்னும் இத்யாதிகளே இதில் ப்ரமாணங்கள்.

     இதுக்கதிகாரிகள், பரம ப்ராப்ய த்ருஷ்ணையையும் ப்ராப்யாந்தர வைத்ருஷ்ண்யையும், பகவதௌதார்ய குணாத்யவஸாயத்தையும் உடையவர்கள்.  இதுக்கங்கம் ஆகிஞ்சந்யம். இவ்வதிகாரிதான் ப்ரபத்தி பண்ணின அநந்தரத்திலே மோக்ஷம் வேணுமென்றிருந்தானாகில் அப்போதே பலமாயிருக்கும்;  உபாயமப்போதே நிஷ்பந்நமாகையாலும், ’ஸாத்யபக்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ’ என்று ப்ராரப்தமும் நஶிக்கையாலும்.  அல்லாதபோது, “மா ஶுச:’ என்கிறது சேராது. இப்படி ஆர்தராயிருக்கச் செய்தேயும், சிலரிருக்கிறது ஈஶ்வரேச்சையாலே. அதுக்கு ப்ரயோஜநம் ஸம்ஸாரி ஸம்ரக்ஷணம், விக்ரஹாநுபவம் தொடக்கமானவை. ப்ரபத்யுத்தர காலத்திலும் ஸம்ஸாரத்தில் ஸங்கம் நடந்ததாகில், ஸங்கம்  நிவ்ருத்த மாமளவும் வைக்கும்.  ஆனால் து:காம்ஶம் கழியாதொழிவானென் என்னில் ; ஈஶ்வரன் ஹிதபரனாகையாலே. வைராக்ய ஜநநார்தமாக இட்டுவைக்கும்.

     இது தான் ஸ்வதந்த்ரேண கார்யகரமாமளவன்றிக்கே பக்தியோகத்தை உத்பாதித்தும் கார்யம் செய்யும்.

பக்தியோகாதிஸ்வரூபகதநம்

     பக்தியாகிறது, ‘யமேவைஷ வ்ருணுதே’  ‘பக்த்யாத்வநந்யயா ஶக்ய:’  ‘பஜதாம் ப்ரீதி பூர்வகம்’  ‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிந:’ என்கிறபடியே, ஸ்மர்தவ்ய விஷயம் ப்ரியதமமாகையாலே தானும் அத்யர்த்த ப்ரியரூபமாய் : பாவநா ப்ரகர்ஷத்தாலே ‘தஸ்மிந் த்ருஷ்டே! “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய:’ என்கிறபடியே ப்ரத்யக்ஷஸமானாகாரமாய், ‘த்ருவா ஸ்ம்ருதி:’ என்கிறபடியே அவிச்சிந்ந ஸ்ம்ருதிரூபமாயிருக்கும் த்யானவிஶேஷம். இது தான் நாடோறும் அப்யாஸத்தாலே அதிஶயிதமாய், ‘ஸ கல்வேவம் வர்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகம் அபிஸம்பத்யதே’ என்கிறபடியே ஆப்ரயாணத்தளவும் அநுவர்தித்தாலல்லது கார்யகரமாகாது.

     இப்படிபட்ட த்யானம் நிஷ்பந்நமாவது, “யஜ்ஞேந தானேந தபஸாऽநாஶகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி”  “யஜ்ஞதாந தப: கர்ம ந த்யாஜ்யம் கார்யம்’ ‘ஸ்வகர்மணா தமப்யர்ச்ய’ என்கிறபடியே பகவத்ஸமாராதந ரூபமாய் பலாபிஸந்தி விதுரமாயிருந்துள்ள நித்ய நைமித்திக கர்மானுஷ்டானத்தாலும், ‘ஶாந்தோ தாந்த உபரத ஸ்திதிக்ஷுஸ்ஸமாஹிதோ பூத்வாஆத்மந்யே வாத்மானம் பஶ்யேத்’ என்கிற ஶம தமாதிகளாலும், உக்த கர்மானுஷ்டானத்தாலே ‘தர்மேண பாபமபநுததி’ என்கிறபடியே புண்யபாபங்கள் நஶிக்கும் : அத்தாலே ரஜஸ்தமஸ்ஸுக்கள்  தலைசாய்ந்து ஸத்த்வமுத்பூதமாம். அத்தாலே த்யானம் நிஷ்பந்நமாம்.

இப்படி அவ்யவஹிதமாயும் வ்யவஹிதமாயும் பரமாத்ம ப்ரபதநமே ப்ரதிபந்தக நிவர்தகம்.

ஶங்கராதிமதம்

     சிலர் தத்த்வமஸ்யாதி வாக்யங்களாலே பிறக்கிற வாக்யார்த்த ஜ்ஞாநமே உபாயமென்றார்கள். அது அநுபபந்நம். த்யானாதி விதிகளுக்கு வையர்த்தம் ப்ரஸங்கிக்கையாலும், அநந்தரம் முக்தனாக வேண்டுகையாலும், முக்தனாகில் து:காநுபவம் கூடாமையாலும், ஜ்ஞாநம் தான் விதேயமுமன்றிக்கேயொழியும்.

பாட்டாதிமதம்

     கேகய ஜநகாதிகள் கர்ம நிஷ்டராகையாலும்’, ‘குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதம் ஸமா:’ என்றுகொண்டு யாவஜ்ஜீவம் கர்மானுஷ்டானத்தைச் சொல்லுகையாலும் கர்மமே புருஷார்த்த ஸாதகம், அந்த கர்மத்தை அநுஷ்டிக்கும்போது தேஹாதிரிக்தமான ஆத்மாவை அறிய வேண்டுகையாலே ஜ்ஞாநம் அதுக்கங்கமென்று சிலர் சொன்னார்கள். அதுவுமநுபபந்நம் ; ‘கிமர்தா வயம் யக்ஷ்யாமஹே’ என்று, ஜ்ஞாநவானுக்கு கர்மத்யாகம் காண்கையாலும்  அக்நிஹோத்ர தர்ஶபௌர்ணமாஸாதிகளில்லாத ஊர்த்வ ரேதாக்களுக்கு ப்ரஹ்ம நிஷ்டை உண்டாகையாலுய், ‘கிம் ப்ரஜயா கரிஷ்யாம:’ என்று விரக்தனுக்கு கார்ஹஸ்த்ய த்யாக முண்டாகையாலுய், ‘க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி’ என்று வித்யையாலே புண்யபாபங்களுக்கு நாஶமுண்டாகையாலும், வித்யை கர்மத்துக்கு அங்கமல்லாமையால். வித்யாநுஷ்டானநிஷ்டனும் பின்னை கர்மத்தை அநுஷ்டிக்கிறதென்னென்னில்; வித்யைக்கு கர்மம் அங்கமாகையாலே அநுஷ்டிக்கிறார்கள்.  யாவஜ்ஜீவம்  கர்மானுஷ்டானம் சொல்லுகிறது விரக்தரல்லாதவர்களுக்கு.

யாதவப்ரகாஶமதம்

     ஜ்ஞாநகர்ம ஸமுச்சயமுபாயமென்கிற பக்ஷமும் அநுபபந்நம் ; ‘அவித்யயா ம்ருத்யும் தீர்த்த்வா’ ‘யஜ்ஞேந தானேந’ என்று கர்மத்தை ஜ்ஞாநத்துக்கு ஶேஷமாக்கி விநியோகிக்கையாலே.

     நநு, ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமாகில், நான்ய: பந்தா:’ என்று பக்தியொழிய உபாயமில்லை யென்றத்தோடே விரோதியாதோவென்னில்; ப்ரபத்தியும் ஜ்ஞாநவிஶேஷ மாகையாலே விரோதியாது. குருலகுக்களுக்கு விகல்பம் கூடும்படி என்னென்னில் : உபாயஸ்ஸுகரஸ்ஸோऽயம் துஷ்கரஞ்ச மதோ மம என்று அத்யவஸாய கௌரவத்தாலே குருவாகையாலே கூடும்.  லகுவானாலும் பக்த்யங்கங்களான கர்மங்களில் ஶாகாபேதத்தாலும் வர்ணாஶ்ரம பேதத்தாலும் குருலகூபாயமுண்டாயிருக்கச் செய்தே விகல்பம் கூடினாப்போலே இங்கும் விகல்பம்கூடும்.  உபாயாந்தர நிஷேதமும், குருலகு விகல்பமும், அங்காங்கிபாவமும், விஷய பேதமும், அதிகார பேதம் தொடக்கமானவத்தாலே க4டிக்கும்.

     ஆக, அகிலபுவந ஜந்மஸ்தேமபங்காதிலீலனாய், விதிஶிவ ஶதமக ப்ரமுகநிகில தேவதா நிர்வாஹகனாய், முமுக்ஷூபாஸ்யனாய், மோக்ஷ ப்ரதனாயிருந்துள்ள நாராயணனுக்கு தேஹேந்த்ரியாதி விலக்ஷணரான ஸமஸ்தாத்மாக்களும் ஸர்வப்ரகார பரதந்த்ரர்; அவர்களுக்கு ஸ்வரூபாநுகுண புருஷார்த்தம் ஸகல பாஹ்ய குத்ருஷ்டி த்ருஷ்ட மோக்ஷ விலக்ஷணமான பரமாத்ம கைங்கர்யம், தத்ப்ரதிபந்தகீ பூதாஜ்ஞாதி லங்கந ஜநித பகவந் நிக்ரஹ நிபர்ஹணோபாயம் நிகில ஜந்து ஜாத ஶரண்ய ஶ்ரீமந்நாராயண சரணாரவிந்த ஶரணாகதி: என்கிற ஜ்ஞாந விஶேஷம் தத்த்வ ஜ்ஞாநமாவது.

ப்ராப்யபூத பரப்ரஹ்மாத்யர்த்த பஞ்சகநிர்ணய: |

தத்த்வஶேகர நாமோயம் லோகாசார்யேண தர்ஶித: ||

பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்

பஞ்சமம் ப்ரகரணம் ஸம்பூர்ணம்

தத்த்வஶேகரம் ஸம்பூர்ணம்

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.