Thiruvoymozhi 10-2
திருவாய்மொழி பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி கெடும் இடராய வெல்லாம், கேசவா வென்ன * நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும், குறுக கில்லார் * விடமுடை யரவில், பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் * தடமுடை வயல் அனந்தபுரநகர், புகுதும் இன்றே. 10.2.1 திருவனந்தபுரம் இன்று போய்ப் புகுதிராகில், எழுமையும் ஏதம் சாரா * குன்று நேர் மாடமாடே, குருந்து சேர் செருந்தி புன்னை * மன்றலர் பொழில், அனந்தபுரநகர் மாயன் நாமம் ஒன்றும் * […]
Thiruvoymozhi 10-1
திருவாய்மொழி பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி தாளதாமரைத், தடமணி வயல் திருமோகூர் * நாளும் மேவி நன்கமர்ந்து நின்று, அசுரரைத் தகர்க்கும் * தோளும் நான்குடைச், சுரிகுழல் கமலக் கண்கனிவாய் * காளமேகத்தை யன்றி, மற்றொன்றிலம் கதியே. 10.1.1 திருமோகூர் இலம் கதி மற்றொன்று, எம்மைக்கும் ஈன்தண் துழாயின் * அலங்கலங் கண்ணி, ஆயிரம் பேருடை யம்மான் * நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ், திருமோகூர் * நலங்கழ லவனடி நிழல் தடமன்றி, யாமே. […]
Thiruvoymozhi 9-10
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி மாலை நண்ணித், தொழுதெழுமினோ வினை கெடக் * காலை மாலை, கமல மலரிட்டு நீர் * வேலை மோதும் மதிள் சூழ், திருக்கண்ணபுரத்து * ஆலின் மேலால் அமர்ந்தான், அடியிணைகளே. 9.10.1 திருக்கண்ணபுரம் கள்ளவிழும் மலரிட்டு, நீர் இறைஞ்சுமின் * நள்ளி சேரும் வயல் சூழ், கிடங்கின் புடை * வெள்ளி யேய்ந்த மதிள் சூழ், திருக்கண்ணபுரம் உள்ளி * நாளும் தொழுதெழுமினோ, தொண்டரே ! […]
Thiruvoymozhi 9-9
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி மல்லிகை கமழ் தென்ற லீருமாலோ ! வண்குறிஞ்சி யிசை தவறுமாலோ ! * செல் கதிர் மாலையும் மயக்குமாலோ ! செக்கர் நல் மேகங்கள் சிதைக்குமாலோ ! * அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான் ஆயர்களேறு அரியேறு எம்மாயோன் ! * புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியமாலோ ! 9.9.1 புகலிட மறிகிலம் தமியமாலோ ! புலம்புறு மணி தென்ற லாம்பலாலோ ! […]
Thiruvoymozhi 9-8
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி அறுக்கும் வினையாயின, ஆகத்து அவனை * நிறுத்தும் மனத்தொன்றிய, சிந்தையினார்க்கு * வெறித்தண் மலர்ச் சோலைகள் சூழ், திருநாவாய் * குறுக்கும் வகை யுண்டு கொலோ ? கொடியேற்கே! 9.8.1 திருநாவாய் கொடியேரிடைக், கோகனகத்தவள் கேள்வன் * வடிவேல் தடங்கண், மடப்பின்னை மணாளன் * நெடியானுறை சோலைகள் சூழ், திருநாவாய் * அடியேன் அணுகப் பெறு நாள், எவை கொலோ ? 9.8.2 திருநாவாய் எவை கொல் […]
Thiruvoymozhi 9-7
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி எங்கான லகங் கழிவாய், இரை தேர்ந்திங் கினிதமரும் * செங்கால மடநாராய் ! திருமூழிக்களத் துறையும் * கொங்கார் பூந்துழாய்முடி எங்குடக் கூத்தர்க்கு என் தூதாய் * நுங் கால்கள் என் தலை மேல், கெழுமீரோ நுமரோடே. 9.7.1 திருமூழிக்களம் நுமரோடும் பிரியாதே, நீரும் நும் சேவலுமாய் * அமர் காதல் குருகினங்காள் ! அணிமூழிக்களத் துறையும் * எமராலும் பழிப்புண்டு இங்கு என்?, தம்மா லிழிப்புண்டு […]
Thiruvoymozhi 9-6
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி உருகுமால் நெஞ்சம், உயிரின் பரமன்றிப் * பெருகுமால் வேட்கையும், என் செய்கேன் தொண்டனேன் * தெரு வெல்லாம் காவி கமழ், திருக்காட்கரை * மருவிய மாயன்தன், மாயம் நினைதொறே. 9.6.1 திருக்காட்கரை நினைதொறும் சொல்லும் தொறும், நெஞ்சு இடிந்துகும் * வினைகொள் சீர் பாடிலும், வேம் எனதாருயிர் * சுனைகொள் பூஞ்சோலைத், தென்காட்கரை யென்னப்பா ! * நினைகிலேன் நான், உனக்கு ஆட்செய்யும் நீர்மையே. […]
Thiruvoymozhi 9-5
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி இன்னுயிர்ச் சேவலும், நீரும் கூவிக்கொண்டு இங்குஎத்தனை * என்னுயிர் நோவ மிழற்றேன்மின், குயிற்பேடைகாள் ! * என்னுயிர்க் கண்ணபிரானை, நீர் வரக் கூவுகிலீர் * என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும், இத்தனை வேண்டுமோ ? 9.5.1 இத்தனை வேண்டுவதன்று அந்தோ ! அன்றிற் பேடைகாள் ! * எத்தனை நீரும் நுஞ்சேவலும், கரைந்தேங்குதிர் * வித்தகன் கோவிந்தன், மெய்யனல்லன் ஒருவர்க்கும் * அத்தனையாம், இனி என்னுயிர் அவன் கையதே. […]
Thiruvoymozhi 9-4
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து நான்காம் திருவாய்மொழி மையார் கருங்கண்ணி, கமல மலர் மேல் செய்யாள் * திருமார்வினில் சேர், திருமாலே ! * வெய்யார் சுடராழி, சுரிசங்க மேந்தும் கையா ! * உன்னைக் காணக் கருதும், என் கண்ணே. 9.4.1 கண்ணே !, உன்னைக் காணக் கருதி * என்னெஞ்சம் எண்ணே கொண்ட, சிந்தையதாய் நின்று இயம்பும் * விண்ணோர் முனிவர்க்கு, என்றும் காண்பரியாயை * நண்ணா தொழியேன் என்று, நான் அழைப்பனே. […]
Thiruvoymozhi 9-3
திருவாய்மொழி ஒன்பதாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி ஓராயிரமாய், உலகே ழளிக்கும் * பேராயிரங் கொண்டது, ஓர் பீடுடையன் * காராயின, காளநன் மேனியினன் * நாராயணன், நங்கள் பிரானவனே. 9.3.1 அவனே, அகல் ஞாலம் படைத் திடந்தான் * அவனே, அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் * அவனே, அவனும் அவனும் அவனும் * அவனே, மற்றெல்லாமும் அறிந்தனமே. 9.3.2 அறிந்தன வேத, அரும் பொருள் நூல்கள் * அறிந்தன கொள்க, அரும் பொருளாதல் * அறிந்தன […]