தத்வத்ரயம் அசித்ப்ரகரணம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த

தத்வத்ரயம்

அசித்ப்ரகரணம் 2.

 1. அசித்து – ஜ்ஞாநஶூந்யமாய், விகாராஸ்பதமாயிருக்கும்.
 2. இது ஶுத்தஸத்வமென்றும், மிஶ்ரஸத்வமென்றும், ஸத்வஶூந்ய மென்றும் த்ரிவிதம்.
 3. இதில் ஶுத்தஸத்வமாவது – ரஜஸ்தமஸ்ஸுக்கள் கலசாதே கேவல ஸத்வமாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்தஜநகமாய், கர்மத்தா லன்றிக்கே கேவல பகவதிச்சையாலே விமாந, கோபுர, மண்டப, ப்ராஸாதாதிரூபேண பரிணமிக்கக்கடவதாய், நிரவதிக தேஜோ ரூபமாய், நித்யமுக்தராலும் ஈஶ்வரனாலும் பரிச்சேதிக்கவரிதாய், அத்யத்புதமாயிருப்பதொன்று.
 4. இத்தைச்சிலர் ஜடமென்றார்கள்; சிலர் அஜடம் என்றார்கள்.
 5. அஜடமானபோது – நித்யர்க்கும், முக்தர்க்கும், ஈஶ்வரனுக்கும், ஜ்ஞாநத்தை யொழியவும் தோற்றும்.
 6. ஸம்ஸாரிகளுக்குத் தோற்றது. –
 7. ஆத்மாவிலும், ஜ்ஞாநத்திலும் பிந்நமானபடியென்? என்னில்;
 8. ‘நான்’ என்று தோற்றாமையாலும், ஶரீரங்களாய்ப் பரிணமிக்கை யாலும், விஷயங்களையொழியவும் தானே தோற்றுகையாலும்,ஶப்த ஸ்பர்ஶாதிகள் உண்டாகையாலும் பிந்நமாகக் கடவது.
 9. மிஶ்ர ஸத்வமாவது – ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் மூன்றோ டுங்கூடி பத்தசேதநருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்குத் திரோதாயக மாய், விபரீதஜ்ஞாநஜநகமாய், நித்யமாய், ஈஶ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய், ப்ரதேஶபேதத்தாலும், காலபேதத்தாலும் ஸத்ருஶமாயும், விஸத்ருஶமாயுமிருக்கும் விகாரங்களை உண்டாக்கக் கடவதாய், “ப்ரக்ருதி – அவித்யை – மாயை” என்கிற பேர்களை உடைத்தாயிருக் கும் அசித் விஶேஷம்.
 10. ப்ரக்ருதியென்கிறது – விகாரங்களைப் பிறப்பிக்கையாலே அவித்யை என்கிறது – ஜ்ஞாநவிரோதியாகையாலே; மாயை என்கிறது – விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே.
 11. இதுதான் “பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரிய மைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்காரமனங்களே” (திருவாய் 10-7-10) என்கிறபடியே, இருபத்து நாலு தத்வமாயிருக்கும்.

88. இதில் ப்ரதமதத்வம் – ப்ரக்ருதி.

 1. இது – அவிபக்த தமஸ்ஸென்றும், விபக்த தமஸ்ஸென்றும், அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை உடைத்தாயிருக்கும்.
 2. இதில் நின்றும் குணவைஷம்யத்தாலே மஹதாதி விகாரங்கள் பிறக்கும்.
 3. குணங்களாகிறன – ஸத்வ – ரஜஸ் – தமஸ்ஸுக்கள்.
 4. இவை ப்ரக்ருதிக்கு ஸ்வரூபாநுபந்திகளான ஸ்வபாவங்களாய், ப்ரக்ருத்யவஸ்தையில் அநுத்பூதங்களாய், விகாரதஶையில் உத்பதங் களாயிருக்கும்.
 5. ஸத்வம் – ஜ்ஞாந ஸுகங்களையும், உபய ஸங்கத்தையும் பிறப்பிக்கும்.
 6. ரஜஸ்ஸு- ராகத்ருஷ்ணா ஸங்கங்களையும், கர்மஸங்கத்தையும் பிறப்பிக்கும்.
 7. தமஸ்ஸு – விபரீதஜ்ஞாநத்தையும், அநவதாநத்தையும், ஆலஸ் யத்தையும், நித்ரையையும் பிறப்பிக்கும்.
 8. இவை ஸமங்களானபோது – விகாரங்கள் ஸமங்களுமாய், அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்; விஷமங்களான போது–விகாரங்கள் விஷமங்களுமாய், ஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்.
 9. விஷம விகாரங்களில் ப்ரதமவிகாரம் – மஹாந்.
 10. இது ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று த்ரிவிதமாய், அத்யவஸாய ஜநகமாய் இருக்கும்.
 11. இதில் நின்றும் – வைகாரிகம், தைஜஸம், பூதாதி, என்று தரிவித மான அஹங்காரம் பிறக்கும்.
 12. அஹங்காரம் – அபிமாந ஹேதுவாயிருக்கும். –
 13. இதில் – வைகாரிகத்தில் நின்றும் “ஶ்ரோத்ர த்வக் சக்ஷர் ஜிஹ்வா க்ராணங்கள்” என்கிற ஜ்ஞாநேந்த்ரியங்களைந்தும் “வாக் பாணி பாத பாயூபஸ்தங்கள்” என்கிற கர்மேந்த்ரியங்களைந்தும், மநஸ்ஸும் ஆகிற பதினொரு இந்த்ரியங்களும் பிறக்கும்.
 14. பூதாதியில் நின்றும் ஶப்ததந்மாத்ரை பிறக்கும்; இதில் நின்றும்- ஆகாஶமும், ஸ்பர்ஶதந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் வாயுவும், ரூபதந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் தேஜஸ் ஸும், ரஸதந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் – அப்பும், கந்த, தந்மாத்ரையும் பிறக்கும்; இதில் நின்றும் – ப்ருதிவி பிறக்கும். –
 15. ஸ்பர்ஶ தந்மாத்ரை தொடக்கமான நாலு தந்மாத்ரைகளும் – ஆகாஶம் தொடக்கமான நாலு பூதங்களுக்கும் கார்யமாய். வாயு தொடக்கமான நாலு பூதங்களுக்கும் காரணமாய் இருக்கும் என்றுஞ் சொல்லுவர்கள்.
 16. தந்மாத்ரங்களாவன – பூதங்களினுடைய ஸூக்ஷ்மாவஸ்தைகள்,
 17. மற்றை இரண்டு அஹங்காரமும் ஸ்வகார்யங்களைப் பிறப்பிக் கும்போது, ராஜஸாஹங்காரம் ஸஹகாரியாயிருக்கும்.
 18. ஸாத்விகாஹங்காரம் ஶப்ததந்மாத்ராதி, பஞ்சகத்தையும் அடைவே ஸஹகாரியாய்க்கொண்டு, ஶ்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரியங் களைந்தையும் ஸ்ருஷ்டிக்கும்; தத் ஸஹக்ருதமாய்க்கொண்டு வாகாதி கர்மேந்த்ரியங்களைந்தையும் ஸ்ருஷ்டிக்கும் ; இவற்றை யொழியத் தானே மநஸ்ஸை ஸ்ருஷ்டிக்கும் என்றுஞ் சொல்லு வர்கள்.
 19. சிலர் – இந்த்ரியங்களிலே சிலவற்றை பூதகார்யம் என்றார்கள்.
 20. அது ஶாஸ்த்ரவிருத்தம் .
 21. பூதங்கள் ஆப்யாயகங்களித்தனை.
 22. இவை கூடினாலல்லது கார்யகரமல்லாமையாலே, மண்ணை யும், மணலையும், நீரையுஞ் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிச் சுவரிடு வாரைப்போலே, ஈஸ்வரன் – இவற்றையெல்லாம் தன்னிலே சேர்த்து ஒரு அண்டமாக்கி, அதுக்குள்ளே சதுர்முகனை ஸ்ருஷ்டித்தருளும்.
 23. அண்டத்தையும், அண்ட காரணங்களையும் தானேயுண்டாக்கும்; அண்டத்துக்குட்பட்ட வஸ்துக்களைச் சேதநர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்கும்.
 24. அண்டங்கள்தான் – அநேகங்களாய், பதினாலு லோகங்களோடே கூடி ஒன்றுக்கொன்று பதிற்றுமடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப்பட்டு, ஈஶ்வரனுக்கு க்ரீடா கந்துக ஸதாநீயங்களாய், ஜலபுத்பதம்போலே ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்.
 25. பூதங்களில் ஆகாஶம் – அவகாஶஹேது, வாயுவஹநாதி, ஹேது, தேஜஸ்ஸு – பசநாதிஹேது, ஜலம் – ஸேசந பிண்டீகரணாதி ஹேது, ப்ருதிவி – தாரணதிஹேது என்பர்கள்.

    114, ஶ்ரோத்ராதி, ஜ்ஞாநேந்த்ரியங்களைந்துக்கும் – அடைவே ஶப்தாதிகளைந்தையும் க்ரஹிக்கை தொழில்; வாகாதி கர்மேந்த்ரியங் களைந்துக்கும், விஸர்க்க – ஶில்ப – கதி உக்திகள் தொழில்; மநஸ்ஸு – இவை இத்தனைக்கும் பொது.

 1. ஆகாஶாதி பூதங்களுக்கு – அடைவே ஶப்தாதிகள் குணங்களா யிருக்கும்.
 2. குணவிநிமயம் – பஞ்சீகரணத்தாலே.
 3. ஆகாஶம் கறுத்துத் தோற்றுகிறதும் – அத்தாலே.
 4. முன்புற்றை தந்மாத்ரைகளோடே கூடிக் கொண்டு, உத்தரோத்தர தந்மாத்ரைகள்–ஸ்வவிஶேஷங்களைப் பிறப்பிக்கையாலே குணாதிக்ய முண்டாயிற்று என்றும் சொல்லுவர்கள்.
 5. ஸத்வஸூந்யமாவது – காலம்.
 6. இது, ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய், கலாகாஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய், நித்யமாய், ஈஶ்வரனுக்கு க்ரீடாபரிகரமாய், ஶரீரபூதமாயிருக்கும்.
 7. மற்றை இரண்டு அசித்தும் ஈஶ்வரனுக்கும், ஆத்மாவுக்கும், போக்ய போகோபகரண போகஸ்தாநங்களா யிருக்கும்.
 8. போக்யங்களாகிறன – விஷயங்கள்; போகோபகரணங்களாகிறன சக்ஷுராதிகரணங்கள்; போகஸ்தாநங்களாகிறன – சதுர்தஶ புவநங்களும், ஸமஸ்த தேஹங்களும்,
 9. இதில் முற்பட்ட அசித்துக்கு – கீழெல்லையுண்டாய், சுற்றும் மேலும் எல்லேயின்றிக்கேயிருக்கும்; நடுவில் அசித்துக்கு – சுற்றுங் கீழும் எல்லையின்றிக்கே மேல் எல்லையுண்டாயிருக்கும்; காலம் – எங்குமொக்கவுண்டாயிருக்கும்.
 10. ”காலந்தான் – பரமபதத்திலே நித்யம், இங்கு அநித்யம்” என்றும் சொல்லுவர்கள்.
 11. சிலர் காலத்தை இல்லையென்றார்கள்.
 12. ப்ரத்யக்ஷத்தாலும், ஆகமத்தாலும் ஸித்திக்கையாலே அது சொல்லவொண்ணாது.
 13. பலரும் திக்கென்று தனியே ஒரு த்ரவ்யம் உண்டென்றார்கள்.
 14. பல ஹேதுக்களாலும், ஆகாஶாதிகளிலே அந்தர்பூதமாகையாலே அதுவும் சேராது.
 15. சிலர் – “ஆவரணாபாவம் ஆகாஶம்” என்றார்கள்.
 16. பாவரூபேண தோற்றுகையாலே அதுவும்சேராது.
 17. வேறே சிலர், இதுதன்னை -நித்யம், நிரவயவம், விபு, அப்ரத்யக்ஷமென்றார்கள்.
 18. பூதாதியிலே பிறக்கையாலும், அஹங்காராதிகளில் இல்லாமை யாலும், கண்ணுக்கு விஷயமாகையாலும், அவை நாலும் சேராது.
 19. த்வகிந்த்ரியத்தாலே தோற்றுகையாலே, வாயு அப்ரத்யக்ஷ மென்கிறவதுவும் சேராது.
 20. தேஜஸ்ஸு பெளமாதிபேதத்தாலே பஹுவிதம்.
 21. அதில் – ஆதித்யாதி, தேஜஸ்ஸு ஸ்திரம், தீபாதிதேஜஸ்ஸு அஸ்திரம்.
 22. தேஜஸ்ஸுக்கு – நிறம் சிவப்பு, ஸ்பர்ஶம்  ஒளஷ்ண்யம்,
 23. ஜலத்துக்கு – நிறம் வெளுப்பு, ஸ்பர்ஶம் ஶைத்யம், ரஸம் மாதுர்யம்.

 138, பூமிக்கு – நிறமும், ரஸமும் ப.ஹுவிதம்.

 1. ஸ்பர்ஶம் – இதுக்கும், வாயுவுக்கும், அநுஷ்ணா ஶீதம்.
 2. இப்படி அசித்து மூன்றுபடிப்பட்டிருக்கும்.

அசித்ப்ரகரணம் முற்றிற்று.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

 • Free copy of the publications of the Foundation
 • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
 • Free access to the library and research facilities at the Foundation
 • Free entry to the all events held at the Foundation premises.