பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
தத்வத்ரயம்
சித்ப்ரகரணம்
1. முமுக்ஷவான சேதநனுக்கு மோக்ஷமுண்டாம் போது தத்வத்ரய ஜ்ஞாநமுண்டாக வேணும்.
2. தத்வத்ரயமாவது – சித்தும், அசித்தும், ஈஶ்வரனும்.
3. சித்தென்கிறது–ஆத்மாவை.
4. ஆத்மஸ்வரூபம் – “சென்று சென்று பரம்பரமாய்” (திருவாய் 8-8-5) என்கிறபடியே தே3ஹேந்த்3ரிய – மந: – ப்ராண – புத்தி, விலக்ஷண மாய், அஜடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்த மாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞாநாஶ்ரய மாய், ஈஸ்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய் ஶேஷமாயிருக்கும்.
5. ஆத்மஸ்வரூபம் – தேஹாதி,விலக்ஷணமானபடி யென்? என்னில்.
6. தேஹாதிகள் “என்னுடைய” தேஹாதிகள் என்று ஆத்மாவில் வேறுபட்டுத் தோற்றுகையாலும், “இதம்” என்று தோற்றுகையாலும், ஆத்மா “நான்” என்று தோற்றுகையாலும், இவை – ஒருகால் தோற்றி ஒருகால் தோற்றாமையாலும், ஆத்மா எப்போதும் தோற்றுகை யாலும், இவை பலவாகையாலும், ஆத்மா ஒருவனாகையாலும், ஆத்மா இவற்றில் விலக்ஷணனென்று கொள்ள வேணும்.
7. இந்த யுக்திகளுக்குக் கண்ணழிவுண்டேயாகிலும், ஶாஸ்த்ர பலத் தாலே ஆத்மா தேஹாதி விலக்ஷணனாகக் கடவன்.
8. அஜடமாகையாவது – ஜ்ஞாநத்தையொழியவும் தான் தோற்றுகை.
9. ஆநந்தரூபமாகையாவது – ஸுகரூபமாயிருக்கை.
10. உணர்ந்தவன் “ஸுகமாக உறங்கினேன்” என்கையாலே ஸுகரூப மாகக் கடவது.
11. நித்யமாகையாவது – எப்போதுமுண்டாகை.
12. எப்போதுமுண்டாகில், ஐந்மமரணங்கள் உண்டாகிறபடியென் ? என்னில், ஜன்மமாவது – தே,ஹஸம்பந்தம். மரணமாவது – தேஹ வியோகம்.
13. அணுவானபடியென் ? என்னில்.
14. ஹ்ருதய ப்ரதேஶத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதா மென்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக்கடவது.
15. அணுவாய் ஹ்ருதயத்தளவிலே நிற்குமாகில் ஶரீரமெங்குமொக்க ஸுக.துக்கங்களை பு.ஜிக்கிறபடியென்? என்னில்.
16. மணித்,யுமணி தீ,பாதிகள் ஓரிடத்திலேயிருக்க, ப்ரபை, எங்கு மொக்க வ்யாபிக்குமாபோலே, ஜ்ஞானம் எங்குமொக்க வ்யாபிக்கை யாலே, அவற்றை பு.ஜிக்கத் தட்டில்லை.
17. ஒருவன் ஏககாலத்திலே அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக் கிறதும் ஜ்ஞாநவ்யாப்தியாலே.
18. அவ்யக்தமாகையாவது – கடபடாதிகளை க்ரஹிக்கிற சக்ஷுராதி களால் தோற்றாதிருக்கை.
19. அசிந்த்யமாகையாவது – அசித்தோடு ஸஜாதீயமென்று நினைக்க வொண்ணாதிருக்கை.
20. நிரவயவமாகையாவது – அவயவஸமுதாயமின்றிக்கே யிருக்கை.
21. நிர்விகாரமாகையாவது – அசித்துப்போலே விகரிக்கையன்றிக்கே ஒருபடிப்பட்டிருக்கை.
22. இப்படியிருக்கையாலே – ஶஸ்த்ரம், அக்நி, ஜலம், வாதம், ஆதபம் தொடக்கமானவற்றால் சேதித்தல், தஹித்தல், நனைத்தல், ஶோஷிப் பித்தல் செய்கைக்கு அயோக்யமாயிருக்கும்.
23. ஆர்ஹதர் – ஆத்மாவை தேஹபரிமாணம் என்றார்கள்.
24. அது ஶ்ருதி விருத்தம்.
25. அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு ஶைதி,ல்ய(மு)ம் வரும்.
26, ஜ்ஞாநாஶ்ரயமாகையாவது – ஜ்ஞானத்துக்கு இருப்பிடமா யிருக்கை.
27. ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடமின்றிக்கே ஜ்ஞாநமாத்ரமாகில்;
28. ‘நான் அறிவு’ என்று சொல்லவேணும், “நான் அறியாநின்றேன்” என்னக் கூடாது.
29. ஜ்ஞாதா என்றபோதே – கர்த்தா, போக்தா என்னுமிடம் சொல்லிற் றாயிற்று.
30. கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞாநாவஸ்தா விஶேஷங்களாகை யாலே.
31. சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வமுள்ளது, ஆத்மாவுக்கு இல்லை யென்றார்கள்.
32. அப்போது இவனுக்கு ஶாஸ்த்ரவஶ்யதையும், போக்த்ருத்வமும் குலையும்.
33. ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளில் கர்த்ருத்வம் ஸ்வரூப ப்ரயுக்த மன்று.
34. குணஸம்ஸர்க்கக்ருதம்.
35. கர்த்ருத்வந்தான் ஈஶ்வராதீநம்.
36. ஜ்ஞாநாஶ்ரயமாகில் ஶாஸ்த்ரங்களிலே இவனை “ஜ்ஞானம்” என்று சொல்லுவானென்? என்னில்;
37. ஜ்ஞானத்தை யொழியவும் தன்னையறிகையாலும், ஜ்ஞாநம் ஸாரபூதகுணமாய் நிரூபக தர்மமாயிருக்கையாலும் சொல்லிற்று.
38. நியாம்யமாகையாவது – ஈஶ்வரபுத்த்ய தீநமாக எல்லா வ்பாபாரங் களும் உண்டாம்படியிருக்கை.
39. தார்யமாகையாவது – அவனுடைய ஸ்வரூப ஸங்கல்பங்களை யொழிந்தபோது தன் ஸத்தையில்லையாம்படி யிருக்கை .
40 ஶேஷமாகையாவது – சந்தநகுஸும தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்டவிநியோகார்ஹமாயிருக்கை.
41. இதுதான் – க்ருஹ க்ஷேத்ர புத்ர களத்ராதிகளைப் போலே ப்ருதக் ஸ்தித்யாதிகளுக்கு யோக்யமாம்படி யிருக்கையன்றிக்கே ஶாரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாயிருக்கை.
42. ஆத்மஸ்வரூபந்தான் பத்த, முக்த நித்ய ரூபேண மூன்றுபடிப் பட்டிருக்கும்.
43. பத்தரென்கிறது – ஸம்ஸாரிகளை,
44. முக்தரென்கிறது ஸம்ஸார ஸம்பந்தமற்றவர்களை.
45. நித்யரென்கிறது ஒரு நாளும் ஸம்ஸரியாத ஶேஷ ஶேஷாஶ நாதிகளை,
46. ஜலத்துக்கு அக்நிஸம்ஸ்ருஷ்ட ஸ்தாலீ ஸம்ஸர்க்கத்தாலே ஔஷ்ண்யஶப்தாதிகள் உண்டாகிறாப் போலே, ஆத்மாவுக்கு அசித் ஸம்பந்தத்தாலே அவித்யா கர்ம வாஸநா ருசிகள் உண்டாகிறன.
47. அசித்துக் கழிந்தவாறே அவித்யாதிகள் கழியும் என்பர்கள்.
48. இம்மூன்றும் தனித்தனியே அநந்தமாயிருக்கும்.
49. சிலர் “ஆத்மபேதமில்லை, ஏகாத்மாவேயுள்ளது” என்றார்கள்.
50. அந்தப் பக்ஷத்தில் ஒருவன் ஸுகி,க்கிற காலத்திலே வேறே யொருவன் துக்கிக்கக் கூடாது.
51. அது தேஹ பேதத்தாலே என்னில்:
52. ஸௌபரி ஶரீரத்திலும் அது காணவேணும்.
53. ஒருவன் ஸம்ஸரிக்கையும், ஒருவன் முக்தனாகையும், ஒருவன் ஶிஷ்யனாகையும், ஒருவன் ஆசார்யனாகையும் கூடாது.
54. விஷம ஸ்ருஷ்டியும் கூடாது.
55. ஆத்மபோதம் சொல்லுகிற ஶ்ருதியோடும் விரோதிக்கும்.
56. ஶ்ருதி ஒளபாதிக பேதத்தைச் சொல்லுகிறதென்ன வொண்ணது.
57. மோக்ஷதஶையிலும் பேதம் உண்டாகையாலே.
58. அப்போது தேவமநுஷ்யாதி, பேதமும், காமக்ரோதாதி, பேதமும் கழிந்து, ஆத்மாக்கள் ஸ்வரூபம் அத்யந்தம் ஸமமாய், ஒருபடி யாலும் பேதஞ்சொல்லவொண்ணாதபடி யிருந்ததேயாகிலும்;
59. பரிமாணமும், எடையும், ஆகாரமும் ஒத்திருக்கிற-பொற்குடங்கள், ரத்நங்கள், வ்ரீஹிகள் தொடக்கமானவற்றிற்கு பேதமுண்டாகிறாப் போலே ஸ்வரூப பேதமும் ஸித்தம்.
60. ஆகையால் ஆத்மபேதம் கொள்ள வேணும்,
61. இப்போது இவர்களுக்கு லக்ஷணம் ஶேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.
62. இவர்களுடைய ஜ்ஞாநந்தான் – ஸ்வரூபம் போலே நித்யத்ரவ்ய மாய், அஜடமாய், ஆநந்தரூபமாயிருக்கும்.
63. ஆனால் ஜ்ஞாநத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் வாசியென்னென் னில்:
64. ஸ்வரூபம் – தர்மியாய், ஸங்கோச விகாஸங்களுக்கு அயோக்ய மாய், தன்னையொழிந்தவற்றை ப்ரகாஶிப்பியாமலே தனக்குத் தான் ப்ரகாஶிக்கக்கடவதாய், அணுவாயிருக்கும்; ஜ்ஞாநம்-தர்மமாய், ஸங்கோச விகாஸங்களுக்கு யோக்யமாய், தன்னையொழிந்தவற்றை ப்ரகாஶிப்பிக்கக் கடவதாய், தனக்குத் தான் ப்ரகாஶியாதே ஆத்மாவு க்கு ப்ரகாஶிக்கக்கடவதாய், விபுவாயிருக்கும்.
65. அதில் சிலருடைய ஜ்ஞாநம் எப்போதும் விபுவாயிருக்கும்; சிலருடைய ஜ்ஞாநம் எப்போதும் அவிபுவாயிருக்கும் ; சிலருடைய ஜ்ஞாநம் ஒரு கால் அவிபுவாய், ஒருகால் விபுவாயிருக்கும்.
66. ஜ்ஞாநம்-நித்யமாகில் “எனக்கு ஜ்ஞாநம் பிறந்தது, நஶித்தது” என்கிற படியென் ? என்னில்:
67. இந்த்ரிய த்வாரா ப்ரஸரித்து விஷயங்களை க்ரஹிப்பது, மீளுவ தாகையாலே அப்படி சொல்லக்குறையில்லை .
68. இதுதான் ஏகமாயிருக்கச்செய்தே நாநாவாய்த் தோற்றுகிறது – ப்ரஸரண பேதத்தாலே.
69. த்ரவ்யமானபடியென்? என்னில்,
70. க்ரியாகுணங்களுக்கு ஆஶ்ரயமாய், அஜட,மாய், ஆநந்தரூபமா யிருக்கையாலே, த்ரவ்யமாகக்கடவது.
71. அஜடமாகில் ஸுஷுப்தி மூர்ச்சாதிகளில் தோற்றவேண்டாவோ? என்னில்.
72. ப்ரஸரணமில்லாமையாலே தோற்றாது.
73.ஆநந்தரூபமாகையாவது – ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்போது அநுகூல மாயிருக்கை.
74. விஷஶஸ்த்ராதிகளைக் காட்டும்போது ப்ரதிகூலமாயிருக்கைக்கு அடி – தேஹாத்ம ப்ரமாதிகள்.
75. ஈஶ்வராத்மகமாகையாலே எல்லாப் பதார்த்தங்களுக்கும் ஆநு கூல்யமே ஸ்வபாவம் ; ப்ராதிகூல்யம் வந்தேறி.
76. மற்றை ஆநுகூல்யம் ஸ்வாபாவிகமாகில், ஒருவனுக்கு ஒருகால் ஓரிடத்திலே அநுகூலங்களான சந்தநகுஸுமாதிகள், தேஶாந்தகரே காலாந்தரே – இவன் தனக்கும், அத்தேஶத்திலே அக்காலத்திலே வேறே ஒருவனுக்கும் ப்ரதிகூலங்களாகக் கூடாது.
சித்ப்ரகரணம் முற்றிற்று.