[highlight_content]

ஜீயர்படி திருவாராதனக்ரமம்

ஜீயர்படி திருவாராதனக்ரமம்

ஶ்ரீவைஷ்ணவர்கள் அநுதினமும் எம்பெருமானுக்குச் செய்யவேண்டிய திருவாராதனத்தைப் பற்றி எம்பெருமானார், வங்கிபுரத்து நம்பி, ஶ்ரீபராஶரபட்டர் ஆகியோர் திருவாராதனக்ரம நூல்களை அருளிச் செய்துள்ளனர். அவை அனைத்தும் ஸம்ஸ்க்ருத மொழியில் மிக விரிவாக அமைந்துள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டு அநுஷ்டிப்பது மிகவும் ஶ்ரமமானது என்பதனால், நம் போன்றவர்களிடம் மிகவும் கருணை கொண்டு மணவாளமாமுனிகள் மணிப்ரவாளத்தில் ஒரு திருவாராதனக்ரமத்தை அருளிச் செய்துள்ளார். “ஜீயர்படி” என்று ப்ரஸித்தமான அந்தத் திருவாராதனக்ரமம் மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளது.

            திருவாராதனம் செய்யும்போது நாம் விண்ணப்பிக்க வேண்டியவைகள் அனைத்தையும் எளிய தமிழிலேயே மாமுனிகள் அருளிச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நிலை ஆஸனத்திலும், “திருவடிநிலை ஸாத்தியருள வேணும் . . ஆஸனத்துக்கு எழுந்தருள வேணும்” என்றும், ஒவ்வொரு முறை அர்க்யம் ஸமர்ப்பிக்கும்போதும், “அர்க்யம் கண்டருள வேணும்” அல்லது, “திருக்கைகள் விளக்கியருள வேணும்” என்றும், ஒவ்வொரு முறை பாத்யம் ஸமர்ப்பிக்கும்போதும், “பாத்யம் கண்டருளவேணும்” அல்லது “திருவடிகள் விளக்கியருளவேணும்” என்றும், ஒவ்வொரு முறை ஆசமனம் ஸமர்ப்பிக்கும்போதும், “ஆசமனம் கண்டருளவேணும்” அல்லது, “திருப்பவளம் மாற்றியருள வேணும்”, “திருவொற்றாடை கண்டருளவேணும்” என்றும், “திருப்போனகம் கண்டருளவேணும்” என்றும் அனைத்து விண்ணப்பங்களையும் தமிழிலேயே அருளியுள்ளது மாமுனிகள் அருளிச் செய்துள்ள திருவாராதனக்ரமத்தின் தனிச்சிறப்பாகும். அர்க்யம் ஸமர்ப்பிக்கவேண்டும், பாத்யம் ஸமர்ப்பிக்கவேண்டும், ஆசமனம் ஸமர்ப்பிக்கவேண்டும் என்று சுருக்கமாகக் கூறாமல், “அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து “ஶ்ரீமதே நம: அர்க்யம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து . . .” என்று ஒவ்வொருமுறையும் மாமுனிகள் தவறாமல் அருளிச் செய்வதையும், இவ்வாறு ஸமர்ப்பித்தவுடன் ஸுத்த ஜலத்தில் உத்தரணியை சோதித்துக் கொள்ளவேண்டும் என்பதையும் ஒவ்வொரு முறையும் சோம்பாமல் மாமுனிகள் அருளிச் செய்திருப்பதையும் காணலாம். இவற்றைச் சுருக்கிக் கூறாமல், மீண்டும் மீண்டும் விளக்கமாகவே மாமுனிகள் அருளிச் செய்வது, திருவாராதனத்தை நாம் எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

            இந்தத் திருவாராதனக் கிரமம் மிகவும் எளிய நடையிலேயே அமைந்திருந்தாலும்/ மணிப்ரவாளத்தில் அமைந்துள்ளபடியால் தற்காலத்தவர்களுக்குப் பயன்படும்படியாக எளியநடை விளக்கம் ஒன்றை அடியேன் எழுதியுள்ளேன். அந்தந்த இடங்களுக்குப் பொருத்தமாக அநுஸந்திக்க வேண்டியவைகளாக மாமுனிகள் குறிப்பாகக் காட்டியுள்ள ஶ்லோகங்களையும் திவ்யப்ரபந்த பாசுரங்களையும் அவ்விளக்கத்தில் முழுமையாகக் கொடுத்துள்ளேன்.

            மாமுனிகள் பரமகருணையுடன் அருளிச் செய்துள்ள திருவாராதனக்ரமத்தை இப்போது அச்சிடுவது அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அடியேன் எழுதியுள்ள விளக்கத்தில் குற்றம் குறைகள் இருப்பின் அவற்றைப் பொறித்தருளுமாறு வேண்டுகிறேன்.

ஶ்ரீவைஷ்ணவ பாததூளி

மண்டயம் அனந்தான் பிள்ளை

வேங்கடகிருஷ்ண தாஸன்

திருவாராதனக்ரமச் சுருக்கம்

  1. காலை எழுந்தவுடன் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்வது.
  2. ‘துலஸ்யம்ருத’ ஶ்லோகத்தை அநுஸந்தித்து திருத்துழாய் பறிப்பது.
  3. வாக்ய குருபரம்பரை. “கௌஸல்யா ஸுப்ரஜா ராம”, “நாயகனாய்” அநுஸந்தித்து அஸ்த்ரமந்த்ரத்தைச் சொல்லி, மூன்றுதரம் கையைத் தட்டி, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்குவது.
  4. பல்லாண்டு, அடியோமோடும், மாரிமலை, அன்றிவ்வுலகம், சிற்றம் சிறுகாலே, நமோ நமோ, நதர்மநிஷ்டோஸ்மி ஆகியவற்றை அநுஸந்திப்பது.
  5. திருப்படுக்கையை உதறிப் படுத்து. ‘கூர்மாதீந்’ அநுஸந்திப்பது.
  6. பாத்திரங்களை ஸித்தப்படுத்துவது. தீர்த்தம் சேர்த்து அபிமந்த்ரிப்பது.
  7. உடையவருக்குத் திருவாராதனம் ஸம்ர்ப்பிப்பது. மந்த்ராஸனம்: அர்க்யம்-பாத்யம்-ஆசமனம்-திருவொற்றாடை; ஸ்நாநாஸனம்: பாத்யம்-அர்க்யம்-ஆசமனம்-திருவொற்றாடை-திருமுத்து விளக்குதல்-திருநாக்கு வழித்தல்-அர்க்யம்-பாத்யம்-ஆசமனம்-திருவொற்றாடை; அலங்காராஸனம்: அர்க்யம்-பாத்யம்-ஆசமனம்-திருவொற்றாடை
  8. இதே க்ரமத்தில் ஆழ்வார்களுக்கும், நித்யஸூரிகளுக்கும் திருவாராதனம் ஸமர்ப்பிப்பது.
  9. இதே க்ரமத்தில் எம்பெருமானுக்கும் திருவாராதனம் ஸமர்ப்பிப்பது. ‘கந்தத்வாராம்’, ‘பூசும் சாந்து’, ‘மங்குல்தோய்’, ‘சூட்டுநன்மாலைகள்’ அநுஸந்திப்பது. ‘பரிவதில் ஈசனைப்பாடி’ அநுஸந்தித்து தூபம் ஸமர்ப்பித்து, ‘வையந்தகளியா, அன்பேதகளியா, திருக்கண்டேன், வடிக்கோல’ ஆகியவற்றை அநுஸந்திப்பது, தீபம் ஸமர்ப்பிப்பது (பிறகு மந்த்ர புஷ்பம்)
  10. திருப்பல்லாண்டு, திருப்பாவை ஸேவாகாலம்.
  11. போஜ்யாஸநம்: பாத்யம்-அர்க்யம்-ஆசமனம்-திருவொற்றாடை-பானீயம்; நாறுநறும் பொழில், இன்று வந்தித்தனையும், பச்சைமாமலைபோல் மேனி, மிக்கானை, அடியேன்மேவி, அன்ன ஸூக்தம், மதுஸூக்தம், யாப்ரீதிர், பிப்ரத் வேணும் ஆகியவை அநுஸந்தித்து எம்பெருமானுக்கு அமுதுசெய்யப் பண்ணுவது. பானீயம் கண்டருளப் பண்ணுவது. பிராட்டிமார்களுக்கு அமுதுசெய்யப் பண்ணுவது. அர்க்யம்-பாத்யம்-ஆசமனம்.
  12. நித்ய ஸூரிகளுக்கும்,ஆழ்வார்களுக்கும், உடையவருக்கும், ஆசாரியனுக்கும் அமுதுசெய்யப்பண்ணுவது.
  13. மந்த்ராஸனம்: அர்க்யம்-பாத்யம்-அர்க்யம்-ஆசமனம்-திருவொற்றாடை. ‘கனஸார’ அநுஸந்தித்து, சுருளமுது கண்டருளப் பண்ணுவது. அர்க்யம்-ஆசமனம்-திருவொற்றாடை.
  14. கற்பூர நீராஜனம், லக்ஷ்மீசரண முதலிய ஶ்லோகங்கள். திருப்பாவை சாற்றுமுறை
  15. பர்யங்காஸனம்: பாத்யம்-அர்க்யம்-ஆசமனம்-திருவொற்றாடை-சுருளமுது. அர்க்யம்-ஆசமனம்
  16. உபசாராபதேசேந, பந்நகாதீஶ பர்யங்கே, அரவத்தமளியினோடும், உறகல் உறகல் அநுஸந்தித்துத் திருக்காப்பு சேர்ப்பது தண்டன் ஸமர்ப்பித்து ஜிதந்தே ஸ்தோத்ரம் அநுஸந்திப்பது.

வட்டில்களும் அதன் உபயோகங்களும்

1 – அர்க்க்யம்எம்பெருமானின் திருக்கை விளக்கும் நீர்

2 – பாத்யம்எம்பெருமானின் திருவடி விளக்கும் நீர்

3 – ஆசமனீயம்எம்பெருமான் உட்கொள்ளும் நீர்

4 – கண்டூஷம் (எம்பெருமான் திருவாய் கொப்பளிக்கும் நீர்), ஸ்நாநீயம், மதுவர்க்கம், பாநீயம், கண்டூஷம் – முறையே ஒவ்வொரு ஆஸனத்துக்கும்

5 – சுத்த உதகம்எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் வஸ்துக்களை சுத்தி செய்ய உதவும் நீர்

6 – படிக்கம்எம்பெருமானுக்கு சமர்ப்பித்து புனிதமான நீரைச் சேகரிக்கும் பாத்திரம்

7 – ஆசார்யனுக்குச் சமர்ப்பிக்கும் தீர்த்தம்

8 – திருக்காவேரி திருவாராதனத்துக்கு உபயோகப்படுத்த வேண்டிய நீர் இருக்கும் பாத்திரம்

Page-40

மணவாளமாமுனிகள் அருளிச் செய்த திருவாராதனக்ரமம்

விடிவோறே எழுந்திருந்து, தந்ததாவந பூர்வகமாக ஸ்நாநாதி நித்ய கர்மாநுஷ்டானங்களைப் பண்ணிக் கொண்டு, திருத்துழாய் வனத்துக்குப்போய், ‘துலஸ்யம்ருத ஜந்மாஸிஎன்கிற ஶ்லோகங்களை அநுஸந்தித்து சதுர்தளமாயிருக்கிற திருத்துழாய்க் கொழுந்துகளையும், புஷ்பங்களையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து, பரிஸுத்த ஸ்த்தலத்திலே வைத்து, காலையும் கையையும் நன்றாகச் சோதித்து, ஆசமநம் பண்ணி, ஸந்நிதி முன்பே சென்று, குருபரம்பராநுஸந்தாந பூர்வகமாய் தண்டன் ஸமர்ப்பித்து உள்ளே சென்றுகௌஸல்யா ஸுப்ரஜாராமஎன்கிற ஶ்லோகத்தையும், “நாயகனாய்என்கிற பாசுரத்தையும் அநுஸந்தித்து,

___________________________________________________________

எளிய நடை விளக்கம்

            விடியற்காலையில் எழுந்திருந்து பல்தேய்த்தல் முதற்கொண்டு, நீராடுதல் முதலிய அன்றாட கருமங்களை முடித்துக்கொண்டு திருத்துழாய்ச் செடியிருக்குமிடத்திற்குச் சென்று,

            “துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேஶவப்ரியே,

            கேஶவார்த்தம் லுநாமி த்வாம் வரதாபவ ஶோபநே,

            மோக்ஷைக ஹேதோர் தரணி ப்ரஸூதே

            விஷ்ணோஸ்ஸமஸ்தஸ்ய ஜகத் ப்ரஸூதே

            ஆராதநார்த்தம் புருஷோத்தமஸ்ய லுநாமி பத்ரம் துலஸீ க்ஷமஸ்வ”

என்று அநுஸந்தித்துக் கொண்டே நான்கு இதழ்களோடு கூடிய திருத்துழாய்க் கொழுந்துகளையும் பூக்களையும் பறித்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து, பரிஸுத்தமான இடத்தில் அவற்றை வைக்கவேண்டும். காலையும், கையையும் நன்றாகக் கழுவி ஸுத்தி செய்துகொண்டு, ஆசமநம் செய்து, பிறகு எம்பெருமான் எழுதருளியுள்ள ஸந்நிதி (அல்லது கோயிலாழ்வார்) முன்னே சென்று குருபரம்பரையை அநுஸந்தித்து (அதாவது: அஸ்மத் குருப்யோ நம:, அஸ்மத் பரம குருப்யோ நம: அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:, ஶ்ரீமதே ராமாநுஜாய நம:, ஶ்ரீபராங்குஶ தாஸாய நம:, ஶ்ரீமத் யாமுநமுநயே நம:, ஶ்ரீராம மிஶ்ராய நம:, ஶ்ரீபுண்டரீகாக்ஷாய நம:, ஶ்ரீமத் நாதமுநயே நம:, ஶ்ரீமதே ஶடகோபாய நம:, ஶ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:, ஶ்ரியை நம:, ஶ்ரீதராய நம: என்று கூறி) தண்டம் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு,

“கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே,

உத்திஷ்ட நரஶார்த்தூல கர்த்தவ்யம் தைவமாந்நிகம்” என்கிற ஶ்லோகத்தையும்,

“நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்”  (திருப்பாவை 16) என்கிற பாசுரத்தையும்,

Page-41

அஸ்த்ரமந்த்ரத்தாலே மூன்று விசை கையைத் தட்டி, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கி, “பல்லாண்டு பல்லாண்டு”, “அடியோமோடும்”, “மாரிமலைமுழஞ்சில்”, “அன்றிவ்வுலகம் அளந்தாய்”, “சிற்றம் சிறுகாலேஎன்கிற பாசுரங்களையும், “நமோ

______________________________________________________________

அநுஸந்தித்து, “ஓம் ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா வீர்யாய அஸ்த்ராய பட்” என்ற அஸ்த்ர மந்த்ரத்தைச் சொல்லி மூன்று தரம் கையைத் தட்டிக் கோயிலாழ்வார் திருக்காப்பை நீக்கிப் பிறகு,

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்

சேவடி செவ்வித்திருக்காப்பு

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*

படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்

கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்.

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்கிற பாசுரங்களையும்,

நமோ நமோ வாங்மநஸாதி பூமயே, நமோ நமோ வாங்மநஸைக பூமயே

நமோ நமோ அநந்த மஹா விபூதயே நமோ நமோ அநந்த தயைக ஸிந்தவே

Page-42

நமோ வாங்மநஸாதி பூமயே”, “ தர்ம நிஷ்டோஸ்மிஎன்கிற ஶ்லோகங்களையும் அநுஸந்தித்து, தீர்த்த எம்பெருமான்களை வெளியிலே எழுந்தருளப்பண்ணி, திருப்படுக்கையை உதறிப் படுத்து, மீளவும் தீர்த்த எம்பெருமான்களை எழுந்தருளப்பண்ணி, எம்பெருமானுக்கு வலது பார்ஶ்வத்தில் அஞ்சலிஹஸ்தனாய், “கூர்மாதீந் திவ்யலோகாந்என்கிற ஶ்லோகத்தை அநுஸந்தித்து, “ஶ்ரீமதே நாராயணாய நம:, ஶ்ரீம் ஶ்ரியை நம:, பூம் பூம்யை நம:, நீம் நீளாயை நம:, ஸமஸ்தபரிவாராய ஸமஸ்த மங்கள விக்ரஹாய ஶ்ரீமதே நாராயணாய நம:, கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலான 108 திருப்பதி எம்பெருமான்களும் நித்யஸூரிகளோடே ஸாந்நித்யம் செய்தருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பிப்பது.

            தனக்கு இடது பார்ஶ்வத்திலே திருமஞ்சனத்தாழியை வைத்து, அதில், திருமஞ்சனத்தைப் பூரித்து ஏலக்காப்பும், சாத்துப்படியும் திருத்துழாய்க் கொழுந்தும் பரிமாறி, ஒரு திருத்துழாய்க் கொழுந்தை வலது கையிலே இடுக்கிக் கொண்டு, திருமஞ்சனத் தாழியை ஸ்பர்சித்துக் கொண்டு த்வயத்தாலே ஏழுருவாதல், அஞ்சுருவாதல், அபிமந்த்ரித்து, எம்பெருமானுடைய திருமுன்பே பாத்ரவேதிகையிலே அர்க்ய, பாத்ய, ஆசமன, ஸ்நாநீயார்த்தமாகவும், மத்யே சுத்த ஜலார்த்தமாகவும்

_______________________________________________________________

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே || (ஸ்தோத்ர ரத்நம் 22)

என்ற ஶ்லோகங்களையும் அநுஸந்திக்க வேண்டும். பிறகு, தீர்த்த எம்பெருமான்களை (ஸாளக்ராம எம்பெருமான்களை) கோயிலாழ்வாருக்கு வெளியே எழுந்தருளப்பண்ணி, பெருமாளுடைய திருப்படுக்கையை உதறி, (உள்ளே உள்ள பழைய புஷ்பங்களை நீக்கிப் படுத்து, மறுபடியும் தீர்த்த எம்பெருமான்களை கோயிலாழ்வாருக்குள் எழுந்தருளப் பண்ண வேண்டும். பிறகு, எம்பெருமானுக்கு வலது புறத்தில் கையைக் கூப்பிக் கொண்டு நின்று,

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே ||

என்கிற ஶ்லோகத்தை அநுஸந்திக்க வேண்டும். பிறகு, “ஶ்ரீமதே நாராயணாய நம:, ஶ்ரீம் ஶ்ரியை நம:, பூம் பூம்யை நம:, நீம் நீளாயை நம:, ஸமஸ்தபரிவாராய ஸமஸ்த மங்கள விக்ரஹாய ஶ்ரீமதே நாராயணாய நம:, கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலான 108 திருப்பதி எம்பெருமான்களும் நித்யஸூரிகளோடே ஸாந்நித்யம் செய்தருள வேணும்” என்று விண்ணப்பம் செய்து, திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.

            தனக்கு இடது பக்கத்தில் ஒரு திருமஞ்சனத் தாழியை (பாத்திரத்தை) வைத்து, அதில் தீர்த்தத்தை நிறைத்து அதில் ஏலக்காய், பரிமளம், திருத்துழாய் இவைகளைச் சேர்த்து, ஒரு திருத்துழாய்க் கொழுந்தை வலது கையின் ஆள்காட்டிவிரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் இடுக்கிக்கொண்டு திருமஞ்சனத் தாழியைத் தொட்டுக்கொண்டு, “ஶ்ரீமதே நாராயணாய நம:” என்று ஏழு அல்லது ஐந்து முறை அநுஸந்திக்க வேண்டும். பிறகு, பெருமாளுக்குத் திருமுன்பே ஒரு தட்டில் ஐந்து வட்டில்களை

Page-43

பஞ்ச பாத்ரங்களையும் ஸ்தாபித்து, திருமஞ்சனத்தாழியில் நின்றும், உத்தரணியாலே, திருமஞ்சனத்தை யெடுத்து பஞ்ச பாத்திரங்களிலேயும் துளித்துளித்து, உத்தர வாக்கியத்தாலே பாத்திரங்க்ளைச் சோதித்து, திருமஞ்சனத்தைப் பூரித்துத் திருத்துழாய்க் கொழுந்தையும், சாத்துப்படியையும் பரிமாறி ஒரு திருத்துழாய்க் கொழுந்தை விரலிலே இடுக்கிக் கொண்டு பஞ்ச பாத்திரங்களையும் ஸ்பரிசித்து, உத்தர வாக்கியத்தாலே அபிமந்திரித்து, அர்க்ய பாத்ரமொழிந்த பாத்யாதி நான்கு பாத்ரங்கள் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து அர்க்ய பாத்ரத்திலே சேர்த்து, அதில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, சாத்துப்படியையும், திருத்துழாய்க் கொழுந்தையும் பரிமாறி, உத்தரணியை எடுத்து, கையிலே வைத்து, வலது கையாலே மூடிக்கொண்டுஶ்ரீமதே நாராயணாய நம:, ஶ்ரீம் ஶ்ரியை நம:, பூம் பூம்யை நம:, நீம் நீளாயை நம:, ஸமஸ்தபரிவாராய ஸர்வமங்கள விக்ரஹாய ஶ்ரீமதே நாராயணாய நம: விரஜா தீர்த்தமாகவாதல், திருக்காவேரீ தீர்த்தமாகவாதல், திருவுள்ளம் பற்றியருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, உத்தரணி தீர்த்தத்தை திருமஞ்சனத் தாழியிலும், பஞ்ச பாத்திரங்களிலேயும், துளித்துளி சேர்த்து, சேஷித்த தீர்த்தத்திலே திருத்துழாய்க் கொழுந்தைத் தோய்த்து, தன்னையும், யாக பூமியையும், உத்தரவாக்யத்தாலே ப்ரோக்ஷித்து, சேஷித்த தீர்த்தத்தை திருப்படிகத்தில் சேர்த்து, ஆசார்யன் திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, திருவடி விளக்கி மீளவும் பஞ்ச பாத்ரங்களையும் சோதித்து, பூர்வம் போலே திருமஞ்சனத்தைப் பூரித்து,

_____________________________________________________________________________

 வைக்க வேண்டும். 1. அர்க்யம், (எம்பெருமானுடைய திருக்கையை அலம்புவதற்காக), 2. பாத்யம் (திருவடி அலம்புவதற்காக), 3. ஆசமநீயம் (திருப்பவளம் சோதிப்பதற்காக), 4. ஸ்நாநீயம் (நீராட்டத்திற்கு) என்று நான்கு புறம் நான்கு வட்டிலும் நடுவில் ஸுத்த தீர்த்தத்திற்காக ஒரு வட்டிலும் வைக்க வேண்டும். திருமஞ்சனத் தாழியிலிருந்து உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து ஐந்து வட்டில்களிலும் துளித்துளி சேர்த்து “ஶ்ரீமதே நாராயணாய நம:” என்று சொல்லி அவ்வட்டில்களை ஸுத்தி செய்ய வேண்டும். (பிறகு அவ்வட்டில்களிலுள்ள தீர்த்தத்தை வெளியே சேர்த்துவிட வேண்டும்). பிறகு அவ்வட்டில்களில் தீர்த்தத்தை நிறைத்து, திருத்துழாய்க் கொழுந்தையும் பரிமளத்தையும் சேர்த்து, முன்போல் ஒரு திருத்துழாய்க் கொழுந்தை வலது கையில் இடுக்கிக் கொண்டு ஐந்து வட்டில்களையும் கையால் ஸ்பர்ஶித்துக் (தொட்டுக்) கொண்டு, “ஶ்ரீமதே நாராயணாய நம:” என்று அநுஸந்திக்க வேண்டும். பிறகு அர்க்ய வட்டில் தவிர்த்து, மற்றைய வட்டில்களிலிருந்தும் ஒவ்வோர் உத்தரணி தீர்த்தத்தை எடுத்து பரிமளத்தையும், திருத்துழாய்க் கொழுந்தையும் அதில் சேர்த்து உத்தரணியையெடுத்து வலது கையால் மூடிக்கொண்டு (தன் மூக்கு அளவு உயரத்தில் வைத்துக் கொண்டு) “ஶ்ரீமதே நாராயணாய நம:, ஶ்ரீம் ஶ்ரியை நம:, பூம் பூம்யை நம:, நீம் நீளாயை நம:, ஸமஸ்தபரிவாராய ஸர்வமங்கள விக்ரஹாய ஶ்ரீமதே நாராயணாய நம: விரஜா தீர்த்தமாகவாதல், திருக்காவேரீ தீர்த்தமாகவாதல், திருவுள்ளம் பற்றியருள வேணும்” என்று விண்ணப்பம் செய்து, உத்தரணி தீர்த்தத்தை திருமஞ்சனத் தாழியிலும், பஞ்ச பாத்திரங்களிலேயும், துளித்துளி சேர்த்து, மிகுந்த தீர்த்தத்திலே திருத்துழாய்க் கொழுந்தை நனைத்து, தன்னையும், திருவாராதனம் செய்யுமிடத்தையும், “ஶ்ரீமதே நாராயணாய நம:” என்று சொல்லி ப்ரோக்ஷித்து, மிகுந்த தீர்த்தத்தை திருப்படிகத்தில் சேர்த்து விடவேண்டும். ஆசார்யன் திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, திருவடி விளக்க வேண்டும். (பிறகு ஐந்து வட்டில்களிலும் உள்ள தீர்த்தத்தை வெளியே

 Page-44

அபிமந்த்ரித்து சோஷித்து, உடையவர் திருவடிகளிலே திருத்துழாய்க்கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை ஸாத்தியருள வேணும். மந்த்ராஸனத்துக்கு எழுந்தருள வேணும். ஆசார்யன் திருக்கையாலே திருவாராதனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து. “ஶ்ரீமதே ராமாநுஜாய நம:,அர்க்யம் கண்டருளவேணும்என்று வலது திருக்கையிலே ஸமர்ப்பித்து, கண்டருளினதாக பாவித்து, மூன்று உத்தரணி தீர்த்தத்தைத் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “பாத்யம் கண்டருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, மூன்று விசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “திருக்கைகள் விளக்கி அருளவேணும்என்று மூன்று விசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து மூன்று விசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த

________________________________________________________________________________

சேர்த்துவிட வேண்டும்). மீண்டும் முன்பு போலவே திருமஞ்சனத்தாழியிலிருந்து உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து ஐந்து வட்டில்களிலும் துளித்துளி சேர்த்து, “ஶ்ரீமதே நாராயணாய நம:” என்று சொல்லி அவ்வட்டில்களை ஸுத்தி செய்து ஐந்து வட்டில்களிலும் தீர்த்தத்தை நிறைத்துக் கொள்ளவேண்டும். பிறகு, உடையவர் திருவடிகளிலே திருத்துழாய்க்கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை ஸாத்தியருள வேணும். மந்த்ராஸனத்துக்கு எழுந்தருள வேணும். ஆசார்யன் திருக்கையாலே திருவாராதனம் கண்டருள வேணும்” என்று விண்ணப்பம் செய்ய வேண்டும். அர்க்ய வட்டிலிலிருந்து  உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து. “ஶ்ரீமதே ராமாநுஜாய நம:,அர்க்யம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பித்து, உடையவருடைய வலது திருக்கையிந் அருகில் உத்தரணியைக் கொண்டு சென்று, அவர் அர்க்யம் கண்டருளினதாக பாவித்து, தீர்த்ததை திருப்படிகத்திலே சேர்த்துவிட வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். (இப்படிச் செய்தல் அர்க்யம் ஸமர்ப்பித்தல் எனப்படும்)

பிறகு உத்தரணியால் நடுவில் இருக்கும் ஸுத்தோதக வட்டிலிலிருந்து  தீர்த்தத்தை எடுத்து திருப்படிகத்தில் சேர்க்க வேண்டும். (இது உத்தரணியை ஸுத்தோதக வட்டிலில் சோதிப்பது எனப்படும்). பிறகு, பாத்ய வட்டிலிலிருந்து உத்தரணியால்  தீர்த்தத்தை எடுத்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: பாத்யம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, உத்தரணியை உடையவருடைய திருவடிகளின் அருகில் கொண்டு சென்று, அவர் பாத்யம் கண்டருளினதாக பாவித்து, தீர்த்தத்தைத் திருப்படிகத்திலே சேர்த்துவிட வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். (இப்படிச் செய்தல் பாத்யம் ஸமர்ப்பித்தல் எனப்படும்)

பிறகு உத்தரணியால் நடுவில் இருக்கும் ஸுத்தோதக வட்டிலிலிருந்து  தீர்த்தத்தை எடுத்து திருப்படிகத்தில் சேர்க்க வேண்டும். பிறகு, அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியால்  தீர்த்தத்தை எடுத்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருக்கைகள் விளக்கியருள வேணும்” என்று விண்ணப்பம் செய்து, முன்பு போலே அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்தோதக வட்டிலில் சோதித்து, பிறகு ஆசமன வட்டிலிலிருந்து உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஆசமனம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, உத்தரணியை உடையவருடைய திருப்பவளம் அருகில் கொண்டு சென்று, அவர் ஆசமனம் கண்டருளினதாக பாவித்து, தீர்த்தத்தைத் திருப்படிகத்திலே சேர்த்துவிட வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். (இப்படிச் செய்தல் ஆசமனம் ஸமர்ப்பித்தல் எனப்படும்)

Page-45

ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து,

            திருத்துழாய்க் கொழுந்தை திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். ஸ்நாநஸத்துக்கு எழுந்தருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஶ்ரீமதே திருவடிகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, மூன்றுவிசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “திருக்கைகள் விளக்கியருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, மூன்று விசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஆசமனம் கண்டருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, மூன்றுவிசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்தஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலே திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து,

_________________________________________________________________________________

பிறகு உத்தரணியை ஸுத்தோதக வட்டிலில் சோதித்து, அந்த வட்டிலிலேயே உத்தரணியை வைக்கவேண்டும். பிறகு, திருவொற்றாடைக்கு என்று தனியாக வைத்திருக்கும் ஒரு துணியை எடுத்து, அதன் ஒருநுனியால் “திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று விண்ணப்பம் செய்து, திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை ஸமர்ப்பித்து (கைகளையும், வாயையும் துடைப்பதாக பாவித்து) பிறகு தலைமாறி, (அதாவது துணியைத் திருப்பி அதன் மற்றொரு நுனியால்) “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, திருவடிகளுக்குத் திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும். (திருவடிகளைத் துடைப்பதாக பாவித்து) (ஆக மந்த்ராஸனத்தில் முதலில் அர்க்யம், பிறகு பாத்யம், மீண்டும் அர்க்யம், பிறகு ஆசமனம், அதற்குப் பிறகு திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும்).

ஒரு திருத்துழாய்க் கொழுந்தை உடையவர் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். ஸ்நாநாஸநத்துக்கு எழுந்தருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, பாத்ய வட்டிலிலிருந்து  உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிகள் விளக்கியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, மூன்றுமுறை பாத்யம் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து, “திருக்கைகள் விளக்கியருள வேணும்” என்று விண்ணப்பம் செய்து, மூன்றுமுறை அர்க்யம் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, ஆசமன வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து, “ஆசமனம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, மூன்றுமுறை ஆசமனம் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதிக்க வேண்டும். பிறகு, “திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று விண்ணப்பித்து ஒரு தலையாலே திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை ஸமர்ப்பித்து, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து,

Page-46

திருத்துழாய்க் கொழுந்தாலே திருமுத்து விளக்கி திருப்படிகத்திலே பொகட்டு, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துக் கையைச் சோதித்து, மற்றொரு கொழுந்தாலே திருநாக்கு வழித்துத் திருப்படிகத்திலே பொகட்டு, கையைச் சோதித்துஅர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருப்பவளம் மாற்றியருள வேண்டும், திருக்கைகள் விளக்கியருள வேணும், திருமுக மண்டலம் விளக்கியருள வேணும், திருக்கைகள் விளக்கியருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “திருவடிகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று விண்ணப்பம் செய்துதலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, திருத்துழாய்க் கொழுந்தை திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். திருமஞ்சன

____________________________________________________________________________

திருவடிகளுக்குத் திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும். (ஆக ஸ்நாநாஸனத்தில் முதலில் பாத்யம், பிறகு அர்க்யம், மீண்டும் அதற்குப் பிறகு ஆசமனம், அதற்குப் பிறகு திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும்). பிறகு, ஒரு திருத்துழாய்க் கொழுந்தை எடுத்து திருமுத்து விளக்கி (பல் விளக்குவதாகப் பாவித்து) அத்திருத்துழாயைப் படிகத்திலே சேர்த்துவிட வேண்டும். அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து கையைக் கழுவிக்கொண்டு மற்றொரு திருத்துழாய்க் கொழுந்தை எடுத்து திருநாக்கு வழிப்பதாகப் பாவித்து அத்திருத்துழாயைப் படிகத்திலே சேர்த்துவிட வேண்டும். மீண்டும் அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து கையைக் கழுவிக்கொண்டு, அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருப்பவளம் மாற்றியருள வேண்டும், திருக்கைகள் விளக்கியருள வேணும், திருமுக மண்டலம் விளக்கியருள வேணும், திருக்கைகள் விளக்கியருள வேணும்” என்று விண்ணப்பம் செய்து மும்மூன்று முறை தீர்த்தத்தை எடுத்து திருப்படிகத்திலே சேர்த்துவிட வேண்டும்.பிறகு உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, ஆசமன வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து, “ஆசமனம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, மூன்றுமுறை ஆசமனம் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, அந்த வட்டிலிலேயே உத்தரணியை வைத்துவிட வேண்டும். பிறகு, “திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று விண்ணப்பித்து வஸ்த்ரத்தின் ஒரு நுனியால் திருக்கைகளுக்கும், திருமுகமண்டலத்திற்கும் மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும்  திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும். (ஆக அர்க்யம், பாத்யம், ஆசமநீயம், திருவொற்றாடை என்ற முறையில் ஸமர்ப்பிக்க வேண்டும்). ஒரு திருத்துழாய்க் கொழுந்தை உடையவர் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும்.

Page-47

சாத்தியருளவேணும். திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளவேணும். ஒலியல் சாத்தியருளவேணும். எண்ணெய்க்காப்பு சாத்தியருளவேணும். திருமுடிக்காப்புக்காக நெல்லிக்காப்பு சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, ஸ்நாநீய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருமஞ்சனம் கண்டருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, த்யானித்து முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருமுடி திருமேனியெங்கு மொக்கத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து,

            திருத்துழாய்க் கொழுந்தைத் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். அலங்காராஸநத்துக்கு எழுந்தருளவேணும். திருப்பரியட்டம் சாத்தியருளவேணும். திருவுத்தரீயம் சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஶ்ரீமதே அர்க்யம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து,

______________________________________________________________________________

திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளவேணும். ஒலியல் சாத்தியருளவேணும். எண்ணெய்க்காப்பு சாத்தியருளவேணும். திருமுடிக்காப்புக்காக நெல்லிக்காப்பு சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பிக்க வேண்டும். ஸ்நாநீய வட்டிலிலிருந்து உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து “திருமஞ்சனம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, திருமஞ்சனம் செய்வதாக த்யானித்து மூன்றுமுறை திருப்படிகத்திலே சேர்க்க வேண்டும். பிறகு உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து “ஆசமனம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பித்து ஆசமனம் ஸமர்ப்பிக்க வேண்டும். ஸுத்த ஜலத்திலே உத்தரணியை சோதித்து அந்த வட்டிலிலேயே வைக்க வேண்டும். பிறகு, “திருமுடி திருமேனியெங்கு மொக்கத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பித்து, வஸ்த்ரத்தின் ஒரு நுனியால் திருமுடி தொடங்கி திருமேனி முழுவதிலும் மற்றொரு நுனியால் “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, திருவடிகளிலும் திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும். (ஆக ஸ்நாநீயம்-ஆசமனம்-திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும்)

            திருத்துழாய்க் கொழுந்தைத் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். அலங்காராஸநத்துக்கு எழுந்தருளவேணும். திருப்பரியட்டம் சாத்தியருளவேணும். திருவுத்தரீயம் சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, “அர்க்யம் கண்டருள வேணும்” என்று அர்க்யம் ஸமர்ப்பித்து  உத்தரணியை ஸுத்த ஜலத்தில் சோதித்து “திருவடிகள் விளக்கியருளவேணும்” என்று பாத்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்தில்

Page-48

திருமஞ்சனத்தை எடுத்து, “திருவடிகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து மீளவும் அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும் திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருளவேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருமண்காப்பு சாத்தியருளவேணும் ஶ்ரீசூர்ணக்காப்பு சாத்தியருளவேணும் திருயஜ்ஞோபவீதம் சாத்தியருளவேணும் திருப்படித்தாமம் சாத்தியருளவேணும் சாத்துப்படி சாத்தியருளவேணும் திருவாபரணம் சாத்தியருளவேணும். ஆசார்யன் திருக்கைகளால் ஸர்வோபசாரங்களையும் கண்டருளவேணும்என்று திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பிப்பது.

            மீளவும் பஞ்ச பாத்ரங்களையும் சோதித்து பூர்வம் போலே திருமஞ்சனத்தைப் பூரித்து சோஷித்து, “ஶ்ரீமத்ப்ய: பராங்குஶ பரகாலாதிப்யோ நம:” என்று திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, உடையவருக்கு ஸமர்ப்த்தது போலவே திருவாராதனம் பண்ணுகிறது.

            மீளவும் பஞ்ச பாத்ரங்களையும் சோதித்து பூர்வம் போலே திருமஞ்சனத்தைப் பூரித்து அபிமந்த்ரித்து, சோஷித்து, “ஶ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம: அநந்தாய நாகராஜாய நம:

_________________________________________________________________________________

சோதித்து “திருக்கைகள் விளக்கியருளவேணும்”என்று மீண்டும் அர்க்யம் ஸமர்ப்பித்து உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “ஆசமனம் கண்டருள வேணும்”என்று ஆசமனம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “திருவொற்றாடை சாத்தியருளவேணும்” என்று திருவொற்றாடையும் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு, “ஶ்ரீமதே ராமாநுஜாய நம: திருமண்காப்பு சாத்தியருளவேணும் ஶ்ரீசூர்ணக்காப்பு சாத்தியருளவேணும் திருயஜ்ஞோபவீதம் சாத்தியருளவேணும் திருப்படித்தாமம் சாத்தியருளவேணும் சாத்துப்படி சாத்தியருளவேணும் திருவாபரணம் சாத்தியருளவேணும். ஆசார்யன் திருக்கைகளால் ஸர்வோபசாரங்களையும் கண்டருளவேணும்” என்று விண்ணப்பித்து திருத்துழாய்க் கொழுந்தைத் திருவடிகளிலே ஸமர்ப்பிக்க வேண்டும்.

            ஐந்து வட்டில்களிலும் உள்ள தீர்த்தத்தைப் படிகத்தில் சேர்த்துவிட்டு, மீண்டும் வட்டில்களை முன்போலவே சோதித்து, தீர்த்தம் நிறைத்து அபிமந்த்ரித்து,  “ஶ்ரீமத்ப்ய: பராங்குஶ பரகாலாதிப்யோ நம:” என்று விண்ணப்பித்து, ஆழ்வார்கள் திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, உடையவருக்கு திருவாராதனம் செய்தது போலவே ஆழ்வார்களுக்குத் திருவாராதனம் செய்ய வேண்டும்.

            மீண்டும்  வட்டில்களிலும் உள்ள தீர்த்தத்தைப் படிகத்தில் சேர்த்துவிட்டு, மீண்டும் வட்டில்களை முன்போலவே சோதித்து, தீர்த்தம் நிறைத்து அபிமந்த்ரித்து, “ஶ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம: அநந்தாய நாகராஜாய நம:

Page 49

வைநதேயாய பக்ஷிராஜாய நம: ஸுதர்ஶனாய ஹேதிராஜாய நம: பாஞ்சஜந்யாய ஶங்காதிபதயே நம:” என்று திருவடிகளில் திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து பூர்வம் போலே திருவாராதநம் பண்ணுகிறது.

மீளவும் பஞ்ச பாத்ரங்களையும் சோதித்துத் திருமஞ்சனத்தைப் பூரித்து திருத்துழாய்க் கொழுந்தையும் சாத்துப்படியையும் பரிமாறி உத்தரவாக்யத்தாலே அபிமந்த்ரித்து, எம்பெருமான் திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நாராயணாய நம:, ஶ்ரீம் ஶ்ரியை நம:, பூம் பூம்யை நம:, நீம் நீளாயை நம:, ஸமஸ்தபரிவாராய ஸர்வமங்கள விக்ரஹாய ஶ்ரீமதே நாராயணாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். மந்த்ராஸனத்துக்கு எழுதருளவேணும். ஆசார்யன் திருக்கைகளால் திருவாராதனம் கண்டருளவேணும்என்று விண்ணப்பித்து அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஶ்ரீமதே நம: அர்க்யம் கண்டருள வேணும்என்று எம்பெருமான் வலது திருக்கைகளிலே ஸமர்ப்பித்து, கண்டருளினதாக பாவித்துமுக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துபாத்யம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்துமுக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, மீளவும் அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று விண்ணப்பம் செய்துதலைமாறி,

__________________________________________________________________________________

வைநதேயாய பக்ஷிராஜாய நம: ஸுதர்ஶனாய ஹேதிராஜாய நம: பாஞ்சஜந்யாய ஶங்காதிபதயே நம:” என்று விண்ணப்பித்து, நித்யஸூரிகள் திருவடிகளில் திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து முன்பு போலவே திருவாராதநம் செய்ய வேண்டும்.

மீண்டும்  வட்டில்களிலும் உள்ள தீர்த்தத்தைப் படிகத்தில் சேர்த்துவிட்டு, வட்டில்களை முன்போலவே சோதித்து, தீர்த்தம் நிறைத்து “ஶ்ரீமதே நாராயணாய நம:” என்ற உத்தர வாக்கியத்தைச் சொல்லி தீர்த்தத்தை அபிமந்த்ரித்து, எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து “ஶ்ரீமதே நாராயணாய நம:, ஶ்ரீம் ஶ்ரியை நம:, பூம் பூம்யை நம:, நீம் நீளாயை நம:, ஸமஸ்தபரிவாராய ஸர்வமங்கள விக்ரஹாய ஶ்ரீமதே நாராயணாய நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். மந்த்ராஸனத்துக்கு எழுதருளவேணும். ஆசார்யன் திருக்கைகளால் திருவாராதனம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பித்து அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியால்  தீர்த்தத்தை எடுத்து, “அர்க்யம் கண்டருளவேணும்” என்று அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்தோதக வட்டிலில் சோதித்து, பிறகு பாத்ய வட்டிலிலிருந்து உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து “பாத்யம் கண்டருளவேணும்” என்று பாத்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்தோதக வட்டிலில் சோதித்து “ஆசமனம் கண்டருளவேணும்” என்று ஆசமனம் ஸமர்ப்பித்து உத்தரணியை ஸுத்தோதக வட்டிலில் சோதித்து “திருவொற்றாடை

Page 50

திருவடிகளுக்கு திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து மீளவும் எம்பெருமான் திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து,

            “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். ஸ்நாநாஸனத்துக்கு எழுந்தருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஶ்ரீமதே நம: திருவடிகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, மூன்றுவிசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “திருக்கைகள் விளக்கியருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, மூன்று விசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஆசமனம் கண்டருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, மூன்றுவிசை திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்தஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, ஒரு திருத்துழாய்க் கொழுந்தாலே திருமுத்து விளக்கி திருப்படிகத்திலே சேர்த்து, கையைச் சோதித்து, மற்றொரு கொழுந்தாலே திருநாக்கு வழித்து திருப்படிகத்திலே சேர்த்து, கையை சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஶ்ரீமதே நம: திருப்பவளம் மாற்றியருளவேணும் திருக்கைகள் விளக்கியருளவேணும் திருமுக மண்டலம் விளக்கியருள வேணும், திருக்கைகள் விளக்கியருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால்

__________________________________________________________________________

சாத்தியருள வேண்டும்” என்று திருவொற்றாடையின் ஒரு நுனியால் திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும், மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும் தொருவொற்றாடையும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

மீண்டும் எம்பெருமான் திருவடிகளிலே, ஒரு திருத்துழாய்க் கொழுந்தை ஸ்மர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும் ஸ்நாநாஸனத்திற்கு எழுந்தருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, பாத்ய வட்டிலிலிருந்து உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து “ஶ்ரீமதே நம: திருவடி விளக்கியருளவேணும்” என்று மூன்றுமுறை பாத்யம் ஸமர்ப்பித்து உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, “திருக்கைகள் விளக்கியருளவேணும்” என்று விண்ணப்பித்து, மூன்றுமுறை அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்தில் சோதித்து, ஆசமன வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து, “ஆசமனம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, மூன்றுமுறை ஆசமனம் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, அந்த வட்டிலிலேயே உத்தரணியை வைத்துவிட வேண்டும். பிறகு, “திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று விண்ணப்பித்து  திருவொற்றாடையின் ஒருநுனியால் திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும், மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும்,  திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு ஒரு திருத்துழாய்க் கொழுந்தால் திருமுத்து விளக்கி (பல் விளக்குவதாகப் பாவித்து) அத்திருத்துழாயைப் படிகத்திலே சேர்த்துவிட வேண்டும். ஸுத்த ஜலத்தால் கையை ஸுத்தம் செய்து கொண்டு மற்றொரு திருத்துழாய்க் கொழுந்தை எடுத்து திருநாக்கு வழிப்பதாகப் பாவித்து அத்திருத்துழாயைப் படிகத்திலே சேர்த்துவிட வேண்டும். கையை சோதித்துக்கொண்டு, மீண்டும் அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து “ஶ்ரீமதே நம: திருப்பவளம் மாற்றியருள வேணும் திருக்கைகள் விளக்கியருள வேணும், திருமுக மண்டலம் விளக்கியருள வேணும், திருக்கைகள்

Page 51

முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “திருவடிகள் விளக்கியருள வேணும்என்று விண்ணப்பம் செய்து முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, மீளவும் அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும் திருப்பவளத்திற்கும் திருமுகமண்டலத்துக்கும் திருவொற்றாடை சாத்தியருளவேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து,

            திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். திருமஞ்சன வேதிகைக்கு எழுந்தருளவேணும்என்று விண்ணப்பித்து தீர்த்த எம்பெருமான்களை வேதிகையிலே எழுந்தருளப்பண்ணி, சுருளமுது சோதித்துக் கண்டருளப்பண்ணி, திருவொற்றாடை சாத்தி, “ஶ்ரீமதே நம: எண்ணெய் ஒலியல் சாத்தியருளவேணும். எண்ணெய்க்காப்பு சாத்தியருளவேணும். திருமுடிக்காப்புக்காக சாத்துப்படி சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, ஸ்நாநீய பாத்ரத்தில் நின்றும்  உத்தரணியால் திருமஞ்சனத்தை எடுத்து புருஷ ஸூக்தம், ஶ்ரீஸூக்தம், பூஸூக்தம், *வெண்ணெயளைந்த குணுங்கும்* இத்யாதி அநுஸந்தானத்துடனே தீர்த்த

__________________________________________________________________________________

விளக்கியருள வேணும்” என்று மூன்றுமுறை ஸமர்ப்பித்து,  உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, “திருவடிகள் விளக்கியருளவேணும்” என்று விண்ணப்பித்து மூன்றுமுறை பாத்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, “திருக்கைகள் விளக்கியருளவேணும்” என்று மீண்டும் அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, “ஆசமனம் கண்டருளவேணும்” என்று ஆசமனமும், “திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று திருவொற்றாடையின் ஒரு நுனியால் திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும்  மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும்  திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு, எம்பெருமான் திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். திருமஞ்சன வேதிகைக்கு எழுந்தருளவேணும்” என்று விண்ணப்பித்து தீர்த்த எம்பெருமான்களை (ஸாளக்ராம மூர்த்திகளை) திருமஞ்சன வேதிகையிலே எழுந்தருளப்பண்ணி, சுருளமுது (வெற்றிலை பாக்கு) சோதித்துக் கண்டருளப்பண்ணி, திருவொற்றாடை சாத்தி, “ஶ்ரீமதே நம: எண்ணெய் ஒலியல் சாத்தியருளவேணும். எண்ணெய்க்காப்பு சாத்தியருளவேணும். திருமுடிக்காப்புக்காக சாத்துப்படி சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, ஸ்நாநீய வட்டிலிலிருந்து  உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து புருஷ ஸூக்தம், ஶ்ரீஸூக்தம், பூஸூக்தம், *வெண்ணெயளைந்த குணுங்கும்* ஆகியவற்றை அநுஸந்தித்துக்கொண்டு தீர்த்த எம்பெருமான்களுக்கு திருமஞ்சனம் கண்டருளப்பண்ண வேண்டும். உத்தரணியை ஸுத்த ஜலத்தில்

Page-52

பண்ணி, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும் திருமுடி திருமேனியெங்குமொக்கத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, தீர்த்த எம்பெருமான்களை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ணி,

            திருத்துழாய்க் கொழுந்தைத் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். அலங்காராஸநத்துக்கு எழுந்தருள வேணும். திவ்ய பீதாம்பரம் சாத்தியருளவேணும். உத்தரீயம் சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஅர்க்யம் கண்டருள வேணும்என்று விண்ணப்பித்துமுக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருவடிகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, மீளவும் அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பித்துமுக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பித்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே

_______________________________________________________________________________

சோதித்து, “திருக்கைகள் விளக்கியருளவேணும்” என்று மீண்டும் அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, “ஆசமனம் கண்டருளவேணும்” என்று ஆசமனம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்தோதக வட்டிலிலே சோதித்து, “திருவொற்றாடை சாத்தியருள வேணும்”, என்று திருவொற்றாடையின் ஒரு நுனியால் திருக்கைகளுக்கும், திருப்பவளத்திற்கும்  மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும்  திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு, முன்பு போலவே, தீர்த்த எம்பெருமான்களை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ண வேண்டும்.

திருத்துழாய்க் கொழுந்தை எம்பெருமான் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். அலங்காராஸநத்துக்கு எழுந்தருள வேணும். திவ்ய பீதாம்பரம் சாத்தியருளவேணும். உத்தரீயம் சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, “அர்க்யம் கண்டருள வேணும்” என்று அர்க்யம் ஸமர்ப்பித்து,  உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து “திருவடிகள் விளக்கியருளவேணும்”என்று மீண்டும் பாத்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “திருக்கைகள் விளக்கியருளவேணும்”என்று மீண்டும் அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “ஆசமனம் கண்டருள வேணும்”என்று ஆசமனம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “திருவொற்றாடை சாத்தியருள வேணும்”

Page-53

முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும் திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருளவேணும்”, தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து,

ஶ்ரீமதே நம: திருமண்காப்பு சாத்தியருளவேணும் ஶ்ரீசூர்ணக்காப்பு சாத்தியருளவேணும் திருயஜ்ஞோபவீதம் சாத்தியருளவேணும் சாத்துப்படி சாத்தியருளவேணும்என்று *கந்தத்வாராந்*, *பூசும் சாந்து*, இத்யாதி அநுஸந்தாநத்துடனே சாத்துப்படி சாத்தி, “திருப்படித்தாமம் சாத்தியருளவேணும்என்று *ஸ்புரத் கிரீடாங்கத ஹார கண்டிகா*, *ஸ்வோசித விவித*,

__________________________________________________________________________________

என்று திருவொற்றாடையின் ஒருநுனியால் திருக்கைகளுக்கும் திருப்பவளத்திற்கும் மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும் திருவொற்றாடை ஸமர்ப்பித்து, திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருமண்காப்பு சாத்தியருளவேணும் ஶ்ரீசூர்ணக்காப்பு சாத்தியருளவேணும் திருயஜ்ஞோபவீதம் சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பிறகு,

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் ।
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ஶ்ரியம் ।। (ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே (திருவாய்மொழி 4.3.2)

முதலியவைகளை அநுஸந்தித்துக்கொண்டே சாத்துப்படி சாத்தவேண்டும். “திருப்படித்தாமம் சாத்தியருளவேணும்” என்று விண்ணப்பித்து,

“ஸ்புரத்கிரீடாங்கத ஹார கண்டிகா மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: ।

ரதாங்க சங்காஸி கதா தநுர்வரை: லஸத்துலஸ்யா வநமாலயோஜ்வலம் ।।”

“ஸ்வோசித விவித விசித்ராநந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய நிரதிசயஸுகந்த நிரதிசயஸுகஸ்பர்ஶ நிரதிசய ஔஜ்வல்ய கிரீட மகுட சூடாவதம்ஸ மகரகுண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஶ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தாதாம உதரபந்தன பீதாம்பர காஞ்சீகுண நூபுராத்யபரிமித திவ்யபூஷண”

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும்
குடையேறத் தாம் குவித்துக் கொண்டு (நான்முகன் திருவந்தாதி 43)

சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தி விண் ணோர்கள்நன்னீர்

ஆட்டியந் தூபம் தராநிற்கவேயங்கு ஓர் மாயையினால்

ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்

கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே. (திருவிருத்தம்)

Page-54

கிரீடாதி நூபுராந்தமான திவ்யாபரணங்களையும், சங்கசக்ராத்யாயுதங்களையும் சாத்தியருளவேணும். திருமாலை சாத்தியருளவேணும். திருக்கண்ணாடி கண்டருளவேணும்என்று திருத்துழாய்க் கொழுந்தாலே கண்டருளப்பண்ணி *பரிவதில் ஈசனைப்பாடி*, இத்யாதி அநுஸந்தானத்துடனே தூபம் கண்டருளப்பண்ணி, *வையம் தகளியா*, *அன்பே தகளியா*, *திருக்கண்டேன்*, *வடிக்கோல வாள்நெடுங்கண்*,  இத்யாதி அநுஸந்தானத்துடனேதீபம் கண்டருளவேணும், கந்த, புஷ்ப, தூப, தீப, ந்ருத்த, கீத, வாத்ய, சத்ர, சாமர, தாலவ்ருந்தாதி ஸர்வோபசாரங்களையும் கண்டருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, திருப்பல்லாண்டு, திருப்பாவை விண்ணப்பம் செய்வது.

            மீளவும் பஞ்ச பாத்ரங்களையும் சோதித்து, திருத்துழாய்க் கொழுந்தை திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும்.

_________________________________________________________________________________

 அநுஸந்தித்து, “கிரீடாதி நூபுராந்தமான திவ்யாபரணங்களையும், சங்கசக்ராத்யாயுதங்களையும் சாத்தியருளவேணும். திருமாலை சாத்தியருளவேணும். திருக்கண்ணாடி கண்டருளவேணும் ” என்று திருத்துழாய்க் கொழுந்தாலே கண்டருளப்பண்ண வேண்டும். பிறகு,

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே (திருவாய்மொழி 1.6.1) என்றனுஸந்தித்து தூபமும்,

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று (முதல் திருவந்தாதி 1)

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா
நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் (இரண்டாம் திருவந்தாதி 1)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று (மூன்றாம் திருவந்தாதி 1)

வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள் செவ்விப்

படிக்கோலம் கண்டகலாள் பன்னாள்-அடிக்கோலி

ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்ததென்கொலோ

கோலத்தாலில்லை குறை”

முதலியவற்றை அநுஸந்தித்துக்கொண்டு,

 “தீபம் கண்டருளவேணும், கந்த, புஷ்ப, தூப, தீப, ந்ருத்த, கீத, வாத்ய, சத்ர, சாமர, தாலவ்ருந்தாதி ஸர்வோபசாரங்களையும் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து, தீபமும் ஸமர்ப்பிக்க வேண்டும். (பிறகு மந்த்ரபுஷ்பம்) பிறகு, திருப்பல்லாண்டு, திருப்பாவை ஸேவிக்க வேண்டும்.

            மீளவும் வட்டில்களை சோதித்து, திருத்துழாய்க் கொழுந்தை திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். போஜ்யாஸநத்திற்கு எழுந்தருள

Page 55

திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும். போஜ்யாஸநத்துக்கு எழுந்தருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஶ்ரீமதே நம: திருவடிகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலே திருக்கைகளும் திருப்பவளத்திற்கும் தலைமாறி, திருவடிகளுக்கும் திருவொற்றாடை சாத்தி,

            திருமுன்பே, ஸ்தல ஸுத்தி பண்ணித் திருப்போனகம் ஸமர்ப்பித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்துத் திருப்போனகத்தை உத்தர வாக்யத்தாலே ப்ரோக்ஷித்து பரிசேஷனம் பண்ணி, ஆபோசனம் ஸமர்ப்பித்து த்வயத்தாலே அபிமந்த்ரித்து இரண்டு கூறாக பாவித்து, அதில் ஒருபாகம் எம்பெருமான்களுக்கும், மற்றொரு பாகம் பிராட்டிமார்களுக்குமாக பாவித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து இடது கையிலே வைத்துக்கொண்டு, திருப்போனகத்தை ஆசார்யன் ஆமலகப்ரமாணம் எம்பெருமான்

_______________________________________________________________________________

என்று விண்ணப்பம் செய்து “ஶ்ரீமதே நம: திருவடிகள் விளக்கியருளவேணும்” என்று பாத்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து,  “திருக்கைகள் விளக்கியருளவேணும்” என்று அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “ஆசமனம் கண்டருள வேணும்” என்று ஆசமனம் ஸமர்ப்பித்து உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “திருவொற்றாடை சாத்தியருளவேணும்” என்று திருவொற்றாடையின் ஒருநுனியால் திருக்கைகளும் திருப்பவளத்திற்கும், தலைமாறி மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும் திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும்.

            எம்பெருமான் திருமுன்பே, ஸ்தலத்தை ஸுத்தி செய்து அங்கே திருப்போனகத்தை (பிரசாதங்களை-அதாவது அன்னம், திருக்கண்ணமது, திருப்பணியாரங்கள், பருப்பு, கறியமுது, நெழுகறியமுது, (குழம்பு) சாற்றமுது, தயிரமுது, நெய்யமுது முதலியவை) வைத்து,  அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்துத் திருப்போனகத்தை, “ஶ்ரீமதே நாராயணாய நம:” என்ற உத்தர வாக்யத்தாலே ப்ரோக்ஷித்து, தீர்த்தத்தால் சுற்றி வளைத்து, திருத்துழாய்க் கொழுந்தை அவற்றில் பரிமாறி, “ஶ்ரீமந்நாராயண சரணௌ ஶரணம் ப்ரபத்யே, ஶ்ரீமதே நாராயணாய நம:” என்ற த்வயத்தால் அவற்றை  அபிமந்த்ரித்து இரண்டு பாகமாகப் பிரித்து, ஒருபாகத்தை எம்பெருமான்களுக்கும், மற்றொரு பாகத்தை பிராட்டிமார்களுக்குமாக பாவித்து, அர்க்ய வட்டிலிலிருந்து உத்தரணியாலே தீர்த்தத்தை எடுத்து இடது கையிலே வைத்துக்கொண்டு, திருப்போனகத்தை நெல்லிக்காயளவு ஆசார்யன் எடுத்து எம்பெருமானுடைய வலது திருக்கரத்தில் ஸமர்ப்பிப்பதாகவும்,

Page-56

உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, பானீய பாத்ரத்தில் நின்றும் திருமஞ்சனத்தை எடுத்து பானீயம் கண்டருளப்பண்ணி, *நாறுநறும் பொழில்*, *இன்று வந்தித்தனையும்*, *பச்சைமாமலை போல் மேனி*, *மிக்கானை மறையாய்*, *அடியேன் மேவி*, அன்ன ஸுக்தம், மதுஸூக்தம், *யா ப்ரீதிர் விதுரார்ப்பிதே*, *பிப்ரத் வேணும்*, இத்யாதி அநுஸந்தானத்துடனே திருப்போனகம் கண்டருளப்

_______________________________________________________________________________

அர்க்ய வட்டிலிலிருந்து தீர்த்தத்தை எடுத்து, “ஶ்ரீமதே நம: பானீயம் கண்டருள வேணும்” என்று விண்ணப்பித்து பானீயம் கண்டருளப் பண்ண வேண்டும்.பிறகு,

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான்

ஒன்றுநூறாயிரமாக்கொடுத்துப் பின்னும்ஆளும்செய்வன்

தென்றல்மணங்கமழும் திருமாலிருஞ்சோலைதன்னுள்

நின்றபிரான் அடியேன்மனத்தே வந்துநேர்படிலே. (நாச்சியார் திருமொழி 9.7)

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா. அமர ரேறே. ஆயர்தம் கொழுந்தே. என்னும்,

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே (திருமாலை)

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்

தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

 அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே (பெரிய திருமொழி 8-9-4)

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!

கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!

செடியார் வினைகள் தீர்மருந்தே! திருவேங் கடத்தெம் பெருமானே!

நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே. (திருவாய்மொழி-6-10-7)

அஹமஸ்மி ப்ரதமஜாருதஸ்ய । பூர்வம் தேவேப்யோ அம்ருதஸ்ய நாபி: ।

யோமாததாதி ஸயிதேவமாவா: । அஹமந்நமந்நமதந்தமத்மி ।

பூர்வமக்நே ரபிதஹத்யந்நம் । யத்தௌ ஹாஸாதே அஹமுத்தரேஷு ।

வ்யாத்தமஸ்ய பசவஸ்ஸுஜம்பம் । பச்யந்தி தீரா: ப்ரசந்தி பாகா: ।

ஜஹாம்யந்நம் ந ஜஹாம்யந்நம் । அஹமந்நம் வசமிச்சராமி ।

ஸமாநமர்த்தம் பர்யேமி புஞ்ஜத் । கோமாமந்நம் மநுஷ்யோதயேத ।

பாரகே அந்நம் நிஹிதம் லோக ஏதக் । விச்வைர்தேவை: பித்ருபி குப்தமந்நம் ।

யதத்யேத லுப்யதே யத் ப்ரோப்யதே  । சததமீ ஸாதநூர்மே பபூவ ।

மஹாந்தௌ சரூஸக்ருத்துக்தேந பப்ரௌ । திவஞ்ச ப்ருச்ஞி ப்ருதிவீஞ்ச ஸாகம் ।

தத்ஸம் பிபந்தோ நமிநந்தி வேதஸ: । நைதத் பூயோ பவதி நோகநீய: ।

Page-57

 *பிப்ரத் வேணும்*, இத்யாதி அநுஸந்தானத்துடனே திருப்போனகம் கண்டருளப்பண்ணி, பானீயம் கண்டருளப்ப்பண்ணி, பிராட்டிமார்களுக்கும் யதாபாகமாகக் கண்டருளப்பண்ணி, பானீயம் கண்டருளப் பண்ணி, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் திருமஞ்சனத்தை எடுத்து, “ஶ்ரீமதே நம: திருப்பவளம் மாற்றியருளவேணும். திருக்கைகள் விளக்கியருளவேணும்”, என்று விண்ணப்பம் செய்து முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே

______________________________________________________________________________

தத்ஸம் பிபந்தோ நமிநந்தி வேதஸ: । நைதத் பூயோ பவதி நோகநீய: ।

அந்நம் ப்ராணம் அந்நமபாநமாஹு:  ।அந்நம் ம்ருத்யும் தமுஜீவாது மாஹு: ।

அந்நம் ப்ரம்மாணோஜரஸம் வதந்தி । அந்நமாஹு: ப்ரஜநநம் ப்ரஜாநாம் ।

மோகமந்நம் விந்ததே அப்ரசேதா:  ।ஸத்யம் ப்ரவீமி வதயித் ஸதஸ்ய ।

நார்யமணம் புஷ்யதி நோ ஸகாயம் । கேவலாகோ பவதி கேவலாதீ ।

அஹம் மேகஸ்தநயந் வர்ஷந்நஸ்மி । மாமதந்த்ய ஹமத்ம்யந்யாந் ।

அஹ(கு)ம் ஸதம்ருதோ பவாமி । மதாதித்யா அதிஸர்வேதபந்தி ।।

-என்கிற அந்ந ஸூக்தத்தையும்,

மதுவாதாருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ:  ।மாத்வீர்ஸ்ஸந்த்வோஷதீ:।

மதுநக்தமுதோஷஸி மதுமத்பார்த்திவ(கு)ம் ரஜ: । மதுத்யௌரஸ்துந:பிதா ।

மதுமாந்நோ வாநஸ்பதிர் மதுமா(கு)ம் அஸ்து ஸூர்ய:  ।மாத்வீர்காவோ பவந்துந: ।।

-என்கிற மதுஸூக்தத்தையும்,

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஶீ
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே ஶபரீக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தாம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

பிப்ரத் வேணும் ஜடர படயோ: ஶ்ருங்க வேத்ரே ச கக்ஷே

வாமே பாணௌ மஶ்ருணகபலம் தத்பலான் யங்குளீஷூ

திஷ்டன் மத்யே ஸ்வபரி ஸூஹ்ருதோ ஹாஸ யன்னர் மபிஸ்வை:

ஸ்வர்கே லோகே மிஷதிதி புபுஜே யஜ்ஞபுக் பால கேளீம்

முதலிய ஶ்லோகங்களையும் அநுஸந்தித்துக்கொண்டு எம்பெருமானுக்குத் திருப்போனகம் கண்டருளப் பண்ணவேண்டும். (வலது கையின் ஐந்து விரல்களையும் ஒன்று சேர்த்து (க்ராஸமுத்திரையால்) ப்ரஸாதத்தை ஒவ்வொரு மூர்த்திக்கும் மும்மூன்று தரம் “ஶ்ரீமதே நாராயணாய (திருவாராதனப் பெருமாள் கண்ணபிரானாக இருந்தால் க்ருஷ்ணாய என்றும், ராமபிரானாக இருந்தால் ராமாய என்றும் இதேபோல் மற்ற எம்பெருமான்களுக்கும் சொல்லி), திருப்போனகம் கண்டருளவேணும்” என்று விண்ணப்பித்து, பெருமாள் திருக்கையில் ஸமர்ப்பிப்பதாகவும் அவர் திருப்பவளத்திலிட்டு அமுது செய்வதாகவும் பாவித்து, பிறகு அர்க்ய வட்டிலிலிருந்து பானீயம் கண்டருளப்பண்ணவேண்டும். பிறகு பிராட்டிமார்க்கும் இதேபோல் திருப்போனகம் கண்டருளப்பண்ணி பானீயம் கண்டருளப்பண்ணவேண்டும். ஸுத்த ஜலத்தில் உத்தரணியை சோதித்த பிறகு “ஶ்ரீமதே நம: திருப்பவளம் மாற்றியருளவேணும் திருக்கைகள் விளக்கியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து அர்க்யம் ஸமர்ப்பித்து உத்தரணியை ஸுத்த ஜலத்தில் சோதித்து,

Page-58

செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, மீளவும் அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலேதிருக்கைகளுக்கும் திருப்பவளத்திற்கும் திருவொற்றாடை சாத்தியருளவேணும்தலைமாறி, “திருவடிகளுக்குத் திருவொற்றாடை சாத்தியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து,

 

            “ஶ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:, அநந்தாய நாகராஜாய நம:, வைநதேயாய பக்ஷிராஜாய நம: ஸுதர்ஶனாய ஹேதிராஜாய நம:, பாஞ்சஜந்யாய ஶங்காதிபதயே நம: திருப்போனகம் யதாபாகமாகக் கண்டருளவேணும்என்று விண்ணப்பம் செய்து பானீயம் கண்டருளப் பண்ணி, திருவொற்றாடை சாத்தி,

            “ஶ்ரீமத்ப்ய: பராங்குஶ பரகாலாதிப்யோ நம:” என்று திருப்போனகம் யதாபாகமாகக் கண்டருளப் பண்ணி , பானீயம் கண்டருளப் பண்ணி,

            “ஶ்ரீமதே ராமாநுஜாய நம:” என்று உடையவருக்கு திருப்போனகம் கண்டருளப் பண்ணி, அநந்விசை ஆசார்யனுக்கும் கண்டருளப் பண்ணி,

            மீளவும் பஞ்ச பாத்ரங்களையும் சோதித்து, தீர்த்தம் பூரித்து, அபிமந்த்ரித்து, சோஷித்து, திருத்துழாயைத் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடி

_______________________________________________________________________________

சோதித்து, “திருக்கைகள் விளக்கியருளவேணும்” என்று மீண்டும் அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “ஆசமனம் கண்டருள வேணும்” என்று ஆசமனம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “திருவொற்றாடை சாத்தியருளவேணும்” என்று திருவொற்றாடையின் ஒருநுனியால் திருக்கைகளுக்கும் திருப்பவளத்திற்கும், மற்றொரு நுனியால் திருவடிகளுக்கும்  திருவொற்றாடை ஸமர்ப்பிக்க வேண்டும்.

            பிறகு, “ஶ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:, அநந்தாய நாகராஜாய நம:, வைநதேயாய பக்ஷிராஜாய நம: ஸுதர்ஶனாய ஹேதிராஜாய நம:, பாஞ்சஜந்யாய ஶங்காதிபதயே நம: திருப்போனகம் யதாபாகமாகக் கண்டருளவேணும் ” என்று விண்ணப்பம் செய்து அவர்களுக்குத் திருப்போனகம் கண்டருளப் பண்ணி, பானீயமும் கண்டருளப் பண்ணி, திருவொற்றாடை சாத்தவேண்டும்.

            “ஶ்ரீமத்ப்ய: பராங்குஶ பரகாலாதிப்யோ நம: திருப்போனகம் யதாபாகமாகக் கண்டருளவேணும்” பண்ணி , என்று அவர்களுக்கும் திருப்போனகம் கண்டருளப் பண்ணி, பானீயமும் கண்டருளப் பண்ணி, திருவொற்றாடை சாத்தவேண்டும்.

            “ஶ்ரீமதே ராமாநுஜாய நம:” என்று உடையவருக்கு திருப்போனகம் கண்டருளப் பண்ணி, பிறகு ஆசார்யனுக்கும் கண்டருளப் பண்ணவேண்டும்.

            மீண்டும் ஐந்து வட்டில்களையும்  சோதித்து, தீர்த்தம் நிறைத்து, அபிமந்த்ரித்து, சோஷித்து, திருத்துழாயை எம்பெருமான் திருவடிகளிலே ஸமர்ப்பித்து, “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருளவேணும்.

Page-59

நிலை சாத்தியருளவேணும். மந்த்ராஸனத்துக்கு எழுந்தருளவேணும்என்று விண்ணப்பம் செய்து,

அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஅர்க்யம்  கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, பாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “பாத்யம்  கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை ஒருதலையாலே திருக்கைகளும் திருப்பவளத்திற்கும் தலைமாறி, திருவடிகளுக்கும் திருவொற்றாடை சாத்தி,

            சுருளமுது சோதித்து, *கனஸார* என்கிற ஶ்லோகாநுஸந்தானத்துடனே சுருளமுது கண்டருளப்பண்ணி, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து திருப்பவளம் மாற்றி, “திருக்கைகள் விளக்கியருளவேணும்என்று முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து ஆசமனம் கண்டருளப்பண்ணி திருப்படிகத்திலே சேர்த்து, திருவொற்றாடை சாத்தி, கற்பூர நீராஜநம் *லக்ஷ்மீசரணலாக்ஷாங்க* இத்யாதி ஶ்லோகாநுஸந்தானத்துடனே

______________________________________________________________________________

மந்த்ராஸநத்துக்கு எழுந்தருள வேணும்” என்று விண்ணப்பம் செய்து,  “அர்க்யம் கண்டருள வேணும்” என்று அர்க்யம் ஸமர்ப்பித்து,  உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “பாத்யம் கண்டருள வேணும்” என்று பாத்யம் ஸமர்ப்பித்து,  உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து “திருக்கைகள் விளக்கியருளவேணும்”என்று மீண்டும் அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “ஆசமனம் கண்டருள வேணும்”என்று ஆசமனம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடையும்  சாத்தி,

            “கனஸாரஸிரோதக்ரை: க்ரமுகாஷ்டதளைஸ்ஸஹ

            விமலாசநிதாம்பூல தளாநி ஸ்வீகுரு ப்ரபோ”

என்ற ஶ்லோகத்தை அநுஸந்தித்துக்கொண்டு, சுருளமுது (வெற்றிலை பாக்கு) சோதித்துக் கண்டருளப் பண்ணவேண்டும். பிறகு அர்க்ய வட்டிலிலிருந்து தீர்த்தத்தை எடுத்து திருப்பவளம் மாற்றி “திருக்கைகள் விளக்கியருளவேணும்” என்று அர்க்யம் ஸமர்ப்பித்து, ஆசமனம் கண்டருளப்பண்ணி, திருவொற்றாடை சாத்தி, கற்பூர நீராஜனம் ஸமர்ப்பித்து, பினவரும் ஶ்லோகங்களை அநுஸந்திக்க வேண்டும்.

லக்ஷ்மீசரண லாக்ஷாங்க ஸாக்ஷீ ஸ்ரீவத்ஸ வக்ஷஸே

க்ஷேமங்கராய ஸர்வேஷாம் ஸ்ரீரங்கேஶாய மங்களம்

Page-60

திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, “ திருவடி நிலை சாத்தியருளவேணும். பர்யங்காஸனத்துக்கு எழுந்தருளவேணும்என்று விண்ணப்பம் செய்துபாத்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்து, “ஶ்ரீமதே நம: திருவடிகள் விளக்கியருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, அர்க்ய பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துதிருக்கைகள் விளக்கியருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, ஆசமன பாத்ரத்தில் நின்றும் உத்தரணியாலே திருமஞ்சனத்தை எடுத்துஆசமனம் கண்டருள வேணும்என்று விண்ணப்பம் செய்து, முக்கால் முக்கால் திருப்படிகத்திலே சேர்த்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை சாத்தி, சுருளமுது திருத்திக் கண்டருளப்பண்ணி, திருப்பவளம் மாற்றித் திருக்கைகள் விளக்கி, ஆசமனம்

_______________________________________________________________________________

 

ஶ்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

அஸ்துஸ்ரீஸ்தந கஸ்தூரி வாஸனா வாஸிதோரஸே

ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்

கமலாகுச கஸ்தூரீ கர்த்த மாங்கித வக்ஷஸே

யாதவாத்ரி நிவாஸாய ஸம்பத்புத்ராய மங்களம்

நீலாசல நிவாஸாய நித்யாய பரமாத்மநே

ஸுபத்ரா ப்ராண நாதாய ஜகந்நாதாய மங்களம்

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாத்மநே

சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமாநுஜாய ச

ருக்மிணி ப்ராண நாதாய பார்த்தஸூதாய மங்களம்

ஶ்ரீமத்யை விஷ்ணுசித்தார்ய மநோ நந்தந ஹேதவே

நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயை நித்யமங்களம்

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே

ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே சடகோபாய மங்களம்

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரீ நாதாய கலிவைரிணே

சதுஷ்கவி ப்ரதாநாய பரகாலாய மங்களம்

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஸவ யஜ்வந:காந்திமத்யாம் ப்ரஸூதாய யதிராஜாய மங்களம்

ஸ்ரீபராங்குச பாதாப்ஜ ஸுரபீக்ருத மௌலயே ஸ்ரீவத்ஸ சிஹ்ந நாதாய யதிராஜாய மங்களம்

சேஷோவா ஸைந்யநாதோவா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை:

விதர்க்யாய மஹாப்ராஞ்யைர் பாஷ்யகாராய மங்களம்

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே

ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்

துலா மூலாவதீர்ணாய தோஷிதாகில ஸூரயே

ஸௌம்யஜாமாத்ரு முநயே சேஷாம்ஸாயாஸ்து மங்களம்

மங்களாசாஸந பரை: மதாசார்ய புரோகமை:

ஸர்வைஸ்ச பூர்வைர் ஆசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

பிறகு திருப்பாவை முதலிய திவ்யப்ரபந்தங்களின் சாற்றுமுறைப் பாசுரங்களை ஸேவிக்க வேண்டும். பிறகு எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து “ஶ்ரீமதே நம: திருவடிநிலை சாத்தியருள வேணும் பர்யங்காஸநத்துக்கு எழுந்தருளவேணும் ”_என்று விண்ணப்பிக்க வேண்டும். பிறகு,  “ஶ்ரீமதே நம: திருவடிகள் விளக்கியருளவேணும்” என்று பாத்யம் ஸமர்ப்பித்து,  உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து “திருக்கைகள் விளக்கியருளவேணும்”என்று மீண்டும் அர்க்யம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, “ஆசமனம் கண்டருள வேணும்”என்று ஆசமனம் ஸமர்ப்பித்து, உத்தரணியை ஸுத்த ஜலத்திலே சோதித்து, திருவொற்றாடையும்  சுருளமுதும் கண்டருளப்பண்ணி, திருப்பவளம் மாற்றி, திருக்கைகள் விளக்கி, ஆசமனம் கண்டருளப்பண்ணி,

Page-61

சேர்த்து, உத்தரணியை ஸுத்தஜலத்திலே சோதித்து, திருவொற்றாடை சாத்தி, சுருளமுது திருத்திக் கண்டருளப்பண்ணி, திருவொற்றாடை சாத்தி, திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஆசார்யன் திருக்கைகளால் ஸர்வோபசாரங்களையும் கண்டருளவேணும்என்று விண்ணப்பம் செய்து, *உபசாராபதேஶேந* என்கிற ஶ்லோக அநுஸந்தானத்துடனே தண்டன் ஸமர்ப்பித்து, அபராதக்ஷாமணம் பண்ணிக்கொண்டு, *பந்நகாதீஶ பர்யங்கே ரமாஹஸ்தோபதாநகே* என்கிற ஶ்லோகத்தையும், *அரவத்தமளியினோடும்*, *உறகல் உறகல் உறகல்* என்கிற பாசுரங்களையும் அநுஸந்தித்துக் கோயிலாழ்வார் திருக்காப்புச் சேர்த்து, திருமஞ்சனத் தாழியைப் பாநீயார்த்தமாக ஸந்நிதியிலே ஸ்தாபித்து, *ஜிதந்தே* என்கிற ஸ்தோத்ர அநுஸந்தானத்துடன் தண்டன் ஸமர்ப்பித்து அபராதக்ஷாமணம் பண்ணிக்கொள்வது.

________________________________________________________________________________

ஜீயர் திருவடிகளே ஶரணம்

_________________________________________________________________________________

திருவொற்றாடை சாத்தி, திருவடிகளிலே திருத்துழாய்க் கொழுந்தை ஸமர்ப்பித்து, “ஆசார்யன் திருக்கைகளால் ஸர்வோபசாரங்களையும் கண்டருளவேணும்” என்று விண்ணப்பம் செய்து,

            “உபசாராபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா ।
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம ।।

என்ற ஶ்லோகத்தை அநுஸந்தித்து, தண்டன் ஸமர்ப்பித்து அபராதக்ஷாமணம் பண்ணிக்கொள்ளவேண்டும்.

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே ।
ஸுகம் சேஷ்வ வ்ருஷாதீஶ ஸுதர்ஶந ஸுரக்ஷித: ।।

அரவத்து அமளியினோடும்*  அழகிய பாற்கடலோடும்*
அரவிந்தப் பாவையும்தானும்*  அகம்படி வந்துபுகுந்து*
பரவைத் திரைபலமோதப்*  பள்ளி கொள்கின்றபிரானைப்*
பரவுகின்றான் விட்டுசித்தன்*  பட்டினம்காவற்பொருட்டே. (2)

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறிவெறி நாந்தக வாளே அழகிய ஸார்ங்கமே தண்டே
இரவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9)

என்கிற பாசுரங்களையும் அநுஸந்திக்கவேண்டும். திருமஞ்சநத் தாழியில் பானீயார்த்தமாகத் தீர்த்தத்தைக் கோயிலாழ்வார் முன்பு வைக்க வேண்டும். பிறகு, “ஜிதம் தே புண்டரீகாக்ஷ” என்ற ஸ்தோத்ரத்தை அநுஸந்தித்துக்கொண்டு தண்டம் ஸமர்ப்பித்து அபராதக்ஷாமணம் பண்ணிக்கொண்டு கோயிலாழ்வார் திருக்காப்புகளைச் சாத்திவிடவேண்டும்.

ஜீயர் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!