[highlight_content]

ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானம் Part 2

ஶ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை

அருளிச்செய்த

ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானம் Part 2

नैव किञ्चित्परोक्षन्ते प्रत्यक्षोऽसि कस्यचित्

नैव किञ्चिदसिद्धन्ते सिद्धोऽसि कस्यचित्।। ।।

  1. நைவ கிஞ்சித்‌ பரோக்ஷந்தே ப்ரத்யக்ஷோஸி ந கஸ்யசித்

நைவ கிஞ்சித3ஸித்34ந்தே ஸித்3தோ4ஸி கஸ்யசித்।।

___________________________________________________________

  1. பதவுரை:–தே-உனக்கு, பரோக்ஷம்— அப்ரத்யக்ஷமாயிருப்பது, கிஞ்சித்– ஒன்றுமில்லை; கஸ்யசித்–ஒருவர்க்‌கும்‌, ப்ரத்யக்ஷ:–கண்ணால்‌ காணக்கூடியவனாக, அஸி-(நீ) ஆகிறாயல்லை; தே-உனக்கு, அஸித்34ம்-செய்யமுடியாதது, கிஞ்சித்– சிறிதும்‌ இல்லை; கஸ்யசித்–ஒருவருக்கும்‌, ஸித்34:–(ஸ்வயத்னத்தாலே) ௮டையக்கூடியவனாக, அஸி— (நீ) ஆகிறாயல்லை.

அவ:– (நைவ கிஞ்சிதி3த்யாதி3) “ஏகஸ்த்வமஸி” என்கிற ஶ்லோகத்தில்‌, ஜக3த்காரணத்வப்ரயுக்தகமான ஸ்வாமித்வ ஸௌலப்‌4யங்கள்‌ உண்டானாலும்‌, கீழ்‌ ஶ்லோகத்தில்‌, தன்னையும்‌ தன்‌ உடைமையையும்‌ ஆஶ்ரிதார்த்த2மாக்கின வாத்ஸல்ய ஸௌஶீல்யங்கள்‌ உண்டானாலும்‌, ஜ்ஞான ஶக்த்யாதி3கள்‌ இல்லையாகில்‌ ஶரண்யனாகக்கூடாது. அதுக்காக ஜ்ஞான ஶக்தயாதி3களைச்‌ சொல்லுகிறது இஶ்லோகம்‌. முன்பு உக்தமான கு3ணங்கள்‌ ஆஶ்ரிதர்க்கு  அவனை விஷயீகரிக்கைக்கு உறுப்பாமித்தனையொழிய அபி4மதஸித்3தி4க்கு ஜ்ஞான ஶக்திகள்‌ வேணுமிறே.

வ்யா:–(நைவ கிஞ்சித்பரோக்ஷம்தே) “தே பரோக்ஷம்‌ ந கிஞ்சிதே3வ”; உனக்கு அப்ரத்யக்ஷமாயிருப்பது ஒன்றுமில்லை. 58. “यस्सर्वज्ञस्सर्ववित्‌” (யஸ்ஸர்வஜ்ஞஸ்‌ ஸர்வவித்‌) என்கிறபடியே ஸர்வஜ்ஞனென்றும்‌,

ப்ரமாணம் முன்னம் இடப்பட்டுள்ளது.

  1. स्वाभाविकी ज्ञानबलक्रिया ( ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச) என்று ஸ்வதஸ்ஸர்வஜ்ஞத்வம்‌ ஸத்தாப்ரயுக்கமென்றும,

ப்ரமாணம்:

பராஸ்ய ஶக்திர்‌ விவிதை4 ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா

(ஶ்வே-6)

[இந்தப்பரமாத்மாவுக்குப்பலபடிப்பட்டதும்‌,மேலானதுமான ஶக்தியும்‌, இயற்கையான ஞானமும்‌, 3லமும்‌, (ஸ்ருஷ்டித்தல்முதலிய) காரியங்களும்உண்டென்று அறியப்படுகிறது.]

  1. यो वेत्ति युगपत्सर्वं प्रत्यक्षेण सदा स्वत:” (யோ வேத்தி யுக3பத்‌ ஸர்வம்‌ ப்ரத்யக்ஷேண ஸதா3 ஸ்வத:) என்று யுக3பத்‌ஸாக்ஷாத்காரமும்‌ ப்ரமாணஸித்‌34மிறே.

ப்ரமாணம்:

யோ வேத்தி யுக3பத்ஸர்வம்ப்ரத்யக்ஷண ஸதா3 ஸ்வத:

தம்‌ ப்ரணம்ய ஹரிம்‌ ஶாஸ்த்ரம் ந்யாயதத்த்வம்‌ ப்ரசக்ஷ்மஹே  ।।

(நாத2முனிகள் அருளிய ந்யாயதத்வம்)

[எவனொருவன்‌, எப்போதும்எல்லா வஸ்துக்களையும்ஒரே சமயத்தில்தானாகவே ௮றிகிறானோ, ௮ந்த ஹரியை வணங்கி, ந்யாயதத்வம்என்னும்ஶாஸ்திரத்தை இயற்றுகிறோம்‌.]

அப்படிப்பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூபயாதா2த்ம்யத்தையும்‌, ஸ்வரூபானுரூபமான ப்ராப்யஸ்வரூபத்தையும்‌, தத்‌3விரோதி4 ப்ரக்ருதிஸம்ப3ந்த4ம்‌ என்னுமிடத்தையும்‌, ‘ப்ரக்ருதிஸம்ப3ந்‌த4த்தாலே நான்‌ புகாத நரகமில்லை ; நான்‌ நுழையாத க3ர்ப்ப4மில்லை’ என்றும்‌ வாயாலே விண்ணப்பம்‌ செய்ய வேண்டுவதொன்று உண்டோ? இன்னமும்‌ நான்‌ அறிந்தவளவன்றோ விண்ணப்பம்‌ செய்யலாவது. ப்ரவாஹரூபேண அநாதி3யாய்ப்போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி3பூர்வவ்ருத்தம்‌ பழகிப்போந்த தேவரையொழிய மற்று அறிவாருண்டோ? அறிந்து விண்ணப்பம்‌ செய்யலான விஜ்ஞாபனப்ரகாரம்தான்‌ வேறு அறிவார்‌ உண்டோ? இவற்றில்‌ எனக்கு ஒரு ஜ்ஞானமில்லாதாப்போலே தேவர்க்கும்‌ அஜ்ஞாதமாயிருப்பதொன்றுமில்லை. (கஸ்யசித்‌ ந ப்ரத்யக்ஷோऽஸி) 69. “ सन्दृशे तिष्ठति रूपमस्य चक्षुषा पश्यति कश्चनैनं (ந ஸந்த்‌3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்‌) என்று ஒருவர்க்கும்‌ சக்ஷுர்விஷயனல்லை ; அந்வய வ்யதிரேகத்தாலே தேவருடைய அதீந்த்3ரியத்வத்தை த்‌3ருடீ4கரிக்கிறதிறே ஶ்ருதிதான்‌; இப்படிப்பட்ட தேவரை ப்ரத்யக்ஷிக்கும்போது ஆனைக்கு உதவினாப்போலே ஆவிர்ப்ப4வித்துக்‌ காட்டக்‌காணுதல்‌, அவதரித்துக்‌ காட்டக்காணுதலிறே.

ப்ரமாணம்:

ஸ்ந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந  சக்ஷுஷா பஶ்யதி க்ஶ்சநைநம்

          (தைத். நாரா. 1-10)

[இவனுடைய ரூபம்கண்ணால்காணும்படி இராது; ஒருவனும்இவனைக்கண்ணால்பார்க்கிறதில்லை.]

மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வாரும்‌, (திருவாய் 1-1-1) “வாசத்‌ தடம்போல்‌ வருவானே ஒரு காள்‌ காண வாராயே” (திருவாய் 8-5-1) என்று காண ஆசைப்பட்டாரித்தனையிறே; தாம்‌ காண யத்நம்‌ பண்ணிற்‌றிலர்‌, 70. “कदा नु साक्षात्करवाणि चक्षुषा (கதா3 நு ஸாக்ஷாத்‌ கரவாணி சக்ஷுஷா) என்றிறே ஆளவந்தார்‌ வார்த்தையும்‌. (தே அஸித்‌34ம்‌ ந கிஞ்சிதே3வ)

ப்ரமாணம்: ஸ்தோத்ரரத்னம்‌-30.

          விலாஸ விக்ராந்த பராவராலயம்

                   நமஸ்யதா3ர்த்திக்ஷபணே க்ருதக்ஷணம்

          4நம் மதீ3யம் தவ பாத3பங்கஜம்

                   கதா3 நு ஸாக்ஷாத்கரவாணி சக்ஷுஷா ।।

[விளையாட்டாக அளக்கப்பட்ட மேலானவரான தே3வர்களுடையவும், கீழான மனுஷ்யாதி3களுடையவும் உலகங்களை உடையதும், வணங்கினவர்களின் து3க்க2ங்களைப் போக்கும் விஷயத்தில் காலத்தைச் செலவிடுவதும், எனக்குச் செல்வமாயிருப்பதுமான உன்னுடைய திருவடித்தாமரையை எப்போதுதான் கண்ணாலே காணப்போகிறேன்?]

  1. पराऽस्य शक्तिर्विविधैव श्रूयते (பராऽஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே) என்கிறபடியே [ப்ரமாணம் முன்னம் இடப்பட்டுள்ளது.] ஸர்வஶக்தியான தேவர்க்கு ஆஶ்ரிதரக்ஷணத்தில்‌ அக4டிதமென்று கைவாங்கவேண்டுவதொன்று உண்டோ? ஸங்கல்பமடியாக ஸர்வமும்‌ ஸித்‌34மன்றோ.
  2. संजीवयन्नपि मृतं सुतमुत्तरायाः, सान्दीपिनेश्चिरमृतं सुतमानयंश्च। घाम्नो निजात्द्विजसुतान्पुनरानयन्वा स्वामेव तां तनुमहो कथमानयस्त्वम् (ஸஞ்ஜீவயந்நபி மருதம்‌ ஸுதமுத்தராயாஸ்‌ ஸாந்தீ3பிநேஶ்சிரம்ருதம்‌ ஸுதமாநயம்ஶ்ச । தா4ம்நோ நிஜாத்‌ த்3விஜஸுதாகந் புநராநயந் வா ஸ்வாமேவ தாம்‌ தநுமஹோ கத2மா நயஸ்தவம்।।) என்று இப்படி அக4டிதங்களை க4டிப்பிக்கும்‌ தேவரே நித்யஸம்ஸாரியான என்னை நித்யஸுரிகள்‌ பரிமாற்றத்தீலே அந்வயிப்பிக்கத்‌ தட்டில்லை என்று கருத்து, (கஸ்யசித்‌ ந ஸித்‌3தோ4ஸி) ஒருவர்க்கும்‌ ஸ்வஸாமர்த்‌2யத்‌தாலே ப்ராபிக்க அரியையாகாநின்றாய்‌.

ப்ரமாணம்:

ஸஞ்ஜீவயந்நபி ம்ருதம்ஸுதமுத்தராயாஸ்

ஸாந்தீ3பிநேஶ் சிரம்ருதம்‌ ஸுதமாநயம்ஶ்ச 

தா4ம்நோ நிஜாத்த்3விஜஸுதாந்புநராநயந்வா

ஸ்வாமேவ தாம்தநுமஹோ கத2மாநயஸ்த்வம்‌  ।।

(அதிமானுஷஸ்தவம் 58)

[இறந்துபோன உத்தரையின்புத்திரனைப்பிழைப்பித்தும்‌, நெடுங்காலத்திற்கு முன்உயிர்துறந்த ஸாந்தீ3பிநி குமாரனை மீட்டுக்கொண்டுவந்தும்‌, தன்னுடைய பரமபத3த்திலிருந்து வைதி3கன்பிள்ளைகளை மறுபடி அழைத்து வந்தும்போந்த நீ அவரவர்களுடைய அந்த ஶரீரத்தையே எப்படிக்கொண்டுவந்தாய்‌ ? ஆச்சரியம்‌.]

 க்ருதக்ருத்யனானாலும்‌, ப்ராப்திக்கு 72. “ नयामि परमां गतिं (நயாமி பரமாம் க3திம்) என்கிறபடியே அவன்‌ கை பார்த்திருக்கவேணுமென்கை.

ப்ரமாணம்:

அஹம்ஸ்மராமி மத்34க்தம்நயாமி பரமாம்3திம்।। (வராஹ சரமஶ்லோகம்)

[என்னுடைய 4க்தனை (அவன்சாகும்சமயத்தில்‌) நான்நினைக்கிறேன்‌. மேலான: 3திக்கு (அவனை நான்‌ ) அழைத்துச்செல்லுகிறேன்‌.]

ஆக, பேற்றுக்கு  உறுப்பான ஜ்ஞானஶக்‌த்யாதி3கள்‌ உள்ளது உனக்கே; உன்னையொழிந்தாரடங்‌கலும்‌ அஜ்ஞரும்‌ அஶக்தரும்‌. கண்ணும்‌ காலும்‌ உடையாய்‌ நீயே; உன்னையொழிந்தாரடங்கலும்‌. குருடும்‌, முடமும்‌. சேதனனுடைய ஜ்ஞானஶக்திகளுக்கு வினியோக3ம்‌, ப்ரத2மத்தில்‌ உபாயஸ்வீகாரத்திலே ஜ்ஞானமும்‌, அத்‌4யவஸாயத்திலே ஶக்தியுமாகக்கடவது. இந்த ஜ்ஞான ஶக்த்யாதி3கள்‌ இரண்டும்‌ போ43த்திலேயாகக்கடவது. இத்தால்‌ சொல்லிற்றாய்த்து, — இத்தலை இசைவே அடியாகக்கொண்டு ஸ்வஸம்ப3ந்த4த்தாலே ரக்ஷியாவிடில்‌ தேவர்க்குப்‌ பழியென்றதாயிற்று. ரக்ஷண த4ர்மத்தில்‌ ஈஶ்வரனுடைய ஜ்ஞானஶக்த்யாதிகளே தாரகம்‌. “ஆத்மாவுக்கு ஈஶ்வரப்ராப்தியன்று; ஈஶ்வரனுக்கு ஆத்மப்ராப்திகாண்‌ நினைவு” என்று ஜீயர்‌ அருளிச்செய்வர்‌.

  1. अहमन्नं (அஹமந்நம்‌) என்கிற இதுவே அர்த்த2ம்‌; 73. “अन्नाद:” (அந்நாத3🙂 என்று இத்தலையில்‌ போ4க்‌த்ருத்வம்‌ ஸ்வலாப4த்தால்‌ ஈஶ்வரனுக்குப்‌ பேறான ஹர்ஷம்‌ தனக்குப்‌ புருஷார்த்த2மாகை, ஸங்க்3ரஹ பக்ஷத்தில்‌ இஶ்லோகம்‌ “ஜிதந்தே” என்கிற பத3த்தினுடைய விவரணமாகக்கடவது. 6.

ப்ரமாணம்:

அஹமந்நமஹமந்நமஹமந்நம்‌ 

அஹமந்நாதோ3ஹமந்நாதோ3ஹமந்நாத3: ।। (தை-ப்4ருகு3 10-6)

[நான்‌ ( பரமாத்மாவுக்கு ) அன்னம்போல்போ4க்3யமாயிருப்பவன்‌ ) நான்‌ (பரமாத்மாவுக்கு) அன்னம்‌; நான்‌ (பரமாத்மாவுக்கு) அன்னம்‌. நான்‌ (பரமாத்மாவின்உகப்பாகிற) அன்னத்தைப்பு4ஜிப்பவன்நான்அன்னத்தை பு4ஜிப்பவன்‌; நான்௮ன்னத்தை பு4ஜிப்பவன்‌.]

कार्याणां कारणं पूर्वं वचसां वाच्यमुत्तमम्

योगानां परमां सिद्धिं परमं ते पदं विदुः॥७

 

  1. கார்யாணாம்‌ காரணம்‌ பூர்வம்‌ வசஸாம்‌ வாச்யமுத்தமம்‌

யோகா3நாம்பரமாம்ஸித்3தி4ம்பரமம்தே பத3ம்விது3: ।।

________________________________________________________________________7. பதவுரை:– கார்யாணாம்–கார்யங்களான எல்லாப்‌ பொருள்களுக்கும்‌, பூர்வம்காரணம்–ஆதி3காரணமாகவும்‌, வசஸாம் — சொற்களுக்கு, உத்தமம்வாச்யம் — மேலான சொற்பொருளாகவும்‌, யோகா3நாம் — யோக3ங்களுக்கு, பரமாம்ஸித்3தி4ம் — மேலான ப்ராப்யமாகவும்‌, தே-உன்னுடைய, பரமம்பத3ம்–மேலான திருவடிகளை, விது3:–(பெரியோர்கள்‌) அறிகிறார்கள்‌.

அவ: (கார்யாணாம்காரணமித்யாதி3) கீழ்‌ ஶ்லோகத்‌தில்‌ சொன்ன ஜ்ஞானஸக்த்யாதி3களை அனுஸந்தி4த்து, அந்த ஶக்திகாரிதமான ப43வத3னுப4வத்துக்கு வர்த்த4கமான பரமபத3த்தே என்னைப்‌ போகவிடவேணும்‌ என்கிறது. “முக்தப்ராப்யமமான பூ4மியைத்‌ தருவானிறே ஶரண்யனாவான்‌” என்று பட்டர்‌ நிர்வாஹம்‌; “நித்யானுபா4வ்யமான தேவர்‌ திருவடிகளை லபி4க்கவேணுமென்கிறது’” என்ன”வுமாம்‌. இது பூர்வர்கள்‌ நிர்வாஹம்‌.

வ்யா:– ( கார்யாணாம்காரணம்பூர்வம்‌) அந்யோந்ய கார்யகாரணபா4வங்களை வ்யாவர்த்திக்கிறது. 74. “प्रधान पुंसोरजयोः कारणं कार्यभूतयोः (ப்ரதா4நபும்ஸோரஜயோ: காரணம்‌ கார்யபூ4தயோ:) என்கிறபடியே ப்ரதா4னபுருஷர்‌களும்‌ ஈஶ்வரனைக்‌ குறித்துக்‌ கார்யங்களாகக்‌ கடவதிறே.

ப்ரமாணம்:

பராவரேஶம்ஶரணம்வ்ரஜத்4வமஸுரார்த3நம்

ப்ரதா4நபும்ஸலோரஜயோ: காரணம்கார்யபூ4தயோ: ।। (வி.பு. 1-9-35, 37)

[மேலானவர்களுக்கும்‌, தாழ்ந்தவர்களுக்கும்ஈஶனும்‌, அஸுரர்களை ஹிம்ஸிப்பவனும்‌, கார்யபூ4தங்களும்‌, பிறப்பற்றவையுமான ப்ரக்ருதிக்கும்‌, புருஷனுக்கும்காரணமானவனுமான விஷ்ணுவை ஶரணமடையுங்கள்‌.]

  1. यतः प्रसूता जगतः प्रसूती तोयेन जीवान्व्यससर्ज भूम्यां (யத: ப்தஸூதா ஜகத: ப்ரஸுதீ தோயேந ஜீவாந் வ்யஸஸர்ஜ பூ4ம்யாம்‌) என்றதிறே.

ப்ரமாணம்:

யத: ப்ரஸூதா ஜக3: ப்ரஸூதீ தோயேந ஜீவாந்வ்யஸஸர்ஜ பூ4ம்யாம்

(தைநா 1-4)

[உலகத்தை உண்டுபண்ணும்‌ –ப்ரக்ருதியான து எவனிடமிருந்து உண்டாயிற்றோ, எவன்ஜலம்முதலிய பூ4தங்களுடன்பூ4மியில்ஜீவர்களை ஸ்ருஷ்டித்தானே…]

அந்த ப்ரக்ருதிபுருஷர்களைக்‌ காரணமாக உடைத்தாயிறே மஹதா3தி3கார்யங்களிருப்பது. அவற்றைக்‌ காரணமாக உடைத்தாயிறே அண்ட3மிருப்பது. அண்டா3ந்தர்வர்த்தியான ப்‌3ரஹ்மாவைக்‌ காரணமாக உடைத்தாயிறே தே3வாதி3 சதுர்வித4 சேதனரும்‌, தத்‌3 போ4க்3ய போ4கோ3ரபகரண போ43ஸ்தா2னங்களும்‌ இருப்‌பது. ஆக, ப3ஹுமுக2மான காரணங்களுக்கெல்லாம்‌ ப்ரத2மகாரணமாயிறே ஸர்வேஶ்வரன்‌ இருப்பது, “கார்‌யாணாம்‌ காரணம்‌ பூர்வம்‌” என்று தே3ஶபரமானபோது அவனுக்கு ப்ரக்ருதி நித்ய விஶேஷணமாகையாலே அத்தை ஜக3த்காரணமென்றாப்போலே, பரமபத3ம்‌ அவனுக்கு நித்ய விஶேஷணமாகையாலே பூர்வக்ஷணவர்த்தியாய்‌, பூர்வ காரணமென்னலாம்‌. இத்தால்‌ பரமபத3த்தினுடைய நித்யதை சொல்லுகிறது. 76. “तदक्षरे परमे व्योमन्‌” (தத3க்ஷரே பரமே வ்யோமந்) என்றும்‌, “கலங்காப்‌ பெருநகரம்‌” (மூன். திருவ. 51) என்றும்‌ சொல்லக்கடவதிஜறே. (வசஸாம்‌ வாச்யமுத்தமம்‌) லெளகிகமாயும்‌, வைதி3கமாயுமுள்ள ஸர்வ ஸப்‌33ங்களுக்கும்‌ ப்ரதா4நவாச்யன்‌ ஈஶ்வரன்‌ என்கிறது.

ப்ரமாணம்:

யஸ்மிந்நித3ம்ஸஞ்ச விசைதி விஶ்வம்

யஸ்மிந்தே3வா அதி4 விஶ்வே நிஷேது3:

ததே3 பூ4தம்தது3 4வ்யமா இத3ம்

தத3க்ஷரே பரமே வ்யோமந்‌  ।। (தைநா 1-2)

[எதனிடத்தில்இவ்வுலகம்‌ ( ஸம்ஹாரகாலத்தில்‌ ) உள்ளடங்குகிறதோ, (ஸ்ருஷ்டிகாலத்தில்‌) வெளிப்படுகிறதோ, எல்லா தே3வர்களும்ஆஶ்ரயித்திருக்கிறார்களோ, அந்த ப்3ரஹ்மமே முன்னிருந்த வஸ்துக்களுக்கும்அந்தர்யாமி; பின்வரப்போகும்வஸ்துக்களுக்கும்அந்தர்யாமி, அதுவே அழியாததான பரமபத3த்தில் ( எழுந்தருளியிருக்கிறது ).]

  1. अनेन जीवेनात्मनाऽनुप्रविश्य नामरूपे व्याकरवाणि(அநேந ஜீவேநாத்மநாऽநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி) என்‌றும்‌,

ப்ரமாணம்:

ஸேயம்தே3வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்‌ திஸ்ரோ

தே3வதா அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ।।

(சா2ந். உப 6-3-2)

[அப்படிப்பட்ட இந்த தே3வதை  “நான்‌ (நெருப்பு, நீர்‌, பூ4மி என்னும்‌) இந்த மூன்று தே3வதைகளையும்இந்த ஜீவஸமஷ்டிபுடன்கூடிய என்னுடைய ஸ்வரூபத்தால்வியாபித்து நகாமரூபங்களைச்செய்யக்கடவேன்‌.” என்று ஸங்கல்பித்தது.]

  1. तत्सृष्ट्वा तदेवानुप्राविशत् (தத்‌ ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்‌) என்று தொடங்கி, 78. “सत्यञ्चानृतञ्च सत्यमभवत् (ஸத்யம்‌ சாந்ருதம்‌ ச ஸத்யமப4வத்‌) என்றும்‌ சொல்லக்கடவதிறே.

ப்ரமாணம்:

தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாதுப்ராவிஶத் தத3நுப்ரவிஶ்ய

ஸச்ச த்யச்சா4வத்…ஸத்யஞ்சாந்ருதஞ்ச ஸத்யமப4வத்‌  ।। (தை. ஆந 6)

[அதை ஸ்ருஷ்டித்தவுடன்‌ ( ௮ந்த ப்3ரஹ்மம்‌) அதை வியாபித்தது; அதை வியாபித்தவுடன்விகாரமற்றதான சேதனமாகவும்‌, விகாரமுள்ளதான ௮சேதனமாகவுமாயிற்று. (விகாரமின்மையினால்‌ ) ஸத்யம்எனப்படும்சேதனமாகவும்‌, (விகாரமடைதலால்‌) அஸத்யமெனப்படும்அசேதன மாகவும்‌ (ஆகிய ப்3ரஹ்மம்‌) விகாரமற்றதாகவே இருந்தது.]

  1. चराचरव्यपाश्रयस्तु स्यात्तद्वयपदेशो भाक्तस्तद्भावभावित्वात् (சராசரவ்யபாஶ்ரயஸ்து ஸ்யாத்‌ தத்‌3 வ்யபதே3ஶோபா4க்தஸ்‌ தத்‌3 பா4வபா4வித்வாத்‌) என்கிற ஸூத்ரமும்‌ ப்ரதா4னதயா வாச்யன்‌ ஈஶ்வரனென்‌றதிறே.

ப்ரமாணம்:

சராசரவ்யபாஶ்ரயஸ்து ஸ்யாத்தத்3வ்யயதே3ஶோ

பா4க்தஸ்தத்3பா4 வபா4வித்வாத் (ப்3. ஸூ. 2-3-17)

[சராசரங்களைச்சொல்லும்௮ந்தந்த ஸப்33ங்கள்‌ ( ப்3ரஹ்ம விஷயத்தில்‌) முக்கியங்களே. ப்3ரஹ்மத்தின்அனுப்ரவேஶித்திருக்கும்தன்மையினாலே ஏற்படுவதாகையால்‌.]

இத்தால்‌ ஸ்ருஷ்டமான பதா3ர்த்த2ங்களில்‌ ஆராத்‌4யரான
தே3வதைகளோடு ஆராத4கரான மனுஷ்யரோடு ஆராத4நோபகரணங்களான திர்யக்ஸ்தா2வரங்களோடு வாசியற ஸர்வாந்தராத்மாவாய்‌ இருக்கிறபடியைச்‌ சொல்லுகிறது, “வசஸாம்‌ வாச்யமுத்தமம்‌”என்கிறது தே3ஶபரமானபோது ப்ராதா4ந்யத்தை லக்ஷிக்கிறது. 76. “परमे व्योमन् (பரமே வ்யோமந்‌) என்றும்‌, [ப்ரமாணம் முன்னமே இடப்பட்டுள்ளது]. “தனியுலகு” (பெரியாழ்‌-திரு. 5-4-9)  என்றும்‌ சொல்லக்‌ கடவதிறே. (யோகா3நாம்பரமாம்ஸித்3தி4ம்) என்று ப்ராப்யாநதர்க்க3ததமான ஸம்ஸாரவிமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது. “த்வாமேவ ஶரணம்‌ ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” (ஶ்லோ-4) என்றதிறே, இத்தால்‌ நிரவதி4க போ4க்3யமான திருவடிகளைச்‌ சொல்லுகிறது. “நலமந்த மில்லதோர்‌ நாடு” (திருவாய்‌ 2-8-4) என்று தே3ஶமும்‌ நிரதிஶய போ4க்3யமாயிறே இருப்பது. (தே பரமம்பத3ம்) ஸர்வகாரணனுமாய்‌, ஸர்வஶப்‌33வாச்யனுமாய்‌, ஸர்வோபாய ஸாத்‌4யனுமாயிருந்துள்ள உன்னுடைய, ஸர்வாதி4கமாய்‌, நிரதிஶய போ4க்3யமான திருவடிகளை என்னுதல்‌ உன்னுடைய நிரதிஶய போ4க்3யமான ஸ்தா2னத்தை என்னுதல்‌. (விது3:) ஜ்ஞாகாதி4கராயிருக்குமவர்கள்‌ அறியாநிற்பார்கள்‌ ; நித்யமாய்‌, ப்ரதா4நாத்‌ அதி4கமாய்‌, நிரதிஶய போ4க்‌3யமாயிருப்‌பதொரு நாடு உண்டென்றும்‌, அந்த தே3ஶத்தே 23. “श्रिया सार्धं जगत्पतिःआस्ते(ஶ்ரியா ஸார்த்த4ம்ஜக3த்பதி:- ஆஸ்தே) என்கிறபடியே [ப்ரமாணம் முன்னமே இடப்பட்டுள்ளது] இருப்பதொரு விக்‌3ரஹமுண்டென்றும்‌ அறிவார்‌ ஸகலவேதா3ந்ததாத்பர்யம்‌ கைப்பட்ட ஸர்வஜ்ஞரிறே. அபேக்ஷிக்கிறவன்‌, தன்‌ சிறுமையைப்‌ பார்த்தும்‌, அவனுடைய நிருபாதி4கஸ்வாதந்தர்யத்தைப்‌ பார்த்தும்‌, அர்த்தி2யாதே இங்குத்தை வைலக்ஷண்யத்தைக்‌ கொண்டாடுகிறான்‌, கருத்தறிந்து அங்கே போகவிடுகைக்காக. ஒருத்தன்‌ கையிலே எலுமிச்சம்பழம்‌ இருந்தால்‌, அதன்‌ நன்மையாலே ஒருத்தன்‌ அதைக்கொண்டாடினால்‌ உதா3ரனானவன்‌ எதிர்த்தலையில்‌ நினைவறிந்து கொடுக்குமாபோலே. ஸங்க்3ரஹபக்ஷத்தில் “மஹாபுருஷ” என்கிற பத3த்தினுடைய வ்யாக்‌2யானமாயிருக்கிறது. 7.

अहं भीतोऽसि देवेश ! संसारेऽस्मिन्भयावहे

पाहि मां पुण्डरीकाक्ष! जाने शरणं परम्

  1. அஹம்பீ4தோஸ்மி தே3வேஶ ! ஸம்ஸாரேஸ்மிந்‌ ப4யாவஹே

பாஹி மாம்புண்ட3ரீகாக்ஷ! ந ஜாநே ஶரணம்‌ பரம்‌

________________________________________________________________________

  1. பதவுரை :– தே3வேஶ — நித்யஸுரிகளுக்குத்‌தலைவனே !, 4யாவஹே– ப4யத்தைக்‌ கொடுக்கும்‌, அஸ்மிந்ஸம்ஸாரே— இந்த ஸம்ஸாரத்தில்‌, அஹம் — அடியேன்‌, பீ4தோஸ்மி–ப4யப்படா நின்றேன்‌; புண்ட3ரீகாக்ஷ!–செங்கண்மாலே! மாம்–அடியேனை, பாஹி–காத்தருள்வாயாக; பரம்ஶரணம்— (உன்னைத்தவிர) வேறொரு உபாயத்தை, ஜாநே–அறிகின்‌றிலேன்‌.

அவ:–(அஹம்பீ4தோஸ்மீத்யாதி3) கீழ்‌ ஶ்லோகத்திலே பரமபத3த்தில்‌ போ4க்3யதையை அனுஸந்தி4த்தான்‌; அந்த போ4க்3யதானுஸந்தா4னத்தாலே ஸம்ஸாரத்திலே பொருந்தாதபடியான ப4யம்‌ பிறந்தது, அந்த ப4யநிவ்ருத்தியைப்‌ பண்ணியருளவேணுமென் று அபேக்ஷிக்கிறது இஶ்லோகம்‌. ஸம்ஸாரப4யநிவர்த்தகனிறே ஶரண்யனாவான்‌. ஸம்ஸாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும்‌, ஸம்ஸாரம்‌ ப4யஸ்தா2னமாயிருக்கும்‌. ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும்‌ அது ப4யஸ்தா2னமாயிருக்கும்‌. அவ்வோபாதி ப்ராப்யபூ4மியில்‌ போ4க்3யதையை அனுஸந்தி4த்தாலும்‌ ப4யஸ்தா2னமாயிருக்குமிறே.

வ்யா:– (4யாவஹே அஸ்மிந்ஸம்ஸாரே அஹம்‌) “ஸம்ஸாரமாகிறதேது? அது ப4யாவஹமாயிருக்கிறபடி எங்ஙனே?” என்னில்‌: அவித்3யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதிஸம்ப3ந்த4ங்கள்‌ ஸம்ஸாரமாகிறது. அவித்‌3யையாகிறது அஜ்ஞாநம்‌; அதாகிறது,– புக்க ஶரீரத்தில்‌  அஹம்பு3த்3தி4யும்‌, ஶரீராநுப3ந்தி4யான பதா3ர்த்த2த்தில்‌ மமதாபு3த்3தி4யும் 80. “अनात्मन्यात्मवुद्धिर्या, अस्वे स्वमिति या मति:” (அநாத்மந்யாத்மபு3த்‌3தி4ர்‌ யா, அஸ்வே ஸ்வமிதி யா மதி:)- என்றானிறே ஸ்ரீபராஶரப43வான்‌.

ப்ரமாணம்:

அநாத்மந்யாத்மபு3த்3தி4ர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி:

          ஸம்ஸாரதருஸம்பூ4திபீ3ஜமேதத் த்3விதா4 ஸ்தி2தம்  ।। (வி.பு. 6.7-11)

[ஆத்மாவல்லாத தே3ஹத்தில் ஆத்மா என்னும் பு3த்3தி4யும், தனதல்லாத பொருளில் தன்னுடையது என்னும் பு3த்3தி4யும், ஸம்ஸாரமாகிய வ்ருக்ஷத்தின் வ்ருத்3தி4க்கு இருவகையாயிருக்கும் விதையாகும்.]

“யானே என்னை ௮றியகிலாதே யானே என்‌ றனதே என்‌றிருந்தேன்‌” (திருவாய்‌ 2-9-9) என்றும்‌, பிறர்க்கு உபதே3ஶிக்கிற இடத்திலும்‌,  “நீர்‌ நுமது” (திருவாய்‌ 1.2.3) என்றும்‌ ௮ருளிச்செய்தாரிறே ஆழ்வாரும்‌. அஹங்காரம்‌, ஶேஷத்வத்தை அழிக்கையாலே ப4யாவஹம்‌. மமதை, ப43வத்‌3விஷயத்தில்‌ போ4க்3யதையை அழிக்கையாலே ப4யாவஹம்‌. புண்யபாபரூபமாயாய்த்து கர்மமிருப்பது. பாபம்‌ நரகாத்‌3யனுப4வத்துக்கு ஹேதுவாகையாலே ப4யாவஹம்‌; புண்யம்‌ ப4யாவஹமானபடியென்‌? என்னில்‌: புண்யப2லமாவது ஸ்வர்க்கா3த்‌3யனுப4வங்களிறே. அவை ஸ்வரூபத்தை நஶிப்பிக்கக்கடவ அஹங்காரமமகாரத்தை வர்த்தி4ப்பிக்கையாலே ப4யாவஹம்‌; அநர்த்தஹேதுவான ஶப்‌3தா3தி3களிலே மூட்டுகையாலே ப4யாவஹம்‌, தே3ஹ ஸம்ப3ந்த3ம்‌, ஆதி4ரூபத்தாலும்‌, வ்யாதி4ரூபத்தாலும்‌, பரபரிப4வரூபத்தாலும்‌, ஶீதோஷ்ணாதி3களாலும்‌ ப4யாவஹம்‌. இப்படிகளால்‌ ருசிவாஸனைகளும ப4யாவஹங்கள்‌. எங்‌ஙனேயெயன்னில்‌: ஆதி34ரதன்‌ ஸமாதி43ஶையிலே மானின்‌ பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப்‌ பிறந்தானிறே. அதுதனக்கு அடி விஷயாந்தரப்ராவண்யமன்‌று; ரக்ஷகத்வவாஸனையாலேயிறே. ஆகையாலே வாஸநாருசிகளும்‌ ப4யாவஹங்கள்‌. த்3ருஷ்டிவிஷம்போலே ருசிதானே ப4யாவஹமாயிருக்கிறபடி, அதாகிறது,–ஸம்ஸாரிகளுக்கு, விட்‌டில்‌ போலே ௮ஹங்காரத்தை ஆத3ரித்து மேல்விழுந்து வர்த்திககையாலே, காண்கைதானே ப4யாவஹமாயிருக்குமிறே. 81. “भूमौ निपात्यमानो ऽद्रेरन्तरास्ते स्वपन्निव (பூ4மௌ நிபாத்யமாநோऽத்‌3ரேரந்தராஸ்தே ஸ்வபந்நிவ) என்று மலையினின்றும்‌ பூ4மியில்‌ விழுகிறவன்‌ நடுவே உறங்குகிறாப்போலேயிறே ஸம்ஸாரிகள்‌ வருகிற அநர்த்த2த்தைப்‌பற்றி பு3த்3தி4 பண்ணாதே ஸுகி2க்கிறபடி,

ப்ரமாணம்:

பூ4மெள நிபாத்யமாநோத்3ரேரந்தராஸ்தே ஸ்வபந்நிவ

[மலையிலிருந்து பூ4மியில்தள்ளப்பட்டு நடுவில்தூங்குபவன்போலிருக்கிறான்‌.]

“நலமந்தமில்லதோர்‌ நாடு” (திருவாய்‌ 2-8-4) என்று ஒரு விபூ4தியாக முற்றடங்கி ஸுக2மாயிருக்குமாபோலேயிறே இங்கும்‌ கட்டடங்க ப4யாவஹமாயிருக்கும்படி. (அஹம்பீ4தோஸ்மி) ஸம்ஸாரத்தை அநந்தக்லேஶபா4ஜனமாக அனுஸந்தி4த்த நான்‌ ப4யப்படா நின்றேன்‌. வர்த்தமானநிர்த்தே3ஶத்தாலே ப4யநிவ்ருத்திக்கு ஓர்‌ அவகாஶம் காண்கிறிலேன்‌. ஸம்ஸாரத்தில்‌ ப4யநிவ்ருத்‌திக்கு அவகாஶமுண்டோ? என்னில்: ஈஶ்வரன்‌ பக்கலிலே ந்யஸ்தப4ரனாயிருக்குமவன்‌ நிர்ப்ப4யனாயிருக்குமிறே. அதுவும்‌ எனக்கு அப4யஸ்தா2னமாகிறதில்லை. ப்ராப்யத்தில்‌ அதிப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்‌4யவஸாயத்‌தாலே த4ரிக்கவொண்ணாதிறே. “களைகண்‌ மற்றிலேன்‌” (திருவாய் 5-8-8) என்றும்‌, “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு” (திருவாய்‌ 5-10-11) என்றும்‌ அத்‌4யவஸிதரான ஆழ்வார்‌  “அந்தமில்‌ பேரின்பத்‌தடியரோடிருந்தமை” (திருவாய்‌ 10-9-11) என்று அத்தே3ஶவிஶேஷத்தில்‌ போ4க்3யதையை ஸாக்ஷாத்கரித்து, அநந்தரம்‌ “முனியே! நான்முகனே!” (திருவாய்‌ 10-10-1) என்று கூப்பிட்டாரிறே. (தே3வேஶ) “அயர்வறுமமரர்கள்‌” (திருவாய்‌ 1-1-1) என்கிறபடியே நீயும்‌ அவர்களுமாய்‌ அங்கே களித்துத்‌ திரியாநிற்க, அவர்களோபாதி போ43த்துக்கும்‌ யோக்3யனாயிருக்கிற நான்‌ இங்கே க்லேஶப்‌ படுகை தேவர்க்குப்‌ போருமோ ? பிராட்டியும்‌, ப4யஸ்தா2னமான லங்கையிலே இருந்தவிடத்திலே 82. “हा राम! हा लक्ष्मण!” (ஹா ராம! ஹா லக்ஷ்மண !) என்றாளிறே.

ப்ரமாணம்:

ஹாராம! ஹாலக்ஷ்மண! ஹா ஸுமித்ரே !

ஹா ராமமாத:! ஸஹ மே ஜநந்யா

ஏஷா விபத்3யாம்யஹமல்ப பா4க்3யா

மஹார்ணவே நெளரிவ மூட3வாதா  ।। (ரா. ஸு. 28-8)

[ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸுமித்ரே! என்‌ தாயுடன்‌ கூடிய ராமமாதாவே அல்பபா4க்3யமுள்ள நான்பெருங்கடலில்காற்றினால்அடிக்கப்பட்ட கப்பல்போல்கஷ்டப்படுகிறேன்‌.]

“இமையோர்‌ தலைவா” (திருவிரு-1)  என்றும்‌, “விண்ணுளார்‌ பெருமானேயோ” (திருவாய்‌ 7-1-5) என்றும்‌ அருளிச்செய்தாரிறே ஆழ்வார்‌. (மாம்பாஹி) “யோகாநாம்‌ பரமாம்‌ ஸித்3தி4ம்‌” என்கிறபடியே அத்தே3ஶத்தில்‌ போ4க்3யதையை அனுஸந்தி4த்து மேல்விழுந்த தன்னை. 83. “एहि पश्य शारीराणि (ஏஹி பஶ்ய ஶரீராணி) என்னுமாபோலே வடிவைக்‌ காட்டுகிறான்‌ என்றுமாம்‌.

ப்ரமாணம்:

ஏஹி பஶ்ய ஶரீராணி முநீநாம்பா4விதாத்மநாம்‌ 

ஹதாநாம்ராக்ஷஸைர்கோ4ரைர்3ஹூநாம்3ஹுதா4 வநே ।। (ரா.ஆ. 6-16)

[ராம! (இங்கு) வருவாயாக; பரமாத்மாவை தியானம்செய்பவர்களும்‌, வனத்தில்கோ4ரமான ராக்ஷஸர்களால்பலவித4மாக ஹிம்ஸிக்கப்பட்டவர்களுமான பல முனிவர்களுடைய ஶரீரங்களைப்பார்ப்பாயாக ]

(பாஹி) ஶரீரஸம்ப3ந்த4த்தை அறுத்து அர்ச்சிராதி3மார்க்க3த்தாலே நிர்ப்ப4யமான தே3ஶத்திலே கொண்டுபோகவேணும்‌. (புண்ட3ரீகாக்ஷ) உன்னுடைய ஆகர்ஷகமான திருக்கண்களாலே என்னைக்‌ குளிரநோக்கியருளவேணும்‌. நான்‌ என்னுடைய ப4ய நிவ்ருத்திக்கு யத்னம்‌ பண்ணுமன்றன்றோ நேர்த்தியுள்ளது. தேவர்‌ செய்தருளுமிடத்தில்‌ அநாயாஸமன்றோ. கீழ்ச்சொன்ன ஆஶ்ரயணியமான வாத்ஸல்யாதி3களும்‌, ப2லஸித்3தி4க்கு உடலான ஜ்ஞானஸக்த்யாதி3களும்‌ வேணுமோ என்னை ரக்ஷிக்கைக்கு? முதல்‌ “ஜிதந்தே புண்ட3ரீகாக்ஷ” என்று எனக்குப்‌ புறம்புள்ள அந்யபரதையைத்‌ தவிர்த்தாப்போலே ப4யத்தையும்‌ போக்கி ரக்ஷித்தருளவேணும்‌, ( ஜாநே ஶரணம்பரம்) “பரம்‌ ஶரணம்‌ ந ஜாநே”; உன்னையொழிய வேறொரு உபாயம்‌ அறிகிறிலேனே. 84. “निदिध्यासितव्य:” (நிதி3த்‌4யாஸிதவ்ய:) என்று ஶ்ருதிகள்‌ சொன்னாலும்‌,

ப்ரமாணம்:

ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யஶ் ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:

(ப்3ருஹ 6-5-6)

[கேட்கத்தக்கதும், நினைக்கத்தக்கதுமான ஆத்மா தியானிக்கத்தக்கது; பார்க்கத்தக்கது.]

  1. मन्मना भव मद्भक्त:” (மந்மநாப4வ மத்34க்த:) என்று ரக்ஷகரான தேவரீர்‌ அருளிச்செய்தாலும்‌, நான்‌ வேறோர்‌ உபாயம்‌ அறிகிலேனே.

ப்ரமாணம்:

மந்மநா 4 மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு

        மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே ।। (கீ3தை 18-65)

[என்னிடத்தில் மனத்தை வைத்தவனாகவும், என்னுடைய 4க்தனாகவும், என்னை ஆராதி4ப்பவனாகவும் ஆவாயாக. என்னை நமஸ்கரிப்பாயாக. என்னையே அடைவாய்இது ஸத்யம். உனக்கு ப்ரதிஜ்ஞை செய்கிறேன். எனக்குப் பிரியனன்றோ நீ.]

“அதுக்கு ஹேது என்‌?” என்‌னில்‌: சேதநனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசியற தேவர்‌ ௮தீ4னமாகையாலே. “நமஸ்‌தேऽஸ்து’” என்றும்‌, “ஹ்ருஷீகேஶ” என்றும்‌ அனுஸந்தி4த்தவனிறே. 86. “मत्त: स्मृतिर्ज्ञानमपोहनं (மத்த: ஸ்ம்ருதிர்‌ ஜ்ஞாநமபோஹநம்‌ ச) என்றிறே தேவர்‌ வார்த்தையும்‌.

ப்ரமாணம்:

ஸர்வஸ்ய சாஹம்ஹ்ருதி3 ஸந்நிவிஷ்டோ

மத்தஸ்‌ ஸ்ம்ருதிர்‌ ஜ்ஞாநமபோஹநஞ்ச 

வேதை3ஶ்ச  ஸர்வைரஹமேவ வேத்3யோ

வேதா3ந்தக்ருத்வேத3விதே3 சாஹம்।। (கீதை 15-15)

[எல்லாருடைய ஹ்ருத3யத்திலும்நான்அமர்ந்திருக்கிறேன்‌. என்னிடமிருந்தே நினைவும்‌, ஜ்ஞானமும்‌, மறதியும்உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும்அறியப்படுபவன்நானே. வேத3த்தில்சொல்லப்பட்ட 2லன்களைக்கொடுப்பவனும்‌, வேத3த்தை ௮றிபவனும்நானே.]

ஸங்க்3ரஹபக்ஷத்தில்‌ இஶ்லோகம்‌ “புண்டரீகாக்ஷ”என்கிற பத3த்தினுடைய விவரணம்‌.                        8.

कालेप्वपि सर्वेषु दिक्षु सर्वासु चाच्युत!

शरीरे गतौ चापि वर्तते मे महद्भयम्

  1. காலேஷ்வபி ஸர்வேஷு தி4க்ஷு ஸர்வாஸு சாச்யுத !

ஶரீரே 3தெள சாபி வர்த்ததே மே மஹத்34யம்

________________________________________________________________________

  1. பதவுரை:௮ச்யுத-அடியவர்களை நழுவவிடாதவனே! ஸர்வேஷு காலேஷு அபி -எல்லாப்‌ புண்ய காலங்களிலும்‌, ஸர்வாஸு தி3க்ஷு -எல்லா திசைகளிலுமுள்ள புண்யக்ஷேத்ரங்களிலும்‌, ஶரீரே -(த4ர்மஸாத4னமான) ஶரீரத்திலும்‌, 3தெள அபி -ஶரீராந்தரக3தியிலும்‌ மேஅடியேனுக்கு, மஹத்4யம்-அதி4கமான ப4யம்‌, வர்த்ததே-உள்ளது.

அவ:–. (காலேஷ்வபி சேத்யாதி3) “ந ஜாநே ஶரணம்‌ பரம்‌” என்னலாமோ*? ஆத்மாவுக்கு உஜ்ஜீவனஹேதுவான உபாயங்களை ஶாஸ்த்ரமுக2த்தாலே உண்டாக்கிவைத்து, அதுக்குமேல்‌ அல்பவ்யாபாரத்தினாலே ஸகைலது3ரிதங்களும்‌ நஶிக்கும்படியாகப்‌ புண்யகாலம்‌, புண்யக்ஷேத்ரம்‌ முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ? வேறு உபாயாந்தரங்களும்‌ உண்டாக அறிகிறிலேன்‌ என்னலாமோ? என்னில்‌: “அவற்றினுடைய ஸத்‌3பா4வத்தை இல்லை என்கிறேனல்லேன்‌; அவற்றிலே இழிந்த நான்‌ நித்யஸம்‌ஸாரியான நானாகையாலே, முன்பு நின்ற நிலையும்‌ கெடுமென்று சொன்னேன்‌”’ என்கிறான்‌. இத்தால்‌, உபாயாந்தரபரித்யாக3 பூர்வகமாயிருக்கும்‌ ஸித்‌3தோ4பாயபரிக்‌3ரஹம்‌ என்னுமத்தைச்‌ சொல்லுகிறது. இப்படி நிரபேக்ஷோபாயபூ4தனிறே ஶரண்யனாவான்‌.

வ்யா:–(காலேஷ்வபி ) புண்யமான அயநவிஷ்வாதி3களிலும்‌, அவற்றை விஶேஷிக்கிற அர்த்தோ43யாதி3 காலங்களிலும்‌. அதாகிறது– இவ்விலக்ஷண காலங்களிலே ஸேதுத3ர்ஶன  ஸங்க3மங்களிலே பண்ணும்‌ தீர்த்த2 தா3நாதி3களைச்‌ சொல்லக்கடவதிறே. 87. “कृतघ्नोऽपि विशुद्ध्यति(க்ருதக்‌4நோऽபி விஶுத்3த்4யதி)

ப்ரமாணம்:

க்ருதக்4 நோபி விஶுத்3த்4யதி

[செய்ந்நன்றி  மறந்தவன்கூட ஶுத்3தி4யடைகிறான்‌.]

  1. गोघ्ने चैव सुरापे चोरे भग्नव्रते तथा। निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः (கோ3க்4நே சைவ ஸுராபே ச சோரே ப4க்3நவ்ரதே ததா2। நிஷ்க்‌ருதிர்‌ விஹிதா ஸத்3பி4: க்ருதக்‌4நே நாஸ்தி நிஷ்க்ருதி:।।) என்கிறபடியே ப்ராயஶ்சித்தமில்லை என்கிற க்ருதக்4னனுடைய பாபமுட்படப்போமென்றது.

ப்ரமாணம்:

கோ3க்4நே சைவ ஸுராபே சோரே 4க்3நவ்ரதே ததா2

நிஷ்க்ருதிர்விஹிதா ஸத்3பி4: க்ருதக்4நே நாஸ்தி நிஷ்க்ருதி:।। (ரா.கி. 34-12)

[பசுவைக் கொன்றவன், ஸுராபானம் செய்தவன், வ்ரதப4ங்க3ம் செய்தவன், இவர்கள் விஷயத்தில் பெரியோர்களால் ப்ராயஶ்சித்தம் விதி4க்கப்பட்டிருக்கிறது. செய்ந்நன்றி மறந்தவன் விஷயத்தில் ப்ராயஶ்சித்தமில்லை.]

(ஸர்வேஷ்வபி) 89. “अश्वत्थं सिन्धुराजञ्च सदा सेवत स्पृशेत्। मन्दवारे स्पृशेत्पूर्वमपरं पर्वणि स्पृशेत्।। (அஶ்வத்த2ம்‌ ஸிந்து4ராஜம்‌ ச ஸதா3 ஸேவேத ந ஸ்ப்ருஶேத்‌। மந்த3வாரே ஸ்ப்ருஶேத்‌ பூர்வமபரம்‌ பர்வணி ஸ்ப்ருஶேத்॥) என்று அபர்வணி கடல்‌ தீண்டலாகாது என்னும்‌ நியமமின்றிக்கே ஸர்வகாலமும்‌ ஸேவிக்கலாயிருக்கும்‌ க3ங்கா3தி3 தீர்த்த2ங்களை ஸமுச்சயிக்கிறது.

ப்ரமாணம்:

அஶ்வத்த2ம்ஸிந்து4 ராஜஞ்ச

ஸதா3 ஸேவேத ந ஸ்ப்ருஶேத்‌

மந்த3வாரே ஸ்ப்ருஶேத்பூர்வம்

அபரம்‌ பர்வணி ஸ்ப்ருஶேத்‌  ।।

[அரசமரத்தையும்‌, கடலையும்எப்போதும்பார்க்கலாம்‌. (ஆனால்‌) எப்போதும்தொடலாகாது, முன்சொல்லப்பட்ட அரசமரத்தை சனிக்கிழமையில்தொடலாம்‌; பின்சொல்லப்பட்ட கடலை பர்வகாலங்களில்தொடலாம்‌.]

(தி3க்ஷு) ஸகலபாவனங்களாகச்‌ செய்துவைத்த இவையொழிய, 27. “देशोऽयं सर्वकामधुक् (தே3ஶோऽயம் ஸர்வகாமது4க்) [ப்ரமாணம் முன்னம் இடப்பட்டுள்ளது] என்கிறபடியே ப்ரத2மத்திலே பாவனமாய்‌, பின்பு ப43வத்ப்ராப்திககு ஸாத4னமுமாய்‌, பின்பு போ4க்3யமுமாயிருக்கும்‌ புண்யதே3ஶம்‌ முதலான தே3ஶங்களை ஸமுச்சயிக்கிறது. 90.“मथुरा नाम नगरी पुण्या पापहरी शुभा(மது2ரா நாம நக3ரீ புண்யா பாபஹரீ ஶுபா4) என்னக்கடவதிறே, (ஸர்வாஸு ) இத்தால்‌ -அவதரித்தருளின தே3ஶங்களையொழிய ப43வத்ஸந்நிதி4 மாறாத ஸாளக்3ராமமண்ட3லம்‌ முதலான தே3ஶங்களை ஸமுச்சயிக்கிறது.

ப்ரமாணம்:

மது4ரா நாம நக3ரீ புண்யா பாபஹரீ ஶுபா4

யஸ்யாம்ஜாதோ ஜக3ந்நாத2ஸ்ஸாக்ஷாத்3 விஷ்ணுஸ்‌ ஸநாதந: ।।

[யாதொரு நக3ரத்தில்‌, உலகங்களுக்கெல்லாம்நாயகனும்‌, அனாதி3யானவனுமான ஸாக்ஷாத்விஷ்ணு (க்ருஷ்ணனாய்‌) திருவவதரித்திருக்கிறாரோ, அப்படிப்பட்ட மது4ரை என்னும்நக3ரம்அவனைத்தருகைக்கு உபாயமாகவும்‌, பாபத்தைப்போக்கடிப்பதாகவும்‌, ஸ்வயம்ப்ராப்யமாகவுமிருக்கிறது.]

(ஶரீரே ) கீழ்ச்சொன்ன தே3ஶங்களில்‌ பண்ணும்‌ உபாயாநுஷ்டா2னத்துக்காக 91.“शरीरमाद्यं खलु धर्मसाधनं (ஶரீரமாத்3யம்‌ க2லு த4ர்ம ஸாத4நம்‌) என்றும்‌,

ப்ரமாணம்:

ஶரீரமாத்3யம்2லு 4ர்மஸாத4நம்‌ (குமாரஸம்ப4வம்‌ 5-33)

[ஶரீரமன்றோ முதன்மையான 4ர்மஸாத4னம்‌]

  1. विचित्रा देहसंपत्तिरीश्चराय निवेदितुम्(விசித்ரா தே3ஹஸம்பத்திரீஶ்வராய நிவேதி3தும்‌) என்றும்‌ சொல்லப்படுகிற இந்த ஶரீரம்‌ எனக்கு வ்யர்த்த2மாகாநின்றதாகை.

ப்ரமாணம்:

விசித்ரா தே3ஹஸம்பத்திரீஶ்வராய நிவேதி3தும்‌ 

பூர்வமேவ க்ருதா ப்3ரஹ்மந்ஹஸ்தபாதா3தி3ஸம்யுதா ।। (ஸ்ரீவிஷ்ணுதத்வம்‌)

[ப்3ராஹ்மணரே ! கைகால்முதலியவைகளுடன்கூடியதும்‌, விசித்திரமானதுமான தே3ஹமாகிற இச்செல்வம்‌, ஸர்வேஶ்வரனுக்கு ஸமர்ப்பிப்பதற்காக ஆதி3காலத்திலேயே செய்யப்பட்டிருக்கிறது.]

(3தெள ) 93. “स्वधर्मे निधनं श्रेय: परधर्मो भयावहः(ஸ்வத4ர்மே நித4நம்‌ ஶ்ரேய: பரத4ர்மோ ப4யாவஹ:) என்கிறபடியே,

ப்ரமாணம்:

ஶ்ரேயாந்ஸ்வத4ர்மோ விகு3: பரத4ர்மாத்ஸ்வநுஷ்டி2தாத்‌ 

ஸ்வத4ர்மே நித4நம்ஶ்ரேய: பரத4ர்மோ 4யாவஹ।। (கீ3தை 3.35)

[நிஹீனமாயினும்‌, ஸ்வத4ர்மம்‌, கு3ணத்துடன்கூடினதும்‌ (சிறிதுகாலம்‌) அனுஷ்டி2க்கப்படுவதுமான பரத4ர்மத்தைக்காட்டிலும்மேலானது, தன்னுடைய 4ர்மத்தை அனுஷ்டி2த்து இறப்பதும்மேலானது; மற்றொருவனுடைய 4ர்மம்4யத்தைத்தருவது.]

-ஸாத4நாநுஷ்டா2னமத்‌4யே மரணமுண்டானாலும்‌, ஶரீராந்தரத்திலே தலைக்கட்டும்படியான ஶரீராந்தரக3தியும்‌ எனக்கு வயர்த்த2ம்‌. (3தெள) ஶரீராந்தரக3தெள, ‘அபி’ ஸப்‌33த்தாலே அநுஷ்டே2யமான கர்ம ஜ்ஞான ப4க்த்யாதி3களைச்‌ சொல்லிற்று என்னுதல்‌; முன்பு போன ஶரீரங்களை ஸமுச்சயிக்கிறது என்னுதல்‌, முன்பு பரிக்‌3ரஹித்துப்‌ பொகட்ட ஶரீரங்கள்‌ வ்யர்த்த2மானவோபாதி வர்த்தமான ஶரீரமும் வ்யர்த்த2மென்று கருத்து. (மே மஹத்34யம்) இவை வ்யர்த்த2மான அளவேயல்ல. தே3ஶ கால ஶரீரங்களிலும்‌, இவற்‌றைப்‌பற்றிநின்று அனுஷ்டி2க்கும்‌ கர்மயோகா3த்3யுபாயங்களிலும்‌ ப4யம்‌ வர்த்தியாநின்றது. “ப4யம்‌ வர்த்திப்பானென்‌?” என்னில்‌: முன்பு தேவர்‌ திருவடிகளை உபாயமாகப்‌ பற்றி வர்த்திக்கையாலே, தேவருடைய இரக்கமும்‌ கெடுமென்று இவை  ப4யாவஹமாகா நின்‌றன.  ‘அனுகூலமானவை ப4யஸ்தா2னமாவானென்‌?” என்னில்‌: ஸ்வீகரித்த உபாயம்‌ வேறொன்றை ஸஹியாமையாலே. முதலிலே “த்வாமேவ ஶரணம்‌ ப்ராப்ய” (ஶ்லோ-4) என்றவனிறே; 94. “तमेव(தமேவ) என்றிறே ஶாஸ்த்ரவிதா4நமும்‌;

ப்ரமாணம்:

தமேவ ஶரணம் 3ச்ச2 ஸர்வபா4வேந பா4ரத (கீ3தை 18-62)

[4ரதகுலத்துதித்தவனே! எல்லா வித4த்திலும் அந்த 43வானையே ஶரணமடை.]

  1. मामेकं(மாமேகம்) என்றிறே ஶரண்யனுடைய வாக்யமும்‌.

ப்ரமாணம்:

ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ

          அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:  (கீ3தை 18-66)

[(2லஸாத4நமான) எல்லா 4ர்மங்களையும் வாஸனையுடன் விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்; து3க்கி2க்காதே.]

(மஹத்4யம்வர்த்ததே) “ப4யாவஹே” (ஶ்லோ-8) என்கிற ஸம்ஸாரப4யத்தளவன்று இந்த ப4யம்‌. விஷயாந்தரப்ராவண்யத்தால்‌ வந்த ப4யத்தளவன்றிறே ஸாத4நாந்தராநுஷ்டா2னத்தால்‌ வந்த ப4யம்‌ என்கை. விஷயாந்தர ப்ராவண்யத்தால்‌ வந்த ப4யத்துக்கு ஈஶ்வரன்‌ க்ருபையைப்‌ பற்றலாம்‌. அத்தையும்‌ நழுவும்படி பண்ணுகிறதிறே ஸாத4நாந்தரபரிக்3ரஹம்‌. (அச்யுத) இப்படி ஸர்வோபாயஶூந்யராயிருப்பாரையும்‌ நழுவவிடாத ஸ்வபா4வத்தாலேயிறே தேவர்க்கு “அச்யுத:” என்கிற திருநாமம்‌ உண்டாயிற்று. “யஸ்மாத்‌ ப்ராப்தா ந ச்யவந்தே, ஸோச்யுத:” என்‌றிறே திருநாமத்துக்கு நிர்வாஹம்‌, 96. “द्वारकानिलयाच्युत!” (த்3வாரகாநிலயாச்யுத!) என்று தேவரை விஶ்வஸித்துக்‌ கையை விட்டவளை ௮த்த3ஶையில்‌ விடாதவரிறே தேவர்‌.

ப்ரமாணம்:

ஶங்க சக்ர 3தா3பாணே! த்3வாரகாநிலயாச்யுத

கோ3விந்த3; ! புண்ட 3ரீகாக்ஷ ! ரக்ஷமாம்ஶரணாக3தாம்।। (பா4ரதம்‌.ஸபா4– 66)

[(ஆஶ்ரிதரை ரக்ஷிக்க) ஶங்க2ம்‌, சக்ரம்‌, 3தை3 முதலிய ஆயுத4ங்களைக்கையிலே 4ரித்திருப்பவனே! த்3வாரகையில்வஸிப்பவனே ! அடியவரை (ஒருபொழுதும்‌) நழுவவிடாதவனே! கோ3விந்தா3 ! செந்தாமரைக்கண்ணா! ஶரணமடைந்த என்னை ரக்ஷிப்பாயாக.]

  1. त्वत्प्रसादान्मयाच्युत!” (த்வத்ப்ரஸாதா3ந் மயாச்யுத!) என்று சொல்லக்கடவதிறே. ஸர்வஸங்க்3ரஹபக்ஷத்தில்‌ “நமஸ்தே’” என்கிற ப33த்துக்கு ஶேஷமாகக்கடவது.

ப்ரமாணம்:

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்3தா4 த்வத்ப்ரஸாதா3ந் மயாச்யுத

          ஸ்தி2தோஸ்மி3தஸந்தே3: கரிஷ்யே வசநம் தவ ।।  (கீ3தை 18-73)

[அச்சுதனே! (விபரீதஞானமாகிய) மோஹம் நசித்தது. உன்னருளால் உண்மை அறிவு என்னால் அடையப்பட்டது. ஸந்தே3ஹம் நஶிக்கப்பெற்றவனாயிருக்கிறேன். உன் வசனத்தின்படி (யுத்34ம்) செய்கிறேன்.]

அந்த ப்ரபத3னமும்‌ உபாயாந்தரநிவருத்திபூர்வகமாகையாலே. 9.

त्वत्पादकमलादन्यन्न मे जन्मान्तरेष्वपि। `

निमित्तं कुशलस्याऽस्ति येन गच्छामि सद्गतिम् १०

  1. த்வத்பாத3கமலாத3ந்யந்ந மே ஜந்மாந்தரேஷ்வபி

நிமித்தம்‌ குஶலஸ்யாஸ்தி யேந க3ச்சா2மி ஸத்33திம்

________________________________________________________________

  1. பதவுரை:-யேந–எந்த உபாயத்தினால்‌, ஸத்33திம்-நற்கதியை, 3ச்சா2மி–அடியேன்‌ அடைவேனோ, தஸ்ய குஶலஸ்ய-அப்படிப்பட்ட உபாயத்துக்கு, நிமித்தம்-காரணமான ப்ரத2மஸுக்ருதம்‌, த்வத்பாத3 கமலாத்அந்யத்– உம்முடைய திருவடித்‌ தாமரைகளி ற்காட்டிலும்‌ வேறானது, மே-அடியேனுக்கு, ஜந்மாந்தரேஷ்வபி நாஸ்திஎப்பிறப்பிலும்‌ இல்லை.

அவ🙁த்வத்பாத3கமலாதி3த்யாதி3) “உபாயோபேயங்கள்‌ இரண்டும்‌ நாமேயானாலும்‌, அநாதி3காலம்‌ இப்படி விஷய ப்ரவணனாய்‌ நம்‌ பக்கலிலே விமுக2னாய்ப்போந்த ஸம்ஸாரிக்கு விஷயவைமுக்‌2யபூர்வகமாக நம்‌ பக்கலிலே ஆபி4முக்2யம்‌ பிறக்கைக்கு அடியான ப்ரத2மஸுக்ருதம்‌ இவன்‌ தலையிலே ஆகவேண்டாவோ? இஸ்ஸுக்ருதத்தாலே ஆபி4முக்2யம்‌ பிறந்தால்‌ பின்பன்றோ யதா2ர்த்த2ஜ்ஞானம்‌ பிறப்பது? அந்த ஜ்ஞானத்தாலேயன்றோ த்யாஜ்யோபாதே3ய விபா43ம்‌ பிறப்பது? த்யாஜ்யநிவ்ருத்திபூர்வகமான ப்ராப்யஸித்‌3தி4க்கு உபாயம்‌ அபேக்ஷிதமாவது பின்பன்றோ? ௮த்தாலேயன்றோ ப்ராப்யஸித்‌3தி4? இதெல்லாத்துக்கும்‌ அடியான ப்ரத2மஸுக்ருதம்‌ இவன்கையாலே ஆகவேண்டாவோ?” என்‌னில்‌: “அந்த ஸுக்ருதமும்‌ தேவர்‌ திருவடிகளே; எனக்கு வேறில்லை” என்கிறது, ப்ராப்யப்ராபகங்கள்‌ அவனேயென்று கீழ்‌ உக்தமான அர்த்த2த்தை நிக3மிக்கிறது என்னவுமாம்‌. “தவ சரணத்‌3வந்த்3வம்‌ வ்ரஜாமி” என்றும்‌, “யோகா3நாம்‌ பரமாம்‌ ஸித்‌3தி4ம்‌ பரமம்‌ தே பத3ம்‌ விது3:” என்றும்‌ ப்ராப்யப்ராபகங்கள்‌ கீழே உக்தமிறே.

வ்யா🙁த்வத்பாத3 கமலாத3ந்யத்குஶலஸ்ய நிமித்தம்மே நாஸ்தி) .தேவர்‌ திருவடிகள்‌ ப்ராப்யமுமாய்‌; ப்ராபகமுமானவோபாதி ப்ரத2மஸுக்ருதமும்‌ எனக்கு தேவர்‌ திருவடிகளையொழிய வேறில்லை, “த்வத3ந்யத்‌ குஶலஸ்ய நிமித்தம்‌ மே நாஸ்தி” என்னவுமாயிருக்க, “பாத3 கமலம்‌” என்கிற பத3த்‌3வயங்கள்‌ ப்ராப்யப்ராபகங்களை ஸ்மரிப்பிக்‌கின்றன. கமலபத3ம்‌ போ4க்3யதையை ஸ்மரிப்பிக்கிறவோபாதி பாத3பத3ம்‌ உபாயத்தை ஸ்மரிப்பிக்கிறது. “சரண த்3வந்த்3வம் ஶரணம்‌ வ்ரஜாமி” என்று திருவடிகளையிறே உபாயமாகச்‌ சொல்லிற்று. (குஶலஸ்ய நிமித்தம்) மங்க3ளரூபமான உபாயஸித்‌3தி4க்கு ஹேதுவான ப்ரத2மஸுக்ருதம்‌. சேதனனுக்கு மங்க3ளரூபமாயிறே இவ்வுபாயம்‌ ரஸித்‌திருப்பது. 98. “बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते (ப3ஹூநாம்‌ ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே) என்கிறபடியே

ப்ரமாணம்:

3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே

          வாஸுதே3வஸ் ஸர்வமிதி மஹாத்மா ஸுது3ர்லப4: ।। (கீதை 7-19)

[பல ஜன்மங்களுக்குப் பின் ஜ்ஞானியானவன்வாஸுதே3வனே (எனக்கு) எல்லாம்என்று என்னை உபாஸிக்கிறான். அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும் கிடைத்தற்கரியவன்.]

உபாயஸித்‌3தி4 ஹேதுவாய்‌, அநேக ஜன்மஸுக்ருத ஸாத்4யமாயிருக்கிற ப43வத்‌3 ஜ்ஞானமாகிற ப்ரத2மஸுக்‌ருதம்‌ “த்வத்பாத3கமலா த3ந்யந்நாஸ்தி” என்னக்கடவதோ ? என்னில்‌ : (மே நாஸ்தி) அஜ்ஞாநி (அந்த ஜ்ஞாநி) யானாலும்‌ எனக்குத்‌ திருவடியொழிய வேறில்லை. ‘அதுவென்‌?’ என்னில்‌; ஸுக்ருத கார்யமாவது ஶப்‌3தா3தி3 விஷயப்ராவண்யத்தினின்‌றும்‌ மீட்டு இவ்வாத்மாவுக்கு ப43வதா3பி4 முக்2யத்தைப்‌ பிறப்பிக்கையிறே அது. “ஜிதந்தே புண்ட3ரீகாக்ஷ” என்‌கிறபடியே, இவ்வர்த்த2ம்‌ தேவர்‌ அழகாலே பிறந்த பின்பு, அந்த ஸுக்ருதம்‌ எனக்கு தேவர்‌ திருவடிகளே. (ஜந்மாந்தரேஷ்வபி) அழகைக்‌ காட்டி மீட்டதுவும்‌, ஜந்மாந்தரங்‌களில்‌ ஒரு ஸுக்ருதவிஶேஷம்‌ உண்டாய்‌, அதன்‌  ப2லமானாலோவென்னில்‌: விஷயப்ரவணனை மீட்கைக்கு ஒரு ஸுக்ருதாபேக்ஷை இல்லாமையாலே, அதுவும்‌ வேண்டுவதில்லை. “என்‌ ஆவியை நடுவே வந்துய்யக்‌ கொள்‌கின்ற நாதனை” (திருவாய்‌ 1.7.5) என்று ஆழ்வார்‌ அருளிச்செய்ததுக்கும்‌ அடி இதுவிறே. (யேந குஶலேந ஸத்33திம்3ச்சா2மி ) ஸத்33தி என்கிறது விலக்ஷணமான ப்ராப்யம்‌. ௮தாவது:– “யோகா3நாம்‌ பரமாம்‌ ஸித்‌3தி4ம்‌ பரமம்‌ தே பத3ம்‌ விது3:” என்கிற பரமபத3ம்‌. “யேந குஶலேந ஸத்33திம்‌ க3ச்சா2மி, தஸ்ய குஶலஸ்ய நிமித்தம்‌ ஜந்மாந்தரேஷ்வபி த்வத்பாத3கமலாத3ந்யத்‌ மே நாஸ்தி” என்று அந்வயம்‌. நிக3மனபே43த்திலே “யேந உபாயேந ஸத்33திம்‌ க3ச்சா2மி, தஸ்ய தத்‌33திரூபஸ்ய ஹேதுபூ4தம்‌ உபாயம்‌ ஜந்மாந்தரேஷ்வபி த்வத்பாத3கமலாத3ந்யத்‌ மே நாஸ்தி” என்‌றபடி. ஸங்க்3ரஹபக்ஷத்தில்‌ “பூர்வஜ” என்கிற பத3த்தினுடைய விவரணமாயிருக்கிறது. 10.

विज्ञानं यदिदं प्राप्तं यदिदं श्थानमार्जितम्

                   जन्मान्तरेऽपि मे देव ! माभूत्तस्य परिक्षयः।। ११ ।।

  1. விஜ்ஞாநம் யதி33ம் ப்ராப்தம்யதி33ம்ஸ்தா2நமார்ஜிதம்

ஜந்மாந்தரேபி மே தே3 மாபூ4த்‌ தஸ்ய பரிக்ஷய:

________________________________________________________________________

  1. பதவுரை:-தே3-எம்பிரானே! மே–அடியேனுக்கு, யத்இத3ம்விஜ்ஞாநம்-(நீயே உபாயமும்‌ உபேயமும்‌ என்கிற) யாதொரு ஜ்ஞானமானது, ப்ராப்தம்– கிடைத்திருக்கிறதோ, யத்இத3ம்ஸ்தா2நம்-(இந்த ஜ்ஞான விஷயமான அத்‌4யவஸாயமாகிற) யாதொரு நிலை, ஆர்ஜிதம்-(அடியேனால்‌) ஸம்பாதி3க்கப்பட்டிருக்கிறதோ , தஸ்ய-அவற்றுக்கு, பரிக்ஷய:-குறைவானது, ஜந்மாந்தரே அபிஎப்பிறப்பிலும்‌, மாபூ4த்-ஏற்படவேண்டாம்‌.

௮வ🙁விஜ்ஞாநமித்யாதி3) “ப்ராப்யப்ராபகங்களும்‌, அதுக்கு அடியான ஸுக்ருதமும்‌ நாமேயாகிலும்‌ உபாயபூ4தனான நான்‌ மேலே செய்யவேண்டுவதென்‌?” என்னில்‌; “பிறந்த விஜ்ஞானமும்‌, ஜ்ஞானமடியாகப்‌ பிறந்த அத்‌4யவஸாயமும்‌ நஶியாதொழியப்பெறில்‌ ‘யோகா3நாம்‌ பரமாம்‌ ஸித்‌3தி4ம்‌ பரமம்‌ தே பத3ம்‌ விது3:’ என்கிற ப்ராப்ய பூ4மியிலே போகவும்‌ வேண்டா; ப4யாவஹமான ஸம்ஸார நிவ்ருத்தியும்‌ வேண்டா; எனக்கு என்றுமொக்க இதுவே அமையும்‌” என்கிறது

வ்யா:–(விஜ்ஞாநம்‌) விலக்ஷணமான ஜ்ஞானம்‌; ஸர்வாதி4கமான ப்ராப்யவிஷயமாகவும்‌, ஸர்வாதி4கமான. ப்ராபகவிஷயமாகவும்‌ பிறந்த ஜ்ஞானம்‌. ப்ராப்யங்களில்‌ ப43வத்‌ ப்ராப்திக்கு அவ்வருகாயிருப்பதொரு ப்ராப்யமில்லாதாப்போலே ஸாத4னங்களிலும்‌ ஸித்‌3தோ4பாயத்‌துக்கு அவ்வருகாயிருப்பதொன்று இல்லையிறே. (யதி33ம் விஜ்ஞாநம்) ப்ரமாண ஸித்‌34முமாய்‌, ஹ்ருத3யகமலத்திலே ஸந்நிஹிதமுமாயிருக்கிற ஜ்ஞானம்‌. வேதா3ந்தங்களிலே ப்ராப்யமும்‌, ப்ராபகமும்‌ ஈஶ்வரனேயென்று ப்ரஸித்34மிறே. 99. “आनन्दमय:” (ஆநந்த3மய:) என்றும்‌,

ப்ரமாணம்:

தஸ்மாத்3 வா ஏதஸ்மாத்விஜ்ஞாநமயாத்

அந்யோந்தர ஆத்மாऽऽநந்த3மய: (தை. ஆன-5)

[அப்படிப்பட்ட இந்த விஜ்ஞானமயனான ஜீவனைக்காட்டிலும்‌, வேறுபட்டவனும்‌, (அவனுக்கு) அந்தராத்மாவாயிருப்பவனும்ஆநந்த3மயனான பரமாத்மா.]

  1. रसो वै :” (ரஸோ வை ஸ:) என்றும்‌,

ப்ரமாணம்:

ரஸோ வை ஸ: ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வாநந்தீ3 4வதி கோ ஹ்யேவாந்யாத் க: ப்ராண்யாத்   யதே3 ஆகாஶ ஆநந்தோ3 ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவாநந்த3யாதி

(தைத்திரீயம் ஆநந்த3வல்லீ-7)

[ரஸ (ஆநந்த3) ஸ்வரூபனன்றோ அந்தப் பரமபுருஷன். ரஸஸ்வரூபனான அவனை அடைந்து (இந்த ஜீவன்) ஆநந்தத்தை உடையவனாகிறான். பிரகாசிப்பவனும், ஆநந்த3ஸ்வரூபனுமான இப்பரமபுருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸுக2த்தையோ, மோக்ஷஸுக2த்தையோ அடையமுடியும்? (ஆகையால்) இவனே (ஜீவனை) ஆநந்தி3ப்பிக்கிறான்.]

  1. सर्वगन्दस्सर्वरसः(ஸர்வக3ந்த4ஸ்‌ ஸர்வரஸ:) என்றும்‌ ப்ராப்யமாக ப்ரஸித்‌34மிறே.

ப்ரமாணம்: ஸர்வக3ந்த3ஸ்ஸர்வரஸ:  (சா2ந் 3-14-2)

[எல்லா 3ந்த3ங்களையுமுடையவன்‌ ; எல்லா ரஸங்களையுமுடையவன்‌ (பரமாத்மா).]

  1. यो ब्रह्माणं विदधाति पूर्वं (யோ ப்3ரஹ்மாணம்‌ வித3தா4தி பூர்வம்‌) என்று தொடங்கி, 43. “मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये (முமுக்ஷுர்வை ஶரணமஹம்‌ ப்ரபத்3யே) என்றும்‌, [ப்ரமாணம் பூர்வம் உக்தமிறே]
  2. तस्मान्न्याासमेषां तपसामतिरिक्तमाहु:” (தஸ்மாந் ந்யாஸமேஷாம்‌ தபஸாமதிரிக்தமாஹு:) என்றும்‌,

ப்ரமாணம்:

தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு: (தை. நா. 50)

[ஆகையால் ந்யாஸத்தை (ஶரணாக3தியை) இந்தத் தபஸ்ஸுக்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்.]

  1. एष ह्येवानन्दयाति (ஏஷ ஹ்யேவாகநந்த3யாதி) [ப்ரமாணம் பூர்வம் உக்தமிறே] என்றும்‌ உபாயமாகவும்‌ ப்ரஸித்‌34மிறே, (ப்ராப்தம்) ப்ரயோஜநார்தரபரர்க்கும்‌ ஸாத4நாந்தரநிஷ்டர்2க்கும்‌ உட்பட உன்‌னாலே ப்ராபிக்கப்பட்டது. (யதி33ம்ஸ்தா2நமார்ஜிதம்) ஸ்தா2நம்‌ என்று ஸ்தி2தி; அதாகிறது:–இந்த ஜ்ஞாந விஷயமான ௮த்‌4யவஸாயம்‌. . (யதி33ம்) என்று ப்ரதே3ஶாந்தரத்தில்‌ ப்ரஸித்‌3தி4யையும்‌, ஸ்வஹ்ருத3ய ஸந்நிதி4யையும்‌ சொல்லுகிறது. 106. “व्यवसायदृते ब्रह्मन्! नासादयति तत्परम् (வ்யவஸாயாத்‌3ருதே ப்3ரஹ்மந்! நாஸாத3யதி தத்பரம்‌) என்னக்கடவதிறே, “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே ஶரண்‌ நமக்கு” (திருவாய் 5-10-11) என்றாரிறே ஆழ்வாரும்‌. (ஆர்ஜிதம்) ப43வத்‌ ப்ரஸாத3 ஸித்‌34மாகையாலே ஜ்ஞானத்தை ப்ராப்தமென்கிறது.

ப்ரமாணத்திற்கு மூலத்தைப்பார்க்கவும்‌ (பா43வதம் 10-32-21, 22,23 க்ருஷ்ணவாக்யம்)

[ஸகி2களே ! அவர்களுடைய தியானம்இடைவிடாமலிருப்பதற்காக, என்னிடம்4க்தி செய்யும்ஜந்துக்களை நான்அடைவதில்லை. பெண்களே ! பணமற்றவன்அடைந்த பணத்தை இழந்தவுடன்அந்த நினைவினால்பூர்ணனாய்வேறெதையும்எப்படி நினைக்கிறதில்லையோ, அப்படியே எனக்காக லோகத்தையும்‌, வேத3த்தையும்‌, உடைமைகளையும்விட்டவர்களான உங்களுக்கு என்னிடத்தில்தியானமுண்டாவதற்காக, கண்முன்னால்காட்சியளித்த நான்மறைந்தேன்‌. பிரியைகளே! (என்னிடத்தில்‌) அதற்காக அஸுயை கொள்ளலாகாது, கபடமில்லாமல்என்னுடன்கூடிய உங்களுக்கு நன்றாக ப்ரத்யுபகாரம்செய்ய தே3வர்களின்ஆயுட்காலத்திலும்நான்ஶக்தனல்லன்‌. விடவொண்ணாததான க்3ருஹமன்னும்விலங்கை வெட்டிவிட்டு என்னை அடைந்த உங்களுக்கு, அந்த விலங்கு மறுபடியும்இப்போது கழலட்டும்‌. (ஸம்ஸாரமாகிய விலங்கைக்கழற்றுகையே நான்உங்களுக்குச்செய்யும்கைம்மாறு என்று தாத்பர்யம்‌.)]

அதி4காரிவிஶேஷணமாய்‌, ஈஶ்வரனை அர்த்தி2த்தே நாம்‌ புருஷார்த்த2மாகப்‌ பெறவேண்டுவதொன்றாகையாலே அத்‌4யவஸாயத்தை ஆர்ஜிக்கப்பட்டது என்கிறது.  (ஜந்மாந்தரேபி) . இஜ்ஜந்மம்‌ நஶித்தாலும்‌, இந்த ஜ்ஞாகாத்‌4யவஸாயங்கள்‌ நஶியாதொழியவேணும்‌ என்கிறது. “இத்தைப்‌ புருஷார்த்த2 மாக அபேக்ஷிப்பாரைக்‌ கண்டறியோமே” என்ன: (மே) எனக்கு இதுவே புருஷார்த்த2ம்‌; தாம்‌ தாம்‌ அர்த்தி2த்ததன்றோ புருஷார்த்த2மாவது. (தே3) “அர்த்தி2ப்பார்‌ உண்டானாலும்‌ நாம்‌ புருஷார்த்த2மாகக்‌ கொடுத்துப்‌ போருவதொன்றன்றே” என்ன: (தே3) ஸம்ஸாரிகளைப்போலே என்னைக்கொண்டு அறியாதொழியவேணும்‌. லீலாரஸம்‌ அனுப4விக்கைக்கு விஷயபூ4தர்‌ ஸம்ஸாரிகளன்றோ. (தஸ்ய) ஜ்ஞாநாத்‌4யவஸாயங்களுக்குண்டான ஐககண்ட்‌2யத்தாலே, ஏகவசநத்‌தாலே சொல்லுகிறது. (பரிக்ஷயோ மாபூ4த்) ஜ்ஞானத்‌துக்குப்‌ பரிக்ஷ்யமாகிறது விஸ்ம்ருதி. அத்‌4யவஸாயத்துக்குப்‌ பரிக்ஷயமாகிறது விகாஶம்‌, ஜ்ஞாகவிஸ்ரம்ப4ங்களுக்கு விஸ்ம்ருதி விநாஶமின்றிக்கே ஒழியவேணும்‌ என்கிறது. கீழ்‌ பரமபத3த்தே கொடுபோகவேணுமென்று அபேக்ஷித்‌தும்‌, ப4யாவஹமான ஸம்ஸாரத்தைத்‌ தவிர்த்துத்‌ தரவேணுமென்று அபேக்ஷித்தும்‌ வைத்து, ஜ்ஞாநாத்‌4யவஸாயங்களே அமையுமென்றேன்‌ என்றது இவற்றினுடைய ரஸ்யதையாலே. உபகாரஸ்ம்ருதியாலே ஆசார்யன்பக்கல்‌ பிறந்த போ4க்3யதாதிஶயத்தாலே “தேவு மற்றறியேன்‌” (கண்ணிநுண் சிறுத்தாம்பு-2) என்‌னப்‌ பண்ணிற்றிறே. ஸம்ஸாரிகளை த3ர்ஶித்தால்‌ ஜ்ஞாநாத்‌4யவஸாயங்கள்‌ முக்தப்ராப்யஸ்த2லம்‌ போலேயிறே இருப்பது. “மேலால்‌ பிறப்பின்மை பெற்று அடிக்கீழ்க்‌ குற்றறேவலன்று மறப்பின்மை-யான்‌ வேண்டும்‌. மாடு” (பெரிய திருவ-58) என்னும்‌ ஆழ்வாருடைய வார்த்தைக்கும்‌ அடி இதுவிறே. ஸங்க்3ரஹபக்ஷத்தில்‌ இஶலோகம்‌ “நமஸ்தே” என்கிற பத3த்தை ஸ்மரித்துக்‌ கிடக்கிறது. 11.

दुर्गतावपि जातायां त्वद्गतो मे मनोरथः।

यदि नाशं विन्देत तावताऽस्मि कृती सदा १२

  1. து3ர்க்க3தாவபி ஜாதாயாம்த்வத்33தோ மே மநோரத2:

யதி3 நாஶம் விந்தே3 தாவதாஸ்மி க்ருதீ ஸதா3 ।।

__________________________________________________________________

  1. பதவுரை:த்வத்33:–தேவரீரிடத்தில்‌ ஈடுபட்டிருக்கிற, மே-என்னுடைய, மநோரத2:,:-மநோரத2மான து3ர்க்க3தெள ஜாதாயாம்அபி-மிகவும்‌ கீழான நிலை ஏற்‌பட்டபோதிலும்‌, நாஶம் விந்தே3 யதி3-அழியாதிருக்குமேயாகில்‌, தாவதா-அவ்வளவாலே, ஸதா3— எப்‌பொழுதும்‌, க்ருதீ ௮ஸ்மி– க்ருதக்ருத்யனாயிருக்கிறேன்‌.

அவ;:–(து3ர்க்க3தாவபீத்யாதி3) து3:க்க2 ரூபமான ஸம்ஸார நிவ்ருத்தியும்‌, ஸுக2ரூபமான தே3ஶப்ராப்தியும்‌ வேண்டா;. அதி4காரிவிஶேஷணமான ஜ்ஞாந விஸ்ரம்ப4 ஸித்‌3தி4யாலே புருஷார்த்த2ம்‌ தலைக்கட்டிற்றாமோ ? இன்னும்‌ “ஜந்மாந்தரேபி’” என்று ப43வத்ப்ராப்தி விரோதி4யான ஜந்மத்தை அநுமதி பண்ணுகையும்‌ விருத்‌34மன்றோ? என்னில்‌: ‘கீழ்‌ அபேக்ஷித்தவை ஒன்றும்‌ வேண்டா; ஸம்ஸாரியுமாய்‌, அது தன்னிலும்‌ து3ர்க்க3தியுமாய்ச்‌ செல்லாகிற்கிலும்‌,தேவர்‌ திருவடிகளில்‌ உபாயோபேயங்கள்‌ முதலான ஸகலலாப4ங்களும்‌ கிடையாதே மநோரத2மாத்ரமேயானாலும்‌,ஸ்வவஶர்‌ போலே என்றுமொக்க க்ருதக்ருத்யனாகாநின்றேன்‌’ என்கிறது.

வ்யா:–(து,ர்க்க,தாவபி ஜாதாயாம்‌) து3ர்க்க3தியாவது:–மநஸ்ஸையொழிய இதர கரணங்கள்‌ உதவாத த3ஶை, அதாகிறது:– அஶக்தியாலே “ஐயார்‌ கண்டமடைக்‌கிலும்‌” (திருவாய் 2-9-3)என்கிற உத்க்ரமணத3ஶையிலும்‌, ஸ்வாபத்தாலே, பா3ஹ்யகரணங்களடங்க உபஸம்ஹ்ருதமான ஸ்வப்ந த3ஶையிலும்‌, இத்த3ஶையிலேயாய்ச்‌ செல்லாநின்றாலும்‌. (த்வத்33:) ஸ்வரூபரூபகு3ணவிபூ4திகளெல்லாம்‌ தனித்‌தனியேயாகப்‌ பரமமான தேவர்‌ திருவடிகளிலே அடையப்‌பட்ட மநோரத2மாத்ரமென்கை,. (மே மநோரத2:) இழிந்த துறையிலே சபலனுமாய்‌, அவ்வருகு போ43க்ஷமனன்‌றிக்கே இருக்கிற என்னுடைய மநோரத2ம்‌. மநோரத2மாவது-அபேக்ஷிதமான புருஷார்த்த2ம்‌ ஸித்‌3தி4யாதொழிந்தாலும்‌, அதில்‌ நசையாலே அவற்றை எண்ணாகிற்கை. “ஸித்‌3தி4யின்‌றிக்கேயிருக்க மநோரத2 மாத்ரமே புருஷார்த்த2மாகக்கூடுமோ ?” என்னில்‌: ஊர்வசியோடே அனுபவித்துப்‌ புண்யக்ஷயத்தாலே விஶ்லேஷித்துப்‌ போந்தவனுக்கு, வேறு சில விஷயங்களை அனுப4வயோக்யமாக்கினாலும்‌, அவற்றில்‌ நெஞ்சு செல்லாதே, அவள்தன்னையே நினைத்‌திருக்கை புருஷார்த்த2மாமாபோலே இதுவும்‌ கூடும்‌. அவிலக்ஷண விஷயத்தில்‌ போ43ங்களைக்காட்டில்‌ விலக்ஷண விஷயத்தில்‌ மநோரத2 மாத்ரமே ரஸிக்குமிறே. ப43வத்‌3 விஷயத்தில்‌ மநோரத2மாவது:- 104. “पिता त्वं माता त्वं(பிதா த்வம்‌ மாதா த்வம்‌) என்கிறபடியே ஸர்வவித43ந்து4வும்‌ அவனேயாகவேணுமென்றும்‌,

ப்ரமாணம்: ஸ்தோத்ரரத்னம்‌-60.

          பிதா த்வம் மாதா த்வம் 3யிததநயஸ்த்வம் ப்ரியஸுஹ்ருத்

                   த்வமேவ த்வம் மித்ரம் கு3ருரஸி 3திஶ்சாஸி ஜக3தாம்

த்வதீ3யஸ் த்வத்3ப்4ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்33திரஹம்

ப்ரபந்நஶ்சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி 4: ।।

[உலகங்களுக்கெல்லாம் தந்தையும் நீயே; தாயும் நீயே; பிரியனான புத்ரனும் நீயே; நல்ல மனத்தையுடைய நண்பனும் நீயே; (ரஹஸ்யங்களைச் சொல்லத்தக்க) தோழனும் நீயே; ஆசாரியனும் நீயே; உபாயமும் (உபேயமும்) நீயேநானோவெனில், உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தா3ஸன்; உன்னையே பரமப்ராப்யமாக உடையவன்; உன்னையே உபாயமாகக் கொண்டவன்; இம்மாதிரியிருக்கையில், உனக்கே ரக்ஷிக்கத்தக்கவனாக இருக்கிறேனன்றோ]

“உண்ணும்‌ சோறு பருகுநீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமெல்லாம்‌” (திருவாய் 6-7-1) அவனே யாகவேணுமென்றும்‌, அவனைப்‌ பெறுகைக்கு உபாயம்‌ அவனேயாகவேணுமென்றும்‌ இவையிறே, (யதி3 நாஶம்‌ ந விந்தே3த) இம்மநோரத2ம்‌ விஷயாந்தர ஸம்ஸர்க்க3த்‌தாலே விச்சே23த்தை அடையாதாகில்‌. ‘யதி3’ என்‌கிறது விஷயாந்தரங்கள்‌ ஸாம்ராஜ்யம்‌ பண்ணுகிற ஸம்‌ஸாரத்தில்‌ ப43வந்மநோரத2த்துக்கு விச்சே23மின்‌றிக்கேயொழிகையாகிற இது கிடைப்பதொன்றன்றிறே. ஒரு தே3ஶலாப4த்தாலே வந்த ஸுக2ஸித்3தி4யோபாதியும்‌, ஸாம்ஸாரிகமான து3:க்க2 நிவ்ருத்தியோபாதியும்‌, ஜ்ஞாந ஸித்‌3தி4யோபாதியும்‌, இம்மநோரத2 ஸித்3தி4யும்‌ ப43வத்‌ ப்ரஸாதா3யத்தம்‌ என்று கருத்து, (தாவதாஸ்மி க்ருதீ ஸதா3)  இம்மநோரத2 மாத்ரத்தாலே க்ருதக்ருத்யனாகா நின்றேன்‌; என்றுமொக்க க்ருதக்ருத்யனாகாநின்றேன்‌. ஸ்வஸ்த2 ஶரீரனான போதோடு ருக்3ண ஶரீரனான போதோடு வாசியற 105. “आसीना वा शयाना वा तिष्ठन्तो यत्र कुत्र वा (ஆஸீநா வா ஶயாநா வா திஷ்ட2ந்தோ யத்ர குத்ர வா) என்கிற ந்யாயத்தாலே ஸ்தி2தி ஶயநாத்‌3யவஸ்தா2 விஶேஷங்களோடு ஜன்மாந்தரங்களோடு வாசியற ப்ராப்ய ஸித்‌3தி4யிற்போலே இம்மநோரத2 ஸித்‌3தி4 மாத்ரத்தாலே க்ருதக்ருத்யனாகாநின்றேன்‌ என்கை.

ப்ரமாணம்:

ஆஸீநா வா ஶயாநா வா திஷ்ட2ந்தோ யத்ர குத்ர வா

நமோ நாராயணாயேதி மந்த்ரைகஶரணா வயம்।। (நாரதீ3யம்)

[எங்காவது உட்கார்ந்திருந்தாலும்‌, படுத்துக்கொண்டிருந்தாலும்‌, நின்றுகொண்டிருந்தாலும்‌ ‘நமோ நாராயணாயஎன்னும்திருமந்திரத்தையே உபாயமாகப்பற்றியவர்கள்நாங்கள்‌.]

கீழ்‌ ஶ்லோகத்தில்‌ ப்ராப்யஸித்‌3தி4யில்‌ ஸாரஸ்யம்‌ போலே ஜ்ஞானமாத்ரமே ரஸிக்கும்‌ என்கிறது. இதில்‌ ‘அந்த ஸித்3தி4யும்‌ வேண்டா; தத்ஸித்3த்4யர்த்த2மான மநோரத2 மாத்ரமே அமையும்‌’ என்று அந்த ஸாரஸ்யத்தினுடைய எல்லையைச்‌ சொல்லுகிறது.  ஸ்மர்த்தவ்ய விஷயஸாரஸ்யமிறே ஸ்ம்ருதிக்கு ஸாரஸ்யம்‌. ஆகையாலே, ஸ்மர்த்தவ்ய ப43வத்‌3 விஷய ஸாரஸ்யத்தினுடைய அவதி4யில்லாமையைச்‌ சொல்லிற்‌றாய்த்து. “நினைந்தென்னுள்ளே நின்று நெக்குக்‌ கண்கள்‌ அசும்பொழுக, நினைந்திருந்தே சிரமம்‌ தீர்ந்தேன்‌ நேமி நெடியவனே” என்று பெரியாழ்வார்‌ (பெரியாழ். திரு 5-4-8) அருளிச்செய்ததற்கு முதல்‌ இதுவேயிறே. 106. “नाहन्तु सख्यो भजतोऽपि जन्तून्भजाम्यमीषामनुवृत्तिवृत्तये यथाऽधनो लब्धधने विनष्टे तच्चिन्तयान्यन्निभृतो वेद् एवं मदर्थोज्झितलोकवेदस्वानां हि वो मय्यनुवृत्तयेऽबलाः। मया परोक्षं भजता तिरोहितं मासूयितुं मार्हथ तत्प्रियं प्रियाः ! पारयेऽहं निरवद्यसंयुजां सुसाधु कर्तुं विबुधायुषाऽपि वः। या मा भजन्दुर्जरगेहश्रृङ्खलां संवृश्च्य तद्व: प्रतियातु साऽधुना(நாஹம்‌ து ஸக்2யோ ப4ஜதோऽபி ஜந்தூந் ப4ஜாம்யமீஷாமநுவ்ருத்திவ்ருத்தயே । யதா2ऽத4நோ லப்‌344நே விநஷ்டே தச்சிந்தயாந்யந்நிப்‌4ருதோ ந வேத3 ॥ ஏவம்‌ மத3ர்த்தோ2 ஜ்ஜி4தலோகவேத3 ஸ்வாநாம்‌ ஹி வோ மய்யநுவ்ருத்தயேப3லா:। மயா பரோக்ஷம்‌ ப4ஜதா திரோஹிதம்‌ மாஸுயிதும்‌ மார்ஹத2 தத்‌ ப்ரியம்‌ ப்ரியா:। ந பாரயேऽஹம்‌ நிரவத்‌3யஸம்யுஜாம்‌ ஸுஸாது4 கர்த்தும்‌ விபு3தா4யுஷாऽபி வ:। யா மா ப4ஜந்‌ து3ர்ஜரகே3ஹஶ்ருங்க2லாம்‌ ஸம்வ்ருஶ்ச்ய தத்‌3 வ: ப்ரதியாது ஸாऽது4நா॥) [ப்ரமாணம் பூர்வம் உக்தமிறே] என்றிறே ஶேஷிவார்த்தையும்‌ 12.

कामकलुषं चित्तं मम ते पादयो: स्थितम्।

कामये वैष्णवत्वं तु सर्वजन्मसु केवलम् १३

  1. சாமகலுஷம்சித்தம்மம தே பாத3யோஸ்ஸ்தி2தம்

காமயே வைஷ்ணவத்வந்து ஸர்வஜந்மஸு கேவலம்

_______________________________________________________________

  1. பதவுரை:-தேதேவரீருடைய, பாத3யோ:-திருவடிகளில்‌, ஸ்தி2தம்-நிலைநின்‌ற, மம சித்தம்-அடியேனுடைய மனம்‌, காம கலுஷம்-மற்ற ஆசைகளினால்‌ கலங்கவில்லை; ஸர்வ ஜந்மஸு-எல்லாப்‌ பிறப்புகளிலும்‌, வைஷ்ணவத்வம்து கேவலம் – வைஷ்ணவனாயிருக்கும்‌ தன்மையை மட்டுமே, காமயே–ஆசைப்படுகிறேன்‌.

அவ: ( காமகலுஷமித்யாதி3) இஶ்லோகத்தால்‌ நான்‌ உனக்கேயாயிருக்கும்‌ பாரதந்த்ர்யஸுக2மே எனக்கு ப்ராப்யமென்கிறது. “கீழே, பரமபத3த்தை ப்ராப்யமென்றும்‌, ஸம்ஸாரப4யத்தைப்‌ போக்கித்தரவேண்டுமென்றும்‌, ‘இவை ஒன்றும்‌ வேண்டா, ஜ்ஞானமே அமையும்‌’ என்றும்‌, ‘அதுதானும்‌ வேண்டா; மநோரத2 மாத்ரமே அமையும்‌’ என்றும்‌, ப்ராப்யவிரோதி4யான ஜந்மத்தை அனுமதி பண்ணியும்‌ இப்படி வ்யாஹதபா4ஷணம்‌ பண்ணிற்றென்‌ ? ஒன்றே புருஷார்த்த2மாக நிர்ணயித்து அபேக்ஷிக்கவேண்டாவோ?” என்னில்‌: “அவை வ்யாஹத பா4ஷணமல்ல ; அடிமைக்கு ஏகாந்ததே3ஶமான பரமபத3த்தை ஆசைப்பட்டேன்‌; அடிமைக்கு விரோதி4யென்று ஸம்ஸாரத்தை வேண்டாமென்கிறது; உன்னுடைய போ4க்3யதாதிஶயத்தாலே த்வத்‌3விஷயஜ்ஞானமே அமையுமென்றேன்‌; ஜந்மத்தை இசைந்ததும்‌ ஜ்ஞானத்தினுடைய ஸாரஸ்யாதிஶயத்தாலே; இவையெல்லாம்‌ ப்ராஸங்கி3கம்‌; முதலிலே ‘நமஸ்தேऽஸ்து’ என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸுக2மே எனக்குக்‌ காமவிஷயம்‌” என்று புருஷார்த்த2த்தை நிர்ணயித்துத்‌ தலைக்கட்டுகிறது.

வ்யா:- (தே பாத3யோ: ஸ்தி2தம்மம சித்தம் காம கலுஷம்‌) நிருபாதி4கஶேஷியாய்‌, நிரதிஶயபோ4க்‌3யனாயிருந்துள்ள உன்னுடைய திருவடிகளிலே ஸ்தி2தமான என்னுடைய சித்தம்‌ வேறொன்றை ஸ்வயம்‌ புருஷார்த்த2மாக நினைத்துக்‌ கலங்குகிறதன்று, “ஜிதம்‌ தே புண்ட3ரீகாக்ஷ” என்கிறபடியே நான்‌ இருந்தவிடத்தே வந்து முகம்‌ காட்டி, ருசியைப்‌ பிறப்பித்துப்‌ புகுரநிறுத்தினபடியாலே நிருபாதி4கஶேஷித்வமும்‌, நிரதிஶயபோ4க்3யத்வமும்‌ எனக்கு அனுபூ4தமிறே. (ஸ்தி2தம்) ஸம்ஸ்தி2தம்‌. 107. “यस्याऽस्मि ( யஸ்யாऽஸ்மி) என்கிறபடியே வந்தேறியன்‌றிக்கே,

ப்ரமாணம்:

யாஸ்யாமி தமந்தரேமி (யஜுர்ப்3ராஹ்மணம் 3.7)

[எவனுக்கு நான் தா3ஸனாயிருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்.]

  1. गुणैर्दास्यमुपागत:” (கு3ணைர்தா3ஸ்யமுபாக3த:) என்கிறபடியே அழகுக்குத்‌ தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சாகையாலே விஷயாந்தரம்‌ கண்டு போகுவதொன்றன்று என்கை.

ப்ரமாணம்:

அஹமஸ்யாவரோ ப்4ரதா கு3ணைர் தா3ஸ்யமுபாக3: (ரா. கி. 4-12 லக்ஷ்மண வாக்யம்)

[நான் இவருடைய நினைவினால் (இவருக்குத்) தம்பி; (உண்மையில்) இவருடைய கு3ணங்களால் (இவருக்கு) அடிமைப்பட்டவன்.]

(மம சித்தம்) “என்‌ மனனே” (திருவாய் 1-1-1) என்னுமாபோலே நெஞ்சினுடைய ப4வ்யதையைக்‌ கண்டு உகக்‌கிறான்‌. (வைஷ்ணவத்வம்து) ‘து’ ஶப்‌33த்தாலே அவதா4ரணத்தைச்‌ சொல்லுகிறது. வைஷ்ணவத்வமாவது, – ப43வத்பாரதந்தர்ய ஸுக2மாதல்‌, தத3நுகூலவ்ருத்தியாதல்‌, 109. “एतमानन्दमयमात्मा मुपसंक्रामति (ஏதமாநந்த3மயமாத்மா ந முபஸங்க்ராமதி), 110. “अनुसञ्चरन् ( அநுஸஞ்சரந்) என்றும்‌,

ப்ரமாணம்:

ஏதமாநந்த3 மயமாத்மாநமுபஸங்க்ரம்ய

        இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்

          ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே  ஹா வுஹா வுஹா வு ।। (தை. ப்4ரு. 10-5)

[ஆநந்த3மயனான இந்தப் பரமாத்மாவை அணுகி, இஷ்டப்பட்ட உருவங்களை உடையவனாய், இந்தக் காமங்களிலும், லோகங்களிலும் (பரமாத்மாவைப்) பின் தொடர்ந்து கொண்டு இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான். ஹா வுஹா வுஹா வு]

  1. येन येन धाता गच्छति तेन तेन सह गच्छति छाया वा सत्त्वमनुगच्छेत् (யேந யேந தா4தா க3ச்ச2தி, தேந தேந ஸஹ க3ச்ச2தி। சா2யா வா ஸத்த்வமநுக3ச்சே2த்‌ ॥) என்றும்‌ வேதாந்தங்கள்‌ பாரதந்தர்யத்தையே புருஷார்த்த2மாகச்‌ சொல்லிற்றினவிறே,

ப்ரமாணம்:

யேந யேந தா4தா 3ச்ச2தி தேந தேந ஸஹ 3ச்ச2தி

          தத் யதா2 தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோ வா

                    மாதரம் சா2யா வா ஸத்வமநுகச்சே2த் ததா2ப்ரகாரம் ।।  (பரமஸம்ஹிதை)

[இளங்கன்றையுடைய பசு கன்றையும், கன்று பசுவையும் (அல்லது குழந்தை தாயையும்) நிழல் பிராணியையும் எப்படிப் பிந்தொடர்கின்றனவோ அப்படியே எப்படி எப்படிப் பரமபுருஷன் செல்லுகிறானோ, அப்படி அப்படியே (முக்தனும்) கூடப்போகிறான்.]

  1. कुरुष्व मामनुचरं (குருஷ்வ மாமநுசரம்‌) என்னக்கடவதிறே. 13.

ப்ரமாணம்:

குருஷ்வ மாமநுசரம் வைத4ர்ம்யம் நேஹ வித்3யதே

          க்ருதார்த்தோ2ஹம்4விஷ்யாமி தவ சார்த்த2: ப்ரகல்பதே ।।  (ரா.அ. 31-24 லக்ஷ்மண வாக்யம்)

[என்னைக் கைங்கர்யபரனாக வைத்துக்கொள்ளும். இதில் தவறொன்றுமில்லை. (இதனால்) நானும் 4ந்யனாவேன். உம்முடைய காரியமும் நடைபெறும்.]

தெலுங்கு லிபியில்அச்சிடப்பட்டிருக்கும்ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்2யாந ஸ்ரீகோஶத்தில்‌, 13-வது ஶ்லோக வ்யாக்2யாநத்தின்கடைசியில்காணப்படும்அதி4கபாட2ம்

(காமயே) ஸங்க3த்தளவன்று என்கை. “தவ பரிஜந பா4வம்காமயே”[ஸ்தோ-ர 47] என்று அருளிச்செய்ததுக்கும்‌ முதலிறே இது. கேவலபத3த்தாலே இத்தலைக்கு ரஸித்‌திருக்கும்படியன்‌றிக்கே ஸ்ரக்சந்த3நாதி3களைப்போலே அத்‌தலைக்கே போ4க்3யமாயிருக்குமென்கை,  “தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான்‌ கொள்‌ சிறப்பே” () என்னக்கடவதிறே. பாரதந்தர்யமே ஸ்வரூபமாயிருக்குமவனுக்கு அனுகூலவ்ருத்தியில்‌ வந்தால்‌ ஸ்வபா4வ நியதியில்லை; 111. “தத்3யதா2 தருணவத்ஸா வத்ஸம்வத்ஸோ வா மாதரம்‌”  [ப்ரமாணம் பூர்வம் உக்தமிறே] என்று ரக்ஷ்யரக்ஷகத்வநியதி கண்டிலோமிறே. “ப்4ராதா 4ர்த்தா 3ந்து4ஶ்ச பிதா மம ராக4:’‘ என்று இளையபெருமாளும்‌ ஒரு முறையிலே வ்யவஸ்தி2தராய்‌ நின்றிலரிறே. தேரிலே ஏறினபோது ச2த்ரசாமரதா4ரிகளாய்‌ நின்றாப்போலே, காட்டிலே போகிறபோதும்‌ க2நித்ரபிடகாத4ரரானாரிறே. தலைநீர்ப்பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்‌ தே3வத்வே தே3வதே3ஹேயம்மநுஷ்யத்வே மாநுஷீ என்று அபி4மதனுக்கு அனுரூபமான ரூபமே தனக்கும்‌ ரூபமாகப்‌ பரிக்3ரஹித்தாளிறே. 272. “யதா3 யதா3 ஹி கௌஸல்யா என்கிறபடியே கெளஸலையாரும்‌ ஒரு முறையிலே நின்றிலளிறே

ப்ரமாணம்:

கிம் சைநாம் ப்ரதிவக்ஷ்யாமி க்ருத்வா விப்ரியமீத்3ருஶம்

யதா3 யதா3 ஹி கௌஸல்யா தா3ஸீவச்ச ஸகீ2வ ச ।।

பா4ர்யாவத் 4கி3நீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி   ।। (ரா.அ. 12-68; த3ஶரத2 வாக்யம்)

[கௌஸல்யை தா3ஸியைப்போலும், ஸகி2யைப்போலும், மனைவியைப்போலும், ஸஹோத3ரியைப்போலும், தாயைப்போலும் ஶுஶ்ருஷை  செய்யும்போதெல்லாம், இப்படிப்பட்ட அநிஷ்டமான காரியத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்?]

சக்ரவர்த்தியைக்‌ குறித்து. (ஸர்வஜந்மஸு) நித்யனான ஆத்மாவுக்கு ஜந்மமாவது,-ஶரீர ஸம்யோக3மிறே. ஶேஷத்வரஸம்‌ ௮விச்சி2ந்நமாய்ச்‌செல்லுமாகில்‌, ஜந்மபரம்பரைகளை அனுமதி பண்ணினாலும்‌ விரோத4மில்லையென்கை. “ஸம்ஸாரேஸ்மிந்‌ ப4யாவஹே மாம்பாஹி [ஜி. ஸ்தோ. 8] என்கிற இதுவும்‌ தா3ஸ்யரஸத்துக்கு விரோதி4 என்றிறே. இத்தால்‌ ஜந்மஸம்ப3ந்த4 மறுகை ஸ்வயம்புருஷார்த்த2மன்றென்கை. அத2வா (ஸர்வஜந்மஸு) 80. “அஜாயமாநோ 3ஹுதா4 விஜாயதே [ப்ரமாணம் பூர்வம் உக்தமிறே] என்றும்‌, “3ஹூநிமே வ்யதீதாநி ஜந்மாநி என்றும்‌ ஜக3த்3 ரக்ஷணார்த்த2மாக அவதரிக்கும்‌ அவதாரங்கள்தோறும்‌ தொடர்ந்து அடிமை செய்யவேணும்‌ என்றானென்றுமாம்‌.

इत्येवमनया स्तुस्या स्तुत्वा देवं दिने दिने।

किङ्करोऽस्मीति चात्मानं देवायैवं निवेदयेत् १४

  1. இத்யேவமநயா ஸ்துத்யா ஸ்துத்வா தே3வம்தி3நே தி3நே

கிங்கரோஸ்மீதி சாத்மாநம்‌ தே3வாயைவம்நிவேத3யேத்

_______________________________________________________________________

  1. பதவுரை:-இதி ஏவம்-இம்மாதிரியாக, அநயா ஸ்துத்யா-இந்த ஸ்தோத்ரத்தாலே, தே3வம் — எம்பெருமான், தி3நே தி3நே-தினந்தோறும்‌, ஸ்துத்வா– துதித்து, கிங்கரோஸ்மீதி-(அடியேன்‌) உனக்கு அடிமையாக ஆகவேணும்‌ என்று, தே3வாய-ஸர்வேஶ்வரன்‌ பொருட்டு, ஏவம்-இம்மாதிரியாக, நிவேத3யேத்-(ஆத்மாவை) ஸமர்ப்‌பிக்கக்கடவன்‌.

அவ🙁இத்மேவமித்யாதி3) இதில்‌ ஓடின பா4வவ்ருத்தியின்றிக்கே ஒழிந்தவன்‌ இப்பாசுரத்தை நாடோறும்‌ படித்து, ‘அடியேனாகவேணும்‌’ என்று ஆத்மஸமர்ப்பணத்‌தைப்‌ பண்ணுவான்‌,

வ்யா:–(இத்யேவம்‌) ‘இதி’ என்றும்‌, ‘ஏவம்‌’ என்றும்‌ அர்த்த2த்தினுடையவும்‌ ஶப்‌33த்தினுடையவும்‌ ஸ்வரூபம்‌ சொல்லுகிறது. இத்தால்‌ அல்லாத ஜிதந்தைகளிற்காட்டில்‌ இதுக்கு உண்டான ஏற்றம்‌ சொல்லுகிறது. (அநயா ஸ்துத்யா) 1.“जितन्त इति मन्त्रेण (ஜிதந்த இதி மந்த்ரேண) என்று ப்ரதே3ஶாந்தரத்திலே மந்த்ரமாகச்‌ சொல்லிற்று ; இங்கு ஸ்தோத்ரமாகச்‌ சொல்லிற்று; இதுக்கு அடி என்‌? என்னில்‌: “மந்தாரம்‌ த்ராயத இதி மந்த்ர:” என்கிறபடியே அநுஸந்தா4தாவை உத்34ரிப்பிக்குமென்றிட்டு மந்த்ரமென்‌கிறது. ஸ்தவ்யனாய்‌, ஸ்தவப்ரியனான ஈஶ்வரன்‌ திருச்‌செவி சாற்றினால்‌ முகமலருமதாகையாலே ஸ்தோத்ரமென்கிறது. (தே3வம்) 113. साक्षाद्देव: पुराणोऽसौ (ஸாக்ஷாத்‌ தே3வ: புராணோஸெள) என்று நிருபாதி4க தே3வனாகச்‌ சொல்லக்கடவதிறே, (தி3நே தி3நே) அர்த்த2ஜ்ஞானம்‌ உடையவனுக்கு இந்த ஶப்3தோ3ச்சாரணம்‌ காதா3சித்கமாகவுமாம்‌;

ப்ரமாணம்:

ஸாக்ஷாத்தே3: புராணோஸெள

[பழமையானவனான இவனே நிருபாதி4கதே3வன்‌.]

இந்தப்‌ பாசுரத்தைப்‌ பற்‌றுமவனுக்கு நாள்தோறும்‌ உச்சரிக்கவேணும்‌. (கிங்கரோஸ்மீதி3) நான்‌ கிங்கரனாகவேணுமென்று ஸர்வேஶ்வரன்‌ திருவடிகளிலே ஆத்மஸமர்ப்பணம்‌ பண்ணுவான்‌, ‘இவ்வித அநுஷ்டா2னத்துக்கு ப்ரயோஜனமென்‌ ?’ என்னில்‌: விலக்ஷணராயிருப்பார்‌ சொன்ன பாசுரத்தை தே3ஹாத்‌மாபி4மானிகள்‌ சொன்னாலும்‌, அவர்களை நினைத்து, அவர்‌களைப்போலே ஈஶ்வரன்‌ விஷயீகரிக்கும்‌ என்று கருத்து. ‘எது போல?’ என்னில்‌: ஓரீற்று ஈல்ல கன்றிட்டுக்‌ கறந்த பசு, பின்பு அசல்‌ கன்றிட்டாலும்‌ மறைத்துத்‌ தோற்கன்றை மடுவிக்க, பின்புத்தைக்‌ கன்றையே நினைத்துப்‌ பால்‌ சுரக்குமாபோலே.

பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்2யானம்முற்றிற்று

பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்‌.

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கரஹ ||   15

பதவுரை — அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவவிடாது

நோக்குமவனே, ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியமகனான ஸர்வேஶ்வரனே, ச – ஷைஷாவாடி மாரநாந்தமான எல்லா அவாஸ்த்ஸிக்ஸ்லிலும், கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர், பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

யச்சாபராதம் க்ருதவாநஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத்பக்த இதி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்துமர்ஹஸி ||           16

பதவுரை — புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெரு மானே, அஹம் — அடியேன், அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே, அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ, தத்ஸர்வம் — அத்தை எல்லாம், மத்பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’

என்று திருவுள்ளம் பற்றி, க்ஷந்துமர்ஹஸி — க்ஷமிக்கக்கடவீர் .

அஹங்காரார்த்தகாமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரபந்நஸ்ய மே தேவ வர்ததாம் ஶ்ரீமதி த்வயி ||           17

பதவுரை — ஹே தேவா = ஸ்வாமிந், த்வாம் — தேவரீரை, ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான, மே — அடியேனுக்கு, அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள, ப்ரீதிஹி – நஶையானது, அத்யைவ –- இப்போதே, நஶ்யது – ஓழியக்கடவது, ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான, த்வயி –- தேவரீரிடத்தில், ப்ரீதிஹி -– அன்பாவது, வர்ததாம் – வளர்ந்தோங்குக .

க்வாஹமத்யந்ததுர்புத்திஹி க்வ சாத்மஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ ||                    18

பதவுரை –- தேவேஶ = தேவாதிராஜனே, அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லாஜ்ஞாந புத்தியை யுடைய, அஹம் க்வா -– அடியேன் எங்கே, ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக்கொள்ளுகை என்பது எங்கே, மாதவா -– ஸ்ரீய:பதியே, மம -– அடியேனுக்கு, யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ, தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் . ( மிகவும் துர்புத்தியனான அடியேன் ஸ்வபுத்தியாலே ஒரு வன்மை தேடிக்கொள்ளவல்லேனல்லே நாதலால் ஸர்வஜ்ஞாநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

ஸோஹம் தே தேவதேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபாமாத்ரமநோவ்ருத்திஹி ப்ரஸீத மே ||        19

பதவுரை –- தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே, ஸோஹம் -– அடியேன், தே அர்சநாதௌ –- தேவரீருடைய திருவாராதநாதி காரத்திலும், ந ஸாமர்த்யவான் — ஶக்தியுடையேனல்லேன், ( அதஹ = ஆகை

யினாலே ) க்ருபாமாத்ர மநோவ்ருத்திஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாகவுடைய தேவரீர், மே –- அடியேன் திறத்தில், ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபையடியாகவே ) இரங்கி அருளவேணும் .

உபசாரபதேஶேந க்ருதாநஹரஹர்மயா |

அபசாராநிமான் ஸர்வாந் _மஸ்வ புருஷோத்தம ||                 20.

பதவுரை – புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே, அஹரஹ -– நாள் தோறும், மயா –- அடியேனால், உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே, க்ருதாந் –- பண்ணப்பட்ட, இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதப சார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும், க்ஷமஸ்வ — க்ஷமித்தருளவேணும் .

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.