Mudal Thiruvandadi
முதலாழ்வார்கள் முதலானோர் அருளிச்செய்த இயற்பா பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி தனியன் (முதலியாண்டான் அருளிச்செய்தது) கைதைசேர்பூம்பொழில்சூழ்கச்சிநகர்வந்துதித்த* பொய்கைப்பிரான்கவிஞர்போரேறு* – வையத்து அடியவர்கள்வாழ அருந்தமிழ்நூற்றந்தாதி படிவிளங்கச்செய்தான்பரிந்து. வையம் தகளியா வார் கடலே நெய்யாக* வெய்ய கதிரோன் விளக்காகச் *- செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை * இடராழி நீங்குகவே யென்று. 1 என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது ? * ஒன்றும் அதனை உணரேன் நான் *- அன்று அது அடைத்துடைத்துக் கண்படுத்த […]