த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்
ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ணஷாட்குண்யவிக்ரஹ |
பராநந்த பரப்ரம்ஹந்நமஸ்தே பரமாத்மநே || 1
பூர்ணஷாட்குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திருமேனியையுடையவரே , புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய வரே , பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே , இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே , பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்மதாரயமாய் உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ; “ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே | தத்குண ஸாரஸ்வத்வாத் தத்வ்யபதேஶம் பண்ணுகிறபடி இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் , “ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்புக்குமவரே யென்னவுமாம் | பரப்ரம்ஹந் = ப்ரம்ஹலக்நமா கிறது – ஜகஜ்ஜந்மாதிகாரநத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ; மூவுலகும் படைத்தித்தளித்துக் கேதுமவநே யென்கை | தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு; பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லா மோருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் | ‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜ நம் பெறுமாறு சொல்லி ‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது |
நமஸ்தே பீதவஸந நம: கடகதாரிணே |
நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தரவிக்ரஹ || 2
பீதவஸந = பீதகவாதைப்பிரானே , கடகதாரிணே தே நம: = தோள்வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ; நீலாலகா பத்த வேணீ ஸுந்தரவிக்ரஹ = மை வண்ண நறுங்குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே , தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .
ஸ்புரத்வலயகேயூர நூபுராங்கத பூஷணை: |
ஷோபநைர்பூஷிதாகார கல்யாணகுணவாரிதே || 3
கருணா பூர்ண ஹ்ருதய ஶங்கசக்ர கதாதர: |
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோகய || 4
ஷோபநை: = அழகிய வாய் , ஸ்புரத்வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்காநின்றுள்ள வளைகள் பாதகம் புஜபந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே , ( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்தபேதம் கொள்ளவேணும் , ஓன்று தோள்வளையையும் ஒன்று புஜவளையையும் சொல்லிற்றாகி றது ) , பூஷிதகார = இவ்வோபூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையாய் , கல்யாணகுணவாரிதே = வாத்ஸல் யாதி மங்களகுணங்களுக்குக் கடல் போன்றவனே , கருணாபூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே , ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவுபடக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தியுள்ளவனே , அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோகய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக்கண்களாலே குளிர கடாக்ஷஇத்தருள வேணும் . பகவத்விஷயமென்றால் செவி புதைக்கும்படியான இவ்விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவை லபிக்கப்பெற்றோமே ! என்று திருக்கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக்காண விரும்புகிறபடி .
க்ருஷம் க்ருதக்நம் துஷ்கர்மகாரிணம் பாபபாஜநம் |
அபராதஸஹஸ்ராணாமாகரம் கருணாகர || 5
க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |
விஷயார்ணவமக்நம் மாமுத்தர்தும் த்வமிஹார்ஹஸி || 6
கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே , மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக்கொண்டு போவதற்கு திருமதுரையிலே வந்து திரு வவதரித்தவனே , க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து , க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை , துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் , அவற்றின் ஸ்வரூபம் என்னடியாகவா யிற்று நிறம் பெறுவது , அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே , பாபபாஜநம் = இப்போது செய்துபோருகிற வளவேயோ , எந்நின்ற யோநியுமாய் கூடுபூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது . அபராதஸஹஸ்ராணாமாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றபோலே , அடியேனும் அபராதஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத்திரி கிறபடி பாரீர் , மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை , கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றியருள வேணும் . ( கேவலயா ) மடிமாங்கா யிடும்படிக்கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப்புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் , உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்கவேண்டும்கிதாய் , விஷயார்ணவமக்நம் மாம் = ஶப்தாதிவிஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக்கிடக்கிற அடியேனை த்வமுத்தர்துமர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .
பிதா மாதா ஸுஹ்ருத்பந்து: ப்ராதா புத்ரஸ்த்வமேவ ஹி |
வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத்கிஞ்சித் த்வயா விநா || 7
பிதா = உத்பாதகநாய் ஹிதகாமநாயிருக்கிற பிதாவும் , மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவக்லேஶத்தை அநுபவித்து அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இரையாதே ரக்ஷஇத்து உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் , ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் , பந்து: = ஓராபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் , ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் , புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் , த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே யெல்லா உறவுமுறையும் எனக்கு நீயே காண் , வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் , தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் , காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ க்ஷஏத்ர பஶ்வந் நாதி காம்யவர்கமும் , த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயேயன்றி வேறொன்றில்லை காணேநக்கு |
யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |
தவ தாஸ்யைகபோகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8
மே = உன்னையே தஞ்சமாக பற்றினவெனக்கு , யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்திலா கவுமாம் வாஸம் , யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் = ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ; இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் . பின்னை அதுள்ளது யெவ்விஷயத்திலேயென் னில் ; ( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னுமக்கோ யிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு , அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபிருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் | ‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |
மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |
த்வாம் விநா நாந்யமுத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப்யஹம் || 9
மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது , செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப் பான வாக்கினாலாவது, உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸிநாலாவது , “ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக்கடவதாகிலும் இவ்விதத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே . ஆக , மநோ வாக்காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது , கதஞ் ச ந = எவ்வகையிலும் , த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து , அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக்கடவனல்லேன் , தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் , வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை . கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்தபோதிலு மென்றபடி .
பாஹி பாஹி ஜகந்நாத க்ருபயா பக்தவத்ஸல |
அநாதோஹமதந்யோஹமக்ருதார்த: கதஞ்சந ||. 10
ஜகந்நாத = உலகங்கட்கு அரசே , பக்தவத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக்கொள்ளுமவநே , க்ருபயா பாஹி பாஹி = கேவல க்ருபையினாலே ரக்ஷஇத்தருளவேணும் ரக்ஷஇத்தருளவேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி , அஹமநாத: = அடியேன் தேவரீரையன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் . அதந்ய: = அகிஞ்சநன் , கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன் | ஆன பின்பு , க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீக்ஷஇயாத க்ருபையைக்கொண்டு கார்யம் செய்யப்பாராய் .
ந்ருஶம்ஸ: பாபக்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ்ஸதா |
பவார்ணவநிமக்நம் மாமநந்ய கருணோததே || 11
கருணாபூர்ணத்ருஷ்டிப்யாம் தீநம் மாமவலோகய |
த்வதக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் நார்ஹஸி ப்ரபோ || 12
ந்ருஶம்ஸ: = காதுகந் ; ஆத்துவாநியன் காணடியேன் , பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “ நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ . க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ? வஞ்சக: = பெரிய திருவிழிகளாலே நால்வர் நின்ற விதத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் . ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு , அதுவுமில்லை காணேனக்கு . பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற , அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற , தீநம் = போர க்லேஶப்பற்றிருக்கிற , மாம் = அடியேனை , கருணோததே = கருணைக்கடலே , கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோகய = திருவருள் விஞ்சின திருக்கண்களாலே நோக்கியருளவேணும் . ப்ரபோ = எம்பெருமானே , த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே , பதிதம் = வேறற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் , தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற , மாம் = அடியேனை , த்யக்தும் நார்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் . ( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ? ( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக்கூடாததொன்றில்லையேலும் என்னை கைவிடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிரான்றுகிதாய்.
மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |
த்வத்பாதபங்கஜம் ப்ராப்தும் நாந்யத்த்வத்கருணாம் விநா || 13
த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் , புந: புந: மயா க்ருதாநி = ‘யத்ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பற்றான, த்வத் பாதபங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித்தாமரை அடைய அணுகுவதற்கு , த்வத்கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை .
ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீந்யப்ஜ லோசன |.
த்வதாஜ்ஞயா ப்ரயுக்தாநி த்வாமுத்திஷ்ய க்ருதாநி வை || 14
அப்ஜ லோசந = தாமரைக்கண்ணனே , த்வதாஜ்ஞயா ப்ரயுக்தாநி =
“ ஶ்ருதி ஸ்ம்ருதிர்மமைவாஜ்ஞா “ என்கிறபடியே தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான , யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் , த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்துமுடிக்கப்பட்டன . கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக்கட்டினேன் , இனி தேவரீர் அருள்கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லிவைத்து , இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞாசோதிதங்களான யாகாதிஸாதநங்களைச் செய்து தலைக்கட்டினே’ னென்றால் இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் , கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே – அடியேன் செய்து தலைக்கட்டிய யாகாதிஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது . யாகமாவது – பகவதாராதநம் ;
“ யஜ — தேவ பூஜாயம் “ இரே ( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை யாழ்வித்தேன் “ என்றாப்போலே க்ஷஏபோக்தி இருக்கிறபடி .
பக்த்யைகலப்ய: புருஷோத்தமோஸௌ
ஜகத்ப்ரஸூதிஸ்திதிநாஶஹேது: |
அகிஞ்சநோ அநந்யகதிஶ்ஶரண்ய
க்ருஹாண மாம் க்லேஶிநமம்புஜாக்ஷ || 15
ஜகத்ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல , அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர், பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே பக்தி ஒன்றினாலேயே பெறத்தக்கர் , அகிஞ்சந: = இத்தலையில பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை . அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யநாயு மிரா நின்றேன் , ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்டநிவ்ருத்தி யையும் இஷ்டப்ரபத்தியையும் பண்ணிக்கொடுக்குமவனே , அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந்தாமரை போன்ற திருக்கண்கை யுடைய வனே , க்லேஶிநம் = அவித்யாஸ்மிதராக த்வேஷாபிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பரிதநாந , மாம் = அடியேனை , க்ருஹாந = பவதீய நாக அங்கீகரித்தருள வேணும் .
தர்மார்த்தகாமமோக்ஷஏஷு நேச்சா மம கதாசந |
த்வத்பாதபங்கஜாஸ்வாதஜீவிதம் தீயதாம் மம || 16
தர்மார்த்த காம மோக்ஷஏஷு = இஷ்டபூர்த்தாதிகளாலுண்டாகும் புண் யத்திலும் , புருஷார்த்தஸாதநமான வைஶ்வர்யத்திலும் , ஸ்வப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் , ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும் ஸ்வப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் , மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் , த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது , மம = அடியேனுக்கு , தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித்தருள வேண்டும் .
காமயே தாவகத்வேந பரிசர்யாநுவர்த்தநம் |
நித்யம் கிங்கரபாவேந பரிக்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17
தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரநாய் , பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் , காமயே = ஆசைப் படா நின்றேன், ஹே விபோ = ஸர்வஸ்வாமியே , மாம் = அடியேனை, நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் , கிங்கர பாவேந = உரியவடிய னாக , பரிக்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித்தருள வேணும் .
லோகம் வைகுண்டநாமாநம் திவ்யம் ஷாட்குண்யஸம்யுதம் |
அவைஷ்ணவாநாம்ப்ராப்யம் குணத்ரயவிவர்ஜிதம் || 18
நித்யஸித்தைஸ்ஸமாகீர்ணம் த்வந்மயை: பாஞ்சகாலிகை: |
ஸபாப்ராஸாதஸம்யுக்தம் வநைஶ்சோபவநைர்யுதம் || 19
வாபீகூபதடாகைஶ்ச வ்ருக்ஷஷண்டைஸ்ஸுமண்டிதம் |
அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம் அயுதார்கஸமப்ரபம் |
ப்ரக்ருஷ்டஸத்த்வஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா || 20
திவ்யம் = ஸ்வயம்ப்ரகாஶமாய் , ஷாட்குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாதி ஷாட்குண்ய விஶிஷ்டநான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் , அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலாவிபூதி போலன்றிக்கே ஸர்வே ஶ்வரனுடைய ஷாட்குண்ய ப்ரகாஶகமாய் , அவைஷ்ணவாநாம்ப்ராப் யம் = விஷ்ணுபக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் , குணத்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குணத்ரய ஶூந்ய மாய் , த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யாபந் நர்களாய் , பாஞ்சகாலிகை: = அகாலகால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜி த்து பகவதாராதநம் செய்யுமவர்களான , நித்யஸித்தை: = நித்யமுக்தர் களாலே , ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் , ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் , வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்தவனங்களோடும் , உபவநை ஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் , யுதம் = கூடியிருப் பதே, வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் , வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் , ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் , அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டானதன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் , ஸுரைர்வந்த்யம் = அயர்வரும்மரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் , அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியையுடையதாயும் , ப்ரக்ருஷ்ட ஸத்த்வஸம்பந்நம் = ஶுத்தஸத்வமயமான , வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம்பதத்தை , கதா = எப்போது , சக்ஷஉஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன் |
க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலாபூமிஷு கேஶவம் |
மேகஶ்யாமம் விஶாலா-ம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா || 21
லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் , ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் , க்ரீடந்தம் = விஹரியா நிர்பானாய் , மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் , விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண் களை யுடையனாய் , கேஶவம் = ஆபத்காலத்தில் ப்ரஹ்மருத்ராதிகளை
தன் மேனியிலிடம் கொடுத்து ரக்ஷஇக்கும் ஸர்வாதிகனான வெம்பெரு மானை , சக்ஷஉஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக்கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .
உந்நஸம் சாருவதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |
விஶாலவக்ஷஸம் ஸ்ரீஶம் கம்புக்ரீவம் ஜகத்குரும் || 22
ஆஜாநுபாஹுபரிகமுந்நதாம்ஸம் மதுத்விஷம் |
விஶாலநிம்நநாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |
கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா || 23
உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் , சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய், பிம்போஷ்டம் =கோவை பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் , ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபாயுக்தமான திருமுகமண்டலத்தை யுடையவனாய் , விஶால நிம்நநாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திருவுந்தியை யுடையனாய், ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய், விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற்கட்டட மான திருமார்பை யுடையவனாய் , கம்புக்ரீவம் = ஶங்கம் போன்ற திருமிடற்றை யுடையனாய் , ஜகத்குரும் = ஸர்வலோகத்துக்கும் ஶாஸ்த்ரப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் , ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம்போல் வர்த்துலமான திருக்கைகளை யுடையனாய் , உந்நதாம்ஸம் = உயர வேதுத்த திருத் தோள்களை யுடையனாய் , மதுத்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த , கரபோரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசிவிரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல் அடிபருத்து நுனிசிறு த்து ம்ருதுவாயிருக்கும் திருத்துடைகளை யுடையனாய் , ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் , ஹரிம் = ஆஶ்ரித ஆபத்நிவாரகனான ஸர்வேஶ்வரனை , கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஸா = கண்களால் ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ |
ஶங்கசக்ரகதாபத்மைரங்கிதம் பாதபங்கஜம் |
ஶரச்சந்த்ரஶதாக்ராந்தநகராஜிவிராஜிதம் || 24
ஸுராஸுரைர்வந்த்யமாநம்ருஷிபிர்வந்திதம் ஸதா |
கதா வா தேவ மூர்காநம் மாமகம் மண்டயிஷ்யதி || 25
ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்கரேகை சக்ரரேகை கதாரேகை பத்மரேகை இவைகளாலலங்க்ருதமாய் , ஶரச்சந்த்ர ஶதாக்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த காந்தி பொருந்திய நகபங்க்திகளால் விளங்கா நிற்பதாய் , ஸுராஸுரைர்வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயநீயமாய் , ருஷிபி: ஸதா வந்திதம் = மனனஶீலரான ருஷிக ளாலே யெப்போதும் ஸேவிக்கப்படுவதான , பாதபங்கஜம் = திருவடித் தாமரைகளை , ஹே தேவ = வாரீர் ஸர்வஸ்வாமியே , மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை , கதா வா = யெப்போதுதான் , மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |
கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |
சாமரவ்யக்ரஹஸ்தம் மாமேவம் குர்விதி வக்ஷ்யதி || 26
ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வரதகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய , ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் , கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் , சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திருவெண்சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை , யேவம் குரு இதி = அப்படியே வெண்சாமரம் பரிமாறக் கடவாயென்று , கதா = யெப்போது , வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான் |
கதாஹம் ராஜராஜேந கணநாதேந சோதித: |
சரேயம் பகவத்பாதபரிசர்யாநுவ்ருத்திஷு ||. 28
ராஜராஜேந = ராஜாதிராஜனாய், கணநாதேந = பாரிஷட கணநாயகனான ஸர்வேஶ்வரனாலே , அஹம் = நான், பகவத்பாத பரிசர்யாநுவ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந்யூதமா கச் செய்வதில் , சோதித: = நியமிக்கப்பட்டவனாய் , கதா = யெப்போது, சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக்கடவேன் |
ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |
நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவாமிதத்யுதே || 29
ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே, அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே , வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே , ஶாந்தாய = அஶநாயாபி பாபஜந்ம ம்ருத்யுஶோக மோஹங்களா கிற ஊர்மிஷட்க ரஹிதநாய் , விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதநாய் , தேஜஸே = ஸர்வலோக ப்ரகாஶகநாய், பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட்குண்ய பரிபூர்ணனாய் , பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு , நம: = நிர்மமநாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன் |
நமஸ்ஸர்வகுணாதீத ஷட்குணாயாதிவேதஸே |
ஸத்யஜ்ஞாநாநந்தகுண ப்ரம்ஹணே பரமாத்மநே || 30
ஸர்வகுணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக் கும் ஸர்வேஶ்வரனே , ஷட்குணாயாதி = எல்லா குணங்களுக்கு மூற்று வாயான ஜ்ஞாநாதி ஷட்குணங்களை யுடையவனாய் , அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய், ஸத்யஜ்ஞாநாநந்தகுண ப்ரஹ்மணே = ஸத்யத்வஜ்ஞா ஸத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்தவாச்யநாய் , பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாமோரு யிரான உன்னை ஶரணமடைகிறேன் |
சது:பஞ்சவநவ்யூஹ தஶத்வாதஶமூர்தயே |
நமோநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31
சது: பஞ்சநவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்கா ஸங்கர்ஷண ப்ரத்யும்நாநிருத்த வாஸுதேவாதிரூபேண நிற்கும் நிலை களென்ன , ஸத்யாச்யுதாதி பஞ்சவ்யூஹங்களென்ன , நவ வ்யூஹங்க ளென்ன , ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன , கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன , ஏவம் விதமான திவ்யமங்களவிக்ரஹங்களை யுடை யனாய் , அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் , விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் , விஶ்வா தீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய், சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக யெப்போதும் கைகழலா நேமியுடைய வுனக்கு , நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன் |
நமஸ்தே பஞ்சகாலஜ்ஞ பஞ்சகாலபராயண |
பஞ்சகாலைகமநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32
பஞ்சகாலைஜ்ஞ = அபிகமநாதி காலங்களை யறிந்தவனே , பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரமப்ராப்யனான வனே , தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் , பஞ்சகாலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶ முய்யவர்களுக்கு, த்வமேவ = தேவரீரே , அவ்ய்ய: = நிரபாயமான , கதி: = உபாயமாக வாகிறீர் |
பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |
அப்ரமேயமஜம் விஷ்ணுமப்ஜநாபம் ஸுரேஶ்வரம் |.
வாகதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33
பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமாந பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் , நிரவத்யம் = ஆஶ்ரித வாத்யரஹிதனாய் , நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவ னாய் , அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் , அஜம் = உத்பத்தி ரஹித னாய் , விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் , அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீகமலத்தை யுடையனாய் , ஸுரேஶ்வரம் = நித்யஸூரி நிர்வாஹகனாய் , வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் , பரம் = ஸர்வாதிகனாய் , ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான , த்வாம் = தேவரீரை , அஹம் = அகிஞ் சந்யாதி பரிதனான நான் , ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன் |
வர்யம் த்வந்த்வாதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸிவக்ஷஸம் |
விஸ்வரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷஉஷா || 34
வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் , த்வந்த்வாதிரிக்தம் = ப்ராக்ருத ஸுகது:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் , கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திருமார்பை யுடையவனாய் , விஸ்வரூபம் = ஜகச்சரீரகனாய் , விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக்கண்களை யுடையனான , த்வாம் = உன்னை , சக்ஷஉஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் யெப்போது கண்டு களிக்கப்போகிறேன் |
மோக்ஷம் ஸாலோக்யஸாரூப்யம் ப்ரார்த்தயே ந கதாசந |
இச்சாம்யஹம் மஹாபாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35
ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம்பத ப்ராப்தியாகிற மோக்ஷ த்தையும் , அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக ப்ராதுர்பாவாதி ரூப மோக்ஷத்தையும் , கதாசந = ஒரு காலும் , ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன், மஹாபாஹோ = ஸமஸ்தலோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களையுடையவனே , ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே , தவ = தேவரீருடைய , ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே இச்சாமி = விரும்பு கின்றேன் | ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர் யம் ஸித்தியாதாகையால் , கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம் |
ஸகலாவரணாதீத கிங்கரோஸ்மி தவாநக |
புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36
ஸகலாவரணாதீத = தஶோத்தரமான ஸப்தாவரநத்துக்கு மவ்வருகான வனே ( பரமபதத்தி லெழுந்தருளி யிருக்குமவனே ), அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காங்கையாக்கிற குற்றமொன்று மில்லாதவனே , தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் . ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சை யை அபேக்ஷஇயாமல் நிரவதிகைஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே , தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்யகிங்கரராக வேணும் , கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி |
ஆஸநாத்யநுயாகாந்தமர்சநம் யந்மயா க்ருதம் |
போகஹீநம் க்ரியாஹீநம் மந்த்ரஹீநமபக்திகம் |
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ தீநம் மாமாத்மஸாத்குரு || 37
ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்ய ங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான , அர்சநம் யத: = ( தேவரீர் விஷ யமாக ) யாதொரு ஆராதநமாநது , மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ , தத் ஸர்வம் = அவை யெல்லாம் , போக ஹீநம் = உபசார ங்களால் குறைந்திருந்தாலும் , க்ரியா ஹீநம் = செய்யவேண்டும் வ்யா பாரங்களால் குறைந்திருந்தாலும் , மந்த்ரஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் , அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திரு ந்தாலும் , க்ஷம்யதாம் = பொறுத்தருள வேணும் , தேவ = ஸர்வாதி கநே , தீநம் மாம் = ஏழையான என்னை , ஆத்மஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருளவேணும் |
இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மதுநிகாதிநம் |
யாகாவஸாநஸமயே தேவதேவஸ்ய சக்ரிண: |
நித்யம் கிங்கரபாவேந ஸ்வாத்மாநம் விநிவேதயேத் || 37
சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய , தேவதேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய , ஆகாவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் , இதி ஸ்தோத்ரேண = யேவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே , மதுநிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை , ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி , ஸ்வாத்மாநம் = தன்னை , நித்யம் கிங்கரபாவேந = நித்ய கிங்கரனாக , விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன் |
த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |
த்ருதீய ஜிதந்தா ப்ராரம்ப:
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஶ்வபாவந |
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஶ மஹாபுருஷ பூர்வஜ || 1
ஹே புண்டரீகாக்ஷ = செவ்விதழ் தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய வனே , ஜிதம் = உனக்கு ஜயம் உண்டாகக்கடவது , ஹே விஶ்வபாவந = ஸகல ஜகத்தையும் படைத்த ஸர்வேஶ்வரனே , தே நமஹ = உன்னை ஶரணமடைகி றேன் , பூர்வஜ = சேதந ரக்ஷணத்துக்காக ஸ்ருஷ்ட்யாவதாராதிகளைப் பண்ணி முற்பாதநாய் நிற்குமவனே , ஹ்ருஷீகேஶ = தன்னுடைய ஸௌந்தர்யாதிகளைக் காட்டி விஷயாந்தர ப்ரவணங்களான இந்த்ரியங்களைத் தன் வஸமாக்குவனே , மஹாபுருஷ = ஆஶ்ரிதர் விஷயத்தில் தன் ஸ்வரூபத்தை யழியாமல் இக்கார்யம் செய்யுமவனான ஸர்வேஶ்வரனே , நம: தே அஸ்து = உம்முடைய ஸௌந்தர்யாதி குணங்களுக்கு தோற்று ஶரணமடைகிறேன் |
விஜ்ஞாபநமிதம் தேவர ஶ்ருணு த்வம் புருஷோத்தம |
நரநாராயணாப்யாம் ச ஶ்வேதத்வீபநிவாஸிபி : || 2
நாரதாத்யைர்முநிகணை : ஸநகாத்யைஶ்ச யோகிபி : |
ப்ரஹ்மேஶாத்யைஸ்ஸுரகணை : பஞ்சகாலபராயணை : |
பூஜ்யஸே புண்டரீகாக்ஷ திவ்யமந்த்ரைர்மஹர்ஷிபி : || 3
புருஷோத்தம = உத்தமனான , தேவ = ஸர்வேஶ்வரனே , த்வம் = தேவரீர் , இதம் விஜ்ஞாபநம் = இந்த விண்ணப்பத்தை , ஶ்ருணு = திருச்செவி ஸாத்தியருள வேணும் , ஹே புண்டரீகாக்ஷ = பரத்வ ப்ரகாஶமான செந்தாமரை போன்ற திருக் கண்களையுடையவனே , நரநாராயணாப்யாஞ்ச = ஸ்வாம்ஶபூதரான நரநாராயண னார்களாலும் , ஶ்வேதத்வீபநிவாஸிபி: = ஶ்வேதத்வீபவாஸிகளாலும் , நாரதாத்யைர்முநிகணை: = ஸதா பகவத்குணாநுபவஶீலரான நாரத மஹரிஷிக ளாலும் , ஸநகாத்யைஶ்ச யோகிபி: = அஸப்ருஷ்ட ஸம்ஸாரகந்தரான ஸநகாதி யோகிகளாலும் , ப்ரஹ்மேஶாத்யை: ஸுரகணை: = ப்ரஹ்ம ருத்ராதி தேவதைக ளாலும் , பஞ்சகாலபராணை: = பகவதாராதநோபயோகியான அபிகமநோபாதாநேஜ் யாஸ்வாத்யாய யோகிகளாகிற பஞ்சகாலங்களை பரமப்ராப்யமாகவுடைய முமுக்ஷுக்களாலும் , மஹர்ஷிபி: = ஜிதேந்த்ரியரான ரிஷிகளாலும் , திவ்ய மந்த்ரை: = ஆராதநோபயோகிகளான விலக்ஷண மந்த்ரங்களாலே , பூஜ்யஸே = ஆராதிக்கப் போதுகிறீர் |
பாஷண்டதர்மஸங்கீர்ணே பகவத்பக்திவர்ஜிதே |
கலௌ ஜாதோsஸ்மி தேவேஶ ஸர்வதர்மபஹிஷ்க்ருதே | 4
ஹே தேவேஶ = அயர்வரு மமரர்களதிபதியே , பாஷண்ட தர்ம ஸங்கீர்ணே = வேதபாஹ்யர்களின் கர்மாநுஷ்டானங்களால் கலுசிதமாய் , பகவத்பக்திர்ஜிதே = ஜ்ஞாநாநாதிகுண பரிபூர்ணரான தேவரீர் விஷயத்தில் ப்ரீதி ரூபாந்நமான பக்தி யினால் ஶூந்யமாய் , ஸர்வதர்மபஹிஷ்க்ருதே = அலௌகிக ஶ்ரேயஸ் ஸாத கங்களான தர்மங்களின் கந்தமிருக்கிற , கலௌ = இந்த கலியுகத்திலே , ஜாதோsஸ்மி = பிறவா நின்றேன் |
கதம் த்வாமஸமாசார: பாபப்ரஸவபூரஹம் |
அர்ச்சயாமி தயாஸிந்தோ பாஹி மாம் ஶரணாகதம் || 5
அஸமாசார: = துஷ்கர்மங்களையே செய்து திரியுமவனாய் , பாபப்ரஸவபூ: = அகதி யாக வரும் பாபங்களுக்கு உத்பத்தி ஸ்தாநமான , அஹம் = நான் , த்வாம் = நித்யஸூரிகளால் ஆராதிக்கப்படுகிற தேவரீரை , கதம் = எப்படி , அர்ச்சயாமி = ஆராதிப்பேன் , ஹே தயா ஸிந்தோ = க்ருபா நிதியே , ஶரணாகதம் மாம் = தேவ ரீரையே உபாயமாகப் பற்றியிருக்கிற என்னை , பாஹி = ரக்ஷித்தருள வேணும் |
தாபத்ரயதவாக்நௌ மாம் தஹ்யமாநம் ஸதா விபவோ |
த்ராஹி மாம் புண்டரீகாக்ஷ கேவலம் க்ருபயா தவ || 6
ஹே விபோ = ஸர்வஸ்வாமியானவனே , ஹே புண்டரீகாக்ஷ = செந்தாமரைக் கண்ணனே , தாபத்ரயதவாக்நௌ = ஆத்யாத்மிகாதி தெய்வீகாதிதி பௌதிகங்க ளான தாபத்ரயத்ரயங்களாகிற காட்டுத் தீயிலே , ஸதா = காலவிச்சேதமின்றியே , தஹ்யமாநம் = தஹிக்கப்பட்டுக் கிடக்கிற , மாம் = என்னை , தவ = தேவரீ ருடைய , க்ருபயா கேவலம் = பரது:க து:கித்வரூப குணமொன்றினாலேயே இரங்கி , பாஹி = ரக்ஷித்தருள வேணும் |
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கஸந்தப்ததேஹிநம் |
பாலயாஶு த்ருஶா தேவ தவ காருண்யகர்பயா || 7
ஹே தேவ = ஹிதபரனான ஸர்வஸ்வாமியே , ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி து:க ஸந்தப்த தேஹிநம் = பிறப்பிறப்புப் பிணி மூப்பால் வரும் துக்கங்களால் பீடித மான ஶரீரத்தை யுடைய யென்னை , காருண்யகர்பயா = க்ருபாவர்ஷிணியான தவ = தேவரீருடைய , த்ருஶா = திருக்கண்களாலே , ஆஶு = ஶீக்ரமாக , பாலய = குளிரக் கடாக்ஷித்து ரக்ஷித்தருள வேணும் |
இந்த்ரியாணி மயா ஜேதுமஶக்யம் புருஷோத்தம |
ஶரீரம் மம தேவேஶ வ்யாதிபி: பரிபீடிதம் || 8
ஹே புருஷோத்தம = ஆஶ்ரிதர் திரத்தில் தன் பேராக உபகரித்தருளும் புருஷோத் தமனே , இந்த்ரியாணி = சக்ஷுராதியான ஜ்ஞாநங்களும் வாகாதிகளான கர்மேந்த்ரி யங்களும் , மயா = அஶக்தனான என்னாலே , ஜேதுமஶக்யம் = அடக்குவதற்கு அஸாத்யமாயிரா நின்றன , தேவேஶ = நித்யஸூரி நிர்வாஹகனே , மம = என்னு டைய , ஶரீரம் = தேஹமானது , வ்யாதிபி: பரிபீடிதம் = நோயினால் மிகவும் மெலிந்து கிடக்கிறது |
மநோ மே புண்டரீகாக்ஷ விஷயாநேவ தாவதி |
வாணீ மம ஹ்ருஷீகேஶ மித்யாபாருஷ்யதூஷிதா || 9
ஹே புண்டரீகாக்ஷ = உன்னுடைய கண்ணழகைக்காட்டி விஷயாந்தரபரரையும் ஜிதமென்று சொலுவிக்குமவனே , மே மந: = என்னுடைய மநஸ்ஸாவது , விஷயாநேவ தாவதி = அப்ராப்தங்களான ஶப்தாதி விஷயங்களையே தேடித்திரியா நின்றது , ஹே ஹ்ருஷீகேஶ = ஸர்வேந்த்ரியங்களையும் தன்பக்கலில் மக்னமாம் படி பண்ணுமவனே , மம வாக் = என்னுடைய வாக்கானது , மித்யாபாருஷ்ய தூஷிதா = நரகாவஹமான பொய்யென்ன ஸர்வலோகபயாவஹமான கொடுமை யென்ன இவைகளாகிற தோஷங்களினால் பூர்ணமாயிரா நின்றது |
ஏவம் ஸாதநஹீநோSஹம் கிம் கரிஷ்யாமி கேஶவ |
ரக்ஷ மாம் க்ருபயா க்ருஷ்ண பவாப்தௌ பதிதம் ஸதா || 10
ஹே கேஶவ = கேஶி வதம் செய்து தன்னை நோக்கி யெல்லாருக்கு முபகரித்தரு ளினவனே , ஏவம் ஸாதநஹீநோSஹம் = இப்படி விஷயாந்தர ப்ரவணங்களான மனோ வாக்காயங்களால் உன்னைப் பெறுகைக்குத்தக்க கர்ம ஜ்ஞான பக்திகளாகிற ஸாதநங்களொன்றும் செய்ய அஸக்தனான நான் , கிம் கரிஷ்யாமி = பேற்றுக் குறுப்பான எந்த வுபாயங்களை செய்யப்போகிறேன் , ஹே க்ருஷ்ணா = ஐஹிகா முஶ்மிகலப்ரதநான க்ருஷ்ணனே , ஸதா பவாப்தௌ பதிதம் மாம் = அநாதியாக துஸ்தரமான ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து அலமருகின்ற என்னை , க்ருபயா = தேவரீருடைய நிர்ஹேதுக க்ருபையினாலே , ரக்ஷ = ரக்ஷித்தருள வேணும் |
அபராதஶதம் சைவ ஸஹஸ்ரமயுதம் ததா |
அர்புதம் சாப்யஸங்க்யேயம் கருணாப்தே க்ஷமஸ்வ மே || 11
ஹே கருணாப்தே = என்னுடைய அஸங்க்யாதமான அபராதங்களைப் பொறுத்தரு ளுகைக்கீடான க்ருபாகுணத்துக்கு கடல் போன்றவனே , மே அபராதஶதம் சைவ = அஜ்ஞாநாதி பூர்ணனான என்னாலே செய்யப்பட்டு தேவரீருடைய நிக்ரஹஹேது வான அபராதங்கள் நூறையும் , ததா ஸஹஸ்ர மயுத மர்புத மஸங்க்யேயம் = அப்படியே ஆயிரமாயும் பதினாயிரமாயும் அற்புதமாயும் எண்ணிறந்ததாயும் தேவரீர் திரத்தில் செய்த அபசாரங்களை , க்ஷமஸ்வ = பொறுத்தருள வேணும் |
யச்சாபராதம் க்ருதவாநஜ்ஞாநாத்புருஷோத்தம |
மத்பக்த இதி தேவேஶ தத்ஸர்வம் க்ஷந்துமர்ஹஸி || 12
ஹே புருஷோத்தம = வாரீர் புருஷோத்தமனே , அஜ்ஞாநாத் = க்ருத்யாக்ருத்யங் களில் அறிவில்லாமையினாலே , யத் அபராதம் க்ருதவாந் = தேவரீர் திறத்தில் யாதொரு அபராதங்களைச் செய்தேனோ , தத் ஸர்வம் = அந்த ஸர்வாபதாரங் களையும் , ஹே தேவேஶ = வாரீர் தேவாதிதேவனே , மத்பக்த இதி = நம்மடியா னிவனென்று , க்ஷந்துமர்ஹஸி = பொறுத்தருள வேணும் |
அஜ்ஞத்வாதப்யஶக்தத்வாத் ஆலஸ்யாத் துஷ்டபாவநாத் |
க்ருதாபராதம் க்ருபணம் க்ஷந்துமர்ஹஸி மாம் விபோ || 13
ஹே விபோ = ஸர்வ வ்யாபகனே , அஜ்ஞாதவாத் = ஸத்கர்மாதிகளை அறியத் தக்க ஜ்ஞாநமில்லாமையாலும் , அஶக்தவாதபி = அறிந்தாலும் அநுஷ்டிக்கவல்ல ஶக்தி இல்லாமையாலும் , ஆலஸ்யாத் = ஶக்தி இருந்தாலும் அநவாதநத்தை யாலும் , துஷ்டபாவநாத் = காம க்ரோதாதி தோஷ யுக்தமான மனோபாவத்தாலும், க்ருதாபராதம் = அபராதங்களையே மேன்மேலும் செய்து போர நின்றுள்ள , க்ருபணம் மாம் = குஷ்டிதமான செயல்களையுடைய யென்னை , க்ஷந்துமர்ஹஸி = பொறுத்தருள வேணும் |
அபராதஸஹஸ்ராணி க்ரியந்தேSஹர்நிஶம் மயா |
தாநி ஸர்வாணி மே தேவ க்ஷமஸ்வ மதுஸூதந || 14
மயா = என்னாலே , அஹர்நிஶம் = இரவு பகலென்னாமல் எப்போதும் , அபராத ஸஹஸ்ராணி = தேவரீர் திருவுள்ளம் கலங்கும்படியான அநேகமாயிர அபராதங்க ளானவை , க்ரியந்தே = செய்யப்படுகிறன , ஹே மதுஸூதந = மதுவை நிரஸித்த வனே , ஹே தேவ = வாரீர் ஸர்வேஶ்வரனே , தாநி ஸர்வாணி = அந்த ஸர்வாப தாரங்களையும் , க்ஷமஸ்வ = பொறுத்தருள வேணும் |
யஜ்ஜந்மந: ப்ரப்ருதி மோஹவஶங்கதேந
நாநாபராதஶதமாசரிதம் மயா தே |
அந்தர்பஹிஶ்ச ஸகலம் தவ பஶ்யதோ மே
க்ஷந்தும் த்வமர்ஹஸி ஹரே கருணாவஶேந || 15
ஜந்மந: ப்ரப்ருதி = பிறந்தது முதல் , மோஹவஶங்கதேந = தமோபிபூதனாய் மதி மயங்கிக் கிடக்கிற , மயா = என்னாலே , மே அந்தர்பஹிஶ்ச ஸகலம் தவ பஶ்யத: = என்னுடைய உள்ளும் புறமும் எல்லாவற்றையும் தேவரீர் கடாக்ஷியா நிற்கச்செய்தே , தே = தேவரீர் திறத்தில் , யத் நாநாபராத ஶதமாசரிதம் = எண்ணிறந்த எந்த அபராதங்கள் செய்யப்பட்டதோ , ஹே ஹரே = ஆஶ்ரித துரிதங் களைப் போக்குமவனே , த்வம் = தேவரீர் , கருணாவஶேந = க்ருபைக்கு பரதந்த்ர ராய் , க்ஷந்துமர்ஹஸி = அவை யெல்லாவற்றையும் பொறுத்தருள வேணும் |
கர்மணா மநஸா வாசா யா சேஷ்டா மம நித்யஶ: |
கேஶவாராதநே ஸா ஸ்யாத் ஜந்மஜந்மாந்தரேஷ்வபி || 16
நித்யஶ: = நாள்தோறும் , கர்மணா = கர்ம ஸாதநமான ஶரீரத்தினாலும் , மநஸா = நினைக்கைக்கு யோக்யமான மநஸ்ஸினாலும் , வாசா = சொல்லுக்குறுப்பான வாக்கினாலும் , மம யா சேஷ்டா = நான் செய்கிற வ்யாபாரமானது யாதொன் றுண்டோ ? ஸா = அந்த வ்யாபாரமானது , ஜந்நஜந்மாந்தரேஷ்வபி = நான் பிறக் கும் ஜன்மம்தோறும் , கேஶவாராதநே ஶ்யாத் = ஸர்வாதிகரான தேவரீருடைய ஆராதநத்திலே விநியோகிக்கும்படி க்ருபை செய்தருள வேணும் | மனோ வாக்காயங்கள் மூன்றும் தேவரீரையே அன்றி வேறொன்றில் செல்லாதபடி அநுக்ரஹிக்க வேண்டுமென்றபடி |
த்ருதீய ஜிதந்தா ஸம்பூர்ண:
சதுர்த ஜிதந்தா ப்ராரம்ப:
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஶ்வபாவந |
நமஸ்தே வாஸுதேவாய ஶாந்தாநந்தசிதாத்மநே || 1
ஹே புண்டரீகாக்ஷ ஜிதம் தே = உன்னுடைய செவ்விய தாமரை மலர் போன்ற திருக்கண்கள் ஸௌந்தர்யத்தி லீடுபட்டு உனக்குத் தோற்றேன் என்றபடி , நமஸ்தே விஶ்வபாவந = ஸகல ஜகத்துக்கும் காரணபூதநே , உன்னை ஶரண மடைகிறேன் , ஶாந்தாநந்தசிதாத்மநே = அஶாநாயாபி ஶ்யாத்யூர்மிஷட்க ரஹித நாய் , நித்யனாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாபித்து நிற்கையாலே ஸர்வ வஸ்து பரிச்சேதநார்ஹநாய் ஜ்ஞாநஸ்வரூபனா யிருக்கிற தேவரீரை ஶரணமடைகிறேன் |
அத்யக்ஷாய ஸ்வதந்த்ராய நிரபேக்ஷாய ஶாஸதே |
அச்யுதாயாவிகாராய தேஜஸாம் நிதயே நம: || 2
அத்யக்ஷாய = சேதநருடைய ரக்ஷாபேக்ஷையை ப்ரதீக்ஷித்திருக்குமவனாய் , ஸ்வதந்த்ராய = ஸ்வேச்சாக்ருத கார்யத்தில் தனக்கொரு நிவாரகரில்லாதவனாய் , நிரபேக்ஷாய = சேதந ரக்ஷணத்தில் ஒரு கைம்முதலையும் அபேக்ஷியாதவனாய் , ஶாஸதே = உபய விபூதியும் தன் ஆஜ்ஞைக்கு பரதந்ந்ரமாம்படி நியமிக்குமவனாய், அச்யுதாய = தேவ மனுஷ்யாதி ரூபேண திருவவதாரத்திலும் தன்னுடைய பரமைஶ்வர்யத்தை நழுவ விடாதவனாய் , அவிகாராய = ப்ரக்ருதி கதமான ஸ்வரூபாந்யதா பாவமாகிற விகாரஶூந்யநாய் , தேஜஸாம் நிதயே = லோக ப்ரகாஶகரங்களான ஸூர்யாதி தேஜஸ்ஸுகளுக்கும் ப்ரகாஶமான நிரவதிக தேஜஸ்ஸை வுடைய வுன்னை , நம: = ஶரணமடைகிறேன் |
ப்ரதாநபுருஷேஶாய நமஸ்தே புருஷோத்தம |
க்லேஶகர்மாத்யஸம்ஸ்ப்ருஷ்ட பூர்ணஷாட்குண்யமூர்தயே || 3
ஹே புருஷோத்தம = உத்தம புருஷனானவனே , க்லேஶகர்மாத்யஸம்ஸ்ப்ருஷ்ட = அவித்யாஸ்மிதா ராகத்வேஷாபிநிவேஶங்களாகிற பஞ்சக்லேஶங்களென்ன , இவற்றுக்குக் காரணமான கர்மங்களென்ன , இவற்றின் ஸ்பர்ஶமில்லாதவனே , ப்ரதாந புருஷேஶாய = ப்ரக்ருதி புருஷர்களை அநுப்ரவேஶித்து பந்த மோக்ஷாதி களைப் பண்ணுமவனாய் , பூர்ணஷாட்குண்யமூர்தயே = ஜ்ஞாந ஶக்த்யாதிகளான ஆறு குணங்களால் பூர்ணமான திவ்யாத்ம ஸ்வரூப ப்ரகாஶகமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய , தே நம: = தேவரீரை நமஸ்கரிக்கிறேன் |
த்ரிபிர்ஜ்ஞாநபலைஶ்வர்யவீர்யஶக்த்யந்தராத்மநே |
த்ரியுகாய நமஸ்தேSஸ்து நமஸ்தே சதுராத்மநே || 4
த்ரிபிஹி = ஶங்கர்ஷண ப்ரத்யும்நாநிருத்தர்க ளென்கிற மூன்று மூர்த்திகளாலே , ஜ்ஞாநபலைஶ்வர்ய வீர்ய ஶக்த்யந்தராத்மநே = ஜ்ஞாந பலைஶ்வர்ய வீர்ய ஶக்தி தேஜஸ்ஸுகளை ஸ்வாபாவிக குணங்களாகவுடையனா யிருக்கச் செய்தேயும் , த்ரியுகாய = ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ரூபமான ஒவ்வொரு கார்யங்களுக்கனு குணமாக இரண்டிரண்டு குணங்களையே ப்ரதாநமாக வுடையனாய் , சதுராத்மநே = வ்யூஹ சதுஷ்டயத்திலும் ப்ரத்யேகமுண்டான ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி துரீய ஸம்ஜ்ஞாகமாந நாலு வடிவை யுடையனான , தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் |
சது:பஞ்சநவவ்யூஹ தஶத்வாதஶமூர்தயே |
அநேகமூர்தயே துப்யமமூர்தாயைகமூர்தயே || 5
சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = உபாஸகாநுக்ரஹார்த்தமாக ஶங்கர்ஷணாதி நாலு வ்யூஹங்களாயும் , விஷ்ணு புருஷ ஸ்த்யாச்யுதாநிருத்தர் களென்கிற ஐந்து வ்யூஹங்களாயும் , ஒன்பது வ்யூஹங்களாயும் , ராம க்ருஷ்ணாதி தஶாவதாரங்களாயும் கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளாயு மவதரித்த திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் ,அநேகமூர்தயே = கார்யாவஸ்தையில் ஸ்தூல சிதசித் விஶிஷ்டனாய் , ஏக மூர்தயே = என்று மொருபடித்த திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் நித்யவிபூதியிலெழுந்தருளியிருக்கும் , துப்யம் நம: = தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் |
நாராயண நமஸ்தேSஸ்து புண்டரீகாயதேக்ஷணே |
ஸுப்ரூலலாட ஸுநஸ ஸுஸ்மிதாதரபல்லவ || 6
புண்டரீகாயதேக்ஷணே = ஆதிராஜ்ய ஸூசகமான செவ்வித்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனே , ஸுப்ரூலலாட = அழகிய திருப்புருவங் களையும் திருநெற்றியையு முடையவனே , ஸுநஸ = கோல நீள் கொடி மூக்கை யுடையவனே , ஸுஸ்மிதாதர பல்லவ = அழகிய மந்தஹாஸத்தோடு கூடிய தளிர் போன்ற திருவதரங்களை யுடையவனே , நாராயண = ஸமஸ்த சேதநா சேதந ஶரீரியாய் , ஸமஸ்த கல்யாணகுண விஶிஷ்டநாநவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |
பீநவ்ருத்தாயதபுஜ ஶ்ரீவத்ஸக்ருதலக்ஷண |
தநுமத்ய விஶாலாக்ஷ பத்மநாப நமோஸ்து தே || 7
பீந வ்ருத்தாயத புஜ = ஸகல லோகங்களும் தன் நிழலி லொதுங்கும்படி பருத்து வர்துலமாய் நீண்டிருக்கிற திருத்தோள்களுடையவனே , ஶ்ரீவத்ஸக்ருதலக்ஷண = ஸ்வஸாதாரணமான ஶ்ரீவத்ஸ மென்கிற திருமருவாலே அலங்க்ருதநாநவனே , தநுமத்ய = ஸூக்ஷ்மமான கடி பரதேஶத்தை யுடையவனே , விஶாலாக்ஷ = ஸகல லோகங்களும் ஒரு மூலை பரப்புக்கு பொரும்படி விஶாலமான திருக்கண் களை யுடையவனே , பத்மநாப = ஸகல ஜகதுத்பத்திக்கு நிதாநமான திருநாபீ கமலத்தை யுடையவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |
விலாஸவிக்ரமாக்ராந்தத்ரைலோக்யசரணாம்புஜ |
நமஸ்தே பீதவஸந ஸ்புரந்மகரகுண்டல || 8
விலாஸ விக்ரமாக்ராந்த த்ரைலோக்ய சரணாம்புஜ = வருத்தமர ஸவிலாஸமாக மூன்றடிகளால் மூன்று லோகங்களையும் அளந்தருளின திருவடிகளையுடைய வனே , பீத வஸந = திருவரை பூத்தாற்போலே திருமேனிக்குப் பரபாகமான பீதாம்பரத்தை யுடையவனே , ஸ்புரந் மகரகுண்டல = திருச்செவியில் விளங்கா நின்றுள்ள திருமகரகுழைகளை யுடையவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |
ஸ்புரத்கிரீடகேயூர ஹாரகௌஸ்துபபூஷண |
பஞ்சாயுத நமஸ்தேSஸ்து நமஸ்தே பாஞ்சகாலிக || 9
ஸ்புரத் கிரீட கேயூர ஹார கௌஸ்துப பூஷண = திருமேனிக்குப் பரபாக்யமாய் விளங்கா நின்றுள்ள திருவபிஷேகமென்ன , திருத்தோள்வளைகளென்ன , கௌஸ்துபமென்கிற மாணிக்கப்பதக்கமென்ன , இவை முதலான திவ்யாபரணங் களை யுடையவனே , பஞ்சாயுத = ஆஶ்ரித விரோதி நிரஸநத்துக்காக எப்போதும் தரியா நின்றுள்ள திவ்யாயுதங்களை யுடையவனே , பாஞ்சகாலிக = பஞ்சகால பரர்களாலே யெப்போதும் ஆராதிக்கப்படுமவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |
பஞ்சகாலபரைகாந்தியோகக்ஷேமமஹாப்ரபோ |
நித்யஜ்ஞாநபலைஶ்வர்யபோகோபகரணாச்யுத |
நமஸ்தே ப்ரஹ்மருத்ராதிலோகயாத்ராபரிச்சத || 10
பஞ்சகால பரைகாந்த யோகக்ஷேம மஹா = பஞ்சகாலங்களிலும் குறைவற பகவ தாராதநம் செய்யுமவர்களுக்கு முக்யமான ஐஹிகாமுஷ்மிக போகங்களைக் கொடுக்குமவனே , ப்ரபோ = ஸர்வநியந்தாவானவனே , நித்ய ஜ்ஞாந பலைஶ்வர்ய போகோபகரணாச்யுத = நித்யமான ஜ்ஞாநபலைஶ்வர்யாதிகளையும் திவ்ய மால் யாம்பர சத்ர சாமராதிகளான போகோபகரணங்களை யுடையவனே , அச்யுத = ஆஶ்ரிதர்களை ஒரு காலும் நழுவ விடாதவனே , ப்ரஹ்ம ருத்ராதி லோக யாத்ரா பரிச்சத = ஸ்ருஷ்ட்யாதி லோக வ்யாபாரத்துக்கு ப்ரஹ்மருத்ராதிகளைப் பரிகரமாக வுடையவனே , தே நம: = உமக்கு நமஸ்காரம் |
ஜந்மப்ரப்ருதி தாஸோSஸ்மி ஶிஷ்யோSஸ்மி தநயோSஸ்மி தே |
த்வம் ச ஸ்வாமீ குருர்மாதா பிதா ச மம மாதவ || 11
ஜந்ம ப்ரப்ருதி = அடியேன் பிறந்தது முதல் , தே தாஸோஸ்மி = தேவரீருக்கு க்ரய விக்ரயார்ஹநா யிரா நின்றேன் , ஶிஷ்யோஸ்மி = தேவரீரிடத்தில் ஸகல ரஹஸ்யார்த்தமும் கேட்ட ஶிஷ்யனா யிரா நின்றேன் , தநயோஸ்மி = தேவரீருக்கு கிஞ்சித்கரித்து நிறம் பெரும் புத்ரனாகா நின்றிரேன் , ஹே மாதவ = ஶ்ரீய:பதியே , த்வம் ச = தேவரீர் , மம = அடியேனுக்கு , ஸ்வாமீ = நான் விமுகநாநவென்றும் என் ஸத்தை நோக்கி ரக்ஷிக்கும் வகுத்த ஸ்வாமியாயும் , குரு: = அஜ்ஞாத ஜ்ஞாபநம் பண்ணுகிற ஆசார்யனாகவும் , மாதா = தாரக போஷகையான மாதா வாகவும் , பிதா ச = உத்ப்பதகநாய் ஹிதப்ரவர்தகநாந பிதாவாகவும் ஆகிறீர் |
அபி த்வாம் பகவந் ப்ரஹ்மா ஶர்வஶ்ஶக்ரோ மஹர்ஷய: |
த்ரஷ்டும் யஷ்டுமபி ஸ்தோதும் ந ஹி ஸ்மர்துமபீஶதே || 12
ஹே பகவந் = ஷாத்குண்ய பரிபூர்ணநாந ஸர்வேஶ்வரனே , த்வாம் = தேவரீரை , ப்ரஹ்மா = சதுர்முகனும் , ஶர்வ: = ருத்ரனும் , ஶக்ர: = இந்திரனும் , மஹர்ஷயோபி = மஹர்ஷிகளும் , த்ரஷ்டும் = ஸ்வயத்நத்தால் காண்கைக்கும் , யஷ்டும் = ஆராதிக்கைக்கும் , ஸ்தோதும் = அபரிச்சிந்ந ஸ்வரூபாதிகளை யுடைய நாகையாலே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கும் , ஸ்மர்துமபி = மநஸ்ஸால் , அநீஶதே = ஸமர்த்தராக மாட்டார்கள் |
தாபத்ரயமஹாக்ராஹபீஷணே பவஸாகரே |
மஜ்ஜதாம் நாத நௌரேஷா ப்ரணதிஸ்த்வத்பதார்பிதா || 13
நாத = வாரீர் ஸர்வஸ்வாமியே , தாபத்ரய மஹாக்ராஹ பீஷணே = ஆத்யாத்மி காதி தைவிகாதி பௌதிக தாபத்ரயங்களாகிற பெரிய முதலைகளாலே பயாவஹ மாந , பவஸாகரே = ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே , மஜ்ஜதாம் = அழுந்த நின்றுள்ள எங்களுக்கு , த்வத்பதார்பிதா = வகுத்த ஶேஷியான தேவரீர் திருவடி களில் செய்யப்பட்ட , யேஷா ப்ரணதி: = இந்த ஶரண வரணமானது , நௌ = அக்கறையை பிறப்பிக்குமதான ஓடமாக நின்றது |
அநாதாய ஜகந்நாத ஶரண்ய ஶரணார்த்திநே |
ப்ரஸீத ஸீததே மஹ்யம் நமஸ்தே பக்தவத்ஸல || 14
ஹே ஜகந்நாத = லோகங்களுக்கெல்லாம் ஸ்வாமியானவனே , அநாதாய = வேறொரு ஸ்வாமி யில்லாதவெனக்கு , ப்ரஸீத = க்ருபை பண்ணி யருளவேணும், ஹே லோகஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் இஷ்ட ப்ராப்தியாயும் அநிஷ்ட நிவ்ருத்தியாயும் பண்ணிக் கொடுக்குமவனே , ஶரணார்த்திநே = தேவரீரையே ரக்ஷகராகப்பற்றின வென்னை க்ருபை பண்ணவேணும் , ஸீததே மஹ்யம் = மிகவும் ஶேஷ பக்தனான வெனக்கு , ப்ரஸீத = என்னுடைய துக்கங்கண்டு ஐயோ வென்றிரங்கி யருளவேணும் , ஹே பக்தவத்ஸல = ஆஶ்ரிதருடைய தோஷத் தையே பாக்யமாகக் கொள்ளுமவனே , தே நம: = தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக் கிறேன் |
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் யதர்சநம் |
தத்க்ஷந்தவ்யம் ப்ரபந்நாநாமபராதஸஹோ ஹ்யஸி || 15
மந்த்ரஹீநம் = மந்த்ரஶூந்யமாயும் , க்ரியாஹீநம் = தந்த்ராதிகளால் ஶூந்யமா யும் , பக்திஹீநம் = ப்ரீதி ரூபாபந்நமான பக்திஶூந்யமாயும் , யத் அர்சநம் = தேவரீர் திறத்தில் யாதொரு ஆராதநமாநது என்னால் செய்யப்பட்டதோ ? தத் = அந்த உபசார ரூப அபசாரமாநது , க்ஷந்தவ்யம் = தேவரீரால் பொறுத்தருளத் தக்கது , ப்ரபந்நாநாம் அபராத ஸஹோஹ்யஸி = தேவரீர் திருவடிகளில் ப்ரபத்தி பண்ணினவர்களி நபசாரங்களைப் பொறுத்தருளும் ஸ்வபாவமுடையவரென்று வைதிக ப்ரஸித்தி வுடையவரென்றன்றோ ?
அஜ்ஞாநாத்யதி வா ஜ்ஞாநாதஶுபம் யத்க்ருதம் மயா |
க்ஷந்தவ்யம் ததஶேஷேண தாஸ்யேந ச க்ருஹாண மாம் 16
அஜ்ஞாநாத் = அபுத்தி பூர்வகமாகவாதல் , ஜ்ஞாநாத் = புத்தி பூர்வகமாகவாதல் , யத் அஶுபம் = யாதொரு அபசாரமானது , மயா = என்னாலே , க்ருதம் = செய்யப் பட்டதோ ? தத் அஶேஷேண க்ஷந்தவ்யம் = அவை ஒன்றே*****யாமல் பொறுத் தருளத்தக்கது , மாம் = அடியேனை , தாஸ்யே ச க்ருஹாண = நித்யகைங்கர்யம் செய்யும்படி அங்கீகரித்தருள வேணும் |
ஸர்வேஷு தேஶகாலேஷு ஸர்வாவஸ்தாஸு சாச்யுத |
கிங்கரோSஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோSஸ்மி கிங்கர: || 17
அச்யுத = ஆஶ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாதவனே , ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு கிங்கரோஸ்மி = கைங்கர்யத்தில் அபிநிவேஶாதிஸ் ஸயத்தாலே ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் , தேவரீருக்கு அடிமை செய்யபெறுவேனாக வேணும் , ஹ்ருஷீகேஶ = கைங்கர்யத்தில் ஸர்வ போகத்தைத் தருவிப்பிக்குமவனே , பூயோ பூயோஸ்மி கிங்கர: = ஆதராதிஶாலே த்விராவ்ருத்தி ப்ரார்த்திக்கிறபடி இனிமேலுள்ள காலமெல்லாம் பர வ்யூஹாதி தேஶங்களிலும் ஜாக்ரத் ஸ்வப்நாத்யவஸ்த்யைகளிலும் தத்தத் தேஶகாலாவஸ் தோசித ஸகலவித கைங்கர்யங்களையும் செய்யப்பெறுவேனாக வேணுமென் கிறது |
சதுர்த ஜிதந்தா வ்யாக்யாநம் ஸமாப்தம் |
பஞ்சம ஜிதந்தா வ்நாக்யாநம் |
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஶ்வபாவந |
நமஸ்தேSஸ்து ஹ்ருஷீகேஶ மஹாபுருஷ பூர்வஜ || 1
ஹே புண்டரீகாக்ஷ = செவ்விய தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடைய வனே , தே ஜிதம் = உனக்கு ஜயமுண்டாகக் கடவது , ஹே விஶ்வபாவந = ஸகல ஜகத்தையும் படைத்த ஸர்வேஶ்வரனே , தே நம: = உன்னை ஶரணமடை கிறேன் , பூர்வஜ = சேதந ரக்ஷணத்துக்காக ஶ்ருஷ்ட்யவதாராதிகளைப் பண்ணி நிற்குமவனே , ஹ்ருஷீகேஶ = தன்னுடைய ஸௌந்தர்யாதிகளைக் காட்டி விஷயாந்தர ப்ரவணங்களான விந்த்ரியங்களை தன் வசமாக்குவனே , மஹாபுருஷ = ஆஶ்ரிதர் விஷயத்தில் தன் ஸ்வரூபத்தையழியமாறிக் கார்யம் செய்யுமவனான ஸர்வேஶ்வரனே , நம: தே அஸ்து = உன்னுடைய ஸௌந்தர்யாதி குணங்களுக் குத் தோற்று ஶரணமடைகிறேன் |
நமஸ்தே வாஸுதேவாய ஶாந்தாநந்தசிதாத்மநே |
அஜிதாய நமஸ்துப்யம் ஷாட்குண்யநிதயே நம: | 2
ஶாந்தாநந்த சிதாத்மநே = ஊர்மி ஷட்கர்ம ரஹிதநாய் , தேஶ கால வஸ்து பரிச்சேதநார்ஹமாய் , ஜ்ஞாநமயமாந திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடையநாய் , வாஸுதேவாய = ஸர்வ பூதங்களிலும் அந்தராத்மதயா நின்று விளங்கா நின்றுள்ள தே நம: = தேவரீரை ஶரணமடைகிறேன் , அஜிதாய = ப்ராக்ருதமான ஜன்ம மரணாதிகளால் ஜயிக்கப்படாதவனாய் , அல்லது அஜிதை யென்கிற பரமபதத்தை யுடையவனாய் , ஷாட்குண்ய நிதயே = ஜ்ஞாந ஶக்த்யாதி கல்யாணகுணங்களுக்கு ஆகரமான , துப்யம் நம: = தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் |
மஹாவிபூதிஸம்ஸ்தாய நமஸ்தே புருஷோத்தம |
ஸஹஸ்ரஶிரஸே துப்யம் ஸஹஸ்ரசரணாய தே || 3
ஹே புருஷோத்தம = வாங்க்மநஸா அபரிச்சேத்யமான குணவிபூதி விக்ரஹாத் யநுபவத்தை ஆஶ்ரிதர்க்குத் தக்கபடி அளிக்குமவனே , மஹாவிபூதி ஸம்ஸ்தாய = பாக்ய போகோபகரணங்களால் குறைவற்ற த்ரிபாத்விபூதியில் எழுந்தருளி யிருக்கு மவனாய் , ஸஹஸ்ரஶிரஸே = ஸஹஸ்ர ஶப்தம் ஆநந்தவாசியாய் , ஶிரஸ் துப்யம் = ஸர்வேந்த்ரிய வாசியாய் , தத் காயமாந ஜ்ஞாநத்தை ரக்ஷிக்கிறதாகை யாலே ,அபரிச்சிந்ந ஜ்ஞாநத்தை யுடையவனாய் , ஸஹஸ்ரசரணாய = சரண ஶப்தம் கர்மேந்த்ரிய காய ஶக்த்யுபலக்ஷகமாய் அபரிச்சிந்ந ஶக்தியுடையனான , தே நம: = உன்னை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன் , அநேகமாயிரம் கை கால்களால் செய்யத்தக்க கார்யத்தை இந்த்ரிய நிரபேக்ஷகனாகவே செய்யவல்ல அபரிமித ஜ்ஞாநஶக்தி யுடையவனென்று ஸஹஸ்ரஶீர்ஶாதி ஶப்தங்களுக்கு தாத்பர்யம் |
ஸஹஸ்ரபாஹவே துப்யம் ஸஹஸ்ரநயநாய தே |
அமூர்தாய நமஸ்துப்யமேகமூர்தாய தே நம: || 4
ஸஹஸ்ர பாஹவே = பாஹு ஶப்தத்தால் கர்மேந்த்ரிய கார்ய ஶக்த்யுபலக்ஷக மாய் , அநந்த ஶக்தி யுக்தனாய் , ஸஹஸ்ர நயநாய = நயந ஶப்தத்தாலே ஜ்ஞாநேந்த்ரிய கார்யமான ஜ்ஞாநத்தை ரக்ஷிக்கிறதாய் , அநந்தஜ்ஞாநத்தை யுடையனாய் , அமூர்தாய = ஸூக்ஷ்மமாந அவ்யக்த புருஷாதிகளை ஶரீரமாக யுடையனாய் , அல்லது ஸ்தூலபௌதிகமாந மூர்த பதார்த்தங்களில் வேறுபற்ற வனாய் , ஏக மூர்தாய = தனக்கு ஸத்ருஶமாந வஸ்த்வந்தரமில்லாமையாலும் , ப்ரளயத்தில் அவிபக்ததமஶ்ஶரீரகநா யிருக்கையாலும் , ஒன்றென்று சொல்லும் படியான திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் , தே நம: = உன்னை சேவிக்கிறேன் |
அநேகமூர்தயே துப்யமக்ஷராய ச தே நம: |
வ்யாபிநே வேதவேத்யாய நமஸ்தே பரமாத்மநே || 5
அநேக மூர்தயே = ராமக்ருஷ்ணாவதாரம் செய்யுமவனாய் , அல்லது ஸ்தூல ஸூக்ஷ்மமாந எல்லா பதார்த்தங்களையும் ஶரீரமாக வுடையனாய் , அக்ஷராய = ஒருகாலும் நாஶமில்லாதவனாய் , அல்லது ( முக்தர்களால் ஸதா அநுபவிக்கப் பார்த்தாலும் அவர்களை கல்யாண குணாதிகளில் அமிழ்ந்து கிடக்கும்படி செய்து மேன்மேலும் போக்யத்தையே மிக்கிருக்கும்படி வ்ருத்தி அடைகையாலே ) க்ஷரமில்லாதவனாய் , வ்யாபிநே = ஸகல சேதநாசேதநர்களில் ஸங்கோசமற வ்யாபித்து நிற்குமவனாய் , வேத வேத்யாய = இவன் வ்யாபித்து நிற்கும் நிலை முதலியவை ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களாலறிய அஶக்யமாகையாலே , கேவலம் வேதங்களால் அறியத்தக்கவனாய் , பரமாத்மநே = எல்லா வஸ்துகளுக்கும் தான் நியாமகநாய் , தனக்கு நியாமகாந்தர மில்லாதவநான , தே நம: = தேவரீருக்கு நமஸ்காரம் |
சிந்மாத்ரரூபிணே துப்யம் நமஸ்த்ரய்யந்தமூர்தயே |
அணிஷ்டாய ஸ்தவிஷ்டாய மஹிஷ்டாய ச தே நம: || 6
சிந்மாத்ர ரூபிநே = கேவலம் ஜ்ஞாந மயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடைய வனாய் , த்ரய்யந்த மூர்தயே = வேதாந்தங்களை ஶரீரமாக வுடையனான , துப்யம் நம: ; வேதாந்தங்கள் ஶரீரமாகையாவது = ஈஶ்வரனுக்கு அபிவ்யஜ்ஞமா யிருக்கை யிநாலாவது , ஈஶ்வரனுடைய ஆஜ்ஞாரூபமா யிருக்கையிநா லாவதென்றறியவும், அணிஷ்டாய = அதி ஸூக்ஷ்மங்களான தஹராகாஶாவ்யக்த ஜீவாதிகளில் ப்ரவே ஶிக்கத்தக்க அதி ஸூக்ஷ்ம ஸ்வரூபனாய் , ஸ்தவிஷ்டாய =ஓரிடத்திலிருந்தே எல்லா வஸ்துக்களையும் ஸ்பர்ஶிக்க வல்ல ஸௌக்ய விஶிஷ்டநாய் , அல்லது பஹுஸாமர்த்யமென்கிற ஸங்கல்பத்தாலே ப்ரஹ்மாண்டாதி ஸ்தூல ஸூக்ஷ்ம கார்யவர்க்கத்தை ஶ்ருஷ்டிக்கவல்ல ஸ்தௌல்யத்தை யுடையனாய் , மஹிஷ்டாய = மஹத் பரிமாணங்களான பரமாகாஶாதிகளிலும் வ்யாபித்து அவை ஷிராங்கை யென்னும்படி பண்ணவல்ல பரம மஹத் பரிமாணனான , தே நம: = உனக்கு நமஸ்காரம் |
நேதிஷ்டாய யவிஷ்டாய ஸர்வாந்தர்யாமிணே |
வர்ஷிஷ்டாய ஜபிஷ்டாய கநிஷ்டாய ச தே நம: || 7
நேதிஷ்டாய = புரம்புண்டாந பற்றுக்களை விட்டு உன்னிடத்தில் மநஸ்ஸை வைத்து த்வந்மயாலான முமுக்ஷுக்களுக்கு அத்யந்த ஸமீபத்திலிருக்குமவனே , யவிஷ்டாய = என்றுமொக்க பஞ்சமி ஶதி வர்ஷிகமான அகுமார யுவாகாரநாய் , ஸர்வாந்தர்யாமிணே = எல்லா வஸ்துக்களிலும் அநுப்ரவேஶித்து கர்மாநுகுணமாக நியமிக்குமவனான , தே நம: ; வர்ஷிஷ்டாய = எல்லாருக்கும் முன்னே உண்டாயி ருக்கையாலே மிகவும் முதிர்ந்த வயஸ்ஸை யுடையவனாய் , ஜபிஷ்டாய = வாமந கபிலாதி ரூபேண அவதரித்து மஹாமந்த்ராதி ஜபஶீலநாய் , கநிஷ்டாய = ப்ராதா பாவ யவீயாநென்று காஶ்யபர் ப்ரார்த்தித்தபடி தேவகார்யார்த்தமாக தேவர்களுக்கு கநிஷ்டநா யவதரித்த , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |
பஞ்சாத்மநே நமஸ்துப்யம் ஸர்வாந்தர்யாமிணே நம: |
கல்பநாSபோடரூபாய ஸ்ருஷ்டிஸ்தித்யந்தஹேதவே || 8
பஞ்சாத்மநே == ஆகாஶாதி பூத பஞ்சகணங்களைந்துக்கும் நிர்வாஹகநாய் , ஸர்வாந்தர்யாமிணே = ஸ்தூல ஸூக்ஷ்மங்களான எல்லா பதார்த்தங்களிலும் ஸதா நிர்வாஹார்தமாக அந்தஹஹ ப்ரவேஶித்து நியமிக்குமவனாய் , கல்பநாSபோடரூபாய = கால்பநிக மன்றியே நித்யமான திவ்யமங்கள விக்ர ஹத்தை யுடையனாய் , ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த ஹேதவே = ப்ரஹ்மரூபாதி ரூபேண நின்று ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணா நின்றுள்ள , துப்யம் நம: = தேவரீரை தெண்டன ஸமர்ப்பிக்கிறேன் |
நமஸ்தே குணரூபாய குணரூபாதிவர்திநே |
வ்யஸ்தாய ச ஸமஸ்தாய ஸமஸ்தவ்யஸ்தரூபிணே || 9
குணரூபாய = கந்தாதி குணங்களுக்கு ப்ருதிவ்யாதி த்வாரா நிர்வாஹகநாய் அன்றிக்கே , ஸத்வாதி குணமயமான ப்ரக்ருதி ஶரீரகனாய் , குணரூபாதிவர்திநே = ப்ராக்ருதரூப குணங்களைக் கலந்திருக்குமவனாய் , ஸமஸ்தாய = ஸகல சேதநா சேதந ஶரீரகனாயிருக்கச் செய்தேயும் , வ்யஸ்தாய = அவைகளிற்காட்டில் வேறு பட்டவனாய் , ஸமஸ்தவ்யஸ்தரூபிணே = ஸமஸ்த ஸ்ருஷ்டிக்கும் வ்யஸ்தி ஸ்ருஷ்டிக்கும் விஷயமான ஸகல பதார்த்தங்களுக்கு நிர்வாஹகநான , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |
ஆதிமத்யாந்தஶூந்யாய தத்த்வஸ்தாய நமோ நம: |
ப்ரணவப்ரதிபாத்யாய நம: ப்ரணவரூபிணே || 10
ஆதிமத்யாந்தஶூந்யாய = முதல் , நடுவு , கடைசியென்கிற காலக்ருத பரிச்சேத மில்லாதவனாய் , அன்றிக்கே , கர்ம க்ருத ஜந்மநாஶாதி தோஷஶூந்யமான திவ்ய மங்கள விக்ரஹ விஶிஷ்டநாய் , தத்த்வஸ்தாய = பஞ்சவிம்ஶதி தத்வங்களிலும் வ்யாபித்து நிற்குமவனாய் , அன்றிக்கே , பரமார்த்த பூதநாய் நிற்குமவனாய் , ப்ரணவப்ரதிபாத்யாய = அஸம்ஹிதாகாரத்தில் ப்ரணவத்தால் சேதநர்களெல்லாம் எம்பெருமானுக்கே ஶேஷமென்று சொல்லுகையால் , ஸர்வஶேஷியாக ப்ரதிபாதிக் காப்படுமவநாய் , ப்ரணவரூபிணே = ஸம்ஹிதாகாரத்தில் ஓமிதி ப்ரஹ்மவென்று த்யாந ஸாதந ப்ரணவ ஸ்வரூபியான , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |
லோகயாத்ராப்ரஸித்யர்த்தம் ஸ்ருஷ்டப்ரஹ்மாதிரூபிணே |
நமஸ்துப்யம் ந்ருஸிம்ஹாதிமூர்த்திபேதாய விஷ்ணவே || 11
லோகயாத்ராப்ரஸித்யர்த்தம் = ஶ்ருஷ்ட்யாதி லோகவ்யாபாரங்களுக்காக , ஸ்ருஷ்ட ப்ரஹ்மாதி ரூபிணே = தன்னாலே உண்டாக்கப்பட்ட ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர்யாமியாய் நிற்குமவனாய் , விஷ்ணவே = ஸகல சேதநங்களிலும் வ்யாபித் திருக்குமவனாய் , ந்ருஸிம்ஹாதி மூர்த்தி பேதாய = வ்யாபிதி பலமான ரக்ஷணத் துக்காக ந்ருஸிம்ஹாத்யவதாரங்கள் செய்தருளின , துப்யம் நம: = தேவரீரை நமஸ் கரிக்கிறேன் |
விபாகை: கர்மபி: க்ஷோபைரஸ்ப்ருஷ்டவபுஷே நம: |
நமோ ப்ரஹ்மண்யதேவாய தேஜஸாம் நிதயே நம: || 12
விபாகை: = ஜாத்யாதி விபாகமாகிற விபாகங்களினாலும் , கர்மபி: = அதுக்கடியான புண்ய பாப ரூப கர்மங்களினாலும் , அஸ்ப்ருஷ்ட வபுஷே = “ க்லேஶ கர்ம விபாகாஶயைரபராம்ருஷ்ட: புருஷ ஈஶ்வர: ” என்கிறபடியே ஸ்பர்ஶிக்கப்படாத திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனாய் , ப்ரஹ்மண்ய தேவாய = வேதப்ரதி பாத்யநா யிருக்கையாகிற ஔஜ்வல்யத்தை யுடையனாய் , தேஜஸாம் நிதயே = நிரவதிகதேஜோ ரூபனான , தே நம: = உன்னை நமஸ்கரிக்கிறேன் |
நித்யஸாதாரணாநேகலோகரக்ஷாபரிச்சிதே |
ஸச்சிதாநந்தரூபாய வரேண்யாய நமோ நம: || 13
நித்ய ஸாதாரணாநேக லோகரக்ஷா பரிச்சிதே = ஜகத்ரக்ஷகமாக நித்யமாந அநேக பரிகாரங்களை யுடையனாய் , ஸச்சிதாநந்தரூபாய = நிருபாதிக ஸத்பாவத்தை யுடையனாயும் ஸத்குண விஶிஷ்டனாயு மிருக்கையாலே ஸச்சந்தவாச்யனாய் , நிருபாதிகமாய் நித்யமாய் துகாஹ ஸம்பிந்நமாய் என்றுமொக்க அநுகூலமே ஸ்வபாவமான ஜ்ஞாநஸ்வரூப ஜ்ஞாநகுணகநாய் , வரேண்யாய = ஆஶ்ரிதரால் தன்னையே தரும்படி ப்ரார்த்திக்கத் தக்கவனான , தே நம: = தேவரீரை நமஸ்கரிக்கிறேன் |
யஜமாநாய யஜ்ஞாய யஷ்டவ்யாய நமோ நம: |
இஜ்யாபலாத்மநே துப்யம் நம இஜ்யாதிஶீலிநே || 14
யஜமாநாய = அஸக்தர்க்குத் தானே கர்மாநுஷ்டானம் பண்ணுமவனாய் , அன்றிக்கே , ஸர்வமும் பகவச்சரீரமாகையாலே யஜ்ஞம் செய்யுமவனுக்கு நியாமகநாய் , யஜ்ஞாய = ஸ்வாராதனரூப யாகோபகரண ஶூந்யர்க்குத் தானே அந்த யஜ்ஞரூபியாய் , யஷ்டவ்யாய = அந்த யாகோபகரணமும் தானேயாய் , இஜ்யா பலாத்மநே = அந்த யாகம் செய்வதினா லுண்டாகும் பலத்துக்கும் தானே நிர்வாஹகனாய் , இஜ்யாதி ஶீலிநே = பஞ்சமஹாயஜ்ஞங்களால் பல ஸகந கர்த்ருத்வ த்யாகபூர்வமாக ஆராதிக்கத்தக்கவனான , தே நம: = தேவருக்கு நமஸ்காரம் |
நம: பரமஹம்ஸாய நமஸ்ஸத்த்வகுணாய ச |
ஸ்திதாய பரமவ்யோம்நி பூயோ பூயோ நமோ நம: || 15
பரமஹம்ஸாய = புர்மபுந்தான பற்றுக்களை ஸவாஸநமாக அறுத்துப் போடுமவ னாய் , ஸத்த்வகுணாய = ஜ்ஞாநப்ரகாஶத்வேந மோக்ஷமூலமான ஸத்த்வகுண ப்ரவர்த்தகனாய் , பரமவ்யோம்நி ஸ்திதாய = இப்படி பாஹ்யஸங்கமற்ற ஸத்த்வ நிஷ்டர்களுக்கு ப்ராப்யமான பரமபதத்திலே பெருமதிப்போடு வீற்றிருக்குமவனான , தே பூயோ பூயோ நமோ நம: = தேவரீரைக் கடா கடாவென்று அநுபவிப்பதில் ஆதராதிஶயத்தாலே , த்விராவ்ருத்தி ஶரணவரணம் பண்ணுகிறேன் |
ஸம்ஸாரே விஷயாவர்தஸங்குலே ச மஹாபயே |
அபாரதுஸ்தரேSகாதே பதிதம் கர்மபிஸ்ஸ்வகை: || 16
அநாதமகதிம் பீரும் தயயா பரயா ஹரே |
மாமுத்தர தயாஸிந்தோ ஸிந்தோரஸ்மாத்ஸுதுஸ்தராத் || 17
விஷயாவர்த ஸங்குலே = அநர்த ஹேதுக்களான ஶப்தாதி விஷயங்களாகிற சுழல்களால் வ்யாகுலமாயும் , மஹாபயே = ஶேஷத்வாதிகளை யழிக்கையாலும் ஶப்தாதிகளிலே மூட்டுகையாலும் ஆதி வ்யாதிகளால் பதே பதே மிக்க பய ஜநக மாய் , அபாரதுஸ்தரே = கடல் போல் அக்கரை காணவொண்ணாததாயும் , புக்கால் தந்தாமல் கரையேற அஶக்யமாயும் , அகாதே ஸம்ஸாரே = தரை காணவொண் ணாதபடி ஆழமாயிருப்பதான அவித்யாகர்மவாஸநாருசிப்ரக்ருதி ஸம்பந்தங்களா கிற ஸம்ஸாரத்திலே , ஸ்வகை: கர்மபி: = அஸல் பிளந்தேரிதுகையன்றிக்கே தானே மநோவாக்யங்களால் செய்கிற பாபகர்மங்களாலே , பதிதம் = வீழ்ந்து துளங்கா நின்றுள்ள , அநாதம் = ரக்ஷகாந்தர ஶூந்யநாய் , அகதிம் = உபயாந்தர ஶூந்யநாய் , பீரும் = தேஶ கால ஶரீரங்களிலும் இவற்றா லநுஷ்டிக்கும் கர்ம யோகாதிகளிலும் மிகவும் பயந்தவனான , மாம் = தேவரீரை ஶரணமாக அடைந்த அடியேனை , தயா ஸிந்தோ = க்ருபாநிதியே , ஹரே = ஆஶ்ரித தாபந்நிவர்தகனே, தயயா பரயா = தேவரீருடைய பரமக்ருபையாலே ( ஐயோ வென்றிறங்கி ) , ஸுதுஸ்தராத் = ஸ்வயத்நத்தால் கடப்பதற்கு அஶக்யமான , அஸ்மாத் ஸிந்தோ: = இந்த ஸம்ஸாரமாகிற பெருங்கடலினின்றும் , மாம் உத்தர = ப்ரளயங்கொண்ட பூமியை எடுத்தாப்போலே அடியேனை எடுத்தருள வேணும் |
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் யதர்சநம் |
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ தீநம் மாமாத்மஸாத்குரு || 18
யத் அர்சநம் = யாதொரு தேவரீர் திறத்தில் செய்த ஆராதநமானது , மந்த்ரஹீநம் = மந்த்ரலோபமுள்ளதா யிருந்தாலும் , க்ரியாஹீநம் = தந்த்ரலோபமுள்ளதா யிருந் தாலும் , பக்திஹீநம் = ப்ரீதிரூபபந்நமான பக்திஶூந்யமா யிருந்தாலும் , தத் ஸர்வம் = உபசாரமென்று நாமமாத்ரமான அந்த எல்லா அபசாரங்களும் , க்ஷம்யதாம் = தேவரீரால் பொறுத்தருளத் தக்கது , தேவ = ஸர்வரும் தேவரீர் திருவடிகளை ஆஶ்ரயிக்கவேண்டும்படிக்கீடான மேன்மை யுடையவரே , தீநம் மாம் = பேற்றுக்கு ஒரு கைம்முதலில்லாமல் கேவலம் தேவரீருடைய தயைக்கே பாத்ரமான வென்னை , ஆத்ம ஸாத் குரு = தனக்கே யாக்கும்படி அநுக்ரஹிக்க வேண்டும் |
அஹம் ஹிதம் ந ஜாநாமி த்வாம் வ்ரஜாம்யேவ கேவலம் |
புத்வைவம் நய கோவிந்த முக்த்யுபாயேந வர்த்மநா || 19
அஹம் = அஜ்ஞாநாதிகளால் பூர்ணனான நான் , ஹிதம் = ஸ்வரக்ஷணோபா யத்தை , ந ஜாநாமி = அறியமாட்டுகிறிலேன் , த்வாம் ஏவ கேவலம் = ஸர்வ ஜ்ஞாநத்வ ஸர்வஶக்தித்வாதி விஶிஷ்டராய் நிரபேக்ஷஸித்தோபாயபூதரான தேவரீரை , வ்ரஜாமி = என்னுடைய அநிஷ்டநிவ்ருத்திக்கும் இஷ்டப்ராப்த்திக்கும் கட்வராக அத்யவஸிக்கிறேன் , ஹே கோவிந்த = ஸ்வரக்ஷணத்தில் ஜ்ஞாநமில் லாத பசுக்களை ரக்ஷித்தவனே , ஏவம் புத்வா = ஸ்வரக்ஷணோபாய ஶூந்யனென் பதை திருவுள்ளத்திலுகந்து , முக்த்யுபாயேந வர்த்மநா = ஸம்ஸார ஸம்பந்தமற்று தேவரீரை ப்ராபிக்கைக்கீடான நல்வழியோடே , நய = என்னை சேர்த்தருள வேண்டும் |
த்வமேவ வேத்ஸி ஸ்ரேயோ மே நேதமேததிதீதி ச |
புத்தியோகம் ச மே தேஹி யேந த்வாமுபயாம்யஹம் || 20
மே = தேவரீரைப் பற்றிநின்ற எனக்கு , இதம் ஸ்ரேய: இதி = இது உத்தம புருஷார்த்த ஸாதநமென்பதையும் , ஏதத் நேதி ச = இது புருஷார்த்தஸாதநமாக மாட்டாதென்பதையும் , த்வமேவ = ஸர்வஜ்ஞாநரான தேவரீரே , வேத்ஸி = அறிய வல்லவர் , அஹம் = அஜ்ஞாநஶக்தி பூர்ணனான நான் , யேந = எந்த உபாயத்தாலே , த்வாம் = பரமப்ராப்யரான தேவரீரை , உபயாமி = அடைவனோ ? புத்தியோகம் ச = அந்த பக்திரூபோபாயத்தை , மே = அடியேனுக்கு , தேஹி = ப்ரஸாதித்தருள வேண்டும் |
பஞ்சம ஜிதந்தார்த்த ஸம்பூர்ண:
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே ஶரணம்
ஜீயர் திருவடிகளே ஶரணம்