ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
யதிராஜ விம்ஶதி ப்ரமாணத் திரட்டு
1-வது ஶ்லோகம்
பராம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே
பவாம்ஸ்து – தேவரீர்
வைதேஹ்யா ஸஹ – பிராட்டியோடுகூட
கிரிஸாநுஷு – மலைகளின் தாழ்வரைகளில்
ரம்ஸ்யதே – க்ரீடிக்கப் பார்க்கிறீர்
அஹம் – அடிமையாகிய நான்
ஜாக்ரத: – விழித்துக்கொண்டிருக்கிற தசையிலும்
ஸ்வபதஶ்ச – கண்வளர்ந்துகொண்டிருக்கிற தசையிலும்
தே – தேவரீருக்கு
ஸர்வம் – ஸர்வவித கைங்கர்யங்களையும்
கரிஷ்யாமி – பண்ணக்கடவேன்
(ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஶ்ரீமந்நாராயணனான மிதுநத்துக்கு அடிமை செய்கையே ஶேஷபூதனுக்கு ப்ராப்யமென்றபடி)
1-வது ஶ்லோகம்
- நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுராக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஶ:
ராமாநுஜேதி – ராமாநுஜ என்கிற
ஏஷா – இந்த
சதுரா – (வேண்டும் பலன்களைத் தருவதில்) ஸாமர்த்தியமான
சதுராக்ஷரீ – நான்கெழுத்துற்ற மந்திரமானது
ந சேத் – இல்லாமல் போயிற்றானால்
மாத்ருஶ: – என்னைப்போன்ற
ஜந்தவ: – உயிர்கள்
காம் – எவ்வகையான
அவஸ்தாம் – கொடிய தசையை
ப்ரபத்யந்தே – அடைவார்களோ அறியேன்
ஹந்த – ஆஶ்சர்யம்.
3-வது ஶ்லோகத்திற்கு அவதாரிகை
அவதாரிகை – “நம்மைப் பற்றினார்க்கு ப்ராப்யமும் ப்ராபகமும் நாமேயாகச் சொன்னீரே, நம்மைப்பற்றி நிற்கிற உமக்கிதொவ்வாதோ?” என்று எம்பெருமானார்க்குத் திருவுள்ளமாக, எனக்கங்ஙனன்று, “தேவரீர் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமென்று பற்றியிருக்கும் கூரத்தாழ்வான் முதலானவர்கள் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமாகப் பற்றியிருக்குமவனாகவேணும்” என்று எம்பெருமானார் திருவடிகளிலே ப்ரார்த்தித்தருளுகிறார்.
3-வது ஶ்லோகம்
- ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா: –
ப்ரத்யக்ஷே – ப்ரத்யக்ஷத்தில் (கண் முன்னே) எழுந்தருளியிருக்கும்படியான
குரவ: – (அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தை உபகரித்தருளின) குருக்கள்
ஸ்துத்யா: – ஸ்தோத்திரம் பண்ணத்தக்கவர்கள்.
3-வது ஶ்லோகம் (விஷ்ணு தத்வம்)
- விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்தபாதாதி ஸம்யுதா
ஹே ப்ரஹ்மந் – ஓ ப்ராஹ்மணரே!
விசித்ரா – விசித்திரமாயும்
ஹஸ்த பாதாதி ஸம்யுதா – கை கால்களோடு கூடினதுமான
தேஹ ஸம்பத்தி: – ஶரீர ஸம்பத்தானது
ஈஶ்வராய – ஸர்வேஶ்வரனான ஶ்ரீய:பதியின் பொருட்டு
நிவேதிதும் – (ஆத்மாக்களையும், பூஜா த்ரவ்யங்களையும்) ஸமர்ப்பிப்பதற்கு
பூர்வமேவ – முன்பே
க்ருதா – ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
3-வது ஶ்லோகம்
- மந: பூர்வோ வாகுத்தர:
பூர்வ: – முன்பே
மந: – மநதினால் சிந்தனை பண்ணி
உத்தர: – அதன்பிறகு
வாக் – வாயினால் சொல்லவேண்டும்.
3 – வது ஶ்லோகம்
- க்ருஷ்ணாநுஸ்மரணம்
க்ருஷ்ண – (பூபாரநிவ்ருத்தி பண்ணுமவனான) கண்ணனை
அநுஸ்மரணம் – அடிக்கடி த்யாநம் பண்ணவேண்டும்
5 – வது ஶ்லோகம்
- ஓமித்யேகாக்ஷரம் நம இதி த்வே அக்ஷரே நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி இத்யஷ்டாக்ஷரம் சந்தஸா காயத்ரீ சேதி
ஓமித்யேகாக்ஷரம் – ஓம் என்று ஓரக்ஷரமாய்
நம இதி – நம: என்று
த்வே அக்ஷரே – இரண்டு அக்ஷரமாய்
நாராயணாய இதி – நாராயணாய என்று
பஞ்சாக்ஷராணி – ஐந்து அக்ஷரமாய்
இதி – இப்படி
அஷ்டாக்ஷரம் – எட்டு எழுத்துக்களாய்
சந்தஸா – சந்தஸ்ஸாய்
காயத்ரீ ச – காயத்ரியுமாய் இருக்கும்
6 – வது ஶ்லோகம்
- யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே
ய: – எந்த பாஷ்யகாரர்
நித்யம் – நிரந்தரம்
அச்யுத – ஆஶ்ரிதர்களை நழுவவிடாதவனான ஶ்ரீய:பதியினுடைய
பதாம்புஜ யுக்ம – பாதாரவிந்த த்வயமாகிய
ருக்ம – ஸுவர்ணத்தினிடத்தில்
வ்யாமோஹத: – விஶேஷாதரத்தையடைந்திருக்கிறவராய்
ததிதராணி – அந்த பகவத்பாத த்வயத்துக்கு வேறான விஷயங்களை
த்ருணாய – த்ருணப்ராயமாய்
மேநே – நினைத்தருளினாரோ
அஸ்மத் குரோ: – (அப்படிப்பட்ட) என்னுடைய ஆசார்யரும்
பகவத: – பூஜ்யரும்
தயைகஸிந்தோ: – க்ருபா ஸமுத்ரருமாகிய
அஸ்ய – இந்த
ராமாநுஜஸ்ய – ராமாநுஜாசார்யருடைய
சரணௌ – திருவடிகளை
ஶரணம் – ரக்ஷகமாய்
ப்ரபத்யே – ஆஶ்ரயிக்கிறேன்.
14 – வது ஶ்லோகம்
- ந சேத் ராமாநுஜேத்
2 – வது ப்ரமாணம் காண்க
15 – வது ஶ்லோகம்
- அமர்யாத: க்ஷுத்ர: சலமதி: அஸூயா ப்ரஸவபூ: க்ருதக்நோ துர்மாநி ஸ்மரபரவஶோ வஞ்சநபர: ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதமஹமிதோ து:க்க ஜலதே ரபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ:
அமர்யாத: – வேதத்தில் சொல்லப்பட்ட மர்யாதையைத் தவிர்ந்தவனாயும்
க்ஷுத்ர: – நீசவிஷயங்களில் அதிக பலனாயும்
சலமதி: – நிலையில்லாத புத்தியையுடையவனாகவும்
அஸூயா ப்ரஸவபூ: – அஸூயைக்கு உத்பத்தி ஸ்தானமாயும்
க்ருதக்ந: – உபகாரிகளிடத்தில் அபகாரத்தைச் செய்பவனாயும்
துர்மாநீ – ஈஶ்வரோஹம் என்றிருப்பவனாயும்
ஸ்மரபரவஶ: – காமனுக்கு பரதந்த்ரனாயும்
வஞ்சநபர: – வஞ்சித்து வர்த்திக்குமவனாயும்
ந்ருஶம்ஸ: – விஶ்வஸிப்பாரிடத்தில் கடூரனாயும்
பாபிஷ்ட: – பாபத்தில் நிலைநின்றவனுமான
அஹம் – அடியேன்
அபராத – கரைகாணவொண்ணாததான
இத: து:க்க ஜலதே: – இந்த து:க்க ஸமுத்திரத்தினின்றும்
கதம் – எப்படி
உத்தீர்ண: – கரையேறினவனாய்
தவ – தேவரீருடைய
சரணயோ: – திருவடிகளிலே
பரிசரேயம் – கைங்கர்யம் பண்ணப் போகிறேன்.
15 – வது ஶ்லோகம் (வரத.ஸ்தவம் – 79)
புத்வாச நோச விஹிதாகரணைர் நிஷித்த ஸம்ஸேவனைஸ் த்வதபசார ஶதைர் அஸஹ்யை: பக்தாகஸாமபி ஶதைர் பவதாப்யகண்யை: ஹஸ்தீஶ வாக்தநுமநோஜநிதைர் ஹதோஸ்மி
ஹே ஹஸ்தீஶ – ஓ கரிகிரிபதியே!
புத்வாச – அறிந்தும்
நோச – அறியாமலும்
வாக்தநுமநோஜநிதை: – வாக்கு மநது காயம் இவைகளால் செய்யப்பட்டனவும்
பவதா அபி – தேவரீராலும்
அகண்யை: – எண்ணமுடியாதனவும்
விஹிதாகரணை: – க்ருத்யாகரணங்களாலும்
நிஷித்த ஸம்ஸேவனை: – அக்ருத்ய கரணங்களாலும்
த்வதபசாரஶதை: – தேவரீரிடத்தில் செய்யப்பட்ட அநேக அபசாரங்களாலும்
அஸஹ்யை: – பொறுக்க முடியாததான
பத்தாகஸாம் ஶதைரபி – அநேக பாகவதாபசாரங்களாலும்
ஹத: அஸ்மி – அடிப்பட்டவனாயிருக்கிறேன் (என் ஸ்வரூபமானது நஷ்டமாயிற்றென்றபடி)
15 – வது ஶ்லோகம்
- அதிக்ராமந்நாஜ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதேபி த்ருஹ்யந் வாக்தீக்ருதிரபி பக்தாய ஸததம் அஜாநந் ஜாநந் வா பவதஸ்ஸஹநீயாகஸி ரதஸ் ஸஹிஷ்ணுத்வாத் ரங்கப்ரவண: தவமாபூவமபர:
ஹே ரங்க ப்ரவண! – ஓ ஶ்ரீரங்கத்தில் நித்யவாஸம் செய்யுமவனே!
தவ – தேவரீருடைய
விதி நிஷேதேஷு – ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளில்
ஆஜ்ஞாம் – ஆஜ்ஞையை
அதிக்ராமந் – தாண்டிக்கொண்டு
பவதேபி – தேவரீர் பொருட்டும்
பக்தாய அபி – வாசிகமாநஸகாயிகரூபங்களான கர்மங்களாலே
ஸததம் – எப்பொழுதும்
அஜாநந் – தெரியாமலும்
ஜாநந்வா – தெரிந்தும்
அபித்ருஹ்யந் – நன்றாக த்ரோஹம் செய்துகொண்டு
பவதஸ்ஸஹநீயாகஸி – தேவரீரால் பொறுக்கமுடியாத அபராதத்திலும்
ரத: – ஆஸக்தனான நான்
ஸஹிஷ்ணுத்வாத் – பொறுக்கிற ஸ்வபாவத்தினால்
தவ – தேவரீருக்கு
அபர: – பரனீயனன்றிக்கே
மாபூவம் – ஆகக்கடவேனல்லேன். (பரிக்கத்தகுந்தவனாக இருக்கிறேன்)
16 – வது ஶ்லோகம்
- நதேஹம் நப்ராணாந் நசஸுகம் அஶேக்ஷாபிலஷிதம் நசாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத க்ஷணமபி ஸஹே யாது ஶததா விநாஶம் தத் ஸத்யம் மதுமதந விஜ்ஞாபநமிதம்.
தவ – தேவரீருடைய
ஶேஷத்வ – ஶேஷத்வமாகிற
விபவாத் – பெருமைக்கு
பஹிர்பூதம் – புறம்பாயுள்ளவைகளான
தேஹம் -ஶரீரத்தையும்
நஸஹே – வேண்டேன்
ப்ராணாந் – ப்ராணன்களையும்
ந – வேண்டேன்
அஶேஷாபிலஷிதம் – எல்லோருக்கும் ஆசைப்படத்தக்க
ஸுகம் – ஸுகத்தையும்
ந – வேண்டேன்
ஆத்மாநஞ்ச – ஆத்மாவையும்
ந – வேண்டேன்
அந்யத் – வேறேயுள்ள
கிமபி – ஒன்றையும்
நஸஹே – வேண்டேன்
நாத – ப்ராப்த ஶேஷியானவனே
க்ஷணமபி – க்ஷணகாலமும்
நஸஹே – ஸஹிக்ககில்லேன்
தத் – அவ்வஸ்துக்கள்
ஶததா – அநேகவிதமாம்
விநாஶம் – நாசத்தை
யாது – அடையட்டும்
மதுமதன – ஓ மதுஸூதனனே
இதம் – இந்த
விஜ்ஞாபநம் – விண்ணப்பமானது
ஸத்யம் – மெய்யானது.
17 – வது ஶ்லோகம்
- நிர்குணம்
நிர்குணம் – ஹேயகுணங்களற்றவன்; கல்யாண குணங்களையுடையவன்.
யதா பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி.
பஶ்ய: – ஜீவாத்மாவானவன்
யதா – எந்த காலத்தில்
ருக்மவர்ணம் – ஸ்வர்ண ஸ்வரூபமாய் ப்ரகாஶிக்கிற அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனாய்
ஈஶம் – ஜகத்துக்கு நியாமகனாய்
கர்த்தாரம் – ஜகத் கர்த்தாவாய்
ப்ரஹ்மயோநிம் – ப்ரக்ருதிக்கு உபாதாநகாரணமயுமிருக்கிற
புருஷம் – பரம புருஷனை
பஶ்யதே – ஸாக்ஷாத்கரிக்கிறானோ
ததா – அந்த காலத்தில்
வித்வான் – அந்த ப்ரஹ்மதர்ஶி
நிரஞ்ஜந: – ப்ரக்ருதி ஸம்பந்தமில்லாதவனாய்
புண்யபாபே – புண்யபாபங்களை
விதூய – நிரஸித்து
பரமம் ஸாம்யம் – அந்தந்த ஸாம்யத்தை
உபைதி – அடைகிறான்.
18 – வது ஶ்லோகம்
- யஸ்ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்யஜ்ஞாநமயம் தப: தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாமரூபமந்நஞ்ச ஜாயதே
ய: – எந்த அக்ஷர பரப்ரஹ்மம்
ஸர்வஜ்ஞ: – எல்லாவற்றையுமறிந்ததோ
ய: – எந்த பரப்ரஹ்மம்
ஸர்வவித் – எல்லா விஶேஷங்களையும் அறியுமோ
யஸ்ய – எந்த ப்ரஹ்மத்திற்கு
தப – ஸங்கல்பமானது
ஜ்ஞாநமயம் – ஜ்ஞாநமேயோ
தஸ்மாத் – அந்த ப்ரஹ்மத்திலிருந்து
ஏதத் ப்ரஹ்ம நாமரூபமந்நஞ்ச ஜாயதே – முன் சொன்னபடி நாமரூபாத்மகமாகிற ப்ரபஞ்சம் உண்டாகிறது.
17 – வது ஶ்லோகம் (ரா.அ – 111.6)
- பரதஸ்ய வச: குர்வன் யாசமாநஸ்ய ராகவ
ஆத்மாநம் நாதிவர்தேதாஸ் ஸத்ய தர்ம பராக்ரம:
ஹே ஸத்ய தர்ம பராக்ரம – ஸத்யத்தையும் தர்மத்தையும் அநுஷ்டிப்பதில் வல்லமையுடையவனே
ராகவ – ஓ ராமனே
யாசமாநஸ்ய – யாசிக்கும்படியான
பரதஸ்ய – பரதனுடைய
வச: – வாக்யத்தை
குர்வன் – பூர்த்தி செய்து
ஆத்மாநம் – நீரான தன்மையை
(அதாவது ஆஶ்ரித பரதந்த்ரரான தன்மையை)
நாதிவர்த்தேதா – அதிக்ரமிக்கவேண்டாம்.
(பட்டாபிஷேகத்தின் பொருட்டு யாசிக்கும்படியான பரதனுடைய வாக்யத்தைப் பூர்த்தி செய்தவனாய்க்கொண்டு தன்னுடைய முக்யோத்தேஶத்தையும் அதிக்ரமிக்கா மலிருந்தான்.)
18 – வது ஶ்லோகம்
- மநோவாக்காயைரநாதிகால ப்ரவ்ருத்தா நந்தாக்ருத்யகரண க்ருத்யாகரண பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரரூப நாநாவிதாநந்தாபசாரான் ஆரப்த கார்யாந் அநாரப்த கார்யாந் க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாநஶேஷத: க்ஷமஸ்வ.
மந: – மநஸ்ஸினாலும்
வாக் – வாக்கினாலும்
காய: – ஶரீரத்தினாலும்
அநாதிகால – அநாதிகாலம்
ப்ரவ்ருத்த – பண்ணிப்போந்த
அநந்த – அளவிறந்த
அக்ருத்யகரண – செய்யத்தகாததை செய்கையும்
க்ருத்ய அகரண – செய்யவேண்டியதை விடுகையும்
பகவதபசார – பகவந்நிந்தையையும்
பாகவதாபசார – பாகவதநிந்தையையும்
அஸஹ்யாபசார – பொறாமையாகிற நிந்தையையும்
நாநாவித – இப்படி அநேகவிதமாய்
அநந்தாபசாரான் – கணக்கற்ற நிந்தைகளையும்
ஆரப்தகார்யான் – பலப்ரதானத்தில் ஒருப்பட்டவையையும்
அநாரப்தகார்யான் – ப்ரபலகர்மதிரோதாநத்தாலே அவஸர ப்ரதீக்ஷமானவையையும்
க்ருதான் – செய்தவைகளையும்
க்ரியமாணான் – செய்கிறவைகளையும்
கரிஷ்யமாணாம்ஶ்ச – செய்யப்போகிறவைகளையும்
ஸர்வான் – எல்லா பாபங்களையும்
அஶேஷத: – பூர்ணமாக
க்ஷமஸ்வ – பொறுத்தருளவேணும்.
ப்ரமாணத்திரட்டு ஸம்பூர்ணம்.