[highlight_content]

தத்வத்ரயம் ஈஶ்வரப்ரகரணம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த

 தத்வத்ரயம்

ஈஶ்வரப்ரகரணம் 3.

 1. ஈஸ்வரன் – அகிலஹேய ப்ரத்யநீகாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாய், ஜ்ஞாந ஶக்த்யாதி, கல்யாண குணகணபூஷிதனாய், ஸகலஜகத் ஸர்க்கஸ்திதி ஸம்ஹாரகர்த்தாவாய், ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ என்கிற சதுர்வித, புருஷர்களுக்கும் ஆஶ்ரயணீயனாய், தர்மார்த்தகாமமோக்ஷாக்ய சதுர்வித பலப்ரத னாய், விலக்ஷண விக்ரஹயுக்தனாய், லக்ஷ்மீ பூமிநீளா நாயகனா யிருக்கும்.
 2. அகிலஹேயப்ரத்யநீகனாகையாவது – தமஸ்ஸுக்குத் தேஜஸ்ஸு போலேயும், ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும், விகாராதிதோஷங்களுக்கு ப்ரதிபடனாயிருக்கை.
 3. அநந்தனாகையாவது – நித்யனாய், சேதநாசேதநங்களுக்கு வ்யாபகனாய், அந்தர்யாமியாய் இருக்கை,
 4. அந்தர்யாமியானால் தோஷங்கள் வாராதோ வென்னில்;
 5. ஶரீரகதங்களான பால்யாதிகள் – ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே, த்ரிவித சேதநாசேதநதோஷமும் ஈஸ்வரனுக்கு வாராது.
 6. ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாகையாவது – ஆநந்தரூப ஜ்ஞாநனாயிருக்கை,
 7. அதாவது – கட்டடங்க அநுகூலமாய், ப்ரகாஶமுமாயிருக்கை .
 8. இவனுடைய ஜ்ஞாந ஶக்த்யாதி, கல்யாணகுணங்கள் – நித்யங்களாய், நிஸ்ஸீமங்களாய், நிஸ்ஸங்க்யங்களாய், நிருபாதி, கங்களாய், நிர்தோஷங்களாய், ஸமாநாதிகரஹிதங்களாயிருக்கும்.
 9. இவற்றில் வாத்ஸல்யாதிகளுக்கு விஷயம் அநுகூலர் ; ஶௌர்யாதிகளுக்கு விஷயம் ப்ரதிகூலர் ; இவற்றுக்குக் காரணமான ஜ்ஞாந ஶக்த்யாதிகளுக்கு எல்லாரும் விஷயம்.
 10. ஜ்ஞாநம் – அஜ்ஞர்க்கு ; ஶக்தி – அஶக்தர்க்கு ; க்ஷமை – ஸாபராதர்க்கு ; க்ருபை – துக்கிகளுக்கு, வாத்ஸல்யம் – ஸதோஷர்க்கு ; ஶீலம் – மந்தர்க்கு ; ஆர்ஜவம் – குடிலர்க்கு, ஸௌஹார்தம் – துஷ்டஹ்ருதயர்க்கு; மார்த்தவம் – விஶ்லேஷபீருக் களுக்கு : ஸௌலப்யம் – காண ஆசைப்பட்டவர்களுக்கு ; இப்படி எங்கும் கண்டுகொள்வது.
 11. இப்படி ஈஶ்வரன் கல்யாணகுணங்களோடே கூடியிருக்கை யாலே, பிறர் நோவுகண்டால் “ஐயோ” என்றிரங்கி, அவர்களுக்கு எப்போதுமொக்க நன்மையைச் சிந்தித்து, தனக்கேயாயிருத்தல், தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருத்தல் செய்யாதே, நிலா, தென்றல், சந்தநம், தண்ணீர் போலே பிறர்க்கேயாய், தன்னை ஆஶ்ரயித்த வர்கள் பக்கல் ஜந்ம ஜ்ஞாந வ்ருத்தங்களாலுண்டான நிகர்ஷம் பாராதே, தாங்களும் பிறரும் தஞ்சமல்லாதபோது தான் தஞ்சமாய், ஸாந்தீபநி புத்ரனையும், வைதிகன் புத்ரர்களையும் மீட்டுக்கொண்டு வந்தாற்போலே அரியன செய்தும், அவர்கள் அபேக்ஷிதங்களைத் தலைக்கட்டியும், அவர்களுக்கு த்ருவபதம்போலே பண்டில்லாதவற் றையும் உண்டாக்கியும், தந்தாம் ஸ்வம் தாம்தாம் விநியோகங் கொண்டாற்போலேயிருக்கத் தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி, அவர்கள் கார்யம் தலைக்கட்டினால் தான் க்ருதக்ருத்ய னாய், தான் செய்த நன்மைகளொன்றையும் நினையாதே, அவர்கள் செய்த ஸுக்ருத லவத்தையே நினைத்து, அநாதிகாலம் வாஸிதங்க ளான ரஸங்களை மறக்கும்படி எல்லா தஶையிலும் இனியனாய், பார்யாபுத்ரர்கள் குற்றங்களைக் காணாக் கண்ணிட்டிருக்கும் புருஷ னைப் போலே அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தால் நினை யாதே, குற்றங்களைப் பெரியபிராட்டியார் காட்டினாலும் அவளோடே மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரக்ஷித்து, காமிநியுடைய அழுக்குகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களை போக்யமாகக்கொண்டு, அவர்கள்பக்கல் கரணத்ரயத்தாலும் செவ்விய னாய், பிரிந்தால் – அவர்கள் வ்யஸநம் குளப்படி என்னும்படி தானீடு பட்டு, அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத் தாழவிட்டு, அவர்க ளுக்குக் கட்டவும் அடிக்கவுமாம்படி எளியனாய், அன்றீன்ற கன்றுக் குத் தாயிரங்கி முன்னணைக் கன்றையும், புல்லிட வந்தவர்க ளையும் கொம்பிலுங்குளம்பிலும் ஏற்குமாபோலே பெரியபிராட்டியா ரையும், ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக் கொண்டு போரும்.

152 இவனே ஸகலஜகத்துக்கும் காரணபூதன்.

 1. சிலர் பரமாணுவைக் காரணமென்றார்கள்.
 2. பரமாணுவில் ப்ரமாணமில்லாமையாலும், ஶ்ருதிவிரோதத்தா லும் அது சேராது.
 3. காபிலர் – ப்ரதாநம் காரணமென்றார்கள்.

    156, ப்ரதாநம்- அசேதநமாகையாலும், ஈஶ்வரன், அதிஷ்டியாதபோது பரிணமிக்கமாட்டாமையாலும், ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்தை கூடாமையாலும், அதுவும் சேராது.

 1. சேதநனும் காரணமாகமாட்டான்.
 2. கர்ம பரதந்த்ரனுமாய், து:க்கியுமாயிருக்கையாலே.
 3. ஆகையால், ஈஶ்வரன்தானே ஜகத்துக்குக் காரணம்,
 4. இவன் காரணமாகிறது – அவித்யா கர்ம பரநியோகாதிகளால் அன்றிக்கே, ஸ்வேச்சையாலே.
 5. ஸ்வஸங்கல்பத்தாலே செய்கையாலே இதுதான் வருத்தமற் றிருக்கும்,
 6. இதுக்கு ப்ரயோஜநம் கேவலலீலை.
 7. ஆனால் ஸம்ஹாரத்தில் லீலை குலையாதோ ? என்னில்:
 8. ஸம்ஹாரந்தானும் லீலையாகையாலே குலையாது.
 9. இவன்தானே ஜகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதாநமுமா யிருக்கும்.
 10. ஆனால் நிர்விகாரனென்னும்படி என்னென்னில் ;
 11. ஸ்வரூபத்துக்கு விகாரமில்லாமையாலே ( நிர்விகாரனென்னக் குறையில்லை.)
 12. ஆனால் பரிணாமம் உண்டாம்படி என்னென்னில்;
 13. விஶிஷ்டவிஶேஷணஸத்வாரகமாக.
 14. ஒரு சிலந்திக்குண்டான ஸ்வபாவம் – ஸர்வ பக்திக்குக் கூடாதொழியாதிறே.
 15. ஈஶ்வரன் ஸ்ருஷ்டிக்கையாவது – அசித்தைப் பரிணமிப்பிக்கை யும், சேதநனுக்கு ஶரீரேந்த்ரியங்களைக் கொடுத்து ஜ்ஞாநவிகாஸத் தைப் பண்ணுகையும்.
 16. ஸ்திதிப்பிக்கையாவது – ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே பயிருக்கு நீர் நிலைபோலே, அநுகூலமாக ப்ரவேஶித்து நின்று ஸர்வ ரக்ஷைகளையும் பண்ணுகை,
 17. ஸம்ஹரிக்கையாவது – அவிநீதனான புத்ரனைப் பிதா விலங் கிட்டு வைக்குமாபோலே, விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களைக் குலைத்திட்டுவைக்கை.
 18. இம்மூன்றும் தனித்தனியே நாலு ப்ரகாரமாயிருக்கும்.

  175 ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மாவுக்கும், ப்ரஜாபதிகளுக்கும், காலத்துக் கும், ஸகல ஜந்துக்களுக்கும் அந்தர்யாமியாய் ரஜோகுணத்தோடே கூடி ஸ்ருஷ்டிக்கும்.

 1. ஸ்திதியில் – விஷ்ண்வாதிரூபேண அவதரித்து, மந்வாதிமுகேந ஶாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்து, நல்வழி காட்டி, காலத்துக்கும், ஸகலபூதங்களுக்கும் அந்தர்யாமியாய் ஸத்வகுணத்தோடே கூடி ஸ்திதிப்பிக்கும்.
 2. ஸம்ஹாரத்தில் ருத்ரனுக்கும், அக்ந்யந்தகாதிகளுக்கும், காலத்துக்கும், ஸகலபூதங்களுக்கும் அந்தர்யாமியாய் தமோகுணத் தோடே கூடி ஸம்ஹரிக்கும்.
 3. சிலரை ஸுகிகளாகவும், சிலரை து:க்கிகளாகவும் ஸ்ருஷ்டித் தால் ஈஶ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ? என்னில்;
 4. கர்மமடியாகச் செய்கையாலும், மண்தின்ற ப்ரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப்பண்ணும் மாதாவைப்போலே ஹிதபர னாய்ச் செய்கையாலும் வாராது.
 5. இவன்தான் “முந்நீர் ஞாலம் படைத்த என்முகில் வண்ணன்” (திருவாய் 3-2-1) என்கிறபடியே ஸவிக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்ட் யாதிகளைப் பண்ணும்.
 6. விக்ரஹந்தான் – ஸ்வரூபகுணங்களிலுங்காட்டில் அத்யந்தாபி. மதமாய், ஸ்வாநுரூபமாய், நித்யமாய், ஏகரூபமாய், ஶுத்தஸத்வாத் மகமாய், சேதநதேஹம் போலே ஜ்ஞாநமயமான ஸ்வரூபத்தை மறைக்கையன்றிக்கே, மாணிக்கச் செப்பிலே பொன்னையிட்டு வைத்தாற்போலேயிருக்க, பொன்னுருவான திவ்யாத்மஸ்வரூபத் துக்கு ப்ரகாஶகமாய், நிரவதிகதேஜோரூபமாய், ஸௌகுமார்யாதி, கல்யாணகுணகணநிதியாய், யோகித்யேயமாய், ஸகல ஜநமோஹந மாய், ஸமஸ்தபோகவைராக்யஜநகமாய், நித்யமுக்தாநுபாவ்யமாய், வாசத்தடம் போலே ஸகலதாபஹரமாய், அநந்தாவதாரகந்தமாய், ஸர்வரக்ஷகமாய், ஸர்வாபாஶ்ரயமாய், அஸ்த்ரபூஷணபூஷிதமா யிருக்கும்.
 7. ஈஶ்வரஸ்வரூபந்தான் – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யா மித்வம், அர்ச்சாவதாரம் என்று அஞ்சு ப்ரகாரத்தோடே கூடியிருக் கும்.
 8. அவற்றில் பரத்வமாவது – அகாலகால்யமான “நலமந்தமில்ல தோர்” (திருவாய் 2-8-4) நாட்டிலே நித்யமுக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு.
 9. வ்யூஹமாவது – ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்தமாகவும், உபாஸகாநுக்ரஹார்த்தமாக வும், ஸங்கர்ஷண – ப்ரத்யும்ந – அநிருத்த ரூபேண நிற்கும் நிலை.
 10. பரத்வத்தில் ஜ்ஞாநாதிகளாறும் பூர்ணமாயிருக்கும்; வ்யூஹத் தில் இவ்விரண்டு குணம் ப்ரகடமாயிருக்கும்.
 11. அதில் ஸங்கர்ஷணர் – ஜ்ஞாநபலங்களிரண்டோடுங்கூடி ஜீவதத்வத்தை அதிஷ்டித்து, அத்தை ப்ரக்ருதியில் நின்றும் விவேகித்து, ப்ரத்யும்நாவஸ்தையையும் பஜித்து, ஶாஸ்த்ரப்ரவர்த்த நத்தையும், ஜகத்ஸம்ஹாரத்தையும் பண்ணக்கடவராயிருப்பர்.
 12. ப்ரத்யும்நர் – ஐஶ்வர்யவீர்யங்களிரண்டோடுங்கூடி, மநஸ் தத்வத்தை அதிஷ்டித்து, தர்மோபதேஶத்தையும், மநுசதுஷ்டயம் தொடக்கமான ஶுத்தவர்க்க ஸ்ருஷ்டியையும் பண்ணக்கடவரா யிருப்பர்.
 13. அநிருத்தர் ஶக்தி தேஜஸ்ஸுக்களிரண்டோடுங் கூடி, ரக்ஷணத் துக்கும், தத்வஜ்ஞாநப்ரதாநத்துக்கும், காலஸ்ருஷ்டிக்கும், மிஶ்ர ஸ்ருஷ்டிக்கும் கடவராயிருப்பர்.
 14. விபவம் அநந்தமாய், கௌண முக்ய பேதத்தாலே பேதித்தி ருக்கும்.
 15. மநுஷ்யத்வம், திர்யக்த்வம், ஸ்தாவரத்வம் போலே கெளணத்வ மும் இச்சையாலே வந்தது; ஸ்வரூபேண அன்று.
 16. அதில் அப்ராக்ருத விக்ரஹங்களுமாய், அஜஹத் ஸ்வபாவ விபவங்களுமாய், தீபாதுத்பந்ந ப்ரதீபம் போலேயிருக்கக்கடவதான முக்ய ப்ராதுர்பாவங்களெல்லாம் முமுக்ஷக்களுக்கு உபாஸ்யங்களா யிருக்கும்.
 17. விதி, ஶிவ பாவக வ்யாஸ ஜாமதக்ந்யார்ஜுந வித்தேஶாதி களாகிற கௌண ப்ராதுர்பாவங்களெல்லாம் அஹங்காரயுக்த ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே முமுக்ஷக்களுக்கு அநு பாஸ்யங்கள்,
 18. நித்யோதித ஶாந்தோதிதாதிபேதமும், ஜாக்ரத் ஸம்ஜ்ஞாதியான சாதுராத்ம்யமும், கேஶவாதி, மூர்த்யந்தரமும், ஷட்த்ரிம்ஶத் பேத பிந்நமான பத்மநாபாதி விபவமும், உபேந்தர த்ரிவிக்ரம ததிபக்த ஹயக்ரீவ நரநாராயண ஹரி க்ருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாத் யவதார விஶேஷங்களும், அவற்றினுடைய புஜ . ஆயுத, – வர்ண – க்ருத்ய – ஸ்தாநாதி. – பேதங்களும், துரவதரங்களுமாய், குஹ்யதமங் களுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்.
 19. அவதாரங்களுக்கு ஹேது இச்சை.
 20. பலம் ஸாதுபரித்ராணாதி த்ரயம்.
 21. பல ப்ரமாணங்களிலும் ப்ருகு ஶாபாதிகளாலே பிறந்தானென் கையாலே, அவதாரங்களுக்கு ஹேது கர்மமாக வேண்டாவோ? என்னில்,
 22. அவை தன்னிலே ஶாபம் வ்யாஜம்; அவதாரம் ஐச்சிகமென்று பரிஹரித்தது.
 23. அந்தர்யாமித்வமாவது – அந்த:ப்ரவிஶ்ய நியந்தாவாயிருக்கை.
 24. ஸ்வர்க்க நரகப்ரவேஶாதி, ஸர்வாவஸ்தைகளிலும், ஸகல சேதநர்க்கும் துணையாய், அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே ஶுபாஶ்ரயமான திருமேனியோடே கூடிக்கொண்டு, அவர்க ளுக்கு த்யேயனாகைக்காகவும், அவர்களை ரக்ஷிக்கைக்காகவும், பந்துபூதனாய்க்கொண்டு ஹருதய கமலத்திலே எழுந்தருளியிருக்கு மிருப்பு.
 25. அர்ச்சாவதாரமாவது – “தமருகந்ததெவ்வுருவ மவ்வுருவம்” (முதல் திருவ 44) என்கிறபடியே சேதநர்க்கு அபிமதமான த்ரவ்யத் திலே விபவவிஶேஷங்கள் போலன்றிக்கே, தேஶ காலாதிகாரி நியமமில்லாதபடி ஸந்நிதிபண்ணி , அபராதங்களைக் காணாக்கண் ணிட்டு, அர்ச்சகபரதந்த்ரமான ஸமஸ்தவ்யாபாரங்களையும் உடைய னாய்க்கொண்டு, கோயில்களிலும், க்ருஹங்களிலும் எழுந்தருளி நிற்கும் நிலை.
 26. ருசிஜநகத்வமும், ஶுபாஶ்ரயத்வமும், அஶேஷலோக ஶரண்யத் வமும், அநுபாவ்யத்வமும் எல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரிபூர்ணம்.
 27. ஸ்வஸ்வாமிபாவத்தை மாறாடிக்கொண்டு அஜ்ஞரைப் போலே யும், அஶக்தரைப்போலேயும், அஸ்வதந்த்ரரைப் போலேயும் இருக்கச் செய்தேயும், அபாரகாருண்ய பரவஶனாய்க்கொண்டு ஸர்வாபேக்ஷி தங்களையும் கொடுத்தருளும்.

பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.

ஜீயர் திருவடிகளே ஶரணம்.

தத்வத்ரயம் முற்றிற்று.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

 • Free copy of the publications of the Foundation
 • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
 • Free access to the library and research facilities at the Foundation
 • Free entry to the all events held at the Foundation premises.